திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் (திருவெண்ணெய்நல்லூர்)
2 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; (திருப்பரங்குன்றம்)
3 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கல்வாய் அகிலும் கதிர் மா (திருநெல்வாயில் அரத்துறை)
4 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தலைக்குத் தலை மாலை அணிந்தது (திருஅஞ்சைக்களம்)
5 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நெய்யும் பாலும் தயிரும் கொண்டு (திருஓணகாந்தன்தளி)
6 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -படம் கொள் நாகம் சென்னி (திருவெண்காடு)
7 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மத்தயானை ஏறி, மன்னர் சூழ (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))
8 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு (திருவாரூர்)
9 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை (திருஅரிசிற்கரைப்புத்தூர்)
10 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தேன் நெய் புரிந்து உழல் (திருக்கச்சிஅனேகதங்காவதம்)
11 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திரு உடையார், திருமால் அயனாலும் (திருப்பூவணம்)
12 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த (திருவாரூர்)
13 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மலை ஆர் அருவித்திரள் மா (திருத்துறையூர் (திருத்தளூர்))
14 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வைத்தனன் தனக்கே, தலையும் என் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))
15 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பூண் நாண் ஆவது ஓர் (திருநாட்டியத்தான்குடி)
16 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -குரும்பை முலை மலர்க் குழலி (கலயநல்லூர் (சாக்கோட்டை))
17 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கோவலன் நான்முகன் வானவர் கோனும் (திருநாவலூர் (திருநாமநல்லூர்))
18 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)
19 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை (திருநின்றியூர்)
20 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீள நினைந்து அடியேன் உமை (திருக்கோளிலி (திருக்குவளை))
21 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்))
22 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முன்னவன், எங்கள் பிரான், முதல் (திருப்பழமண்ணிப்படிக்கரை)
23 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், (திருக்கழிப்பாலை)
24 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆர் மேனியனே! புலித்தோலை (திருமழபாடி)
25 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
26 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செண்டு ஆடும் விடையாய்! சிவனே! (திருக்காளத்தி)
27 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -விடை ஆரும் கொடியாய்! வெறி (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))
28 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொடி ஆர் மேனியனே! புரி (திருக்கடவூர் வீரட்டம்)
29 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; (திருக்குருகாவூர் வெள்ளடை)
30 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து (கருப்பறியலூர் (தலைஞாயிறு))
31 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் (திருவிடையாறு)
32 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கடிது ஆய்க் கடல் காற்று (திருக்கோடிக்குழகர்)
33 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? (திருவாரூர்)
34 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் (திருப்புகலூர்)
35 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி (திருப்புறம்பயம்)
36 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கார் உலாவிய நஞ்சை உண்டு (திருப்பைஞ்ஞீலி)
37 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -குருகு பாய, கொழுங் கரும்புகள் (திருவாரூர்)
38 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மானை அறியாத சாதியார் உளரே? (திருவதிகை வீரட்டானம்)
39 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தில்லை வாழ் அந்தணர் தம் (திருவாரூர்)
40 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வள் வாய மதி மிளிரும் (திருக்கானாட்டுமுள்ளூர்)
41 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முது வாய் ஓரி கதற, (திருக்கச்சூர் ஆலக்கோயில்)
42 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எறிக்கும் கதிர் வேய் உரி (திருவெஞ்சமாக்கூடல்)
43 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நஞ்சி, இடை இன்று நாளை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
44 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது (திருஅஞ்சைக்களம்)
45 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் (திருஆமாத்தூர்)
46 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பத்து ஊர் புக்கு, இரந்து, (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
47 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! (திருவாரூர்)
48 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மற்றுப் பற்று எனக்கு இன்றி, (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம்)
49 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், (திருமுருகன்பூண்டி)
50 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சித்தம்! நீ நினை! என்னொடு (திருப்புனவாயில்)
51 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் (திருவாரூர்)
52 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -முத்தா! முத்தி தர வல்ல (திருவாலங்காடு (பழையனூர்))
53 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மரு ஆர் கொன்றை மதி (திருக்கடவூர் மயானம்)
54 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அழுக்கு மெய் கொடு உன் (திருவொற்றியூர்)
55 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, (திருப்புன்கூர்)
56 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊர்வது ஓர் விடை ஒன்று (திருநீடூர்)
57 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை (திருவாழ்கொளிபுத்தூர்)
58 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை (சீர்காழி)
59 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் (திருவாரூர்)
60 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கழுதை குங்குமம் தான் சுமந்து (திருவிடைமருதூர்)
61 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஆலம் தான் உகந்து அமுது (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
62 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -புற்றில் வாள் அரவு ஆர்த்த (திருக்கோலக்கா)
63 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மெய்யை முற்றப் பொடிப் பூசி (பொது -திருமுதுகுன்றம்)
64 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீறு தாங்கிய திரு நுதலானை, (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி))
65 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திருவும், வண்மையும், திண் திறல் (திருநின்றியூர்)
66 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மறையவன்(ன்) ஒரு மாணி வந்து (திருவாவடுதுறை)
67 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், (திருவலிவலம்)
68 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -செம்பொன் மேனி வெண் நீறு (திருநள்ளாறு)
