![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=05urhAg14Dg Add audio link
5.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை அருள்தரு பண்மொழியம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதேசுவரர் திருவடிகள் போற்றி
சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
1
பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவ னெம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.
2
ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.
3
தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
4
நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்
திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே.
5
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பாண்டிக்கொடுமுடி
2.069
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பெண் அமர் மேனியினாரும், பிறை
Tune - காந்தாரம்
(திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
5.081
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,
Tune - திருக்குறுந்தொகை
(திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000