சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Order by Pathigam No   Paadal Name   Thalam  
12.000 சேக்கிழார் - திருமலைச் சருக்கம் -பாயிரம்   ( )  
12.010 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -தில்லை வாழ் அந்தணர்   ( )  
12.020 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -திருநீலகண்ட நாயனார் புராணம்   ( )  
12.030 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -இயற்பகை நாயனார் புராணம்   ( )  
12.040 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -இளையான் குடி மாற   ( )  
12.050 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -மெய்ப் பொருள் நாயனார்   ( )  
12.060 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -விறன்மிண்ட நாயனார் புராணம்   ( )  
12.070 சேக்கிழார் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் -அமர் நீதி நாயனார்   ( )  
12.080 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -எறி பத்த நாயனார்   ( )  
12.090 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -ஏனாதிநாத நாயனார் புராணம்   ( )  
12.100 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -கண்ணப்ப நாயனார் புராணம்   ( )  
12.110 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -குங்குலியக் கலய நாயனார்   ( )  
12.120 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -மானக்கஞ்சாற நாயனார் புராணம்   ( )  
12.130 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -அரிவாட்டாய நாயனார் புராணம்   ( )  
12.140 சேக்கிழார் - இலை மலிந்த சருக்கம் -ஆனாய நாயனார் புராணம்   ( )  
12.150 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -மூர்த்தி நாயனார் புராணம்   ( )  
12.160 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -முருக நாயனார் புராணம்   ( )  
12.170 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -உருத்திர பசுபதி நாயனார்   ( )  
12.180 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -திரு நாளைப் போவர்   ( )  
12.190 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -திருக் குறிப்புத் தொண்ட   ( )  
12.200 சேக்கிழார் - மும்மையால் உலகாண்ட சருக்கம் -சண்டேசுர நாயனார் புராணம்   ( )  
12.210 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்   ( )  
12.220 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -குலச்சிறை நாயனார் புராணம்   ( )  
12.230 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -பெரு மிழலைக் குறும்ப   ( )  
12.240 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -காரைக்கால் அம்மையார் புராணம்   ( )  
12.250 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -அப்பூதி அடிகள் நாயனார்   ( )  
12.260 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -திரு நீல நக்க   ( )  
12.270 சேக்கிழார் - திருநின்ற சருக்கம் -நமிநந்தி அடிகள் நாயனார்   ( )  
12.280 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -திருஞான சம்பந்த சுவாமிகள்   ( )  
12.290 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -ஏயர்கோன் கலிக்காம நாயனார்   ( )  
12.300 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -திரு மூல நாயனார்   ( )  
12.310 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -தண்டியடிகள் புராணம்   ( )  
12.320 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -மூர்க்க நாயனார் புராணம்   ( )  
12.330 சேக்கிழார் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் -சோமாசி மாற நாயனார்   ( )  
12.340 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -சாக்கிய நாயனார் புராணம்   ( )  
12.350 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -சிறப்புலி நாயனார் புராணம்   ( )  
12.360 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -சிறுத்தொண்ட நாயனார் புராணம்   ( )  
12.370 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -கழற்றி அறிவார் நாயனார்   ( )  
12.380 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -கணநாத நாயனார் புராணம்   ( )  
12.390 சேக்கிழார் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் -கூற்றுவ நாயனார் புராணம்   ( )  
12.400 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -பொய்யடிமை யில்லாத புலவர்   ( )  
12.410 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -புகழ்ச் சோழ நாயனார்   ( )  
12.420 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -நரசிங்க முனையரைய நாயனார்   ( )  
12.430 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -அதிபத்த நாயனார் புராணம்   ( )  
12.440 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -கலிக்கம்ப நாயனார் புராணம்   ( )  
12.450 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -கலிய நாயனார் புராணம்   ( )  
12.460 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -சத்தி நாயனார் புராணம்   ( )  
12.470 சேக்கிழார் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் -ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   ( )  
12.480 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -கணம்புல்ல நாயனார் புராணம்   ( )  
12.490 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -காரிநாயனார் புராணம்   ( )  
12.500 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -நின்ற சீர் நெடுமாற   ( )  
12.510 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -வாயிலார் நாயனார் புராணம்   ( )  
12.520 சேக்கிழார் - கறைக் கண்டன் சருக்கம் -முனையடுவார் நாயனார் புராணம்   ( )  
12.530 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -கழற்சிங்க நாயனார் புராணம்   ( )  
12.540 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -இடங்கழி நாயனார் புராணம்   ( )  
12.550 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -செருத்துணை நாயனார் புராணம்   ( )  
12.560 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -புகழ்த்துணை நாயனார் புராணம்   ( )  
12.570 சேக்கிழார் - கடல் சூழ்ந்த சருக்கம் -கோட்புலி நாயனார் புராணம்   ( )  
12.580 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -பத்தாராய்ப் பணிவார் புராணம்   ( )  
12.590 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -பரமனையே பாடுவார் புராணம்   ( )  
12.600 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்   ( )  
12.610 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -திருவாரூர் பிறந்தார் புராணம்   ( )  
12.620 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -முப்போதும் திருமேனி தீண்டுவார்   ( )  
12.630 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -முழுநீறு பூசிய முனிவர்   ( )  
12.640 சேக்கிழார் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் -அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்   ( )  
12.650 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -பூசலார் நாயனார் புராணம்   ( )  
12.660 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்   ( )  
12.670 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -நேச நாயனார் புராணம்   ( )  
12.680 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -கோச்செங்கட் சோழ நாயனார்   ( )  
12.690 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்   ( )  
12.700 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -சடைய நாயனார் புராணம்   ( )  
12.710 சேக்கிழார் - மன்னிய சீர்ச் சருக்கம் -இசை ஞானியார் புராணம்   ( )  
12.720 சேக்கிழார் - வெள்ளானைச் சருக்கம் -வெள்ளானைச் சருக்கம்   ( )  
12.900 கடவுண்மாமுனிவர் - திருவாதவூரர் புராணம் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )  

