சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செந்நெல் அம் கழனிப் பழனத்து  (திருப்பூந்தராய்)  
2 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்டு எலாம் மலர விரை  (திருவலஞ்சுழி)  
3 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  (திருத்தெளிச்சேரி)  
4 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரை உலாம் கடலில் பொலி  (திருவான்மியூர்)  
5 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்))  
6 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  (திருவையாறு)  
7 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  (திருவாஞ்சியம்)  
8 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் உலாவும் மதி வந்து  (திருச்சிக்கல்)  
9 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  (திருமழபாடி)  
10 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  (திருமங்கலக்குடி)  
11 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,  (சீர்காழி)  
12 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறையானை, மாசு இலாப் புன்சடை  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
13 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  (திருக்கோழம்பம்)  
14 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,  (திருவெண்ணியூர்)  
15 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  (திருக்காறாயில் (திருக்காறைவாசல்))  
16 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
17 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிலவும், புனலும், நிறை வாள்  (திருவேணுபுரம் (சீர்காழி))  
18 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையாய்! எனுமால்; சரண் நீ!  (திருமருகல்)  
19 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  (திருநெல்லிக்கா)  
20 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொழும் ஆறு வல்லார், துயர்  (திருஅழுந்தூர்)  
21 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்  (திருக்கழிப்பாலை)  
22 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;  (திருக்குடவாயில்)  
23 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மழை ஆர் மிடறா! மழுவாள்  (திருவானைக்கா)  
24 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்  (திருநாகேச்சுரம்)  
25 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  (திருப்புகலி -(சீர்காழி ))  
26 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புடையின் ஆர் புள்ளி கால்  (திருநெல்வாயில்)  
27 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு  (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்))  
28 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,  (திருக்கருவூரானிலை (கரூர்))  
29 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய  (திருப்புகலி -(சீர்காழி ))  
30 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறம் பயம் மலிந்தவர் மதில்  (திருப்புறம்பயம்)  
31 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))  
32 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  (திருவையாறு)  
33 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏடு மலி கொன்றை, அரவு,  (திருநள்ளாறு)  
34 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி  (திருப்பழுவூர்)  
35 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரவக் கெடும், வல்வினை பாரிடம்  (திருத்தென்குரங்காடுதுறை)  
36 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் ஆர் கழலே தொழுவீர்!  (திருஇரும்பூளை (ஆலங்குடி))  
37 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
38 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
39 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  (சீர்காழி)  
40 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
41 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் புகார், வான்புகுவர்; மனம்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
42 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அக்கு இருந்த ஆரமும், ஆடு  (திருஆக்கூர்)  
43 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
44 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்னம் பெய் கோவணமும் தோலும்  (திருஆமாத்தூர்)  
45 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தையல் ஓர் கூறு உடையான்,  (கைச்சின்னம் (கச்சன்னம்))  
46 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்  (திருநாலூர்மயானம்)  
47 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு இட்ட புன்னை அம்கானல்  (திருமயிலை (மயிலாப்பூர்))  
48 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் காட்டும் நுதலானும், கனல்  (திருவெண்காடு)  
49 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண்ணின் நேர் மொழி மங்கைமார்  (சீர்காழி)  
50 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குன்ற வார்சிலை, நாண் அரா,  (திருஆமாத்தூர்)  
51 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீருள் ஆர் கயல் வாவி  (திருக்களர்)  
52 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  (திருக்கோட்டாறு)  
53 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ  (திருப்புறவார்பனங்காட்டூர்)  
54 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  (திருப்புகலி -(சீர்காழி ))  
55 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலச் சங்க வெண்குழையும் தோடும்  (திருத்தலைச்சங்காடு)  
56 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  (திருவிடைமருதூர்)  
57 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமரும் திருமேனி உடையீர்!  (திருநல்லூர்)  
58 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை வாழும் அம் கையீர்!  (திருக்குடவாயில்)  
59 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலம் கொள் முத்தும் மணியும்  (சீர்காழி)  
60 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிந்தை இடையார், தலையின் மிசையார்,  (திருப்பாசூர்)  
61 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  (திருவெண்காடு)  
62 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காயச் செவ்விக் காமற் காய்ந்து,  (திருமீயச்சூர்)  
63 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
64 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
65 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி வேல் இலர்போலும்;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
66 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர்  (திருஆலவாய் (மதுரை))  
67 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணும் ஓர் பாகம் உடையார்;  (திருப்பெரும்புலியூர்)  
68 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் அமர் திங்களும் நீரும்  (திருக்கடம்பூர்)  
69 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமர் மேனியினாரும், பிறை  (திருப்பாண்டிக்கொடுமுடி)  
70 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  (திருஆலவாய் (மதுரை))  
71 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்த மதி சூடி, தெண்  (திருக்குறும்பலா (குற்றாலம்))  
72 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து ஆர் விரல் மடவாள்  (திருநணா (பவானி))  
73 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
74 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
75 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்  (சீர்காழி)  
76 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாடிய வெண்தலை மாலை சூடி,  (திருஅகத்தியான்பள்ளி)  
77 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்  (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்))  
78 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,  (திருவிளநகர்)  
79 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பவனம் ஆய், சோடை ஆய்,  (திருவாரூர்)  
80 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரிய மறையார், பிறையார், மலை  (திருக்கடவூர் மயானம்)  
81 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்  (திருவேணுபுரம் (சீர்காழி))  
82 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண் நிலாவிய மொழி உமை  (திருத்தேவூர்)  
83 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
84 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காரைகள், கூகை, முல்லை, கள,  (திருநனிப்பள்ளி)  
85 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
86 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரையினில் வந்த பாவம், உணர்  (திருநாரையூர்)  
87 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
88 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துளி மண்டி உண்டு நிறம்  (தென்திருமுல்லைவாயில்)  
89 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
90 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  (திருநெல்வாயில் அரத்துறை)  
91 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
92 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பட்டம், பால்நிற மதியம், படர்  (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்)  
93 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புரை செய் வல்வினை தீர்க்கும்  (திருத்தெங்கூர்)  
94 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாகை ஆயிரம் உடையார், சாமமும்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
95 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் வண்டு அறை கொன்றை,  (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு))  
96 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  (சீர்காழி)  
97 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நம் பொருள், நம் மக்கள்  (சீர்காழி)  
98 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரைத்தலைப் பசும் பொனோடு அருங்  (திருத்துருத்தி)  
99 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்று நன்று, நாளை நன்று  (திருக்கோடி (கோடிக்கரை))  
100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை கொள் கூற்றம் வந்து,  (திருக்கோவலூர் வீரட்டம்)  
101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பருக் கை யானை மத்தகத்து  (திருவாரூர்)  
102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அன்ன மென் நடை அரிவையோடு  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புல்கு பொன் நிறம் புரி  (திருஅம்பர்மாகாளம்)  
104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் மேனி வெண்  (திருக்கடிக்குளம்)  
105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் உலாவிய சடையினர், விடையினர்,  (திருக்கீழ்வேளூர்)  
106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  (திருவலஞ்சுழி)  
107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விருது குன்ற, மாமேரு வில்,  (திருக்கேதீச்சரம்)  
108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடி கொள் மேனியர், வான  (திருவிற்குடிவீரட்டம்)  
109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி  (திருக்கோட்டூர்)  
110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,  (திருமாந்துறை)  
111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் என  (திருவாய்மூர்)  
112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது ஓர் கூறு உகந்து,  (திருவாடானை)  
113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி இலங்கும் திருமேனியாளர், புலி  (சீர்காழி)  
114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  (திருக்கேதாரம்)  
115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு குழல்  (திருப்புகலூர்)  
116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்டு கங்கை சடையில் கரந்தும்,  (திருஇரும்பைமாகாளம்)  
118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,  (திருதிலதைப்பதி (மதிமுத்தம்))  
119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  (திருநாகேச்சுரம்)  
120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாந்தம் வெண்நீறு எனப் பூசி,  (திருமூக்கீச்சுரம் (உறையூர்))  
121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))  
122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடை அது ஏறி, வெறி  (திருப்புகலி -(சீர்காழி ))  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.001  
செந்நெல் அம் கழனிப் பழனத்து  
பண் - இந்தளம்   (திருப்பூந்தராய் )

செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

[1]
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? பெருமானிரே!

[2]
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?

[3]
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?

[4]
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகுவாயன
புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,
துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்
வெள்ளநீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்புஅதே?

[5]
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?

[6]
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?

[8]
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே?

[9]
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல்கழலீர்! சொலீர்
குண்டர்சாக்கியர் கூறியது ஆம் குறிஇன்மையே?

[10]
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.002  
விண்டு எலாம் மலர விரை  
பண் - இந்தளம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)

விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

[1]
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

[2]
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர்
விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே?

[3]
கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

[4]
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு
போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லைவெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?

[5]
பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

[6]
கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?

[7]
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

[8]
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

[9]
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

[10]
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.003  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  
பண் - இந்தளம்   (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)

பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

[1]
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே,
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்!
வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?

[2]
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!
கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?

[3]
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்
தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!
ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியே
வார் உலாம் முலையாளை ஒர்பாகத்து வைத்ததே?

[4]
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!
மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து
வௌவவே,
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே?

[5]
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ, நல்
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்!
குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே?

[6]
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர்!
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?

[7]
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர்
சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்!
வித்தகப் படை வல்ல அரக்கன் விறல் தலை,
பத்து, இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?

[8]
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!
மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியே
ஓலம் இட்டிட, எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?

[9]
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்!
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?

[10]
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.004  
கரை உலாம் கடலில் பொலி  
பண் - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?

[1]
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே?

[2]
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,
தோல் நயங்கு அமர் ஆடையினீர்! அடிகேள்! சொலீர்
ஆனைஅங்க உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?

[3]
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே?

[4]
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?

[5]
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே?

[6]
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே?

[7]
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்
திக்கில் வந்து அலற அடர்த்தீர்! திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?

[8]
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?

[9]
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்
செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர்
கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?

[10]
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.005  
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  
பண் - இந்தளம்   (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) அருள்மன்னர் மனோன்மணியம்மை)

நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

[1]
சூலம் உண்டு, மழு உண்டு, அவர் தொல் படை; சூழ் கடல்
ஆலம் உண்ட பெருமான்தன் அனேகதங்காவதம்,
நீலம் உண்ட தடங்கண் உமை பாகம் நிலாயது ஓர்
கோலம் உண்டு; அளவு இல்லை, குலாவிய கொள்கையே!

[2]
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர்
அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை
நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?

[3]
தந்தத்திந்தத்தடம் என்ற அருவித்திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசு அறு திங்கள் ஆர்
அந்தம் இல்ல அளவு இல்ல, அனேகதங்காவதம்
எந்தை வெந்தபொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே.

[4]
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமைப் பெயர்ந்து
போய்
உறையும் கோயில், பசும்பொன் அணியார், அசும்பு ஆர்
புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை, எம் ஈசன், எம்மான், இடம் ஆக உகந்ததே.

[5]
தேனை ஏறு நறுமாமலர் கொண்டு அடி சேர்த்துவீர்!
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணரும்தனை வல்லிரேல்
ஆன்நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே.

[6]
வெருவி வேழம் இரிய, கதிர் முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழ, வயிரம் கொழியா, அகில் உந்தி, வெள்
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே.

[7]
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்,
ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.

[8]
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.

[9]
மா பதம் அறியாதவர் சாவகர்சாக்கியர்,
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிர் ஆகில், அனேகதங்
காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் ருமமே.

[10]
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.006  
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  
பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

[1]
தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

[2]
கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

[3]
பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[4]
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி,
ஆன் அஞ்சு, ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே.

[5]
எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

[6]
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

[7]
குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[8]
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

[9]
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

[10]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

[11]
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.007  
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  
பண் - இந்தளம்   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.

[1]
காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,
மேலர், வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்,
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே.

[2]
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர்,
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.

[3]
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே
சால நல்ல பொடி பூசுவர்; பேசுவர், மாமறை;
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்,
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே.

[4]
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே

[5]
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

[6]
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே;
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்;
பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை,
அல்லலே.

[7]
மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே

[8]
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை;
கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து
அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.

[9]
பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார்,
மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை,
எம் இறை;
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை,
அல்லலே.

[10]
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு
வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.008  
வான் உலாவும் மதி வந்து  
பண் - இந்தளம்   (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை)

வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.

[1]
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி
மேவிய
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.

[2]
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.

[3]
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை
ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.

[4]
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி
மேவவே,
தங்கும், மேன்மை; சரதம் திரு, நாளும், தகையுமே.

[5]
வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!

[6]
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடி
உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!

[7]
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை
பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே,
செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே!

[8]
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.

[9]
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர்,
சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!

[10]
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.009  
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  
பண் - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)

களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.

[1]
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்;
பேச்சினால் உமக்கு ஆவது என்? பேதைகாள், பேணுமின்!
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே!

[2]
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை
பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு பகலோன்தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீ எழச் செற்று, முன்,
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே.

[3]
பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடை எறிய வேதியன்,
வள்ளல், மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின், வினைஆயின ஓயவே!

[4]
தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்
பால்நெய் அஞ்சு உடன் ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.

[5]
தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன்,
பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான்,
வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின்! வினைஆயின போகுமே.

[6]
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினைஆயின தேயுமே.

[7]
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
உரக் கையால் எடுத்தான்தனது ஒண் முடிபத்து இற
விரல் தலை நிறுவி, உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.

[8]
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர் உயிர் வீட்டிய மா மணிகண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்,
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.

[9]
கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும்,
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே!

[10]
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்.......உலகத்திலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.010  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  
பண் - இந்தளம்   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)

சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

[1]
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று
ஏத்தவே,
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.

[2]
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்,
மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.

[3]
பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம்,
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே! என்று
முறையினால் வணங்கு(ம்)மவர் முன்நெறி காண்பரே.

[4]
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர்
மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.

[5]
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள
வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்
கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.

[6]
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே,
கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே

[7]
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட,
வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே!

[8]
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.

[9]
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[10]
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.011  
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,  
பண் - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

[1]
நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற
பெம்மானை, பேய் உடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடை இல்லையே.

[2]
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

[3]
புற்றானை, புற்று அரவம் அரையின்மிசைக்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில்
பற்றானை, பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

[4]
நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர்தாம் வியந்து ஏத்திய
கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை, பாடுமின், நும் வினை பாறவே!

[5]
செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி
வைப்பானை, வார் கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை, ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.

[6]
துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை, ஏழ் இசையின் நிலை பேணுவார்
அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய
நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.

[7]
குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால் தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள
நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!

[8]
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்!
பூ ஆயகொன்றையினானைப் புனல் காழிக்
கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே!

[9]
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.012  
மறையானை, மாசு இலாப் புன்சடை  
பண் - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி, கூவிளம்,
உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்;
கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.

[2]
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.

[3]
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.

[4]
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[5]
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம்
கெழு வாளோர், இமையார், உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.

[6]
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;
நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார்; ஆடுகின்ற அலங்காரமே!

[7]
தூயானை, தூய ஆய மறை ஓதிய
வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.

[8]
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்;
பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்;
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!

[9]
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.

[10]
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.013  
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  
பண் - இந்தளம்   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)

நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!

[1]
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே.

[2]
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

[3]
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய
விடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்கு
உடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்
உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!

[4]
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி
தாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய
சீரானை, செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!

[5]
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

[6]
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த
வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,
கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய
நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!

[7]
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச்
செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம்
பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.

[8]
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்
படியானை, பண்டங்கவேடம் பயின்றானை,
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை, கூறுமின், உள்ளம் குளிரவே!

[9]
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப்
பித்தரும், பேசுவ பேச்சு அல்ல; பீடு உடைக்
கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!

[10]
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.014  
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,  
பண் - இந்தளம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)

சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம்
ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில்
நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.

[2]
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை,
நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில்
இனிதனை, ஏத்துவர் ஏதம் இலாதாரே.

[3]
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க்
காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை,
ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே

[4]
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத்
தாரானை, தையல் ஓர்பாகம் உடையானை,
சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.

[5]
முத்தினை, முழுவயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய
வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அத்தனை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[6]
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப்
பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித் தோல் மெய்யில்
மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
நீந்தானை, நினைய வல்லார் வினை நில்லாவே.

[7]
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச்
செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்
இறுத்தானை, எழில் அமர் வெண்ணி எம்மான்! எனப்
பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.

[8]
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா
விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில்
அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[9]
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய
மிண்டர்கள் மிண்டுஅவை கேட்டு வெகுளன்மின்!
விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.

[10]
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.015  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  
பண் - இந்தளம்   (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)

நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.

[1]
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே! விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே! நீர் வயல் சூழ் திருக்காறாயில்
பதியானே! என்பவர் பாவம் இலாதாரே.

[2]
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில்
எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே.

[3]
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே!
சேயானே! சீர் திகழும் திருக்காறாயில்
மேயானே! என்பவர்மேல் வினை மேவாவே.

[4]
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே! சீர் திகழும் திருக்காறாயில்
நிலையானே! என்பவர்மேல் வினை நில்லாவே.

[5]
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும்
போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில்
நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே.

[6]
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்
ஏத்தானே! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்
காத்தானே! கார் வயல் சூழ் திருக்காறாயில்
ஆர்த்தானே! என்பவர்மேல் இடர் அடராவே.

[7]
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர்
கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில்
அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே.

[8]
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை
மறையானே! மாலொடு நான்முகன் காணாத
இறையானே! எழில் திகழும் திருக்காறாயில்
உறைவானே! என்பவர்மேல் வினை ஓடுமே.

[9]
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும்
படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை;
கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில்
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.

[10]
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  
பண் - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)

அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

[1]
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.

[2]
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை,
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.

[3]
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம்
உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய
படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[4]
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை,
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

[5]
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண் இசைஆன பகர்வானை;
வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.

[6]
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
[7]
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே

[8]
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும்,
கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!

[9]
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை,
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.

[10]
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.017  
நிலவும், புனலும், நிறை வாள்  
பண் - இந்தளம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.

[1]
அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே.

[2]
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ,
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள்
மேகம் தவழும் வேணுபுரமே.

[3]
காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து
ஈசர்க்கு இடம் ஆவது இன்நறவ
வாசக்கமலத்து அனம், வன் திரைகள்
வீச, துயிலும் வேணுபுரமே.

[4]
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.

[5]
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடைமேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலில் நல செங்கயல் கண்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.

[6]
ஏவும் படை வேந்தன் இராவணனை,
ஆ என்று அலற, அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறிமானொடு தண்மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.

[8]
கண்ணன், கடிமாமலரில் திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர்
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.

[9]
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார்,
ஆகம் அறியா அடியார் இறைஊர்
மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல்
மீ கம் அறிவார், வேணுபுரமே.

[10]
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!  
பண் - இந்தளம்   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)

சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

[1]
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்;
முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

[2]
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

[3]
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

[4]
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

[5]
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே

[6]
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

[7]
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

[8]
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

[9]
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

[10]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.019  
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  
பண் - இந்தளம்   (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை)

அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[1]
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;
விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[2]
நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக்
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[3]
தலைதானது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[4]
தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல்
உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச்
சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[5]
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி;
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்;
குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[6]
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;
இறை தான்; இறவாக் கயிலைமலையான்;
மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[7]
மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை;
மிறைத்தான், வரையால், அரக்கன் மிகையைக்
குறைத்தான், சடைமேல் குளிர் கோல்வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[8]
தழல் தாமரையான், வையம் தாயவனும்,
கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்
அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[9]
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
என் அத்தா! என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[10]
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.020  
தொழும் ஆறு வல்லார், துயர்  
பண் - இந்தளம்   (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.

