சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.060   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) - திருநேரிசை அருள்தரு மின்னனையாளம்மை உடனுறை அருள்மிகு பிரியாதநாதர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU   Add audio link Add Audio
மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.


1


நாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற
பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.


2


குறவிதோண் மணந்த செல்வக் குமரவே டாதை யென்றும்
நறவிள நறுமென் கூந்த னங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி யுணருமா றுணர்த்து வேனே.


3


மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவின் மானி னோடுங் கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை யந்தண் பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா வறிவி லேனே.


4


ஓடைசேர் நெற்றி யானை யுரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே.


5


Go to top
கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக் கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப் பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானு மிறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.


6


சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை
மெத்தநே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே.


7


முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே யாயி னானைப் பெருவேளூர் பேணி னானை
அண்டமா மாதி யானை யறியுமா றறிகி லேனே.


8


விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே.


9


பொருகட லிலங்கை மன்ன னுடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக் கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
உருகிய வடிய ரேத்து முள்ளத்தா லுள்கு வேனே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை)
3.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை
Tune - பஞ்சமம்   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)
4.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அணி நாவினானை, மறப்பு
Tune - திருநேரிசை   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.060