![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி! திருப்புகழ் மணிமாலை தொகுப்பு
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
முதல் தொகுப்பு
இரண்டாம் தொகுப்பு
- Hide Easy Version
மணிமாலை 1.001 - திருப்புகழ் 1
கைத்தல நிறைகனி
(விநாயகர்) Thiruppugazh Mani Maalai first List
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.002 - திருப்புகழ் 3
உம்பர் தரு
(விநாயகர்)
தந்ததனத் தானதனத் ...... தனதான
தந்ததனத் தானதனத் ...... தனதான
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. உம்பர் தரு தேனுமணி கசிவாகி
ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக வனத்(து) அணைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.003 - திருப்புகழ் 2
பக்கரை விசித்ரமணி
(விநாயகர்)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்
பழம் இடிப் பல்வகை தனி மூலம்
மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள்
ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி
வெற்ப குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக மருப்பு உடைய பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.004 - திருப்புகழ் 13
சந்ததம் பந்த
(திருப்பரங்குன்றம்)
தந்தனந் தந்தத் ...... தனதான
தந்தனந் தந்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே. சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.005 - திருப்புகழ் 98
வரியார் கருங்கண்
(திருச்செந்தூர்)
தனனா தனந்த ...... தனதான
வரியார் கருங்கண் ...... மடமாதர்
மகவா சைதொந்த ...... மதுவாகி
இருபோ துநைந்து ...... மெலியாதே
இருதா ளினன்பு ...... தருவாயே
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே
பரமே சுரன்ற ...... னருள்பாலா
அரிகே சவன்றன் ...... மருகோனே
அலைவா யமர்ந்த ...... பெருமாளே. வரியார் கருங்கண் மடமாதர்
மகவாசை தொந்தம் அதுவாகி
இருபோது நைந்து மெலியாதே
இருதாளின்அன்பு தருவாயே
பரிபாலனஞ் செய்து அருள்வோனே
பரமேசுரன்தன் அருள்பாலா
அரி கேசவன்தன் மருகோனே
அலைவாய் அமர்ந்த பெருமாளே. Back to Top
மணிமாலை 1.006 - திருப்புகழ் 122
உலகபசு பாச
(பழநி)
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான உலகபசு பாச தொந்த ...... மதுவான
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே. உலகபசு பாச தொந்தம் அதுவான
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசல சுவாச சஞ்சலம் அதால் என்
மதிநிலை கெடாமல் உன்றன் அருள்தாராய்
சலம் அறுகு பூளை தும்பை அணிசேயே
சரவணபவா முகுந்தன் மருகோனே
பலகலை சிவாகமங்கள் பயில்வோனே
பழநிமலை வாழ வந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.007 - திருப்புகழ் 212
காமியத் தழுந்தி
(சுவாமிமலை)
தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான காமியத் தழுந்தி ...... யிளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே. காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்தி லந்தம் அருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.008 - திருப்புகழ் 330
முட்டுப் பட்டு
(காஞ்சீபுரம்)
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தத் தத்தத் ...... தனதான
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப் பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனை
சற்றுப் பற்றக் கருதாதோ
வட்டப் புட்பத் தலமீதே
வைக்கத் தக்கத் திருபாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே
கச்சிச் சொக்கப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.009 - திருப்புகழ் 107
அபகார நிந்தை
(பழநி)
தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே. அபகார நிந்தைபட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக் கிளையோனே
இமவான் மடந்தை உத்தமிபாலா
ஜெபமாலை தந்த சற் குருநாதா
திருவாவினன் குடி பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.010 - திருப்புகழ் 225
நிறைமதி முகமெனும்
(சுவாமிமலை)
தனதன தனதன ...... தனதான
தனதன தனதன ...... தனதான நிறைமதி முகமெனு ...... மொளியாலே
நெறிவிழி கணையெனு ...... நிகராலே
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
உனதிரு வடிவியினி ...... யருள்வாயே
மறைபயி லரிதிரு ...... மருகோனே
மருவல ரசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமண ...... மருள்வோனே
குருமலை மருவிய ...... பெருமாளே. நிறைமதி முகமெனும் ஒளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்கள் உறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனை மண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.011 - திருப்புகழ் 278
நினைத்தது எத்தனை
(திருத்தணிகை)
தனத்த தத்தனத் ...... தனதான
தனத்த தத்தனத் ...... தனதான நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே. நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவம் உற்றழியாமல்
கதித்த நித்தியசித்தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப்பதியிற் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.012 - திருப்புகழ் 303
அதிரும் கழல்
(குன்றுதோறாடல்)
தனனந் தனன தந்த ...... தனதான
தனனந் தனன தந்த ...... தனதான அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ...... நிலைகாண
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே. அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் உன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமை பாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.013 - திருப்புகழ் 447
சிரத்தானத்தி
(திருக்காளத்தி)
தனத்தா தத்தத் ...... தனதான
தனத்தா தத்தத் ...... தனதான சிரத்தா னத்திற் ...... பணியாதே
செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
திருக்கா ளத்திப் ...... பெருமாளே. சிரத்தா னத்திற் பணியாதே
செகத்தோர் பற்றைக் குறியாதே
வருத்தா மற்றொப்பிலதான
மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய்
நிருத்தா கர்த்தததுவ நேச
நினைத்தார் சித்தத்து உறைவோனே
திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே
திருக்கா ளத்திப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.014 - திருப்புகழ் 31
இயலிசையில் உசித
(திருச்செந்தூர்)
தனதனன தனன தந்தத் ...... தனதான
தனதனன தனன தந்தத் ...... தனதான
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்து அணைவோனே
கயிலைமலை அனைய செந்தில் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.015 - திருப்புகழ் 567
பத்தியால் யானுனை
(இரத்னகிரி)
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே. பத்தியால் யானுனை பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனாம் ஆறெனை பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே
உத்தம அதான சற் குணர்நேயா
ஒப்பிலா மா மணிக்கிரிவாசா
வித்தகா ஞானசத்தி நிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.016 - திருப்புகழ் 635
அல்லில் நேரும்
(வள்ளியூர்)
தய்ய தானன ...... தனதான அல்லில் நேருமி ...... னதுதானும்
அல்ல தாகிய ...... உடல்மாயை
கல்லி னேரஅ ...... வழிதோறுங்
கையு நானுமு ...... லையலாமோ
சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய வூர்கெட ...... விடும்வேலா
வல்லி மாரிரு ...... புறமாக
வள்ளி யூருறை ...... பெருமாளே. அல்லில் நேரும் மின்னதுதானும்
அல்லதாகிய உடல் மாயை
கல்லி னேரஅவ்வழிதோறும்
கையும் நானும் உலையலாமோ
சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே. Back to Top
மணிமாலை 1.017 - திருப்புகழ் 685
மருமல்லி யார்
(திருவலிதாயம்)
தனதய்ய தானதன ...... தனதான மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்
இருநல்ல வாகுமுன ...... தடிபேண
இனவல்ல மானமன ...... தருளாயோ
கருநெல்லி மேனியரி ...... மருகோனே
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே. மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியன்அலையாமல்
இரு நல்லவாகும் உனதடிபேண
இனவல்ல மான மனது அருளாயோ
கருநெல்லி மேனி அரி மருகோனே
கனவள்ளியார்கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.018 - திருப்புகழ் 1291
துள்ளு மதவேள்
(பொதுப்பாடல்கள்)
தய்யதன தானத் ...... தனதான துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே
செய்யகும ரேசத் ...... திறலோனே
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே
வள்ளிமண வாளப் ...... பெருமாளே. துள்ளுமத வேள் கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானை தழுவாயே
தெள்ளுதமிழ் பாட தெளிவோனே
செய்யகும ரேச திறலோனே
வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.019 - திருப்புகழ் 1296
நீலங்கொள்
(பொதுப்பாடல்கள்)
தானந்த தானத்தம் ...... தனதான நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.020 - திருப்புகழ் 18
மன்றலங் கொந்துமிசை
(திருப்பரங்குன்றம்)
Back to Top
மணிமாலை 1.021 - திருப்புகழ் 228
பாதி மதிநதி
(சுவாமிமலை)
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன ...... தனதான மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு ...... விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய்
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே. மன்றல் அங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர்
மண்டிடும் தொண்டை அமுது உண்டுகொண்டு அன்புமிக
வம்பிடுங் கும்பகன தனமார்பில்
ஒன்ற அம்பு ஒன்றுவிழி கன்ற அங்கங்குழைய
உந்தியென்கின்ற மடு விழுவேனை
சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் உன் அடிசேராய்
பன்றியங் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள்
பண்டை என்பு அங்கம் அணிபவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந்து ஐந்துகர
பண்டிதன் தம்பியெனும் வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர்
செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை
திங்களும செங்கதிரும் அங்குலும் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை பெருமாளே.
தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே. பாதி மதிநதி போதும் அணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காகமுற அருள்
மாயன் அரி திரு மருகோனே
காலனெனை யணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருலகு
ஆளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவு
சுவாமிமலைதனில் உறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.022 - திருப்புகழ் 518
தேனுந்து முக்கனிகள்
(கயிலைமலை)
தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன ...... தனதான தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும் பழித்தசிவ ...... மருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப ...... மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத ...... மருள்வாயே
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்கஅலை ...... விடமாள
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள் ...... முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல ...... ரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே. தேன் உந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளனிர்
சீரும் பழித்த சிவம் அருள் ஊற
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழு
சீவன் சிவச்சொருபம் என தேறி
நானென்ப தற்று உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று வெளி
நாதம் பரப்பிரம ஒளிமீதே
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியொடு
எநாளும் களிக்க பதம் அருள்வாயே
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன்
மாலும் பிழைக்க அலை விட(ம்) மாள
வாருங் கரத்தன் எமை யாளும் தகப்பன் மழு
மானின் கரத்தன் அருள் முருகோனே
தானந் தனத்ததனனா வண்டு சுற்றி மது
தானுண் கடப்பமலர் அணிமார்பா
தானங் குறித்து எமை யாளும் திருக்கயிலை
சாலும் குறத்திமகிழ் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.023 - திருப்புகழ் 616
ஐங்கரனை
(கொங்கணகிரி)
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
தந்ததன தத்ததன ...... தனதான ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்
அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே
அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தியுனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே
தங்கிய தவத் துணர்வு தந்து அடிமை முத்தி பெற
சந்திர வெளிக்கு வழி அருள்வாயே
தண்டிகை ககனப்பவுசு எண்டிசை மதிக்க வளர்
சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம்
உன்றனை நினைத் தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்
கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு
கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.024 - திருப்புகழ் 39
கண்டுமொழி
(திருச்செந்தூர்)
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த ...... தனதான கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி
வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே. கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டு உளம்வ ருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து
கங்குல்பகல் என்று நின்று விதியாலே
பண்டைவினை கொண்டு உழன்று வெந்துவிழுகின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன் கலந்து
பண்புபெற அஞ்சல் அஞ்சலெனவாராய்
வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டு அறநெருங்கியிண்டு
வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகுடன்கலந்த மணிமார்பா
திண்டிறல்புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு
செஞ்சமர்புனைந்து துங்க மயில்மீதே
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம்புணர்ந்து
செந்தில்நகர் வந்தமர்ந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.025 - திருப்புகழ் 50
கொங்கைகள்
(திருச்செந்தூர்)
Back to Top
மணிமாலை 1.026 - திருப்புகழ் 703
ஆதிமுதன் நாளில்
(கோடைநகர்)
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன ...... தந்ததான கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய டைந்தகுழல் ...... வண்டுபாடக்
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும்
வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய்
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ ...... டண்டஆளாய்
சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
தந்தனத னந்தவென ...... வந்தசூரர்
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா
சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே. கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள்
கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள்
கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல்
விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது
மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்ப வளை
தந்தன தனந்த என வந்த சூரர்
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ
தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி
தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெ(ண்)ணொடு
சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே.
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ...... குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே. ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று புவிமீதில்
ஆசையுடனே பிறந்து
நேசமுடனே வளர்ந்து
ஆள் அழகனாகி நின்று விளையாடி
பூதலமெலாம் அலைந்து
மாதருடனேகலந்து
பூமிதனில் வேணுமென்று பொருள்தேடி
போகமதிலே உழன்று
பாழ்நரகெய்தாமல்
உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே
சீதைகொடு போகும் அந்த ராவணனை
மாள வென்ற தீரனரி நாரணன்றன் மருகோனே
தேவர்முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று
தேட
அரிதானவன்தன் முருகோனே
கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற
கோமளி அநாதி தந்த குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.027 - திருப்புகழ் 704
சாலநெடு நாள்
(கோடைநகர்)
Back to Top
மணிமாலை 1.028 - திருப்புகழ் 247
எத்தனை கலாதி
(திருத்தணிகை)
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து ...... புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு ...... தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட ...... குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே. சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து
சாம் அளவதாக வந்து புவிமீதே சாதகமுமான பின்பு
சீறியழுதேகி டந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி
பாலனெனவே மொழிந்து
பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீதணைந்து
பொருள்தேடிப் பார்மிசையிலேயுழன்று
பாழ்நரகெய்தாமல்
ஒன்று(ம்) பாதமலர் சேர அன்பு தருவாயே
ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர்
திங்கள் ஆடரவு பூணர் தந்த முருகோனே
ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற
ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமுது ஊற லுண்ட குமரேசா
கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த பெருமாளே.
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
தத்ததன தான தத்தம் ...... தனதான எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச்
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே. எத்தனைக லாதி சித்து அங்கு எத்தனை
வியாதி பித்து அங்கெத்தனை
சர அசரத்தின செடமான
எத்தனைவிடாவெருட்டு
அங்கெத்தனைவல் ஆண்மை
பற்றங்கு எத்தனைகொல்
ஊனை நித்தம் பசியாறல்
பித்தனையன் நான் அகட்டு உண்டு
இப்படிகெ டாமல் முத்தம் பெற்றிட
நினா சனத்தின் செயலான பெற்றியும்
ஒராது நிற்கும்
தத்த குரு
தார நிற்கும்
பெத்தமும் ஒராது நிற்கும் கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ்
சதபேரி
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர்
திக்குகளொர் நாலிரட்டின் கிரிசூழ
செக்கண் அரிமா கனைக்குஞ் சித்தணிகை வாழ்
சிவப்பின் செக்கர்நிறமாயிருக்கும் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.029 - திருப்புகழ் 801
எந்தன்சடலங்கம்
(கந்தன்குடி)
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே. எந்தன்சடல அங்கம் பல பங்கம்படு
தொந்தங்களை யென்றுந்துயர்
பொன்றும்படி யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழலுந்தும்
கழல் தந்தும்பினை யென்றும்படி
பந்தங்கெட மயிலேறி வந்தும்
பிரசண்டம் பகிரண்டம் புவியெங்கும்
திசை மண்டும்படி நின்றுஞ்சுடரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்
துகளென்றுங்கொளும் வண்டன்
தமி யன்றன்பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்
பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ் சிறு மணியாரம்
சந்தந்தொனி கண்டும்
புயலங்கன்சிவனம்பன்பதி சம்புந்தொழ நின்றும்
தினம் விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழும்
அன்பன்கவி கண்டுய்ந்திட
அன்றன்பொடு வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்
புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே. Back to Top
மணிமாலை 1.030 - திருப்புகழ் 871
பட்டுமணிக் கச்சி
(கொட்டையூர்)
Back to Top
மணிமாலை 1.031 - திருப்புகழ் 967
முத்து நவரத்நமணி
(மதுரை)
தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
தத்ததனத் தத்ததனத் ...... தனதான பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென்
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே. பட்டு மணிக் கச்சு இறுகக் கட்டி அவிழ்த்து உத்தரியப்
பத்தியின் முத்துச் செறி வெற்பு இணையாம் என் பற்ப(ம்)
முகைக் குத்து முலை
தத்தையர் கைப் புக்கு வசப் பட்டு உருகிக் கெட்ட வினைத்
தொழிலாலே
துட்டன் எனக் கட்டன் எனப் பித்தன் எனப் ப்ரட்டன் எனச்
சுற்றும் அறச் சித்தன் எனத் திரிவேனை
துக்கம் அறுத்துக் கமலப் பொன் பதம் வைத்துப் பதவிச் சுத்தி
அணைப் பத்தரில் வைத்து அருள்வாயே
சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொன்
கொடியைத் துக்கம் உற
சொர்க்கம் உறக் கொடி யாழார் சுத்த ரதத்தில் கொடு புக்குக்
கடுகித் தெற்(கு)க் கடைசிச் சுற்று வனத்தில் சிறைவைத்திடு
தீரன்
கொட்டம் அறப் புற்று அரவச் செற்றம் அறச் சத்தம் அறக்
குற்றம் அறச் சுற்றம் அறப் பல தோளின் கொற்றம் அறப்
பத்து முடிக் கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணிக்
கொட்டை நகரப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.032 - திருப்புகழ் 100
விந்ததில் ஊறி
(திருச்செந்தூர்)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே. முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம்
மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்
முப்பது முவர்க்க சுரர் அடி பேணி
பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி
பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென தெனனான
திக்குவென மத்தளம் இடக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை யெனஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ
சித்தி அருள் சத்தி அருள் புரிபாலா
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர்
அல் கனக பத்ம புரி பெருமாளே.