[1]
கடல் ஏறிய நஞ்சு அமுதுஉண்டவனே!
உடலே! உயிரே! உணர்வே! எழிலே!
அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்
விடலே! தொழ, மா மடம் மேவினையே.

[2]
கழிகாடலனே! கனல் ஆடலினாய்!
பழிபாடு இலனே! அவையே பயிலும்
அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.

[3]
வானே! மலையே! என மன் உயிரே!
தானே தொழுவார் தொழு தாள் மணியே!
ஆனே! சிவனே! அழுந்தையவர், எம்
மானே! என, மா மடம் மன்னினையே.

[4]
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!
நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,
இலைஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!
நிலையா அது கொள்க என, நீ நினையே!

[5]
நறவு ஆர் தலையின் நயவா! உலகில்
பிறவாதவனே! பிணி இல்லவனே!
அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்
மறவாது எழ, மா மடம் மன்னினையே.

[6]
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்
சுடும் ஆறு வல்லாய்! சுடர் ஆர் சடையில்
அடும் ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.

[7]
பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும்
கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்!
அரியாய்! எளிவாய்! அழுந்தை மறையோர்
வெரியார் தொழ, மா மடம் மேவினையே.

[8]
மணி நீள் முடியால் மலையை அரக்கன்
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே.

[9]
முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர்
நெடியான், மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர்
படியால் தொழ, மா மடம் பற்றினையே.

[10]
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.021  
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்  
பண் - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர்
கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.

[1]
துணைஆக ஒர் தூ வள மாதினையும்
இணைஆக உகந்தவனே! இறைவா!
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்!
இணை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

[2]
நெடியாய்! குறியாய்! நிமிர்புன்சடையின்
முடியாய்! சுடுவெண்பொடி முற்று அணிவாய்!
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
அடியார்க்கு அடையா, அவலம் அவையே.

[3]
எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ,
வளி, காயம், என வெளி மன்னிய தூ
ஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்கு
அளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே!

[4]
நடம் நண்ணி, ஒர் நாகம் அசைத்தவனே!
விடம் நண்ணிய தூ மிடறா! விகிர்தா!
கடல் நண்ணு கழிப்பதி காவலனே!
உடல் நண்ணி வணங்குவன், உன் அடியே.

[5]
பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்)
மறை ஆர்தரு வாய்மையினாய்! உலகில்
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

[6]
முதிரும் சடையின்முடிமேல் விளங்கும்
கதிர் வெண்பிறையாய்! கழிப்பாலை உளாய்!
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும் வினைஆயின ஆசு அறுமே.

[7]
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!
விரி ஆர்தரு வீழ்சடையாய்! இரவில்
கரி காடலினாய்! கழிப்பாலை உளாய்!
உரிதுஆகி வணங்குவன், உன் அடியே.

[8]
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
கனல் ஆனவனே! கழிப்பாலை உளாய்!
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு
இலதுஆம், வினைதான்; எயில் எயதவனே!

[9]
தவர் கொண்ட தொழில் சமண்வேடரொடும்,
துவர் கொண்டன நுண்துகில் ஆடையரும்,
அவர் கொண்டன விட்டு, அடிகள் உறையும்
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே.

[10]
கழி ஆர் பதி காவலனைப் புகலிப்
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு, அடி வாழ்த்த வல்லார்,
கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.022  
திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;  
பண் - இந்தளம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)

திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்; அடியார் புகல,
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.

[1]
ஓடும் நதியும், மதியோடு, உரகம்,
சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல்
கூடும் குழகன் குடவாயில்தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே.

[2]
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்;
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்;
கொலை ஆர் சிலையான் குடவாயில்தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.

[3]
சுலவும் சடையான்; சுடுகாடு இடமா,
நல மென்முலையாள் நகைசெய்ய, நடம்
குலவும் குழகன் குடவாயில் தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே.

[4]
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே.

[5]
அலை சேர் புனலன்; அனலன்; அமலன்;
தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில்தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.

[6]
அறை ஆர் கழலன்; அழலன்; இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட, நடம்
குறையா அழகன் குடவாயில்தனில்
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.

[7]
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்)
வரை ஆர் ஒர்கால்விரல் வைத்த பிரான்
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

[8]
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும்,
தன் ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான்;
கொல் நல் படையான் குடவாயில்தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

[9]
வெயிலின் நிலையார், விரி போர்வையினார்,
பயிலும் உரையே பகர் பாவிகள்பால்
குயிலன்; குழகன் குடவாயில்தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே.

[10]
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,
தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.023  
மழை ஆர் மிடறா! மழுவாள்  
பண் - இந்தளம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே

[1]
கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே!
மலை ஆர் சிலையா வளைவித்தவனே!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
நிலையா அருளாய்! எனும் நேரிழையே.

[2]
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்!
பாலோடு நெய் ஆடிய பால்வணனே!
வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்!
ஆல் ஆர் நிழலாய்! எனும் ஆயிழையே.

[3]
சுறவக் கொடி கொண்டவன் நீறு அது ஆய்
உற, நெற்றி விழித்த எம் உத்தமனே!
விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே!
அறம் மிக்கது எனும் ஆயிழையே.

[4]
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே!
வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்!
அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.

[5]
குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின்
தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்!
வென்றாய், புரம்மூன்றை! வெண்நாவலுளே
நின்றாய், அருளாய்! எனும் நேரிழையே.

[6]
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
அலசாமல் நல்காய்! எனும் ஆயிழையே.

[8]
திரு ஆர்தரு, நாரணன், நான்முகனும்,
அருவா, வெருவா, அழல் ஆய் நிமிர்ந்தாய்!
விரை ஆரும் வெண்நாவலுள் மேவிய எம்
அரவா! எனும் ஆயிழையாள் அவளே.

[9]
புத்தர்பலரோடு அமண்பொய்த்தவர்கள்
ஒத்த உரை சொலிவை ஓரகிலார்;
மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்!
அத்தா! அருளாய்! எனும் ஆயிழையே.

[10]
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை,
கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.024  
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்  
பண் - இந்தளம்   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.

[1]
சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில்
உற வார்கணை உய்த்தவனே! உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள்
அறவா! என, வல்வினை ஆசு அறுமே.

[2]
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின்
வில்லான் எழில் வேவ, விழித்தவனே!
நல்லார் தொழும் நாகேச்சுரநகரில்
செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே.

[3]
நகு வான்மதியோடு அரவும் புனலும்
தகு வார்சடையின் முடியாய்! தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுரநகருள்
பகவா! என, வல்வினை பற்றுஅறுமே.

[4]
கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே.

[5]
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி,
வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே!
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே! என, நீங்கும், அருந்துயரே.

[6]
முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே!
நடை ஆர்தரு நாகேச்சுரநகருள்
சடையா! என, வல்வினைதான் அறுமே.

[7]
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற,
நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே!
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத்
தாயே! என, வல்வினைதான் அறுமே.

[8]
நெடியானொடு நான்முகன் நேடல் உற,
சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே!
நடு மா வயல் நாகேச்சுரநகரே
இடமா உறைவாய்! என, இன்புஉறுமே.

[9]
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம்பாவியர் கட்டுரை விட்டு, உலகில்
நலம் பாவிய நாகேச்சுரநகருள்
சிலம்பா! என, தீவினை தேய்ந்து அறுமே.

[10]
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.025  
உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  
பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!

[1]
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப்
புண்ணியன், உறையும் புகலியை
நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே!

[2]
வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்,
பூசும் நீற்றினன், பூம் புகலியைப்
பேசுமின், பெரிது இன்பம் ஆகவே!

[3]
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,
பொடி கொள் மேனியன், பூம் புகலியுள
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே!

[4]
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.

[5]
மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே.

[6]
கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான்,
இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை,
பொரு விடை உயர்த்தான், புகலியைப்
பரவிட, பயில் பாவம் பாறுமே.

[7]
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!

[8]
மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே?

[9]
நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல்
ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியைச்
சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.

[10]
புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.026  
புடையின் ஆர் புள்ளி கால்  
பண் - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.

[1]
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலைஆய தன்மையர்
நீங்கு நீர நெல்வாயிலார்; தொழ
ஓங்கினார், எமது உச்சியாரே.

[2]
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார், தொழ
இச்சையால் உறைவார்; எம் ஈசனார்;
கச்சை ஆவது ஓர் பாம்பினார்; கவின்
இச்சையார்; எமது உச்சியாரே.

[3]
மறையினார், மழுவாளினார், மல்கு
பிறையினார், பிறையோடு இலங்கிய
நிறையினார் அ நெல்வாயிலார்; தொழும்
இறைவனார், எமது உச்சியாரே.

[4]
விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய
கருத்தனார், கனல் ஆட்டு உகந்தவர்,
நிருத்தனார் அ நெல்வாயில் மேவிய
ஒருத்தனார், எமது உச்சியாரே.

[5]
காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு
பேரினார், பிறையோடு இலங்கிய
நீரினார் அ நெல்வாயிலார்; தொழும்
ஏரினார், எமது உச்சியாரே.

[6]
ஆதியார், அந்தம் ஆயினார், வினை
கோதியார், மதில் கூட்டுஅழித்தவர்,
நீதியார் அ நெல்வாயிலார்; மறை
ஓதியார், எமது உச்சியாரே.

[7]
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார், ஒருகால்விரல் உற,
நெற்றி ஆர நெல்வாயிலார்; தொழும்
பெற்றியார், எமது உச்சியாரே.

[8]
நாடினார் மணிவண்ணன், நான்முகன்,
கூடினார் குறுகாத கொள்கையா
நீடினார் அ நெல்வாயிலார்; தலை
ஓடினார், எமது உச்சியாரே.

[9]
குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர்
விண் தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை
உண்ட கண்டர், எம் உச்சியாரே.

[10]
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை,
பண் பயன்கொளப் பாட வல்லவர்,
விண் பயன்கொளும் வேட்கையாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.027  
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு  
பண் - இந்தளம்   (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை)

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.

[1]
குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு
அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர்
இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்தனை ஓதி உய்ம்மினே!

[2]
என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார்
நம்பன், நால்மறை பாடு நாவினான்,
இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே!

[3]
நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்;
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே.

[4]
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்,
இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே!

[5]
வெண்நிலாமதி சூடும் வேணியன்,
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்,
அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே.

[6]
கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர்,
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்,
அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர், உகந்த கொள்கையே!

[7]
எடுத்த வல் அரக்கன் கரம்புயம்
அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட்
படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற, முயலும், இன்பமே!

[8]
பூவினானொடு மாலும் போற்றுஉறும்
தேவன் இந்திர நீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரைத் தம் வினை
கோவியா வரும்; கொல்லும், கூற்றமே.

[9]
கட்டர்குண்டு அமண், தேரர், சீர் இலர்,
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்,
எள் தனை நினையாதது என்கொலோ,
சிட்டுஅதுஆய் உறை ஆதி சீர்களே?

[10]
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்,
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தம் இலியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.028  
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,  
பண் - இந்தளம்   (திருக்கருவூரானிலை (கரூர்) பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை)

தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.

[1]
நீதியார், நினைந்து ஆய நால்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார், அடியார்தம் அன்பரே.

[2]
விண் உலாம் மதி சூடி, வேதமே
பண் உளார், பரம் ஆய பண்பினர்,
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார், அடியார்க்கு நல்லரே.

[3]
முடியர், மும்மதயானை ஈருரி;
பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர்
கடிஉளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள், யாவையும் ஆய ஈசரே.

[4]
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர்
மங்கையர், மணிநீலகண்டர், வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை,
அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே.

[5]
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்,
காவலார் கருவூருள் ஆன்நிலை,
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!

[6]
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப்
பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர்,
கண்ணினார், கருவூருள் ஆன்நிலை
நண்ணினார், நமை ஆளும் நாதரே.

[7]
கடுத்த வாள் அரக்கன், கயிலையை
எடுத்தவன், தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை,
கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே!

[8]
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால்,
தொழுது மா மலரோனும், காண்கிலார்
கழுதினான், கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.

[9]
புத்தர் புன் சமண் ஆதர், பொய் உரைப்
பித்தர், பேசிய பேச்சை விட்டு, மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே!

[10]
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்,
சிந்தையில் துயர் ஆய தீர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.029  
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய  
பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

[1]
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.

[2]
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே.

[3]
மை தவழும் மா மிடறன், மாநடம் அது ஆடி,
கை வளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,
தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.

[4]
முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே.

[5]
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச,
தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.

[6]
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.

[7]
பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர்
நெருக்குஉறு கடல் திரைகள் முத்தம்மணி சிந்த,
செருக்குஉறு பொழில் பொலி திருப் புகலிஆமே.

[8]
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.

[9]
கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.

[10]
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.030  
மறம் பயம் மலிந்தவர் மதில்  
பண் - இந்தளம்   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

[1]
விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

[2]
விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;
திரிந்தனை; குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை; புணர்ந்தனை; பிணம் புகு மயானம்
புரிந்தனை; மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

[3]
வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க,
துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க,
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

[4]
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை; ஒர் பாகம்,
கரும்பொடுபடும்சொலின்மடந்தையை மகிழ்ந்தோய்;
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே!

[5]
அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும்,
நினைப்பு உடை மனத்தவர் வினைப்பகையும் நீயே;
தனல் படு சுடர்ச் சடை தனிப் பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்!

[6]
மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருள்கிழமை பெற்றோர்,
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்,
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

[7]
இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க
உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி,
வலம்கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!

[8]
வடம் கெட நுடங்குண இடந்த இடை அல்லிக்
கிடந்தவன், இருந்தவன், அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர், உடம்பொடு நிமிர்ந்து, உடன்வணங்க,
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம்
அமர்ந்தோய்!

[9]
விடக்கு ஒருவர் நன்று என, விடக்கு ஒருவர் தீது என,
உடற்கு உடை களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள், பிடக்குஉரை படுத்து, உமை ஒர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே!

[10]
கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்,
பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  
பண் - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)

சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

[1]
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.

[2]
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்
போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற
நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.

[3]
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன்,
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால்
கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.

[4]
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.

[5]
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.

[6]
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.

[7]
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

[8]
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

[9]
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர்,
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு,
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே.

[10]
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.032  
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  
பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.

[1]
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார,
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.

[2]
கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில்
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திரு ஐயாறே.

[3]
நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று,
எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.

[4]
வென்றி மிகு தாருகனது ஆர் உயிர் மடங்க,
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ,
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர்மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.

[5]
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.

[6]
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,
என்ன சதி? என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.

[7]
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்
துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.

[8]
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.

[9]
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்,
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால்
மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.

[10]
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.033  
ஏடு மலி கொன்றை, அரவு,  
பண் - இந்தளம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

[1]
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே.

[2]
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.

[3]
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப்
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.

[4]
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர்
அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே.

[5]
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும்
காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம்
கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.

[6]
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.

[7]
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை
எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட,
நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே.

[8]
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே.

[9]
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச்
சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.

[10]
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.034  
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி  
பண் - இந்தளம்   (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை)

முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.

[1]
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல்
ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர்
மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள்
பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே.

[2]
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர், புரிநூலர், இடம் என்பர்
வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர்,
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே.

[3]
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி,
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.

[4]
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும்
நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.

[5]
மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி,
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.

[6]
மந்தணம் இருந்து புரி மா மடிதன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர்
பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.

[7]
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு,
பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.

[8]
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட,
அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.

[9]
மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர்,
முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர்
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம்,
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.

[10]
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.035  
பரவக் கெடும், வல்வினை பாரிடம்  
பண் - இந்தளம்   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)

பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.

[1]
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி,
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.

[2]
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும்
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி;
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.

[3]
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

[4]
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.

[5]
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத்
துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி,
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.

[6]
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும்
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும்
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.

[7]
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க,
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல்,
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.

[8]
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி,
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின்
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.

[9]
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக்
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.

[10]
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.036  
சீர் ஆர் கழலே தொழுவீர்!  
பண் - இந்தளம்   (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை)

சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?

[1]
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி,
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே?

[2]
அன்பால் அடி கைதொழுவீர்! அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி,
இன்புஆய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
பொன் போல் சடையில் புனல் வைத்த பொரு

[3]
நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி,
இச்சித்து, இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே?

[4]
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர்
நல் தாழ்குழல் நங்கையொடும் உடன் ஆகி,
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
புற்று ஆடு அரவோடு பூண்ட பொரு

[5]
தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர்
சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி,
ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

[6]
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது சொல்லீர்
பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே?

[8]
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன் ஆகி,
இயல்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே?

[9]
துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்! சொல்லீர்
பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன் ஆகி,
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே?

[10]
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.037  
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்  
பண் - இந்தளம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

[1]
சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே?

[2]
குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?

[3]
படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,
கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே?

[4]
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

[5]
பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி,
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா!
உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல்,
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?

[6]
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா!
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல்,
கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?

[7]
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா!
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த,
அலங்கல் விரல் ஊன்றி, அருள்செய்தஆறே?

[8]
கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல்,
வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?

[9]
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற,
ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்!
ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல்,
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?

[10]
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.038  
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  
பண் - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)

நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.

[1]
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்,
வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித்
தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.

[2]
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு
ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை,
தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.

[3]
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி,
தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.

[4]
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,
கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.

[5]
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில்,
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில்
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.

[6]
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர்,
ஓத_நஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில்
மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத்
தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.

[7]
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந்
தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.

[8]
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில்
சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி
காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.

[9]
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே,
பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.

[10]
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  
பண் - இந்தளம்   (சீர்காழி )

ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

[1]
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு
அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம்
பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும்,
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான்
பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே,
எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக்
கடல் நீந்தல் ஆம், காரணமே.

[2]
அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும்,
அழகன் உறை கா அனைத்தும், துறைகள்
எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும்,
குளம் மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும்,
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன்
மதிக்கும் இடம் ஆகிய பாழிமூன்றும்,
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்,
அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே!

[3]
அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப்
பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி,
திரு நனிபள்ளி, சீர் மகேந்திரத்துப்
பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான்
விரும்பும் இடைப்பள்ளி, வண் சக்கரம் மால்
உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி,
உணராய், மட நெஞ்சமே, உன்னி நின்றே!

[4]
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு,
அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர்,
சேறை, துலை புகலூர், அகலாது
இவை காதலித்தான் அவன் சேர் பதியே.

[5]
மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும்
மதி கூர் திருக்கூடலில் ஆலவாயும்,
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்,
இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும்,
கனம் அம் சின மால்விடையான் விரும்பும்
கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர்,
தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்!
தவம் ஆம்; மலம் ஆயினதான் அறுமே.

[6]
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம்,
முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி,
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும்
கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும்,
கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும்,
கொதுங்கோவலூர், திருக்குணவாயில்,

[7]
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்,
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்
புறம்பயம், பூவணம், பூழியூரும்,
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள்
நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே!

[8]
நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல்,
நெடுவாயில், குறும்பலா, நீடு திரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம்,
நளிர்சோலை உஞ்சேனைமாகாளம், வாய்மூர்,
கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த
கடல்வண்ணனும் மாமலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும்
குடமூக்கு, என்று சொல்லிக் குலாவுமினே!

[9]
குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ்
குருந்தங்குடி, தேவன்குடி, மருவும்
அத்தங்குடி, தண் திரு வண்குடியும்
அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த
நித்தன், நிமலன், உமையோடும் கூட
நெடுங் காலம் உறைவு இடம் என்று சொல்லாப்
புத்தர், புறம்கூறிய புன் சமணர்,
நெடும் பொய்களை விட்டு, நினைந்து உய்ம்மினே!

