முந்தை யூர்முது குன்றங் குரங்கணின் முட்டம் சிந்தை யூர்நன்று சென்றடை வான்திரு வாரூர் பந்தை யூர்பழை யாறு பழனம்பைஞ் ஞீலி எந்தையூ ரெய்த மானிடை யாறிடை மருதே.
|
1
|
சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர் ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப் பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர் எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.
|
2
|
கடங்க ளூர்திருக் காரி கரைகயி லாயம் விடங்க ளூர்திரு வெண்ணிஅண் ணாமலை வெய்ய படங்க ளூர்கின்ற பாம்பரை யான்பரஞ் சோதி இடங்கொ ளூரெய்த மானிடை யாறிடை மருதே.
|
3
|
கச்சை யூர்கா வங்கழுக் குன்றங்கா ரோணம் பிச்சை யூர்திரி வான்கட வூர்வட பேறூர் கச்சி யூர்கச்சி சிக்கல்நெய்த் தானம் மிழலை இச்சை யூரெய்த மானிடை யாறிடைமருதே.
|
4
|
நிறைய னூர்நின்றி யூர்கொடுங் குன்ற மமர்ந்த பிறைய னூர்பெரு மூர்பெரும் பற்றப் புலியூர் மறைய னூர்மறைக் காடு வலஞ்சுழி வாய்த்த இறைய னூரெய்த மானிடை யாறிடை மருதே.
|
5
|
Go to top |
திங்க ளூர்திரு வாதிரை யான்பட் டினமூர் நங்க ளூர்நறை யூர்நனி நாலிசை நாலூர் தங்க ளூர்தமி ழானென்று பாவிக்க வல்ல எங்க ளூரெய்த மானிடை யாறிடை மருதே.
|
6
|
கருக்க நஞ்சமு துண்டகல் லாலன்கொல் லேற்றன் தருக்க ருக்கனைச் செற்றுகந் தான்றன் முடிமேல் எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமுஞ் சூடி இருக்கு மூரெய்த மானிடை யாறிடை மருதே.
|
7
|
தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர் பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.
|
8
|
பேற னூர்பிறைச் சென்னியி னான்பெரு வேளூர் தேற னூர்திரு மாமகள் கோன்திரு மாலோர் கூற னூர்குரங் காடு துறைதிருக் கோவல் ஏற னூரெய்த மானிடை யாறிடை மருதே.
|
9
|
ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன் தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக் கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.
|
10
|
Go to top |