சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
111   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 152 )  

அறமிலா நிலை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனா தனதத்த தனதனா தனதத்த
     தனதனா தனதத்த ...... தனதான

அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
     ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
     யதிகமா வுதவிக்கை ...... வளையாலே
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
     ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
     ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும்
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
     மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
     மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
     பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
     பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
Easy Version:
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு
உள் அறிவு தான் அற வைத்து விலை பேசி
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா(க)
உதவி
கை வளையாலே உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்
கொள்
உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு உருகியே வரு பெற்றி
மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தர வேணும்
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோ கநகத்தி மயில் அ(ன்)னாள்
புணர் செச்சை மணி மார்பா
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வு உற மிக்க மயிலில்
ஏறிய உக்ர வடிவேலா
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால்
உறை சத்தி எமது ஆயி
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை
உற்ற பெருமாளே.
Add (additional) Audio/Video Link

அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு ... அறவழி
இல்லாத தொழிலைக் கற்று, கொடுமை பூண்ட வேலைப் போல் கூரிய
கண்ணைச் செலுத்தி,
உள் அறிவு தான் அற வைத்து விலை பேசி ... உள்ளத்தில்
அறிவு என்பதை நீக்கி, விலை பேசி,
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா(க)
உதவி
... படுக்கையின் மேல் சேர்த்து, தமது பவளம் போன்ற சிவந்த
வாய் அமுதத்தை அதிகமாகத் தந்து,
கை வளையாலே உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்
கொள்
... உறவு கூறிக் கொண்டு, வளைக் கையாலே உடலை இறுகத்
தழுவிக் கொண்டு,
உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு உருகியே வரு பெற்றி
மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தர வேணும்
...
உலையில் இட்ட மெழுகு போல் உருக்கம் காட்டும் விலைமாதர்களோடு
கூடி உருகி வருகின்ற ஒழுக்கம், காம நாடகம் என்கின்ற பித்த மயக்கம்
என்னை விட்டுத் தொலையுமாறு ஒப்பற்ற முக்தி இன்பத்தைத்
தரவேண்டும்.
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோ கநகத்தி மயில் அ(ன்)னாள்
புணர் செச்சை மணி மார்பா
... வேடர் குலத்து மாது, ஒப்பற்ற
பரிசுத்தமான, தாமரையில் வாழும் லக்ஷ்மியாகிய மயில் போன்றவளாம்
வள்ளியைத் தழுவுகின்ற வெட்சி மாலை புனைந்த அழகிய மார்பனே,
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வு உற மிக்க மயிலில்
ஏறிய உக்ர வடிவேலா
... திகைத்து மயங்கி நின்ற அசுரன் மலை
போல உருகி விழும்படி, சிறந்த மயில் மீது ஏறிய கொடுமையான
வடிவேலனே,
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால்
உறை சத்தி எமது ஆயி
... பறைகளை விரும்பும் ருத்ரி, கரிய மேகம்
போன்ற கூந்தலை உடையவள், பரமராகிய சிவபெருமான் பக்கத்தில்
உறைகின்ற சக்தி, எமது தாய்,
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை
உற்ற பெருமாளே.
... பழம்பொருளாக நிற்கும் பார்வதி, துர்க்கை,
பெரிய நாயகி என்னும் பெயரை உடையவள் ஈன்ற, பழனி மா
மலையில் வீற்றிருக்கும், பெருமாளே.

Similar songs:

111 - அறமிலா நிலை (பழநி)

தனதனா தனதத்த தனதனா தனதத்த
     தனதனா தனதத்த ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song