| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| Thirumurai |
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள் பண் - நட்டராகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=gyhxZmpupGU |
|
2.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் பண் - நட்டராகம் (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=wC9RryMFjDE |
|
2.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இன்று நன்று, நாளை நன்று பண் - நட்டராகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE |
|
2.100
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படை கொள் கூற்றம் வந்து, பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DR1a1S4558c |
|
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து பண் - நட்டராகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=L37mdxAAB-c |
|
2.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அன்ன மென் நடை அரிவையோடு பண் - நட்டராகம் (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=zc688RhkilI |
|
2.103
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புல்கு பொன் நிறம் புரி பண் - நட்டராகம் (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=v_lDttoXUC4 |
|
2.104
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி கொள் மேனி வெண் பண் - நட்டராகம் (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=q50yDCJSNGg |
|
2.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின் உலாவிய சடையினர், விடையினர், பண் - நட்டராகம் (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oXeTl6-fDCY |
|
2.106
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! பண் - நட்டராகம் (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://sivaya.org/audio/2.106 Enna Punniyam.mp3 Audio: https://www.youtube.com/watch?v=cMWzX_dVUv0 |
|
2.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விருது குன்ற, மாமேரு வில், பண் - நட்டராகம் (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lGhLAa2QCPA |
|
2.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வடி கொள் மேனியர், வான பண் - நட்டராகம் (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nVPvx8YStx8 |
|
2.109
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி பண் - நட்டராகம் (திருக்கோட்டூர் கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=mRfiwEbpSyE |
|
2.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், பண் - நட்டராகம் (திருமாந்துறை ஐராவணேசுவரர் அழகாயமர்ந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=AfW8NCKQsMs |
|
2.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் என பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=I3ZgtC3Dewg |
|
2.112
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாது ஓர் கூறு உகந்து, பண் - நட்டராகம் (திருவாடானை ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை) Audio: https://sivaya.org/audio/2.112 Maathor kooruganthu.mp3 Audio: https://www.youtube.com/watch?v=_VfzpCKqXOY |
|
7.017
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கோவலன் நான்முகன் வானவர் கோனும் பண் - நட்டராகம் (திருநாவலூர் (திருநாமநல்லூர்) நாவலீசுவரர் சுந்தராம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=WN58QVk8-Rk |
|
7.018
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; பண் - நட்டராகம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ) Audio: https://www.youtube.com/watch?v=vCaZ-4UzAlM |
|
7.019
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பண் - நட்டராகம் (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DhIte7qQ1tE |
|
7.020
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீள நினைந்து அடியேன் உமை பண் - நட்டராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY Audio: https://www.youtube.com/watch?v=xfa2LtyZ3GU |
|
7.021
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; பண் - நட்டராகம் (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=jAe8LhAAZsA |
|
7.022
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முன்னவன், எங்கள் பிரான், முதல் பண் - நட்டராகம் (திருப்பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=1nr1Tdgfwpc |
|
7.023
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், பண் - நட்டராகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nBSva8qM1vg |
|
7.024
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை பண் - நட்டராகம் (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை) Audio: https://www.youtube.com/watch?v=gT_jrRKsfvo |
|
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை பண் - நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk |
|
7.026
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! பண் - நட்டராகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vU7izHQuO6s |
|
7.027
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விடை ஆரும் கொடியாய்! வெறி பண் - நட்டராகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CDoxdF51pUQ |
|
7.028
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொடி ஆர் மேனியனே! புரி பண் - நட்டராகம் (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=07d-sVIMhb4 |
|
7.029
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; பண் - நட்டராகம் (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sRZ1DTO-oc0 |
|
7.030
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NBtJgCJKwnI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.097  
நம் பொருள், நம் மக்கள்
பண் - நட்டராகம் (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
|
நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர், அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம் உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே! | [1] |
|
பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும் ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர், தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம் தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே! | [2] |
|
சோறு கூறை இன்றியே துவண்டு, தூரம் ஆய், நுமக்கு ஏறு சுற்றம் எள்கவே, இடுக்கண் உய்ப்பதன் முனம் ஆறும் ஓர் சடையினான், ஆதி யானை செற்றவன், நாறு தேன் மலர்ப்பொழில் நலம் கொள் காழி சேர்மினே! | [3] |
|
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, நாளையும் உச்சி வம்! எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் பிச்சர், நச்சு அரவு அரைப் பெரிய சோதி, பேணுவார் இச்சை செய்யும் எம்பிரான், எழில் கொள் காழி சேர்மினே! | [4] |
|
கண்கள் காண்பு ஒழிந்து, மேனி கன்றி, ஒன்று அலாத நோய் உண்கிலாமை செய்து, நும்மை உய்த்து அழிப்பதன் முனம் விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுது செய், கண்கள் மூன்று உடைய, எம் கருத்தர் காழி சேர்மினே! | [5] |
|
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து, நீர், எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்) மினோ! பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான், கொல்லை ஏறு அது ஏறுவான், கோலக் காழி சேர்மினே! | [6] |
|
பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லும் நீர் ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன், பை மிகுத்த பாம்பு அரைப் பரமர், காழி சேர்மினே! | [8] |
|
