அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!
இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க!
அரியதில் அரிய அரியோன் காண்க!
மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!
மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,
பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,
செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி,
இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,
நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்
தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,
அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;
ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,
சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்
வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்
சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:
மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,
தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்லகில்லேன்:
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது
ஆராயுமிடத்து அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உருண்டை வடிவின் விளக்கமும் அளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான பெருங்காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மேற்பட்டு விரிந்துள்ளன, அவை, வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில் நெருங்கிய அணுக்களை நிகர்க்கச் சிறியவையாகும்படி பெரியவனாய் இருப்பவன். பிரமனும் அவனைச் சூழ்ந்தவரும் ஆகிய அவரது தொகுதி யோடு திருமாலும் அவரைச் சூழ்ந்தோரது மிக்க கூட்டமும் உலகத்தினது உற்பத்தியும் நிலைபேறும் ஆகியவற்றை இறுதியடையச்செய்த மிகப் பெரிய ஊழிக்காலமும், அவ்வூழியின் நீக்கமும் அந்நீக்கத்தின் பின் உலகம் முன்போலத் தோன்றி நிலைபெறுதலும் பெரிதாகவும் சிறிதாகவும் வீசுகின்ற சூறைக் காற்றாகிய வீசும் வளியில் அகப்பட்ட பொருள் போலச் சுழல, அவற்றை நிலை பெயர்க்கின்ற அழகன். எல்லாப் பொருள்களையும் படைக்கும் பிரமனைப் படைக் கின்ற பழையவன். படைக்கப்பட்ட பொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள். காக்கப்பட்ட பொருளை அழிப்பவன். அழிக்கப்பட்டவற்றை நினையாத கருத்தையுடைய கடவுள். சிறப்புப் பொருந்திய அறுவகைப்பட்ட சமயத்தையுடைய, ஆறுவகை ஒழுக்கத்தை உடையவர்க்கும் முத்திப் பேறாய் நின்றும், தேவர் பகுதிகள் புழுக்களை ஒக்க நிற்கின்ற பெரியோன், தினந்தோறும் சூரியனில் ஒளியை அமைத்தவன். அழகு பொருந்திய சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். வலிய வெற்றியையுடைய நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கினவன். உண்மையாகிய ஆகாயத்தில் வியாபிக்கும் தன்மையை வைத்தவன். மேன்மை பொருந்திய காற்றில் அசைவை அமைத்தவன். நிழல் பொருந்திய நீரினிடத்து இனிய சுவையை வைத்தவன். வெளிப்படையாக மண்ணிடத்து வலிமையை அமைத்தவன். இவ்வாறே எந்நாளிலும் எவ்வளவு பல கோடியாகிய எவ்வளவோ பல பிற பொருள்களிலும், அவற்றின் தன்மையை அவ்வப் பொருள்களில் அமைத்து வைத்தவன். அதுவன்றி எப்பொருட்கும் முன்னே