சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

திருஞானசம்பந்தர்

  திருநாவுக்கரசர்

  சுந்தரமூர்த்தி

  திருவாசகம்

தேவாரம் பாடப் பெற்ற வரலாற்று வரிசை
4.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  (திருவதிகை வீரட்டானம்)   பண் - கொல்லி   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
மருள்நீக்கியார், தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார். மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் ஆதரவாக இருந்தார். வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டதில், தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்றார். திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார்.
6.098 திருநாவுக்கரசர் - தேவாரம் -நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;  (பொது - மறுமாற்றம்)   பண் - திருத்தாண்டகம்   ( )
திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார் என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரை யும் இழித்துரைக்கின்றார் என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர். இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும் என்றனர் சமணர். மன்னவன் அமைச் சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம் என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார்.
5.090 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் வீணையும், மாலை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான். திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்.
4.002 திருநாவுக்கரசர் - தேவாரம் -சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்  (திருவதிகை வீரட்டானம்)   பண் - காந்தாரம்   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
4.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  (பொது - நமசிவாயத் திருப்பதிகம்)   பண் - காந்தாரம்   ( )
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
4.094 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))   பண் - திருவிருத்தம்   ( வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
6.003 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,  (திருவதிகை வீரட்டானம்)   பண் - ஏழைத்திருத்தாண்டகம்   ( )
திருப்பாதிரிப்புலியூரில் சிலநாள் தங்கியிருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருவதிகை செல்லும் விருப்பமுடையவராய்த் திருமாணிகுழி, திருத் தினை நகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவதிகையை அடைந்தார். சமணர் இழைத்த துன்பங்களிலிருந்து திருவருளால் மீண்டு கடலில் கல்லே தெப்பமாகக் கரையேறிய திருநாவுக்கரசர் திருவதிகை எழுந்தருளுவது கேட்டு மக்கள் மகிழ்வோடு சிறந்த முறையில் அவரை வரவேற்றனர். தூயவெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் நெஞ்சும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்மேய செவ்வாயும் உடையராய் திருநாவுக்கரசர் அடியார் புடைசூழ திருவதிகைத் திரு வீதியுள் புகுந்து திருக்கோயிலை அடைந்து வெறிவிரவு கூவிளம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
4.010 திருநாவுக்கரசர் - தேவாரம் -முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,  (திருவதிகை வீரட்டானம்)   பண் - காந்தாரம்   ( )
4.024 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரும்பு கொப்பளித்த யானை ஈர்  (திருவதிகை வீரட்டானம்)   பண் - கொப்பளித்ததிருநேரிசை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெண் நிலா மதியம் தன்னை  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருநேரிசை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.026 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனே! எங்கள் கோவே! நாதனே!  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருநேரிசை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.027 திருநாவுக்கரசர் - தேவாரம் -மடக்கினார்; புலியின்தோலை; மா மணி  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருநேரிசை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.028 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்பு எலாம் இளைய காலம்  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருநேரிசை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் ஒள்வாள் போல்  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருவிருத்தம்   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
5.053 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோணல் மா மதி சூடி,  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருக்குறுந்தொகை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.054 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு நாள்மலர் கொண்டு, அவன்  (திருவதிகை வீரட்டானம்)   பண் - திருக்குறுந்தொகை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.004 திருநாவுக்கரசர் - தேவாரம் -சந்திரனை மா கங்கைத் திரையால்  (திருவதிகை வீரட்டானம்)   பண் - அடையாளத்திருத்தாண்டகம்   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.005 திருநாவுக்கரசர் - தேவாரம் -எல்லாம் சிவன் என்ன நின்றாய்,  (திருவதிகை வீரட்டானம்)   பண் - போற்றித்திருத்தாண்டகம்   ( )
6.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)  (திருவதிகை வீரட்டானம்)   பண் - குறிஞ்சி   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.007 திருநாவுக்கரசர் - தேவாரம் -செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,  (திருவதிகை வீரட்டானம்)   பண் - காப்புத்திருத்தாண்டகம்   ( )
6.085 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆர்த்தான் காண், அழல் நாகம்  (திருமுண்டீச்சுரம்)   பண் - திருத்தாண்டகம்   ( முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
5.044 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா மாத்து ஆகிய மால்  (திருவாமாத்தூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( அழகியநாதர் அழகியநாயகியம்மை)
6.009 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணங்கள் தாம் பாடி, வந்து  (திருவாமாத்தூர்)   பண் - திருத்தாண்டகம்   ( அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
4.069 திருநாவுக்கரசர் - தேவாரம் -செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,  (திருக்கோவலூர்)   பண் - திருநேரிசை   ( வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
4.109 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  (திருத்தூங்கானைமாடம்)   பண் - திருவிருத்தம்   ( மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். பொன்னார் திருவடிக்கு என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார்.
5.003 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  (திருநெல்வாயில் அரத்துறை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தனது உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும், அப்பர் பிரானின் தோள்களில் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்த பின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார்.
6.068 திருநாவுக்கரசர் - தேவாரம் -கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   பண் - திருத்தாண்டகம்   ( பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
4.081 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரு நட்ட கண்டனை, அண்டத்  (கோயில் (சிதம்பரம்))   பண் - திருவிருத்தம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.023 திருநாவுக்கரசர் - தேவாரம் -பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  (கோயில் (சிதம்பரம்))   பண் - கொல்லி   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  (கோயில் (சிதம்பரம்))   பண் - பழந்தக்கராகம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம்.
5.042 திருநாவுக்கரசர் - தேவாரம் -நன்று நாள்தொறும் நம் வினை  (திருவேட்களம்)   பண் - திருக்குறுந்தொகை   ( பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
4.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்  (திருக்கழிப்பாலை)   பண் - காந்தாரம்   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030 திருநாவுக்கரசர் - தேவாரம் -நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை  (திருக்கழிப்பாலை)   பண் - திருநேரிசை   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெய்தல் குருகு தன் பிள்ளை  (திருக்கழிப்பாலை)   பண் - திருவிருத்தம்   ( அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  (திருக்கழிப்பாலை)   பண் - திருக்குறுந்தொகை   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்  (திருக்கழிப்பாலை)   பண் - திருத்தாண்டகம்   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
5.002 திருநாவுக்கரசர் - தேவாரம் -பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  (கோயில் (சிதம்பரம்))   பண் - திருக்குறுந்தொகை   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடிய பின்னர், அருகில் இருக்கும் வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டு, பதிகங்கள் அருளிய பின்னர் மறுபடியும் தில்லைக் கூத்தனைக் காண ஆர்வம் கொண்டார். கழிப்பாலைத் தலத்திலிருந்து தில்லை வரும் வழியில், தில்லைப் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற பொருள் படும் இந்த பதிகத்தைப் பாடியவாறே தில்லை வந்து சேர்கின்றார்.
