மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம் நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன் கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும் இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.
|
1
|
திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான் றேவர்கடலைமகன் றிருக்கழிப்பாலை நிருமலனெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன் கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும் இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.
|
2
|
பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம் பண்டுவெங்கூற்றுதைத் தடியவர்க்கருளும் காலனாமெனதுரை தனதுரையாகக் கனலெரியங்கையி லேந்தியகடவுள் நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க்குவளைக டாதுவிண்டோங்கும் ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென்னெழில் கொள்வதியல்பே.
|
3
|
உளங்கொள்வாருச்சியார் கச்சியேகம்ப னொற்றியூருறையுமண் ணாமலையண்ணல் விளம்புவானெனதுரை தனதுரையாக வெள்ளநீர்விரிசடைத் தாங்கியவிமலன் குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக் கொழுங்கொடியெழுந்தெங்குங் கூவிளங்கொள்ள இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென் னெழில்கொள்வதியல்பே.
|
4
|
தேனுமாயமுதமாய்த் தெய்வமுந்தானாய்த் தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில் வானுமாமெனதுரை தனதுரையாக வரியராவரைக்கசைத் துழிதருமைந்தன் கானமான்வெருவுறக் கருவிரலூகங் கடுவனோடுகளுமூர் கற்கடுஞ்சாரல் ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே
|
5
|
Go to top |
மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற வகையலாற்பலிதிரிந் துண்பிலான்மற்றோர் தனமிலானெனதுரை தனதுரையாகத் தாழ்சடையிளமதி தாங்கியதலைவன் புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம் பொன்னொடுமணிகொழித் தீண்டிவந்தெங்கும் இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
|
6
|
நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா னினைப்பவர்மனத்துளா னித்தமாவேத்தும் ஊருளானெனதுரை தனதுரையாக வொற்றைவெள்ளேறுகந் தேறியவொருவன் பாருளார்பாடலோ டாடலறாத பண்முரன்றஞ்சிறை வண்டினம்பாடும் ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
|
7
|
வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை வேந்தனதடக்கைக ளடர்த்தவனுலகில் ஆருலாமெனதுரை தனதுரையாக வாகமோரரவணிந் துழிதருமண்ணல் வாருலாநல்லன மாக்களுஞ்சார வாரணமுழிதரு மல்லலங்கானல் ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
|
8
|
கிளர்மழைதாங்கினா னான்முகமுடையோன் கீழடிமேன்முடி தேர்ந்தளக்கில்லா உளமழையெனதுரை தனதுரையாக வொள்ளழலங்கையி லேந்தியவொருவன் வளமழையெனக்கழை வளர்துளிசோர மாசுணமுழிதரு மணியணிமாலை இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
|
9
|
உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி யுழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள் பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப் பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான் கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை களிமுகவண்டொடு தேனினமுரலும் இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
|
10
|
Go to top |
கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும் நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன் எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய் வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.
|
11
|