காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன் ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான் மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
1
|
பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப் பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
2
|
ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான் நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
3
|
வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப் பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல் வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
4
|
சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக் கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப் படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
5
|
Go to top |
கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும் புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
6
|
வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில் நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
7
|
பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர் வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
8
|
ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச் சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண் ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
9
|
பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
|
10
|
Go to top |
விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும் பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள் விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே.
|
11
|