Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.001   ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
பண் - காந்தாரபஞ்சமம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!
[1]
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது ஏறினாய்! நுதல்
பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,
நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய்! இவை மேவியது என்னை கொலோ
[2]
நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப் பொடி நீறு அணிவார், சடையார்,
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி கைதொழ,
கோலத்தாய்! அருளாய்! உன காரணம் கூறுதுமே.
[3]
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை,கோல வாள்மதிபோலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையான்
கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி கைதொழ,
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா, வினையே.
[4]
தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர் தூ மணிமிடறா! பகுவாயது ஓர்
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல்சேவடி கைதொழ,
இல்லை ஆம் வினைதான் எரிய(ம்) மதில் எய்தவனே!
[5]
ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்! அமரர்க்கு அமரா! உமை
பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்! மழுவாளினாய்! அழல்
நாகம் தோய் அரையாய்! அடியாரை நண்ணா, வினையே.
[6]
சாதி ஆர் பலிங்கி(ன்)னொடு வெள்ளிய சங்க வார்குழையாய்! திகழப்படும்
வேதியா! விகிர்தா! விழவு ஆர் அணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை
வாதியாது அகலும், நலியா, மலி தீவினையே.
[7]
வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்! விகிர்தா! உயிர்கட்கு அமுது
ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!
தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்! திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய்! கழலே தொழுது எய்துதும், மேல் உலகே.
[8]
தாரின் ஆர் விரி கொன்றையாய்! மதி தாங்கு நீள்சடையாய்! தலைவா! நல்ல
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய்! உன சீர் அடி ஏத்துதுமே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.002   பந்து சேர் விரலாள், பவளத்துவர்
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூந்தராய் )
பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.
[1]
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த நல்வெண் நகை,
தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள்,
தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர் பதி,
பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.
[2]
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.
[3]
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென் கொள் குரும்பை,
மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை,
வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண்பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
[4]
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.
[5]
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
[6]
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள்,புயல் கால் ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
[7]
காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன தோள், கதிர் மென்முலை,
தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து
ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணைச்சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
[8]
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.
[9]
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.
[10]
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன
கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை
ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.003   இயல் இசை எனும் பொருளின்
பண் - கொல்லி (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.
[1]
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!
இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.
[2]
பாடினை, அருமறை வரல்முறையால்;
ஆடினை, காண முன் அருவனத்தில்;
சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே!
நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்-
தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!
[3]
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே!
முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!
[4]
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்,
அருமையில் அளப்பு அரிது ஆயவனே!
அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி,
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
பொலிந்தவனே!
[5]
அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,
புடை பட அரைமிசைப் புனைந்தவனே!
படை உடை நெடுமதில் பரிசு அழித்த,
விடை உடைக் கொடி மல்கு, வேதியனே!
விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித்
தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.
[6]
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த,
செடிய வல்வினை பல தீர்ப்பவனே!
துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப்
பொடி அணி மார்பு உறப் புல்கினனே!
புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர்
நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.
[7]
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்;
குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த
அர விரிசடை முடி ஆண்டகையே!
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.
[8]
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!
[9]
கையினில் உண்பவர், கணிகநோன்பர்,
செய்வன தவம் அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே!
வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!
[10]
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.004   இடரினும், தளரினும், எனது உறு
பண் - காந்தாரபஞ்சமம் (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[1]
வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[2]
நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்!
புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[3]
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[4]
கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[5]
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[6]
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[7]
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[8]
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;
கண்ணனும், கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[9]
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன் உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
[10]
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.005   தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூந்தராய் )
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க செம்மை விமலன், வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே.
[1]
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ,
ஞாலத்தில் உயர்வார், உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன் தானே.
[2]
வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின்,
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட,
சாதியா, வினை ஆனதானே.
[3]
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.
[4]
பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட,
நும்தம் மேல்வினை ஓட, வீடுசெய்
எந்தை ஆய எம் ஈசன்தானே.
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட,
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சே அது ஏறிய செல்வன் தானே.
[7]
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய்
காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால்,
அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே.
[8]
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்,
ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும், தானே.
[9]
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து,
இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ,
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்தும் மான்மறி எம் இறையே.
[10]
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம்
பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.006   கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய
பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[1]
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[2]
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[3]
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறு அணி தலைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[4]
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[5]
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[6]
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[7]
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[8]
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பு அரியான் கழல் உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[9]
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!
[10]
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய்,
என்றும் வானவரோடு இருப்பாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.007   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!
[1]
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும்
பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர்,
காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.
[4]
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும்,
நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர்,
கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!
[5]
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!
[6]
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!
[7]
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே!
[8]
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.008   சடை உடையானும், நெய் ஆடலானும்,
பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-
உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,
கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?
[1]
எரிதரு வார்சடையானும்; வெள்ளை எருது ஏறியும்;
புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து, ஏத்தவே,
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே?
[2]
நாதனும், நள் இருள் ஆடினானும், நளிர்போதின்கண்
பாதனும், பாய் புலித்தோலினானும், பசு ஏறியும்,
காதலர் தண் கடவூரினானும், கலந்து ஏத்தவே
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
[3]
மழு அமர் செல்வனும்; மாசு இலாத பலபூதம் முன்
முழவு, ஒலி யாழ், குழல், மொந்தை கொட்ட, முதுகாட்டு இடைக்
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர் தனுள்
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே?
[4]
சுடர் மணிச் சுண்ணவெண் நீற்றினானும், சுழல்வு ஆயது ஓர்
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்,
கடம் அணி மா உரித் தோலினானும், கடவூர்தனுள்
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே?
[5]
பண் பொலி நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
உண் பலி கொண்டு உழல்வானும்; வானின்(ன்) ஒளி மல்கிய,
கண் பொலி நெற்றி, வெண்திங்களானும்; கடவூர்தனுள்
வெண்பொடிபூப்சியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
அடி இரண்டு, ஓர் உடம்பு, ஐஞ்ஞான்கு-இருபதுதோள், தச-
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்;
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்தனுள்
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
[8]
வரை குடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண்
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான், புரிந்து ஏத்தவே,
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்தனுள்
விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே?
[9]
தேரரும், மாசு கொள் மேனியாரும், தெளியாதது ஓர்
ஆர் அருஞ்சொல் பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்;
கார் இளங் கொன்றை வெண்திங்களானும் கடவூர்தனுள்
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே?
[10]
வெந்த வெண்நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை,
அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான்
சந்தம் எல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்-
பந்தன செந்தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.009   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
பண் - காந்தாரபஞ்சமம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்;
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.
[2]
நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூஇலைச்சூலத்தர் வீழிமிழலையார்;
அஞ்சனக் கண் உமை பங்கினர், கங்கை அங்கு ஆடிய
மஞ்சனச் செஞ்சடையார் என, வல்வினை மாயுமே.
[3]
கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை; தாழ்வடம், சூலம், தமருகம்,
அலை இலங்கும் புனல், ஏற்றவர்க்கும்(ம்) அடியார்க்குமே.
[4]
பிறை உறு செஞ்சடையார், விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள்பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்;
முறைமுறையால் இசை பாடுவார், ஆடி, முன்; தொண்டர்கள்-
இறை; உறை வாஞ்சியம் அல்லது, எப்போதும் என் உள்ளமே.
[5]
வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய்,
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்;
இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு,
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.
[6]
சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்-நூலர்,
வீடர், முத்தீயர், நால்வேதத்தர் வீழிமிழலையார்;
காடு அரங்கா, உமை காண, அண்டத்து இமையோர் தொழ,
நாடகம் ஆடியை ஏத்த வல்லார் வினை நாசமே.
[7]
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;
படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு இல்லையே.
துற்று அரை ஆர் துவர் ஆடையர், துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார், அறியா நெறி வீழிமிழலையார்-
சொல்-தெரியாப் பொருள், சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான்-
மற்று அறியா அடியார்கள் தம் சிந்தையுள் மன்னுமே.
[10]
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து,
ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்,
மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.010   அலை, வளர் தண்மதியோடு அயலே
பண் - காந்தாரபஞ்சமம் (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.
[1]
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.
[2]
மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால்
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்,
ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே.
[3]
உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!
[4]
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல ஊர்தொறும்,
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.
[5]
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,
பணை இலங்கும் முடிபத்து இறுத்த, பழி போக்கிய
இணை இலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்,
துணை இலி தூ மலர்ப்பாதம் ஏத்த, துயர் நீங்குமே.
[6]
சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள், பலதீயன,
முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட,
இனி அருள் நல்கிடு! என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்,
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே!
[7]
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான் தன் பெயர் சாய் கெட,
அரு வரையால் அடர்த்து, அன்று நல்கி, அயன் மால் எனும்
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே!
[8]
சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார்
வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால்,
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள் ஆகவே!
[10]
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்,
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால்,
அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.011   மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.
[1]
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய்,
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே.
[2]
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்
படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே!
[3]
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவே
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவே
பொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,
பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற
பரமேட்டியே.
[4]
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,
புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,
ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,
மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.
[5]
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய்,
கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்
போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,
சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே.
[6]
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு இடைத்
திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய்,
பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில்
இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.
[7]
மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி ஒல்கிட,
வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய,
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த, புனவாயிலே.
[8]
திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல்
கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்-
நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கிய
பொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே.
[9]
போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்-
சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!
போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே.
[10]
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.012   வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,
பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.
[1]
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.
[2]
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!
[3]
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!
[4]
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!
[7]
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.
[8]
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!
[9]
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.
[10]
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.013   மின் அன எயிறு உடை
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூந்தராய் )
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்
அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.
[1]
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால், வீட்டினார் அவர்
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை தலைவர்; காண்மினே!
[2]
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக,
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொரு(க்) கடல் புடை தரு பூந்தராய் நகர்
கரு(க்)கிய குழல் உமை கணவர்; காண்மினே!
[3]
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா,
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர்
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
பாகு அமர் பொழி உமை பங்கர்; காண்மினே!
[4]
வெள் எயிறு உடைய அவ் விரவலார்கள் ஊர்
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்
புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
கள் அணி குழல் உமை கணவர்; காண்மினே!
[5]
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
அம் கயல் அன கணி அரிவை பங்கரே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.014   ஆரிடம் பாடலர், அடிகள், காடு
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.015   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
பண் - காந்தாரபஞ்சமம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!
[1]
படை உடை மழுவினர், பாய் புலித்தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்,
விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய,
சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!
[2]
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
[3]
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்,
வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய,
யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!
[4]
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!
[5]
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.
[6]
நயந்தவர்க்கு அருள் பல நல்கி, இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய,
பயம் தரு மழு உடை, பரமர் அல்லரே!
[7]
மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
தலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்;
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய,
அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!
[8]
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த்
தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய,
ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.016   நிணம் படு சுடலையில், நீறு
பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கொள்ளிக்காடு அக்கினீசுவரர் பஞ்சினுமெல்லடியம்மை)
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று,
இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்;
உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும்,
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.
[1]
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்,
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே.
[2]
அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம்
வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே;
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.
[3]
பா வணம் மேவு சொல்மாலையின், பல
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்;
ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும்,
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே.
[4]
வார் அணி வனமுலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்;
நார் அணி சிலைதனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே.
இறை உறு வரி வளை இசைகள் பாடிட,
அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்;
சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே.
[7]
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால்,
அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப்
படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும்,
கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே.
[8]
தேடினார், அயன் முடி, மாலும் சேவடி;
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்;
பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே.
[9]
நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள், சாக்கியர்
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல;
பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும்
கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே.
[10]
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன்,
குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச்
சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக்
கற்றவர், கழல் அடி காண வல்லரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.017   மரு அமர் குழல் உமை
பண் - காந்தாரபஞ்சமம் (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்
குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே.
[1]
கீதம் முன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதம் முன் இயல்பு உடைப் புனிதர், பொன் நகர்
கோதனம் வழிபட, குலவு நால்மறை
வேதியர் தொழுது எழு விசயமங்கையே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.018   துள மதி உடை மறி
பண் - காந்தாரபஞ்சமம் (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை)
துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.
[1]
மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே.
[2]
கணி அணி மலர்கொடு, காலை மாலையும்
பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர்,
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.
[3]
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்-
தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை,
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே.
[4]
விடம் அடை மிடற்றினர், வேத நாவினர்
மடமொழி மலைமகளோடும் வைகு இடம்
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க்
குட திசை நிலவிய மாடக்கோயிலே.
[5]
நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்,
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.
[6]
எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்
திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை,
வரு முகில் அணவிய மாடக்கோயிலே.
[7]
மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம் வரு மலை அன மாடக்கோயிலே.
[8]
மாலவன், மலரவன், நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,
மால் அன மணி அணி மாடக்கோயிலே.
[9]
கடு உடை வாயினர், கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே.
[10]
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை,
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்-
பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.019   எரிதர அனல் கையில் ஏந்தி,
பண் - காந்தாரபஞ்சமம் (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை)
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.
[1]
மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருள
கையது ஓர் கனல்-எரி கனல ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர்
செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே.
[2]
மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர்
பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே.
[3]
இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்
பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே.
[4]
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.
[5]
கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர்
சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில்
நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே.
[6]
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே,
பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ்
புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே.
[7]
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன
கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.
[8]
வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில்
பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும்,
அறிகில அரியவர் அம்பர், செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே.
[9]
வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டிய
மொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ!
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே.
[10]
அழகரை, அடிகளை, அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை,
உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்-
தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே!
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.020   மாது அமர் மேனியன் ஆகி,
பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.
[1]
வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு
தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை,
ஆன நல் அருமறை அங்கம் ஓதிய,
ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே.
[2]
வெந்துயர், உறு பிணி, வினைகள், தீர்வது ஓர்
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை,
அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய,
நந்தியை அடி தொழ, நன்மை ஆகுமே.
[3]
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப்
பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறை
ஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினை
நாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே.
[4]
குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை,
பொருந்திய பொழில்-திருப் பூவணத்து உறை,
அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த,
பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே.
[5]
வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல், விம்மிய
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
கிறிபடும் உடையினன், கேடு இல் கொள்கையன்,
நறு மலர் அடி தொழ, நன்மை ஆகுமே.
[6]
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
மறை மல்கு பாடலன், மாது ஒர் கூறினன்,
அறை மல்கு கழல் தொழ, அல்லல் இல்லையே.
[7]
வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள
விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன்,
பொரு புனல் புடை அணி பூவணம் தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே.
[8]
நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்;
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,
ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே.
[9]
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,
குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே.
[10]
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.021   நனவிலும் கனவிலும், நாளும், தன்
பண் - காந்தாரபஞ்சமம் (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை)
நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!
[1]
வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர்
மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன்,
காது இயல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே.
