பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக் கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழு மடியவர் நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணு குயர்பதி புண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி புறவமே.
|
1
|
கொக்குடை யிறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர் அக்குடை வடமுமொ ரரவமு மலரரை மிசையினில் திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும் புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.
|
2
|
கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை யுமையொரு பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய் தங்கிய கரதல முடையவர் விடையவ ருறைபதி பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.
|
3
|
மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார் சாதக வுருவியல் கானிடை யுமைவெரு வுறவரு போதக வுரியதண் மருவின ருறைபதி புறவமே.
|
4
|
காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில் தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறை தொகுபதி ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு பூமக னலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.
|
5
|
Go to top |
சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட முன்னைய முதல்வினை யறவரு ளினருறை முதுபதி புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே.
|
6
|
வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர் பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர் எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொ ரியல்பினர் புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.
|
7
|
வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும் நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற ஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர் வெளிபொடி பொசிதரு திருவுரு வுடையவ ருறைபதி புறவமே.
|
8
|
தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில் ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும் வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப் போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.
|
9
|
கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர் பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர் நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி புறவமே.
|
10
|
Go to top |
போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன் ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும் நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.
|
11
|