சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருநாவுக்கரசர் - தேவாரம் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  (கோயில் (சிதம்பரம்))  
2 திருநாவுக்கரசர் - தேவாரம் -பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  (கோயில் (சிதம்பரம்))  
3 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  (திருநெல்வாயில் அரத்துறை)  
4 திருநாவுக்கரசர் - தேவாரம் -வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  (திருவண்ணாமலை)  
5 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டி ஏறு உகந்து ஏறி,  (திருவண்ணாமலை)  
6 திருநாவுக்கரசர் - தேவாரம் -எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  (திருவாரூர்)  
7 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  (திருவாரூர்)  
8 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாறு அலைத்த படுவெண் தலையினன்;  (திருஅன்னியூர் (பொன்னூர்))  
9 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் மால் கடல் பரவி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
10 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
11 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  (திருமீயச்சூர்)  
12 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  (திருவீழிமிழலை)  
13 திருநாவுக்கரசர் - தேவாரம் -என் பொனே! இமையோர் தொழு  (திருவீழிமிழலை)  
14 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  (திருவிடைமருதூர்)  
15 திருநாவுக்கரசர் - தேவாரம் -பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  (திருவிடைமருதூர்)  
16 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  (திருப்பேரெயில்)  
17 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  (திருவெண்ணியூர்)  
18 திருநாவுக்கரசர் - தேவாரம் -முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  (திருக்கடம்பந்துறை (குளித்தலை))  
19 திருநாவுக்கரசர் - தேவாரம் -தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  (திருக்கடம்பூர்)  
20 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  (திருக்கடம்பூர்)  
21 திருநாவுக்கரசர் - தேவாரம் -என்னில் ஆரும் எனக்கு இனியார்  (திருஇன்னம்பர்)  
22 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  (திருகுடமூக்கு (கும்பகோணம்))  
23 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடுங் கண் வெண்தலை கொண்டு,  (திருநின்றியூர்)  
24 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒற்றி ஊரும் ஒளி மதி,  (திருவொற்றியூர்)  
25 திருநாவுக்கரசர் - தேவாரம் -முந்தி மூ எயில் எய்த  (திருப்பாசூர்)  
26 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  (திருவன்னியூர்)  
27 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வாய்தல் உளான், வந்து;  (திருவையாறு)  
28 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  (திருவையாறு)  
29 திருநாவுக்கரசர் - தேவாரம் -நிறைக்க வாலியள் அல்லள், இந்  (திருவாவடுதுறை)  
30 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  (திருப்பராய்துறை)  
31 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  (திருவானைக்கா)  
32 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி கொள் செல்வ விழாக்  (திருப்பூந்துருத்தி)  
33 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  (திருச்சோற்றுத்துறை)  
34 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  (திருநெய்த்தானம்)  
35 திருநாவுக்கரசர் - தேவாரம் -அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  (திருப்பழனம்)  
36 திருநாவுக்கரசர் - தேவாரம் -கான் அறாத கடி பொழில்  (திருச்செம்பொன்பள்ளி)  
37 திருநாவுக்கரசர் - தேவாரம் -மலைக் கொள் ஆனை மயக்கிய  (திருக்கடவூர் வீரட்டம்)  
38 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழை கொள் காதினர், கோவண  (திருக்கடவூர் மயானம்)  
39 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொள்ளும் காதன்மை பெய்து உறும்  (திருமயிலாடுதுறை)  
40 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  (திருக்கழிப்பாலை)  
41 திருநாவுக்கரசர் - தேவாரம் -உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  (திருப்பைஞ்ஞீலி)  
42 திருநாவுக்கரசர் - தேவாரம் -நன்று நாள்தொறும் நம் வினை  (திருவேட்களம்)  
43 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  (திருநல்லம்)  
44 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா மாத்து ஆகிய மால்  (திருவாமாத்தூர்)  
45 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாது இயன்று மனைக்கு இரு!  (சீர்காழி)  
46 திருநாவுக்கரசர் - தேவாரம் -துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  (திருப்புகலூர்)  
47 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்டு செய்த பழவினையின் பயன்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
48 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
49 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண் காட்டிப் படிஆய தன்  (திருவெண்காடு)  
50 திருநாவுக்கரசர் - தேவாரம் -எங்கே என்ன, இருந்த இடம்  (திருவாய்மூர்)  
51 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீல மா மணிகண்டத்தர்; நீள்  (திருப்பாலைத்துறை)  
52 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லர்; நல்லது ஓர் நாகம்  (திருநாகேச்சரம்)  
53 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோணல் மா மதி சூடி,  (திருவதிகை வீரட்டானம்)  
54 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  (திருவதிகை வீரட்டானம்)  
55 திருநாவுக்கரசர் - தேவாரம் -வீறு தான் உடை வெற்பன்  (திருநாரையூர்)  
56 திருநாவுக்கரசர் - தேவாரம் -மைக் கொள் கண் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))  
57 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  (திருக்கோளிலி (திருக்குவளை))  
58 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  (திருப்பழையாறை வடதளி)  
59 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் ஆற்றின் படை வேண்டி,  (திருமாற்பேறு)  
60 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏதும் ஒன்றும் அறிவு இலர்  (திருமாற்பேறு)  
61 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து ஊரும் புனல் மொய்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
62 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்))  
63 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  (திருத்தென்குரங்காடுதுறை)  
64 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  (திருக்கோழம்பம்)  
65 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  (திருப்பூவனூர்)  
66 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் ஆர் கடலின் விடம்  (திருவலஞ்சுழி)  
67 திருநாவுக்கரசர் - தேவாரம் -படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  (திருவாஞ்சியம்)  
68 திருநாவுக்கரசர் - தேவாரம் -உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  (திருநள்ளாறு)  
69 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  (திருக்கருவிலிக்கொட்டிட்டை)  
70 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  (திருக்கொண்டீச்சரம்)  
71 திருநாவுக்கரசர் - தேவாரம் -குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  (திருவிசயமங்கை)  
72 திருநாவுக்கரசர் - தேவாரம் -வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  (திருநீலக்குடி)  
73 திருநாவுக்கரசர் - தேவாரம் -தங்கு அலப்பிய தக்கன் பெரு  (திருமங்கலக்குடி)  
74 திருநாவுக்கரசர் - தேவாரம் -விரும்பி ஊறு விடேல், மட  (திருவெறும்பூர்)  
75 திருநாவுக்கரசர் - தேவாரம் -மரக் கொக்குஆம் என வாய்விட்டு  (திருக்குரக்குக்கா)  
76 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவின் நாதனும், செம்மலர் மேல்  (திருக்கானூர்)  
77 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூரியா வரும், புண்ணியம்; பொய்  (திருச்சேறை (உடையார்கோவில்))  
78 திருநாவுக்கரசர் - தேவாரம் -சங்கு உலாம் முன்கைத் தையல்  (திருக்கோடி (கோடிக்கரை))  
79 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள் எருக்கு அரவம் விரவும்  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
80 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானம் சேர் மதி சூடிய  (திருஅன்பில் ஆலந்துறை)  
81 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  (திருப்பாண்டிக்கொடுமுடி)  
82 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ட மா மலர் கொண்டு  (திருவான்மியூர்)  
83 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
84 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)  
85 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  (திருச்சிராப்பள்ளி)  
86 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  (திருவாட்போக்கி (ரத்னகிரி))  
87 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
88 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருகல் ஆம், தவம்; பேதைமை  (திருமருகல்)  
89 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
90 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் வீணையும், மாலை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
91 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏ இலானை, என் இச்சை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
92 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை)  
93 திருநாவுக்கரசர் - தேவாரம் -காசனை, கனலை, கதிர் மா  (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை)  
94 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  (தொழற்பாலதே திருக்குறுந்தொகை)  
95 திருநாவுக்கரசர் - தேவாரம் -புக்கு அணைந்து புரிந்து அலர்  (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை)  
96 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் உள்ளத் திரள் புன்சடையின்  (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை)  
97 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை)  
98 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு அலைத்தது ஓர் மேனி,  (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை)  
99 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாவமும் பழி பற்று அற  (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை)  
100 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)  

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  
பண் - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

[1]
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர்,
சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ-
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்,
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!

[2]
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர்,
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம்,
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!

[3]
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

[4]
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்
நான் நிலாவி இருப்பன், என் நாதனை;
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.

[5]
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும்
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான், செறு காலனே.

[6]
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார், இளையார், விடம் உண்ட எம்
அருத்தனார், அடியாரை அறிவரே.

[7]
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.

[8]
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.

[9]
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும், திரிந்தும், காண வல்லரோ-
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து-
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?

[10]
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்,
சதுரன், சிற்றம்பலவன், திருமலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை,
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

[1]
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை,
மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை,
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ?

[2]
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி,
இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்,
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை,
எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

[3]
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற
தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?

[4]
பித்தனை, பெருங்காடு அரங்கா உடை
முத்தனை, முளைவெண் மதி சூடியை,
சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற
அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?

[5]
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?

[6]
மை கொள் கண்டன், எண் தோளன், முக்கண்ணினன்,
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்,
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை, அடியேன் மறந்து உய்வனோ?

[7]
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை,
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?

[8]
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை,
வார் உலாம் முலை மங்கை மணாளனை,
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,
ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?

[9]
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை,
பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  
பண் - திருக்குறுந்தொகை   (திருநெல்வாயில் அரத்துறை )

கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[1]
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை,
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

[2]
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[3]
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா
இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[4]
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர்
மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய
கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[5]
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை,
விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[6]
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

[7]
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.

[8]
காழியானை, கன விடை ஊரும் மெய்
வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.

[9]
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.004  
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[1]
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[2]
மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சித்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[3]
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[4]
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[5]
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?

[6]
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[7]
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?

[8]
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[9]
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.005  
பட்டி ஏறு உகந்து ஏறி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

[1]
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;
சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.

[2]
பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
நல்லஆயின நம்மை அடையுமே.

[3]
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

[4]
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

[5]
கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,
அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.

[6]
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

[7]
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.

[8]
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
கந்தமாமலர் சூடும் கருத்தனே.

[9]
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.006  
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,
செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,
அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே.

[1]
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்,
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்,
படையின் நேர் தடங்கண் உமை பாகமா
அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.

[2]
விண்ட வெண்தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்;
துண்டவெண்பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.

[3]
விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி
கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்;
உடையும் சீரை; உறைவது காட்டுஇடை;
அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.

[4]
துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.

[5]
பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா,
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே,
சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின்
அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.

[6]
மட்டு வார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்-
கட்டுவாங்கம், கனல், மழு, மான் தனோடு,
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே.

[7]
தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.

[8]
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்;
கொண்ட கோவண ஆடையன்கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே.

[9]
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.007  
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,
அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.

[1]
எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!-
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே?

[2]
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.

[3]
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்,
என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று,
இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.

[4]
முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்,
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர்,
முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை
அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!

[5]
எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்;
எம்மை யாரும் இது செய வல்லரே?
அம்மை யார், எனக்கு? என்று என்று அரற்றினேற்கு
அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.

[6]
தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,-
செண்டு அது ஆடிய தேவரகண்டனை,
கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க்
கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!

[7]
இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்;
அவணம் அன்று எனில், ஆரூர் அரன் எனும்;
பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள்,
தவனி ஆயின ஆறு, என் தன் தையலே!

[8]
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்,
கார் ஒத்த(ம்) மிடற்றர், கனல் வாய் அரா-
ஆரத்தர், உறையும்(ம்) அணி ஆரூரைத்
தூரத்தே தொழுவார் வினை தூளியே.

[9]
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்:
வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன்,
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!

[10]
விண்ட மா மலர்மேல் உறைவானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன்தன் ஆரூர் அடி தொழப்
பண்டை வல்வினை நில்லா, பறையுமே.

[11]
மை உலாவிய கண்டத்தன், அண்டத்தன்,
கை உலாவிய சூலத்தன், கண்ணுதல்,
ஐயன், ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யல் ஆம்; அல்லல் ஒன்று இலை; காண்மினே!

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.008  
பாறு அலைத்த படுவெண் தலையினன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.

[1]
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்;
அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.

[2]
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்,
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.

[3]
வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்;
சோதி வெண்பிறை துன்று சடைக்கு அணி
நாதர்; நீதியினால் அடியார் தமக்கு
ஆதி ஆகி நின்றார்-அன்னியூரரே.

[4]
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்;
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

[5]
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்;
கந்தமாமலர் சூடும் கருத்தினர்;
சிந்தை ஆர் சிவனார்; செய்யதீவண்ணர்;
அந்தணாளர் கண்டீர்-அன்னியூரரே.

[6]
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்-
வானை; வானவர்தாங்கள் வணங்கவே,
தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா,
ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.

[7]
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி;
மேலைவானவர் வந்து விரும்பிய,
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே,
ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.

[8]
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த்
திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்;
கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு
அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

[9]
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்-
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.009  
ஓதம் மால் கடல் பரவி  
பண் - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

[1]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை
நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.

