சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குறி கலந்த இசை பாடலினான்,  (திருப்புகலூர்)  
3 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பத்தரோடு பலரும் பொலிய மலர்  (திருவலிதாயம் (பாடி))  
4 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மைம் மரு பூங்குழல் கற்றை  (திருவீழிமிழலை)  
5 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய் அருகே புனல் பாய,  (கீழைத்திருக்காட்டுப்பள்ளி)  
6 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)  
7 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடக மெல் அடிப் பாவையோடும்,  (திருநள்ளாறும் திருஆலவாயும்)  
8 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புண்ணியர், பூதியர், பூத நாதர்,  (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்))  
9 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு ஆர் குழல் அரிவையொடு  (திருவேணுபுரம் (சீர்காழி))  
10 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  (திருவண்ணாமலை)  
11 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை ஆர் புனல் உடையான்,  (திருவீழிமிழலை)  
12 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தா வரை நிறுவி, கடல்  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
13 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குரவம் கமழ் நறு மென்  (திருவியலூர்)  
14 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானில் பொலிவு எய்தும் மழை  (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை))  
15 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மை ஆடிய கண்டன், மலை  (திருநெய்த்தானம்)  
16 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் உந்து உறு திரள்  (திருப்புள்ளமங்கை)  
17 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்  (திருஇடும்பாவனம்)  
18 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  (திருநின்றியூர்)  
19 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை அணி படர் சடை  (சீர்காழி)  
20 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தட நிலவிய மலை நிறுவி,  (திருவீழிமிழலை)  
21 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புவம், வளி, கனல், புனல்,  (திருச்சிவபுரம்)  
22 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிலை தனை நடு இடை  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
23 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  (திருக்கோலக்கா)  
24 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூஆர் கொன்றைப் புரிபுன் சடை  (சீர்காழி)  
25 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு ஆர் குழலிமாது ஓர்  (திருச்செம்பொன்பள்ளி)  
26 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு வெறி  (திருப்புத்தூர்)  
27 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முந்தி நின்ற வினைகள் அவை  (திருப்புன்கூர்)  
28 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  (திருச்சோற்றுத்துறை)  
29 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊர் உலாவு பலி கொண்டு,  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
30 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விதி ஆய், விளைவு ஆய்,  (திருப்புகலி -(சீர்காழி ))  
31 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விழுநீர், மழுவாள் படை, அண்ணல்  (திருக்குரங்குஅணில்முட்டம்)  
32 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓடே கலன்; உண்பதும் ஊர்  (திருவிடைமருதூர்)  
33 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கணை நீடு எரி, மால்,  (திருஅன்பில் ஆலந்துறை)  
34 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடல் ஏறு அமரும் கொடி  (சீர்காழி)  
35 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரை ஆர் விரி கோவண  (திருவீழிமிழலை)  
36 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை ஆர் மதியோடு உர  (திருவையாறு)  
37 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரவச் சடை மேல் மதி,  (திருப்பனையூர்)  
38 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்  (திருமயிலாடுதுறை)  
39 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  (திருவேட்களம்)  
40 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி உடை மார்பினர், போர்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
41 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் அணி திகழ் திருமார்பில்  (திருப்பாம்புரம்)  
42 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைம் மா நாகம், பல்மலர்க்  (திருப்பேணுபெருந்துறை)  
43 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடம் திகழ் மென் முலையாளைப்  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))  
44 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துணி வளர் திங்கள் துளங்கி  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))  
45 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்  (திருவாலங்காடு (பழையனூர்))  
46 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குண்டைக் குறள் பூதம் குழும,  (திருவதிகை வீரட்டானம்)  
47 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பல் அடைந்த வெண் தலையில்  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
48 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நூல் அடைந்த கொள்கையாலே நுன்  (திருச்சேஞலூர்)  
49 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -போகம் ஆர்த்த பூண் முலையாள்  (திருநள்ளாறு)  
50 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒல்லைஆறி உள்ளமொன்றிக்  (திருவலிவலம்)  
51 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கண் ஆனை ஈர்  (திருச்சோபுரம் (தியாகவல்லி))  
52 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறை உடையாய்! தோல் உடையாய்!  (திருநெடுங்களம்)  
53 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
54 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூத் தேர்ந்து ஆயன கொண்டு,  (திருஓத்தூர் (செய்யாறு))  
55 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,  (திருமாற்பேறு)  
56 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கார் ஆர் கொன்றை கலந்த  (திருப்பாற்றுறை)  
57 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;  (திருவேற்காடு)  
58 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரியும், நம் வினை உள்ளன  (திருக்கரவீரம்)  
59 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,  (திருத்தூங்கானைமாடம்)  
60 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண் தரங்கப் புனல் கமல  (சீர்காழி )  
61 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறை கொண்ட மலர் தூவி,  (திருச்செங்காட்டங்குடி)  
62 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நாள் ஆய போகாமே, நஞ்சு  (திருக்கோளிலி (திருக்குவளை))  
63 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரி ஆர் மழு ஒன்று  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
64 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறை ஆர் புனலும் மா  (திருப்பூவணம்)  
65 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் தம் புரங்கள் மூன்றும்  (திருப்பல்லவனீச்சரம்)  
66 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பங்கம் ஏறு மதி சேர்  (திருச்சண்பைநகர் (சீர்காழி))  
67 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி  (திருப்பழனம்)  
68 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் உருவர், புலியின்  (திருக்கயிலாயம்)  
69 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ ஆர் மலர் கொண்டு  (திருவண்ணாமலை)  
70 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானத்து உயர் தண்மதி தோய்  (திருஈங்கோய்மலை)  
71 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை கொள் சடையர்; புலியின்  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
72 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் ஆர் கொங்கை மாது  (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்))  
73 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் ஆர் சோதி மன்னு  (திருக்கானூர்)  
74 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறவம் நிறை வண்டு அறை  (திருப்புறவம்)  
75 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை நல்மாமலர் கொண்டு அடி  (திருவெங்குரு (சீர்காழி))  
76 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,  (திருஇலம்பையங்கோட்டூர்)  
77 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் திரண்டன்ன புரிசடை புரள,  (திருஅச்சிறுபாக்கம்)  
78 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரி வளர் அவிர் ஒளி  (திருஇடைச்சுரம்)  
79 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் உறு படையினர்; விடையினர்;  (சீர்காழி)  
80 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  (கோயில் (சிதம்பரம்))  
81 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லார், தீ மேவும் தொழிலார்,  (சீர்காழி)  
82 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இரும் பொன்மலை வில்லா, எரி  (திருவீழிமிழலை)  
83 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் புரம் மூன்றும் அனல்வாய்  (திருஅம்பர்மாகாளம்)  
84 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
85 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நிழல் மேய கறை  (திருநல்லம்)  
86 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டும் பறை சீரால் குழும,  (திருநல்லூர்)  
87 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடு கூர் எரிமாலை அணிவர்;  (திருவடுகூர் (ஆண்டார்கோவில்))  
88 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முற்றும் சடை முடி மேல்  (திருஆப்பனூர்)  
89 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை ஆர்தரு பூதப் பகடு  (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்))  
90 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
91 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி  (திருவாரூர்)  
92 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  (திருவீழிமிழலை)  
93 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நின்று மலர் தூவி, இன்று  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
94 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்  (திருஆலவாய் (மதுரை))  
95 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு ஓர் காதினன்; பாடு  (திருவிடைமருதூர்)  
96 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மன்னி ஊர் இறை; சென்னியார்,  (திருஅன்னியூர் (பொன்னூர்))  
97 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  (திருப்புறவம்)  
98 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நன்று உடையானை, தீயது இலானை,  (திருச்சிராப்பள்ளி)  
99 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வம்பு ஆர் குன்றம், நீடு  (திருக்குற்றாலம்)  
100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடு அலர் சோதி வெண்பிறையோடு  (திருப்பரங்குன்றம்)  
101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தண் ஆர் திங்கள், பொங்கு  (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) )  
102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரவு ஆர் கலையின் கவிதைப்  (சீர்காழி)  
103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடையான் ஒரு காதில்-தூய  (திருக்கழுக்குன்றம்)  
104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்  (திருப்புகலி -(சீர்காழி ))  
105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடலன் நால்மறையன்; படி பட்ட  (திருவாரூர்)  
106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாறு இல் அவுணர் அரணம்  (திருஊறல் (தக்கோலம்))  
107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண் நீறு அணிந்து,  (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு))  
108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்  (திருப்பாதாளீச்சரம்)  
109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் உறு வனமுலை மங்கை  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,  (திருவிடைமருதூர்)  
111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்  (திருக்கடைமுடி (கீழையூர்))  
112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்குரல் இசை கெழும் யாழ்  (திருச்சிவபுரம்)  
113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,  (திருவல்லம்)  
114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குருந்து அவன், குருகு அவன்,  (திருமாற்பேறு)  
115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு ஒளிர் முன் கையர்  (திருஇராமனதீச்சரம்)  
116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அவ் வினைக்கு இவ் வினை  (பொது -திருநீலகண்டப்பதிகம்)  
117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு அது, அணிகலம் கார்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))  
119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முள்ளின் மேல் முது கூகை  (திருக்கள்ளில்)  
120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பணிந்தவர் அருவினை பற்று அறுத்து  (திருவையாறு)  
121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நடை மரு திரிபுரம் எரியுண  (திருவிடைமருதூர்)  
122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்  (திருவிடைமருதூர்)  
123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ இயல் புரிகுழல்; வரிசிலை  (திருவலிவலம்)  
124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்  (திருவீழிமிழலை)  
125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை மலி அகல் அல்குல்  (திருச்சிவபுரம்)  
126 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்தத்தால் வந்து எப்பால் பயின்று  (சீர்காழி)  
127 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
128 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓர் உரு ஆயினை; மான்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
129 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சே உயரும் திண் கொடியான்  (சீர்காழி)  
130 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புலன் ஐந்தும் பொறி கலங்கி,  (திருவையாறு)  
131 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
132 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  (திருவீழிமிழலை)  
133 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
134 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருத்தன், கடவுள், கனல் ஏந்தி  (திருப்பறியலூர் (பரசலூர்))  
135 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு சேர்வது ஒர் மேனியர்,  (திருப்பராய்துறை)  
136 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாதர் மடப்பிடியும் மட அன்னமும்  (தருமபுரம்)  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.001  
தோடு உடைய செவியன், விடை  
பண் - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[2]
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[3]
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[4]
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[5]
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[6]
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

[7]
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[8]
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[9]
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[10]
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.002  
குறி கலந்த இசை பாடலினான்,  
பண் - நட்டபாடை   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.

[1]
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப்
போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.

[2]
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்
பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,
உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.

[3]
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக்
காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.

[4]
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.

[5]
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில்,
குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.

[6]
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்
கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.

[7]
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள்,
தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த
மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர்
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.

[8]
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள்
ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும்
போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.

[9]
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்
கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.

[10]
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,
குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.003  
பத்தரோடு பலரும் பொலிய மலர்  
பண் - நட்டபாடை   (திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர் தாயம்மை)

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

[1]
படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில்,
மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.

[2]
ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,
செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில்
வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.

[3]
ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒரு பூதப்படை சூழ;
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.

[4]
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

[5]
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,
கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.

[6]
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி,
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.

[7]
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி,
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.

[8]
பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த,
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.

[9]
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்!
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

[10]
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.004  
மைம் மரு பூங்குழல் கற்றை  
பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)

மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்,
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய்
மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[1]
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள்,
பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே!
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?

[2]
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப்
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே!
இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[3]
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[4]
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப்
புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே!
எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[5]
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே!
எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[6]
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து,
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய்
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[7]
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து
புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[8]
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப்
பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே!
எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[9]
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும்
புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[10]
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி,
புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.005  
செய் அருகே புனல் பாய,  
பண் - நட்டபாடை   (கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியச்சுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)

செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.

[1]
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி,
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி,
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்,
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

[2]
தோல் உடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண் நீறு துதைந்து, இலங்கு
நூல் உடையான்; இமையோர் பெருமான்; நுண் அறிவால் வழிபாடு செய்யும்
கால் உடையான்; கரிது ஆய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேல் உடையான்; இமையாத முக்கண்; மின் இடையாளொடும் வேண்டினானே.

[3]
சலசல சந்து அகிலோடும் உந்தி, சந்தனமே கரை சார்த்தி, எங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி, பாய்ந்து இழி காவிரிப் பாங்கரின்வாய்,
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே!

[4]
தளை அவிழ் தண் நிற நீலம், நெய்தல், தாமரை, செங்கழு நீரும், எல்லாம்
களை அவிழும் குழலார் கடிய, காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி,
துளை பயிலும் குழல், யாழ், முரல, துன்னிய இன் இசையால் துதைந்த
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

[5]
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக் கரும்பு இன் கட்டிக்
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன்,
பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி, முன் நின்று,
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே.

[6]
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட
கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக்
குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!

[7]
செற்றவர் தம் அரணம்(ம்) அவற்றைச் செவ் அழல் வாய் எரியூட்டி, நன்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர்தாம் உணர்வு எய்தி, நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால், பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே!

[8]
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே, உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம் அல்லகண்டீர்;
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை காட்டுப்பள்ளி
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே!