69 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், (வடதிருமுல்லைவாயில்)
70 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! (திருவாவடுதுறை)
71 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -யாழைப் பழித் தன்ன மொழி (திருமறைக்காடு (வேதாரண்யம்))
72 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எனக்கு இனித் தினைத்தனைப் புகல் (திருவலம்புரம்)
73 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கரையும், கடலும், மலையும், காலையும், (திருவாரூர்)
74 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மின்னும் மா மேகங்கள் பொழிந்து (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)
75 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மறைகள் ஆயின நான்கும், மற்று (திருவானைக்கா)
76 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொருவனார்; புரிநூலர்; புணர் முலை (திருவாஞ்சியம்)
77 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பரவும் பரிசு ஒன்று அறியேன் (திருவையாறு)
78 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வாழ்வு ஆவது மாயம்(ம்); இது (திருக்கேதாரம்)
79 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மானும், மரை இனமும், மயில் (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))
80 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நத்தார் புடை ஞானன்; பசு (திருக்கேதீச்சரம்)
81 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -கொன்று செய்த கொடுமையால் பல, (திருக்கழுக்குன்றம்)
82 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஊன் ஆய், உயிர் புகல் (திருச்சுழியல் (திருச்சுழி))
83 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, (திருவாரூர்)
84 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))
85 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -வடிவு உடை மழு ஏந்தி, (திருக்கூடலையாற்றூர்)
86 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -விடையின் மேல் வருவானை; வேதத்தின் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்))
87 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் (திருப்பனையூர்)
88 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் (திருவீழிமிழலை)
89 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பிழை உளன பொறுத்திடுவர் என்று (திருவெண்பாக்கம் (பூண்டி))
90 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, (கோயில் (சிதம்பரம்))
91 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பாட்டும் பாடிப் பரவித் திரிவார் (திருவொற்றியூர்)
92 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? (திருப்புக்கொளியூர் (அவிநாசி))
93 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -நீரும் மலரும் நிலவும் சடைமேல் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))
94 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அழல் நீர் ஒழுகியனைய சடையும், (திருச்சோற்றுத்துறை)
95 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -மீளா அடிமை உமக்கே ஆள் (திருவாரூர்)
96 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தூ வாயா! தொண்டு செய்வார் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி)
97 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் (திருநனிப்பள்ளி)
98 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தண் இயல் வெம்மையினான்; தலையில் (திருநன்னிலத்துப்பெருங்கோயில்)
99 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பிறை அணி வாள் நுதலாள் (திருநாகேச்சரம்)
100 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தான் எனை முன் படைத்தான்; (திருக்கயிலாயம்)
101 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆம் இதழி விரை (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.001  
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம் (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.002  
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;
பண் - இந்தளம் (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக் கொண்டு உழல்கின்றது ஓர், கொல்லைச் சில்லை, சே, திட்டுக் குத்தித் தெருவே திரியும்; சில பூதமும் நீரும் திசை திசையன; சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ, நும் அரைக் கோவணத்தோடு ஒரு தோல் புடைசூழ்ந்து, ஆர்த்திட்டதும் பாம்பு; கைக் கொண்டதும் பாம்பு அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.003  
கல்வாய் அகிலும் கதிர் மா
பண் - இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரை மேல் நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நில வெண்மதி சூடிய, நின்மலனே! நல் வாய் இல்செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார் என்று நானிலத்தில் சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.004  
தலைக்குத் தலை மாலை அணிந்தது
பண் - இந்தளம் (திருஅஞ்சைக்களம் அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை)
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே? அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே? மலைக்கு(ந்) நிகர்-ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு, அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.005  
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம் (திருஓணகாந்தன்தளி ஓணகாந்தீசுவரர் காமாட்சியம்மை)
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.006  
படம் கொள் நாகம் சென்னி
பண் - இந்தளம் (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி, அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்; மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.007  
மத்தயானை ஏறி, மன்னர் சூழ
பண் - இந்தளம் (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்! செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்! வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.008  
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
பண் - இந்தளம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.009  
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை
பண் - இந்தளம் (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை)
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்; எரித்தீர், வரு முப்புரங்கள்; சிலைக்கும் கொலைச் சே உகந்து ஏறு ஒழியீர்; சில்பலிக்கு இல்கள் தொறும் செலவு ஒழியீர் கலைக் கொம்பும் கரி மருப்பும்(ம்) இடறி, கலவம் மயில் பீலியும் கார் அகிலும் அலைக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.010  
தேன் நெய் புரிந்து உழல்
பண் - இந்தளம் (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை)
தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக் கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம் மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் மாறுபடப் பொழியும் மலை போல் யானை உரித்த பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.011  
திரு உடையார், திருமால் அயனாலும்
பண் - இந்தளம் (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
திரு உடையார், திருமால் அயனாலும் உரு உடையார், உமையாளை ஒர்பாகம் பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும் புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.012  
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
பண் - இந்தளம் (திருவாரூர் )
