This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: 896 தொக்கைக் கழுவி 895 கருகி அறிவு அகல 945 மனத்திரைந்தெழு 944 பந்தப்பொற் பார 943 இறவாமற் பிறவாமல் 978 வாட்படச் சேனை 308 ஈனமிகுத்துள பிறவி 307 அலைகடல் நிகராகிய 807 குங்கும கற்பூர 985 அமல கமல உரு 567 பத்தியால் யானுனை 566 சுற்ற கபடோடு 565 கயலைச் சருவி 984 வானோர் வழுத்துனது 983 வாலவயதாகி 974 மாலையில் வந்து 973 சுரும்பு அணி 972 கொந்தள வோலை குலு 971 கரம் கமலம் மின் 982 கற்பக ஞானக் கடவுள் 717 மாதர் கொங்கையில் 716 நீள் புயல் குழல் 715 தோல் எலும்பு 714 சுருதி மறைகள் 612 கோதி முடித்து 611 ஆதிமக மாயி 834 மைக்குழல் ஒத்த 833 கடல் ஒத்த விடம் 832 ஓங்கும் ஐம்புல 831 உரமுற் றிரு 835 சந்தனந்திமிர்ந்து 986 விரகற நோக்கியும் 987 வழக்குச் சொற்பயில் 757 வாருமிங்கே 640 கடகட கருவிகள் 648 வருபவர்கள் ஓலை 639 எதிரிலாத பத்தி 647 முதிரு மாரவாரம் 638 உடுக்கத் துகில் 646 மாதர் வசமாய் 637 அலகின் மாறு 645 மரு அறா வெற்றி 636 திருமகள் உலாவும் 644 பாரவித முத்த 643 சரியையாளர்க்கும் 642 சரத்தே யுதித்தாய் 641 சமர முக வேல் 649 தொடுத்த வாள் 618 அரிவையர்கள் 897 விந்துபேதித்த 801 எந்தன்சடலங்கம் 811 அன்னம் மிசை 520 பனியின் விந்துளி 519 நகைத்து உருக்கி 518 தேனுந்து முக்கனிகள் 522 முகத்தைப் பிலுக்கி 517 திரு நிலம் மருவி 521 புமி அதனில் 778 அளிசுழ லளக 929 முகிலள கஞ்சரி 928 சஞ்சல சரித 927 முட்ட மருட்டி 926 நித்தப் பிணிகொடு 925 தசையாகிய 924 இளநிர்க் குவட்டு 923 மதியால் வித்தகன் 632 குதலை மொழியினார் 634 கோங்க முகை 633 முலையை மறைத்து 653 வேழம் உண்ட 652 மங்கைக் கணவனும் 651 தாரணிக் கதி 310 கனக தம்பத்தை 318 கனி தரும் கொக்கு 326 கடத்தைப் பற்று 334 தத்தித் தத்தி 342 கோவைச் சுத்த 347 மக்கட்குக் கூற 309 அதி மதம் கக்க 317 அரி அயன் புட்பி 325 இறைச்சிப் பற்று 333 கொக்குக்கு ஒக்க 341 கொத்தார் பற் கால் 316 செறிதரும் செப்பத்து 324 எனக்குச்சற்று 332 சுத்தச் சித்த 340 கலகலென 315 கறை இலங்கும் 323 இதத்துப் பற்றி 331 அற்றைக் கற்றை 339 கருமமான பிறப்பற 352 அறிவிலாப் பித்தர் 314 புன மடந்தைக்கு 322 தலை வலையத்து 330 முட்டுப் பட்டு 338 கமலரு சோகம் 346 மகுடக் கொப்பாட 351 வாய்ந்தப்பிடை 313 தெரியல் அம் செச்சை 321 சலமலம் விட்ட 329 அற்றைக்கு இரைதேடி 337 கச்சு இட்ட அணி 345 படிறொழுக்கமும் 350 வம்பறாச்சில 312 கன க்ரவுஞ்சத்தில் 320 புரைபடுஞ் செற்ற 328 கறுக்கப் பற்று 336 அயில் அப்பு 344 நச்சு அரவம் என்று 349 முத்து ரத்ந சூத்ர 311 செடியுடம் பத்தி 319 தசைதுறுந் தொக்கு 327 கருப் பற்றிப் பருத்து 335 பொக்குப்பை 343 சீசி முப்புர 348 மயல் ஓதும் 988 ஆகத்தே தப்பாமல் 882 மானை நேர்விழி 952 ஈர மோடு சிரித்து 624 ககுபநிலை குலைய 623 அழகு எறிந்த 629 நாமேவு குயிலாலும் 628 தவள மதியம் 627 பிறர் புகழ் இன்சொல் 626 நேசா சாரா 625 கடினதட கும்ப 306 வஞ்சக லோப மூடர் 305 தறையின் மானுடர் 304 எழுதிகழ் புவன 303 அதிரும் கழல் 866 பஞ்சுசேர் நிர்த்த 865 கெண்டை நேரொத்தவிழி 864 தும்பி முகத்தானை 869 செனித்திடும் சலம் 863 இந்துகதிர் 868 கறுத்த குஞ்சியும் 867 மாலைதனில் வந்து 613 கருடன் மிசைவரு 894 நீரிழிவு குட்டம் 893 கூரிய கடைக்கணால் 953 தரங்க வார்குழல் 874 தரையினில் வெகுவழி 616 ஐங்கரனை 622 எதிர்பொருது 621 அனங்கன் அம்பு 951 கலைஞர் எணும் கற்பு 871 பட்டுமணிக் கச்சி 607 தொல்லைமுதல் 606 கட்ட மன்னும் 699 ஆதவித பாரமுலை 842 நீல முகில் ஆன 709 வாசித்த நூல் 708 தோள் தப்பாமல் 707 தோழமை கொண்டு 706 ஞால மெங்கும் 705 ஏறு ஆனாலே 704 சாலநெடு நாள் 703 ஆதிமுதன் நாளில் 1306 கும்பகோணம் 886 மரு உலாவிடும் 827 புலவரை ரக்ஷி 826 கன்ன லொத்த 938 சந்திதொறும் நாணம் 937 சஞ்சரி உகந்து 459 சிரித்துச் சங்கொளி 467 முகசந்திர புருவம் 475 கூந்தலாழ விரிந்து 483 கொள்ளை ஆசை 491 கொந்தள வோலைகள் ஆட 499 சகசம்பக் குடைசூழ் 507 நீலக் குழலார் 515 பரமகுரு நாத 451 இருவினையின் மதி 466 மதவெம் கரி 474 கரிய மேகமெனும் 482 காதைக் காதி 490 விடுங்கைக்கு ஒத்த 498 கோதிக் கோதி 506 நாலு சதுரத்த பஞ்ச 514 முத்த மோகன 450 கைத்தருண சோதி 458 கதித்துப் பொங்கலு 465 பருவம் பணை 473 செம் கலச 481 ஆரத்தோடு அணி 489 இணங்கித் தட்பொடு 497 காவி உடுத்தும் 505 நாடா பிறப்பு 513 மனமே உனக்குறுதி 449 கனகசபை மேவும் 457 வந்து வந்துவித்தூறி 464 தியங்கும் சஞ்சலம் 472 நஞ்சினைப் போலுமன 480 அக்குப் பீளை 488 சுரும்பு உற்ற 496 இருளும் ஓர்கதிரணு 504 துத்தி பொற்றன 512 மருவு கடல்முகில் 456 மந்தரமென் குவடார் 463 கொந்தரம் குழல் 471 கட்டி முண்டக 479 அடப்பக்கம் பிடித்து 487 வாத பித்தமொடு 495 இரசபா கொத்தமொழி 503 தத்தை மயில் 511 மதிய மண்குண 455 கொந்தளம் புழு 462 திருடிகள் இணக்கி 470 அவகுண விரகனை 478 முல்லைமலர் போலும் 486 நீல மாமுகில் 494 தறுகணன் மறலி 502 சுடரனைய திருமேனி 510 மச்ச மெச்சு 454 கங்குலின் குழல் 461 தனத்தில் குங்குமத்தை 469 காய மாய வீடு 477 இருள் காட்டு 485 எலுப்புத் தோல் 493 எழுகடல் மணலை 501 சாந்துடனே புழுகு 509 மகரமொடுறு குழை 453 வண்டையொத்து 460 தத்தையென்று 468 சந்திர வோலை 476 அத்தன் அன்னை 484 தாது மாமலர் 492 நகையா லெத்திகள் 500 சகுட முந்தும் 508 பனி போலத் துளி 452 குகனே குருபரனே 725 சீதள வாரிஜ 724 அண்டர்பதி குடியேற 727 வேல் இரண்டு 726 பிறவியான சடம் 872 மனமெனும் பொருள் 773 செக்கர்வானப் பிறை 765 இரதமான தேன் 772 சிந்து உற்று எழு 764 அலைகடல் சிலை 771 சருவி இகழ்ந்து 770 சந்தனம் பரிமள 777 விடம் என மிகுத்த 769 கொங்கு லாவிய 776 மதனச்சொற் கார 768 கட்காமக்ரோத 775 பூமாது உரமேயணி 767 ஒய்யா ரச்சிலை 774 தினமணி சார்ங்க 766 ஊனத்தசை தோல்கள் 206 எந்தத் திகையினும் 214 குமர குருபர முருக சரவண 222 நாசர்தங் கடை 230 மருவே செறித்த 238 விழியால் மருட்டி 205 இருவினை புனைந்து 213 குமரகுருபர முருக குகனே 221 தெருவினில் நடவா 229 மகர கேதனத்தன் 237 விரித்த பைங்குழல் 204 இராவினிருள் போலும் 212 காமியத் தழுந்தி 220 தருவர் இவர் 228 பாதி மதிநதி 236 விடமும் வடிவேலும் 203 ஆனாத பிருதி 211 கறை படும் உடம்பு 219 சேலும் அயிலும் 227 பலகாதல் பெற்றிட 235 வார்குழல் விரித்து 202 ஆனனம் உகந்து 210 கதிரவனெ ழுந்து 218 செகமாயை உற்று 226 பரவரிதாகி 234 வார்குழலை 1336 வறுமைப் பாழ்பிணி 201 அவாமருவு 209 கடிமா மலர்க்குள் 217 சுத்திய நரப்புடன் 225 நிறைமதி முகமெனும் 233 வாரம் உற்ற 208 கடாவினிடை 216 சரண கமலாலயத்தில் 224 நிலவினிலே 232 வாதமொடு சூலை 207 ஒருவரையும் ஒருவர் 215 கோமள வெற்பினை 223 நாவேறு பா மணத்த 231 முறுகு காள 1335 வம்புங் கோபமும் 557 பகலிரவினில் 721 முகிலாமெனும் வார் 934 பரிவுறு நாரற்று 824 ஒருவழிபடாது 870 கரியகுழல் சரிய 516 வஞ்சமே கோடி 610 மனையவள் நகைக்க 609 சூது கொலைகாரர் 732 அச்சா யிறுக்காணி 885 கந்த வார்குழல் 884 அம்பு ராசியில் 883 அஞ்சன வேல்விழி மடமாதர் 954 இலைச்சுருட் கொடு 955 உரைத்த சம்ப்ரம 800 சூழ்ந்து ஏன்ற துக்க 862 தனுநுதல் வெயர் 786 சூலம் என ஓடு 785 ஏட்டின் விதிப்படி 564 நெறித்துப் பொருப்பு 563 குடத்தைத் தகர்த்து 544 வேத வெற்பிலே 543 ஓல மிட்ட சுரும்பு 542 எழுகு நிறை நாபி 541 அகத்தினைக் கொண்டு 1332 அனத்தோடொப்பா 1333 கோலக்காதிற் 448 பங்கயனார் 447 சிரத்தானத்தி 446 சரக்கு ஏறி இத்த 837 சுருதியாய் 836 அயிலார் மைக்கடு 881 குடங்கள் நிரை 880 குறித்த நெஞ்சாசை 879 அலங்கார முடிக்கிரண 977 முத்தோலை தனை 976 வேதத்திற் கேள்வி 975 ஏடுக்கொத் தாரலர் 756 வாட்டியெனை 650 விலைக்கு மேனியில் 733 பாவ நாரிகள் 552 பகலவன் ஒக்கும் 560 பொருள்கவர் சிந்தை 551 இளையவர் நெஞ்ச 559 பொருளின் மேற்ப்ரிய 550 அழுது அழுது ஆசார 558 புவனத் தொரு 549 அரிவையர் நெஞ்சுரு 548 அந்தோ மனமே 556 சத்தி பாணீ 547 அங்கை நீட்டி 555 குவளை பூசல் 554 குமுத வாய்க்கனி 562 வெருட்டி ஆட்கொளும் 553 ஒருவரொடு கண்கள் 561 வாசித்து 878 திட்டெனப் பல 875 கடகரிம ருப்பிற்க 813 வங்கார மார்பிலணி 592 நீலமஞ்சான குழல் 600 அத் துகிரின் நல் 591 துஞ்சு கோட்டி 599 தாமா தாம ஆலாபா 590 கலக்கும் கோது 598 காலனிடத்து 589 இடம் பார்த்து 597 ஆலகால படப்பை 605 கொடிய மறலி 588 கரை அற உருகுதல் 596 வருத்தம் காண 604 பொன் சித்ர 587 வண்டார் மதங்கள் 595 மெய்ச் சார்வு அற்றே 603 புற்புதம் 586 பந்து ஆடி அம் கை 594 மந்தக் கடைக்கண் 602 பத்தர் கணப்ரிய 585 அன்பாக வந்து 593 பொன்றலைப் பொய் 601 அத்த வேட்கை 25 அருணமணி மேவு 33 இருள்விரி குழலை 41 கரிக்கொம்பம் 49 குழைக்கும் சந்தன 57 சத்தம் மிகு ஏழு 65 துன்பங்கொண்டு அங்கம் 73 நிறுக்குஞ் சூதன 81 புகரப் புங்க 89 மான்போல் கண் 97 வந்து வந்து முன் 24 அம்பொத்த விழி 32 இருகுழை யெறிந்த 40 கமல மாதுடன் 48 குடர்நிண மென்பு 56 சங்கை தான் ஒன்று 64 தரிக்குங்கலை 72 நிலையாப் பொருளை 80 பாத நூபுரம் 88 மாய வாடை 96 வஞ்சத்துடன் ஒரு 31 இயலிசையில் உசித 39 கண்டுமொழி 47 குகர மேவுமெய் 55 சங்குபோல் மென் 63 தந்த பசிதனை 71 நிதிக்குப் பிங்கலன் 79 பருத்தந்த 87 மனைகனக மைந்தர் 95 வஞ்சங்கொண்டும் 103 வெம் சரோருகமோ 23 அமுத உததி விடம் 30 அனைவரும் மருண்டு 38 கட்டழகு விட்டு 46 காலனார் வெங்கொடும் 54 கொலை மதகரி 62 தண்டை அணி 70 நாலும் ஐந்து வாசல் 78 பரிமள களப 86 மனத்தின் பங்கு 94 மூளும்வினை சேர 102 வெங்காளம் பாணம் 22 அந்தகன் வருந்தினம் 29 அனிச்சம் கார்முகம் 37 ஓராது ஒன்றை 45 கன்றிலுறு மானை 53 கொம்பனையார் 61 தண் தேனுண்டே 69 தோலொடு மூடிய 77 பதும இருசரண் 85 மஞ்செனுங் குழல் 93 மூப்புற்றுச் செவி 101 விறல்மாரன் ஐந்து 21 அங்கை மென்குழல் 28 அறிவழிய மயல்பெருக 36 ஏவினை நேர்விழி 44 கனங்கள் கொண்ட 52 கொடியனைய இடை 60 தகரநறை 68 தொந்தி சரிய 76 படர்புவியின் மீது 84 மங்கை சிறுவர் 92 முலை முகம் 100 விந்ததில் ஊறி 27 அளக பாரமலைந்து 35 உருக்கம் பேசிய 43 களபம் ஒழுகிய 51 கொங்கைப் பணை 59 சேமக் கோமள 1334 கன்றிவரு நீல 67 தொடரியமன் 75 பஞ்ச பாதகம் 83 பெருக்கச் சஞ்சலித்து 91 முந்துதமிழ் மாலை 99 விதி போலும் உந்து 26 அவனி பெறுந்தோடு 34 உததியறல் மொண்டு 42 கருப்பம் தங்கு 50 கொங்கைகள் 58 சந்தன சவ்வாது 66 தெருப்புறத்து 74 பங்கம் மேவும் பிறப்பு 82 பூரண வார கும்ப 90 முகிலாமெனும் 98 வரியார் கருங்கண் 286 பொருவிக் கந்தொடு 294 முத்துத் தெறிக்க 302 வெற்றி செயவுற்ற 246 உய்யஞானத்து நெறி 254 கடற்செகத் தடக்கி 262 குயில் ஒன்று 270 சினத் திலத் தினை 278 நினைத்தது எத்தனை 285 பொரியப் பொரிய 293 முடித்த குழலினர் 301 வினைக்கு இனமாகும் 245 உடையவர்கள் ஏவர் 253 கச்சணி இளமுலை 261 கிறி மொழி 269 சினத்தவர் முடிக்கும் 277 நிலையாத சமுத்திர 284 பெருக்க உபாயம் 292 முகிலும் இரவியும் 300 வார் உற்று எழும் 244 உடலி னூடு 252 ஓலை இட்ட 260 கிரி உலாவிய 268 கொந்துவார் குரவடி 276 தொடத்துளக்கிகள் 291 முகத்தை மினுக்கி 299 வரிக் கலையின் 243 இருமலு ரோக 251 ஏது புத்தி 259 கனைத்து அதிர்க்கும் 267 கூர்வேல் பழித்த 275 தொக்கறாக் குடில் 283 பூசலிட்டு 290 மலை முலைச்சியர் 298 வட்ட வாள் தன 242 இருப்பவல் திருப்புகழ் 250 எனை அடைந்த 258 கனத்த அற 266 கூந்தல் அவிழ்த்து 274 துப் பார் அப்பு 282 புருவ நெறித்து 289 மருக்குல மேவும் 297 வங்கம் பெறு 241 அருக்கி மெத்தென 249 எனக்கென யாவும் 257 கவடுற்ற சித்தர் 265 குவளைக் கணை 273 திருட்டு நாரிகள் 281 பழமை செப்பிய 288 பொற் பதத்தினை 296 மொகுமொகு என 240 அரகர சிவன் அரி 248 எலுப்பு நாடிகள் 256 கலை மடவார்தம் 264 குலைத்து மயிர் 272 தாக்கு அமருக்கு 280 பருத்தபற் சிரத்தினை 287 பொற்குடம் ஒத்த 295 முலைபுளகம் எழ 239 அமைவுற்று அடைய 247 எத்தனை கலாதி 255 கரிக்குழல் விரித்தும் 263 குருவி என 271 சொரியும் முகிலை 279 பகல் இராவினும் 919 நிரைத்த நித்தில 918 கார் அணியும் குழல் 846 மலைக் கனத்தென 741 ஆரத்தன பார 742 வெகு மாய வித 762 மூல முண்டகனு பூதி 808 பச்சை யொண்கிரி 873 ஆசார வீனக்கு 743 கோல மறை 889 முகிலைக் காரை 749 அறிவிலாதவர் 787 அருக்கி மெத்தென சிரித்துமை 853 கும்பமு நிகர்த்த 852 எகினி னம்பழி 851 இருவினையஞ்ச 850 இதசந்தன புழுகு 856 மதியஞ் சத்திரு 855 தேனிருந்த இதழார் 854 கெண்டைகள் பொரும் 857 கொந்தார் மைக்குழல் 9 கருவடைந்து 17 பொருப்புறுங் 8 உனைத் தினம் 16 பதித்த செஞ்சந்த 7 அருக்கு மங்கையர் 15 தடக்கைப் பங்கயம் 14 சருவும்படி 13 சந்ததம் பந்த 12 காதடருங்கயல் 20 வரைத்தடங் கொங்கை 11 கனகந்திரள்கின்ற 19 வடத்தை மிஞ்சிய 10 கறுக்கும் அஞ்சன 18 மன்றலங் கொந்துமிசை 921 வாசனை மங்கையர் 890 விகட சங்கட 877 தோடுற்றுக் காதள 933 காந்தட் கரவளை 932 இருவினைப் பிறவி 745 நிணமொடு குருதி 946 பக்குவ ஆசார 948 வனப்புற்றெழு 947 மதப்பட்ட விசால 980 வேலை தோற்க விழி 979 கருப்புச் சாப 888 வீங்கு பச்சிள 1331 பந்தப்பொற் பார 1330 வானவராதி யோர் 1329 அறப்பாவை அத்தற்கு 845 முகர வண்டெழு 844 வரித்த குங்குமம் 843 இரத்த முஞ்சி 713 திமிர மாமன 712 சீர் உலாவிய 711 உருக்கு ஆர் வாளி 710 அனுத்தே னேர்மொழி 693 களபம் மணி ஆரம் 688 அமரும் அமரர் 697 வரும் மயில் ஒத்தவர் 692 இணையது இலதாம் 696 நிரைதரு மணியணி 691 இகல வருதிரை 695 திரைவார் கடல் 690 அறமிலா அதி 694 கடிய வேக 689 அயில் ஒத்து எழும் 763 வண்டு அணியும் 806 காதோடு தோடிகலி 746 மதிக்கு நேரெனும் 899 ஆங்குடல் வளைந்து 942 அவசியமுன் வேண்டி 723 பச்சிலை இட்டு 722 கலகலெனச் சில 738 விடமும் வேலன 737 பரவுவரிக் கயல் 805 சோதி மந்திரம் 758 கறுவி மைக்கணி 371 மகர மெறிகடல் 379 தருண மணி 387 கனை கடல் வயிறு 395 ஆனை வரிக் கோடு 403 இருளளகம் அவிழ 411 காணாத தூர நீள் 419 கோடு செறி 427 தமிழோதிய குயிலோ 435 புலையனான 443 விதி அதாகவே 370 துகிலு ம்ருகமத 378 பரியகைப் பாசம் 386 கரி உரி அரவம் 394 அழுதும் ஆவா 402 இருவினை ஊண் 410 கரு நிறம் சிறந்து 418 கோடு ஆன மடவார்கள் 426 தமரம் குரங்களும் 434 புணர்முலை மடந்தை 442 விடு மதவேள் 377 கறுவு மிக்கு ஆவி 385 உருகும் மாமெழுகாக 393 அருமா மதனை 401 இருவினை அஞ்ச 409 கரிமுகக் கடகளிறு 417 கேதகையபூ முடித்த 425 செயசெய அருணா 433 பாலாய் நூலாய் 441 வலிவாத பித்தமொடு 369 கருணை சிறிதும் 376 கயல் விழித்தேன் 384 அமுதம் ஊறு சொல் 392 அருக்கார் நலத்தை 400 இருவர் மயலோ 408 கமல மொட்டை 416 குழவியுமாய் மோகம் 424 செஞ்சொற் பண் 432 பாண மலரது 440 மொழிய நிறம் 6 முத்தைத்தரு 368 அருவ மிடையென 375 கமரி மலர்குழல் 383 பேதக விரோத 391 கெஜ நடை மடவார் 399 இரவுபகற் பலகாலும் 1328 ஏறுமயிலேறி 407 கமலமுகப் பிறை 415 குரவ நறும் அளக 423 சுக்கிலச் சுரொணித 431 தோதகப் பெரும் 439 மேக மொத்தகுழலார் 367 குமர குருபர குணதர 374 விடமும் அமுதமும் 382 ஆலவிழி நீல 390 இடம் அடு சுறவை 398 இரத சுரதமுலை 406 கடல்பரவு தரங்க 414 கீத விநோத மெச்சு 422 சினமுடுவல் நரிகழுகு 430 தேதென வாச முற்ற 438 முகத் துலக்கிகள் 373 முருகு செறிகுழல் சொரு 381 வடவை அனல் ஊடு 389 விரகொடு வளை 397 இமராஜன் நிலாவது 405 உலையிலனல் 413 காரும் மருவும் 421 சிவமாதுடனே 429 திருட்டு வாணிப 437 மானை விடத்தை 445 வீறு புழுகான பனி 372 முகிலை யிகல் 380 முழுகிவட 388 இரவியும் மதியும் 396 இடருக்கு இடர் 404 இறுகு மணி முலை 412 காராடக் குழல் 420 சிலைநுதல் வைத்து 428 தலையை மழித்து 436 போக கற்ப 444 விந்துப் புளகித 876 மகர குண்டல மீதே 685 மருமல்லி யார் 665 நசையொடு தோலு 812 இபமாந்தர் சக்ர 981 ஊனாரும் உட்பிணியும் 355 அனித்தமான ஊன் 363 நாடித் தேடி 354 அம்புலி நீரை 362 குருதி புலால் என்பு 353 அஞ்சன வேல்விழி இட்டு 361 காவிப் பூவை 360 கரு முகில் 359 ஓல மறைகள் 358 உரைக் காரிகை 366 வேலைப்போல் விழி 357 ஆலம் வைத்த 365 பரிமளம் மிக உள 356 ஆரமணி வாரை 364 நிறைந்த துப்பிதழ் 698 குசமாகி யாருமலை 731 கால முகில் என 730 கருமுகில் போல் 729 கண்க யற்பிணை 728 அடல்வடி வேல்கள் 739 சீத மதியம் 821 கரமு முளரியின் 820 மகரம துகெட 819 நீதானெத்தனை 818 பாலோ தேனோ பாகோ 817 கூர்வாய் நாராய் 816 கூசாதே பார் 822 பாலோ தேனோ பலவுறு 676 வடிவது நீலம் 675 புவிபுனல் காலும் 674 பொன்றா மன்று 673 கனவாலங் கூர்விழி 848 சொற்பிழை வராமல் 797 பெருக்க மாகிய 796 பழியுறு சட்டகமான 795 படி புனல் நெருப்பு 794 பகரு முத்தமிழ் 793 இரக்கும் அவர்க்கு 792 அனல் அப்பு அரி 799 முலை குலுக்கிகள் 798 மருக்குலாவிய 861 புழுகொடுபனி 860 படியை அளவிடு 859 இலகு குழைகிழிய 858 அறுகுநுனி பனி 814 சித்தி ரத்திலுமி 847 எருவாய் கருவாய் 931 வண்டுபோற் சார 744 பலபல தத்துவம் 1326 ஓருரு வாகி 528 சாந்தமில் மோகவெரி 527 கோங்கிள நீரிளக 526 நெச்சுப் பிச்சி 525 சரவண பவநிதி 524 கறுத்ததலை வெளிறு 529 வரிசேர்ந்திடு 748 மாத்திரை யாகிலு 747 சதுரத்தரை நோக்கிய 680 ஆலம் போல் எழு 681 கார்ச் சார் குழலார் 887 சொரியு மாமுகில் 687 சொருபப் பிரகாச 686 கரிய முகில் போலும் 677 தவர்வாள் தோமர 804 மகரக் குழைக்குளுந்து 803 பனகப் படமிசைந்த 802 இறையத்தனையோ 617 பாட்டில் உருகிலை 922 புணரியும் 615 கொண்டாடிக் கொஞ்சும் 614 எங்கேனும் ஒருவர் 736 காணொணாதது 735 தாரகாசுரன் சரிந்து 734 ஆறும் ஆறும் 825 உரை ஒழிந்து 829 மார்பு ரம்பினளி 828 ஓலமிட்டிரைத்து 830 விழுதாதெனவே 754 அஞ்சுவித பூதமும் 892 பஞ்ச புலனும் பழைய 930 குருவும் அடியவர் 941 சங்கைக் கத்தோடு 940 கத்தூரி யகரு 939 இரு குழை இடறி 113 ஆலகாலம் என 198 விதம் இசைந்து 121 உயிர்க் கூடு 129 கரிய பெரிய 137 கலவியி லிச்சி 145 குரம்பை மலசலம் 153 கோல மதிவதனம் 161 சுருளளக பார 169 தோகைமயிலே கமல 174 பஞ்ச பாதகன் 182 மனக்கவலை ஏதும் 105 அணிபட்டு அணுகி 190 முருகுசெறி குழலவிழ 197 வாரணந் தனை 120 இலகுகனி மிஞ்சு 128 கதியை விலக்கு 136 கலகக் கயல்விழி 144 கார் அணிந்த 152 கோல குங்கும 160 சுருதி முடி மோனம் 168 திமிர உததி 181 மருமலரினன் 104 அகல்வினை 189 மூல மந்திரம் 112 ஆதாளிகள் புரி 196 வாதம் பித்தம் 119 இலகிய களப 127 கடலை பொரியவரை 135 கலக வாள்விழி 143 கனமாய் எழுந்து 151 கொந்துத் தரு 1338 சிவணிதா வியமனது 159 சீறல் அசடன் 167 திடமிலி சற்குணமிலி 180 மந்தரமதெனவே 188 மூலம் கிளர் ஓர் 111 அறமிலா நிலை 195 வனிதை உடல் 118 இரு செப்பென 126 கடலைச் சிறை 134 கருவின் உருவாகி 142 கனத்திறுகி 150 குன்றுங் குன்றும் 158 சீ உதிரம் எங்கும் 166 தலைவலி மருத்தீடு 179 போதகம் தரு 187 முத்துக்கு 110 அவனிதனிலே 117 இருகனக மாமேரு 125 ஓடி ஓடி 133 கருப்புவிலில் 141 கனக கும்பம் 149 குறித்தமணி 157 சிறு பறையும் 165 தமரும் அமரும் 173 பகர்தற்கு அரிதான 178 பெரியதோர் கரி 186 முதிரவுழையை 109 அருத்தி வாழ்வொடு 194 வரதா மணி நீ 116 இரவி என 124 ஒருவரை ஒருவர் 132 கருகி அகன்று 140 கறுத்த குழலணி 148 குழல்கள் சரிய 156 சிவனார் மனங்குளிர 164 தகைமைத் தனியில் 172 நெற்றி வெயர்த்துளி 177 புடைசெப் பென 185 முகை முளரி 108 அரிசன வாடை 193 வஞ்சனை மிஞ்சி 115 இத் தாரணிக்குள் 200 வேய் இசைந்து 123 ஒருபொழுதும் இருசரண 131 கரியிணை கோடென 139 களப முலையை 147 குழல் அடவி 155 சிந்துர கூரம 163 தகர நறுமலர் 171 நிகமம் எனில் 176 புடவிக்கு அணி 184 முகிலளகத்தில் 107 அபகார நிந்தை 192 வசனமிக ஏற்றி 114 ஆறுமுகம் ஆறுமுகம் 199 விரை மருவு 122 உலகபசு பாச 130 கரிய மேகமதோ 138 கலை கொடு 146 குருதி மலசலம் 154 சகடத்திற் குழை 162 ஞானங்கொள் 170 நாத விந்து 175 பாரியான கொடை 183 மலரணி கொண்டை 106 அதல விதல 191 முருகு செறிகுழல் முகில் 1308 இலவிதழ் கோதி 1316 துடிகொள் நோய் 1307 அகரமுமாகி 1315 சீர் சிறக்கும் மேனி 1314 கருவாகியெதாய் 1322 மலரணை ததும்ப 1313 ஆசை நாலுசதுர 1321 தலைமயிர் கொக்கு 1312 வாரண முகம் 1320 அழகு தவழ்குழல் 1311 வீர மதன் நூல் 1319 வார்குழையை 1310 சீலமுள தாயர் 1318 வாதினை அடர்ந்த 1309 காரணமதாக 1317 பாசத்தால் விலை 964 கலைமேவு ஞான 789 ஆடல் மாமத ராஜன் 791 குவளை பொருதிரு 790 ஈளை சுரங்குளிர் 679 பாற்றுக் கணங்கள் 678 கார்க்கு ஒத்த மேனி 619 மருவுமலர் வாசம் 1324 தங்க மிகுந்த 1323 கருவெனு மாயை 1325 உரையுஞ் சென்றது 620 மாந்தளிர்கள் போல 920 காலன் வேல் கணை 823 கலகவிழி மாமகளிர் 700 தலங்களில் வரும் 891 சதங்கை மணி 950 மைச் சரோருகம் 949 தீராப் பிணிதீர 545 நீல மயில் சேரும் 631 வெடித்த வார்குழல் 630 மைக்கணிக்கன் 1207 அருக்கி மெத்ததோள் 1119 பட்டு ஆடைக்கே 1300 புத்தகத்து ஏட்டில் 1212 ஆசைகூர் பத்தன் 1127 ஆராதனர் ஆடம்பர 1039 சாவா மூவா வேளே 1220 இனமறை விதங்கள் 1135 இருமுலை மலை 1047 இரதமான வாய் ஊறல் 1228 கண்டு போல்மொழி 1143 எட்டுடன் ஒரு 1055 சரியும் அவல 994 வேத வித்தகா 1236 குறைவது இன்றி 1151 கறுத்து நீவிடு 1063 மறலி போற்சில 1002 கடலை பயறொடு 1244 செழும் தாது 1159 செம் கனல் புகை 1071 பெருக்க நெஞ்சு 1010 அரிசன பரிச 1252 துத்தி நச்சு அரா 1167 நிமிர்ந்த முதுகு 1079 சுடரொளி கதிரவன் 1018 கற்பார் மெய் 1260 பற்றநெட்டை 1175 பாணிக்கு உட்படாது 1087 கலக மதன் காதும் 1026 தோடு பொரு மை 1268 மதன் இக்கு அது 1183 பொருத கயல்விழி 1095 வதை பழக மறலி 1034 தோலத்தியால் 1276 வரிபரந் திரண்டு 1191 முத்தம் உலாவு 1103 வண்டுதான் மிக 1284 கருப்பையில் 1199 வளைகரம் ஆட்டி 1111 நீரு நிலம் அண்டாத 1292 தேன் இயல் சொற் 1206 அயில் விலோசனம் 1118 செட்டாகத் தேனை 1299 பிறவியலை 1126 ஆராத காதலாகி 1219 இருநோய் மலத்தை 1134 இருகுழை மீதோடி 1046 அயிலின் வாளி 1227 கட்டக் கணப்பறை 1142 ஊனோடு வாது உயிர் 1054 குருதி மூளை 993 ஓது முத்தமிழ் 1235 குடிமை மனையாட்டி 1150 கலவியி னலமுரை 1062 வருக வீட்டு எனும் 1001 இலகி யிருகுழை 1243 சூதினுண வாசை 1158 சுற்றத்தவர்களும் 1070 புரக்க வந்த 1009 முருகு உலாவிய குழல் 1251 துடித்து எதிர் 1166 நரையொடு பல் 1078 கொடியன பிணி 1017 மழையளக பாரம் 1259 பரிமள மலரடு 1174 பழுது அற ஓதி 1086 அகிலநறுஞ் சேறு 1025 சீதமலம் வெப்பு 1267 மக்கள் தாயர் 1182 பொங்கும் கொடிய 1094 குதறும் முனை அறிவு 1033 தோடு உற்ற காது 1275 மூலா நிலமதின் 1190 மின்னினில் நடுக்கம் 1102 உம்பரார் அமுது 1283 கருப்பற்று ஊறி 1198 வட்ட முலைக்கச்சு 1110 பக்கம் உற நேரான 1291 துள்ளு மதவேள் 1117 எற்றா வற்றா 1298 பரவைக்கு எத்தனை 1125 அரிய வஞ்சகர் 1218 இரு குழை மீது 1133 இரவொடும் பகலே 1045 அமல வாயு 1226 கடலினும் பெரிய 1141 உறவு சிங்கிகள் 1053 அதல சேடனாராட 992 போத நிர்க்குண 1234 கிஞ்சுகம் என 1149 கதறிய கலைகொடு 1061 முதலி யாக்கை 1000 வேடர் செழுந்தினை 1242 சீறிட்டு உலாவு 1157 சுருதி வெகுமுக 1069 கருவாய் வயிற்றில் 1008 இலகு வேலெனு 1250 தீ ஊதை தாத்ரி 1165 நகரம் இரு பாதமாகி 1077 முழு மதி அனைய 1016 குகையில் நவநாதர் 1258 நாகாங்க ரோமம் 1173 பரதவித புண்டரிக 1085 கொலையிலே மெத்த 1024 ஏடுமலர் உற்ற 1266 மக்கள் பிறப்புக்குள் 1181 பூசல் வந்திரு 1093 குடருமல சலமுமிடை 1032 கார் உலாவு குழற்கும் 1274 முருக மயூர 1189 மாறுபொரு காலன் 1101 தந்தமும் துன்ப 1282 என்பந்த வினை 1197 வடிகட்டிய தேன் என 1109 கட்டம் உறு நோய் 1290 தீது உற்றே எழு 1205 அப்படி ஏழும் ஏழும் 1297 பட்டுப் படாத 1124 அகர முதலென 1305 குருபர சரவண 1217 இடை இத்தனை 1132 இரவினிடை வேள் 1044 அடை படாது 1225 கச்சுப் பூட்டு 1140 உறவின்முறை கதறி 1052 மன கபாட 1233 கன்னியர் கடு விடம் 1148 கடைசி வந்தகன்று 1060 பருதியாய்ப் பனி 999 போதில் இருந்து 1241 சிவஞான புண்டரிக 1156 சந்தனம் கலந்த 1068 ஒழு கூனிரத்தம் 1007 முருகு செறிகுழலவிழ் தர 1337 காதின்மணி ஓலை 1249 திரைவஞ்ச 1164 தனஞ் சற்றுக் குலுங்க 1076 புழுககில் களபம் 1015 விடம் என அயில் 1257 நற்குணம் உளார் 1172 பத்தித் தரள 1084 கருதியே மெத்த 1023 விட்ட புழுகுபனி 1265 பெருங்காரியம் போல் 1180 பூசல்தரும் கயலும் 1092 அனகனென அதிகனென 1031 காதில் ஓலை 1273 முத்து மணி ஆரம் 1188 மாண்டார் எலும்பு 1100 அங்கதன் கண்டகன் 1281 இத்தரணி மீதில் 1196 மோது மறலி 1108 வடிவவேல் தனை 1289 சினத்துச் சீறிய 1204 அடி இல் விடாப் பிணம் 1116 உற்பாதம் பூ 1296 நீலங்கொள் 1211 ஆசார வீனன் 1123 மெய்க்கூணைத் தேடி 1304 வான் அப்பு 1216 ஆலும் மயில் போல் 1131 இடர் மொய்த்து 1043 அகல நீளம் 1224 ஏட்டிலே வரை 1139 உலகத்தினில் 1051 நிலவில் மாரன் 1232 கள்ள மீனச் சுறவு 1147 ஓலை தரித்த குழை 1059 கவடு கோத்தெழும் 998 நாலிரண்டிதழாலே 1240 சாங்கரி பாடியிட 1155 கோழையாய் ஆணவம் 1067 மைந்தர் இனிய 1006 பகிர நினைவொரு 1248 திதலை உலாத்து 1163 தரணிமிசை 1014 படிதனில் உறவெனும் 1256 நச்சுவாள் விழி 1171 பகல்மட்க 1083 குடல் இடை தீது 1022 முத்து மணிபணி 1264 பூத கலாதிகள் 1179 புவிக்குன் பாதம் 1091 அளகநிரை குலைய 1030 பேரவா அறா 1272 மாதர் மயல் தனில் 1187 மாடமதிட் சுற்று 1099 மடல் அவிழ் சரோருக 1038 ஊனே தானாய் 1280 வேலை வாளை 1195 மைக்குக்கை 1107 கரவுசேர் மகளிர் 1288 சருவிய