[10]
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற
அமரர்பெருமான், பதி ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு
இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார்,
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,  
பண் - சீகாமரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

[1]
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக்
காம்! என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான்
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

[2]
நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல்,
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும்
பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!

[3]
சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு!  எத்தனையும்
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை,
நா, நாளும் நன்நியமம் செய்து, சீர் நவின்று ஏத்தே!

[4]
கண் நுதலான், வெண் நீற்றான், கமழ் சடையான், விடை >ஏறி,
பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல >உடையான்,
விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே.

[5]
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி,
கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே

[6]
சிலை அதுவே சிலை ஆகத் திரி புரம் மூன்று எரிசெய்த
இலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன்,
அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி பணிந்தால்,
நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே.

[7]
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு >தாள
நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான்,
உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.

[8]
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு ஆய்
அரியான் ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான்,
தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழ் உலகும் உடன் ஆள உரியாரே.

[9]
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்;
முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு உருவன்;
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும்
சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.

[10]
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்
பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.041  
மண் புகார், வான்புகுவர்; மனம்  
பண் - சீகாமரம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)

மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

[1]
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச்
சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும்,
வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.

[2]
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார்,
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப,
நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.

[3]
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும்
தாழ்பொழில்வாய்,
மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும்
காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே!

[4]
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள்
கொடியிடையைப்
பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல்
பால்மதியம்
தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ்
ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே.

[5]
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை
முன்
தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான்,
திருமுடிமேல்
ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே.

[6]
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி,
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும்
அலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள்
அலவே.

[7]
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும்
எரியுண்ண,
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு
அரக்கனையும்
தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர்
இலையே.

[8]
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும்,
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை;
தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே.

[9]
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப்
போய்
அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று
அடைமின்,
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!

[10]
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார்
அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.042  
அக்கு இருந்த ஆரமும், ஆடு  
பண் - சீகாமரம்   (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)

அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[1]
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே
கோட்டகத்தில்
தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.

[2]
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான் தன்
மடந்தை
தோள் ஆகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில்
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[3]
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று அடரப்
பொங்கினான், பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான்,
பூங்கோயில்
அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[4]
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார் வெண்
தலை என்பு
ஆக்கினான், பல்கலன்கள்; ஆதரித்துப் பாகம் பெண்
ஆக்கினான்; தொல் கோயில் ஆம்பல் அம்பூம் பொய்கை
புடை
தாக்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[5]
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான்,
கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில்
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம்
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே.

[6]
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய
வாங்கினார், வானவர்கள் வந்து இறைஞ்சும், தொல் கோயில்
பாங்கின் ஆர் நால்மறையோடு ஆறு அங்கம் பல்கலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[7]
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி,
இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்
கோயில்
பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும்
தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[8]
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல்
கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு, இல்லை என்னாது,
ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[9]
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர்,
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில்
சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை
தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[10]
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி,
நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.043  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,  
பண் - சீகாமரம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.

[1]
தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும்
இடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து,
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

[2]
வாச நலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ,
ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும்
ஒழியாமே,
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

[3]
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம்
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருது அழித்தான்_ புள்ளிருக்கு வேளூரே.

[4]
கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடி ஆகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
வேதத்தின் மந்திரத்தால், வெண்மணலே சிவம் ஆக,
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

[5]
திறம் கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே,
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி
வந்தானைப்
புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்கு வேளூரே.

[6]
அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி,
பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து,
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

[7]
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
எண் இன்றி முக்கோடிவாணாள் அது உடையானைப்
புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.

[8]
வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து
அவியச்
சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம்
ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.

[9]
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர், எம்பெருமானார், தாம் இனிது ஆய் உறையும்
இடம்
விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று,
இராமற்காப்
புடைத்து அவனைப் பொருது அழித்தான்
ள்ளிருக்குவேளூரே.

[10]
செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து
ஆவான்,
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.044  
துன்னம் பெய் கோவணமும் தோலும்  
பண் - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

[1]
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

[2]
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.

[3]
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே

[4]
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?

[5]
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

[6]
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

[7]
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே

[8]
புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?

[9]
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார,
கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?

[10]
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.045  
தையல் ஓர் கூறு உடையான்,  
பண் - சீகாமரம்   (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை)

தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான்,
மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான்,
நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே.

[1]
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர் கூறு
உடையான்,
படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான்,
நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான்,
கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே.

[2]
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்;
ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக்
காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே.

[3]
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த,
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து
அவியக்
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே.

[4]
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு
உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு
அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே.

[5]
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான்,
அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு
உகந்தான்,
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல்
கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே.

[6]
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக.
எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்.
பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர்
கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.

[7]
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்;
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும்
காதலினான்; மேவி உறை கோயில் கைச்சினாமே.

[8]
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும்,
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்;
பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல்
கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே.

[9]
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை,
பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்,
விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.046  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்  
பண் - சீகாமரம்   (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை)

பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து,
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.

[1]
சூடும், பிறை சென்னி; சூழ்காடு இடம் ஆக
ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகு ஆக;
நாடும் சிறப்பு ஓவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர்பால் பற்றா ஆம், பாவமே.

[2]
கல்லால் நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று,
எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தைச்
சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார். தொல் நெறிக்கே

[3]
கோலத்து ஆர் கொன்றையான், கொல் புலித் தோல்
ஆடையான்,
நீலத்து ஆர் கண்டத்தான், நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால், சூழா ஆம், தொல்வினையே.

[4]
கறை ஆர் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன்,
பிறை ஆர் வளர்சடையான், பெண்பாகன் நண்பு ஆய
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம், இன்பமே.

[5]
கண் ஆர் நுதலான், கனல் ஆடு இடம் ஆகப்
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி,
நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே.

[6]
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான்,
பெண் பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான்
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா, இடர்தானே.

[7]
பத்துத் தலையோனைப் பாதத்து ஒருவிரலால்
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான்
நத்தின் ஒலி ஓவ நாலூர்மயானத்து என்
அத்தன்; அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.

[8]
மாலோடு நான்முகனும் நேட, வளர் எரி ஆய்,
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி; பாதம் பணிவோமே.

[9]
துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார்,
புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்!
நண்பால் சிவாய! எனா நாலூர்மயானத்தே
இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.

[10]
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்  
பண் - சீகாமரம்   (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)

மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[1]
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[2]
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!

[3]
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[4]
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[5]
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி,
நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[6]
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக்
கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[7]
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்,
கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள்
கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[8]
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[9]
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில்
கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!

[10]
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்  
பண் - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

[1]
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.

[2]
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

[3]
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

[4]
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

[5]
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

[6]
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.

[7]
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

[8]
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.

[9]
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;
வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

[10]
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.049  
பண்ணின் நேர் மொழி மங்கைமார்  
பண் - சீகாமரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, எம்பெருமான்! என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.

[1]
மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி,
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய
மாந்தர்தம் வினை
விண்டல் அங்கு எளிது ஆம்; அது நல்விதி ஆமே.

[2]
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில்
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி,
தோடு உலாவிய காது உளாய்! சுரிசங்க வெண்குழையாய்! என்று என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே.

[3]
மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம் ஆர் மது மல்க, நாள்தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி,
ஐயனே! அரனே! என்று ஆதரித்து ஓதி, நீதி உளே
நினைபவர்,
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.

[4]
மலி கடுந் திரைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிர் நித்திலம் விழ,
கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி,
வலிய காலனை வீட்டி மாணிதன் இன் உயிர் அளித்தானை வாழ்த்திட,
மெலியும், தீவினை நோய் அவை; மேவுவர், வீடே.

[5]
மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து, வைகலும்,
கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி,
நெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை
பாடுவார், வினை
செற்ற மாந்தர் எனத் தெளிமின்கள், சிந்தையுளே

[6]
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ, பயில்
கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி,
ஊனுள் ஆர் உயிர் வாழ்க்கையாய்! உறவு ஆகி நின்ற
ஒருவனே! என்று என்று
ஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே.

[7]
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி சேர் வயல், ஆர, வைகலும்
கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி
அத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்!
உன கழல்
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே!

[8]
பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி உண்ண, மந்திகள்
கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி,
திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர்ச்
செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே.

[9]
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர்,
கண்டு சேரகிலார்; அழகு ஆர் கலிக் காழி,
தொண்டைவாய் உமையோடும் கூடிய வேடனே சுடலைப் பொடி அணி!
அண்டவாணன்! என்பார்க்கு அடையா, அல்லல் தானே.

[10]
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப்
பெயர் பெற்ற ஊர், திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி,
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன்
செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.050  
குன்ற வார்சிலை, நாண் அரா,  
பண் - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)

குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

[1]
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,
வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? விண்ணவனே!
கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழி சந்து கார்
அகில் தந்து, பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!

[2]
நீண்ட வார்சடை தாழ, நேரிழை பாட, நீறு மெய் பூசி, மால் அயன்
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என்?
பூண்ட கேழல் மருப்பு, அரா, விரிகொன்றை, வாள் வரி ஆமை, பூண் என
ஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!

[3]
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன் இசை
பாட, நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!

[4]
தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி. நின் கழல் ஏத்துவார் அவர்
உண்டியால் வருந்த, இரங்காதது என்னை கொல் ஆம்?
வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!

[5]
ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!

[6]
மங்கை வாள் நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொல்
ஆம்?
பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவு
அம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!

[7]
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்து இடை
வென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்?
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபது தான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

[8]
செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி
வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்?
தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,
ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

[9]
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடி
பத்தர் பேண, நின்ற பரம் ஆய பான்மை அது என்?
முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன்! என்று இமையோர் பரவிடும்
அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!

[10]
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.051  
நீருள் ஆர் கயல் வாவி  
பண் - சீகாமரம்   (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை)

நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[1]
தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற, மிண்டிய,
தாளினார் வளரும் தவம் மல்கு திருக்களருள
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா! விரும்பும் அடியாரை
ஆள் உகந்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[2]
பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றி செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள
நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[3]
அம்பின் நேர் தடங்கண்ணினார் உடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திருக்களருள
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா! இணை அடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[4]
கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசை செய,
தெங்கு பைங்கமுகம் புடை சூழ்ந்த திருக்களருள
மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே! பிணை கொண்டு, ஓர் கைத்தலத்து,
அம் கையில் படையாய்! அடைந்தார்க்கு அருளாயே!

[5]
கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயல் இடைச்
சேல், இளங் கயல், ஆர் புனல் சூழ்ந்த திருக்களருள
நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான் எனப் பொலி
ஆல நீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே!

[6]
தம் பலம்(ம்) அறியாதவர் மதில் தாங்கு மால்வரையால் அழல் எழத்
திண்பலம் கெடுத்தாய்! திகழ்கின்ற திருக்களருள
வம்பு அலர் மலர் தூவி, நின் அடி வானவர் தொழ, கூத்து உகந்து பே
ரம்பலத்து உறைவாய்! அடைந்தார்க்கு அருளாயே!

[7]
குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக்களருள
நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான் தன் நீள் முடி
அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே!

[8]
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி,
தெண் நிலாமதியம் பொழில் சேரும் திருக்களருள
உள் நிலாவிய ஒருவனே! இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான்! அடைந்தார்க்கு அருளாயே!

[9]
பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள் பேணிய
தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக்களருள
வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய சொற்கள் ஆன பொய்
ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[10]
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.052  
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  
பண் - சீகாமரம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)

கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே

[1]
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழை
குன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான் அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.

[2]
விரவி நாளும் விழா இடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய,
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில்,
அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடி
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே.

[3]
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,
நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே! என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.

[4]
பழைய தம் அடியார் துதிசெய, பார் உளோர்களும் விண் உளோர் தொழ,
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்,
கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான் இடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே.

[5]
பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில்,
மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே! என உள் நெகிழ்ந்தவர்,
துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத் தொல் நிலத்தே.

[6]
கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார் அவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.

[7]
வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனை
மிண்டு எலாம் தவிர்த்து, என், உகந்திட்ட வெற்றிமையே?

[8]
கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின்
குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில்,
விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள்
எருது உகந்தவனே! இரங்காய், உனது இன் அரு

[9]
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,
கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை
அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே!

[10]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.053  
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ  
பண் - சீகாமரம்   (திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீசுவரர் திருப்புருவமின்னாளம்மை)

விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர்,
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக்
கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!

[1]
நீடல் கோடல் அலர, வெண்முல்லை நீர் மலர்நிரைத் தாது அளம்செய,
பாடல் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்,
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க, வெண்குழை துள்ள, நள் இருள்
ஆடும் சங்கரனே! அடைந்தார்க்கு அருளாயே!

[2]
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல்
பாளை ஒண் கமுகம் புறவு ஆர் பனங்காட்டூர்,
பூளையும் நறுங் கொன்றையும் மதமத்தமும் புனைவாய்! கழல் இணைத்
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே!

[3]
மேய்ந்து இளஞ் செந்நெல் மென் கதிர் கவ்வி
மேல்படுகலில், மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவு ஆர் பனங்காட்டூர்,
ஆய்ந்த நால்மறை பாடி ஆடும் அடிகள்! என்று என்று அரற்றி, நல் மலர்,
சாய்ந்து, அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே!

[4]
செங்கய(ல்)லொடு சேல் செருச் செய, சீறியாழ் முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவும் ஆர் பனங்காட்டூர்,
கங்கையும் மதியும் கமழ் சடைக் கேண்மையாளொடும் கூடி, மான்மறி
அம் கை ஆடலனே! அடியார்க்கு அருளாயே!

[5]
நீரின் ஆர் வரை கோலி, மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவு ஆர் பனங்காட்டூர்,
காரின் ஆர் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்! என்று கைகூப்பி, நாள்தொறும்
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே!

[6]
கை அரிவையர் மெல்விரல்(ல்) அவை காட்டி, அம்மலர்க்காந்தள், அம் குறி
பை அராவிரியும் புறவு ஆர்பனங்காட்டூர்,
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய்! கழல் ஏத்தி நாள்தொறும்
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே!

[7]
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர்ப் பொய்கை,
பாவில் வண்டு அறையும் புறவு ஆர் பனங்காட்டூர்
மேவி, அந்நிலை ஆய் அரக்கன தோள் அடர்த்து, அவன் பாடல் கேட்டு, அருள்
ஏவிய பெருமான்! என்பவர்க்கு அருளாயே!

[8]
அம் தண் மாதவி, புன்னை, நல்ல அசோகமும்(ம்), அரவிந்தம், மல்லிகை,
பைந் தண் நாழல்கள், சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
எந்து இள(ம்) முகில்வண்ணன், நான்முகன், என்று இவர்க்கு
அரிது ஆய் நிமிர்ந்தது ஒர்
சந்தம் ஆயவனே! தவத்தார்க்கு அருளாயே!

[9]
நீணம் ஆர் முருகு உண்டு, வண்டு இனம், நீல மா மலர் கவ்வி, நேரிசை
பாணி யாழ்முரலும் புறவு ஆர்பனங்காட்டூர்,
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக, தலை
ஊண் உரியவனே! உகப்பார்க்கு அருளாயே!

[10]
மையின் ஆர் மணி போல் மிடற்றனை, மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை,
பைய தேன் பொழில் சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
ஐயனை, புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.054  
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  
பண் - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.



[1]
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்!
ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்!
போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[2]
அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல் அடைவு எய்த,
மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்!
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி,
எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

[3]
கயில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! கடிய கரியின்தோல்,
மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்!
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதி ஆய் விளங்கும் பைம்புகலி,
எயில் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக இசைந்தீரே.

[4]
நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்!
பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி,
தே ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

[5]
மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்!
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி,
கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

[6]
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரியக் கணை தொட்டீர்!
அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த, அருள் செய்தீர்!
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி,
ஒளி புல்கு கோயிலே கோயில் ஆக உகந்தீரே.

[7]
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர் கோனை வரைக்கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார்
புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி,
வரம் தோன்று கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[8]
சலம் தாங்கு தாமரை மேல் அயனும், தரணி அளந்தானும்,
கலந்து ஓங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்!
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி,
நலம் தாங்கு கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

[9]
நெடிது ஆய வன் சமணும், நிறைவு ஒன்று இல்லாச் சாக்கியரும்,
கடிது ஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள் ஆனீர்!
பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து
ஏத்த,
வடிவு ஆரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[10]
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.055  
நலச் சங்க வெண்குழையும் தோடும்  
பண் - காந்தாரம்   (திருத்தலைச்சங்காடு செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை)

நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.

[1]
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்!
மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்!
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும்
தலைச்சங்கை,
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

[2]
சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள் ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

[3]
வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட வெண்திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர்! தலைச்சங்கை,
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[4]
சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு ஆடலீர்!
நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்!
ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

[5]
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று, ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார், போற்று ஓவார்,
சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

[6]
அடி புல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து, ஓர் அனல் ஏந்தி,
கொடி புல்கு மென்சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்!
பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச்சங்கை,
கடி புல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

[7]
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக்
கோமானை,
வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும்
மாண்பினீர்!
அரை ஆர்ந்த மேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
நிரை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நினைந்தீரே.

[8]
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும், பைந்தாமரையானும்,
போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை,
சேய் ஓங்கு கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[9]
அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர் சாக்கீயர்,
தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்!
தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை,
நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே.

[10]
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.056  
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  
பண் - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்!
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்!
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில்,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[2]
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம் அவை பாட,
சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
எழில் மல்கும் நால் மறையோர் முறையால் ஏத்த,
இடைமருதில்,
பொழில் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.

[3]
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்!
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்!
எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில்,
செல்வாய கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[4]
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த,
திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில்,
பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே.

[5]
சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு பூசினீர்!
வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்!
இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில்,
புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.

[6]
புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்! பொலிவு
ஆர்ந்த
சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்!
இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள்
இடைமருதில்,
கனம் மல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

[7]
சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்!
திறல் அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்!
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த
இடைமருதில்,
நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

[8]
மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்!
கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினீர்!
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை
இடைமருதில்,
நிறை மல்கு கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

[9]
சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும் சமணரும்,
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே,
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள்
இடைமருதில்,
அன்பு ஆய கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

[10]
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.057  
பெண் அமரும் திருமேனி உடையீர்!  
பண் - காந்தாரம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
கொள்கையீர்!
சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2


[2]
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை தாழ,
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்!
சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்,
மறை நவின்ற கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[3]
கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்!
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு
நல்லூர்,
வான் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[4]
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி, நெறிகுழலாள
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்!
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி, திரு நல்லூர்,
மணம் கமழும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[5]
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ,
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர்,
ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

6


[6]
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண,
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்!
தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்,
வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[7]
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை
எடுப்ப,
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு
உகந்தீர்!
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்,
மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[8]
போதின் மேல் அயன், திருமால், போற்றி உம்மைக்
காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்!
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்,
மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே.

[9]
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று
அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர்,
மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[10]
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.058  
கலை வாழும் அம் கையீர்!  
பண் - காந்தாரம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)

கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும்
அமர்வித்தீர்!
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்,
நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.

[1]
அடி ஆர்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப, அங்கையில்
செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி, உலகம் பலி
தேர்வீர்!
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்,
படி ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பயின்றீரே.