[2]
புன்னை ஞாழல் புறணி அருகுஎலாம்,
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ!
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச்
சின்னவேடம் உகப்பது செல்வமே.

[3]
அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.

[4]
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்,
மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ!
தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?

[5]
துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ!
பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

[6]
திருவினார் செல்வம் மல்கு விழா அணி,
மருவினார் வலம்கொள், மறைக்காடரோ!
உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய்,
மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.

[7]
சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ!
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?

[8]
குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை
இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்;
இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  
பண் - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[1]
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ!
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்!
நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!

[2]
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ!
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!
சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!

[3]
அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

[4]
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!
விலை இல் மா மணிவண்ண உருவரோ!-
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!

[5]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

[6]
வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ!
அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ!
எந்தை!-நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக் கதவம் பிணை நீக்குமே!

[7]
ஆறு சூடும் அணி மறைக்காடரோ!
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ!
ஏறு அது ஏறிய எம்பெருமான்!-இந்த
மாறு இலாக் கதவம் வலி நீக்குமே!

[8]
சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ!
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ!
அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ!
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!

[9]
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[10]
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!
சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.011  
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

[1]
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே.

[2]
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,-
நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே!

[3]
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடை இடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.

[4]
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,
செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர்,
எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?

[5]
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

[6]
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன்,
சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன்,
விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர்,
இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.

[7]
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்,
கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

[8]
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர்,
பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே;
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்,
ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[9]
கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.012  
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.

[1]
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.

[2]
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்;
வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்;
நினைய நின்றவன், ஈசனையே எனா;-
வினை இலார் தொழும் வீழிமிழலையே.

[3]
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்,
பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர்
வேடத்தார், தொழும் வீழிமிழலையே.

[4]
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.

[5]
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்!
தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்:
மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!

[6]
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய
நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத்
தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்;
வீரன் வீழிமிழலை விகிர்தனே.

[7]
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை
நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே!

[8]
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி;
காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்;
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்;
மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.

[9]
பாலையாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்,
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும், வீழிமிழலையே!

[10]
மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக்
கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும்,
மிழலையான் அடி வாழ்க! என, விட்டதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.013  
என் பொனே! இமையோர் தொழு  
பண் - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;
செம்பொனே! திரு வீழிமிழலையுள்
அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!

[1]
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,-
விண் உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!

[2]
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே!
காலமே! கருத்தே! கருத்தால்-தொழும்
சீலமே! திரு வீழிமிழலையுள்
கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!

[3]
முத்தனே! முதல்வா! முகிழும் முளை
ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய
சித்தனே! திரு வீழிமிழலையுள்
அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

[4]
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற
திருவனே! திரு வீழிமிழலையுள்
குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!

[5]
காத்தனே, பொழில் ஏழையும்! காதலால்
ஆத்தனே, அமரர்க்கு! அயன் தன் தலை
சேர்த்தனே! திரு வீழிமிழலையுள்
கூத்தனே! அடியேனைக் குறிக்கொளே!

[6]
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவரும்(ம்) உணராதது ஓர்
வேதியா! விகிர்தா! திரு வீழியுள்
ஆதியே!-அடியேனைக் குறிக்கொளே!

[7]
பழகி நின் அடி சூடிய பாலனைக்
கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய
அழகனே! அணி வீழிமிழலையுள்
குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!

[8]
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு
உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்;
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!

[9]
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே! திரு வீழிமிழலையுள்
அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.014  
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.

[1]
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.

[2]
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தைபிரான், இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே.

[3]
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்,
அம்மையே பிறவித்துயர் நீத்திடும்,
எம்மை ஆளும், இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே.

[4]
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,
எண் திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

[5]
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

[6]
விண் உளாரும் விரும்பப்படுபவர்;
மண் உளாரும் மதிக்கப்படுபவர்;
எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை
நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.

[7]
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார்,
கந்தமாலைகள் சூடும் கருத்தனார்,
எந்தை, என் இடை மருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே.

[8]
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[9]
கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,
பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும்,
தனி முடீ கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.

[10]
முற்றிலா மதி சூடும் முதல்வனார்;
ஒற்றினார், மலையால் அரக்கன் முடி;
எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.015  
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம்,
இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

[1]
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை,
புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை,
எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை,
நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.

[2]
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

[3]
துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு
அணையல் ஆவது எமக்கு அரிதே! எனா,
இணை இலா இடைமா மருதில்(ல்) எழு
பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.

[4]
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி;
விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி;
மொண்ணை மா மருதா! என்று என் மொய்குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.

[5]
மங்கை காணக் கொடார், மணமாலையை;
கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை;
நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே?

[6]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.016  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பேரெயில் )

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

[1]
கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும்,
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும்,
தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே.

[2]
சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை
விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி
எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

[3]
செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள்
உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

[4]
மற்றையார் அறியார்; மழுவாளினார்;
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச்
சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர்-பேரெயிலாளரே.

[5]
திருக்கு வார்குழல் செல்வன சேவடி-
இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார்
சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார் அவர், பேரெயிலாளரே.

[6]
முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்-
தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்;
என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்;
பின்னையார் அவர்-பேரெயிலாளரே.

[7]
உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு
இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே.

[8]
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய,
வார் உலாம் வனமென்முலையாளொடும்,
பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.

[9]
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்;
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்;
மாணியாய் மண் அளந்தவன், நான்முகன்,
பேணியார் அவர் பேரெயிலாளரே.

[10]
மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம்
சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு,
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.017  
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)

முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[1]
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;
எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்)
அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.

[2]
காற்றினை; கனலை; கதிர் மா மணி
நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும்,
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை,
வீற்றினை;-நெருநல் கண்ட வெண்ணியே.

[3]
நல்லனை, திகழ் நால்மறைஓதியை,
சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர்
கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[4]
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை,
அடரும் சென்னியில் வைத்த அமுதனை,
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை,
இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.

[5]
பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[6]
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல்
நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[7]
சடையனை; சரி கோவண ஆடை கொண்டு
உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு; பாய்தரும்
விடையனை;-நெருநல் கண்ட வெண்ணியே.

[8]
பொருப்பனை, புனலாளொடு புன்சடை
அருப்பனை, இளந்திங்கள் அம் கண்ணியான்
பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்
விருப்பனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[9]
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்;
காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே.

[10]
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்,
சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத்
தலையினால்-தொழுவார் வினை தாவுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.018  
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பந்துறை (குளித்தலை) )

முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.

[1]
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும்,
முனகு தீரத் தொழுது எழுமின்களோ!
கனகப்புன் சடையான் கடம்பந்துறை
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.

[2]
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான், கடம்பந்துறை,
சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!

[3]
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை-
வண்ண நல் மலரான், பல தேவரும்,
கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை
நண்ண, நம் வினை ஆயின நாசமே.

[4]
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ!
கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!

[5]
நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப்
பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ!
கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை,
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.

[6]
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து
புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;
கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை
உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!

[7]
பூ மென்கோதை உமை ஒருபாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்!
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.

[8]
பார் அணங்கி வணங்கிப் பணி செய
நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர்
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே

[9]
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட!
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்;
காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.019  
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும்
சொல வலான்; சுழலும் தடுமாற்றமும்
அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக்
கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

[2]
பொய் தொழாது, புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா,
வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர்
கைதொழா எழுமின், கரக்கோயிலே!

[3]
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே!
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே;
எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்-
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!

[4]
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன்,
புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான், கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.

[5]
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்-
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[6]
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை
மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[7]
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.

[8]
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்
தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே.

[9]
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன்,
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[10]
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,
திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.020  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர்
கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்;
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும்
மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

[2]
இல்லக் கோலமும், இந்த இளமையும்,
அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே!
ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே!

[3]
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவு இடம்-
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[4]
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்-
பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும்,
தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[5]
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்-
கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை,
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[6]
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி
வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது-
கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக்
களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[7]
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்-
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்,
கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.

[8]
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்-
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்,
கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[9]
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன்
உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற,
இரக்கம் இன்றி இறை விரலால்-தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.021  
என்னில் ஆரும் எனக்கு இனியார்  
பண் - திருக்குறுந்தொகை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்;
என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.

[1]
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால்
கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ?
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே,

[2]
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன்
புனலும், கொன்றையும், சூடும் புரிசடை;
அனலும், சூலமும், மான்மறி, கையினர்
எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.

[3]
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை;
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

[4]
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்;
மன்னவன்; மதி அம் மறை ஓதியான்;
முன்னம் அன்னவன் சேரலன், பூழியான்,
இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.

[5]
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்;
அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை;
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

[6]
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்
கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள்
படைக்கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.

[7]
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்,
எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.

[8]
விரியும் தண் இளவேனில் வெண்பிறை
புரியும் காமனை வேவ, புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.!

[9]
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடிபத்து உடையான் தனைக்
கனிய ஊன்றிய காரணம் என்கொலோ,
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.022  
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  
பண் - திருக்குறுந்தொகை   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)

பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு
ஆவணத்து உடையான், அடியார்களை;-
தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர்
கோவணத்து உடையான், குடமூக்கிலே.

[1]
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்,
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!-
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று
கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.

[2]
நங்கையாள் உமையாள் உறை நாதனார்-
அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக்
கங்கையாள் அவள், கன்னி எனப்படும்
கொங்கையாள், உறையும் குடமூக்கிலே.

[3]
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்,
ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை-
சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்-
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

[4]
நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே!
வக்கரை உறைவானை, வணங்கு, நீ!-
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்,
கொக்கரை உடையான், குடமூக்கிலே.

[5]
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்!
பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-!
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம்
குறவனார் உறையும் குடமூக்கிலே.

[6]
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ,
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!-
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக்
கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.

[7]
காமியம் செய்து காலம் கழியாதே,
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!-
சாமியோடு, சர(ச்) சுவதி அவள்,
கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.

[8]
சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!-
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே.

[9]
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின்
கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.023  
கொடுங் கண் வெண்தலை கொண்டு,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)

கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

[1]
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை
நீதியே கொளப்பாலது?-நின்றியூர்
வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய்,
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.

[2]
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச்
சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர்
நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

[3]
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,
மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம்
நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

[4]
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்,
இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ?
நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப்
பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!

[5]
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை!
நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில்,
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

[6]
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலனால்; இது என்கொலோ?
நின்றியூர் பதி ஆக நிலாயவன்,
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.

[7]
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்,
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.

[8]
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும்
நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ!
இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

[9]
எளியனா மொழியா இலங்கைக்கு இறை,
களியினால் கயிலாயம் எடுத்தவன்,
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால்-தொழுவார் வினை அல்குமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.024  
ஒற்றி ஊரும் ஒளி மதி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

[1]
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள்
ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்-
காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர்
ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.

[2]
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்,
ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி!
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.

[3]
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்-
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.

[4]
புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு
பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.

[5]
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்-
மாது தாழ்சடை வைத்த மணாளனார்;
ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[6]
பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும்,
கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும்,
உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர்
நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!

[7]
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று;
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது;
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று;
ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.

[8]
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர்,
சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர்,
உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.

[9]
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம்,
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்,
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.025  
முந்தி மூ எயில் எய்த  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)

முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்-
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.

[1]
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்,
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்,
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்,
படர்ந்த நாகத்தர்-பாசூர் அடிகளே.

[2]
நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்,
காறு கண்டத்தர், கையது ஓர் சூலத்தர்,
பாறின் ஓட்டினர்-பாசூர் அடிகளே.

[3]
வெற்றியூர் உறை வேதியர் ஆவர், நல்
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார்,
நெற்றிக்கண்ணினர், நீள் அரவம் தனைப்
பற்றி ஆட்டுவர்-பாசூர் அடிகளே.

[4]
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்,-
துட்டரேல், அறியேன், இவர் சூழ்ச்சிமை;-
பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.

[5]
பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம்
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,-
சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்!
பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே.

[6]
கட்டிவிட்ட சடையர், கபாலியர்,-
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ் அவர்
இட்டமா அறியேன், இவர் செய்வன-
பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.

[7]
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்,
காதில் வெண் குழை வைத்த கபாலியார்,
நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்-
பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே.

[8]
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர்,
ஓம்பல் மூதெருது ஏறும் ஒருவனார்,
தேம்பல் வெண்மதி சூடுவர், தீயது ஓர்
பாம்பும் ஆட்டுவர்-பாசூர் அடிகளே.

[9]
மாலினோடு மறையவன் தானும் ஆய்,
மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்;
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப்
பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே.

[10]
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்;
பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.026  
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவன்னியூர் )

காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

[1]
செங்கண் நாகம் அரையது; தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்;
கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்;
மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.

