திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செந்நெல் அம் கழனிப் பழனத்து (திருப்பூந்தராய்)
2 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்டு எலாம் மலர விரை (திருவலஞ்சுழி)
3 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் (திருத்தெளிச்சேரி)
4 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரை உலாம் கடலில் பொலி (திருவான்மியூர்)
5 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்))
6 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, (திருவையாறு)
7 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு (திருவாஞ்சியம்)
8 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் உலாவும் மதி வந்து (திருச்சிக்கல்)
9 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! (திருமழபாடி)
10 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீரின் ஆர் மணியும்(ம்) அகில் (திருமங்கலக்குடி)
11 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை, (சீர்காழி)
12 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறையானை, மாசு இலாப் புன்சடை (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
13 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது (திருக்கோழம்பம்)
14 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை, (திருவெண்ணியூர்)
15 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை (திருக்காறாயில் (திருக்காறைவாசல்))
16 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))
17 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிலவும், புனலும், நிறை வாள் (திருவேணுபுரம் (சீர்காழி))
18 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையாய்! எனுமால்; சரண் நீ! (திருமருகல்)
19 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறத்தால் உயிர் காவல் அமர்ந்து (திருநெல்லிக்கா)
20 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொழும் ஆறு வல்லார், துயர் (திருஅழுந்தூர்)
21 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல் (திருக்கழிப்பாலை)
22 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்; (திருக்குடவாயில்)
23 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மழை ஆர் மிடறா! மழுவாள் (திருவானைக்கா)
24 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின் (திருநாகேச்சுரம்)
25 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உகலி ஆழ்கடல் ஓங்கு பார் (திருப்புகலி -(சீர்காழி ))
26 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புடையின் ஆர் புள்ளி கால் (திருநெல்வாயில்)
27 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்))
28 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, (திருக்கருவூரானிலை (கரூர்))
29 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய (திருப்புகலி -(சீர்காழி ))
30 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறம் பயம் மலிந்தவர் மதில் (திருப்புறம்பயம்)
31 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற (கருப்பறியலூர் (தலைஞாயிறு))
32 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு (திருவையாறு)
33 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏடு மலி கொன்றை, அரவு, (திருநள்ளாறு)
34 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி (திருப்பழுவூர்)
35 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரவக் கெடும், வல்வினை பாரிடம் (திருத்தென்குரங்காடுதுறை)
36 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் ஆர் கழலே தொழுவீர்! (திருஇரும்பூளை (ஆலங்குடி))
37 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்))
38 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் (திருச்சாய்க்காடு (சாயாவனம்))
39 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், (சீர்காழி)
40 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், (திருப்பிரமபுரம் (சீர்காழி))
41 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் புகார், வான்புகுவர்; மனம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்))
42 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அக்கு இருந்த ஆரமும், ஆடு (திருஆக்கூர்)
43 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))
44 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்னம் பெய் கோவணமும் தோலும் (திருஆமாத்தூர்)
45 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தையல் ஓர் கூறு உடையான், (கைச்சின்னம் (கச்சன்னம்))
46 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் (திருநாலூர்மயானம்)
47 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு இட்ட புன்னை அம்கானல் (திருமயிலை (மயிலாப்பூர்))
48 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் காட்டும் நுதலானும், கனல் (திருவெண்காடு)
49 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண்ணின் நேர் மொழி மங்கைமார் (சீர்காழி)
50 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குன்ற வார்சிலை, நாண் அரா, (திருஆமாத்தூர்)
51 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீருள் ஆர் கயல் வாவி (திருக்களர்)
52 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, (திருக்கோட்டாறு)
53 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ (திருப்புறவார்பனங்காட்டூர்)
54 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் (திருப்புகலி -(சீர்காழி ))
55 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலச் சங்க வெண்குழையும் தோடும் (திருத்தலைச்சங்காடு)
56 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! (திருவிடைமருதூர்)
57 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமரும் திருமேனி உடையீர்! (திருநல்லூர்)
58 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை வாழும் அம் கையீர்! (திருக்குடவாயில்)
59 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலம் கொள் முத்தும் மணியும் (சீர்காழி)
60 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிந்தை இடையார், தலையின் மிசையார், (திருப்பாசூர்)
61 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! (திருவெண்காடு)
62 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காயச் செவ்விக் காமற் காய்ந்து, (திருமீயச்சூர்)
63 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் (திருஅரிசிற்கரைப்புத்தூர்)
64 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
65 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி வேல் இலர்போலும்; (திருப்பிரமபுரம் (சீர்காழி))
66 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர் (திருஆலவாய் (மதுரை))
67 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணும் ஓர் பாகம் உடையார்; (திருப்பெரும்புலியூர்)
68 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் அமர் திங்களும் நீரும் (திருக்கடம்பூர்)
69 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமர் மேனியினாரும், பிறை (திருப்பாண்டிக்கொடுமுடி)