காலினோடு கைகளும் தளர்ந்து, காம்நோய்தனால் ஏல வார்குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே! | [9] |
|
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவ தன் முனம் தலை பறித்த கையர், தேரர், தாம் தரிப்ப(அ)ரியவன்; சிலை பிடித்து எயில் எய்தான்; திருந்து காழி சேர்மினே! | [10] |
|
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை, ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர், மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்
பண் - நட்டராகம் (திருத்தலம் திருத்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )
|
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி வந்து இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்! உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே?? | [1] |
|
அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை,
கூவிளம், தொடுத்து உடன் சடைப் பெய்தாய்! துருத்தியாய்! ஓர் காலனைக் கடுத்து, அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் எடுத்து எடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில், நல்லமே. | [2] |
|
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச் சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்! பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா! துருத்தி புக்கு, எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்கொ | [3] |
|
கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி இல்லை; தொண்டர்
தம் அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது அன்றியும், ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய் இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே! | [4] |
|
துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்! திருந்து அடி மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து, இம் மண்ணின்மேல் பிறக்கும் ஆறு காட்டினாய்! பிணிப்படும் உடம்பு விட்டு இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே? | [5] |
|
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம்
பொழில் துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்! மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே? | [6] |
|
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்! அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல் மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே? | [7] |
|
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்! கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை, அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே? | [8] |
|
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய், வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்; துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி, உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே. | [9] |
|
புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த பொய்தனை உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம் துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம் பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே. | [10] |
|
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ் சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால், பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே, குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.099  
இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; (திருத்தலம் அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
|
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்! மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல், கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே! | [1] |
|
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர், நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ! வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம் கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே! | [2] |
|
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர், தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்! அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே! | [3] |
|
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ! மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக் கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே! | [4] |
|
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ! பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான், கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே! | [5] |
|
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப் பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை; காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக் கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே! | [6] |
|
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர், மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ! பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக் கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே! | [7] |
|
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து
நீர், பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ! வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர் குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே! | [8] |
|
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்; செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர், கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே! | [9] |
|
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும், பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை; விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும் கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே! | [10] |
|
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம் பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.100  
படை கொள் கூற்றம் வந்து,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோவலூர் வீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
|
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம் விட்டபோதின்கண், இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே! குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள் விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே. | [1] |
|
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால் நிமிர்த்து இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ! குரவம் ஏறி வண்டு இனம் குழலொடி யாழ் செய் கோவலூர், விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே. | [2] |
|
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்! அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள் அழுந்தாதே, கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள் வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே. | [3] |
|
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி, குன்மமும், இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன், பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர், வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே. | [4] |
|
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின் கண்; துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே! வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே. | [5] |
|