[2]
கழல் ஆர் பூம்பாதத்தீர்! ஓதக்கடலில் விடம் உண்டு,
அன்று,
அழல் ஆரும் கண்டத்தீர்! அண்டர் போற்றும் அளவினீர்!
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில்,
நிழல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

[3]
மறி ஆரும் கைத்தலத்தீர்! மங்கை பாகம் ஆகச் சேர்ந்து
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்!
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில்,
நெறி ஆரும் கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

[4]
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை
ஆக,
பிழையாத சூலம் பெய்து, ஆடல் பாடல் பேணினீர்!
குழை ஆரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்,
விழவு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மிக்கீரே.

[5]
அரவு ஆர்ந்த திருமேனி ஆன வெண் நீறு ஆடினீர்!
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு
உண்டீர்!
குரவு ஆர்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில்
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

[6]
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள் ஏறு ஊர்தியீர்!
ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்!
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்,
நீடல் ஆர் கோயிலே கோயில் ஆகப் நிகழ்ந்தீரே.

[7]
கொங்கு ஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறள் ஆய்
நிமிர்ந்தானும்,
அங்காந்து தள்ளாட, அழல் ஆய் நிமிர்ந்தீர்! இலங்கைக்
கோன்
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர்! குடவாயில்,
பங்கு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பரிந்தீரே.

[8]
தூசு ஆர்ந்த சாக்கியரும், தூய்மை இல்லாச் சமணரும்,
ஏசு ஆர்ந்த புன்மொழி நீத்து, எழில் கொள் மாடக்
குடவாயில்,
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி
போற்ற,
தேசு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[10]
நளிர் பூந் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்,
குளிர் பூங் குடவாயில் கோயில் மேய கோமானை,
ஒளிர்பூந்தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்,
தளர்வு ஆனதாம் ஒழிய, தகு சீர் வானத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.059  
நலம் கொள் முத்தும் மணியும்  
பண் - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்! என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.

[1]
ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா! என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

[2]
வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு இசைசெய்ய,
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலிக் காழி,
முடி கொள் சடையாய்! முதல்வா! என்று முயன்று ஏத்தி,
அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.

[3]
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்! எனப்
பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

[4]
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.

[5]
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
பந்தம் நீங்க அருளும் பரனே! என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

[6]
புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க,
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப்
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த
முயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.

[7]
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்
பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.

[8]
மாண் ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரி ஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப்
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி,
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.

[9]
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்,
கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித்
தஞ்சம் ஆய தலைவன்; தன்னை நினைவார்கள்,
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.

[10]
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.060  
சிந்தை இடையார், தலையின் மிசையார்,  
பண் - காந்தாரம்   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)

சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

[1]
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், பெம்மான் என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

[2]
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

[3]
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.

[4]
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

[5]
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

[6]
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

[7]
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

[8]
நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்,
புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

[9]
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

[10]
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.061  
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  
பண் - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

[1]
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

[2]
தண் முத்து அரும்பத் தடம் மூன்று உடையான் தனை
உன்னி,
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப, உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும்
வெண்காடே.

[3]
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே,
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.

[4]
பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே.

[5]
ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

[6]
கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு
ஆய்
ஆள்வித்து, அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.

[7]
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி,
முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும்
விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.

[8]
காரியானோடு, கமலமலரான், காணாமை
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்! என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

[9]
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

[10]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.062  
காயச் செவ்விக் காமற் காய்ந்து,  
பண் - காந்தாரம்   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)

காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!

[1]
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்;
நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி,
ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி,
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.

[2]
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்,
மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை,
தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார்
அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே.

[3]
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

[4]
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

[5]
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை
ஒளிரும் பிறை ஒன்று உடையான், ஒருவன், கை கோடி
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்,
மிளிரும்(ம்) அரவம் உடையான் மீயச்சூரானே.

[6]
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார்,
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.

[7]
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர்,
ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.

[8]
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார்
கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.

[9]
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த
கொள்கையார்;
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.

[10]
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.063  
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  
பண் - காந்தாரம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)

மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.

[1]
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால்,
ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும்,
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.

[2]
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,
கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,
பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே.
[3]
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற,
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.

[4]
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை,
மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்;
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்-
பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.

[5]
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும்
வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

[6]
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,
சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

[7]
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்
வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

[8]
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட,
ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள்,
புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

[9]
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல;
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா! என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.

[10]
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.064  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  
பண் - காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

[1]
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை,
மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு,
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

[2]
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம்,
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை,
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த,
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே.

[3]
தெரிந்த அடியார், சிவனே! என்று திசைதோறும்,
குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி,
இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர்,
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே.

[4]
வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித் தம்
சித்தம் நைந்து, சிவனே! என்பார் சிந்தையார்;
கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும்
முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே.

[5]
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தமலர், தூவி,
நம்பா! என்ன, நல்கும் பெருமான் உறை கோயில்
கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

[6]
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த,
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே.

[8]
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும்,
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட,
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

[9]
கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே நின்று
உருகு சிந்தை இல்லார்க்கு, அயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளைய, சிறு மந்தி
முருகின் பணைமேல் இருந்து நடம் செய் முதுகுன்றே.

[10]
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன்,
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்,
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.065  
கறை அணி வேல் இலர்போலும்;  
பண் - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[1]
கூர் அம்பு அது இலர்போலும்; கொக்கின் இறகு இலர்
போலும்;
ஆரமும் பூண்டிலர் போலும்; ஆமை அணிந்திலர்
போலும்;
தாரும் சடைக்கு இலர்போலும்; சண்டிக்கு அருளிலர்போலும்;
பேரும் பல இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[2]
சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்;
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்;
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்;
பித்தவடிவு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[3]
நச்சு அரவு ஆட்டிலர் போலும்; நஞ்சம் மிடற்று
இலர்போலும்;
கச்சுத் தரித்திலர்போலும்; கங்கை தரித்திலர்போலும்;
மொய்ச்ச வன்பேய் இலர்போலும்; முப்புரம் எய்திலர்போலும்;
பிச்சை இரந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[4]
தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்;
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர்போலும்;
ஓடு கரத்து இலர்போலும்; ஒள் அழல் கை இலர்போலும்
பீடு மிகுத்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.

[5]
விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்;
அண்ணல் அயன்தலை வீழ, அன்றும் அறுத்திலர்போலும்;
வண்ண எலும்பினொடு அக்குவடங்கள் தரித்திலர்போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வப் பிரமபுரம்
அமர்ந்தாரே.

[6]
பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு
அருளிலர்போலும்;
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர்போலும்;
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[7]
பரசு தரித்திலர்போலும்; படுதலை பூண்டிலர் போலும்;
அரசன் இலங்கையர் கோனை அன்றும்
அடர்த்திலர்போலும்;
புரை செய் புனத்து இளமானும், புலியின் அதள்,
இலர்போலும்
பிரசமலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே.

[8]
அடி முடி மால் அயன் தேட, அன்றும் அளப்பிலர்போலும்;
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர்போலும்;
படி மலர்ப்பாலனுக்கு ஆகப் பாற்கடல் ஈந்திலர்போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[9]
வெற்று அரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட
நின்றிலர்போலும்;
அற்றவர், ஆல்நிழல், நால்வர்க்கு அறங்கள்
உரைத்திலர்போலும்;
உற்றவர் ஒன்று இலர்போலும்; ஓடு முடிக்கு இலர்போலும்;
பெற்றமும் ஊர்ந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[10]
பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே,
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்  
பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[2]
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[3]
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[4]
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[5]
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[6]
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

[7]
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

[8]
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

[9]
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

[10]
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.067  
மண்ணும் ஓர் பாகம் உடையார்;  
பண் - காந்தாரம்   (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

[1]
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த
பின்னுசடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[2]
கள்ளம் மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தி,
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர்; எழில் மிகு
செல்வர்;
வெள்ளம், நகுதலைமாலை, விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளை மதிப் பெருமானார் பெரும் புலியூர் பிரியாரே.

[3]
ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறு
அங்கம்
பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து,
அஞ்சும்
ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர் ஒளி
தாங்கி,
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

[4]
தோடு உடையார், குழைக் காதில்; சூடுபொடியார்; அனல்
ஆடக்
காடு உடையார்; எரி வீசும் கை உடையார்; கடல் சூழ்ந்த
நாடு உடையார்; பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[5]
கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர்தம்
கண்;
முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர்; வேதபுராணர்;
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்து இடையார்; பணி
செய்ய,
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே.

[6]
மறை உடையார், ஒலிபாடல்; மா மலர்ச்சேவடி சேர்வார்,
குறை உடையார், குறை தீர்ப்பார்; குழகர், அழகர்; நம்
செல்வர்;
கறை உடையார், திகழ் கண்டம்; கங்கை சடையில்
கரந்தார்;
பிறை உடையார், சென்னிதன்மேல்; பெரும் புலியூர்
பிரியாரே.

[7]
உறவியும் இன்பு உறு சீரும் ஓங்குதல், வீடு எளிது ஆகி,
துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி,
மறவி அம்சிந்தனை மாற்றி, வாழ வல்லார்தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே.

[8]
சீர் உடையார்; அடியார்கள் சேடர்; ஒப்பார்; சடை சேரும்
நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்;
விரிகொன்றைத்
தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப்
பத்து ஆய
பேர் உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[9]
உரிமை உடைய அடியார்கள் உள் உற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி, அருள் செயும் ஆதிமுதல்வர்;
கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப்
பெருமை உடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[10]
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப்
பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.068  
வான் அமர் திங்களும் நீரும்  
பண் - காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

[1]
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

[2]
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.

[3]
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.

[4]
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[5]
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

[6]
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்

[7]
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.

[8]
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.

[9]
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.

[10]
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.069  
பெண் அமர் மேனியினாரும், பிறை  
பண் - காந்தாரம்   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)

பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு
செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[1]
தனைக் கன்னி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர்
தங்கள்
வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்;
நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை
நடுங்கப்
பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடு
முடியாரே.

[2]
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண் நீறு
அணிந்தாரும்,
புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு
அசைத்தாரும்
விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூ இலைச்சூலப்
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[3]
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம் எல்லாம் தொழுது
ஏத்த,
கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை
பறை, வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.

[4]
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார் அவர்
தங்கள்
ஆகம் உறைவு இடம் ஆக அமர்ந்தவர்
கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.

[5]
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்,
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்,
வடிவு உடை மங்கை தன்னோடு மணம் படு
கொள்கையினாரும்,
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[6]
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று
உழல்வாரும்,
தேன் அமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக்
கரைமேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[7]
புரந்தரன் தன்னொடு வானோர், போற்றி! என்று ஏத்த
நின்றாரும்,
பெருந்திறல் வாள் அரக்கன்(ன்)னைப் பேர் இடர் செய்து
உகந்தாரும்,
கருந்திரை மா மிடற்றாரும் கார் அகில் பல்மணி உந்திப்
பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடு முடியாரே.

[8]
திருமகள் காதலினானும், திகழ்தரு மா மலர் மேலைப்
பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர் அழல் ஆகிய
பெம்மான்
மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரி மாடே
பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடு முடியாரே.

[9]
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழி அல்லால்
மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம் பல பலவற்றால்
சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு,
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடு முடியாரே.

[10]
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடு
முடிதன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார், துயர்
தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.070  
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  
பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.

[1]
வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு வெங்குரு,
வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும்
செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும்
ஊரே.

[2]
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற
மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்
பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும்
ஊரே.

[3]
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை, வெள்ளம்
கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தாய், தொகு பிரமபுரம், தொல்
காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலி பண்டு ஆண்ட
மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் - நாம் கருதும்
ஊரே.

[4]
தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர்
காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
ஊரே.

[5]
தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே.

[6]
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.

[7]
புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி,
நறவம் மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன்
தன் ஊர்,
விறல் ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல்
அம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான் தன் கழுமலம் நாம்
சேரும் ஊரே.

[8]
சண்பை, பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி,
சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,
பார்மேல்
நண்பு ஆர் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம் நாண்
இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த
விமலன் ஊரே.

[9]
செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி,
செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
நுதலான் கருதும் ஊரே.

[10]
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு, புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே.

[11]
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை
நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
விருப்பு உளாரே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.071  
திருந்த மதி சூடி, தெண்  
பண் - காந்தாரம்   (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை)

திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
குறும்பலாவே.

[1]
நாள்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி அணிந்த நம்பான்,
நம்மை
ஆள்பலவும் தான் உடைய அம்மான், இடம்போலும் அம்
தண்சாரல்,
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு,
விண்ட
கோள் பலவின் தீம் கனியை மாக் கடுவன் உண்டு
உகளும் குறும்பலாவே.

[2]
வாடல் தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து வீக்கி,
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம்போலும் அம் தண்
சாரல்,
பாடல் பெடைவண்டு போது அலர்த்த, தாது அவிழ்ந்து,
பசும்பொன் உந்திக்
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண்சாரல்
குறும்பலாவே.

[3]
பால் வெண்மதி சூடி, பாகத்து ஓர் பெண் கலந்து, பாடி,
ஆடி,
காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
வெற்பில்,
நீலமலர்க்குவளை கண் திறக்க, வண்டு அரற்றும் நெடுந்
தண்சாரல்,
கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும்
குறும்பலாவே.

[4]
தலை வாள்மதியம் கதிர் விரிய, தண்புனலைத் தாங்கி,
தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம்போலும் முது வேய்
சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு
சாரல்,
குலைவாழைத் தீம்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும்
குறும்பலாவே.

[5]
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர், தண்மதியர்,
நெற்றிக்கண்ணர்,
கூற்று ஏர் சிதையக் கடிந்தார், இடம்போலும் குளிர் சூழ்
வெற்பில்,
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி
பூஞ்சாரல்,
கோல் தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும்
குறும்பலாவே.

[6]
பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி,
பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும்
பிலயம் தாங்கி,
மன்றத்து மண்முழவம் ஓங்கி, மணி கொழித்து, வயிரம்
உந்தி,
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.

[7]
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ்
அடர ஊன்றி,
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம்போலும்
சாரல்சாரல்,
பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில்
பொலிய ஏந்தி,
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.

[8]
அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய
அண்ணல், சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும்
விரிபூஞ்சாரல்,
மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து
மாந்த,
குரவம் முறுவல் செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல்
குறும்பலாவே.

[9]
மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு
உண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
வெற்பில்
நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல்
நிருத்தம் செய்ய,
கூடிய வேதுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும்
குறும்பலாவே.

[10]
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்
ஏற்று அண்ணல்,
நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக்
கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா
அன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.072  
பந்து ஆர் விரல் மடவாள்  
பண் - காந்தாரம்   (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)

பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.

[1]
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.

[2]
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த,
மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில்,
குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.

[3]
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர்,
ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.

[4]
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.

[5]
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி,
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.

[6]
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு ஒன்று அரைமேல் சாத்தி,
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த,
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.

[7]
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி,
முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்,
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்,
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.

[8]
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள் தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச்
செய் ஆர் எரி ஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.

[9]
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில்
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார,
சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.

[10]
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.073  
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  
பண் - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
எறிவித்த இறைவன் ஊரே.

[1]
திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன் ஊர்,
அயன் ஊர், தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம், சிலம்பன் ஊர், காழி, தகு
சண்பை, ஒண் பா
உரு வளர் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், தோணிபுரம்
உயர்ந்த தேவர்
வெருவ, வளர் கடல்விடம் அது உண்டு அணி கொள்
கண்டத்தோன் விரும்பும் ஊரே.

[2]
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் வாழ் ஊர்,
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி இறை
கொச்சை, அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய
மிக்க(அ)யன் ஊர், அமரர்கோன் ஊர்,
ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குரு அது அரன் நாளும்
அமரும் ஊரே.

[3]
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப் புகலி, தராய்,
தோணிபுரம், வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை,
தேவேந்திரன் ஊர், சீர்ப்
பூமகன் ஊர், பொலிவு உடைய புறவம், விறல் சிலம்பன்
ஊர், காழி, சண்பை
பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து, அவற்றின் பயன்
நுகர்வோர் பரவும் ஊரே.

[4]
தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி, வயம் கொச்சை,
தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமலம், மெய் உணர்ந்த(அ)யன் ஊர்,
விண்ணவர் தம் கோன் ஊர், வென்றித்
திரைச் சேரும் புனல் புகலி, வெங்குரு, செல்வம் பெருகு
தோணிபுரம், சீர்
உரை சேர் பூந்தராய், சிலம்பன் ஊர், புறவம் உலகத்தில்
உயர்ந்த ஊரே.

[5]
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங்
காழி, சண்பை,
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு, புகலி, பூந்தராய்,
தோணிபுரம், சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம், நல் கொச்சை,
வானவர் தம் கோன் ஊர்,
அண்டு அயன் ஊர், இவை என்பர் அருங்கூற்றை
உதைத்து உகந்த அப்பன் ஊரே.

[6]
வண்மை வளர் வரத்து அயன் ஊர், வானவர் தம் கோன்
ஊர், வண் புகலி, இஞ்சி
வெண் மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை,
வியன்காழி, கொச்சை,
கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம்,
பூந்தராய், சீர்ப்
பண் மலியும் சிரபுரம், பார் புகழ் புறவம் பால்வண்ணன்
பயிலும் ஊரே.

[7]
மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பன் ஊர்,
காழிமூதூர்,
நீடு இயலும் சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம்,
கமலம் நீடு
கூடிய(அ)யன் ஊர், வளர் வெங்குரு, புகலி, தராய்,
தோணிபுரம் கூடப் போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற
மலைச்சிலையன் ஊரே.

[8]
இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன்தன் ஊர்,
நிரக்க வருபுனல் புறவம், நின்ற தவத்து அயன் ஊர், சீர்த்
தேவர்கோன் ஊர்,
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசு இலாச் சண்பை, காழி,
கொச்சை,
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர்
வேதம் அறாத ஊரே.

[9]
மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை,
இந்திரன் ஊர், மெய்ம்மை
நூல் ஓதும் அயன் தன் ஊர், நுண் அறிவார் குரு, புகலி,
தராய், தூ நீர்மேல்
சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பன் ஊர்,
செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை
மண்ணோர் வாழ்த்தும் ஊரே.

[10]
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
தங்கும் ஊரே.

[11]
அக்கரம் சேர் தருமன் ஊர், புகலி, தராய், தோணிபுரம்,
அணி நீர்ப் பொய்கைப்
புக்கரம் சேர் புறவம், சீர்ச் சிலம்பன் ஊர், புகழ்க் காழி,
சண்பை, தொல் ஊர்
மிக்கர் அம் சீர்க் கழுமலமே, கொச்சை வயம், வேணுபுரம்,
அயன் ஊர், மேல் இச்
சக்கரம் சீர்த் தமிழ்விரகன் தான் சொன்ன தமிழ்
தரிப்போர் தவம் செய்தோரே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.074  
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்  
பண் - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
நாம் கருதும் ஊரே.

[1]
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கனக மாட
உருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும்
கொச்சை, காழி,
திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன் ஊர், செங்கமலத்து
அயன் ஊர், தெய்வத்
தருத் திகழும் பொழில் புறவம், சண்பை சடைமுடி
அண்ணல் தங்கும் ஊரே.

[2]
ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு
காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர்,
பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன் ஊர், புகலி, வெங்குரு கங்கை
தரித்தோன் ஊரே.

[3]
தரித்த மறையாளர் மிகு வெங்குரு, சீர்த் தோணிபுரம்,
தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி,
இமையோர் கோன் ஊர்,
தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர் திகழ் காழி, சண்பை,
செழுமறைகள் எல்லாம்
விரித்த புகழ்ப் புறவம், விரைக்கமலத்தோன் ஊர் உலகில்
விளங்கும் ஊரே.