[2]
மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு
நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?
[3]
ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,
வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!
[4]
சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை;
கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி
பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி
ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!
[5]
இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,
என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி
முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!
[6]
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!
[7]
எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே.
[8]
பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்
வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு
நா மனனினில் வர நினைதல் நன்மையே.
[9]
சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி
ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப்
பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே!
[10]
கானலில் விரைமலர் விம்மு காழியான்,
வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி
ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.022   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
பண் - காந்தாரபஞ்சமம் (சீர்காழி )
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
[1]
மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.
[2]
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
[3]
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
[4]
கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.
[5]
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.
[6]
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.
[7]
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
[8]
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.023   உருவின் ஆர் உமையொடும் ஒன்றி
பண் - காந்தாரபஞ்சமம் (திருவிற்கோலம் (கூவம்) புராந்தகேசுவரர் புராந்தரியம்மை)
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே.
[1]
சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில்
உற்றது ஓர் எரியினன்; ஒரு சரத்தினால்,
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அறச்
செற்றவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.
[2]
ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.
[3]
விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன்; நெடு நகர்ப்-புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.
[4]
முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான்,
கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்,
அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை
சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே.
[5]
தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம்
வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்;
மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச்
செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.
[6]
விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்
சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.
[7]
திரி தரு புரம் எரிசெய்த சேவகன்,
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்,
அரியொடு பிரமனது ஆற்றலால் உருத்
தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே.
[9]
சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு
பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே.
[10]
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை,
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.024   மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
பண் - கொல்லி (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
[1]
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
[2]
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!
[3]
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே!
நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!
[4]
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!
விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
[5]
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!
[8]
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
[9]
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!
கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!
[10]
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.025   மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)
பண் - கொல்லி (திருந்துதேவன்குடி கர்க்கடகேசுவரர் அருமருந்துநாயகியம்மை)
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே
[1]
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;
ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய
ஆதி அந்தம்(ம்) இலா அடிகள், வேடங்களே
[2]
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன
தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே
[3]
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன;
கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே
[4]
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;
மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு
அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே
[5]
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா,
புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
[6]
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு
உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
[7]
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
[8]
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;
விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே
[9]
செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள்
உரு மருவப்படாத் தொழும்பர்தம் உரை கொளேல்!
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்கு
அருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!
[10]
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.026   பிடி எலாம் பின் செல,
பண் - கொல்லி (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளையீசுவரர் மகமாயியம்மை)
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?
[1]
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
[2]
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீா
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.
[3]
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.
[4]
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.
[5]
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீா
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.
[6]
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.
[7]
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.
[8]
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே
[9]
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.
[10]
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.027   படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்
பண் - கொல்லி (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.
[1]
பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.
[2]
மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும்,
பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும்,
துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை
தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.
[3]
நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார்
வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிா
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.
[4]
வெந்த வெண் பொடி அணி வேதியர், விரிபுனல்,
அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு, கார் அகில், பல்மணி,
சந்தினோடு, அணை புனல் சக்கரப்பள்ளியே.
[5]
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல்
தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே.
[6]
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்-
பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி-
நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்-
தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.
[7]
முதிர் இலா வெண்பிறை சூடினார்; முன்ன நாள
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்;
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.
[8]
துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர்
பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர்,
மணிவணன் அவனொடு மலர் மிசையானையும்
தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே.
[9]
உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல்
வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும்,
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே!
[10]
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண் நுதலவன் அடி, கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.028   காலை ஆர் வண்டு இனம்
பண் - கொல்லி (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.
[1]
கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய
பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,
மறை அணி நாவினான் மா மழபாடியே.
[2]
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர,
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.
[3]
அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்;
முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்;
பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும்
அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.
[4]
கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன்,
வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச்
செங்கயல் கண் உமையாளொடும் சேர்வு இடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.
[5]
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செகக் காலினால் சாடினான்,
சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே.
[6]
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே,
எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்
அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.
[7]
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
சிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா,
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்,
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.
[8]
ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய்,
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில்
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.
[9]
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்!
பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந்
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.
[10]
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.029   வாரு மன்னும் முலை மங்கை
பண் - கொல்லி (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப்
பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.
[2]
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி
அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே
[3]
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி
உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை
கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள்ளி
நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!
[4]
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக்
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
[5]
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்
ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக்
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!
[6]
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.
[7]
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர்
மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான்,
கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.
[8]
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன்,
தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்-
கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள்ளி
அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.
[9]
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள்
வாதினால் உரை அவை மெய் அல; வைகலும்,
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.
[10]
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்-
அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல்,
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.030   பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,
பண் - கொல்லி (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை)
புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம்,
தற்று, இரவில் நடம் ஆடுவர்; தாழ்தரு
சுற்று அமர் பாரிடம், தொல்கொடியின்மிசைப்
பெற்றர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.
[6]
துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர் வெண்பொடி
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும்(ம்), எரி-
கணையினால் முப்புரம் செற்றவர், கையினில்
பிணையர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.
[7]
சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை
நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல்
அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும்
பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.
[8]
வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும்
எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர்,
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என,
பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை,
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.031   திரை தரு பவளமும், சீர்
பண் - கொல்லி (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை)
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!
[1]
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!
[2]
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!
[3]
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!
[4]
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்
சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,
மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள்
கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!
[5]
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!
[6]
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப்பள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,
ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே!
[9]
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!
[10]
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
நம் பரம் இது என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.032   வன்னியும் மத்தமும் மதி பொதி
பண் - கொல்லி (திருஆலவாய் (மதுரை) )
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.
[1]
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி
வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.
[2]
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை
வண்டு அலம்பும் மலர்க்கொன்றை, வான்மதி, அணி
செண்டு அலம்பும் விடைச் சேடன்-ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே.
[3]
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்
சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.
[4]
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.
[5]
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;
அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே.
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீா
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.033   நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.034   வண்ண மா மலர் கொடு
பண் - கொல்லி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
[1]
வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன்,
மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம்
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
[2]
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்
நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.
[3]
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்
திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.
[4]
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர்
இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி,
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம்
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.
[5]
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர்
வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம்,
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும்
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.
[6]
மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட,
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே,
அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச்
செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே.
[7]
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற,
வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே.
[8]
ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு
பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி
ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும்
தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.
[9]
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்-
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய,
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே!
[10]
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல்
எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.035   முன்னை நால் மறை அவை
பண் - கொல்லி (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை)
முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.
[1]
மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை,
நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும்,
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.
[2]
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம்
பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.
[3]
உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே.
[4]
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான்
அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர்
செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம்,
திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.
[5]
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால்
கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.
[6]
கான் அலைக்கும்(ம்) அவன் கண் இடந்து அப்ப, நீள
வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம்
தான் அலைத் தெள் அம் ஊர், தாமரைத் தண்துறை
தேன் அலைக்கும் வயல், தென்குடித்திட்டையே.
[7]
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.
[8]
நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய்,
காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ,
சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.
[9]
குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும்,
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும்
வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர்
தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!
[10]
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.036   சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
பண் - கொல்லி (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.
[1]
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம்,
சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே,
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி,
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!
[2]
கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர்
மூங்கில், வந்து அணைதரு முகலியின் கரையினில்,
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ,
வீங்கு வெந்துயர் கெடும்; வீடு எளிது ஆகுமே.
[3]
கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே.
[4]
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே,
திரை தரு முகலியின் கரையினில், தேமலர்
விரை தரு சடை முடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினைமினே!
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி
வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்-
சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.037   கரம் முனம் மலரால், புனல்
பண் - கொல்லி (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!
[1]
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன் தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான், மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலு
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை ஆதியே.
[2]
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன் கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே.
[3]
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம் காண்மினே!
[4]
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும் என்று ஓதுவார்க்கு அருள்-தன்மையே!
[5]
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? அழல் அன்று தன் கையில் ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே!
[6]
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!
[7]
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின் கனி பட நூறியும்,
சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும் ஆய்,
அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே!
[8]
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை கூத்தனே.
[9]
பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன், கழல் பேணியே,
மெய்த்தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து, நன்பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள்,
பொய்த் தவம் பொறி நீங்க, இன் இசை போற்றி செய்யும்,
மெய்ம் மாந்தரே!
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.038   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
பண் - கொல்லி (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம் மாப் பலி தேர்ந்ததே?
[1]
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)! உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளைவான் பிறை செஞ்சடை(ம்) மிசை வைத்ததும், பெரு நீர் ஒலி-
வெள்ளம் தாங்கியது என்கொலோ, மிகு மங்கையாள் உடன் ஆகவே?
[2]
அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்,
முடிவும் ஆய், முதல் ஆய், இவ் வையம் முழுதும் ஆய், அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திருமார்பினில் புரிநூலும் பூண்டு, எழு பொற்பு அதே!
[3]
பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன் பான்மையை!
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து, ஒரு குன்றின் மங்கை வெரு உறப்
புழை நெடுங்கை நன் மா உரித்து, அது போர்த்து உகந்த பொலிவு அதே!
[4]
விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி விரும்பி ஆட்செய்வீர்! விளம்புமின்-
கரவு எலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவம், மொந்தை, முழா, ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப் போய்,
பரவு வானவர்க்கு ஆக வார்கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே!
[5]
இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும் ஆய் நிறை செய்கையை!
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்கு ஆக அன்று, அயன் பொய்ச் சிரம்,
அயல் நக(வ்), அது அரிந்து, மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே!
[6]
திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது திறம் எலாம்!
கருந் தடங்கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு, ஆல்நிழல், அறம் உரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன் சிலையால் அம் மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே!
[7]
நா விரித்து அரன் தொல் புகழ்பல பேணுவீர்! இறை நல்குமின்-
காவிரித் தடம் புனல் செய் கண்டியூர் வீரட்டத்து உறை கண்ணுதல்
கோ விரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும், கொடி வரை பெற
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே!
[8]
பெருமையே சரண் ஆக வாழ்வு உறு மாந்தர்காள்! இறை பேசுமின்-
கருமை ஆர் பொழில் சூழும் தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும், மற்றை மலரவன், உணர்ந்து ஏத்தவே,
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அத் தன்மையே!
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார் உயர்ந்தார்களே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.039   மானின் நேர் விழி மாதராய்!
பண் - கொல்லி (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[1]
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[2]
அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப் பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம் ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[3]
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர் கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[4]
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின் தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[5]
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[6]
பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு ஒன்று இலம்(ம்)! என வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,
அந்தணம்(ம்), அருகந்தணம், மதிபுத்தணம், மதிசிந்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[7]
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு, குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[8]
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[9]
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு
பொய்த் தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
[10]
எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.040   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
பண் - கொல்லி (சீர்காழி )
கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே.
[1]
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி, ஒன்றும் நன்று இலோமே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.041   கரு ஆர் கச்சித் திரு
பண் - கொல்லி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா! என்ன, மருவா, வினையே.
[1]
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம்
விதியால் ஏத்த, பதி ஆவாரே.
[2]
கலி ஆர் கச்சி, மலி ஏகம்பம்
பலியால் போற்ற, நலியா, வினையே.
[3]
வரம் ஆர் கச்சிப்புரம் ஏகம்பம்
பரவா ஏத்த, விரவா, வினையே.
[4]
படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்! என்ன, அடையா, வினையே.
[5]
நலம் ஆர் கச்சி, நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த, கலவா, வினையே.
[6]
கரியின் உரியன், திரு ஏகம்பன்,
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே.
[7]
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.042   நிறை வெண் திங்கள் வாள்முக
பண் - கொல்லிக்கௌவாணம் (திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் அகிலாண்டேசுவரியம்மை)
நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட, நீள் சடைக்
கொடு வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
படு வண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்;
கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே!
[3]
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட, கண்ணுதல்,
முதிர் ஆர் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய முக்கணன்-
எதிர் ஆர் புனல் அம் புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்;
அதிர் ஆர் பைங்கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே!
[4]
வான் ஆர் திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைக்
கூன் ஆர் திங்கள் சூடி, ஒர் ஆடல் மேய கொள்கையான்-
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்;
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே!
[5]
பனி வெண்திங்கள் வாள்முக மாதர் பாட, பல்சடைக்
குனி வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்,
தனி வெள்விடையன்-புள் இனத் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே!
[6]
கிளரும் திங்கள் வாள்முக மாதர் பாட, கேடு இலா
வளரும் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய மா தவன்-
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே!
[7]
சூழ்ந்த திங்கள் வாள்முக மாதர் பாட, சூழ்சடைப்
போழ்ந்த திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய புண்ணியன்-
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான்; தடவரையைத் தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்க, அன்று அடர்த்த அண்ணல் அல்லனே!
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.043   சந்தம் ஆர் முலையாள் தன
பண் - கௌசிகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார், அடி என் மனத்து உள்ளவே.
[1]
மான் இடம்(ம்) உடையார், வளர் செஞ்சடைத்
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார்
கான் இடம் கொளும் தண்வயல் காழியார்
ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே.
[2]
மை கொள் கண்டத்தர், வான்மதிச் சென்னியர்
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார்
கை கொள் மான்மறியார், கடல் காழியு
ஐயன், அந்தணர் போற்ற இருக்குமே.
நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை,
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய
கலி கடிந்த கையார், கடல் காழியு
அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே!
[5]
பெண் ஒர் கூறினர்; பேய் உடன் ஆடுவர்
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்;
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியு
அண்ணல் ஆய அடிகள் சரிதையே!
[6]
பற்றும் மானும் மழுவும் அழகு உற,
முற்றும் ஊர் திரிந்து, பலி முன்னுவர்
கற்ற மா நல் மறையவர் காழியு
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே!
[7]
எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற
அடர்த்து, உகந்து அருள் செய்தவர் காழியுள
கொடித் தயங்கு நன் கோயிலுள், இன்புஉற,
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.
[8]
காலன் தன் உயிர் வீட்டு, கழல் அடி,
மாலும் நான் முகன்தானும், வனப்பு உற
ஓலம் இட்டு, முன் தேடி, உணர்கிலாச்
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே.
[9]
உருவம் நீத்தவர் தாமும், உறு துவர்
தரு வல் ஆடையினாரும், தகவு இலர்;
கருமம் வேண்டுதிரேல், கடல் காழியு
ஒருவன் சேவடியே அடைந்து, உய்ம்மினே!
[10]
கானல் வந்து உலவும் கடல் காழியு
ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும்
ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ்,
மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.044   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
பண் - கௌசிகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.
[1]
வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.
[2]
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?
[3]
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?
[4]
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!
[5]
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.
[6]
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!
[7]
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!