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும், ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது அன்றியும், கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள் வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே. | [6] |
|
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின் கண், நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால், வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர், விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே. | [7] |
|
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல், போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள், வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே. | [8] |
|
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள் நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே. | [9] |
|
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர் இட்டார்களும், அறிவு இலாத அமணர், சொல் அவத்தம் ஆவது அறிதிரேல், பொறி கொள் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனில், வெறி கொள் கங்கை தாங்கினான், வீரட்டானம் சேர்துமே. | [10] |
|
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன், பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால், அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண் கோவலூர்தனில், விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.101  
பருக் கை யானை மத்தகத்து
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
|
பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே. | [1] |
|
விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி, கொன்றை, மத்தமும், இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர் கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய், அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே. | [2] |
|
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர், காலன் இன் உயிர் மறுத்து மாணிதன் தன் ஆகம் வண்மை செய்த மைந்தன், ஊர் வெறித்து மேதி ஓடி, மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி அறுத்து மண்டி, ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே. | [3] |
|
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில், குஞ்சி ஆர வந்தி செய்ய, அஞ்சல்! என்னி மன்னும் ஊர் பஞ்சி ஆரும் மெல் அடி, பணைத்த கொங்கை, நுண் இடை, அம்சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே. | [4] |
|
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார் மனத்து அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம் அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே. | [5] |
|
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு, அருத்தியோடு உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய் அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே. | [6] |
|
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர், காமனை மங்க வெங்கணால் விழித்த மங்கைபங்கன், மன்னும் ஊர் தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து, மாவின்மேல் அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே. | [7] |
|
வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்) உரத்தொடும் நெரித்தவன், புரத்தை முன்(ன்) எரித்தவன்(ன்), இருந்த ஊர் நிரைத்த மாளிகைத் திருவின் நேர் அனார்கள், வெண் நகை அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே. | [8] |
|
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து, மெய் வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங் குரா, அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே. | [9] |
|
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம் வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன், மேவும் ஊர் மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செநெல் அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே. | [10] |
|
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை, நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.102  
அன்ன மென் நடை அரிவையோடு
பண் - நட்டராகம் (திருத்தலம் திருச்சிரபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
|
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம் பெருமானார், மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம் தாம் பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர் ஆர் பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே. | [1] |
|
கோல மா கரி உரித்தவர்; அரவொடும், ஏனக்கொம்பு, இள ஆமை, சாலப் பூண்டு, தண்மதி அது சூடிய சங்கரனார்; தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர்; பொருகடல் விடம் உண்ட நீலத்து ஆர் மிடற்று அண்ணலார்; சிரபுரம் தொழ, வினை நில்லாவே. | [2] |
|
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட மதித்து, அன்று, கானத்தே திரி வேடனாய், அமர் செயக் கண்டு, அருள்புரிந்தார் பூந் தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை, குற்றங்கள், குறுகாவே. | [3] |
|
மாணிதன் உயிர் மதித்து உண வந்த அக் காலனை உதை செய்தார், பேணி உள்கும் மெய் அடியவர் பெருந் துயர்ப் பிணக்கு அறுத்து அருள் செய்வார், வேணி வெண்பிறை உடையவர், வியன்புகழ்ச் சிரபுரத்து அமர்கின்ற ஆணிப்பொன்னினை, அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே. | [4] |
|
பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம், ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய் நின்றார் சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே. | [5] |
|
ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள் அவை மூட, ஆழி, எந்தை! என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து உயர்ந்தார் தாம், யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன், எம்பெருமானார், வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை அடையாவே. | [6] |
|
பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம் இடு சுடுகாட்டில், வேய் கொள் தோளிதான் வெள்கிட, மா நடம் ஆடும் வித்தகனார்; ஒண் சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார் தாம்; தாய்கள் ஆயினார், பல் உயிர்க்கும்; தமைத் தொழுமவர் தளராரே. | [7] |
|
இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து, அன்று, கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து, அருள் செய்தார் புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன் இடைப் புகுந்து ஆரும், குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை குறுகாவே. | [8] |
|
வண்டு சென்று அணை மலர்மிசை நான்முகன், மாயன், என்று இவர் அன்று கண்டு கொள்ள, ஓர் ஏனமோடு அன்னம் ஆய், கிளறியும் பறந்தும், தாம் பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி; பரமேட்டி; கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுது எழ, வினை அவை கூடாவே. | [9] |
|
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத் துவர் தோய்ந்த செறித்த சீவரத் தேரரும், தேர்கிலாத் தேவர்கள் பெருமானார் முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட, இள வாளை வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ, வினை விட்டிடும், மிகத் தானே. | [10] |
|
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப் பெருந்தொத்தை, விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர் பெருமானை, பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.103  
புல்கு பொன் நிறம் புரி
பண் - நட்டராகம் (திருத்தலம் திருஅம்பர்மாகாளம் ; (திருத்தலம் அருள்தரு பட்சநாயகியம்மை உடனுறை அருள்மிகு காளகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
|
