![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=wbEEJYTso-0 Add audio link
1.103
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருக்கழுக்குன்றம் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு பெண்ணினல்லாளம்மை உடனுறை அருள்மிகு வேதகிரீசுவரர் திருவடிகள் போற்றி
தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ
ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும்
நாடுடையா னள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
2
தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
3
துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா விலங்கெயின்மூன்று மெரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
4
பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணன் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
5
Go to top
வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடும்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
6
இப்பாடல் கிடைக்கவில்லை.
7
ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
8
இடந்தபெம்மா னேனமதாயு மனமாயும்
தொடர்ந்தபெம்மான் றூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
9
தேயநின்றான் றிரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கழுக்குன்றம்
1.103
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடையான் ஒரு காதில்-தூய
Tune - குறிஞ்சி
(திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
6.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூ இலை வேல் கையானை,
Tune - திருத்தாண்டகம்
(திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
7.081
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொன்று செய்த கொடுமையால் பல,
Tune - நட்டபாடை
(திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
8.130
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
Tune -
(திருக்கழுக்குன்றம் )
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000