[10]
அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.045   அந்தம் ஆய், உலகு ஆதியும்
பண் - கௌசிகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக்
கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்-
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்;
அலங்கல் தந்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ?
[8]
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன், பனி மா மதிச் சென்னியான்-
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள் தான்; எனை, அஞ்சல்! எனும்கொலோ?
[9]
மாசு மெய்யினர், வண் துவர் ஆடை கொள
காசை போர்க்கும் கலதிகள், சொல் கொளேல்!
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்கொலோ?
[10]
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை,
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.046   முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,
மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[1]
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு
அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம்,
கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர்
அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே.
[2]
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக்
குழகர்! என்று குழையா, அழையா, வரும்,
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட,
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம்
ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[5]
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட,
ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்;
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.
[6]
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்,
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்-
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.
[7]
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[9]
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல்
தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்!
கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
[10]
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ
நிலவு பாடல் உடையான் தன நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.047   காட்டு மா அது உரித்து,
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,
நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;
வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?
[1]
மத்தயானையின் ஈர் உரி மூடிய
அத்தனே! அணி ஆலவாயாய்! பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?
[2]
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?
[3]
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!
[4]
வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண்கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே?
[5]
நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய
தேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச்
சீறி, வாது செயத் திரு உள்ளமே?
[6]
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும்
தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய்
அண்டனே! அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?
[7]
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை,
கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?
[8]
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி
மேலைவீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே?
[9]
கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!
[10]
செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே! என்று, வல் அமண் ஆசு அற,
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்-
பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.048   அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
பண் - கௌசிகம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.
[1]
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.
[2]
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்-
குழுவினான், குலவும் கையில் ஏந்திய
மழுவினான், உறையும் மழபாடியைத்
தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!
[3]
கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.
[4]
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.
[5]
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.
[6]
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே.
[7]
தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில், அங்க உறுபிணி இல்லையே.
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.
[10]
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.049   காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம் (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
[1]
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
[2]
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.
[8]
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.
[9]
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே.
[10]
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.050   விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும்
பண் - கௌசிகம் (திருத்தண்டலைநீணெறி நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை)
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!
[1]
இகழும் காலன் இதயத்தும், என் உளும்,
திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே!
[2]
பரந்த நீலப் படர் எரி வல்விடம்
கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம்
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே!
இலங்கை வேந்தன் இருபது தோள் இற,
விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம்
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே!
[8]
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று
இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம்
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்-
நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே!
[9]
கலவு சீவரத்தார், கையில் உண்பவர்
குலவமாட்டாக் குழகன் உறைவு இடம்
சுலவு மா மதிலும், சுதை மாடமும்,
நிலவு தண்டலை நீணெறி; காண்மினே!
[10]
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார்
மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.051   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
[1]
சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
[2]
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!
[3]
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! அஞ்சல்! என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
[4]
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!
[5]
தஞ்சம்! என்று உன் சரண் புகுந்தேனையும்,
அஞ்சல்! என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
[6]
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!
[7]
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
[8]
தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
[9]
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
[10]
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.052   வீடு அலால் அவாய் இலாஅய்,
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?
[1]
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?
[2]
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.
[5]
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.
[6]
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?
[7]
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
[8]
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்
கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்!
தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின்
தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-
பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால்,
ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.053   வானைக் காவல் வெண்மதி மல்கு
பண் - கௌசிகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.
[1]
சேறு பட்ட தண்வயல் சென்றுசென்று, சேண் உலாவு
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறு பட்ட மேனியார், நிகர் இல் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார்; விண்ணில் எண்ண வல்லரே.
[2]
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்,
ஈரம் ஆய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான்,
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை,
வாரம் ஆய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.
[3]
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால்விடை,
சுண்ணவெண் நீறு ஆடினான்; சூலம் ஏந்து கையினான்;
அண்ணல் கண் ஓர் மூன்றினான்; ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.
[4]
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்! ஆண்ட சீா
மை கொள் கண்டன், வெய்ய தீ மாலை ஆடு காதலான்,
கொய்ய விண்ட நாள்மலர்க்கொன்றை துன்று சென்னி எம்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!
[5]
நாணும் ஓர்வு, சார்வும், முன் நகையும், உட்கும், நன்மையும்,
பேண் உறாத செல்வமும், பேச நின்ற பெற்றியான்-
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடைக் கறை கொள் மிடறன் அல்லனே!
[6]
கூரும் மாலை, நண்பகல், கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்;
பாரும் விண்ணும் கைதொழ, பாயும் கங்கை செஞ்சடை
ஆரம் நீரொடு ஏந்தினான்; ஆனைக்காவு சேர்மினே!
[7]
பொன் அம் மல்கு தாமரைப்போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்ன வல்ல, நால்மறை பாட வல்ல, தன்மையோர்
முன்ன வல்லர், மொய்கழல்; துன்ன வல்லர், விண்ணையே.
[8]
ஊனொடு உண்டல் நன்று என, ஊனொடு உண்டல் தீது என,
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்;
வானொடு ஒன்று சூடினான்; வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான்; ஆனைக்காவு சேர்மினே!
[9]
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்,
மெய்யைப் போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான், தழல் அது உருவத்தான், எங்கள்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!
[10]
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்,
ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை,
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.054   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) )
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?
[2]
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
[3]
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்
[4]
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
[5]
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?
[6]
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!
[7]
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!
[8]
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!
[9]
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
[10]
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.055   விரை ஆர் கொன்றையினாய்! விடம்
பண் - கௌசிகம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[1]
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்!
கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[2]
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!
மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[3]
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே!
மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!
தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்
அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[4]
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[5]
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்;
ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்
ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[6]
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[7]
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும்,
நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே!
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[9]
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்!
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
[10]
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.056   இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
பண் - பஞ்சமம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!
[1]
சடையினன், சாமவேதன், சரி கோவணவன், மழுவாள
படையினன், பாய் புலித்தோல் உடையான், மறை பல்கலை நூல்
உடையவன், ஊனம் இ(ல்)லி, உடன் ஆய் உமை நங்கை என்னும்
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம்; பேணுமினே!
[2]
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்று, காள
காணிய ஆடல் கொண்டான், கலந்து ஊர்வழிச் சென்று, பிச்சை
ஊண் இயல்பு ஆகக் கொண்டு, அங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம்; பேணுமினே!
[3]
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட,
பேர் இடர்த் தேவர்கணம், பெருமான், இது கா! எனலும்,
ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே
பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே!
[4]
நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து, அங்கு
அச்சம் எழ விடைமேல் அழகு ஆர் மழு ஏந்தி, நல்ல
இச்சை பகர்ந்து, மிக இடுமின், பலி! என்று, நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே!
[5]
பெற்றவன்; முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால்
செற்றவன்; செஞ்சடையில்-திகழ் கங்கைதனைத் தரித்திட்டு,
ஒற்றை விடையினன் ஆய், உமை நங்கையொடும் உடனே
பெற்றிமையால் இருந்தான்; பிரமாபுரம் பேணுமினே!
[6]
வேதம் மலிந்த ஒலி, விழவின்(ன்) ஒலி, வீணை ஒலி,
கீதம் மலிந்து உடனே கிளர, திகழ் பௌவம் அறை
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற, ஒண் மால்வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணுமினே!
[7]
இமையவர் அஞ்சி ஓட, எதிர்வார் அவர்தம்மை இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து(ம்), மலை அன்று எடுப்ப,
குமை அது செய்து, பாட, கொற்றவாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே!
[8]
ஞாலம் அளித்தவனும்(ம்) அரியும்(ம்), அடியோடு முடி
காலம்பல செலவும், கண்டிலாமையினால் கதறி
ஓலம் இட, அருளி, உமை நங்கையொடும்(ம்) உடன் ஆய்
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்துமினே!
[9]
துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர் நக்க(அ)ரையர்
அவர் அவர் தன்மைகள் கண்டு அணுகேன்மி(ன்), அருள் பெறுவீர்
கவர் உறு சிந்தை ஒன்றி, கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி, பிரமாபுரம் ஏத்துமினே!
[10]
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.057   விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
பண் - பஞ்சமம் (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.
[1]
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,
ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
[2]
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி;
அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
[3]
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
[4]
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே,
அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு, முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
[5]
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப,
சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும்
சோமனையும்;
அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு இலங்க,
உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,
பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.058   திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்
பண் - பஞ்சமம் (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை)
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே?
பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!
[1]
பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த,
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே?
கடி-மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே!
[2]
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து, ஏறு அது ஏறி,
மான் அன நோக்கி தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே?
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆன் நலம் தோய்ந்த எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
[3]
மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி,
புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே?
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே!
[4]
வெந்த வெண் நீறு பூசி, விடை ஏறிய வேத கீதன்,
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே?
சந்தம் ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,
அந்தம் ஆம் ஆதி ஆகி, அயவந்தி அமர்ந்தவனே!
[5]
வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது ஆகி,
சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே?
சாதியால் மிக்க சீரால்-தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
[6]
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி,
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே?
சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,
அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே!
[7]
பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி,
விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே?
தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!
[8]
பேர் எழில்-தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம்
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே?
கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணா
ஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே!
[9]
கங்கை ஓர் வார்சடைமேல் அடைய, புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற(ம்) மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே?
சங்கை இல்லா மறையோர் அவர்தாம் தொழு சாத்தமங்கை,
அங்கையில் சென்னி வைத்தாய்! அயவந்தி அமர்ந்தவனே!
[10]
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.059   அர விரி கோடல் நீடல்
பண் - பஞ்சமம் (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.
[1]
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே
பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல
கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா,
ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே.
[2]
மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும்,
பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில் வாய்,
குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
[3]
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
[4]
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப்
பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்;
கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா,
இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே.
[5]
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே,
தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம் இறையே.
[6]
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச்
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்;
குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா,
இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.
[7]
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப்
படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா,
இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.
[8]
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.
[9]
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான்,
கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா,
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம் இறையே.
[10]
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.060   கறை அணி மா மிடற்றான்,
பண் - பஞ்சமம் (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.
[1]
பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா
ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில்
தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி
செப்புதுமே.
[2]
சந்திரசேகரனே, அருளாய்! என்று, தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச,
அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால்,
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.
[3]
நெய் அணி சூலமோடு நிறை வெண்மழுவும்(ம்) அரவும்
கை அணி கொள்கையினான்; கனல் மேவிய ஆடலினான்;
மெய் அணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின், மேல்;
மை அணி மா மிடற்றான்; உறையும்(ம்) இடம் வக்கரையே.
[4]
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து
கூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல
மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்,
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
[5]
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்
நீர் மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல
வார் மலி மென் முலையாளொடும் வக்கரை மேவியவன்,
பார் மலி வெண்தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே.
[6]
கான் அணவும் மறிமான் ஒரு கையது, ஒர் கை மழுவாள
தேன் அணவும் குழலாள் உமை சேர் திருமேனியினான்-
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்;
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே.
[7]
இலங்கையர் மன்னன் ஆகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்க, ஒர் கால்விரலால், கதிர் போல் முடிபத்து அலற,
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும், நன்கு அளித்த
வலம் கெழு மூ இலைவேல் உடையான் இடம் வக்கரையே.
[8]
காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப,
சேமமே, உன் தனக்கு! என்று அருள் செய்தவன்;
தேவர்பிரான்;
சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்த
வாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே.
[9]
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள்
தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்;
பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம்
வக்கரையே.
[10]
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.061   ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய
பண் - பஞ்சமம் (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை)
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
[1]
காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான்;
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்;
மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்;
வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
[2]
படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை உடையான்,
கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான்,
உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடிய
விடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
[3]
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள் தம்
எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான்,
பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான்,
விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
[4]
பார் இயலும் பலியான்; படி யார்க்கும் அறிவு அரியான்;
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;
போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,
வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
[5]
ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு அரியான்;
போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்;
யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
[6]
கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப்
பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான்,
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள்
வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
[7]
கரம் இரு-பத்தினாலும் கடுவெஞ்சினம் ஆய் எடுத்த
சிரம் ஒருபத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான்,
பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒருபாகமும் பெண்
விரவிய வேடத்தினான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
[8]
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்,
சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்;
மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்;
வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.
[9]
நக்க உரு ஆயவரும், துவர் ஆடை நயந்து உடை ஆம்
பொக்கர்கள், தம் உரைகள்(ள்) அவை பொய் என, எம் இறைவன்,
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான், கனகம்
மிக்கு உயர் சோதி அவன், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
[10]
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை,
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்-
எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.062   கண் பொலி நெற்றியினான், திகழ்
பண் - பஞ்சமம் (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை)
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.
[1]
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[2]
உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர்
நால்மறையான்;
மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[3]
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும்,
போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த
தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே!
[4]
விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன், எம் இறை, சேரும் இடம்
படம் புரி நாகமொடு திரை பல்மணியும் கொணரும்
தடம் புனல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[5]
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆடவல்லான்; மிகு பூதம் ஆர் பல் படையான்;
தொடை நவில் கொன்றையொடு, வன்னி, துன் எருக்கும், அணிந்த
சடையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[6]
மலையவன் முன் பயந்த மடமாதை ஓர் கூறு உடையான்;
சிலை மலி வெங்கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்;
அலை மலி தண்புனலும், மதி, ஆடு அரவும்(ம்), அணிந்த
தலையவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[7]
செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து
முற்றும் வெண் நீறு அணிந்த திருமேனியன்; மும்மையினான்;
புற்று அரவம், புலியின்(ன்) உரி-தோலொடு, கோவணமும்,
தற்றவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[8]
வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,
புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;
நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்
தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[9]
ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்
நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த்
தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
[10]
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.063   பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!
பண் - பஞ்சமம் (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.
[1]
பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன் வாழும்
அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள்
கல்-நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!
[2]
குட்டத்தும், குழிக் கரையும், குளிர் பொய்கைத் தடத்து அகத்தும்,
இட்டத்தால் இரை தேரும், இருஞ் சிறகின் மட நாராய்!
சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார்சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!
[3]
கான் அருகும், வயல் அருகும், கழி அருகும், கடல் அருகும்,
மீன் இரிய, வருபுனலில் இரை தேர் வண் மடநாராய்!
தேன் அமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம், சென்று,
உரையாயே!
[4]
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகு
உலர்த்தும்,
பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்!
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!
[5]
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே?
குளிர்பொய்கைத்
துறைக் கெண்டை கவர் குருகே! துணை பிரியா மடநாராய்!
கறைக்கண்டன், பிறைச்சென்னி, கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
[6]
கரு அடிய பசுங் கால் வெண்குருகே! ஒண் கழி நாராய்!
ஒரு அடியாள் இரந்தாள் என்று, ஒரு நாள் சென்று, உரையீரே!
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?
[7]
கூர் ஆரல் இரை தேர்ந்து, குளம் உலவி, வயல் வாழும்
தாராவே! மடநாராய்! தமியேற்கு ஒன்று உரையீரே!
