சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

திருமுறை
திருமுறை  
1   2   3   4   5   6   7   8   9   10   11   12

1 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  (திருவதிகை வீரட்டானம்)  
2 திருநாவுக்கரசர் - தேவாரம் -சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்  (திருவதிகை வீரட்டானம்)  
3 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  (திருவையாறு)  
4 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்  (திருவாரூர்)  
5 திருநாவுக்கரசர் - தேவாரம் -மெய் எலாம் வெண் நீறு  (திருவாரூர்)  
6 திருநாவுக்கரசர் - தேவாரம் -வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்  (திருக்கழிப்பாலை)  
7 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
8 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிவன் எனும் ஓசை அல்லது,  (பொது - சிவனெனுமோசை)  
9 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  (பொது - திருஅங்கமாலை)  
10 திருநாவுக்கரசர் - தேவாரம் -முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,  (திருவதிகை வீரட்டானம்)  
11 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  (பொது - நமசிவாயத் திருப்பதிகம்)  
12 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல் மாலை பயில்கின்ற குயில்  (திருப்பழனம்)  
13 திருநாவுக்கரசர் - தேவாரம் -விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்  (திருவையாறு)  
14 திருநாவுக்கரசர் - தேவாரம் -பருவரை ஒன்று சுற்றி அரவம்  (பொது -தசபுராணம்)  
15 திருநாவுக்கரசர் - தேவாரம் -பற்று அற்றார் சேர் பழம்  (பாவநாசத் திருப்பதிகம்)  
16 திருநாவுக்கரசர் - தேவாரம் -செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி  (திருப்புகலூர்)  
17 திருநாவுக்கரசர் - தேவாரம் -எத் தீப் புகினும் எமக்கு  (திருவாரூர்)  
18 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஒன்று கொல் ஆம் அவர்  (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம்)  
19 திருநாவுக்கரசர் - தேவாரம் -சூலப் படை யானை; சூழ்  (திருவாரூர்)  
20 திருநாவுக்கரசர் - தேவாரம் -காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்  (திருவாரூர்)  
21 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்து விதானம்; மணி பொன்  (திருவாரூர்)  
22 திருநாவுக்கரசர் - தேவாரம் -செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா  (கோயில் (சிதம்பரம்))  
23 திருநாவுக்கரசர் - தேவாரம் -பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  (கோயில் (சிதம்பரம்))  
24 திருநாவுக்கரசர் - தேவாரம் -இரும்பு கொப்பளித்த யானை ஈர்  (திருவதிகை வீரட்டானம்)  
25 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெண் நிலா மதியம் தன்னை  (திருவதிகை வீரட்டானம்)  
26 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனே! எங்கள் கோவே! நாதனே!  (திருவதிகை வீரட்டானம்)  
27 திருநாவுக்கரசர் - தேவாரம் -மடக்கினார்; புலியின்தோலை; மா மணி  (திருவதிகை வீரட்டானம்)  
28 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்பு எலாம் இளைய காலம்  (திருவதிகை வீரட்டானம்)  
29 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு  (திருச்செம்பொன்பள்ளி)  
30 திருநாவுக்கரசர் - தேவாரம் -நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை  (திருக்கழிப்பாலை)  
31 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொள்ளத்த காயம் ஆய பொருளினை,  (திருக்கடவூர் வீரட்டம்)  
32 திருநாவுக்கரசர் - தேவாரம் -உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர  (திருப்பயற்றூர்)  
33 திருநாவுக்கரசர் - தேவாரம் -இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
34 திருநாவுக்கரசர் - தேவாரம் -தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
35 திருநாவுக்கரசர் - தேவாரம் -காடு உடைச் சுடலை நீற்றார்;  (திருவிடைமருதூர்)  
36 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆடினார் ஒருவர் போலும்; அலர்  (திருப்பழனம்)  
37 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலனை வீழச் செற்ற கழல்  (திருநெய்த்தானம்)  
