சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
2 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய  (கோயில் (சிதம்பரம்))  
3 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்  (கோயில் (சிதம்பரம்))  
4 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா  (கோயில் (சிதம்பரம்))  
5 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
6 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
7 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
8 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
9 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
10 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
11 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
12 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
13 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
14 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
15 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்  (உத்தரகோசமங்கை)  
16 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்  (திருவண்ணாமலை)  
17 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்  (திருவண்ணாமலை)  
18 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ  (கோயில் (சிதம்பரம்))  
19 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்  (கோயில் (சிதம்பரம்))  
20 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்  (கோயில் (சிதம்பரம்))  
21 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு  (கோயில் (சிதம்பரம்))  
22 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்பூவல்லி - இணையார் திருவடி  (கோயில் (சிதம்பரம்))  
23 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருஉந்தியார் - வளைந்தது வில்லு  (கோயில் (சிதம்பரம்))  
24 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்  (கோயில் (சிதம்பரம்))  
25 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்  (கோயில் (சிதம்பரம்))  
26 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்  (கோயில் (சிதம்பரம்))  
27 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -குயிற்பத்து - கீத மினிய குயிலே  (கோயில் (சிதம்பரம்))  
28 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே  (கோயில் (சிதம்பரம்))  
29 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
30 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்  (கோயில் (சிதம்பரம்))  
31 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை  (கோயில் (சிதம்பரம்))  
32 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
33 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
34 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
35 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
36 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
37 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
38 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அருட்பத்து - சோதியே சுடரே  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
39 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு  (திருக்கழுக்குன்றம்)  
40 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -கண்டபத்து - இந்திரிய வயமயங்கி  (கோயில் (சிதம்பரம்))  
41 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
42 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
43 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
44 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்  (கோயில் (சிதம்பரம்))  
45 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
46 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -பிடித்த பத்து - உம்பர்கட் ரசே  (சீர்காழி)  
47 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
48 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்  (திருவாரூர்)  
49 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே  (கோயில் (சிதம்பரம்))  
50 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அற்புதப்பத்து - மைய லாய்இந்த  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
51 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
52 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருவார்த்தை - மாதிவர் பாகன்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
53 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -எண்ணப்பதிகம் - பாருருவாய  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
54 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -யாத்திரைப் பத்து - பூவார் சென்னி  (கோயில் (சிதம்பரம்))  
55 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்  (கோயில் (சிதம்பரம்))  
56 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
57 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
58 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்  (கோயில் (சிதம்பரம்))  
59 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -ஆனந்தமாலை - மின்னே ரனைய  (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்)  
60 மாணிக்க வாசகர்  - திருவாசகம் -அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத  (கோயில் (சிதம்பரம்))  
61 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -முதல் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
62 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இரண்டாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
63 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -மூன்றாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
64 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -நான்காம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
65 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -ஐந்தாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
66 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -ஆறாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
67 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -ஏழாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
68 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -எட்டாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
69 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -ஒன்பதாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
70 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பத்தாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
71 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதினொன்றாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
72 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பன்னிரண்டாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
73 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதின்மூன்றாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
74 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதினென்காம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
75 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதினைந்தாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
76 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதினாறாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
77 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதினேழாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
78 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பதினெட்டாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
79 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -பத்தொன்பதாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
80 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இருபதாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
81 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இருபத்தொன்றாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
82 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இருபத்திரண்டாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
83 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இருபத்திமூன்றாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
84 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இருபத்திநான்காம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  
85 மாணிக்க வாசகர்  - திருச்சிற்றம்பலக் கோவையார் -இருபத்தைந்தாம் அதிகாரம்  (கோயில் (சிதம்பரம்))  

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க  
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

[1]
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

[2]
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

[3]
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:

[4]
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

[5]
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல்ஆ(ய்,) மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்,

[6]
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

[7]
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

[8]
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!

[9]
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை

[10]
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

[11]
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,

[12]
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

[13]
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

[14]
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

[15]
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,

[16]
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று

[17]
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

[18]
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[19]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.102  
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,

[1]
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,
மன்னும் மா மலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;

[2]
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்;
பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

[3]
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;
கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;
மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;

[4]
நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,
அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;
வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,
ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,

[5]
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி,
குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை,
சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;
வேலம்புத்தூர் விட்டேறு அருளி,
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;

[6]
தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்;
மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்;
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்

[7]
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்;
ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது,
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப,

[8]
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;
அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;
மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;

[9]
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;
உத்தரகோசமங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,

[10]
தூ வண மேனி காட்டிய தொன்மையும்;
வாதவூரினில் வந்து, இனிது அருளி,
பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;

[11]
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;
தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,
நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;
விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,

[12]
குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;
பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்;
வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,
காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;

[13]
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து, இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;

[14]
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,

[15]
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;

[16]
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,
பாவகம் பல பல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;

[17]
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;
புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;

[18]
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,
இந்திர ஞாலம் போல வந்தருளி,
எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,

[19]
தானே ஆகிய தயாபரன், எம் இறை,
சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;
மந்திர மா மலை மகேந்திர வெற்பன்,

[20]
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,
எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின்
ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,
நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;
ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்

[21]
ஆனந்தம்மே, ஆறா அருளியும்;
மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;

[22]
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,
தூய மேனி, சுடர்விடு சோதி
காதலன் ஆகி, கழுநீர் மாலை
ஏல் உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்

[23]
பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்;
மீண்டு வாரா வழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும்,
பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,

[24]
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,
எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

[25]
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;
நாயினேனை நலம் மலி தில்லையுள்,
கோலம் ஆர்தரு பொதுவினில், வருக' என,
ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;
அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்

[26]
ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,
மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,
பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,
கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,

[27]
நாத! நாத!' என்று அழுது அரற்றி,
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்

[28]
பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்
கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு,
அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை,
இறைவன், ஈண்டிய அடியவரோடும்,
பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர் கிழவோனே. (145)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[29]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.103  
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,

[1]
சிறிய ஆகப் பெரியோன். தெரியின்
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய
மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,
சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து

[2]
எறியது வளியின் 2x
கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை
கரப்போன்; கரப்பவை கருதாக்

[3]
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்
வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு

[4]
மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட

[5]
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!

[6]
ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
கானப் புலி உரி அரையோன் காண்க!
நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும்,
ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!
இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!

[7]
அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
பரமன் காண்க! பழையோன் காண்க!
பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
அற்புதன் காண்க! அநேகன் காண்க!
சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!

[8]
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!
ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!
அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!

[9]
இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க!
அரியதில் அரிய அரியோன் காண்க!
மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!
மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!

[10]
அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
பந்தமும், வீடும், படைப்போன் காண்க!
நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!
கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!
யாவரும் பெற உறும் ஈசன் காண்க!

[11]
தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!

[12]
புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
சிவன் என யானும் தேறினன் காண்க!
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளும், தானும், உடனே காண்க!

[13]
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,

[14]
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,
பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,

[15]
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,
செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி,
இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,
நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்

[16]
தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,
அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;
ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,
சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,

[17]
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்
வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்

[18]
மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்
மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!

[19]
கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க!

[20]
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!

[21]
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை
நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,
நிற்பன நிறீஇச்

[22]
சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்

[23]
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!

[24]
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:
மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,

[25]
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;
மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;

[26]
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,

[27]
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,

[28]
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
தாள் தளை இடுமின்!
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!
பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;

[29]
தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,

[30]
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்

[31]
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன்;
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்தாங்கு, அன்று,
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்

[32]
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:
சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு

[33]
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்லகில்லேன்:
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,

[34]
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது

[35]
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்
கருணை வான்தேன் கலக்க

[36]
அருளொது பரவமு தாக்கினன்
பிரமன்மால் அரியாப் பெற்றியோனே. (182)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[37]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.104  
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா  
பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி!   (கோயில் (சிதம்பரம்) )

நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடி யாலே மூவுல களந்து
நால்திசைமுனிவரும் ஐமுலன் மலரப்
போற்றிச்செய் கதிர்முதித் திருநெடு மாலன்(று)
அடி முடி அரியும் ஆதர வதனிற்

[1]
கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்(து)
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்(து)
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியுங் காணா மலர் அடி இணைகள்,
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,

[2]
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;

[3]
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;

[4]
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;

[5]
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்

[6]
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

[7]
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

[8]
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்;
தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;

[9]
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி,
நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்;
சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்
விரதமே பரம் ஆக, வேதியரும்,

[10]
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,

[11]
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா பேதத்த கடு விடம் எய்தி,
அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,
தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,

[12]
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,

[13]
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,

[14]
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,

[15]
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,

[16]
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,

[17]
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!
மெய் தரு வேதியன் ஆகி, வினை கெட,
கைதர வல்ல கடவுள், போற்றி!
ஆடக மதுரை அரசே, போற்றி!

[18]
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!

[19]
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!

[20]
இடரைக் களையும் எந்தாய், போற்றி!
ஈச, போற்றி! இறைவ, போற்றி!
தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
அரைசே, போற்றி! அமுதே, போற்றி!
விரை சேர் சரண விகிர்தா, போற்றி!

[21]
வேதி, போற்றி! விமலா, போற்றி!
ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
கதியே, போற்றி! கனியே, போற்றி!
நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!
உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!

[22]
கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
சைவா, போற்றி! தலைவா, போற்றி!
குறியே, போற்றி! குணமே, போற்றி!
நெறியே, போற்றி! நினைவே, போற்றி!

[23]
வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!
மூ ஏழ் சுற்றமும் முரண் உறு நரகிடை
ஆழாமே அருள் அரசே, போற்றி!
தோழா, போற்றி! துணைவா, போற்றி!

[24]
வாழ்வே, போற்றி! என் வைப்பே, போற்றி!
முத்தா போற்றி! முதல்வா, போற்றி!
அத்தா, போற்றி! அரனே, போற்றி!
உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!
விரி கடல் உலகின் விளைவே, போற்றி!

[25]
அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!

[26]
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!

[27]
வானகத்து அமரர் தாயே, போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!

[28]
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!
இடைமருது உறையும் எந்தாய், போற்றி!

[29]
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!

[30]
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!

[31]
குற்றாலத்து எம் கூத்தா, போற்றி!
கோகழி மேவிய கோவே, போற்றி!
ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி!
பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!

[32]
அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,
அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

[33]
ஏனக் குருளைக்கு அருளினை, போற்றி!
மானக் கயிலை மலையாய், போற்றி!
அருளிட வேண்டும் அம்மான், போற்றி!
இருள் கெட அருளும் இறைவா, போற்றி!
தளர்ந்தேன், அடியேன், தமியேன், போற்றி!

[34]
களம் கொளக் கருத அருளாய், போற்றி!
அஞ்சேல்' என்று இங்கு அருளாய், போற்றி!
நஞ்சே அமுதா நயந்தாய், போற்றி!
அத்தா, போற்றி! ஐயா, போற்றி!
நித்தா, போற்றி! நிமலா, போற்றி!

[35]
பத்தா, போற்றி! பவனே, போற்றி!
பெரியாய், போற்றி! பிரானே, போற்றி!
அரியாய், போற்றி! அமலா, போற்றி!
மறையோர் கோல நெறியே, போற்றி!
முறையோ? தரியேன்! முதல்வா, போற்றி!

[36]
உறவே, போற்றி! உயிரே, போற்றி!
சிறவே, போற்றி! சிவமே, போற்றி!
மஞ்சா, போற்றி! மணாளா, போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா, போற்றி!
அலந்தேன், நாயேன், அடியேன், போற்றி!

[37]
இலங்கு சுடர் எம் ஈசா, போற்றி!
கவைத்தலை மேவிய கண்ணே, போற்றி!
குவைப்பதி மலைந்த கோவே, போற்றி!
மலை நாடு உடைய மன்னே, போற்றி!
கலை ஆர் அரிகேசரியாய், போற்றி!

[38]
திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!
பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!
அருவமும், உருவமும், ஆனாய், போற்றி!
மருவிய கருணை மலையே, போற்றி!
துரியமும் இறந்த சுடரே, போற்றி!

[39]
தெரிவு அரிது ஆகிய தெளிவே, போற்றி
தோளா முத்தச் சுடரே, போற்றி!
ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!
ஆரா அமுதே, அருளே, போற்றி!
பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!

[40]
தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி!

[41]
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!

[42]
படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!

[43]
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!

[44]
புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி! (225)

[45]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.105.01  
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி  
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

[1]
கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

[2]
உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?

[3]
சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி,
ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே,
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!
[4]
தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்;
அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே!

[5]
பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.

[6]
முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள்,
செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய்,
உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே.

[7]
உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்,
இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின்,
உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!

[8]
பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான்,
சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்;
அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே
புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.

[9]
புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!
தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை
மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே!
நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.

[10]
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என்
ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!

[11]
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்;
தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்
மானே! உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே.

[12]
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன்
இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற;
பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல்,
வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?

[13]
ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன்;
பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்; புத்தேளிர்
கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன்,
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே.

[14]
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

[15]
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழவேண்டி;
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன்,
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.

[16]
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்;
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்;
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன்
அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?

[17]
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம்
பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்;
தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!

[18]
வேனில் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே!
ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய்
வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே.

[19]
வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு
ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே,
சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்;
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.

[20]
வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!விண்ணோர்
பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;
கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.

[21]
வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான்
வினைக்கேடன்' என்பாய் போல,
இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை
ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை
அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;
முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு?
முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!

[22]
ஆய நான்மறையவனும் நீயே ஆதல்
அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்,
நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய்
அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர்
பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே!
எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே?

[23]
பேசில், தாம் ஈசனே, எந்தாய், எந்தை
பெருமானே!' என்று என்றே பேசிப் பேசி;
பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி;
போற்றி எம்பெருமானே!' என்று; பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை,
மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ!
என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?

[24]
வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று;
அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு
எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்
எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன்
வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி,
மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை,
திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;
எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?

[25]
சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன்
கண் இணை நின் திருப்பாதப் போதுக்குஆக்கி,
வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன்
மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்து, எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெரும் கடலே!மலையே! உன்னைத்
தந்தனை செம் தாமரைக் காடு அனைய மேனித்
தனிச் சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே.

[26]
தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி,
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை,
முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்
கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

[27]
கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்;
கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே!

[28]
விச்சை தான் இது ஒப்பது உண்டோ? கேட்கின்
மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி,
அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்புகூர;
அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம், ஆகி,
ஆர் அழல் ஆய், அந்தம் ஆய், அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி, எங்கள்
சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே!

[29]
தேவர் கோ அறியாத தேவ தேவன்;
செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி;
மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;
யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்;
யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்;
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு;
மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

[30]
ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை; என்பு உருகிப்
பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாத மலர்
சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இலை; துணை இலி பிண நெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.

[31]
அறிவு இலாத எனை, புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மெய்ந்
நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை, பந்தனை அறுப்பானை,
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும், மாறு ஆடுதி; பிண நெஞ்சே!
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.

[32]
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே!
தேறுகின்றிலம் இனி உனை; சிக்கெனச் சிவன் அவன் திரள் தோள்மேல்
நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம்
கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு இது; கேட்கவும் கில்லேனே.

[33]
கிற்ற வா, மனமே! கெடுவாய்; உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம்
முற்று இலா இளம் தளிர் பிரிந்து இருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே.

[34]
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்த்தும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே.

[35]
புகுவது ஆவதும்; போதரவு இல்லதும்; பொன் நகர் புகப் போதற்கு
உகுவது ஆவதும்; எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு
நெகுவது ஆவதும்; நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி,
மிகுவது ஆவதும்; இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே?

[36]
வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே,
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்;
இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே.

[37]
ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத
தேனை, ஆன் நெயை, கரும்பின் இன் தேறலை, சிவனை, என் சிவலோகக்
கோனை, மான் அன நோக்கி தன் கூறனை, குறுகிலேன்; நெடும் காலம்,
ஊனை, யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.

[38]
ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து,
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி,
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்;
தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே?

[39]
வேனில் வேள் கணை கிழித்திட, மதி சுடும்; அது தனை நினையாதே,
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி,
தேன் நிலாவிய திருஅருள் புரிந்த, என் சிவன் நகர் புகப் போகேன்;
ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே.

[40]
இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக்
கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே;
வருக' என்று பணித்தனை; வான் உளோர்க்கு
ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே.

[41]
உண்டு ஓர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை;
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்;
கண்டும் கண்டிலேன்: என்ன கண் மாயமே!

[42]
மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே,
ஞாலமே, விசும்பே, இவை வந்து போம்
காலமே! உனை என்று கொல் காண்பதே?

[43]
காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர்
வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என,
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப்
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.

[44]
போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று,
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்;
ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்
கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே.

[45]
கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி
கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்;
நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும்,
எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே?

[46]
எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும்
தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்;
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே.

[47]
செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு,
புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள்
எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்:
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!

[48]
கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு
இட்ட அன்பரொடு, யாவரும் காணவே,
பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே.

[49]
அறிவனே! அமுதே! அடி நாயினேன்
அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டதும்?
அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்?
அறிவனோ, அல்லனோ? அருள், ஈசனே!

[50]
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி
நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே:
தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.

[51]
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும்,
பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!

[52]
போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி,
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட
ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!

[53]
உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,
பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்;
மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான்,
அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?

[54]
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக்
கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட,
ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!

[55]
உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல்
உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,
முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.

[56]
முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப்
பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய்
துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர்
பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.

[57]
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம்
ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன்,
நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத்
தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.