சீராளன், சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன், பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
[8]
நறப் பொலி பூங் கழிக் கானல் நவில் குருகே! உலகு எல்லாம்
அறப் பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே?
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பு இலி பேர் பிதற்றி நின்று, இழக்கோ, என் பெரு நலமே?
[9]
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய,
வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட,
அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும்
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.064   அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை
பண் - பஞ்சமம் (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[1]
கருமானின் உரி உடையர், கரிகாடர், இமவானார்
மருமானார், இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர்,
பொரு மான விடை ஊர்வது உடையார், வெண்பொடிப் பூசும்
பெருமானார், பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.
[2]
குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்
கணக்கு என்ன அருள் செய்வார், கழிந்தோர்க்கும்
ஒழிந்தோர்க்கும்;
வணக்கம் செய் மனத்தாராய் வணங்காதார் தமக்கு என்றும்
பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[3]
இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு
மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர்,
கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல்
பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[4]
விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி;
குழையாதார், குழைவார் போல் குணம் நல்ல பல கூறி;
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கு என்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்; தமக்கு எல்லாம்
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார், ஒரு கணையால்;
இறப்பு இலார்; பிணி இல்லார்; தமக்கு என்றும் கேடு இலார்
பிறப்பு இலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[7]
எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக் கோன்தனை வீழ,
முரி ஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்து, உகந்த முதலாளா
வரி ஆர் வெஞ்சிலை பிடித்து, மடவாளை ஒரு பாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[8]
சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு எய்தி,
காண் இயல்பை அறிவு இலராய், கனல் வண்ணர் அடி இணைக்கீழ்
நாணி அவர் தொழுது ஏத்த, நாணாமே அருள் செய்து
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[9]
புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்
சொல்-தேற வேண்டா, நீர்! தொழுமின்கள், சுடர் வண்ணம்!
மல்-தேரும் பரிமாவும் மதகளிரும் இவை ஒழிய,
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
[10]
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி,
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான-
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.065   வார் அணவு முலை மங்கை
பண் - பஞ்சமம் (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை)
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.
[1]
கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டு
ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி-அதளர்
தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய்,
நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.
[2]
கூறு அணிந்தார், கொடியிடையை; குளிர்சடைமேல்
இளமதியோடு
ஆறு அணிந்தார்; ஆடு அரவம் பூண்டு உகந்தார்; ஆள் வெள்ளை
ஏறு அணிந்தார், கொடி அதன்மேல்; என்பு அணிந்தார், வரைமார்பில்,
நீறு அணிந்தார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[3]
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி,
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும்
நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[4]
அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்த அருள
குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி,
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[5]
பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[6]
புற்று இடை வாள் அரவினொடு, புனை கொன்றை, மத மத்தம்,
எற்று ஒழியா அலைபுனலோடு, இளமதியம், ஏந்து சடைப்
பெற்று உடையார்; ஒருபாகம் பெண் உடையார்; கண் அமரும்
நெற்றியினார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[7]
ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார்
ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும்
நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[8]
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர்
மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய்
நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,
தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.066   வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி
பண் - பஞ்சமம் (திருவேட்டக்குடி திருமேனியழகீசுவரர் சாந்தநாயகியம்மை)
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம்
தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.
[1]
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப் பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர்
தீ-எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே.
[2]
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்
பாத்திரமா ஆட்டுதலும், பரஞ்சோதி பரிந்து அருளி
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த,
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
[3]
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே.
[4]
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு அரவு உழல,
செங்கண் மால் கடைய, எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி;
அங்கம் நால்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே.
[5]
நாவாய பிறைச் சென்னி, நலம் திகழும் இலங்கு இப்பி,
கோவாத நித்திலங்கள், கொணர்ந்து எறியும் குளிர்கானல்
ஏ ஆரும் வெஞ்சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திரு வேட்டக்குடியாரே.
[6]
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்கு
கான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்
தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே.
[7]
துறை உலவு கடல் ஓதம் சுரிசங்கம் இடறிப் போய்,
நறை உலவும் பொழில் புன்னை நன்நீழல் கீழ் அமரும்
இறை பயிலும் இராவணன் தன் தலை பத்தும் இருபது தோள
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே.
[8]
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும்,
இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;
வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.
[9]
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும், இடும் போர்வைச் சாக்கியரும்,
புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின், பொருள் என்ன!
நிகழ்ந்து இலங்கு வெண்மணலின் நிறைத் துண்டப்
பிறைக்கற்றை
திகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திரு வேட்டக்குடியாரே.
[10]
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை,
தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார், போய்,
உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து
இருப்பாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.067   சுரர் உலகு, நரர்கள் பயில்
பண் - சாதாரி (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.
[1]
தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும் அளவில்,
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண் அமரர்கோன்
வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு வேணுபுரமே.
[2]
பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரணஅகவு முனிவர்க்கு
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள, நிகர் இல் இமையோர்
புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு புகலிநகரே.
[3]
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித்
துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்
வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.
[4]
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர்
தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்
பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.
அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம் மலி படைக்
கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள் கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம் அரிய, அச்
சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம் அதே.
[7]
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி விரல், மா-
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும் இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள, முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு புறவம் அதுவே.
[8]
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால்,
கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண் படர, அச்
சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே.
[9]
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு வாழ, அரனுக்கு
ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே.
[10]
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால்
மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை கொச்சைநகரே.
[11]
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு வழியை நினையா,
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு, கெழுவு சிவனைத்
தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி மொழிகள் மொழி தகையவே.
[12]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.068   வாள வரி கோள புலி
பண் - சாதாரி (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.
[1]
புற்று அரவு பற்றிய கை, நெற்றியது மற்று ஒரு கண், ஒற்றை விடையன்,
செற்றது எயில், உற்றது உமை, அற்றவர்கள் நல்-துணைவன், உற்ற நகர்தான்-
சுற்றும் மணி பெற்றது ஒளி; செற்றமொடு குற்றம் இலது; எற்று? என வினாய்,
கற்றவர்கள் சொல்-தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாயமலையே.
[2]
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்குமலர் தூய்,
எங்கள் வினை, சங்கை அவை, இங்கு அகல! அங்கம் மொழி எங்கும் உள ஆய்,
திங்கள் இருள் நொங்க, ஒளி விங்கி, மிளிர் தொங்கலொடு தங்க, அயலே
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே.
[3]
முடிய சடை, பிடியது ஒரு வடிய மழு உடையர், செடி உடைய தலையில்
வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர,
கடிய குரல் நெடிய முகில் மடிய, அதர் அடி கொள் கயிலாயமலையே.
[4]
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ, விடம் கிளர் படம் கொள் அரவம்
மடங்கு ஒளி படர்ந்திட, நடம் தரு விடங்கனது இடம் தண்முகில் போய்த்
தடங்கடல் தொடர்ந்து, உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால்,
கடுங் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாயமலையே.
[5]
ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாயமலையே.
[6]
சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி, உடனே-
நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்-
துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ,
கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற கயிலாயமலையே.
[7]
மருப்பு இடை நெருப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின்
பொருப்பு இடை விருப்பு உற இருக்கையை ஒருக்கு உடன் அரக்கன் உணராது,
ஒருத்தியை வெருக்கு உற வெருட்டலும், நெருக்கு என நிருத்த விரலால்,
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே.
[8]
பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை உடையன்,
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு இல் நகர்தான்-
பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை அதனால்,
கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு கயிலாயமலையே.
[9]
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை, துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத கயிலாயமலையே.
[10]
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.069   வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
பண் - சாதாரி (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.
[1]
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரி செய்
சதுரர், மதி பொதி சடையர், சங்கரர், விரும்பும் மலைதன்னை வினவில்
எதிர் எதிர வெதிர் பிணைய, எழு பொறிகள் சிதற, எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள், இருள் அகல நிலவு காளத்திமலையே.
[2]
வல்லை வரு காளியை வகுத்து, வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்! என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம் ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.
[3]
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி, சடைமேல்
தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு காளத்திமலையே.
[4]
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை மழை போல் அலறக்
கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலையே.
[5]
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே.
[6]
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே.
[7]
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே.
[8]
இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில்
புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்திமலையே.
[9]
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு போர்வையவரும்,
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி,
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்திமலையே.
[10]
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்-
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.070   ஏன எயிறு, ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய்,
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர்
வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே.
[1]
அம் தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து, அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது, வேண்டில், எழில் ஆர் பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே.
[2]
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி, மிகு நோக்கு அரியராய்,
மூளை படு வெண்தலையில் உண்டு, முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம்
பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட, நிரந்து, கமழ் பூ,
வாளை குதிகொள்ள, மடல் விரிய, மணம் நாறும் மயிலாடுதுறையே.
[3]
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்,
மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே.
[4]
பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து, பலி தேர்
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவர
மா விரி மதுக் கிழிய, மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே.
[5]
கடம் திகழ் கருங்களிறு உரித்து, உமையும் அஞ்ச, மிக நோக்கு அரியராய்,
விடம் திகழும் மூ இலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர்வாய்
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே.
[6]
அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து, அவர்கள் மேல்
எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே.
[7]
இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள் நெரிய, விரலால்
விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா,
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே.
[8]
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்,
அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
கெண்டை இரை கொண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து, கிளர்வாய் அறுதல் சேர்
வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளையாடும் மயிலாடுதுறையே.
[9]
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற, மிக்க திறலோன்
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர்
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை, நிரந்து கமழ்பூ
வண்டு அவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே.
[10]
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்-
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு காதன்மையினால்,
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன், மயிலாடுதுறையைப்
புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர், பொன்னுலகமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.071   கோழை மிடறு ஆக, கவி
பண் - சாதாரி (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை)
கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும் வைகாவிலே.
[1]
அண்டம் உறு மேருவரை, அங்கி கணை, நாண் அரவு அது, ஆக, எழில் ஆர்
விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன்(ன்) அவன் விரும்பும் இடம் ஆம்
புண்டரிகம் மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
வண்டின் இசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே.
[2]
ஊனம் இலர் ஆகி, உயர் நல்-தவம் மெய் கற்று, அவை உணர்ந்த அடியார்
ஞானம் மிக நின்று தொழ, நாளும் அருள் செய்ய வல நாதன் இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே, பொழில்கள் தோறும், அழகு ஆர்
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே.
[3]
இன்ன உரு, இன்ன நிறம், என்று அறிவதேல் அரிது; நீதிபலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு இடம்
முன்னை வினை போம் வகையினால், முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
மன்ன, இருபோதும் மருவித் தொழுது சேரும், வயல் வைகாவிலே.
[4]
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுத்து, விதி ஆறு சமயம்
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ, நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால்,
மாதவி மணம் கமழ, வண்டுபல பாடு பொழில் வைகாவிலே.
[5]
நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள் உடைய ஞான முதல்வன்,
செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன், அமர்கின்ற இடம் ஆம்
அம் சுடரொடு, ஆறுபதம், ஏழின் இசை, எண் அரிய வண்ணம் உள ஆய்,
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும், வயல் வைகாவிலே.
[6]
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர், வல்ல வகையால்,
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
நீளி வளர் சோலைதொறும் நாளிபல துன்று கனி நின்றது உதிர,
வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே.
[7]
கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன்
ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம் ஆம்
கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி, பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில் வைகாவிலே.
[8]
அந்தம் முதல்-ஆதி பெருமான் அமரர்கோனை, அயன் மாலும் இவர்கள்
எந்தைபெருமான்! இறைவன்! என்று தொழ, நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தை செய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர், முந்தி அணையும் பதி நல் வைகாவிலே.
[9]
ஈசன், எமை ஆள் உடைய எந்தை பெருமான், இறைவன் என்று தனையே
பேசுதல் செயா அமணர், புத்தர் அவர், சித்தம் அணையா அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவித் திகழ நின்ற புகழோன்,
வாசமலர் ஆன பல தூவி, அணையும் பதி நல் வைகாவிலே.
[10]
முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை,
செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்-ஞானசம்பந்தன் - உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்-ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் எனப்-
பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும் புகழொடே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.072   விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
[1]
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர்
மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்-
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள்
அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
[2]
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
[3]
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!
[4]
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே
[5]
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
[6]
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
[7]
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர்
பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.
[8]
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண்
பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-
சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்-
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
[9]
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே.
[10]
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.073   பாடல் மறை, சூடல் மதி,
பண் - சாதாரி (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.
[1]
நீரின் மலி புன்சடையர்; நீள் அரவு, கச்சை அது; நச்சு இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி; உடை கோவணமும், மானின் உரி-தோல்;
காரின் மலி கொன்றை விரிதார் கடவுள்; காதல் செய்து மேய நகர்தான்,
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம்; ஏத்த, வினை பற்று அழியுமே.
[2]
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்ப்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம் ஆளுமவரே.
[3]
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்,
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே.
[4]
மருவ முழவு அதிர, மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க, வரை ஆர்
பருவ மழை பண் கவர் செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்;
வெருவ மதயானை உரி போர்த்து, உமையை அஞ்ச வரு வெள்விடையினான்;
உருவம் எரி; கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா, வினைகளே
[5]
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல், தோற்றம் நிலை ஆம்-
இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர், மிகவே.
[6]
பிறவி, பிணி, மூப்பினொடு நீங்கி, இமையோர் உலகு பேணல் உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள், கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள், வினை ஏதும் இல ஆய்,
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே.
[7]
நேசம் மிகு தோள் வலவன் ஆகி, இறைவன் மலையை நீக்கியிடலும்,
நீசன் விறல் வாட்டி, வரை உற்றது உணராத, நிரம்பா மதியினான்,
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இல ஆய்
நாசம் அற வேண்டுதலின், நண்ணல் எளிது ஆம், அமரர் விண்ணுலகமே.
[8]
தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.
[9]
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி, உடல் கவசர், கத்து மொழி காதல் செய்திடாது, கமழ் சேர்
மடைக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த, வினை பற்று அறுதலே.
[10]
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை,
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.074   காடு பயில் வீடு, முடை
பண் - சாதாரி (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.
[1]
கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி, கொக்கு இறகொடும்,
வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே.
[2]
பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை ஆளும் இறைவன்,
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி, விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே.
[3]
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர்
ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-
வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும்
தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே.
[4]
கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல் ஆடல் புரிவோன்;
ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர் தலைவன்; ஊர்
வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி, வார்
தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே.
[5]
ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள் தான்,
சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்; ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச்
சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர் அதுவே.
[6]
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று நகைசெய்
என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப நகர்தான்-
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக் குருளைகள்
சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர் அதுவே.
[7]
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரிய,
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்,
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே.
[8]
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி வண்ணம் மலர்மேல்
நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம் கொள் பதிதான்-
வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை, இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே.
