விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும் கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும் கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணின்முட்டம் தொழுநீர் மையர்தீ துறுதுன் பமிலரே.
|
1
|
விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக் கடைசேர் கருமென் குளத்தோங் கியகாட்டில் குடையார் புனன்மல் குகுரங் கணின்முட்டம் உடையா னெனையா ளுடையெந் தைபிரானே.
|
2
|
சூலப் படையான் விடையான் சுடுநீற்றான் காலன் றனையா ருயிர்வவ் வியகாலன் கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத் தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே.
|
3
|
வாடா விரிகொன் றைவலத் தொருகாதில் தோடார் குழையா னலபா லனநோக்கி கூடா தனசெய் தகுரங் கணின்முட்டம் ஆடா வருவா ரவரன் புடையாரே.
|
4
|
இறையார் வளையா ளையொர்பா கத்தடக்கிக் கறையார் மிடற்றான் கரிகீ றியகையான் குறையார் மதிசூ டிகுரங் கணின்முட்டத் துறைவா னெமையா ளுடையொண் சுடரானே.
|
5
|
Go to top |
பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம் கலவும் மயில்கா முறுபே டையொடாடிக் குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டம் நிலவும் பெருமா னடிநித் தல்நினைந்தே.
|
6
|
மாடார் மலர்க்கொன் றைவளர் சடைவைத்துத் தோடார் குழைதா னொருகா திலிலங்கக் கூடார் மதிலெய் துகுரங் கணின்முட்டத் தாடா ரரவம் மரையார்த் தமர்வானே.
|
7
|
மையார் நிறமே னியரக் கர்தங்கோனை உய்யா வகையா லடர்த்தின் னருள்செய்த கொய்யார் மலர்சூ டிகுரங் கணின்முட்டம் கையாற் றொழுவார் வினைகாண் டலரிதே.
|
8
|
வெறியார் மலர்த்தா மரையா னொடுமாலும் அறியா தசைந்தேத் தவோரா ரழலாகும் குறியா னிமிர்ந்தான் றன்குரங் கணின்முட்டம் நெறியாற் றொழுவார் வினைநிற் ககிலாவே.
|
9
|
கழுவார் துவரா டைகலந் துமெய்போர்க்கும் வழுவாச் சமண்சாக் கியர்வாக் கவைகொள்ளேல் குழுமின் சடையண் ணல்குரங் கணின்முட்டத் தெழில்வெண் பிறையா னடிசேர் வதியல்பே.
|
10
|
Go to top |
கல்லார் மதிற்கா ழியுண்ஞான சம்பந்தன் கொல்லார் மழுவேந் திகுரங் கணின்முட்டம் சொல்லார் தமிழ்மா லைசெவிக் கினிதாக வல்லார்க் கெளிதாம் பிறவா வகைவீடே.
|
11
|