சாத்திர 1203 அடியார் மனம் 1115 மக்கள் ஒக்கல் 1210 அளகபாரமும் குலைந்து 1122 பொற் பூவை 1303 வாரி மீதே 1215 ஆல மேற்ற விழியினர் 1130 இடமருவுஞ் சீற்ற 1042 வாராய் பேதாய் 1223 எழுந்திடும் 1138 உரைத்த பற்றுடன் 1050 தொட அடாது 1231 களவு கொண்டு 1146 ஓது வித்தவர் 1058 பொதுவதாய்த் தனி 997 தோடு மென்குழை 1239 சலமலம் 1154 கொலைவிழி சுழல 1066 பணிகள் பணமும் 1005 நெடிய வட 1247 தவநெறி 1162 ஞானா விபூஷணி 1074 இசைந்த ஏறும் 1013 முகமும் மினுக்கி 1255 தோரண கனக 1170 நீரும் என்பு 1082 கரு மயல் ஏறி 1021 வினைத் திரளுக்கு 1263 பிரமனும் விரகொடு 1178 புருவத்தை நெறித்து 1090 உறவின் முறையோர் 1029 கூறும் மார வேள் 1271 மன நூறு கோடி 1186 மதனேவிய கணை 1098 நடை உடையிலே 1037 வாதந் தலைவலி 1279 வீணை இசை 1194 முனை அழிந்தது 1106 ஞாலமோடு ஒப்ப 1287 சமய பத்தி 1202 வேல் ஒத்து வென்றி 1114 தத்துவத்துச் செயல் 1295 நித்தம் உற்றுனை 1209 அலமலமிப் புலால் 1121 பொற்கோ வைக்கே 1302 மனைமக்கள் சுற்றம் 1214 ஆசை நேச மயக்கி 1129 ஆனாத ஞான 1041 மாதா வோடே 1222 எதிரொருவர் இலை 1137 உமை எனும் மயில் 1049 சுருதி ஊடு கேளாது 1230 கலைகோட்டு வல்லி 1145 ஒக்க வண்டெழு 1057 குடரும் நீர் கொழு 996 ஏகமாய் பலவாய் 1238 சந்தம் புனைந்து 1153 குனகியொரு மயில் 1065 துயரம் அறு நின் 1004 தசையும் உதிரமும் 1246 தலைவலய போகம் 1161 சொக்குப் பொட்டு 1073 கலந்த மாதும் 1012 இம கிரி மத்தில் 1254 தென்றலும் அன்று 1169 ஆரவாரமாய் 1081 மடவியர் எச்சில் 1020 இருட் குழலை 1262 பார நறுங்குழல் 1177 புகரில் சேவல 1089 இருவினைகள் ஈட்டும் 1028 காதி மோதி 1270 மலம் தோல் சலம் 1185 மதன தனு நிகர் 1097 எழுபிறவி நீர்நில 1036 தீயும் பவனமும் 1278 விழையும் மனிதரை 1193 முலைமேலிற் கலிங்க 1105 கோல காலத்தை 1286 கோடான மேருமலை 1201 விரை சொரியும் 1113 மைச்சுனமார் மாமன் 1294 நாளு மிகுத்த 1208 அரும்பினால் தனி 1120 பத்து ஏழு எட்டு 1301 பொன்னை விரும்பிய 1213 ஆசைக் கொளுத்தி 1128 ஆலாலத்தை 1040 நாராலே தோல் 1221 ஊனேறெலும்பு 1136 இலகிய வேலோ 1048 குருதி தோலினால் 1229 கப்பரை கைக்கொள 1144 எத்தி இரு குழை 1056 மகளு மனைவி தாய் 995 ஆவி காப்பது 1237 கோகனகமுகிழ்த்த 1152 குறிப்பரிய குழல் 1064 குருதி ஒழுகி 1003 கமல குமிளித 1245 தத் தனமும் 1160 சேலை அடர்த்து ஆலம் 1072 இருந்த வீடும் 1011 உரை தரு பர சமய 1253 தெரிவை மக்கள் 1168 நிருதரார்க்கு ஒரு 1080 குடம் என ஒத்த 1019 சிற்று ஆயக் கூட்ட 1261 பாதகமான யாக்கை 1176 பால்மொழி படித்து 1088 குருதி சலம் தோலும் 1027 தோதகம் மிகுத்த 1269 மதிதனையிலாத 1184 மங்காதிங் காக்கு 1096 விடமளவி யரிபரவு 1035 ஊனுந் தசையுடல் 1277 வரிவிழி பூசலாட 1192 முருகு லாவிய மைப்பா 1104 காதல் மோகம் தரும் 1285 கொடிய மதவேள் 1200 வாடையில் மதனை 1112 சுட்டதுபோல் ஆசை 1293 நாரியர்கள் ஆசை 720 மனைமாண்சுத ரான 719 சயில அங்கனைக்கு 718 குதிபாய்ந்தி ரத்தம் 962 முகமெலா நெய் 961 புருவச் செஞ்சிலை 960 சீத வாசனை மலர் 967 முத்து நவரத்நமணி 959 பழிப்பர் வாழ்த்துவர் 958 பரவு நெடுங்கதிர் 966 மனநினை சுத்த 1327 சைவ முதல் 957 ஆனைமுகவற்கு 965 நீதத்துவமாகி 956 அலகு இல் அவுணரை 963 ஏலப் பனி நீர் 546 கொலை கொண்ட 1075 திரிபுரம் அதனை 849 கருத் திதப்படு 701 தோடு உறும் குழை 702 விலையறுக்கவும் 654 சிகரம் அருந்த 788 அமுதினை மெத்த 989 மின்னார் பயந்த 759 பூத்தார் சூடு 608 மாகசஞ் சாரமுகில் 935 சங்குவார் முடி 684 மின் இடை கலாப 683 சோதி மாமதி 682 அணி செவ்வியார் 740 அரியயன் அறியாதவர் 906 கமலத்தே குலாவும் 914 முலை மறைக்கவும் 905 கடல்போற் கணைவிழி 913 நெய்த்த சுரி 904 என்னால் பிறக்கவும் 912 திரு உரூப நேராக 903 இலகு முலைவிலை 911 தாமரையின் மட்டு 902 இகல்கடின முகபடவி 910 கோவை வாயிதழ் 901 ஆரம் முலை காட்டி 909 குயிலோ மொழி 917 விகட பரிமளம் 900 அரி மருகோனே 908 குருதி கிருமிகள் 916 வாளின் முனை 907 கமை அற்ற சீர் 915 மேகலை நெகிழ்த்து 655 அருவரை எடுத்த 838 தொடுத்த நாள்முதல் 536 ககனமும் அநிலமும் 535 வெல்லிக்கு வீக்கும் 534 கள்ளக் குவால் பை 533 முல்லைக்கும் மாரன் 532 கை ஒத்து வாழும் 540 வரைவில் பொய் 531 ஐயுமுறு நோயும் 539 சிரம் அங்கம் அம் கை 530 அல்லி விழியாலும் 538 குடிவாழ்க்கை 537 அல் அசல் அடைந்த 635 அல்லில் நேரும் 810 தலை நாளில் பதம் 809 தருவூரிசை 990 ஆலையான மொழிக்கு 898 ஈயெறும்பு நரி 991 திருகு செறிந்த 815 குடல்நிண மென்பு 936 கலக சம்ப்ரம 584 சரவண ஜாதா 1 கைத்தல நிறைகனி 5 விடமடைசு வேலை 4 நினது திருவடி 3 உம்பர் தரு 2 பக்கரை விசித்ரமணி 568 சீரான கோல கால 576 கரதல முங்குறி 575 ஐந்து பூதமும் 583 மோதி இறுகி 574 எதிரெதிர் கண்டோடி 582 மேகம் எனும் குழல் 573 உருவேறவே ஜெபித்து 581 மாலாசை கோபம் 572 இதமுறு விரைபுனல் 580 மாயா சொரூபம் 571 நிராமய புராதன 579 கொடாதவனை 570 இலாபமில் 578 காம அத்திரமாகி 569 பாதாள மாதி லோக 577 கரிபுராரி காமாரி 672 மருவும் அஞ்சு 671 பரவி உனது 670 நிகரில் பஞ்ச 669 குலையமயி ரோதி 668 ஒருவரைச் சிறுமனை 752 பசை அற்ற உடல் 751 திருமொழி 750 குடத் தாமரையாம் 656 அடல் அரி மகவு 664 வதன சரோருக 663 பையரவு போலு 662 இல்லையென நாணி 661 தொய்யில் செய்யில் 660 கள்ளம் உள்ள 659 பொருவன கள்ள 658 குவலயம் மல்கு 657 சிகரிகள் இடிய 841 நூலினை ஒத்த 840 சேலை உடுத்து 839 சூழும்வினை 755 நாட்டம் தங்கி 753 குரைகடல் உலகினில் 667 சேல் ஆலம் 666 அதிக ராய்ப்பொரு 781 பாட கச்சிலம்போடு 780 எத்தனை கோடி 779 உரத்துறை போத 784 மேக வார்குழல 783 மூல ஆதாரமோடு 782 மாலினால் எடுத்த 523 ஒருபதும் இருபதும் 970 வேனின் மதன் ஐந்து 969 கார் குழல் குலைந்து 968 ஆடல் மதன் அம்பின் 761 சரம்வெற் றிக்க 760 கழைமுத்து மாலை
1
விநாயகர் கைத்தல நிறைகனி
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக ...... னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=RnXTJ4AlVb8
https://www.youtube.com/watch?v=tDyxnCsoI1o
Add (additional) Audio/Video Link
Back to Top
2
விநாயகர் பக்கரை விசித்ரமணி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Nl3cQiDW5Nk
Add (additional) Audio/Video Link
Back to Top
3
விநாயகர் உம்பர் தரு
தந்ததனத் தானதனத் ...... தனதான தந்ததனத் தானதனத் ...... தனதான கணபதியே நீ வந்திடுவாய் குண நிதியே அருள் தந்திடுவாய் கணபதியே நீ வந்திடுவாய் குண நிதியே அருள் தந்திடுவாய்
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cYTq6eNWt9Y
Add (additional) Audio/Video Link
Back to Top
4
விநாயகர் நினது திருவடி
தனன தனதன தத்தன தத்தன தனன தனதன தத்தன தத்தன தனன தனதன தத்தன தத்தன ...... தனதான
நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=S3LsG5Zlt-k
Add (additional) Audio/Video Link
Back to Top
5
விநாயகர் விடமடைசு வேலை
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின்விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முகவோனே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Nb-HJfWoNZM
Add (additional) Audio/Video Link
Back to Top
6
திருவருணை முத்தைத்தரு
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Fp7VAfmxJog
Add (additional) Audio/Video Link
Back to Top
7
திருப்பரங்குன்றம் அருக்கு மங்கையர்
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம் உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற உரைத்த சம்ப்ரம சரவண பவகுக இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென் றிலக்க ணங்களும் இயலிசை களுமிக விரிக்கும் அம்பல மதுரித கவிதனை இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர் திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு குருக்க ளின்திற மெனவரு பெரியவ திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
8
திருப்பரங்குன்றம் உனைத் தினம்
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=rUZq21Ge6A0
Add (additional) Audio/Video Link
Back to Top
9
திருப்பரங்குன்றம் கருவடைந்து
தனனதந்த தத்தத்த தந்த தனனதந்த தத்தத்த தந்த தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரசரென்றும் ஒப்பற்ற உந்தி யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன் எரியதென்றும் ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர் எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ அரியதன்ப டைக்கர்த்த ரென்று அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே அயனையும்பு டைத்துச்சி னந்து உலகமும்ப டைத்துப்ப ரிந்து அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=-uXTngw-mgA
Add (additional) Audio/Video Link
Back to Top
10
திருப்பரங்குன்றம் கறுக்கும் அஞ்சன
தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர் கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும் நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு புழைக்கை தண்கட கயமுக மிகவுள சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
11
திருப்பரங்குன்றம் கனகந்திரள்கின்ற
தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே பனகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்புக டைந்தப ரம்பரர் படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே பலதுன்பம்உழன்றுக லங்கிய சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே அடல்வந்துமு ழங்கியி டும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர் மனமுந்தழல் சென்றிட அன்றவர் உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே மதியுங்கதி ருந்தட வும்படி உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
12
திருப்பரங்குன்றம் காதடருங்கயல்
தானன தந்தன தந்தனந் தந்தன தானன தந்தன தந்தனந் தந்தன தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி வாளிம யங்கம னம்பயந் தந்திருள் கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை யாழியு டன்கட கந்துலங் கும்படி காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித மாகந டந்தவர் பின்திரிந் துந்தன மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய் போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள் பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே சீதள முந்தும ணந்தயங் கும்பொழில் சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
13
திருப்பரங்குன்றம் சந்ததம் பந்த
தந்தனந் தந்தத் ...... தனதான தந்தனந் தந்தத் ...... தனதான வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா
சந்ததம் பந்தத் ...... தொடராலே சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும் கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா தென்பரங் குன்றிற் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=EWPds8Y_L9I
Add (additional) Audio/Video Link
Back to Top
14
திருப்பரங்குன்றம் சருவும்படி
தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி வந்தனன் இங்கித மதனின்றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே இரவும்பகல் அந்தியு நின்றிடு குயில்வந்திசை தெந்தன என்றிட இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி இவணெஞ்சுப தன்பதன் என்றிட மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள் மனையின்தயிர் உண்டவன் எண்டிசை திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின் திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல் செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே மருவுங்கடல் துந்திமி யுங்குட முழவங்கள்கு மின்குமி னென்றிட வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே மதியுங்கதி ரும்புய லுந்தின மறுகும்படி அண்டம்இ லங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
15
திருப்பரங்குன்றம் தடக்கைப் பங்கயம்
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந் ......தனதான
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங் கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங் குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
16
திருப்பரங்குன்றம் பதித்த செஞ்சந்த
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண் செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும் பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன் புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந் துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால் துவக்குணும் பங்கப் பித்தன வத்தன் புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந் துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங் கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன் குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண் தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங் குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம் பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந் திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர் தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண் டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண் திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
17
திருப்பரங்குன்றம் பொருப்புறுங்
தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன ...... தந்ததான
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல் அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும் அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன் அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர் விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
18
திருப்பரங்குன்றம் மன்றலங் கொந்துமிசை
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன ...... தனதான
மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு ...... விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
19
திருப்பரங்குன்றம் வடத்தை மிஞ்சிய
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர் மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல் விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான் குடத்தை வென்றிரு கிரியென எழில்தள தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம் அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர் குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயிற்கொ டும்படை விடுசர வணபவ திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே செழித்த தண்டலை தொறுமில கியகுட வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர் திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
20
திருப்பரங்குன்றம் வரைத்தடங் கொங்கை
தனத்தனந் தந்த தான தனத்தனந் தந்த தான தனத்தனந் தந்த தான ...... தனதான
வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும் இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன் இளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத் துரத்தியன் றிந்த்ர லோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே தினைப்புனஞ் சென்று லாவு குறத்தியின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
21
திருச்செந்தூர் அங்கை மென்குழல்
தந்த தந்தன தானா தானா தந்த தந்தன தானா தானா தந்த தந்தன தானா தானா ...... தனதான
அங்கை மென்குழ லாய்வார் போலே சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ அன்று வந்தொரு நாள்நீர் போனீர் பின்பு கண்டறி யோநா மீதே அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா எங்க ளந்தரம் வேறா ரோர்வார் பண்டு தந்தது போதா தோமே லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா திங்கு நின்றதென் வீடே வாரீ ரென்றி ணங்கிகள் மாயா லீலா இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே மங்கு லின்புறு வானாய் வானூ டன்ற ரும்பிய காலாய் நீள்கால் மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய் வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ் அம்ப ரம்புனை பாராய் பாரேழ் மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய் உங்கள் சங்கரர் தாமாய் நாமார் அண்ட பந்திகள் தாமாய் வானாய் ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர் செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர் உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
22
திருச்செந்தூர் அந்தகன் வருந்தினம்
தந்தன தனந்தனந் தனதனத் தந்தன தனந்தனந் தனதனத் தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான
அந்தகன் வருந்தினம் பிறகிடச் சந்தத மும்வந்துகண் டரிவையர்க் கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள அந்திப கலென்றிரண் டையுமொழித் திந்திரி யசஞ்சலங் களையறுத் தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச் செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக் கந்தனை யறிந்தறிந் தறிவினிற் சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித் தென்செய லழிந்தழிந் தழியமெய்ச் சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக் குன்றிடி யஅம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக் குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத் தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான சங்கரி மனங்குழைந் துருகமுத் தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
23
திருச்செந்தூர் அமுத உததி விடம்
தனதனன தனதனன தந்தத் தந்தத் தனதனன தனதனன தந்தத் தந்தத் தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப் பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப் பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட் டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட் டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக் குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப் புரளஎறி திரைமகர சங்கத் துங்கத் திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
24
திருச்செந்தூர் அம்பொத்த விழி
தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் ...... தனதானா
அம்பொத் தவிழித் தந்தக் கலகத் தஞ்சிக் கமலக் ...... கணையாலே அன்றிற் குமனற் றென்றற் குமிளைத் தந்திப் பொழுதிற் ...... பிறையாலே எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற் றின்பக் கலவித் ...... துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக் கின்பப் புலியுற் ...... றிடலாமோ கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக் ...... கினியோனே கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச் சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் செந்திற் குமரப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=KGJ2xgyQVio
Add (additional) Audio/Video Link
Back to Top
25
திருச்செந்தூர் அருணமணி மேவு
தனதனன தான தானன தனதனன தான தானன தனதனன தான தானன தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான
அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் ...... தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் ...... றழியாநீள் இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் ...... குழையாளர் தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும் செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் ...... தருள்மாயன் திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
26
திருச்செந்தூர் அவனி பெறுந்தோடு
தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா
அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ தவநெறி குன்றாப் பண்பிற் றுறவின ருந்தோற் றஞ்சத் தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி தமிழினி தென்காற் கன்றிற் றிரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச் சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும் தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
27
திருச்செந்தூர் அளக பாரமலைந்து
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான
அளக பாரம லைந்துகு லைந்திட வதனம் வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகம்வி ளைந்துத ளைந்திட ...... அணைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து அதர பானம ருந்திம ருங்கிற ...... முலைமேல்வீழ்ந் துளமும் வேறுப டும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின்மு யங்குதல் ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத் துருகு ஞானப ரம்பர தந்திர அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே இளகி டாவளர் சந்தன குங்கும களப பூரண கொங்கைந லம்புனை இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும் இனது றாதெதிர் இந்திரன் அண்டரும் ஹரஹ ராசிவ சங்கர சங்கர எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன் மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
28
திருச்செந்தூர் அறிவழிய மயல்பெருக
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
அனல்-அவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ உறவும்-அழ
அழலினிகர் மறலியெனை ...... அழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர்
திருவடியில் அணுகவர ...... அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவன்-அக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை அவன்-இவர்கள் அலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரம்-இலகு பரமன்-உமை இருவிழியும்
மகிழமடிம் இசைவளரும் ...... இளையோனே
மதலைதவ ழும்-உததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=OCdcJicZwhc
Add (additional) Audio/Video Link
Back to Top
29
திருச்செந்தூர் அனிச்சம் கார்முகம்
தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன ...... தனதான
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா வினைச்சண் டாளனை வீணணை நீணிதி தனைக்கண் டானவ மானநிர் மூடனை விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே விகற்பங் கூறிடு மோகவி காரனை அறத்தின் பாலொழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ முனைச்சங் கோலிடு நீலம கோததி அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி திரைக்கங் காநதி தாதகி கூவிள முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே தினைச்செங் கானக வேடுவ ரானவர் திகைத்தந் தோவென வேகணி யாகிய திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா சிறக்குந் தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
30
திருச்செந்தூர் அனைவரும் மருண்டு
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த ...... தனதான
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
31
திருச்செந்தூர் இயலிசையில் உசித
தனதனன தனன தந்தத் ...... தனதான தனதனன தனன தந்தத் ...... தனதான வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல் வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=PrbdiNsU-UE
Add (additional) Audio/Video Link
Back to Top
32
திருச்செந்தூர் இருகுழை யெறிந்த
தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன ...... தனதான
இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட இணைசிலை நெரிந்தெ ழுந்திட ...... அணைமீதே இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட இதழமு தருந்த சிங்கியின் ...... மனமாய முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ் முலைமுக டுகொண்டெ ழுந்தொறு ...... முருகார முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு முகடியு நலம்பி றந்திட ...... அருள்வாயே எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு மிதழியொ டணிந்த சங்கரர் ...... களிகூரும் இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக ளணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம் அலைபொரு தசெந்தில் தங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
33
திருச்செந்தூர் இருள்விரி குழலை