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர் அதன்மேல்,
பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை இலரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.075   எம் தமது சிந்தை பிரியாத
பண் - சாதாரி (திருச்சண்பைநகர் (சீர்காழி) )
எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.
போழும் மதி, தாழும் நதி, பொங்கு அரவு, தங்கு புரி
புன்சடையினன்,
யாழ் இன்மொழி, மாழைவிழி, ஏழை இளமாதினொடு இருந்த பதிதான்-
வாழை, வளர் ஞாழல், மகிழ், மன்னு புனை, துன்னு பொழில் மாடு, மடல் ஆர்
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என, உந்து தகு சண்பைநகரே.
[3]
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி, குலவும்
பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு பதிதான்-
வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பைநகரே.
[4]
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி, பகவன்,
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர் புறவு எலாம்,
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர்
சண்பைநகரே.
[5]
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்,
ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு
எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு இசைசெய,
சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர்
சண்பைநகரே.
[6]
விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான் மிக உடை
மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை வழுவார்
உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன பதிதான்-
சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே.
[7]
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி உடை
அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்,
தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன
சண்பைநகரே.
[8]
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம்
மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில்,
சண்பைநகரே.
[9]
போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு, பலபொய்
ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது
உணர்வீர்! உரைமினோ
ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த பதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பைநகரே!
[10]
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல்,
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.076   கல் பொலி சுரத்தின் எரி
பண் - சாதாரி (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே.
[1]
பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே.
[2]
கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார் சடையில் வைத்து, மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம் மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம், நாளும் இசையால்,
வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி
வேதவனமே.
[3]
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி, வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன் ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில்
வேதவனமே.
[4]
கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு, இடக்கை, படகம்,
எத்தனை உலப்பு இல் கருவித்திரள் அலம்ப, இமையோர்கள் பரச,
ஒத்து அற மிதித்து, நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
மெய்த் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே.
[5]
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல,
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க, அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இனவண்டு, மது உண்டு இசைசெய;
வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுறவம், கொணரும்
வேதவனமே.
[6]
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அஞ்சு அகம் அவித்த அமரர்க்கு அமரன், ஆதி பெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில,
விஞ்சு அக இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனமே.
[7]
முடித் தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை
நெருக்கி விரலால்,
அடித்தலம் முன் வைத்து, அலமர, கருணை வைத்தவன் இடம் பலதுயர்
கெடுத்தலை நினைத்து, அறம் இயற்றுதல் கிளர்ந்து, புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து, நிதி நல்குமவர் மல்கு பதிவேதவனமே.
[8]
வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத, நெறியைக்
கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத, அரன் ஊர்
காசு, மணி, வார் கனகம், நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
வீசு வலைவாணர் அவை வாரி, விலை பேசும் எழில்
வேதவனமே.
[9]
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி,
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன் அருளினால்,
சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில்,
பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர்
வான் உலகமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.077   பொன் இயல் பொருப்பு அரையன்
பண் - சாதாரி (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை)
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
மாணிகுழியே.
[1]
சோதி மிகு நீறு அது மெய் பூசி, ஒரு தோல் உடை புனைந்து, தெருவே
மாதர் மனைதோறும் இசை பாடி, வசி பேசும் அரனார் மகிழ்வு இடம்
தாது மலி தாமரை மணம் கமழ, வண்டு முரல் தண் பழனம் மிக்கு
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி
மாணிகுழியே.
[2]
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ, சினம் உடைக்
கம்ப மதயானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு ஆர்
உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி மாணிகுழியே.
[3]
நித்தம் நியமத் தொழிலன் ஆகி, நெடுமால் குறளன் ஆகி, மிகவும்
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
கொத்து அலர் மலர்ப்பொழிலில் நீடு குலமஞ்ஞை நடம்
ஆடல் அது கண்டு
ஒத்த வரிவண்டுகள் உலாவி, இசை பாடு உதவி
மாணிகுழியே.
[4]
மாசு இல் மதி சூடு சடை மா முடியர், வல் அசுரர் தொல்-நகரம் முன்
நாசம் அது செய்து, நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி, அழகு ஆர்
ஊசல் மிசை ஏறி, இனிது ஆக, இசை பாடு உதவி மாணிகுழியே.
[5]
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனம் ஆய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதை செய்த மணிகண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து, தட மா மலர்கள் கொண்டு, கெடிலம்
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே.
[6]
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய, இறையே கருணை ஆய்,
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு, உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டுபல கெண்டி, மது உண்டு, நிறை பைம்பொழிலின் வாய்,
ஒண் பலவின் இன்கனி சொரிந்து, மணம் நாறு உதவி
மாணிகுழியே.
[7]
எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய் அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி
மாணிகுழியே.
[8]
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து, முடிமேல்
ஏடு உலவு திங்கள், மதமத்தம், இதழிச் சடை எம் ஈசன் இடம் ஆம்
மாடு உலவு மல்லிகை, குருந்து, கொடிமாதவி, செருந்தி, குரவின்
ஊடு உலவு புன்னை, விரி தாது மலி சேர் உதவி
மாணிகுழியே.
[9]
மொட்டை அமண் ஆதர், முது தேரர், மதி இ(ல்)லிகள் முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழி கொண்டு அருள் செய்யாத
முதல்வன் தன் இடம் ஆம்
மட்டை மலி தாழை இளநீர் முதிய வாழையில் விழுந்த அதரில்,
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர, ஏறு உதவி
மாணிகுழியே.
[10]
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான நிலனே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.078   நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.
[1]
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத்
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே.
[2]
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர்
சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல்
வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே.
[3]
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்-
தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்-
பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே.
[4]
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்-
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம்,
மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே.
[5]
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.
[6]
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித்
துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக,
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.
[7]
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.
[8]
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய்,
தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்,
மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே.
[9]
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால்,
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே.
[10]
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே
சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.079   என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்
பண் - சாதாரி (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.
[1]
பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி, அமரர்
வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா மலர்கள் தூய்,
கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர்
கோகரணமே.
[2]
முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி, ஆல நிழல்வாய்,
மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சமயங்களை வகுத்தவன் இடம்
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி, மதகைக்
குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி கோகரணமே.
[3]
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல்
அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன்
தன் இடம் ஆம்
மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை, வாள் அரிகள்,
கேழல், களிறு,
கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ்
கோகரணமே.
[4]
தொடைத்தலை மலைத்து, இதழி, துன்னிய எருக்கு, அலரி,
வன்னி, முடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன்; எம் ஆதி; பயில்கின்ற பதி ஆம்
படைத் தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி,
குடைத்து அலை நதிப் படிய நின்று, பழி தீர நல்கு
கோகரணமே.
[5]
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய,
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்
கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு,
கோகரணமே.
[6]
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்;
அக்கு அரைமிசை
பல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர் அயலே
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக,
கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொடுத்து அருளு கோகரணமே.
[7]
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற,
விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர, அதன்மேல்
குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய் கோகரணமே.
[8]
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும்,
வேதமுதலோன்,
இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக்
கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர்,
கோகரணமே.
[9]
நேசம் இல் மனச் சமணர், தேரர்கள், நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
ஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்
பாசம் அது அறுத்து, அவனியில் பெயர்கள் பத்து உடைய
மன்னன் அவனை,
கூச வகை கண்டு, பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே.
[10]
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர்
கோகரணமே
ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்-
நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய்
ஞானசம்பந்தன்-மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.080   சீர் மருவு தேசினொடு தேசம்
பண் - சாதாரி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.
[1]
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள் வீழிநகரே.
[2]
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட, அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே.
[3]
செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம் பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே.
[4]
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே.
[5]
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.
[6]
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.
[7]
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே.
[8]
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே.
[9]
குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு
குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அது
என்ன பொருள் ஆம்?
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீா
வெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே.
[10]
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.081   சங்கு அமரும் முன்கை மட
பண் - சாதாரி (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.
[1]
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது, இயம்ப,
கல் அரிய மாமலையர் பாவை ஒருபாகம் நிலைசெய்து,
அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம் ஆமே.
[2]
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.
[3]
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலை
ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய்
தோணிபுரம் ஆமே.
[4]
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில்
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்;
நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.
[5]
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில்
பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.
[6]
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில்
பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர்
துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.
[7]
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலை
துன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே.
[8]
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி,
ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத்
தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.
[9]
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக்
காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்-
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.
[10]
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை,
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம்
வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.082   கொம்பு இரிய வண்டு உலவு
பண் - சாதாரி (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.
[3]
பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர் என்று உலகு பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
அவளிவணலூரே.
[4]
குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.
[5]
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து
நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்;
மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி,
அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.
[6]
கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம் ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
அவளிவணலூரே.
[7]
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன், இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ? என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.
[8]
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்,
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர்மேல் விழுமியோனும்,
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே.
[9]
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.
[10]
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.083   வண்டு இரிய விண்ட மலர்
பண் - சாதாரி (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்
தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.
[1]
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம்
மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட,
செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே.
[2]
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால்
கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.
[3]
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி,
அருகு வரு கரியின் உரி-அதளர், பட அரவர், இடம் வினவில்
முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித்
திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே.
[4]
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும்
முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க,
செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே.
[5]
புற்று அரவர்; நெற்றி ஒர் கண்; ஒற்றை விடை ஊர்வர்; அடையாளம்
சுற்றம் இருள் பற்றிய பல்பூதம் இசை பாட, நசையாலே
கற்ற மறை உற்று உணர்வர்; பற்றலர்கள் முற்றும் எயில் மாளச்
செற்றவர்; இருப்பு இடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே.
[6]
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை,
தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;
கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம் வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே.
[7]
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில்
சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச்
சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே.
[8]
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
கோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும்
நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.
[9]
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள், வேடம் அவை பாரேல்!
ஏறு மடவாளொடு இனிது ஏறி, முன் இருந்த இடம் என்பர்
தேறும் மன வாரம் உடையார் குடி செயும் திரு நலூரே.
[10]
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல்
பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்-
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய்,
விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு
பெறுவாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.084   பெண் இயல் உருவினர், பெருகிய
பண் - சாதாரி (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.
[1]
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.
[2]
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.
[3]
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.
[4]
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.
[5]
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.
[6]
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.
[7]
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.
[8]
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.
[9]
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!
[10]
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.085   மட்டு ஒளி விரிதரு மலர்
பண் - சாதாரி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.
[1]
எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.
செவ் அழல் என நனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலா
முவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில்
வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே.
[4]
பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.
[5]
பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே.
[6]
அக்கினொடு, அரவு, அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை, பூண்டு
இக்கு உக, மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்;
கொக்கரை, குழல், முழ, விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
மிக்கவர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.
[7]
பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.
[8]
நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.
[9]
இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்
விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.
[10]
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.086   முறி உறு நிறம் மல்கு
பண் - சாதாரி (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன்,
வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்;
நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை,
செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
[1]
புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது ஒர் புரிவினர்
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்,
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்
சினம் முதிர் விடை உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
[2]
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்; பொடி புல்கும்
எரி தரும் உருவினர்; இடபம் அது ஏறுவர்; ஈடு உலா
வரி தரு வளையினர் அவர் அவர் மகிழ்தர, மனைதொறும்
திரிதரு சரிதையர்; உறைதரு வள நகர் சேறையே.
[3]
துடி படும் இடை உடை மடவரல் உடன் ஒரு பாகமா,
இடிபடு குரல் உடை விடையினர்; படம் உடை அரவினர்;
பொடி படும் உருவினர்; புலி உரி பொலிதரும் அரையினர்
செடி படு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
[4]
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்,
வெந்து அழிதர எய்த விடலையர்; விடம் அணி மிடறினர்
செந்தழல் நிறம் உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
[5]
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு, உருவு உடைப்
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால்,
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
[6]
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்-
ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய,
வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும்
சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
[7]
கட்டு உரம் அதுகொடு கயிலை நல் மலை நலி கரம் உடை
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டு உரம் மலர் அடி அடியவர் தொழுது எழ அருள் செயும்
சிட்டர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
[8]
பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு படர்தர,
அன்றிய அவர் அவர், அடியொடு முடி அவை அறிகிலார்
நின்று இரு புடை பட, நெடு எரி நடுவே ஒர் நிகழ் தரச்
சென்று, உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே.
[9]
துகள் துறு விரி துகில் உடையவர், அமண் எனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல; வினவிடல்!
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகு உற, முது நதி
திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
[10]
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல்,
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.087   தளிர் இள வளர் ஒளி
பண் - சாதாரி (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
[1]
போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இளவனமுலை செறிதலின்,
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே,
மீ தமது எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
[2]
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின்,
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே;
இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; `மெய்ம்மையே!
[3]
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
கச்சு அணி கதிர் இளவனமுலை அவையொடு கலவலின்,
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மெச்சு அணி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
[4]
பண் இயல் மலைமகள் கதிர் விடு பரு மணி அணி நிறக்
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்,
நண்ணிய குளிர்புனல் புகுதும் நள்ளாறர் தம் நாமமே,
விண் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
[5]
போது உறு புரிகுழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூது உறு தளிர் நிற வனமுலை அவையொடு துதைதலின்,
தாது உறு நிறம் உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மீது உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
[6]
கார் மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின் உறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்,
தார் மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே,
ஏர் மலி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
[7]
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை
புணர்தலின்,
தன் இயல் தசமுகன் நெறிய, நள்ளாறர் தம் நாமமே,
மின் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
[8]
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர் விடு கனம் மிகு
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்,
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர் தம் நாமமே,
மேல் முக எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
[9]
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசயச்
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்,
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே,
மெய்த் திரள் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
[10]
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும்
நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய
சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.088   மத்தகம் அணி பெற மலர்வது
பண் - சாதாரி (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை)
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம்
ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா
அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள்
வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.
[1]
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
ஒட்டு இலகு இணை மர வடியினர், உமை உறு வடிவினர்,
சிட்டு இலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வது ஒர்
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர், உறைவது விளமரே.
[2]
அம் கதிர் ஒளியினர்; அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு
செங்கதிர் அன நிறம், அனையது ஒர் செழு மணி மார்பினர்;
சங்கு, அதிர் பறை, குழல், முழவினொடு, இசை தரு சரிதையர்
வெங்கதிர் உறும் மழு உடையவர்; இடம் எனில் விளமரே.
[3]
மாடம் அது என வளர் மதில் அவை எரி செய்வர், விரவு சீர்ப்
பீடு என அருமறை உரை செய்வர், பெரிய பல் சரிதைகள்
பாடலர், ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
வேடம் அது உடையவர், வியல் நகர் அது சொலில் விளமரே.
[4]
பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக்
கொண்டு, அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர்
விண்தலை அமரர்கள் துதி செய அருள்புரி விறலினர்
வெண்தலை பலி கொளும் விமலர் தம் வள நகர் விளமரே.