6.001 திருநாவுக்கரசர் - தேவாரம் -அரியானை, அந்தணர் தம் சிந்தை  (கோயில் (சிதம்பரம்))   பண் - பெரியதிருத்தாண்டகம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.022 திருநாவுக்கரசர் - தேவாரம் -செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா  (கோயில் (சிதம்பரம்))   பண் - காந்தாரம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
4.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாளை உடைக் கமுகு ஓங்கி,  (கோயில் (சிதம்பரம்))   பண் - திருவிருத்தம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
6.002 திருநாவுக்கரசர் - தேவாரம் -மங்குல் மதி தவழும் மாட  (கோயில் (சிதம்பரம்))   பண் - புக்கதிருத்தாண்டகம்   ( திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
5.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -வீறு தான் உடை வெற்பன்  (திருநாரையூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
6.074 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்  (திருநாரையூர்)   பண் - திருத்தாண்டகம்   ( சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
4.082 திருநாவுக்கரசர் - தேவாரம் -பார் கொண்டு மூடிக் கடல்  (சீர்காழி)   பண் - திருவிருத்தம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
தில்லையில் திருநாவுக்கரசர் தங்கியிருந்த பொழுது சீகாழிப் பதியில் சிவபெருமானது திருவருளால் உமையம்மை தம் திருமுலைப் பாலோடு சிவஞானங்குழைத்தூட்ட உண்டு, இவர் எம்பெருமான் என்று சுட்டிக்காட்டி ஏழிசை இன் தமிழ்ப்பாமாலை பாடிய திருஞான சம்பந்தரின் சிறப்பினை அடியார்கள் சொல்லக் கேட்டு, அவரது திரு வடிகளை வணங்குதற்குப் பேரவாக் கொண்டு சீகாழிக்குப் புறப் பட்டார். திருநாரையூர் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு சீகாழிக்கு விரைந்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வருகையைக் கேட்டு எதிர்கொண்டழைத்தார். திருநாவுக்கரசர் அன்புப்பெருக்கால் திருஞானசம்பந்தரை வணங்கினார். திருஞான சம்பந்தர் கைகளைப்பற்றிக்கொண்டு தாமும் வணங்கி அப்பரே என்று அழைக்க, நாவுக்கரசரும் அடியேன் என்றார். மகிழ்ச்சியால் இருவர் உள்ளமும் இணைந்து இதயங்கலந்து திருத்தோணியப்பர் தம் திருக்கோயிலை அடைந்தனர். திருக்கோயிலுக்குள் சென்று அடியவர் இருவரும் பெருமானைப் பணிந்தெழுந்தனர். சம்பந்தர் அப்பர் பெருமானைப்பார்த்து நீர் உங்கள் பெருமானைப் பாடுவீராக என்றார். அப்பரும் ஆனந்தம் மேலிட்டுப் பார்கொண்டுமூடி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
4.083 திருநாவுக்கரசர் - தேவாரம் -படை ஆர் மழு ஒன்று  (சீர்காழி)   பண் - திருவிருத்தம்   ( பிரமபுரீசர் திருநிலைநாயகி)
5.045 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாது இயன்று மனைக்கு இரு!  (சீர்காழி)   பண் - திருக்குறுந்தொகை   ( தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
6.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,  (திருப்புன்கூரும் திருநீடூரும்)   பண் - திருத்தாண்டகம்   ( சிவலோகநாதர், சோமநாதேசுவரர் சொக்கநாயகியம்மை)
4.049 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,  (திருக்குறுக்கை வீரட்டம்)   பண் - திருநேரிசை   ( வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
4.050 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெடிய மால் பிரமனோடு நீர்  (திருக்குறுக்கை வீரட்டம்)   பண் - திருநேரிசை   ( வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)
5.023 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடுங் கண் வெண்தலை கொண்டு,  (திருநின்றியூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
4.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்  (திருநனிப்பள்ளி)   பண் - திருநேரிசை   ( நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
4.029 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு  (திருச்செம்பொன்பள்ளி)   பண் - திருநேரிசை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.036 திருநாவுக்கரசர் - தேவாரம் -கான் அறாத கடி பொழில்  (திருச்செம்பொன்பள்ளி)   பண் - திருக்குறுந்தொகை   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.039 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொள்ளும் காதன்மை பெய்து உறும்  (திருமயிலாடுதுறை)   பண் - திருக்குறுந்தொகை   ( மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
4.042 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  (திருத்துருத்தி)   பண் - திருநேரிசை:கொல்லி   ( வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
5.008 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாறு அலைத்த படுவெண் தலையினன்;  (திருஅன்னியூர் (பொன்னூர்))   பண் - திருக்குறுந்தொகை   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
அன்னியூர் என்று தேவாரப் பதிகங்களில் அழைக்கப்பட்ட இந்த தலம், இந்நாளில் அன்னூர் என்றும் பொன்னூர் என்றும் அழைக்கப்படுகின்றது. மயிலாடுதுறை மணல்மேடு பாதையில், மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். அப்பர் பிரான் அன்னியூர் சென்றதாக பெரிய புராண குறிப்பு ஏதும் இல்லை. அப்பர் பிரான் கயிலாயம் தவிர்த்த மற்ற அனைத்து தலங்களின் மீது அருளிய பதிகங்களை, அந்தந்த தலங்களுக்கு சென்று பாடினார் என்பதாலும், இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் கிடைத்திருப்பதால், அவர் அருகில் உள்ள பந்தணைநல்லூர் முதலிய தலங்களுக்கு சென்ற போது இங்கும் சென்றிருக்க வேண்டும்
4.048 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடல் அகம் ஏழினோடும் பவனமும்  (திருஆப்பாடி)   பண் - திருநேரிசை   ( பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை)
6.088 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆர் ஆரும் மூ இலை  (திருஓமாம்புலியூர்)   பண் - திருத்தாண்டகம்   ( துயர்தீர்த்தசெல்வர் பூங்கொடியம்மை)
6.090 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூ இலை நல் சூலம்  (திருக்கஞ்சனூர்)   பண் - திருத்தாண்டகம்   ( அக்கினீசுவரர் கற்பகநாயகியம்மை)
5.019 திருநாவுக்கரசர் - தேவாரம் -தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  (திருக்கடம்பூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.020 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  (திருக்கடம்பூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
5.075 திருநாவுக்கரசர் - தேவாரம் -மரக் கொக்குஆம் என வாய்விட்டு  (திருக்குரக்குக்கா)   பண் - திருக்குறுந்தொகை   ( கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)
5.064 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்  (திருக்கோழம்பம்)   பண் - திருக்குறுந்தொகை   ( கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
4.065 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோடு உலாம் மலர்கள் தூவித்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))   பண் - திருநேரிசை   ( சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
6.082 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))   பண் - திருத்தாண்டகம்   ( சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
5.063 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்  (திருத்தென்குரங்காடுதுறை)   பண் - திருக்குறுந்தொகை   ( குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
5.079 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள் எருக்கு அரவம் விரவும்  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))   பண் - திருக்குறுந்தொகை   ( வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
6.054 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))   பண் - திருத்தாண்டகம்   ( வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
5.073 திருநாவுக்கரசர் - தேவாரம் -தங்கு அலப்பிய தக்கன் பெரு  (திருமங்கலக்குடி)   பண் - திருக்குறுந்தொகை   ( புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
5.087 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))   பண் - திருக்குறுந்தொகை   ( மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
இந்நாளில் குத்தாலம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தலம்) என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாட்களில் துருத்தி என்று அழைக்கப்பட்டது. துருத்தி தலத்திற்கு பதினெட்டு கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருமணஞ்சேரி. இந்த தலத்தில் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் நமக்கு கிடைத்துள்ளது.
5.049 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண் காட்டிப் படிஆய தன்  (திருவெண்காடு)   பண் - திருக்குறுந்தொகை   ( சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035 திருநாவுக்கரசர் - தேவாரம் -தூண்டு சுடர் மேனித் தூநீறு  (திருவெண்காடு)   பண் - திருத்தாண்டகம்   ( சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
4.051 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெற்றி மேல் கண்ணினானே! நீறு  (திருக்கோடி (கோடிக்கரை))   பண் - திருநேரிசை   ( கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
5.078 திருநாவுக்கரசர் - தேவாரம் -சங்கு உலாம் முன்கைத் தையல்  (திருக்கோடி (கோடிக்கரை))   பண் - திருக்குறுந்தொகை   ( கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
6.081 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண் தலம் சேர் நெற்றி  (திருக்கோடி (கோடிக்கரை))   பண் - திருத்தாண்டகம்   ( கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
6.046 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,  (திருவாவடுதுறை)   பண் - திருத்தாண்டகம்   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029 திருநாவுக்கரசர் - தேவாரம் -நிறைக்க வாலியள் அல்லள், இந்  (திருவாவடுதுறை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
4.057 திருநாவுக்கரசர் - தேவாரம் -மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்  (திருவாவடுதுறை)   பண் - கொல்லி   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவே, என் செல்வமே, தேனே,  (திருவாவடுதுறை)   பண் - திருத்தாண்டகம்   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.035 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு உடைச் சுடலை நீற்றார்;  (திருவிடைமருதூர்)   பண் - திருநேரிசை   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  (திருவிடைமருதூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015 திருநாவுக்கரசர் - தேவாரம் -பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  (திருவிடைமருதூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016 திருநாவுக்கரசர் - தேவாரம் -சூலப்படை உடையார் தாமே போலும்;  (திருவிடைமருதூர்)   பண் - திருத்தாண்டகம்   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்  (திருவிடைமருதூர்)   பண் - திருத்தாண்டகம்   ( மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.066 திருநாவுக்கரசர் - தேவாரம் -கச்சை சேர் அரவர் போலும்;  (திருநாகேச்சரம்)   பண் - திருநேரிசை   ( சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
5.052 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லர்; நல்லது ஓர் நாகம்  (திருநாகேச்சரம்)   பண் - திருக்குறுந்தொகை   ( செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
6.066 திருநாவுக்கரசர் - தேவாரம் -தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்  (திருநாகேச்சரம்)   பண் - திருத்தாண்டகம்   ( சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
4.096 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்  (திருச்சத்திமுற்றம்)   பண் - திருவிருத்தம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து கோவாய்முடுகி என்று தொடங்கி கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர்.