தனதன தனன தனத்தத் தாத்தன தனதன தனன தனத்தத் தாத்தன தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவு மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும் விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே வனைமனை புகுதி லடித்துப் போக்கவு மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ குருமணி வயிர மிழித்துக் கோட்டிய கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநீரூர் குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே முளையிள மதியை யெடுத்துச் சாத்திய சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
34
திருச்செந்தூர் உததியறல் மொண்டு
தனதனன தந்த தானதன தனதனன தந்த தானதன தனதனன தந்த தானதன ...... தந்ததான
உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் மணவறைபு குந்த நான்முகனும் எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல் இருவிழிது யின்ற நாரணனும் உமைமருவு சந்த்ர சேகரனும் இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும் முதல்வசுக மைந்த பீடிகையில் அகிலசக அண்ட நாயகிதன் மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே முளைமுருகு சங்கு வீசியலை முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
35
திருச்செந்தூர் உருக்கம் பேசிய
தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன தனத்தந் தானன தானன தானன ...... தனதான
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே உரைக்கும் வீரிகள் கோளர வாமென வுடற்றுந் தாதியர் காசள வேமனம் உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ அருக்கன் போலொளி வீசிய மாமுடி யனைத்துந் தானழ காய்நல மேதர அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண வடிப்பந் தானென வேயெனை நாடொறும் அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய் இருக்குங் காரண மீறிய வேதமும் இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள் இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி இலக்கந் தானென வேதொழ வேமகிழ் விருப்பங் கூர்தரு மாதியு மாயுல கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா திருக்குந் தாபதர் வேதிய ராதியர் துதிக்குந் தாளுடை நாயக னாகிய செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ் திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
37
திருச்செந்தூர் ஓராது ஒன்றை
தானா தந்தத் தானா தந்தத் தானா தந்தத் ...... தனதானா
ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் ...... டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் ...... டுழல்மாதர் கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் ...... குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் ...... கருள்தாராய் தோரா வென்றிப் போரா மன்றற் றோளா குன்றைத் ...... தொளையாடீ சூதா யெண்டிக் கேயா வஞ்சச் சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச் சேவே றெந்தைக் ...... கினியோனே தேனே யன்பர்க் கேயா மின்சொற் சேயே செந்திற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
38
திருச்செந்தூர் கட்டழகு விட்டு
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத் தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
39
திருச்செந்தூர் கண்டுமொழி
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த ...... தனதான
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய் வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
40
திருச்செந்தூர் கமல மாதுடன்
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ ணாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே அறியு மாறுபெ றும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய் குமரி காளிப யங்கரி சங்கரி கவுரி நீலிப ரம்பரை அம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி குறைவி லாள்உமை மந்தரி அந்தரி வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன் மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி அணிக ஜானன விம்பனொர் அம்புலி மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
41
திருச்செந்தூர் கரிக்கொம்பம்
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கரிக்கொம்பந் தனித்தங்கங் குடத்தின்பந் தனத்தின்கண் கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங் களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச் சரக்குஞ்சம் புடைக்கும்பொன் றுகிற்றந்தந் தரிக்குந்தன் சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர் சலித்தும்பின் சிரித்துங்கொண் டழைத்துஞ்சண் பசப்பும்பெண் தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ் செழுத்தின்பங் களித்துண்பண் சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத் துவைத்தும்பந் தடித்துஞ்சங் கொலித்துங்குன் றிடித்தும்பண் சுகித்துங்கண் களிப்புங்கொண் ...... டிடும்வேலா சிரப்பண்புங் கரப்பண்புங் கடப்பந்தொங் கலிற்பண்புஞ் சிவப்பண்புந் தவப்பண்புந் ...... தருவோனே தினைத்தொந்தங் குறப்பெண்பண் சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ் செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
42
திருச்செந்தூர் கருப்பம் தங்கு
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கருப்பந்தங் கிரத்தம்பொங் கரைப்புண்கொண் டுருக்கும்பெண் களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந் துவக்குண்டும் பிணக்குண்டுங் கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ...... தடுமாறிச் செருத்தண்டந் தரித்தண்டம் புகத்தண்டந் தகற்கென்றுந் திகைத்தந்திண் செகத்தஞ்சுங் ...... கொடுமாயும் தியக்கங்கண் டுயக்கொண்டென் பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ் சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே அருக்கன்சஞ் சரிக்குந்தெண் டிரைக்கண்சென் றரக்கன்பண் பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா அணிச்சங்கங் கொழிக்குந்தண் டலைப்பண்பெண் டிசைக்குங்கொந் தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா புரக்குஞ்சங் கரிக்குஞ்சங் கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம் புதுக்குங்கங் கையட்குந்தஞ் ...... சுதனானாய் புனைக்குன்றந் திளைக்குஞ்செந் தினைப்பைம்பொன் குறக்கொம்பின் புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
43
திருச்செந்தூர் களபம் ஒழுகிய
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர் கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் ...... எவரோடுங் கலகம் இடுகயல் எறிகுழை விரகியர் பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப் பிளவு பெறிலதி லளவள வொழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர் பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர் பெருமை யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே அளையில் உறைபுலி பெறுமக வயிறரு பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள் வசவ னொடுபுலி முலையுண மலையுடன் ...... உருகாநீள் அடவி தனிலுள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர ...... விரல்சேரேழ் தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய இசைகள் பலபல தொனிதரு கருமுகில் சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே துணைவ குணதர சரவண பவநம முருக குருபர வளரறு முககுக துறையில் அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
44
திருச்செந்தூர் கனங்கள் கொண்ட
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான
கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப் பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப் புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
45
திருச்செந்தூர் கன்றிலுறு மானை
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு ...... முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு ...... மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாத ...... ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை ...... யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேச ...... குருநாதா மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி ...... புடைசூழ மந்திநட மாடு செந்தினகர் மேவு மைந்தஅம ரேசர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
46
திருச்செந்தூர் காலனார் வெங்கொடும்
தானனா தந்தனம் தானனா தந்தனம் தானனா தந்தனம் ...... தனதான
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் ...... கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ் சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும் தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும் ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந் தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும் ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந் தாதிமா யன்றனன் ...... மருகோனே சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ் சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந் தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
47
திருச்செந்தூர் குகர மேவுமெய்
தனன தானனத் தனதன தனனாத் தந்தத் தந்தத் ...... தனதான
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் கும்பிட் டுந்தித் ...... தடமூழ்கிக் குமுத வாயின்முற் றமுதினை நுகராக் கொண்டற் கொண்டைக் ...... குழலாரோ டகரு தூளிகர்ப் புரதன இருகோட் டன்புற் றின்பக் ...... கடலூடே அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த் தம்பொற் றண்டைக் ...... கழல்தாராய் ககன கோளகைக் கணவிரு மளவாக் கங்கைத் துங்கப் ...... புனலாடும் கமல வாதனற் களவிட முடியாக் கம்பர்க் கொன்றைப் ...... புகல்வோனே சிகர கோபுரத் தினுமதி ளினுமேற் செம்பொற் கம்பத் ...... தளமீதும் தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச் செந்திற் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
48
திருச்செந்தூர் குடர்நிண மென்பு
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தானாந்தனனா
குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல் குலவு குரம்பை முருடு சுமந்து குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் ...... தோடோய்ந் தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய் தடவியல் செந்தில் இறையவ நண்பு தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே சரவண கந்த முருகக டம்ப தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே சுடர்படர் குன்று தொளைபட அண்டர் தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா துரிதப தங்க இரதப்ர சண்ட சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே.
Add (additional) Audio/Video Link
Back to Top
49
திருச்செந்தூர் குழைக்கும் சந்தன
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
குழைக்குஞ்சந் தனச்செங்குங் குமத்தின்சந் தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் றுரைக்குஞ்செங் கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே உழைக்குஞ்சங் கடத்துன்பன் சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும் ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண் டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய் தழைக்குங்கொன் றையைச்செம்பொன் சடைக்கண்டங் கியைத்தங்குந் தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம் பரத்தின்பங் கயத்தின்சஞ் சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே கழைக்குங்குஞ் சரக்கொம்புங் கலைக்கொம்புங் கதித்தென்றுங் கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே கறுக்குங்கொண் டலிற்பொங்குங் கடற்சங்கங் கொழிக்குஞ்செந் திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
50
திருச்செந்தூர் கொங்கைகள்
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள் கொண்டலைய டைந்தகுழல் ...... வண்டுபாடக் கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள் கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும் வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல் விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய் வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது மின்சரண பைங்கழலொ ...... டண்டஆளாய் சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை தந்தனத னந்தவென ...... வந்தசூரர் சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
51
திருச்செந்தூர் கொங்கைப் பணை
தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் ...... தனதானா
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் ...... கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் சந்திப் பவரைச் ...... சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற் சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே அங்கப் படைவிட் டன்றைப் படுகைக் கந்திக் கடலிற் ...... கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் சென்றுற் றவர்தற் ...... பொருளானாய் சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற் செந்திற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
52
திருச்செந்தூர் கொடியனைய இடை
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங் குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன் குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன் குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங் குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல் விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும் வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும் மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ...... செஞ்செநீடும் வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென் றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன் விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் ...... தன்புறாதோ படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந் துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம் பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ...... சிந்தும்வேலா படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன் பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும் பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் ...... கங்கைமான்வாழ் சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந் தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண் சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ...... பொங்கிநீடும் சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின் றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந் தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
53
திருச்செந்தூர் கொம்பனையார்
தந்தன தானான தானன தந்தன தானான தானன தந்தன தானான தானன ...... தனதான
கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண ...... நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே உம்பர்கள் ஸ்வாமிந மோநம எம்பெரு மானேந மோநம ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும் உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண் டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர என்றுமு ளானேம நோகர ...... வயலூரா இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
54
திருச்செந்தூர் கொலை மதகரி
தனதன தனதன தனதன தன தந்தத் ...... தனதானா
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் ...... தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் ...... றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி நின்றுற் ...... றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுற நின்பற் ...... றடைவேனோ சிலையென வடமலை யுடையவர் அருளிய செஞ்சொற் ...... சிறுபாலா திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த செந்திற் ...... பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி ரும்பிப் ...... புணர்வோனே விருதணி மரகத மயில்வரு குமரவி டங்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
55
திருச்செந்தூர் சங்குபோல் மென்
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் ...... தனதான
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற் கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத் தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத் துண்டுமே லண்டருக் ...... கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக் குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத் தின்கணா டுந்திறற் ...... கதிராழித் திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச் செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
56
திருச்செந்தூர் சங்கை தான் ஒன்று
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா தந்தனா ...... தந்ததான
சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா ...... ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா ...... நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் வம்பிலே ...... துன்புறாமே வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே வந்துநீ ...... யன்பிலாள்வாய் கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே ...... விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா கண்டலே ...... சன்சொல்வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்றுமோ ...... தும்ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள் செந்தில்வாழ் ...... தம்பிரானே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=_X9sfCtFWMg
Add (additional) Audio/Video Link
Back to Top
57
திருச்செந்தூர் சத்தம் மிகு ஏழு
தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான ...... தனதான
சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்சீறு தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ரீடநிகர் செப்பான ...... தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது சித்தஅநு ராககல விக்கார துட்டஅசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவநி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
58
திருச்செந்தூர் சந்தன சவ்வாது
தந்ததன தானதன தத்தான தந்ததன தானதன தத்தான தந்ததன தானதன தத்தான ...... தனதான
சந்தனச வாதுநிறை கற்பூர குங்குமப டீரவிரை கத்தூரி தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாம வம்புதுகி லாரவயி ரக்கோவை தங்கியக டோரதர வித்தார ...... பரிதான மந்தரம தானதன மிக்காசை கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வை அம்பிலுளம் வாடுமறி வற்றேனை வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார சம்ப்ரமம யூரதுர கக்கார என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின் இன்பஅநு போகசர சக்கார வந்தஅசு ரேசர்கல கக்கார எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின் செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார குன்றெறியும் வேலின்வலி மைக்கார செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும் திங்கள்முடி நாதர்சம யக்கார மந்த்ரவுப தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
59
திருச்செந்தூர் சேமக் கோமள
தானத் தானன தானத் தானன தானத் தானன ...... தந்ததான
சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும ...... நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக ...... அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி ...... கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும ...... தென்கொலோதான் நேமிச் சூரொடு மேருத் தூளெழ நீளக் காளபு ...... யங்ககால நீலக் ரீபக லாபத் தேர்விடு நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ லோகத் தேதரு ...... மங்கைபாலா யோகத் தாறுப தேசத் தேசிக வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
60
திருச்செந்தூர் தகரநறை
தனதனன தாந்த தந்தத் தனதனன தாந்த தந்தத் தனதனன தாந்த தந்தத் ...... தனதான
தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர் புநிதமிலி மாந்தர் தங்கட் புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான தனனதன தாந்த னந்தத் தெனநடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா திசையசுரர் மாண்ட ழுந்தத் திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா திகழ்வயிர மேந்து கொங்கைக் குறவனிதை காந்த சந்த்ரச் சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
61
திருச்செந்தூர் தண் தேனுண்டே
தந்தா தந்தா தந்தா தந்தா தந்தா தந்தத் ...... தனதான
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன் மண்டோ யந்தீ மென்கால் விண்டோய் வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய் வன்கா னம்போ யண்டா முன்பே வந்தே நின்பொற் ...... கழல்தாராய் கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர் கொன்றாய் வென்றிக் ...... குமரேசா கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர் குன்றா மன்றற் ...... கிரியோனே கண்டா கும்பா லுண்டா யண்டார் கண்டா கந்தப் ...... புயவேளே கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா கந்தா செந்திற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
62
திருச்செந்தூர் தண்டை அணி
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=NwYLE3VUneU
Add (additional) Audio/Video Link
Back to Top
63
திருச்செந்தூர் தந்த பசிதனை
தந்த தனதனன தந்த தனதனன தந்த தனதனன ...... தனதானா
தந்த பசிதனைய றிந்து முலையமுது தந்து முதுகுதட ...... வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ...... ரெனவேசார் மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு மந்த வரிசைமொழி ...... பகர்கேடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம யங்க வொருமகிட ...... மிசையேறி அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த மனிதனம தன்ப னெனமொழிய ...... வருவாயே சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு ...... மயில்வீரா திங்க ளரவுநதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lFCsXOj-I1c
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
65
திருச்செந்தூர் துன்பங்கொண்டு அங்கம்
தந்தந்தந் தந்தன தந்தன தந்தந்தந் தந்தன தந்தன தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான
துன்பங்கொண் டங்கமெ லிந்தற நொந்தன்பும் பண்பும றந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே இன்பந்தந் தும்பர்தொ ழும்பத கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே நின்பங்கொன் றுங்குற மின்சர ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய குன்றெங்குஞ் சங்குவ லம்புரி பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
66
திருச்செந்தூர் தெருப்புறத்து
தனத்த தத்தத் தனத்தனா தனத்த தத்தத் தனத்தனா தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா
தெருப்பு றத்துத் துவக்கியாய் முலைக்கு வட்டைக் குலுக்கியாய் சிரித்து ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள மெனவாழ் சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய் மனத்தை வைத்துக் கனத்தபேர் தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே இருப்ப கத்துத் தளத்துமேல் விளக்கெ டுத்துப் படுத்துமே லிருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு தணியா திதுக்க துக்குக் கடப்படா மெனக்கை கக்கக் கழற்றியே இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய் பொருப்பை யொக்கப் பணைத்ததோ ரிரட்டி பத்துப் புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே பொரப்பொ ருப்பிற் கதித்தபோ ரரக்கர் பட்டுப் பதைக்கவே புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு மருகா வரப்பை யெட்டிக் குதித்துமே லிடத்தில் வட்டத் தளத்திலே மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ் வயற்பு றத்துப் புவிக்குள்நீள் திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ் வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.
