நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை ஆற லைக்கநின் றாடும் அமுதினைத் தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர் ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
1
|
பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச் சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர் எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
2
|
வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார் கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிநின் றுள்ளத் தில்லொளி யைக் கண்ட துள்ளமே.
|
3
|
அம்மா னையமு தின்னமு தேயென்று தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழும் செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள் எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
4
|
கூறே றும்உமை பாகமோர் பாலராய் ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர் பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம் ஏறே றுமெந்தை யைக்கண்டதெ னுள்ளமே.
|
5
|
Go to top |
முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார் தந்நெஞ் சந்தமக் குத்தாமி லாதவர் வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே என்னெஞ் சிலீச னைக்கண்டதெ னுள்ளமே.
|
6
|
வென்றா னைப்புல னைந்துமென் தீவினை கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம் ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
7
|
மருவி னைமட நெஞ்சம் மனம்புகும் குருவி னைக்குணத் தாலே வணங்கிடும் திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
8
|
தேச னைத்திரு மால்பிர மன்செயும் பூச னைப்புண ரிற்புணர் வாயதோர் நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
9
|
வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக் கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால் ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
|
10
|
Go to top |