6.014 திருநாவுக்கரசர் - தேவாரம் -நினைந்து உருகும் அடியாரை நைய  (திருநல்லூர்)   பண் - திருத்தாண்டகம்   ( பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
திருவடி தீகை்ஷக்கு நல்லூருக்கு வருக என்று அருளிச் செய்தார். அவ்வருள் வாக்குக் கேட்ட அப்பர் அடிகள் மகிழ்ந்து நன்மை பெருகும் அருள் வழியே, நல்லூரை அடைந்து பெருமானை வணங்கி எழுந்தார். நினைப்பதனை முடிக் கின்றோம் என்று அருளி அப்பரடிகள் திருமுடிமேல் பெருமான் திருவடி சூட்டியருளினான். நினைந்துருகும் அடியாரை என்று தொடங்கி இறை அருளை வியந்து நனைந்தனைய திருவடி என்றலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமான் என்றுபாடிப் பரவி மகிழ்ந்து பலநாள் அங்குத் தங்கிச் சிவதல தரிசனங்கள் பலவும் செய்து இன்புற்றார்.
4.097 திருநாவுக்கரசர் - தேவாரம் -அட்டுமின், இல் பலி! என்று  (திருநல்லூர்)   பண் - திருவிருத்தம்   ( சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)
6.015 திருநாவுக்கரசர் - தேவாரம் -குருகு ஆம்; வயிரம் ஆம்;  (திருக்கருகாவூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.051 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீல மா மணிகண்டத்தர்; நீள்  (திருப்பாலைத்துறை)   பண் - திருக்குறுந்தொகை   ( பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)
4.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று கொல் ஆம் அவர்  (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம்)   பண் - இந்தளம்   ( )
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று திருநாவுக்கரசர் பெயரில் பல தர்மங்களை செய்து வந்தார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர். அப்பூதிஅடிகளைப் பற்றி கேள்வி பட்டு, அப்பூதியின் வீடு அடைந்தார். வந்தவர் திருநாவுக்கரசர் என்றவுடன், அப்பூதி வீடே மிகுந்த மகிழ்வுடன் அமுது தயார் செய்தார்கள். தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டி உயிர் துறந்தார். மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகளுக்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். மூத்த திருநாவுக் கரசை அழையும் என்று அப்பர் கூற, இப்போது அவன் இங்கு உதவான் என்று அப்பூதிகூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ஒன்றுகொலாம் என்ற திருப் பதிகம் பாடியருளினர்.
4.012 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல் மாலை பயில்கின்ற குயில்  (திருப்பழனம்)   பண் - பழந்தக்கராகம்   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
விடம் கண்டு இறந்த மூத்த திருநாவுக் கரசு, அப்பரின் இறை பதிகத்தால், உறங்கி எழுவாரைப்போல எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.
4.036 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆடினார் ஒருவர் போலும்; அலர்  (திருப்பழனம்)   பண் - திருநேரிசை   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.087 திருநாவுக்கரசர் - தேவாரம் -மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  (திருப்பழனம்)   பண் - திருவிருத்தம்   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.035 திருநாவுக்கரசர் - தேவாரம் -அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  (திருப்பழனம்)   பண் - திருக்குறுந்தொகை   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
6.036 திருநாவுக்கரசர் - தேவாரம் -அலை ஆர் கடல் நஞ்சம்  (திருப்பழனம்)   பண் - திருத்தாண்டகம்   ( ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.041 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொய் விராம் மேனி தன்னைப்  (திருச்சோற்றுத்துறை)   பண் - திருநேரிசை:கொல்லி   ( தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலை எழுந்து, கடிமலர் தூயன  (திருச்சோற்றுத்துறை)   பண் - திருவிருத்தம்   ( தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,  (திருச்சோற்றுத்துறை)   பண் - நாட்டைக்குறிஞ்சி   ( தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்  (திருச்சோற்றுத்துறை)   பண் - திருத்தாண்டகம்   ( தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.093 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானவர் தானவர் வைகல் மலர்  (திருக்கண்டியூர்)   பண் - திருவிருத்தம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.090 திருநாவுக்கரசர் - தேவாரம் -கையது, கால் எரி நாகம்,  (திருவேதிகுடி)   பண் - திருவிருத்தம்   ( வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)
5.066 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் ஆர் கடலின் விடம்  (திருவலஞ்சுழி)   பண் - திருக்குறுந்தொகை   ( காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.072 திருநாவுக்கரசர் - தேவாரம் -அலை ஆர் புனல் கங்கை  (திருவலஞ்சுழி)   பண் - திருத்தாண்டகம்   ( காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.073 திருநாவுக்கரசர் - தேவாரம் -கருமணி போல் கண்டத்து அழகன்  (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும்)   பண் - திருத்தாண்டகம்   ( கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை)
5.022 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  (திருகுடமூக்கு (கும்பகோணம்))   பண் - திருக்குறுந்தொகை   ( கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
4.073 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருந் திரு இமவான் பெற்ற  (திருச்சேறை (உடையார்கோவில்))   பண் - திருநேரிசை   ( சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
5.077 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூரியா வரும், புண்ணியம்; பொய்  (திருச்சேறை (உடையார்கோவில்))   பண் - திருக்குறுந்தொகை   ( சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
5.067 திருநாவுக்கரசர் - தேவாரம் -படையும் பூதமும் பாம்பும் புல்வாய்  (திருவாஞ்சியம்)   பண் - திருக்குறுந்தொகை   ( வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
4.060 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறை அணி நாவினானை, மறப்பு  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))   பண் - திருநேரிசை   ( பிரியாதநாதர் மின்னனையாளம்மை)
4.101 திருநாவுக்கரசர் - தேவாரம் -குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  (திருவாரூர்)   பண் - திருவிருத்தம்   ( எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.020 திருநாவுக்கரசர் - தேவாரம் -காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்  (திருவாரூர்)   பண் - சீகாமரம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005 திருநாவுக்கரசர் - தேவாரம் -மெய் எலாம் வெண் நீறு  (திருவாரூர்)   பண் - காந்தாரம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்  (திருவாரூர்)   பண் - காந்தாரம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
திருப்பழனத்திலிருந்து திருநல்லூர், வலஞ்சுழி, குடமூக்கு முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் வந்தார். அடியார் பெருமக்கள் பலரும் எதிர்கொண்டழைத்துப் போற்றினர். திரு வாரூரில் புற்றிடங்கொண்டாரையும் தியாகேசனையும் பணிந்து பாடிளம் பூதத்தினானும் என்று தொடங்கிப் பதிகம் பாடினார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் திருவுலாப் போந்தருளியது கண்டு வணங்கி மகிழ்ந்து திருப்புகலூர்க்குப் புறப்பட்டார்.