[2]
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

[3]
இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்;
மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை-
வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.

[4]
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்;
கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்;
மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.

[5]
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா
வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.

[6]
குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி
இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்;
வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும்
வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.

[7]
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்-
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.

[8]
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா,
விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட,
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.027  
சிந்தை வாய்தல் உளான், வந்து;  
பண் - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

[1]
பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி;
போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும்,
ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.

[2]
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான்,
துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து-
அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.

[3]
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்-
அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்;
பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்
அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.

[4]
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்;
அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும்
கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம்
அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.

[5]
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர்,
மலரும் போதுகளால் பணிய, சிலர்;
இலரும், போதும் இலாததும் அன்றியும்;
அலரும் போதும் அணியும் ஐயாறரே.

[6]
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக்
கங்கை, மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை, மாலை மதியமும், கண்ணியும்,
அங்கமாலையும், சூடும் ஐயாறரே.

[7]
முன்னை ஆறு முயன்று எழுவீர்; எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்!
மன் ஐ ஆறு மருவிய மாதவன்
தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.

[8]
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
வானை ஆறு வளாயது காண்மினோ!
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.

[9]
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று,
அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே,
அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.028  
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[1]
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர்
நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.

[2]
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,
அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும்,
பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும்,
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[3]
இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்,
அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[4]
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்,
மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும்,
அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[5]
இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி
அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[6]
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்,
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்,
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்,
அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[7]
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்,
வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[8]
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்,
எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும்,
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்,
ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[9]
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.029  
நிறைக்க வாலியள் அல்லள், இந்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

[1]
தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை,
அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.

[2]
பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே! என்று சொல்லுமே.

[3]
கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்;
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்
ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!

[4]
கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,
பருகு பால் அமுதே எனும் பண்பினன்,
அருகு சென்று இவள், ஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே.

[5]
குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும்,
தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்;
அழகன்; ஆவடுதண்துறையா! எனக்
கழலும், கைவளை காரிகையாளுக்கே.

[6]
பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்
தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!

[7]
பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன் என்னுமே.

[8]
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;
ஐயன்; ஆவடுதண்துறையா! என,
கையில் வெள்வளையும் கழல்கின்றதே.

[9]
பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;
அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை
நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.030  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.

[1]
மூடினார், களியானையின் ஈர் உரி;
பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;
சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.

[2]
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்;
நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்;
சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்;
இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.

[3]
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர்,
என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;
அன்பராய் இருப்பாரை அறிவரே.

[4]
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!

[5]
நல்ல நால்மறை ஓதிய நம்பனை,
பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை,
தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை,
வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!

[6]
நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை;
பருப்பதம் மதயானை உரித்தவன்,
திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.

[7]
எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்,
விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.

[8]
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி;
திருப் பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே.

[9]
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.

[10]
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.031  
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்;
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.

[1]
திருகு சிந்தையைத் தீர்த்து, செம்மை செய்து,
பருகி ஊறலை, பற்றிப் பதம் அறிந்து,
உருகி, நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
அருகு நின்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

[2]
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர்,
இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்!
என் பொன், ஈசன், இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.

[3]
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார், வினை
காவாய்! என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
ஆவா! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

[4]
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும்
வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற
நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்,
அஞ்சல்! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

[5]
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே;
படைகள் போல் வரும், பஞ்சமா பூதங்கள்;
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம்
அடைய நின்றிடும், ஆனைக்கா அண்ணலே.

[6]
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம், கழல் அடி
தொழுது, கைகளால்-தூ மலர் தூவி நின்று,
அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.

[7]
உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்!
தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே!
இருள் அறுத்து நின்று, ஈசன் என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.

[8]
நேசம் ஆகி நினை, மட நெஞ்சமே!
நாசம் ஆய குலநலம் சுற்றங்கள்
பாசம் அற்று, பராபர ஆனந்த
ஆசை உற்றிடும், ஆனைக்கா அண்ணலே.

[9]
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட, கெழுவினான்,
பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர்
ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.032  
கொடி கொள் செல்வ விழாக்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)

கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக்
கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார்,
பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர்
அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[1]
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப்
பார்த்தனோடு படை தொடும் ஆகிலும்,
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி(ந்) நகர்த்
தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[2]
மாதினை மதித்தான், ஒருபாகமா;
காதலால் கரந்தான், சடைக் கங்கையை;
பூதநாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு
ஆதி; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[3]
மூவனாய், முதல் ஆய், இவ்வுலகு எலாம்
காவனாய், கடுங் காலனைக் காய்ந்தவன்;
பூவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்த்
தேவன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[4]
செம்பொனே ஒக்கும் மேனியன்; தேசத்தில்
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்,
பொன் பொன்னார் செல்வப் பூந்துருத்தி(ந்) நகர்
நம்பன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[5]
வல்லம் பேசி வலிசெய் மூன்று ஊரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும்-பூந்துருத்தி(ந்) நகர்ச்
செல்வன்; சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[6]
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்தன் ஆகிலும், பூந்துருத்தி(ந்) நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!

[7]
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான்,
பொருத நீர் வரு பூந்துருத்தி(ந்) நகர்ச்
சதுரன், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[8]
செதுகு அறா மனத்தார் புறம் கூறினும்,
கொதுகு அறாக் கண்ணின் நோன்பிகள் கூறினும்,
பொதுவின் நாயகன் பூந்துருத்தி(ந்) நகர்க்கு
அதிபன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[9]
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப்
பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம்
பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப்
படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.033  
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  
பண் - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[1]
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை;
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை;
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[2]
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற,
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[3]
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும், நின்மலனே என்றும்,
சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[4]
ஆட்டினாய், அடியேன் வினை ஆயின
ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!

[5]
பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப்
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்!
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத்
தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!

[6]
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்;
ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும்,
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

[7]
பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்?
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்?
சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!

[8]
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்-
பள்ளியான், அறியாத பரிசு எலாம்
சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!

[9]
மிண்டரோடு விரவியும் வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ
தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!

[10]
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை
ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான்,
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.034  
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன்,
நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.

[1]
இரவனை, இடு வெண்தலை ஏந்தியை,
பரவனை, படையார் மதில் மூன்றையும்
நிரவனை, நிலைஆன நெய்த்தானனை,
குரவனை, தொழுவார் கொடிவாணரே.

[2]
ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள்
கான் இடை நடம் ஆடுவர்; காண்மினோ!
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வான் இடைத் தொழுவார் வலிவாணரே.

[3]
விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்
கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத்
தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.

[4]
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்,
நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத்
தம் கையால்-தொழுவார் தலைவாணரே.

[5]
சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள்
நட்டம் ஆடுவர், நள் இருள் பேயொடே;
சிட்டர், வானவர், தேரும் நெய்த்தானனை
இட்டம் ஆய்த் தொழுவார் இன்பவாணரே.

[6]
கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்
கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ!
தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.

[7]
உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை
பற்றி ஆடு அரவோடும் சடைப் பெய்தான்,
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனைச்
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே.

[8]
மாலொடும், மறை ஓதிய நான்முகன்,
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்;
சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே.

[9]
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.035  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

[1]
வையம் வந்து வணங்கி வலம் கொளும்
ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்;
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.

[2]
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்;
எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!

[3]
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட,
வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான்,
தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.

[4]
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர்
கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்-
பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை
மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.

[5]
மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர்
சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான்,
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்,
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே.

[6]
மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்;
பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;-
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கண் நின்று தலை வணங்கார்களே.

[7]
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவார் அலர், தீவினையாளர்கள்;
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான், உமையாளொடும் கூடவே.

[8]
சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்-
தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான்,
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை,
எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?

[9]
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,
பங்கன், என்றும் பழனன், உமையொடும்
தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.036  
கான் அறாத கடி பொழில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான்,
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி-
தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!

[1]
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச்
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே.

[2]
வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண் அலர்;
கீறு கோவண ஐ துகில் ஆடையர்;
தேறல் ஆவது ஒன்று அன்று, செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.

[3]
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து
இருவராய், இடுவார் கடை தேடுவார்,
தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்;
ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!

[4]
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான்,
ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்-
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்;
மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.

[5]
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவர் ஆவதன் காரணம் என்கொலோ-
திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார்,
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?

[6]
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர்,
மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர்
செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி
ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.

[7]
வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்;
அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.

[8]
நன்றி நாரணன், நான்முகன், என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச்
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்,
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.

[9]
திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால்
எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்;
அரிய வானம் அவர் அருள்செய்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.037  
மலைக் கொள் ஆனை மயக்கிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு, நெஞ்சமே!
கொலைக் கை யானையும் கொன்றிடும் ஆதலால்,
கலைக் கையானை கண்டீர்-கடவூரரே.

[1]
வெள்ளி மால்வரை போல்வது ஓர் ஆனையார்;
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்;
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்;
கள்ள ஆனைகண்டீர்- கடவூரரே.

[2]
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்;
ஊனை வேவ உருக்கிய ஆனையார்;
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

[3]
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்;
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்;
கோலம் ஆய கொழுஞ் சுடர் ஆனையார்;
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

[4]
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்;
வெளுத்த நீள்கொடி ஏறு உடை ஆனையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்;
களித்த ஆனைகண்டீர்-கடவூரரே.

[5]
விடுத்த மால்வரை விண் உற ஆனையார்;
தொடுத்த மால்வரை தூயது ஓர் ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுத்த ஆனைகண்டீர்-கடவூரரே.

[6]
மண் உளாரை மயக்கு உறும் ஆனையார்;
எண் உளார் பலர் ஏத்திடும் ஆனையார்;
விண் உளார் பலரும்(ம்) அறி ஆனையார்;
கண்ணுள் ஆனைகண்டீர்-கடவூரரே.

[7]
சினக்கும் செம்பவளத்திரள் ஆனையார்;
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்;
அனைக்கும் அன்பு உடையார் மனத்து ஆனையார்;
கனைக்கும் ஆனைகண்டீர்-கடவூரரே.

[8]
வேதம் ஆகிய வெஞ் சுடர் ஆனையார்;
நீதியால் நிலன் ஆகிய ஆனையார்;
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்;
காதல் ஆனைகண்டீர்-கடவூரரே.

[9]
நீண்ட மாலொடு நான்முகன்தானும் ஆய்,
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்;
காண்டல் ஆனைகண்டீர்-கடவூரரே.

[10]
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுக்கை ஆனைகண்டீர்-கடவூரரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.038  
குழை கொள் காதினர், கோவண  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

குழை கொள் காதினர், கோவண ஆடையர்,
உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்;
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.

[1]
உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்;
தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம்
பின்னை என்னார், பெருமான் அடிகளே.

[2]
சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர்,
ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர்,
காலகாலர்-கடவூர் மயானத்தார்;
மாலை மார்பர், பெருமான் அடிகளே.

[3]
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல்
மறவனார்-கடவூரின் மயானத்தார்;
அறவனார், அடியார் அடியார் தங்கள்
பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.

[4]
கத்து காளி கதம் தணிவித்தவர்,
மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்;
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு
பித்தர்காணும், பெருமான் அடிகளே.

[5]
எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர்,
கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்;
அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்;
பெரியர்காணும், பெருமான் அடிகளே.

[6]
அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை
கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும்
பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே.

[7]
அரவு கையினர், ஆதி புராணனார்-
மரவு சேர் கடவூரின் மயானத்தார்;
பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர்,
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.

[8]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.039  
கொள்ளும் காதன்மை பெய்து உறும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர்
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

[1]
சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்;
பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.

[2]
அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும்,
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

[3]
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்;
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்-
மஞ்சன், மா மயிலாடுதுறை உறை
அஞ்சலாள் உமைபங்கன், அருளிலே.

[4]
குறைவு இலோம், கொடு மானுட வாழ்க்கையால்-
கறை நிலாவிய கண்டன், எண் தோளினன்,
மறைவலான், மயிலாடுதுறை உறை
இறைவன், நீள் கழல் ஏத்தி இருக்கிலே.

[5]
நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்?
கலைகள் ஆய வல்லான், கயிலாயநல்
மலையன், மா மயிலாடுதுறையன், நம்
தலையின்மேலும் மனத்துளும் தங்கவே.

[6]
நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை-
ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன்
மாற்றினான், மயிலாடுதுறை என்று
போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?

[7]
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,
தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்?
நீல மா மயில் ஆடு துறையனே!
நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?

[8]
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
மணம் கொளச் சடை வைத்த மறையவன்,
வணங்கும் மா மயிலாடுதுறை அரன்,
அணங்கு ஓர்பால் கொண்ட கோலம் அழகிதே!

[9]
நீள் நிலா அரவச் சடை நேசனைப்
பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்;
வாள்நிலா மயிலாடுதுறைதனைக்
காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.