[9]
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை,
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்-
துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல
தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.006  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  
பண் - நட்டபாடை   (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[1]
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[2]
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?

[3]
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய,
மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[4]
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[5]
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[6]
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து,
மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[7]
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,
மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?

[8]
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[9]
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.007  
பாடக மெல் அடிப் பாவையோடும்,  
பண் - நட்டபாடை   (திருநள்ளாறும் திருஆலவாயும் தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை)

பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[1]
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து,
நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா முளைக்கும்
அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[2]
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும்
நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[3]
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு,
நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி,
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[4]
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும்,
நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[5]
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய்
நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[6]
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும்,
நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[7]
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி, இசை விரும்பி,
நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[8]
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[9]
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[10]
அன்பு உடையானை, அரனை, கூடல் ஆலவாய் மேவியது என்கொல்? என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன
இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.008  
புண்ணியர், பூதியர், பூத நாதர்,  
பண் - நட்டபாடை   (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) பசுபதீச்சுரர் மங்களநாயகியம்மை)

புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[1]
முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும்
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம்
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில்
பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[2]
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார், போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்,
இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம்
தெங்கு உயர் சோலை, சேர் ஆலை, சாலி திளைக்கும் விளை வயல், சேரும் பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[3]
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப்
பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[4]
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார்,
வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம்
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி,
பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[5]
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்,
ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம்
சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க,
பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[6]
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[7]
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன்
வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும்
கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், கதி அருள்! என்று கை ஆரக் கூப்பி,
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[8]
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட,
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்,
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[9]
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்
தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[10]
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப்
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல்,
கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன
கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.009  
வண்டு ஆர் குழல் அரிவையொடு  
பண் - நட்டபாடை   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

[1]
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,
கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர்
புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.

[2]
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,
படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்
நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.

[3]
தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்
பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர,
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.

[4]
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,
தேன் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

[5]
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்
தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.

[6]
மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.

[7]
வயம் உண்ட தவமாலும் அடி காணாது அலமாக்கும்,
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்
வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

[8]
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்
தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,
வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.

[9]
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,
ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.010  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  
பண் - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

[1]
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

[2]
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.

[3]
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.

[4]
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி
அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்,
குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?

[5]
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.

[6]
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள,
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல,
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.

[7]
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.

[8]
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்
கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!

[9]
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,
ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,
கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!

[10]
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.011  
சடை ஆர் புனல் உடையான்,  
பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

[1]
ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய்,
மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய்,
ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய்,
வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.

[2]
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய!
உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில்
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.

[3]
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.

[4]
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்
தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.

[5]
கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்! என வானோர்
எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல்
வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.

[6]
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்;
புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா
வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி,
விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.

[7]
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை
தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,
பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.

[8]
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.

[9]
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,
பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.

[10]
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.012  
மத்தா வரை நிறுவி, கடல்  
பண் - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

[1]
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

[2]
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்
தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.

[3]
சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.

[4]
அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்
கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,
மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு,
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

[5]
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு
ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,
மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.

[6]
தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,
மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்
விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.

[7]
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்
மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.

[8]
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-
புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே
முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.

[9]
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

[10]
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்
புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.013  
குரவம் கமழ் நறு மென்  
பண் - நட்டபாடை   (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை)

குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,
பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,
அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.

[1]
ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான்,
ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான்,
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள்
வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.

[2]
செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும்,
பெய்ம்மின், பலி! என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.

[3]
அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி,
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே.

[4]
எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய்,
பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய்,
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

[5]
வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான்,
திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை
அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.

[6]
மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்;
ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன்; என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

[7]
பொருவார் எனக்கு எதிர் ஆர்! எனப் பொருப்பை எடுத்தான் தன்
கரு மால் வரை கரம், தோள், உரம், கதிர் நீள் முடி, நெரிந்து,
சிரம் ஆயின கதற, செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே.

[8]
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்,
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.

[9]
தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்;
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.

[10]
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,
தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்
விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.014  
வானில் பொலிவு எய்தும் மழை  
பண் - நட்டபாடை   (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

[1]
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,
குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.

[2]
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.

[3]
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

[4]
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்
கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.

[5]
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,
கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.

[6]
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை
நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.

[7]
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,
குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

[8]
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை
குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.

[9]
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்
குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.

[10]
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,
ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.015  
மை ஆடிய கண்டன், மலை  
பண் - நட்டபாடை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

[1]
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;
பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர்
அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்,
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!

[2]
பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான்,
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்,
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்,
நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

[3]
சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி,
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்,
நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!

[4]
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,
பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான-
நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.

[5]
விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்
உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,
புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.

[6]
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய
கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித்
தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.

[7]
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி,
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ,
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.

[8]
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,
சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,
காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.

[9]
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,
புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.

[10]
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.016  
பால் உந்து உறு திரள்  
பண் - நட்டபாடை   (திருப்புள்ளமங்கை பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை)

பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

[1]
மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்
புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,
கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.

[2]
கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்
பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்
துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!

[3]
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,
மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.

[4]
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.

[5]
மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்
பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி
அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.

[6]
முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,
பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.

[7]
இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.

[8]
செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்
பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.

[9]
நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.

[10]
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.017  
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்  
பண் - நட்டபாடை   (திருஇடும்பாவனம் சற்குணநாதர் மங்களநாயகியம்மை)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,
தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[1]
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்,
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில்
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

[2]
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை,
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்,
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.

[3]
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்,
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்,
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[4]
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல்
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல்,
கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில்
எந்தாய்! என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.

[5]
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி,
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி,
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்,
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

[6]
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா,
கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[7]
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து,
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த,
ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[8]
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்,
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த,
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[9]
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார்,
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்,
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல்
இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

[10]
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை,
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.018  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  
பண் - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)

சூலம்படை; சுண்ணப்பொடி சாந்தம்,சுடு நீறு;
பால்அம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலினொடு போக்கி,கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

[1]
அச்சம்இலர்; பாவம்இலர்; கேடும்இலர்; அடியார்,
நிச்சம்உறு நோயும்இலர் தாமும் நின்றியூரில்
நச்சம்மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம்உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.

[2]
பறையின்ஒலி சங்கின்ஒலி பாங்குஆரவும், ஆர
அறையும்ஒலி எங்கும்அவை அறிவார்அவர் தன்மை;
நிறையும்புனல் சடைமேல் உடைஅடிகள், நின்றியூரில்
உறையும்இறை, அல்லதுஎனது உள்ளம் உணராதே!

[3]
பூண்டவரை மார்பில்புரி நூலன்,விரி கொன்றை
ஈண்டஅத னோடுஒரு பால்அம்மதி அதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றிஅது தன்னில்
ஆண்டகழல் தொழல்அல்லது, அறியார்அவர் அறிவே!

[4]
குழலின்இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின்எழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்,
அழலின்வலன் அங்கையது ஏந்தி,அனல் ஆடும்
கழலின்ஒலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.

[5]
மூரல்முறு வல்வெண்நகை உடையாள்ஒரு பாகம்,
சாரல்மதி அதனோடுஉடன் சலவம்சடை வைத்த
வீரன்,மலி அழகுஆர்பொழில் மிடையும்திரு நின்றி
யூரன்,கழல் அல்லாது,என துஉள்ளம்உண ராதே!

[6]
பற்றிஒரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்
பெற்றிஅது ஆகித்திரி தேவர்பெரு மானார்,
சுற்றிஒரு வேங்கைஅத ளோடும்பிறை சூடும்
நெற்றிஒரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.

[7]
நல்லமலர் மேலானொடு ஞாலம்அது உண்டான்,
அல்லர்என, ஆவர்என, நின்றும்அறிவு அரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை ஆர்எம்
செல்வர்அடி அல்லாது,என சிந்தைஉண ராதே!

[8]
நெறியில்வரு பேராவகை நினையாநினைவு ஒன்றை
அறிவுஇல்சமண் ஆதர்உரை கேட்டும்அய ராதே,
நெறிஇல்லவர் குறிகள்நினை யாதே,நின்றி யூரில்
மறிஏந்திய கையான்அடி வாழ்த்தும்அது வாழ்த்தே!

[9]
குன்றம்அது எடுத்தான்உடல் தோளும்நெரிவு ஆக
நின்றுஅங்கு ஒருவிரலால்உற வைத்தான்நின்றி யூரை
நன்றுஆர்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறைவு இன்றிநிறை புகழே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.019  
பிறை அணி படர் சடை  
பண் - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்  உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!

[1]
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர் சடை மிசை
தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற
மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே!

[2]
வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்  கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு எய்துமதே.

[3]
வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர் கழல்களே!

[4]
தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல் கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.

[5]
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ, அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.

[6]
முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை; இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,
அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே.

[7]
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, அடி சரண்! என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை உடையவன், உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே.

[8]
கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும், அவன்
விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை
எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன் உலகமே.

[9]
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண் உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!

[10]
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.020  
தட நிலவிய மலை நிறுவி,  
பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

[1]
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.

[2]
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.

[3]
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.

[4]
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.

[5]
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.

[6]
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
திலகம் இது! என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.

[7]
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.

[8]
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை,
சய சய! என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.

[9]
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.

[10]
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.021  
புவம், வளி, கனல், புனல்,  
பண் - நட்டபாடை   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

[1]
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.

[2]
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.

[3]
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.

[4]
சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.

[5]
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.

[6]
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என,
மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன் நுதிமிசை,
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.

[7]
அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு வலிகொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே.

[8]
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.

[9]
குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய பொருள்களும் இல,
திணம் எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.

[10]
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.022  
சிலை தனை நடு இடை  
பண் - நட்டபாடை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)

சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

[1]
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன், அடல் வலி மிகு புலி அதள் உடையினன்-
இரவலர் துயர் கெடு வகை நினை, இமையவர் புரம் எழில் பெற வளர்,
மரம் நிகர் கொடை, மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.

[2]
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ, முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

[3]
நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை
பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.

[4]
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு
பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.

[5]
கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி,
முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி, வட முகம்,
உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.

[6]
இரு நிலன் அது புனல் இடை மடிதர, எரி புக, எரி அது மிகு
பெரு வளியினில் அவிதர, வளி கெட, வியன் இடை முழுவதும் கெட,
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன்-இனமலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே.

[7]
சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்-
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த கருணையன் என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.

[8]
அணி மலர் மகள் தலைமகன், அயன், அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர, அவர் வெரு உறலொடு துதி செய்து
பணிவு உற, வெளி உருவிய பரன் அவன்-நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.

[9]
இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து தவம்
முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவு அரு பரன் அவன்-அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.

[10]
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  
பண் - தக்கராகம்   (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)

மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[1]
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

[2]
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

[3]
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

[4]
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

[5]
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

[6]
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

[7]
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

[8]
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

[9]
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

[10]
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.024  
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை  
பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

[1]
எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

[2]
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான் கைக் கொண்ட காழியார்,
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

[3]
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்,
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

[4]
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

[5]
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை புனைந்த சடையார், காழியார்,
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

[6]
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார்,
அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.

[7]
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.

[8]
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

[9]
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

[10]
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.025  
மரு ஆர் குழலிமாது ஓர்  
பண் - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)

மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

[1]
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்
சேராதவர் மேல் சேரும், வினைகளே.

[2]
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

[3]
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

[4]
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே
இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,
நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

[5]
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.

[6]
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

[7]
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!

[8]
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
தேரார் செம்பொன் பள்ளி மேவிய,
நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை
ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.

[9]
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
பேசா வண்ணம் பேசித் திரியவே,
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா! என்ன, நில்லா, இடர்களே.

[10]
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.026  
வெங் கள் விம்மு வெறி  
பண் - தக்கராகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)

வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[1]
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.

[2]
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

[3]
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

[4]
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,
பசை விளங்கப் படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.

[5]
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.

[6]
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

[7]
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

[8]
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

[9]
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்
தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர்,
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

[10]
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.027  
முந்தி நின்ற வினைகள் அவை  
பண் - தக்கராகம்   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)

முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.

[1]
மூவர் ஆய முதல்வர், முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர்
ஆவர், என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.

[2]
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர்,
கங்கை தங்கு சடையார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[3]
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர்,
உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே.

[4]
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.

[5]
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல்
திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே.

[6]
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர்,
ஆர நின்ற அடிகள் அவர் போலும்
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.

[7]
மலை அதனார் உடைய மதில் மூன்றும்
சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

[8]
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த்
தேட நின்றார், உறையும் திருப் புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே.

[9]
குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்!
வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க்
கண்டு தொழுமின், கபாலிவேடமே!