Back to Top
சேக்கிழார்   திருமலைச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.000  
பாயிரம்  
Tune -   (Location: God: Goddess: )

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ,
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.010  
தில்லை வாழ் அந்தணர்  
Tune -   (Location: God: Goddess: )

ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.020  
திருநீலகண்ட நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

வேதியர் தில்லை மூதூர்
வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி
மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லா
அற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி
வழிபடும் நலத்தின் மிக்கார்.
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.030  
இயற்பகை நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

சென்னி வெண்குடை நீடந பாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.040  
இளையான் குடி மாற  
Tune -   (Location: God: Goddess: )

அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.050  
மெய்ப் பொருள் நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.060  
விறன்மிண்ட நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

விரைசெய் நறும்பூந் தொடையிதழி
வேணி யார்தங் கழல்பரவிப்
பரசு பெறுமா தவமுனிவன்
பரசு ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனும்
திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனும் உடன்பெருகி
மல்கு நாடு மலைநாடு.
[1]

Back to Top
சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.070  
அமர் நீதி நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.080  
எறி பத்த நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

மல்லல்நீர் ஞாலந் தன்னுள்
மழவிடை யுடையான் அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை
உற்றிடத் துதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க
எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்தன் றேனும்
ஆசையாற் சொல்ல லுற்றாம்.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.090  
ஏனாதிநாத நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

புண்டரிகம் பொன்வரைமேல்
ஏற்றிப் புவியளிக்கும்
தண்தரள வெண்கவிகைத்
தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலைவயல்
மருதத் தண்பணைசூழ்ந்
தெண்திசையும் ஏறியசீர்
எயின்மூதூர் எயினனூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.100  
கண்ணப்ப நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மேவலர் புரங்கள் செற்ற  
விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக்
கண்ணப்பர் திருநா டென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும்
நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை  
சூழ்ந்தபொத் தப்பி நாடு.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.110  
குங்குலியக் கலய நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

வாய்ந்தநீர் வளத்தா லோங்கி
மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்தசீர் மறையோர் வாழும்
எயிற்பதி யெறிநீர்க் கங்கை
தோய்ந்தநீள் சடையார் பண்டு
தொண்டர்மேல் வந்த கூற்றைக்
காய்ந்தசே வடியார் நீடி
யிருப்பது கடவூ ராகும்.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.120  
மானக்கஞ்சாற நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மேலாறு செஞ்சடைமேல்
வைத்தவர்தாம் விரும்பியது
நூலாறு நன்குணர்வோர்
தாம்பாடும் நோன்மையது
கோலாறு தேன்பொழியக்
கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்
கமழ்சாறூர் கஞ்சாறூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.130  
அரிவாட்டாய நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்சொரி யுங்கண மங்கலம்.
[1]

Back to Top
சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.140  
ஆனாய நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.

