சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!  (கோயில் (சிதம்பரம்))  
2 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து சேர் விரலாள், பவளத்துவர்  (திருப்பூந்தராய்)  
3 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இயல் இசை எனும் பொருளின்  (திருப்புகலி -(சீர்காழி ))  
4 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடரினும், தளரினும், எனது உறு  (திருவாவடுதுறை)  
5 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க  (திருப்பூந்தராய்)  
6 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய  (திருக்கொள்ளம்பூதூர்)  
7 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் நுதலானும், வெண் நீற்றினானும்,  (திருப்புகலி -(சீர்காழி ))  
8 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை உடையானும், நெய் ஆடலானும்,  (திருக்கடவூர் வீரட்டம்)  
9 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்  (திருவீழிமிழலை)  
10 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலை, வளர் தண்மதியோடு அயலே  (திருஇராமேச்சுரம்)  
11 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,  (திருப்புனவாயில்)  
12 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,  (திருக்கோட்டாறு)  
13 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் அன எயிறு உடை  (திருப்பூந்தராய்)  
14 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரிடம் பாடலர், அடிகள், காடு  (திருப்பைஞ்ஞீலி)  
15 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட  (திருவெண்காடு)  
16 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிணம் படு சுடலையில், நீறு  (திருக்கொள்ளிக்காடு)  
17 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு அமர் குழல் உமை  (திருவிசயமங்கை)  
18 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துள மதி உடை மறி  (திருவைகல்மாடக்கோயில்)  
19 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரிதர அனல் கையில் ஏந்தி,  (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்))  
20 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது அமர் மேனியன் ஆகி,  (திருப்பூவணம்)  
21 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நனவிலும் கனவிலும், நாளும், தன்  (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்))  
22 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு  (சீர்காழி)  
23 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உருவின் ஆர் உமையொடும் ஒன்றி  (திருவிற்கோலம் (கூவம்))  
24 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  (திருக்கழுமலம் (சீர்காழி))  
25 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)  (திருந்துதேவன்குடி)  
26 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிடி எலாம் பின் செல,  (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))  
27 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்  (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை))  
28 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை ஆர் வண்டு இனம்  (திருமழபாடி)  
29 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாரு மன்னும் முலை மங்கை  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)  
30 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,  (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்))  
31 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரை தரு பவளமும், சீர்  (திருமயேந்திரப்பள்ளி)  
32 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னியும் மத்தமும் மதி பொதி  (திருஆலவாய் (மதுரை))  
33 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீர் இடைத் துயின்றவன், தம்பி,  (திருவுசாத்தானம் (கோவிலூர்))  
34 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்ண மா மலர் கொடு  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
35 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னை நால் மறை அவை  (திருத்தென்குடித்திட்டை)  
36 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சந்தம், ஆர், அகிலொடு, சாதி,  (திருக்காளத்தி)  
37 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரம் முனம் மலரால், புனல்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
38 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!  (திருக்கண்டியூர்)  
39 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மானின் நேர் விழி மாதராய்!  (திருஆலவாய் (மதுரை))  
40 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்  (சீர்காழி)  
41 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரு ஆர் கச்சித் திரு  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
42 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிறை வெண் திங்கள் வாள்முக  (திருச்சிற்றேமம்)  
43 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சந்தம் ஆர் முலையாள் தன  (சீர்காழி)  
44 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று  (திருக்கழிப்பாலை)  
45 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தம் ஆய், உலகு ஆதியும்  (திருவாரூர்)  
46 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்து இலங்கு முறுவல்(ல்) உமை  (திருக்கருகாவூர்)  
47 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காட்டு மா அது உரித்து,  (திருஆலவாய் (மதுரை))  
48 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கை ஆர் அழலன்(ன்), அழகு  (திருமழபாடி)  
49 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)  
50 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும்  (திருத்தண்டலைநீணெறி)  
51 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!  (திருஆலவாய் (மதுரை))  
52 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வீடு அலால் அவாய் இலாஅய்,  (திருஆலவாய் (மதுரை))  
53 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானைக் காவல் வெண்மதி மல்கு  (திருவானைக்கா)  
54 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாழ்க அந்தணர், வானவர், ஆன்  (திருஆலவாய் (மதுரை))  
55 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரை ஆர் கொன்றையினாய்! விடம்  (திருவான்மியூர்)  
56 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இறையவன், ஈசன், எந்தை, இமையோர்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
57 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடையவன், விண்ணும் மண்ணும் தொழ  (திருவொற்றியூர்)  
58 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்  (திருச்சாத்தமங்கை)  
59 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அர விரி கோடல் நீடல்  (திருகுடமூக்கு (கும்பகோணம்))  
60 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி மா மிடற்றான்,  (திருவக்கரை)  
61 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய  (திருவெண்டுறை)  
62 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் பொலி நெற்றியினான், திகழ்  (திருப்பனந்தாள்)  
63 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!  (திருச்செங்காட்டங்குடி)  
64 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))  
