பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
1
|
நானார்என் உள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.
|
2
|
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
3
|
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
4
|
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
5
|
Go to top |
வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
6
|
சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
7
|
ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என்றாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
8
|
கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
9
|
நோயுற்று மூத்துநான் நுந்துகன்றாய் இங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
10
|
Go to top |
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
11
|
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
12
|
நான்தனக் கன்பின்மை நானும்தா னும்அறிவோம் தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.
|
13
|
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
14
|
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
15
|
Go to top |
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
16
|
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
17
|
தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.
|
18
|
கள்வன் கடியன் கலதிஇவன் என்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே உள்ளத் துறுதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம் தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
19
|
பூமேல் அயனோடு மாலும் புகலரிதென் றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேல் தவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
|
20
|
Go to top |
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|