Add (additional) Audio/Video Link
Back to Top
67
திருச்செந்தூர் தொடரியமன்
தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் ...... தனதான
தொடரிய மன்போற் றுங்கப் படையைவ ளைந்தோட் டுந்துட் டரையிள குந்தோட் கொங்கைக் ...... கிடுமாயத் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத் துளைவிர குஞ்சூழ்த் தண்டித் துயர்விளை யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற் கிடைகொடு சென்றீட் டும்பொற் பணியரை மென்றேற் றங்கற் றனையென இன்றோட் டென்றற் ...... கிடுமாதர்க் கினிமையி லொன்றாய்ச் சென்றுட் படுமன முன்றாட் கன்புற் றியலிசை கொண்டேத் தென்றுட் ...... டருவாயே நெடிதுத வங்கூர்க் குஞ்சற் புருடரும் நைந்தேக் கம்பெற் றயர்வுற நின்றார்த் தங்கட் ...... கணையேவும் நிகரில்ம தன்தேர்க் குன்றற் றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச் சிறிதுநி னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன் திடமுறு அன்பாற் சிந்தைக் கறிவிட முஞ்சேர்த் தும்பர்க் கிடர்களை யும்போர்ச் செங்கைத் ...... திறல்வேலா தினவரி வண்டார்த் தின்புற் றிசைகொடு வந்தேத் திஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
68
திருச்செந்தூர் தொந்தி சரிய
தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன ...... தனதான
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=D3_VkUplt1A
Add (additional) Audio/Video Link
Back to Top
69
திருச்செந்தூர் தோலொடு மூடிய
தானன தானன தானன தந்தத் தானன தானன தானன தந்தத் தானன தானன தானன தந்தத் ...... தனதான
தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்தித் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ பாலன மீதும னான்முக செம்பொற் பாலனை மோதப ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப் பாவியி ராவண னார்தலை சிந்திச் சீரிய வீடணர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே சீலமு லாவிய நாரதர் வந்துற் றீதவள் வாழ்புன மாமென முந்தித் தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய் சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
70
திருச்செந்தூர் நாலும் ஐந்து வாசல்
தான தந்த தான தான - தான தந்த தான தான தான தந்த தான தான ...... தனதான
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
71
திருச்செந்தூர் நிதிக்குப் பிங்கலன்
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம் தனத்தத் தந்தனம் ...... தனதான
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண் டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங் கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
72
திருச்செந்தூர் நிலையாப் பொருளை
தனனாத் தனன தனனாத் தனன தனனாத் தனன ...... தனதான
நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது ...... மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய ...... நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல ...... மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற ...... முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை ...... விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித ...... வடிவாகும் அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
73
திருச்செந்தூர் நிறுக்குஞ் சூதன
தனத்தந் தானன தத்தன தத்தன தனத்தந் தானன தத்தன தத்தன தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள் கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ...... தடவாமேல் நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம் ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ...... யெனவோதி உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ் கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம் உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ...... அருள்வாயே கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ...... மருகோனே கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம் ...... அமர்வோனே சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ நடக்குந் தேரனி கப்படை கொண்டமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன் செருக்குஞ் சூரக லத்தையி டந்துயிர் குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள் திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
74
திருச்செந்தூர் பங்கம் மேவும் பிறப்பு
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் ...... தனதான
பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற் பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப் பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப் பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர் தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச் சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனை தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் தண்டவே தண்டமுட் ...... படவேதான் அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற் கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற் செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற் செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
75
திருச்செந்தூர் பஞ்ச பாதகம்
தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன ...... தனதான
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதல மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன் அஞ்ச வேவரு மவதர மதிலொரு தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும் மஞ்சு போல்வள ரளகமு மிளகிய ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும் மன்றல் வாரிச நயனமு மழகிய குன்ற வாணர்த மடமகள் தடமுலை மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு செண்டு மோதின ரரசரு ளதிபதி தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
76
திருச்செந்தூர் படர்புவியின் மீது
தனதனன தான தான தந்தன தனதனன தான தான தந்தன தனதனன தான தான தந்தன ...... தந்ததான
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ அடல்பொருது பூச லேவி ளைந்திட எதிர்பொரவொ ணாம லேக சங்கர அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித் தவனிவெகு கால மாய்வ ணங்கியு ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ உடல்தடியு மாழி தாவெ னம்புய மலர்கள்தச நூறு தாளி டும்பக லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக் குதவியம கேசர் பால இந்திரன் மகளைமண மேவி வீறு செந்திலி லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
77
திருச்செந்தூர் பதும இருசரண்
தனன தனதனந் தத்தத் தத்தத் தனன தனதனந் தத்தத் தத்தத் தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான
பதும இருசரண் கும்பிட் டின்பக் கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும் பரிய கரியகண் செம்பொற் கம்பிக் குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப் பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப் புதுமை நுதிநகம் பங்கத் தங்கத் தினிது வரையவெண் சந்தத் திந்துப் புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக் கறிவை யிழவிடும் பண்புத் துன்பப் பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ...... தவிரேனோ திதிதி ததததந் திந்திந் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தரரவென் றென்றொப் பின்றித் திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச் சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற் புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித் தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென் சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப் பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச் சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
78
திருச்செந்தூர் பரிமள களப
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார் படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=zoNaE_pXcuM
Add (additional) Audio/Video Link
Back to Top
79
திருச்செந்தூர் பருத்தந்த
தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான
பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ...... தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப் பெருத்தன்புற் றிளைத்தங்குத் துணிக்கும்புத் தியைச்சங்கித் ...... தறியேனைத் துணைச்செம்பொற் பதத்தின்புற் றெனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ...... படியாள்வாய் தருத்தங்கப் பொலத்தண்டத் தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத் தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன் சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக் கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ...... றருள்வோனே திருக்கஞ்சத் தனைக்கண்டித் துறக்கங்குட் டிவிட்டுஞ்சற் சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே செயத்துங்கக் கொடைத்துங்கத் திருத்தங்கித் தரிக்கும்பொற் றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
80
திருச்செந்தூர் பாத நூபுரம்
தான தானனந் தானனந் தானதன தான தானனந் தானனந் தானதன தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை யோதி மோகுலம் போலசம் போகமொடு பாடி பாளிதங் காருகம் பாவையிடை ...... வஞ்சிபோலப் பாகு பால்குடம் போலிரண் டானகுவ டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல் பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ...... ரந்தமீதே மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை ...... யன்புளார்போல் வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் ...... சந்தமாமோ தீத தோதகந் தீததிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச் சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும் வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர் சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு ...... மங்கிவேலா தாதை காதிலங் கோதுசிங் காரமுக மாறும் வாகுவுங் கூரசந் தானசுக தாரி மார்பலங் காரியென் பாவைவளி ...... யெங்கள்மாதைத் தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
81
திருச்செந்தூர் புகரப் புங்க
தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் ...... தனதான
புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் ...... பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் ...... திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் ...... தரவேணும் தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தடநற் கஞ்சத் ...... துறைவோனே தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் தையளித் தன்புற் ...... றருள்வோனே பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப் படியிற் சிந்தத் ...... தொடும்வேலா பவளத் துங்கப் புரிசைச் செந்திற் பதியிற் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
82
திருச்செந்தூர் பூரண வார கும்ப
தானன தான தந்த தானன தான தந்த தானன தான தந்த தானன தான தந்த தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான
பூரண வார கும்ப சீதப டீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று போதவ மேயி ழந்து போனது மான மென்ப ...... தறியாத பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக் காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக் காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற சூரனை மாள வென்று வானுல காளு மண்ட ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
83
திருச்செந்தூர் பெருக்கச் சஞ்சலித்து
தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே புரக்கைக்குன் பதத்தைத்தந் தெனக்குத்தொண் டுறப்பற்றும் புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும் கருத்திற்கண் படக்கிட்டும் புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே தருக்கிக்கண் களிக்கத்தெண் டனிட்டுத்தண் புனத்திற்செங் குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே சலிப்புற்றங் குரத்திற்சம் ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன் சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன் சிரத்தைச்சென் றறுத்துப்பந் தடித்துத்திண் குவட்டைக்கண் டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே சிறக்கற்கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
84
திருச்செந்தூர் மங்கை சிறுவர்
தந்த தனன தந்த தனன தந்த தனன ...... தனதான
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற ...... வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய ...... விழஆவி வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு ...... மொருபாச விஞ்சை விளைவு மன்று னடிமை வென்றி யடிகள் ...... தொழவாராய் சிங்க முழுவை தங்கு மடவி சென்று மறமி ...... னுடன்வாழ்வாய் சிந்தை மகிழ அன்பர் புகழு செந்தி லுறையு ...... முருகோனே எங்கு மிலகு திங்கள் கமல மென்று புகலு ...... முகமாதர் இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
85
திருச்செந்தூர் மஞ்செனுங் குழல்
தந்த தந்தன தந்தன தந்தன தந்த தந்தன தந்தன தந்தன தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க வெண்டர ளம்பதி யும்பலு மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர் கஞ்சு கங்குர லுங்கழை யம்புய கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங் கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை ...... நம்புவேனோ சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை சம்பு வின்கும ரன்புல வன்பொரு கந்த னென்றிடு துந்துமி யுந்துவ சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ...... விஞ்சவேகண் டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின் மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன் அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
86
திருச்செந்தூர் மனத்தின் பங்கு
தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா
மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங் கினத்தின்கண் கணக்கென்றென் றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே கனைக்குந்தண் கடற்சங்கங் கரத்தின்கண் தரித்தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும் கதித்தொண்பங் கயத்தன்பண் பனைத்துங்குன் றிடச்சந்தங் களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய் தினைக்குன்றந் தனிற்றங்குஞ் சிறுப்பெண்குங் குமக்கும்பந் திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே செழிக்குங்குண் டகழ்ச்சங்கங் கொழிக்குஞ்சந் தனத்தின்பைம் பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
87
திருச்செந்தூர் மனைகனக மைந்தர்
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதானா
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர் வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர் வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள் வரிசைதம ரென்று ...... வருமாயக் கனவுநிலை யின்ப மதனையென தென்று கருதிவிழி யின்ப ...... மடவார்தம் கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து கருவில்விழு கின்ற ...... தியல்போதான் நினையுநின தன்பர் பழவினைக ளைந்து நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில் நிலைபெறஇ ருந்த ...... முருகோனே புனைமலர்பு னைந்த புனமறம டந்தை புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள் பொடிபடந டந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
88
திருச்செந்தூர் மாய வாடை
தான தானன தந்தன தந்தன தான தானன தந்தன தந்தன தான தானன தந்தன தந்தன ...... தனதானா
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சீலைதி றந்தம ழுங்கிகள் வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள் ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள் வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும் நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள் காசி லாதவர் தங்களை யன்பற நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார் நீலி நாடக மும்பயில் மண்டைகள் பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள் நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ பாயு மாமத தந்திமு கம்பெறு மாதி பாரத மென்றபெ ருங்கதை பார மேருவி லன்றுவ ரைந்தவ ...... னிளையோனே பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன பார மீதில ணைந்துமு யங்கிய பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா சீய மாயுரு வங்கொடு வந்தசு ரேசன் மார்பையி டந்துப சுங்குடர் சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ...... மருகோனே தேனு லாவுக டம்பம ணிந்தகி ரீட சேகர சங்கரர் தந்தருள் தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
89
திருச்செந்தூர் மான்போல் கண்
தாந்தாத்தந் தான தந்தன தாந்தாத்தந் தான தந்தன தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான
மான்போற்கண் பார்வை பெற்றிடு மூஞ்சாற்பண் பாடு மக்களை வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ...... முலைமாதர் வாங்காத்திண் டாடு சித்திர நீங்காச்சங் கேத முக்கிய வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே ஏன்காற்பங் காக நற்புறு பூங்காற்கொங் காரு மெத்தையில் ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ...... முதல்நீதா ஈந்தாற்கன் றோர மிப்பென ஆன்பாற்றென் போல செப்பிடும் ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ கான்பாற்சந் தாடு பொற்கிரி தூம்பாற்பைந் தோளி கட்கடை காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன் காம்பேய்ப்பந் தாட விக்ரம வான்றோய்க்கெம் பீர விற்கணை காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே தீம்பாற்கும் பாகு சர்க்கரை காம்பாற்செந் தேற லொத்துரை தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ...... புதல்வோனே தீண்பார்க்குன் போத முற்றுற மாண்டார்க்கொண் டோது முக்கிய தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
90
திருச்செந்தூர் முகிலாமெனும்
தனனாதன தனனந் தாத்த தனனாதன தனனந் தாத்த தனனாதன தனனந் தாத்த ...... தனதான
முகிலாமெனு மளகங் காட்டி மதிபோலுயர் நுதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு மொழியாகிய மதுரங் காட்டி விழியாகிய கணையுங் காட்டி முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே வகையாமிள முலையுங் காட்டி யிடையாகிய கொடியுங் காட்டி வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான மணிசேர்கடி தடமுங் காட்டி மிகவேதொழி லதிகங் காட்டு மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனோ நகையால்மத னுருவந் தீத்த சிவனாரருள் சுதனென் றார்க்கு நலநேயரு ளமர்செந் தூர்க்கு ...... ளுறைவோனே நவமாமணி வடமும் பூத்த தனமாதெனு மிபமின் சேர்க்கை நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே அகமேவிய நிருதன் போர்க்கு வரவேசமர் புரியுந் தோற்ற மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி அயிராவத முதுகின் தோற்றி யடையாமென இனிதன் பேத்து மமரேசனை முழுதுங் காத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
91
திருச்செந்தூர் முந்துதமிழ் மாலை
தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான ...... தனதானா
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே திந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ் செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான சிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
92
திருச்செந்தூர் முலை முகம்
தனன தந்த தந்த தனன தந்த தந்த தனன தந்த தந்த ...... தனதான
முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு முறுவ லுஞ்சி வந்த ...... கனிவாயும் முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த முகிலு மின்ப சிங்கி ...... விழிவேலும் சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த திருமு கந்த தும்பு ...... குறுவேர்வும் தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று செயல ழிந்து ழன்று ...... திரிவேனோ மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதி றந்த செங்கை ...... வடிவேலா வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை மணிவ டம்பு தைந்த ...... புயவேளே அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க மலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற அரிய செந்தில் வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
93
திருச்செந்தூர் மூப்புற்றுச் செவி
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன தாத்தத் தத்தன ...... தனதான
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி ...... யிளையோடும் கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன் கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர் காப்பைக் கட்டவர் ...... குருநாதா காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல காப்புக் குத்திர ...... மொழிவோனே வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர ...... முருகோனே வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
94
திருச்செந்தூர் மூளும்வினை சேர
தானதன தான தானந்த தானந்த தானதன தான தானந்த தானந்த தானதன தான தானந்த தானந்த ...... தனதான
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட வாசியன லூடு போயொன்றி வானின்க ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல் நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல் பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
95
திருச்செந்தூர் வஞ்சங்கொண்டும்
தந்தந்தந் தந்தன தானன தந்தந்தந் தந்தன தானன தந்தந்தந் தந்தன தானன ...... தனதான
வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட மெங்கெங்கும் பொங்கம காபுநி தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
96
திருச்செந்தூர் வஞ்சத்துடன் ஒரு
தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன ...... தனதான
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு ...... வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென ...... வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை ...... தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து கன்றச் சிறையிடு ...... மயில்வீரா கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் கண்டத் தழகிய ...... திருமார்பா செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநக ...... ருறைவோனே செம்பொற் குலவட குன்றைக் கடலிடை சிந்தப் பொரவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
97
திருச்செந்தூர் வந்து வந்து முன்
தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான
வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம் கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய் சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு மந்த ரஞ்செ ழுங்க ரும்பு கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே தண்க டங்க டந்து சென்று பண்க டங்க டர்ந்த இன்சொல் திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே அந்த கன்க லங்க வந்த கந்த ரங்க லந்த சிந்து ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா அம்பு னம்பு குந்த நண்பர் சம்பு நன்பு ரந்த ரன்த ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0097_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
98
திருச்செந்தூர் வரியார் கருங்கண்
தனனா தனந்த ...... தனதான வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா
வரியார் கருங்கண் ...... மடமாதர் மகவா சைதொந்த ...... மதுவாகி இருபோ துநைந்து ...... மெலியாதே இருதா ளினன்பு ...... தருவாயே பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே பரமே சுரன்ற ...... னருள்பாலா அரிகே சவன்றன் ...... மருகோனே அலைவா யமர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
99
திருச்செந்தூர் விதி போலும் உந்து
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான
விதிபோலு முந்த விழியாலு மிந்து நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம் விரிவான சிந்தை யுருவாகி நொந்து விறல்வேறு சிந்தை ...... வினையாலே இதமாகி யின்ப மதுபோத வுண்டு இனிதாளு மென்று ...... மொழிமாதர் இருளாய துன்ப மருள்மாயை வந்து எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி வருமால முண்டு ...... விடையேறி மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் வருதேவ சம்பு ...... தருபாலா அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
100
திருச்செந்தூர் விந்ததில் ஊறி
தந்தன தான தந்தன தான தந்தன தான ...... தனதான
விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
101
திருச்செந்தூர் விறல்மாரன் ஐந்து
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Tx1voukrxUc
Add (additional) Audio/Video Link
Back to Top
102
திருச்செந்தூர் வெங்காளம் பாணம்
தந்தா தந்தா தந்தா தந்தா தந்தா தந்தத் ...... தனதான
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் ...... படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் ...... பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் ...... கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
103
திருச்செந்தூர் வெம் சரோருகமோ
தந்த தானன தானன தந்த தானன தானன தந்த தானன தானன ...... தனதான
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன் வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை வென்ற சாயக மோகரு ...... விளையோகண் தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர் பண்டு போலம ராவதி ...... குடியேறப் பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
104
பழநி அகல்வினை
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன ...... தனதான
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
105
பழநி அணிபட்டு அணுகி
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் ...... கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் ...... கணையாலும் பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற் பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும் பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப் பெறுதற் கருளைத் ...... தரவேணும் கணிநற் சொருபத் தையெடுத் துமலைக் கனியைக் கணியுற் ...... றிடுவோனே கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக் கருதிச் சிறைவைத் ...... திடுவோனே பணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே பவளத் தவளக் கனகப் புரிசைப் பழநிக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
106
பழநி அதல விதல
தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான
அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=iH9jbQ9nmXM
Add (additional) Audio/Video Link
Back to Top
107
பழநி அபகார நிந்தை
தனதான தந்தனத் ...... தனதான தனதான தந்தனத் ...... தனதான முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல் முருகா
அபகார நிந்தைபட் ...... டுழலாதே அறியாத வஞ்சரைக் ...... குறியாதே உபதேச மந்திரப் ...... பொருளாலே உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ இபமாமு கன்தனக் ...... கிளையோனே இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா திருவாவி னன்குடிப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=XavwwIVUH1E
Add (additional) Audio/Video Link
Back to Top
108
பழநி அரிசன வாடை
தனதன தானத் தான தனத்தத் தனதன தானத் தான தனத்தத் தனதன தானத் தான தனத்தத் ...... தனதான
அரிசன வாடைச் சேர்வை குளித்துப் பலவித கோலச் சேலை யுடுத்திட் டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே அமர்பொரு காதுக் கோலை திருத்தித் திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட் டகில்புழு காரச் சேறு தனத்திட் ...... டலர்வேளின் சுரதவி நோதப் பார்வை மையிட்டுத் தருணக லாரத் தோடை தரித்துத் தொழிலிடு தோளுக் கேற வரித்திட் ...... டிளைஞோர்மார் துறவினர் சோரச் சோர நகைத்துப் பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற் றுயரற வேபொற் பாத மெனக்குத் ...... தருவாயே கிரியலை வாரிச் சூர ரிரத்தப் புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக் கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே கெருவித கோலப் பார தனத்துக் குறமகள் பாதச் சேக ரசொர்க்கக் கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் ...... தருவோனே பரிமள நீபத் தாரொ டுவெட்சித் தொடைபுனை சேவற் கேத னதுத்திப் பணியகல் பீடத் தோகை மயிற்பொற் ...... பரியோனே பனிமல ரோடைச் சேலு களித்துக் ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப் பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
109
பழநி அருத்தி வாழ்வொடு
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம் இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம் பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
110
பழநி அவனிதனிலே
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=cd9Twq1SAEU
Add (additional) Audio/Video Link
Back to Top
111
பழநி அறமிலா நிலை
தனதனா தனதத்த தனதனா தனதத்த தனதனா தனதத்த ...... தனதான
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை யதிகமா வுதவிக்கை ...... வளையாலே உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும் மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
112
பழநி ஆதாளிகள் புரி
தானா தனதன தானா தனதன தானா தனதன ...... தனதான
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு ...... மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை யாலே மணமலி ...... குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகிய தோடா ரிருகுழை ...... யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர் சூழா வகையருள் ...... புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில் பூணா தெதிருற ...... மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறு போகா தெனஅடு ...... திறலோனே வேதா வுடனெடு மாலா னவனறி யாதா ரருளிய ...... குமரேசா வீரா புரிவரு கோவே பழநியுள் வேலா இமையவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
113
பழநி ஆலகாலம் என
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய தற்குற வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச் சால மாலைய ளித்தவர் கைப்பொருள் மாள வேசிலு கிட்டும ருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர் தாக போகமொ ழித்துஉ னக்கடி யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே வால மாமதி மத்தமெ ருக்கறு காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே மாய மானொட ரக்கரை வெற்றிகொள் வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே நாலு வேதந விற்றுமு றைப்பயில் வீணை நாதனு ரைத்தவ னத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர் சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
114
பழநி ஆறுமுகம் ஆறுமுகம்
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தந்ததான
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக ...... தம்பிரானே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=xl2oDn-VV8k
https://www.youtube.com/watch?v=d_qSQKbv_iQ
Add (additional) Audio/Video Link
Back to Top
115
பழநி இத் தாரணிக்குள்
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன தானத் தனந்ததன தானத் தனந்ததன தத்தா தனத்ததன தத்தா தனத்ததன தானத் தனந்ததன தானத் தனந்ததன தத்தா தனத்ததன தத்தா தனத்ததன தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில் ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள் தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர் தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாதத் தனந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ...... வருபெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
116
பழநி இரவி என
தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான
இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள் அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள் அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல் நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
117
பழநி இருகனக மாமேரு
தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த தனதனன தானான தானதன தந்த ...... தனதான
இருகனக மாமேரு வோகளப துங்க கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல் பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப் பிணியினக மேயான பாழுடலை நம்பி உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ கருணையுமை மாதேவி காரணிய நந்த சயனகளி கூராரி சோதரிபு ரந்த கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா பலமலர்க ளேதூவி யாரணந வின்று பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
118
பழநி இரு செப்பென
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் ...... திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத் தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித் தழுவிக் கடிசுற் ...... றணைமீதே சருவிச் சருவிக் குனகித் தனகித் தவமற் றுழலக் ...... கடவேனோ அரிபுத் திரசித் தஜனுக் கருமைக் குரியத் திருமைத் ...... துனவேளே அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற் றசுரக் கிளையைப் ...... பொருவோனே பரிவுற் றரனுக் கருணற் பொருளைப் பயனுற் றறியப் ...... பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
119
பழநி இலகிய களப
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான
இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகி தினைவன மதனிலு கந்த நாயகி திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
120
பழநி இலகுகனி மிஞ்சு
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதான
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு ...... மயலாலே நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால் நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த நினைவொடுமி றந்து ...... படலாமோ புலவினைய ளைந்து படுமணிக லந்து புதுமலர ணிந்த ...... கதிர்வேலா புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த பருமயில டைந்த ...... குகவீரா பணைபணிசி றந்த தரளமணி சிந்து பழநிமலை வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
121
பழநி உயிர்க் கூடு
தனத்தான தனதனன தனத்தான தனதனன தனத்தான தனதனன ...... தனதான
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில் ஒருக்காலு நெகிழ்வதிலை ...... யெனவேசூள் உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம துடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப் பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல படப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர் படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு பதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும் தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள் தரத்தாடல் புரியுமரி ...... மருகோனே தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல் தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது செயித்தோடி வருபழநி ...... யமர்வோனே தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
122
பழநி உலகபசு பாச
தனதனன தான தந்த ...... தனதான தனதனன தான தந்த ...... தனதான
உலகபசு பாச தொந்த ...... மதுவான உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே சரவணப வாமு குந்தன் ...... மருகோனே பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
123
பழநி ஒருபொழுதும் இருசரண
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
124
பழநி ஒருவரை ஒருவர்
தனதன தனன தான தனதன தனன தான தனதன தனன தான ...... தனதான
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர் ஒருகுண வழியு றாத ...... பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின் வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி மறைவரி னனைய கோல ...... மதுவாக மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாத ...... மருள்வாயே திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன் திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத திருநட மருளு நாத ...... னருள்பாலா சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
125
பழநி ஓடி ஓடி
தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன தான தான தனத்தன தத்தன ...... தனதான
