ஒராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லை யொண்ணுதலங் கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின் பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணைத்த இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெம ரெண்ணுவதே.
|
1
|
>மணியக் கணியும் அரன்நஞ்ச மஞ்சி மறுகிவிண்ணோர் பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத் துணியக் கருதுவ தின்றே துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுகின் றார்பலர் மேன்மே லயலவரே.
|
2
|
>பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற் காப்பணிந் தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ கோப்பணி வான்றோய் கொடிமுன்றில் நின்றிவை ஏர்குழுமி மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே.
|
3
|
>எலும்பா லணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்றும் நல்கினுங் கல்வரை நாடரம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்நீ கருதுவதே.
|
4
|
>விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்றினி விம்மிவிம்மி அசும்புற்ற கண்ணோ டலறாய் கிடந்தரன் தில்லையன்னாள் குயம்புற் றரவிடை கூரெயிற் றூறல் குழல்மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே.
|
5
|
Go to top |
>மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங் கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப் பொய்தயங் குந்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள் பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே.
|
6
|
>மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற் கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறியேன் பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளென்னைப் புல்லிக்கொண்டு பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைந்தொடியே.
|
7
|
>மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக் கல்லியல் வெம்மைக் கடங்கடுந் தீக்கற்று வானமெல்லாஞ் சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங் கண்ணித்தொல் லோன்புலியூர் அல்லியங் கோதைநல் லாயெல்லை சேய்த்தெம் அகல்நகரே.
|
8
|
>பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே இணையும் அளவுமில் லாஇறை யோனுறை தில்லைத்தண்பூம் பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே.
|
9
|
>இங்கய லென்னீ பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக் கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத லண்ணல் கடிகொள்தில்லைப் பங்கயப் பாசடைப் பாய்தடம் நீயப் படர்தடத்துச் செங்கய லன்றே கருங்கயற் கண்ணித் திருநுதலே.
|
10
|
Go to top |
>தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங் கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடும்எங் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே.
|
11
|
>குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய் நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர் மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே.
|
12
|
>நிழற்றலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும் அழற்றலை வெம்பரற் றென்பரென் னோதில்லை யம்பலத்தான் கழற்றலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போற் குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும்நங் கொற்றவர்க்கே.
|
13
|
>காயமும் ஆவியும் நீங்கள்சிற் றம்பல வன்கயிலைச் சீயமும் மாவும் வெரீஇவர லென்பல் செறிதிரைநீர்த் தேயமும் யாவும் பெறினுங் கொடார்நமர் இன்னசெப்பில் தோயமும் நாடுமில் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே.
|
14
|
>மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே.
|
15
|
Go to top |
>கம்பஞ் சிவந்த சலந்தரன் ஆகங் கறுத்ததில்லை நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுர மாகுநம்பா அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டரி சிந்துகண்ணாள் செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே.
|
16
|
>முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த் துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அரு ளாசையினாற் பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே.
|
17
|
>பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் அனிச்சந் திகழுமஞ் சீறடி யாவ அழல்பழுத்த கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால் இனிச்சந்த மேகலை யாட்கென்கொ லாம்புகுந் தெய்துவதே.
|
18
|
>வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளலுள்ளந் தெய்வந் தருமிருள் தூங்கு முழுதுஞ் செழுமிடற்றின் மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர்போல் மொய்வந்த வாவி தெளியுந் துயிலுமிம் மூதெயிலே.
|
19
|
>பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா அறந்திருந் துன்னரு ளும்பிறி தாயின் அருமறையின் திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே.
|
20
|
Go to top |
>ஈண்டொல்லை ஆயமும் ஔவையும் நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த் தாண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின் றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம் பலம்நிலவு சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே.
|
21
|
>பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம் பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும் மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்குங் காணத் திருத்திய போலும்முன் னாமன்னு கானங்களே.
