![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் சுற்ற முந்துணை நன்மட வாளொடு மாடு தானது வில்லெனின் மாநுடர் தந்தை தாயொடு தார மெனுந்தளைப் கேளு மின்இள மைய்யது கேடுவந் வெம்பு நோயும் இடரும் வெறுமையும் அல்ல லோடரு நோயி லழுந்திநீர் நாறு சாந்தணி நன்முலை மென்மொழி அயிலார் அம்பெரி மேருவில் லாகவே நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=Fs6i7rvUFuw Add audio link
5.070
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.
1
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.
2
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.
3
பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே.
4
தீளை யோடிரு மல்லது எய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின் நன்காகுமே.
5
Go to top
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.
6
செல்லு மாநினை யாதே கனைகுரல்
கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.
7
மாறி லாமலை மங்கையொர் பாகமாக்
கூற னாருறை கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.
8
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.
9
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கொண்டீச்சரம்
4.067
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
Tune - திருநேரிசை
(திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.070
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
Tune - திருக்குறுந்தொகை
(திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000