[10]
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பரவி வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.028  
செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  
பண் - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)

செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[1]
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[2]
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[3]
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!
துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,
மணி கொள் கண்டர், மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[4]
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[5]
துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[6]
சாடிக் காலன் மாள, தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[7]
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[8]
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[9]
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,
ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[10]
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.029  
ஊர் உலாவு பலி கொண்டு,  
பண் - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[1]
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,
வீடும் ஆக மறையோர் நறையூரில்,
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

[2]
கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[3]
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[4]
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[5]
கூர் உலாவு படையான், விடை ஏறி,
போர் உலாவு மழுவான், அனல் ஆடி,
பேர் உலாவு பெருமான், நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.

[6]
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,
மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[7]
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

[8]
ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்
சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

[9]
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

[10]
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.030  
விதி ஆய், விளைவு ஆய்,  
பண் - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

[1]
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

[2]
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

[3]
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

[4]
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.

[5]
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

[6]
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;
அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;
பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.

[7]
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

[8]
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்
பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

[9]
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

[10]
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.031  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல்  
பண் - தக்கராகம்   (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)

விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

[1]
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்
கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்
உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.

[2]
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,
காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.

[3]
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-
தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.

[4]
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,
கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து
உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.

[5]
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.

[6]
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

[7]
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.

[8]
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.

[9]
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்,
வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!
குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.

[10]
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.032  
ஓடே கலன்; உண்பதும் ஊர்  
பண் - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

[1]
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

[2]
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.

[3]
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

[4]
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.

[5]
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

[6]
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

[7]
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

[8]
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

[9]
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

[10]
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.033  
கணை நீடு எரி, மால்,  
பண் - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)

கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

[1]
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

[2]
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[3]
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

[4]
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்
மாடு முழவம் அதிர, மட மாதர்
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

[5]
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-
வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

[6]
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.

[7]
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.

[8]
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,
பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.

[9]
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.

[10]
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.034  
அடல் ஏறு அமரும் கொடி  
பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

[1]
திரை ஆர் புனல் சூடிய செல்வன்,
வரையார் மகளோடு மகிழ்ந்தான்,
கரை ஆர் புனல் சூழ்தரு, காழி
நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!

[2]
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும்,
கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி
அடியார் அறியார், அவலமே.

[3]
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,
களி ஆர் பொழில் சூழ்தரு, காழி
எளிது ஆம், அது கண்டவர் இன்பே.

[4]
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,
முனி தான், உமையோடு முயங்கி,
கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி
இனிது ஆம், அது கண்டவர் ஈடே.

[5]
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான் மகளோடு மகிழ்ந்தான்,
கலையார் தொழுது ஏத்திய, காழி
தலையால் தொழுவார் தலையாரே.

[6]
திரு ஆர் சிலையால் எயில் எய்து,
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,
கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி
மருவாதவர் வான் மருவாரே.

[7]
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!

[8]
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்,
கரு நல் பரவை கமழ், காழி
மருவ, பிரியும், வினை மாய்ந்தே.

[9]
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,
அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.

[10]
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.035  
அரை ஆர் விரி கோவண  
பண் - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

[1]
புனைதல் புரி புன்சடை தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்,
வினை இல்லவர், வீழி மிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?

[2]
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழி மிழலை
தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!

[3]
உரவம் புரி புன் சடை தன்மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்,
விரவும் பொழில், வீழி மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!

[4]
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்,
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை
விரி தார் பொழில், வீழி மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.

[5]
சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.

[6]
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.

[7]
உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா விரல் ஊன்றிய மைந்தன்,
விளை ஆர் வயல், வீழி மிழலை
அளையா வருவார் அடியாரே.

[8]
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன், வீழி மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே.

[9]
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

[10]
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.036  
கலை ஆர் மதியோடு உர  
பண் - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

[1]
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

[2]
கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே.

[3]
சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.

[4]
உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.

[5]
தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

[6]
வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.

[7]
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

[8]
சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

[9]
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

[10]
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.037  
அரவச் சடை மேல் மதி,  
பண் - தக்கராகம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)

அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

[1]
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே.

[2]
அலரும் எறி செஞ்சடை தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண,
பலரும் பரவும் பனையூரே.

[3]
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ, மன்னவர் ஏத்த,
படியார் பணியும் பனையூரே.

[4]
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட,
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க,
பறையார் ஒலிசெய் பனையூரே.

[5]
அணியார் தொழ வல்லவர் ஏத்த,
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்
பணிவார் பயிலும் பனையூரே.

[6]
அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான், விறல் ஆர் கரியின் தோல்
உடையான் அவன், ஒண் பலபூதப்
படையான் அவன், ஊர் பனையூரே.

[7]
இலகும் முடிபத்து உடையானை
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்,
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன், ஊர் பனையூரே.

[8]
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே!

[9]
அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும்,
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே.

[10]
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.038  
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்  
பண் - தக்கராகம்   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

கரவு இன்றி நல்மாமலர் கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.

[1]
உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர்
குரவம், சுரபுன்னையும், வன்னி,
மருவும் மயிலாடுதுறையே.

[2]
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர் வு
ஆன மயிலாடுதுறையே!

[3]
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும், பிணி ஆயினதானே.

[4]
தணி ஆர் மதி செஞ்சடையான்தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான், மயிலாடுதுறையே.

[5]
தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத,
வண்டு ஆர் மயிலாடுதுறையே.

[6]
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

[7]
சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி, வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற,
வரம் கொள் மயிலாடுதுறையே.

[8]
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,
கோலத்து அயனும், அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

[9]
நின்று உண் சமணும், நெடுந் தேரர்,
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே.

[10]
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.039  
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  
பண் - தக்கராகம்   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

[1]
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.

[2]
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

[3]
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
   கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
   கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

[4]
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.

[5]
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்
பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,
மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.

[6]
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,
நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.

[7]
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,
தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.

[8]
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான்-வேட்கள நன்நகராரே.

[9]
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.

[10]
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.040  
பொடி உடை மார்பினர், போர்  
பண் - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)

பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

[1]
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

[2]
பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

[3]
தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி,
வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.

[4]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு
புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி என்றே பல கூறி,
வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.

[5]
அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே! என்னா,
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.

[6]
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி,
மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.

[7]
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி,
வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.

[8]
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி,
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.

[9]
குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார், புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

[10]
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.041  
சீர் அணி திகழ் திருமார்பில்  
பண் - தக்கராகம்   (திருப்பாம்புரம் பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)

சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

[1]
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்,
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள்,
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ,
பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.

[2]
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி,
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான்,
மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும்,
பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.

[3]
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான்,
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி,
பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே.

[4]
நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து,
கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்;
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப்
பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.

[5]
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்;
மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்;
ஆதி, நீ அருள்! என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த
பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.

[6]
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து,
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;
காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.

[7]
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி,
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல்
மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.

[8]
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட,
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்;
முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த,
படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.

[9]
குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்,
கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்;
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்;
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே.

[10]
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.042  
பைம் மா நாகம், பல்மலர்க்  
பண் - தக்கராகம்   (திருப்பேணுபெருந்துறை சிவாநந்தநாதர் மலையரசியம்மை)

பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,
செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

[1]
மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய,
சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.

[2]
செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி,
கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்
கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன,
பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.

[3]
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து
புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.

[4]
பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய,
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்;
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.

[5]
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை,
விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர்,
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்
பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.

[6]
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட, வேதம்
   ஆறு அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல், பெரியோர் ஏத்தும் பெருமான்-
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே.

[7]
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும்
முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.

[8]
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின்
உள் வாய் அல்லிமேல் உறைவானும், உணர்வு அரியான்; உமைகேள்வன்-
முள் வாய் தாளின் தாமரைமொட்டு இன்முகம் மலர, கயல் பாய,
கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.

[9]
குண்டும் தேரும், கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்!
தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே.

[10]
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.043  
வடம் திகழ் மென் முலையாளைப்  
பண் - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)

வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

[1]
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.

[2]
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

[3]
ஒருங்கு அளி, நீ இறைவா! என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,
இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

[4]
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,
பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.

[5]
உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,
விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்
நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

[6]
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.

[7]
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்
தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.

[8]
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து
கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்
வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

[9]
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,
நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.

[10]
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.044  
துணி வளர் திங்கள் துளங்கி  
பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[1]
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;
தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

[2]
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?

[3]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[4]
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?

[5]
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

[6]
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?

[7]
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?

[8]
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?

[9]
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?

[10]
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.045  
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்  
பண் - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)

துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[1]
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா
வீடுமாநெறி விளம்பினார், எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டு, எல்லிக் கணப்பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[2]
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கனல் ஆடி,
வெந்தபொடி-நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்து அண் பொழில்-சோலை அரவின் தோன்றிக் கோடல் பூத்த,
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[3]
பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக்
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்
கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[4]
ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி, வேடம் பயின்றாரும்
கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி, கருந்தேன் மொய்த்து,
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[5]
பறையும் சிறு குழலும் யாழும் தம் பயிற்றவே,
மறையும் பல பாடி, மயானத்து உறையும் மைந்தனார்,
பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[6]
நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்,
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்று ஆய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு,
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[7]
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண,
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார், எம் இறைவனார்
பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[8]
கவிழ மலை, தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள்
பவழ நுனிவிரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும்
தவழும் கொடிமுல்லை புறவம் சேர நறவம் பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[9]
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[10]
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்,
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும்,
கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[11]
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை,
வேந்தன் அருளாலே, விரித்த, பாடல் இவை வல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச் சேர்வாரே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.046  
குண்டைக் குறள் பூதம் குழும,  
பண் - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி,
கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம்,
வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை
விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.

[1]
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,
சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ,
விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.

[2]
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட,
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்,
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்,
வேடம் பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.

[3]
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி;
மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி,
பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள்,
விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.

[4]
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில்,
திரு நின்று ஒரு கையால், திரு ஆம் அதிகையுள்,
எரி ஏந்திய பெருமான், எரிபுன் சடை தாழ,
விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.

[5]
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,
இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி,
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்,
விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.

[6]
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி
தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக,
கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,
வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.

[7]
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட,
ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள்,
பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி,
வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.

[8]
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;
பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை,
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்,
வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.

[9]
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி,
விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.

[10]
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை,
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.047  
பல் அடைந்த வெண் தலையில்  
பண் - பழந்தக்கராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

[1]
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய்,
அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார்,
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?

[2]
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?

[3]
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

[4]
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்
கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?

[5]
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?

[6]
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்
பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே
இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து,
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?

[7]
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!

[8]
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

[9]
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்
மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,
சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?

[10]
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்  
பண் - பழந்தக்கராகம்   (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,
ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

[1]
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்
கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே
சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

[2]
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து,
கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே,
மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே?

[3]
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின்
நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே
பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?

[4]
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய்,
வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித்
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?

[5]
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து,
வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே
கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே?

[6]
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத்
தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே?

[7]
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?

[8]
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்,
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்,
சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?

[9]
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி
நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே
வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?

[10]
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்  
பண் - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

[1]
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்
பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.

[2]
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.

[3]
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

[4]
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

[5]
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.

[6]
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

[7]
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

[8]
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

[9]
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

[10]
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.050  
ஒல்லைஆறி உள்ளமொன்றிக்  
பண் - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)

ஒல்லைஆறி உள்ளமொன்றிக் கள்ளம் ஒழிந் துவெய்ய
சொல்லைஆறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன் நாமம் நாவில்நவின் ஏத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம்மே யவனே.

[1]
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றுநல் தேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.

[2]
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றன் நாமம் காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.

[3]
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[4]
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே;
தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய,
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன்,
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

[5]
புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும்
கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று
வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[6]
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;
ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;
மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

[7]
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!

[8]
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[9]
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்
பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே!
விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!

[10]
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.051  
வெங் கண் ஆனை ஈர்  
பண் - பழந்தக்கராகம்   (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)

வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!

[1]
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு
சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!

[2]
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!

[3]
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

[4]
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

[5]
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன்,
பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்?
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!

[6]
குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார்,
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!

[7]
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?
இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!

[8]
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!

[9]
புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து,
பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?
மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்
துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!

[10]
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,
சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,
ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!  
பண் - பழந்தக்கராகம்   (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)

மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[1]
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[2]
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[3]
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!
தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[4]
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[5]
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்!
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[6]
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்
ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[7]
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை,
அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்!
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும்,
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[8]
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்!
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[9]
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[10]
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.053  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை  
பண் - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

[1]
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார்,
எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு,
மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே.

[2]
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி,
நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில்
சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே.

[3]
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,
நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்
ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

[4]
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி,
செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க,
தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ,
முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே.

[5]
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,
சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.

[6]
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள்
முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே.

[7]
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக்
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால்
ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.

[8]
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்!
மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட
முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே.

[9]
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை,
பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்......

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,  
பண் - பழந்தக்கராகம்   (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)

பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

[1]
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே! புள்ளிமான் உரி
உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீரே! உம தாளே.

[2]
உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்!
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்
கள்வீரே! உம காதலே!