[58]
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?
என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!
பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?

[59]
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்.
நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும்
தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!

[60]
தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா, போற்றி! வான
விருத்தனே, போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்பு இல்
ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான், போற்றி! தில்லை
நிருத்தனே, போற்றி! எங்கள் நின்மலா, போற்றி! போற்றி!

[61]
போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்;
போற்றி! ஓம் நமச்சிவாய! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை;
போற்றி! ஓம் நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்;
போற்றி! ஓம் நமச்சிவாய! சய! சய! போற்றி! போற்றி!

[62]
போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி!
போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ,
காற்று, இயமானன், வானம், இரு சுடர், கடவுளானே!

[63]
கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி!
விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி!
உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி!
சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!

[64]
சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப்
பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண்,
மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி!
இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.

[65]
இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி! போற்றி!
பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி!
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி!
ஒழித்திடு இவ் வாழ்வு; போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே!

[66]
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி!
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி!
செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி!
உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!

[67]
ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர்
குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி!
வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி!
தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.

[68]
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி!
பேர்ந்தும், என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி!
வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி!
ஆர்ந்த நின் பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி!

[69]
போற்றி! இப் புவனம், நீர், தீ, காலொடு, வானம் ஆனாய்;
போற்றி! எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய்;
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறு இன்மை ஆனாய்;
போற்றி! ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே.

[70]
புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின் கழல் கணே
புணர்ப்ப தாக அம் கணாள புங்கம் ஆன போகமே
[71]
போகம் வேண்டி வேண்டி லேன் புரந்த ராதி இன்பமும்
ஏக நின் கழல் இணை யலா திலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே
ஆக என் கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே

[72]
ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பெ னக்கும் ஆக வேண்டுமே

[73]
வேண்டும் நின்கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே

[74]
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டு
உணங்கும் நின்னை எய்த லுற்று மற்றோர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என்கொலோ நினைப்பதே

[75]
நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவ தில்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத் துலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா
எனைத்எனைத்த தெப் புறத்த தெந்தை பாதம் எய்தவே?

[76]
எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்றோர் உண்மை இன்மையின்
பைதல் ஆவ தென்று பாது காத் திரங்கு பாவியேற்கு
இஃது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே

[77]
ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என்எம்பிரான்
நீசனேனை ஆண்டு கொண்ட நின் மலா ஒர் நின்அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.

[78]
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம் புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன்
வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற் றிருப்பனே.

[79]
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத் தெனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டி ருந்த துண்ட தாயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே

[80]
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய்;
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம்
பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.

[81]
பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே
பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று,
ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாதால்;
ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே.

[82]
அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ?
அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா!
கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.

[83]
காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும்
பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி!
ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்;
ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே?

[84]
மான் நேர் நோக்கி, உமையாள் பங்கா, மறை ஈறு அறியா மறையோனே,
தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே, சிறிது என் கொடுமை பறைந்தேன்; சிவ மா நகர் குறுகப்
போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே.

[85]
புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்.
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்;
சிறவே செய்து வழுவாது, சிவனே! நின் தாள் சேர்ந்தாரே.

[86]
தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு;
பேரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்;
ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே.

[87]
அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த
மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு
தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,
பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?

[88]
பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால்,
திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி,
தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!

[89]
யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்;
ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே?
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.

[90]
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,
வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;
ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.

[91]
மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்;
மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்;
பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு, நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே?

[92]
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; போத' என்று எனைப் புரிந்து நோக்கவும்,
வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே,
அரத்த மேனியாய், அருள்செய் அன்பரும், நீயும், அங்கு எழுந்தருளி, இங்கு எனை
இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான், வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே?

[93]
இல்லை நின் கழற்கு அன்பு அது, என்கணே; ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே!
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு, என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்;
எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏது கொண்டு, நான் ஏது செய்யினும்,
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி, மீட்கவும், மறு இல் வானனே?

[94]
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ,
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா,
ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி, நான் உனைப் பருக வைத்தவா,
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே!

[95]
விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய்; விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும்,
வைச்சு வாங்குவாய்; வஞ்சகப் பெரும் புலையனேனை, உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர்
நச்சு மா மரம் ஆயினும், கொலார்; நானும் அங்ஙனே, உடைய நாதனே!

[96]
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும்
கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின்
அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே!

[97]
அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே, சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய, வையகத்து, எங்கள் மன்னனே?

[98]
மன்ன, எம்பிரான், வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும்
முன்ன, எம்பிரான், வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன, எம்பிரான், வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால்
பன்ன, எம்பிரான், வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே.

[99]
பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு,
ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன்
கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம்
வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[100]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.106  
நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்  
பண் - அயிகிரி நந்தினி   (உத்தரகோசமங்கை )

கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட
விடையவனே, விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல்
உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான், என்னைத் தாங்கிக்கொள்ளே.

[1]
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?

[2]
கார் உறு கண்ணியர் ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய்?விளங்கும் திருவா
ரூர் உறைவாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே.

[3]
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

[4]
செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.

[5]
மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

[6]
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.

[7]
தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

[8]
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!

[9]
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.

[10]
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

[11]
நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ,
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே,
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.

[12]
கடலினுள் நாய் நக்கி ஆங்கு, உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய்? விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மடலின் மட்டே, மணியே, அமுதே, என் மது வெள்ளமே.

[13]
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.

[14]
களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே,
எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!

[15]
என்னை அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

[16]
பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

[17]
இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

[18]
மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே.

[19]
கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

[20]
ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.

[21]
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து, ஒளி மிளிரும்
வெண்மையனே, விட்டிடுதி கண்டாய்? மெய் அடியவர்கட்கு
அண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம்
பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே.

[22]
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.

[23]
உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.

[24]
எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.

[25]
பெரு நீர் அற, சிறு மீன் துவண்டு ஆங்கு, நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய்? வியன் கங்கை பொங்கி
வரும் நீர் மடுவுள், மலைச் சிறு தோணி வடிவின், வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை, வானக் கொழு மணியே!

[26]
கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

[27]
புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.

[28]
குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

[29]
மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கி,
வித்து உறுவேனை விடுதி கண்டாய்? வெண் தலை மிலைச்சி,
கொத்து உறு போது மிலைந்து, குடர் நெடு மாலை சுற்றி,
தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே.

[30]
சச்சையனே, மிக்க தண் புனல், விண், கால், நிலம், நெருப்பு, ஆம்
விச்சையனே, விட்டிடுதி கண்டாய்? வெளியாய், கரியாய்,
பச்சையனே, செய்ய மேனியனே, ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே.

[31]
அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

[32]
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.

[33]
குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய
மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து,
எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!

[34]
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின்
அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம்
பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.

[35]
பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே.

[36]
அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.

[37]
அடர் புலனால், நின் பிரிந்து அஞ்சி, அம் சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய்? விரிந்தே எரியும்
சுடர் அனையாய், சுடுகாட்டு அரசே, தொழும்பர்க்கு அமுதே,
தொடர்வு அரியாய், தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.

[38]
தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.

[39]
வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.

[40]
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி,
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்? விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன்; சிவனே, முறையோ? முறையோ?
திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா, என் சிவகதியே!

[41]
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய்? வெள் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சி,
மதி நெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே.

[42]
மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே, விட்டிடுதி கண்டாய்? மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே, சொல் கழிந்தவனே, கழியாத் தொழும்பர்
முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.

[43]
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய்? நின் வெறி மலர்த் தாள்
தொழுது செல் வானத் தொழும்பரில் கூட்டிடு; சோத்தம்' பிரான்;
பழுது செய்வேனை விடேல்; உடையாய், உன்னைப் பாடுவனே.

[44]
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.

[45]
உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்,
விழைதருவேனை விடுதி கண்டாய்? விடின், வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய் மதியன்
பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே.

[46]
பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு எய்தி, விழ, பழித்து,
விழித்திருந்தேனை விடுதி கண்டாய்? வெண் மணிப் பணிலம்
கொழித்து, மந்தாரம் மந்தாகினி நுந்தும், பந்தப் பெருமை
தழிச் சிறை நீரில், பிறைக் கலம் சேர்தரு தாரவனே.

[47]
தாரகை போலும் தலைத் தலை மாலை, தழல் அரப் பூண்
வீர, என் தன்னை விடுதி கண்டாய்? விடின், என்னை மிக்கார்
ஆர் அடியான்' என்னின், உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே.

[48]
சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பை; தொழும்பையும் ஈசற்கு' என்று
விரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய்? விடின், வெம் கரியின்
உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு
எரிப் பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்சன்' என்று ஏசுவனே.

[49]
ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்? செம் பவள வெற்பின்
தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு இரங்கி,
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[50]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.107  
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்  
பண் -   (திருவண்ணாமலை )

ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[1]
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப் பகல் நாம்
பேசும்போது; எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!' நேரிழையீர்!
சீ! சீ! இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்?' ஏல் ஓர் எம்பாவாய்!

[2]
முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என்
அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!

[3]
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?'
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?'
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும்
கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே'
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை,
கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம்
உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து
எண்ணி, குறையில், துயில்' ஏல் ஓர் எம்பாவாய்!

[4]
மால் அறியா, நான்முகனும் காணா, மலையினை, நாம்
போல் அறிவோம், என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ! கடை திறவாய்.
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி, சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும், உணராய், உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு' ஏல் ஓர் எம்பாவாய்!

[5]
மானே! நீ நென்னலை, நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும், நாணாமே
போன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ?
வானே, நிலனே, பிறவே, அறிவு அரியான்
தானே வந்து, எம்மைத் தலையளித்து, ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு, உன் வாய் திறவாய்!
ஊனே உருகாய், உனக்கே உறும்; எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[6]
அன்னே, இவையும் சிலவோ? பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான்,
சின்னங்கள் கேட்ப, சிவன் என்றே வாய் திறப்பாய்;
தென்னா என்னா முன்னம், தீ சேர் மெழுகு ஒப்பாய்;
என்னானை, என் அரையன், இன் அமுது, என்று எல்லோமும்
சொன்னோம் கேள், வெவ்வேறாய்; இன்னம் துயிலுதியோ?
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[7]
கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்;
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்;
கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங்கருணை,
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம்; கேட்டிலையோ?
வாழி! ஈது என்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு!' ஏல் ஓர் எம்பாவாய்!

[8]
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம்' ஏல் ஓர் எம்பாவாய்!

[9]
பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்;
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்;
வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும்,
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்;
கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்!
ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[10]
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து, உன் கழல் பாடி,
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்; ஆர் அழல்போல்
செய்யா! வெள் நீறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம், உய்ந்து ஒழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமை' ஏல் ஓர் எம்பாவாய்!

[11]
ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[12]
பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த
பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்
சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[13]
காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[14]
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே, நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களி கூர,
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப,
பார் ஒரு கால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி,
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[15]
முன்னி, கடலை, சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்
என்னச் சிலை குலவி, நம்தம்மை ஆள் உடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி, அவள், நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை' ஏல் ஓர் எம்பாவாய்!

[16]
செம் கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்,
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதா,
கொங்கு உண் கரும் குழலி! நம் தம்மைக் கோதாட்டி,
இங்கு, நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி,
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை,
அம் கண் அரசை, அடியோங்கட்கு ஆர் அமுதை,
நங்கள் பெருமானை, பாடி, நலம் திகழ,
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[17]
அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றால்போல்,
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப,
தண் ஆர் ஒளி மழுங்கி, தாரகைகள் தாம் அகல,
பெண் ஆகி, ஆண் ஆய், அலி ஆய், பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறு ஆகி,
கண் ஆர் அமுதமும் ஆய், நின்றான் கழல் பாடி,
பெண்ணே! இப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

[18]
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம், என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான், உனக்கு ஒன்று உரைப்போம், கேள்!
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க;
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க;
கங்குல், பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க.
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு?' ஏல் ஓர் எம்பாவாய்!

[19]
போற்றி! அருளுக, நின் ஆதி ஆம் பாத மலர்.
போற்றி! அருளுக, நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்.
போற்றி! எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்.
போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்.
போற்றி! மால், நான்முகனும், காணாத புண்டரிகம்.
போற்றி! யாம் உய்ய, ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்.
போற்றி! யாம் மார்கழி நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.108  
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்  
பண் - தன்னானே நானே நனே; தாநானே தானனே தனே   (திருவண்ணாமலை )

செம் கண் நெடுமாலும் | சென்று இடந்தும்,| காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் |பூதலத்தே |போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு,| எம் தரமும் |ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை,| தென்னன் |பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், | அறைகூவி,| வீடு அருளும்
அம் கருணை வார் கழலே| பாடுதும் காண்;| அம்மானாய்!

[1]
பாரார், விசும்பு உள்ளார்,| பாதாளத்தார், | புறத்தார்,
ஆராலும் காண்டற்கு |அரியான்; |எமக்கு எளிய
பேராளன்; தென்னன்; |பெருந்துறையான்; | பிச்சு ஏற்றி,
வாரா வழி அருளி, | வந்து, என்| உளம் புகுந்த
ஆரா அமுது ஆய்,| அலை கடல்வாய் | மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை | பாடுதும் காண்; |அம்மானாய்!

[2]
இந்திரனும், மால், அயனும்,| ஏனோரும், | வானோரும்,
அந்தரமே நிற்க, | சிவன் அவனி | வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு,| தோள் கொண்ட | நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் | சீர் ஆர் |பெருந்துறையான்,
பந்தம் பறிய,| பரி மேல்கொண்டான், |தந்த
அந்தம் இலா ஆனந்தம்| பாடுதும் காண்; |அம்மானாய்!

[3]
வான் வந்த தேவர்களும்,| மால், அயனோடு,| இந்திரனும்,
கான் நின்று வற்றியும்,| புற்று எழுந்தும்,| காண்பு அரிய
தான் வந்து, நாயேனைத் |தாய்போல் |தலையளித்திட்டு,
ஊன் வந்து உரோமங்கள், |உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து, அமுதின் |தெளிவின் |ஒளி வந்த,
வான் வந்த, வார் கழலே |பாடுதும் காண்; |அம்மானாய்!

[4]
கல்லா மனத்துக் | கடைப்பட்ட |நாயேனை,
வல்லாளன், தென்னன், |பெருந்துறையான், | பிச்சு ஏற்றி,
கல்லைப் பிசைந்து | கனி ஆக்கி, |தன் கருணை
வெள்ளத்து அழுத்தி, | வினை கடிந்த | வேதியனை,
தில்லை நகர் புக்கு,| சிற்றம்பலம் |மன்னும்
ஒல்லை விடையானை |பாடுதும் காண்; | அம்மானாய்!

[5]
கேட்டாயோ தோழி! | கிறி செய்த | ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ்,| தென்னன் |பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் | காட்டி,| சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, | தன் கருணைத் | தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய,| நாம் மேலை | வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா| பாடுதும் காண்; |அம்மானாய்!

[6]
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை,
நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும்
ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!

[7]
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!

[8]
துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான்,
கொண்ட புரிநூலான், கோல மா ஊர்தியான்,
கண்டம் கரியான், செம் மேனியான், வெள் நீற்றான்,
அண்டம் முதல் ஆயினான், அந்தம் இலா ஆனந்தம்,
பண்டைப் பரிசே, பழ அடியார்க்கு ஈந்தருளும்;
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண்; அம்மானாய்!

[9]
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை,
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை,
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை,
பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!

[10]
செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!

[11]
மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!

[12]
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட
மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!

[13]
ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிற ஆய், பிறந்து, இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி, என் வினையை ஓட்டு உகந்து,
தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய
கோன் அவன் போல் வந்து, என்னை, தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!

[14]
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து,
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த,
செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!

[15]
ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!

[16]
சூடுவேன் பூம் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன்; கூடி, முயங்கி, மயங்கி நின்று,
ஊடுவேன்; செவ் வாய்க்கு உருகுவேன்; உள் உருகித்
தேடுவேன்; தேடி, சிவன் கழலே சிந்திப்பேன்;
வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண்; அம்மானாய்!

[17]
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை,
வெளி வந்த மால், அயனும், காண்பு அரிய வித்தகனை,
தெளி வந்த தேறலை, சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து, இருந்து, இரங்கி, எண் அரிய இன் அருளால்
ஒளி வந்து, என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ,
அளி வந்த அந்தணனை பாடுதும் காண்; அம்மானாய்!

[18]
முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும்
பின்னானை; பிஞ்ஞகனை; பேணு பெருந்துறையின்
மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனை;
தென் ஆனைக்காவானை; தென் பாண்டி நாட்டானை;
என்னானை, என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை; அம்மானை பாடுதும் காண்: அம்மானாய்!

[19]
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி, தன் அடியார்
குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோதாட்டி,
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி, இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்,
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.109  
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ  
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )

முத்து நல் தாமம், பூ மாலை, தூக்கி, முளைக்குடம், தூபம், நல் தீபம்,வைம்மின்!
சத்தியும், சோமியும், பார் மகளும், நா மகளோடு பல்லாண்டு இசைமின்!
சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின்!
அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[1]
பூ இயல் வார் சடை எம்பிராற்கு, பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும்,
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்! வம்மின்கள், வந்து, உடன் பாடுமின்கள்;
கூவுமின், தொண்டர் புறம் நிலாமே; குனிமின், தொழுமின்; எம் கோன், எம் கூத்தன்,
தேவியும் தானும் வந்து, எம்மை ஆள, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!