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி சூடி, பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம், அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே. | [1] |
|
அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில் அனல் ஏந்தி, இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன, பலபூதம்; மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல், மாகாளம் பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே. | [2] |
|
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடி சேரக் கணங்கள் பாடவும், கண்டவர் பரவவும், கருத்து அறிந்தவர் மேய மணம் கொள் பூம்பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம் வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே. | [3] |
|
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர் நறுங்கொன்றை தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர், மேய மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம், கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே. | [4] |
|
நெதியம் என் உள? போகம் மற்று என் உள? நிலம்மிசை நலம் ஆய கதியம் என் உள? வானவர் என் உளர்? கருதிய பொருள் கூடில் மதியம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம், புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே. | [5] |
|
கண் உலாவிய கதிர் ஒளி முடிமிசைக் கனல் விடு சுடர் நாகம், தெண் நிலாவொடு, திலகமும், நகுதலை, திகழ வைத்தவர் மேய மண் உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம் உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர், இவ் உலகினில் உயர்வாரே. | [6] |
|
தூசு தான் அரைத் தோல் உடை, கண்ணி அம் சுடர்விடு நறுங்கொன்றை, பூசு வெண்பொடிப் பூசுவது, அன்றியும், புகழ் புரிந்தவர் மேய மாசு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம் பேசு நீர்மையர் யாவர், இவ் உலகினில் பெருமையைப் பெறுவாரே. | [7] |
|
பவ்வம் ஆர் கடல் இலங்கையர் கோன் தனைப் பருவரைக் கீழ் ஊன்றி, எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள் செய்த இறையவன் உறை கோயில் மவ்வம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம் கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனல் இடைச் செதிள் அன்றே! | [8] |
|
உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர் மலரோனும், பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும், பரவ நின்றவர் மேய மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம் கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே. | [9] |
|
பிண்டிபாலரும், மண்டை கொள் தேரரும், பீலி கொண்டு உழல்வாரும், கண்ட நூலரும், கடுந் தொழிலாளரும், கழற நின்றவர் மேய வண்டு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம், பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அறப் பரவுதல் செய்வோமே. | [10] |
|
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை, நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.104  
பொடி கொள் மேனி வெண்
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கடிக்குளம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு கற்பகேசுவரர் திருவடிகள் போற்றி )
|
பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி அதள் ஆடை, கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க, கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை, தம் முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே. | [1] |
|
விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா விகிர்தனை, விழவு ஆரும் மண்களார் துதித்து அன்பராய் இன்பு உறும் வள்ளலை, மருவி, தம் கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைப் பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ் ஆமே. | [2] |
|
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது, புலி அதள் உடை, நாகம் தங்க மங்கையைப் பாகம் அது உடையவர், தழல் புரை திருமேனிக் கங்கை சேர்தரு சடையினர், கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை, எங்கும் ஏத்தி நின்று இன்பு உறும் அடியரை இடும்பை வந்து அடையாவே. | [3] |
|
நீர் கொள் நீள் சடை முடியனை, நித்திலத் தொத்தினை, நிகர் இல்லாப் பார் கொள் பார் இடத்தவர் தொழும் பவளத்தை, பசும்பொன்னை, விசும்பு ஆரும் கார் கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம் தன்னை, சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே. | [4] |
|
சுரும்பு சேர் சடைமுடியினன், மதியொடு துன்னிய தழல் நாகம், அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர்பல கொண்டு அடியவர் போற்றக் கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை, விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர் தாமே. | [5] |
|
மாது இலங்கிய பாகத்தன்; மதியமொடு, அலைபுனல், அழல், நாகம், போது இலங்கிய கொன்றையும், மத்தமும், புரிசடைக்கு அழகு ஆக, காது இலங்கிய குழையினன்; கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அறக் கெடும் அன்றே. | [6] |
|
குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம், பல குளிர் பொய்கை, உலவு புள் இனம், அன்னங்கள் ஆலிடும், பூவை சேரும் கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தைச் சீர் நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லா தானே. | [7] |
|
மடுத்த வாள் அரக்கன்(ன்) அவன் மலைதன் மேல் மதி இலாமையில் ஓடி எடுத்தலும், முடிதோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற, கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட, கடிக்குளம் தனில் மேவிக் கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர் தாமே. | [8] |
|
நீரின் ஆர் கடல் துயின்றவன், அயனொடு, நிகழ் அடி முடி காணார்; பாரின் ஆர் விசும்பு உற, பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி, காரின் ஆர் பொழில் சூழ் தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின் தன் சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை அடையாவே. | [9] |
|
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும், குறியினில் நெறி நில்லா மிண்டர் மிண்டு உரை கேட்டு, அவை மெய் எனக் கொள்ளன் மின்! விடம் உண்ட கண்டர், முண்டம் நல் மேனியர், கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர், தொண்டர் தொண்டரைத் தொழுது அடி பணிமின்கள்! தூ நெறி எளிது ஆமே. | [10] |
|
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அது ஆய், மகிழ்வோடும், கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை, இனம் மலிந்து இசை பாட வல்லார்கள், போய் இறைவனோடு உறைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.105  
மின் உலாவிய சடையினர், விடையினர்,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கீழ்வேளூர் ; (திருத்தலம் அருள்தரு வனமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு அட்சயலிங்கநாதர் திருவடிகள் போற்றி )
|
மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும் அரவோடும் பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர், பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு கீழ்வேளூர் உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே. | [1] |
|
நீர் உலாவிய சடை இடை அரவொடு, மதி, சிரம் நிரைமாலை, வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க, ஏர் உலாவிய இறைவனது உறைவு இடம் எழில் திகழ் கீழ்வேளூர் சீர் உலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு வினை போமே. | [2] |
|
வெண் நிலா மிகு விரிசடை அரவொடும், வெள் எருக்கு, அலர்மத்தம், பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வு உறு கீழ்வேளூர், பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்கோயில் எம்பெருமானை, உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே. | [3] |
|