65 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் அணவு முலை மங்கை  (திருக்கச்சிநெறிக்காரைக்காடு)  
66 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி  (திருவேட்டக்குடி)  
67 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுரர் உலகு, நரர்கள் பயில்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
68 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாள வரி கோள புலி  (திருக்கயிலாயம்)  
69 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது  (திருக்காளத்தி)  
70 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏன எயிறு, ஆடு அரவொடு,  (திருமயிலாடுதுறை)  
71 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோழை மிடறு ஆக, கவி  (திருவைகாவூர்)  
72 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விங்கு விளை கழனி, மிகு  (திருமாகறல்)  
73 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் மறை, சூடல் மதி,  (திருப்பட்டீச்சரம்)  
74 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு பயில் வீடு, முடை  (திருத்தேவூர்)  
75 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம் தமது சிந்தை பிரியாத  (திருச்சண்பைநகர் (சீர்காழி))  
76 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் பொலி சுரத்தின் எரி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
77 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் இயல் பொருப்பு அரையன்  (திருமாணிகுழி)  
78 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு, வரி ஆடு அரவொடு,  (திருவேதிகுடி)  
79 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்  (திருகோகர்ணம் (கோகர்ணா))  
80 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் மருவு தேசினொடு தேசம்  (திருவீழிமிழலை)  
81 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு அமரும் முன்கை மட  (சீர்காழி )  
82 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொம்பு இரிய வண்டு உலவு  (திருஅவளிவணல்லூர்)  
83 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு இரிய விண்ட மலர்  (திருநல்லூர்)  
84 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் இயல் உருவினர், பெருகிய  (திருப்புறவம்)  
85 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு ஒளி விரிதரு மலர்  (திருவீழிமிழலை)  
86 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முறி உறு நிறம் மல்கு  (திருச்சேறை (உடையார்கோவில்))  
87 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் ஒளி  (திருஆலவாய் (மதுரை))  
88 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தகம் அணி பெற மலர்வது  (திருவிளமர்)  
89 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்து மா களிற்று இள  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
90 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓங்கி மேல் உழிதரும் ஒலி  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)  
91 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்  (திருவடகுரங்காடுதுறை)  
92 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவை; மந்திரம், மறுமை  (திருநெல்வேலி)  
93 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படியுள் ஆர் விடையினர், பாய்  (திருஅம்பர்மாகாளம்)  
94 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்ணவர் தொழுது எழு வெங்குரு  (திருவெங்குரு (சீர்காழி))  
95 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்  (திருஇன்னம்பர்)  
96 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல் வெணெய் விழுது பெய்து  (திருநெல்வெண்ணெய்)  
97 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திடம் மலி மதில் அணி  (திருச்சிறுகுடி)  
98 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெண்மதி தவழ் மதில் மிழலை  (திருவீழிமிழலை)  
99 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முரசு அதிர்ந்து எழுதரு முது  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,  (சீர்காழி )  
101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரிதரு மா மணி நாகம்  (திருஇராமேச்சுரம்)  
102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காம்பினை வென்ற மென்தோளி பாகம்  (திருநாரையூர்)  
103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொடி உடை மும்மதில் ஊடு  (திருவலம்புரம்)  
104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் கொண்ட தூ மதி  (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்))  
105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடல் வரை இல் மது  (திருக்கலிக்காமூர்)  
106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பள்ளம் அது ஆய படர்  (திருவலஞ்சுழி)  
107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கடல் இடை வெங்கடு நஞ்சம்  (திருநாரையூர்)  
108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேத வேள்வியை நிந்தனை செய்து  (திருஆலவாய் (மதுரை))  
109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் அது உண்ட(அ)ரி மலரோன்  (திருவானைக்கா)  
110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரம் அதே கொளா, உரம்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேலின் நேர்தரு கண்ணினாள் உமை  (திருவீழிமிழலை)  
112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரசு பாணியர், பாடல் வீணையர்,  (திருப்பல்லவனீச்சரம்)  
113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உற்று உமை சேர்வது மெய்யினையே;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆல நீழல் உகந்தது இருக்கையே;  (திருஆலவாய் (மதுரை))  
116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்று கொன்றை நம் சடையதே;  (திருவீழிமிழலை)  
117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -யாமாமா நீ யாமாமா யாழீகாமா  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடல் மலி கொன்றை, துன்று  (சீர்காழி)  
119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;  (திருவீழிமிழலை)  
120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  (திருஆலவாய் (மதுரை))  
121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;  (திருப்பந்தணைநல்லூர்)  
122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்  (திருஓமாம்புலியூர்)  
123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிரை கழல் அரவம் சிலம்பு  (திருக்கோணமலை)  
124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்  (திருக்குருகாவூர் வெள்ளடை)  
125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் ஊர்ப் பெரு மணம்  (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்))  
126 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத  (திருவிடைவாய்)  
127 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி  (திருக்கிளியன்னவூர்)  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.001  
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!  
பண் - காந்தாரபஞ்சமம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.002  
பந்து சேர் விரலாள், பவளத்துவர்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.003  
இயல் இசை எனும் பொருளின்  
பண் - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)

இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.004  
இடரினும், தளரினும், எனது உறு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)

இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.005  
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க செம்மை விமலன், வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.006  
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.007  
கண் நுதலானும், வெண் நீற்றினானும்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.008  
சடை உடையானும், நெய் ஆடலானும்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)

சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-
உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,
கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.009  
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்,
வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்;
ஆழியர்; தம் அடி போற்றி! என்பார்கட்கு அணியரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.010  
அலை, வளர் தண்மதியோடு அயலே  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)

அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.011  
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)

மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.012  
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)

வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.013  
மின் அன எயிறு உடை  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்
அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.014  
ஆரிடம் பாடலர், அடிகள், காடு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)

ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.015  
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.016  
நிணம் படு சுடலையில், நீறு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளிக்காடு அக்கினீசுவரர் பஞ்சினுமெல்லடியம்மை)

நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று,
இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்;
உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும்,
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.017  
மரு அமர் குழல் உமை  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)

மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்
குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.018  
துள மதி உடை மறி  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை)

துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.019  
எரிதர அனல் கையில் ஏந்தி,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை)

எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.020  
மாது அமர் மேனியன் ஆகி,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)

மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.021  
நனவிலும் கனவிலும், நாளும், தன்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை)

நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு  
பண் - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.023  
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவிற்கோலம் (கூவம்) புராந்தகேசுவரர் புராந்தரியம்மை)

உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  
பண் - கொல்லி   (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.025  
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)  
பண் - கொல்லி   (திருந்துதேவன்குடி கர்க்கடகேசுவரர் அருமருந்துநாயகியம்மை)

மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.026  
பிடி எலாம் பின் செல,  
பண் - கொல்லி   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளையீசுவரர் மகமாயியம்மை)

பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.027  
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்  
பண் - கொல்லி   (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)

படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.028  
காலை ஆர் வண்டு இனம்  
பண் - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)

காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.029  
வாரு மன்னும் முலை மங்கை  
பண் - கொல்லி   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)

வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.030  
பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,  
பண் - கொல்லி   (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை)

பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி,
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை,
நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி
பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.031  
திரை தரு பவளமும், சீர்  
பண் - கொல்லி   (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை)

திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.032  
வன்னியும் மத்தமும் மதி பொதி  
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )

வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,  
பண் - கொல்லி   (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)

நீர்இடைத் துயின்றவன், தம்பி,நீள் சாம்புவான்,
போர்உடைச் சுக்கிரீவன்,அனு மான்தொழ;
கார்உடை நஞ்சுஉண்டு, காத்து;அருள் செய்தஎம்
சீர்உடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.034  
வண்ண மா மலர் கொடு  
பண் - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.035  
முன்னை நால் மறை அவை  
பண் - கொல்லி   (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை)

முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.036  
சந்தம், ஆர், அகிலொடு, சாதி,  
பண் - கொல்லி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)

சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.037  
கரம் முனம் மலரால், புனல்  
பண் - கொல்லி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.038  
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!  
பண் - கொல்லி   (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)

வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம் மாப் பலி தேர்ந்ததே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.039  
மானின் நேர் விழி மாதராய்!  
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.040  
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்  
பண் - கொல்லி   (சீர்காழி )

கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.041  
கரு ஆர் கச்சித் திரு  
பண் - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா! என்ன, மருவா, வினையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.042  
நிறை வெண் திங்கள் வாள்முக  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் அகிலாண்டேசுவரியம்மை)

நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.043  
சந்தம் ஆர் முலையாள் தன  
பண் - கௌசிகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார், அடி என் மனத்து உள்ளவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.044  
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று  
பண் - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.045  
அந்தம் ஆய், உலகு ஆதியும்  
பண் - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,
சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம்
எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை  
பண் - கௌசிகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,
மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.047  
காட்டு மா அது உரித்து,  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,
நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;
வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.048  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு  
பண் - கௌசிகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)

அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  
பண் - கௌசிகம்   (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )

காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.050  
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும்  
பண் - கௌசிகம்   (திருத்தண்டலைநீணெறி நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை)

விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.052  
வீடு அலால் அவாய் இலாஅய்,  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.053  
வானைக் காவல் வெண்மதி மல்கு  
பண் - கௌசிகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.055  
விரை ஆர் கொன்றையினாய்! விடம்  
பண் - கௌசிகம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.056  
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்  
பண் - பஞ்சமம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.057  
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ  
பண் - பஞ்சமம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.058  
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்  
பண் - பஞ்சமம்   (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை)

திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே?
பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.059  
அர விரி கோடல் நீடல்  
பண் - பஞ்சமம்   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)

அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.060  
கறை அணி மா மிடற்றான்,  
பண் - பஞ்சமம்   (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)

கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.061  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய  
பண் - பஞ்சமம்   (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை)

ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.062  
கண் பொலி நெற்றியினான், திகழ்  
பண் - பஞ்சமம்   (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை)

கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.063  
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!  
பண் - பஞ்சமம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)

பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.064  
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை  
பண் - பஞ்சமம்   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)

அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.065  
வார் அணவு முலை மங்கை  
பண் - பஞ்சமம்   (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை)

வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.066  
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி  
பண் - பஞ்சமம்   (திருவேட்டக்குடி திருமேனியழகீசுவரர் சாந்தநாயகியம்மை)

வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம்
தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.067  
சுரர் உலகு, நரர்கள் பயில்  
பண் - சாதாரி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.068  
வாள வரி கோள புலி  
பண் - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.069  
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது  
பண் - சாதாரி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.070  
ஏன எயிறு, ஆடு அரவொடு,  
பண் - சாதாரி   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய்,
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர்
வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.071  
கோழை மிடறு ஆக, கவி  
பண் - சாதாரி   (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை)

கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும் வைகாவிலே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.072  
விங்கு விளை கழனி, மிகு  
பண் - சாதாரி   (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)

விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.073  
பாடல் மறை, சூடல் மதி,  
பண் - சாதாரி   (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)

பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.074  
காடு பயில் வீடு, முடை  
பண் - சாதாரி   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)

காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.075  
எம் தமது சிந்தை பிரியாத  
பண் - சாதாரி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.076  
கல் பொலி சுரத்தின் எரி  
பண் - சாதாரி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.077  
பொன் இயல் பொருப்பு அரையன்  
பண் - சாதாரி   (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை)

பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
மாணிகுழியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,  
பண் - சாதாரி   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)

நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.079  
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்  
பண் - சாதாரி   (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)

என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.080  
சீர் மருவு தேசினொடு தேசம்  
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.081  
சங்கு அமரும் முன்கை மட  
பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.082  
கொம்பு இரிய வண்டு உலவு  
பண் - சாதாரி   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)

கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.083  
வண்டு இரிய விண்ட மலர்  
பண் - சாதாரி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்
தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.084  
பெண் இயல் உருவினர், பெருகிய  
பண் - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.085  
மட்டு ஒளி விரிதரு மலர்  
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.086  
முறி உறு நிறம் மல்கு  
பண் - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன்,
வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்;
நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை,
செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.087  
தளிர் இள வளர் ஒளி  
பண் - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.088  
மத்தகம் அணி பெற மலர்வது  
பண் - சாதாரி   (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை)

