சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

நலம் தரும் பதிகங்கள்

உடல் நலம்   கோள்கள்   பொருளாதாரம்   திருமணம்   குழந்தை   உறவுகள்   கல்வி   ஆளுமை   விவசாயம்   ஆன்மீகம்  
உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
வயிற்று வலி தீர, குடல் உறுப்புகள் நன்றாக வேலை செய்ய
திருநாவுக்கரசர்    தேவாரம் 4.001
கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்க, அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க
திருநாவுக்கரசர்    தேவாரம் 4.002
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும்


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
உடல் உறுப்புகள் நலம் பெற
திருநாவுக்கரசர்    தேவாரம் 4.009
தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்க
திருநாவுக்கரசர்    தேவாரம் 4.018
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
கடல் மற்றும் நீர் நிலைகள் நன்மை அளிக்க
திருநாவுக்கரசர்    தேவாரம் 4.094
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
சிறை வாசத்திலிருந்து விடுபட
திருநாவுக்கரசர்    தேவாரம் 5.090
மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கு
மாணிக்க வாசகர் திருவாசகம் 8.112
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
உடல் ஆரோக்கியதுடன் இருக்க
அருணகிரிநாதர் திருப்புகழ் 1027
தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய்


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
உடல் ஆரோக்கியதுடன் இருக்க
அருணகிரிநாதர் திருப்புகழ் 243
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
உடல் ஆரோக்கியதுடன் இருக்க
அருணகிரிநாதர் திருப்புகழ் 790
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தற ...... இளையாதே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
இடக்கண் கோளாறு நீங்க
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.061
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை; ஆதியை; அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை; சிந்திப்பார் அவர் சிந்தை உளானை;
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை; கம்பன் எம்மானை; காணக் கண் அடியேன் பெற்ற ஆறே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
வலக்கண் உள்ள கோளாறு நீங்க
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7.095
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
இனந்தெரியாத நோய்கள் நீங்க; இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, போதைப் பொருள்களிருந்து மீள
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1.044
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
விஷ சுரம் , விஷக்கடி, தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்க , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்க
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1.116
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
பலவகை உடற்பிணிகள்‌ அகல
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2.047
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2.066
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
கூன் நிமிற, முதுகு வலி நீங்க
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3.054
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3.072
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
நோய்கள் விலக
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 24
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.


உடல் நலம் நலம் தரும்/கூடும் பதிகம்
மனநோய் அகல
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி 27
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.



This page was last modified on Wed, 07 Aug 2024 19:29:04 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

nalam tharum pathigam