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத் தொங்கவைத்து அழகு ஆக நாடு உலாவிய பலி கொளும் நாதனார், நலம் மிகு கீழ்வேளூர்ப் பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்கோயிலுள் பிரியாது நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலை மிகப் பெறுவாரே. | [4] |
|
துன்று வார்சடைச் சுடர் மதி, நகுதலை, வடம் அணி சிரமாலை, மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை, நினைவோடும் சென்று உலாவி நின்று, ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே. | [5] |
|
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை, கூத்தனை, மகிழ்ந்து உள்கித் தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில் மன்னும் முத்து உலாவிய வித்தினை, ஏத்துமின்! முடுகிய இடர் போமே. | [6] |
|
பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும் வன்னியும் துன் ஆரும் கறை நிலாவிய கண்டர், எண்தோளினர், காதல் செய் கீழ்வேளூர் மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில் மன்னும் நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே. | [7] |
|
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும், அரக்கன்தன் தலை எலாம் நெரிந்து அலறிட, ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய, வல்வினை போமே. | [8] |
|
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணாப் பஞ்சு உலாவிய மெல் அடிப் பார்ப்பதி பாகனை, பரிவோடும் செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர் நஞ்சு உலாவிய கண்டனை, நணுகுமின்! நடலைகள் நணுகாவே. | [9] |
|
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள், சீவரத்தார், வீறு இலாத வெஞ்சொல் பல விரும்பன் மின்! சுரும்பு அமர் கீழ்வேளூர் ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெருந்திருக்கோயில் மன்னு பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின்! தவம் ஆமே. | [10] |
|
குருண்ட வார் குழல் சடை உடைக் குழகனை, அழகு அமர் கீழ்வேளூர்த் திரண்ட மா மறையவர் தொழும் பெருந்திருக்கோயில் எம்பெருமானை, இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் தெருண்ட பாடல் வல்லார் அவர், சிவகதி பெறுவது திடம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவலஞ்சுழி ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சித்தீசநாதர் திருவடிகள் போற்றி )
|
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,முழுமணித்தரளங்கள் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப் பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே. | [1] |
|
விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு நஞ்சம் உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,உலகத்தில் வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம் ஆகக் கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே. | [2] |
|
திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண் அடியாரைப் பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம் பிணிநோய்க்கு மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம் தானே. | [3] |
|
கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம் முனிவர்க்கு அன்று இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்; மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து, அருங்கானத்து, அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம் அறியோமே! | [4] |
|
மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு; ஒருபாகம் பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்; பெருங்கடல் பவளம் போல் வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம் புக்க எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி தொழுவாரே. | [5] |
|
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர் இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்; அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும் பலிக்கு என்று வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை கவர்ந்தாரே! | [6] |
|
குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய நெய்த்தானம், என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்; இமையவர் பணி கேட்பார்; அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி அரனார்பால் சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று சேயிழை தளர்வு ஆமே. | [7] |
|
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல வரைப் பரப்பு ஆய கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி, மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி எம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே. | [8] |
|
அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு அணைத் துயின்றானும், கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர் தடக்கையில் மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே. | [9] |
|
அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து அவம் செய்வார் நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா நீர் மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு ஒண்ணாதே. | [10] |
|
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல் காழி நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர் தம்மை வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.107  
விருது குன்ற, மாமேரு வில்,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கேதீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு கௌரிநாயகியம்மை உடனுறை அருள்மிகு கேதீச்சுவரர் திருவடிகள் போற்றி )
|
விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி அம்பா, பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம், கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே. | [1] |
|
பாடல் வீணையர், பல பல சரிதையர், எருது உகைத்து அரு நட்டம் ஆடல் பேணுவர், அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர், ஈடம் ஆவது இருங்கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம், கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ, கெடும், இடர் வினைதானே. | [2] |
|
பெண் ஒர் பாகத்தர், பிறை தவழ் சடையினர், அறை கழல் சிலம்பு ஆர்க்கச் சுண்ணம் ஆதரித்து ஆடுவர், பாடுவர், அகம்தொறும் இடு பிச்சைக்கு உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர், உயர்தரு மாதோட்டத்து, அண்ணல், நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே. | [3] |
|
பொடி கொள் மேனியர், புலி அதள் அரையினர், விரிதரு கரத்து ஏந்தும் வடி கொள் மூ இலை வேலினர், நூலினர், மறிகடல் மாதோட்டத்து அடிகள், ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி, முடிகள் சாய்த்து, அடி பேண வல்லார் தம்மேல் மொய்த்து எழும் வினை போமே. | [4] |
|
நல்லர், ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய வல்லர், பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர், மலி கடல் மாதோட்டத்து எல்லை இல் புகழ் எந்தை, கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி, அல்லல் ஆசு அறுத்து, அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே. | [5] |
|
பேழை வார்சடைப் பெருந் திருமகள் தனைப் பொருந்த வைத்து, ஒருபாகம் மாழை அம் கயல் கண்ணிபால் அருளிய பொருளினர், குடிவாழ்க்கை வாழை அம்பொழில் மந்திகள் களிப்பு உற மருவிய மாதோட்ட, கேழல் வெண்மருப்பு அணிந்த நீள் மார்பர், கேதீச்சுரம் பிரியாரே. | [6] |
|
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளிப் பல் உலகினில் உயிர் வாழ்க்கை கண்ட நாதனார், கடலிடம் கைதொழ, காதலித்து உறை கோயில் வண்டு பண் செயும் மா மலர்ப்பொழில் மஞ்ஞை நடம் இடு மாதோட்டம், தொண்டர் நாள்தொறும் துதிசெய, அருள் செய் கேதீச்சுரம் அதுதானே. | [7] |
|