தந்தன தான தந்தன தான
தந்தன தான ...... தனதான விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான ...... வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத ...... மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி ...... லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் ...... பெருமாளே. விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி இனிமேலோ
விண்டுவி டாமல் உன்பத மேவு
விஞ்சையர் போல அடியேனும்
வந்து விநாச முன்கலி தீர
வண்சிவ ஞானவடிவாகி
வன்பதம் ஏறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேணி
எந்தையர் தேடும் அன்பர்சகாயர்
எங்கள் சுவாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன் திரு மார்பில் அணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.033 - திருப்புகழ் 213
குமரகுருபர முருக குகனே
(சுவாமிமலை)
Back to Top
மணிமாலை 1.034 - திருப்புகழ் 249
எனக்கென யாவும்
(திருத்தணிகை)
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும்
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே. குமர குருபர முருக குகனே குறச் சிறுமி கணவ சரவண
நிருதர் கலகா பிறைச் சடையர் குரு என நல் உரை உதவு
மயிலா எனத் தினமும் உருகாதே
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர்
தெருவில் அநவரதம் அ(ன்)னம் எனவே நடப்பர்
நகை கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே
பறிப்பவர்கள்
அனைவோரும் தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்
முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்
தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர்
கண் வலையாலே சதி செய்து அவர் அவர் மகிழ அணை மீது
உருக்கியர்கள்
வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட தொழில் தனில்
உழலும் அசடனை
உன் அடியே வழுத்த அருள் தருவாயே
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது
ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து அவனி
தனில் நிருதர் சிரம் உருள ரண தூள் படுத்திவிடு செரு
மீதே
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர
நிணமொடு குருதி குடி காளி கொக்கரி செய்
தசை உணவு தனின் மகிழவிடு பேய் நிரைத் திரள்கள்
பலகோடி திமிதமிட
நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல
ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர
அமரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே
திரு மருவு புயன் அயனொடு அயிராவதக் குரிசில் அடி
பரவு
பழநிமலை கதிர்காமம் உற்று வளர் சிவ சமய அறுமுகவ
திருவேரகத்தில் உறை பெருமாளே.
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே. எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயத் தனைக்கொடு மாயும்
இலச்சை இலாதென் பவமாற
உனைப்பல நாளுந் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங் குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரியாது ஒண்
பொலச் சரண் நானுந் தொழுவேனோ?
வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள் கொன்றவன் நீயே
விளப்பென மேலென்றிட அயனாரும்
விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.036 - திருப்புகழ் 1307
அகரமுமாகி
(பழமுதிர்ச்சோலை)
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும்ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருனில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே
திருமலிவான பழமுதிர்ச்சோலை மலை மிசை மேவு பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.037 - திருப்புகழ் 847
எருவாய் கருவாய்
(திருவீழிமிழலை)
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே. எருவாய் கருவாய் தனிலே யுருவாய்
இதுவே பயிராய் விளைவாகி
இவர்போ யவராய் அவர்போ யிவராய்
இதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதாய்
உடனே அவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோத அருள்தாராய்
முருகா வென ஓர் தரம் ஓதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா அறியா தவர் சீர்ச்
சிறுவா திருமால் மருகோனே
செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.038 - திருப்புகழ் 99
விதி போலும் உந்து
(திருச்செந்தூர்)
Back to Top
மணிமாலை 1.039 - திருப்புகழ் 585
அன்பாக வந்து
(திருச்செங்கோடு)
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம்
விரிவான சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை ...... வினையாலே
இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று ...... மொழிமாதர்
இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ
மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு ...... விடையேறி
மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு ...... தருபாலா
அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே. விதி போலும் உந்து அவ் விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி
இளைஞோர் தம்
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை
வினையாலே
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று
மொழி மாதர்
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும்
ஒழியாதோ
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு
விடை ஏறி
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு
பாலா
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல்
கொ(ண்)டு அன்று பொரும் வீரா
அழகான செம் பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய்
உகந்த பெருமாளே.
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் ...... முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து ...... அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை ...... யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ...... வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. அன்பாக வந்து உன்தாள் பணிந்து
ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள்
அம்போருகங்கள் முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடுகின்ற குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.040 - திருப்புகழ் 586
பந்து ஆடி அம் கை
(திருச்செங்கோடு)
Back to Top
மணிமாலை 1.041 - திருப்புகழ் 904
என்னால் பிறக்கவும்
(வயலூர்)
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த ...... குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் ...... முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் ...... தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற ...... னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் ...... மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை ...... மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப ...... அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த ...... பெருமாளே. பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து
பைம் தார் புனைந்த குழல் மீதே
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற
பங்கேருகம் கொள் முகம் மீதே
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி
வன் பாதகம் செய் தனம் மீதே
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து
மங்காமல் உன் தன் அருள் தாராய்
கந்தா அரன் தன் மைந்தா விளங்கு
கன்று ஆ முகுந்தன் மருகோனே
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட
கண்டா அரம்பை மணவாளா
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு
திண் தோள் நிரம்ப அணிவோனே
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு
செங்கோடு அமர்ந்த பெருமாளே.
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும் பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்தநோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்
கன்னார் உரித்த என் மன்னா எனக்குநல்
கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
கண்ணாடியில் தடம் கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளியிற் கொளும் தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு தம்பிரானே.
Back to Top
மணிமாலை 1.042 - திருப்புகழ் 156
சிவனார் மனங்குளிர
(பழநி)
தனனா தனந்ததன தனனா தனந்ததன
தனனா தனந்ததன ...... தனதான சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே. சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரம் இரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்த நின
செயலேவி ரும்பி உளம் நினையாமல்
அவமாயை கொண்டு உலகில் விருதாவ லைந்துழலும்
அடியேனை அஞ்சலென வரவேணும் அறிவாக மும்பெருக
இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீரமிஞ்சுகதிர் வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள் சவுந்தரிக
செகமேல்மெய் கண்ட விறல் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.043 - திருப்புகழ் 1241
சிவஞான புண்டரிக
(பொதுப்பாடல்கள்)
தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன ...... தனதான சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
சிவபோக மன்பருக ...... அறியாமற்
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத்
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும்
உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
முறைநாய கங்கவுரி ...... சிவகாமி
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
மமுதால யம்பதவி ...... யருள்வோனே
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே. சிவஞான புண்டரிக மலர்மாதுடன்
கலவி சிவபோக மன்பருக அறியாமல்
செகமீது உழன்று மல வடிவாயிருந்து
பொது திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ
தவ மாதவங்கள்பயில்
அடியார் கணங்களொடு
தயவாய் மகிழ்ந்துதினம் விளையாட
தமியேன்மலங்கள் இரு வினைநோய்
இடிந்து அலற
ததிநாளும் வந்ததென்முன் வரவேணும
உவகாரி யன்பர்பணி கலியாணி
எந்தை இடம் உறை நாயகங் கவுரி
சிவகாமி
ஒளிர் ஆனையின்கரமில்
மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த
உமை யருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாமல்
அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே
அழகாநகம்பொலியு மயிலா
குறிஞ்சிமகிழ் அயிலா
புகழ்ந்தவர்கள் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.044 - திருப்புகழ் 724
அண்டர்பதி குடியேற
(சிறுவை)
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான ...... தனதான அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகடலுடன் நாகம் விண்டு வரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண் தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.045 - திருப்புகழ் 267
கூர்வேல் பழித்த
(திருத்தணிகை)
Back to Top
மணிமாலை 1.047 - திருப்புகழ் 687
சொருபப் பிரகாச
(திருவொற்றியூர்)
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல ...... ரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக்
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங்
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானூ ருறைக்கலக ...... மொழியாதோ
வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் ...... கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி ...... லுறைவோனே
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் ...... குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டணைத்துமகிழ் ...... பெருமாளே. கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால்
அழைத்து மலர் அணை மீதே
கோபா இதழ்ப் பருக மார்போடு அணைத்து க(ண்)ணை
கோல் போல் சுழற்றி இடை உடை நாணக் கார் போல் குழல்
சரியவே
வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும்
காமா மயக்கியர்கள் ஊடே களித்து நம(ன்) கான் ஊர்
உறைக் கலகம் ஒழியாதோ
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேத
ஆகமத்து ஒலிகள் கடல் போல வீறாய் முழக்க வரு(ம்)
சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா
போதகத்தை அருள் குரு நாதா
மாலோன் அளித்த வ(ள்)ளியார் மால் களிப்ப வெகு
மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே.