[10]
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும்
வரத்தினான், மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.040  
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

[1]
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான்,
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள்,
பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.

[2]
மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்;
குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ:
அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே!
இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்! என்னுமே.

[3]
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை
மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்;
கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம்
ஐயனே அறிவான், இவள் தன்மையே.

[4]
கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை,
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.

[5]
கங்கையைச் சடை வைத்து மலைமகள்-
நங்கையை உடனே வைத்த நாதனார்,
திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான்,
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.

[6]
ஐயனே! அழகே! அனல் ஏந்திய
கையனே! கறை சேர்தரு கண்டனே!
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே, விதியே, அருள்! என்னுமே.

[7]
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை,
முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை,
அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை, சென்று சேருமா செப்புமே!

[8]
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை-
அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன்
என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.041  
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)

உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.

[1]
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்;
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.

[2]
விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை,
கழுது துஞ்சு இருள் காட்டு அகத்து ஆடலான்;
பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர்தம் வினை தூளியே.

[3]
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே.

[4]
வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார்,
தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்
தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
யாழின் பாட்டை உகந்த அடிகளே.

[5]
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்-
மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான்,
கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம்
அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.

[6]
வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி-
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.

[7]
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்,
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்-
ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.

[8]
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான்,
வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன்,
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!

[9]
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே
அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம்,
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.042  
நன்று நாள்தொறும் நம் வினை  
பண் - திருக்குறுந்தொகை   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)

நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

[1]
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.

[2]
வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்;
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.

[3]
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை-
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வனார், திரு வேட்களம் கைதொழ
வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!

[4]
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி
நம்பன் ஆகிய நல் மணிகண்டனார்,
என் பொனார், உறை வேட்கள நன்நகர்
இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.

[5]
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

[6]
வட்ட மென் முலையாள் உமை பங்கனார்,
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,
சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!

[7]
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினைமினோ-
வட்டவார் முலையாள் உமை பங்கனார்,
சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!

[8]
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண்
சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.

[9]
சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற
வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.043  
கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)

கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்!
நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல்
சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.

[1]
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே,
துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ;
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்,
நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.

[2]
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்!
அணுக வேண்டில், அரன்நெறி ஆவது;
நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!

[3]
தமக்கு நல்லது; தம் உயிர் போயினால்,
இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்;
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி-
நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.

[4]
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம்,
நரைவிடை உடையான் இடம் நல்லமே
பரவுமின்! பணிமின்! பணிவாரொடே
விரவுமின்! விரவாரை விடுமினே!

[5]
அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும்,
வல்ல ஆறு சிவாய நம என்று,
நல்லம் மேவிய நாதன் அடி தொழ,
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

[6]
மாதராரொடு, மக்களும், சுற்றமும்,
பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே,
நாதன் மேவிய நல்லம் நகர் தொழப்
போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.

[7]
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர்,
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்;
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ,
நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!

[8]
காலம் ஆன கழிவதன் முன்னமே,
ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின்
மாலும், மா மலரானொடு, மாமறை-
நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!

[9]
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி,
நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால்
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.044  
மா மாத்து ஆகிய மால்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)

மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர், தாள் முடி;
ஆமாத்தூர் அரனே! அருளாய்! என்று என்று
ஏமாப்பு எய்திக் கண்டார், இறையானையே.

[1]
சந்தியானை, சமாதி செய்வார் தங்கள்
புந்தியானை, புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை, ஆமாத்தூர் அழகனை,
சிந்தியாதவர் தீவினையாளரே.

[2]
காமாத்தம்(ம்) எனும் கார்வலைப் பட்டு, நான்,
போம் ஆத்தை அறியாது, புலம்புவேன்;
ஆமாத்தூர் அரனேழு என்று அழைத்தலும்,
தேமாத்தீம் கனி போல, தித்திக்குமே.

[3]
பஞ்ச பூதவலையில் படுவதற்கு
அஞ்சி, நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன்; நினைவு எய்தலும்,
வஞ்ச ஆறுகள் வற்றின; காண்மினே!

[4]
குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்,
அரா மன்னும் சடையான், திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை,
நிராமயன் தனை, நாளும் நினைமினே!

[5]
பித்தனை, பெருந்தேவர் தொழப்படும்
அத்தனை, அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை, அடியேன் உள் முயறலும்,
பத்திவெள்ளம் பரந்தது; காண்மினே!

[6]
நீற்றின் ஆர் திரு மேனியன்; நேரிழை
கூற்றினான்; குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான்; அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே.

[7]
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை, ஆமாத்தூர்
சண்ணிப்பானை-தமர்க்கு அணித்து ஆயது ஓர்
கண்ணில் பாவை அன்னான், அவன்காண்மினே!

[8]
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உயக்-
கொண்ட நாதன், குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார், இடம் ஆமாத்தூர்; காண்மினே!

[9]
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை,
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!

[10]
விடலையாய் விலங்கல்(ல்) எடுத்தான் முடி
அடர ஓர்விரல் ஊன்றிய, ஆமாத்தூர்
இடம் அதாக் கொண்ட, ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக் கொண்டு இன்புற்று இருப்பனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.045  
மாது இயன்று மனைக்கு இரு!  
பண் - திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்,
நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்;
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத்
தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.

[1]
நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம்
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு
தக்கது அன்று, தமது பெருமைக்கே.

[2]
கெண்டை போல் நயனத்து இமவான் மகள்
வண்டு வார்குழலாள் உடன் ஆகவே,
துண்டவான்பிறைத் தோணிபுரவரைக்
கண்டு காமுறுகின்றனள், கன்னியே.

[3]
பாலையாழ் மொழியாள் அவள் தாழ்சடை-
மேலள் ஆவது கண்டனள்; விண் உறச்
சோலை ஆர்தரு தோணிபுரவர்க்குச்
சால நல்லள் ஆகின்றனள்-தையலே.

[4]
பண்ணின் நேர் மொழியாள், பலி இட்ட இப்
பெண்ணை, மால்கொடு பெய்வளை கொள்வது,
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
அண்ணலாருக்குச் சால அழகிதே?

[5]
முல்லை வெண் நகை மொய்குழலாய்! உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை, நீ; கனித்
தொல்லை ஆர் பொழில்-தோணிபுரவர்க்கே
நல்லை ஆயிடுகின்றனை-நங்கையே!

[6]
ஒன்றுதான் அறியார், உலகத்தவர்;
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்;
துன்று வார் பொழில்-தோணிபுரவர்தம்
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே.

[7]
உறவு பேய்க்கணம்; உண்பது வெண்தலை;
உறைவது ஈமம்; உடலில் ஓர் பெண் கொடி;
துறைகள் ஆர் கடல்-தோணிபுரத்து உறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே?

[8]
மாக யானை மருப்பு ஏர் முலையினர்
போக, யானும் அவள் புக்கதே புக,
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
ஆக, யானும் அவர்க்கு-இனி ஆள் அதே.

[9]
இட்டம் ஆயின செய்வாள், என் பெண் கொடி-
கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத்
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.046  
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

[1]
இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும்,
நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை,
புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.

[2]
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-
ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று
பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.

[3]
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக் காவல் பொழில் புகலூரனை,
என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.

[4]
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!

[5]
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
பண்டு நால்மறை ஓதிய பாடலன்;
தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார்-புகலூரரே.

[6]
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்;
தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது
தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.

[7]
பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர்
கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்;
வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப்
பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.

[8]
பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல்
தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா,
புன்னைத் தாது பொழில், புகலூரரை,
என் அத்தா! என, என் இடர் தீருமே.

[9]
மத்தனாய், மதியாது, மலைதனை
எத்தினான் திரள் தோள் முடிபத்து இற
ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.047  
பண்டு செய்த பழவினையின் பயன்  
பண் - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே!
வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!

[1]
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ,
இச்சையால் உமை நங்கை வழிபட,-
கொச்சையார் குறுகார்-செறி தீம்பொழில்
கச்சி ஏகம்பமே கைதொழுமினே!

[2]
ஊன் நிலாவி இயங்கி, உலகு எலாம்
தான் உலாவிய தன்மையர் ஆகிலும்,
வான் உலாவிய பாணி பிறங்க, வெங்-
கானில் ஆடுவர்-கச்சி ஏகம்பரே.

[3]
இமையா முக்கணர், என் நெஞ்சத்து உள்ளவர்,
தமை யாரும்(ம்) அறிவு ஒண்ணாத் தகைமையர்,
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்;
நமை ஆளும்(ம்) அவனைத் தொழுமின்களே!

[4]
மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்று, எனக்கு ஆய எம் புண்ணியன்;
கருந்தடங் கண்ணினாள் உமை கைதொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே.

[5]
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
அருளும் நன்மை தந்து, ஆய அரும்பொருள்;
சுருள் கொள் செஞ்சடையான்; கச்சி ஏகம்பம்
இருள் கெடச் சென்று கைதொழுது ஏத்துமே!

[6]
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள்
நோக்குவான்; நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே.

[7]
பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை,
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்,
வண்ணம் இ(ல்)லி, வடிவு வேறு ஆயவன்,
கண்ணில் உள் மணி-கச்சி ஏகம்பனே.

[8]
திருவின் நாயகன் செம் மலர்மேல் அயன்
வெருவ, நீண்ட விளங்கு ஒளிச்சோதியான்;
ஒருவனாய், உணர்வு ஆய், உணர்வு அல்லது ஓர்
கருவுள் நாயகன் கச்சி ஏகம்பனே.

[9]
இடுகுநுண் இடை, ஏந்து இளமென்முலை,
வடிவின், மாதர் திறம் மனம் வையன்மின்!
பொடி கொள் மேனியன், பூம்பொழில் கச்சியுள்
அடிகள், எம்மை அருந்துயர் தீர்ப்பரே.

[10]
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க(வ்), விரல் ஊன்றலும்,
கலங்கி, கச்சி ஏகம்பவோ! என்றலும்,
நலம் கொள் செல்வு அளித்தான், எங்கள் நாதனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.048  
பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  
பண் - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற
தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா!
ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?

[1]
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோடு
இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.

[2]
கறை கொள் கண்டத்து எண்தோள் இறை முக்கணன்,
மறை கொள் நாவினன், வானவர்க்கு ஆதியான்,
உறையும் பூம்பொழில் சூழ் கச்சி ஏகம்பம்
முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே.

[3]
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை
நெறிப்படுத்து, நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு உறும்(ம்) அமுது ஆயவன் ஏகம்பம்
குறிப்பினால், சென்று, கூடி, தொழுதுமே.

[4]
சிந்தையுள் சிவம் ஆய் நின்ற செம்மையோடு
அந்திஆய், அனல் ஆய், புனல், வானம் ஆய்,
புந்திஆய், புகுந்து உள்ளம் நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே!

[5]
சாக்கியத்தொடு மற்றும் சமண்படும்
பாக்கியம்(ம்) இலார் பாடு செலாது, உறப்
பூக் கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
நாக்கொடு ஏத்தி, நயந்து, தொழுதுமே.

[6]
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
ஆர்ப்பதன் முன், அணி அமரர்க்கு இறை
காப்பது ஆய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்பு அது ஆக, நாம் சென்று அடைந்து உய்துமே.

[7]
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர், நெஞ்சமே!
நீலமாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மா மலர்ப்பாதமே கும்பிடே!

[8]
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனை, சுடர் வெண்மழு ஏந்திய
கையனை, கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனை, தொழுவார்க்கு இல்லை, அல்லலே.

[9]
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை
நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து
இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம்,
தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.049  
பண் காட்டிப் படிஆய தன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

[1]
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,
ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார்,
வெள்ளியன், கரியன், பசு ஏறிய
தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!

[2]
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே,
வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ!
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்-
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!

[3]
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே;
பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம்
திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

[4]
பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன்
உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள்
கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!

[5]
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்;
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்;
சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்-
காடனார்; அடியே அடை, நெஞ்சமே!

[6]
தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்;
புரித்த புன் சடையான்; கயவர் புரம்
எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!

[7]
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன், ஆதி என்று(ச்) சிந்தை செய்யவே,
நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற
அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!

[8]
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!

[9]
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர்,
சேலை ஆடிய கண் உமை பங்கனார்,
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே.

[10]
இரா வணம் செய, மா மதி பற்று அவ், ஐ-
யிரா வணம்(ம்) உடையான் தனை உள்குமின்!
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திரு வெண்காடு அடைமினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.050  
எங்கே என்ன, இருந்த இடம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

எங்கே என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
அங்கே வந்து, அடையாளம் அருளினார்;
தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார்
அங்கே வா! என்று போனார்; அது என்கொலோ?

[1]
மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய் மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை, வா! என்று போனார்; அது என்கொலோ?