தென் இலங்கையர் குலபதி, மலை நலிந்து எடுத்தவன், முடி திண்தோள தன் நலம் கெட அடர்த்து, அவற்கு அருள் செய்த தலைவனார் கடல்வாய் அப் பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து, உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே. | [8] |
|
பூ உளானும் அப் பொரு கடல் வண்ணனும், புவி இடந்து எழுந்து ஓடி, மேவி நாடி, நுன் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும்? மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்நகர் மன்னி, தேவி தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே! | [9] |
|
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், புறன் உரைச் சமண் ஆதர், எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்மின்! மத்தயானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர், மாதோட்டத்து அத்தர், மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடைமி(ன்)னே! | [10] |
|
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர் மாதோட்டத்து ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை, அணி காழி நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலைப் பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.108  
வடி கொள் மேனியர், வான
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவிற்குடிவீரட்டம் ; (திருத்தலம் அருள்தரு மைவார்குழலியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
|
வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது ஆர்ந்த கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை புலி அதள் ஆர்ப்பர், விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை விற்குடி வீரட்டம், அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை அடையாவே. | [1] |
|
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி, உளம் கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்; பொரு கரி உரி போர்த்து விளங்கு மேனியர்; எம்பெருமான்; உறை விற்குடி வீரட்டம், வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே. | [2] |
|
கரிய கண்டத்தர், வெளிய வெண்பொடி அணி மார்பினர், வலங்கையில் எரியர், புன்சடை இடம் பெறக் காட்டு அகத்து ஆடிய வேடத்தர், விரியும் மா மலர்ப்பொய்கை சூழ் மது மலி விற்குடி வீரட்டம் பிரிவு இலாதவர் பெருந் தவத்தோர் எனப் பேணுவர், உலகத்தே. | [3] |
|
பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர், பொலிதர, நலம் ஆர்ந்த பாதம் சேர் இணைச்சிலம்பினர், கலம் பெறு கடல் எழு விடம் உண்டார், வேதம் ஓதிய நா உடையான், இடம் விற்குடி வீரட்டம் ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ, பிணி தீவினை கெடும் ஆறே? | [4] |
|
கடிய ஏற்றினர், கனல் அன மேனியர், அனல் எழ ஊர் மூன்றும் இடிய மால்வரை கால் வளைத்தான், தனது அடியவர்மேல் உள் வெடிய வல்வினை வீட்டுவிப்பான், உறை விற்குடி வீரட்டம் படியது ஆகவே பரவுமின்! பரவினால், பற்று அறும், அருநோயே. | [5] |
|
பெண் ஒர் கூறினர்; பெருமையர்; சிறுமறிக் கையினர்; மெய் ஆர்ந்த அண்ணல்; அன்பு செய்வார் அவர்க்கு எளியவர்; அரியவர், அல்லார்க்கு விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடி வீரட்டம் எண் நிலாவிய சிந்தையினார் தமக்கு இடர்கள் வந்து அடையாவே. | [6] |
|
இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல் அழிதர ஊன்று திடம் கொள் மால்வரையான், உரை ஆர்தரு பொருளினன், இருள் ஆர்ந்த விடம் கொள் மா மிடறு உடையவன், உறைபதி விற்குடி வீரட்டம் தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார் தமைத் துன்பம் நோய் அடையாவே. | [8] |
|
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறைபுனல் முடி ஆர்ந்த, வெங் கண் மால்வரைக்கரி உரித்து உகந்தவன் விற்குடி வீரட்டம் தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே. | [9] |
|
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரி துவர் ஆடையர், அவர் வார்த்தை பண்டும் இன்றும் ஓர் பொருள் எனக் கருதன் மின்! பரிவு உறுவீர், கேண்மின்; விண்ட மா மலர்ச் சடையவன் இடம் எனில், விற்குடிவீரட்டம்; கண்டு கொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்து உறும் குணத்தாரே. | [10] |
|
விலங்கலே சிலை இடம் என உடையவன், விற்குடிவீரட்டத்து இலங்கு சோதியை, எம்பெருமான் தனை, எழில் திகழ் கழல் பேணி, நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ்மாலை வலம் கொடே இசை மொழியுமின்! மொழிந்தக்கால், மற்று அது வரம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.109  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோட்டூர் ; (திருத்தலம் அருள்தரு தேன்மொழிப்பாவையம்மை உடனுறை அருள்மிகு கொழுந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
|
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை விடைச் சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர், பாங்காலே. | [1] |
|
பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவு அல்குல், மங்கைமார் பலர் மயில், குயில், கிளி, என மிழற்றிய மொழியார், மென் கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர் ;நற்கொழுந்தே! என்று எழுவார்கள் சங்கை ஒன்று இலர் ஆகி, சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே. | [2] |
|
நம்பனார், நல் மலர்கொடு தொழுது எழும் அடியவர் தமக்கு எல்லாம்; செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர், செல்வம் மல்கிய நல்ல கொம்பு அனார், தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே. | [3] |
|
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன்பலா, மாங்கனி, பயில்வு ஆய கலவமஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய, குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் நிலவு செல்வத்தர் ஆகி, நீள் நிலத்து இடை நீடிய புகழாரே. | [4] |
|
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் பருகும் ஆர் அமுது! என நின்று, பரிவொடு பத்தி செய்து, எத்திசையும் குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய்; அவன் அருள் பெறல் ஆமே. | [5] |
|
துன்று வார்சடைத் தூமதி, மத்தமும், துன் எருக்கு, ஆர் வன்னி, பொன்றினார் தலை, கலனொடு, பரிகலம், புலி உரி உடை ஆடை, கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவாரை என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை; கேடு இலை; ஏதம் வந்து அடையாவே. | [6] |
|
மாட மாளிகை, கோபுரம், கூடங்கள், மணி அரங்கு, அணி சாலை, பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம், பரிசொடு பயில்வு ஆய கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் கேடு அது ஒன்று இலர் ஆகி, நல் உலகினில் கெழுவுவர்; புகழாலே. | [7] |
|
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர்வரை எடுத்தலும், உமை அஞ்சி, சுளிய ஊன்றலும், சோர்ந்திட, வாளொடு நாள் அவற்கு அருள் செய்த குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினைத் தொழுவார்கள், தளிர் கொள் தாமரைப்பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர் தாமே. | [8] |
|
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள் செயும் முத்தினை, பவளத்தை, தேடி மால் அயன் காண ஒண்ணாத அத் திருவினை, தெரிவைமார் கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே! என்று எழுவார்கள் நீடு செல்வத்தர் ஆகி, இவ் உலகினில் நிகழ்தரு புகழாரே. | [9] |
|
கோணல் வெண்பிறைச் சடையனை, கோட்டூர் நற்கொழுந்தினை, செழுந்திரனை, பூணல் செய்து அடி போற்றுமின்! பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் காணல் ஒன்று இலாக் கார் அமண், தேரர்குண்டு ஆக்கர், சொல் கருதாதே, பேணல் செய்து, அரனைத் தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே. | [10] |
|
பந்து உலா விரல் பவளவாய்த் தேன் மொழிப்பாவையோடு உரு ஆரும் கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை, செழும் பவளம் வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த சந்து உலாம் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர், புகழாலே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.110  
