![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: விநாயகர்
1 கைத்தல நிறைகனி 5 விடமடைசு வேலை 4 நினது திருவடி 3 உம்பர் தரு 2 பக்கரை விசித்ரமணி
1
விநாயகர் கைத்தல நிறைகனி தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=6fCbXguWkf8
https://www.youtube.com/watch?v=e20apr3gxBU
https://www.youtube.com/watch?v=QhE-mU-SMKA
Add (additional) Audio/Video Link
2
விநாயகர் பக்கரை விசித்ரமணி தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Lhj6ghafXYY
https://www.youtube.com/watch?v=6mLOwzq53qg
https://www.youtube.com/watch?v=yK_JWQUPnJs
Add (additional) Audio/Video Link
3
விநாயகர் உம்பர் தரு தந்ததனத் தானதனத் ...... தனதான
தந்ததனத் தானதனத் ...... தனதான
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cYTq6eNWt9Y
https://www.youtube.com/watch?v=Nv6wFyrbbn8
https://www.youtube.com/watch?v=z7lRRVRTRV8
Add (additional) Audio/Video Link
4
விநாயகர் நினது திருவடி தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன ...... தனதான
நினது திருவடி சத்தி மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்
நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ஒரு
மகர சலநிதி வைத்த துதி கர
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல
சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்
திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்
நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே
எனவெ துகு துகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=aebPk-sFlkY
https://www.youtube.com/watch?v=9PczKmx2YtA
https://www.youtube.com/watch?v=_6eaTKQOiyk
Add (additional) Audio/Video Link
5
விநாயகர் விடமடைசு வேலை தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7EU7LOBEbao
Add (additional) Audio/Video Link
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000