4.019 திருநாவுக்கரசர் - தேவாரம் -சூலப் படை யானை; சூழ்  (திருவாரூர்)   பண் - சீகாமரம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052 திருநாவுக்கரசர் - தேவாரம் -படு குழிப் பவ்வத்து அன்ன  (திருவாரூர்)   பண் - திருநேரிசை   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழல் வலம் கொண்ட சொல்லாள்  (திருவாரூர்)   பண் - திருநேரிசை   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006 திருநாவுக்கரசர் - தேவாரம் -எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  (திருவாரூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  (திருவாரூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024 திருநாவுக்கரசர் - தேவாரம் -கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025 திருநாவுக்கரசர் - தேவாரம் -உயிரா வணம் இருந்து, உற்று  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாதித் தன் திரு உருவில்  (திருவாரூர்)   பண் -   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030 திருநாவுக்கரசர் - தேவாரம் -எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031 திருநாவுக்கரசர் - தேவாரம் -இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032 திருநாவுக்கரசர் - தேவாரம் -கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!  (திருவாரூர்)   பண் - போற்றித்திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருவனாய் உலகு ஏத்த நின்ற  (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.102 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,  (திருவாரூர்)   பண் - திருவிருத்தம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017 திருநாவுக்கரசர் - தேவாரம் -எத் தீப் புகினும் எமக்கு  (திருவாரூர்)   பண் - இந்தளம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் கை மதகரி உரிவைப்  (திருவாரூர்)   பண் - அரநெறிதிருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.048 திருநாவுக்கரசர் - தேவாரம் -நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்  (திருவலிவலம்)   பண் - திருத்தாண்டகம்   ( மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)
6.067 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்  (திருக்கீழ்வேளூர்)   பண் - திருத்தாண்டகம்   ( அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
6.061 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாதினை ஓர் கூறு உகந்தாய்!  (திருக்கன்றாப்பூர்)   பண் - திருத்தாண்டகம்   ( நடுதறிநன்னாயகர் மாதுமைநாயகியம்மை)
4.032 திருநாவுக்கரசர் - தேவாரம் -உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர  (திருப்பயற்றூர்)   பண் - திருநேரிசை   ( திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை)
6.069 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,  (திருப்பள்ளியின் முக்கூடல்)   பண் - திருத்தாண்டகம்   ( முக்கோணவீசுவரர் மைமேவுங்கண்ணியம்மை)
4.021 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து விதானம்; மணி பொன்  (திருவாரூர்)   பண் - குறிஞ்சி   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
திருவாரூரிலிருந்து வழியில் பல சிவதலங்களையும் தரிசித்துக் கொண்டே திருப்புகலூருக்கு வந்தார். அப்பொழுது முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரும் அப்பரை எதிர்கொண்டழைத்தார். திருவாரூரில் நிகழ்ந்த சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவத் திருநாவுக்கரசர், முத்து விதானம் என்று தொடங்கித் திருவாதிரைச் சிறப்பை எடுத்துரைத்தார்.
5.046 திருநாவுக்கரசர் - தேவாரம் -துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு  (திருப்புகலூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
6.084 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,  (திருச்செங்காட்டங்குடி)   பண் - திருத்தாண்டகம்   ( கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
5.068 திருநாவுக்கரசர் - தேவாரம் -உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  (திருநள்ளாறு)   பண் - திருக்குறுந்தொகை   ( தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
6.020 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)  (திருநள்ளாறு)   பண் - திருத்தாண்டகம்   ( தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
5.088 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருகல் ஆம், தவம்; பேதைமை  (திருமருகல்)   பண் - திருக்குறுந்தொகை   ( மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
4.031 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொள்ளத்த காயம் ஆய பொருளினை,  (திருக்கடவூர் வீரட்டம்)   பண் - சாளரபாணி   ( அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
4.107 திருநாவுக்கரசர் - தேவாரம் -மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த  (திருக்கடவூர் வீரட்டம்)   பண் - திருவிருத்தம்   ( பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
5.037 திருநாவுக்கரசர் - தேவாரம் -மலைக் கொள் ஆனை மயக்கிய  (திருக்கடவூர் வீரட்டம்)   பண் - திருக்குறுந்தொகை   ( பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
5.038 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழை கொள் காதினர், கோவண  (திருக்கடவூர் மயானம்)   பண் - திருக்குறுந்தொகை   ( பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
6.021 திருநாவுக்கரசர் - தேவாரம் -முடித் தாமரை அணிந்த மூர்த்தி  (திருஆக்கூர்)   பண் - திருத்தாண்டகம்   ( சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
5.011 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  (திருமீயச்சூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
4.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -தெண் திரை தேங்கி ஓதம்  (திருவலம்புரம்)   பண் - திருநேரிசை   ( வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
6.058 திருநாவுக்கரசர் - தேவாரம் -மண் அளந்த மணி வண்ணர்  (திருவலம்புரம்)   பண் - திருத்தாண்டகம்   ( வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
6.050 திருநாவுக்கரசர் - தேவாரம் -போர் ஆனை ஈர் உரிவைப்  (திருவீழிமிழலை)   பண் - திருத்தாண்டகம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;  (திருவீழிமிழலை)   பண் - திருநேரிசை   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095 திருநாவுக்கரசர் - தேவாரம் -வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  (திருவீழிமிழலை)   பண் - திருவிருத்தம்   ( தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  (திருவீழிமிழலை)   பண் - திருக்குறுந்தொகை   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
நாயன்மார்கள் இருவரும் இந்த தலத்தில் தங்கிய போது வறட்சி ஏற்பட்டது. இறைவனின் அருளால் தினமும் ஒரு பொற்காசு பெற்ற நாயன்மார்கள் தங்களைச் சார்ந்த அடியார்களுக்கும் ஊரில் உள்ள மக்களுக்கும் நாள்தோறும் அமுது படைத்தனர். மேலும் பஞ்சம் நீங்கிய பின்னரும் பல நாட்கள் இங்கே தங்கி பல பதிகங்கள் பாடினார். ஆனால் நமக்கு அப்பர் பிரான் பாடிய எட்டு பதிகங்களே கிடைத்துள்ளன.
5.013 திருநாவுக்கரசர் - தேவாரம் -என் பொனே! இமையோர் தொழு  (திருவீழிமிழலை)   பண் - திருக்குறுந்தொகை   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051 திருநாவுக்கரசர் - தேவாரம் -கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;  (திருவீழிமிழலை)   பண் - திருத்தாண்டகம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண் அவன் காண்; கண்  (திருவீழிமிழலை)   பண் - திருத்தாண்டகம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053 திருநாவுக்கரசர் - தேவாரம் -மான் ஏறு கரம் உடைய  (திருவீழிமிழலை)   பண் - திருத்தாண்டகம்   ( வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.067 திருநாவுக்கரசர் - தேவாரம் -வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்  (திருக்கொண்டீச்சரம்)   பண் - திருநேரிசை   ( பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  (திருக்கொண்டீச்சரம்)   பண் - திருக்குறுந்தொகை   ( பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.056 திருநாவுக்கரசர் - தேவாரம் -மைக் கொள் கண் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))   பண் - திருக்குறுந்தொகை   ( கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
5.057 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்னமே நினையா தொழிந்தேன், உனை;  (திருக்கோளிலி (திருக்குவளை))   பண் - திருக்குறுந்தொகை   ( கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
6.079 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்  (திருத்தலையாலங்காடு)   பண் - திருத்தாண்டகம்   ( ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை)
5.016 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  (திருப்பேரெயில்)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.010 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பண் - திருக்குறுந்தொகை   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
திருப்புகலூரில் சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும், ஞானசம்பந்தப் பெருமானும் திருவீழிமிழலை முதலான பல தலங்களுக்கு, இருவரும் சேர்ந்து சென்றனர். பல தலங்கள் சேர்ந்து தரிசித்த பின்னர் இருவரும் திருமறைக்காடு வந்தடைந்தனர். அப்பர் பிரானும் திருஞான சம்பந்தரும் தங்களது ஊருக்கு வரும் செய்தியினை அறிந்த, திருமறைக்காடு தலத்தில் இருந்த அடியவர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் வரவேற்றனர். கோயிலின் வெளி வாயில் வழியாக உட்புகுந்த இருவரும், திருக்கோயிலை வலம் வந்து உள்வாயில் வந்து சேர்ந்தனர். உள்வாயில் அடைத்து இருப்பதை கண்ணுற்ற இருவரும் வாயிலை வணங்கி நின்றனர். பண்டைய நாளில், வேதங்கள் சிவபிரானை வழிபட்ட பின்னர், கோயில் வாயிற்கதவுகளை திருக்காப்பிட்டு மூடிய நாள் முதலாக, அந்த கதவுகள் மூடியே இருப்பதாக அருகே இருந்த அடியார்கள் கூறினார்கள். மறைகள் ஓதும் பெருமையுடைய அன்பர்கள் பலர் முயன்றும், மூடிய கதவுகள் திறக்கப்படவில்லை என்று கூறிய அடியார்கள், தாங்கள் அனைவரும் திட்டிவாசல் எனப்படும் அருகிலிருந்த சிறிய வாயில் வழியாக திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபாட்டு வருவதாக கூறினார்கள். இதனைக் கேட்ட ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பிரானிடம், தாங்கள் இருவரும் எந்த விதத்திலாவது சிவபிரானிடம் வேண்டி, அடைக்கப்பட்டுள்ள கோயில் கதவுகள் திறக்க வேண்டி இறைவனின் அருளினை நாடி செந்தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டும் என்று உரைத்தார். அப்பர் பிரான் உடனே ஆளுடையப் பிள்ளையாரை நோக்கி, கதவு திறப்பதற்காக நான் பாடவேண்டும் என்று நீர் விரும்பினால் நான் அவ்வாறே செய்வேன் என்று கூறினார்.