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான், கூழை ஏறு உகந்தான், இடம் கொண்டதும் கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.013  
மலை ஆர் அருவித்திரள் மா
பண் - தக்கராகம் (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை)
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.014  
வைத்தனன் தனக்கே, தலையும் என்
பண் - தக்கராகம் (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரியம்மை)
வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்; வஞ்சம் ஒன்று இன்றி உய்த்தனன் தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால், உவமனே ஒக்கும்; பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் பித்தரே ஒத்து ஓர் நச்சிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.015  
பூண் நாண் ஆவது ஓர்
பண் - தக்கராகம் (திருநாட்டியத்தான்குடி கரிநாதேசுவரர் மலர்மங்கையம்மை)
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்; பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்; காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி, நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.016  
குரும்பை முலை மலர்க் குழலி
பண் - தக்கராகம் (கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலைநாதர் அமிர்தவல்லியம்மை)
குரும்பை முலை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு, குறிப்பினொடும் சென்று, அவள் தன் குணத்தினை நன்கு அறிந்து, விரும்பு வரம் கொடுத்து, அவளை வேட்டு, அருளிச்செய்த விண்ணவர்கோன்; கண் நுதலோன்; மேவிய ஊர் வினவில் அரும்பு அருகே சுரும்பு அருவ, அறுபதம் பண் பாட, அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும், கழனிக் கமலங்கள் முகம் மலரும், கலய நல்லூர் காணே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.017  
கோவலன் நான்முகன் வானவர் கோனும்
பண் - நட்டராகம் (திருநாவலூர் (திருநாமநல்லூர்) நாவலீசுவரர் சுந்தராம்பிகை)
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.018  
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
பண் - நட்டராகம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.019  
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
பண் - நட்டராகம் (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்; பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும் கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால் செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.020  
நீள நினைந்து அடியேன் உமை
பண் - நட்டராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.021  
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
பண் - நட்டராகம் (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.022  
முன்னவன், எங்கள் பிரான், முதல்
பண் - நட்டராகம் (திருப்பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான், சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான், மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப் பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.023  
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
பண் - நட்டராகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும், அடியான்; ஆவா! எனாது ஒழிதல் தகவு ஆமே? முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.024  
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
பண் - நட்டராகம் (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து, மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.026  
செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
பண் - நட்டராகம் (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)
செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே! வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே! கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்! அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.027  
விடை ஆரும் கொடியாய்! வெறி
பண் - நட்டராகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)
விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்! படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே! கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே!.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.028  
பொடி ஆர் மேனியனே! புரி
பண் - நட்டராகம் (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)
பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த, வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும், கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம் அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.029  
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;
பண் - நட்டராகம் (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்! பித்தனே என்று உன்னைப் பேசுவார், பிறர் எல்லாம்; முத்தினை, மணி தன்னை, மாணிக்கம், முளைத்து எழுந்த வித்தனே! குருகாவூர் வெள்ளடை நீ அன்றே; .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.030  
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து
பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை)
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவக் கண்டானை; கருப்பறியலூர், கொய்ம் மாவின் மலர்ச் சோலைக் குயில் பாட மயில் ஆடும், கொகுடிக் கோயில் எம்மானை; மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.031  
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்
பண் - கொல்லி (திருவிடையாறு )
முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம், சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர், பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.032  
கடிது ஆய்க் கடல் காற்று
பண் - கொல்லி (திருக்கோடிக்குழகர் அமுதகடநாதர் மையார்தடங்கணம்மை)
கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல் குடி தான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ? கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்! அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.033  
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
பண் - கொல்லி (திருவாரூர் )
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்- கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.034  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.035  
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி
பண் - கொல்லி (திருப்புறம்பயம் சாட்சிவரதேசுவரர் கரும்படுசொல்லம்மை)
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த் தங்கினோமையும், இன்னது என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே! கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும் பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.036  
கார் உலாவிய நஞ்சை உண்டு
பண் - கொல்லி (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு, ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்! பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்! ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.037  
குருகு பாய, கொழுங் கரும்புகள்
பண் - கொல்லி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப் பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே?.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.038  
தம்மானை அறியாத சாதியார் உளரே?
