ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானே கூரார் மழுவாட் படையொன் றேந்திக் குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே பேரா யிரமுடையா யென்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே ஆரா அமுதேயென் ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
1
|
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் தீர்த்தா புராணனே யென்றேன் நானே மூவா மதிசூடி யென்றேன் நானே முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே ஏவார் சிலையானே யென்றேன் நானே இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
2
|
அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே அடியார்கட் காரமுதே யென்றேன் நானே நஞ்சணி கண்டனே யென்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது நிறையும் அமுதமே யென்றேன் நானே அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.
|
3
|
தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே எல்லை நிறைந்தானே யென்றேன் நானே ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே அல்லற் கடல்புக் கழுந்து வேனை வாங்கியருள் செய்தா யென்றேன் நானே எல்லையாம் ஐயாறா என்றேன் நானே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
4
|
இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே இருசுடர் வானத்தா யென்றேன் நானே தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே கண்டங் கறுத்தானே யென்றேன் நானே கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
5
|
Go to top |
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே கற்றார்கள் நாவினா யென்றேன் நானே கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
6
|
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே ஏகம்பம் மேயானே யென்றேன் நானே பண்ணார் மறைபாடி யென்றேன் நானே பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே அண்ணாஐ யாறனே யென்றேன் நானே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
7
|
அவனென்று நானுன்னை யஞ்சா தேனை அல்லல் அறுப்பானே யென்றேன் நானே சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச் செல்வந் தருவானே யென்றேன் நானே பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று பண்டை வினையறுப்பா யென்றேன் நானே அவனென்றே யாதியே ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
8
|
கச்சியே கம்பனே யென்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே நிச்சன் மணாளனே யென்றேன் நானே நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின்றேனே.
|
9
|
வில்லாடி வேடனே யென்றேன் நானே வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே சொல்லாய சூழலா யென்றேன் நானே சுலாவாய தொல்நெறியே யென்றேன் நானே எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|