ஓடி யோடி யழைத்துவ ரச்சில சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழு கோட மீது திமிர்த்தத னத்தினில் நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ நாடி வாயும் வயற்றலை யிற்புன லோடை மீதி னிலத்ததி வட்கையி னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங் கோடு லாவி யமுத்துநி ரைத்தவை காவுர் நாட தனிற்பழ நிப்பதி கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
126
பழநி கடலைச் சிறை
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற் ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ...... பவனூணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட் படுவித் துழையைக் கவனத் தடைசிக் கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ...... பினின்மேவி அடலைச் செயல்சத் தியையக் கினியிற் புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித் தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் ...... தசகோரம் அலறப் பணிரத் நமணிக் குழையைச் சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட் டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் ...... படுவேனோ சடிலத் தவனிட் டவிசிட் டகுலத் தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற் குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் ...... குருநாதா பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற் றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப் பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
127
பழநி கடலை பொரியவரை
தனன தனதனன தனன தனதனன தனன தனதனன ...... தனதான
கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
128
பழநி கதியை விலக்கு
தனன தனத்த தாதத தனன தனத்த தானன தனன தனத்த தானன ...... தனதான
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய கனதன மொத்த மேனியு ...... முகமாறும் அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும் அரவு பிடித்த தோகையு ...... முலகேழும் அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபிந வபத்ம பாதமு ...... மறவேனே இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு ரணமு கசுத்த வீரிய ...... குணமான இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர் பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
129
பழநி கரிய பெரிய
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய ...... திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி ...... யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி ...... யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் ...... தரவேணும் பரிய வரையி னரிவை மருவு பரம ரருளு ...... முருகோனே பழன முழவர் கொழுவி லெழுது பழைய பழநி ...... யமர்வோனே அரியு மயனும் வெருவ வுருவ அரிய கிரியை ...... யெறிவோனே அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
130
பழநி கரிய மேகமதோ
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான
கரிய மேகம தோஇரு ளோகுழல் அரிய பூரண மாமதி யோமுகம் கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ கமுகு தானிக ரோவளை யோகளம் அரிய மாமல ரோதுளி ரோகரம் கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ கருணை மால்துயி லாலிலை யோவயி றிடைய தீரொரு நூலது வோவென கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே திரிபு ராதிகள் நீறெழ வேமிக மதனை யேவிழி யால்விழ வேசெயும் சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே சினம தாய்வரு சூரர்கள் வேரற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே பரிவு சேர்கம லாலய சீதன மருவு வார்திரு மாலரி நாரணர் பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே பனக மாமணி தேவிக்ரு பாகரி குமர னேபதி னாலுல கோர்புகழ் பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
131
பழநி கரியிணை கோடென
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற் கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக் கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற் கலதியிட் டேயழைத் ...... தணையூடே செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற் றிறமளித் தேபொருட் ...... பறிமாதர் செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச் சிவபதத் தேபதித் ...... தருள்வாயே திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச் சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத் திருடர்கெட் டோடவிட் ...... டிடும்வேலா பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற் படியினிட் டேகுரக் ...... கினமாடும் பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப் பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
132
பழநி கருகி அகன்று
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
கருகிய கன்று வரிசெறி கண்கள் கயல்நிக ரென்று ...... துதிபேசிக் கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற கடிவிட முண்டு ...... பலநாளும் விரகுறு சண்ட வினையுடல் கொண்டு விதிவழி நின்று ...... தளராதே விரைகமழ் தொங்கல் மருவிய துங்க விதபத மென்று ...... பெறுவேனோ முருகக டம்ப குறமகள் பங்க முறையென அண்டர் ...... முறைபேச முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச முரணசுர் வென்ற ...... வடிவேலா பரிமள இன்ப மரகத துங்க பகடித வென்றி ...... மயில்வீரா பறிதலை குண்டர் கழுநிரை கண்டு பழநிய மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
133
பழநி கருப்புவிலில்
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்தனா தனதன ...... தனதான
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தணுகு கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர் கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் ...... மருளாமே ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி யுனைப்புகழு மெனைப்புவியில் ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்துபொருள் உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு படிக்கடலு மலைக்கவல பருத்ததோ கையில்வரு ...... முருகோனே பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல பணிப்பனிரு புயச்சயில பரக்கவே இயல்தெரி ...... வயலூரா திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளு மிசைப்பிரிய திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல் திருப்பழநி மலைக்குளுறை திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
134
பழநி கருவின் உருவாகி
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0134_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
135
பழநி கலக வாள்விழி
தனன தானன தானா தானா தனன தானன தானா தானா தனன தானன தானா தானா ...... தனதான
கலக வாள்விழி வேலோ சேலோ மதுர வாய்மொழி தேனோ பாலோ கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய் களமு நீள்கமு கோதோள் வேயோ உதர மானது மாலேர் பாயோ களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும் இழைய தோமலர் வேதா வானோ னெழுதி னானிலை யோவாய் பேசீ ரிதென மோனமி னாரே பாரீ ...... ரெனமாதர் இருகண் மாயையி லேமூழ் காதே யுனது காவிய நூலா ராய்வே னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும் அலைவி லாதுயர் வானோ ரானோர் நிலைமை யேகுறி வேலா சீலா அடியர் பாலரு ளீவாய் நீபார் ...... மணிமார்பா அழகு லாவுவி சாகா வாகா ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா ரயலு லாவிய சீலா கோலா ...... கலவீரா வலபை கேள்வர்பி னானாய் கானார் குறவர் மாதும ணாளா நாளார் வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே மதுர ஞானவி நோதா நாதா பழநி மேவுகு மாரா தீரா மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
136
பழநி கலகக் கயல்விழி
தனனத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன தனனத் தனதன தானன தானன ...... தனதான
கலகக் கயல்விழி போர்செய வேள்படை நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள் கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர் கலவித் தொழினல மேயினி தாமென மனமிப் படிதின மேயுழ லாவகை கருணைப் படியெனை யாளவு மேயருள் ...... தரவேணும் இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி குழையத் தழுவிய மேன்மையி னாலுயர் இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனே இதமிக் கருமறை வேதிய ரானவர் புகலத் தயவுட னேயருள் மேன்மைகள் இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே நிலவைச் சடைமிசை யேபுனை காரணர் செவியிற் பிரணவ மோதிய தேசிக நிருதர்க் கொருபகை யாளியு மாகிய ...... சுடர்வேலா நிமலக் குருபர ஆறிரு பார்வையும் அருளைத் தரஅடி யார்தமை நாடொறும் நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே பலவிற் கனிபணை மீறிய மாமர முருகிற் கனியுட னேநெடு வாளைகள் பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே பழனத் துழவர்க ளேரிட வேவிளை கழனிப் புரவுகள் போதவு மீறிய பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
137
பழநி கலவியி லிச்சி
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு கனதனம் விற்கச் சமைந்த மங்கையர் கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு ...... மின்பமூறிக் கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு மவசமி குத்துப் பொருந்தி யின்புறு கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதே குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல் குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க் குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர முகதல முத்துப் பொலிந்தி லங்கிட கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ இலகிய சித்ரப் புனந்த னிந்துறை குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ...... கந்தவேளே எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா பலவித நற்கற் படர்ந்த சுந்தரி பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப் பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகரென இச்சித் துகந்து கொண்டருள் பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
138
பழநி கலை கொடு
தனதனன தத்த தான தனதனன தத்த தான தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர் கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந் தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு குரகதமு கத்தர் சீய ...... முகவீரர் குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
139
பழநி களப முலையை
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த ...... தனதான
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
140
பழநி கறுத்த குழலணி
தனத்த தனதன தனதன தந்தத் தனத்த தனதன தனதன தந்தத் தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குழலணி மலரணி பொங்கப் பதித்த சிலைநுத லணிதில தம்பொற் கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக் குவட்டு முலையசை படஇடை யண்மைக் கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் ...... கொடிபோலச் சிறுத்த களமிகு மதமொழு கின்சொற் குயிற்க ளெனமட மயிலெகி னங்கட் டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் ...... சுடைமாதர் திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட் குவட்டி யவர்வலை யழலுறு பங்கத் திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் ...... தவிர்வேனோ பறித்த விழிதலை மழுவுழை செங்கைச் செழித்த சிவபர னிதழிநல் தும்பைப் படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக் கொதித்த அலைகட லெரிபட செம்பொற் படைக்கை மணியயில் விடுநட னங்கொட் ...... கதிர்வேலா தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற் குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச் சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் ...... றிருபாதா சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக் குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச் சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
141
பழநி கனக கும்பம்
தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
கனக கும்பமி ரண்டு நேர்மலை யெனநெ ருங்குகு ரும்பை மாமணி கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம் கடையில் நின்றுப ரந்து நாடொறு மிளகி விஞ்சியெ ழுந்த கோமள களப குங்கும கொங்கை யானையை ...... யின்பமாக அனைவ ருங்கொளு மென்று மேவிலை யிடும டந்தையர் தங்கள் தோதக மதின்ம ருண்டுது வண்ட வாசையில் ...... நைந்துபாயல் அவச மன்கொளு மின்ப சாகர முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி தருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோ தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந் தமர சஞ்சலி சஞ்ச லாவென முழவு டுண்டுடு டுண்டு டூவென தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும் பணிப தங்கய மெண்டி சாமுக கரிய டங்கலு மண்ட கோளகை பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை பவுரி கொண்டிட மண்டி யேவரு நிசிச ரன்கிளை கொன்ற வேலவ பழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
142
பழநி கனத்திறுகி
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
கனத்திறுகிப் பெருத்திளகிப் பணைத்துமணத் திதத்துமுகக் கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய் கவட்டையுமெத் தடக்கிமதர்த் தறக்கெருவித் திதத்திடுநற் கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந் தனத்தியர்கட் கிதத்துமிகுத் தனற்குண்மெழுக் கெனப்புவியிற் றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே சலித்தவெறித் துடக்குமனத் திடக்கனெனச் சிரிக்கமயற் சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ புனத்தின்மலைக் குறத்தியுயர்த் திருக்குதனக் குடத்தினறைப் புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா பொருப்பரசற் கிரக்கமொடுற் றறற்சடிலத் தவச்சிவனிற் புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா சினத்தெதிர்துட் டரக்கர்தமைத் திகைத்துவிழக் கணப்பொழுதிற் சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே செருக்கொடுநற் றவக்கமலத் தயற்குமரிக் கருட்புரிசைத் திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
143
பழநி கனமாய் எழுந்து
தனனா தனந்தனத் தனனா தனந்தனத் தனனா தனந்தனத் ...... தனதான
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற் புரமா ரணந்துளுத் ...... திடுமானார் கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப் பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட் டறவே யுலந்துசுக் ...... கதுபோலே வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப் பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப் புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட் டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச் சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத் திருவா வினன்குடிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
144
பழநி கார் அணிந்த
தான தந்ததனத் தான தந்ததனத் தான தந்ததனத் ...... தனதான
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்றுபொறுத் ...... தடியேனும் தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச் சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம் தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான் சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத் தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற் றால முண்டவருக் ...... குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் றாவி னன்குடியிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
145
பழநி குரம்பை மலசலம்
தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன ...... தனதான
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி லுறைந்த குயிலளி யொலிபர விடமயி லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள் அரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா செழும்ப வளவொளி நகைமுக மதிநகு சிறந்த குறமக ளிணைமுலை புதைபட செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
146
பழநி குருதி மலசலம்
தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான
குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே நிருதர் பொடிபட அமரர் பதிபெற நிசித அரவளை முடிகள் சிதறிட நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா நிறைய மலர்பொழி யமரர் முநிவரும் நிருப குருபர குமர சரணென நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே பருதி மதிகனல் விழிய சிவனிட மருவு மொருமலை யரையர் திருமகள் படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர விரவு குறமக ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
147
பழநி குழல் அடவி
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல் குமுத வதரமு ...... றுவலாரம் குழைம கரம்வளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை ...... கிரிசூது விழிக யலயில்ப கழிவ ருணிகரு விளைகு வளைவிட ...... மெனநாயேன் மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி வெறிது ளம்விதன ...... முறலாமோ கழல்ப ணியவினை கழல்ப ணியையணி கழல்ப ணியவருள் ...... மயில்வீரா கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா பழனி மலைவரு பழநி மலைதரு பழநி மலைமுரு ...... கவிசாகா பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
148
பழநி குழல்கள் சரிய
தனன தனன தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ கொலைகள் செயவெ ...... களவோடே குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள் குமுற வளையி ...... னொலிமீற இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும் இடையு மசைய ...... மயில்போலே இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் ...... உளர்வேனோ மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல் விஜய கிரிசொல் ...... அணிவோனே விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி ...... யருள்பாலா பழைய மறையின் முடிவி லகர மகர உகர படிவ வடிவ ...... முடையோனே பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ பழநி மருவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
149
பழநி குறித்தமணி
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
குறித்தமணிப் பணித்துகிலைத் திருத்தியுடுத் திருட்குழலைக் குலைத்துமுடித் திலைச்சுருளைப் ...... பிளவோடே குதட்டியதுப் புதட்டைமடித் தயிற்பயிலிட் டழைத்துமருட் கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே பொறித்ததனத் தணைத்துமனச் செருக்கினர்கைப் பொருட்கவரப் புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் ...... திடுமாதர் புலத்தலையிற் செலுத்துமனப் ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப் புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே பறித்ததலைத் திருட்டமணக் குருக்களசட் டுருக்களிடைப் பழுக்களுகக் கழுக்கள்புகத் ...... திருநீறு பரப்பியதத் திருப்பதிபுக் கனற்புனலிற் கனத்தசொலைப் பதித்தெழுதிப் புகட்டதிறற் ...... கவிராசா செறித்தசடைச் சசித்தரியத் தகப்பன்மதித் துகப்பனெனச் சிறக்கவெழுத் தருட்கருணைப் ...... பெருவாழ்வே திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத் தடுத்தடிமைப் படுத்தஅருட் டிருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
150
பழநி குன்றுங் குன்றும்
தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன ...... தனதான
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும் படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங் கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர் கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ் சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும் கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் கடியவர் எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந் தனதுரி மையதென நலமுட னணைபவர் கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன் பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும் என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண் டுனதிரு மலரடி பரவிட மனதினில் நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந் தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந் தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன்விடு மதிசய வினையுறு மலகையை வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ் செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர் நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண் துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந் தொளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடியென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென் றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ் சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென் றொலிபட நடமிடு பரனரு ளறுமுக உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும் விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங் கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில் அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும் படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட அன்பின் பண்பெங் குங்கண் டென்பின் அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங் கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங் கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
151
பழநி கொந்துத் தரு
தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர் திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகட கிடதா எனவே சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே வந்தித் தருள்தரு மிருசே வடியே சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே வெந்திப் புடன்வரு மவுணே சனையே துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய் வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய் கஞ்சத் தயனுட னமரே சனுமே விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய் தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே செங்கட் கருமுகில் மருகா குகனே சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ் இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
152
பழநி கோல குங்கும
தான தந்தன தத்தன தத்தம் தான தந்தன தத்தன தத்தம் தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான
கோல குங்கும கற்புர மெட்டொன் றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின் கோதை சங்கிலி யுற்றக ழுத்தும் பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங் கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர் பாலு டன்கனி சர்க்கரை சுத்தந் தேனெ னும்படி மெத்தரு சிக்கும் பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே பாத பங்கய முற்றிட வுட்கொண் டோது கின்றதி ருப்புகழ் நித்தம் பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே தால முன்புப டைத்தப்ர புச்சந் தேக மின்றிம திக்கவ திர்க்குஞ் சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச் சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ் சூர னும்பொடி பட்டிட யுத்தஞ் சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா ஆல முண்டக ழுத்தினி லக்குந் தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென் றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா ஆட கம்புனை பொற்குடம் வைக்குங் கோபு ரங்களி னுச்சியு டுத்தங் காவி னன்குடி வெற்பினி னிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
153
பழநி கோல மதிவதனம்
தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தனதான
கோல மதிவதனம் வேர்வு தரஅளக பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல் கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான கோக னகவுபய மேரு முலையசைய நூலி னிடைதுவள வீறு பறவைவகை கூற யினியகள மோல மிடவளைகள் ...... கரமீதே காலி னணிகனக நூபு ரமுமொலிக ளோல மிடஅதிக போக மதுமருவு காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார் காதல் புரியுமநு போக நதியினிடை வீழு கினுமடிமை மோச மறவுனது காமர் கழலிணைக ளான தொருசிறிது ...... மறவேனே ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக லாக வருமவுணர் சேர வுததியிடை நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி நாணம் வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா மேலை யமரர்தொழு மானை முகரரனை யோடி வலம்வருமுன் மோது திரைமகர வேலை யுலகைவல மாக வருதுரக ...... மயில்வீரா வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு முதல்வவயல் வாவி புடைமருவு வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
154
பழநி சகடத்திற் குழை
தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான
சகடத்திற் குழையிட் டெற்றிக் குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளகித்துக் குவளைக் கட்பொற் கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக் களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான தனதுத்திப் படிகப் பொற்பிட் டசையப்பெட் பசளைத் துப்புக் கொடியொத்திட் டிடையிற் பட்டைத் தகையிற்றொட் டுகளப் பச்சைச் சரணத்துக் கியலச் சுற்றிச் சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர் சுகமுற்றுக் கவலைப் பட்டுப் பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற் குளறிட்டுத் தடிதொட் டெற்றிப் பிணியுற்றுக் கசதிப் பட்டுச் சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத் தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற் சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட் டிறுகக்கட் டுயிரைப் பற்றிக் கொளுகப்பற் பலரைக் கட்டிக் கரம்வைத்துத் தலையிற் குத்திச் சுடுகட்டைச் சுடலைக் கட்டைக் கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி திமிலைக்கைத் துடிதட் டெக்கைப் பகடிட்டுப் பறையொத் தக்கட் டிகையெட்டுக் கடல்வற் றித்தித் தரவுக்கக் கிரியெட் டுத்தைத் தியருக்குச் சிரமிற் றுட்கச் சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா பகலைப்பற் சொரியத் தக்கற் பதிபுக்கட் டழலிட் டுத்திட் புரமட்கிக் கழைவிற் புட்பச் சரனைச்சுட் டயனைக் கொத்திப் பவுரிக்கொட் பரமர்க் குச்சற் குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே பவளப்பொற் கிரிதுத் திப்பொற் றனகொச்சைக் கிளிசொற் பற்றிப் பரிவுற்றுக் கமலப் புட்பத் திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற் படிகத்துப் பவளப் பச்சைப் பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
155
பழநி சிந்துர கூரம
தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில் செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள் மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே இந்திர நீலவ னத்திற் செம்புவி யண்டக டாகம ளித்திட் டண்டர்க ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி இன்கன தேரைந டத்திச் செங்குரு மண்டல நாடும ளித்துப் பஞ்சவ ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே சந்திர சூரியர் திக்கெட் டும்புக ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
156
பழநி சிவனார் மனங்குளிர
தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்ததன ...... தனதான
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=dnMmTa9h6N4
Add (additional) Audio/Video Link
Back to Top
157
பழநி சிறு பறையும்
தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல் திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம் வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும் நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில் மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
158
பழநி சீ உதிரம் எங்கும்
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா ஆயதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால் ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம் வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=_NPWyUYDlCw
Add (additional) Audio/Video Link
Back to Top
159
பழநி சீறல் அசடன்
தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தனதான
சீற லசடன்வினை காரன் முறைமையிலி தீமை புரிகபடி ...... பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுள கோள னறிவிலியு ...... னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடு கூடும் வகைமையருள் ...... புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருது வாகை யுளமவுலி ...... புனைவோனே மாக முகடதிர வீ சு சிறைமயிலை வாசி யெனவுடைய ...... முருகோனே வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு மொருபெருமை ...... யுடையோனே வீரை யுறைகுமர தீர தரபழநி வேல இமையவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
160
பழநி சுருதி முடி மோனம்
தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய் ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக முதவுமம லாநந்த சத்திகர மேவுணர வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில் சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
161
பழநி சுருளளக பார
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல் அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
162
பழநி ஞானங்கொள்
தானந்த தனன தான தானந்த தனன தான தானந்த தனன தான ...... தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய ...... வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய் தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி சீரங்க னெனது தாதை ...... ஒருமாது சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடந்த மயிலி லேறு ...... முருகோனே காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
163
பழநி தகர நறுமலர்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே சிகர குடையினி னிரைவர இசைதெரி சதுரன் விதுரனில் வருபவ னளையது திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன் திகிரி வளைகதை வசிதநு வுடையவ னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே பகர புகர்முக மதகரி யுழைதரு வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ் பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
164
பழநி தகைமைத் தனியில்
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத் தநுமுட் டவளைப் ...... பவனாலே தரளத் திரளிற் புரளக் கரளத் தமரத் திமிரக் ...... கடலாலே உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக் கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக் குனநற் பிணையற் ...... றரவேணும் திகைபத் துமுகக் கமலத் தனைமுற் சிறையிட் டபகைத் ...... திறல்வீரா திகழ்கற் பகமிட் டவனக் கனகத் திருவுக் குருகிக் ...... குழைமார்பா பகலக் கிரணப் பரணச் சடிலப் பரமற் கொருசொற் ...... பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
165
பழநி தமரும் அமரும்
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் ...... அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய ...... எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு ...... மிருபாதங் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு ...... தரவேணும் குமர சமர முருக பரம குலவு பழநி ...... மலையோனே கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி ...... மணவாளா அமர ரிடரு மவுண ருடலு மழிய அமர்செய் ...... தருள்வோனே அறமு நிறமு மயிலு மயிலு மழகு முடைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
166
பழநி தலைவலி மருத்தீடு
தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன தனதன தந்தான தானான தானதன ...... தனதான
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே தலமிசை யதற்கான பேரோடு கூறியிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் உளமது தரித்தேவி னாவோடு பாடியருள் வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் அலைகட லடைத்தேம காகோர ராவணனை மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே அறுகினை முடித்தோனை யாதார மானவனை மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய் பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில் வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர் பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=koMDP9QU8hQ
Add (additional) Audio/Video Link
Back to Top
167
பழநி திடமிலி சற்குணமிலி
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும் கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
168
பழநி திமிர உததி
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://www.kaumaram.com/audio_k/csaudio.html
Add (additional) Audio/Video Link
Back to Top
169
பழநி தோகைமயிலே கமல
தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன ...... தனதான
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ...... துணர்தேனே சூதனைய சீதஇள நீரான பாரமுலை மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன் ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை யாளமிட வாருமென வேமாத ரார்களுட னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி ...... யுனையோதேன் ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் ...... தருவாயே மாகமுக டோடகில பாதாள மேருவுட னேசுழல வாரியது வேதாழி யாவமரர் வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில் வாருமென வேயொருவர் நோகாம லாலவிட மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும் வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனே மேகநிக ரானகொடை மானாய காதிபதி வாரிகலி மாருதக ரோபாரி மாமதன வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும் வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
170
பழநி நாத விந்து
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=zOfUpn65nMs
Add (additional) Audio/Video Link
Back to Top
171
பழநி நிகமம் எனில்
தனதனன தந்த தத்த தானன தனதனன தந்த தத்த தானன தனதனன தந்த தத்த தானன ...... தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமர நிபிடமிட வந்து கைக்கு மோதிர நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய் முகமுமொரு சம்பு மிக்க நூல்களு முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில் முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி முறியுமவர் தங்கள் வித்தை தானிது முடியவுனை நின்று பத்தி யால்மிக மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே திகுதிகென மண்ட விட்ட தீயொரு செழியனுடல் சென்று பற்றி யாருகர் திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது சிறியகர பங்க யத்து நீறொரு தினையளவு சென்று பட்ட போதினில் தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற மகிதலம ணைந்த அத்த யோனியை வரைவறம ணந்து நித்த நீடருள் வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம் வரவரம னந்தி கைத்த பாவியை வழியடிமை கொண்டு மிக்க மாதவர் வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
172
பழநி நெற்றி வெயர்த்துளி
தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன ...... தனதான
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு குத்துமு லைக்குட மசைத்து வீதியி னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் ...... மொழியாலே நித்தம யக்கிகள் மணத்த பூமலர் மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ...... முறவாடி உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ...... ளுறவாமோ உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன் மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர ...... வருவாயே கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ் வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு கற்பனை நெற்பல அளித்த காரண ...... னருள்பாலா கற்பந கர்க்களி றளித்த மாதணை பொற்புய மைப்புயல் நிறத்த வானவர் கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும் நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர் நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே நட்டுவர் மத்தள முழக்க மாமென மைக்குல மெத்தவு முழக்க மேதரு நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
173
பழநி பகர்தற்கு அரிதான
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன ...... தனதான
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயிலப்பல காவி யங்களை ......யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன் தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள் அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
174
பழநி பஞ்ச பாதகன்
தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன ...... தனதான
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ...... முருகோனே மங்கை மோகசிங் காரரகு ராமரிட தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ் மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல் கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர் கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
175
பழநி பாரியான கொடை
தான தானதனத் தந்த தானன தான தானதனத் தந்த தானன தான தானதனத் தந்த தானன ...... தனதான
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் சீல ஞாலவிளக் கின்ப சீவக பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச் சீர தாகஎடுத் தொன்று மாகவி பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே சேய பாவகையைக் கொண்டு போயறி யாம லேகமரிற் சிந்து வார்சிலர் சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு வாயி னேர்படவுற் றன்று மூலமெ னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன் ஆதி நாராணனற் சங்க பாணிய னோது வார்களுளத் தன்பன் மாதவ னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே வீர சேவகவுத் தண்ட தேவகு மார ஆறிருபொற் செங்கை நாயக வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே வீறு காவிரியுட் கொண்ட சேகர னான சேவகனற் சிந்தை மேவிய வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
176
பழநி புடவிக்கு அணி
தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக் கடினத் தொடுசில சிறுநகை கொண்டற் புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக் கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும் பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப் பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக் குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப் புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா படியிற் பெருமித தகவுயர் செம்பொற் கிரியைத் தனிவலம் வரஅர னந்தப் பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக் கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற் பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
177
பழநி புடைசெப் பென
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட் பொருமிக் கலசத் ...... திணையாய புளகக் களபக் கெருவத் தனமெய்ப் புணரத் தலையிட் ...... டமரேசெய் அடைவிற் றினமுற் றவசப் படுமெற் கறிவிற் பதடிக் ...... கவமான அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற் றடிமைக் கொருசொற் ...... புகல்வாயே குடமொத் தகடக் கரடக் கலுழிக் குணமெய்க் களிறுக் ...... கிளையோனே குடிபுக் கிடமிட் டசுரப் படையைக் குறுகித் தகரப் ...... பொரும்வேலா படலைச் செறிநற் கதலிக் குலையிற் பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள் பழனக் கரையிற் கழைமுத் துகுநற் பழநிக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
178
பழநி பெரியதோர் கரி
தனதனா தனதன தந்த தானன தனதனா தனதன தந்த தானன தனதனா தனதன தந்த தானன ...... தனதான
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ வடிவமார் புளகித கும்ப மாமுலை பெருகியே யொளிசெறி தங்க வாரமு ...... மணியான பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ ...... வருமானார் உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை மனையிலே வினவியெ கொண்டு போகிய யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ...... மயலாலே உருகியே யுடலற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ நொந்த பாதக னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ...... தருள்வாயே அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ அடலதோ டமர்புரி கின்ற கூரிய ...... வடிவேலா அரகரா வெனமிக அன்பர் சூழவெ கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ அவனியோர் நொடிவரு கின்ற காரண ...... முருகோனே பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் ...... மருகோனே பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ வனசமா மலரினில் வண்டு லாவவெ பழநிமா மலைதனி லென்று மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
179
பழநி போதகம் தரு
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
180
பழநி மந்தரமதெனவே
தந்ததன தனனா தனந்த தந்ததன தனனா தனந்த தந்ததன தனனா தனந்த ...... தனதான
மந்தரம தெனவே சிறந்த கும்பமுலை தனிலே புனைந்த மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி மன்றுகமழ் தெருவீ திவந்து நின்றவரை விழியால் வளைந்து வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி எந்தளவு மினிதா கநம்பு தந்துபொருள் தனையே பிடுங்கி யின்பமருள் விலைமா தர்தங்கள் ...... மனைதேடி எஞ்சிமன முழலா மலுன்றன் அன்புடைமை மிகவே வழங்கி என்றனையு மினிதா ளஇன்று ...... வரவேணும் விந்தையெனு முமைமா துதந்த கந்தகுரு பரதே வவங்க மென்றவரை தனில்மே வுமெந்தை ...... புதல்வோனே மிஞ்சுமழ கினிலே சிறந்த மங்கைகுற மடமா துகொங்கை மென்கிரியி லிதமா யணைந்த ...... முருகோனே சிந்தைமகிழ் புலவோர் கள்வந்து வந்தனைசெய் சரணா ரவிந்த செந்தமிழி லுனையே வணங்கு ...... குருநாதர் தென்றல்வரை முநிநா தரன்று கும்பிடந லருளே பொழிந்த தென்பழநி மலைமே லுகந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
181
பழநி மருமலரினன்
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த ...... தனதான
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும் இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர் பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
182
பழநி மனக்கவலை ஏதும்
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும் மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள் வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?time_continue=7&v=h7rL3hDvpKw
Add (additional) Audio/Video Link
Back to Top
183
பழநி மலரணி கொண்டை
தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள் சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக ...... மதியாலே மருவுநி தம்பத் தடத்தி லேநிறை பரிமள கொங்கைக் குடத்தி லேமிக வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ...... வலையாலே நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில் வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர வசமுட னன்புற் றிணக்கி லேயொரு நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ...... மதிகேடாய் அலையநி னைந்துற் பநத்தி லேயநு தினமிகு மென்சொப் பனத்தி லேவர அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ ...... அருள்தாராய் பலபல பைம்பொற் பதக்க மாரமு மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே பதியினில் மங்கைக் கதித்த மாமலை யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர் பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
184
பழநி முகிலளகத்தில்
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ...... ரங்கமீதே முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல் விழியிணை செக்கச் சிவந்து குங்கும ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவி உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவி ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற முறுவளை யொக்கக் கலின்க லென்கவு முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ...... ழிந்திடாதோ செகமுழு தொக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ...... மங்கைநீடு திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள் திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதே பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர் பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும் பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள் பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
185
பழநி முகை முளரி
தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான ...... தனதான
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு முதிர்விலிள தனபார ...... மடவார்தோள் முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள் மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந் தகமகிழ விதமான நகையமுத மெனவூற லசடரக மெழவாகி ...... மிகவேயுண் டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி னமுதுபரு கிடஞான ...... மருளாயோ மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி வருபனிரு கரதீர ...... முருகோனே பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு பரமகுரு வெனநாடு ...... மிளையோனே பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
186
பழநி முதிரவுழையை
தனன தனன தனத்த தனன தனன தனத்த தனன தனன தனத்த ...... தனதான
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர் மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து சகடு மருத முதைத்த ...... தகவோடே தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
187
பழநி முத்துக்கு
தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே முக்யப்பச் சைப்பொட் டிட்டணி ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத் தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ் நச்சுக்கட் கற்புச் சொக்கியர் செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பல லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர் சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ மெத்தத்துக் கத்தைத் தித்தியி னிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கட்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே நித்யக்கற் பத்திற் சித்தர்க ளெட்டுத்திக் குக்குட் பட்டவர் நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும் நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
188
பழநி மூலம் கிளர் ஓர்
தானந்தன தானன தானன தானந்தன தானன தானன தானந்தன தானன தானன ...... தனதான
மூலங்கிள ரோருரு வாய்நடு நாலங்குல மேனடு வேரிடை மூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள் மூணும்பிர காசம தாயொரு சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப் பாலங்கிள ராறுசி காரமொ டாருஞ்சுட ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப் பாடுந்தொனி நாதமு நூபுர மாடுங்கழ லோசையி லேபரி வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே சூலங்கலை மான்மழு வோர்துடி வேதன்தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனே சூரன்கர மார்சிலை வாளணி தோளுந்தலை தூள்பட வேஅவர் சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே கானங்கலை மான்மக ளார்தமை நாணங்கெட வேயணை வேள்பிர காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
189
பழநி மூல மந்திரம்
தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன ...... தனதான
மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள் வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே பீலி வெந்துய ராலி வெந்தவ சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே ஆல முண்டவர் சோதி யங்கணர் பாக மொன்றிய வாலை யந்தரி ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா ஆர ணம்பயில் ஞான புங்கவ சேவ லங்கொடி யான பைங்கர ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
190
பழநி முருகுசெறி குழலவிழ
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு முறுவல்தர விரகமெழ ...... அநுராகம் முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக அகமகிழ இருகயல்கள் ...... குழையேற அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும் அலர்கமல மலரடியை ...... மறவேனே நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும் நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
191
பழநி முருகு செறிகுழல் முகில்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு முளரி முகையென இயலென மயிலென முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை முளரி மடலென இடைதுடி யதுவென அதர மிலவென அடியிணை மலரென மொழியு மமுதென முகமெழில் மதியென ...... மடமாதர் உருவ மினையன எனவரு முருவக வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய வுலையின் மெழுகென வுருகிய கசடனை ...... யொழியாமல் உவகை தருகலை பலவுணர் பிறவியி னுவரி தனிலுறு மவலனை யசடனை உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே அரவ மலிகடல் விடமமு துடனெழ அரிய யனுநரை யிபன்முத லனைவரும் அபய மிகவென அதையயி லிமையவ ...... னருள்பாலா அமர்செய் நிசிசர ருடலவை துணிபட அவனி யிடிபட அலைகடல் பொடிபட அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே பரவு புனமிசை யுறைதரு குறமகள் பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே பரம குருபர எனுமுரை பரசொடு பரவி யடியவர் துதிசெய மதிதவழ் பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
192
பழநி வசனமிக ஏற்றி
தனதனன தாத்த ...... தனதான தனதனன தாத்த ...... தனதான
வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
193
பழநி வஞ்சனை மிஞ்சி
தந்தன தந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன ...... தனதான
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை கண்டவர் வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள் தந்தக டம்பிக ளூற லுண்டிடு மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே சஞ்சல முந்தரு மோக லண்டிகள் இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள் சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர் கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள் தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட வென்றுகு ருந்தினி லேறி மங்கையர் கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலே கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு மின்பமி குந்திட வேய ணைந்தருள் குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய பண்புத ருந்திரு வாவி னன்குடி குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
194
பழநி வரதா மணி நீ
தனனா தனனா ...... தனதான தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... யெனவோரில் வருகா தெதுதா ...... னதில்வாரா திரதா திகளால் ...... நவலோக மிடவே கரியா ...... மிதிலேது சரதா மறையோ ...... தயன்மாலும் சகலா கமநூ ...... லறியாத பரதே வதையாள் ...... தருசேயே பழனா புரிவாழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
195
பழநி வனிதை உடல்
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய் புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த புதியமயி லேறு கந்த ...... வடிவேலா பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
196
பழநி வாதம் பித்தம்
தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன ...... தனதான
வாதம் பித்தமி டாவயி றீளைகள் சீதம் பற்சனி சூலைம கோதர மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித் தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய் தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி சேடன் சொக்கிட வேலைக டாகமெ லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா வேதன் பொற்சிர மீதுக டாவிந லீசன் சற்குரு வாயவர் காதினில் மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே வேஷங் கட்டிபி னேகிம காவளி மாலின் பித்துற வாகிவி ணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
197
பழநி வாரணந் தனை
தான தந்தன தானான தாதன தான தந்தன தானான தாதன தான தந்தன தானான தாதன ...... தனதான
வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழி யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார் தோத கந்தனை மாமாயை யேவடி வாக நின்றதெ னாஆய வோர்வது தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே கார ணந்தனை யோராநி சாசரர் தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா கார்வி டந்தனை யூணாக வானவர் வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே ஆர ணன்றனை வாதாடி யோருரை ஓது கின்றென வாராதெ னாவவ னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா ஆத வன்கதி ரோவாது லாவிய கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
198
பழநி விதம் இசைந்து
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான
விதமி சைந்தினி தாமலர் மாலைகள் குழல ணிந்தநு ராகமு மேசொலி விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக விரிகு ரும்பைக ளாமென வீறிய கனக சம்ப்ரம மேருவ தாமதி விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி இதமி சைந்தன மாமென வேயின நடைந டந்தனர் வீதியி லேவர எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே எனது சிந்தையும் வாடிவி டாவகை அருள்பு ரிந்தழ காகிய தாமரை இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே மதமி சைந்தெதி ரேபொரு சூரனை யுடலி ரண்டுகு றாய்விழ வேசின வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா மதுர இன்சொலி மாதுமை நாரணி கவுரி யம்பிகை யாமளை பார்வதி மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே பதமி சைந்தெழு லோகமு மேவலம் நொடியில் வந்திடு மாமயில் மீதொரு பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும் வடிவு கொண்டருள் காசியின் மீறிய பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
199
பழநி விரை மருவு
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த தனதனன தனன தந்த ...... தனதான
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து விழவதன மதிவி ளங்க ...... அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால் இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த இருளகல வுனது தண்டை ...... யணிபாதம் எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய் அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும் பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
200
பழநி வேய் இசைந்து
தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன ...... தனதான
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு மேயு லைந்தவ மேதி ரிந்துள மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின் வாடி நைந்தென தாவி வெம்பியெ பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப் போது கங்கையி னீர்சொ ரிந்திரு பாத பங்கய மேவ ணங்கியெ பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே தீயி சைந்தெழ வேயி லங்கையில் ராவ ணன்சிர மேய ரிந்தவர் சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே தேச மெங்கணு மேபு ரந்திடு சூர்ம டிந்திட வேலின் வென்றவ தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும் ஆல முண்டர னாரி றைஞ்சவொர் போத கந்தனை யேயு கந்தருள் ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
201
சுவாமிமலை அவாமருவு
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன தானந் ...... தனதானா
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் ...... றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதந் ...... தருவாயே உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறுங் ...... கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதாஎயினர் மானன் ...... புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
202
சுவாமிமலை ஆனனம் உகந்து
தானதன தந்த தானன தானதன தந்த தானன தானதன தந்த தானன ...... தனதான
ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில் மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன் வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள் ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர ராசதம றிந்த கோமள ...... வடிவோனே சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
203
சுவாமிமலை ஆனாத பிருதி
தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன ...... தந்ததான
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம் வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள் மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன் நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா கானாளு மெயினர்தற் சாதி வளர்குற மானொடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல் காணாது மமதைவிட் டாவி யுயவருள் பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
204
சுவாமிமலை இராவினிருள் போலும்
தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் ...... தனதான
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் ...... விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும் இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந் தடாதவிலை கூறும் ...... மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும் அநாதிமொழி ஞானந் ...... தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங் குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங் குடாவியிட வேலங் ...... கெறிவோனே துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந் தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
205
சுவாமிமலை இருவினை புனைந்து
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக ...... மலமூட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு ...... மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர் பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப் பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும் அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம் அடியென விளங்கி யாடு ...... நடராஜன் அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம் அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
206
சுவாமிமலை எந்தத் திகையினும்
தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான
எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே சந்தித் தரஹர சிவசிவ சரணென கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச் சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
207
சுவாமிமலை ஒருவரையும் ஒருவர்
தனதனன தனதனன தான தந்தனம் தனதனன தனதனன தான தந்தனம் தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங் கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ...... திடுவேனைக் கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன் செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென் கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந் தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய் திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன் தருணமழ விடையனட ராஜ னெங்கணுந் திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத சிவயநம நமசிவய கார ணன்சுரந் தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம் புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங் குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ...... திடுவோனே குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம் பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண் குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
208
சுவாமிமலை கடாவினிடை
தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் ...... தனதான
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் ...... சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் ...... படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் ...... கெறிவோனே தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ் சுவாசமது தானைம் ...... புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
209
சுவாமிமலை கடிமா மலர்க்குள்
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த ...... தனதான
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண் முடியான துற்று கந்து ...... பணிவோனே வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த ணருளே தழைத்து கந்து ...... வரவேணும் செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
210
சுவாமிமலை கதிரவனெ ழுந்து
தனதனன தந்த தான தனதனன தந்த தான தனதனன தந்த தான ...... தனதான
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய ...... மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினறந டந்து தேயும் ...... வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
211
சுவாமிமலை கறை படும் உடம்பு
தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதான
கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ரீகமுற் ...... றுணர்வேனோ சிறைதளைவி ளங்கு பேர்முடிப் புயலுடன டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித் திமிரமிகு சிந்து வாய்விடச் சிகரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும் பிறைமவுலி மைந்த கோவெனப் பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப் பெருகுமத கும்ப லாளிதக் கரியெனப்ர சண்ட வாரணப் பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
212
சுவாமிமலை காமியத் தழுந்தி
தானனத் தனந்த ...... தனதான தானனத் தனந்த ...... தனதான
காமியத் தழுந்தி ...... யிளையாதே காலர்கைப் படிந்து ...... மடியாதே ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி ஓவியத் திலந்த ...... மருள்வாயே தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
213
சுவாமிமலை குமரகுருபர முருக குகனே
தனதனன தனதனன தனனா தனத்ததன தனதனன தனதனன தனனா தனத்ததன தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர் குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர் தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும் தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள் முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள் தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள் வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில் தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய் தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
214
சுவாமிமலை குமர குருபர முருக சரவண
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான
குமர குருபர முருக சரவண குகசண் முககரி ...... பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு ...... மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின ...... முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர ...... லறியாயோ திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட ...... வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல் நதிகொள் சடையினர் ...... குருநாதா நளின குருமலை மருவி யமர்தரு நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
215
சுவாமிமலை கோமள வெற்பினை
தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர் யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர் காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
216
சுவாமிமலை சரண கமலாலயத்தில்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. Audio/Video Link(s)
http://www.skandagurunatha.org/works/thiruppugal/thiruppugal-0216-sarana-gama-la-layath-thai-snaganathan.mp3
Add (additional) Audio/Video Link
Back to Top
217
சுவாமிமலை சுத்திய நரப்புடன்
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச் சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர் கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
218
சுவாமிமலை செகமாயை உற்று
தனதான தத்த தனதான தத்த தனதான தத்த ...... தனதான
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
219
சுவாமிமலை சேலும் அயிலும்
தானதன தந்த தத்த தானதன தந்த தத்த தானதன தந்த தத்த ...... தனதான
சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண் மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச் சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம் யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும் ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
220
சுவாமிமலை தருவர் இவர்
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல் மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய் உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல் உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப முதவியெனை யாள அன்பு ...... தருவாயே குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள் குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக் குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
221
சுவாமிமலை தெருவினில் நடவா
தனதன தனனா தனனா தனந்த தத்தம் ...... தனதான
தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் ...... வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் ...... மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் ...... கணையாலே புளகித முலையா ளலையா மனஞ்ச லித்தும் ...... விடலாமோ ஒருமலை யிருகூ றெழவே யுரம்பு குத்தும் ...... வடிவேலா ஒளிவளர் திருவே ரகமே யுகந்து நிற்கும் ...... முருகோனே அருமறை தமிழ்நூ லடைவே தெரிந்து ரைக்கும் ...... புலவோனே அரியரி பிரமா தியர்கால் விலங்க விழ்க்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
222
சுவாமிமலை நாசர்தங் கடை
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
223
சுவாமிமலை நாவேறு பா மணத்த
தானான தான தத்த தானான தான தத்த தானான தான தத்த ...... தனதான
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று ...... வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த ...... நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி சீராக வேயு ரைத்த ...... குருநாதா தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீராகு காகு றத்தி ...... மணவாளா காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
224
சுவாமிமலை நிலவினிலே
தனதன தான தந்த தனதன தான தந்த தனதன தான தந்த ...... தனதான
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின் கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து கனியித ழேய ருந்தி ...... யநுராகக் கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய் உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும் உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
225
சுவாமிமலை நிறைமதி முகமெனும்
தனதன தனதன ...... தனதான தனதன தனதன ...... தனதான
நிறைமதி முகமெனு ...... மொளியாலே நெறிவிழி கணையெனு ...... நிகராலே உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ உனதிரு வடிவியினி ...... யருள்வாயே மறைபயி லரிதிரு ...... மருகோனே மருவல ரசுரர்கள் ...... குலகாலா குறமகள் தனைமண ...... மருள்வோனே குருமலை மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
226
சுவாமிமலை பரவரிதாகி
தனதன தானன, தனதன தானன தனதன தானன ...... தனதான
பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி ...... லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி ...... னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல் நிலையெழ வேயலை ...... வதுவாமோ அரவணை யார்குழை பரசிவ ஆரண அரனிட பாகம ...... துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் ...... புதல்வோனே குரவணி பூஷண சரவண தேசிக குககரு ணாநிதி ...... அமரேசா குறமக ளானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
227
சுவாமிமலை பலகாதல் பெற்றிட
தனதான தத்ததன தனதான தத்த தனதான தத்ததன ...... தனதான
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு பலனேபெ றப்பரவு ...... கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல் பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள் வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும் விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல் வடமேரெ னத்தரையில் ...... விழவேதான் வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு மருகாக டப்பமல ...... ரணிமார்பா சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ் செவியார வைத்தருளு ...... முருகோனே சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள் திருவேர கத்தில்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
229
சுவாமிமலை மகர கேதனத்தன்
தனன தான தத்த தனன தான தத்த தனன தான தத்த ...... தனதான
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் ...... மடமாதர் இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து ...... விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள ளிப்ப ...... தொருநாளே அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட அதிர வேந டத்து ...... மயில்வீரா அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க வினவ வோது வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
230
சுவாமிமலை மருவே செறித்த
தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த ...... தனதான
மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் ...... விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப் பெருகாத லுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்ச ...... மறவாதே பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்த குகனே குறத்தி ...... மணவாளா குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு ...... வடபாலார் திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர் சிறுவா கரிக்கு ...... மிளையோனே திருமால் தனக்கு மருகா வரக்கர் சிரமே துணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
231
சுவாமிமலை முறுகு காள
தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த தனன தான தனன தந்த ...... தனதான
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி முளரி வேரி முகைய டர்ந்த ...... முலைமீதே முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து முகமொ ராறு மிகவி ரும்பி ...... அயராதே அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை அடைய வாரி மிசைபொ ழிந்து ...... னடிபேணி அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி னடிமை யாகு முறைமை யொன்றை ...... அருள்வாயே தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு தரணி யேழும் வலம்வ ருந்திண் ...... மயில்வீரா மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து வலிய காவல் புனைய ணங்கின் ...... மணவாளா மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி வளர்சு வாமி மலைய மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
232
சுவாமிமலை வாதமொடு சூலை
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு ...... வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
233
சுவாமிமலை வாரம் உற்ற
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான
வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த மாப ணிக்கள் விந்தை ...... யதுவான ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த சூத னுக்கி சைந்த ...... மருகோனே ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று தானி றைக்க வந்த ...... தொருசாலி யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு மேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
234
சுவாமிமலை வார்குழலை
தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான
வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ...... துண்டக்ரீவ வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பைமாதர் காருறும் வித்திடை யிற்கத லித்தொடை சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... யொண்குலாவக் கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர் காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ...... சந்தமாமோ சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ...... சங்கமாகச் சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ...... செங்கைவேலா ஏரணி நற்குழ லைக்கக னச்சசி மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத வேடமு தச்சொரு பத்தகு றத்திம ...... ணங்கொள்வோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
235
சுவாமிமலை வார்குழல் விரித்து
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான
வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச் சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச் சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
236
சுவாமிமலை விடமும் வடிவேலும்
தனதனன தான தனதன தந்தன தனதனன தான தனதன தந்தன தனதனன தான தனதன தந்தன ...... தனதான