|
22
|
>கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை கூடினென்கை வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத வாமன்னு மம்பலத்தோன் அடித்தே ரலரென்ன அஞ்சுவன் நின்ஐய ரென்னின்மன்னுங் கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ் விண்தோய் கனவரையே.
|
23
|
>முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும் இன்னாக் கடறிதிப் போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று பொன்னா ரணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார் தென்னா வெனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே.
|
24
|
>விடலையுற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ மடலையுற் றார்குழல் வாடினள் மன்னுசிற் றம்பலவர்க் கடலையுற் றாரின் எறிப்பொழிந் தாங்கருக் கன்சுருக்கிக் கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே.
|
25
|
Go to top |
>அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன் பின்பணைத் தோளி வருமிப் பெருஞ்சுரஞ் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணற வுண்அளி போன்றொளிர் நாடகமே.
|
26
|
>கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின் பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே விண்கட நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கனெங்கோன் தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகந் தண்ணெனவே.
|
27
|
>மின்றங் கிடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர் குன்றங் கடந்துசென் றால்நின்று தோன்றுங் குரூஉக்கமலந் துன்றங் கிடங்குந் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே.
|
28
|
>மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப் பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய் நின்போல் நடையன்னந் துன்னிமுன் தோன்றுநன் னீணகரே.
|
29
|
>செய்குன் றுவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்களெய்ப் பாறும் பொழிலவை ஞாங்கரெங்கும் பொய்குன்ற வேதிய ரோதிடம் உந்திடம் இந்திடமும் எய்குன்ற வார்சிலை யம்பல வற்கிடம் ஏந்திழையே.
|
30
|
Go to top |
>மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசுமெங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய் அயிலெனப் பேருங்கண் ணாயென் கொலாமின் றயர்கின்றதே.
|
31
|
>ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை யாவருக் கும்மெளிதாந் தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேற் கோளரிக் குந்நிக ரன்னா ரொருவர் குரூஉமலர்த்தார் வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட லாயத்தெம் வாணுதலே.
|
32
|
>வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக் கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற் றெடுத்தாற் கினியன வேயினி யாவன எம்மனைக்கே.
|
33
|
>முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச் சிறுவலக் காரங்கள் செய்தவெல் லாம்முழு துஞ்சிதையத் தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார் உறுவலக் கானகந் தான்படர் வானா மொளியிழையே.
|
34
|
>தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப் பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்கும்நங் காய்எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படிபாய் ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே.
|
35
|
Go to top |
>தழுவின கையிறை சோரின் தமியமென் றேதளர்வுற் றழுவினை செய்யுநை யாவஞ்சொற் பேதை யறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ் சுண்டம் பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே.
|
36
|
>யாழியன் மென்மொழி வன்மனப் பேதையொ ரேதிலன்பின் தோழியை நீத்தென்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே.
|
37
|
>கொன்னுனை வேல்அம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள் என்னணஞ் சென்றன ளென்னணஞ் சேரு மெனஅயரா என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென் றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்கின்றதே.
|
38
|
>பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு நற்றேன் மொழியழற் கான்நடந் தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன்சுடர் வானவனே.
|
39
|
>வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவல்மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாந்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ராற்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே.
|
40
|
Go to top |
>வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து திசைதிசைதாம் போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே.
|
41
|
>பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன மணங்கொளஞ் சாயலும் மன்னனும் இன்னே வரக்கரைந்தால் உணங்கலஞ் சாதுண்ண லாமொள் நிணப்பலி யோக்குவல்மாக் குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே.
|
42
|
>முன்னுங் கடுவிட முண்டதென் தில்லைமுன் னோனருளால் இன்னுங் கடியிக் கடிமனைக் கேமற் றியாமயர மன்னுங் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறுமுண்டேல் உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள் நான்மறை யுத்தமரே.
|
43
|
>தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலஞ்சிந்தி யாரினஞ்சேர் முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேனெடுத்த ஒள்வன் படைக்கண்ணி சீறடி யிங்கிவை யுங்குவையக் கள்வன் பகட்டுர வோனடி யென்று கருதுவனே.