[1]

Back to Top
சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.150  
மூர்த்தி நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி
மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.
[1]

Back to Top
சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.160  
முருக நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

தாது சூழுங் குழல்மலையாள்
தளிர்க்கை சூழுந் திருமேனி
மீது சூழும் புனற்கற்றை
வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழும் மணிமௌலிச்
சோழர் பொன்னித் திருநாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப்
பொய்கை சூழும் பூம்புகலூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.170  
உருத்திர பசுபதி நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.180  
திரு நாளைப் போவர்  
Tune -   (Location: God: Goddess: )

பகர்ந்துலகு சீர்போற்றும்
பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன்
செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும்
முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு
மேற்கானாட் டாதனுர்.
[1]

Back to Top
சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.190  
திருக் குறிப்புத் தொண்ட  
Tune -   (Location: God: Goddess: )

ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
[1]

Back to Top
சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.200  
சண்டேசுர நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையில்
மன்ன முன்னாள் வரைகிழிய
ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் பகைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.210  
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

திருநாவுக் கரசுவளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன்.
[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.220  
குலச்சிறை நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச்
செந்நெ லார்வயல் தீங்கரும் பின்னயல்
துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி.

[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.230  
பெரு மிழலைக் குறும்ப  
Tune -   (Location: God: Goddess: )

சூத நெருங்கு குலைத்தெங்கு
பலவு பூகஞ் சூழ்புடைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி
விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய்
நிலவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்கும் தொன்மையது
மிழலை நாட்டுப் பெருமிழலை.
[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.240  
காரைக்கால் அம்மையார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மானமிகு தருமத்தின்
வழிநின்று வாய்மையினில்
ஊனமில்சீர்ப் பெருவணிகர்
குடிதுவன்றி ஓங்குபதி
கூனல்வளை திரைசுமந்து
கொண்டேறி மண்டுகழிக்
கானல்மிசை உலவுவளம்
பெருகுதிருக் காரைக்கால்.
[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.250  
அப்பூதி அடிகள் நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

தாண்டவம் புரிய வல்ல
தம்பிரா னாருக் கன்பர்
ஈண்டிய புகழின் பாலார்
எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்டசீர் அரசின் பாதம்
அடைந்தவர் அறியா முன்னே
காண்டகு காதல் கூரக்
கலந்தஅன் பினராய் உள்ளார்.
[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.260  
திரு நீல நக்க  
Tune -   (Location: God: Goddess: )

பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
[1]

Back to Top
சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.270  
நமிநந்தி அடிகள் நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

வையம் புரக்குந் தனிச்செங்கோல்
வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும்
செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறைநூல்
புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்திசையும்
ஏறூர் ஏமப் பேறூரால்.
[1]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.280  
திருஞான சம்பந்த சுவாமிகள்  
Tune -   (Location: God: Goddess: )

வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.
[1]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.290  
ஏயர்கோன் கலிக்காம நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
[1]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.300  
திரு மூல நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
[1]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.310  
தண்டியடிகள் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

தண்டி யடிகள் திருவாரூர்ப்
பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
பிறந்த பொழுதே கண்காணார்.
[1]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.320  
மூர்க்க நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மன்னிப் பெருகும் பெருந்தொண்டை
வளநா டதனில் வயல் பரப்பும்
நன்னித் திலவெண் திரைப்பாலி
நதியின் வடபால் நலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி
யலர்புக் காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துகிற்கொடிகள்
விழவிற் காடு வேற்காடு.
[1]

Back to Top
சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.330  
சோமாசி மாற நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