38 திருநாவுக்கரசர் - தேவாரம் -கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்  (திருவையாறு)  
39 திருநாவுக்கரசர் - தேவாரம் -குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  (திருவையாறு)  
40 திருநாவுக்கரசர் - தேவாரம் -தான் அலாது உலகம் இல்லை;  (திருவையாறு)  
41 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொய் விராம் மேனி தன்னைப்  (திருச்சோற்றுத்துறை)  
42 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  (திருத்துருத்தி)  
43 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறை அது பாடிப் பிச்சைக்கு  (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))  
44 திருநாவுக்கரசர் - தேவாரம் -நம்பனை, நகரம் மூன்றும் எரியுண  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
45 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  (திருவொற்றியூர்)  
46 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து  (திருவொற்றியூர்)  
47 திருநாவுக்கரசர் - தேவாரம் -கனகம் மா வயிரம் உந்தும்  (திருக்கயிலாயம்)  
48 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடல் அகம் ஏழினோடும் பவனமும்  (திருஆப்பாடி)  
49 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,  (திருக்குறுக்கை வீரட்டம்)  
50 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெடிய மால் பிரமனோடு நீர்  (திருக்குறுக்கை வீரட்டம்)  
51 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெற்றி மேல் கண்ணினானே! நீறு  (திருக்கோடி (கோடிக்கரை))  
52 திருநாவுக்கரசர் - தேவாரம் -படு குழிப் பவ்வத்து அன்ன  (திருவாரூர்)  
53 திருநாவுக்கரசர் - தேவாரம் -குழல் வலம் கொண்ட சொல்லாள்  (திருவாரூர்)  
54 திருநாவுக்கரசர் - தேவாரம் -பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  (திருப்புகலூர்)  
55 திருநாவுக்கரசர் - தேவாரம் -தெண் திரை தேங்கி ஓதம்  (திருவலம்புரம்)  
56 திருநாவுக்கரசர் - தேவாரம் -மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  (திருவாவடுதுறை)  
57 திருநாவுக்கரசர் - தேவாரம் -மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்  (திருவாவடுதுறை)  
58 திருநாவுக்கரசர் - தேவாரம் -கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))  
59 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்  (திருஅவளிவணல்லூர்)  
60 திருநாவுக்கரசர் - தேவாரம் -மறை அணி நாவினானை, மறப்பு  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))  
61 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,  (திருஇராமேச்சுரம்)  
62 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!  (திருஆலவாய் (மதுரை))  
63 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்  (திருவண்ணாமலை)  
64 திருநாவுக்கரசர் - தேவாரம் -பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;  (திருவீழிமிழலை)  
65 திருநாவுக்கரசர் - தேவாரம் -தோடு உலாம் மலர்கள் தூவித்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
66 திருநாவுக்கரசர் - தேவாரம் -கச்சை சேர் அரவர் போலும்;  (திருநாகேச்சரம்)  
67 திருநாவுக்கரசர் - தேவாரம் -வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்  (திருக்கொண்டீச்சரம்)  
68 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ள நீர்ச் சடையர் போலும்;  (திருவாலங்காடு (பழையனூர்))  
69 திருநாவுக்கரசர் - தேவாரம் -செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,  (திருக்கோவலூர்)  
70 திருநாவுக்கரசர் - தேவாரம் -முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்  (திருநனிப்பள்ளி)  
71 திருநாவுக்கரசர் - தேவாரம் -மனைவி தாய் தந்தை மக்கள்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
72 திருநாவுக்கரசர் - தேவாரம் -விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்  (திருஇன்னம்பர்)  
73 திருநாவுக்கரசர் - தேவாரம் -பெருந் திரு இமவான் பெற்ற  (திருச்சேறை (உடையார்கோவில்))  
74 திருநாவுக்கரசர் - தேவாரம் -முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  (பொது -நினைந்த திருநேரிசை)  