உள்ளவன். முழுதும் நிறைந்தவன். தனக்கு நிகர் இல்லாதவன். பழைமையாகிய பன்றியின் பல்லை அணிந்தவன். புலியினது தோலை அரையில் உடுத்தவன். திருவெண்ணீற்றை அணிந்தவன். அவனது பிரிவை நினைக்கும்தோறும் பொறுக்கமாட்டேன். ஐயோ! நான் கெட்டொழிவேன். இனிய இசை வீணையில் பொருந்தியிருப்பது போல, உயிர்களில் நிறைந்து இருப்பவன். அப்படிப்பட்டதாகிய வீணை இசை ஒன்றை அவ்விடத்து அறிந்தவன். மேலோன். பழையவன். பிரமனும் திருமாலும் காணவொண்ணாத பெரியவன். வியத்தகு தன்மைகள் உடையவன். எல்லாப் பொருளுமாய் இருப்பவன். சொல்லின் நிலையைக் கடந்த பழையோன். மனம் சென்று பற்றாத தூரத்தில் இருப்பவன். பத்தியாகிய வலையில் அகப்படுவோன். ஒருவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் ஒருவன். பரந்த உலகம் முழுவதுமாகிப் பரந்தவன். அணுப் போன்ற தன்மையினையுடைய நுண்ணியவன். ஒப்புச் சொல்லுதற்கு அரிய பொருள்யாதினும் அரிய பொருளாகிய அரியவன். பொருந்தி எல்லாப் பொருளையும் காப்பவன். நூலறிவால் உணரப்படாத நுட்பம் உடையவன். மேலும் கீழுமாகிய எவ்விடத்திலும் பரவி நிற்பவன். முடிவும் முதலும் நீங்கினவன். உயிர்கட்குப் பிறவியாகிய கட்டும், வீடுபேறும் உண்டாக்குவோன். இயங்காப் பொருளும் ஆனவன். கற்ப காலத்தையும் அதன் முடிவையும் கண்டவன். எல்லோரும் அடையும் பொருட்டு எழுந்தருளுகின்ற தலைவன். தேவரும் அறிய முடியாத சிவபெருமான். பெண் ஆண் அலி என்னும் பாகுபாடுகளில் கலந்துள்ள தன்மையன். அப்பெருமானை நானும் கண்ணால் கண்டேன். அருள் மிகவும் சுரக்கின்ற அமிர்தம். அப்பொருளினது பெருங்கருணையின் ஏற்றத்தைக் கண்டேன். அவன் தன் திருவடிகள் பூமியில் படும்படி எழுந்தருளி வந்தான். அவனைச் சிவபிரான் என்று நானும் தெளிந்து கொண்டேன். அவன் என்னை அடிமை கொண்டருளினன். நீலமலர் போலும் கண்களையுடைய உமாதேவியின் பாகன். அத்தகைய உமாதேவியும் தானும் பிரிவின்றியே இருப்பவன். மேன்மையான பேரின்பக் கடல் முழுவதுமே, சூல் கொண்ட கரிய பெருமேகம் போல வடிவெடுத்து, அழகு நிறைந்த திருப்பெருந்துறை என்னும் மலைமேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்ச மானது ஒவ்வொரு திசையிலும் பரவ, ஐவகை வேட்கைப் பிணிப் பாகிய, வாள் போன்ற கொடிய பாம்புகள் கெட்டு ஓட, பிறவி என்னும் கடுந்துன்பமாகிய வேனிலானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ள, மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போலத் தோன்றிய ஆசிரியரது ஞானவொளி விளங்க, எங்கள் பிறவிகளாகிய தம்பலப் பூச்சிகள் செறிந்து தோன்ற, இறைவனின் இரக்கமானது இனிய முரசு அடித்தாற் போல முழக்கம் செய்ய, பூப்போன்றனவாயுள்ள அடியவர் கூப்பிய கைகள் காந்தள் மலர்போல விளங்க, குறையாத இன்பம் தரும் அருளானது சிறிய துளிகளின் வடிவத்தைக் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் பரவ, துன்பமாகிய குளம் கரையழிய, மலைச் சிகரமளவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தும், ஆறு சமயங்களாகிய கானல் நீரினை நீர் வேட்கையுண்டாக வந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போன்ற சிற்றறிவு உயிர்கள் தமது அகன்ற பெருவாயினால் பருகியும், நடந்த தளர்ச்சியும் மிகுந்த தாகமும் நீங்கப் பெறாமல் உழன்றன. அத்தருணத்தில், அந்த வானப் பேராற்றின் உள்ளிடத்தே புகுந்து