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன ...... தனதானா சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே. சொருபப் பிரகாச விசுவருப
பிரமாக நிச சுக
விப்பிர தேச ரச சுப
மாயா துலியப் பிரகாச
மத சொலியற்ற ரசா
சவித தொகை விக்ரம
மாதர் வயிறிடையூறு கருவிற்பிறவாதபடி
உருவிற்பிரமோத அடிகளை யெத்திடு
இராகவகை யதின்மீறி
கருணைப்பிரகாச உன தருளுற்றிட
ஆசில்சிவ கதிபெற்று இடரானவையை யொழிவேனோ
குரு குக்குட வார கொடி
செரு வுக்கிர ஆதப அயில்
பிடிகைத்தல ஆதி அரி மருகோனே
குமரப்பிரதாப குக
சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர் அவாவசுரர் குலகாலா
திருவொற்றி யுறாமருவு நகரொற்றியுர்
வாரிதிரை யருகுற்றிடும் ஆதிசிவனருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள்
இதயத்திட மேமருவு பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.048 - திருப்புகழ் 129
கரிய பெரிய
(பழநி)
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி ...... யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய ...... பெருமாளே. கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொடு
உயிர்கள் கழிய முடுகி யெழுகாலம்
திரியு நரியு மெரியு முரிமை தெரிய
விரவி யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் தரவேணும்
பரிய வரையி னரிவை
மருவ பரம ரருளு முருகோனே
பழன முழவர்
கொழுவி லெழுது
பழைய பழநி யமர்வோனே
அரியு மயனும் வெருவ
உருவ அரிய கிரியை
எறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய பெருமாளே. Back to Top
மணிமாலை 1.049 - திருப்புகழ் 165
தமரும் அமரும்
(பழநி)
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே. தமரும் அமரு மனையும்
இனிய தனமும் அரசும்
அயலாக
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரகதமணி
கனக மருவும் இருபாதம்
கருத அருளி
எனது தனிமை கழிய
அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே
கொடிய பகடு
முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய்தருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும்
அழகும் உடைய பெருமாளே. Back to Top
மணிமாலை 1.050 - திருப்புகழ் 168
திமிர உததி
(பழநி)
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ...... பெருமாளே. திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அ திக குலமும்
அறிவு நிறையும் வரவே நின்
அருள தருளி எனையு மனதோடு
அடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெல் அசுரா தமது
தலைக ளுருள மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.051 - திருப்புகழ் 271
சொரியும் முகிலை
(திருத்தணிகை)
Back to Top
மணிமாலை 1.052 - திருப்புகழ் 127
கடலை பொரியவரை
(பழநி)
தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் ...... தனதான சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் ...... சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் ...... றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் ...... கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் ...... பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் ...... தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் ...... டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் ...... தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் ...... பெருமாளே. சொரியும் முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச்
சொ(ல்)லியும்
மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு
உற்று
இயல் வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி
நெருடிக் கவி பாடி
திரியு மருள் விட்டு உனது குவளைச் சிகரி பகரப்
பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளைய
கடையில் விடம் மெத்திய நீலக் கடிய கணை பட்டு
உருவ
வெருவிக் கலைகள் பல பட்டன கானிற்கு உரிய குமரிக்கு
அபயம் என நெக்கு
உபய சரணத்தினில் வீழா உழையின் மகளைத் தழுவ மயல்
உற்று உருகு(ம்) முருகப் பெருமாளே.
தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத ...... மயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித ...... மணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண ...... பவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி ...... அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே. கடலை பொரியவரை பலகனி கழை
நுகர் கடின குட உதர
விபரீத கரட தட மு(ம்)மத
நளின சிறுநயன
கரிணி முகவரது துணைவோனே
வடவரையின் முகடு அதிர
ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா
மகபதி தருசுதை குறமினொடு
இருவரு மருவு சரசவித மணவாளா
அடல் அசுரர்கள்குல முழுது மடிய
உயர்அமரர் சிறையைவிட
எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரும் அயிலை
விடும் அரகர சரவண பவலோலா
படல வுடுபதியை
இதழி யணிசடில
பசுபதி வரநதி
அழகான பழ நிமலை அருள்செய
மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு பெருமாளே. Back to Top
மணிமாலை 1.053 - திருப்புகழ் 250
எனை அடைந்த
(திருத்தணிகை)
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த ...... தனதான எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு ...... மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே. எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம்
எரிவழங்கு வெப்பு
வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன்
குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து
சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே
மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில்
வந்து முத்தி தரவேணும்
நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனைவேலா
நிலைபெ றுந்திருத்த ணியில்விளங்கு
சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே
தினைவிளங்கலுற்ற புனஇளங்குறத்தி
செயலறிந்து அணைக்கு மணிமார்பா
திசைமுகன்திகைக்க அசுரர் அன்றடைத்த
சிறைதிறந்து விட்ட பெருமாளே. Back to Top
மணிமாலை 1.054 - திருப்புகழ் 216
சரண கமலாலயத்தில்
(சுவாமிமலை)
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஜட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த
தமியன் மடியால் மயக்கம் உறுவேனோ?
கருணை புரியாதிருப்ப தென குறை இவேளை செப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே
கடக புயமீதி ரத்ன மணியணி பொன்மாலை செச்சை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே
தருணம் இதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த
அழக, திருவேரகத்தின் முருகோனே.
Back to Top
மணிமாலை 1.055 - திருப்புகழ் 726
பிறவியான சடம்
(சிறுவை)
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே. பிறவியான சடமிறங்கி
வழியிலாத துறைசெறிந்து
பிணிகளான துயருழன்று தடுமாறி
பெருகு தீய வினையி னொந்து
கதிகடோறும் அலைபொருந்தி
பிடிபடாத ஜனன நம்பி யழியாதே
நறைவிழாத மலர்முகந்த
அரிய மோன வழிதிறந்த
நளின பாத மெனது சிந்தை யகலாதே
நரர் சுராதிபரும்வணங்கும்
இனிய சேவை தனைவி ரும்பி
நலனதாக அடிய னென்று பெறுவேனோ
பொறிவழாத முநிவர்
தங்கள் நெறிவழாத பிலனு ழன்று
பொருநிசாசரனைநினைந்து வினைநாடி
பொருவிலாமல் அருள்புரிந்து
மயிலினேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே
சிறுவராகி யிருவர்
அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல்
சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி
செயமதான நகர் அமர்ந்த
அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி
வரமி குந்த பெருமாளே. Back to Top
மணிமாலை 1.056 - திருப்புகழ் 523
ஒருபதும் இருபதும்
(ஸ்ரீ சைலம் திருமலை)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
யா
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை ...... பெருமாளே. ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும்
உணர்வுற இருபதம் உளநாடி
உருகிட முழுமதி தழலென ஒளிதிகழ்
வெளியொடு ஒளிபெற விரவாதே
தெருவினில் மரமென எவரொடும் உரைசெய்து
திரிதொழில் அவமது புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி யிளையோனே
பெருமலை யுருவிட அடியவர் உருகிட
பிணிகெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.057 - திருப்புகழ் 240
அரகர சிவன் அரி
(திருத்தணிகை)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு ...... பெருமாளே. அரகர சிவன் அரிஅயனிவர் பரவ பரவி முன்
அறுமுக சரவண பவனே என்று
அநுதின மொழிதர அசுரர்கள் கெட அயில்
அநலென எழ அயில்விடும் அதிவீரா
பரிபுர கமலமது அடியிணை யடியவர்
உளமதில் உற அருள் முருகேசா
பகவதி வரைமகள் உமை தர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர உயர்வாய
உலக மன் அலகில வுயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர முநிவோரும்
பரவிமுன் அநுதின மனமகிழ் வுற அணி
பணிதிகழ் தணிகையில் உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு பெருமாளே. அணி
Back to Top
மணிமாலை 1.058 - திருப்புகழ் 242
இருப்பவல் திருப்புகழ்
(திருத்தணிகை)
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே. இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடும் எனவோதும்
இசைத்தமிழ் நடத்தமிழென துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய கவிநாலும்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
கருப்புவில் வளைத்து அணி மலர்க்கணை தொடுத்து இயல்
களிப்புடன் ஒளித்தெய்த மதவேளை
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.059 - திருப்புகழ் 340
கலகலென
(காஞ்சீபுரம்)
Back to Top
மணிமாலை 1.060 - திருப்புகழ் 530
அல்லி விழியாலும்
(வள்ளிமலை)
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங்
கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச்
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத்
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே. கல கல எனப் பொன் சேந்த நுபுர பரிபுரம் ஒத்தித் தாம்
தனாம் என
கர மலர் அச்சில் தாம் தோம் ஆடிய பொறியார் பைம் கடி
தடம் உற்றுக் காந்தள் ஆம் என இடை படி பட்டுச் சேர்ந்த
ஆல் இலை
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு வடம் ஆடச் சல சல
சச்சச் சேம் கை பூண் வளை பரிமள பச்சைச் சேர்ந்து உலாவிய
சலச முகத்துச் சார்ந்த வாள் விழி சுழல் ஆட
தரள நகைப்பித்து ஆம்பல் ஆர் இதழ் குல முகில் ஒத்திட்டு
ஆய்ந்த ஓதியர் சரசம் உரைத்துச் சேர்ந்த தூவையர் உறவு
ஆமோ
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள்
வைத்திட்டு ஆண்ட நாயகி சிவன் உருவத்தில் சேர்ந்த
பார்வதி சிவகாமி
திரி புவனத்தைக் காண்ட நாடகி குமரி சுகத்தைப் பூண்ட
காரணி சிவை சுடர் சத்திச் சாம்பவீ அ(ம்)மை அருள் பாலா
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பிச் சீர்ந்து
வாய் இட அசுரர் குலத்தைக் காய்ந்த வேல் கரம்
உடையோனே
அமரர் மகட்குப் போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு
ஆண்டவா தின(ம்) அழகு சிறக்கக் காஞ்சி மேவிய
பெருமாளே.