[2]
சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய பொன் சிந்தி, நிதி பரப்பி,
இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் எழில் சுடர் வைத்து, கொடி எடுமின்;
அந்தரர் கோன், அயன் தன் பெருமான், ஆழியான் நாதன், நல் வேலன் தாதை,
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு, ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
[3]
காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்; காம்பு அணிமின்கள், கறை உரலை;
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக' என்று வாழ்த்தி,
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம் பொன் கோயில் பாடி,
பாச வினையைப் பறித்து நின்று, பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[4]
அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர்,
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில் பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்;
செறிவு உடை மும் மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம் பொன் கோயில் பாடி,
முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[5]
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர், உலகம் எலாம் உரல் போதாது என்றே;
கலக்க அடியவர் வந்து நின்றார், காண உலகங்கள் போதாது என்றே;
நலக்க, அடியோமை ஆண்டுகொண்டு நாள் மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி, மகிழ்ந்து, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[6]
சூடகம், தோள் வளை, ஆர்ப்ப ஆர்ப்ப, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப,
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப,
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்கினன், எங்கள் பரா பரனுக்கு,
ஆடக மா மலை அன்ன கோவுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[7]
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க,
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, சோத்தம், பிரான்!' என்று சொல்லிச் சொல்லி,
நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[8]
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[9]
முத்து அணி கொங்கைகள் ஆட ஆட, மொய் குழல் வண்டு இனம் ஆட ஆட,
சித்தம் சிவனொடும் ஆட ஆட, செம் கயல் கண் பனி ஆட ஆட,
பித்து எம்பிரானொடும் ஆட ஆட, பிறவி பிறரொடும் ஆட ஆட,
அத்தன் கருணையொடு ஆட ஆட, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[10]
மாடு, நகை வாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம் பவளம் துடிப்ப,
பாடுமின், நம் தம்மை ஆண்ட ஆறும், பணி கொண்ட வண்ணமும்; பாடிப் பாடித்
தேடுமின், எம்பெருமானை; தேடி, சித்தம் களிப்ப, திகைத்து, தேறி,
ஆடுமின்; அம்பலத்து ஆடினானுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[11]
மை அமர் கண்டனை, வான நாடர் மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை,
ஐயனை, ஐயர் பிரானை, நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர் தம் பொய்யினை, மெய்யர் மெய்யை; போது அரிக் கண் இணை, பொன் தொடித் தோள்,
பை அரவு அல்குல், மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[12]
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

[13]
சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட,
செம் கனி வாய் இதழும் துடிப்ப, சேயிழையீர்! சிவலோகம் பாடி,
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றைச் சடை முடியான் கழற்கே,
பொங்கிய காதலின் கொங்கை பொங்க, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

[14]
ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத்
தேனை, பழச் சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை, பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத் தழும்பு ஏற வாழ்த்தி,
பானல் தடம் கண் மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

[15]
ஆவகை, நாமும் வந்து, அன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி, விண்மேல்
தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம் மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச்
சே வலன் ஏந்திய வெல் கொடியான், சிவபெருமான், புரம் செற்ற கொற்றச்
சேவகன், நாமங்கள் பாடிப் பாடி, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!

[16]
தேன் அகம் மா மலர்க் கொன்றை பாடி, சிவபுரம் பாடி, திருச் சடைமேல்
வான் அகம் மா மதிப் பிள்ளை பாடி, மால் விடை பாடி, வலக் கை ஏந்தும்
ஊன் அகம் மா மழு, சூலம், பாடி, உம்பரும் இம்பரும் உய்ய, அன்று,
போனகம் ஆக, நஞ்சு உண்டல் பாடி, பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

[17]
அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி,
கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி,
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!

[18]
வட்ட மலர்க் கொன்றை மாலை பாடி, மத்தமும் பாடி, மதியும் பாடி,
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி, சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி,
கட்டிய மாசுணக் கச்சை பாடி, கங்கணம் பாடி, கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி, ஈசற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!

[19]
வேதமும், வேள்வியும், ஆயினார்க்கு; மெய்ம்மையும், பொய்ம்மையும், ஆயினார்க்கு;
சோதியும் ஆய், இருள் ஆயினார்க்கு; துன்பமும் ஆய், இன்பம் ஆயினார்க்கு;
பாதியும் ஆய், முற்றும் ஆயினார்க்கு; பந்தமும் ஆய், வீடும் ஆயினாருக்கு;
ஆதியும், அந்தமும், ஆயினாருக்கு; ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.110  
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )

பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும்,
மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச்
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[1]
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[2]
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[3]
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[4]
அத் தேவர் தேவர்; அவர் தேவர்;' என்று, இங்ஙன்,
பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே,
பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற
மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[5]
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும்
பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[6]
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை,
கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்;
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[7]
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு,
நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்!
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[8]
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு
மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[9]
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து,
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்,
தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத்
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[10]
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன்,' என்னாதே,
கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட,
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[11]
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை,
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[12]
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்;
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்;
ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே
கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!

[13]
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே
மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி,
அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[14]
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம்
தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்?
வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[15]
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்,
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட்
கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[16]
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட
ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[17]
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்;
பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும்,
சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக்
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!

[18]
கள்வன், கடியன், கலதி, இவன்' என்னாதே,
வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே;
உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[19]
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.111  
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )

திருமாலும் | பன்றியாய்ச் | சென்று உணராத் | திருவடியை,
உரு நாம் | அறிய, ஓர் | அந்தணன் ஆய், | ஆண்டுகொண்டான்;
ஒரு நாமம், | ஓர் உருவம், | ஒன்றும் இல்லாற்கு,| ஆயிரம்
திருநாமம் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[1]
திரு ஆர் | பெருந்துறை | மேய பிரான் | என் பிறவிக்
கரு வேர் | அறுத்தபின், | யாவரையும் | கண்டது இல்லை;
அரு ஆய்,| உருவமும் | ஆய பிரான், | அவன் மருவும்
திருவாரூர் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[2]
அரிக்கும்,| பிரமற்கும்,| அல்லாத |தேவர்கட்கும்,
தெரிக்கும் | படித்து அன்றி | நின்ற சிவம், | வந்து, நம்மை
உருக்கும், | பணி கொள்ளும், | என்பது கேட்டு, | உலகம் எல்லாம்
சிரிக்கும் | திறம் பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[3]
அவம் ஆய | தேவர் | அவ கதியில் | அழுந்தாமே
பவ மாயம் | காத்து, என்னை | ஆண்டுகொண்ட | பரஞ்சோதி
நவம் ஆய | செம் சுடர் | நல்குதலும், | நாம் ஒழிந்து,
சிவம் ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[4]
அருமந்த | தேவர், | அயன், திருமாற்கு, | அரிய சிவம்
உருவந்து, | பூதலத்தோர் | உகப்பு எய்த, | கொண்டருளி,
கரு வெந்து | வீழக் | கடைக்கணித்து, என் | உளம் புகுந்த
திரு வந்த | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[5]
அரை ஆடு | நாகம் | அசைத்த பிரான், | அவனியின்மேல்,
வரை ஆடு | மங்கை தன் | பங்கொடும், வந்து, | ஆண்ட திறம்
உரை ஆட, | உள் ஒளி ஆட, | ஒள் மா மலர்க் | கண்களில் நீர்
திரை ஆடு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[6]
ஆ! ஆ! | அரி, அயன், | இந்திரன், வானோர்க்கு, | அரிய சிவன்,
வா, வா| என்று, என்னையும் | பூதலத்தே |வலிந்து ஆண்டுகொண்டான்;
பூ ஆர் | அடிச் சுவடு | என் தலைமேல் | பொறித்தலுமே,
தே ஆன | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[7]
கறங்கு ஓலை | போல்வதுஓர் | காயப் பிறப்போடு | இறப்பு என்னும்,
அறம், பாவம், | என்று இரண்டு | அச்சம் தவிர்த்து, என்னை | ஆண்டுகொண்டான்;
மறந்தேயும் | தன் கழல் நான் | மறவாவண்ணம் | நல்கிய, அத்
திறம் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[8]
கல் நார் | உரித்து என்ன, | என்னையும் | தன் கருணையினால்
பொன் ஆர் | கழல் பணித்து, | ஆண்ட பிரான் | புகழ் பாடி,
மின் நேர் | நுடங்கு இடை, | செம் துவர் வாய், | வெள் நகையீர்!
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

[9]
கனவேயும் | தேவர்கள் | காண்பு அரிய | கனை கழலோன்
புன வேய் | அன வளைத் | தோளியொடும் | புகுந்தருளி,
நனவே | எனைப் பிடித்து, ஆட்கொண்டவா | நயந்து, நெஞ்சம்,
சின வேல் கண் | நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

[10]
கயல் மாண்ட | கண்ணி தன் | பங்கன் எனைக் | கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, | அருவினைச் | சுற்றமும் மாண்டு, | அவனியின்மேல்
மயல் மாண்டு, | மற்று உள்ள | வாசகம் மாண்டு, | என்னுடைய
செயல் மாண்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[11]
முத்திக்கு | உழன்று | முனிவர் குழாம் | நனி வாட,
அத்திக்கு | அருளி, | அடியேனை | ஆண்டுகொண்டு,
பத்திக் | கடலுள் | பதித்த | பரஞ்சோதி,
தித்திக்கு | மா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[12]
பார் பாடும், | பாதாளர் | பாடும், விண்ணோர் | தம் பாடும்,
ஆர் பாடும், | சாரா | வகை அருளி, | ஆண்டுகொண்ட
நேர் பாடல் | பாடி, | நினைப்பு அரிய | தனிப் பெரியோன்
சீர் பாடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[13]
மாலே, | பிரமனே, மற்று ஒழிந்த | தேவர்களே,
நூலே, | நுழைவுஅரிய | நுண்ணியன் ஆய், | வந்து, அடியேன்
பாலே | புகுந்து, | பரிந்து உருக்கும் | பாவகத்தால்,
சேல் ஏர் | கண் நீர் மல்க | தெள்ளேணம் | கொட்டாமோ!

[14]
உருகிப் | பெருகி, | உளம் குளிர | முகந்துகொண்டு,
பருகற்கு | இனிய | பரம் கருணைத் | தடம் கடலை
மருவி, | திகழ் தென்னன் | வார் கழலே | நினைந்து, அடியோம்
திருவைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[15]
புத்தன், | புரந்தர ஆதியர், | அயன், மால், | போற்றி செயும்
பித்தன்; | பெருந்துறை | மேய பிரான்; | பிறப்பு அறுத்த
அத்தன்; | அணி தில்லை | அம்பலவன்; | அருள் கழல்கள்
சித்தம் | புகுந்தவா | தெள்ளேணம் | கொட்டாமோ!

[16]
உவலைச் | சமயங்கள், | ஒவ்வாத | சாத்திரம், ஆம்
சவலைக் | கடல் உளனாய்க் | கிடந்து, | தடுமாறும்
கவலைக் | கெடுத்து, | கழல் இணைகள் | தந்தருளும்
செயலைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[17]
வான் கெட்டு | மாருதம் | மாய்ந்து, அழல், நீர், | மண், கெடினும்,
தான் கெட்டல் | இன்றி, | சலிப்பு அறியாத் | தன்மையனுக்கு,
ஊன் கெட்டு, | உயிர் கெட்டு, | உணர்வு கெட்டு, என் | உள்ளமும் போய்,
நான் கெட்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

[18]
விண்ணோர் | முழு முதல்; | பாதாளத் | தார் வித்து;
மண்ணோர் | மருந்து; அயன், | மால், உடைய | வைப்பு; அடியோம்
கண் ஆர, | வந்துநின்றான்; | கருணைக் | கழல் பாடி,
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

[19]
குலம் பாடி | , கொக்கு இறகும் | பாடி, | கோல் வளையாள்
நலம் பாடி, | நஞ்சு உண்ட | வா பாடி, | நாள்தோறும்
அலம்பு ஆர் | புனல் தில்லை | அம்பலத்தே | ஆடுகின்ற
சிலம்பு ஆடல் | பாடி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )

பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

[1]
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!

[2]
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

[3]
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை,
வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்,
சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!

[4]
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ!
தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு
எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!

[5]
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய்,
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ!
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம்
சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!

[6]
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

[7]
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

[8]
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!

[9]
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ!
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்,
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!

[10]
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து,
கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ!
கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!

[11]
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி;
ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ!
ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!

[12]
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

[13]
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

[14]
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!

[15]
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!

[16]
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!

[17]
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ்
அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!

[18]
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!

[19]
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.113  
திருப்பூவல்லி - இணையார் திருவடி  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )

இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே,
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்;
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ!

[1]
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;
அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[2]
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,
மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!

[3]
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,
எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,
விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[4]
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!

[5]
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,
சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,
உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ!

[6]
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து;
இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான்,
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற
குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[7]
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,
முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[8]
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,
கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!

[9]
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,
சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,
போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!

[10]
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய்,
கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!

[11]
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!

[12]
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,
நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,
நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்
பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[13]
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!

[14]
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,
செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,
பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,
பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[15]
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு,
மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி,
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட,
புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[16]
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,
பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

[17]
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!

[18]
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,
பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,
முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!

[19]
மா ஆர வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.114  
திருஉந்தியார் - வளைந்தது வில்லு  
பண் - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

[1]
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

[2]
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

[3]
உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கன் என்று உந்தீபற.

[4]
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

[5]
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென்றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

[6]
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

[7]
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி உந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

[8]
புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.

[9]
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

[10]
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

[11]
உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.

[12]
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

[13]
நான்மறை யோனுமகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

[14]
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

[15]
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

[16]
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

[17]
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

[18]
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.

[19]
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.115  
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )

பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி,
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே,
தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!

[1]
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்;
கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய
குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி,
துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!

[2]
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க,
செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம்,
விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு,
அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[3]
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால்
நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி,
நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன்,
சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!

[4]
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன்,
புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்;
உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே
பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[5]
புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம்,
தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க,
சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும்
அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!

[6]
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை,
சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும்
சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ,
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்!

[7]
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்!
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம்,
ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்!

[8]
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்து,
கண் நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின்,
எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும்,
மண்மிசை மால் பலர், மாண்டனர்; காண் தோள் நோக்கம்!

[9]
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய,
தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு,
எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!

[10]
காமன் உடல்; உயிர், காலன்; பல், காய் கதிரோன்;
நா மகள் நாசி; சிரம், பிரமன்; கரம், எரியை;
சோமன் கலை; தலை தக்கனையும், எச்சனையும்;
தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ!

[11]
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால்
பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து,
பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!

[12]
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்,
பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே;
ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித்
தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!

[13]
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,
கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே,
இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட,
துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ!
. திருப்பொன் ஊசல்

[14]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.116  
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்  
பண் - தாலாட்டு பாடல்   (கோயில் (சிதம்பரம்) )

சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக;
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து;
நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு
ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி,
போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[1]
மூன்று, அங்கு, இலங்கு நயனத்தன், மூவாத
வான் தங்கு தேவர்களும், காணா மலர் அடிகள்,
தேன் தங்கி, தித்தித்து, அமுது ஊறி, தான் தெளிந்து, அங்கு,
ஊன் தங்கிநின்று, உருக்கும் உத்தரகோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடி, குல மஞ்ஞை
போன்று, அங்கு, அன நடையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[2]
முன், ஈறும், ஆதியும் இல்லான்; முனிவர் குழாம்,
பல் நூறு கோடி இமையோர்கள், தாம் நிற்ப,
தன் நீறு எனக்கு அருளி, தன் கருணை வெள்ளத்து
மன் ஊற, மன்னும் மணி உத்தரகோசமங்கை
மின் ஏறும் மாட வியல் மாளிகை பாடி,
பொன் ஏறு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[3]
நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத்தவர் நாதன்;
மஞ்சு தோய் மாட, மணி உத்தரகோசமங்கை
அம் சொலாள் தன்னோடும் கூடி, அடியவர்கள்
நெஞ்சுளே நின்று, அமுதம் ஊறி, கருணை செய்து,
துஞ்சல், பிறப்பு அறுப்பான்; தூய புகழ் பாடி,
புஞ்சம் ஆர் வெள் வளையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[4]
ஆணோ, அலியோ, அரிவையோ, என்று இருவர்
காணாக் கடவுள்; கருணையினால், தேவர் குழாம்
நாணாமே உய்ய, ஆட்கொண்டருளி, நஞ்சு தனை
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கைக்
கோண் ஆர் பிறைச் சென்னிக் கூத்தன்; குணம் பரவி,
பூண் ஆர் வன முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[5]
மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத்
தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித்
தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்;
காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால்,
போது ஆடு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[6]
உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை
மன்னிப் பொலிந்து இருந்த, மா மறையோன் தன் புகழே
பன்னிப் பணிந்து இறைஞ்ச, பாவங்கள் பற்று அறுப்பான்;
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில் போல்
என் அத்தன்; என்னையும் ஆட்கொண்டான்; எழில் பாடி,
பொன் ஒத்த பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[7]
கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச்
சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து,
ஞாலம் மிக, பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்;
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை,
மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடி,
பூலித்து, அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ.

[8]
தெங்கு உலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை
தங்கு, உலவு சோதித் தனி உருவம் வந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொள்வான்:
பங்கு உலவு கோதையும், தானும், பணி கொண்ட
கொங்கு உலவு கொன்றைச் சடையான் குணம் பரவி,
பொங்கு உலவு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

[9]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.117  
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்  
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )

வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர்,
நாதப் பறையினர்; அன்னே! என்னும்,
நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும்,
நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.

[1]
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும்,
உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.

[2]
நித்த மணாளர், நிரம்ப அழகியர்,
சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும்.
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.

[3]
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம்
வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.

[4]
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,
பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும்.
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.