[3]
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே! அடியார் வினை
ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே! அருள் நல்குமே!

[4]
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை
உழை ஆள்வீர்! திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே!

[5]
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ? திரு ஓத்தூர்
நக்கீரே! அருள் நல்குமே!

[6]
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா! என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர்
ஆதீரே! அருள் நல்குமே!

[7]
என்தான் இம் மலை! என்ற அரக்கனை
வென்றார் போலும், விரலினால்;
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே.

[8]
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்
சென்றார் போலும், திசை எலாம்
ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்
நின்றீரே! உமை நேடியே!

[9]
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர்
தேரர், சொல் அவை தேறன் மின்!
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீரவன், கழல் சேர்மினே!

[10]
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை,
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.055  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,  
பண் - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

[1]
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை
அடைவார் ஆம், அடிகள்! என
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு
உடையீரே! உமை உள்கியே.

[2]
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா! நின் அடியார்களே.

[3]
சால மா மலர் கொண்டு, சரண்! என்று,
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலம் ஆர் கண்ட! நின்னையே.

[4]
மாறு இலா மணியே! என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! என்றும் நின்னையே.

[5]
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;
பரவாதார் இல்லை, நாள்களும்;
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று
அரையானே! அருள் நல்கிடே!

[6]
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து, அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்
பரவிடக் கெடும், பாவமே.

[7]
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன்,
மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்
பரவுவார் வினை பாறுமே.

[8]
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்
நீசர்தம் உரை கொள்ளேலும்!
தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்
ஈசன் என்று எடுத்து ஏத்துமே!

[9]
மன்னி மாலொடு சோமன் பணி செயும்
மன்னும் மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே, வினை பாறுமே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.056  
கார் ஆர் கொன்றை கலந்த  
பண் - பழந்தக்கராகம்   (திருப்பாற்றுறை திருமூலநாதர் மோகாம்பிகையம்மை)

கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார், ஆர் ஆதி முதல்வரே.

[1]
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும்
சொல்லார்; நல்மலர் சூடினார்;
பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே.

[2]
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,
எண்ணார் வந்து, என் எழில் கொண்டார்
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை
யுள் நாள்நாளும் உறைவரே.

[3]
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,
ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,
ஓ! என் சிந்தை ஒருவரே.

[4]
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது
ஆகம் பொன்நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

[5]
போது பொன் திகழ் கொன்றை புனை முடி
நாதர் வந்து, என் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.

[6]
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.

[7]
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்;
எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்;
பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

[8]
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார்
பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

[9]
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்,
வந்து என் நன் நலம் வௌவினார்
பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே.

[10]
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து-நூறு பெயரனை,
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.057  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;  
பண் - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)

ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

[1]
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

[2]
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

[3]
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,
வீழ்சடையினன், வேற்காடு,
தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,
பாழ்படும், அவர் பாவமே.

[4]
காட்டினானும், அயர்த்திடக் காலனை
வீட்டினான், உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார், வினை ஒல்லையே.

[5]
தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
வேலினான், உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,
மாலினார், வினை மாயுமே.

[6]
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர், தீர்க்கமே.

[7]
மூரல் வெண் மதி சூடும் முடி உடை
வீரன் மேவிய வேற்காடு
வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர், செய் கழல்; திண்ணமே.

[8]
பரக்கினார் படு வெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற் காட்டூர்,
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே!

[9]
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.

[10]
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.058  
அரியும், நம் வினை உள்ளன  
பண் - பழந்தக்கராகம்   (திருக்கரவீரம் கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை)

அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

[1]
தங்குமோ, வினை தாழ்சடை மேலவன்,
திங்களோடு உடன்சூடிய
கங்கையான், திகழும் கரவீரத்து எம்
சங்கரன், கழல் சாரவே?

[2]
ஏதம் வந்து அடையா, இனி நல்லன
பூதம் பல்படை ஆக்கிய
காதலான், திகழும் கரவீரத்து எம்
நாதன், பாதம் நணுகவே.

[3]
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் மாமணி போல் கண்டம்
கறையவன், திகழும் கரவீரத்து எம்
இறையவன், கழல் ஏத்தவே.

[4]
பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன்,
விண்ணின் ஆர் மதில் எய்த முக்
கண்ணினான், உறையும் கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே.

[5]
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை
அழலினார், அனல் ஏந்திய
கழலினார், உறையும் கரவீரத்தைத்
தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே.

[6]
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்,
அண்டன், ஆர் அழல் போல் ஒளிர்
கண்டனார் உறையும் கரவீரத்துத்
தொண்டர்மேல் துயர் தூரமே.

[7]
புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச்
சின வல் ஆண்மை செகுத்தவன்,
கனலவன், உறைகின்ற கரவீரம்
என வல்லார்க்கு இடர் இல்லையே.

[8]
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த்
தெள்ள, தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ளத் தான் வினை ஓயுமே.

[9]
செடி அமணொடு சீவரத்தார் அவர்
கொடிய வெவ் உரை கொள்ளேன் மின்!
கடியவன் உறைகின்ற கரவீரத்து
அடியவர்க்கு இல்லை, அல்லலே.

[10]
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால்-தமிழ்
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.059  
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)

ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!

[1]
பிணி நீர சாதல், பிறத்தல், இவை பிரியப் பிரியாத பேர் இன்பத்தோடு
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில், அறிமின்! குறைவு இல்லை; ஆன் ஏறு உடை
மணி நீலகண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[2]
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
ஆம் ஆறு அறியாது, அலமந்து, நீர் அயர்ந்தும் குறைவு இல்லை; ஆன் ஏறு உடைப்
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்
தூ மாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[3]
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில் மயங்காது, நீர்
மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும் முகில் தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[4]
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறுஆதலால்,
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா; விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய்
துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[5]
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண் பவளநிற
நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்,
பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும்
தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[6]
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப்
பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[7]
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில் வாடி, பழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்!
கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான், காதலியும் தானும் கருதி வாழும்,
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[8]
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழியத் தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசைய நான்முகனும், மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான், காணமாட்டாத் தலைவர்க்கு இடம்போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[9]
பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால், பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய, தவம்
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடிச் சொன்ன
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா; திருந்திழையும் தானும் பொருந்தி வாழும்
துகள் தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

[10]
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்,
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.060  
வண் தரங்கப் புனல் கமல  
பண் - பழந்தக்கராகம்   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

[1]
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!

[2]
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்
கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ? மொழியாயே!

[3]
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! காதலால்
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று, வளர்
சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்
ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!

[4]
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த
கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!
தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!

[5]
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!

[6]
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,
அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;
தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்
கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!

[7]
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!

[8]
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;
சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!

[9]
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்
முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்
பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!

[10]
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.061  
நறை கொண்ட மலர் தூவி,  
பண் - பழந்தக்கராகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)

நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.

[1]
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.

[2]
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே.

[3]
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே.

[4]
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.

[5]
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,
திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே.

[6]
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.

[7]
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,
சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்
காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே.

[8]
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,
தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,
கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே.

[9]
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே.

[10]
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு  
பண் - பழந்தக்கராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.

[1]
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த
தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.

[2]
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு,
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்-
கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.

[3]
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி,
கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.

[4]
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால்,
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்-
கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.

[5]
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்-
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே.

[6]
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,
சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான்,
மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில்
கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.

[7]
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,
மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.

[8]
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்
தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்-
கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.

[9]
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!
நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.

[10]
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,
வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.063  
எரி ஆர் மழு ஒன்று  
பண் - தக்கேசி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

[1]
பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே
கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே?
இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!

[2]
நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர் சடை மாட்டு, அயலே
பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே?
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர்
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே!

[3]
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,
அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய,
வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!

[4]
தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன்,
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே?
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க,
துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!

[5]
கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு, அயலே
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண்மேல்
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே!

[6]
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே,
நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே?
தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்,
சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!

[7]
எருதே கொணர்க! என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா,
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே?
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒருபது தேர் தொலையப்
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே!

[8]
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,
கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?
தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!

[9]
நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே?
அழல் ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய
கழல் நாகஅரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தவனே!

[10]
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய
சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே?
நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!

[11]
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல
படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு
அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.064  
அறை ஆர் புனலும் மா  
பண் - தக்கேசி   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)

அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

[1]
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.

[2]
போர் ஆர் மதமா உரிவை போர்த்து, பொடி அணி மேனியனாய்,
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்ணுதல், விண்ணவன், ஊர்
பார் ஆர் வைகைப் புனல் வாய் பரப்பி, பல்மணி பொன் கொழித்து,
சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.

[3]
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம்
படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.

[4]
கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக் கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி, மெல்லியலாள் ஓர் பால் மகிழ்ந்தான், இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப,
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே.

[5]
நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.

[6]
பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப,
மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.

[7]
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

[8]
பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,
கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து,
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.

[9]
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.

[10]
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,
நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.065  
அடையார் தம் புரங்கள் மூன்றும்  
பண் - தக்கேசி   (திருப்பல்லவனீச்சரம் பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை)

அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,
விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,
படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.

[1]
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்
கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்
மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி,
பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[2]
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[3]
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம்
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால்,
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[4]
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப,
மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே,
பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.

[5]
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர,
கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய,
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

[6]
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[7]
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர,
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

[8]
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால்,
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப,
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

[9]
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்,
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

[10]
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்,
ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.066  
பங்கம் ஏறு மதி சேர்  
பண் - தக்கேசி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.

[1]
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்
போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த
சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.

[2]
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய
நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்
பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,
தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.

[3]
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,
சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.

[4]
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த
குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி
நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை
சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.

[5]
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

[6]
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,
அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.

[7]
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி
தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.

[8]
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,
நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்
மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர்,
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.

[9]
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,
சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.067  
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி  
பண் - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

[1]
கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.

[2]
பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

[3]
உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்,
இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும்
பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.

[4]
குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி,
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.

[5]
வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா,
மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின்,
பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

[6]
பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி
செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்;
கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.

[7]
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

[8]
கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத
படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.

[9]
கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட,
வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு,
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.

[10]
வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்,
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.068  
பொடி கொள் உருவர், புலியின்  
பண் - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.

[1]
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்;
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த
கரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே.

[2]
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும்
தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.

[3]
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன்
தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார்
மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு
கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.

[4]
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார்,
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி,
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.

[5]
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப்
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்த
காது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே.

[6]
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்;
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்;
கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக்
கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே.

[7]
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம்
ண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி,
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.

[8]
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர்,
பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்,
எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே.

[9]
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்,
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்,
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.069  
பூ ஆர் மலர் கொண்டு  
பண் - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[1]
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
அம் சொல் கிளிகள், ஆயோ! என்னும் அண்ணாமலையாரே.

[2]
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[3]
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

[4]
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

[5]
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

[6]
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[7]
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய்! என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

[8]
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, கொள்ள வம்மின்! என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

[9]
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

[10]
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.070  
வானத்து உயர் தண்மதி தோய்  
பண் - தக்கேசி   (திருஈங்கோய்மலை )

வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.

[1]
சூலப் படை ஒன்று ஏந்தி, இரவில் சுடுகாடு இடம் ஆக,
கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே,
பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே.

[2]
கண் கொள் நுதலார், கறை கொள் மிடற்றார், கரியின் உரி-தோலார்,
விண் கொள் மதி சேர் சடையார், விடை ஆர் கொடியார், வெண் நீறு
பெண் கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான், எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே.

[3]
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்,
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ,
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

[4]
நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார்,
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ,
பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரி ஆடும்
எம்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே.

[5]
நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும்
ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை-
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

[6]
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை
நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு
தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும்
எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

[7]
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால்
நெருக்கி அடர்த்து, நிமலா, போற்றி! என்று நின்று ஏத்த,
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

[8]
வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான் மகளோடும்
பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

[9]
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்,
மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும்,
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி,
இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

[10]
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள்,
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன்,
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.071  
பிறை கொள் சடையர்; புலியின்  
பண் - தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[1]
பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் பூதம் பாடவே,
தம் காதலியும் தாமும் உடன் ஆய்த் தனி ஓர் விடை ஏறி,
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே.

[2]
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல்
பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ,
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக்
கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[3]
பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன் தலை ஏந்தி,
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்
பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து, செண்பகம்,
சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[4]
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[5]
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம்,
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[6]
குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம்
தழல் ஆர் மேனித் தவள நீற்றர்; சரி கோவணக்கீளர்
எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் இசைத்து, விடை ஏறி,
கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சுரத்தாரே.

[7]
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி
உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார்
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[8]
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்,
அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, முதல்வா, அருள்! என்ன,
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[9]
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்,
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்!
கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய,
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[10]
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை,
செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரை,
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்,
பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.072  
வார் ஆர் கொங்கை மாது  
பண் - தக்கேசி   (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்) சோமநாதர் தேனார்மொழியம்மை)

வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

[1]
முடி ஆர் மன்னர், மடமான் விழியார், மூ உலகும் ஏத்தும்
படியார்; பவள வாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்த,
கொடி ஆர் விடையார் மாட வீதிக் குடந்தை, குழகு ஆரும்
கடி ஆர் சோலைக் கலவமயில் ஆர் காரோணத்தாரே.