[2]
தஞ்சே கண்டேன்; தரிக்கிலாது, ஆர்? என்றேன்;
அஞ்சேல்! உன்னை அழைக்க வந்தேன் என்றார்;
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்;
வஞ்சே வல்லரே, வாய்மூர் அடிகளே?

[3]
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?

[4]
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க்
கள்ளியார் அவர் போல, கரந்ததே!

[5]
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?

[6]
பாடிப் பெற்ற பரிசில் பழங் காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்-
தேடிக்கொண்டு, திரு வாய்மூர்க்கே எனா,
ஓடிப் போந்து, இங்கு ஒளித்தஆறு என்கொலோ?

[7]
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்;
மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!

[8]
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும்,
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா,
புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?

[9]
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார், அரக்கன் தனை;
வேண்டிக் கொண்டேன், திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக் கொள்வன், நான் என்றலும், தோன்றுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.051  
நீல மா மணிகண்டத்தர்; நீள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)

நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கோல மா மதி கங்கையும் கூட்டினார்;
சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப்
பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.

[1]
கவள மா களிற்றின்(ன்)உரி போர்த்தவர்;
தவள-வெண்நகை மங்கை ஓர் பங்கினர்;
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவளமேனியர்- பாலைத்துறையரே.

[2]
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும்
பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ,
மன்னி நால்மறையோடு பல்கீதமும்
பன்னினார் அவர்-பாலைத்துறையரே.

[3]
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே,
ஆடினார் அழகு ஆகிய நால்மறை
பாடினார் அவர்-பாலைத்துறையரே.

[4]
சித்தர், கன்னியர், தேவர்கள், தானவர்,
பித்தர், நால்மறை வேதியர், பேணிய
அத்தனே! நமை ஆள் உடையாய்! எனும்
பத்தர்கட்கு அன்பர்-பாலைத்துறையரே.

[5]
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும்
மண்ணினார் மறவாது, சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர்-பாலைத்துறையரே.

[6]
குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை
விரவினார், பண் கெழுமிய வீணையும்;-
மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம்,
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே.

[7]
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்;
கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல்
படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.

[8]
மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை
நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல்
போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்-
பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே.

[9]
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்;
அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்;
செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்;
பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே.

[10]
உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை
நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும்
இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.052  
நல்லர்; நல்லது ஓர் நாகம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி
செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.

[1]
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி, வினையொடு
பாவம் ஆயின பற்று அறுவித்திடும்
தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.

[2]
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்;
ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்;
மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய
நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.

[3]
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்,
ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்
மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.

[4]
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அது கெட,
தண்டமா, விதாதாவின் தலை கொண்ட
செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

[5]
வம்பு பூங் குழல் மாது மறுக ஓர்
கம்ப யானை உரித்த கரத்தினர்;
செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை
நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.

[6]
மானை ஏந்திய கையினர்; மை அறு
ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான்
ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும்
தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.

[7]
கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்;
தழல் கொள் மேனியர்; சாந்த வெண் நீறு அணி
அழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர்போல்-குளிர் நாகேச்சுரவரே.

[8]
வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண்
சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

[9]
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே
சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்;
ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.053  
கோணல் மா மதி சூடி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

கோணல் மா மதி சூடி, ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[1]
பண்ணினை, பவளத்திரள் மா மணி
அண்ணலை, அமரர்தொழும் ஆதியை,
சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம்
நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[2]
உற்றவர்தம் உறு நோய் களைபவர்,
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்,
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[3]
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ,
வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம்
கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[4]
பல்லாரும் பலதேவர் பணிபவர்,
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்,
வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம்
கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[5]
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக்
கொண்டான்,-கோல மதியோடு அரவமும்;
விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[6]
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை-
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால்
கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.

[7]
நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன்,
ஆறு உடைப் புனல் பாய் கெடிலக் கரை
ஏறு உடைக் கொடியான்,-திரு வீரட்டம்
கூறில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

[8]
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம்,
கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?

[9]
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்;
நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால்,
பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[10]
வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம்
திரை ஆர்ந்த(ப்) புனல் பாய் கெடிலக் கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[11]
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே,
வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச்
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.054  
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி
மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்-
கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ-
ரட்டனார் அடி சேருமவருக்கே.

[1]
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்-
வாளமா இழியும் கெடிலக் கரை,
வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.

[2]
கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு,
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்-
தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக் கரை,
வெள்ளை நீறு அணி மேனி, வீரட்டரே.

[3]
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்-
வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.

[4]
தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்-
மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை,
வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.

[5]
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்-
பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.

[6]
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட,
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்-
வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை,
விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.

[7]
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்-
ஆலி வந்து இழியும் கெடிலக் கரை,
வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.

[8]
தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்-
மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை,
வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.

[9]
அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு,
அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து,
அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ-
ரட்டனார் அடி சேருமவர்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.055  
வீறு தான் உடை வெற்பன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்-
கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும்,
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும், அம்ம அழகிதே!

[1]
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்,
வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்,-
நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும், அம்ம அழகிதே!

[2]
வேடு தங்கிய வேடமும், வெண்தலை-
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்,-
நாது தங்கிய நாரையூரான் நடம்-
ஆடு பைங்கழல், அம்ம அழகிதே!

[3]
கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும்,
மிக்க வெண் தலை மாலை, விரிசடை
நக்கன் ஆகிலும், நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும், அம்ம அழகிதே!

[4]
வடி கொள் வெண்மழு மான் அமர் கைகளும்,
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும்,
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர்
அடிகள் தம் வடிவு, அம்ம அழகிதே!

[5]
சூலம் மல்கிய கையும், சுடரொடு,
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்,-
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு-
ஆல நீழலும், அம்ம அழகிதே!

[6]
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும்,
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்,
நண்ணினார் துயர் தீர்த்தலும், - நாரையூர்
அண்ணலார் செய்கை - அம்ம அழகிதே!

[7]
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை
மின் புரிந்த சடைமேல் விளங்கவே,
நன் பகல் பலி தேரினும், நாரையூர்
அன்பனுக்கு அது அம்ம அழகிதே!

[8]
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே,
இரவில் நின்று எரி ஆடலும்,-நீடுவான்
நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு-
அரவும் பூணுதல், அம்ம அழகிதே!

[9]
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும்
நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும், அம்ம அழகிதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.056  
மைக் கொள் கண் உமை  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத்
தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன்,
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி
நக்கனை, தொழ நம்வினை நாசமே.

[1]
முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை,
வித்தினை, விளைவு ஆய விகிர்தனை,
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே.

[2]
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர்
கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை,
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

[3]
பலவும் வல்வினை பாறும் பரிசினால்-
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை
குலவினான், குளிரும் பொழில் கோளிலி
நிலவினான்தனை,-நித்தல் நினைமினே!

[4]
அல்லல் ஆயின தீரும்; அழகிய
முல்லை வெண்முறுவல்(ல்) உமை அஞ்சவே,
கொல்லை யானை உரித்தவன், கோளிலிச்
செல்வன், சேவடி சென்று தொழுமினே!

[5]
ஆவின் பால் கண்டு அளவு இல் அருந்தவப்
பாலன் வேண்டலும், செல்! என்று பாற்கடல்
கூவினான், குளிரும் பொழில் கோளிலி
மேவினானை, தொழ வினை வீடுமே.

[6]
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்,
கூத்தனார் உறையும் திருக்கோளிலி
ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே.

[7]
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்!
காலம் வந்து கடை முடியாமுனம்
கோல வார் பொழில், கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே!

[8]
கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு அது
தேடி, நீர், திரியாதே சிவகதி
கூடல் ஆம்; திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின்(ன்), இரவோடு பகலுமே!

[9]
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை
அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள்
கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ,
விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.057  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே, அடியேனை மறவலே!

[1]
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை,
மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,-
பண் உளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!

[2]
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்;
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்;
ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே,
கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!

[3]
விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில்,
பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி-
அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக்
குழகனார் திருப்பாதமே கூறுமே!

[4]
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை,
காலன் ஆகிய காலற்கும் காலனை,-
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச்
சூலபாணிதன் பாதம் தொழுமினே!

[5]
காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்-
நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை,
ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி
ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே!

[6]
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை,
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே!

[7]
நீதியால் - தொழுவார்கள் தலைவனை,
வாதை ஆன விடுக்கும் மணியினை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேதநாயகன் பாதம் விரும்புமே!

[8]
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப்
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை,
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி
நீலகண்டனை, நித்தல் நினைமினே!

[9]
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி
அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.058  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)

தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!

[1]
மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.

[2]
குண்டரை, குணம் இல்லரை, கூறை இல்
மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை;
அண்டரை; பழையாறை வடதளிக்
கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே.

[3]
முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை,
கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்-
படையரை; பழையாறை வடதளி
உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.

[4]
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை,
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை, புகழத் துயர் வாடுமே.

[5]
நீதியைக் கெட நின்று அமணே உணும்
சாதியைக் கெடுமா செய்த சங்கரன்,
ஆதியை, பழையாறை வடதளிச்
சோதியை, தொழுவார் துயர் தீருமே.

[6]
திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்-
பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை,
அருள்-திறத்து அணி ஆறை வடதளித்
தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.

[7]
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண்
வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை
பாதனை, பழையாறை வடதளி
நாதனை, தொழ நம் வினை நாசமே.

[8]
வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா
ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன்(ன்) என வல்வினை வீடுமே.

[9]
செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல்,
எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய
அருத்தனை; பழையாறை வடதளித்
திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.059  
பொரும் ஆற்றின் படை வேண்டி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

பொரும் ஆற்றின் படை வேண்டி, நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு, வழிபடும்
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு
திரு மாற்பேறு தொழ, வினை தேயுமே.

[1]
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக்
கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல்
மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.

[2]
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான் எண்ணி,
அணி வண்ணத்து அலர்கொண்டு, அடி அர்ச்சித்த
மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
பணி வண்ணத்தவர்க்கு இல்லைஆம், பாவமே.

[3]
தீது அவை செய்து தீவினை வீழாதே,
காதல் செய்து கருத்தினில் நின்ற நல்
மா தவர் பயில் மாற்பேறு கைதொழப்
போதுமின்! வினை ஆயின போகுமே.

[4]
வார் கொள் மென்முலை மங்கை ஓர் பங்கினன்,
வார் கொள் நல்முரசம்(ம்) அறைய(வ்) அறை
வார் கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு-
வார்கள் மன்னுவர், பொன்னுலகத்திலே.

[5]
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
உண்டு; சொல்லுவன்; கேண்மின்: ஒளி கிளர்
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு
கண்டு கைதொழ, தீரும், கவலையே.

[6]
மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து
அழ வலார்களுக்கு, அன்புசெய்து இன்பொடும்
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு
தொழ வலார் தமக்கு, இல்லை, துயரமே.

[7]
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப்
பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம்
மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள் உடையார்களே.

[8]
வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங்
காடு நீடு உகந்து, ஆடிய கண்ணுதல்-
மாடம் நீடு உயரும்-திரு மாற்பேறு
பாடுவார் பெறுவார், பரலோகமே.

[9]
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத்
தருக்கினால் எடுத்தானைத் தகரவே
வருத்தி, ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
அருத்தியால்-தொழுவார்க்கு இல்லை, அல்லலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.060  
ஏதும் ஒன்றும் அறிவு இலர்  
பண் - திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.

[1]
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய், வினை போய் அற!
கச்ச மா விடம் உண்ட கண்டா! என,
வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.

[2]
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!
கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.

[3]
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்!
அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்;
பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர்
மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.

[4]
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்!
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்,
கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர்
மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.

[5]
ஈட்டும் மா நிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில்,
வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.

[6]
ஐயனே! அரனே! என்று அரற்றினால்,
உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே,
வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.

[7]
உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என,
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.

[8]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.061  
முத்து ஊரும் புனல் மொய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)

முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம்
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

[1]
பிறைக்கணிச் சடை எம்பெருமான் என்று-
கறைக் கணித்தவர் கண்ட வணக்கத்து ஆய்
உறக் கணித்து-உருகா மனத்தார்களைப்
புறக்கணித்திடும், புத்தூர்ப் புனிதனே.

[2]
அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு
புரிசை, நம் திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நன்நெறி தோன்றிடும்; காண்மினே!

[3]
வேதனை(ம்), மிகு வீணையில் மேவிய
கீதனை, கிளரும் நறுங்கொன்றை அம்-
போதனை, புனல் சூழ்ந்த புத்தூரனை,
நாதனை(ந்), நினைந்து என் மனம் நையுமே.

[4]
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய்,
திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய,
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!

[5]
பாம்பொடு(ம்) மதியும் படர் புன் சடைப்
பூம்புனலும் பொதிந்த புத்தூர் உளான்,
நாம் பணிந்து அடி போற்றிட, நாள்தொறும்
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே.