[5]
மனைகள் தொறு இடு பலி அது கொள்வர், மதி பொதி சடையினர்
கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர்,
முனை கெட வரு மதில் எரி செய்த அவர், கழல் பரவுவார்
வினை கெட அருள் புரி தொழிலினர், செழு நகர் விளமரே.
[6]
நெறி கமழ் தரும் உரை உணர்வினர், புணர்வு உறு மடவரல்
செறி கமழ் தரு உரு உடையவர், படை பல பயில்பவர்,
பொறி கமழ் தரு பட அரவினர், விரவிய சடை மிசை
வெறி கமழ் தரு மலர் அடைபவர், இடம் எனில் விளமரே.
[7]
தெண்கடல் புடை அணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண் பட வரைதனில் அடர் செய்த பைங்கழல் வடிவினர்,
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார்
விண் கடல் விடம் மலி அடிகள் தம் வள நகர் விளமரே.
[8]
தொண்டு அசைவு உற வரு துயர் உறு காலனை மாள்வு உற
அண்டல் செய்து, இருவரை வெரு உற ஆர் அழல் ஆயினார்
கொண்டல் செய்தரு திருமிடறினர்; இடம் எனில் அளி இனம்
விண்டு இசை உறு மலர் நறு மது விரி பொழில் விளமரே.
[9]
ஒள்ளியர் தொழுது எழ, உலகினில் உரை செயும் மொழிபல;
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய் எனக் கருதன்மின்! பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே!
[10]
வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை,
சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்-
பந்தன மொழி இவை உரை செயுமவர் வினை பறையுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.089   திருந்து மா களிற்று இள
பண் - சாதாரி (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி,
கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு, கோட்டாறு
ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!
[2]
பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி,
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!
[3]
கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ் கதலி மாடே
வந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட,
கொந்து வார் குழலினார் குதி கொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!
[4]
மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டி
சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை தன்பால்,
உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த,
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!
[5]
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே,
உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர்
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல்-தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை எடுத்து,
ஆர்த்த வாய்கள்
உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ள
மடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே,
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே
பேணு, நெஞ்சே!
[8]
அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!
[9]
கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும்,
இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர்
நடு உறை நம்பனை; நால்மறையவர் பணிந்து ஏத்த, ஞாலம்
உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
[10]
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள்
கொச்சை
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே
ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின்
மேலே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.090   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
பண் - சாதாரி (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[1]
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[2]
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்
கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[3]
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[4]
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல்,
கபாலியார்தாம்,
துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[5]
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு
அரியார்
மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[6]
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[7]
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[8]
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும்,
குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான்,
வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
[9]
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்,
நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.091   கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்
பண் - சாதாரி (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.
[1]
மந்தம் ஆய் இழி மதக்களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி,
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும்
இயல்பினாரே.
[2]
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி,
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.
[3]
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி,
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மறி உலாம் கையினர் மலர் அடி தொழுது எழ மருவும் உள்ளக்
குறியினார் அவர் மிகக் கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.
[4]
கோடு இடைச் சொரிந்த தேன் அதனொடும் கொண்டல்
வாய்விண்ட முன்நீா
காடு உடைப் பீலியும் கடறு உடைப் பண்டமும் கலந்து நுந்தி,
ஓடு உடைக் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
பீடு உடைச் சடைமுடி அடிகளார் இடம் எனப் பேணினாரே.
[5]
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே.
[6]
நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி,
ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.
கட்டு அமண் தேரரும், கடுக்கள் தின் கழுக்களும், கசிவு ஒன்று இல்லாப்
பிட்டர் தம் அற உரை கொள்ளலும்! பெரு வரைப் பண்டம் உந்தி
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்
சிட்டனார் அடி தொழ, சிவகதி பெறுவது திண்ணம் ஆமே.
[10]
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை,
காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின்
ஊடே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.092   மருந்து அவை; மந்திரம், மறுமை
பண் - சாதாரி (திருநெல்வேலி )
மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்-
செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[1]
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச்
சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்பு அதுவே
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[2]
பொறி கிளர் அரவமும், போழ் இளமதியமும், கங்கை என்னும்
நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி,
கிறிபட நடந்து, நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும்
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[3]
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும்,
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
வெடி தரு தலையினர்; வேனல் வெள் ஏற்றினர்; விரி சடையர்
பொடி அணி மார்பினர்; புலி அதள் ஆடையர்; பொங்கு அரவர்;
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல் செய்வார்
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[6]
அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்; அடிகள்; அன்று,
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள் செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[7]
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே
உந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[8]
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது
அங்கணா! அருள்! என அவர் அவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[9]
துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர், என்னும்
அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்
கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல,
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
[10]
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.093   படியுள் ஆர் விடையினர், பாய்
பண் - சாதாரி (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.
[1]
கையில் மான் மழுவினர், கடுவிடம் உண்ட எம் காளகண்டர்
செய்ய மா மேனியர், ஊன் அமர் உடைதலைப் பலி திரிவார்
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ, நடம் அது ஆடும்
ஐயன், மா தேவியோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[2]
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர், பரிவு இலார் பால்
கரவினர், கனல் அன உருவினர், படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர், பகல் எரிகான் இடை ஆடிய வேடர், பூணும்
அரவினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[3]
நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர், நிமலர், வெள்
ஏற்றினர், எரி புரி கரத்தினர், புரத்து உளார் உயிரை வவ்வும்
கூற்றினர், கொடியிடை முனிவு உற நனி வரும் குலவு கங்கை-
ஆற்றினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[4]
புறத்தினர், அகத்து உளர், போற்றி நின்று அழுது எழும்
அன்பர் சிந்தைத்
திறத்தினர், அறிவு இலாச் செதுமதித் தக்கன் தன் வேள்வி செற்ற
மறத்தினர், மாதவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள் புரிந்த
அறத்தினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[5]
பழக மா மலர் பறித்து, இண்டை கொண்டு, இறைஞ்சுவார் பால் செறிந்த
குழகனார், குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார், கரி உரித்து ஆடு கங்காளர், நம் காளி ஏத்தும்
அழகனார், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[6]
சங்க வார் குழையினர், தழல் அன உருவினர், தமது அருகே
எங்கும் ஆய் இருந்தவர், அருந்தவ முனிவருக்கு அளித்து உகந்தார்
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
அங்கம் ஆறு ஓதுவார், இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[7]
பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில் இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர், கோயில் கூறில்
பெரு சிலை, நல மணி, பீலியோடு, ஏலமும், பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம் தானே.
[8]
வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர் உளானும்,
எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து, பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு என்றும்
அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.
[9]
சாக்கியக்கயவர், வன் தலை பறிக்கையரும், பொய்யினால் நூல்
ஆக்கிய மொழி அவை பிழையவை; ஆதலில், வழிபடுவீர்
வீக்கிய அரவு உடைக் கச்சையான், இச்சை ஆனவர்கட்கு எல்லாம்
ஆக்கிய அரன், உறை அம்பர்மாகாளமே அடைமின், நீரே!
[10]
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல்
அரிசில் சூழ்ந்த
அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை,
கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி, நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம், வினை; நலம்
பெறுவர், தாமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.094   விண்ணவர் தொழுது எழு வெங்குரு
பண் - சாதாரி (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்த நல் மலர் புனைவீரே;
மத்த நல் மலர் புனைவீர்! உமது அடி தொழும்
சித்தம் அது உடையவர் திருவே!
[8]
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆல நல் மணிமிடற்றீரே;
ஆல நல் மணிமிடற்றீர்! உமது அடி தொழும்
சீலம் அது உடையவர் திருவே!
[9]
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலி அதளீரே;
அரை மல்கு புலி அதளீர்! உமது அடி இணை
உரை மல்கு புகழவர் உயர்வே!
[10]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.095   எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
பண் - சாதாரி (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.
[1]
யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே;
தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.
[2]
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே;
வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே.
[3]
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே;
கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே.
[4]
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒரு கூறு உடையீரே;
உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர், அன்பே.
[5]
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அருஞ் சடைமுடியீரே;
தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே.
[6]
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே;
நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.
[7]
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.
[8]
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே;
அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே.
[9]
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே;
தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்
ஆர் துயர், அருவினை, இலரே.
[10]
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.096   நல் வெணெய் விழுது பெய்து
பண் - சாதாரி (திருநெல்வெண்ணெய் வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை)
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை,
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்,
சொல மல்குவார் துயர் இலரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.097   திடம் மலி மதில் அணி
பண் - சாதாரி (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை)
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்
அடைவதும், அமருலகு அதுவே.
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே;
புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம் உடைப் பரிசே.
[10]
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே;
மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.098   வெண்மதி தவழ் மதில் மிழலை
பண் - சாதாரி (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே.
[1]
விதி வழி மறையவர் மிழலை உளீர், நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே;
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர்! உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.
[2]
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், ஒரு
வரைமிசை உறைவதும் வலதே;
வரைமிசை உறைவது ஒர் வலது உடையீர்! உமை
உரை செயுமவை மறை ஒலியே.
[3]
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர், கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே;
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர்! புரம்
அட்டது வரை சிலையாலே.
[4]
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர், நல
பால் நிகர் உரு உடையீரே;
பால் நிகர் உரு உடையீர்! உமது உடன் உமை
தான் மிக உறைவது தவமே.
[5]
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், செனி
நிரை உற அணிவது நெறியே;
நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமது
அரை உற அணிவன, அரவே.
விலங்கல் ஒண்மதில் அணி மிழலை உளீர், அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே;
இலங்கை மன் இடர் கெடுத்தீர்! உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொரு
[8]
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர், உமை
அற்புதன் அயன் அறியானே;
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே.
[9]
வித்தக மறையவர் மிழலை உளீர், அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே;
புத்தரொடு அமண் அழித்தீர்! உமைப் போற்றுவார்
பத்தி செய் மனம் உடையவரே.
[10]
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.099   முரசு அதிர்ந்து எழுதரு முது
பண் - சாதாரி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே;
பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.
[1]
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே;
பை அரவம் அசைத்தீர்! உமைப் பாடுவார்
நைவு இலர்; நாள்தொறும் நலமே.
[2]
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
மழ விடை அது உடையீரே;
மழ விடை அது உடையீர்! உமை வாழ்த்துவார்
பழியொடு பகை இலர்தாமே.
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே;
பத்து முடி அடர்த்தீர்! உமைப் பாடுவார்
சித்தம் நல்ல(வ்) அடியாரே.
[8]
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி, அன்று
இயன்றவர் அறிவு அரியீரே;
இயன்றவர் அறிவு அரியீர்! உமை ஏத்துவார்
பயன் தலை நிற்பவர் தாமே.
[9]
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
கட்டு அமண் தேரைக் காய்ந்தீரே;
கட்டு அமண் தேரைக் காய்ந்தீர்! உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே.
[10]
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.100   கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,
பண் - சாதாரி (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்;
பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
[1]
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க்
கோமளமாது உமையாள
பங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து,
சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல்
கொண்டார் தமது ஊர்
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம்
தானே.
[2]
மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது உமை பேது உறலும்,
சித்தம் தெளிய நின்று ஆடி, ஏறு ஊர் தீவண்ணர்,
சில்பலிக்கு என்று,
ஒத்தபடி வந்து, என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம்போலும்
துத்தம் நல் இன் இசை வண்டு பாடும் தோணிபுரம் தானே.
[3]
வள்ளல் இருந்த மலை அதனை வலம் செய்தல் வாய்மை என
உள்ளம் கொள்ளாது, கொதித்து எழுந்து, அன்று, எடுத்தோன் உரம் நெரிய,
மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும் இடம்போலும்
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம் தானே.
[8]
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரை மலர் மேல் அயனும்,
பல் பறவைப்படி ஆய் உயர்ந்தும், பன்றி அது ஆய்ப் பணிந்தும்,
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர்
இடம்போலும்
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம்
தானே.
[9]
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்,
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய் மடிய,
இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே.
[10]
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை,
மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்-
வாய்மையினால்
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.101   திரிதரு மா மணி நாகம்
பண் - சாதாரி (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய்,
நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய,
விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே!
[1]
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து, அயலே புரிவோடு உமை பாட,
தெறி கிளரப் பெயர்ந்து, எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
எறி கிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய,
மறி கிளர் மான் மழுப் புல்கு கை, எம் மணாளர்; செயும் செயலே!
[2]
அலை வளர் தண் புனல் வார் சடைமேல் அடக்கி, ஒரு பாகம்
மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர், செயும்
செயலே!
[3]
மா தன நேர் இழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட,
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும்
செயலே!
[4]
சூலமோடு ஒண்மழு நின்று இலங்க, சுடுகாடு இடம் ஆக,
கோல நல் மாது உடன்பாட, ஆடும் குணமே குறித்து உணர்வார்
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,
நீலம் ஆர் கண்டம் உடைய, எங்கள் நிமலர்; செயும்
செயலே!
[5]
கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்தி; காமனைக்
காய்ந்தவர் தாம்
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி, நல்ல
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும்
செயலே!
[6]
நீரின் ஆர் புன்சடை பின்பு தாழ, நெடு வெண்மதி சூடி,
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார்
ஏரின் ஆர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,
காரின் ஆர் கொன்றை வெண்திங்கள் சூடும், கடவுள்;
செயும் செயலே!
[7]
பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி, புலித்தோல் உடை
ஆக,
மின் திகழ் சோதியர், பாடல் ஆடல் மிக்கார், வரு மாட்சி
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார்,
கொளும் கொள்கையே!
[8]
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன், அழகு ஆய
மேவலன், ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை, மெய்ம்மை
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர், செயும் செயலே!
[9]
பின்னொடு முன் இடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்,
பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள், புறம் கூறல் கேளாதே,
இன் நெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம் மேய,
பல்-நெடு வெண்தலை கொண்டு உழலும், பரமர் செயும் செயலே!
[10]
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.102   காம்பினை வென்ற மென்தோளி பாகம்
பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,
பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)
உரி-தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
வீடுமே.
[3]
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்,
அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண்,
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
[4]
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு
இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
[5]
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
பைங்கொன்றைத்-
தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,
மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
[6]
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து,
நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
[7]
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில,
ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில்,
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
[8]
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான்,
ஒளிர்புன்சடைமேல் ஓர்
வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு
யாழ்முரலத்
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு
நாரையூர் மேய
ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா,
அடைவோமே.
[9]
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில் உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர் தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
[10]
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
எதிர்கொளவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.103   கொடி உடை மும்மதில் ஊடு
பண் - பழம்பஞ்சுரம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.
[1]
கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி
கொண்டு ஒரு கை,
தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார் தொழுது ஏத்த,
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர
நன்நகரே.
[2]
நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை மேல் நிலை ஆக்கி,
மெய் எரிமேனி வெண் நீறு பூசி, விரிபுன் சடை தாழ,
மை இருஞ் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம்(ம்) அதிரும் வலம்புர நன்நகரே.