[2]
மலையார் மங்கைபங்கர், அங்கை அனலர் மடல் ஆரும்
குலை ஆர் தெங்கு, குளிர் கொள் வாழை, அழகு ஆர் குட மூக்கில்
முலையார் அணி பொன், முளை வெண் நகையார், மூவா மதியினார்,
கலை ஆர் மொழியார், காதல் செய்யும் காரோணத்தாரே.

[3]
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய அழகு ஆரும்
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில், அம் தண் குட மூக்கில்
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார்,
காது ஆர் குழையர், காளகண்டர் காரோணத்தாரே.

[4]
பூ ஆர் பொய்கை அலர் தாமரை, செங்கழுநீர், புறவு எல்லாம்
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற,
கூ ஆர் குயில்கள், ஆலும் மயில்கள், இன்சொல் கிளிப்பிள்ளை,
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தைக் காரோணத்தாரே.

[5]
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல் வாளி
கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில்
தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை;
காப்பார், காலன் அடையா வண்ணம்; காரோணத்தாரே.

[6]
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை,
மான் ஆர் தோலார்; புலியின் உடையார்; கரியின் உரி போர்வை
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில்,
கான் ஆர் நட்டம் உடையார், செல்வக் காரோணத்தாரே.

[7]
வரை ஆர் திரள் தோள் மதவாள் அரக்கன் எடுப்ப மலை, சேரும்
விரை ஆர் பாதநுதியால் ஊன்ற, நெரிந்து சிரம் பத்தும்,
உரை ஆர் கீதம் பாடக் கேட்டு, அங்கு ஒளிவாள் கொடுத்தாரும்
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே.

[8]
கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய்,
அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார்,
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்,
கரிய கண்டர், காலகாலர், காரோணத்தாரே.

[9]
நாணார் அமணர்; நல்லது அறியார்; நாளும் குரத்திகள்,
பேணார் தூய்மை; மாசு கழியார்; பேசேல், அவரோடும்!
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தைக் காரோணத்தாரே.

[10]
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வக் காரோணத்தாரை,
திரு ஆர் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்
உரு ஆர் செஞ்சொல்மாலை இவைபத்து உரைப்பார், உலகத்துக்
கரு ஆர் இடும்பைப் பிறப்பு அது அறுத்து, கவலை கழிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.073  
வான் ஆர் சோதி மன்னு  
பண் - தக்கேசி   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)

வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

[1]
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர,
போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.

[2]
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை,
மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்;
இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார்
கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.

[3]
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி,
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ,
எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்-
கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.

[4]
தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி,
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து,
ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார்
கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.

[5]
முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய்,
எளிவந்தார் போல், ஐயம் என்று, என் இல்லே புகுந்து, உள்ளத்
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில்
களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண் பிறையாரே.

[6]
மூவா வண்ணர், முளை வெண் பிறையர், முறுவல் செய்து இங்கே
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப்
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர்
தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.

[7]
தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்,
குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.

[8]
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்,
சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,
வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்-
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.

[9]
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு,
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும்
சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.

[10]
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை,
பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே,
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று,
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.074  
நறவம் நிறை வண்டு அறை  
பண் - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[1]
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[2]
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க,
கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி,
அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி,
எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[3]
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;
கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,
புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[4]
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[5]
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[6]
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[7]
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[8]
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[9]
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[10]
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.075  
காலை நல்மாமலர் கொண்டு அடி  
பண் - குறிஞ்சி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[1]
பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும் அரவினை அணிந்து, அழகு ஆகப்
பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி,
மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, மறிதிரை கடல் முகந்து எடுப்ப, மற்று உயர்ந்து
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[2]
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது உரு அது கொண்டு,
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து, உடன் காதல் செய் பெருமான்-
நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச, விண்டு உதிர்ந்து,
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[3]
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[4]
சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[5]
கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள் அறத் துரப்ப, எண்திசையும்
புரை மலி வேதம் போற்று சுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[6]
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[7]
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை முடியொடு தோள் அவை நெரிய,
ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து, அழகு ஆய
கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[8]
ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி,
சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத் தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்
நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர் கைதொழுது ஏத்த,
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[9]
பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை விட்டு, அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,
காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற விளித்து, வெய்து ஆய
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[10]
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.076  
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,  
பண் - குறிஞ்சி   (திருஇலம்பையங்கோட்டூர் சந்திரசேகரர் கோடேந்துமுலையம்மை)

மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர்
மறைக்காடு, நெய்த் தானம்,
நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம்
பெடை புல்கிக் கணமயில் ஆலும்
இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[1]
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள்
தலைமகன், திருக்கழிப்பாலை
நிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை
இளையவர் மதிமுகத்து உலவும் 
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் 
பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[2]
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்று
உதைத்து அடியவர்க்கு அருளும்
காலன் ஆம், எனது உரை தனது உரை ஆக, கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும்
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

[3]
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும்
அண்ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத் தாங்கிய விமலன்-
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி
எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
    பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[4]
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு
நீர் உடன் வாயு ஆம் தெரியில்
வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்கு
அசைத்து உழிதரு மைந்தன்-
கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர்
கல் கடுஞ்சாரல்
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

[5]
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி
திரிந்து உண்பு இலான், மற்று ஓர்
தனம் இலான், எனது உரை தனது உரை ஆக, தாழ்சடை இளமதி
தாங்கிய தலைவன்-
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி
கொழித்து, ஈண்டி வந்து, எங்கும்
இனம் எலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப்
  பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[6]
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து
உளான், நித்தமா ஏத்தும்
ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு
உகந்து ஏறிய ஒருவன்-
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை
வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
  பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[7]
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள்
அடர்த்தவன், உலகில்
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவு
அணிந்து உழி தரும் அண்ணல்
வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல்,
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
     பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[8]
கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடி
மேல்முடி தேர்ந்து அளக்கில்லா,
உளம் அழை எனது உரை தனது உரை ஆக, ஒள் அழல்
அங்கையில் ஏந்திய ஒருவன்-
வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு 
   மணி அணி மாலை,
இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
  பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[9]
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும்
  சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்கு
என்று உழல் பெரியவர் பெருமான்-
கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக
வண்டொடு தேன் இனம் முரலும்,
இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

[10]
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர்
கழுமலம் என்னும்
நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்-
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய
பத்தும் வல்லார், போய்
வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று,
வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.077  
பொன் திரண்டன்ன புரிசடை புரள,  
பண் - குறிஞ்சி   (திருஅச்சிறுபாக்கம் பாக்கபுரேசர் சுந்தரமாதம்மை)

பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[1]
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம்
திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர்,
ஒன்று அலாது ஊரார்,
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர்
வடிவினை உடையார்,
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[2]
கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை
கொண்டு அரிவை மேல் ஓடி,
நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து
ஏறிய நிமலர்;
பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்;
பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[3]
மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும், மலைமகள் அவளொடு
மருவினர் எனவும்,
செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர்,
எம் சென்னிமேல் உறைவார்
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும்
தாள் நிழல் சேர,
அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[4]
விண் உலாம் மதியம் சூடினர் எனவும், விரிசடை உள்ளது,
வெள்ளநீர் எனவும்,
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும், பல புகழ் அல்லது
பழி இலர் எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில்
பெற நின்ற
அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[5]
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி,
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக,
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த,
ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

[6]
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு
    ஒருங்கு உடன் ஆகிக்
கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர,
ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

[7]
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக்
கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப்
பெரியவர் பேண,
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்த
திண்தோள்களை அடர்வித்து,
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[8]
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு
ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர்
இயல்பினை உடையார்;
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு
முடி உற, தங்கள்
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[9]
வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய
வல்வினையாளர்,
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர்
இயல்பினை உடையார்;
வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல
மா மதி போல்
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி
கொண்டாரே.

[10]
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
பொய்கையில் புதுமலர் கிழியப்
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி
கவுணியர் பெருமான்,
கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை
ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு,
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர்
அருவினை இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.078  
வரி வளர் அவிர் ஒளி  
பண் - குறிஞ்சி   (திருஇடைச்சுரம் இடைச்சுரநாதர் இமயமடக்கொடியம்மை)

வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

[1]
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்;
குழகு அலது அறியார்;
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள்
ஆடுவர்; கொன்றை அம்தாரார்;
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

[2]
கானமும், சுடலையும், கல் படு நிலனும், காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; வணங்கவும் இணங்கவும்
வாழ்த்தவும் படுவார்;
நானமும் புகை ஒளி விரையொடு கமழ, நளிர்பொழில் இள
மஞ்ஞை மன்னிய பாங்கர்,
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

[3]
கட மணி மார்பினர்; கடல் தனில் உறைவார் காதலர்; தீது இலர்;
கனல் மழுவாளர்;
விடம் அணி மிடறினர்; மிளிர்வது ஓர் அரவர்; வேறும் ஓர்
சரிதையர்; வேடமும் உடையர்;
வடம் உலை அயலன கருங்குருந்து ஏறி, வாழையின் தீம்கனி
வார்ந்து தேன் அட்டும்
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

[4]
கார் கொண்ட கடி கமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர்;
வளர்மதி கதிர்விட, கங்கை-
நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; நிழல் திகழ்
மழுவினர்; அழல் திகழ் நிறத்தர்;
சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் செழும் புனல்
அனையன செங்குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
மேவிய இவர் வணம் என்னே?

[5]
தோடு அணி குழையினர்; சுண்ண வெண் நீற்றர்; சுடலையின்
  ஆடுவர்; தோல் உடை ஆகப்
பீடுடி உயர் செய்தது ஓர் பெருமையை உடையர்; பேய் உடன்
  ஆடுவர்; பெரியவர் பெருமான்;
கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, குரவமும் மரவமும்
மன்னிய பாங்கர்,
ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

[6]
கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; கவர் தலை அரவொடு
கண்டியும் பூண்பர்;
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர்; பாடுவர்;
ஆர் அணங்கு உடையர்;
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு
  இடைப் புணர்குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

[7]
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு
  சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்;
வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன
  மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம்
  மேவிய இவர் வணம் என்னே?

[8]
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர்; பலபுகழ் அல்லது
பழி இலர், தாமும்;
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தடக்கைகள்
  அடர்த்தது ஓர் தன்மையை உடையர்;
மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, மழை தவழ்
  இள மஞ்ஞை மல்கிய சாரல்,
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

[9]
பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர்; அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை
  அடியவர்க்கு அணியரும் ஆவர்;
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் கயல் இனம்
  வயல் இளவாளைகள் இரிய,
எருமைகள் படிதர, இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

[10]
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழிச்
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள்
பரவி நின்று உருகு சம்பந்தன்,
புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர்
புடை இடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.079  
அயில் உறு படையினர்; விடையினர்;  
பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும்
மதியமும் விரவிய அழகர்;
மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை
முகில் புல்கும் மிடறர்;
பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி
கொள்வர்; வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

[1]
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்;
படுதலைக் கையர்;
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை
   அடிகளார் பதி அதன் அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து
எற்றிய கரைமேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.

[2]
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்;
நால் மறையாளர்;
மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை;
எட்டு இருங்கலை சேர்
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ,
மதனனை வெகுண்ட
கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம்
வினைகரிசு அறுமே.

[3]
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்;
நீறு மெய் பூசித்
திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்;
வேய் புரை தோளி,
வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர்
வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.

[4]
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண்
  பொலிந்து இலங்கிய உருவர்;
பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை
  அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு,
ஒண்மணி வரன்றி,
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.

[5]
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள்
அடி பணிந்து ஏத்த,
பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார்
பேணிய கோயில்
பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய
கையினர் ஆகி,
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

[6]
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார், குரை கழல்
  பணிந்தவர்க்கு அருளிய பொருளின்
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர்
  தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள்
முத்து என அரும்ப,
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

[7]
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை
    எடுத்தவன், பொன்முடி திண்தோள்
பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது
  உறை கோயில் அது ஆகும்
வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில்
பெயர் உளது என்ன,
இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

[8]
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ்
   தாமரையோனும், என்று இவர் தம்
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று
இனிது உறைகோயில்
மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி,
வெள் இப்பியும் சுமந்து,
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.

[9]
ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலாச்
  சமணரும், தேரரும், கணி சேர்
நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா
முதல்வர் தம் மேனிச்
சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி
வையகத்து ஏற்று,
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம்
  நினைய, நம் வினைகரிசு அறுமே.
[10]
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய
  கோயில் கொண்டவர் மேல்,
வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை
ஞானசம்பந்தன் தமிழின்
ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால்
  நினைந்து ஏத்த வல்லார்மேல்
மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின்
மிகப் பெறுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  
பண் - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

[1]
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை,
மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே.

[2]
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்,
பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்
செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.