[4]
விளங்கு அயன் ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம்,
மேகம் ஏய்க்கும்
இளங் கமுகம் பொழில் தோணிபுரம், காழி, எழில் புகலி,
புறவம், ஏர் ஆர்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச்சிரபுரம்,
வன் நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன்(ன்)
உடலம் காய்ந்தோன் ஊரே.

[5]
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர்
கழுமலம், மாத் தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன் ஊர், இருங் கமலத்து
அயன் ஊர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சை,
காழி, சண்பை
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை
கெடுத்தோன் திகழும் ஊரே.

[6]
திகழ் மாடம் மலி சண்பை, பூந்தராய், பிரமன் ஊர், காழி,
தேசு ஆர்
மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம் கொச்சை,
புறவம், விண்ணோர்
புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு வெம்போர்
மகிடற் செற்று,
நிகழ் நீலி, நின்மலன் தன் அடி இணைகள் பணிந்து
உலகில் நின்ற ஊரே.

[7]
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும்
வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர்
புறவம், மோடி
சென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி,
தேவர் கோன் ஊர்,
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே.

[8]
மிக்க கமலத்து அயன் ஊர், விளங்கு புறவம், சண்பை,
காழி, கொச்சை,
தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் சேர் ஊர்,
மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு
வல் அரக்கன் திண்தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த
எம்மான் ஊரே.

[9]
எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன் ஊர், கழுமலம்,
நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன் ஊர்,
நல் தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயன் ஊர், தராய்,
சண்பை காரின்
மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல் ஆய்
விளங்கிய எம் இறைவன் ஊரே.

[10]
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.

[11]
அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு,
கொச்சை, புறவம், அம் சீர்
மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம்,
தேவர் கோன் ஊர்,
அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன் ஊர், வழி
முடக்கும் ஆவின்பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர்,
தக்கோர் தாமே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.075  
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்  
பண் - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.

[1]
வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.

[2]
சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து, அயன்
வெண்தலைத்
துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள
மல் தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!

[3]
பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர் வண்ணனே.

[4]
தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்,
நா நயம் கொள் மறை ஓதி, மாது ஒருபாகமா,
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே.

[5]
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே,
மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன்
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள
பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே.

[6]
முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ,
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்,
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள
கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடி கொண்டதே!

[7]
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள
கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியு
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,
தொல் இருக்குமறை ஏத்து உகந்து உடன் வாழுமே.

[8]
மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான் தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.

[9]
நன்றி ஒன்றும் உணராத வன்சமண், சாக்கியர்,
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான்
கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள
வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.

[10]
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.076  
வாடிய வெண்தலை மாலை சூடி,  
பண் - காந்தாரம்   (திருஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை)

வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே.

[1]
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.

[2]
உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே.

[3]
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே.

[4]
போர்த்ததுவும் கரியின்(ன்) உரி; புலித்தோல், உடை;
கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு
ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும்(ம்) அரணம், படர் எரி மூழ்கவே.

[5]
தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம், சென்று உடன்
எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர் உறைவான் தலை,
அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே.

[6]
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்
சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

[7]
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,
ஒறுத்ததுவும்; ஒளி மா மலர் உறைவான் சிரம்,
அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.

[8]
சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,
அரவும், மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.

[9]
செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே திரி
புந்தி இலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி;
அந்தணன், எங்கள் பிரான், அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே.

[10]
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.077  
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்  
பண் - காந்தாரம்   (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)

பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால் தொழுவார்களே.

[1]
இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே, இமையோர் தொழ,
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில் எய்தவன்,
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறையணி நல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே.

[2]
என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா மதி உச்சியான்,
பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன், பிறப்பு இலி என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு
அன்பினார் அறையணி நல்லூர் அம் கையால் தொழுவார்கே

[3]
விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்,
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும்,
அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணி நல்லூர்
பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே.

[4]
தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர்தாம் தொழும் தேவன் நீ
ஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்! அறையணி நல்லூர்,
மேயினார் தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப்
பாயினாய்! அதிர் கழலினாய்! பரமனே! அடி பணிவனே.

[5]
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும் வீக்கிய
அரையினார், அறையணி நல்லூர் அண்ணலார், அழகு ஆயது ஓர்
நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார், நறும்போது சேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்கே

[6]
வீரம் ஆகிய வேதியர்; வேக மா களியானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம் இறை;
ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணி நல்லூர்
வாரம் ஆய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை மாயுமே.

[7]
தக்கனார் பெரு வேள்வியைத் தகர்த்து உகந்தவன், தாழ்சடை
முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணி நல்லூர்
நக்கனார் அவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம், நாங்கே

[8]
வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப் பிறர் பின் செலார்;
செய்வதே அலங்காரம் ஆம்; இவை இவை தேறி இன்பு உறில்,
ஐயம் ஏற்று உணும் தொழிலர் ஆம் அண்ணலார், அறையணி நல்லூர்ச்
சைவனார் அவர், சார்வு அலால், யாதும் சார்வு இலோம், நாங்கே

[9]
வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை செய்யன்மின்!
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்)! அரணம் பொடி
ஆக்கிய(ம்) மழுவாள் படை அண்ணலார் அறையணி நல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல், பறையும் ஆம், செய்த பாவமே.

[10]
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின் ஆர்
மொழியினால், அறையணி நல்லூர் முக்கண் மூர்த்திதன் தாள் தொழக்
கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.078  
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,  
பண் - காந்தாரம்   (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)

ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

[1]
அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது
ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்
புக்கவர் துயர் கெடுக! என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடு செய் விளநகர், அவர் மேயதே.

[2]
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின்
வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல் கடல் நஞ்சு
உண்ட
காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,
மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது விளநகர் அதே.

[3]
கால் விளங்கு எரி கழலினார், கை விளங்கிய வேலினார்,
நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்)
இலார்,
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்,
மேல் விளங்கு வெண்பிறையினார்; மேயது விளநகர் அதே.

[4]
மன்னினார், மறை, பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித்
துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என;
சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்
சேர்த்தினார்;
மின்னு பொன் புரிநூலினார்; மேயது விள நகர் அதே.

[5]
தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல் உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர்
என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே.

[6]
சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார்,
கல் தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்,
மல் தரும் திரள் தோளினார், மாசு இல் வெண்பொடிப்
பூசினார்,
வில் தரும் மணிமிடறினார், மேயது விள நகர் அதே.

[7]
படர் தரும் சடை முடியினார், பைங்கழல் அடி பரவுவார்
அடர் தரும் பிணி கெடுக என அருளுவார், அரவு
அரையினார்,
விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார்,
மிடல் தரும் படைமழுவினார், மேயது விளநகர் அதே.

[8]
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்,
பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார்,
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்,
மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே.

[9]
உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற மா
மணிவண்ணனும்,
உள்ளதன் தனைக் காண்பன், மேல் என்ற மா மலர்
அண்ணலும்,
உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும்
சடைமுடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.

[10]
மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன்,
சீர்
இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப்
போய்,
துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.079  
பவனம் ஆய், சோடை ஆய்,  
பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு
அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[1]
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும்
போவார்;
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்,
கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை
நெஞ்சே!
அம் தண் ஆருர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சே!

[2]
நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான்
நிலாயது அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக்
குலுங்கினாயே?
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு
ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சமே!

[3]
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம்
நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[4]
பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத்
தூங்கினாயே?
மறவல், நீ! மார்க்கமே நண்ணினாய்; தீர்த்த நீர் மல்கு
சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[5]
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய்த்
தேரைவாய்ச் சிறுபறவை
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று
கருதினாயே?
முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்தும்
முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[6]
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி,
வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு
மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம்
வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[7]
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து
இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால்
முகடு கொண்டு
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில்
மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[8]
தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம்,
என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப்
பற்றினாயே?
வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[9]
நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம்
நேடிக் காணாப்
படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர்
மலையாள் பாக
வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து
எண்தோள்
அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[10]
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.080  
வரிய மறையார், பிறையார், மலை  
பண் - காந்தாரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

[1]
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே

[2]
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

[3]
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
அடிகளே

[4]
வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது
இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள்
துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

[5]
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை
புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

[6]
பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

[7]
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை
போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

[8]
வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன்
ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

[9]
தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே

[10]
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.081  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்  
பண் - காந்தாரம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

[1]
சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம், தோல்
உடை ஆடை அது, கொண்டீர்! உமையாளை ஒருபாகம்
அடையாளம் அது கொண்டீர்! அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

[2]
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்!
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்!
மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த,
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

[3]
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து
உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே.

[4]
ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

[5]
மணி மல்கு மால்வரை மேல் மாதினொடு மகிழ்ந்து
இருந்தீர்!
துணி மல்கு கோவணத்தீர்! சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்!
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச, வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

[6]
நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்!
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

[7]
திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென் இலங்கையர்
கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரை தன்னின்
கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின்
ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.

[8]
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசை முகன், மால்,
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற(அ)ரிய திருவடியீர்!
பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு,
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே.
[9]
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்
புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன்
அடியே
நிலை ஆகப் பேணி, நீ சரண்! என்றார் தமை, என்றும்
விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.082  
பண் நிலாவிய மொழி உமை  
பண் - காந்தாரம்   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)

பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[1]
ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர்
ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[2]
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[3]
முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும் முறை முறை திரியும்
பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன் அடியார்கள்
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர்
அத்தன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[4]
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர்
ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[5]
பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்,
திங்கள் சூடிய தீ நிறக் கடவுள், தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

[6]
வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத்
தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

[7]
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன் நெரிந்து
வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான்
தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

[8]
முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர் காணா
எந்தை, திண் திறல் இருங்களிறு உரித்த எம்பெருமான்,
செந்து இனத்து இசை அறுபதம் முரல் திருத் தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

[9]
பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள
கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு
தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

[10]
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.083  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )

நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த, நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள், திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே.

[1]
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற, கொச்சைவயமே.

[2]
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன், இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது, கொச்சைவயமே.

[3]
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய, வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே.

[4]
பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக் கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்), இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே.

[5]
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார், நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு கொச்சைவயமே.

[6]
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும் ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி தேடு கொச்சைவயமே.

[8]
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது உண்ட மாலும், இகலி,
கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே.

[9]
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே.

[10]
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.084  
காரைகள், கூகை, முல்லை, கள,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)

காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர் தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள, வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும்; நமர்காள்

[1]
சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர் திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை, இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை நனிபள்ளி போலும்; நமர்காள்

[2]
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்,
கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ்
நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும்; நமர்காள்

[3]
குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு, இலங்கு தலைமாலையோடு குலவி,
ஒளிர் தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல,
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி பள்ளிபோலும்; நமர்காள்

[4]
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும்; நமர்காள்

[5]
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான் மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும், நனிபள்ளிபோலும்; நமர்காள்

[6]
தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு கொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல், பணிவார்கள் பாடல், பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும்; நமர்காள்

[7]
வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும்; நமர்காள்

[8]
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை, புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்; நமர்காள்

[9]
அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்,
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளிபோலும்; நமர்காள்

[10]
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.085  
வேய் உறு தோளி பங்கன்,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[2]
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[3]
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[4]
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[5]
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[6]
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[7]
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[8]
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

[9]
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.

[10]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.086  
உரையினில் வந்த பாவம், உணர்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!

[1]
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய்
ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளைமதி சூடு சென்னி விதி ஆன
வேத விகிர்தன்,
கான் இடை ஆடி, பூதப்படையான், இயங்கு விடையான்,
இலங்கு முடிமேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல், நண்ணு திரு
நாரையூர் கைதொழவே.

[2]
ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், துயர்
உற்ற தீங்கு விரவி,
பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு
உற்ற வண்ணம், அகலும்
போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ்
வான் உளோர்கள் புணரும்
தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு
நாரையூர் கைதொழவே.

[3]
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற,
உற்ற உலகின்
தாய் உறு தன்மை ஆய, தலைவன் தன் நாமம் நிலை ஆக
நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி, கோல விடம்
உண்ட கண்டன், முடிமேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன், மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[4]
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும்; தவம் ஆய
தன்மை வரும் வான்
மிசையவர்; ஆதி ஆய திருமார்பு இலங்கு விரிநூலர்;
விண்ணும் நிலனும்
இசையவர், ஆசி சொல்ல; இமையோர்கள் ஏத்தி;
அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற, நின்ற சிவன்; மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[5]
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம்
உணர்வு ஆக்கும்; உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும்; நெஞ்சில்
நிறைவு ஆற்றும்; நேசம் வளரும்
மறை வளர் நாவன், மாவின் உரி போர்த்த மெய்யன்,
அரவு ஆர்த்த அண்ணல், கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற
திரு நாரையூர் கைதொழவே.

[6]
தனம் வரும்; நன்மை ஆகும்; தகுதிக்கு உழந்து வரு திக்கு
உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று, நினைவு
ஒன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம், மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன்
தெரிந்த, அவுணர்
சினம் ஒரு கால் அழித்த, சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[7]
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி
அஞ்சும்; ஆதல் உற, நீர்
மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு
இலாத கடலின்
அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய,
தடக்கை முடிகள்,
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[8]
வேறு உயர் வாழ்வு தன்மை; வினை; துக்கம், மிக்க பகை
தீர்க்கும்; மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க, நின்ற கரவைக்
கரந்து, திகழும்
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும்
நேட, எரி ஆய்ச்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[9]
மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும்; உள்ளம்
வெளி ஆக்கும்; முன்னி உணரும்,
படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி
பாடி ஆடி பெருமை!
உடையினை விட்டு உளோரும், உடல் போர்த்து
உளோரும், உரை மாயும் வண்ணம் அழிய,
செடி பட வைத்து, உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

[10]
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.087  
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[1]
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர்
நாணி பூண, வரையில்
கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
அமரர்க்கு அளித்த தலைவன்;
மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
நம்பன் அவனே.

[2]
சூடக முன்கை மங்கை ஒரு பாகம் ஆக, அருள்
காரணங்கள் வருவான்;
ஈடு அகம் ஆன நோக்கி, இடு பிச்சை கொண்டு, படு
பிச்சன் என்று பரவ,
தோடு அகம் ஆய் ஓர் காதும், ஒரு காது இலங்கு குழை
தாழ, வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி, மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன்
அவனே.

[3]
சாயல் நல் மாது ஒர்பாகன்; விதி ஆய சோதி; கதி ஆக
நின்ற கடவுள
ஆய் அகம் என்னுள் வந்த, அருள் அருள் ஆய,
செல்வன்; இருள் ஆய கண்டன்; அவனித்
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்
கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி, மறையோர்கள் பேணும்
நறையூரில் நம்பன் அவனே.

[4]
நெதி படு மெய் எம் ஐயன்; நிறை சோலை சுற்றி நிகழ்
அமபலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்; எமர் சுற்றம்
ஆய இறைவன்;
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து, விடை ஏறி
இல் பலி கொள்வான்
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில்
நம்பன் அவனே.

[5]
கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
நம்பன் அவனே.

[6]
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் அவை ஆர,
ஆடல் அரவம்
மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
விடம் கொள் மிடறன்
துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
ஆர, வென்றி அருளும்,
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
நம்பன் அவனே.

[7]
அடல் எருது ஏறு உகந்த, அதிரும் கழல்கள் எதிரும்
சிலம்பொடு இசைய,
கடல் இடை நஞ்சம் உண்டு கனிவு உற்ற கண்டன் முனிவு
உற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடிபத்து இறுத்தும், இசை
கேட்டு இரங்கி, ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி, நமை ஆள வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[8]
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர் கூடி நேடி,
நினைவுற்
றில பல எய்த ஒணாமை எரி ஆய் உயர்ந்த பெரியான்;
இலங்கு சடையன்
சில பல தொண்டர் நின்று பெருமை(க்) கள் பேச, வரு
மைத் திகழ்ந்த பொழிலின்
நல மலர் சிந்த, வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன்
அவனே.

[9]
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்
தாமும், அல்ல சமணும்,
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான்;
பிறங்கு சடையன்
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண, முறை மாதர்
பாடி மருவும்
நவமணி துன்று கோயில், ஒளி பொன் செய் மாட
நறையூரில் நம்பன் அவனே.

[10]
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.088  
துளி மண்டி உண்டு நிறம்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)

துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.

[1]
பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன், அயனைப்
படைத்த பரமன்,
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க
நின்ற அரன், ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம்
மோத வெருவி,
தெருவத்தில் வந்து, செழு முத்து அலைக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

[2]
வாராத நாடன், வருவார் தம் வில்லின் உரு மெல்கி
நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன், அருள் மேவி நின்ற
அரன், ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை
பிரியாள்
தீராத காதல் நெதி நேர, நீடு திரு முல்லை வாயில்
இதுவே.

[3]
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு
மூன்றொடு ஏழும் உடன் ஆய்,
அன்று இன்றொடு என்றும், அறிவு ஆனவர்க்கும்
அறியாமை நின்ற அரன் ஊர்
குன்று ஒன்றொடு ஒன்று, குலை ஒன்றொடு ஒன்று, கொடி
ஒன்றொடு ஒன்று, குழுமிச்
சென்று, ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு
முல்லைவாயில் இதுவே.

[4]
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன், விடை
நாளும் ஏறு குழகன்,
நம்பன், எம் அன்பன், மறை நாவன், வானின் மதி ஏறு
சென்னி அரன், ஊர்
அம்பு அன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி
கோபுரங்கள், அழகு ஆர்
செம்பொன்ன செவ்வி தரு மாடம், நீடு திரு முல்லை
வாயில் இதுவே.

[5]
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட
ஒருவன்,
ஆன் ஏறு அது ஏறி, அழகு ஏறும் நீறன், அரவு ஏறு
பூணும் அரன், ஊர்
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து, குயில் ஏறு
சோலை மருவி,
தேன் ஏறு மாவின் வளம் ஏறி, ஆடு திரு முல்லை வாயில்
இதுவே.

[6]
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற
நிமலன்;
அஞ்சு ஆடு சென்னி, அரவு ஆடு கையன்; அனல் ஆடும்
மேனி அரன்; ஊர்
மஞ்சு ஆரும் மாடமனை தோறும், ஐயம் உளது என்று
வைகி வரினும்,
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக் கொள் திரு
முல்லை வாயில் இதுவே.

[7]
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும்
இற்று நெரிய,
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன்;
எங்கள் அரன்; ஊர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற
பொன்னி வடபால்,
திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திரு முல்லை
வாயில் இதுவே.

[8]
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரிநூலன்;
வேதமுதல்வன்,
பால் ஆடு மேனி கரியானும், முன்னியவர் தேட நின்ற
பரன்; ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல்
வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள, மல்கு திரு முல்லை
வாயில் இதுவே.

[9]
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன்; நம் நம்பன்;
அடியே
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர், அமண், மாய
நின்ற அரன்; ஊர்
வனம் மல்கு கைதை, வகுளங்கள் எங்கும், முகுளங்கள்
எங்கும் நெரிய,
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லை
வாயில் இதுவே.

[10]
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்
செய்த எந்தை, மருவார்
திணி கொண்ட மூன்றுபுரம் எய்த வில்லி, திரு
முல்லைவாயில் இதன்மேல்,
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன்
ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர், அகல்வானம்
ஆள்வர், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.089  
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )

அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[1]
சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்; துன்னிய
பூதக்
க(ண்)ணத்தர்; வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர்
கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர், மால் எரி
ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.

[2]
பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே.

[3]
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு
அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.

[4]
ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம் சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.

[5]
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
அமர்ந்தாரே.