விடமும்வடி வேலு மதனச ரங்களும் வடுவுநிக ரான மகரநெ டுங்குழை விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும் ம்ருகமதப டீர பரிமள குங்கும மணியுமிள நீரும் வடகுல குன்றமும் வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட மலர்சொருகு கேச பரமுமி லங்கிய நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம் நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ வடிவுடைய மானு மிகல்கர னுந்திக ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில் வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும் மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன் வகையிரவி போலு மணியும லங்க்ருத மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும் அடைவலமு மாள விடுசர அம்புடை தசரதகு மார ரகுகுல புங்கவன் அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி லுலகைவல மாக நொடியினில் வந்துயர் அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
237
சுவாமிமலை விரித்த பைங்குழல்
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன தனத்த னந்தன தனதன வெனவொலி விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத் தரித்த தந்திரி மறிபுய மிசைபல பணிக்கி லங்கிய பரிமள குவடிணை தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர் சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ உரித்த வெங்கய மறியொடு புலிகலை தரித்த சங்கரர் மதிநதி சடையினர் ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல் குவட்டை யும்பொடி படசத முடிவுற வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா வரித்த ரந்துள வணிதிரு மருவிய வுரத்த பங்கயர் மரகத மழகிய வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு குறத்தி மென்புன மருவிய கிளிதனை மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
238
சுவாமிமலை விழியால் மருட்டி
தனதான தத்த தந்த தனதான தத்த தந்த தனதான தத்த தந்த ...... தனதான
விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு விரகான லத்த ழுந்த ...... நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
239
திருத்தணிகை அமைவுற்று அடைய
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
அமைவுற் றடையப் பசியுற் றவருக் கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத் தருள்தப் பிமதத் ...... தயராதே தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ் சரிரத் தினைநிற் குமெனக் கருதித் தளர்வுற் றொழியக் ...... கடவேனோ இமயத் துமயிற் கொருபக் கமளித் தவருக் கிசையப் ...... புகல்வோனே இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக் கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா சமயச் சிலுகிட் டவரைத் தவறித் தவமுற் றவருட் ...... புகநாடும் சடுபத் மமுகக் குகபுக் ககனத் தணியிற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
240
திருத்தணிகை அரகர சிவன் அரி
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண ...... பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு ...... மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி ...... களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர ...... வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர ...... முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=nWNCxEbyc1Q
https://www.youtube.com/watch?v=GoZXpb2c2pg
Add (additional) Audio/Video Link
Back to Top
241
திருத்தணிகை அருக்கி மெத்தென
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத் தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க் கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத் தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத் தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம் சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச் சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப் பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம் புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப் புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத் தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ் சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
242
திருத்தணிகை இருப்பவல் திருப்புகழ்
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன ...... தனதான
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந் தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல் களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக் கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் ...... தருசேயே புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0242_u.html#audio
https://www.youtube.com/watch?v=aoSRriluT28
Add (additional) Audio/Video Link
Back to Top
243
திருத்தணிகை இருமலு ரோக
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=xahVyoHSGXU
Add (additional) Audio/Video Link
Back to Top
244
திருத்தணிகை உடலி னூடு
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச் சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு துரிய வாகு லாதீத ...... சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே மடல றாத வாரீச அடவி சாடி மாறான வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி மடையை மோதி யாறூடு ...... தடமாகக் கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக் கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
245
திருத்தணிகை உடையவர்கள் ஏவர்
தனனதன தான தனனதன தான தனனதன தான ...... தனதான
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி யுளமகிழ ஆசு ...... கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான தெனவுரமு மான ...... மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி ...... முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசு நளினஇரு பாத ...... மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொ டாறு விடவரவு சூடு ...... மதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன் ...... வருவோனே தவமலரு நீல மலர்சுனைய நாதி தணிமலையு லாவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
246
திருத்தணிகை உய்யஞானத்து நெறி
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன ...... தனதான
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய வல்லமீ துற்பலச ...... யிலமேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு கையமால் வைத்ததிரு ...... மருகோனே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
247
திருத்தணிகை எத்தனை கலாதி
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் ...... தனதான
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங் கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல் பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம் பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும் பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர் திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச் செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின் செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
248
திருத்தணிகை எலுப்பு நாடிகள்
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர் இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம் கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர் கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா உலுத்த ராவண னைச்சிர மிற்றிட வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன் உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே வலிக்க வேதனை குட்டிந டித்தொரு செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்துள மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
249
திருத்தணிகை எனக்கென யாவும்
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான
எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் ...... பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் ...... குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண் பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் ...... புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் ...... முருகோனே தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0249_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
250
திருத்தணிகை எனை அடைந்த
தனன தந்த தத்த தனன தந்த தத்த தனன தந்த தத்த ...... தனதான
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த மதிம யங்கி விட்டு ...... மடியாதே மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
251
திருத்தணிகை ஏது புத்தி
தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன ...... தந்ததான
ஏது புத்திஐ யாஎ னக்கினி யாரை நத்திடு வேன வத்தினி லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படி யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப் பாதம் வைத்திடை யாதே ரித்தெனை தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில் யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ ஓத முற்றெழு பால்கொ தித்தது போல எட்டிகை நீசமுட்டரை யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே ஓத மொய்ச்சடை யாட வுற்றமர் மான்ம ழுக்கர மாட பொற்கழ லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே மாதி னைப்புன மீதி ருக்குமை வாள்வி ழிக்குற மாதி னைத்திரு மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ லார்வி யப்புற நீடு மெய்த்தவர் வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
252
திருத்தணிகை ஓலை இட்ட
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர ரூப மொத்தநி றத்திகள் விற்கணை யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள் ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும் மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி வார ழுத்துத னத்திகள் குத்திர மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர் மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ வேலை வற்றிட நற்கணை தொட்டலை மீத டைத்துத னிப்படை விட்டுற வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே மீத றுத்திநி லத்தில டித்துமெய் வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள் வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்துந கைக்கொடி சித்திர நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே நீற திட்டுநி னைப்பவர் புத்தியில் நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
253
திருத்தணிகை கச்சணி இளமுலை
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன ...... தனதான கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம் கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம்
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக் கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர் கட்செவி நிகரல்குல் ...... மடமாதர் இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக் கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய் கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை நச்சியெ திருடிய ...... குறையால்வீழ் குற்கிர வினியொடு நற்றிற வகையறி கொற்றவு வணமிசை ...... வருகேசன் அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில் அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை யப்பனெ யழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
254
திருத்தணிகை கடற்செகத் தடக்கி
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக் கடைக்கணிற் கொடுத்தழைத் ...... தியல்காமக் கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக் கரைத்துடுத் தபட்டவிழ்த் ...... தணைமீதே சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத் தமிட்டிருட் குழற்பிணித் ...... துகிரேகை சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத் தலத்தில்வைப் பவர்க்கிதப் ...... படுவேனோ இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித் தெழிற்றினைக் கிரிப்புறத் ...... துறைவேலா இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச் சிறைச்சியைப் பசித்திரைக் ...... கிசைகூவும் பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப் பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன் பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப் பெருக்குமெய்த் திருத்தணிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
255
திருத்தணிகை கரிக்குழல் விரித்தும்
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங் கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக் கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங் கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத் தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத் தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன் தலத்தினி லிருக்கும் ...... படிபாராய் புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண் பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின் புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந் தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
256
திருத்தணிகை கலை மடவார்தம்
தனதன தானம் தனதன தானம் தனதன தானம் ...... தனதான
கலைமட வார்தஞ் சிலையத னாலுங் கனவளை யாலுங் ...... கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங் கருதலை யாலுஞ் ...... சிலையாலுங் கொலைதரு காமன் பலகணை யாலுங் கொடியிடை யாள்நின் ...... றழியாதே குரவணி நீடும் புயமணி நீபங் குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் ...... தொழும்வேலா தினைவன மானுங் கநவன மானுஞ் செறிவுடன் மேவுந் ...... திருமார்பா தலமகள் மீதெண் புலவரு லாவுந் தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா தனியவர் கூருந் தனிகெட நாளுந் தனிமயி லேறும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
257
திருத்தணிகை கவடுற்ற சித்தர்
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத் ...... தனதான
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற் கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக் கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க் கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன் சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக் கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின் சரணப்ர சித்திசற் ...... றுணராரோ குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக் குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன் குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத் துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற் றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத் தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச் சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
258
திருத்தணிகை கனத்த அற
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங் கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற் கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத் திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால் எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத் தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும் பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப் பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப் படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச் செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத் திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
259
திருத்தணிகை கனைத்து அதிர்க்கும்
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
260
திருத்தணிகை கிரி உலாவிய
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு கபட நாடக விரகிக ளசடிகள் கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ...... விரகாலே க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள் முழுது நாறிக ளிதமொழி வசனிகள் கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் ...... பொருளாலே பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர் அதிக மாவொரு பொருள்தரு பவரொடு பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே பகழி போல்விடு வினைகவர் திருடிகள் தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை பகர மாமயில் மிசைவர நினைவது ...... மொருநாளே அரிய ராதிபர் மலரய னிமையவர் நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக ...... இளையோனே அரிய கானக முறைகுற மகளிட கணவ னாகிய அறிவுள விதரண அமரர் நாயக சரவண பவதிற ...... லுடையோனே தரும நீதியர் மறையுளர் பொறையுளர் சரிவு றாநிலை பெறுதவ முடையவர் தளர்வி லாமன முடையவ ரறிவினர் ...... பரராஜர் சகல லோகமு முடையவர் நினைபவர் பரவு தாமரை மலரடி யினிதுற தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
261
திருத்தணிகை கிறி மொழி
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக் கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க் கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும் அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற் றறவுநெக் கழிகருக் ...... கடலூடே அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற் றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலச் சமணரத் ...... தனைபேரும் பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப் புகலியிற் கவுணியப் ...... புலவோனே தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித் தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந் தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத் தணியினிற் சரவணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
262
திருத்தணிகை குயில் ஒன்று
தனனந் தனனத் தனனந் தனனத் தனனந் தனனத் ...... தனதான
குயிலொன் றுமொழிக் குயினின் றலையக் கொலையின் பமலர்க் ...... கணையாலே குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக் கொடிகொங் கையின்முத் ...... தனலாலே புயல்வந் தெறியக் கடனின் றலறப் பொருமங் கையருக் ...... கலராலே புயமொன் றமிகத் தளர்கின் றதனிப் புயம்வந் தணையக் ...... கிடையாதோ சயிலங் குலையத் தடமுந் தகரச் சமனின் றலையப் ...... பொரும்வீரா தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த் தனமொன் றுமணித் ...... திருமார்பா பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற் பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே பரமன் பணியப் பொருளன் றருளிற் பகர்செங் கழநிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
263
திருத்தணிகை குருவி என
தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான
குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர் கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல் மருவு புயத்திடை பணிக ளணப்பல கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன் வரிய பதத்தினி னருவி யிருப்பிடம் அமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம் வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா அரிய திரிப்புர மெரிய விழித்தவன் அயனை முடித்தலை யரியு மழுக்கையன் அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே அமண ருடற்கெட வசியி லழுத்திவி ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
264
திருத்தணிகை குலைத்து மயிர்
தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான
குலைத்து மயிர்க் கலைத்து வளைக் கழுத்து மணித் தனப்பு ரளக் குவித்த விழிக் கயற்சு ழலப் ...... பிறைபோலக் குனித்த நுதற் புரட்டி நகைத் துருக்கி மயற் கொளுத்தி யிணைக் குழைச்செ வியிற் றழைப்ப பொறித் ...... தனபாரப் பொலித்து மதத் தரித்த கரிக் குவட்டு முலைப் பளப்ப ளெனப் புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர் புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக் குலுக்கி லறப் பசப்பி மயற் புகட்டி தவத் தழிப்ப வருக் ...... குறவாமோ தலத்த நுவைக் குனித்தொ ருமுப் புரத்தை விழக் கொளுத்தி மழுத் தரித்து புலிக் கரித்து கிலைப் ...... பரமாகத் தரித்து தவச் சுரர்க்கண் முதற் பிழைக்க மிடற் றடக்கு விடச் சடைக்க டவுட் சிறக்க பொருட் ...... பகர்வோனே சிலுத்த சுரர்க் கெலித்து மிகக் கொளுத்தி மறைத் துதிக்க அதிற் செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா தினைப்பு னமிற் குறத்தி மகட் டனத்தின் மயற் குளித்து மகிழ்த் திருத்த ணியிற் றரித்த புகழ்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
265
திருத்தணிகை குவளைக் கணை
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக் குடையிட் டகுறைப் ...... பிறையாலே குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக் குயிலுக் குமினித் ...... தளராதே இவளைத் துவளக் கலவிக் குநயத் திறுகத் தழுவிப் ...... புயமீதெ இணையற் றழகிற் புனையக் கருணைக் கினிமைத் தொடையைத் ...... தரவேணும் கவளக் கரடக் கரியெட் டலறக் கனகக் கிரியைப் ...... பொரும்வேலா கருதிச் செயலைப் புயனுக் குருகிக் கலவிக் கணயத் ...... தெழுமார்பா பவளத் தரளத் திரளக் குவைவெற் பவையொப் புவயற் ...... புறமீதே பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப் பதியிற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
266
திருத்தணிகை கூந்தல் அவிழ்த்து
தாந்தன தத்தன தத்தன தத்தன தாந்தன தத்தன தத்தன தத்தன தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள் பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள் கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் ...... புயமீதே கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள் வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர் கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர் ...... பலநாளும் ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ ராந்துணை யற்றழு கைக்குர லிட்டவ ரீங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள் ...... பொருள்தீரில் ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர் பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட ...... லருள்வாயே காந்தள்ம லர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு வேந்துகு ரக்கர ணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுத னுத்தம சற்குணன் ...... மருகோனே காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே தேந்தினை வித்தின ருற்றிட வெற்றிலை வேங்கைம ரத்தெழி லைக்கொடு நிற்பவ தேன்சொலி யைப்புண ரப்புன முற்றுறை ...... குவைவானந் தீண்டுக ழைத்திர ளுற்றது துற்றிடு வேங்கைத னிற்குவ ளைச்சுனை சுற்றலர் சேர்ந்ததி ருத்தணி கைப்பதி வெற்புறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
267
திருத்தணிகை கூர்வேல் பழித்த
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை கோடா லழைத்துமல ...... ரணைமீதே கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை கோல்போல் சுழற்றியிடை ...... யுடைநாணக் கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு காதோ லையிற்றுவிழ ...... விளையாடுங் காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம கானூ ருறைக்கலக ...... மொழியாதோ வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை வேதா கமத்தொலிகள் ...... கடல்போல வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும் வேலா திருத்தணியி ...... லுறைவோனே மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில் மாபோ தகத்தையருள் ...... குருநாதா மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு மாலோ டணைத்துமகிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
268
திருத்தணிகை கொந்துவார் குரவடி
தந்து தானன தனதன தனதன தந்து தானன தனதன தனதன தந்து தானன தனதன தனதன ...... தனதான
கொந்து வார்குர வடியினு மடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா கொங்கி லேர்தரு பழநியி லறுமுக செந்தில் காவல தணிகையி லிணையிலி கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர் சந்தி யாதது தனதென வருமொரு சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச் சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய கிண்கி ணீமுக விதபத யுகமலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே சிந்து வாரமு மிதழியு மிளநவ சந்த்ர ரேகையு மரவமு மணிதரு செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே செண்ப காடவி யினுமித ணினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள் செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும் இந்து வாண்முக வனசமு ம்ருகமத குங்கு மாசல யுகளமு மதுரித இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம இந்த்ர கோபமு மரகத வடிவமு மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
269
திருத்தணிகை சினத்தவர் முடிக்கும்
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Wp9531hk6vM
Add (additional) Audio/Video Link
Back to Top
270
திருத்தணிகை சினத் திலத் தினை
தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல் செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல ...... வதுபோதா செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ ...... தளவேதோ மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை யளவிலை விதிகர ...... மொழியாமல் வகுத்த தெத்தனை மசகனை முருடனை மடைக்கு லத்தனை மதியழி விரகனை மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் ...... புரிவாயே தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு தமித்த மத்தள தமருக விருதொலி ...... கடல்போலச் சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை ...... பொரும்வேலா செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி திருத்த ணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
271
திருத்தணிகை சொரியும் முகிலை
தனன தனனத் தனன தனனத் தனன தனனத் ...... தனதான
சொரியு முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் ...... சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் சுமட ரருகுற் ...... றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் ...... கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச் சிகரி பகரப் ...... பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக் கடையில் விடமெத் ...... தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் ...... டனகானிற் குரிய குமரிக் கபய மெனநெக் குபய சரணத் ...... தினில்வீழா உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
272
திருத்தணிகை தாக்கு அமருக்கு
தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன ...... தனதான
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந் தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர் போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல் சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப் போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள் போற்றுத லற்றது ரோகியை மாமருள் பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப் போக்கிவி டக்கட னோஅடி யாரொடு போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் ...... புரிவாயே மூக்கறை மட்டைம காபல காரணி சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி மூத்தவ ரக்கனி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே வாச்சிய மத்தள பேரிகை போல்மறை வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
273
திருத்தணிகை திருட்டு நாரிகள்
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியி னித்தந டிப்பவர் சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில் இதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனு மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே சமப்ர வீணம தித்திடு புத்தியில் இரக்க மாய்வரு தற்பர சிற்பர சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே பெருக்க மோடுச ரித்திடு மச்சமு முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின் பிணித்த போதுவெ டித்துர சத்துளி கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
274
திருத்தணிகை துப் பார் அப்பு
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தனனத் ...... தனதான
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் சொற்பா வெளிமுக் ...... குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டே சுற்றா மதனப் ...... பிணிதோயும் இப்பா வக்கா யத்தா சைப்பா டெற்றே யுலகிற் ...... பிறவாதே எத்தார் வித்தா ரத்தே கிட்டா எட்டா அருளைத் ...... தரவேணும் தப்பா மற்பா டிச்சே விப்பார் தத்தாம் வினையைக் ...... களைவோனே தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ தத்தாய் தணிகைத் ...... தனிவேலா அப்பா கைப்பா லைப்போல் சொற்கா வற்பா வைதனத் ...... தணைவோனே அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
275
திருத்தணிகை தொக்கறாக் குடில்
தத்தனாத் தனன தத்தனாத் தனன தத்தனாத் தனன ...... தனதான
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக துக்கமாற் கடமு ...... மலமாயை துற்றகாற் பதலை சொற்படாக் குதலை துப்பிலாப் பலச ...... மயநூலைக் கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ லப்புலாற் றசைகு ...... ருதியாலே கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல சட்டவாக் கழிவ ...... தொருநாளே அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர் அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாய அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல் வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத வத்தினோர்க் குதவு ...... மிளையோனே எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
276
திருத்தணிகை தொடத்துளக்கிகள்
தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள் சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் ...... முழுமோசந் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலைமுலை யினவலை ...... புகுதாமல் அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறமென வரவுட னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு ...... விளையாடி அவத்தை தத்துவ மழிபட இருளறை விலக்கு வித்தொரு சுடரொளி பரவந லருட்பு கட்டியு னடியிணை யருளுவ ...... தொருநாளே படைத்த னைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபியொர் பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ...... ளிளையோனே பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர் தொடுத்த சக்கிர வளைகர மழகியர் படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் ...... மருகோனே திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில் திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு ...... மயில்வீரா தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல் குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ் திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
277
திருத்தணிகை நிலையாத சமுத்திர
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான தனதான தனத்தன தான ...... தனதான
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல் தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி சலமான பயித்திய மாகி ...... தடுமாறித் தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய் கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக் களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
278
திருத்தணிகை நினைத்தது எத்தனை
தனத்த தத்தனத் ...... தனதான தனத்த தத்தனத் ...... தனதான
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல் நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் கனத்த தத்துவமுற் ...... றழியாமற் கதித்த நித்தியசித் ...... தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே செனித்த புத்திரரிற் ...... சிறியோனே திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=XavwwIVUH1E
Add (additional) Audio/Video Link
Back to Top
279
திருத்தணிகை பகல் இராவினும்
தனன தானனம் தனன தானனம் தனன தானனம் ...... தனதான
பகலி ராவினுங் கருவி யாலனம் பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப் பழைய வேதமும் புதிய நூல்களும் பலபு ராணமுஞ் ...... சிலவோதி அகல நீளமென் றளவு கூறரும் பொருளி லேயமைந் ...... தடைவோரை அசடர் மூகரென் றவல மேமொழிந் தறிவி லேனழிந் ...... திடலாமோ சகல லோகமும் புகல நாடொறுஞ் சறுகி லாதசெங் ...... கழுநீருந் தளவு நீபமும் புனையு மார்பதென் தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா சிகர பூதரந் தகர நான்முகன் சிறுகு வாசவன் ...... சிறைமீளத் திமிர சாகரங் கதற மாமரஞ் சிதற வேல்விடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
280
திருத்தணிகை பருத்தபற் சிரத்தினை
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப் பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும் பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப் பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும் பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக் குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக் கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக் கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச் சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச் சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
281
திருத்தணிகை பழமை செப்பிய
தனன தத்தன தத்தன தத்தன தனன தத்தன தத்தன தத்தன தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பழமை செப்பிய ழைத்தித மித்துடன் முறைம சக்கிய ணைத்துந கக்குறி படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப் பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு விரவு குத்திர வித்தைவி ளைப்பவர் பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர் அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய அசட னைப்பழி யுற்றஅ வத்தனை அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனை அகில சத்தியு மெட்டுறு சித்தியு மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள் கரண மிட்டுந டித்தமி தப்படு குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன் குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா தழையு டுத்தகு றத்திப தத்துணை வருடி வட்டமு கத்தில தக்குறி தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே தரள பொற்பணி கச்சுவி சித்திரு குழைதி ருத்திய ருத்திமி குத்திடு தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
282
திருத்தணிகை புருவ நெறித்து
தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதான
புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப் புளகித வட்டத் ...... தனமானார் பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப் புரளும சட்டுப் ...... புலையேனைக் கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக் கதிதனை விட்டிட் ...... டிடுதீயக் கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக் கழல்கள்து திக்கக் ...... கருதாதோ செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத் திரைகட லுட்கப் ...... பொரும்வேலா தினைவன முற்றுக் குறவர் மடப்பைக் கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப் பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப் ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
283
திருத்தணிகை பூசலிட்டு
தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த ...... தனதான
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த போர்விடத் தைக்கெ டுத்து ...... வடிகூர்வாள் போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல் ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும் வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
284
திருத்தணிகை பெருக்க உபாயம்
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் ப்ரியக்கட லூடுந் ...... தணியாத கருக்கட லூடுங் கதற்றும நேகங் கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் கழற்புணை நீதந் ...... தருள்வாயே தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ் சதுர்த்தச லோகங் ...... களும்வாழச் சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ் சளப்பட மாவுந் ...... தனிவீழத் திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ் செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
285
