பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த் திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப் பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும் அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.
|
1
|
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்டமூட நிலநின்றுதம்ப மதுவப் பரமொரு தெய்வமெய்த விதுவொப்பதில்லை யிருபாலுநின்று பணியப் பிரமனு மாலுமேலை முடியோடுபாத மறியாமைநின்ற பெரியோன் பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.
|
2
|
காலமு நாள்களூழி படையாமுனேக வுருவாகிமூவ ருருவில் சாலவு மாகிமிக்க சமயங்களாறி னுருவாகிநின்ற தழலோன் ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழுமுண்டு குறளாயொராலி னிலைமேல் பாலனு மாயவற்கொர் பரமாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.
|
3
|
நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலைகுன்றொ டுலகேழுமெங்கு நலியச் சூடிய கையராகி யிமையோர்கணங்கள் துதியோதிநின்று தொழலும் ஓடிய தாரகன்ற னுடலம்பிளந்தும் ஒழியாதகோப மொழிய ஆடிய மாநடத்தெ மனலாடிபாத மவையாநமக்கொர் சரணே.
|
4
|
நிலைவலி யின்றியெங்கு நிலனோடுவிண்ணு நிதனஞ்செய்தோடு புரமூன் றலைநலி வஞ்சியோடி யரியோடுதேவ ரரணம்புகத்த னருளால் கொலைநலி வாளிமூள வரவங்கைநாணு மனல்பாயநீறு புரமா மலைசிலை கையிலொல்க வளைவித்தவள்ள லவனாநமக்கொர் சரணே.
|
5
|
Go to top |
நீலநன் மேனிசெங்கண் வளைவெள்ளெயிற்ற னெரிகேச னேடிவருநாள் காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யு மளவின்கண்வந்து குறுகிப் பாலனை யோடவோடப் பயமெய்துவித்த வுயிர்வவ்வுபாசம் விடுமக் காலனை வீடுசெய்த கழல்போலுமண்டர் தொழுதோதுசூடு கழலே.
|
6
|
உயர்தவ மிக்கதக்க னுயர்வேள்விதன்னி லவியுண்ணவந்த விமையோர் பயமுறு மெச்சனங்கி மதியோனுமுற்ற படிகண்டுநின்று பயமாய் அயனொடு மாலுமெங்க ளறியாமையாதி கமியென்றிறைஞ்சி யகலச் சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணனெந்தை கழல்கண்டுகொள்கை கடனே.
|
7
|
நலமலி மங்கைநங்கை விளையாடியோடி நயனத்தலங்கள் கரமா உலகினை யேழுமுற்று மிருண்மூடமூட விருளோடநெற்றி யொருகண் அலர்தர வஞ்சிமற்றை நயனங்கைவிட்டு மடவாளிறைஞ்ச மதிபோல் அலர்தரு சோதிபோல வலர்வித்தமுக்க ணவனாநமக்கொர் சரணே.
|
8
|
கழைபடு காடுதென்றல் குயில்கூவவஞ்சு கணையோனணைந்து புகலும் மழைவடி வண்ணனெண்ணி மகவோனைவிட்ட மலரானதொட்ட மதனன் எழில்பொடி வெந்துவீழ விமையோர்கணங்க ளெரியென்றிறைஞ்சி யகலத் தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணனெந்தை சரணே.
|
9
|
தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால் உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும் சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே.
|
10
|
Go to top |
கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேலுன்வீர மொழிநீ முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் மொழிவானைநன்று முனியா விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள் நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத நினைவுற்றதென்றன் மனனே.
|
11
|