[3]
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள் அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.
[4]
செற்று எறியும் திரை ஆர் கலுழிச் செழுநீர் கிளர்
செஞ்சடை மேல்
அற்று அறியாது, அனல் ஆடு நட்டம், அணி ஆர் தடங்கண்ணி
பெற்று அறிவார், எருது ஏற வல்ல பெருமான், இடம்போலும்
வற்று அறியாப் புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
[5]
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு, உமையோடு உடன் ஆகி,
சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று இலங்க,
பண்ண வண்ணத்தன பாணி செய்ய, பயின்றார் இடம்போலும்
வண்ண வண்ணப் பறை பாணி அறா வலம்புர நன்நகரே.
[6]
புரிதரு புன்சடை பொன்தயங்க, புரிநூல் புரண்டு இலங்க,
விரைதரு வேழத்தின் ஈர் உரி-தோல் மேல் மூடி, வேய் புரை தோள்
அரை தரு பூந்துகில் ஆர் அணங்கை அமர்ந்தார் இடம்போலும்
வரை தரு தொல்புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன்நகரே.
[7]
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து
உடையானை,
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல் ஊன்றி,
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம்போலும்
வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர
நன்நகரே.
[8]
தார் உறு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும்,
தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்த,
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வார் உறு சோலை மணம் கமழும் வலம்புர நன்நகரே.
[9]
காவிய நல்-துவர் ஆடையினார், கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள், சொல்லைப் பயின்று அறியாப் பழந் தொண்டர் உள் உருக,
ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர் இடம்போலும்
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
[10]
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை போய்,
செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.104   விண் கொண்ட தூ மதி
பண் - பழம்பஞ்சுரம் (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை)
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ,
பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து,
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.
[1]
அரவு ஒலி, வில் ஒலி, அம்பின் ஒலி, அடங்கார் புரம் மூன்றும்
நிரவ வல்லார், நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதி சூடி,
இரவு இல் புகுந்து, என் எழில் கவர்ந்த இறைவர்க்கு
இடம்போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதி(ந்) நியமமே.
[2]
வாள்முக, வார்குழல், வாள்நெடுங்கண், வளைத் தோள், மாது அஞ்ச,
நீள் முகம் ஆகிய பைங்களிற்றின் உரி மேல் நிகழ்வித்து,
நாண் முகம் காட்டி, நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.
நீர் புல்கு புன்சடை நின்று இலங்க, நெடு வெண்மதி சூடி,
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து, தலை ஆர் பலி தேர்வார்
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.
[5]
வெங்கடுங் காட்டு அகத்து ஆடல் பேணி, விரிபுன்சடை தாழ,
திங்கள் திருமுடி மேல் விளங்க, திசை ஆர் பலி தேர்வார்
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம்போலும்
பைங்கொடி முல்லை படர் புறவின் பரிதி(ந்)நியமமே.
[6]
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க, பெரிய மழு ஏந்தி,
மறை ஒலி பாடி, வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார்
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.
[7]
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த,
மாசு அடையாத வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார்
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும்
பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதி(ந்) நியமமே.
கல் வளர் ஆடையர், கையில் உண்ணும் கழுக்கள், இழுக்கு ஆன
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா; சுடு நீறு அது ஆடி,
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலிப் பரிதி(ந்) நியமமே.
[10]
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத்
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன்
பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த,
ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.105   மடல் வரை இல் மது
பண் - பழம்பஞ்சுரம் (திருக்கலிக்காமூர் சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை)
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு ஆரும்,
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்,
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த,
இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள் ஆமே.
[1]
மைவரை போல்-திரையோடு கூடிப் புடையே மலிந்து ஓதம்
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்,
மெய் வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப, உடல் வாழும்
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர்; அதுவும் சரதமே.
[2]
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த,
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை, எம்பிரானை, விரும்பி வழிபட்டால்,
ஆவியுள் நீங்கலன்-ஆதிமூர்த்தி, அமரர் பெருமானே.
[3]
குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர, மேதி
கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்,
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.
[4]
வான் இடை வாள்மதி மாடம் தீண்ட, மருங்கே கடல் ஓதம்
கான் இடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்,
ஆன் இடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த,
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே
நினைவோமே.
[5]
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்,
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த,
நிறை வளரும் புகழ் எய்தும்; வாதை நினையா; வினை போமே.
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்,
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே.
[8]
அரு வரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்,
இருவரும் அஞ்ச, எரி உரு ஆய் எழுந்தான் கலிக்காமூர்,
ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால்-தொழுது ஏத்த,
திரு மருவும்; சிதைவு இல்லை; செம்மைத் தேசு உண்டு,
அவர்பாலே.
[9]
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும், அறியார், அவர் தோற்றம்;
காசினி நீர்த்திரள் மண்டி, எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
ஈசனை எந்தைபிரானை ஏத்தி, நினைவார் வினை போமே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.106   பள்ளம் அது ஆய படர்
பண் - பழம்பஞ்சுரம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி,
உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.
[1]
கார் அணி வெள்ளை மதியம் சூடி, கமழ் புன்சடை தன்மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து,
வார் அணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே!
[2]
பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து
மின் இயலும் சடை தாழ, வேழ உரி போர்த்து, அரவு ஆட,
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம்; பிணி போமே.
[3]
விடை, ஒரு பால்; ஒரு பால் விரும்பு மெல்லியல்; புல்கியது ஓர்
சடை, ஒரு பால்; ஒருபால் இடம் கொள் தாழ்குழல் போற்று இசைப்ப,
நடை, ஒரு பால்; ஒருபால் சிலம்பு; நாளும் வலஞ்சுழி சேர்
அடை, ஒரு பால்; அடையாத செய்யும் செய்கை
அறியோமே!
[4]
கை அமரும் மழு, நாகம், வீணை, கலைமான் மறி, ஏந்தி;
மெய் அமரும் பொடிப் பூசி; வீசும் குழை ஆர்தரு தோடும்
பை அமரும்(ம்) அரவு ஆட, ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே.
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து, வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க
மல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.
[7]
வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான், தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்; அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும் இடம்போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே.
[8]
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என நின்றவர் காணார்
கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்த
வாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்-
பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே!
[9]
குண்டரும் புத்தரும், கூறை இன்றிக் குழுவார், உரை நீத்து
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான்; அழல் ஆடி
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன்; எம்மான்
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே.
[10]
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி மா நகர்மேல்,
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை,
ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.107   கடல் இடை வெங்கடு நஞ்சம்
பண் - பழம்பஞ்சுரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,
உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே.
[1]
விண்ணின் மின் நேர் மதி, துத்தி நாகம், விரி
பூமலர்க்கொன்றை,
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான்; எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று
எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்!
நிறைவு ஆமே.
[2]
தோடு ஒரு காது, ஒரு காது சேர்ந்த குழையான், இழை தோன்றும்
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான், மறை ஓதி,
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானைப்
பாடுமின், நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வு
ஆமே.
[3]
வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை ஏந்தி,
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்; அருள் ஆர்ந்த
அண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு
அறுமே.
[4]
வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி ஆகும்
ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது இன்றி,
நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர் எந்தை,
கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.
[5]
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம் குலாய மலர் சூடி,
அக்கு அரவோடு அரை ஆர்த்து, உகந்த அழகன்; குழகு ஆக,
நக்கு அமரும் திருமேனியாளன்; திரு நாரையூர் மேவிப்
புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும், புகல்தானே.
[6]
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி,
ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி,
நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில்
வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு
ஆமே.
[7]
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும்
தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே.
[8]
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர் நிறத்தானும்,
ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும்,
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த, திரு நாரையூர் தானே.
[9]
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார், துவர் ஆடை
உற்ற (அ)ரையோர்கள், உரைக்கும் சொல்லை உணராது, எழுமின்கள்
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான், குழகன், தொழில் ஆரப்-
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான், திரு நாரையூர்
சேரவே!
[10]
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல்,
பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.108   வேத வேள்வியை நிந்தனை செய்து
பண் - பழம்பஞ்சுரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[1]
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே?
மை திகழ்தரு மா மணிகண்டனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[2]
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய, வாதுசெயத் திரு உள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[3]
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே?
முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[4]
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே?
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[5]
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை
ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[6]
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல், வாதுசெயத் திரு உள்ளமே?
தழல் இலங்கு திரு உருச் சைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[7]
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[8]
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[9]
அன்று முப்புரம் செற்ற அழக! நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெயத் திரு உள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
[10]
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.109   மண் அது உண்ட(அ)ரி மலரோன்
பண் - பழம்பஞ்சுரம் (திருவானைக்கா )
மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[1]
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;
கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[2]
மால் அயன் தேடிய மயேந்திரரும்,
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[3]
கருடனை ஏறு அரி, அயனார், காணார்
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்;
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்;
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[4]
மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார்
மதி அது சொல்லிய மயேந்திரரும்,
கதிர்முலை புல்கிய கயிலையாரும்,
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[5]
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்,
தக்கனைத் தலை அரி தழல் உருவர்
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[6]
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[7]
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
தடவரை அரக்கனைத் தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்;
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
[8]
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;
காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.
[9]
அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்,
மறிகடலோன் அயன் தேடத் தானும்
அறிவு அரு கயிலையோன்-ஆனைக்காவே.
[10]
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,
ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.110   வரம் அதே கொளா, உரம்
பண் - பழம்பஞ்சுரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம்
எரித்தவன்-பிரமநல்புரத்து
அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே.
[1]
சேண் உலாம் மதில் வேணு மண் உளோர் காண மன்றில்
ஆர் வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே.
[2]
அகலம் ஆர் தரைப் புகலும் நால்மறைக்கு இகல் இலோர்கள்
வாழ் புகலி மா நகர்,
பகல் செய்வோன் எதிர்ச் சகல சேகரன் அகில நாயகனே.
[3]
துங்க மாகரி பங்கமா அடும் செங் கையான் நிகழ்
வெங்குருத் திகழ்
அங்கணான் அடி தம் கையால்-தொழ, தங்குமோ, வினையே?
[4]
காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை உடைமையோர்
அவர் காதல் செய்யும் நல்-
தோணிவண் புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே.
[5]
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடைப் பூந் தண் ஓதியாள்
சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனிமேல் சேர்ந்து இரா,
வினையே.
[6]
சுரபுரத்தினைத் துயர் செய் தாருகன் துஞ்ச, வெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே.
ஆழி அங்கையில் கொண்ட மால், அயன், அறிவு ஒணாதது
ஓர் வடிவு கொண்டவன்-
காழி மா நகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்-தவமே.
[10]
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள்
கூறுமினே!
[11]
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன்தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும், முக்கண் எம் இறையே.
[12]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.111   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
பண் - பழம்பஞ்சுரம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்தொறும்,
நின்ற ஆதிதன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே.
[4]
போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.
[5]
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார், அடி தொழுவர் மேல் வினை நாள்தொறும்
கெடுமே.
[6]
போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள் சூழ்தரு
மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே.
[7]
இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்,
மிகு மிழலையான், அடி
சிரக் கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும், நீள்
புவியே.
[8]
துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி
சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே.
[9]
புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
சித்தம் வைத்தவர் இத் தலத்தினுள் மெய்த் தவத்தவரே.
[10]
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.112   பரசு பாணியர், பாடல் வீணையர்,
பண் - பழம்பஞ்சுரம் (திருப்பல்லவனீச்சரம் )
பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[1]
பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[2]
பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அழகராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[3]
பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[4]
பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து
பல்லவனீச்சுரத்து
எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[5]
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இச்சை ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[6]
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[7]
பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[8]
படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[9]
பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
[10]
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.113   உற்று உமை சேர்வது மெய்யினையே;
பண் - பழம்பஞ்சுரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்
அருள் மெய்யினையே;
கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே;
அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே;
பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.
[1]
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே!
அதிர் ஒளி சேர் திகிரிப்படையால் அமர்ந்தனர் உம்பர்,
துதிப்பு அடையால்,
மதி தவழ் வெற்பு அது கைச் சிலையே; மரு விடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்டு அவிரும் பரனே! வேணுபுரத்தை விரும்பு
அரனே!
[2]
காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க் கடிது ஓடினனே;
பாதம் அதால் கூற்று உதைத்தனனே; பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே;
தாது அவிழ் கொன்றை தரித்தனனே; சார்ந்த வினை அது அரித்தனனே
போதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்த
பரம்பொரு
[3]
மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை
சேர்வதும்; மா சு(ண்)ணமே
மெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர், மேல் மதியே;
பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது, மத்தம் அதே;
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர்,
வெங்குருவே.
[4]
உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து
இசை மா தவனே;
திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய கண்டனனே;
படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு அரை செய்தனனே;
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து
உறை நம் சிவனே.
[5]
திகழ் கையதும் புகை தங்கு அழலே; தேவர் தொழுவதும் தம் கழலே;
இகழ்பவர் தாம் ஒரு மான் இடமே; இருந் தனுவோடு எழில் மானிடமே;
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே, மின்
நிகர்கின்றதும், அம் சடையே,
தக இரதம் கொள் வசுந்தரரே, தக்க தராய் உறை சுந்தரரே.
[6]
ஓர்வு அரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள் கண்கள்
இணைக் கயலே;
ஏர் மருவும் கழல் நாகம் அதே; எழில் கொள் உதாசனன், ஆகம் அதே;
நீர் வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய கங்கையதே;
சேர்வு அரு யோக தியம்பகனே! சிரபுரம் மேய தி அம்பு அகனே!
[7]
ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி அப்பினனே;
தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே;
வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
பூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த
உமாபதியே.
[8]
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே;
உன்னி, மனத்து, எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே;
கன்னியரைக் கவரும் க(ள்)ளனே! கடல்விடம் உண்ட கருங் களனே;
மன்னி வரைப் பதி, சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே.
[9]
இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க, இறையே,
புலன்கள் கெட உடன் பாடினனே; பொறிகள் கெட உடன்பாடினனே;
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே;
கலந்து அருள் பெற்றதும் மா வசியே; காழி அரன் அடி மா வசியே.
[10]
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி கத்தினனே,
மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே,
நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,
பசுபதியே.
[11]
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது
இலை அவை எதிரே
வரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர்
கெட அருகு அரனே!
கருதல் இல் இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர்
இறை தரும் அருகே
மருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம், ஒழியே.
[12]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.114   பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
பண் - பழம்பஞ்சுரம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.
[1]
சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும்
வெண்தலைமாலையே;
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து
இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;
புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன, பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி
இருப்பதும் இச்சையே.
[2]
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு முன் செலத்
தும்பை மிலைச்சியே!
அள்ளி நீறு அது பூசுவ தாகமே; ஆன மாசுணம் மூசுவது ஆகமே;
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே; போன, ஊழி, உடுப்பது உகத்துமே;
கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர்க்
கம்பம் இருப்பு அதே.
வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம்
மிசையல் கருளியே;
ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்
ஆர்த்தது உடையதே;
கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக் கண்ணி அழகிதே;
காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி
ஆவதும் உ(ம்)மதே.
[5]
இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள், தம் கழல், கையதே;
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான்
தன் மலர்ப் பொறை தாங்கியே;
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம் வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பு அதே.
[6]
முதிரம் மங்கை தவம் செய்த காலமே, முன்பும், அம்
கைதவம் செய்த காலமே,
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே, வேழம் ஓடகில்
சந்தம் உருட்டியே,
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன் ஐ ஆடுவரத் தழுவத்தொடே,
கதிர் கொள் பூண் முலைக் கம்பம் இருப்பதே; காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பதே.
[7]
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;
உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.
[8]
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப் பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது கம்பமே.
[9]
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர் உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது, பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.
[10]
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர்
தீர்த்திடு உகு அம்பமே;
புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப் புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின்
பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,
பத்துமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.115   ஆல நீழல் உகந்தது இருக்கையே;
பண் - பழம்பஞ்சுரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.
[1]
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.
[2]
காடு நீடது உறப் பல கத்தனே; காதலால் நினைவார்தம் அகத்தனே;
பாடு பேயோடு பூதம் மசிக்கவே, பல்பிணத் தசை நாடி அசிக்கவே;
நீடும் மாநடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும் இருப்பனே;
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே.
[3]
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே!
[4]
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி, அன்பு
செகுத்தனன்பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக்
கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து, அனகம் கையால்,
அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்
நாகத்து அடவியே.
[5]
நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில்
மாசுணம் ஊருமே;
தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது,
பாணற்கு, அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய
தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார்
உமையோடுமே.
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே, தொக்க தேவர்
செருக்கை மயக்கியே,
வாள் அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்து அ(ம்)மால்வரை கண்டு உகளித்துமே,
நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்-தலையால் மதம் மத்தனே!
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ? ஆலவாய் அரன்
உய்த்ததும் மெய்கொலோ?
[8]
பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம் நீள் முடி
நேடிட, மாலொடே,
துங்க நல்-தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது, வாயுமே;
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு,
உரைசெய்வது பிச்சு ஐயே!
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது
இடக் கையே.
[9]
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்
சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல் புண்டரிகத்தையே;
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத்
திகழ்கின்றது நாகமே;
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார்
இடம் என்பதே.
[10]
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.116   துன்று கொன்றை நம் சடையதே;
பண் - பழம்பஞ்சுரம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!
கட்டுகின்ற கழல் நாகமே; காய்ந்ததும் மதனன் ஆகமே;
இட்டம் ஆவது இசை பாடலே; இசைந்த நூலின் அமர்பு ஆடலே;
கொட்டுவான் முழவம், வாணனே; குலாய சீர் மிழலை வாணனே!
நட்டம் ஆடுவது சந்தியே; நான் உய்தற்கு இரவு சந்தியே!
வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது வண்ணமே;
காய்ந்து வீழ்ந்தவன் காலனே; கடு நடம் செயும் காலனே;
போந்தது எம் இடை இரவிலே; உம் இடைக் கள்வம் இரவிலே;
ஏய்ந்ததும் மிழலை என்பதே; விரும்பியே அணிவது என்பு அதே.
[6]
அப்பு இயன்ற கண் அயனுமே, அமரர்கோமகனும், அயனுமே,
ஒப்பு இல் இன்று, அமரர், தருவதே, ஒண் கையால் அமரர் தரு அதே;
மெய்ப் பயின்றவர், இருக்கையே, மிழலை ஊர் உமது இருக்கையே;
செப்புமின்(ன்), எருது மேயுமே! சேர்வு உமக்கு எருதும் ஏயுமே.
[7]
தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே,
வான் அடர்த்த கயில் ஆயமே, வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே, தட முடித்திரள் அரக்கனே,
மேல் நடைச் செல இருப்பனே; மிழலை நன் பதி
விருப்பனே.
[8]
காயம் மிக்கது ஒரு பன்றியே, கலந்த நின்ன உருபு
அன்றியே,
ஏய இப் புவி மயங்கவே, இருவர்தாம் மனம் அயங்கவே,
தூய மெய்த்திரள் அகண்டனே! தோன்றி நின்ற
மணிகண்டனே!
மேய இத் துயில் விலக்கு, அ(ண்)ணா! மிழலை மேவிய
இலக்கணா!
[9]
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர் அமணர்கையரே,
அஞ்ச, வாதில் அருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்ய, நீ
வஞ்சனே! வரவும் வல்லையே, மதித்து, எனைச் சிறிதும் வல்லையே?
வெஞ்சல் இன்றி வரு இவ் தகா மிழலை சேரும் விறல்
வித்தகா!
[10]
மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என் அப்பனே!
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே!
காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை
பத்துமே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.117   யாமாமா நீ யாமாமா யாழீகாமா
பண் - கௌசிகம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!
[1]
யாகா! யாழீ! காயா! காதா! யார் ஆர் ஆ தாய் ஆயாய்!
ஆயா! தார் ஆர் ஆயா! தாக ஆயா! காழீயா! கா, யா!
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி! தாய் ஏல் நன் நீயே; நன் நீள்! ஆய் உழி கா!
காழி உளான் இன் நையே நினையே, தாழ் இசையா, தமிழ் ஆகரனே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.118   மடல் மலி கொன்றை, துன்று
பண் - புறநீர்மை (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும்,
மத்தமும், சடைமேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில்,
விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள்
கொணர்ந்து, வெள் அருவிக்
கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
[1]
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும், தங்கு
சென்னி அது உடையான், தேவர்தம் பெருமான்,
சேயிழையொடும் உறைவு இடம் ஆம்
பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து வன் திரைகள்
கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல் ஆமே.
[2]
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர்
புனலொடு தூபம்;
தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல்
கொள, உடன்மிதந்த,
கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்
ஆமே.
[3]
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற,
பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
ஏந்திழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர்
எனல் ஆமே.
[4]
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும், முன் இயங்கு
பருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்
பயின்று இனிது இருக்கை
விருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும்
வேட்டவர், ஞானம்
கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர்
எனல் ஆமே.
[5]
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார்,
பனிமலர்க்கொன்றை
பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து,
வண் சங்கொடு வங்கம்
கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும்
கழுமலநகர் எனல் ஆமே.
[6]
அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில் ஒருமூன்றும்
கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார், கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை இடை எங்கும்
கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.
[7]
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர
உழறிய படையர்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார்,
அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல
அறங்களே பயிற்றி,
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர்
எனல் ஆமே.
[8]
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும்,
இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில்,
ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல்
வெள்ளம் முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
[9]
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில்
போர்த்து உழல்வாரும்,
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார்
நன்மையால் உறைவு ஆம்
குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை,
கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர்
எனல் ஆமே.
[10]
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு
ஆணையும் நமதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.119   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
பண் - புறநீர்மை (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர் இழுகு
சந்தனத்து இளங் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்தி
செய்யாதவர் பக்கல்;
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து
அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான்! என, வினை கெடுமே.
[2]
நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன், நீலம்
ஆர் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன்,
இலன், கேடு இலி, உமைகோன்-
திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர்
அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.
[3]
தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்
என, வினை கெடுமே.
[4]
கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன சிலபூதம்,
பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்கு
அரவு அரையோன்-
வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர்
அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்-வீழிமிழலையான்
என, வினை கெடுமே.
[5]
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.
[6]
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள்! என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.
[7]
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன், தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.
[8]
அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம் மண்
கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம்
முதல்வனை, முத்தை,
தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அனனம் தன்
இளம்பெடையோடும் புல்கி,
விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான் என,
வினை கெடுமே.
[9]
கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக் கலதிகள்,
கட்டுரை விட்டு
அஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு
அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம் விழ, தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.
[10]
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண் இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.120   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
பண் - புறநீர்மை (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
[1]
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
[2]
செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய, பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர், வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.
[3]
கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர் தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை குலாவுங் கோபுரம் சூழ் மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி, வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.
[4]
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
[5]
நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய் ஆவதும் இதுவே.
[6]
முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,
அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
[7]
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை போற்ற,
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி,
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.
[8]
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன் தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
[9]
தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
[10]
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.121   இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
பண் - புறநீர்மை (திருப்பந்தணைநல்லூர் )
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி லகு எழுந்து ஏத்த,
கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம்
கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[1]
கழி உளார் எனவும், கடல் உளார் எனவும், காட்டு
உளார்:, நாட்டு உளார் எனவும்,
வழி உளார் எனவும், மலை உளார் எனவும், மண்
உளார், விண் உளார் எனவும்,
சுழி உளார் எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர்
வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.
[2]
காட்டினார் எனவும், நாட்டினார் எனவும், கடுந் தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும், சாந்த வெண்நீறு பூசி, ஓர் வெண்மதி சடைமேல்
சூட்டினார் எனவும், சுவடு தாம் அறியார், சொல் உள
சொல்லும் நால்வேதப்-
பாட்டினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[3]
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த, மொய்த்த
பல்கணங்களின் துயர் கண்டு
உருகினார் ஆகி, உறுதி போந்து, உள்ளம் ஒண்மையால்,
ஒளி திகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த, கடலுள் நஞ்சு
அமுதமா வாங்கிப்
பருகினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[4]
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூணநூல் புரள,
மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு
வெண்நீறு மெய் பூசி,
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை
ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[5]
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க! எனவும்
உமையவள் கணவன் வாழ்க! எனவும்,
அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி இணை தொழவே,
நண்பினார் எல்லாம், நல்லர்! என்று ஏத்த, அல்லவர்,
தீயர்! என்று ஏத்தும்
பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[6]
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம் வான் உலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி இணை சேர்வான்,
முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சுலமும் மழுவும்
பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[7]
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால் ஆடல் அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும், அரக்கன்
வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு
நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.
[8]
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால், இவர் இருகூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும்
பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி, ஆற்றலோம் என்ன, சரண் கொடுத்து, அவர் செய்த பாவம்
பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
[9]
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.122   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்
பண் - புறநீர்மை (திருஓமாம்புலியூர் )
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.
[1]
சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார், இமையவர் ஏத்த, இனிதின் அங்கு உறைவு இடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.
[2]
பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக்
கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த தத்துவன் உறைவு இடம் வினவில்
ஆங்கு எரிமூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால்
ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
[3]
புற்று அரவு அணிந்து, நீறு மெய் பூசி, பூதங்கள் சூழ்தர, ஊர் ஊர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன்
உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார்
அருத்தியால்-தெரியும்
உற்ற பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
[4]
நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர் கெட, நெடிய
மாற்கு அருளால்,
அலைத்த வல் அசுரர் ஆசு அற, ஆழி அளித்தவன் உறைவு இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார், நன்மையால் மிக்க
உலப்பு இல் பல்புகழார், ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
[5]
மணம் திகழ் திசைகள் எட்டும், ஏழ் இசையும், மலியும் ஆறு
அங்கம், ஐவேள்வி,
இணைந்த நால்வேதம், மூன்றுஎரி, இரண்டுபிறப்பு, என
ஒருமையால் உணரும்
குணங்களும், அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று
அவை உற்றதும், எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
[6]
தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை
அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
அதுவே.
[8]
கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன், என்று இவர்
காண்பு அரிது ஆய
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவு இடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி, பனிமலர்ச்சோலை சூழ் ஆலை,
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
[9]
தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளம் ஆர் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார்
உறைவு இடம் வினவில்
நள் இருள் யாமம் நால்மறை தெரிந்து, நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.123   நிரை கழல் அரவம் சிலம்பு
பண் - புறநீர்மை (திருக்கோணமலை கோணீசர் மாதுமையம்மை)
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.
[1]
கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல் போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய
கொடிது எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன் நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே.
[2]
பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி இடை வைத்தார்
கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர், மதில்மேல்
தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு வெஞ்சிலையாக்
குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.
[3]
பழித்த இளங் கங்கை சடை இடை வைத்து, பாங்கு உடை மதனனைப் பொடியா
விழித்து, அவன் தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்; கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து, வன் திரைகள் கரை இடைச் சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே.
[4]
தாயினும் நல்ல தலைவர்! என்று அடியார் தம் அடி போற்று இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண் பலவேடர்,
நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.
எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர்; வேள்வி
தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலைஅமர்ந்தாரே.
[8]
அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி உடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல் வண்ணனும், பிரமன்,
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்; பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை அமர்ந்தாரே.
[9]
நின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறி அலாதன புறம்கூற,
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரைபல மோதிக்
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே.
[10]
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை ஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,வான் இடைப் பொலிந்தே.
[11]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.124   சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்
பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து
எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்
விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.
[1]
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே!
[2]
அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன-
நடை மடமங்கை ஒர்பாகம் நயந்து,
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண்பிறைச் சங்கரனீரே!
[3]
வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர், காடு அரங்கு ஆக;
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர் சடை எம்பெருமானே!
[4]
சுரிகுழல் நல்ல துடியிடையோடு
பொரி புல்கு காட்டு இடை ஆடுதிர், பொங்க;
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தைபிரானே!
[5]
காவி அம் கண் மடவாளொடும் காட்டு இடைத்
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே!
[6]
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.125   கல் ஊர்ப் பெரு மணம்
பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!
[1]
தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம்
பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள்,
வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்-
பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே!
[2]
அன்பு உறு சிந்தையராகி, அடியவர்
நன்பு உறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று,
இன்பு உறும் எந்தை இணை அடி ஏத்துவார்
துன்பு உறுவார் அல்லர்; தொண்டு செய்தாரே.
[3]
வல்லியந்தோல் உடை ஆர்ப்பது; போர்ப்பது
கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம்
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே.
[4]
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்-
நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே!
[5]
சிட்டப்பட்டார்க்கு எளியான், செங்கண் வேட்டுவப்-
பட்டம் கட்டும் சென்னியான், பதி ஆவது
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து
இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே!
[6]
மேகத்த கண்டன், எண்தோளன், வெண் நீற்று உமை
பாகத்தன், பாய் புலித்தோலொடு பந்தித்த
நாகத்தன்-நல்லூர்ப்பெருமணத்தான்; நல்ல
போகத்தன், யோகத்தையே புரிந்தானே.
[7]
தக்கு இருந்தீர்! அன்று தாளால் அரக்கனை
உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு
நக்கு இருந்தீர்; இன்று நல்லூர்ப்பெருமணம்
புக்கு இருந்தீர்! எமைப் போக்கு அருளீரே!
[8]
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை-
நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்-
போலும், தம் கோயில் புரிசடையார்க்கே.
[9]
ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்!
நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே.
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.901   மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத
பண் - (திருவிடைவாய் )
Back to Top திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.902   தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி
பண் - (திருக்கிளியன்னவூர் )