70 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, (திருஆலவாய் (மதுரை))
71 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்த மதி சூடி, தெண் (திருக்குறும்பலா (குற்றாலம்))
72 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து ஆர் விரல் மடவாள் (திருநணா (பவானி))
73 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், (திருப்பிரமபுரம் (சீர்காழி))
74 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
75 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் (சீர்காழி)
76 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாடிய வெண்தலை மாலை சூடி, (திருஅகத்தியான்பள்ளி)
77 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்))
78 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், (திருவிளநகர்)
79 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பவனம் ஆய், சோடை ஆய், (திருவாரூர்)
80 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரிய மறையார், பிறையார், மலை (திருக்கடவூர் மயானம்)
81 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் (திருவேணுபுரம் (சீர்காழி))
82 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண் நிலாவிய மொழி உமை (திருத்தேவூர்)
83 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீல நல் மாமிடற்றன்; இறைவன்; (திருக்கொச்சைவயம் (சீர்காழி))
84 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காரைகள், கூகை, முல்லை, கள, (திருநனிப்பள்ளி)
85 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன், (திருமறைக்காடு (வேதாரண்யம்))
86 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரையினில் வந்த பாவம், உணர் (திருநாரையூர்)
87 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))
88 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துளி மண்டி உண்டு நிறம் (தென்திருமுல்லைவாயில்)
89 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் (திருக்கொச்சைவயம் (சீர்காழி))
90 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு (திருநெல்வாயில் அரத்துறை)
91 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் (திருமறைக்காடு (வேதாரண்யம்))
92 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பட்டம், பால்நிற மதியம், படர் (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்)
93 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புரை செய் வல்வினை தீர்க்கும் (திருத்தெங்கூர்)
94 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாகை ஆயிரம் உடையார், சாமமும் (திருவாழ்கொளிபுத்தூர்)
95 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் வண்டு அறை கொன்றை, (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு))
96 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்புரி வளரும் பொற்பு (சீர்காழி)
97 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நம் பொருள், நம் மக்கள் (சீர்காழி)
98 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரைத்தலைப் பசும் பொனோடு அருங் (திருத்துருத்தி)
99 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்று நன்று, நாளை நன்று (திருக்கோடி (கோடிக்கரை))
100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை கொள் கூற்றம் வந்து, (திருக்கோவலூர் வீரட்டம்)
101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பருக் கை யானை மத்தகத்து (திருவாரூர்)
102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அன்ன மென் நடை அரிவையோடு (திருச்சிரபுரம் (சீர்காழி))
103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புல்கு பொன் நிறம் புரி (திருஅம்பர்மாகாளம்)
104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் மேனி வெண் (திருக்கடிக்குளம்)
105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் உலாவிய சடையினர், விடையினர், (திருக்கீழ்வேளூர்)
106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! (திருவலஞ்சுழி)
107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விருது குன்ற, மாமேரு வில், (திருக்கேதீச்சரம்)
108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடி கொள் மேனியர், வான (திருவிற்குடிவீரட்டம்)
109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி (திருக்கோட்டூர்)
110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், (திருமாந்துறை)
111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் என (திருவாய்மூர்)
112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது ஓர் கூறு உகந்து, (திருவாடானை)
113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி இலங்கும் திருமேனியாளர், புலி (சீர்காழி)
114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு (திருக்கேதாரம்)
115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு குழல் (திருப்புகலூர்)
116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்டு கங்கை சடையில் கரந்தும், (திருஇரும்பைமாகாளம்)
118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, (திருதிலதைப்பதி (மதிமுத்தம்))
119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தழை கொள் சந்தும்(ம்), அகிலும், (திருநாகேச்சுரம்)
120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாந்தம் வெண்நீறு எனப் பூசி, (திருமூக்கீச்சுரம் (உறையூர்))
121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னம் நின்ற முடக்கால் முயற்கு (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))
122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடை அது ஏறி, வெறி (திருப்புகலி -(சீர்காழி ))
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.001  
செந்நெல் அம் கழனிப் பழனத்து
பண் - இந்தளம் (திருப்பூந்தராய் )
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.002  
விண்டு எலாம் மலர விரை
பண் - இந்தளம் (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.003  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்
பண் - இந்தளம் (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.004  
கரை உலாம் கடலில் பொலி
பண் - இந்தளம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.005  
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்
பண் - இந்தளம் (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) அருள்மன்னர் மனோன்மணியம்மை)
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.006  
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
பண் - இந்தளம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.007  
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு
பண் - இந்தளம் (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.008  
வான் உலாவும் மதி வந்து
பண் - இந்தளம் (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை)
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.009  
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!
