ஓசை யொலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
1
|
நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே நோவாமே நோக்கருள வல்லாய் நீயே காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
2
|
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே சினத்திருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
3
|
வானுற்ற மாமலைக ளானாய் நீயே வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
4
|
பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திண்ணார் மழுவாட் படையாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
5
|
Go to top |
உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே கற்றிருந்த கலைஞான மானாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே செற்றிருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
6
|
எல்லா உலகமு மானாய் நீயே ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
7
|
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவில் பெருமை யுடையாய் நீயே பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே தேவ ரறியாத தேவன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
8
|
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்ப மேய இறைவன் நீயே வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே வாரா வுலகருள வல்லாய் நீயே தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
9
|
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
10
|
Go to top |
ஆரு மறியா இடத்தாய் நீயே ஆகாயந் தேரூர வல்லாய் நீயே பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத் திறுத்தாய் நீயே ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே ஒண்டா மரையானும் மாலுந் கூடித் தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
|
11
|
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|