யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்;
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்;
தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா பேதத்த கடு விடம் எய்தி,
அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,
தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி!
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!
அருமையில் எளிய அழகே, போற்றி!
கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
அழிவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே, போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி!
மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி!
அடைந்தவர்க்கு அருளும் அப்பா, போற்றி!
இத்தி தன்னின் கீழ், இரு மூவர்க்கு,
அத்திக்கு, அருளிய அரசே, போற்றி!
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!
பிரமன் முதலாகத் தேவர்கள் யாவரும் தொழுது நிற்க, இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழும்படி வணங்குகின்ற, ஒளி பொருந்திய திருமுடியையுடைய அழகிய நெடுமால், அந்நாளில் திருவடியின் முடிவையறிய வேண்டுமென்ற விருப்பத்தால், வேகமும் வலிமையுமுடைய பன்றியாகி முன்வந்து ஏழுலகங்களும் ஊடுருவும்படி தோண்டிச் சென்று பின்னே இளைத்து `ஊழியை நடத்தும் முதல்வனே வெல்க வெல்க` என்று துதித்தும் காணப் பெறாத தாமரை மலர் போலும் திருவடிகள், துதித்தற்கு எளிதாகி,நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும், பூமியிற் பிறந்த பின்பு, வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும், கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய. சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு, கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து, இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும், மயக்கம் கொண்ட உலகினரது பெரிய மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும், கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும், வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும், சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும், தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி, வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும்,ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும், உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும், முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து, சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம். மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம். தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம். அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம். திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம். உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம். நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம். சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம். செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!.