4.033 திருநாவுக்கரசர் - தேவாரம் -இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பண் - திருநேரிசை   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.034 திருநாவுக்கரசர் - தேவாரம் -தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பண் - திருநேரிசை   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.009 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதம் மால் கடல் பரவி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பண் - திருக்குறுந்தொகை   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
6.023 திருநாவுக்கரசர் - தேவாரம் -தூண்டு சுடர் அனைய சோதி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   பண் - திருத்தாண்டகம்   ( வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.050 திருநாவுக்கரசர் - தேவாரம் -எங்கே என்ன, இருந்த இடம்  (திருவாய்மூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
திருவருள் நலம்பெற்ற இரு பெருங்குரவர்களும் அடியார் புடைசூழத் திருமறைக்காட்டில் திருமடத்தில் தங்கினர். அன்றிரவு திருநாவுக்கரசர் தாம் அரிதில் திறக்கப்பாடியதையும், ஆளுடைய பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடியதையும் எண்ணித் தம் பாடலுக்குக் கதவு திறக்கக் காலந்தாழ்ந்தமைக்குக் காரணம், இறைவன் திருக்குறிப்பை நாம் உணராது அயர்த்தமையே என்று கவைலகொண்டு திருமடத்தில் ஓர் பால் அறிதுயில் கொண்டார். அவர் கனவில் இறைவன் தோன்றி நாம் திருவாய்மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்து வா என்று கூறி மறைய, உடனே துயிலெழுந்து நாவுக்கரசரும் இறைவனைப் பின் தொடர்ந்து எங்கே யென்னை என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக்கொண்டே வாய்மூருக்குச் சென்றார்.
6.077 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாட அடியார், பரவக் கண்டேன்;  (திருவாய்மூர்)   பண் - திருத்தாண்டகம்   ( வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
முன்னே சென்று கொண்டிருந்த பெருமான் பொற்கோயில் ஒன்றைக் காட்டி மறைந்தனன். ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வாய்மூருக்குச் சென்றதை யறிந்து அவரைத் தொடர்ந்து வாய்மூரை அடைந்தார்.திறக்கப்பாடிய என்னினும் அடைக்கப்பாடிய ஞானசம்பந்தரும் வந்துவிட்டார். இனியும் தம்மைக் காட்டாது மறைப்பரோன்று பாடினார். இறைவன் ஞானசம்பந்தர் காணக் காட்சி வழங்கினன். ஞானசம்பந்தர் காட்ட நாவுக்கரசரும் இறைவன் திருக்காட்சி கண்டு இன்புற்று பாட அடியார்என்று தொடங்கிப் பாடிப் பணிந்தார்.
4.071 திருநாவுக்கரசர் - தேவாரம் -மனைவி தாய் தந்தை மக்கள்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   பண் - திருநேரிசை   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.103 திருநாவுக்கரசர் - தேவாரம் -வடிவு உடை மாமலைமங்கை பங்கா!  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   பண் - திருவிருத்தம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.083 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   பண் - திருக்குறுந்தொகை   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
6.022 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   பண் - திருத்தாண்டகம்   ( காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
4.056 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  (திருவாவடுதுறை)   பண் - திருநேரிசை:காந்தாரம்   ( மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.058 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலை எலாம் பறிக்கும் சமண்கையர்  (திருப்பழையாறை வடதளி)   பண் - திருக்குறுந்தொகை   ( சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)
பழையாறை வடதளியில் உள்ள சிவபெருமானை எவரும் வழிபடாவண்ணம், திருக்கோயிலின் சன்னதியையும் விமானத்தையும் சமணர்கள் மறைத்து மூடி வைத்திருந்தனர், இதனை அறிந்த அப்பர் பிரான், மறைக்கப்பட்ட சிவபெருமானின் திருமேனியைக் கண்டால் அல்லது பழையாறை வடதளி தலத்தை விட்டு அகலமாட்டேன் என்ற உறுதியுடன், உண்ணாவிரதம் நோன்பு இருந்தார். இந்த செய்தி, சிவபெருமானால் பல்லவ மன்னனுக்கு அவனது கனவில் உணர்த்தப்பட்டது. மன்னனும் பழையாறை விரைந்து வந்து, அங்கிருந்த சமணப் பள்ளியில் தங்கியிருந்த சமணர்களை விரட்டியடித்தான். மேலும் விமானத்தையும் சன்னதியையும் மறைத்திருந்த மறைப்புகளை அகற்றி, பெருமானின் பூசனைக்கு வேண்டிய பொருட்கள் நிலையாக கிடைப்பதற்காக நிபந்தங்கள் செய்த பின்னர், நாவுக்கரசரை வணங்கினான். அப்பர் பிரானும், திருக்கோயிலின் உள்ளே சென்று, தலை எலாம் பறிக்கும் என்று தொடங்கும் பதிகத்தினை பாடினார்.