பெருகி, இன்பப் பெருஞ் சுழலினை உண்டாக்கி, மெய்யாகிய மணிகளை வாரிக் கொண்டு, எமது பாசக்கட்டாகிய கரைகளை மோதி அலைத்து உடைத்து, முறை முறையாய் வளர்ந்து வந்த எங்களுடைய நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி மிகுந்து வந்த அழகுமிக்க அருள் வெள்ளத்தைச் செலுத்தித் தொண்டராகிய உழவர், கடத்தற்கரிய எல்லையையுடைய சாந்தம் என்னும் பெரிய அணையைக் கட்டி, தேனோடு விரிந்த வாசனையுடைய மலர் போன்ற இருதயமாகிய குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்து, பொறியடக்கம் என்னும் சிறந்த அகிற் புகை சேரும் வரம்பினையுடைய ஓங்காரமாகிய வண்டு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்திலே அருள் வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்னும் வித்தை விதைத்துச் சிவபோகமாகிய விளைவைத் துய்க்குமாறு உதவிய உலகெங்கும் பெறுதற்கரிய மேகம் போன்றவன் வாழ்க! கரிய படமுடைய பாம்பைக் கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க. அரிய தவத்தினருக்கு அருளுகின்ற முதல்வன் வாழ்க. பிறவி அச்சத்தை நீக்கின வீரன் வாழ்க. நாள்தோறும் அடியார்களை வலிய இழுத்து ஆட்கொள்வோன் வாழ்க. எம்மை வளைத்துக் கொள்கின்ற பெருந்துன்பத்தை நீக்குவோன் வாழ்க. தன்னை அடைந்தவர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க. மிகுந்த இருளில் பல வகைக் கூத்தொடு நடிப்போன் வாழ்க. பெரிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமாதேவிக்கு அன்பன் வாழ்க. தன்னை வணங்காது அயலாய் இருப்பார்க்கு அயலவனாயிருக்கிற எம் தலைவன் வாழ்க. அன்பர்க்கு இளைத்த காலத்தில் சேமநிதி போல்வான் வாழ்க. நஞ்சையுடைய பாம்பை ஆட்டிய நம் பெருமானுக்கு வணக்கம். எம்மைத் தனது அருட்பித்தேற்றின பெரியவனுக்கு வணக்கம். திருவெண்ணீற்றுப் பூச்சொடு தோன்ற வல்லவனுக்கு வணக்கம். நான்கு திக்கிலும் நடப்பவற்றை நடத்தி கிடப்பவற்றைக் கிடத்தி, நிற்பவற்றை நிறுத்திச் சொல்லளவைக் கடந்த பழையோன். மன உணர்ச்சியால் கொள்ளப் படாதவன், கண் முதலாகிய பொறி களுக்குக் காணவும் படாதவன். ஆகாயம் முதலிய பூதங்களை வெளிப்படையாகத் தோன்றப் படைத்தவன். மலரின் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும் நீக்கமில்லாமல் நிறைந்து பொருந்திய தன்மையை இப்பொழுது, அடியேனுக்கு எளிதாக வந்து உணர்த்தியருளி அழிகின்ற இவ்வுடம்பை ஒழியச் செய்த சிறந்த பொருளானவன். இன்று எனக்கு எளியவனாய் என் உள்ளத்தில் வீற்றிருந்தவனுக்கு வணக்கம்; கனிந்து உருகுகின்ற உடம்பை அருள் செய்தவனுக்கு வணக்கம்; இன்ப ஊற்றாயிருந்து மனத்தை மகிழ்விப்பவனுக்கு வணக்கம். தாங்க ஒண்ணாத இன்பவெள்ளம் பரவி அலை வீச அதனை ஏற்றுப் போற்றாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன். பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், மின்னலின் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட ஒரு பொன்னொளி போல் விளங்க, மேலும் கீழும் போய்த் தேடின பிரமனுக்கும் திருமாலுக்கும் மறைந்தும், யோக முறைப்படி ஒன்றி நின்று முயன்றவர்க்கு மறைந்தும், ஒருமைப்பாடு கொண்டு நோக்குகின்ற மனத்தையுடைய உறவினர் வருந்தும்படி உறுதியோடு இருப்பவர்க்கு மறைந்தும் வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு மறைந்தும், இவ்வுபாயம் வழியாகக் காண்போம் என்று இருந்தவர்க்கு, அவ்வுபாயத்தில், அவ்விடத்திலே மறைந்தும், கோபம் இல்லாமல் பார்த்து மிகுதியாகப் பற்றி, ஆண் போலத் தோன்றியும், அலிபோல இயங்கியும், ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண் போலக் காணப்படும் தன் இயல்பைக் காட்டாது மறைந்தும், தூரத்தில் ஐம்புலன்களைப் போக நீக்கி அரிய மலைதோறும் சென்று, பொருந்தின பற்றுகளை எல்லாம் விட்ட வெற்றுயிரோடு கூடிய உடம்பையுடைய அரிய தவத்தினர் நோக்குக்கும் செம்மையாக மறைந்தும், ஒரு பொருள் உண்டு என்றும் இல்லை என்றும் ஐயுற்ற அறிவுக்கு மறைந்தும், முன்னே பழகிய காலத்திலும் இப்பொழுது பழகுங்காலத்திலும் எப்பொழுதும் மறைகின்ற கள்ளனைக் கண்டோம். ஆரவாரியுங்கள்; ஆரவாரியுங்கள்; புதிய மலர் மாலைகளால் திருவடியைக் கட்டுங்கள்; சுற்றுங்கள்; சூழுங்கள்; பின் தொடருங்கள்; விடாதீர் பிடியுங்கள் என்று சொல்லியவர்களது பற்றுதலுக்கு முழுதும் மறைந்தும், தனக்கு நிகரில்லாதவன் தானேயாகிய தன்மையை என் போல்வார் கேட்கும்படி வந்து சொல்லி வலிந்து அழைத்து, அடிமை கொண்டருளி வேதியர் கோலத்தைக் காட்டியருளுதலும் வருந்தி என்பு உருக அன்பினால் முறையிட்டு, அசைகின்ற கடல் அலைகள் போல இடையறாது ஆரவாரித்து மேலெழுந்து தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அரற்றி, பித்தர் போல் மயங்கி, வெறி பிடித்தவர் போலக் களித்து, நாட்டார் மயக்கம் கொள்ளவும் கேட்டவர் வியப்புக் கொள்ளவும் மதயானையும் ஏற்கப் பெறாத மிகப்பெரிய மதத்தால் தரியேனாக, என் உறுப்புகளைத் தீஞ்சுவையினைத் தருகின்ற கொம்புத்தேன் கொண்டு ஆக்கினான். பகைவருடைய பழைய ஊராகிய மூன்று புரங்களை அழகிய நகையாகிய நெருப்பினால் அழித்தது போல, அக் காலத்தில் அருளாகிய பெரிய நெருப்பினால், அடியோங்களுக்கு உரிய குடிலாகிய உடம்பை ஒருத்தரேனும் தவறாதபடி அடங்கப் பண்ணினான். அடியேனுக்குப் பெரிய கையிலுள்ள நெல்லிக்கனி போன்றிருந்தான். இவ்வாறு எனக்கு எளி வந்த கருணையின் பெருமையை யான் சொல்லுமாறு அறியேன். அவன் வாழ்க. அவன் என்னைச் செய்த நிலையை நாயினேன் ஆற்றேன். அதன் காரணத்தையும் அறிந்திலேன். இது எனக்குச் செய்யும் முறையோ? ஐயோ செத்தேன்; அடியேனுக்குச் செய்த அருளையும் அறியேன். சிறுகச் சிறுகக் குடித்தும் நிறைவு பெற்றிலேன்: முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன். செழுமையாகிய குளிர்ந்த பாற்கடலின் அலைகளை உயரச்செய்து நிறைமதி நாளில் பெருகும் கடலில் பொருந்திய நீர்போல உள்ளத்தினுள்ளே பொங்க, சொல்லிறந்த அமுதமானது ஒவ்வொரு மயிர்க் காலிலும் நிறையச் செய்தனன்; நாயினேனது உடலின் கண்ணே இருக்கை கொண்டு கொடியேனுடைய மாமிசம் செழித்த ஒவ்வொரு மடையிலும், இனிய தேனைச் பாய்ச்சி நிறைந்த ஆச்சரியமான அமுத தாரைகளை எலும்புத் துளை தோறும் ஏறச் செய்தனன். உருகுவதாகிய மனத்தைக் கொண்டு ஓர் உருவம் அமைத்தாற் போல அடியேனுக்கு மிகுதியும் உருகுகின்ற உடம்பை அமைத்தான். இனிதாகிய கனியைத் தேடுகின்ற யானை போல இறுதியில், அடியேனையும் அவனையே நாடி இருப்பதாகச் செய்தருளினன். என்னுள்ளே அருளாகிய பெருந்தேன் பாயும்படி, அருளொடு எழுந்தருளி மிக்க அமுதத்தினையும் அமைத்தான். பிரமனும் திருமாலும் தேடியும் அறியாத தன்மையுடையான்.