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் ...... தனதான அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக் ...... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் ...... பெருமாளே. அல்லிவிழியாலும் முல்லைநகையாலும்
அல்லல்பட ஆசைக் கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ளவினையார் அத் தனம் ஆரும்
இல்லும் இளையோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற்கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லும் உபதேசக் குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
எள்ளிவன மீதுற்று உறைவோனே
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.061 - திருப்புகழ் 537
அல் அசல் அடைந்த
(வள்ளிமலை)
Back to Top
மணிமாலை 1.062 - திருப்புகழ் 269
சினத்தவர் முடிக்கும்
(திருத்தணிகை)
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த ...... தனதான அல்லசல டைந்த வில்லடல நங்கன்
அல்லிமல ரம்பு ...... தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமது கிண்ட ...... அணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று ...... முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு ...... தரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
கல்விகரை கண்ட ...... புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை ...... யருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியைம ணந்த ...... பெருமாளே. அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்பு
தனை ஏவ
பிள்ளை மதி அள்ளி எரி சிந்த தென்றல் ஐயம் அது கிண்ட
அணையூடே சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே
துய்ய வரி வண்டு செய்ய மது உண்டு துள்ளிய கடம்பு
தரவேணும்
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட
புலவோனே
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற
ஒன்றை அருள்வோனே
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில்
வீரா
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த
பெருமாளே.
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழ் உரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந்தன பேரி
தடுட்டுடு டுடுட்டுண் டென துடி முழக்கும்
தளத்துட னடக்கும் கொடுசூரர்
சினத்தையும் உடற்சங் கரித்தம லைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.063 - திருப்புகழ் 421
சிவமாதுடனே
(திருவருணை)
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே ...... பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
திசைலோ கமெலா ...... மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவே ...... மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மா ...... அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவே ...... விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவே ...... அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர் ...... பெருமாளே. சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே பசியாறி
திகழ்வோ டிருவோர் ஒருரூபமதாய்
திசைலோ கமெலாம் அநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோர்
இளையோ னெனவே மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
இயல்வே லுடன்மா அருள்வாயே
தவலோ கமெலாம் முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோய் அசுராரைத்
தலைதூள் பட ஏழ் கடல்தூள் பட
மாதவம்வாழ் வுறவே விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன் மால்
கடனா மெனவே அணைமார்பா
கடையேன் மிடிதூள் பட நோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.064 - திருப்புகழ் 243
இருமலு ரோக
(திருத்தணிகை)
தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே. இருமலு ரோக முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறுமுளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி
உன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்பதாதி
மடியஅ நேக இசைபாடி br>
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின்நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.065 - திருப்புகழ் 493
எழுகடல் மணலை
(சிதம்பரம்)
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக ...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு ...... மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு ...... பெருமாளே. எழுகடல் மணலை அளவிடி னதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலும்
இனியுடல் விடுக முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி
மறலி கமலனு மிகவும் அயர்வானார்
கடனுன தபயம் அடிமையு னடிமை
கடுகியு னடிகள் தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளும் முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில் நட மருவு பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.066 - திருப்புகழ் 268
கொந்துவார் குரவடி
(திருத்தணிகை)
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன ...... தனதான கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே. கொந்துவார் குரவடியினும்
அடியவர் சிந்தை வாரிஜ நடுவினும்
நெறிபல கொண்ட வேதநன் முடியினும்
மருவிய குருநாதா
கொங்கி லேர்தரு பழநியில் அறுமுக
செந்தில் காவல
தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வரு
சமயவிரோத தந்த்ரவாதிகள்
பெறவரியது
பிறர் சந்தியாதது
தனதென வருமொரு சம்ப்ர தாயமும்
இதுவென வுரைசெய்து
விரைநீப
சஞ்சரீகரிகரம் முரல்
தமனிய கிண்கிணீமுக
இதபத யுகமலர் தந்த
பேரருள் கனவிலு நனவிலு மறவேனே
சிந்து ஆரமும் இதழிய
இளநவ சந்த்ர ரேகையும்
அரவமும் அணிதரு
செஞ் சடாதரர்
திருமக வெனவரு முருகோனே
செண்பக அடவியினும் இதணினும்
உயர் சந்தனஅடவியினும் உறை
குறமகள் செம்பொன் நூபுர
கமலமும்
வளையணி புது வேயும்
இந்து வாண்முக வனசமும்
ம்ருகமத குங்கு மாசல யுகளமும்
மதுரித இந்தள அம்ருத வசனமும் முறுவலும்
அபிராம இந்த்ர கோபமும்
மரகத வடிவமும்
இந்த்ர சாபமும்
இருகுழை யொடுபொரும் இந்த்ர நீலமும்
மடலிடை யெழுதிய பெருமாளே. Back to Top
மணிமாலை 1.067 - திருப்புகழ் 727
வேல் இரண்டு
(சிறுவை)
Back to Top
மணிமாலை 1.068 - திருப்புகழ் 288
பொற் பதத்தினை
(திருத்தணிகை)
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன ...... தனதான வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே. வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள்
மேவின பாதகர்
வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி
வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர்
வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி
ஆசையிலே உழல் சிறியேனும்
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன்
ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம்
மறவாதே
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி
வினாவுடனே தொழ
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி
பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா
நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே
நிறைவான
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே.
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த ...... தனதான பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே. பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர்
பொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க
புத்தியிற்கலக்க மற்று நினையாதே
முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி
முற்கடைத் தவித்து நித்தம் உழல்வேனை
முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து
முத்தி சற்று எனக்களிப்பது ஒருநாளே
வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த
வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா
வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு
மெய்த்திருத்தணிப்பொருப்பில் உறைவோனே
கற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற
கற்புரத்திருத்தனத்தில் அணைவோனே
கைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே. Back to Top
மணிமாலை 1.069 - திருப்புகழ் 835
சந்தனந்திமிர்ந்து
(எண்கண்)
தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே. சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்குமங் கடம்பு இலங்கு
சண்பகம் செறிந்திலங்கு திரள் தோளும்
தண்டையஞ் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று
சஞ்சி இதஞ் சதங்கை கொஞ்ச மயிலேறி
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந்தனந்தன என்று
சென்றசைந்து உகந்து வந்து க்ருபையோடே
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து ணர்ந்து
செம்ப தம் பணிந்திரு என்று மொழிவாயே
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்தழிந்து இடும்ப கண்டன்
அங்க முங்கு லைந்து அரங்கொள் பொடியாக
அம்ப கும்பனுங் கலங்க வெஞ்சினம்புரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே
இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும்
பரன்றன் அன்பில் வந்த குமரேசா
இந்தி ரன்பதம்பெற அண்டர் தம்பயங் கடிந்த பின்பு
எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.070 - திருப்புகழ் 599
தாமா தாம ஆலாபா
(திருச்செங்கோடு)
Back to Top
மணிமாலை 1.071 - திருப்புகழ் 816
கூசாதே பார்
(திருவாரூர்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
தாமா தாமா லாபா லோகா
தாரா தாரத் ...... தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
நாசா பாசத் ...... தபராத
யாமா யாமா தேசா ரூடா
யாரா யாபத் ...... தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் ...... துகலாமோ
காமா காமா தீனா நீணா
காவாய் காளக் ...... கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
காமா மோதக் ...... கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
தேசா தேசத் ...... தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. தாமா தாம ஆலாபா லோக
ஆதாரா தார(ம்) தரணி ஈசா
தான ஆசாரோ பாவா பாவோ
நாசா பாசத்து அபராத
யாமா யாமா தேசார் ஊடு
ஆராயா ஆபத்து எனது ஆவி
ஆமா காவாய் தீயேன் நீர்
வாயாதே ஈமத்து உகலாமோ
காமா காம ஆதீனா நீள்
நாகா வாய் காள கிரியாய்
கங்காளா லீலா பாலா நீபா
காம ஆமோதக் கன மானின்
தேம் ஆர் தே மா காமீ பாகீ
தேசா தேசத்தவர் ஓதும்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.072 - திருப்புகழ் 817
கூர்வாய் நாராய்
(திருவாரூர்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. கூசாதே பார் ஏசாதே மால்
கூறா நூல்கற்று உளம்வேறு
கோடாதே வேல் பாடாதே மால்
கூர் கூதாளத் தொடைதோளில்
வீசாதே பேர் பேசாதே சீர்
வேத அதீதக் கழல்மீதே
வீழாதே போய் நாயேன் வாணாள்
வீணே போகத் தகுமோதான்
நேசா வானோர் ஈசா வாமா
நீபா கானப் புனமானை
நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற்பகசாலத்
தேச ஆதீனா தீனார் ஈசா
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.073 - திருப்புகழ் 818
பாலோ தேனோ பாகோ
(திருவாரூர்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடா ரேசற் ...... றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
கோளே கேள்மற் ...... றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட் ...... டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடே றாரிற் ...... கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
சோதீ பாகத் ...... துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடாரே(ரோ) சற்று அல ஆவி
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்
கோளே கேள் மற்று இள வாடை
ஈர் வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட்டு அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடு ஏறாரில் கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ்
சூழ் வானோர்கட்கு அருள் கூரும்
தோலா வேலா வீறு ஆரூர் வாழ்
சோதீ பாகத்து உமை ஊடே
சேர்வாய் நீதி வானோர் வீரா
சேரார் ஊரை சுடுவார் தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ பெருமாளே.