5.061 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து ஊரும் புனல் மொய்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
4.059 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்  (திருஅவளிவணல்லூர்)   பண் - திருநேரிசை   ( சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)
சிவபெருமான் முனிவராய்த் தோன்றியதையும், பின்னர் தன்னை அருகில் இருந்த ஒரு குளத்தில் மூழ்கி எழுமாறு சொன்னதையும் நினைத்து, மகிழ்ந்த அப்பர் பிரான் இறைவனின் கருணையை நினைந்து வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை அருளினார்; பின்னர் அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியபடியே, இறைவனைப் பணித்தபடி அந்த பொய்கையில் மூழ்கினார். இவ்வாறு, இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு அந்தக் குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான், தான் எழுந்த போது திருவையாற்றுக் குளத்தில் இருப்பதை உணர்ந்தார். குளத்தில் இருந்து எழுந்த அப்பர் பிரான் இறைவனின் திருவடிகளை வணங்கும் பொருட்டு திருக்கோயிலுக்குச் சென்றார். செல்லும் வழியில் உள்ள உயிர்கள் அனைத்தும் தத்தம் துணையுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டார். அந்தத் தோற்றத்தை இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோயிலின் முன் வந்து நின்ற அப்பர் பெருமானுக்கு எதிரே தோன்றும் கோயிலே கயிலாய மலையாக காட்சி அளித்தது, திருமால், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் அன்புடன் வழிபடும் ஒலிகளும், மறைகளின் ஒலிகளும் தனித்தனியாக அப்பர் பெருமானுக்கு கேட்டன
5.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானம் சேர் மதி சூடிய  (திருஅன்பில் ஆலந்துறை)   பண் - திருக்குறுந்தொகை   ( சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
6.086 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்  (திருஆலம்பொழில்)   பண் - திருத்தாண்டகம்   ( ஆத்மநாதீசுவரர் ஞானாம்பிகையம்மை)
4.072 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்  (திருஇன்னம்பர்)   பண் - திருநேரிசை   ( எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.100 திருநாவுக்கரசர் - தேவாரம் -மன்னும் மலைமகள் கையால் வருடின;  (திருஇன்னம்பர்)   பண் - திருவிருத்தம்   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.021 திருநாவுக்கரசர் - தேவாரம் -என்னில் ஆரும் எனக்கு இனியார்  (திருஇன்னம்பர்)   பண் - திருக்குறுந்தொகை   ( எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
6.089 திருநாவுக்கரசர் - தேவாரம் -அல்லி மலர் நாற்றத்து உள்ளார்  (திருஇன்னம்பர்)   பண் - திருத்தாண்டகம்   ( எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
5.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  (திருக்கடம்பந்துறை (குளித்தலை))   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.062 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்  (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்))   பண் - திருக்குறுந்தொகை   ( சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை)
5.069 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  (திருக்கருவிலிக்கொட்டிட்டை)   பண் - திருக்குறுந்தொகை   ( சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
இந்த தலம் வீழிமிழலை தலத்திற்கு வடமேற்கில் உள்ள தலம். .பூந்தோட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கும்பகோணத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள தலம்.. தற்போது கருவேலி என்று அழைக்கப்படுகின்றது. தலத்து பெருமானை வழிபடும் அடியார்கள், மறுபடியும் கருப்பையினில் புகாத வண்ணம் இறைவன் காப்பதால் கருவிலி என்ற பெயர் வந்ததாகவும் நாளடைவில் கருவேலி என்று மருவியதாகவும் கூறுவார்கள். தலத்தின் பெயர் கருவிலி; திருக்கோயிலின் பெயர் கொட்டிட்டை; இரண்டையும் இணைத்து கருவிலிக் கொட்டிட்டை என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்று மட்டும், இந்த தலத்திற்கு உரிய தேவாரப் பதிகமாக நமக்கு கிடைத்துள்ளது.
5.084 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)   பண் - திருக்குறுந்தொகை   ( ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)
5.076 திருநாவுக்கரசர் - தேவாரம் -திருவின் நாதனும், செம்மலர் மேல்  (திருக்கானூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
6.075 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல் மலிந்த மறைநான்கு ஆறு  (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்)   பண் - திருத்தாண்டகம்   ( மடந்தைபாகேசுவரர் பெரியநாயகியம்மை)
6.087 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானவன் காண்; வானவர்க்கும் மேல்  (திருச்சிவபுரம்)   பண் - திருத்தாண்டகம்   ( பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
5.043 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,  (திருநல்லம்)   பண் - திருக்குறுந்தொகை   ( உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
5.072 திருநாவுக்கரசர் - தேவாரம் -வைத்த மாடும், மனைவியும், மக்கள்,  (திருநீலக்குடி)   பண் - திருக்குறுந்தொகை   ( நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
6.010 திருநாவுக்கரசர் - தேவாரம் -நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்  பூண்டார்;நூல்  (திருப்பந்தணைநல்லூர்)   பண் - திருத்தாண்டகம்   ( பசுபதீசுவரர் காம்பன்னதோளியம்மை)
5.081 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,  (திருப்பாண்டிக்கொடுமுடி)   பண் - திருக்குறுந்தொகை   ( கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
6.013 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி மாட நீள் தெருவு  (திருப்புறம்பயம்)   பண் - குறிஞ்சி   ( சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
5.065 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்  (திருப்பூவனூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)
5.026 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்  (திருவன்னியூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.086 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலபாசம் பிடித்து எழு தூதுவர்,  (திருவாட்போக்கி (ரத்னகிரி))   பண் - திருக்குறுந்தொகை   ( இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)
5.071 திருநாவுக்கரசர் - தேவாரம் -குசையும் அங்கையில் கோசமும் கொண்ட  (திருவிசயமங்கை)   பண் - திருக்குறுந்தொகை   ( விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
5.017 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  (திருவெண்ணியூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
6.059 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர்  (திருவெண்ணியூர்)   பண் - திருத்தாண்டகம்   ( வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
5.031 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  (திருவானைக்கா)   பண் - திருக்குறுந்தொகை   ( சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
6.062 திருநாவுக்கரசர் - தேவாரம் -எத் தாயர், எத் தந்தை,  (திருவானைக்கா)   பண் - திருத்தாண்டகம்   ( சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
6.063 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி  (திருவானைக்கா)   பண் - திருத்தாண்டகம்   ( சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
5.074 திருநாவுக்கரசர் - தேவாரம் -விரும்பி ஊறு விடேல், மட  (திருவெறும்பூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)
6.091 திருநாவுக்கரசர் - தேவாரம் -பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல்  (திருவெறும்பூர்)   பண் - திருத்தாண்டகம்   ( )
5.085 திருநாவுக்கரசர் - தேவாரம் -மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா  (திருச்சிராப்பள்ளி)   பண் - திருக்குறுந்தொகை   ( தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
6.060 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))   பண் - திருத்தாண்டகம்   ( முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
5.030 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;  (திருப்பராய்துறை)   பண் - திருக்குறுந்தொகை   ( திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
5.041 திருநாவுக்கரசர் - தேவாரம் -உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  (திருப்பைஞ்ஞீலி)   பண் - திருக்குறுந்தொகை   ( நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
திருநாவுக்கரசர் அங்குநின்றும் நீங்கி, ஆனைக்கா, எறும்பியூர், கற்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். பைஞ்ஞீலிக்குச்செல்லும் வழியில் நடையால் வருந்தி இளைத்தும் மனந் தளராமல் சென்றுகொண்டிருந்தார். தொண்டர் வருத்தம் தரியாத பெருமான் அவர் வரும் வழியில் சோலைகுளம் உண்டாக்கி அந்தணர் வடிவோடு பொதிசோறு சுமந்து வீற்றிருந்தார். திருநாவுக்கரசர் அருகில் வந்தவுடன் வழிநடை வருத்தத்தால் மிக இளைத்தீர். என்பால் பொதிசோறு இருக்கிறது. உண்டு இளைப்பாறிச் செல்க என்று கூற, அவ்வண்ணமே பொதிசோறு உண்டு இளைப்பு நீங்கிய நாவுக்கரசரும் தாங்கள் யார்? எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்க, அந்தணரும் நாம் திருப்பைஞ்ஞீலி செல்கின்றோம் என்று கூற, இருவரும் திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டனர். அந்தணர் பின்னே அப்பரும் சென்றார். திருப்பைஞ்ஞீலியை அடைந்ததும் இறைவன் மறைந்தான். அப்பர் இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து பாடித் துதித்தார்.
4.063 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்  (திருவண்ணாமலை)   பண் - திருநேரிசை   ( அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
5.004 திருநாவுக்கரசர் - தேவாரம் -வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  (திருவண்ணாமலை)   பண் - திருக்குறுந்தொகை   ( அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் திரிபுரங்கள் எரித்த செய்தி குறிப்பிடப் படுவது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பு. நினைத்தால் முக்தி தரும் தலம் என்று அண்ணாமலையை குறிப்பிடுவார்கள். அதனை உணர்த்தும் வண்ணம், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அண்ணாமலை அண்ணலை அடியேன் மறந்து உய்வினை அடைவேனோ என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானை எப்போதும் நினைத்தே தனது வாழ்க்கையின் இறுதி பகுதியை கழித்தவர் அப்பர் பிரான். எனவே இந்த அறிவுரை அவருக்கு தேவையான அறிவுரை அல்ல. தன்னைச் சுட்டிக் காட்டி நமக்கு அறிவுரை கூறும் பதிகம் இந்த பதிகம். பெருமானை நினைக்க மறந்தால் நீங்கள் உய்வினை அடைய மாட்டீர்கள் என்று நமக்கு உணர்த்தி, பெருமானை நினைத்து அவனைப் பணிய வேண்டிய அவசியத்தை நமக்கு அப்பர் பிரான் இந்த பதிகத்தின் மூலம் உணர்த்துகின்றார்.