[5]
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும்.
மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்;
என்ன அதிசயம்! அன்னே! என்னும்.

[6]
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.

[7]
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.

[8]
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,
ஐயம் புகுவரால்; அன்னே! என்னும்.
ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம்
நையும்; இது என்னே! அன்னே! என்னும்.

[9]
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும்,
துன்றிய சென்னியர்; அன்னே! என்னும்.
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே,
இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.118  
குயிற்பத்து - கீத மினிய குயிலே  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )

கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்;
சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்!

[1]
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய்,
ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு,
பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை;
சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!

[2]
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்,
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை,
ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!

[3]
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,
வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!

[4]
சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல,
அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்;
முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!

[5]
இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி;
அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்;
நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை;
கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!

[6]
உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத் தோழியும் ஆவன்,
பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன்,
மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய
தென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய்!

[7]
வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்! மாலொடு நான்முகன் தேடி,
ஓவி, அவர் உன்னிநிற்ப, ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி,
மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்;
தாவி வரும் பரிப் பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய்!

[8]
கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே!
சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்;
பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!

[9]
கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ;
அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி,
எம் தமர் ஆம் இவன்' என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்,
செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.119  
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே  
பண் - ஏரார் இளங்கிளியே   (கோயில் (சிதம்பரம்) )

ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன்
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்,
செம் பெருமான்,' வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல்,
எம் பெருமான், தேவர் பிரான்,' என்று.

[1]
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும்
நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு
அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும்,
தென் பாண்டி நாடே, தெளி.

[2]
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும்
மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? கோதாட்டிப்
பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர்.

[3]
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர்
ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்!
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும்
ஆனந்தம் காண், உடையான் ஆறு.

[4]
கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன்
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண், ஆய்ந்து.

[5]
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே!
ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும்
தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பெண் ஏத்து இசைப்ப,
வான் புரவி ஊரும், மகிழ்ந்து.

[6]
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன்,
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும்
கழுக்கடை காண், கைக்கொள் படை.

[7]
இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள் பெருந்துறைக் கோன்
முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால்,
பிறவிப் பகை கலங்க, பேரின்பத்து ஓங்கும்,
பரு மிக்க நாதப் பறை.

[8]
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்,
தாளி அறுகு ஆம், உவந்த தார்.

[9]
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும்
கோது இலா ஏறு ஆம், கொடி.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.120  
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத  
பண் - புறநீர்மை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு, நின் திருவடிதொழுகோம்
சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[1]
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!

[2]
கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு.
தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[3]
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[4]
பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை.
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[5]
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும்,
மைப்பு உறு கண்ணியர், மானுடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[6]
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார்.
இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[7]
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

[8]
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[9]
புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.121  
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )

உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி;
அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே!

[1]
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று,
பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே!
என்?' என்று, அருள் இவர நின்று, போந்திடு' என்னாவிடில், அடியார்,
உன் நின்று, இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!

[2]
உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன்,
சகம் தான் அறிய முறையிட்டால், தக்க ஆறு அன்று' என்னாரோ?
மகம் தான் செய்து வழி வந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன்
முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம்பலத்து எம் முழு முதலே!

[3]
முழு முதலே! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என் தனக்கும்,
வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான், குழுமிக்
கெழு முதலே! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ?' என்று
அழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே!

[4]
அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே!' என்று உன் அருள் நோக்கி,
இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே, வேசற்றேன்;
கரை சேர் அடியார் களி சிறப்ப, காட்சி கொடுத்து, உன் அடியேன்பால்,
பிரை சேர் பாலின் நெய் போல, பேசாது இருந்தால், ஏசாரோ?

[5]
ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம்
பேசா நிற்பர்; யான் தானும் பேணா நிற்பேன், நின் அருளே;
தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க,
ஈசா! பொன்னம்பலத்து ஆடும் எந்தாய்! இனித்தான் இரங்காயே!

[6]
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' என்று என்று, ஏமாந்திருப்பேனை,
அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ?
நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும்
மருங்கே சார்ந்து, வர, எங்கள் வாழ்வே, வா' என்று அருளாயே!

[7]
அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல்' என்பார் ஆர், இங்கு?
பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா!
மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா' என்று, உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?

[8]
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தை
விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து, உன் திருநாமம்
தரிப்பார்; பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார்; அவர் முன்னே
நரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ? நம்பி! இனித்தான் நல்காயே!

[9]
நல்காது ஒழியான் நமக்கு' என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி,
பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம்' என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.122  
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை  
பண் - அக்ஷரமணமாலை   (கோயில் (சிதம்பரம்) )

மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!

[1]
அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை, ஆனந்தமாய்க் கசிந்து உருக,
என் பரம் அல்லா, இன் அருள் தந்தாய்; யான், இதற்கு இலன் ஒர் கைம்மாறு:
முன்பும் ஆய், பின்பும், முழுதும், ஆய், பரந்த முத்தனே! முடிவு இலா முதலே!
தென் பெருந்துறையாய்! சிவபெருமானே! சீர் உடைச் சிவபுரத்து அரசே!

[2]
அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கை
புரை புரை கனியப் புகுந்துநின்று, உருக்கி, பொய் இருள் கடிந்த மெய்ச் சுடரே!
திரை பொரா மன்னும், அமுதத் தெண் கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே!
உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே! யான், உன்னை உரைக்கும் ஆறு,உணர்த்தே.

[3]
உணர்ந்த மா முனிவர், உம்பரோடு, ஒழிந்தார் உணர்வுக்கும், தெரிவு அரும் பொருளே!
இணங்கு இலி! எல்லா உயிர்கட்கும் உயிரே! எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே!
திணிந்தது ஓர் இருளில், தெளிந்த தூ ஒளியே! திருப்பெருந்துறை உறை சிவனே!
குணங்கள் தாம் இல்லா இன்பமே! உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே?

[4]
குறைவு இலா நிறைவே! கோது இலா அமுதே! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே!
மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய், வந்து என் மனத்திடை மன்னிய மன்னே!
சிறை பெறா நீர் போல், சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே!
இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்; இனி, உன்னை என் இரக்கேனே?

[5]
இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே! இமையோர்
சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்! திருப்பெருந்துறை உறை சிவனே!
நிரந்த ஆகாயம், நீர், நிலம், தீ, கால், ஆய், அவை அல்லை ஆய், ஆங்கே,
கரந்தது ஓர் உருவே! களித்தனன், உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு, இன்றே.

[6]
இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;
சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

[7]
பார், பதம், அண்டம், அனைத்தும், ஆய், முளைத்துப் படர்ந்தது ஓர் படர் ஒளிப்பரப்பே!
நீர் உறு தீயே! நினைவதேல், அரிய நின்மலா! நின் அருள் வெள்ளச்
சீர் உறு, சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆர் உறவு எனக்கு, இங்கு? யார் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி!

[8]
சோதியாய்த் தோன்றும் உருவமே! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரிய
ஆதியே! நடுவே! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே!
தீது இலா நன்மைத் திருவருள் குன்றே! திருப்பெருந்துறை உறை சிவனே!
யாது நீ போவது ஓர் வகை? எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே.

[9]
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.123  
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்  
பண் - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும்,
கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்.
ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச்
செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[1]
புற்றும் ஆய், மரம் ஆய்; புனல், காலே, உண்டி, ஆய்; அண்ட வாணரும், பிறரும்,
மற்று யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்து,
பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச்
செற்றிலேன்; இன்னும் திரிதருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[2]
புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள் புரிந்தனை; புரிதலும்,களித்துத்
தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா! எண் இல் வானவர்க்கு எல்லாம்
நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்த
சிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[3]
அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம்
என்பர் ஆய், நினைவார் எனைப் பலர்; நிற்க இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய்?
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக் கண்; என் செவி இரும்பினும் வலிது;
தென் பராய்த்துறையாய்! சிவலோகா! திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[4]
ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து, அன்பால், ஐயனே' என்று, உன் அருள் வழி இருப்பேன்;
நாட்டுத் தேவரும் நாடு அரும் பொருளே! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக்
காட்டி, தேவ, நின் கழல் இணை காட்டி, காய மாயத்தைக் கழித்து, அருள்செய்யாய்;
சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே! திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[5]
அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்;
பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா!
இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன்? இது செய்க' என்றுஅருளாய்;
சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[6]
மாயனே! மறி கடல் விடம் உண்ட வானவா! மணி கண்டத்து எம் அமுதே!
நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; நமச்சிவாய' என்று, உன் அடி பணியாப்
பேயன் ஆகிலும், பெரு நெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ!
சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ? திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[7]
போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன், புரந்தர ஆதிகள், நிற்க, மற்றுஎன்னைக்
கோது மாட்டி, நின் குரை கழல் காட்டி, குறிக்கொள்க' என்று, நின் தொண்டரில்கூட்டாய்;
யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ?
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[8]
ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்;
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்!
மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்;
சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

[9]
அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில்,
திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!
வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா!
களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.124  
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்  
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.

[1]
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச்
செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[2]
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத்
தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற
அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[3]
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[4]
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு,
இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான்,
அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[5]
மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[6]
மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு,
புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி,
என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[7]
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம்.
ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[8]
பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ்,
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர்
நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும்
அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[9]
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு,
விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்;
தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்;
அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.125  
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்  
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும்
பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ!
இருளைத் துரந்திட்டு, இங்கே வா' என்று, அங்கே, கூவும்
அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[1]
மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த
குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ!
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ!
அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
[2]
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக்
கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே!
தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி,
ஆ! ஆ!' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[3]
மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு ஊறல், வீறு இலி, நடைக் கூடம்
தொடர்ந்து எனை நலைய, துயர் உறுகின்றேன்; சோத்தம்! எம் பெருமானே!
உடைந்து, நைந்து, உருகி, உள் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம்
அடைந்து நின்றிடுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[4]
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை,
புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ!
எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ!
அளியேன்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[5]
எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை
வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே!
முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண,
அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[6]
பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி!
வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே!
பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான்' என ஏத்த,
ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[7]
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு,
எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!', பெருமான்!' என்று,
ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப,
ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[8]
செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு,
கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர,
படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம்,
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[9]
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு,
நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்;
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால்,
அஞ்சேல்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.126  
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்  
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[1]
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்;
ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை என் அடியான்' என்று,
பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[2]
முன்னை என்னுடை வல் வினை போயிட, முக்கண் அது உடை எந்தை,
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்கு,
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி தனில் இள மதி அது வைத்த
அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[3]
பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:
ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,
செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[4]
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;
குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை
இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

[5]
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு; நல் வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை,
அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[6]
பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை;
இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை
முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி,
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[7]
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;
நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;
தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி
ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[8]
உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,
பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

[9]
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்
பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை
தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.127  
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை  
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன்,
தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை,
புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[1]
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி,
ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு,
போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[2]
நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன்
வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவி,
பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[3]
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும்,
சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை,
நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை,
புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[4]
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும்,
அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும்
நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ!' என்ற நீர்மை எல்லாம்
புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[5]
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய,
பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று,
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய்,
புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[6]
நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை, காலை, நிலனை, விசும்பை,
தனை ஒப்பாரை இல்லாத் தனியை, நோக்கி; தழைத்து; தழுத்த கண்டம்
கனைய; கண்ணீர் அருவி பாய; கையும் கூப்பி, கடி மலரால்
புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[7]
நெக்கு நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும்,
நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்து நவிற்றி;
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து;
புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[8]
தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் தனை ஆண்ட
பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும்
ஏது ஆம் மணியே!' என்று என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப்
போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[9]
காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம்
மூப்பாய்; மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட
பார்ப்பானே; எம் பரமா!' என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப்
பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.128  
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்  
பண் - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே.

[1]
வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்
செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே.

[2]
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி;
வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[3]
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;
தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை
வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[4]
பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து,
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[5]
பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செஞ்செவே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த
வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[6]
பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா
மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[7]
பந்து அணை விரலாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
அந்தம் இல் அமுதே! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே! அடியேனை
வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[8]
பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே!
மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[9]
பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
செழு மதி அணிந்தாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
தொழுவனோ பிறரை? துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்;
மழ விடையானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.129  
அருட்பத்து - சோதியே சுடரே  
பண் - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[1]
நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே! விண் உளார் பிரானே!
ஒருத்தனே! உன்னை, ஓலம் இட்டு அலறி, உலகு எலாம் தேடியும், காணேன்;
திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[2]
எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா! ஏல வார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே! தக்க நல் காமன் தனது உடல் தழல் எழ விழித்த
செம் கண் நாயகனே! திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அம் கணா! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[3]
கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், நண்ணுதற்கு அரிய
விமலனே, எமக்கு வெளிப்படாய்' என்ன, வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்!
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[4]
துடி கொள் நேர் இடையாள், சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு,
பொடி கொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே!
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர்
அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[5]
துப்பனே, தூயாய்! தூய வெள் நீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே! உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே!
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில், செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அப்பனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[6]
மெய்யனே! விகிர்தா! மேருவே வில்லா, மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே! காலால் காலனைக் காய்ந்த, கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[7]
முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு அறா மலர் பறித்து, இறைஞ்சி,
பத்தியாய் நினைந்து, பரவுவார் தமக்குப் பர கதி கொடுத்து, அருள்செய்யும்
சித்தனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[8]
மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய்!
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!

[9]
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா, நினைந்திட்டு, என்னுடை எம்பிரான்' என்று என்று,
அருந்தவா! நினைந்தே, ஆதரித்து அழைத்தால், அலை கடல் அதனுளே நின்று
பொருந்த, வா; கயிலை புகு நெறி இது காண்; போதராய்' என்று அருளாயே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.130  
திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு  
பண் -   (திருக்கழுக்குன்றம் )

பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[1]
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்;
சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[2]
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி, மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன்;
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியே
கலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[3]
பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும்,
நாண் ஒணாதது ஒர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான்
பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும்,
காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[4]
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[5]
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே!
ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய்?
சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் என,
காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[6]
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே!
மயக்கம் ஆயது ஓர் மும் மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும்,
துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூ மலர்க் கழல் தந்து, எனைக்
கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[7]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.131  
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )

இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய்,
அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச்
சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!

[1]
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு,
தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை,
எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

[2]
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,
கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!

[3]
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்,
பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே!

[4]
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு;
பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து;
கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே!

[5]
பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும்,
உறவினொடும், ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலை
செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி,
மறையவரும், வானவரும், வணங்கிட நான் கண்டேனே!

[6]
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி,
பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே,
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

[7]
அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி,
விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானை
களவு இலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே!

[8]
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை,
ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி;
வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!

[9]
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொருள் ஆகி,
பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை,
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.132  
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்;
புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்;
உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான்,
அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே!

[1]
அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே,
முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்;
கடியேனுடைய கடு வினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க,
உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே!

[2]
அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த,
இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே!
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார்
வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!

[3]
வேண்டும், வேண்டும், மெய் அடியார் உள்ளே, விரும்பி, எனை அருளால்
ஆண்டாய்; அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே!
தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! தொண்டனேற்கும் உண்டாம்கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது, மிக்க அன்பே மேவுதலே?

[4]
மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே,
காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் தன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து,
ஆவி, யாக்கை, யான், எனது, என்று யாதும் இன்றி, அறுதலே?

[5]
அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்;
புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்; உடையானே!
பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியா, பிரிவு இல்லா,
மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே!

[6]
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண,
இடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி நாயேன்?
உடையாய்! நீயே அருளுதி என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்தொழிந்தேன்;
சுடர் ஆர் அருளால், இருள் நீங்க, சோதீ! இனித்தான் துணியாயே!

[7]
துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்து,
திணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்;
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத்
தணியாது, ஒல்லை வந்தருளி, தளிர் பொன் பாதம் தாராயே!

[8]
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்' என்று, உன் தமர் எல்லாம்
ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ?
சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!
பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே!

[9]
மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம் நெகா
நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! இத்தால் வாழ்ந்தாயே?
ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தை,
கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு, என்றோ கூடுவதே?

[10]
கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்;
வாடி வாடி, வழி அற்றே, வற்றல் மரம் போல் நிற்பேனோ?
ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகி, பெருகி, நெக்கு,
ஆடி ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!

[11]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.133  
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன்
உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்;
பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று
அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே?

[1]
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;
கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, ஆ! ஆ!' என்று அருளி,
செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!
உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?

[2]
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை,
இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால்,
என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே!

[3]
மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்
ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்;
ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,
கோனே! கூவிக்கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே?

[4]
கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!
தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!
வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,
தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?

[5]
வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?

[6]
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!
நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

[7]
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்;
மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி,
ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்?
காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே!

[8]
கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர;
எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால்
மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும்
அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!

[9]
அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே!
திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்;
புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே,
குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.134  
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்  
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என்
மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா!
செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்!
எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே?

[1]
நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு,
ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்;
தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்;
வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன், எனக்கே.

[2]
எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்;
மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி;
சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!

[3]
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில்
எனை, தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கி,
பினை, தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான்,
மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே!

[4]
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி,
நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடி வம்மின்;
தெற்று ஆர் சடைமுடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர்
கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே!