[6]
அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[8]
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே.

[9]
குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது ஒர்
கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல; மை அணி கண்டர்,
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர்,
ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[10]
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[1]
ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[2]
பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[3]
துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

[4]
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[5]
உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[6]
நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே

[7]
செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற,
அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான்
கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[8]
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க(அ)ரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை மேல்,
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[9]
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்
பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

[10]
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம் வினை போய்ப்
பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.091  
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.

[1]
கூன் இளம்பிறை சூடி, கொடு வரித் தோல் உடை ஆடை,
ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர்; பூண்பதுவும் அரவம்
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
தேன் நலம் கமழ் சோலைத் திரு மறைக்காடு அமர்ந்தாரே.

[2]
நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு
பொன் மார்பில்,
பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒரு பாகன்;
தண்ணிது ஆய வெள் அருவி சல சல நுரை மணி ததும்ப,
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு
அமர்ந்தாரே.

[3]
ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.

[4]
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.

[5]
பல் இல் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும், அழகியது அறிவர்; எம்
அடிகள்
புல்லம் ஏறுவர்; பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம்
ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே.

[6]
நாகம் தான் கயிறு ஆக, நளிர் வரை அதற்கு மத்து ஆக,
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழக் கடைய,
வேக நஞ்சு எழ, ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும்
ஓட,
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்
மறைக்காடே.

[7]
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு
பெருமையை ஓரான்;
மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும், மலைமகள்
நடுங்க,
நக்கு, தன் திரு விரலால் ஊன்றலும், நடு நடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன்; பதி மறைக்காடே.

[8]
விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி அரவு
அணையானும்,
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை
பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
வண்டல் அம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.

[9]
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா,
கரிய மண்டை கை ஏந்தி, கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர் மறைக்காடே பேணுமின்! மனம் உடையீரே!

[10]
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.092  
பட்டம், பால்நிற மதியம், படர்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.

[1]
முயல் வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில்
தெரிவை
இயல் வளாவியது உடைய இன் அமுது, எந்தை,
எம்பெருமான்
கயல் வளாவிய கழனிக் கருநிறக்குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சுரத்தாரே.

[2]
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும்
புகையும்
கொண்டு கொண்டு அடி பரவி, குறிப்பு அறி முருகன்
செய் கோலம்
கண்டு கண்டு, கண் குளிரக் களி பரந்து, ஒளி மல்கு கள்
ஆர்
வண்டு பண் செயும் புகலூர் வர்த்த மானீச் சுரத்தாரே.

[3]
பண்ண வண்ணத்தர் ஆகி, பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர், ஒர்பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு, ஆண்
இணைபிணைந்த
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சுரத்தாரே.

[4]
ஈசன், ஏறு அமர் கடவுள், இன் அமுது, எந்தை,
எம்பெருமான்,
பூசும் மாசு இல் வெண் நீற்றர் பொலிவு உடைப் பூம்
புகலூரில்,
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்
முடிமேல்
வாசமாமலர் உடையார், வர்த்தமானீச்சுரத்தாரே.

[5]
தளிர் இளங் கொடி வளர, தண்கயம் இரிய வண்டு ஏறிக்
கிளர் இளம்(ம்) உழை நுழைய, கிழிதரு பொழில் புகலூரில்,
உளர் இளஞ் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன்
மேல்
வளர் இளம்பிறை உடையார் வர்த்தமானீச்சுரத்தாரே.

[6]
தென் சொல், விஞ்சு அமர் வட சொல், திசை மொழி,
எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சு இருள் நீங்கத் தொழுது எழு தொல்
புகலூரில்,
அஞ்சனம் பிதிர்ந்தனைய, அலைகடல் கடைய அன்று
எழுந்த,
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சுரத்தாரே.

[7]
சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும்
நாம தேயம் அது உடையார், நன்கு உணர்ந்து, அடிகள்
என்று ஏத்த;
காம தேவனை வேவக் கனல் எரி கொளுவிய கண்ணார்;
வாம தேவர் தண் புகலூர் வர்த்தமானீச் சுரத்தாரே.

[8]
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து, அருளுதல்
பொருட்டால்,
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சுரத்தாரே.

[9]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையினால்
தம்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் என
விரும்பேல்!
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்,
மை கொள் கண்டத்து எம்பெருமான்
வர்த்தமானீச்சுரத்தாரே.

[10]
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில்
புகலூரில்,
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை,
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.093  
புரை செய் வல்வினை தீர்க்கும்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை)

புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[1]
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை
தீர்க்கும்,
கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு
பிறையன்;
பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல்
பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[2]
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை
மழுவாள
படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர்,
படர் புன்
சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு
தறுகண்
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[3]
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள்
பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி
கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[4]
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால்
தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை
கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[5]
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி
அணி சுவண்டர்;
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த,
சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற
வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[6]
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட
நின்றார்;
முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து
இலங்க,
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்;
வெண்பொடிப்பூசி
வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[7]
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்;
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர்
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[8]
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால்
ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக்
கருதும்
வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[9]
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர், சமணர், சொல்
தவிர,
இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு
ஒருகைக்
கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக்
கனன்று எழுந்த
விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே!

[10]
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரை,
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்,
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.094  
சாகை ஆயிரம் உடையார், சாமமும்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)

சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[1]
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்
உடையார்;
பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்
உடையார்;
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே.

[2]
நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர் ஆம், அவர்
நோக்கும்;
வடிவும் ஆயிரம் உடையார்; வண்ணமும் ஆயிரம்
உடையார்;
முடியும் ஆயிரம் உடையார்; மொய்குழலாளையும் உடையார்;
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[3]
பஞ்சி நுண் துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்;
குஞ்சி மேகலை உடையார்; கொந்து அணி வேல் வலன்
உடையார்;
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்; ஆனையின் ஈர் உரி
உடையார்;
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[4]
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்
உடையார்;
விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது
உடையார்;
அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக
உடையார்;
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[5]
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார்; கோலமும் பல பல உடையார்;
கண்டு கோடலும் அரியார்; காட்சியும் அரியது; ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[6]
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர் மதில் பரிசு
அழித்தார்;
தான வாழ்க்கை அது உடையார்; தவத்தொடு நாம் புகழ்ந்து
ஏத்த,
ஞான வாழ்க்கை அது உடையார்; நள் இருள் மகளிர்
நின்று ஏத்த,
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூர்
உளாரே.

[7]
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட
அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பு அவர் பலபல
உடையார்;
கேழல் வெண்பிறை அன்ன கேழ் மணிமிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[8]
வென்றி மா மலரோனும், விரிகடல் துயின்றவர் தானும்,
என்றும் ஏத்துகை உடையார்; இமையவர் துதி செய,
விரும்பி,
முன்றில் மா மலர் வாசம் முது மதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர்
உளாரே.

[9]
மண்டை கொண்டு உழல் தேரர், மாசு உடை மேனி
வன்சமணர்,
குண்டர், பேசிய பேச்சுக் கொள்ளன்மின்! திகழ் ஒளி நல்ல
துண்ட வெண்பிறை சூடி, சுண்ண வெண்பொடி அணிந்து,
எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[10]
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.095  
பாடல் வண்டு அறை கொன்றை,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை)

பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

[1]
ஏறு பேணி அது ஏறி; இள மதக்களிற்றினை எற்றி,
வேறு செய்து, அதன் உரிவை வெம்புலால் கலக்க மெய்
போர்த்த
ஊறு தேன் அவன்; உம்பர்க்கு ஒருவன்; நல் ஒளி கொள்
ஒண் சுடர் ஆம்;
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

[2]
கங்கை நீர் சடைமேலே கதம் மிக, கதிர் இளவன மென்
கொங்கையாள் ஒருபாகம் மருவிய, கொல்லை வெள் ஏற்றன்;
சங்கை ஆய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து,
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

[3]
மிக்க காலனை வீட்டி, மெய் கெடக் காமனை விழித்து
புக்க ஊர் இடு பிச்சை உண்பது, பொன் திகழ் கொன்றை,
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து,
ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.

[4]
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி,
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது
துரந்து
வான் அஞ்சும் பெருவிடத்தை உண்டவன்; மாமறை ஓதி;
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம்
அரசிலியே.

[5]
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக,
பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய,
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு,
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம்
அரசிலியே.

[6]
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல் அரக்கன்
கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றி,
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு,
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

[8]
குறிய மாண் உரு ஆகிக் குவலயம் அளந்தவன் தானும்,
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய
மெய்த்தவத்தோனும்,
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும், திருவடி காண
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே.

[9]
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியைப் பறித்துத்
திரளை(க்) கையில் உண்பவரும், தேரரும், சொல்லிய
தேறேல்!
பொருளை, பொய் இலி மெய் எம் நாதனை, பொன் அடி
வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.

[10]
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும்,
சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த,
வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.096  
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  
பண் - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

[1]
தேவர் தானவர் பரந்து, திண் வரை மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ! என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.

[2]
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை, பல்பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர், சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி,
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன்நகரே.

[3]
சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வான் இடை
மிடைந்து,
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே.

[4]
மங்கை கூறு அமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்,
எங்கள் ஈசன்! என்று எழுவார் இடர்வினை கெடுப்பவற்கு
ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து, தகுதியின் மிக்க
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன்நகரே.

[5]
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்,
ஏறும் ஏறிய ஈசன், இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றித்
தேறுவார்கள், சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன்நகரே.

[6]
நடம் அது ஆடிய நாதன், நந்திதன் முழவு இடைக்
காட்டில்;
விடம் அமர்ந்து, ஒரு காலம், விரித்து அறம் உரைத்தவற்கு
ஊர் ஆம்
இடம் அதா மறை பயில்வார்; இருந்தவர், திருந்தி அம்
போதிக்
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய, காழி நன்நகரே.

[7]
கார் கொள் மேனி அவ் அரக்கன் தன் கடுந் திறலினைக்
கருதி,
ஏர் கொள் மங்கையும் அஞ்ச, எழில் மலை எடுத்தவன்
நெரிய,
சீர் கொள் பாதத்து ஒர்விரலால் செறுத்த எம் சிவன் உறை
கோயில்
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண்வயல் காழி நன்
நகரே.

[8]
மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால்,
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய,
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.

[9]
புத்தர், பொய் மிகு சமணர், பொலி கழல் அடி இணை
காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமைத் திகழ்ந்த நல்
செழுஞ்சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர், செறிந்த நல்மாமலர் கொண்டு,
முத்தனே, அருள்! என்று முறைமை செய் காழி நன்நகரே.

[10]
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.097  
நம் பொருள், நம் மக்கள்  
பண் - நட்டராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!

[1]
பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும்
ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர்,
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே!

[2]
சோறு கூறை இன்றியே துவண்டு, தூரம் ஆய், நுமக்கு
ஏறு சுற்றம் எள்கவே, இடுக்கண் உய்ப்பதன் முனம்
ஆறும் ஓர் சடையினான், ஆதி யானை செற்றவன்,
நாறு தேன் மலர்ப்பொழில் நலம் கொள் காழி சேர்மினே!

[3]
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, நாளையும்
உச்சி வம்! எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர், நச்சு அரவு அரைப் பெரிய சோதி, பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான், எழில் கொள் காழி சேர்மினே!

[4]
கண்கள் காண்பு ஒழிந்து, மேனி கன்றி, ஒன்று அலாத
நோய்
உண்கிலாமை செய்து, நும்மை உய்த்து அழிப்பதன் முனம்
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுது செய்,
கண்கள் மூன்று உடைய, எம் கருத்தர் காழி சேர்மினே!

[5]
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து, நீர்,
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்) மினோ!
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்,
கொல்லை ஏறு அது ஏறுவான், கோலக் காழி சேர்மினே!

[6]
பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம்
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்,
பை மிகுத்த பாம்பு அரைப் பரமர், காழி சேர்மினே!

[8]
காலினோடு கைகளும் தளர்ந்து, காம்நோய்தனால்
ஏல வார்குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே!

[9]
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன் முனம்
தலை பறித்த கையர், தேரர், தாம் தரிப்ப(அ)ரியவன்;
சிலை பிடித்து எயில் எய்தான்; திருந்து காழி சேர்மினே!

[10]
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை,
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்,
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்  
பண் - நட்டராகம்   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)

வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே??

[1]
அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை, கூவிளம்,
தொடுத்து உடன் சடைப் பெய்தாய்! துருத்தியாய்! ஓர் காலனைக்
கடுத்து, அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம்
எடுத்து எடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில், நல்லமே.

[2]
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச்
சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்!
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா! துருத்தி புக்கு,
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்கொ

[3]
கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி இல்லை; தொண்டர் தம்
அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது அன்றியும்,
ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே!

[4]
துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்! திருந்து அடி
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து, இம் மண்ணின்மேல்
பிறக்கும் ஆறு காட்டினாய்! பிணிப்படும் உடம்பு விட்டு
இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே?

[5]
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில்
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்!
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ
எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே?

[6]
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்
துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்!
அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல்
மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே?

[7]
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன்
இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்!
கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை,
அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே?

[8]
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய்,
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்;
துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி,
உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே.

[9]
புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த பொய்தனை
உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம்
துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே.

[10]
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்,
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே,
குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.099  
இன்று நன்று, நாளை நன்று  
பண் - நட்டராகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)

இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!

[1]
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்,
நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ!
வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே!

[2]
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்,
தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்!
அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே!

[3]
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே!

[4]
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ!
பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான்,
கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே!

[5]
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப்
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை;
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே!

[6]
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்,
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ!
பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக்
கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே!

[7]
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து நீர்,
பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ!
வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே!

[8]
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்;
செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா
வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர்,
கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே!

[9]
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்,
பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை;
விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே!

[10]
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.100  
படை கொள் கூற்றம் வந்து,  
பண் - நட்டராகம்   (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)

படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.

[1]
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால் நிமிர்த்து
இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ!
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடி யாழ் செய் கோவலூர்,
விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே.

[2]
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்!
அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள்
அழுந்தாதே,
கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.

[3]
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும்,
இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன்,
பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்,
வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே.
[4]
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின்
கண்;
துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே!
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே.

[5]
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும்,
ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது
அன்றியும்,
கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள்
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே.

[6]
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்
கண்,
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்,
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே.

[7]
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல்,
போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள்,
வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே.

[8]
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள்
நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே.

[9]
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர் இட்டார்களும்,
அறிவு இலாத அமணர், சொல் அவத்தம் ஆவது
அறிதிரேல்,
பொறி கொள் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர்
தனில்,
வெறி கொள் கங்கை தாங்கினான், வீரட்டானம் சேர்துமே.

[10]
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்,
பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்,
அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண்
கோவலூர்தனில்,
விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.101  
பருக் கை யானை மத்தகத்து  
பண் - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே.

[1]
விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி, கொன்றை,
மத்தமும்,
இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை
போய்,
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர்
என்பதே.

[2]
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர், காலன் இன் உயிர்
மறுத்து மாணிதன் தன் ஆகம் வண்மை செய்த மைந்தன்,
ஊர்
வெறித்து மேதி ஓடி, மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி
அறுத்து மண்டி, ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே.

[3]
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில்,
குஞ்சி ஆர வந்தி செய்ய, அஞ்சல்! என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி, பணைத்த கொங்கை, நுண்
இடை,
அம்சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே.

[4]
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார் மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர்
என்பதே.

[5]
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு, அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய்
அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே.

[6]
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர், காமனை
மங்க வெங்கணால் விழித்த மங்கைபங்கன், மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து,
மாவின்மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே.

[7]
வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்) உரத்தொடும்
நெரித்தவன், புரத்தை முன்(ன்) எரித்தவன்(ன்), இருந்த ஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேர் அனார்கள், வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே.

[8]
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து, மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங்
குரா,
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.

[9]
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன்,
மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செநெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே.

[10]
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை,
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.102  
அன்ன மென் நடை அரிவையோடு  
பண் - நட்டராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.

[1]
கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள
ஆமை,
சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல்
விடம் உண்ட
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை
நில்லாவே.

[2]
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட
மதித்து, அன்று,
கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு,
அருள்புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து
உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள்,
குறுகாவே.

[3]
மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை
செய்தார்,
பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு
அறுத்து அருள் செய்வார்,
வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து
அமர்கின்ற
ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே.

[4]
பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம்,
ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய்
நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல்
கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர்
வருந்தாரே.

[5]
ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள்
அவை மூட,
ஆழி, எந்தை! என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து
உயர்ந்தார் தாம்,
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன்,
எம்பெருமானார்,
வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை
அடையாவே.

[6]
பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம் இடு
சுடுகாட்டில்,
வேய் கொள் தோளிதான் வெள்கிட, மா நடம் ஆடும்
வித்தகனார்; ஒண்
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்
தாம்;
தாய்கள் ஆயினார், பல் உயிர்க்கும்; தமைத் தொழுமவர்
தளராரே.

[7]
இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள்
வெற்பு எடுத்து, அன்று,
கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து,
அருள் செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன்
இடைப் புகுந்து ஆரும்,
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை
குறுகாவே.

[8]
வண்டு சென்று அணை மலர்மிசை நான்முகன், மாயன்,
என்று இவர் அன்று
கண்டு கொள்ள, ஓர் ஏனமோடு அன்னம் ஆய், கிளறியும்
பறந்தும், தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி; பரமேட்டி;
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுது எழ, வினை அவை
கூடாவே.

[9]
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத்
துவர் தோய்ந்த
செறித்த சீவரத் தேரரும், தேர்கிலாத் தேவர்கள்
பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட, இள
வாளை
வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ, வினை விட்டிடும்,
மிகத் தானே.

[10]
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப்
பெருந்தொத்தை,
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர்
பெருமானை,
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.103  
புல்கு பொன் நிறம் புரி  
பண் - நட்டராகம்   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
அடையாவே.

[1]
அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில்
அனல் ஏந்தி,
இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன,
பலபூதம்;
மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்,
மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன்
தலைப்படுவாரே.

[2]
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடி
சேரக்
கணங்கள் பாடவும், கண்டவர் பரவவும், கருத்து அறிந்தவர்
மேய
மணம் கொள் பூம்பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை
அடையாவே.

[3]
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர்
நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர்,
மேய
மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை
உடையாரே.

[4]
நெதியம் என் உள? போகம் மற்று என் உள? நிலம்மிசை
நலம் ஆய
கதியம் என் உள? வானவர் என் உளர்? கருதிய பொருள்
கூடில்
மதியம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல்
புரிந்தோர்க்கே.

[5]
கண் உலாவிய கதிர் ஒளி முடிமிசைக் கனல் விடு சுடர்
நாகம்,
தெண் நிலாவொடு, திலகமும், நகுதலை, திகழ வைத்தவர்
மேய
மண் உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர், இவ் உலகினில்
உயர்வாரே.

[6]
தூசு தான் அரைத் தோல் உடை, கண்ணி அம் சுடர்விடு
நறுங்கொன்றை,
பூசு வெண்பொடிப் பூசுவது, அன்றியும், புகழ் புரிந்தவர்
மேய
மாசு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
பேசு நீர்மையர் யாவர், இவ் உலகினில் பெருமையைப்
பெறுவாரே.

[7]
பவ்வம் ஆர் கடல் இலங்கையர் கோன் தனைப் பருவரைக்
கீழ் ஊன்றி,
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள் செய்த
இறையவன் உறை கோயில்
மவ்வம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனல் இடைச்
செதிள் அன்றே!

[8]
உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர்
மலரோனும்,
பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும்,
பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும்
களைவாரே.