5.005 திருநாவுக்கரசர் - தேவாரம் -பட்டி ஏறு உகந்து ஏறி,  (திருவண்ணாமலை)   பண் - திருக்குறுந்தொகை   ( அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
4.007 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - காந்தாரம்   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.044 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனை, நகரம் மூன்றும் எரியுண  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - திருநேரிசை   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.099 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதுவித்தாய், முன் அற உரை;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - திருவிருத்தம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.047 திருநாவுக்கரசர் - தேவாரம் -பண்டு செய்த பழவினையின் பயன்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - திருக்குறுந்தொகை   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.048 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - திருக்குறுந்தொகை   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.043 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறை அது பாடிப் பிச்சைக்கு  (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))   பண் - திருநேரிசை:கொல்லி   ( திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
4.108 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாணிக்கு உயிர் பெறக் கூற்றை  (திருமாற்பேறு)   பண் - திருவிருத்தம்   ( அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
5.059 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொரும் ஆற்றின் படை வேண்டி,  (திருமாற்பேறு)   பண் - திருக்குறுந்தொகை   ( மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
5.060 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏதும் ஒன்றும் அறிவு இலர்  (திருமாற்பேறு)   பண் - திருக்குறுந்தொகை   ( மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
6.080 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாரானை; பாரினது பயன் ஆனானை;  (திருமாற்பேறு)   பண் - திருத்தாண்டகம்   ( மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
6.064 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - திருத்தாண்டகம்   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.065 திருநாவுக்கரசர் - தேவாரம் -உரித்தவன் காண், உரக் களிற்றை  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   பண் - திருத்தாண்டகம்   ( ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.092 திருநாவுக்கரசர் - தேவாரம் -மூ இலை வேல் கையானை,  (திருக்கழுக்குன்றம்)   பண் - திருத்தாண்டகம்   ( வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
5.082 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ட மா மலர் கொண்டு  (திருவான்மியூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
6.045 திருநாவுக்கரசர் - தேவாரம் -வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்  (திருவொற்றியூர்)   பண் - திருத்தாண்டகம்   ( மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.086 திருநாவுக்கரசர் - தேவாரம் -செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  (திருவொற்றியூர்)   பண் - திருவிருத்தம்   ( மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
5.024 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒற்றி ஊரும் ஒளி மதி,  (திருவொற்றியூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.045 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  (திருவொற்றியூர்)   பண் - திருநேரிசை:கொல்லி   ( மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.046 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து  (திருவொற்றியூர்)   பண் - திருநேரிசை   ( மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
5.025 திருநாவுக்கரசர் - தேவாரம் -முந்தி மூ எயில் எய்த  (திருப்பாசூர்)   பண் - திருக்குறுந்தொகை   ( பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
6.083 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண் ஆகி, நிலன் ஆகி,  (திருப்பாசூர்)   பண் - திருத்தாண்டகம்   ( பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
6.078 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்  (திருவாலங்காடு (பழையனூர்))   பண் - திருத்தாண்டகம்   ( ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
4.068 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ள நீர்ச் சடையர் போலும்;  (திருவாலங்காடு (பழையனூர்))   பண் - திருநேரிசை   ( ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
6.008 திருநாவுக்கரசர் - தேவாரம் -விற்று ஊண் ஒன்று இல்லாத  (திருக்காளத்தி)   பண் - திருத்தாண்டகம்   ( காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
திருப்பைஞ்ஞீலியில் சிலநாள் தங்கித் திருவண்ணாமைலக்குப் புறப்பட்டார். திருவண்ணாமைல, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார்.
4.058 திருநாவுக்கரசர் - தேவாரம் -கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))   பண் - திருநேரிசை:காந்தாரம்   ( பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
6.049 திருநாவுக்கரசர் - தேவாரம் -சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;  (திருகோகர்ணம் (கோகர்ணா))   பண் - திருத்தாண்டகம்   ( மாபலநாதர் கோகரணநாயகியம்மை)
6.055 திருநாவுக்கரசர் - தேவாரம் -வே(ற்)ற்று ஆகி விண் ஆகி  (திருக்கயிலாயம்)   பண் - குறிஞ்சி   ( கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047 திருநாவுக்கரசர் - தேவாரம் -கனகம் மா வயிரம் உந்தும்  (திருக்கயிலாயம்)   பண் - திருநேரிசை   ( கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொறை உடைய பூமி, நீர்,  (திருக்கயிலாயம்)   பண் - போற்றித்திருத்தாண்டகம்   ( கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாட்டு ஆன நல்ல தொடையாய்,  (திருக்கயிலாயம்)   பண் - போற்றித்திருத்தாண்டகம்   ( கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.037 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்  (திருவையாறு)   பண் - திருத்தாண்டகம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.003 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  (திருவையாறு)   பண் - காந்தாரம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய், காடுமேடு, மலை, மணல் பரப்புக்களில் நடந்துசென்றார். கால்களால் நடக்கலற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முறிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக் கிடந்தார். பெருமான் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று, திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும், இதுவே தக்கது என்று கூற அப்பரும், என்னை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று உறுதி மொழிந்தார். முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் நாவினுக்கரசனே! எழுந்திரு என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து அண்ணலே, கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய் இத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்க என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங் கோயில் கயிலைங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்க, விண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திரு நாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து மாதர்ப் பிறைக்கண்ணியானை என்ற திருப்பதிகம் பாடித் தொழுதார்.
6.038 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓசை ஒலி எலாம் ஆனாய்,  (திருவையாறு)   பண் - திருத்தாண்டகம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.027 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வாய்தல் உளான், வந்து;  (திருவையாறு)   பண் - திருக்குறுந்தொகை   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.028 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்  (திருவையாறு)   பண் - திருக்குறுந்தொகை   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.038 திருநாவுக்கரசர் - தேவாரம் -கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்  (திருவையாறு)   பண் - திருநேரிசை   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.039 திருநாவுக்கரசர் - தேவாரம் -குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  (திருவையாறு)   பண் - திருநேரிசை:கொல்லி   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.040 திருநாவுக்கரசர் - தேவாரம் -தான் அலாது உலகம் இல்லை;  (திருவையாறு)   பண் - திருநேரிசை   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.091 திருநாவுக்கரசர் - தேவாரம் -குறுவித்தவா, குற்றம் நோய் வினை  (திருவையாறு)   பண் - திருவிருத்தம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.092 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  (திருவையாறு)   பண் - திருவிருத்தம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.098 திருநாவுக்கரசர் - தேவாரம் -அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  (திருவையாறு)   பண் - திருவிருத்தம்   ( பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
4.013 திருநாவுக்கரசர் - தேவாரம் -விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்  (திருவையாறு)   பண் - பழந்தக்கராகம்   ( செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