[6]
கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை
அனல் அங்கு எய்தி, நின்று, ஆடுவர்; பாடுவர்;
பினல் அம் செஞ்சடைமேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும்-புத்தூரரே.

[7]
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர்
ஏற்றினும்(ம்) இசைந்து ஏறுவர்; என்பொடு
நீற்றினை அணிவர்; நினைவுஆய்த் தமை,
போற்றி! என்பவர்க்கு அன்பர்-புத்தூரரே.

[8]
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும்
அன்னம் ஒப்பர், அலந்து அடைந்தார்க்கு எலாம்;
மின்னும் ஒப்பர், விரிசடை; மேனி செம்-
பொன்னும் ஒப்பர்-புத்தூர் எம் புனிதரே.

[9]
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல்,
பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல்
பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.062  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை)

ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர்
கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

[1]
யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை,
நாவின் நல் உரை ஆகிய நாதனை,
தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

[2]
அன்பனை, அடியார் இடர் நீக்கியை,
செம்பொனை, திகழும் திருக்கச்சி ஏ-
கம்பனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
நம்பனை, கண்டு நான் உய்யப்பெற்றெனே.

[3]
மா தனத்தை, மா தேவனை, மாறு இலாக்
கோதனத்தில் ஐந்து ஆடியை, வெண்குழைக்
காதனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
நாதனை, கண்டு நான் உய்யப் பெற்றெனே.

[4]
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து, என்னை ஆட்-
கொண்டு, நல்-திறம் காட்டிய கூத்தனை;
கண்டனை; கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
அண்டனை; கண்டு அருவினை அற்றெனே.

[5]
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை(ம்), மணவாளனை, மா மலர்க்
கந்த நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
எந்தை ஈசனை, கண்டு இனிது ஆயிற்றே.

[6]
உம்பரானை, உருத்திர மூர்த்தியை,
அம்பரானை, அமலனை, ஆதியை,
கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே.

[7]
மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள்
நேசம் ஆகிய நித்த மணாளனை,
பூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
ஈசனே! என, இன்பம் அது ஆயிற்றே.

[8]
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே,
கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்-
படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே.

[9]
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை,
திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.063  
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.

[1]
முத்தினை(ம்), மணியை, பவளத்து ஒளிர்-
தொத்தினை, சுடர்சோதியை, சோலை சூழ்
கொத்து அலர் குரங்காடுதுறை உறை
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே.

[2]
குளிர்புனல் குரங்காடுதுறையனை
தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி
ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே.

[3]
மணவன் காண்; மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண்; கலை ஞானிகள் காதல் எண்-
குணவன் காண்; குரங்காடுதுறைதனில்
அணவன் காண், அன்புசெய்யும் அடியர்க்கே.

[4]
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்;
காலத்தான் உயிர் போக்கிய காலினன்;
நீலத்து ஆர் மிடற்றான்; வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே.

[5]
ஆட்டினான், முன் அமணரோடு என்தனை;
பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை;
வீட்டினான், வினை; மெய் அடியாரொடும்
கூட்டினான் குரங்காடுதுறையனே.

[6]
மாத்தன்தான், மறையார் முறையால்; மறை-
ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே.

[7]
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்!
ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி
பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம்,
கூடுமின், குரங்காடுதுறையையே!

[8]
தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்;
அன்று அவ் அந்தகனை அயில்சூலத்தால்
கொன்றவன் குரங்காடுதுறையனே.

[9]
நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ,
பற்றும் தீவினை ஆயின பாறுமே.

[10]
கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை
எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல்
அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள்
கொடுத்தவன் குரங்காடுதுறையனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.064  
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்;
கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்-
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

[1]
கயிலை நல்மலை ஆளும் கபாலியை,
மயில் இயல் மலைமாதின் மணாளனை,
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.

[2]
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்-
தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்-
தாழம் பூமணம் நாறிய தாழ் பொழில்
கோழம்பா! என, கூடிய செல்வமே.

[3]
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;
கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

[4]
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர்
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்;
நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.

[5]
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-
வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில்
கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
ஆதி, பாதம் அடைய வல்லார்களே.

[6]
முன்னை நான் செய்த பாவம் முதல் அற,
பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது-
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.

[7]
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்-
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.

[8]
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி
பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை;
குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?

[9]
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய,
அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள் உடையார்களே.

[10]
துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப்
பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.065  
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பூவனூர் புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)

பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,
பாவம் ஆயின பாறிப் பறையவே,
தேவர்கோவினும் செல்வர்கள் ஆவரே.

[1]
என்னன், என் மனை, எந்தை, என் ஆர் உயிர்,
தன்னன், தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்;
இன்னன் என்று அறிவு ஒண்ணான், இயற்கையே!

[2]
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்!
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்;
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும், கழிவதன் முன்னமே!

[3]
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்,
தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான்,
மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை-
பூவனூர் புகுவார் வினை போகுமே.

[4]
புல்லம் ஊர்தி ஊர்-பூவனூர், பூம் புனல்
நல்லம், மூர்த்தி நல்லூர், நனிபள்ளி ஊர்,
தில்லை ஊர், திரு ஆரூர், தீக்காலிநல்-
வல்லம் ஊர் என, வல்வினை மாயுமே.

[5]
அனுசயப்பட்டு அது இது என்னாதே,
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி,
புனிதனை-பூவனூரனை- போற்றுவார்
மனிதரில்- தலைஆன மனிதரே.

[6]
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்;
வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர்
பாதி ஆனான்; பரந்த பெரும் படைப்
பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.

[7]
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில்
நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம்,
கோவலூர், குடவாயில், கொடுமுடி,
மூவலூரும்- முக்கண்ணன் ஊர்; காண்மினே!

[8]
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்-
பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான்,
தேவதேவன் திருநெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!

[9]
நாரண(ன்)னொடு, நான்முகன், இந்திரன்,
வாரணன், குமரன், வணங்கும் கழல்
பூரணன்திருப் பூவனூர் மேவிய
காரணன்(ன்); எனை ஆள் உடைக் காளையே.

[10]
மைக் கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும், பூவனூரன்(ன்) அடி
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்,
பக்கு, அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.066  
ஓதம் ஆர் கடலின் விடம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)

ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை,
மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை,
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[1]
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்,
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்
பயில்கிலார்சிலர் - பாவித்தொழும்பரே.

[2]
இளைய காலம் எம்மானை அடைகிலாத்
துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல்
வளையும் காலம், வலஞ்சுழி ஈசனைக்
களைக்கண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!

[3]
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்கு ஆய்க்
குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன்,
மறை கொள் நாவன், வலஞ்சுழி மேவிய
இறைவனை, இனி என்றுகொல் காண்பதே?

[4]
விண்டவர் புரம் மூன்றும் எரி கொளத்
திண் திறல் சிலையால் எரி செய்தவன்,
வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.

[5]
படம் கொள் பாம்பொடு பால்மதியம் சடை
அடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான்,
மடந்தை பாகன், வலஞ்சுழியான், அடி
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே.

[6]
நாக்கொண்டு(ப்) பரவும்(ம்) அடியார் வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்,
மாக் கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன்
ஏக் கொளப் புரம் மூன்று எரி ஆனவே.

[7]
தேடுவார், பிரமன் திருமால் அவர்;
ஆடு பாதம் அவரும் அறிகிலார்;
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.

[8]
கண் பனிக்கும்; கை கூப்பும்; கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்;
வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!

[9]
இலங்கை வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்,
மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழி
வலம் கொள்வார் அடி என் தலைமேலவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

[1]
பறப்பையும் பசுவும் படுத்துப் பல-
திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி,
கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!

[2]
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி,
சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.

[3]
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்,
செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

[4]
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி,
மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

[5]
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல்-துணை ஆவான் உறை பதி,
தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே.

[6]
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

[7]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.068  
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
தெள் ஆறாச் சிவசோதித்திரளினை,
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறா! என, நம் வினை நாசமே.

[1]
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார்
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்;
காரணக் கலைஞானக் கடவுளே.

[2]
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில்
சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு,
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.

[3]
மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்,
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.

[4]
உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்;
இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன்
நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்;
மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!

[5]
செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்;
நக்கர்-அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்;
வக்கரன்(ன்) உயிர் வவ்விய மாயற்குச்
சக்கரம்(ம்) அருள் செய்த சதுரரே.

[6]
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்;
விஞ்சையின் செல்வப் பாவைக்கு வேந்தனார்;
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்-
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே.

[7]
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின
சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,-
வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்;
நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.

[8]
பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும்,
பூம் பணைப் பொலிகின்ற புராணனும்,
தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்-
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.

[9]
இலங்கை மன்னன் இருபது தோள் இற
மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்,
நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும்
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)

மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர்,
கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!

[1]
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர்,
காலனார் வருதல் முன், கருவிலி,
கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[2]
பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர்,
மங்குமா நினையாதே, மலர்கொடு,
கங்கை சேர் சடையான்தன் கருவிலி,
கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[3]
வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!-
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்-
காடனார் உறைகின்ற கருவிலி,
கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[4]
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்!
பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக்
கையினான், உறைகின்ற கருவிலி,
கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[5]
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர்,
தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி,
காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி,
கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!

[6]
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா ஆறு செயப் புரியாது, நீர்,
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி,
கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!

[7]
பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு
உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர-
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி,
குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!

[8]
நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும்
எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ-
கம்பனார் உறைகின்ற கருவிலி,
கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!

[9]
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்,
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி,
கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.070  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)

கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

[1]
சுற்றமும், துணை நல் மடவாளொடு,
பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்;
குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.

[2]
மாடு தான் அது இல் எனின், மானுடர்
பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால்
கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப்
பாடுமின்! பரலோகத்து இருத்துமே.

[3]
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை-
பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச்
சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!

[4]
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து
ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன்,
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.

[5]
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை,
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை,
எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.

[6]
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர்,
செல்லுமா நினையாதே, கனை குரல்
கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை
வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.

[7]
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி,
மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.

[8]
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே
எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன்,
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப்
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.

[9]
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.071  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  
பண் - திருக்குறுந்தொகை   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!

[1]
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர்
பூதநாதன்; புலி அதள் ஆடையன்;
வேதநாதன் விசயமங்கை உளான்;
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.

[2]
கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில்
வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை-
யுள் இடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே.

[3]
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம்
அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி
விசையின் மங்கி விழுந்தனன், காலனே.

[4]
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள்
விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான்,
உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.

[5]
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை-
வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச்
செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை-
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.

[6]
கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி
வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை
நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.

[7]
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே.

[8]
வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!
வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான்,
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!

[9]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும்,
நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.072  
வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)

வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செத்தபோது, செறியார் பிரிவதே;
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

[1]
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்-
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்,
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

[2]
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு-
கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான்; அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே.

[3]
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்;
காலனார் உயிர் போக்கிய காலனே.

[4]
நேச நீலக்குடி அரனே! எனா
நீசராய், நெடுமால் செய்த மாயத்தால்,
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்,
நாசம் ஆனார், திரிபுரநாதரே.

[5]
கொன்றை சூடியை, குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே! எனீர்-
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்;
பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?

[6]
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால்,
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!

[7]
அழகியோம்; இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே,
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!

[8]
கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள்
பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்;
சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.

[9]
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால்
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும்
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.073  
தங்கு அலப்பிய தக்கன் பெரு  
பண் - திருக்குறுந்தொகை   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)

தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே.

[1]
காவிரி(ய்)யின் வடகரைக் காண்தகு
மா விரி(ய்)யும் பொழில் மங்கலக்குடித்
தே அரி(ய்)யும் பிரமனும் தேட ஒணாத்
தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே!

[2]
மங்கலக்குடி ஈசனை மாகாளி,
வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண் உளோர்,
சங்கு சக்கரதாரி, சதுமுகன்,
அங்கு அகத்தியனும்(ம்), அர்ச்சித்தார் அன்றே.

[3]
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி,
நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு,
அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!

[4]
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி-
செல்வம் மல்கு சிவநியமத்தராய்,
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ,
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.

[5]
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.

[6]
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன், அண்டர்கள் நாயகன்,
வேதநாயகன், வேதியர் நாயகன
பூதநாயகன், புண்ணியமூர்த்தியே.

[7]
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி,
விண்ட தாதையைத் தாள் அற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

[8]
கூசுவார் அலர், குண்டர், குணம் இலர்,
நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள்,
மாசர்பால்- மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க-உய்ந்தேன் அன்றே!