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன், கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை கொண்ட கண்டத்து அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்- எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல் யானே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.039  
தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவாரூர் )
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.040  
வள் வாய மதி மிளிரும்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலியீசுவரர் கானார்குழலம்மை)
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை, புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன்நிறத்தின் முப்புரிநூல் நான் முகத்தினானை, முள் வாய மடல்-தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை நாறும் முருகு விரி பொழில் சூழ், கள் வாய கருங்குவளை கண் வளரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.041  
முது வாய் ஓரி கதற,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருக்கச்சூர் ஆலக்கோயில் தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை)
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே! மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா! கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.042  
எறிக்கும் கதிர் வேய் உரி
பண் - கொல்லிக்கௌவாணம் (திருவெஞ்சமாக்கூடல் விகிர்தேசுவரர் விகிர்தேசுவரி)
எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு, ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி, செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல் முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா, வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.043  
நஞ்சி, இடை இன்று நாளை
பண் - கொல்லிக்கௌவாணம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
நஞ்சி, இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.044  
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது
பண் - கொல்லிக்கௌவாணம் (திருஅஞ்சைக்களம் )
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்; நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்; கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால் பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.045  
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய் ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்- பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்: மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.046  
பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.047  
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் )
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.048  
மற்றுப் பற்று எனக்கு இன்றி,
பண் - பழம்பஞ்சுரம் (திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் கொடுமுடிநாதர் பண்மொழியாளம்மை)
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி நல்-தவா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.049  
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,
பண் - பழம்பஞ்சுரம் (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை)
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி, திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம் முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய், இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.050  
சித்தம்! நீ நினை! என்னொடு
பண் - பழம்பஞ்சுரம் (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்! மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி, பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.051  
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்; முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன் எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.052  
முத்தா! முத்தி தர வல்ல
பண் - பழம்பஞ்சுரம் (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா! சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே! பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.053  
மரு ஆர் கொன்றை மதி
பண் - பழம்பஞ்சுரம் (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ; திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும், பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.054  
அழுக்கு மெய் கொடு உன்
பண் - தக்கேசி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்; அதுவும் நான் படப் பாலது ஒன்று ஆனால், பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்! வழுக்கி வீழினும் திருப் பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்; ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.055  
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
பண் - தக்கேசி (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக, வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன், எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.056  
ஊர்வது ஓர் விடை ஒன்று
பண் - தக்கேசி (திருநீடூர் சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை)
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை, ஒண்நுதல்-தனிக் கண் நுதலானை, கார் அது ஆர் கறை மாமிடற்றானை, கருதலார் புரம் மூன்று எரித்தானை, நீரில் வாளை, வரால், குதி கொள்ளும் நிறை புனல் கழனிச் செல்வம் நீடூர்ப் பார் உளார் பரவித் தொழ நின்ற பரமனை, பணியா விடல் ஆமே?