4.037 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலனை வீழச் செற்ற கழல்  (திருநெய்த்தானம்)   பண் - திருநேரிசை   ( நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.089 திருநாவுக்கரசர் - தேவாரம் -பார் இடம் சாடிய பல்  (திருநெய்த்தானம்)   பண் - திருவிருத்தம்   ( நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
5.034 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,  (திருநெய்த்தானம்)   பண் - திருக்குறுந்தொகை   ( நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.041 திருநாவுக்கரசர் - தேவாரம் -வகை எலாம் உடையாயும் நீயே  (திருநெய்த்தானம்)   பண் - திருத்தாண்டகம்   ( நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.042 திருநாவுக்கரசர் - தேவாரம் -மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று  (திருநெய்த்தானம்)   பண் - திருத்தாண்டகம்   ( நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.039 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு ஏறு திருமேனி உடையான்  (திருமழபாடி)   பண் - திருத்தாண்டகம்   ( வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.040 திருநாவுக்கரசர் - தேவாரம் -அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு  (திருமழபாடி)   பண் - திருத்தாண்டகம்   ( வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.043 திருநாவுக்கரசர் - தேவாரம் -நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;  (திருப்பூந்துருத்தி)   பண் - திருத்தாண்டகம்   ( புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
5.032 திருநாவுக்கரசர் - தேவாரம் -கொடி கொள் செல்வ விழாக்  (திருப்பூந்துருத்தி)   பண் - திருக்குறுந்தொகை   ( புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
4.088 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாலினை மால் உற நின்றான்,  (திருப்பூந்துருத்தி)   பண் - திருவிருத்தம்   ( புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
6.093 திருநாவுக்கரசர் - தேவாரம் -நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  (பலவகைத் திருத்தாண்டகம்)   பண் - திருத்தாண்டகம்   ( )
6.096 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்  (பொது -தனித் திருத்தாண்டகம்)   பண் - திருத்தாண்டகம்   ( )
6.071 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொருப்பள்ளி, வரை வில்லாப் புரம்  (பொது -அடைவுத் திருத்தாண்டகம்)   பண் - திருத்தாண்டகம்   ( )
4.009 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  (பொது - திருஅங்கமாலை)   பண் - சாதாரி   ( )
5.089 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  (பொது -தனித் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.091 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஏ இலானை, என் இச்சை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.092 திருநாவுக்கரசர் - தேவாரம் -கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்  (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.093 திருநாவுக்கரசர் - தேவாரம் -காசனை, கனலை, கதிர் மா  (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.094 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,  (தொழற்பாலதே திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.095 திருநாவுக்கரசர் - தேவாரம் -புக்கு அணைந்து புரிந்து அலர்  (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.096 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் உள்ளத் திரள் புன்சடையின்  (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.097 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்  (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.098 திருநாவுக்கரசர் - தேவாரம் -நீறு அலைத்தது ஓர் மேனி,  (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.099 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாவமும் பழி பற்று அற  (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
5.100 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்  (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை)   பண் - திருக்குறுந்தொகை   ( )
6.076 திருநாவுக்கரசர் - தேவாரம் -புரிந்து அமரர் தொழுது ஏத்தும்  (திருப்புத்தூர்)   பண் - திருத்தாண்டகம்   ( புத்தூரீசர் சிவகாமியம்மை)
6.019 திருநாவுக்கரசர் - தேவாரம் -முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;  (திருஆலவாய் (மதுரை))   பண் - திருத்தாண்டகம்   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
4.062 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!  (திருஆலவாய் (மதுரை))   பண் - கொல்லி   ( சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
6.018 திருநாவுக்கரசர் - தேவாரம் -வடி ஏறு திரிசூலம் தோன்றும்  (திருப்பூவணம்)   பண் - திருத்தாண்டகம்   ( பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
4.061 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,  (திருஇராமேச்சுரம்)   பண் - திருநேரிசை   ( இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
4.016 திருநாவுக்கரசர் - தேவாரம் -செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி  (திருப்புகலூர்)   பண் - இந்தளம்   ( அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
4.054 திருநாவுக்கரசர் - தேவாரம் -பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  (திருப்புகலூர்)   பண் - திருநேரிசை:காந்தாரம்   ( அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
6.094 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரு நிலன் ஆய், தீ  (நின்றத் திருத்தாண்டகம்)   பண் - புறநீர்மை   ( )
6.095 திருநாவுக்கரசர் - தேவாரம் -அப்பன் நீ, அம்மை நீ,  (பொது -தனித் திருத்தாண்டகம்)   பண் - திருத்தாண்டகம்   ( )
6.070 திருநாவுக்கரசர் - தேவாரம் -தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,  (பொது -க்ஷேத்திரக்கோவை)   பண் - தக்கேசி   ( )
4.078 திருநாவுக்கரசர் - தேவாரம் -வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்  (பொது -குறைந்த நேரிசை)   பண் - திருநேரிசை   ( )
4.079 திருநாவுக்கரசர் - தேவாரம் -தம் மானம் காப்பது ஆகித்  (பொது -குறைந்த நேரிசை)   பண் - திருநேரிசை   ( )
4.075 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டனேன் பட்டது என்னே! தூய  (பொது -தனித் திருநேரிசை)   பண் - கொல்லி   ( )
4.076 திருநாவுக்கரசர் - தேவாரம் -மருள் அவா மனத்தன் ஆகி  (பொது -தனித் திருநேரிசை)   பண் - திருநேரிசை   ( )
4.077 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடும்பகல் நட்டம் ஆடி, கையில்  (பொது -தனித் திருநேரிசை)   பண் - திருநேரிசை   ( )
4.084 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு ஆம் திசைக்கும் இரு  (பொது -ஆருயிர்த் திருவிருத்தம்)   பண் - வியாழக்குறிஞ்சி   ( )
4.014 திருநாவுக்கரசர் - தேவாரம் -பருவரை ஒன்று சுற்றி அரவம்  (பொது -தசபுராணம்)   பண் - பழம்பஞ்சுரம்   ( )
4.015 திருநாவுக்கரசர் - தேவாரம் -பற்று அற்றார் சேர் பழம்  (பாவநாசத் திருப்பதிகம்)   பண் - பழம்பஞ்சுரம்   ( )
4.008 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிவன் எனும் ஓசை அல்லது,  (பொது - சிவனெனுமோசை)   பண் - பியந்தைக்காந்தாரம்   ( )
4.074 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  (பொது -நினைந்த திருநேரிசை)   பண் - கொல்லி   ( )
6.097 திருநாவுக்கரசர் - தேவாரம் -அண்டம் கடந்த சுவடும் உண்டோ?  (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம்)   பண் - திருத்தாண்டகம்   ( )
6.027 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற    (திருவாரூர்)   பண் - திருத்தாண்டகம்   ( முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
இறைவன் திருநாவுக்கரசரின் பற்றற்ற நிலையை உலகிற்குக் காட்டத் திருவுளங்கொண்டான். ஆண்டஅரசு உழவாரப்பணி செய் யும் இடங்களில் பொன்னும் நவமணிகளும் கிடக்கும்படிச் செய்தான். திருநாவுக்கரசர் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இயல்பு உடையாராதலின் அவற்றை ஏனைய கற்களோடு வாரித் தடாகத்துள் எறிந்தார். அப்பரின் தூய துறவற நிலையை மேலும் உலகிற்கு விளக்க எண்ணிய இறைவன் அரம்பையர் பலரை அங்குவரச் செய்தனன். அரம்பையர் ஆடல் பாடல்களால் பல்லாற்றானும் திருநாவுக்கரசரை மயக்க முற்பட்டனர். ஒன்றினாலும் மனம் திரியாத அப்பர் அவர்களைநோக்கி உம்மால் இங்கு எனக்கு ஆகவேண்டியகுறை யாதுளது? நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளாயினேன் என்னும் கருத்தமைந்த பொய்மாயப் பெருங்கடலில் என்று தொடங்கும் திருத் தாண்டகத்திருப்பதிகத்தால் தெரிவித்தருளினர். அரம்பையரும் சோர்ந்து அரசை வணங்கி அகன்றனர்.
4.105 திருநாவுக்கரசர் - தேவாரம் -தன்னைச் சரண் என்று தாள்  (திருப்புகலூர்)   பண் - திருவிருத்தம்   ( வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.110 திருநாவுக்கரசர் - தேவாரம் -சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,  (பசுபதித் திருவிருத்தம்)   பண் - கொல்லி   ( )
4.111 திருநாவுக்கரசர் - தேவாரம் -விடையும் விடைப் பெரும் பாகா!  (பொது -சரக்கறை திருவிருத்தம்)   பண் - திருவிருத்தம்   ( )
4.112 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  (பொது -தனித் திருவிருத்தம்)   பண் - திருவிருத்தம்   ( )
4.113 திருநாவுக்கரசர் - தேவாரம் -பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  (பொது -தனித் திருவிருத்தம்)   பண் - திருவிருத்தம்   ( )
6.099 திருநாவுக்கரசர் - தேவாரம் -எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,  (திருப்புகலூர்)   பண் - திருத்தாண்டகம்   ( அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். எல்லாவுலகமும் போற்ற எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார்.

This page was last modified on Sat, 11 May 2024 01:36:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai historical order