பண் - இந்தளம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.010  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில்
பண் - இந்தளம் (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.011  
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
பண் - இந்தளம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.012  
மறையானை, மாசு இலாப் புன்சடை
பண் - இந்தளம் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.013  
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது
பண் - இந்தளம் (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.014  
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை,
பண் - இந்தளம் (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.015  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை
பண் - இந்தளம் (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.017  
நிலவும், புனலும், நிறை வாள்
பண் - இந்தளம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம் (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.019  
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து
பண் - இந்தளம் (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை)
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.020  
தொழும் ஆறு வல்லார், துயர்
பண் - இந்தளம் (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.021  
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
பண் - இந்தளம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர்
கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.022  
திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;
பண் - இந்தளம் (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்; அடியார் புகல,
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.023  
மழை ஆர் மிடறா! மழுவாள்
பண் - இந்தளம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.024  
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
பண் - இந்தளம் (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.025  
உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
பண் - இந்தளம் (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.026  
புடையின் ஆர் புள்ளி கால்
பண் - இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.027  
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு
பண் - இந்தளம் (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை)
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.028  
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,
பண் - இந்தளம் (திருக்கருவூரானிலை (கரூர்) பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை)
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.029  
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
பண் - இந்தளம் (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.030  
மறம் பயம் மலிந்தவர் மதில்
பண் - இந்தளம் (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
பண் - இந்தளம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.032  
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
பண் - இந்தளம் (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.033  
ஏடு மலி கொன்றை, அரவு,
பண் - இந்தளம் (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.034  
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி
பண் - இந்தளம் (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை)
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.035  
பரவக் கெடும், வல்வினை பாரிடம்
பண் - இந்தளம் (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.036  
சீர் ஆர் கழலே தொழுவீர்!
பண் - இந்தளம் (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை)
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.037  
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
பண் - இந்தளம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.038  
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
பண் - இந்தளம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
பண் - இந்தளம் (சீர்காழி )
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
பண் - சீகாமரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.041  
மண் புகார், வான்புகுவர்; மனம்
பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.042  
அக்கு இருந்த ஆரமும், ஆடு
பண் - சீகாமரம் (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.043  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
பண் - சீகாமரம் (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.044  
துன்னம் பெய் கோவணமும் தோலும்
பண் - சீகாமரம் (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.045  
தையல் ஓர் கூறு உடையான்,
பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை)
தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான்,
மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான்,
நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.046  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்
பண் - சீகாமரம் (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை)
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து,
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்
பண் - சீகாமரம் (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.049  
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
பண் - சீகாமரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, எம்பெருமான்! என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.050  
குன்ற வார்சிலை, நாண் அரா,
பண் - சீகாமரம் (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.051  
நீருள் ஆர் கயல் வாவி
பண் - சீகாமரம் (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை)
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.052  
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,
பண் - சீகாமரம் (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.053  
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ
பண் - சீகாமரம் (திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீசுவரர் திருப்புருவமின்னாளம்மை)
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர்,
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக்
கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.054  
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
பண் - சீகாமரம் (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.055  
நலச் சங்க வெண்குழையும் தோடும்
பண் - காந்தாரம் (திருத்தலைச்சங்காடு செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை)
நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.056  
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
பண் - காந்தாரம் (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.057  
பெண் அமரும் திருமேனி உடையீர்!
பண் - காந்தாரம் (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.058  
கலை வாழும் அம் கையீர்!
பண் - காந்தாரம் (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும்
அமர்வித்தீர்!