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. பாலோ தேனோ பாகோ வானோர்
பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
பானோ வான்முத்தென நீளத்
தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்து உனு சாரந்
தாராதே பேர் ஈயாதே
பேசாதே ஏசத் தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாள்
மால் ஆனாது ஏனற்புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.074 - திருப்புகழ் 1038
ஊனே தானாய்
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 1.075 - திருப்புகழ் 1039
சாவா மூவா வேளே
(பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
ஊனே தானா யோயா நோயா
லூசா டூசற் ...... குடில்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத் ...... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ...... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் ...... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ...... குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...... கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ...... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசற் குடில்பேணா
ஓதா மோதா வாது ஆகாதே லோக ஆசாரத்து உளம்
வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் பொருளாலும் நாடா வீடாய்
ஈடேறாதே நாயேன் மாயக் கடவேனோ
வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே
மாயா மானே கோனே மானார் வாழ்வே கோழிக்
கொடியோனே
தேனே தேன் நீள் கான் ஆறாய்வீழ்
தேசு ஆர் சாரற் கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.076 - திருப்புகழ் 1040
நாராலே தோல்
(பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக் ...... கருள்கூருந்
தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற் ...... கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ ணேகத் ...... திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாரா வாரத் ...... துரகேசப்
பாய்மீ தேசாய் வார்கா ணாதே
பாதா ளாழத் ...... துறுபாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமா னேசெச் ...... சையமார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. சாவா மூவா வேளே போல்வாய்
தாள் ஆவேனுக்கு அருள் கூரும் தாதாவே ஞாதாவே
கோவே
சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை
ஆள் கொண்டு
ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாராவாரத்து உரகேச பாய் மீதே சாய்வார் காணாதே
பாதாள ஆழத்து உறு பாத சே ஆம் மா ஊர் கோமான்
வாழ்வே
சீமானே செச்சைய மார்பா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே.
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் ...... குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார்வேதத் ...... தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
டேயூர் பாதத் ...... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. நாராலே தோல் நீராலேயாம்
நானா வாசற் குடிலூடே
ஞாதாவாயே வாழ்கால் ஏகாய்
நாய்பேய் சூழ்கைக்கு இடமாமுன்
தாரார் ஆர்தோள் ஈராறானே
சார்வானோர்நற் பெருவாழ்வே
தாழாதே நாயேன் நாவாலே
தாள்பாடாண்மைத் திறல்தாராய்
பாரேழோர்தாளாலே யாள்வோர்
பாவார்வேதத்து அயனாரும்
பாழூடே வானூடே பாரூ
டேயூர் பாதத்தினை நாடா
சீரார் மாதோடேவாழ்வார் நீள்
சேவூர்வார் பொற் சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.077 - திருப்புகழ் 1041
மாதா வோடே
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 1.078 - திருப்புகழ் 1042
வாராய் பேதாய்
(பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத் ...... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரூ டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத் ...... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப் ...... பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித் ...... திடும்வீரா
தீதார் தீயார் தீயு டேமூள்
சேரா சேதித் ...... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. மாதாவோடே மாமான் ஆனோர்
மாதோடே மைத்துனமாரும்
மாறானார் போல் நீள்தீ யூடே
மாயா மோகக் குடில்போடாப்
போதா நீரூடே போய் மூழ்கா
வீழ்கா வேதைக்கு உயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத்து அருள்தாராய்
வேதாவோடே மால் ஆனார்மேல்
வானோர் மேனிப் பயமீளவே
தானோர் மேல் ஆகாதேயோர்
வேலால் வேதித்திடும் வீரா
தீதார் தீயார் தீயு டேமூள்
சேரா சேதித்திடுவோர்தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.079 - திருப்புகழ் 1037
வாதந் தலைவலி
(பொதுப்பாடல்கள்)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் ...... துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் ...... சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் ...... பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் ...... குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் ...... புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் ...... சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் ...... திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே. வாராய் பேதாய் கேளாய்
நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை மாசு ஊடாடாது
ஊடே பாராய்
மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய்
பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய்
நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார்
தாம்
தோரா வானோர் சேனை ஆதாரா
சூரா சாரல் புனம் மாது தோள் தோய் தோள் ஈராறா
மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே
வேலாலே சேதித்திடும் வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியிவை ...... யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ...... மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி ...... லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை ...... பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ...... மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத ...... லுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ...... விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே. வாதம் தலை வலி சூலம் பெரு வயிறு
ஆகும் பிணி இவை அணுகாதே
மாயம் பொதி தரு காயம் தனின் மிசை வாழும் கரு வழி
மருவாதே
ஓதம் பெறு கடல் மோதும் திரை அதுபோலும் பிறவியில்
உழலாதே
ஓதும் பலஅடியாருங் கதிபெற
யான் உன் கழல் இணை பெறுவேனோ
கீதம் புகழ் இசை நாதம் கனிவோடு
வேதம் கிளர் தர மொழிவார் தம்
கேடின் பெரு வலி மாளும் படி அவரோடும் கெழுமுதல்
உடையோனே
வேதம் தொழு திரு மாலும் பிரமனும்
மேவும் பதம் உடை விறல் வீரா
மேல் வந்து எதிர்பொரு சூரன் பொடிபட
வேல் கொண்டு அமர்செய்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.080 - திருப்புகழ் 101
விறல்மாரன் ஐந்து
(திருச்செந்தூர்)
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே. விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
வானி லிந்து மிக வெயில் காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.081 - திருப்புகழ் 686
கரிய முகில் போலும்
(திருவொற்றியூர்)
Back to Top
மணிமாலை 1.082 - திருப்புகழ் 1318
வாதினை அடர்ந்த
(பழமுதிர்ச்சோலை)
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் ...... விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
களபமுலை தோய ...... அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு ...... முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத ...... புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச ...... குமரேசா
சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
திகழ்கநக மேனி ...... யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் ...... பெருமாளே. கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத
வேலின் விழி மாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய
அணை ஊடே விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன்
என
நாளும் உலகோர்கள் விதரணம் அதான வகை நகைகள் கூறி
விடுவதன் முன் ஞான அருள் தாராய்
அரி பிரமர் தேவர் முனிவர் சிவ யோகர் அவர்கள் புகழ் ஓத
புவி மீதே அதிக நடராஜர் பரவு குரு ராஜ
அமரர் குல நேச குமரேசா
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி
உடையாளர்
திரு அருளும் ஆதி புரி தனில் மேவு ஜெய முருக தேவர்
பெருமாளே.