[3]
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

[4]
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

[5]
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய
கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.

[6]
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

[7]
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து,
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

[8]
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்
காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான்,
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

[9]
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.

[10]
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.081  
நல்லார், தீ மேவும் தொழிலார்,  
பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

[1]
துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம்,
தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.

[2]
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்
பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.

[3]
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும்
நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும்
பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்
கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே.

[4]
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

[5]
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,
பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்
கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.

[6]
வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த
ஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன்
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப்
பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே.

[7]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.082  
இரும் பொன்மலை வில்லா, எரி  
பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

[1]
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர,
ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்
கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும்
வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.

[2]
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்
மயிலும் மடமானும் மதியும் இள வேயும்
வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.

[3]
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்
குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,
விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.

[4]
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.

[5]
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்
சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.

[6]
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,
கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

[7]
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.

[8]
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில்
படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.

[9]
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.

[10]
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்
ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.083  
அடையார் புரம் மூன்றும் அனல்வாய்  
பண் - குறிஞ்சி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

[1]
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,
வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை
ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

[2]
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய,
நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும்
உரையாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.

[3]
கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு,
மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய,
கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த,
எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே.

[4]
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய்,
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும்
பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே.

[5]
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி,
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக்
கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.

[6]
மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி,
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த,
தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே.

[7]
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி,
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே.

[8]
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட,
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா,
இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.

[9]
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார்,
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல;
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா! என்பார்கட்கு இல்லை, இடர்தானே.

[10]
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்-
திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர்
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.084  
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்  
பண் - குறிஞ்சி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய
நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி,
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு,
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.

[1]
பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி
அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்-
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக்
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[2]
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்;
தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[3]
மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல்
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த,
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே.

[4]
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி,
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்-
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே.

[5]
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,
வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல்
ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த,
கானல் கடல் நாகைக்காரோணத்தானே.

[6]
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[7]
வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள்
இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்-
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே.

[8]
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த,
பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச்
செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த
கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.

[9]
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,
அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்;
பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த,
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

[10]
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன்
உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.085  
கல்லால் நிழல் மேய கறை  
பண் - குறிஞ்சி   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)

கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[1]
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ,
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[2]
அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[3]
குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ,
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில்,
தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய்,
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே.

[4]
மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு
பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித்
துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த,
நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[5]
வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை
ஈசன்! என உள்கி எழுவார் வினைகட்கு
நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[6]
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,
வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்
நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[7]
பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு
கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி,
நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே.

[8]
நாகத்து அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும்
நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே.

[9]
குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர்,
அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே!
பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும்,
நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே.

[10]
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.086  
கொட்டும் பறை சீரால் குழும,  
பண் - குறிஞ்சி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி,
நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை
முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு-
பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.

[1]
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும்
வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன,
நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.

[2]
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ,
ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை
நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே.

[3]
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை,
நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை,
காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

[4]
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ
நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை,
தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.

[5]
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,
நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை,
செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர,
சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே.

[6]
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும்
நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா,
தம் கை தலைக்கு ஏற்றி, ஆள் என்று அடிநீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

[7]
காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன்
நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை,
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்
தீபமனத்தார்கள்; அறியார், தீயவே.

[8]
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை,
தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.

[9]
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர்,
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை,
நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை,
எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

[10]
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன்,
நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை,
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.087  
சுடு கூர் எரிமாலை அணிவர்;  
பண் - குறிஞ்சி   (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை)

சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

[1]
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க,
கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.

[2]
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்
ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு
பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.

[3]
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்
கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

[4]
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.

[5]
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி,
கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர்
வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.

[6]
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;
கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

[7]
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

[8]
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.

[9]
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய
பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

[10]
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,
கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்
அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.088  
முற்றும் சடை முடி மேல்  
பண் - குறிஞ்சி   (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை)

முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[1]
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர்
விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[2]
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்
பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[3]
பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்
துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான்,
அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப்
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[4]
தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,
அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப்
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[5]
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,
காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப்
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[6]
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,
இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப்
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[7]
கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான்,
உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி,
அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப்
பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[8]
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்
எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.

[9]
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

[10]
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.089  
படை ஆர்தரு பூதப் பகடு  
பண் - குறிஞ்சி   (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை)

படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

[1]
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய்,
நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த
சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்
கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.

[2]
விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ!
பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி!
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா! என வல்லார்க்கு அடையா, வினைதானே.

[3]
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,
வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

[4]
வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து,
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்,
ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா, வினைதானே.

[5]
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே
தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.

[6]
ஆவா! என அரக்கன் அலற அடர்த்திட்டு,
தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-
தேவே! என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

[7]
மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!
நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான்! எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.

[8]
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி,
சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும்
நித்தன்-எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய
அத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே.

[9]
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை,
சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.090  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்  
பண் - குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

[1]
காண உள்குவீர்! வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!

[2]
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!

[3]
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

[4]
வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து
ஆணி நன்பொனைக் காணுமின்களே!

[5]
பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும்,
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே.

[6]
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம்
அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!

[7]
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே!

[8]
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே!

[9]
அயனும் மாலும் ஆய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.

[10]
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

[11]
தொழு மனத்தவர், கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.091  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி  
பண் - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

[1]
பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.

[2]
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்
நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.

[3]
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்
கையினால்-தொழ, நையும், வினைதானே.

[4]
பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.

[5]
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.

[6]
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்
செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.

[7]
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

[8]
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.

[9]
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.

[10]
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  
பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

[1]
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

[2]
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

[3]
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

[4]
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்!
நாம மிழலையீர்! சேமம் நல்குமே!

[5]
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்!
அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!

[6]
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்!
கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!

[7]
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

[8]
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்!
இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!

[9]
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்;
வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே.

[10]
காழி மா நகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.093  
நின்று மலர் தூவி, இன்று  
பண் - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

[1]
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

[2]
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,
கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.

[3]
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாசமலர் தூவ, பாசவினை போமே.

[4]
மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர்,
பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே.

[5]
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா! என வல்லார்
பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.

[6]
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படைஆயின சூழ, உடையார், உலகமே.

[7]
பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே!

[8]
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

[9]
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே!

[10]
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்  
பண் - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

[1]
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்
சீலமே சொலீர், காலன் வீடவே!

[2]
ஆலநீழலார், ஆலவாயிலார்,
காலகாலனார் பால் அது ஆமினே!

[3]
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!

[4]
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே, மனம் நாடி, வாழ்மினே!

[5]
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை
எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.

[6]
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

[7]
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.

[8]
அருவன், ஆலவாய் மருவினான்தனை
இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.

[9]
ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்
தேர் அமண் செற்ற வீரன் என்பரே.

[10]
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,
முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.095  
தோடு ஓர் காதினன்; பாடு  
பண் - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-
காடு பேணி நின்று ஆடும் மருதனே.

[1]
கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்;
மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.

[2]
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை,
பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே.

[3]
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே.

[4]
பந்த விடை ஏறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

[5]
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே.

[6]
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார், இன்பமே.

[7]
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே.

[8]
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

[9]
நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே.

[10]
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி,
பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.096  
மன்னி ஊர் இறை; சென்னியார்,  
பண் - குறிஞ்சி   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

[1]
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்
குழகன், சேவடி தொழுது வாழ்மினே!

[2]
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!

[3]
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச்
சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.

[4]
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்
மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!

[5]
இன்பம் வேண்டுவீர்! அன்பன், அன்னியூர்
நன்பொன் என்னுமின், உம்பர் ஆகவே!

[6]
அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்
எந்தையே! என, பந்தம் நீங்குமே.

[7]
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!

[8]
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

[9]
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே.

[10]
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,
வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.097  
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  
பண் - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

[1]
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

[2]
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்
பற்று ஆய், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.

[3]
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.

[4]
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும்,
காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

[5]
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

[6]
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.

[7]
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.

[8]
மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர்
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.

[9]
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.

[10]
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.098  
நன்று உடையானை, தீயது இலானை,  
பண் - குறிஞ்சி   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

[1]
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?

[2]
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

[3]
துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி,
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி,
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!

[4]
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்!
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே?

[5]
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?

[6]
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!

[7]
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன்
தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,
சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

[8]
அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

[9]
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

[10]
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.099  
வம்பு ஆர் குன்றம், நீடு  
பண் - குறிஞ்சி   (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை)

வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்
கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை
நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

[1]
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம,
கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்
கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய்
அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!

[2]
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக
நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!

[3]
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன்,
கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

[4]
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்தி
குலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம்
இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த
சிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்!

[5]
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி,
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம்
பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்!

[6]
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!

[7]
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ,
கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த
நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!

[8]
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,
குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!

[9]
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி,
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப,
அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்!

[10]
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.100  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு  
பண் - குறிஞ்சி   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)

நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

[1]
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து,
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து,
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி
பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

[2]
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,
பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.

[3]
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம்,
தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம்,
நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே.

[4]
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை
பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே.

[5]
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத்
தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில்
புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்-
படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே.

[6]
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்
எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும்
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை,
பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே.

[7]
மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்-
பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச்
சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் சிவன் என்று
நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

[8]
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி
உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும்,
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி,
பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே!

[9]
குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து,
மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல;
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்
தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

[10]
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன்,
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி,
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.101  
தண் ஆர் திங்கள், பொங்கு  
பண் - குறிஞ்சி   (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை)

தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

[1]
கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும்,
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி,
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.

[2]
பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர்
கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி,
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.

[3]
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்,
மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.

[4]
மறு மாண் உரு ஆய் மற்று இணை இன்றி, வானோரைச்
செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன், தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே.

[5]
விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும்
கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை,
நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே.

[6]
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி,
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே.

[7]
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த,
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே.

[8]
செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.

[9]
தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும்
சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன்,
ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர்
ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே.

[10]
காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த
பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்-
நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்-
பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.102  
உரவு ஆர் கலையின் கவிதைப்  
பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி
அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா! என்பார் தத்துவஞானத் தலையாரே.

[1]
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக்
கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி
மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே!
ஐயா! என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.

[2]
இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ,
களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி,
அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே! என்று
உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.

[3]
எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து,
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி,
பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே! என்பார்க்கு
நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.

[4]
மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட,
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி,
உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்-
குழையா! என்று கூற வல்லார்கள் குணவோரே.

[5]
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி,
வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா! என்பாரை
அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே.

[6]
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு,
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி,
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா! என்ன, தவம் ஆமே.

[7]
ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ,
காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி,
வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்
மேவிப் பரவும் அரசே! என்ன, வினை போமே.

[8]
மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும்
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித்
தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா
நிலையாய்! என்ன, தொல்வினை ஆய நில்லாவே.

[9]
வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக்
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி
அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன்
படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.103  
தோடு உடையான் ஒரு காதில்-தூய  
பண் - குறிஞ்சி   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)

தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ
ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[1]
கேண வல்லான்; கேழல் வெண் கொம்பு; குறள் ஆமை
பூண வல்லான்; புரிசடைமேல் ஒர் புனல், கொன்றை,
பேண வல்லான்; பெண் மகள் தன்னை ஒருபாகம்
காண வல்லான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[2]
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-
தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[3]
துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை
பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[4]
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய் உடையான், வெண் பிறை சூடி, விரிகொன்றை
மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த
கை உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[5]
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.

[6]
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின்
நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி;
பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[7]
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனம் ஆயும்,
தொடர்ந்த பெம்மான்; மதி சூடி; வரையார்தம்
மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக்
கடந்த பெம்மான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[8]
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே
பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[9]
கண் நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை,
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.104  
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

[1]
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,
சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.

[2]
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.

[3]
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்
புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

[4]
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்-
ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்
பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.

[5]
மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம்
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும்
புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.

[6]
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்
செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்
அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

[7]
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.

[8]
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம்
மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த
போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.

[9]
வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்!
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.

[10]
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.105  
பாடலன் நால்மறையன்; படி பட்ட  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

[1]
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்,
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்,
காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.

[2]
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும்,
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய,
அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

[3]
வெந்து உறு வெண் மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றை அம்தார்ப் பரமன் அடி பரவ, பாவம்
நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே.

[4]
வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி
ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று
பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே.

[5]
கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும்
அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர்
தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

[6]
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட
ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-
சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்
ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

[7]
வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான், வாய்த்த
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்,
அல்லி அம் கோதை தன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

[8]
செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல்,
அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த்
தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே.

[9]
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல
அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை,
வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச்
சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.106  
மாறு இல் அவுணர் அரணம்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை)

மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

[1]
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம்
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம்
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே.

