| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| Thirumurai |
|
1.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரவச் சடை மேல் மதி, பண் - தக்கராகம் (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1ag87KOK2-I |
|
7.087
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் பண் - சீகாமரம் (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=L0HnSKSQwqk |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.037  
அரவச் சடை மேல் மதி,
பண் - தக்கராகம் (திருத்தலம் திருப்பனையூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சவுந்தரேசர் திருவடிகள் போற்றி )
|
அரவச் சடை மேல் மதி, மத்தம், விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம் நிரவிப் பல தொண்டர்கள் நாளும் பரவிப் பொலியும் பனையூரே. | [1] |
|
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் கள் நின்று எழு சோலையில் வண்டு பண் நின்று ஒலி செய் பனையூரே. | [2] |
|
அலரும் எறி செஞ்சடை தன் மேல் மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் சிலர் என்றும் இருந்து அடி பேண, பலரும் பரவும் பனையூரே. | [3] |
|
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு பொடி ஆடிய மேனியினான் ஊர் அடியார் தொழ, மன்னவர் ஏத்த, படியார் பணியும் பனையூரே. | [4] |
|
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட, இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் பொறையார் மிகு சீர் விழ மல்க, பறையார் ஒலிசெய் பனையூரே. | [5] |
|
அணியார் தொழ வல்லவர் ஏத்த, மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் பணிவார் பயிலும் பனையூரே. | [6] |
|
அடையாதவர் மூ எயில் சீறும் விடையான், விறல் ஆர் கரியின் தோல் உடையான் அவன், ஒண் பலபூதப் படையான் அவன், ஊர் பனையூரே. | [7] |
|
இலகும் முடிபத்து உடையானை அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல், உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் பல கண்டவன், ஊர் பனையூரே. | [8] |
|
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்! சிரம் முன் அடி தாழ வணங்கும் பிரமனொடு மால் அறியாத பரமன் உறையும் பனையூரே! | [9] |
|
அழி வல் அமணரொடு தேரர் மொழி வல்லன சொல்லிய போதும், இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் பழி இல்லவர் சேர் பனையூரே. | [10] |
|
பார் ஆர் விடையான் பனையூர் மேல் சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் ஆராத சொல் மாலைகள் பத்தும் ஊர் ஊர் நினைவார் உயர்வாரே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.087  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்பனையூர் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சவுந்தரேசர் திருவடிகள் போற்றி )
புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், மாட மாளிகை எனறு திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுதார்.
நிறைய பண வரவு பொன் கிடைக்க
|
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே. | [1] |
|
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர், நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று, ஆறு சூட வல்லார் அவரே அழகியரே. | [2] |
|
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர், திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில் அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே. | [3] |
|
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள் பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர், தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே. | [4] |
|
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர, பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர், மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே. | [5] |
|
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப் பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர், மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்; ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே. | [6] |
|
மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர், துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று, அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே. | [7] |
|
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல், பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர், வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ- அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே. | [8] |
|
குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர, பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர், இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே. | [9] |
|
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில், பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர், வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன் செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே. | [10] |