அரவிரி கோடனீட லணி காவிரி யாற்றயலே மரவிரி போதுமௌவன் மண மல்லிகை கள்ளவிழும் குரவிரி சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ னெம்மிறையே.
|
1
|
ஓத்தர வங்களோடு மொலி காவிரி யார்த்தயலே பூத்தர வங்களோடும் புகை கொண்டடி போற்றிநல்ல கூத்தர வங்களோவாக் குழ கன்குட மூக்கிடமா ஏத்தர வங்கள்செய்ய விருந் தானவ னெம்மிறையே.
|
2
|
மயில்பெடை புல்கியால மணன் மேன்மட வன்னமல்கும் பயில்பெடை வண்டுபண்செய் பழங் காவிரிப்பைம் பொழில்வாய்க் குயில்பெடை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா இயலொடு வானமேத்த விருந் தானவ னெம்மிறையே.
|
3
|
மிக்கரை தாழவேங்கை யுரி யார்த்துமை யாள்வெருவ அக்கர வாமையேன மருப் போடவை பூண்டழகார் கொக்கரை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா எக்கரை யாருமேத்த விருந் தானவ னெம்மிறையே.
|
4
|
வடிவுடை வாட்டடங்கண் ணுமை யஞ்சவோர் வாரணத்தைப் பொடியணி மேனிமூட வுரி கொண்டவன் புன்சடையான் கொடிநெடு மாடமோங்குங் குழ கன்குட மூக்கிடமா இடிபடு வானமேத்த விருந் தானவ னெம்மிறையே.
|
5
|
Go to top |
கழைவளர் கவ்வைமுத்தங் கமழ் காவிரி யாற்றயலே தழைவளர் மாவினல்ல பல வின்கனி கள்தங்கும் குழைவளர் சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா இழைவளர் மங்கையோடு மிருந் தானவ னெம்மிறையே.
|
6
|
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தானெழில் வையமுய்யச் சிலைமலி வெங்கணையாற் சிதைத் தான்புர மூன்றினையும் குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்கிடமா இலைமலி சூலமேந்தி யிருந் தானவ னெம்மிறையே.
|
7
|
நெடுமுடி பத்துடைய நிகழ் வாளரக் கன்னுடலைப் படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக் கீழடர்த்தான் கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட மூக்கிடமா இடுமண லெக்கர்சூழ விருந் தானவ னெம்மிறையே.
|
8
|
ஆரெரி யாழியானு மல ரானும ளப்பரிய நீரிரி புன்சடைமே னிரம் பாமதி சூடிநல்ல கூரெரி யாகிநீண்ட குழ கன்குட மூக்கிடமா ஈருரி கோவணத்தோ டிருந் தானவ னெம்மிறையே.
|
9
|
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமணர் நாடிய தேவரெல்லா நயந் தேத்திய நன்னலத்தான் கூடிய குன்றமெல்லா முடை யான்குட மூக்கிடமா ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவ னெம்மிறையே.
|
10
|
Go to top |
வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான் நண்பொடு நின்றசீரான் றமிழ்ஞானசம் பந்தனல்ல தண்குட மூக்கமர்ந்தா னடிசேர்தமிழ் பத்தும்வல்லார் விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.
|
11
|