[2]
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும்
கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம்
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை
ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

[3]
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று,
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில்
மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே.

[4]
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு,
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில்
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே.

[5]
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி,
மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

[6]
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று,
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில்
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம்
ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே.

[7]
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர்,
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை
உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே.

[8]
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச
ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல்,
நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.

[9]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.107  
வெந்த வெண் நீறு அணிந்து,  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி)

வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
[1]
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

[2]
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.

[3]
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.

[4]
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.

[5]
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.

[6]
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.

[7]
மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,
கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

[8]
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.

[9]
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.

[10]
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.108  
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பாதாளீச்சரம் )

மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்
பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.

[1]
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்-
தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்;
ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம்
பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.

[2]
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம்
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்,
தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப்
பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே.

[3]
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.

[4]
பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று,
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து,
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர,
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே.

[5]
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும்
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும்
பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும்
பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே.

[6]
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ்
வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்;
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து, உரை வேதம் நான்கும் அவை
பண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே.

[7]
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக, அன்று, கையால்-
தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்;
கொல்லை விடை உகந்தான்; குளிர்திங்கள் சடைக்கு அணிந்தோன்;
பல் இசை பாடலினான்; உறை கோயில் பாதாளே.

[8]
தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்-தேடி,
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்;
பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே.

[9]
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி,
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த
பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.

[10]
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர,
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்-
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.109  
வார் உறு வனமுலை மங்கை  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
நீர் உறு சடை முடி நிமலன், இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வளவயல் சிரபுரமே.

[1]
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,
திங்களொடு அரவு அணி திகழ் முடியன்,
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.

[2]
பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித்
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத்
தெரிந்தவன், வள நகர் சிரபுரமே.

[3]
நீறு அணி மேனியன், நீள் மதியோடு
ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்-
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வளவயல், சிரபுரமே.

[4]
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.

[5]
கலை அவன், மறை அவன், காற்றொடு தீ
மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன்,
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன், வள நகர் சிரபுரமே.

[6]
வான் அமர் மதியொடு மத்தம் சூடித்
தானவர் புரம் எய்த சைவன் இடம்
கான் அமர் மடமயில் பெடை பயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.

[7]
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக்
கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள்
இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன்
செறுத்தவன், வள நகர் சிரபுரமே.

[8]
வண்ண நல்மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய்
விண் உற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நல்மதில் அணி சிரபுரமே.

[9]
வெற்று அரை உழல்பவர், விரி துகிலார்,
கற்றிலர் அற உரை புறன் உரைக்க,
பற்றலர் திரி புரம் மூன்றும் வேவச்
செற்றவன் வள நகர் சிரபுரமே.

[10]
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.110  
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான்,
அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன், வள நகர் இடைமருதே.

[1]
தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள்
கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த
நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல்
ஏற்றவன், வள நகர் இடைமருதே.

[2]
படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன்,
நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம்
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்-
இடைமருது இனிது உறை எம் இறையே.

[3]
பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார்
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்து, அடு திறல் காலன் செற்ற
இணை இலி, வள நகர் இடைமருதே.

[4]
பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும்
தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும்
கழலவன், கரிஉரி போர்த்து உகந்த
எழிலவன், வள நகர் இடைமருதே

[5]
நிறை அவன், புனலொடு மதியும் வைத்த
பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற
மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட
இறையவன், வள நகர் இடைமருதே.

[6]
நனி வளர் மதியொடு நாகம் வைத்த
பனி மலர்க் கொன்றை அம் படர் சடையன்,
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க,
இனிது உறை வள நகர் இடைமருதே.

[7]
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன், வள நகர் இடைமருதே.

[8]
பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான்,
வரி அரவு அணை மறிகடல்-துயின்ற
கரியவன் அலரவன் காண்பு அரிய
எரியவன், வள நகர் இடைமருதே.

[9]
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே,
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா,
எந்தைதன் வள நகர் இடைமருதே.

[10]
இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.111  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை)

அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

[1]
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும்
அரை பொரு புலி அதள் அடிகள் இடம்,
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே.

[2]
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,
கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,
ஏல நல்மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே.

[3]
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார்
மை அணி மிடறு உடை மறையவன் ஊர்,
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே.

[4]
மறை அவன், உலகு அவன், மாயம் அவன்,
பிறையவன், புனல் அவன், அனலும் அவன்,
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம்-
கறையவன் வள நகர் கடைமுடியே.

[5]
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை
மடவரலாளை ஒர்பாகம் வைத்து,
குடதிசை மதி அது சூடு சென்னிக்
கடவுள் தன் வள நகர் கடைமுடியே.

[6]
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்,
அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்;
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே.

[7]
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச்
சாதல் செய்து, அவன், அடி சரண்! எனலும்,
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வள நகர் கடைமுடியே.

[8]
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி, அருள்! என்று போற்று இசைப்ப,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி; அதன் அயல் காவிரியே.

[9]
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை;
எண்ணியகால், அவை இன்பம் அல்ல;
ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த
கண்ணுதல் வள நகர் கடைமுடியே.

[10]
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.112  
இன்குரல் இசை கெழும் யாழ்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழங்காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே.

[1]
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்
சென்று அடி வீழ்தரு சிவபுரமே.

[2]
மலைமகள் மறுகிட, மதகரியைக்
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே.

[3]
மண், புனல், அனலொடு, மாருதமும்,
விண், புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச்
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.

[4]
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்-
நாறு நன் குர விரி வண்டு கெண்டித்
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.

[5]
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே.

[6]
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-
வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.

[7]
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன்
முழுவலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து,
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.

[8]
சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

[9]
மண்டையின், குண்டிகை, மாசு தரும்,
மிண்டரை விலக்கிய விமலன் நகர்-
பண்டு அமர்தரு பழங்காவிரியின்
தெண்திரை பொருது எழு சிவபுரமே.

[10]
சிவன் உறைதரு, சிவபுரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்-
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.113  
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)

எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

[1]
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்
தூயவன், தூ மதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.

[2]
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;
போர்த்தவன், போதகத்தின் உரிவை;
ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று
சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[3]
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்-
மை, தவழ் திருமகள் வணங்க வைத்து,
பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச்
செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[4]
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி,
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[5]
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால்
உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று,
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

[6]
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

[7]
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன்; அருமறை அங்கம் ஆனான்;
கரியவன், நான்முகன், காண ஒண்ணாத்
தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[8]
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள்,
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும்
சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.

[9]
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று,
நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.114  
குருந்து அவன், குருகு அவன்,  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,
பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன்,
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன், வள நகர் மாற்பேறே.

[1]
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்,
நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த
மாறு இலி வள நகர் மாற்பேறே.

[2]
கரு உடையார் உலகங்கள் வேவ,
செரு விடை ஏறி முன் சென்று நின்று,
உரு உடையாள் உமையாளும் தானும்
மருவிய வள நகர் மாற்பேறே.

[3]
தலையவன், தலை அணிமாலை பூண்டு
கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான்,
கலை நவின்றான், கயிலாயம் என்னும்
மலையவன், வள நகர் மாற்பேறே.

[4]
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும்
பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன்,
கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற
மறையவன், வள நகர் மாற்பேறே.

[5]
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக்
கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன்,
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.

[6]
தீது இலா மலை எடுத்த அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட,
ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே.

[7]
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்
கொய் அணி நறுமலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க,
மையல் செய் வள நகர் மாற்பேறே.

[8]
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும்
களித்து நன் கழல் அடி காணல் உறார்;
முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வள நகர் மாற்பேறே.

[9]
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.115  
சங்கு ஒளிர் முன் கையர்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)

சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன தீச்சரமே.

[1]
சந்த நல்மலர் அணி தாழ்சடையன்,
தந்த மதத்தவன் தாதையோ தான்,
அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல
எம் தவன், இராமன தீச்சரமே.

[2]
தழை மயில் ஏறவன் தாதையோ தான்,
மழை பொதி சடையவன், மன்னு காதில்
குழை அது விலங்கிய கோல மார்பின்
இழையவன், இராமன தீச்சரமே.

[3]
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்,
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்,
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன், இராமன தீச்சரமே.

[4]
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்-
தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப்
பாய்ந்த கங்கையொடு பட அரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.

[5]
சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன், காளிதன் பெரிய கூத்தை
அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும்
எரியவன், இராமன தீச்சரமே.

[6]
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி
நீறு அது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறு அது சூடுவான், அழகன், விடை
ஏறவன், இராமன தீச்சரமே.

[7]
தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன்,
பட அரவு ஆட்டிய படர் சடையன்,
நடம் அது ஆடலான், நால்மறைக்கும்
இடமவன், இராமன தீச்சரமே.

[8]
தனம் அணி தையல் தன் பாகன் தன்னை,
அனம் அணி அயன் அணிமுடியும் காணான்;
பன மணி அரவு அரி பாதம் காணான்;
இன மணி இராமன தீச்சரமே.

[9]
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்!
அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்!
மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை
எறியவன், இராமன தீச்சரமே.

[10]
தேன் மலர்க் கொன்றை யோன்........
. ........ முந்தமக்கூனமன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.116  
அவ் வினைக்கு இவ் வினை  
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -திருநீலகண்டப்பதிகம் )

அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[1]
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும்,
பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[2]
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்!
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

[3]
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

[4]
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[5]
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[6]
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[7]
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;
சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!

[8]
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[9]
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,
இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்
திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.117  
காடு அது, அணிகலம் கார்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,-
தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்;
வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்;
பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.

[1]
கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை;
பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்டு;
எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; எழில் விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.

[2]
கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது;
தூ விளங்கும் பொடி, பூண்டது, பூசிற்று, துத்தி நாகம்;
ஏ விளங்கும் நுதல், ஆனையும், பாகம், உரித்தனர்; இன்
இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

[3]
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை;
எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை;
செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே.

[4]
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன
இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின்
மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான்
தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.

[5]
சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம்
கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்கு இறகும்,
பேர்த்தவர் பல்படை பேய் அவை, சூடுவர்; பேர் எழிலார்;
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

[6]
காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல் சிலம்பு;
மாலது, ஏந்தல் மழு அது, பாகம்; வளர் கொழுங் கோட்டு
ஆல் அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; அணி மணி நீர்ச்
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே.

[7]
நெருப்பு உரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்; நெற்றியின் கண்,
மருப்பு உருவன், கண்ணர், தாதையைக் காட்டுவர்; மா முருகன்
விருப்பு உறு, பாம்புக்கு மெய், தந்தையார்; விறல் மா தவர் வாழ்
பொருப்பு உறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே.

[8]
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள்,
கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது;
கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து;
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

[9]
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்;
கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்;
பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்;
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.

[10]
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர்,
எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு,
மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய
கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

[11]
கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை
நல் உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.118  
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)

சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

[1]
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே!
வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி,
பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

[2]
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால்
இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்!
கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும்,
பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.

[3]
கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்,
எங்கள் நோய் அகல நின்றான் என, அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த
பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.

[4]
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி,
மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த,
சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா,
பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

[5]
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

[6]
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ,
தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற,
விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்-
படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே.

[7]
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே
மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை,
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்-
பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

[8]
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,-
திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்,
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

[9]
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

[10]
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,
பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல
ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.119  
முள்ளின் மேல் முது கூகை  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)

முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,
வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

[1]
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,
ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக்
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்;
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.

[2]
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,
கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,
பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.

[3]
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும்
நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்,
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.

[4]
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக்
கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.

[5]
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்,
கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்;
மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.

[6]
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும், கூப்பிடினும்,
கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.

[7]
திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம்
புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில்,
கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும்
பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.

[8]
வரி ஆய மலரானும் வையம் தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்,
பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே.

[9]
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள்,
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!

[10]
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த,
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.120  
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[1]
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப்
பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து,
போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை
ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

[2]
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்
எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,
அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

[3]
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[4]
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு
தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[5]
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்
என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.

[6]
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.

[7]
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,
அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது
முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.

[8]
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,
எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.

[9]
மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா
இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்,
தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா
அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!

[10]
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.121  
நடை மரு திரிபுரம் எரியுண  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்,
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,
இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.

[1]
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை
கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்;
குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர்
இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.

[2]
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.

[3]
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்,
வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர்
எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.

[4]
வரு நல மயில் அன மடநடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்,
செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.

[5]
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை,
மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்;
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன்; இடம் இடைமருதே.

[6]
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது
உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி,
குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.

[7]
மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு
துறையவன் என வல அடியவர் துயர் இலர்;
கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை
இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.

[8]
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும்
இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக்
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.

[9]
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு-
மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.

[10]
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,
படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.122  
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

[1]
மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர்
எறிதிரை கரை பொரும் இடைமருது எனுமவர்
செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்;
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.

[2]
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்
நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,
இலர் என இடு பலியவர், இடைமருதினை
வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.