[9]
பிண்டிபாலரும், மண்டை கொள் தேரரும், பீலி கொண்டு
உழல்வாரும்,
கண்ட நூலரும், கடுந் தொழிலாளரும், கழற நின்றவர் மேய
வண்டு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அறப் பரவுதல்
செய்வோமே.

[10]
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.104  
பொடி கொள் மேனி வெண்  
பண் - நட்டராகம்   (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)

பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி
அதள் ஆடை,
கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை
கழல் சிலம்பு ஆர்க்க,
கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தை, தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை
மூடாவே.

[1]
விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா
விகிர்தனை, விழவு ஆரும்
மண்களார் துதித்து அன்பராய் இன்பு உறும் வள்ளலை,
மருவி, தம்
கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தைப்
பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ்
ஆமே.

[2]
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது, புலி அதள் உடை,
நாகம்
தங்க மங்கையைப் பாகம் அது உடையவர், தழல் புரை
திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர், கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தை,
எங்கும் ஏத்தி நின்று இன்பு உறும் அடியரை இடும்பை
வந்து அடையாவே.

[3]
நீர் கொள் நீள் சடை முடியனை, நித்திலத் தொத்தினை,
நிகர் இல்லாப்
பார் கொள் பார் இடத்தவர் தொழும் பவளத்தை,
பசும்பொன்னை, விசும்பு ஆரும்
கார் கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகம் தன்னை,
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது
திணம் ஆமே.

[4]
சுரும்பு சேர் சடைமுடியினன், மதியொடு துன்னிய தழல்
நாகம்,
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர்பல கொண்டு
அடியவர் போற்றக்
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தை,
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி
உடையவர் தாமே.

[5]
மாது இலங்கிய பாகத்தன்; மதியமொடு, அலைபுனல், அழல்,
நாகம்,
போது இலங்கிய கொன்றையும், மத்தமும், புரிசடைக்கு
அழகு ஆக,
காது இலங்கிய குழையினன்; கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அறக்
கெடும் அன்றே.

[6]
குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம், பல குளிர்
பொய்கை,
உலவு புள் இனம், அன்னங்கள் ஆலிடும், பூவை சேரும்
கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும்
கற்பகத்தைச் சீர்
நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லா
தானே.

[7]
மடுத்த வாள் அரக்கன்(ன்) அவன் மலைதன் மேல் மதி
இலாமையில் ஓடி
எடுத்தலும், முடிதோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல்
ஊன்ற,
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட, கடிக்குளம் தனில்
மேவிக்
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம்
உடையவர் தாமே.

[8]
நீரின் ஆர் கடல் துயின்றவன், அயனொடு, நிகழ் அடி
முடி காணார்;
பாரின் ஆர் விசும்பு உற, பரந்து எழுந்தது ஓர் பவளத்தின்
படி ஆகி,
காரின் ஆர் பொழில் சூழ் தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தின் தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை
அடையாவே.

[9]
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும், குறியினில் நெறி
நில்லா
மிண்டர் மிண்டு உரை கேட்டு, அவை மெய் எனக்
கொள்ளன் மின்! விடம் உண்ட
கண்டர், முண்டம் நல் மேனியர், கடிக்குளத்து உறைதரும்
எம் ஈசர்,
தொண்டர் தொண்டரைத் தொழுது அடி பணிமின்கள்! தூ
நெறி எளிது ஆமே.

[10]
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல்
சம்பந்தன்
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அது ஆய்,
மகிழ்வோடும்,
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து
அமர்வானை,
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள், போய்
இறைவனோடு உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.105  
மின் உலாவிய சடையினர், விடையினர்,  
பண் - நட்டராகம்   (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)

மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.

[1]
நீர் உலாவிய சடை இடை அரவொடு, மதி, சிரம்
நிரைமாலை,
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை
ஆர்க்க,
ஏர் உலாவிய இறைவனது உறைவு இடம் எழில் திகழ்
கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு
வினை போமே.

[2]
வெண் நிலா மிகு விரிசடை அரவொடும், வெள் எருக்கு,
அலர்மத்தம்,
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வு உறு
கீழ்வேளூர்,
பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில்
உள்ளாரே.

[3]
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத் தொங்கவைத்து
அழகு ஆக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார், நலம் மிகு
கீழ்வேளூர்ப்
பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலை மிகப்
பெறுவாரே.

[4]
துன்று வார்சடைச் சுடர் மதி, நகுதலை, வடம் அணி
சிரமாலை,
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு
கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை,
நினைவோடும்
சென்று உலாவி நின்று, ஏத்த வல்லார் வினை தேய்வது
திணம் ஆமே.

[5]
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை, கூத்தனை,
மகிழ்ந்து உள்கித்
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு
கீழ்வேளூர்
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில்
மன்னும்
முத்து உலாவிய வித்தினை, ஏத்துமின்! முடுகிய இடர்
போமே.

[6]
பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும் வன்னியும் துன்
ஆரும்
கறை நிலாவிய கண்டர், எண்தோளினர், காதல் செய்
கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்
மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை
போமே.

[7]
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும்,
அரக்கன்தன்
தலை எலாம் நெரிந்து அலறிட, ஊன்றினான் உறைதரு
கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய, வல்வினை
போமே.

[8]
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு
ஒண்ணாப்
பஞ்சு உலாவிய மெல் அடிப் பார்ப்பதி பாகனை,
பரிவோடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை, நணுகுமின்! நடலைகள்
நணுகாவே.

[9]
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள்,
சீவரத்தார்,
வீறு இலாத வெஞ்சொல் பல விரும்பன் மின்! சுரும்பு
அமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெருந்திருக்கோயில்
மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின்! தவம்
ஆமே.

[10]
குருண்ட வார் குழல் சடை உடைக் குழகனை, அழகு அமர்
கீழ்வேளூர்த்
திரண்ட மா மறையவர் தொழும் பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன்
சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர், சிவகதி பெறுவது திடம்
ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  
பண் - நட்டராகம்   (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

[1]
விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம் ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே.

[2]
திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண் அடியாரைப்
பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம் பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம் தானே.

[3]
கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம் முனிவர்க்கு அன்று
இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்;
மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து, அருங்கானத்து,
அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம் அறியோமே!

[4]
மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு; ஒருபாகம்
பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்; பெருங்கடல் பவளம் போல்
வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம் புக்க
எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி தொழுவாரே.

[5]
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர்
இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்;
அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும் பலிக்கு என்று
வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை கவர்ந்தாரே!

[6]
குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய நெய்த்தானம்,
என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்; இமையவர் பணி கேட்பார்;
அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி அரனார்பால்
சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று சேயிழை தளர்வு ஆமே.

[7]
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல வரைப் பரப்பு ஆய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி,
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே.

[8]
அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு அணைத் துயின்றானும்,
கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர் தடக்கையில்
மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே.

[9]
அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா நீர்
மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு ஒண்ணாதே.

[10]
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல் காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர் தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.107  
விருது குன்ற, மாமேரு வில்,  
பண் - நட்டராகம்   (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை)

விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி
அம்பா,
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி
எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி
மாதோட்டம்,
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே.

[1]
பாடல் வீணையர், பல பல சரிதையர், எருது உகைத்து
அரு நட்டம்
ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு
இருள் கண்டத்தர்,
ஈடம் ஆவது இருங்கடல் கரையினில் எழில் திகழ்
மாதோட்டம்,
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ, கெடும், இடர்
வினைதானே.

[2]
பெண் ஒர் பாகத்தர், பிறை தவழ் சடையினர், அறை கழல்
சிலம்பு ஆர்க்கச்
சுண்ணம் ஆதரித்து ஆடுவர், பாடுவர், அகம்தொறும் இடு
பிச்சைக்கு
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர், உயர்தரு
மாதோட்டத்து,
அண்ணல், நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை
அடையாவே.

[3]
பொடி கொள் மேனியர், புலி அதள் அரையினர், விரிதரு
கரத்து ஏந்தும்
வடி கொள் மூ இலை வேலினர், நூலினர், மறிகடல்
மாதோட்டத்து
அடிகள், ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர்
ஆகி,
முடிகள் சாய்த்து, அடி பேண வல்லார் தம்மேல் மொய்த்து
எழும் வினை போமே.

[4]
நல்லர், ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம்
அடைந்தவர்க்கு அருள் ஈய
வல்லர், பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர், மலி கடல்
மாதோட்டத்து
எல்லை இல் புகழ் எந்தை, கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து
ஏத்தி,
அல்லல் ஆசு அறுத்து, அரன் அடி இணை தொழும்
அன்பர் ஆம் அடியாரே.

[5]
பேழை வார்சடைப் பெருந் திருமகள் தனைப் பொருந்த
வைத்து, ஒருபாகம்
மாழை அம் கயல் கண்ணிபால் அருளிய பொருளினர்,
குடிவாழ்க்கை
வாழை அம்பொழில் மந்திகள் களிப்பு உற மருவிய
மாதோட்ட,
கேழல் வெண்மருப்பு அணிந்த நீள் மார்பர், கேதீச்சுரம்
பிரியாரே.

[6]
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளிப் பல்
உலகினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை
கோயில்
வண்டு பண் செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம் இடு
மாதோட்டம்,
தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள் செய் கேதீச்சுரம்
அதுதானே.

[7]
தென் இலங்கையர் குலபதி, மலை நலிந்து எடுத்தவன், முடி
திண்தோள
தன் நலம் கெட அடர்த்து, அவற்கு அருள் செய்த
தலைவனார் கடல்வாய் அப்
பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய
மாதோட்டத்து,
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து
உள்ளாரே.

[8]
பூ உளானும் அப் பொரு கடல் வண்ணனும், புவி இடந்து
எழுந்து ஓடி,
மேவி நாடி, நுன் அடி இணை காண்கிலா வித்தகம் என்
ஆகும்?
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்நகர்
மன்னி,
தேவி தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த
எம்பெருமானே!

[9]
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச்
சமண் ஆதர்,
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை
கேளேன்மின்!
மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர்,
மாதோட்டத்து
அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம்
அடைமி(ன்)னே!

[10]
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர்
மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை,
அணி காழி
நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு
பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.108  
வடி கொள் மேனியர், வான  
பண் - நட்டராகம்   (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை)

வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது
ஆர்ந்த
கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை
புலி அதள் ஆர்ப்பர்,
விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை
விற்குடி வீரட்டம்,
அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை
அடையாவே.

[1]
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ்
சடைக்கு ஏற்றி,
உளம் கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்; பொரு கரி
உரி போர்த்து
விளங்கு மேனியர்; எம்பெருமான்; உறை விற்குடி வீரட்டம்,
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம்
அது அறியாரே.

[2]
கரிய கண்டத்தர், வெளிய வெண்பொடி அணி மார்பினர்,
வலங்கையில்
எரியர், புன்சடை இடம் பெறக் காட்டு அகத்து ஆடிய
வேடத்தர்,
விரியும் மா மலர்ப்பொய்கை சூழ் மது மலி விற்குடி
வீரட்டம்
பிரிவு இலாதவர் பெருந் தவத்தோர் எனப் பேணுவர்,
உலகத்தே.

[3]
பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர், பொலிதர, நலம்
ஆர்ந்த
பாதம் சேர் இணைச்சிலம்பினர், கலம் பெறு கடல் எழு
விடம் உண்டார்,
வேதம் ஓதிய நா உடையான், இடம் விற்குடி வீரட்டம்
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ, பிணி தீவினை
கெடும் ஆறே?

[4]
கடிய ஏற்றினர், கனல் அன மேனியர், அனல் எழ ஊர்
மூன்றும்
இடிய மால்வரை கால் வளைத்தான், தனது அடியவர்மேல்
உள்
வெடிய வல்வினை வீட்டுவிப்பான், உறை விற்குடி வீரட்டம்
படியது ஆகவே பரவுமின்! பரவினால், பற்று அறும்,
அருநோயே.

[5]
பெண் ஒர் கூறினர்; பெருமையர்; சிறுமறிக் கையினர்; மெய்
ஆர்ந்த
அண்ணல்; அன்பு செய்வார் அவர்க்கு எளியவர்; அரியவர்,
அல்லார்க்கு
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடி
வீரட்டம்
எண் நிலாவிய சிந்தையினார் தமக்கு இடர்கள் வந்து
அடையாவே.

[6]
இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல்
அழிதர ஊன்று
திடம் கொள் மால்வரையான், உரை ஆர்தரு பொருளினன்,
இருள் ஆர்ந்த
விடம் கொள் மா மிடறு உடையவன், உறைபதி விற்குடி
வீரட்டம்
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார் தமைத் துன்பம்
நோய் அடையாவே.

[8]
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி
அறியாமை
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறைபுனல் முடி
ஆர்ந்த,
வெங் கண் மால்வரைக்கரி உரித்து உகந்தவன் விற்குடி
வீரட்டம்
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு
குணத்தாரே.

[9]
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரி துவர் ஆடையர்,
அவர் வார்த்தை
பண்டும் இன்றும் ஓர் பொருள் எனக் கருதன் மின்! பரிவு
உறுவீர், கேண்மின்;
விண்ட மா மலர்ச் சடையவன் இடம் எனில்,
விற்குடிவீரட்டம்;
கண்டு கொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்து
உறும் குணத்தாரே.

[10]
விலங்கலே சிலை இடம் என உடையவன்,
விற்குடிவீரட்டத்து
இலங்கு சோதியை, எம்பெருமான் தனை, எழில் திகழ் கழல்
பேணி,
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்
தமிழ்மாலை
வலம் கொடே இசை மொழியுமின்! மொழிந்தக்கால், மற்று
அது வரம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.109  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி  
பண் - நட்டராகம்   (திருக்கோட்டூர் கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை)

நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை
விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து
அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர்,
பாங்காலே.

[1]
பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவு அல்குல்,
மங்கைமார் பலர் மயில், குயில், கிளி, என மிழற்றிய
மொழியார், மென்
கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர்
;நற்கொழுந்தே! என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகி, சங்கரன் திரு அருள் பெறல்
எளிது ஆமே.

[2]
நம்பனார், நல் மலர்கொடு தொழுது எழும் அடியவர்
தமக்கு எல்லாம்;
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர், செல்வம்
மல்கிய நல்ல
கொம்பு அனார், தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து
இனிது இருப்பாரே.

[3]
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன்பலா, மாங்கனி,
பயில்வு ஆய
கலவமஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம்
சேர்ந்து அழகு ஆய,
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தர் ஆகி, நீள் நிலத்து இடை நீடிய புகழாரே.

[4]
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும் அன்பர்
ஆம் அடியார்கள்
பருகும் ஆர் அமுது! என நின்று, பரிவொடு பத்தி செய்து,
எத்திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய்; அவன்
அருள் பெறல் ஆமே.

[5]
துன்று வார்சடைத் தூமதி, மத்தமும், துன் எருக்கு, ஆர்
வன்னி,
பொன்றினார் தலை, கலனொடு, பரிகலம், புலி உரி உடை
ஆடை,
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை; கேடு இலை; ஏதம்
வந்து அடையாவே.

[6]
மாட மாளிகை, கோபுரம், கூடங்கள், மணி அரங்கு, அணி
சாலை,
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம், பரிசொடு
பயில்வு ஆய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
கேடு அது ஒன்று இலர் ஆகி, நல் உலகினில் கெழுவுவர்;
புகழாலே.

[7]
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர்வரை
எடுத்தலும், உமை அஞ்சி,
சுளிய ஊன்றலும், சோர்ந்திட, வாளொடு நாள் அவற்கு
அருள் செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்
நற்கொழுந்தினைத் தொழுவார்கள்,
தளிர் கொள் தாமரைப்பாதங்கள் அருள்பெறும் தவம்
உடையவர் தாமே.

[8]
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினை,
பவளத்தை,
தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை,
தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே.

[9]
கோணல் வெண்பிறைச் சடையனை, கோட்டூர்
நற்கொழுந்தினை, செழுந்திரனை,
பூணல் செய்து அடி போற்றுமின்! பொய் இலா மெய்யன்
நல் அருள் என்றும்
காணல் ஒன்று இலாக் கார் அமண், தேரர்குண்டு ஆக்கர்,
சொல் கருதாதே,
பேணல் செய்து, அரனைத் தொழும் அடியவர்
பெருமையைப் பெறுவாரே.

[10]
பந்து உலா விரல் பவளவாய்த் தேன் மொழிப்பாவையோடு
உரு ஆரும்
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர்
நற்கொழுந்தினை, செழும் பவளம்
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து
உரைசெய்த
சந்து உலாம் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர்,
புகழாலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.110  
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,  
பண் - நட்டராகம்   (திருமாந்துறை ஐராவணேசுவரர் அழகாயமர்ந்தநாயகியம்மை)

செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,
செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்
பரந்து உந்தி,
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை
உறைகின்ற
எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்
செய்வோமே.

[1]
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து
உந்தி,
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான்,
அத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன்,
நெற்றி
அளக வாள்நுதல் அரிவை தன் பங்கனை அன்றி, மற்று
அறியோமே.

[2]
கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின்
குலை வாரி
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்,
வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து
ஏத்தும்
கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல்
அறியோமே.

[3]
இலவம், ஞாழலும், ஈஞ்சொடு, சுரபுன்னை, இளமருது,
இலவங்கம்,
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்;
அலை கொள் வார்புனல், அம்புலி, மத்தமும், ஆடு அரவு
உடன் வைத்த
மலையை; வானவர் கொழுந்தினை; அல்லது வணங்குதல்
அறியோமே.

[4]
கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை
மலர் உந்தி,
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர்
சேர்த்தி,
தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும்
தவத்தோரே.

[5]
பெருகு சந்தனம், கார் அகில், பீலியும், பெரு மரம்,
நிமிர்ந்து உந்தி,
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன்
எம்பெருமானை
பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர்
பணிந்து ஏத்த,
மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல்
செய்வோமே.

[6]
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர் அவை
வாரி
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை,
அன்று அங்கு
அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன்,
வரைவில்லால்
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல்
பணிவோமே.

[7]
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள்,
மாணிக்கம்
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை;
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு
விரலானை;
சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீ நெறி அதுதானே.

[8]
நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை
நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்
நலியானே.

[9]
நின்று உணும் சமண், தேரரும், நிலை இலர்; நெடுங்கழை,
நறவு, ஏலம்,
நன்று மாங்கனி, கதலியின் பலங்களும், நாணலின் நுரை
வாரி,
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒரு காலம்
அன்றி, உள் அழிந்து எழும் பரிசு அழகிது; அது அவர்க்கு
இடம் ஆமே.

[10]
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை
நாவன்,
அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு
மாலை
பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்
தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.111  
தளிர் இள வளர் என  
பண் - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[1]
வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு கோவண
உடைமேல் ஓர்
பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல
கடைதொறும் பலி தேர்வார்;
சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர்
வண்ணர் தம் அடி பரவ,
வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[2]
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா
நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன்
ஆவார்;
சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை
மேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[3]
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி
அரவினொடு, ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர்
செய்த விகிர்தனார்;
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த
வாய்மையர்; பொன்மிளிரும்
வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர்
அடிகள் வருவாரே.

