சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருவேட்களம்
747   சதுரத்தரை நோக்கிய     748   மாத்திரை யாகிலு    
747   திருவேட்களம்   சதுரத்தரை நோக்கிய  
தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
     கதிரொத்திட ஆக்கிய கோளகை
          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
     மயிலிற்புற நோக்கிய னாமென
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
     யவர்முத்தமி ழாற்புக வேபர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
          சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
     பதசத்தினி மூத்தவி நாயகி
          செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
     விகடத்துற வாக்கிய மாதவன்
          விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
     கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
          விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.


சதுரத்தரை நோக்கிய பூவொடு
          கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
             தழைய சிவ பாக்கிய நாடக.....அநுபூதி
சரணக் கழல் காட்டியே என் ஆணவ
          மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
             சயிலக் குலம் ஈட்டிய தோளொடு.....முகம் ஆறும்
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
          மயிலின் புறம் நோக்கியனாம் என
             கருணைக் கடல் காட்டிய கோலமும்.....அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய் அடி
          யவர் முத்தமிழால் புகவே பர
             கதி பெற்றிட நோக்கிய பார்வையும்.....மறவேனே
சிதறத் தரை நால்திசை பூதர(ம்)
          நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
             சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில்.....விடுவோனே
சிவ பத்தினி கூற்றினை மோதிய
          பத சத்தினி மூத்த விநாயகி
             செகம் இப்படி தோற்றிய பார்வதி.....அருள்பாலா
விதுரற்கும் அராக் கொடி யானையும்
          விகடத் துறவு ஆக்கிய மாதவன்
             விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன்.....மருகோனே
வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய
          கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
             விறல் மெய்த் திருவேட்களம் மேவிய.....பெருமாளே.

Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=8ch7gaAy1nQ
Add (additional) Audio/Video Link

Back to Top

748   திருவேட்களம்   மாத்திரை யாகிலு  
தாத்தன தானன தாத்தன தானன
     தாத்தன தானன ...... தனதான

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
     வாழ்க்கையை நீடென ...... மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
     மாப்பரி வேயெய்தி ...... அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
     பாற்படு ஆடக ...... மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
     பாற்கட லானென ...... வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
     சாத்தியர் மேவிய ...... பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாட்பர னார்தரு...... குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
     மீக்கமு தாமயில் ...... மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
     வேட்கள மேவிய ...... பெருமாளே.


மாத்திரை யாகிலு நாத்தவறாளுடன்
     வாழ்க்கையை நீடென.....மதியாமல்
மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள்
     மாப்பரிவேயெய்தி.....அநுபோக
பாத்திரம் ஈதென மூட்டிடு மாசைகள்
     பாற்படு ஆடகம்.....அதுதேட
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
     பாற்கடலானென.....உழல்வேனோ
சாத்திரம் ஆறையு நீத்த மனோலய
     சாத்தியர் மேவிய.....பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாட் பரனார்தரு.....குமரேசா
வேத்திர சாலமது ஏற்றிடு வேடுவர்
     மீக்கு அமுதாமயில்.....மணவாளா
வேத்தம தாம் மறை ஆர்த்திடு சீர்
     திருவேட்கள மேவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Fqn9D4SI64k
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 07 Apr 2026 01:48:44 +0000