[3]
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை தொறு, பலி இடுக! என முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்
உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.

[4]
உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,
அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை
இரை மரும் அரவினர், இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.

[5]
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்
எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

[6]
கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,
இலை மலி படையவர், இடம் இடைமருதே.

[7]
செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்
அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,
இருவகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?

[8]
அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

[9]
குடை மயிலின தழை மருவிய உருவினர்,
உடை மரு துவரினர், பல சொல உறவு இலை;
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடை மருது என மனம் நினைவதும் எழிலே.

[10]
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.123  
பூ இயல் புரிகுழல்; வரிசிலை  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

[1]
இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.

[2]
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

[3]
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.

[4]
பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

[5]
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.

[6]
நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

[7]
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

[8]
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

[9]
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

[10]
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.124  
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.

[1]
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு
நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.

[2]
கலைமகள் தலைமகன், இவன் என வருபவர்
அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,
இலை மலி இதழியும், இசைதரு சடையினர்
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.

[3]
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.

[4]
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.

[5]
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.

[6]
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர்
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்,
வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி
நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.

[7]
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.

[8]
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-
வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.

[9]
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்
வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்
துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.

[10]
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்
வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.125  
கலை மலி அகல் அல்குல்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,
இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.

[1]
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை
சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம்
இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.

[2]
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ்
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்
உரை தரும் அடியவர் உயர்கதியினரே.

[3]
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு
பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர்
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணிமிடறனது அடி இணை தொழுமவரே.

[4]
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,
நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,
இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவு என உடையவன், எமை உடையவனே.

[5]
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,
அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்;
எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே.

[6]
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்,
செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை இலரே.

[7]
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்
உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை
பரன் என அடியவர் பணிதரு, சிவபுர-
நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.

[8]
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்
ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.

[9]
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை
வித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம்
இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

[10]
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்-
பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை
சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று  
பண் - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்
பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும்,
சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால்
தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக்
காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே.

[1]
பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப்
பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும்,
உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு
ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை
வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார்
வாரா, நேரே மால் ஆகும் வசி வல அவனது இடம்
கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம்
கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.

[2]
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின்
சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு,
அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப்
பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும்,
பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின்
போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம்
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின்
காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.

[3]
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து
ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும்
மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய,
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ்
மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

[4]
திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச்
சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்
போலே, பூ,நீர், தீ, கால், மீ, , புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்
காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.

[5]
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும்
சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய்,
ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு
ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும்
பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம்
கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக்
காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.

[6]
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா,
முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய்,
சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

[7]
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில்
சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன்,
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு
ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு
ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக்
கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.

[8]
பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப்
பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள
ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான்
ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின்
தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம்
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும்,
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

[9]
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா,
தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்;
இட்டத்தால், அத்தம்தான் இது அன்று; அது என்று நின்றவர்க்கு
ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்;
போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம்
கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல்
காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

[10]
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக்
கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத்
தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை,
தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்,
எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு,
ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா,
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.127  
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

[1]
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

[2]
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

[3]
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

[4]
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

[5]
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி.

[6]
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

[7]
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

[8]
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்.

[9]
காழி ஆனய உள்ளவா காண்பரே
காழி ஆனய உள்ளவா காண்பரே
காழி ஆனய உள்ளவா காண்பரே
காழி ஆனய உள்ளவா காண்பரே.

[10]
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே.

[11]
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.128  
ஓர் உரு ஆயினை; மான்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.129  
சே உயரும் திண் கொடியான்  
பண் - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.

[1]
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய
மலைச் செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான்,
அமரர் தொழ, அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக்,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப்
பாட்டு அயரும் கழுமலமே.

[2]
அலங்கல் மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணி
கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு,
ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய
மெய்யர் வாழ் கழுமலமே.

[3]
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச்
சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு
சிலை வளைத்தோன்  பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு
மகிழ்வு   எய்தும் கழுமலமே.

[4]
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்கள்-
ஒடு, வன்னி, மத்தம், மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர்
செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளி
மலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு
சுதை மாடக் கழுமலமே.

[5]
தரும் சரதம் தந்தருள்! என்று அடி நினைந்து,
தழல் அணைந்து, தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர்
தோழமை அளித்த   பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப,
அது குடித்துக் களித்து வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய,
அகம் பாயும் கழுமலமே.

[6]
புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய்,
நிலன் ஐந்து ஆய் கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு
வாய், நின்றான்; அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்பு உதைப்ப  கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேரப்
புள் இரியும்  கழுமலமே.

[7]
அடல் வந்த வானவரை அழித்து, உலகு
தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர், இது நடவு ஒணா
வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்
கரை குவிக்கும் கழுமலமே.

[8]
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு
கேழல் உரு ஆகிப் புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா
வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள்
கொண்டு அணிந்து, பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து
நின்று, ஏத்தும் கழுமலமே.

[9]
குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவம் ஆய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத
வகை நின்றான் உறையும் கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி,
இவை இசைய மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க,
மேல்படுக்கும் கழுமலமே.

[10]
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்,
தூமலராள் துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான்
அடி சேர முயல்கின்றாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.130  
புலன் ஐந்தும் பொறி கலங்கி,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

[1]
விடல் ஏறு |படநாகம் |அரைக்கு அசைத்து,| வெற்பு அரையன் |பாவையோடும்
அடல் ஏறு |ஒன்று அது |ஏறி, அம் சொலீர், |பலி! என்னும்| அடிகள் கோயில்
கடல் ஏறித் |திரை மோதிக் |காவிரியின் | உடன் வந்து |கங்குல் வைகி,
திடல் ஏறிச் |சுரிசங்கம் |செழு முத்து |அங்கு ஈன்று |அலைக்கும் |திரு ஐயாறே.

[2]
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் |பொழில் நுழைந்து, |கூர்வாயால் |இறகு  உலர்த்தி, | கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

[3]
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

[4]
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

[5]
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

[6]
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்
குன்று எலாம் |குயில் கூவ,| கொழும் பிரச|மலர் பாய்ந்து |வாசம் மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

[7]
அஞ்சாதே |கயிலாய|மலை எடுத்த |அரக்கர்கோன் | தலைகள் பத்தும்,
மஞ்சு ஆடு |தோள், நெரிய |அடர்த்து, அவனுக்கு | அருள்புரிந்த | மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,
செஞ்சாலிக்|கதிர் உழக்கி, |செழுங் கமல |வயல் படியும் |திரு ஐயாறே.

[8]
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

[9]
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

[10]
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.131  
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே-
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

[1]
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி,
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.

[2]
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி,
மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில்
கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குலை கொள்சோலை,
முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.

[3]
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள்,
செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக,
மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக,
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.

[4]
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு
கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்
முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

[5]
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு
வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி,
தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து,
முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.

[6]
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட,
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில்
திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே.

[7]
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று,
மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.

[8]
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும்,
ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத்
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

[9]
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்!
ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று,
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.

[10]
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு,
தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.132  
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

[1]
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து
ஆக, புத்தேளிர் கூடி,
மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட
கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும்
இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம்
வீற்றிருக்கும் மிழலை ஆமே.

[2]
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம்
புரம் மூன்றும், எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம்
முகம் காட்ட, குதித்து    நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம்
வாய் காட்டும் மிழலை ஆமே.

[3]
உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.

[4]
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி,
காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம்
படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணு ஆய் நின்ற பரதத்துவனை,
உத்தமனை, இறைஞ்சீர்! என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலை ஆமே.

[5]
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
அந்தி திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலை ஆமே.

[6]
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு
மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும்
குணம் உடையோன், குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி,
மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்
பண் பாடும் மிழலை ஆமே.

[7]
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி,
கை மறித்து, கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள்
நெரித்த விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த
சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி
விமானம் சேர் மிழலை ஆமே.

[8]
செந்தளிர் மா மலரோனும் திருமாலும்,
ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த,
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி,
நெய் சமிதை கையில் கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர்
சேரும் ஊர் மிழலை ஆமே.

[9]
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர்
சாக்கியரும், என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு
அருள்புரியும்  நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்து
ஓடும் இழியும் மிழலை ஆமே.

[10]
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
  பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.133  
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  
பண் - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.

[1]
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச்
சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்
குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம்,
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[2]
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,
பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,
விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-
திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[3]
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து,
காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்,
மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்,
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[4]
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து,
பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ,
வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி
சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[5]
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய எய்து,
ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

[6]
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[7]
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான்,
அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம்,
கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள்,
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.

[8]
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும்
மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்!
விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.

[9]
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,
சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.134  
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் )

கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்-
திருத்தம் உடையார் திருப் பறியலூரில்,
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

[1]
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன்,
பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்-
திருந்து மறையோர் திருப் பறியலூரில்,
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[2]
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்-
தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,
மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[3]
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்-
சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில்,
விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.

[4]
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி,
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,
விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[5]
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக,
செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்-
தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில்,
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.

[6]
நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான்,
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்-
திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில்,
விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[7]
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில்,
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.

[8]
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன்,
துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்-
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.

[9]
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்;
உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்;
விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.

[10]
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்,
வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை,
பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு
அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.135  
நீறு சேர்வது ஒர் மேனியர்,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

[1]
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,
வந்த பூம்புனல், வைத்தவர்
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம் இல்ல அடிகளே.

[2]
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்;
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே.

[3]
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை,
ஆல நீழல் அடிகளே.

[4]
விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்;
இரவில் நின்று எரி ஆடுவர்;
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.

[5]
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

[6]
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;
சடையில் கங்கை தரித்தவர்;
படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

[7]
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார், விரல் ஒன்றினால்;
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை, அடிகளே.

[8]
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்
தோற்றமும் அறியாதவர்;
பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

[9]
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,
உரு இலா உரை கொள்ளேலும்!
பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே!

[10]
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.136  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும்  
பண் - யாழ்முரி   (தருமபுரம் திருதருமபுரம் பண் - யாழ்மூரி)

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,
பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்,
அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

[1]
பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி,
வெண்பொடி அணி தடம் கொள் மார்பு ணநூல் புரள,
மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர்,
வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர்
சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து,
ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று,
இலங்கு ஒளி நலங்கு எழில்-தருமபுரம் பதியே.

[2]
விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர்,
விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக்
கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர்,
கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப்
பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ
அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண் இதழ் முல்லையொடு, எண் இதழ் மௌவல், மருங்கு அலர்
கருங்கழி நெருங்கு நல்-தருமபுரம்பதியே.

[3]
வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர்,
வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்,
கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர்,
கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர்,
பார் உற விண்ணுலகம் பரவபடுவோர், அவர்
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்
தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர்
தழை பொழில் மழை நுழை தருமபுரம்பதியே.

[4]
நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக்
கடும்புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்;
பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு,
இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்?
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழகு உற
எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்;
தாரம் அவர்க்கு இமவான்மகள்; ஊர்வது போர் விடை
கடு படு செடி பொழில்-தருமபுரம் பதியே.

[5]
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க,
மல்கு மென்முலை,பொறி கொள் பொன்-கொடி இடை, துவர்வாய்,
மாழை ஒண்கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர்;
வலம் மலி படை, விடை கொடி, கொடு மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று, இனம்
துவன்றி, மென்சிறகு அறை உற நற விரியும் நல்-
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை
புள் இனம் துயில் பயில் தருமபுரம்பதியே.

[6]
தே மரு வார்குழல் அன்னநடைப் பெடைமான் விழித்
திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய,
தூ மரு செஞ்சடையில்-துதை வெண்மதி, துன்று கொன்றை,
தொல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல் உடையர்
கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம்
கடல் அடை கழி இழிய, முண்டகத்து அயலே,
தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர் மலர்
வெறி கமழ் செறி வயல்- தருமபுரம்பதியே.

[7]
தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு
மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்;
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்;
கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்;
பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கன
வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்;
தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்வன் தடங்
கடல் இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே.

[8]
வார் மலி மென்முலை மாது ஒருபாகம் அது ஆகுவர்;
வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்;
கூர் மலி சூலமும், வெண்மழுவும், அவர் வெல் படை;
குனிசிலை தனி மலை அது ஏந்திய குழகர்;
ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை
மிசை அவன், அடி முடி அளவு தாம் அறியார்;
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம்
தடங்கல் இடும் திரைத் தருமபுரம் பதியே.

[9]
புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய்
மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்-தவர், புலவோர்,
பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன் ஆக உகந்தவர்;
நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்;
முத்து அன வெண்நகை ஒண் மலைமாது உமை பொன் அணி
புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்
தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து
அடர்த்திடும் தடம் பொழில்-தருமபுரம்பதியே.

[10]
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ
பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில்
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது
செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப்
பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன்
பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார்,
இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும்
உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே.

[11]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai allsongs lang cyrillic