[4]
அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு அணி
கொள, உடல் திமில,
நஞ்சினை, அமரர்கள் அமுதம் என, நண்ணிய நறு நுதல்
உமை நடுங்க
வெஞ்சின மால்களியானையின் தோல் வெரு உறப்
போர்த்து, அதன் நிறமும் அஃதே,
வஞ்சனை வடிவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[5]
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல்
அவை பரவ,
எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில்
அவை இசைய வல்லார்;
சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு
பெய்து,
வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[6]
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர்
கன மணி சேர்
முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி
பெய, முறுவல் செய்வார்;
பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என
மிளிர்வது ஒர் அரவினொடும்,
வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[7]
கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்;
வீணையர்; தாமும் அஃதே;
எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார்
உறைவது ஒர் இடம் வினவில்,
பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி
எதிர் கொணர்ந்து பெய்ய,
வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[8]
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு
ஏறி,
கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர்
செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன்
சடைமேல் திகழ்கின்ற
வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[9]
சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண வெண்
நீற்றினர்; சுடர் மழுவர்;
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம்தார் பாம்பொடு
;நூல் அவை பசைந்து இலங்க,
கோடல் நன் முகிழ்விரல் கூப்பி, நல்லார் குறை உறு பலி
எதிர் கொணர்ந்து பெய்ய,
வாடல் வெண்தலை பிடித்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[10]
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம்
கானல் அம் திரு வாய்மூர்,
அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம்
அடி பரவி,
நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன்
தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி,
உலகுக்கு ஓர் தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.112  
மாது ஓர் கூறு உகந்து,  
பண் - நட்டராகம்   (திருவாடானை ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை)

மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.

[1]
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று
ஆடலான் உறை ஆடானை
தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ,
வீடும், நுங்கள் வினைகளே

[2]
மங்கை கூறினன், மான்மறி உடை
அம் கையான், உறை ஆடானை
தம் கையால் தொழுது, ஏத்த வல்லார்
மங்கு நோய் பிணி மாயுமே.

[3]
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மா மலர் தூவிக் கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே.

[4]
கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கை அணி(ம்) மலரால் வணங்கிட,
வெய்ய வல்வினை வீடுமே.

[5]
வான் இள(ம்) மதி மல்கு வார்சடை
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே.

[6]
துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை
அலங்கலான், உறை ஆடானை
நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும்
வலம் கொள்வார் வினை மாயுமே.

[7]
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை
அந்தம் இல்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தையார் வினை தேயுமே.

[8]
மறைவலாரொடு வானவர் தொழு
அறையும் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்த, தீவினை
பறையும்; நல்வினை பற்றுமே.

[9]
மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவிக் கைதொழ,
தீய வல்வினை தீருமே.

[10]
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட, நோய் பிணி பாறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.113  
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி  
பண் - செவ்வழி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே.

[1]
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான், அருந்
தொண்டர்கள்
அயல் இலங்கப் பணி செய்ய நின்ற(வ்) அடிகள்(ள்), இடம்
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே,
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே.

[2]
கூர்வு இலங்கும் திருசூலவேலர், குழைக் காதினர்,
மார்வு இலங்கும் புரிநூல் உகந்த(ம்) மணவாளன், ஊர்
நேர் விலங்கல்(ல்) அன திரைகள் மோத(ந்), நெடுந்
தாரைவாய்க்
கார் விலங்கல்(ல்) எனக் கலந்து ஒழுகும் கடல் காழியே.

[3]
குற்றம் இல்லார், குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்,
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான், இடம்
மற்று நல்லார், மனத்தால் இனியார், மறை கலை எலாம்
கற்று நல்லார், பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே.

[4]
விருது இலங்கும் சரிதைத் தொழிலார், விரிசடையினார்,
எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத, பிழை கேட்டலால்,
கருது கிள்ளைக்குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே.

[5]
தோடு இலங்கும் குழைக் காதர், வேதர், சுரும்பு ஆர்
மலர்ப்
பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடம் ஆவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க, பெருஞ்
செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே.

[6]
மலை இலங்கும் சிலை ஆக வேக(ம்) மதில் மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த(வ்)அடிகட்கு இடம்
இலை இலங்கும் மலர்க்கைதை கண்டல் வெறி விரவலால்,
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே.

[7]
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கைக்
கோன்
அழுது இரங்க, சிரம் உரம் ஒடுங்க(வ்) அடர்த்து, அங்கு
அவன்
தொழுது இரங்கத் துயர் தீர்த்து, உகந்தார்க்கு இடம் ஆவது
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே.

[8]
பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள் தனை
மேவினானும், வியந்து ஏத்த, நீண்டு ஆர் அழல் ஆய்
நிறைந்து
ஓவி, அங்கே அவர்க்கு அருள் புரிந்த(வ்) ஒருவர்க்கு இடம்
காவி அம் கண் மடமங்கையர் சேர் கடல் காழியே.

[9]
உடை நவின்றார், உடை விட்டு உழல்வார், இருந் தவத்தார்
முடை நவின்ற(ம்) மொழி ஒழித்து, உகந்த(ம்) முதல்வன்(ன்)
இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர,
கடை நவின்ற(ந்) நெடுமாடம் ஓங்கும் கடல் காழியே.

[10]
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியு
உரகம் ஆரும் சடை அடிகள் தம்பால் உணர்ந்து
உறுதலால்,
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு, இசை
ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட, கெடும், வினைகளே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  
பண் - செவ்வழி   (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)

தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.

[1]
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே,
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம்
கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.

[2]
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர்,
எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக்
கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.

[3]
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால்
பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய்,
கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும் கேதாரமே.

[4]
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால்,
வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய,
கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.

[5]
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும்
கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே.

[6]
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி வானோர் தொழ,
தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால்
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர, கல் அறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே.

[7]
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால்
வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை, மேல்
கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே.

[8]
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர்
தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால்
வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினைக்
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே.

[9]
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர்,
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளைக்
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

[10]
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்,
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்,
வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.115  
வெங் கள் விம்மு குழல்  
பண் - செவ்வழி   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.

[1]
வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்), இவை
அறிதிரேல்,
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதி(ல்) இகாள
போழ்ந்த திங்கள் புரிசடையினான் தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள்! உங்கள் துயர் தீருமே.

[2]
மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை,
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம்,
மதிசூடியை
அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே

[3]
பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமை அல்லால்,
அடியார்கள்தாம்,
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம்
கொள்ளவே.

[4]
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே.

[5]
குலவர் ஆக; குலம் இலரும் ஆக; குணம் புகழுங்கால்,
உலகில் நல்ல கதி பெறுவரேனும், மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்தனுள்,
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே

[6]
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்), அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்;
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம்
பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே.

[7]
உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே! உயர்
இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய,
பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே.

[8]
நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி அண்ணலும்,
ஆம் இது என்று தகைந்து ஏத்தப் போய், ஆர் அழல்
ஆயினான்;
சாமிதாதை; சரண் ஆகும் என்று, தலைசாய்மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே!

[9]
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்,
போர்த்த கூறைப் போதி நீழலாரும், புகலூர்தனுள்
தீர்த்தம் எல்லாம் சடைக் கரந்த தேவன் திறம் கருதுங்கால்
ஓர்த்து, மெய் என்று உணராது, பாதம் தொழுது உய்ம்மினே!

[10]
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை,
அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.116  
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  
பண் - செவ்வழி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா,
வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை,
வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[1]
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான்,
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது
மலங்கி ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[2]
வெறி கொள் ஆரும் கடல் கைதை, நெய்தல், விரி
பூம்பொழில்
முறி கொள் ஞாழல், முடப்புன்னை, முல்லை(ம்)முகை,
வெண்மலர்,
நறை கொள் கொன்றை(ந்), நயந்து ஓங்கு நாதற்கு இடம்
ஆவது
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[3]
வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்) மதியோடு
உடன்
கொண்ட கோலம், குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியு
உண்டுபோலும் என வைத்து உகந்த(வ்) ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[4]
வார் கொள் கோலம் முலை மங்கை நல்லார் மகிழ்ந்து
ஏத்தவே,
நீர் கொள் கோலச் சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு
எய்தவே,
போர் கொள் சூலப்படை புல்கு கையார்க்கு இடம் ஆவது
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[5]
விடை அது ஏறி(வ்) விட அரவு அசைத்த விகிர்தர் அவர்,
படை கொள் பூதம்பல ஆடும் பரம் ஆயவர்,
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம்
ஆவது
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[6]
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர்ப் பூசனை
செய்து வாழ்வார், சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்,
எய்த வாழ்வார்; எழில் நக்கர்; எம்மாற்கு இடம் ஆவது
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[7]
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடிபத்து இற,
அத்து இரட்டி, விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது
மைத் திரட்டி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[8]
நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,
அல்லர், ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[9]
உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை விட்டு
உழல்வார்களும்,
பெயர்த்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும்,
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[10]
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.117  
மண்டு கங்கை சடையில் கரந்தும்,  
பண் - செவ்வழி   (திருஇரும்பைமாகாளம் மாகாளேசுவரர் குயிலம்மை)

மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான்
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம்
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

[1]
வேதவித்தாய், வெள்ளை நீறு பூசி, வினை ஆயின
கோது வித்தா, நீறு எழக் கொடி மா மதில் ஆயின,
ஏத வித்து ஆயின தீர்க்கும்(ம்) இடம்(ம்) இரும்பைதனுள்,
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே.

[2]
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான்,
எந்தைபெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பைதனுள்
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில்
மந்தி ஏறிக் கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே.

[3]
நஞ்சு கண்டத்து அடக்கி(ந்), நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச, வேழம் உரித்த பெருமான் அமரும்(ம்) இடம்
எஞ்சல் இல்லாப் புகழ் போய் விளங்கும்(ம்) இரும்பைதனுள்,
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.

[4]
பூசும் மாசு இல் பொடியான், விடையான், பொருப்பன்மகள்
கூச ஆனை உரித்த பெருமான், குறைவெண்மதி
ஈசன், எங்கள்(ள்) இறைவன், இடம்போல் இரும்பைதனுள்,
மாசு இலோர் கள்மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.

[5]
குறைவது ஆய குளிர்திங்கள் சூடிக் குனித்தான், வினை
பறைவது ஆக்கும் பரமன், பகவன், பரந்த சடை
இறைவன், எங்கள் பெருமான், இடம்போல் இரும்பைதனுள்,
மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

[6]
பொங்கு செங்கண்(ண்) அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்வு இடம்
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.

[7]
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான்,
அட்டமூர்த்தி, அழல் போல் உருவன்(ன்), அழகு ஆகவே
இட்டம் ஆக இருக்கும்(ம்) இடம்போல் இரும்பைதனுள்,
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே.

[8]
அட்ட காலன் தனை வவ்வினான், அவ் அரக்கன் முடி
எட்டும் மற்றும் இருபத்திரண்டும்(ம்) இற ஊன்றினான்,
இட்டம் ஆக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள்,
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே.

[9]
அரவம் ஆர்த்து, அன்று, அனல் அங்கை ஏந்தி, அடியும் முடி
பிரமன் மாலும்(ம்) அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும்(ம்) இரும்பைதனுள்,
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

[10]
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை இரும்பைதனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்,
அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.118  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,  
பண் - செவ்வழி   (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)

பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

[1]
தொண்டர் மிண்டி, புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு, கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன்(ன்) இடம்
தெண்திரைப் பூம்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
வண்டு கெண்டு உற்று இசை பயிலும் சோலை(ம்)
மதிமுத்தமே.

[2]
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர்
தொழக்
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள்(ள்), இடம்
திடல் அடங்கச் செழுங் கழனி சூழ்ந்த திலதைப்பதி,
மடலுள் வாழைக்கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே.

[3]
கங்கை, திங்கள், வன்னி, துன் எருக்கி(ன்)னொடு, கூவிளம்,
வெங் கண் நாகம், விரிசடையில் வைத்த விகிர்தன்(ன்)
இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே.

[4]
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித்தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள்,
மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே.

[5]
விண்ணர், வேதம் விரித்து ஓத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர், எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான்,
இடம்
தெண் நிலாவின்(ன்) ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி,
மண் உளார் வந்து அருள் பேணி நின்ற(ம்) மதிமுத்தமே.

[6]
ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி,
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே.

[7]
கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை
எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய,
வாய்
மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே.

[8]
படம் கொள் நாகத்து அணையானும், பைந்தாமரையின்
மிசை
இடம் கொள் நால்வேதனும், ஏத்த நின்ற இறைவன் இடம்
திடம் கொள் நாவின்(ன்) இசை தொண்டர் பாடும்
திலைதைப்பதி,
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

[9]
புத்தர் தேரர், பொறி இல் சமணர்களும், வீறு இலாப்
பித்தர் சொன்ன(ம்) மொழி கேட்கிலாத பெருமான் இடம்
பத்தர், சித்தர், பணிவு உற்று இறைஞ்சும் திலதைப்பதி,
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

[10]
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.119  
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  
பண் - செவ்வழி   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[1]
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும்(ம்) இடம் மண் உளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம்,
கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே

[2]
குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி
குலவு நீர்,
பறவை ஆல, பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்
இல்லையே.

[3]
கூசம் நோக்காது முன் சொன்ன பொய், கொடுவினை,
குற்றமும்,
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம்,
தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார்; நெறிப்பாலரே.

[4]
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு, நீர்
பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்று, உடன் ஆவதும்
உண்மையே.

[5]
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும்,
நீளம் ஆய் நின்று எய்த காமனும், பட்டன நினைவு உறின்,
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம்;
குறிக்கொண்மினே!

[6]
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும் விராய்,
பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம்
மேயவன்தன் அடி போற்றி! என்பார் வினை வீடுமே.

[7]
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில் தோள்களும்,
மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும்
நாகேச்சுரம்,
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.

[8]
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா
எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே

[9]
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர், சாக்கியர்,
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும்! வெள்ளில் அம்காட்டு
இடை
நட்டிருள்கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்,
மட்டு இருக்கும் மலர் இட்டு, அடி வீழ்வது வாய்மையே.

[10]
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம்
பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள்,
போய்,
எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.120  
சாந்தம் வெண்நீறு எனப் பூசி,  
பண் - செவ்வழி   (திருமூக்கீச்சுரம் (உறையூர்) )

சாந்தம் வெண்நீறு எனப் பூசி, வெள்ளம் சடை வைத்தவர்,
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு, ஆங்கு அறிய(ந்) நிறைந்தார் அவர்
ஆர்கொலோ?
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர்
மெய்ம்மையே.

[1]
வெண்தலை ஓர் கலனாப் பலி தேர்ந்து, விரிசடைக்
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து, உமையாளொடும்
கூட்டமா,
விண்டவர்தம் மதில் எய்த பின், வேனில்வேள் வெந்து எழக்
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே.

[2]
மருவலார்தம் மதில் எய்ததுவும், மால் மதலையை
உருவில் ஆர(வ்) எரியூட்டியதும், உலகு உண்டதால்,
செரு வில், ஆரும் புலி, செங்கயல் ஆணையினான் செய்த
பொரு இல் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே.

[3]
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு எய்தவே
மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன், கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்,
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே!

[4]
விடம் முன் ஆர் அவ் அழல் வாயது ஓர் பாம்பு அரை
வீக்கியே.
நடம் முன் ஆர் அவ் அழல் ஆடுவர், பேயொடு நள்
இருள
வட மன் நீடு புகழ்ப் பூழியன், தென்னவன், கோழிமன்,
அடல் மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர்
அச்சமே!

[5]
வெந்த நீறு மெய்யில் பூசுவர்; ஆடுவர், வீங்கு இருள
வந்து, என் ஆர் அவ் வளை கொள்வதும் இங்கு ஒரு
மாயம் ஆம்
அம் தண் மா மானதன், நேரியன், செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே.

[6]
அரையில் ஆரும் கலை இல்லவன்; ஆணொடு பெண்ணும்
ஆம்
உரையில் ஆர் அவ் அழல் ஆடுவர்; ஒன்று அலர்;
காண்மினோ
விரவலார்தம் மதில் மூன்று உடன் வெவ் அழல்
ஆக்கினான்,
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள், செய்கின்றது ஓர்
அச்சமே!

[7]
ஈர்க்கும் நீர் செஞ்சடைக்கு ஏற்றதும், கூற்றை உதைத்ததும்,
கூர்க்கும் நல் மூஇலைவேல் வலன் ஏந்திய கொள்கையும்,
ஆர்க்கும் வாயான் அரக்கன்(ன்) உரத்தை(ந்) நெரித்து,
அவ் அடல்
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யா நின்ற மொய்ம்பு
அதே.

[8]
நீருள் ஆரும் மலர்மேல் உறைவான், நெடுமாலும் ஆய்,
சீருள் ஆரும் கழல் தேட, மெய்த் தீத்திரள் ஆயினான்
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன், செம்பியன், வில்லவன்,
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே.

[9]
வெண் புலால் மார்பு இடு துகிலினர், வெற்று அரை
உழல்பவர்,
உண் பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான்
ஒண் புலால் வேல் மிக வல்லவன், ஓங்கு எழில் கிள்ளி
சேர்
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே.

[10]
மல்லை ஆர் மும் முடிமன்னர் மூக்கீச்சுரத்து அடிகளைச்
செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ்,
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன்
சொல்ல வல்லார் அவர், வான் உலகு ஆளவும் வல்லரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.121  
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  
பண் - செவ்வழி   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)

முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

[1]
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே,
முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம்,
புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே

[2]
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர், மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப் புலியூர் உளான்,
வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து, வெறி செய்த
பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும்(ம்) அழகு ஆகவே.

[3]
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்ய, புலியூர்தனுள்
ஆதினாலும்(ம்) அவலம்(ம்) இலாத அடிகள் மறை
ஓதி, நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு, உணப்பாலதே?

[4]
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல் ஐந்தலை
நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள்,
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.

[5]
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்) மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள்
குதியும் கொள்வர்; விதியும் செய்வர், குழகு ஆகவே.

[6]
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்வாய்ச்
சங்கு அரவப் பறையின்(ன்) ஒலி அவை சார்ந்து எழ,
பொங்கு அரவம்(ம்) உயர் பாதிரிப்புலியூர் தனுள்
அங்கு அரவம்(ம்) அரையில்(ல்) அசைத்தானை அடைமினே!

[7]
வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்) இடை
ஊக்கம் ஒழிந்து அலற(வ்) விரல் இறை ஊன்றினான்,
பூக் கமழும் புனல், பாதிரிப்புலியூர் தனை
நோக்க, மெலிந்து அணுகா, வினை, நுணுகுங்களே

[8]
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன்,
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.

[9]
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத்
திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும்,
எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே!

[10]
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.122  
விடை அது ஏறி, வெறி  
பண் - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

[1]
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்,
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச்
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே.

[2]
வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார், மதித்
துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி,
புண்டரீகம்மலர்ப் பொய்கை நிலாவும் புகலியே.

[3]
திரியும் மூன்று புரமும்(ம்) எரித்து, திகழ் வானவர்க்கு
அரிய பெம்மான், அரவக் குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால், வெயில்
புரிவு இலாத தடம் பூம்பொழில் சூழ் தண் புகலியே.

[4]
ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன் அருள் செய்தவர்,
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே.

[5]
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், தையலாளொடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும்(ம்) இடம் ஆவது
கொக்கு, வாழை, பலவின் கொழுந் தண் கனி, கொன்றைகள்,
புக்க வாசப்புன்னை, பொன்திரள் காட்டும் புகலியே.

[6]
தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத் தொலைவித்து, அவன்
தலையும் தோளும் நெரித்து சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர், இரப்போர்க்குக் கரப்பு இலார்,
பொலியும் அம் தண்பொழில் சூழ்ந்து அழகு ஆரும்
புகலியே.

[8]
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னம் ஆய்க்
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது
நீண்ட நாரை இரை ஆரல் வார, நிறை செறுவினில்
பூண்டு மிக்க(வ்) வயல் காட்டும் அம் தண் புகலியே.

[9]
தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு, சாக்கியர்,
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதிப்பொருள் வல்லவர், வான் உளோர்,
அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே.

[10]
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

[11]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai allsongs thirumurai 2