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம்
ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா
அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள்
வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.089  
திருந்து மா களிற்று இள  
பண் - சாதாரி   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )

திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி,
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.090  
ஓங்கி மேல் உழிதரும் ஒலி  
பண் - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )

ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.091  
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்  
பண் - சாதாரி   (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)

கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.092  
மருந்து அவை; மந்திரம், மறுமை  
பண் - சாதாரி   (திருநெல்வேலி )

மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்-
செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.093  
படியுள் ஆர் விடையினர், பாய்  
பண் - சாதாரி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.094  
விண்ணவர் தொழுது எழு வெங்குரு  
பண் - சாதாரி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே;
சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.095  
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்  
பண் - சாதாரி   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.096  
நல் வெணெய் விழுது பெய்து  
பண் - சாதாரி   (திருநெல்வெண்ணெய் வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை)

நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.097  
திடம் மலி மதில் அணி  
பண் - சாதாரி   (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை)

திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்
அடைவதும், அமருலகு அதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.098  
வெண்மதி தவழ் மதில் மிழலை  
பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.099  
முரசு அதிர்ந்து எழுதரு முது  
பண் - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே;
பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.100  
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,  
பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்;
பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.101  
திரிதரு மா மணி நாகம்  
பண் - சாதாரி   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)

திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய்,
நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய,
விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.102  
காம்பினை வென்ற மென்தோளி பாகம்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,
பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)
உரி-தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.103  
கொடி உடை மும்மதில் ஊடு  
பண் - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)

கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.104  
விண் கொண்ட தூ மதி  
பண் - பழம்பஞ்சுரம்   (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை)

விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ,
பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து,
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.105  
மடல் வரை இல் மது  
பண் - பழம்பஞ்சுரம்   (திருக்கலிக்காமூர் சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை)

மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு ஆரும்,
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்,
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த,
இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள் ஆமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.106  
பள்ளம் அது ஆய படர்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)

பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி,
உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.107  
கடல் இடை வெங்கடு நஞ்சம்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,
உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து  
பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.109  
மண் அது உண்ட(அ)ரி மலரோன்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருவானைக்கா )

மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.110  
வரம் அதே கொளா, உரம்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம்
எரித்தவன்-பிரமநல்புரத்து
அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே.


[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.111  
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை  
பண் - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.112  
பரசு பாணியர், பாடல் வீணையர்,  
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பல்லவனீச்சரம் )

பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.113  
உற்று உமை சேர்வது மெய்யினையே;  
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்
அருள் மெய்யினையே;
கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே;
அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே;
பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.114  
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;  
பண் - பழம்பஞ்சுரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.115  
ஆல நீழல் உகந்தது இருக்கையே;  
பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.116  
துன்று கொன்றை நம் சடையதே;  
பண் - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.117  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா  
பண் - கௌசிகம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.118  
மடல் மலி கொன்றை, துன்று  
பண் - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும்,
மத்தமும், சடைமேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில்,
விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள்
கொணர்ந்து, வெள் அருவிக்
கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.119  
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;  
பண் - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.120  
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  
பண் - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.121  
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;  
பண் - புறநீர்மை   (திருப்பந்தணைநல்லூர் )

இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி லகு எழுந்து ஏத்த,
கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம்
கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.122  
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்  
பண் - புறநீர்மை   (திருஓமாம்புலியூர் )

பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.123  
நிரை கழல் அரவம் சிலம்பு  
பண் - புறநீர்மை   (திருக்கோணமலை கோணீசர் மாதுமையம்மை)

நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.124  
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்  
பண் - அந்தாளிக்குறிஞ்சி   (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)

சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து
எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்
விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.125  
கல் ஊர்ப் பெரு மணம்  
பண் - அந்தாளிக்குறிஞ்சி   (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)

கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.901  
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத  
பண் -   (திருவிடைவாய் )

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.902  
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி  
பண் -   (திருக்கிளியன்னவூர் )

தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே.

[1]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai first last song thirumurai 3