பத்திமையும் மடிமையையுங் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோ யதுஇதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.
|
1
|
ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச் செவ்வணமாந் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி மையணவும் கண்டத்து வளர்சடையெம் மாரமுதை எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.
|
2
|
சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானை இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.
|
3
|
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே அங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதை வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.
|
4
|
செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய அப்பெரிய திருவினையே அறியாதே யருவினையேன் ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி எப்பரிசு பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
5
|
Go to top |
வன்னாக நாண்வரைவில் லங்கிகணை அரிபகழி தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந் தென்னாகப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
6
|
வன்சயமா யடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய முன்சயமார் பாதத்தான் முனிந்துகந்த மூர்த்திதனை மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி என்செயநான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
7
|
முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்து முழுமுதலை அந்நெறியை யமரர்தொழும் நாயகனை யடியார்கள் செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறந்திங்ஙனம்நான் என்னறிவான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
8
|
கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார உற்றுளனாம் ஒருவனைமுன் இருவர்நினைந் தினிதேத்தப் பெற்றுளனாம் பெருமையனைப் பெரிதடியே கையகன்றிட் டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
9
|
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி மாழையொண்கண் பரவையைத் தந்தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
10
|
Go to top |
வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய நுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச் சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன் எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே
|
11
|
பேரூரு மதகரியின் உரியானைப் பெரியவர்தம் சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம்விரும்பி ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில் ஊரூர னிவைவல்லார் உலகவர்க்கு மேலாரே
|
12
|
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
|
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
|
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
|
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
|
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
|
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
|
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
|
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
|
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
|
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
|