[9]
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன்,
தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து,
அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.074  
விரும்பி ஊறு விடேல், மட  
பண் - திருக்குறுந்தொகை   (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)

விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
கரும்பின் ஊறல் கண்டாய், கலந்தார்க்கு அவன்;-
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண்தலை
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[1]
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்-
நறுங்குழல் மடவாளொடு நாள்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[2]
மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை;
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்-
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[3]
நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம் இறை;
மறம் கொள் வேல்கண்ணி வாணுதல் பாகமா,
அறம் புரிந்து அருள்செய்த எம் அம்கணன்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[4]
நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடை, தூ மதி வைத்து, வான்
உறும் பொன்மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே.

[5]
கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்;
திறம்பி ஊர்வன மற்றும் பல உள;
குறும்பி ஊர்வது ஓர் கூட்டு அகத்து இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

[6]
மறந்தும், மற்று இது பேர் இடர்; நாள்தொறும்
திறம்பி, நீ நினையேல், மட நெஞ்சமே!
புறம் செய் கோலக் குரம்பையில் இட்டு, எனை
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே!

[7]
இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு,
துன்பமும்(ம்) உடனே வைத்த சோதியான்
அன்பனே, அரனே! என்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

[8]
கண் நிறைந்த கன பவளத்திரள்;
விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்;
உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.

[9]
நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்குழல் மடவாள் நடுக்கு எய்திட,
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
எறும்பியூர் மலை எம் இறை; காண்மினே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)

மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர்,
சரக்குக் காவி, திரிந்து அயராது, கால்
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக்
குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.

[1]
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா,
முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.

[2]
கை அனைத்தும் கலந்து எழு காவிரி,
செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

[3]
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனல் கரை,
கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே.

[4]
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட,
கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா
இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.

[5]
மேலை வானவரோடு, விரி கடல்
மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்-
பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.

[6]
ஆலநீழல் அமர்ந்த அழகனார்,
காலனை உதைகொண்ட கருத்தனார்,
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்-
பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே.

[7]
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார்,
அக்கு அரையர், எம் ஆதிபுராணனார்,
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனை, தொழ, நம் வினை நாசமே.

[8]
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர்,
கரிய கண்டன் கழல் அடி தன்னையே!
குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!

[9]
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி,
உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்-
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா;
வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.076  
திருவின் நாதனும், செம்மலர் மேல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)

திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை
உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில்
பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!

[1]
பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி,
உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்!
கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை,
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!

[2]
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்!
காயத்தே உளன், கானூர் முளையினை
வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!

[3]
குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண்
நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்:
அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன்
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.

[4]
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்!
சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

[5]
கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன்,
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை,
எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா
சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!

[6]
நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும்,
காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்;
சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை
ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.

[7]
ஓமத்தோடு அயன்மால் அறியா வணம்
வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள்,
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்;
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.

[8]
வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்-
தன்னை வீழத் தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

[1]
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!-
மின்னுவார் சடை வேத விழுப்பொருள்,
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.

[2]
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி,
இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்-
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.

[3]
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,
ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்!
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!

[4]
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்;
திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை
அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?

[5]
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்?
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்?
செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

[6]
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும்,
ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்?
சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை
அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

[7]
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ?
துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே!
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

[8]
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா;
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!

[9]
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)

சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

[1]
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்
ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும்
கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்:
பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.

[2]
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார்,
தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார்,
கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

[3]
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல்
ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால்,
கோமளஞ்சடைக் கோடிகாவா! என,
ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.

[4]
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும்,
நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல்,
கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால்
ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?

[5]
நாடி நாரணன், நான்முகன், வானவர்
தேடி ஏசறவும், தெரியாதது ஓர்
கோடிகாவனைக் கூறாத நாள் எலாம்
பாடிகாவலில் பட்டுக் கழியுமே.

[6]
வரங்களால் வரையை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர்,
குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என
இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.

[7]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.079  
வெள் எருக்கு அரவம் விரவும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்
புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்,
நள் இருப்பர், நரகக்குழியிலே.

[1]
மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க்
கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே,
போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர்,
சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!

[2]
அருமறையனை, ஆணொடு பெண்ணனை,
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை,
புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர்,
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

[3]
தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா
மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை,
பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.

[4]
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா
அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர்
பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர்
மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.

[5]
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை,
புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

[6]
கையினோடு கால் கட்டி, உமர் எலாம்,
ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர்,
பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர்,
மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!

[7]
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று,
மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே;
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!

[8]
அரக்கனார் தலைபத்தும் அழிதர
நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.080  
வானம் சேர் மதி சூடிய  
பண் - திருக்குறுந்தொகை   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)

வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை;
ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக்
கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே!

[1]
காரணத்தர், கருத்தர், கபாலியார்,
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
ஆரணப்பொருள், அன்பில் ஆலந்துறை,
நாரணற்கு அரியான் ஒரு நம்பியே.

[2]
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்,
அன்பிலானை, அம்மானை, அள் ஊறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே.

[3]
சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை-
பங்கனார் அடி பாவியேன், நான் உய;
அங்கணன், எந்தை, அன்பில் ஆலந்துறைச்
செங்கணார், அடிச் சேரவும் வல்லனே?

[4]
கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர்,
மிக்க(அ) அரக்கர் புரம் எரிசெய்தவர்,
அக்கு அரையினர், அன்பில் ஆலந்துறை
நக்க உரு(வ்) வரும், நம்மை அறிவரே.

[5]
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்;
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே.

[6]
பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும்,
உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே,
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே!

[7]
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா
அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!

[8]
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்-
கையன்மார் உரை கேளாது எழுமினோ!
ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.

[9]
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று
மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன்,
அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.081  
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)

சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,
அட்டமூர்த்தியை, ஆலநிழல் அமர்
பட்டனை, திருப் பாண்டிக்கொடுமுடி
நட்டனை, தொழ, நம் வினை நாசமே.

[1]
பிரமன் மால் அறியாத பெருமையன்,
தருமம் ஆகிய தத்துவன், எம்பிரான்,
பரமனார், உறை பாண்டிக்கொடுமுடி
கருமம் ஆகத் தொழு, மட நெஞ்சமே!

[2]
ஊசலாள் அல்லள்; ஒண்

[3]
தூண்டிய(ச்) சுடர் போல்-ஒக்கும் சோதியான்;
காண்டலும்(ம்) எளியான், அடியார்கட்கு;
பாண்டிக்கொடுமுடி மேய பரமனைக்
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்.

[4]
நெருக்கி, அம் முடி, நின்று இசை வானவர்
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திருக்கொடு(ம்)முடி என்றலும், தீவினைக்
கருக் கெடும்(ம்); இது கைகண்ட யோகமே.

[5]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.082  
விண்ட மா மலர் கொண்டு  
பண் - திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

விண்ட மா மலர் கொண்டு விரைந்து, நீர்,
அண்ட நாயகன்தன் அடி சூழ்மின்கள்!
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்,
வண்டு சேர் பொழில், வான்மியூர் ஈசனே.

[1]
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர்,
மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து
அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும்,
மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே.

[2]
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,
அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று,
எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல்,
வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

[3]
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன்
வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.

[4]
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை,
வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை,
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

[5]
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்;
பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று
அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல்,
வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

[6]
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர்,
சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர்,
வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.

[7]
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய்,
பாதி பெண் உருஆய பரமன் என்று
ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

[8]
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி
நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில்,
வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

[9]
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்
சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்;
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்,
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.083  
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்;
காணத் தான் இனியான் கடல் நாகைக்கா-
ரோணத்தான் என, நம் வினை ஓயுமே.

[1]
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை,
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை,
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை,
கண்டலும், வினை ஆன கழலுமே.

[2]
புனையும் மா மலர் கொண்டு, புரிசடை
நனையும் மா மலர் சூடிய நம்பனை,
கனையும் வார்கடல் நாகைக்காரோணனை,
நினையவே, வினை ஆயின நீங்குமே.

[3]
கொல்லை மால்விடை ஏறிய கோவினை,
எல்லி மாநடம் ஆடும் இறைவனை,
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை,
சொல்லவே, வினை ஆனவை சோருமே.

[4]
மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக்
கையனை, கடல் நாகைக்காரோணனை,
மை அனுக்கிய கண்டனை, வானவர்
ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

[5]
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை,
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை,
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை,
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[6]
சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை,
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை,
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை,
மனம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[7]
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,
எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனை,
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை,
சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.

[8]
கருவனை, கடல் நாகைக்காரோணனை,
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை,
ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த
செருவனை, தொழத் தீவினை தீருமே.

[9]
கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய, பாதம் அணைதர,
தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.084  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  
பண் - திருக்குறுந்தொகை   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)

மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

[1]
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்!
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

[2]
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே,
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!

[3]
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி
திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!

[4]
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும்,
அற்றபோது அணையார், அவர் என்று என்றே,
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!

[5]
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும்,
துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்;
கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.

[6]
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,
பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்!
கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம்
ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!

[7]
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,
சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்!
காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே!

[8]
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்
ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்!
அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!

[9]
எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன்,
கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  
பண் - திருக்குறுந்தொகை   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)

மட்டு வார்குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்;
கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும்
சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே.

[1]
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்,
அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள்,
பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.

[2]
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு,
சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்:
திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.

[3]
தாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய்,
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை;
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என, நம் வினை நாசமே.

[4]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.086  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)

காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பாலகர், விருத்தர், பழையார் எனார்;
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

[1]
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்தபோது பயன் இலை-பாவிகாள்!
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!

[2]
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,-
அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்-
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.

[3]
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே?
ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!

[4]
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே,
ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

[5]
கானம் ஓடிக் கடிது எழு தூதுவர்
தானமோடு தலை பிடியாமுனம்,
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்,
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.

[6]
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே,
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!

[7]
நாடி வந்து, நமன் தமர் நல் இருள்
கூடி வந்து, குமைப்பதன் முன்னமே,
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.

[8]
கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே,
அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே!

[9]
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே,
அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.087  
பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  
பண் - திருக்குறுந்தொகை   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)

பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!

[1]
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடைமேல் பிறை வைத்தவர்,
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை,
உன்னுவார் வினை ஆயின ஓயுமே.

[2]
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்;
தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்-
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்;
பற்றினார் அவர் பற்று, அவர்; காண்மினே!

[3]
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை
முத்தர்; முக்குணர்; மூசு அரவம் அணி
சித்தர்; தீவணர்-சீர் மணஞ்சேரி எம்
வித்தர்; தாம் விருப்பாரை விருப்பரே.

[4]
துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்;
வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;-
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.

[5]
நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்-
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்;
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.

[6]
சுண்ணத்தர்; சுடுநீறு உகந்து ஆடலார்;
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்-
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்;
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே.

[7]
துன்ன ஆடையர், தூ மழுவாளினர்;
பின்னும் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்-
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே.

[8]
சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன்
புத்தர் தேர் அமண்கையர்-புகழவே,
மத்தர்தாம் அறியார், மணஞ்சேரி எம்
அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே.

[9]
கடுத்த மேனி அரக்கன், கயிலையை
எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப்
படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக்
கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.088  
பெருகல் ஆம், தவம்; பேதைமை  
பண் - திருக்குறுந்தொகை   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)

பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்;
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்;
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்-
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

[1]
பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய்,
நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்!
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.

[2]
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை-
அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.

[3]
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி,
பாதுகாத்துப் பலபல கற்பித்து,
மாதுதான், மருகல் பெருமானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

[4]
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று
துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்;
மன்னு தென் மருகல் பெருமான் திறம்
உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.

[5]
சங்கு சோர, கலையும் சரியவே,
மங்கைதான், மருகல் பெருமான் வரும்
அங்கவீதி அருகு அணையா நிற்கும்;
நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?

[6]
காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே?
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத்
தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.

[7]
நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும்,
ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள்,
மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு, நீ! என்று கூடல் இழைக்குமே.

[8]
கந்தவார் குழல் கட்டிலள், காரிகை
அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக
வந்திடாய், மருகல் பெருமான்! என்று
சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!

[9]
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று,
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும்
ஆதியான், மருகல் பெருமான், திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.089  
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

[1]
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்;
இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து,
இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.

[2]
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்
மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்;
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்;
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.

[3]
நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம்
நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி
நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.

[4]
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை
அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்
அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;
அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.

[5]
ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்;
ஆறு சூடிய அண்ட முதல்வனார்;
ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள்
ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.

[6]
ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்-
ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு-
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல்,
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.

[7]
எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில்,
எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே;
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.

[8]
ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு;
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை;
ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.

[9]
பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்;
பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை;
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.090  
மாசு இல் வீணையும், மாலை  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

[2]
ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே!

[3]
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்?
சுடலை சேர்வது சொல் பிரமாணமே;
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!

[4]
பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

[5]
குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,
நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,
பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?

[6]
வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

[7]
எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான்,
தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு,
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!