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்,
நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.059  
நலம் கொள் முத்தும் மணியும்
பண் - காந்தாரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்! என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.060  
சிந்தை இடையார், தலையின் மிசையார்,
பண் - காந்தாரம் (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.061  
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
பண் - காந்தாரம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.062  
காயச் செவ்விக் காமற் காய்ந்து,
பண் - காந்தாரம் (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.063  
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்
பண் - காந்தாரம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.064  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
பண் - காந்தாரம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.065  
கறை அணி வேல் இலர்போலும்;
பண் - காந்தாரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்
பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.067  
மண்ணும் ஓர் பாகம் உடையார்;
பண் - காந்தாரம் (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.068  
வான் அமர் திங்களும் நீரும்
பண் - காந்தாரம் (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.069  
பெண் அமர் மேனியினாரும், பிறை
பண் - காந்தாரம் (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு
செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.070  
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
பண் - காந்தாரம் (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.071  
திருந்த மதி சூடி, தெண்
பண் - காந்தாரம் (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை)
திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
குறும்பலாவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.072  
பந்து ஆர் விரல் மடவாள்
பண் - காந்தாரம் (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.073  
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
பண் - காந்தாரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
எறிவித்த இறைவன் ஊரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.074  
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
பண் - காந்தாரம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
நாம் கருதும் ஊரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.075  
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
பண் - காந்தாரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.076  
வாடிய வெண்தலை மாலை சூடி,
பண் - காந்தாரம் (திருஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை)
வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.077  
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்
பண் - காந்தாரம் (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால் தொழுவார்களே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.078  
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,
பண் - காந்தாரம் (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.079  
பவனம் ஆய், சோடை ஆய்,
பண் - காந்தாரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு
அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.080  
வரிய மறையார், பிறையார், மலை
பண் - காந்தாரம் (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.081  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்
பண் - காந்தாரம் (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.082  
பண் நிலாவிய மொழி உமை
பண் - காந்தாரம் (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.083  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
பண் - பியந்தைக்காந்தாரம் (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த, நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள், திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.084  
காரைகள், கூகை, முல்லை, கள,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர்
தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய
சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள,
வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி
போலும்; நமர்காள்
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.085  
வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.086  
உரையினில் வந்த பாவம், உணர்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.087  
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
பண் - பியந்தைக்காந்தாரம் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.088  
துளி மண்டி உண்டு நிறம்
பண் - பியந்தைக்காந்தாரம் (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.089  
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
பண் - பியந்தைக்காந்தாரம் (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.091  
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.092  
பட்டம், பால்நிற மதியம், படர்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.093  
புரை செய் வல்வினை தீர்க்கும்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை)
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.094  
சாகை ஆயிரம் உடையார், சாமமும்
பண் - பியந்தைக்காந்தாரம் (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.095  
பாடல் வண்டு அறை கொன்றை,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை)
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.096  
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
பண் - பியந்தைக்காந்தாரம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.097  
நம் பொருள், நம் மக்கள்
பண் - நட்டராகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்
பண் - நட்டராகம் (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே??
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.099  
இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம் (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.100  
படை கொள் கூற்றம் வந்து,
பண் - நட்டராகம் (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.101  
பருக் கை யானை மத்தகத்து
பண் - நட்டராகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.102  
அன்ன மென் நடை அரிவையோடு
பண் - நட்டராகம் (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.103  
புல்கு பொன் நிறம் புரி
பண் - நட்டராகம் (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
அடையாவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.104  
பொடி கொள் மேனி வெண்
பண் - நட்டராகம் (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)
பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி
அதள் ஆடை,
கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை
கழல் சிலம்பு ஆர்க்க,
கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தை, தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை
மூடாவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.105  
மின் உலாவிய சடையினர், விடையினர்,
பண் - நட்டராகம் (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
பண் - நட்டராகம் (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.107  
விருது குன்ற, மாமேரு வில்,
பண் - நட்டராகம் (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை)
விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி
அம்பா,
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி
எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி
மாதோட்டம்,
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.108  
வடி கொள் மேனியர், வான
பண் - நட்டராகம் (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை)
வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது
ஆர்ந்த
கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை
புலி அதள் ஆர்ப்பர்,
விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை
விற்குடி வீரட்டம்,
அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை
அடையாவே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.109  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி
பண் - நட்டராகம் (திருக்கோட்டூர் கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை)
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை
விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து
அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர்,
பாங்காலே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.110  
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,
பண் - நட்டராகம் (திருமாந்துறை ஐராவணேசுவரர் அழகாயமர்ந்தநாயகியம்மை)
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,
செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்
பரந்து உந்தி,
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை
உறைகின்ற
எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்
செய்வோமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.111  
தளிர் இள வளர் என
பண் - நட்டராகம் (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.112  
மாது ஓர் கூறு உகந்து,
பண் - நட்டராகம் (திருவாடானை ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை)
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.113  
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
பண் - செவ்வழி (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
பண் - செவ்வழி (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.115  
வெங் கள் விம்மு குழல்
பண் - செவ்வழி (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.116  
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)
பண் - செவ்வழி (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா,
வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை,
வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.117  
மண்டு கங்கை சடையில் கரந்தும்,
பண் - செவ்வழி (திருஇரும்பைமாகாளம் மாகாளேசுவரர் குயிலம்மை)
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான்
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம்
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.118  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,
பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.119  
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,
பண் - செவ்வழி (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.120  
சாந்தம் வெண்நீறு எனப் பூசி,
பண் - செவ்வழி (திருமூக்கீச்சுரம் (உறையூர்) )
சாந்தம் வெண்நீறு எனப் பூசி, வெள்ளம் சடை வைத்தவர்,
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு, ஆங்கு அறிய(ந்) நிறைந்தார் அவர்
ஆர்கொலோ?
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர்
மெய்ம்மையே.
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.121  
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு
பண் - செவ்வழி (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே
| [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2 -ஆம் திருமுறை பதிகம் 2.122  
விடை அது ஏறி, வெறி
பண் - செவ்வழி (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.
| [1] |