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.057  
தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை
பண் - தக்கேசி (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலம்மை)
தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை நினைக்கத் தருவானை, கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த(க்) குரை சேர் கழலானை, அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடிநாயேன்- மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.058  
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
பண் - தக்கேசி (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின் மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த எம்மானை; ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை; காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.059  
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
பண் - தக்கேசி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை, பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை, இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை, அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.060  
கழுதை குங்குமம் தான் சுமந்து
பண் - தக்கேசி (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
கழுதை குங்குமம் தான் சுமந்து எய்த்தால், கைப்பர், பாழ் புக; மற்று அது போலப் பழுது நான் உழன்று உள்-தடுமாறிப் படு சுழித்தலைப் பட்டனன்; எந்தாய்! அழுது நீ இருந்து என் செய்தி? மனனே! அங்கணா! அரனே! எனமாட்டா இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.061  
ஆலம் தான் உகந்து அமுது
பண் - தக்கேசி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.062  
புற்றில் வாள் அரவு ஆர்த்த
பண் - தக்கேசி (திருக்கோலக்கா சத்தபுரீசுவரர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை; பூதநாதனை; பாதமே தொழுவார் பற்று வான்துணை; எனக்கு எளி வந்த பாவநாசனை; மேவ(அ)ரியானை; முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா, கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை; கோலக் காவினில் கண்டு கொண்டேனே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.063  
மெய்யை முற்றப் பொடிப் பூசி
பண் - தக்கேசி (பொது -திருமுதுகுன்றம் )
மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி, கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணும் மூன்றும் உடையாய் ஒரு நம்பி, செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால் எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.064  
நீறு தாங்கிய திரு நுதலானை,
பண் - தக்கேசி (திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) திருநந்தீசுவரர் இளங்கொம்பம்மை)
நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இ(ல்)லியை, கற்றை அம் சடை மேல் ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும் சேறு தாங்கிய திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே!.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.065  
திருவும், வண்மையும், திண் திறல்
பண் - தக்கேசி (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
திருவும், வண்மையும், திண் திறல் அரசும், சிலந்தியார் செய்த செய் பணிகண்டு- மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன்- பெருகு பொன்னி வந்து உந்து பல் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி, தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி, திரட்டும் தென் திரு நின்றியூரானே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.066  
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
பண் - தக்கேசி (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக் கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன், இறைவன், எம்பெருமான் என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன் அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.067  
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
பண் - தக்கேசி (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை)
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை; வானம் கைத்தவர்க்கும்(ம்) அளப்ப(அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத் தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; நினைத்தற்கு இனியானை; மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.068  
செம்பொன் மேனி வெண் நீறு
பண் - தக்கேசி (திருநள்ளாறு தெர்ப்பாரணியயீசுவரர் போகமார்த்தபூண்முலையம்மை)
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச் சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை, கும்ப மாகரியின்(ந்) உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள் நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.069  
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்,
பண் - தக்கேசி (வடதிருமுல்லைவாயில் மாசிலாமணியீசுவரர் கொடியிடைநாயகியம்மை)
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்; முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.070  
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
பண் - தக்கேசி (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே! பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா! செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள் அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.071  
யாழைப் பழித் தன்ன மொழி
பண் - காந்தாரம் (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன், பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில் தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.072  
எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
பண் - காந்தாரம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்; பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல் எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும் மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.073  
கரையும், கடலும், மலையும், காலையும்,
பண் - காந்தாரம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம் உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்; வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம் அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.074  
மின்னும் மா மேகங்கள் பொழிந்து
பண் - காந்தாரம் (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.075  
மறைகள் ஆயின நான்கும், மற்று
பண் - காந்தாரம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்- துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும், இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.076  
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை
பண் - பியந்தைக்காந்தாரம் (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்; திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.077  
பரவும் பரிசு ஒன்று அறியேன்
பண் - காந்தாரபஞ்சமம் (திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்; இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்- கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம் குலைக்கீழ்க் கருப்பாலை அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.078  
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது
பண் - நட்டபாடை (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கேதாரேசுவரியம்மை)
வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்; பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்; தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும் கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.079  
மானும், மரை இனமும், மயில்
பண் - நட்டபாடை (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை)