75 திருநாவுக்கரசர் - தேவாரம் -தொண்டனேன் பட்டது என்னே! தூய  (பொது -தனித் திருநேரிசை)  
76 திருநாவுக்கரசர் - தேவாரம் -மருள் அவா மனத்தன் ஆகி  (பொது -தனித் திருநேரிசை)  
77 திருநாவுக்கரசர் - தேவாரம் -கடும்பகல் நட்டம் ஆடி, கையில்  (பொது -தனித் திருநேரிசை)  
78 திருநாவுக்கரசர் - தேவாரம் -வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்  (பொது -குறைந்த நேரிசை)  
79 திருநாவுக்கரசர் - தேவாரம் -தம் மானம் காப்பது ஆகித்  (பொது -குறைந்த நேரிசை)  
80 திருநாவுக்கரசர் - தேவாரம் -பாளை உடைக் கமுகு ஓங்கி,  (கோயில் (சிதம்பரம்))  
81 திருநாவுக்கரசர் - தேவாரம் -கரு நட்ட கண்டனை, அண்டத்  (கோயில் (சிதம்பரம்))  
82 திருநாவுக்கரசர் - தேவாரம் -பார் கொண்டு மூடிக் கடல்  (சீர்காழி)  
83 திருநாவுக்கரசர் - தேவாரம் -படை ஆர் மழு ஒன்று  (சீர்காழி)  
84 திருநாவுக்கரசர் - தேவாரம் -எட்டு ஆம் திசைக்கும் இரு  (பொது -ஆருயிர்த் திருவிருத்தம்)  
85 திருநாவுக்கரசர் - தேவாரம் -காலை எழுந்து, கடிமலர் தூயன  (திருச்சோற்றுத்துறை)  
86 திருநாவுக்கரசர் - தேவாரம் -செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  (திருவொற்றியூர்)  
87 திருநாவுக்கரசர் - தேவாரம் -மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  (திருப்பழனம்)  
88 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாலினை மால் உற நின்றான்,  (திருப்பூந்துருத்தி)  
89 திருநாவுக்கரசர் - தேவாரம் -பார் இடம் சாடிய பல்  (திருநெய்த்தானம்)  
90 திருநாவுக்கரசர் - தேவாரம் -கையது, கால் எரி நாகம்,  (திருவேதிகுடி)  
91 திருநாவுக்கரசர் - தேவாரம் -குறுவித்தவா, குற்றம் நோய் வினை  (திருவையாறு)  
92 திருநாவுக்கரசர் - தேவாரம் -சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  (திருவையாறு)  
93 திருநாவுக்கரசர் - தேவாரம் -வானவர் தானவர் வைகல் மலர்  (திருக்கண்டியூர்)  
94 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))  
95 திருநாவுக்கரசர் - தேவாரம் -வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  (திருவீழிமிழலை)  
96 திருநாவுக்கரசர் - தேவாரம் -கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்  (திருச்சத்திமுற்றம்)  
97 திருநாவுக்கரசர் - தேவாரம் -அட்டுமின், இல் பலி! என்று  (திருநல்லூர்)  
98 திருநாவுக்கரசர் - தேவாரம் -அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  (திருவையாறு)  
99 திருநாவுக்கரசர் - தேவாரம் -ஓதுவித்தாய், முன் அற உரை;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
100 திருநாவுக்கரசர் - தேவாரம் -மன்னும் மலைமகள் கையால் வருடின;  (திருஇன்னம்பர்)  
101 திருநாவுக்கரசர் - தேவாரம் -குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  (திருவாரூர்)  
102 திருநாவுக்கரசர் - தேவாரம் -வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,  (திருவாரூர்)  
103 திருநாவுக்கரசர் - தேவாரம் -வடிவு உடை மாமலைமங்கை பங்கா!  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
104 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் ஒள்வாள் போல்  (திருவதிகை வீரட்டானம்)  
105 திருநாவுக்கரசர் - தேவாரம் -தன்னைச் சரண் என்று தாள்  (திருப்புகலூர்)  
106 திருநாவுக்கரசர் - தேவாரம் -நெய்தல் குருகு தன் பிள்ளை  (திருக்கழிப்பாலை)  
107 திருநாவுக்கரசர் - தேவாரம் -மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த  (திருக்கடவூர் வீரட்டம்)  
108 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாணிக்கு உயிர் பெறக் கூற்றை  (திருமாற்பேறு)  
109 திருநாவுக்கரசர் - தேவாரம் -பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  (திருத்தூங்கானைமாடம்)  
110 திருநாவுக்கரசர் - தேவாரம் -சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,  (பசுபதித் திருவிருத்தம்)  
111 திருநாவுக்கரசர் - தேவாரம் -விடையும் விடைப் பெரும் பாகா!  (பொது -சரக்கறை திருவிருத்தம்)  
112 திருநாவுக்கரசர் - தேவாரம் -வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  (பொது -தனித் திருவிருத்தம்)  
113 திருநாவுக்கரசர் - தேவாரம் -பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  (பொது -தனித் திருவிருத்தம்)  