[5]
கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என்
உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவண்ணம், நிறைந்தான்:
சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும்,
படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே!

[6]
வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும், விண்ணும்;
வேண்டேன் பிறப்பு, இறப்பு; சிவம் வேண்டார் தமை நாளும்
தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறை தாள்
பூண்டேன்; புறம் போகேன்; இனி, புறம்போகல் ஒட்டேனே!

[7]
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ
ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே!
சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும்,
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?

[8]
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்;
அச்சோ! எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அமுதே!
செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான்,
நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின்றானே!

[9]
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே,
ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்;
தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்!
நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.135  
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[1]
வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்;
இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம்
திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்ன
அருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[2]
வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[3]
கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி,
துளி உலாம் கண்ணர் ஆகி, தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு,
அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[4]
பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;
துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால்,
திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு
அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[5]
வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;
தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன்,
தாள தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும்
ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[6]
தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;
புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும்,
முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி,
அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[7]
தறி செறு களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;
வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[8]
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்;
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்,
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது,
அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[9]
கோண் இலா வாளி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,
வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.136  
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்  
பண் - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம்
ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி,
தெரிவர நின்று, உருக்கி, பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி, உருவு அறியாது என் தன் உள்ளம் அதே.

[1]
சதிரை மறந்து, அறி மால் கொள்வர் சார்ந்தவர்; சாற்றிச் சொன்னோம்;
கதிரை மறைத்தன்ன சோதி, கழுக்கடை கைப் பிடித்து,
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல், குடி கேடு கண்டீர்!
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே.

[2]
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்;
பார் இன்ப வெள்ளம் கொள, பரி மேற்கொண்ட பாண்டியனார்,
ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு, தொண்டரை உள்ளம் கொண்டார்;
பேர் இன்ப வெள்ளத்துள், பெய் கழலே சென்று பேணுமினே.

[3]
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின்; தென்னன், நல் நாட்டு
இறைவன், கிளர்கின்ற காலம் இக் காலம், எக் காலத்துள்ளும்;
அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து, ஆனந்த மாக் கடவி,
எறியும் பிறப்பை, எதிர்ந்தார் புரள, இரு நிலத்தே.

[4]
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய
ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய
ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான்: வந்து, முந்துமினே.

[5]
ஈண்டிய மாய இருள் கெட, எப் பொருளும் விளங்க,
தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்;
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்;
பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.

[6]
மாய வனப் பரி மேற்கொண்டு, மற்று அவர் கைக்கொளலும்,
போய் அறும், இப் பிறப்பு என்னும் பகைகள்: புகுந்தவருக்கு,
ஆய, அரும் பெரும், சீர் உடைத் தன் அருளே அருளும்:
சேய நெடும் கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.

[7]
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி,
கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி,
பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே,
முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே.

[8]
விரவிய தீ வினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்க,
பரவிய அன்பரை, என்பு உருக்கும் பரம் பாண்டியனார்,
புரவியின் மேல் வர, புந்தி கொளப்பட்ட பூம் கொடியார்
மர இயல் மேற்கொண்டு, தம்மையும் தாம் அறியார், மறந்தே.

[9]
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால்
வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால்
ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே;
தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.137  
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே  
பண் - அக்ஷரமணமாலை   (சீர்காழி )

உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[1]
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[2]
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[3]
அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[4]
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[5]
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[6]
பாச வேர் அறுக்கும் பழம் பொருள்! தன்னைப் பற்றும் ஆறு, அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து, பூம் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[7]
அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[8]
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[9]
புன் புலால் யாக்கை புரை புரை கனிய பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்
என்பு எலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!
துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!
இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.138  
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி,
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்;
ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!

[1]
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா' என்ன;
கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!

[2]
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,
ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ!' என்று,
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே!

[3]
பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர்
உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு,
எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என்
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!

[4]
கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

[5]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு,
நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால்
உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை,
அஞ்சேல்,' என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!

[6]
என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா,
தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்,
அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது,
என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!

[7]
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா
ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால்
பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!

[8]
மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,
தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான்' என்று ஏத்தி,
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,
அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

[9]
நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.139  
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்  
பண் - அயிகிரி நந்தினி   (திருவாரூர் )

பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே,
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ,
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின்
பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே!

[1]
சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ இலைச் சூலப்
படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை
விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான்,
உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே!

[2]
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

[3]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.140  
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே  
பண் - அயிகிரி நந்தினி   (கோயில் (சிதம்பரம்) )

ஓடும், கவந்தியுமே, உறவு' என்றிட்டு, உள் கசிந்து;
தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து;
கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன்
ஆடும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[1]
துடி ஏர் இடுகு இடைத் தூ மொழியார் தோள் நசையால்
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்,
முடியேன்; பிறவேன்; எனைத் தன தாள் முயங்குவித்த
அடியேன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[2]
என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்து,
துன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து,
முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்த
அன்பின் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[3]
குறியும், நெறியும், குணமும், இலாக் குழாங்கள் தமைப்
பிறியும் மனத்தார் பிறிவு அரிய பெற்றியனை;
செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ பதத்தை;
அறியும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[4]
பேரும், குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி தனைத்
தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம்
சேரும் வகையால், சிவன் கருணைத் தேன் பருகி,
ஆரும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[5]
கொம்பில் அரும்பு ஆய், குவி மலர் ஆய், காய் ஆகி,
வம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே;
நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம், நான் அணுகும்
அம் பொன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[6]
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய,
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப,
கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம்' எனக் களித்து, இங்கு
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[7]
இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தே,
நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால்,
கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் ஆட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[8]
பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்கு,
கீழ்ச் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு,
தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால்
ஆட்செய் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[9]
கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள் கூறனுக்கு,
செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு,
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்,
அம்மை குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.141  
அற்புதப்பத்து - மைய லாய்இந்த  
பண் - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு,
தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே,
பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி,
மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!

[1]
ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே,
சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி,
போந்து, யான் துயர் புகாவணம் அருள்செய்து, பொன் கழல் இணை காட்டி,
வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பனே!

[2]
நடித்து, மண்ணிடை; பொய்யினைப் பல செய்து; நான், எனது, எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று; முன் வினை மிகக் கழறியே திரிவேனை,
பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனை
அடித்து அடித்து, அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே!

[3]
பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது; பொய்களே புகன்று போய்;
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு; கலங்கியே கிடப்பேனை;
திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட, திருவொடும் அகலாதே,
அரும் துணைவன் ஆய், ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[4]
மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும்
கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை,
வீடு தந்து, என் தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே!

[5]
வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனை,
குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத்தொடும் கூடி,
அணைந்து வந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[6]
இப் பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி,
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான், தட முலையார் தங்கள்
மைப்பு உலாம் கண்ணால், ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி,
அப்பன், என்னை, வந்து, ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[7]
ஊசல் ஆடும் இவ் உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை,
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கி,
பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!

[8]
பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, நான், புழுத்து அலை நாய்போல,
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை,
விச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டி,
அச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[9]
செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும்
கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை,
இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி,
அறிவு தந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.142  
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்  
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான்,
தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!

[1]
அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்,
சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன்,
மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன்
வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

[2]
நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன்,
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன்,
மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான்
பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, பொலியுமே!

[3]
பத்தர் சூழ, பரா பரன் பாரில் வந்து, பார்ப்பான் என,
சித்தர் சூழ, சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான்,
எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங்கொண்டு, எம் பணி கொள்வான்
வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

[4]
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்;
வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்;
காயத்துள் அமுது ஊற ஊற, நீ கண்டுகொள்' என்று காட்டிய
சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

[5]
சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீ வினை கெடுத்து, உய்யல் ஆம்
பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சேர்த்தலும்,
முத்தி தந்து, இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

[6]
பிறவி என்னும் இக் கடலை நீந்த, தன் பேர் அருள் தந்தருளினான்;
அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல்
உறவு செய்து, எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

[7]
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன்' என்று என்று,
தொழுத கையினர் ஆகி; தூ மலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு,
வழு இலா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

[8]
வம்பனாய்த் திரிவேனை வா' என்று வல் வினைப் பகை மாய்த்திடும்
உம்பரான், உலகு ஊடு அறுத்து, அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான்,
அன்பர் ஆனவர்க்கு அருளி, மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

[9]
முத்தனை, முதல் சோதியை, முக் கண் அப்பனை, முதல் வித்தினை,
சித்தனை, சிவலோகனை, திரு நாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ;
சித்தம் ஆர்தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே.!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.143  
திருவார்த்தை - மாதிவர் பாகன்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி,
கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும்,
போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து,
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே.

[1]
மால், அயன், வானவர் கோனும், வந்து வணங்க, அவர்க்கு அருள்செய்த ஈசன்,
ஞாலம் அதனிடை வந்திழிந்து, நல் நெறி காட்டி, நலம் திகழும்
கோல மணி அணி மாடம் ணீடு குலாவும் இடவை மட நல்லாட்கு,
சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே.

[2]
அணி முடி ஆதி அமரர் கோமான், ஆனந்தக் கூத்தன், அறு சமயம்
பணி வகை செய்து, படவு அது ஏறி, பாரொடு விண்ணும் பரவி ஏத்த,
பிணி கெட, நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன், பெண்பால் உகந்து,
மணி வலை கொண்டு, வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.

[3]
வேடு உரு ஆகி, மயேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத்
தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்ய,
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந் நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[4]
வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக் கடல் ஆய், அடியார்
பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந் நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில்,
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[5]
வேவ, திரிபுரம், செற்ற வில்லி, வேடுவன் ஆய், கடி நாய்கள் சூழ,
ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான், இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்று
கேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[6]
நாதம் உடையது ஒர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார்,
ஓதி, பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும்,
போது அலர் சோலை, பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றி,
பேதம் கெடுத்து, அருள் செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே.

[7]
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்,
மாது நல்லாள், உமை மங்கை, பங்கன், வண் பொழில் சூழ் தென் பெருந்துறைக் கோன்,
ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[8]
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மயேந்திர நாதன், வந்து
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்று
காதல் பெருக, கருணை காட்டி, தன் கழல் காட்டி, கசிந்து உருக,
கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[9]
அம் கணன், எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்த
எங்கள் பிரான், இரும் பாசம் தீர இக பரம் ஆயது ஒர் இன்பம் எய்த,
சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்று,
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.144  
எண்ணப்பதிகம் - பாருருவாய  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;
சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல்
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே,
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே.

[1]
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து, இங்கு ஒரு பொழுதும்
தரியேன், நாயேன்; இன்னது என்று அறியேன்; சங்கரா! கருணையினால்
பெரியோன் ஒருவன், கண்டு கொள்' என்று, உன் பெய் கழல் அடி காட்டி,
பிரியேன்' என்று என்று, அருளிய அருளும் பொய்யோ? எங்கள் பெருமானே!

[2]
என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி,
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா, முனிவர், முழு முதலே,
இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே,
நன்பே அருளாய் என் உயிர் நாதா! நின் அருள் நாணாமே.

[3]
பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே!
முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ?' என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.

[4]
காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர,
பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,
தாணுவே, அழிந்தேன்: நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்
காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

[5]
பால் திரு நீற்று எம் பரமனை; பரம் கருணையொடும் எதிர்ந்து
தோற்றி, மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை; நீதி இலேன்,
போற்றி, என் அமுதே, என நினைந்து, ஏத்தி, புகழ்ந்து, அழைத்து, அலறி, என் உள்ளே
ஆற்றுவன் ஆக; உடையவனே, எனை, ஆவ' என்று அருளாயே!

[6]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.145  
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )

பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,
ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;
போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.

[1]
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்;
நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட,
தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.

[2]
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,
கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,
போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.

[3]
அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;
கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;
செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்
பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே.

[4]
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;
உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;
அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;
புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.

[5]
புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு,
இகழ்மின் எல்லா அல்லலையும்; இனி, ஓர் இடையூறு அடையாமே,
திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று, சிவன் தாள் வணங்கி, நாம்
நிகழும் அடியார் முன் சென்று, நெஞ்சம் உருகி, நிற்போமே.

[6]
நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே,
பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே;
நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின்;
பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே.

[7]
பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள்,
அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே,
திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து,
திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.

[8]
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்;
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம்
ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்!
போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.

[9]
புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,
மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;
தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.146  
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்;
மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்;
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்;
வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.

[1]
தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப் போகீர்;
ஒண் திறல் யோகிகளே, பேர் அணி உந்தீர்கள்;
திண் திறல் சித்தர்களே, கடைக் கூழை செல்மின்கள்;
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே.

[2]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.147  
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி,
பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து.

[1]
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?

[2]
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே,
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

[3]
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.

[4]
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்;
பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது
இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.

[5]
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்;
மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன்,
பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும்
மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.

[6]
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி,
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய
ஒருத்தன், பெருக்கும் ஒளி.

[7]
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்!
மற்று அறியேன் செய்யும் வகை.

[8]
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம் மிகும்.

[9]
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து
இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்,
மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.

[10]
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து,
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆகக் கொண்டான், உவந்து.

[11]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.148  
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்  
பண் - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

[1]
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன்
வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த,
கருவும் கெடும், பிறவிக் காடு.

[2]
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்;
நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி,
அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம்,
மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து.

[3]
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும்,
தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர்.

[4]
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல,
எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக்
கழியாது இருந்தவனை, காண்.

[5]
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என,
பேணும் அடியார் பிறப்பு அகல, காணும்
பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும்
பிரியானை, வாய் ஆரப் பேசு.

[6]
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த
மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி,
பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து.

[7]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.149  
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.

[1]
ஒன்றினொடு ஒன்றும், ஒர் ஐந்தினொடு ஐந்தும், உயிர்ப்பதும் ஆகாதே?
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே?
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு அதும் ஆகாதே?
காரணம் ஆகும் மன ஆதி குணங்கள் கருத்து உறும் ஆகாதே?
நன்று, இது, தீது, என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே?
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல, நண்ணுதும் ஆகாதே?
என்றும் என் அன்பு நிறைந்த பராஅமுது எய்துவது ஆகாதே?
ஏறு உடையான், எனை ஆளுடை நாயகன், என்னுள் புகுந்திடிலே!

[2]
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே?
பாவனை ஆய கருத்தினில் வந்த பரா அமுது ஆகாதே?
அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே?
ஆதி முதல் பரம் ஆய பரம் சுடர் அண்ணுவது ஆகாதே?
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே?
சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே?
இந்திரஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே?
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே!

[3]
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து, உடன் இன்புறும் ஆகாதே?
எல்லை இல் மாக் கருணைக் கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே?
நல் மணி நாதம் முழங்கி, என் உள் உற, நண்ணுவது ஆகாதே?
நாதன் அணித் திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே?
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே?
மா மறையும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!

[4]
மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே?
வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே?
கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே?
காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே?
பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே?
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே?
எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே?
என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே!

[5]
பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே?
பூ மழை, மாதவர் கைகள் குவிந்து, பொழிந்திடும் ஆகாதே?
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே?
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே?
தன் அடியார் அடி என் தலைமீது தழைப்பன ஆகாதே?
தான் அடியோமுடனே உய வந்து, தலைப்படும் ஆகாதே?
இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும் ஆகாதே?
என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே!

[6]
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே?
துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே?
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பரா பரம் ஆகாதே?
பண்டு அறியாத பர அனுபவங்கள் பரந்து எழும் ஆகாதே?
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே?
விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப் பொருள் ஆகாதே?
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே?
இந்து சிகாமணி எங்களை ஆள, எழுந்தருளப் பெறிலே!

[7]
சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே?
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே?
அங்கு இது நன்று, இது நன்று, எனும் மாயை அடங்கிடும் ஆகாதே?
ஆசை எலாம், அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே?
செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே?
சீர் அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே?
எங்கும் நிறைந்து, அமுது ஊறு, பரம்சுடர் எய்துவது ஆகாதே?
ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே!

[8]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.150  
ஆனந்தமாலை - மின்னே ரனைய  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )

மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்;
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்;
கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.

[1]
என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்;
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்:
பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது,
என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.

[2]
சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி,
தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை
மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற,
கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?

[3]
கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழி கொண்டாய்;
படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே?
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே,
நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே?

[4]
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே;
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?

[5]
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே?
ஆ! ஆ!' என்னாவிடில், என்னை அஞ்சேல்' என்பார் ஆரோ தான்?
சாவார் எல்லாம் என் அளவோ? தக்க ஆறு அன்று' என்னாரோ?
தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!