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமது ஒழிந்து தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம் அணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
ஆடுமயி லென்பது அறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.083 - திருப்புகழ் 636
திருமகள் உலாவும்
(கதிர்காமம்)
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதான திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ...... பெருமாளே. திருமகள் உலாவும் இருபுய
முராரி திருமருக நாமப் பெருமாள்காண்
செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவும் அடியார்கள் மனதில்விளையாடு
மரகதமயூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவு கதிர்காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர் குலேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதனவிநோதப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.084 - திருப்புகழ் 1051
நிலவில் மாரன்
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 1.085 - திருப்புகழ் 1052
மன கபாட
(பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம
நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
நியதி யாக வாயார ...... வயிறார
இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி
யிளகி யேறு பாடீர ...... தனபாரம்
எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு
கினுமு னீப சீர்பாத ...... மறவேனே
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
குழைய மாலி காநாக ...... மொடுதாவிக்
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
குமர வேட மாதோடு ...... பிரியாது
கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்
கடக வாரி தூளாக ...... அமராடுங்
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில்
மாட மா மாளிகையின் மேலாம் நிலையில் வாச(ம்) மாறாத
அணையில்
மாதராரோடு நியதியாக வாயார வயிறார இலவில் ஊறு தேன்
ஊறல் பருகி ஆர் அவா மீறி
இளகி ஏறு பாடீர தன பாரம் எனது மார்பிலே மூழ்க இறுக
மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே
குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய
மாலிகா நாகமொடு தாவி குடில கோமளாகார சடிலம் மோலி
மீது ஏறு குமர
வேட மாதோடு பிரியாது கலவி கூரும் ஈர் ஆறு கனக
வாகுவே
சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் கட கபோல மால்
யானை வனிதை பாக வேல் வீர
கருணை மேருவே தேவர் பெருமாளே.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான மனக பாட பாடீர தனத ராத ராரூப
மதன ராச ராசீப ...... சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை ...... வினையேனைக்
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே
அநக வாம னாகார முநிவ ராக மால்தேட
அரிய தாதை தானேவ ...... மதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு ...... மிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகார
கலப சாம ளாகார ...... மயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. மனகபாட
பாடீர தன தராதரா ரூப
மதன ராச ராசீப சரகோப
வருண பாதக அலோக
தருண சோபித ஆகார
மகளிரோடு சீராடி யிதமாடிக் குனகுவேனை
நாணாது தனகுவேனை
வீணான குறையனேனை
நாயேனை வினையேனைக் கொடியனேனை
ஓதாத குதலையேனை
நாடாத குருடனேனை
நீயாள்வ தொருநாளே
அநக வாமனாகார முநிவராக மால்தேட
அரிய தாதை தானேவ மதுரேசன்
அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற
அகில நாலும் ஆராயும் இளையோனே
கனக பாவனாகார பவள கோமளாகார
கலப சாமளாகார மயிலேறும் கடவுளே
க்ருபாகார கமல வேதனாகார
கருணை மேருவே தேவர் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.086 - திருப்புகழ் 1053
அதல சேடனாராட
(பொதுப்பாடல்கள்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.087 - திருப்புகழ் 1054
குருதி மூளை
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 1.088 - திருப்புகழ் 62
தண்டை அணி
(திருச்செந்தூர்)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம்
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி ...... தருபாலா
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்
இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே
அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக
மதிர நாக மோரேழு ...... பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே. குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை
கோழை மாசு ஊறு குழி நீர் மேல் குமிழி போல நேராகி
அழியு(ம்) மாயை ஆதார(ம்)
குறடு பாறு நாய் கூளி பல காகம் பருகு காயமே பேணி
அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே
போது தளிர் வீசிப் பரவு நாடக ஆசார கிரியையாளர்
காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமய மாது
மா சூலி தரு பாலா
எழுமை ஈறு காண் நாதர் முநிவரோடு வான் நாடர்
இசைகளோடு பாரா(ட்)ட மகிழ்வோனே
அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம்
ஓர் ஏழு பொடியாக அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட
அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே.
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ...... தந்ததானா தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. தண்டை அணி வெண்டையங் கிண் கிணி சதங்கையுந்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைந்து நின்று அன்பு போல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்ச மலர் செங்கையும் சிந்துவேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன்முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ வெங்களங் கொண்ட போது
பொன்கிரி யெனஞ் சிறந்து எங்கினும் வளர்ந்து முன்
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூர
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன்
கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே
கொங்கை குறமங்கையின் சந்த மணம் உண்டிடும் (தம்பிரானே)
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே
Back to Top
மணிமாலை 1.089 - திருப்புகழ் 114
ஆறுமுகம் ஆறுமுகம்
(பழநி)
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்,
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய தென்று நாளும்
ஏறுமயில் வாகன குகா சரவணா எனது
ஈச எனமானம் உனதென்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவில்உனை
யேவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேல, அணி
நீலமயில் வாக உமை தந்தவேளே
நீசர்கள் த(ம்)மோடு (எ)னது தீவினையெலா மடிய
நீடு தனி வேல் விடு மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர் துணைவா சிகரி அண்டகூடஞ்
சேரும் அழகார் பழனி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக தம்பிரானே.
Back to Top
மணிமாலை 1.090 - திருப்புகழ் 162
ஞானங்கொள்
(பழநி)
தானந்த தனன தான தானந்த தனன தான
தானந்த தனன தான ...... தனதான ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய ...... வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு ...... முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே. ஞானங்கொள் பொறிகள் கூடி
வானிந்து கதிரிலாத நாடு அண்டி
நமசி வாய வரையேறி
நாவின்ப ரசமதான ஆநந்த அருவி பாய
நாதங்களொடு குலாவி விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக
நானென்பது அறிவி லாமல் ஓம் அங்கி யுருவ மாகி
இருவோரும் ஓரந்த மருவி
ஞான மா விஞ்சை முதுகினேறி
லோகங்கள் வலம தாட அருள்தாராய்
தேனங்கொள் இதழி
தாகி தார் இந்து சலில வேணி
சீர் அங்கன் எனது தாதை
ஒருமாது சேர்பஞ்ச வடிவி
மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய
நீல காடு அந்த மயிலிலேறு முருகோனே
காமன்கை மலர்கள் நாண
வேடம்பெண் அமளி சேர்வைகாண்
எங்கள் பழநி மேவு பெருமாளே. Back to Top
மணிமாலை 1.091 - திருப்புகழ் 277
நிலையாத சமுத்திர
(திருத்தணிகை)
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான ...... தனதான நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத ...... பெருமாளே. நிலையாத சமுத்திரமான
சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமானதெனப் பல பேசி
அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி
பெரியோர்களிடைக் கரவாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி
பவநோயின் அலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல்
பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து
உனையோதி தலைமீதில் பிழைத்திடவே
நினருள்தாராய்
கலியாண சுபுத்திரனாக
குறமாது தனக்கு விநோத
கவினாரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை
சுகப்பட வேவை கடனாகும்
இதுக்கன மாகு முருகோனே
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்
கூறி
படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே
சிவலோக மெனப்பரி வேறு
பதியான திருத்தணி மேவு
பவரோக வயித்திய நாத பெருமாளே. Back to Top
மணிமாலை 1.092 - திருப்புகழ் 538
குடிவாழ்க்கை
(வள்ளிமலை)
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை ...... யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல ...... மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. குடிவாழ்க்கை
அன்னை மனையாட்டி பிள்ளை
குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குலம் வாய்த்த நல்ல தனம்
வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை உணராதே
இட நாட்கள்
வெய்ய நமனீட்டி
தொய்ய இடர்கூட்ட
இன்னல் கொடுபோகி
இடுகாட்டில்
என்னை எரியூட்டு முன்
உன் இருதாட்கள் தம்மை
உணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலை
காத்து
புள்ளி மயில்மேல்
திகழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி
அடிபோற்றி
வள்ளிமலை காத்த
நல்ல மணவாளா
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி
என்னை அருள்போற்றும்
வண்மை தரும்வாழ்வே
அடிபோற்றி
அல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே. Back to Top
மணிமாலை 1.093 - திருப்புகழ் 544
வேத வெற்பிலே
(திருக்கழுக்குன்றம்)
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே. வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய
ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி புயநேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம்
ஆகாச முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை
ஓது வித்த நாதர் கற்க ஓது வித்த முநிநாண
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓது வித்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.094 - திருப்புகழ் 611
ஆதிமக மாயி
(ஊதிமலை)
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ...... ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு ...... மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே. ஆதிமக மாயி யம்பை
தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது
தந்த குமரேசா
ஆதரவதாய் வருந்தி
ஆதியருணேச ரென்று
ஆளும் உனையே வணங்க அருள்வாயே
பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து
பூரண சிவாகமங்கள் அறியாதே
பூணுமுலை மாதர் தங்கள்
ஆசைவகை யேநி னைந்து
போகமுறவே விரும்பும் அடியேனை
நீதயவதாய் இரங்கி
நேசவருளே புரிந்து
நீதிநெறியே விளங்க
உபதேச நேர்மை
சிவனார் திகழ்ந்த காதிலுரை
வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த
வடிவேலா
ஓதுமறை யாகமஞ்சொல்
யோகமதுவே புரிந்து
ஊழியுணர்வார்கள் தங்கள்
வினைதீர
ஊனும் உயிராய் வளர்ந்து
ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது உகந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.095 - திருப்புகழ் 505
நாடா பிறப்பு
(சிதம்பரம்)
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி ...... வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன ...... தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை ...... யருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ...... ரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு ...... மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே. நாடா
பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயேன் அரற்றுமொழி
வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்கும் உனது அருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை
அருள்கூர வாராய்
மனக்கவலை தீராய்
நினைத்தொழுது வாரேன் எனக்கு
எதிர் முன்வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா
கனத்த அரி தோல் ஆசனத்தி
உமை அருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா
எமக்கமிர்த தோழா
கடப்பமலர் அணிவோனே
ஏடார் குழற்சுருபி
ஞான ஆதனத்தி
மிகு மேராள்
குறத்தி திரு மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே
சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.096 - திருப்புகழ் 223
நாவேறு பா மணத்த
(சுவாமிமலை)
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த ...... தனதான நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று ...... வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த ...... நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி ...... மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே. நாவேறு பாம ணத்த பாதாரமே நினைத்து
நாலாறு நாலு பற்று வகையான
நாலாரும் ஆகமத்தின் நூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதிருக்க நான்வேறெ னாதிருக்க
நேராக வாழ்வதற்குன் அருள்கூர
நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே ப ராப ரத்தை
நீகாணெனா ஆவனைச்சொல் அருள்வாயே
சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வே யு ரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீரா குகா கு றத்தி ...... மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
கா ஆர் சு வாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே. Back to Top
மணிமாலை 1.097 - திருப்புகழ் 690
அறமிலா அதி
(திருமயிலை)
தனன தானன தானன தந்தத் ...... தனதான அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே
விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே. அறமிலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடியனேன்மெலிவாக
மனஞ் சற்று இளையாதே
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள்கூட
தினமுமே மிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே
விறல் நி சாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா
விமல, மாது அபிராமி தருஞ்செய்ப் புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொளும் பொற்புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.098 - திருப்புகழ் 958
பரவு நெடுங்கதிர்
(மதுரை)
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ...... தனதான பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ...... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ...... மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ...... மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ...... மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே. பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி
வளமொடு செந்தமிழுரைசெய
அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே
அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத
குறமகள் இங்கித மணவாளா
கருதரு திண்புய சரவண
குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.099 - திருப்புகழ் 794
பகரு முத்தமிழ்
(திருவிடைக்கழி)
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் ...... தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் ...... பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் ...... திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் ...... குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் ...... பெருமாளே. பகரு முத்தமிழ்ப் பொருளும்
மெய்த்தவப் பயனும்
எப்படிப் பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு(ம்)
நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும்
அற்புதப் பெருவாழ்வும்
புலன் அகற்றிடப் பலவிதத்தினைப் புகழ்
பலத்தினைத் தரவேணும்
தகரில் அற்றகைத் தலம்விட
பிணைச் சரவ ணத்தினிற் பயில்வோனே
தனிவ னத்தினிற் புனமறத்தியை
தழுவு பொற்புயத் திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும்
வித்தகத் திறல் அயிற்சுடர்க் குமரேசா
செழுமலர்ப்பொழிற் குரவமுற்ற
பொற்றிருவி டைக்கழிப் பெருமாளே. Back to Top
மணிமாலை 1.100 - திருப்புகழ் 974
மாலையில் வந்து
(இலஞ்சி)
Back to Top
மணிமாலை 1.101 - திருப்புகழ் 449
கனகசபை மேவும்
(சிதம்பரம்)
தான தனந்த தான தனந்த
தனா தனந்த ...... தனதான மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் ...... மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி ...... தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த ...... முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற ...... பெருமாளே. மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை அனங்கன் மலராலும்
வாடை எழுந்து வாடை செறிந்து
வாடை எறிந்த அனலாலும்
கோலம் அழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி தளரா முன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவும் இன்று வரவேணும்
காலன் நடுங்க வேல் அது கொண்டு
கானில் நடந்த முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காதல் இரங்கு குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
சூழும் இலஞ்சி மகிழ்வோனே
சூரியன் அஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற பெருமாளே.
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் ...... பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் ...... பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் ...... பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ...... பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் ...... பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே. கனகசபை மேவும்
எனதுகுரு நாத
கருணைமுருகேசப் பெருமாள்காண்
கனகநிற வேதன்
அபயமிட மோது
கரகமல சோதிப் பெருமாள்காண்
வினவுமடியாரை மருவிவிளையாடு
விரகு ரச மோகப் பெருமாள்காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
விமல சர சோதிப் பெருமாள்காண்
சனகிமணவாளன் மருகனென
வேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண்
சரணசிவ காமி
இரணகுல காரி
தருமுருக நாமப் பெருமாள்காண்
இனிதுவன மேவும்
அமிர்தகுற மாதொடு
இயல்பரவு காதற் பெருமாள்காண்
இணையில் இப தோகை
மதியின்மகளோடு
இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.102 - திருப்புகழ் 450
கைத்தருண சோதி
(சிதம்பரம்)
தத்ததன தான தத்ததன தான
தத்ததன தான ...... தனதான கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே. கைத்தருண சோதி அத்திமுக வேத
கற்பக சகோத்ரப் பெருமாள்காண்
கற்பு சிவகாமி நித்யகலியாணி
கத்தர்குரு நாதப் பெருமாள்காண்
வித்துருப ராமருக்கு மருகான
வெற்றி அயில் பாணிப் பெருமாள்காண்
வெற்புள கடாகம் உட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்
சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்ப
திக்கினில் இலாதப் பெருமாள்காண்
தித்திமிதி தீதென ஒத்திவிளையாடு
சித்திரகுமாரப் பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்ட கவி ராஜப் பெருமாள்காண்
துப்புவளி யோடும் அப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.103 - திருப்புகழ் 425
செயசெய அருணா
(திருவருணை)
தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான செயசெய அருணாத் திரிசிவ யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே. செயசெய அருணாத்திரி சிவய நம
செயசெய அருணாத்திரி மசிவயந
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா
செயசெய அருணாத்திரி யநமசிவ
செயசெய அருணாத்திரி வயநமசி
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து
அர கர சரணாத்திரி என உருகி
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை
சிவசிவ சரணாத் திரிசெய செயென
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ
செயசெய சரணாத் திரி என முநிவர்
கணம் இது வினை காத்திடும் என மருவ
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு
அடி தலை தெரியாப்படி நிண அருண
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு
இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில்
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத
குற மகள் முலை மேல் புது மணம் மருவி
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.104 - திருப்புகழ் 6
முத்தைத்தரு
(திருவருணை)
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்க கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்கு த்ரிகடக எனவோத
கொத்துப்பறை கொட்ட களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.105 - திருப்புகழ் 725
சீதள வாரிஜ
(சிறுவை)
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன ...... தனதான சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே. சீதள வாரிஜ பாதா நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா நமோநம மறைதேடுஞ்
சேகரமானப்ர தாபா நமோநம
ஆகம சார சொரூபா நமோநம
தேவர்கள் சேனை மகீபா நமோநம கதிதோயப்
பாதக நீவு குடாரா நமோநம
மா அசுரேச கடோரா நமோநம
பாரினிலே ஜய வீரா நமோநம மலைமாது
பார்வதியாள் தரு பாலா நமோநம
நாவல ஞான மனஉலா நமோநம
பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய்
போதக மாமுக நேரான சோதர
நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா
போதக மாமறை ஞானா தயாகர
தேனவிழ் நீப நறாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா
மாதவர் தேவர்களோடே முராரியும்
மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
அளகாபுரி வாழ்வினு மேலாகவே திரு
வாழ் சிறுவாபுரி வாழ்வே சுராதிபர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.106 - திருப்புகழ் 91
முந்துதமிழ் மாலை
(திருச்செந்தூர்)
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான ...... தனதானா முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே. முந்து தமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே
முந்தை வினையே வராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை ஆளத் தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி,
தந்ததன தான தானத் தான,
செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடும்
செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநுகூல பார்வை தீர
செம்பொன்மயில் மீதிலே எப்போது வருவாயே
அந்தண் மறை வேள்வி காவற் கார
செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார
அண்டர் உபகார சேவற் கார முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம் வெகுவான ரூபக் கார எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தை குறமாது வேளைக் கார
செஞ்சொல் அடியார்கள் வாரக் கார எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழும் ஆண்மைக் கார பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.107 - திருப்புகழ் 170
நாத விந்து
(பழநி)
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Back to Top
மணிமாலை 1.108 - திருப்புகழ் 192
வசனமிக ஏற்றி
(பழநி)
தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. வசனமிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசைபயில் ஷடாட்சரம் அதாலே
இகபரசெள பாக்யம் அருள்வாயே
பசுபதிசி வாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்(று) அருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே.
Back to Top
மணிமாலை - திருப்புகழ்
()