சூதம் பயிலும் பொழில்அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்செற்றவர்க் கன்பர் வந்தால்
பாதம் பணிந்தா ரமுதூட்டுநற் பண்பின் மிக்கார்.
[1]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.340  
சாக்கிய நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

அறுசமயத் தலைவராய்
நின்றவருக் கன்பராய்
மறுசமயச் சாக்கியர்தம்
வடிவினால் வருந்தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கங்
கண்டுவந்து கல்லெறிந்து
மறுவில்சரண் பெற்றதிறம்
அறிந்தபடி வழுத்துவாம்.
[1]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.350  
சிறப்புலி நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத் துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்
கில்லையென் னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு வாக்கூர் ஆக்கூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.360  
சிறுத்தொண்ட நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.
[1]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.370  
கழற்றி அறிவார் நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.380  
கணநாத நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

ஆழி மாநிலத் தகிலம்ஈன்
றளித்தவள் திருமுலை யமுதுண்ட
வாழி ஞானசம் பந்தர்வந்
தருளிய வனப்பின தளப்பில்லா
ஊழி மாகடல் வெள்ளத்து
மிதந்துல கினுக்கொரு முதலாய
காழி மாநகர்த் திருமறை
யவர் குலக் காவலர் கணநாதர்.
[1]

Back to Top
சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.390  
கூற்றுவ நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

துன்னார் முனைகள் தோள்வலியால்
வென்று சூலப் படையார்தம்
நன்னா மம்தம் திருநாவில்
நாளும் நவிலும் நலமிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம்
பாதம் பரவிப் பணிந்தேத்தி
முன்னா கியநல் திருத்தொண்டில்
முயன்றார் களந்தை முதல்வனார்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.400  
பொய்யடிமை யில்லாத புலவர்  
Tune -   (Location: God: Goddess: )

செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.410  
புகழ்ச் சோழ நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

குலகிரியின் கொடுமுடிமேல்
கொடிவேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ்
நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில்வளர் அணிக்கெல்லாம்
உள்ளுறையூ ராம்உறையூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.420  
நரசிங்க முனையரைய நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

கோடாத நெறிவிளங்கும்
குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
நரசிங்க முனையரையர்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.430  
அதிபத்த நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மன்னி நீடிய செங்கதி
ரவன்வழி மரபில்
தொன்மை யாம்முதற் சோழர்தந்
திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப்
பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகைப்பட்
டினத்திரு நகரம்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.440  
கலிக்கம்ப நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.450  
கலிய நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

பேருலகில் ஓங்குபுகழ்ப்
பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை
நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக்
கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி
சிறந்ததிரு வொற்றியூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.460  
சத்தி நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.470  
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

வையம்நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும்
மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத்
திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால்
அடிப்படுத்துஞ் செங்கோலார்.
[1]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.480  
கணம்புல்ல நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

திருக்கிளர்சீர் மாடங்கள்
திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத்
தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன்
மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப
திவ்வுலகில் விளங்குபதி.
[1]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.490  
காரிநாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
[1]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.500  
நின்ற சீர் நெடுமாற  
Tune -   (Location: God: Goddess: )

தடுமாறும் நெறியதனைத்
தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும்
அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர்
வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை
உலகேழும் நிகழ்ந்ததால்.
[1]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.510  
வாயிலார் நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.
[1]

Back to Top
சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.520  
முனையடுவார் நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மாறு கடிந்து மண்காத்த
வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில்
நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு
மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ்
செல்வ நீடூர் திருநீடூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.530  
கழற்சிங்க நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்
றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர்
கோக்கழற் சிங்கர் என்பார்.
[1]

Back to Top
சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.540  
இடங்கழி நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

எழுந்திரைமா கடலாடை
இருநிலமாம் மகள்மார்பில்
அழுந்துபட எழுதும்இலைத்
தொழில்தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடைமறைந்த
பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு
குயில்நாடுங் கோனாடு.
[1]

Back to Top
சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.550  
செருத்துணை நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

உள்ளும் புறம்பும் குலமரபின்
ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி
கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர்
மலிந்த செல்வக் குலப்பதியாம்
தெள்ளுந் திரைகள் மதகுதொறும்
சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு
மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
[1]