|
44
|
>பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க் கோலத் தவிசின் மிதிக்கிற் பதைத்தடி கொப்புள்கொள்ளும் வேலொத்த வெம்பரற் கானத்தின் இன்றொர் விடலைபின்போங் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே.
|
45
|
Go to top |
>பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றி லெனைப்பிரிந்தால் ஊதைக் கலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லையன்னாள் ஏதிற் சுரத்தய லானொடின் றேகினள் கண்டனையே போதிற் பொலியுந் தொழிற்புலிப் பற்குரற் பொற்றொடியே.
|
46
|
>புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் றனைப்பணி யாதவர் போல்மிகு பாவஞ்செய்தேற் கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே.
|
47
|
>பாயும் விடையோன் புலியூ ரனையவென் பாவைமுன்னே காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங் கண்டுநின்று வாயுந் திறவாய் குழையெழில் வீசவண் டோலுறுத்த நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே.
|
48
|
>சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி னீர்புலி யூரம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர் பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே.
|
49
|
>வெதிரேய் கரத்துமென் தோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ அதிரேய் மறையினிவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக் கதிரேய் சடையோன் கரமான் எனவொரு மான்மயில்போல் எதிரே வருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலொடே.
|
50
|
Go to top |
>மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின் றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலே தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே.
|
51
|
>பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத் தீங்கை இலாச்சிறி யாள்நின்ற திவ்விடஞ் சென்றெதிர்ந்த வேங்கையின் வாயின் வியன்கைம் மடுத்துக் கிடந்தலற ஆங்கயி லாற்பணி கொண்டது திண்டிற லாண்டகையே.
|
52
|
>மின்றொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே நன்றொத் தெழிலைத் தொழவுற் றனமென்ன தோர்நன்மைதான் குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே.
|
53
|
>மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையி னெல்லை யணுகுவரே.
|
54
|
>சுரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்வியன் கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே.
|
55
|
Go to top |
>ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவ ரல்குவர்போய்த் தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து பாண்டி லெடுத்தபஃ றாமரை கீழும் பழனங்களே.
|
56
|
Other song(s) from this location: கோயில் (சிதம்பரம்)
1.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
3.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.022
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
Tune - காந்தாரம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.023
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!
Tune - கொல்லி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி,
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
4.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத்
Tune - திருவிருத்தம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
Tune - பழந்தக்கராகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
5.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
Tune - திருக்குறுந்தொகை
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை
Tune - பெரியதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
6.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட
Tune - புக்கதிருத்தாண்டகம்
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
7.090
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
Tune - குறிஞ்சி
(கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
|
8.102
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.103
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.104
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
Tune - தென் நாடு உடைய சிவனே, போற்றி!
(கோயில் (சிதம்பரம்) )
|
8.109
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.110
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.111
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.112
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.113
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.114
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.115
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.116
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
Tune - தாலாட்டு பாடல்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.117
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
Tune - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.118
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
Tune - ஏரார் இளங்கிளியே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.121
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.122
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
Tune - அக்ஷரமணமாலை
(கோயில் (சிதம்பரம்) )
|
8.131
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(கோயில் (சிதம்பரம்) )
|
8.135
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.140
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
Tune - அயிகிரி நந்தினி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.145
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(கோயில் (சிதம்பரம்) )
|
8.146
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.149
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.151
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
Tune - முல்லைத் தீம்பாணி
(கோயில் (சிதம்பரம்) )
|
8.201
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.202
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.203
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.204
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.205
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.206
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.207
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.208
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.209
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.210
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.211
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.212
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.213
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.214
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.215
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.216
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.217
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.218
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.219
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.220
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.221
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.222
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.223
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.224
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
8.225
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.001
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.002
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.003
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.004
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.008
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.019
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.020
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.021
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.022
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.023
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.024
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.025
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.026
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.027
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.028
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
9.029
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.006
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.026
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|
11.032
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
Tune -
(கோயில் (சிதம்பரம்) )
|