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.001  
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  
பண் - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.002  
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்  
பண் - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.003  
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  
பண் - காந்தாரம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.004  
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்  
பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்,
ஓடு இள வெண் பிறையானும், ஒளி திகழ் சூலத்தினானும்,
ஆடு இளம் பாம்பு அசைத்தானும்-ஆரூர் அம்ர்ந்த அம்மானே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.005  
மெய் எலாம் வெண் நீறு  
பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல் ஆம் என்று எண்ணி, உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு,
கொய் உலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால்-தொழாது ஒழிந்து,-கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.006  
வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்  
பண் - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் தானவனே! என்கின்றாளால்;
சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;
அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.007  
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;  
பண் - காந்தாரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.008  
சிவன் எனும் ஓசை அல்லது,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (பொது - சிவனெனுமோசை )

சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.009  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  
பண் - சாதாரி   (பொது - திருஅங்கமாலை )

தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.010  
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,  
பண் - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் )

முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீா
வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்;
திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன்
கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.011  
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  
பண் - காந்தாரம்   (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )

சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.012  
சொல் மாலை பயில்கின்ற குயில்  
பண் - பழந்தக்கராகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.013  
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்  
பண் - பழந்தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும்
இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்;
தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான்,
அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.014  
பருவரை ஒன்று சுற்றி அரவம்  
பண் - பழம்பஞ்சுரம்   (பொது -தசபுராணம் )

பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயம் ஆய்,
திரு நெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட, மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே! எனலும்,
அருள் கொடு மா விடத்தை, எரியாமல், உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.015  
பற்று அற்றார் சேர் பழம்  
பண் - பழம்பஞ்சுரம்   (பாவநாசத் திருப்பதிகம் )

பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை,
சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை,
வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.016  
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி  
பண் - இந்தளம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)

செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.017  
எத் தீப் புகினும் எமக்கு  
பண் - இந்தளம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.018  
ஒன்று கொல் ஆம் அவர்  
பண் - இந்தளம்   (பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் )

ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;
ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.019  
சூலப் படை யானை; சூழ்  
பண் - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை;
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.020  
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்  
பண் - சீகாமரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி
பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?-
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.021  
முத்து விதானம்; மணி பொன்  
பண் - குறிஞ்சி   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.022  
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா  
பண் - காந்தாரம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.023  
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  
பண் - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ!
எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா;
முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.024  
இரும்பு கொப்பளித்த யானை ஈர்  
பண் - கொப்பளித்ததிருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.025  
வெண் நிலா மதியம் தன்னை  
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.026  
நம்பனே! எங்கள் கோவே! நாதனே!  
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி!
பங்கனே! பரமயோகி! என்று என்றே பரவி நாளும்,
செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான்,
அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.027  
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி  
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா
முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்-
தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல்
அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.028  
முன்பு எலாம் இளைய காலம்  
பண் - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி,
கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி,
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்;
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.029  
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு  
பண் - திருநேரிசை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.030  
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை  
பண் - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.031  
பொள்ளத்த காயம் ஆய பொருளினை,  
பண் - சாளரபாணி   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)

பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.032  
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர  
பண் - திருநேரிசை   (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை)

உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.033  
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்  
பண் - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.034  
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்  
பண் - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.035  
காடு உடைச் சுடலை நீற்றார்;  
பண் - திருநேரிசை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல்
பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில்
தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.036  
ஆடினார் ஒருவர் போலும்; அலர்  
பண் - திருநேரிசை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.037  
காலனை வீழச் செற்ற கழல்  
பண் - திருநேரிசை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.038  
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்  
பண் - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.039  
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.040  
தான் அலாது உலகம் இல்லை;  
பண் - திருநேரிசை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