[6]
நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து,
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்!
அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே!
தெரிய அரிய பரஞ்சோதீ! செய்வது ஒன்றும் அறியேனே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[7]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.151  
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத  
பண் - முல்லைத் தீம்பாணி   (கோயில் (சிதம்பரம்) )

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[1]
நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை,
சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம்,
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[2]
பொய் எல்லாம் மெய் என்று, புணர் முலையார் போகத்தே
மையல் உறக் கடவேனை, மாளாமே, காத்தருளி,
தையல் இடம் கொண்ட பிரான், தன் கழலே சேரும்வண்ணம்,
ஐயன், எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[3]
மண் அதனில் பிறந்து, எய்த்து, மாண்டு விழக் கடவேனை,
எண்ணம் இலா அன்பு அருளி, எனை ஆண்டிட்டு, என்னையும் தன்
சுண்ண வெண் நீறு அணிவித்து, தூ நெறியே சேரும்வண்ணம்,
அண்ணல் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[4]
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு,
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்;
உய்ஞ்சேன் நான்; உடையானே, அடியேனை வருக' என்று,
அஞ்சேல்' என்று, அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[5]
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று, வினை பெருக்கி,
கொந்து குழல் கோல் வளையார் குவி முலைமேல் விழுவேனை,
பந்தம் அறுத்து, எனை ஆண்டு, பரிசு அற, என் துரிசும் அறுத்து,
அந்தம் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[6]
தையலார் மையலிலே தாழ்ந்து விழக் கடவேனை,
பையவே கொடு போந்து, பாசம் எனும் தாழ் உருவி,
உய்யும் நெறி காட்டுவித்திட்டு, ஓங்காரத்து உட்பொருளை
ஐயன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[7]
சாதல், பிறப்பு, என்னும் தடம் சுழியில் தடுமாறி,
காதலின் மிக்கு, அணி இழையார் கலவியிலே விழுவேனை,
மாது ஒரு கூறு உடைய பிரான், தன் கழலே சேரும்வண்ணம்,
ஆதி, எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[8]
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை,
மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

[9]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.201  
முதல் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

திருவளர் தாமரை சீர்வளர்
   காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
   காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
   னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
   கொடிபோன் றொளிர்கின்றதே.

[1]
போதோ விசும்போ புனலோ
   பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
   மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
   விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
   நின்றவர் வாழ்பதியே.

[2]
பாயும் விடையரன் றில்லையன்
   னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
   வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
   ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
   தோளிச் சிறுநுதலே.

[3]
அகல்கின்ற வல்குற் றடமது
   கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
   யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
   யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
   னம்மன்ன பல்வளைக்கே.

[4]
அணியு மமிழ்துமென் னாவியு
   மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
   யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
   பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
   தோளி படைக்கண்களே.

[5]
வளைபயில் கீழ்கட னின்றிட
   மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
   தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
   கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
   வேன்தெய்வ மிக்கனவே.

[6]
ஏழுடை யான்பொழி லெட்டுடை
   யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
   பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
   விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
   காய்வந் தகப்பட்டதே.

[7]
சொற்பா லமுதிவள் யான்சுவை
   யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
   நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
   புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
   தோட்ட களவகத்தே.

[8]
உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
   சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
   வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
   போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
   போல வளர்கின்றதே.

[9]
அளவியை யார்க்கு மறிவரி
   யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
   கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
   தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
   யார்வாயிற் கேட்கின்றதே.

[10]
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
   பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
   யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
   தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
   காள்நும் அகன்பணையே.

[11]
சிந்தா மணிதெண் கடலமிர்
   தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
   மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
   யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
   வாட்டந் திருத்துவதே.

[12]
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
   பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
   சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
   நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
   அறியே னயர்கின்றதே.

[13]
தேவரிற் பெற்றநஞ் செல்வக்
   கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
   பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
   பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
   வாடிப் புலம்புவதே.

[14]
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
   யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
   யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
   பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
   மேய்க்குங் கனங்குழையே.

[15]
தெளிவளர் வான்சிலை செங்கனி
   வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
   யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
   கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
   னேவந்து தோன்றுவனே.

[16]
புணர்ப்போன் நிலனும் விசும்பும்
   பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
   லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
   னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
   அறியேன் புகுந்ததுவே.

[17]
உயிரொன் றுளமுமொன் றொன்றே
   சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
   நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
   தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
   லாகும் பணிமொழிக்கே.

[18]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.202  
இரண்டாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

பூங்கனை யார்புனற் றென்புலி
   யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
   பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
   கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
   பாவையை யெய்துதற்கே.

[1]
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
   பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
   ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
   யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
   லாம்புகுந் தெய்தியதே.

[2]
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
   குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
   தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
   நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
   னாற்ற லகற்றியதே.

[3]
உளமாம் வகைநம்மை யுய்யவந்
   தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
   தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
   நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
   மண்ண லிரங்கியதே.

[4]
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
   தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
   கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
   யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
   மென்றோட் கரும்பினையே.

[5]
விலங்கலைக் கால்விண்டு மேன்மே
   லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
   காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
   தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
   லுள்ளந் துயர்கின்றதே.

[6]
தலைப்படு சால்பினுக் குந்தள
   ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
   தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
   றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
   வுற்று மயங்கினனே.

[7]
நல்வினை யும்நயந் தந்தின்று
   வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
   பாமென்று பாங்கன்சொல்லவில்வினை மேருவில் வைத்தவன்
   தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
   தாருயிர் துப்புறவே.

[8]
ஆலத்தி னாலமிர் தாக்கிய
   கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
   வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
   மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
   தொழிவதென் தீவினையே.

[9]
நின்னுடை நீர்மையும் நீயு
   மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
   தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
   ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
   னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

[10]
விழியாற் பிணையாம் விளங்கிய
   லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
   னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
   கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
   லாமெங் குலதெய்வமே.

[11]
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
   தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
   காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
   வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
   நண்ணும் பளிக்கறையே.

[12]
கொடுங்கால் குலவரை யேழேழ்
   பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
   நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
   லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
   நீழலந் தண்புனத்தே.

[13]
வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
   இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
   சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
   ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
   ளேஅப் பணிமொழியே.

[14]
குவளைக் களத்தம் பலவன்
   குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
   றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
   தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
   யானிக் கடலிடத்தே.

[15]
பணந்தா ழரவரைச் சிற்றம்
   பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
   யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
   பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
   டேனொன்று நின்றதுவே.

[16]
கயலுள வேகம லத்தலர்
   மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
   நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
   பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
   தூங்கிப் புரள்வனவே.

[17]
எயிற்குல மூன்றிருந் தீயெய்த
   வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
   வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
   கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
   வென்னுடை மன்னுயிரே.

[18]
ஆவியன் னாய்கவ லேல்அக
   லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
   ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
   சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
   லாயத் தருவரையே.

[19]
காம்பிணை யாற்களி மாமயி
   லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
   லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
   கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
   தோன்றுமென் சிந்தனைக்கே.

[20]
நேயத்த தாய்நென்ன லென்னைப்
   புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
   காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
   தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
   நின்றதென் மன்னுயிரே.

[21]
தாதிவர் போதுகொய் யார்தைய
   லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
   சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
   லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
   தான்மலை யெய்துதற்கே.

[22]
காவிநின் றேர்தரு கண்டர்வண்
   தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
   றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
   வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
   கேயின் றழிகின்றதே.

[23]
அகலிடந் தாவிய வானோ
   னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
   ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
   நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
   வாய்தரு பூங்கொடியே.

[24]
தாழச்செய் தார்முடி தன்னடிக்
   கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
   தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
   புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
   புதைநின்னை வாணுதலே.

[25]
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
   கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
   மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
   பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
   மெழுகொத் தழிகின்றதே.

[26]
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
   கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
   லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
   ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
   காள்கொண்டை சார்வதுவே.

[27]
நீங்கரும் பொற்கழற் சிற்றம்
   பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
   மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
   தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
   மாட்கொண்ட கொங்கைகளே.

[28]
சூளா மணியும்பர்க் காயவன்
   சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
   ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
   பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
   லாயம் நணுகுகவே.

[29]
பொய்யுடை யார்க்கரன் போலக
   லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
   போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
   பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
   காக்கும்பைம் பூம்புனமே.

[30]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.203  
மூன்றாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

என்னறி வால்வந்த தன்றிது
   முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
   தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
   பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
   மின்றோய் பொழிலிடத்தே.

[1]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.204  
நான்காம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

எளிதன் றினிக்கனி வாய்வல்லி
   புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
   பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
   செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
   வாழி யறிவிப்பனே.

[1]
குவளைக் கருங்கட் கொடியே
   ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
   தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
   பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
   னேயினிச் சொல்லுவனே.

[2]
இருங்களி யாயின் றியானிறு
   மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
   லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
   மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
   டோவரக் கண்டதுவே.

[3]
கருங்கண் ணனையறி யாமைநின்
   றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
   வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
   புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
   தீங்கொரு வான்கலையே.

[4]
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
   பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
   தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
   கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
   குரைமின்கள் சென்னெறியே.

[5]
ஒருங்கட மூவெயி லொற்றைக்
   கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
   கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
   கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
   யோவிங்கு வாழ்பவர்க்கே.

[6]
தாரென்ன வோங்குஞ் சடைமுடி
   மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
   றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
   வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
   யீர்ங்குழற் பேதையரே.

[7]
இரத முடைய நடமாட்
   டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
   யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
   பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
   திறக்கிற் சலக்கென்பவே.

[8]
வின்னிற வாணுதல் வேனிறக்
   கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
   றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
   வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
   மணிநிறப் பூந்தழையே.

[9]
கலைக்கீ ழகலல்குற் பாரம
   தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
   றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
   பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
   எதுநுங்கள் சிற்றிடையே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.205  
ஐந்தாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

பல்லில னாகப் பகலைவென்
   றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
   வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
   வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
   வானிச் சுனைப்புனமே.

[1]
ஆழமன் னோவுடைத் திவ்வையர்
   வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
   தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
   வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
   கழிந்தது வந்துவந்தே.

[2]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.206  
ஆறாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

நிருத்தம் பயின்றவன் சிற்றம்
   பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
   மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
   தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
   மெல்லியல் வாடியதே.

[1]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.207  
ஏழாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

மடுக்கோ கடலின் விடுதிமி
லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.

[1]
அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
   லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
   நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
   யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
   தோன்று மொளிமுகத்தே.

[2]
பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
   செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
   றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
   பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
   முள்ளந் தழைத்திடுமே.

[3]
மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
   மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
   திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
   வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
   தேனுண் டெழிறருமே.

[4]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.208  
எட்டாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

மைவார் கருங்கண்ணி செங்கரங்
   கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
   பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
   றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
   வெள்ளைச் சிறுபிறைக்கே.

[1]
அக்கின்ற வாமணி சேர்கண்டன்
   அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
   செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
   றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
   காகுமுனக்கவளே.

[2]
செந்நிற மேனிவெண் ணீறணி
   வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
   லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
   தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
   குடைவ னிருஞ்சுனையே.

[3]
பருங்கண் கவர்கொலை வேழப்
   படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
   தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
   விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
   றோமற்றவ் வான்சுனையே.

[4]
காகத் திருகண்ணிற் கொன்றே
   மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
   யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
   லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
   வருமின்பத் துன்பங்களே.

[5]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.209  
ஒன்பதாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

ஆவா விருவ ரறியா
   அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
   றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
   தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
   வாறின்றொ ராண்டகையே.

[1]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.210  
பத்தாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

பொருளா வெனைப்புகுந் தாண்டு
   புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
   சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
   செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
   தழியுமென் னாருயிரே.

[1]
காய்சின வேலன்ன மின்னியல்
   கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
   தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
   மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
   சீறூர்ப் பனைமடலே.
[2]
விண்ணை மடங்க விரிநீர்
   பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
   காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
   பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
   பண்ணிற்றொர் பெண்கொடியே.

[3]
கழிகின்ற வென்னையும் நின்றநின்
   கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
   கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
   பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
   தெருவிடைப் போதுவனே.

[4]
நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
   நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
   மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
   முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
   தோமன்ன இன்னருளே.

[5]
அடிச்சந்த மால்கண் டிலாதன
   காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
   னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
   கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
   வோநும் பரிசகத்தே.

[6]
யாழு மெழுதி யெழின்முத்
   தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
   தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
   தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
   டேற்கொண்டு போதுகவே.

[7]
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
   திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
   இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
   வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
   செய்க அறிந்தனவே.

[8]
பைந்நா ணரவன் படுகடல்
   வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
   புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
   அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
   லாட்கென்க ணின்னருளே.

[9]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.211  
பதினொன்றாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
   வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
   யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
   வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
   வார்குழ லேந்திழையே.

[1]
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
   மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
   ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
   பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
   னொருவனித் தேம்புனமே.

[2]
நீகண் டனையெனின் வாழலை
   நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
   ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
   கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
   றானப் பெருந்தகையே.

[3]
சங்கந் தருமுத்தி யாம்பெற
   வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
   பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
   னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
   வானவன் நேர்வருமே.

[4]
புரங்கடந் தானடி காண்பான்
   புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
   னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
   றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
   முன்றிலம் மாயவனே.

[5]
உள்ளப் படுவன வுள்ளி
   யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
   யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
   அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
   தறிவிலென் கூற்றுக்களே.

[6]
மேவியந் தோலுடுக் குந்தில்லை
   யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
   னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
   பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
   லேறக்கொல் பாவித்ததே

[7]
பொன்னார் சடையோன் புலியூர்
   புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
   றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
   னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
   நீர்மை இனியவர்க்கே.

[8]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.212  
பன்னிரண்டாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

தேமென் கிளவிதன் பங்கத்
   திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
   ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
   செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
   வோமுற்றக் கற்றதுவே.

[1]
ஆரத் தழையராப் பூண்டம்
   பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
   றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
   லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
   ரெனவரும் ஐயுறவே.

[2]
முன்றகர்த் தெல்லா விமையோரை
   யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
   தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
   ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
   மூடுமென் றெள்குதுமே.

[3]
யாழார் மொழிமங்கை பங்கத்
   திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
   தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
   வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
   சிலம்ப தருந்தழையே.

[4]
எழில்வா யிளவஞ்சி யும்விரும்
   பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
   தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
   றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
   தில்லையிப் பூந்தழையே.

[5]
உறுங்கண்ணி வந்த கணையுர
   வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
   வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
   வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
   நாணுமிக் குன்றிடத்தே.

[6]
நறமனை வேங்கையின் பூப்பயில்
   பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
   யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
   டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
   பலவன் நெடுவரையே .

[7]
கற்றில கண்டன்னம் மென்னடை
   கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
   பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
   ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
   யூரன்ன பூங்கொடியே.

[8]
முனிதரு மன்னையும் மென்னையர்
   சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
   குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
   பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
   றான்சுடர்க் கொற்றவனே.

[9]
அந்தியின் வாயெழி லம்பலத்
   தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
   பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
   சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
   மொழிசென்றம் மொய்குழற்கே.

[10]
தெங்கம் பழங்கமு கின்குலை
   சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
   நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
   குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
   சிறுமியெந் தேமொழியே.

[11]
சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
   றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
   எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
   கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
   கையிற் கொடுஞ்சிலையே.

[12]
மைத்தழை யாநின்ற மாமிடற்
   றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
   போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
   வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
   பாவம் பெரியவரே.

[13]
அக்கும் அரவும் அணிமணிக்
   கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
   வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
   ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
   யாத வியல்பினவே.

[14]
உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே.

[15]
பண்டா லியலு மிலைவளர்
   பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
   லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
   துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
   கொல்லோ கருதியதே.

[16]
மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
   வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
   றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
   தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
   றோஎன் விழுத்துணையே.

[17]
விண்ணிறந் தார்நிலம் விண்டவ
   ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
   தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
   சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
   தோமன்ன நின்னருளே.

[18]
குவவின கொங்கை குரும்பை
   குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
   கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
   சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
   கின்ற தொளிமுகமே.

[19]
ஈசற் கியான்வைத்த வன்பி
   னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
   யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
   தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
   நீளம் பெருங்கண்களே.

[20]
தோலாக் கரிவென்ற தற்குந்
   துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
   யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
   லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
   நீதந்த கொய்தழையே.

[21]
கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
   யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
   காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
   நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
   யேன் சொல்லும் ஈடவற்கே.

[22]
தவளத்த நீறணி யுந்தடந்
   தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
   யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
   கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
   பார்குழல் தூமொழியே.

[23]
ஏறும் பழிதழை யேற்பின்மற்
   றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
   யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
   மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
   யாஞ்செய்வ தேந்திழையே.

[24]
தெவ்வரை மெய்யெரி காய்சிலை
   யாண்டென்னை யாண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம்
   பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
   டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
   திற்றந்த ஈர்ந்தழையே.

[25]
பாசத் தளையறுத் தாண்டுகொண்
   டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
   தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
   மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
   தனவில்லை பூந்தழையே.

[26]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.213  
பதின்மூன்றாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

[1]
புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.

[2]
தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.

[3]
நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கர்
தடமலர் கொண்டுவந்தே.

[4]
படமா சுணப்பள்ளி யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே.

[5]
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின் 9;
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே.

[6]
அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

[7]
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.

[8]
கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
   பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
   தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
   சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
   சேர்க திருத்தகவே.

[9]
பொன்னனை யான்தில்லைப் பொங்கர
   வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
   போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
   யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
   தாழ்குழற் கேய்வனவே.

[10]
அறுகால் நிறைமல ரைம்பால்
   நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
   லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
   வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
   யூரன்ன வொண்ணுதலே.

[11]
தழங்கு மருவியெஞ் சீறூர்
   பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
   டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
   டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
   தில்லை மணிநகர்க்கே.

[12]
தள்ளி மணிசந்த முந்தித்
   தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
   பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
   யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
   போன்ற வனமுலையே.

[13]
மாடஞ்செய் பொன்னக ரும்நிக
   ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
   பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
   தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
   றோநின்று கூறுவதே.

[14]
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
   கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
   சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
   அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
   காவலித் தாழ்வரையே.

[15]
மன்னுந் திருவருந் தும்வரை
   யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
   வாடு திரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
   சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
   னென்னப் புலம்புவனே.

[16]
பனித்துண்டஞ் சூடும் படர்சடை
   அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
   கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
   பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
   கென்றஞ்சு மெம்மனையே.