[8]
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.

[9]
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.091  
ஏ இலானை, என் இச்சை  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )

ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

[1]
முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

[2]
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

[3]
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

[4]
மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

[5]
கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

[6]
மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி
இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.

[7]
என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்;
தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.

[8]
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )

கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!

[1]
நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக்
கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே!

[2]
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை
நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே!

[3]
சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன்,
சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்,
போற்றி! என்று உரைப்பார் புடை போகலே!

[4]
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்!
பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர்,
நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!

[5]
வாமதேவன் வள நகர் வைகலும்,
காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு
தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும்,
ஏமமும், புனைவார் எதிர் செல்லலே!

[6]
படையும் பாசமும் பற்றிய கையினீர்!
அடையன்மின், நமது ஈசன் அடியரை!
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது, நீர், போற்றியே போமினே!

[7]
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும்,
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே;
அச்சம் எய்தி அருகு அணையாது, நீர்,
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே!

[8]
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார்,
மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்-
தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே!

[9]
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால்
பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே!

[10]
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்,
சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர்
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.093  
காசனை, கனலை, கதிர் மா  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை )

காசனை, கனலை, கதிர் மா மணித்-
தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்;
மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே?

[1]
புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை,
சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை,
அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை,
வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?

[2]
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்;
ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்;
ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்),
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

[3]
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,-
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,-
ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

[4]
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை,
வான வெண்மதி சூடிய மைந்தனை,
வேனிலானை மெலிவு செய் தீ-அழல்-
ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?

[5]
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை, இனி யான் மறக்கிற்பனே?

[6]
கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச்
சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை,
அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர்
விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே?

[7]
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை,
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை,
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை,
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?

[8]
புதிய பூவினை, புண்ணிய நாதனை,
நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை,
கதியை, கண்டம் கறுத்த கடவுளை,
மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே?

[9]
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை,
உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை,
பருகு பாலனை, பால்மதி சூடியை,
மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.094  
அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  
பண் - திருக்குறுந்தொகை   (தொழற்பாலதே திருக்குறுந்தொகை )

அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு-
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்-
துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

[1]
முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக-
வித்து ஒப்பானை, விளக்கு இடை நேர் ஒளி
ஒத்து ஒப்பானை, ஒளிர் பவளத்திரள்-
தொத்து ஒப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

[2]
பண் ஒத்தானை, பவளம் திரண்டது ஓர்
வண்ணத்தானை, வகை உணர்வான் தனை,
எண்ணத்தானை, இளம்பிறை போல் வெள்ளைச்-
சுண்ணத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

[3]
விடலையானை, விரை கமழ் தேன் கொன்றைப்-
படலையானை, பலி திரிவான் செலும்
நடலையானை, நரி பிரியாதது ஓர்
சுடலையானை-கண்டீர்-தொழல்பாலதே.

[4]
பரிதியானை, பல்வேறு சமயங்கள்
கருதியானை, கண்டார் மனம் மேவிய
பிரிதியானை, பிறர் அறியாதது ஓர்
சுருதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

[5]
ஆதியானை, அமரர் தொழப்படும்
நீதியானை, நியம நெறிகளை
ஓதியானை, உணர்தற்கு அரியது ஓர்
சோதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

[6]
ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும்
கோலத்தானை, குணப்பெருங்குன்றினை,
மூலத்தானை, முதல்வனை, மூ இலைச்-
சூலத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

[7]
ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும்
வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச்
சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள்
சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

[8]
நீற்றினானை, நிகர் இல் வெண்கோவணக்-
கீற்றினானை, கிளர் ஒளிச் செஞ்சடை
ஆற்றினானை, அமரர்தம் ஆர் உயிர்
தோற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

[9]
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள்
கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு-
பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.

[10]
முற்றினானை; இராவணன் நீள் முடி
ஒற்றினானை, ஒருவிரலால் உற;
பற்றினானை, ஓர் வெண்தலை; பாம்பு அரைச்
சுற்றினானை-கண்டீர்-தொழல்பாலதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.095  
புக்கு அணைந்து புரிந்து அலர்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )

புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்;
சொக்கு அணைந்த சுடர் ஒளிவண்ணனை
மிக்குக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[1]
அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்திலர்;
திலகம் மண்டலம் தீட்டித் திரிந்திலர்;
உலகமூர்த்தி, ஒளிநிற-வண்ணனைச்
செலவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

[2]
ஆப்பி நீரோடு அலகு கைக் கொண்டிலர்;
பூப் பெய் கூடை புனைந்து சுமந்திலர்;
காப்புக் கொள்ளி, கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[3]
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்;
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்;
ஐயன், வெய்ய அழல் நிற-வண்ணனை
மெய்யைக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[4]
எருக்கு அம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்;
பெருக்கக் கோவணம் பீறி உடுத்திலர்;
தருக்கினால் சென்று, தாழ்சடை அண்ணலை
நெருக்கி, காணல் உற்றார்-அங்கு இருவரே.

[5]
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்;
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்;
உரம் பொருந்தி, ஒளிநிற-வண்ணனை
நிரம்பக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[6]
கட்டுவாங்கம் கபாலம் கைக் கொண்டிலர்;
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்;
சிட்டன் சேவடி சென்று எய்திக் காணிய,
பட்ட கட்டம் உற்றார்-அங்கு இருவரே.

[7]
வெந்த நீறு விளங்க அணிந்திலர்;
கந்தமாமலர் இண்டை புனைந்திலர்;
எந்தை, ஏறு உகந்து ஏறு எரிவண்ணனை,
அந்தம் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[8]
இள எழுந்த இருங்குவளை(ம்) மலர்
பிளவு செய்து, பிணைத்து அடி இட்டிலர்;
களவு செய் தொழில் காமனைக் காய்ந்தவன்
அளவு காணல் உற்றார்-அங்கு இருவரே.

[9]
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்;
அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக்
கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.

[10]
செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்;
இங்கு உற்றேன்! என்று இலிங்கத்தே தோன்றினான்,
பொங்கு செஞ்சடைப் புண்ணியமூர்த்தியே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.096  
பொன் உள்ளத் திரள் புன்சடையின்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )

பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!

[1]
முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர்
தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு
அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது
எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

[2]
பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை
முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும்,
தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது;
இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!

[3]
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு
உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு
பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது
இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!

[4]
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்
ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய
கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!

[5]
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு-
மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

[6]
வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால், சிவன்! என்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது
எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

[7]
திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும்,
நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என்
புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி
இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!

[8]
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை
எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள்
அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன்
எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

[9]
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம்,
எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது,
எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார்,
எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.097  
சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )

சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான், அணி ஆர் மதி
முந்திச் சூடிய முக்கண்ணினான், அடி
வந்திப்பார் அவர் வான் உலகு ஆள்வரே.

[1]
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்
உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம்,
வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.

[2]
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன்,
போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன்
பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-
சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.

[3]
இட்டது, இட்டது-ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
பட்டி துட்டங்கனாய்ப்-பலி தேர்வது ஓர்
கட்ட வாழ்க்கையன் ஆகிலும், வானவர்,
அட்டமூர்த்தி, அருள்! என்று அடைவரே.

[4]
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-
நீறு பூசி நிலாமதி சூடிலும்,
வீறு இலாதன செய்யினும், விண்ணவர்,
ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.

[5]
உச்சி வெண்மதி சூடிலும், ஊன் அறாப்
பச்சை வெண்தலை ஏந்திப் பல இலம்
பிச்சையே புகும் ஆகிலும், வானவர்,
அச்சம் தீர்த்து அருளாய்! என்று அடைவரே.

[6]
ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!
கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.

[7]
எந்தையே! எம்பிரானே! என உள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்;
வெந்தநீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார், அடைந்தார்களே.

[8]
ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்
ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்;
தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே
வான நாடர் வணங்குவர், வைகலே.

[9]
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

[10]
ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;
அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே.

[11]
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்,
நாதனே, அருளாய்! என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[12]
ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ!
மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு
பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.

[13]
அக்கும் ஆமையும் பூண்டு, அனல் ஏந்தி, இல்
புக்கு, பல்பலி தேரும் புராணனை-
நக்கு, நீர்கள், நரகம் புகேன்மினோ!-
தொக்க வானவரால்-தொழுவானையே.

[14]
கங்கை தங்கிய செஞ்சடைமேல் இளன்
திங்கள் சூடிய தீநிற-வண்ணனார்;
இங்கணார், எழில் வானம் வணங்கவே;
அம் கணாற்கு அதுவால், அவன் தன்மையே!

[15]
ஙகர வெல் கொடியானொடு,-நன்நெஞ்சே!-
நுகர, நீ உனைக் கொண்டு உய்ப் போக்கு உறில்,
மகர வெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே.

[16]
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்,
மரணம் எய்தியபின், நவை நீக்குவான்
அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?

[17]
ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்
சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்;
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.

[18]
இடபம் ஏறியும் இல் பலி ஏற்பவர்;
அடவி காதலித்து ஆடுவர்; ஐந்தலைப்
பட அம்பாம்பு அரை ஆர்த்த பரமனை,
கடவிராய்ச் சென்று, கைதொழுது உய்ம்மினே!

[19]
இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிந்திடும்,
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
அணைந்த, அம் சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே.

[20]
தருமம் தான், தவம் தான், தவத்தால் வரும்
கருமம் தான் கருமான்மறிக் கையினான்;
அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ!-
சிரமம் சேர் அழல்-தீவினையாளரே!

[21]
நமச்சிவாய என்பார் உளரேல், அவர்-
தம் அச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்,
அமைத்துக் கொண்டது ஓர் வாழ்க்கையன் ஆகிலும்,
இமைத்து நிற்பது சால அரியதே.

[22]
பல்பல் காலம் பயிற்றி, பரமனைச்
சொல் பல்-காலம் நின்று, ஏத்துமின்! தொல்வினை
வெற்பில்-தோன்றிய வெங்கதிர் கண்ட அப்
புல்பனி(க்) கெடும் ஆறு அது போலுமே.

[23]
மணி செய் கண்டத்து, மான்மறிக் கையினான்;
கணிசெய் வேடத்தர் ஆயவர்; காப்பினால்
பணிகள்தாம் செய வல்லவர் யாவர், தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர்; பேயரே!

[24]
இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர்,
நயக்க நின்றவன்; நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த, வல் மால் எரி ஆயினான்;
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே.

[25]
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல்
கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?

[26]
அழல் அங்கையினன்; அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு, தாவினான்,
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.

[27]
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்,
வளமை போய், பிணியோடு வருதலால்,
உளமெலாம் ஒளி ஆய் மதி ஆயினான்
கிளமையே கிளை ஆக நினைப்பனே.

[28]
தன்னில்-தன்னை அறியும் தலைமகன்
தன்னில்-தன்னை அறியில்-தலைப்படும்;
தன்னில்-தன்னை அறிவு இலன் ஆயிடில்,
தன்னில்-தன்னையும் சார்தற்கு அரியனே.

[29]
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து-பத்தும்-அன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய
நலம் கொள் சேவடி நாள்தொறும் நாள்தொறும்
வலம்கொண்டு ஏத்துவார் வான் உலகு ஆள்வரே.

[30]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.098  
நீறு அலைத்தது ஓர் மேனி,  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )

நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[1]
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை,
சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர்
எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

[2]
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்,
கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.

[3]
அம்மானை,- அமுதின் அமுதே! என்று-
தம்மானை, தத்துவத்து அடியார் தொழும்
செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.

[4]
கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய்,
ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர்,
பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம்
ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.

[5]
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,
தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;
வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே?
என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.

[6]
வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை
கொன்றானை; குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[7]
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்
குருவினை, குணத்தாலே வணங்கிடும்
திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

[8]
தேசனை, திருமால் பிரமன் செயும்
பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர்
நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற
ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

[9]
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை
அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.099  
பாவமும் பழி பற்று அற  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )

பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

[1]
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

[2]
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்?
இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்?
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்?
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

[3]
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்?
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.

[4]
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்?
வேலை தோறும் விதிவழி நிற்கில் என்?
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்?
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

[5]
கானம், நாடு, கலந்து திரியில் என்?
ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்?
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்?
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.

[6]
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்?
வாடி ஊனை வருத்தித் திரியில் என்?
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப்
பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.

[7]
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்?
குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்?
சென்று நீரில் குளித்துத் திரியில் என்?
என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

[8]
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை-
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.

[9]
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக்
குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி
பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )

வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.

[1]
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம் செய நின்ற நல்சோதியே?

[2]
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.

[3]
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்!
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே.

[4]
கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.

[5]
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர் முடி தன் அடிச்
சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல்
சீவனை, சிவனை, சிந்தியார்களே.

[6]
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.

[7]
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.

[8]
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்-
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

[9]
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.

[10]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai allsongs thirumurai 5