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருமாந்துறை ; (திருத்தலம் அருள்தரு அழகாயமர்ந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஐராவணேசுவரர் திருவடிகள் போற்றி )
|
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி, செண்பகம், ஆனைக் கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர் பரந்து உந்தி, அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல் செய்வோமே. | [1] |
|
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி, அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான், அத் துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன், நெற்றி அளக வாள்நுதல் அரிவை தன் பங்கனை அன்றி, மற்று அறியோமே. | [2] |
|
கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின் குலை வாரி ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன், வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து ஏத்தும் கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல் அறியோமே. | [3] |
|
இலவம், ஞாழலும், ஈஞ்சொடு, சுரபுன்னை, இளமருது, இலவங்கம், கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்; அலை கொள் வார்புனல், அம்புலி, மத்தமும், ஆடு அரவு உடன் வைத்த மலையை; வானவர் கொழுந்தினை; அல்லது வணங்குதல் அறியோமே. | [4] |
|
கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை மலர் உந்தி, ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை, பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர் சேர்த்தி, தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே. | [5] |
|
பெருகு சந்தனம், கார் அகில், பீலியும், பெரு மரம், நிமிர்ந்து உந்தி, பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன் எம்பெருமானை பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த, மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல் செய்வோமே. | [6] |
|
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர் அவை வாரி இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை, அன்று அங்கு அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன், வரைவில்லால் நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல் பணிவோமே. | [7] |
|
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள், மாணிக்கம் உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை; நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை; சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீ நெறி அதுதானே. | [8] |
|
நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை நாளும் கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன் நலியானே. | [9] |
|
நின்று உணும் சமண், தேரரும், நிலை இலர்; நெடுங்கழை, நறவு, ஏலம், நன்று மாங்கனி, கதலியின் பலங்களும், நாணலின் நுரை வாரி, ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒரு காலம் அன்றி, உள் அழிந்து எழும் பரிசு அழகிது; அது அவர்க்கு இடம் ஆமே. | [10] |
|
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை, சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை நாவன், அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு மாலை பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.111  
தளிர் இள வளர் என
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவாய்மூர் ; (திருத்தலம் அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி )
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக
|
தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர் கழல் வீசி, கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக் கிறிமையார்; விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து, ஓர் சென்னியின் மேல் வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [1] |
|
வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு கோவண உடைமேல் ஓர் பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல கடைதொறும் பலி தேர்வார்; சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர் வண்ணர் தம் அடி பரவ, வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [2] |
|
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன் ஆவார்; சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [3] |
|
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி அரவினொடு, ஆறு மூழ்க விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்; புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர்; பொன்மிளிரும் வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [4] |
|
அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு அணி கொள, உடல் திமில, நஞ்சினை, அமரர்கள் அமுதம் என, நண்ணிய நறு நுதல் உமை நடுங்க வெஞ்சின மால்களியானையின் தோல் வெரு உறப் போர்த்து, அதன் நிறமும் அஃதே, வஞ்சனை வடிவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [5] |
|
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ, எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில் அவை இசைய வல்லார்; சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு பெய்து, வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [6] |
|
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர் கன மணி சேர் முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி பெய, முறுவல் செய்வார்; பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும், வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [7] |
|
கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்; வீணையர்; தாமும் அஃதே; எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில், பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய, வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [8] |
|
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு ஏறி, கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர் செய்து தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன் சடைமேல் திகழ்கின்ற வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [9] |
|
சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண வெண் நீற்றினர்; சுடர் மழுவர்; பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம்தார் பாம்பொடு ;நூல் அவை பசைந்து இலங்க, கோடல் நன் முகிழ்விரல் கூப்பி, நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய, வாடல் வெண்தலை பிடித்து, இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே. | [10] |
|
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர், அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம் அடி பரவி, நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி, உலகுக்கு ஓர் தவநெறியே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.112  
மாது ஓர் கூறு உகந்து,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவாடானை ; (திருத்தலம் அருள்தரு அம்பாயிரவல்லியம்மை உடனுறை அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருவடிகள் போற்றி )
|
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து, ஏத்துவார் தமை வாதியா வினை மாயுமே. | [1] |
|
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று ஆடலான் உறை ஆடானை தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ, வீடும், நுங்கள் வினைகளே | [2] |
|
மங்கை கூறினன், மான்மறி உடை அம் கையான், உறை ஆடானை தம் கையால் தொழுது, ஏத்த வல்லார் மங்கு நோய் பிணி மாயுமே. | [3] |
|