Back to Top
சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.560  
புகழ்த்துணை நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

செருவிலிபுத் தூர்மன்னும்
சிவமறையோர் திருக்குலத்தார்
அருவரைவில் ஆளிதனக்கு
அகத்தடிமை யாம்அதனுக்கு
ஒருவர்தமை நிகரில்லார்
உலகத்துப் பரந்தோங்கிப்
பொருவரிய புகழ்நீடு
புகழ்த்துணையார் எனும்பெயரார்.
[1]

Back to Top
சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.570  
கோட்புலி நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

நலம்பெருகுஞ் சோணாட்டு
நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார்
கோட்புலியார் எனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர்
தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப்
போர்விளைத்துப் புகழ்விளைப்பார்.
[1]

Back to Top
சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.580  
பத்தாராய்ப் பணிவார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

ஈசருக்கே அன்பானார்
யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக்
கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின்
கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி
இனியனவே பேசுவார்.
[1]

Back to Top
சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.590  
பரமனையே பாடுவார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

புரமூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில்வரும் ஒருபொருளை உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நின்றானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்.

[1]

Back to Top
சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.610  
திருவாரூர் பிறந்தார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

அருவாகி உருவாகி
அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள்
மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள்
திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால்
உரைக்கலாந் தகைமையதோ.
[1]

Back to Top
சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.620  
முப்போதும் திருமேனி தீண்டுவார்  
Tune -   (Location: God: Goddess: )

எப்போதும் இனியபிரான்
இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த
விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும்
ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார்
முதற்சைவ ராமுனிவர்.
[1]

Back to Top
சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.630  
முழுநீறு பூசிய முனிவர்  
Tune -   (Location: God: Goddess: )

சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தநிய மத்துநிகழ்அங்கி தன்னில்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்மெய் யணிவா ரன்றே.
[1]

Back to Top
சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.640  
அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே.
[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.650  
பூசலார் நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

அன்றினார் புரம் எரித்தார்க்
காலயம் எடுக்க எண்ணி
ஒன்றுமங் குதவா தாக
உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்றென மனத்தி னாலே
நல்லஆ லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூசலார்தம் நினை
வினை யுரைக்க லுற்றாம்.
[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.660  
மங்கையர்க்கரசியார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.670  
நேச நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

சீர்வளர் சிறப்பின் மிக்க
செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க
பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்ப தாகும்.

[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.680  
கோச்செங்கட் சோழ நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

துலையிற் புறவின் நிறையளித்த
சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடுசந்
தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்கும்
குலையில் பெருகுஞ் சந்திரதீர்த்
தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையில் பெருகுந் தருமிடைந்த
நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.
[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.690  
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்  
Tune -   (Location: God: Goddess: )

எருக்கத்தம் புலியூர் மன்னி
வாழ்பவர் இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப்
பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம்
பணிந்துபோய் விளங்கு கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும்
ஆலவாய் பணியச் சென்றார்.
[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.700  
சடைய நாயனார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

தம்பி ரானைத் தோழமைகொண்
டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது
செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான்
பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார்
ஞாலம் எல்லாம் குடிவாழ
[1]

Back to Top
சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.710  
இசை ஞானியார் புராணம்  
Tune -   (Location: God: Goddess: )

ஒழியாப் பெருமைச் சடையனார்
உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார்
ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப்
பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ
முடியா தெவர்க்கும் முடியாதால்.
[1]

Back to Top
சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்   12 - Thirumurai   Pathigam 12.720  
வெள்ளானைச் சருக்கம்  
Tune -   (Location: God: Goddess: )

மூல மான திருத்தொண்டத்
தொகைக்கு முதல்வ ராய்இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தம்பி ரான்தோழர்
காலை மலர்ச்செங் கமலக்கண்
கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முணடார் திருக்கயிலை
அணைந்தது அறிந்த படியுரைப்பாம்.
[1]

This page was last modified on Wed, 04 Dec 2024 16:00:54 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai number lang tamil thirumurai 12