[17]
ஈவிளை யாட நறவிளை
   வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
   நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
   அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
   யாடி திருமலைக்கே.

[18]
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
   பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
   பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
   யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
   பகர்பெரு வார்த்தைகளே.

[19]
வழியும் அதுவன்னை யென்னின்
   மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
   னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
   றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
   வென்னோ கிளக்கின்றதே.

[20]
படையார் கருங்கண்ணி வண்ணப்
   பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
   ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
   டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
   போலு முருவினதே.

[21]
உருப்பனை அன்னகைக் குன்றொன்
றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.

[22]
மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே.

[23]
வடிவார் வயற்றில்லை யோன்மல
   யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
   தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
   யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
   பெருமஇத் தண்புனமே.

[24]
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
   திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
   மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
   றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
   தாகி விளைந்ததுவே.

[25]
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.

[26]
வழுவா இயலெம் மலையர்
   விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
   லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
   பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
   தாவதித் தொல்புனத்தே.

[27]
பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
   புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
   மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
   கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
   தின்றிக் கடிப்புனமே.

[28]
பரிவுசெய் தாண்டம் பலத்துப்
   பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
   கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
   பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
   காட்டு மிளங்கிளியே.

[29]
கணியார் கருத்தின்று முற்றிற்
   றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
   டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
   அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
   நீர்மைகள் சொல்லுமினே.

[30]
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
   புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
   வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
   றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
   வாமற்றிவ் வான்புனமே.

[31]
ஆனந்த மாக்கட லாடுசிற்
   றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
   ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
   அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
   தளர்ந்தனை நன்னெஞ்சமே.

[32]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.214  
பதினென்காம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

மருந்துநம் மல்லற் பிறவிப்
   பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
   அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
   தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
   ரதனுக்கு வெள்வளையே. 9;

[1]
விசும்பினுக் கேணி நெறியன்ன
   சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
   தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
   கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
   மலயத்தெம் வாழ்பதியே.

[2]
மாற்றே னெனவந்த காலனை
   யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
   கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
   போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
   நீவைத்த அன்பினுக்கே.

[3]
கூளி நிரைக்கநின் றம்பலத்
   தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
   யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
   தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
   னுரைப்பதென் மெல்லியற்கே.

[4]
வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே.

[5]
செம்மல ராயிரந் தூய்க்கரு
   மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
   தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
   தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
   வாய்நும ராடுவதே.

[6]
பனைவளர் கைம்மாப் படாத்தம்
   பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
   மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
   தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
   றாடுஞ் செழும்பொழிலே.

[7]
மலவன் குரம்பையை மாற்றியம்
   மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
   கானலிற் சீர்ப்பெடைய
ோடலவன் பயில்வது கண்டஞர்
   கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
   தாங்கொன்மன் சேர்துயிலே

[8]
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
   தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
   வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
   நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
   வான்சொல்லு மெல்லியலே.

[9]
செழுங்கார் முழவதிர் சிற்றம்
   பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
   வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
   வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
   மோவின்றெம் வள்ளலையே.

[10]
ஓங்கு மொருவிட முண்டம்
   பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
   வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
   றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
   யேன்சொல்லும் வாசகமே.

[11]
ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
   கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
   செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
   மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
   யுறார்செல்லுஞ் செல்லல்களே.

[12]
முன்னு மொருவ ரிரும்பொழில்
   மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
   தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
   தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
   பேரும் மயிலினமே.

[13]
கூடார் அரண்எரி கூடக்
   கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
   னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
   யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
   நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.

[14]
விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
   கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
   தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
   றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
   வாழுங் கருங்குழலே.

[15]
நந்தீ வரமென்னும் நாரணன்
   நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
   யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
   இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
   வீயுந் தருகுவனே.

[16]
காமரை வென்றகண் ணோன்தில்லைப்
   பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
   வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
   சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
   வைகி நயந்ததுவே.

[17]
அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
   வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
   தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
   தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
   மாக்கும் புணர்முலையே.

[18]
அழுந்தேன் நரகத் தியானென்
   றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
   புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
   மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
   வானத் திளமதியே.

[19]
சுரும்புறு நீலங் கொய்யல்
   தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
   நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
   வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
   பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.

[20]
நற்பகற் சோமன் எரிதரு
   நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
   திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
   தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
   நாடஇக் கல்லதரே.

[21]
பைவா யரவரை அம்பலத்
   தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
   தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
   யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
   தென்றுமென் இன்னுயிரே.

[22]
பைவா யரவும் மறியும்
   மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
   தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
   சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
   நீண்முத்த மாலைகளே.

[23]
நாகந் தொழவெழில் அம்பலம்
   நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
   யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
   நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
   வாய்த்தநின் நாயகமே.

[24]
மின்னங் கலருஞ் சடைமுடி
   யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
   தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
   வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
   துயிலா தழுங்கினவே.

[25]
சோத்துன் னடியமென் றோரைக்
   குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
   யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
   மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி

   நோக்காய் பெருங்கடலே.

[26]
மாதுற்ற மேனி வரையுற்ற
   வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
   காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
   மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
   வோநன்மை செப்புமினே.

[27]
இன்னற வார்பொழிற் றில்லை
   நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
   லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
   துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
   ஞாளி குரைதருமே.

[28]
தாருறு கொன்றையன் தில்லைச்
   சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
   நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
   அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
   பாற்றன்று தூங்கிருளே.

[29]
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
   தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
   புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
   லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
   யேற்கொரு வாசகமே.

[30]
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
   பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
   னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
   வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
   ளோமங்கை வாழ்வகையே.

[31]
பூங்கணை வேளைப் பொடியாய்
   விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
   விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
   கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
   ரோசென் றகன்றவரே.

[32]
அலரா யிரந்தந்து வந்தித்து
   மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
   தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
   தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
   மிக்கைய மெய்யருளே.

[33]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.215  
பதினைந்தாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

புகழும் பழியும் பெருக்கிற்
   பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
   லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
   யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
   யாம்பழி சின்மொழிக்கே.

[1]
ஆரம் பரந்து திரைபொரு
   நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
   தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
   ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
   சிறந்தார்க்குஞ் செறிகடலே.

[2]
பாணிகர் வண்டினம் பாடப்பைம்
   பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
   னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
   றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
   யூர்சுற்றும் போர்க்கடலே.

[3]
பகன்தா மரைக்கண் கெடக்கடந்
   தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
   நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
   புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
   லோநம் மகன்றுறையே.

[4]
உள்ளு முருகி யுரோமஞ்
   சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
   தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
   தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
   ஆர்க்கும் பொருகடலே.

[5]
ஆழி திருத்தும் புலியூ
   ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
   நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
   கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
   யோவுள்ளம் வள்ளலையே

[6]
கார்த்தரங் கந்திரை தோணி
   சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
   துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
   பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
   மாறென்கொ லாழ்சுடரே.

[7]
பகலோன் கரந்தனன் காப்பவர்
   சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
   யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
   சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
   மீனுண்ட அன்னங்களே.

[8]
பொன்னும் மணியும் பவளமும்
   போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
   விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
   பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
   தேரும்வண் டானங்களே. 9;

[9]
கருங்கழி காதற்பைங் கானலில்
   தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
   செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
   றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
   கூப்பும் மலர்க்கைகளே.

[10]
மூவல் தழீஇய அருண்முத
   லோன் தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
   துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
   யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
   தளிய களியன்னமே.

[11]
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
   கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
   மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
   றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
   யான்இன் றிரக்கின்றதே.

[12]
வளருங் கறியறி யாமந்தி
   தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
   பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
   மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
   யூரன்ன வொண்ணுதலே.

[13]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.216  
பதினாறாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

ஒராக மிரண்டெழி லாயொளிர்
   வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
   தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
   மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
   யேயெம ரெண்ணுவதே.

[1]
மணியக் கணியும் அரன்நஞ்ச
   மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
   தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
   துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
   மேன்மே லயலவரே.

[2]
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
   மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
   ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
   நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
   தழங்கும் மணமுரசே.

[3]
எலும்பா லணியிறை யம்பலத்
   தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
   கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
   கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
   யென்நீ கருதுவதே.

[4]
விசும்புற்ற திங்கட் கழும்மழப்
   போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
   கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
   றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
   தளர்கின்ற நன்னெஞ்சமே.

[5]
மைதயங் குந்திரை வாரியை
   நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
   ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
   லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
   யும்மல்குற் பைந்தொடியே.

[6]
மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
   பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
   கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
   தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
   தாளின்றென் பைந்தொடியே.

[7]
மெல்லியல் கொங்கை பெரியமின்
   நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
   தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
   கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
   சேய்த்தெம் அகல்நகரே.

[8]
பிணையுங் கலையும்வன் பேய்த்தே
   ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
   அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
   யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
   டேகினெம் பைந்தொடிக்கே.

[9]
இங்கய லென்னீ பணிக்கின்ற
   தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
   லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
   நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
   கண்ணித் திருநுதலே.

[10]
தாயிற் சிறந்தன்று நாண்தைய
   லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
   கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
   தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
   சிறந்த மதிநுதலே.

[11]
குறப்பாவை நின்குழல் வேங்கையம்
   போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
   வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
   வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
   னத்தகும் பெற்றியரே.

[12]
நிழற்றலை தீநெறி நீரில்லை
   கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
   னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
   கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
   பாகும்நங் கொற்றவர்க்கே.

[13]
காயமும் ஆவியும் நீங்கள்சிற்
   றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
   லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
   கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
   போக்குத் துணிவித்தவே.

[14]
மற்பாய் விடையோன் மகிழ்புலி
   யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
   விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
   பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
   வாழி எழுமையுமே.

[15]
கம்பஞ் சிவந்த சலந்தரன்
   ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
   கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
   நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
   கும்மலர்ச் சீறடிக்கே.

[16]
முன்னோன் மணிகண்ட மொத்தவன்
   அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
   தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
   னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
   யாம்விழை பொங்கிருளே.

[17]
பனிச்சந் திரனொடு பாய்புனல்
   சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
   யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
   போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
   லாம்புகுந் தெய்துவதே.

[18]
வைவந்த வேலவர் சூழ்வரத்
   தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
   முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
   மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
   துயிலுமிம் மூதெயிலே.

[19]
பறந்திருந் தும்பர் பதைப்பப்
   படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
   னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
   தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
   வற்றுமிச் சேணிலத்தே.

[20]
ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
   நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
   நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
   சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
   சேர்க திருத்தகவே.

[21]
பேணத் திருத்திய சீறடி
   மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
   யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
   சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
   னாமன்னு கானங்களே.

[22]
கொடித்தேர் மறவர் குழாம்வெங்
   கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
   வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
   நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
   விண்தோய் கனவரையே.

[23]
முன்னோ னருள்முன்னும் உன்னா
   வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
   கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
   தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
   மாடுசிற் றம்பலமே.

[24]
விடலையுற் றாரில்லை வெம்முனை
   வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
   மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
   தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
   இன்றிக் கடுஞ்சுரமே.

[25]
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
   ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
   பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
   தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
   போன்றொளிர் நாடகமே.

[26]
கண்கடம் மாற்பயன் கொண்டனங்
   கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
   பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
   மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
   கானகந் தண்ணெனவே.

[27]
மின்றங் கிடையொடு நீவியன்
   தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
   தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
   வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
   சூழ்தரு சேண்நகரே.

[28]
மின்போல் கொடிநெடு வானக்
   கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
   காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
   சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
   தோன்றுநன் னீணகரே.

[29]
செய்குன் றுவைஇவை சீர்மலர்
   வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
   பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
   உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
   வற்கிடம் ஏந்திழையே.

[30]
மயிலெனப் பேர்ந்திள வல்லியி
   னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
   குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
   தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
   கொலாமின் றயர்கின்றதே.

[31]
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
   யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
   மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
   ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
   லாயத்தெம் வாணுதலே.

[32]
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
   தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
   பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
   அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
   யாவன எம்மனைக்கே.

[33]
முறுவல்அக் கால்தந்து வந்தென்
   முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
   லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
   சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
   வானா மொளியிழையே.

[34]
தாமே தமக்கொப்பு மற்றில்
   லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
   பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
   கானிற் சிலம்படிபாய்
ஆமே நடக்க அருவினை
   யேன்பெற்ற அம்மனைக்கே.

[35]
தழுவின கையிறை சோரின்
   தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
   பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
   பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
   யாலுற்றுத் தேய்வித்ததே.

[36]
யாழியன் மென்மொழி வன்மனப்
   பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
   துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
   றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
   யாரின் அருஞ்சுரமே.

[37]
கொன்னுனை வேல்அம் பலவற்
   றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
   சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
   ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
   னுள்ளத்தை யீர்கின்றதே.

[38]
பெற்றே னொடுங்கிள்ளை வாட
   முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
   தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
   தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
   தேன்சுடர் வானவனே.

[39]
வைம்மலர் வாட்படை யூரற்குச்
   செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
   லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
   றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
   பதைக்குமெங் கார்மயிலே.

[40]
வேயின தோளி மெலியல்விண்
   ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
   தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
   ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
   நாடுவன் பொன்னினையே.

[41]
பணங்களஞ் சாலும் பருவர
   வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
   இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
   நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
   சேட்டைக் குலக்கொடியே.

[42]
முன்னுங் கடுவிட முண்டதென்
   தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
   கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
   தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
   நான்மறை யுத்தமரே.

[43]
தெள்வன் புனற்சென்னி யோன்அம்
   பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
   செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
   யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
   யென்று கருதுவனே.

[44]
பாலொத்த நீற்றம் பலவன்
   கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
   பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
   இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
   மாணிழை கால்மலரே.

[45]
பேதைப் பருவம் பின்சென்
   றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
   பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
   றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
   பற்குரற் பொற்றொடியே.

[46]
புயலன் றலர்சடை ஏற்றவன்
   தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
   போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
   வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
   வாழி எழிற்புறவே.

[47]
பாயும் விடையோன் புலியூ
   ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
   கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
   வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
   நிலாவிடும் நீள்குரவே.

[48]
சுத்திய பொக்கணத் தென்பணி
   கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
   யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
   மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
   மோவொர் பெருந்தகையே.

[49]
வெதிரேய் கரத்துமென் தோலேய்
   சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
   வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
   எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
   வெறுப்பவொ ரேந்தலொடே.

[50]
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
   நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
   ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
   னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
   யோஅன்னை சொல்லியதே.

[51]
பூங்கயி லாயப் பொருப்பன்
   திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
   திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
   மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
   திண்டிற லாண்டகையே.
[52]
மின்றொத் திடுகழல் நூபுரம்
   வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
   றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
   றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
   நீசொன்ன கொள்கையரே.

[53]
மீள்வது செல்வதன் றன்னையிவ்
   வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
   னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
   நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
   னெல்லை யணுகுவரே.

[54]
சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
   முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
   யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
   சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
   நீர்மையர் காணுநர்க்கே.

[55]
ஆண்டி லெடுத்தவ ராமிவர்
   தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
   தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
   டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
   கீழும் பழனங்களே.

[56]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.217  
பதினேழாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

எழுங்குலை வாழையின் இன்கனி
   தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
   துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
   பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
   னோநின் னருள்வகையே.

[1]
பரம்பயன் தன்னடி யேனுக்குப்
   பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
   வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
   வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
   தோன்றுமிக் குன்றிடத்தே.

[2]
சிறார்கவண் வாய்த்த மணியிற்
   சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
   உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
   றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
   காத்தும் பெரும்புனமே.

[3]
கடந்தொறும் வாரண வல்சியின்
   நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
   நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
   பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
   நின்னருள் தோன்றுவதே.

[4]
களிறுற்ற செல்லல் களைவயிற்
   பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
   நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
   பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
   நீசெய்யும் மெய்யருளே.

[5]
கழிகட் டலைமலை வோன்புலி
   யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇஅரி
   யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
   கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
   துவளு மிவள்பொருட்டே.

[6]
விண்ணுஞ் செலவறி யாவெறி
   யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
   கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
   துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
   நோக்கினள் கார்மயிலே. 9;

[7]
வான்றோய் பொழிலெழின் மாங்கனி
   மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
   டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
   யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
   போலும் வரிவளையே. 9;

[8]
நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
   நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
   காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
   படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
   படாது கலங்கினவே.

[9]
கலரா யினர்நினை யாத்தில்லை
   அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
   தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
   மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
   யோநும் வரையிடத்தே.

[10]
இறவரை உம்பர்க் கடவுட்
   பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
   நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
   பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
   ராம்பக லுன்னருளே.

[11]
சுழியா வருபெரு நீர்சென்னி
   வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
   பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
   லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
   வேதும் பயனில்லையே.

[12]
மையார் கதலி வனத்து
   வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
   சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
   தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
   மாலையின் முன்னினவே.

[13]
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
   பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
   வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
   கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
   னாஞ்சொல்லுந் தன்மைகளே.

[14]
வல்சியி னெண்கு வளர்புற்
   றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
   பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
   வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
   பவர்ப்பெறிற் கார்மயிலே.

[15]
வாரிக் களிற்றின் மருப்புகு
   முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
   நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
   சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
   நீர்மையென் னெய்துவதே.

[16]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.218  
பதினெட்டாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
   நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
   ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
   தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
   யோமெய்ம்மை யோதுநர்க்கே.

[1]
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
   ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
   துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
   றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
   திரவின்நின் னாரருளே.

[2]
குன்றங் கிடையுங் கடந்துமர்
   கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
   மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
   வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
   வகைசெப்பு தேமொழியே.

