எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
1
|
குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக் குடமாமணி சந்தன மும்மகிலும் துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும் மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள் விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
2
|
வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார் வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத் திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங் குறுந்தாட்பல வும்விர விக்குளிரும் விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
3
|
பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய் படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய் தண்ணார்அகி லுந்நல சாமரையும் அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப மடவார்நட மாடு மணியரங்கில் விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
4
|
துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந் தூங்குங்கா திற்றுளங் கும்படியாய் களையேகம ழும்மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய் பிறவாதவ னேபெறு தற்கரியாய் வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
5
|
Go to top |
தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய் சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய் உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார் புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார் முழவாரொலி பாடலொ டாடலறா முதுகாடரங் காநட மாடவல்லாய் விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
6
|
கடமாகளி யானை யுரித்தவனே கரிகாடிட மாஅனல் வீசிநின்று நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய் நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண் பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும் விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
7
|
காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக் கதிர்மாமணி சந்தன மும்மகிலும் சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் பாடல்முழ வுங்குழ லும்மியம்பப் பணைத்தோளியர் பாடலொ டாடலறா வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
8
|
கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே கொடுகொட்டியொர் வீணை யுடையவனே பொங்காடர வும்புன லுஞ்சடைமேற் பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார் துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித் திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல் வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல் விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.
|
9
|
வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார் வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும் வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன் வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார் சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.
|
10
|
Go to top |