தான் அலாது உலகம் இல்லை; சகம் அலாது அடிமை இல்லை;
கான் அலாது ஆடல் இல்லை; கருதுவார் தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை; வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.041  
பொய் விராம் மேனி தன்னைப்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)

பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.042  
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)

பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.043  
மறை அது பாடிப் பிச்சைக்கு  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)

மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.044  
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண  
பண் - திருநேரிசை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.045  
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.046  
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து  
பண் - திருநேரிசை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.047  
கனகம் மா வயிரம் உந்தும்  
பண் - திருநேரிசை   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.048  
கடல் அகம் ஏழினோடும் பவனமும்  
பண் - திருநேரிசை   (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை)

கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும்
உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று,
தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி,
மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.049  
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார்,  
பண் - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)

ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்;
ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.050  
நெடிய மால் பிரமனோடு நீர்  
பண் - திருநேரிசை   (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை)

நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.051  
நெற்றி மேல் கண்ணினானே! நீறு  
பண் - திருநேரிசை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)

நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!
கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே!
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே!
குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.052  
படு குழிப் பவ்வத்து அன்ன  
பண் - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.053  
குழல் வலம் கொண்ட சொல்லாள்  
பண் - திருநேரிசை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.054  
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.055  
தெண் திரை தேங்கி ஓதம்  
பண் - திருநேரிசை   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழுங்காலை,
தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது, அடி வணங்கி, எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம் புரத்து அடிகள் தம்மைக்
கொண்டு, நல் கீதம் பாடக் குழகர் தாம் இருந்த ஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.056  
மா-இரு ஞாலம் எல்லாம் மலர்  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)

மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.057  
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்  
பண் - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)

மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
அஞ்சல்! என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.058  
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.059  
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்  
பண் - திருநேரிசை   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)

தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்ல, சிக்கெனத் தவிரும்! என்று,
வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.060  
மறை அணி நாவினானை, மறப்பு  
பண் - திருநேரிசை   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை)

மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை,
கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை,
பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை,
நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.061  
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,  
பண் - திருநேரிசை   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)

பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.062  
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!  
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.063  
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்  
பண் - திருநேரிசை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.064  
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;  
பண் - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர்
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்;
கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள
வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.065  
தோடு உலாம் மலர்கள் தூவித்  
பண் - திருநேரிசை   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)

தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும், அஞ்சி, பாதமே சரணம் என்ன,
சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.066  
கச்சை சேர் அரவர் போலும்;  
பண் - திருநேரிசை   (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்;
பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்;
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.067  
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்  
பண் - திருநேரிசை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)

வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.068  
வெள்ள நீர்ச் சடையர் போலும்;  
பண் - திருநேரிசை   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)

வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்-
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.069  
செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,  
பண் - திருநேரிசை   (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)

செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன், அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகல் இடம் அறிய மாட்டேன்;
எத்தை நான் பற்றி நிற்கேன்? இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே? கோவல் வீரட்டனீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.070  
முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்  
பண் - திருநேரிசை   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)

முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.071  
மனைவி தாய் தந்தை மக்கள்  
பண் - திருநேரிசை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.072  
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்  
பண் - திருநேரிசை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.073  
பெருந் திரு இமவான் பெற்ற  
பண் - திருநேரிசை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.074  
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  
பண் - கொல்லி   (பொது -நினைந்த திருநேரிசை )

முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.075  
தொண்டனேன் பட்டது என்னே! தூய  
பண் - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )

தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.076  
மருள் அவா மனத்தன் ஆகி  
பண் - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்;
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும்
அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப்
பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.077  
கடும்பகல் நட்டம் ஆடி, கையில்  
பண் - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )

கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே!
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.078  
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்  
பண் - திருநேரிசை   (பொது -குறைந்த நேரிசை )

வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;
நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!
இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.079  
தம் மானம் காப்பது ஆகித்  
பண் - திருநேரிசை   (பொது -குறைந்த நேரிசை )

தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.080  
பாளை உடைக் கமுகு ஓங்கி,  
பண் - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும்
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள்,
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.081  
கரு நட்ட கண்டனை, அண்டத்  
பண் - திருவிருத்தம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப்
பெரு நட்டம் ஆடியை, வானவர் கோன் என்று வாழ்த்துவனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.082  
பார் கொண்டு மூடிக் கடல்  
பண் - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.083  
படை ஆர் மழு ஒன்று  
பண் - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்,
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்-
மடைவாய்க் குருகு இனம், பாளை விரிதொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு, பேராது இருக்கும்-பெரும்பதியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.084  
எட்டு ஆம் திசைக்கும் இரு  
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -ஆருயிர்த் திருவிருத்தம் )

எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும்(ம்) இறைவா, முறை! என்று
இட்டார் அமரர் வெம் பூசல் எனக் கேட்டு, எரிவிழியா,
ஒட்டாக் கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.085  
காலை எழுந்து, கடிமலர் தூயன  
பண் - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)

காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.086  
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  
பண் - திருவிருத்தம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.087  
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  
பண் - திருவிருத்தம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.088  
மாலினை மால் உற நின்றான்,  
பண் - திருவிருத்தம்   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)

மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய
பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல்
போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும்
ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.089  
பார் இடம் சாடிய பல்  
பண் - திருவிருத்தம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.090  
கையது, கால் எரி நாகம்,  
பண் - திருவிருத்தம்   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)

கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது;
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.091  
குறுவித்தவா, குற்றம் நோய் வினை  
பண் - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய்
உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி
அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே!
செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.092  
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து  
பண் - திருவிருத்தம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன-பாம்பு சுற்றி
அந்திப்பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.093  
வானவர் தானவர் வைகல் மலர்  
பண் - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்  
பண் - திருவிருத்தம்   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)

ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.095  
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்  
பண் - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)

வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள
நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.096  
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்  
பண் - திருவிருத்தம்   (திருச்சத்திமுற்றம் வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன்
பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில்
மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத்
தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.097  
அட்டுமின், இல் பலி! என்று  
பண் - திருவிருத்தம்   (திருநல்லூர் சிவக்கொழுந்தீசுவரர் பெரியநாயகியம்மை)

அட்டுமின், இல் பலி! என்று என்று அகம் கடைதோறும் வந்து,
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?-
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும்
நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.098  
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,  
பண் - திருவிருத்தம்   (திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.099  
ஓதுவித்தாய், முன் அற உரை;  
பண் - திருவிருத்தம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.100  
மன்னும் மலைமகள் கையால் வருடின;  
பண் - திருவிருத்தம்   (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.101  
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே  
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.102  
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,  
பண் - திருவிருத்தம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி,
தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்,
சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.103  
வடிவு உடை மாமலைமங்கை பங்கா!  
பண் - திருவிருத்தம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.104  
மாசு இல் ஒள்வாள் போல்  
பண் - திருவிருத்தம்   (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.105  
தன்னைச் சரண் என்று தாள்  
பண் - திருவிருத்தம்   (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.106  
நெய்தல் குருகு தன் பிள்ளை  
பண் - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று,
கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்!
பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்;
எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.107  
மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த  
பண் - திருவிருத்தம்   (திருக்கடவூர் வீரட்டம் பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்-
இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி,
சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.108  
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை  
பண் - திருவிருத்தம்   (திருமாற்பேறு அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)

மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன; மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன; கண்ட தொண்டர்
பேணிக் கிடந்து பரவப்படுவன; பேர்த்தும் அஃதே;
மாணிக்கம் ஆவன-மாற்பேறு உடையான் மலர் அடியே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.109  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  
பண் - திருவிருத்தம்   (திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.110  
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு,  
பண் - கொல்லி   (பசுபதித் திருவிருத்தம் )

சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி,
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும்
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல்
பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.111  
விடையும் விடைப் பெரும் பாகா!  
பண் - திருவிருத்தம்   (பொது -சரக்கறை திருவிருத்தம் )

விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.112  
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )

வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.113  
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )

பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே
பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல்
பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும்,
பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.

[1]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai first last song thirumurai 4