[3]
கேழே வரையுமில் லோன்புலி
   யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
   னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
   கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
   யேகு தனிவள்ளலே.

[4]
வருட்டின் திகைக்கும் வசிக்கின்
   துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
   வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
   யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
   னேசொல்லி யேகுவனே.

[5]
நல்லாய் நமக்குற்ற தென்னென்
   றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
   பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
   தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
   றார்நம் சிறந்தவரே.

[6]
அருந்தும் விடமணி யாம்மணி
   கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
   னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
   வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
   யாமினி வாழ்வகையே.

[7]
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
   ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
   லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
   மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
   கொலாமின்று செய்கின்றதே.

[8]
கானமர் குன்றர் செவியுற
   வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
   மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
   மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
   செல்லல் திருநுதலே.

[9]
மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
   அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
   அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
   யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
   வாறென்ப ரேந்திழையே.

[10]
வந்தாய் பவரையில் லாமயில்
   முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
   நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
   தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
   நையுந் திருவினர்க்கே.

[11]
மொய்யென் பதேஇழை கொண்டவ
   னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
   சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
   புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
   லாமிவ் வியலிடத்தே.

[12]
மன்செய்த முன்னாள் மொழிவழியே
   அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
   லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
   யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
   நீர்மைகொல் மொய்குழலே.

[13]
கருந்தினை யோம்பக் கடவுட்
   பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
   பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
   தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
   காரென வெள்வளையே.

[14]
வென்றவர் முப்புரஞ் சிற்றம்
   பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
   கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
   தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
   தோன்றும் நிரைவளையே.

[15]
வருவன செல்வன தூதுகள்
   ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
   கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
   டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
   வானின் றிருக்கின்றதே.

[16]
வேயின மென்தோள் மெலிந்தொளி
   வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
   அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
   கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
   ளாம்இத் திருந்திழையே.

[17]
சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
   றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
   றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
   பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
   யாடுமின் அன்னையரே.

[18]
மாட்டியன் றேயெம் வயிற்பெரு
   நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
   வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
   லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
   யாதன வாய்திறந்தே.

[19]
குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
   கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
   இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
   காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
   றோன்று மவன்வடிவே.

[20]
வேலன் புகுந்து வெறியா
   டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
   வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
   னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
   நிற்பித்த பண்பினுக்கே.

[21]
அயர்ந்தும் வெறிமறி ஆவி
   செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
   பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
   தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
   ஆதுந் துறைவனுக்கே.

[22]
சென்றார் திருத்திய செல்லல்நின்
   றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
   தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
   லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
   உரைப்பனிக் கூர்மறையே.

[23]
யாயுந் தெறுக அயலவ
   ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
   கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
   இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
   தருவன் சுடர்க்குழையே.

[24]
வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
   தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
   போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
   எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
   றானொர் கழலவனே.

[25]
குடிக்கலர் கூறினுங் கூறா
   வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
   வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
   சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
   மறைக்கும் பரிசுகளே.

[26]
விதியுடை யாருண்க வேரி
   விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
   பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
   வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
   கொல்இனி வையகத்தே.

[27]
மனக்களி யாய்இன் றியான்மகிழ்
   தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
   தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
   ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
   சாரற் பொருப்பிடத்தே.

[28]
இளையா ளிவளையென் சொல்லிப்
   பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
   தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
   சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
   லைப்பயில் செல்வியையே.

[29]
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
   யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
   யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
   மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
   தேரின்று மெல்லியலே.

[30]
பூரண பொற்குடம் வைக்க
   மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
   ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
   லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
   றேங்கும் மணமுரசே.

[31]
அடற்களி யாவர்க்கு மன்பர்க்
   களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
   றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
   கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
   ரார்க்கும் வியன்முரசே.

[32]
என்கடைக் கண்ணினும் யான்பிற
   வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
   சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
   கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
   தோன்றும் முழுநிதியே.

[33]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.219  
பத்தொன்பதாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

பிரசந் திகழும் வரைபுரை
   யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
   நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
   பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
   தீரப் புகுந்துநின்றே.

[1]
இருந்துதி யென்வயிற் கொண்டவன்
   யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
   யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
   முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
   சிலம்பன் அருந்தழையே

[2]
சீரியல் ஆவியும் யாக்கையும்
   என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
   லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
   தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
   வணங்குமெங் காவலரே.

[3]
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
   லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
   நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
   யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
   ளயல்மன்னும் இவ்வயலே.

[4]
பொட்டணி யான்நுதல் போயிறும்
   பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
   ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
   மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
   போலிதன் காதலனே.

[5]
தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
   சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
   நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
   வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
   பரிசின்ன பான்மைகளே.

[6]
சிற்பந் திகழ்தரு திண்மதில்
   தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
   பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
   கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
   லாதவ னீர்ங்களிறே.

[7]
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
   மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
   லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
   தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
   றோர்தெய்வ முன்னலளே.

[8]
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
   ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
   தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
   லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
   றாதிவ் வணிநலமே.

[9]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.220  
இருபதாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

சீரள வில்லாத் திகழ்தரு
   கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
   றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
   இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
   ராகுவ ரேந்திழையே.

[1]
வீதலுற் றார்தலை மாலையன்
   தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
   வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
   றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
   யுற்ற புரவலரே.

[2]
கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
   பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
   விரும்பலர் போலஅன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
   லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
   தாங்குக் குறுகியதே.

[3]
பிரியா மையுமுயி ரொன்றா
   வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
   சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
   பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
   யென்னாம் புகல்வதுவே.

[4]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.221  
இருபத்தொன்றாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

மூப்பான் இளையவன் முன்னவன்
   பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
   ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
   றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
   தாழ்குழற் பூங்கொடியே.

[1]
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
   குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
   தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
   யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
   வோவின்று சூழ்கின்றதே.

[2]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.222  
இருபத்திரண்டாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

மிகைதணித் தற்கரி தாமிரு
   வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
   றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
   டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
   தாழ்தரு மொய்குழலே.

[1]
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
   உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
   பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
   மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
   போலுந் திருநுதலே.

[2]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.223  
இருபத்திமூன்றாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

போது குலாய புனைமுடி
   வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
   றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
   லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின்
   றொன்னா ரிடுமதிலே.

[1]
பொன்னி வளைத்த புனல்சூழ்
   நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
   யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
   பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
   கவரும் வியன்முகிலே.

[2]
கோலித் திகழ்சிற கொன்றி
   னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
   சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
   யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
   தாங்கொலென் போதரவே.

[3]
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
   மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
   றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
   தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
   பார்க்கும் புயலினமே.

[4]
சுற்றின வீழ்பனி தூங்கத்
   துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
   பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
   புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
   பெறுமிம் மயங்கிருளே.

[5]
புரமன் றயரப் பொருப்புவில்
   லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
   சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
   வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
   மிக்க தமியருக்கே.

[6]
வாழும் படியொன்றுங் கண்டிலம்
   வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
   வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
   றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
   ளாநின்ற கோகிலமே.

[7]
பூண்பதென் றே கொண்ட பாம்பன்
   புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
   மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
   கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
   வாய்த்த பனிமுகிலே.

[8]
தெளிதரல் காரெனச் சீரனஞ்
   சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட
   மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன
   ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
   பாரித் தலர்ந்தனவே.

[9]
தேன்றிக் கிலங்கு கழலழல்
   வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
   கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
   போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
   யோமெய்யிற் றோன்றுவதே.

[10]
திருமா லறியாச் செறிகழல்
   தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
   போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
   திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
   தோன்றுநம் பொன்னகர்க்கே.

[11]
புயலோங் கலர்சடை ஏற்றவன்
   சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
   வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
   கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
   இன்றோர் திருமுகமே.

[12]
சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம்
   பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
   தேர்பிறங் கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினின்
   துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
   தேரும் எழில்நகர்க்கே.

[13]
அருந்தே ரழிந்தனம் ஆலமென்
   றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
   மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
   தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
   முழங்கேல் வளமுகிலே.

[14]
பணிவார் குழையெழி லோன்தில்லைச்
   சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
   பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
   சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
   மாவோ டணுகினரே.

[15]
கருங்குவ ளைக்கடி மாமலர்
   முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
   றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
   ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
   நீடிய வைகலுமே.

[16]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.224  
இருபத்திநான்காம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

முனிவரும் மன்னரும் முன்னுவ
   பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
   சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
   தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
   வந்திக்கும் நன்னுதலே.

[1]
வறியா ரிருமை யறியா
   ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
   றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன் தில்லைச்
   சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
   செவ்வாய்த் திருநுதலே.

[2]
சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
   சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
   எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
   அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
   றம்ம கொடியவளே.

[3]
வானக்கடிமதில் தில்லையெங்
   கூத்தனை ஏத்தலர் போற்
கானக் கடஞ்செல்வர் காதல
   ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
   கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
   இனிச்சென்று தேர்பொருளே.

[4]
சுருடரு செஞ்சடை வெண்சுட
   ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர்
   போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை
   யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை
   யேற்குப் புரவலரே.

[5]
மூவர்நின் றேத்த முதலவன்
   ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
   யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
   மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
   உரைப்பது பூங்கொடியே.

[6]
தென்மாத் திசைவசை தீர்தரத்
   தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
   யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்

   பூவணம் அன்னபொன்னேவன்மாக் களிற்றொடு சென்றனர்
   இன்றுநம் மன்னவரே.

[7]
ஆழியொன் றீரடி யும்மிலன்
   பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம்
   பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண்
   டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
   தேர்வந்து வைகுவதே.

[8]
பிரியாரென இகழ்ந்தேன் முன்னம்
   யான்பின்னை எற்பிரியின்
தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
   தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி
   லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
   என்னை யழிவித்தவே.

[9]
சேணுந் திகழ்மதிற் சிற்றம்
   பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
   திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
   லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
   தோன்றுமொர் பூங்கொடியே.

[10]
பொன்னணி யீட்டிய ஓட்டரும்
   நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
   தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
   ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
   கோநீ விரைகின்றதே.

[11]
நாய்வயி னுள்ள குணமுமில்
   லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
   பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
   பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
   தக்க துன் சிக்கனவே.

[12]
தீமே வியநிருத் தன்திருச்
   சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
   தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
   யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
   தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

[13]
தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே.

[14]
சுற்றம் பலமின்மை காட்டித்தன்
   தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
   மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
   பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
   லாநின்ற கூர்ஞ்செக்கரே.

[15]
கண்ணுழை யாதுவிண் மேகங்
   கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
   றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
   மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
   ளாங்கொல்மன் பாவியற்கே.

[16]
அற்படு காட்டில்நின் றாடிசிற்
   றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
   னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
   தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
   ராநிற்கும் நீள்நகர்க்கே.

[17]
பாவியை வெல்லும் பரிசில்லை
   யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
   போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
   னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
   தேர்வந்து மேவினதே.

[18]
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
   றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
   ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
   ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
   தேர்வந்து தோன்றியதே.

[19]
மயின்மன்னு சாயலிம் மானைப்
   பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
   லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
   அங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
   யாமுன் துவளுற்றதே.

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.225  
இருபத்தைந்தாம் அதிகாரம்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )

உடுத்தணி வாளர வன்தில்லை
   யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
   யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
   வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
   பற்றினர் மாதிரமே.

[1]
சுரும்புறு கொன்றையன் தொல்புலி
   யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
   பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
   றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
   தேய்வுற் றழிகின்றதே.

[2]
அப்புற்ற சென்னியன் தில்லை
   யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
   கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
   மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
   லாருயிர் தேய்பவரே.

[3]
தேவா சுரரிறைஞ் சுங்கழ
   லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
   நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
   தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
   தேனரும் பாவியனே.

[4]
செய்ம்முக நீல மலர்தில்லைச்
   சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
   யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
   பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
   கீழும் நெடுஞ்சுடரே.

[5]
பூங்குவ ளைப்பொலி மாலையும்
   ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
   கொள்கநள் ளார்அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
   சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
   தோமன் உறாவரையே.

[6]
தவஞ்செய் திலாதவெந் தீவினை
   யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
   நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
   யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
   தொடல்விடு நற்கலையே.

[7]
தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
   தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
   மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
   லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
   யார்கள் பயின்மனைக்கே.

[8]
இரவணை யும்மதி யேர்நுத
   லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
   ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
   யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
   வாறுநந் தன்மைகளே.

[9]
சிவந்தபொன் மேனி மணிதிருச்
   சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி யூரற்
   குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
   பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
   வந்து திருமனைக்கே.

[10]
குராப்பயில் கூழை யிவளின்மிக்
   கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
   காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
   யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
   புகுமிக் கடிமனைக்கே.

[11]
வந்தான் வயலணி யூர
   னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
   றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
   நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
   சூழ்ந்து பயின்றனவே.

[12]
வில்லிகைப் போதின் விரும்பா
   அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
   யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
   டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
   லூரற் கெதிர்கொண்டதே.

[13]
புலவித் திரைபொரச் சீறடிப்
   பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
   றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
   பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
   லாயின வூரனுக்கே.

[14]
செவ்வாய் துடிப்பக் கருங்கண்
   பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
   முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
   கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
   மெனநினைந் தின்னகையே.

[15]
மலரைப் பொறாவடி மானுந்
   தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
   றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித்
   தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
   கொல்லோ கருதியதே.

[16]
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
   கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
   யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
   பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
   யேதக்க வாய்மையனே.

[17]
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
   கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
   குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
   தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
   வாய்ந்த புதுப்புனலே.

[18]
சேயே யெனமன்னு தீம்புன
   லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
   தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
   பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
   தேர்வந்து மேவினதே.

[19]
அரமங் கையரென வந்து
   விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
   கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
   சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
   காத்துநம் பொற்பரையே.

[20]
கனலூர் கணைதுணை யூர்கெடச்
   செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
   றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
   லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
   லூர்கணப் பூங்கொடியே.

[21]
இறுமாப் பொழியுமன் றேதங்கை
   தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
   தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
   குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
   பொழிந்த இணைமுலையே.

[22]
வேயாது செப்பின் அடைத்துத்
   தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம்பலமனை
   யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
   கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
   பால வியல்புகளே.

[23]
விறலியும் பாணனும் வேந்தற்குத்
   தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
   றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
   மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
   யோமை யறிந்திலரே.

[24]
திக்கின் இலங்குதிண் டோளிறை
   தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
   றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
   அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
   வேலெந் தனிவள்ளலே.

[25]
அன்புடை நெஞ்சத் திவள்பே
   துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
   றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
   தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
   லூரன் வரம்பிலனே.

[26]
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
   பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
   யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
   நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
   டோவெம் பயோதரமே.

[27]
தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
   சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
   இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
   யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
   தேவரும் பான்மையளே.

[28]
தேன்வண் டுறைதரு கொன்றையன்
   சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
   மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
   தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
   வாறுகொ னண்ணுவதே.

[29]
கயல்வந்த கண்ணியர் கண்ணினை
   யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
   விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
   தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
   னாட்டுப் பொலிபவரே.

[30]
கூற்றாயினசின ஆளியெண்
   ணீர்கண்கள் கோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
   ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
   பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
   போதிர்அத் தேர்மிசையே.

[31]
வியந்தலை நீர்வையம் மெய்யே
   யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
   வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
   அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
   விருந்தினர் கார்மயிலே.

[32]
தேவியங் கண்திகழ் மேனியன்
   சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
   தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
   தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
   வௌவுதல் கற்றனவே.

[33]
உடைமணிகட்டிச் சிறுதே
   ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
   நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
   தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
   கண்டனர் காதலரே.

[34]
மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
   தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென்
   விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
   விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
   ஆத்தின்னி போந்ததுவே.

[35]
கொல்லாண் டிலங்கு மழுப்படை
   யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
   நெரியச் செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
   பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
   கொள்வன் பணிமொழியே.

[36]
மத்தக் கரியுரி யோன்தில்லை
   யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
   மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
   விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
   யோடிக் கெழுமினவே.

[37]
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
   காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
   னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
   துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
   பாலை யரசனுக்கே.

[38]
சேறான் திகழ்வயற் சிற்றம்
   பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
   வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
   மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
   தீண்டலெங் கைத்தலமே.

[39]
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
   பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
   லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
   மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
   அயிற்படைக் கொற்றவரே.

[40]
மின்றுன் னியசெஞ் சடைவெண்
   மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
   பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
   தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
   சாலுமன் னெங்களுக்கே.

[41]
செழுமிய மாளிகைச் சிற்றம்
   பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
   லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
   நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
   வாறு விரும்புவதே.

[42]
திருந்தேன் உயநின்ற சிற்றம்
   பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
   கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
   தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
   வருவதொர் வஞ்சனையே.

[43]
இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
   நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
   பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
   துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
   தேரும் அதரகத்தே.

[44]
கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
   மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
   தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
   யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
   எம்மைப் பூசிப்பதே.

[45]
சிலைமலி வாணுத லெங்கைய
   தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
   தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
   கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
   மாலை கலுழ்ந்தனவே.

[46]
ஆறூர் சடைமுடி அம்பலத்
   தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
   டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
   செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
   கங்குற் சிறிதுயிலே.

[47]
ஐயுற வாய்நம் அகன்கடைக்
   கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
   தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
   வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
   யூரன்ன காரிகையே.

[48]
காரணி கற்பகங் கற்றவர்
   நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
   தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
   தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
   றியாவர்க்கும் ஊதியமே.

[49]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai allsongs thirumurai 8