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை அண்ணலான் உறை ஆடானை வண்ண மா மலர் தூவிக் கைதொழ எண்ணுவார் இடர் ஏகுமே. | [4] |
|
கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கை அணி(ம்) மலரால் வணங்கிட, வெய்ய வல்வினை வீடுமே. | [5] |
|
வான் இள(ம்) மதி மல்கு வார்சடை ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த ஊனம் உள்ள ஒழியுமே. | [6] |
|
துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை அலங்கலான், உறை ஆடானை நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும் வலம் கொள்வார் வினை மாயுமே. | [7] |
|
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை அந்தம் இல்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழும் சிந்தையார் வினை தேயுமே. | [8] |
|
மறைவலாரொடு வானவர் தொழு அறையும் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை ஏத்த, தீவினை பறையும்; நல்வினை பற்றுமே. | [9] |
|
மாயனும் மலரானும் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மா மலர் தூவிக் கைதொழ, தீய வல்வினை தீருமே. | [10] |
|
வீடினார் மலி வெங்கடத்து நின்று ஆடலான் உறை ஆடானை நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட, நோய் பிணி பாறுமே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.017  
கோவலன் நான்முகன் வானவர் கோனும்
பண் - நட்டராகம் (திருத்தலம் திருநாவலூர் (திருநாமநல்லூர்) ; (திருத்தலம் அருள்தரு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு நாவலீசுவரர் திருவடிகள் போற்றி )
|
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [1] |
|
தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள், சபை முன் வன்மைகள் பேசிட, வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்; புன்மைகள் பேசவும், பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [2] |
|
வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர் மெல்லியலை ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியை; பூண்பது ஆக நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே. | [3] |
|
அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்; தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்; நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [4] |
|
உம்பரார் கோனைத் திண்தோள் முரித்தார்; உரித்தார், களிற்றை; செம்பொன் ஆர் தீவண்ணர்; தூ வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால், எம்பிரானார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [5] |
|
கோட்டம் கொண்டார், குட மூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்; வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்; ஆட்டம் கொண்டார், தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன் நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே. | [6] |
|
தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி, போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே. | [7] |
|
வாய் ஆடி, மாமறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து; தீ ஆடியார்; சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய், வேய் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [8] |
|
படம் ஆடு பாம்பு அணையானுக்கும், பாவை நல்லாள் தனக்கும், வடம் ஆடு மால்விடை ஏற்றுக்கும், பாகனாய் வந்து ஒரு நாள் இடம் ஆடியார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [9] |
|
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்; அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும் கொண்டார்; தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே . | [10] |
|
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்கமுனை அரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று ஓத நல்-தக்க வன்தொண்டன்-ஆரூரன்-உரைத்த தமிழ் காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினைக்கட்டு அறுமே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.018  
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
பண் - நட்டராகம் (திருத்தலம் திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
|
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [1] |
|
கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்; சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால் வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [2] |
|
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார்; பெண்ணோடு ஆணும் அல்லர்; ஊரும் அது ஒற்றியூர்; மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்; காரும் கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு ஆரம் பாம்பு ஆவது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [3] |
|
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி, கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே, மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு, யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [4] |
|
ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்; பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால் பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!. | [5] |
|
குறவனார் தம்மகள், தம் மகனார் மணவாட்டி; கொல்லை மறவனாராய், அங்கு ஓர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்; இறைவனார், ஆதியார், சோதியராய், அங்கு ஓர் சோர்வு படா அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [6] |
|
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்; நற்ற(வ்)வை, என்னைப் பெற்ற; முற்ற(வ்)வை, தம் அ(ன்)னை, தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்; செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வம் ஆகில், அத் தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!. | [7] |
|
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான், தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்; எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில், அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [8] |
|
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்; மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்; சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! . | [9] |
|
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப் பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப் பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.019  
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
பண் - நட்டராகம் (திருத்தலம் திருநின்றியூர் ; (திருத்தலம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )
|
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்; பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும் கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால் செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே . | [1] |
|
வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்; நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ் தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே. | [2] |
|
அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ, சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்; மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே . | [3] |
|
ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல் ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே. | [4] |
|
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால் அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார் நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே . | [5] |