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி, பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு, தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.080  
நத்தார் புடை ஞானன்; பசு
பண் - நட்டபாடை (திருக்கேதீச்சரம் கேதீசுவரர் கௌரியம்மை)
நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப் மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்; பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல், செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.081  
கொன்று செய்த கொடுமையால் பல,
பண் - நட்டபாடை (திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்- கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.082  
ஊன் ஆய், உயிர் புகல்
பண் - நட்டபாடை (திருச்சுழியல் (திருச்சுழி) இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை)
ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும் வான் ஆய், வரு மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின் தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல், நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.083  
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
பண் - புறநீர்மை (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன், சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு, எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.084  
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
பண் - புறநீர்மை (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளைநாதேசுவரர் பொற்கொடியம்மை)
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது அன மென்முலையாள் பாகமும், ஆகி வரும் புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும், கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்; கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்; கண்குளிரக் கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.085  
வடிவு உடை மழு ஏந்தி,
பண் - புறநீர்மை (திருக்கூடலையாற்றூர் நெறிகாட்டுநாயகர் புரிகுழலாளம்மை)
வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து, பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும், கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில் அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.086  
விடையின் மேல் வருவானை; வேதத்தின்
பண் - சீகாமரம் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை)
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை; அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா, மடையில் வாளைகள் பாயும் வன் பார்த்தான் பனங்காட்டூர், சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.087  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்
பண் - சீகாமரம் (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.088  
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
பண் - சீகாமரம் (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை, உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம் அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.089  
பிழை உளன பொறுத்திடுவர் என்று
பண் - சீகாமரம் (திருவெண்பாக்கம் (பூண்டி) வெண்பாக்கத்தீசுவரர் கனிவாய்மொழியம்மை)
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்; குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன, உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.090  
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,
பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும் தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்; கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும் பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.091  
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
பண் - குறிஞ்சி (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்- காட்டும் கலமும் திமிலும் கரைக்கே ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.092  
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
பண் - குறிஞ்சி (திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர் பெருங்கருணைநாயகி)
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால் புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.093  
நீரும் மலரும் நிலவும் சடைமேல்
பண் - குறிஞ்சி (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்- வாரும் அருவி மணி, பொன், கொழித்துச் சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.094  
அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
பண் - கௌசிகம் (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
அழல் நீர் ஒழுகியனைய சடையும், உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- கழை நீர் முத்தும் ககைக்குவையும் சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.095  
மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே, மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி, ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.096  
தூ வாயா! தொண்டு செய்வார்
பண் - பஞ்சமம் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள் காவாயா? கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும், நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு ஆவா! என் பரவையுள் மண்டளி அம்மானே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.097  
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்
பண் - பஞ்சமம் (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும் ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும் நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.098  
தண் இயல் வெம்மையினான்; தலையில்
பண் - பஞ்சமம் (திருநன்னிலத்துப்பெருங்கோயில் )
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி, பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன் புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.099  
பிறை அணி வாள் நுதலாள்
பண் - பஞ்சமம் (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலையம்மை)
பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே? குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல் சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.100  
தான் எனை முன் படைத்தான்;
பண் - பஞ்சமம் (திருக்கயிலாயம் )
தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து, வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்) ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.
| [1] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7 -ஆம் திருமுறை பதிகம் 7.101  
பொன் ஆம் இதழி விரை
பண் - (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரிசடைமேல் முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே!- துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துணைவண்டு தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!
| [1] |
Back to Top
7 -ஆம் திருமுறை பதிகம் 7.102  
பண் - ( )
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை குனிய வாங்கிப் படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே! பரம யோகி! கடைத்தலைப் புகுந்து நின்றோம்; கலிமறைக் காடு(ட்) அமர்ந்தீர்! அடைத்திடும், கதவு தன்னை அப்படித் தாளி னாலே!
| [1] |
Back to Top
7 -ஆம் திருமுறை பதிகம் 7.103  
பண் - ( )
அம்மானே! ஆனந்த வெள்ள மூர்த்தி! அருமறையுள் அருமறையின் பொருளே! வானோர் தம்மால் ஒன்று(று) அறிவு(வு) அரிய சிவனும், மாலும், சதுமுகனும், உடன் ஆக விளங்கும் சோதி! இம்மாயப் பிறப்பு(பு) ஆகி, உலகும் தானாய், இரவு(வு) ஆகிப் பகல் ஆகிக் கலந்து நின்ற அம்மானே! அம்பரம் மீது(து) எழுந்து தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.
| [1] |