சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.052   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=Yu4It1GWmPw   Add audio link Add Audio
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.


1


நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.


2


ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யாரய னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர் மழுவல னேந்திய
நாதர் போல்திரு நாகேச் சரவரே.


3


சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.


4


பண்டொர் நாளிகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.


5


Go to top
வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு நாகேச் சரவரே.


6


மானை யேந்திய கையினர் மையறு
ஞானச் சோதிய ராதியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்கும்
தேனர் போல்திரு நாகேச் சரவரே.


7


கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழக ரால்நிழற் கீழற மோதிய
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.


8


வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.


9


தூர்த்தன் தோண்முடி தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடும்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாகேச்சரம்
4.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   கச்சை சேர் அரவர் போலும்;
Tune - திருநேரிசை   (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
5.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லர்; நல்லது ஓர் நாகம்
Tune - திருக்குறுந்தொகை   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
6.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
Tune - திருத்தாண்டகம்   (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
7.099   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பிறை அணி வாள் நுதலாள்
Tune - பஞ்சமம்   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 5.052