முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமக ளோடுபல் லாண்டி சைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
1
|
பூவியல் வார்சடை எம்பி ராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள் கூவுமின் தொண்டர் புறம்நி லாமே குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன் தேவியுங் தானும்வந் தெம்மை யாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.
|
2
|
சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிப ரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் றன்பெருமான் ஆழியான் நாதன்நல் வேலன் தாதை எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற் கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
3
|
காசணி மின்கள் உலக்கை யெல்லாங் காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடிய வர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப் பாச வினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
|
4
|
அறுகெடுப் பார்அய னும்மரியும் அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம் நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம் செறிவுடை மும்மதில் எய்த வில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
5
|
Go to top |
உலக்கை பலஓச்சு வார்பெரியர் உலகமெ லாம்உரல் போதா தென்றே கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதா தென்றே நலக்க அடியோமை ஆண்டு கொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
|
6
|
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பரா பரனுக் காடக மாமலை அன்ன கோவுக் காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
|
7
|
வாள்தடங் கண்மட மங்கை நல்லீர் வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் தோள்திரு முண்டந் துதைந்தி லங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
|
8
|
வையகம் எல்லாம் உரல தாக மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந் துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச் செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாண னுக்கே ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
9
|
முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய்குழல் வண்டினம் ஆட ஆடச் சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச் செங்கயற் கண்பனி ஆட ஆடப் பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கருணையொ டாட ஆட ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
10
|
Go to top |
மாடு நகைவாள் நிலாஎ றிப்ப வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடி னானுக் காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
11
|
மையமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை ஐயனை ஐயர்பி ரானை நம்மை அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள் பையர வல்குல் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
|
12
|
மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமு தெங்க ளப்பன் எம்பெரு மான்இம வான்ம கட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்த கப்பன் தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.
|
13
|
சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலை யாடச் செங்கனி வாயித ழுந்து டிப்பச் சேயிழை யீர்சிவ லோகம் பாடிக் கங்கை இரைப்ப அராஇ ரைக்குங் கற்றைச் சடைமுடி யான்க ழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.
|
14
|
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயி னானைச் சித்தம் புகுந்துதித் திக்க வல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தை நல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
15
|
Go to top |
ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல் தேவர் கனாவிலுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொ டியான் சிவபெரு மான்புரஞ் செற்ற கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.
|
16
|
தேனக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடித் திருச்ச டைமேல் வானக மாமதிப் பிள்ளை பாடி மால்விடை பாடி வலக்கை யேந்தும் ஊனக மாமழுச் சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனக மாகநஞ் சுண்டல் பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே.
|
17
|
அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டு கொண்ட நயந்தனைப் பாடிநின் றாடி யாடி நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே.
|
18
|
வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியும் பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக் கட்டிய மாசுணக் கச்சை பாடிக் கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல் இட்டுநின் றாடும் அரவம் பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே.
|
19
|
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச் சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத் துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப் பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்கு ஆதியும் அந்தமும் ஆயி னாருக்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
|
20
|
Go to top |
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|