மெய்த்தாறு சுவையுமே ழிசையுமெண் குணங்களும் விரும்புநால்வே தத்தாலு மறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோ லரிவைபாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூ ருலவுதெண்ணீர் முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கு முதுகுன்றமே.
|
1
|
வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு போரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில் காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலருதிர்த்துக் கயமுயங்கி மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற் புகுந்துலவு முதுகுன்றமே.
|
2
|
தக்கனது பெருவேள்விச் சந்திரனிந் திரனெச்ச னருக்கனங்கி மிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில் கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமு குயர்தெங்கின் குலைகொள்சோலை முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
|
3
|
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள் செம்மலரோ னிந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாக மைம்மருவு மேருவிலு மாசுணநா ணரியெரிகால் வாளியாக மும்மதிலு நொடியளவிற் பொடிசெய்த முதல்வனிட முதுகுன்றமே.
|
4
|
இழைமேவு கலையல்கு லேந்திழையா ளொருபாலா யொருபாலெள்கா துழைமேவு முரியுடுத்த வொருவனிருப் பிடமென்ப ரும்பரோங்கு கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்கல்லின் முழைமேவு மால்யானை யிரைதேரும் வளர்சாரன் முதுகுன்றமே.
|
5
|
Go to top |
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறு வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு கரையருகு மறியமோதித் தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்து முகையார்செந் தாமரைகண் முகமலர வயல்தழுவு முதுகுன்றமே.
|
6
|
அறங்கிளரு நால்வேத மாலின்கீ ழிருந்தருளி யமரர்வேண்ட நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தி னொன்றறுத்த நிமலர்கோயில் திறங்கொண்மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குறவர் சிறுமிமார்கள் முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே.
|
7
|
கதிரொளிய நெடுமுடிபத் துடையகட லிலங்கையர்கோன் கண்ணும்வாயும் பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்று மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் றூன்றிமறை பாடவாங்கே முதிரொளிய சுடர்நெடுவாண் முன்னீந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே.
|
8
|
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும் ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் துறநாடி யுண்மைகாணாத் தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்த மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே.
|
9
|
மேனியிற்சீ வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர் ஞானிகளா யுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியு முதுகுன்றமே.
|
10
|
Go to top |
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யு முதுகுன்றத் திறையைமூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக்கொண்டு தழங்கெரிமூன் றோம்புதொழிற் றமிழ்ஞான சம்பந்தன் சமைத்தபாடல் வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் நீடுலக மாள்வர்தாமே.
|
11
|
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
|