திருத்தணிகை பொரியப் பொரிய
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் ...... தனமீதே புரளப் புரளக் கறுவித் தறுகட் பொருவிற் சுறவக் ...... கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச் செயலற் றனள்கற் ...... பழியாதே செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத் தெரிவைக் குணர்வைத் ...... தரவேணும் சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச் சுரருக் குரிமைப் ...... புரிவோனே சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச் சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே தரிகெட் டசுரப் படைகெட் டொழியத் தனிநெட் டயிலைத் ...... தொடும்வீரா தவளப் பணிலத் தரளப் பழனத் தணிகைக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
286
திருத்தணிகை பொருவிக் கந்தொடு
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் ...... தனதான
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப் புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற் பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத் திரியத் திங்களுதிப் ...... பதனாலே செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த் தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும் அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித் தருமைக் குன்றவருக் ...... கெளியோனே அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித் தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித் தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத் தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
287
திருத்தணிகை பொற்குடம் ஒத்த
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தானா நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர் கைப்பொருள் புக்கிட ...... வேதான் புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர் பொட்டணி நெற்றிய ...... ரானோர் அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர் அற்பர மட்டைகள் ...... பால்சென் றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை அற்றிட வைத்தருள் ...... வாயே கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி டக்கைமு ழக்கொலி ...... யாலக் கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள் குத்தத ணிக்கும ...... ரேசா சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு றத்தித னக்கிரி ...... மேலே தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த லைக்குலை கொத்திய ...... வேளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
288
திருத்தணிகை பொற் பதத்தினை
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த ...... தனதான
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
289
திருத்தணிகை மருக்குல மேவும்
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம் மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத் தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் ...... பிலிமூகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய் குருக்குல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல மாயன் ...... நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் ...... மருகோனே திருக்குள நாளும் பலத்திசை மூசும் சிறப்பது றாஎண் ...... டிசையோடும் திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
290
திருத்தணிகை மலை முலைச்சியர்
தனன தத்தன தனன தத்தன தனன தத்தன ...... தனதான
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர் மதிமு கத்திய ...... ரழகான மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர் மனது ருக்கிக ...... ளணைமீதே கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு கலவி யிற்றுவள் ...... பிணிதீராக் கசட னைக்குண அசட னைப்புகல் கதியில் வைப்பது ...... மொருநாளே குலகி ரிக்குல முருவ விட்டமர் குலவு சித்திர ...... முனைவேலா குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர் குமர சற்குண ...... மயில்வீரா தலம திற்புக லமர ருற்றிடர் தனைய கற்றிய ...... அருளாளா தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு தணிம லைக்குயர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
291
திருத்தணிகை முகத்தை மினுக்கி
தனத்தன தத்தன தனதன தனதன தனத்தன தத்தன தனதன தனதன தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள் விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள் மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர் முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ...... ஒழிவாக மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும் வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ...... ளருளாயோ புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள் பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ...... ளபிராமி பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச் செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள் அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
292
திருத்தணிகை முகிலும் இரவியும்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ...... மெனநாடி முதிய கனனென தெய்வதரு நிகரென முதலை மடுவினி லதவிய புயலென முகமு மறுமுக முடையவ னிவனென ...... வறியோரைச் சகல பதவியு முடையவ ரிவரென தனிய தநுவல விஜயவ னிவனென தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச் சயில பகலவ ரிடைதொறு நடைசெயு மிரவு தவிரவெ யிருபத மடையவெ சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே அகில புவனமு மடைவினி லுதவிய இமய கிரிமயில் குலவரை தநுவென அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமி அமரு மிடனன லெனுமொரு வடிவுடை யவனி லுரையவன் முதுதமி ழுடையவ னரியொ டயனுல கரியவ னடநவில் ...... சிவன்வாழ்வே திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட திரைக ளெறிகடல் சுவறிட களமிசை திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச் சிகர கிரிநெரி படபடை பொருதருள் திமிர தினகர குருபர இளமயில் சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
293
திருத்தணிகை முடித்த குழலினர்
தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தி லிலகிய ...... விழியாலும் முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும் இளைத்த இடையினு ...... மயலாகிப் படுத்த அணைதனி லணைத்த அவரொடு படிக்கு ளநுதின ...... முழலாதே பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன பதத்து மலரிணை ...... யருள்வாயே துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ தொடுத்த சரம்விடு ...... ரகுராமன் துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு துலக்க அரிதிரு ...... மருகோனே தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு தழைத்த கதலிக ...... ளவைசாயத் தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில் தழைத்த சரவண ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
294
திருத்தணிகை முத்துத் தெறிக்க
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன ...... தனதான
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன் முட்டத்தொ டுத்த ...... மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென முற்பட்டெ றிக்கு ......நிலவாலே எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி இப்பொற்கொ டிச்சி ...... தளராதே எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில் இற்றைத்தி னத்தில் ...... வரவேணும் மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர் சித்தத்தில் வைத்த ...... கழலோனே வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை வெட்டித்து ணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
295
திருத்தணிகை முலைபுளகம் எழ
தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதந்த ...... தனதான
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச முகிலளக மகில்பொங்க ...... அமுதான மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட முகம்வெயர்வு பெறமன்ற ...... லணையூடே கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று படவுருகி யிதயங்கள் ...... ப்ரியமேகூர் கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற கவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட அதிரவெடி படஅண்ட ...... மிமையோர்கள் அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு அவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை சடைமுடியி லணிகின்ற ...... பெருமானார் தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற தணிமலையி லுறைகின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
296
திருத்தணிகை மொகுமொகு என
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோட அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதி அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோ செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள் சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர் தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
297
திருத்தணிகை வங்கம் பெறு
தந்தந் தனதன தந்தந் தனதன தந்தந் தனதன ...... தனதான
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்துந் தியதிரு ...... மதனாலே வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற வஞ்சம் பதும்விடு ...... மதனாலே பங்கம் படுமென தங்கந் தனிலுதி பண்பொன் றியவொரு ...... கொடியான பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல் பொன்றுந் தனிமையை ...... நினையாயோ தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள் சென்றொன் றியபொழி ...... லதனூடே தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப் பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள் என்றும் புகழ்பெற ...... மலரீனும் பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி யென்றுஞ் செயவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
298
திருத்தணிகை வட்ட வாள் தன
தத்தனாத் தனன தத்தனாத் தனன தத்தனாத் தனன ...... தனதான
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை மக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள் மற்றகூட் டமறி ...... வயலாக முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை முட்டர்பூட் டியெனை ...... யழையாமுன் முத்திவீட் டணுக முத்தராக் கசுரு திக்குராக் கொளிரு ...... கழல்தாராய் பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ பத்தின்வாட் பிடியின் ...... மணவாளா பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப திச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி யெட்டுமாக் குலைய ...... எறிவேலா எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
299
திருத்தணிகை வரிக் கலையின்
தனத்ததன தனதான தனத்ததன தனதான தனத்ததன தனதான ...... தனதான
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
300
திருத்தணிகை வார் உற்று எழும்
தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன தானத்தன தானன தந்தன ...... தனதான
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர் காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே மாணுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை யாமப ரஞ்சியர் ...... மயலாலே சீருற்றெழு ஞானமு டன்கல்வி நேரற்றவர் மால்கொடு மங்கியெ சேருற்றறி வானத ழிந்துயி ...... ரிழவாமுன் சேவற்கொடி யோடுசி கண்டியின் மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய தேசுக்கதிர் கோடியெ னும்பத ...... மருள்வாயே போருற்றிடு சூரர்சி ரங்களை வீரத்தொடு பாரில ரிந்தெழு பூதக்கொடி சோரிய ருந்திட ...... விடும்வேலா பூகக்குலை யேவிழ மென்கயல் தாவக்குலை வாழைக ளுஞ்செறி போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ...... ளவைகோடி சாரற்கிரி தோறுமெ ழும்பொழில் தூரத்தொழு வார்வினை சிந்திடு தாதுற்றெழு கோபுர மண்டப ...... மவைசூழுந் தார்மெத்திய தோரண மென்தெரு தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள் தாமெச்சிய நீள்தணி யம்பதி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
301
திருத்தணிகை வினைக்கு இனமாகும்
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம் பினுக்கெதி ராகும் ...... விழிமாதர் மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ் சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக் கனத்தவி சாரம் பிறப்படி தோயுங் கருக்குழி தோறுங் ...... கவிழாதே கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங் கழற்புக ழோதுங் ...... கலைதாராய் புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ் சியைப்புணர் வாகம் ...... புயவேளே பொருப்பிரு கூறும் படக்கடல் தானும் பொருக்கெழ வானும் ...... புகைமூளச் சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந் திறக்கம ராடுந் ...... திறல்வேலா திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந் திருத்தணி மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
302
திருத்தணிகை வெற்றி செயவுற்ற
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்த தனதான
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன் விட்டகணை பட்ட ...... விசையாலே வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி ரித்தொளிப ரப்பு ...... மதியாலே பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை பட்டதிகி ரிக்கு ...... மழியாதே பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர் பச்சைமயி லுற்று ...... வரவேணும் நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி னைக்குமன மொத்த ...... கழல்வீரா நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற நித்தமிறு கத்த ...... ழுவுமார்பா எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில் எப்பொழுது நிற்கு ...... முருகோனே எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர் இட்டசிறை விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
303
குன்றுதோறாடல் அதிரும் கழல்
தனனந் தனன தந்த ...... தனதான தனனந் தனன தந்த ...... தனதான
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன் அபயம் புகுவ தென்று ...... நிலைகாண இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும் இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
304
குன்றுதோறாடல் எழுதிகழ் புவன
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான
எழுதிகழ் புவன நொடியள வதனி லியல்பெற மயிலில் ...... வருவோனே இமையவர் பரவி யடிதொழ அவுணர் மடிவுற விடுவ ...... தொருவேலா வழுதியர் தமிழி னொருபொரு ளதனை வழிபட மொழியு ...... முருகேசா மலரடி பணியு மடமகள் பசலை மயல்கொடு தளர்வ ...... தழகோதான் முழுகிய புனலி லினமணி தரள முறுகிடு பவள ...... மிகவாரி முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை யழக ...... குருநாதா பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவ ரிதய ...... முறுகோவே பருவரை துணிய வொருகணை தெரிவ பலமலை யுடைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
305
குன்றுதோறாடல் தறையின் மானுடர்
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தந்ததான
தறையின் மானுட ராசையி னால்மட லெழுது மாலருள் மாதர்கள் தோதக சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந் தளர்மி னேரிடை யாலுடை யால்நடை யழகி னால்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக ளணுகொ ணாவகை நீடுமி ராசிய பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம் பகரொ ணாதது சேரவொ ணாதது நினையொ ணாதது வானத யாபர பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய் சிறைவி டாதநி சாசரர் சேனைகள் மடிய நீலக லாபம தேறிய திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித் திரைகள் போலலை மோதிய சீதள குடக காவிரி நீளலை சூடிய திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும் மறவர் நாயக ஆதிவி நாயக ரிளைய நாயக காவிரி நாயக வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின் மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயக னார்குரு நாயக வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
306
குன்றுதோறாடல் வஞ்சக லோப மூடர்
தந்தன தான தான தந்தன தான தான தந்தன தான தான ...... தனதான
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி மஞ்சரி கோவை தூது ...... பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி வந்தியர் போல வீணி ...... லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும் செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர் பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது பண்டித ஞான நீறு ...... தருவோனே குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக் கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
307
ஆறு திருப்பதி அலைகடல் நிகராகிய
தனதன தனதானன தனதன தனதானன தனதன தனதானன ...... தனதான
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள் அபகட மகபாவிகள் ...... விரகாலே அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள் அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக் கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருட ...... னினிதாகக் கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென தரணியி லடியார்கண ...... நினைவாகா சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
308
ஆறு திருப்பதி ஈனமிகுத்துள பிறவி
தானதனத் தனதனன ...... தனதான தானதனத் தனதனன ...... தனதான
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே யானுமுனக் கடிமையென ...... வகையாக ஞானஅருட் டனையருளி ...... வினைதீர நாணமகற் றியகருணை ...... புரிவாயே தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
309
காஞ்சீபுரம் அதி மதம் கக்க
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ் சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் ...... குறவாணார் அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென் றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண் டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன் துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங் களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந் துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் ...... புகழ்பாடிச் சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந் துரியமுந் தப்பித் தத்வம னைத்துந் தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் ...... படிபாராய் கதிபொருந் தக்கற் பித்துந டத்துங் கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங் கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் ...... படிமோதிக் கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண் சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங் கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் ...... றபிராமி பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண் பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன் பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் ...... செவிபோயப் பணவிபங் கப்பட் டப்படி வெட்கும் படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும் பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
310
காஞ்சீபுரம் கனக தம்பத்தை
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங் கடகசங் கத்துப் பொற்புய வெற்பன் கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக் கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன் குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங் கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய் குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென் றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங் குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந் திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங் குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண் தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந் தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ் சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன் கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந் தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும் தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன் சசிதரன் திக்குக் கத்தர கத்யன் திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ் செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம் செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும் சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
311
காஞ்சீபுரம் செடியுடம் பத்தி
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ் செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ் சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம் திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ் செனனபங் கத்துத் துக்கக டற்கண் திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின் குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின் குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங் குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ் சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங் குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய் படிதருங் கற்புக் கற்பக முக்கண் கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம் பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா பரவசங் கெட்டெட் டக்கர நித்தம் பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும் பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ் சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந் துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின் சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந் துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும் சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
312
காஞ்சீபுரம் கன க்ரவுஞ்சத்தில்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங் கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும் பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும் புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும் புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப் புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும் பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும் பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும் பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம் பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன் றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன் றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந் தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ் சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந் தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ் சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந் தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
313
காஞ்சீபுரம் தெரியல் அம் செச்சை
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும் பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ் சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ...... கையில்வாழுஞ் சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும் படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ் சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதே பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம் பதறியங் கட்டப் பட்டனர் தத்வம் பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதே பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும் பரவசம் பற்றிப் பற்றற நிற்கும் பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோ சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம் பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன் தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந் தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந் தரியரும் பிக்கப் பித்தத னத்தந் தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாத பெரியபண் டத்தைச் சத்திய பித்தன் பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும் ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ...... கொடிவாழ்வே பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும் பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம் பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
314
காஞ்சீபுரம் புன மடந்தைக்கு
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம் கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண் கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன் கவளதுங் கக்கைக் கற்பக முக்கண் திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன் கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும் பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண் கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண் பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப் பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும் பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம் பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
315
காஞ்சீபுரம் கறை இலங்கும்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ் சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன் பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக் குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும் பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென் குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங் குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந் தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப் பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ் சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண் பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம் பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந் த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந் தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண் சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
316
காஞ்சீபுரம் செறிதரும் செப்பத்து
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும் அறிவறிந் தத்தற் கற்றது செப்புங் கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென் றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின் செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென் றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங் கனகனங் கத்திற் குத்திநி ணச்செங் குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன் பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண் புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
317
காஞ்சீபுரம் அரி அயன் புட்பி
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண் டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென் றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும் பலவியங் கொட்டச் சக்கடி கற்றந் தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப் பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும் பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும் படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப் படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ் சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின் பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும் சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும் ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும் கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும் பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக் கரியகொண் டற்கொப் பித்தக துப்புந் திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின் கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங் கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங் கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
318
காஞ்சீபுரம் கனி தரும் கொக்கு
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம் பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப் பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான் அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந் தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந் தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரை அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண் டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம் பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத் தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன் றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின் தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண் டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும் தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
319
காஞ்சீபுரம் தசைதுறுந் தொக்கு
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ் சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந் தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித் தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும் தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன் தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின் றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந் ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங் கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற் றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங் கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண் டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண் டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங் குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக் குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண் டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங் குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ் சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண் டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச் சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன் றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ் சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
320
காஞ்சீபுரம் புரைபடுஞ் செற்ற
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன் பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் கதறிவெந் துட்கக் கட்புர துட்டன் குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக் குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங் கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத் தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந் ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத் தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ் சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
321
காஞ்சீபுரம் சலமலம் விட்ட
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில் சகலவி னைக்கொத் திருந்தி டும்படி சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும் தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன் பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர் படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா பரிமள மிக்கச் சிவந்த நின்கழல் பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர் திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளி திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள் திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக் கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர் நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய் கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங் கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள் கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
322
காஞ்சீபுரம் தலை வலையத்து
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப் புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய துறவனெ னத்திக் கியம்பு கின்றது புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி கணபண ரத்நப் புயங்க கங்கணி குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
323
காஞ்சீபுரம் இதத்துப் பற்றி
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத் தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற் றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற் றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக் கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற் குலத்தைக்குத் திரத்தைக்குத் ...... தியவேலா குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக் குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற் பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
324
காஞ்சீபுரம் எனக்குச்சற்று
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப் பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம் எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப் பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன் தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித் திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய் பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப் பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப் பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக் கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
325
காஞ்சீபுரம் இறைச்சிப் பற்று
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட் டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக் கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைச் சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத் திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன் திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற் றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப் பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர் பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப் பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப் பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப் படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
326
காஞ்சீபுரம் கடத்தைப் பற்று
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக் கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர் கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த் திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால் எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக் கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன் இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற் றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட் டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட் டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப் புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக் கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப் புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
327
காஞ்சீபுரம் கருப் பற்றிப் பருத்து
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக் கருத்திற்கட் பொருட்பட்டுப் ...... பயில்காலங் கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக் கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப் பிணத்தைச்சுட் டகத்திற்புக் ...... கனைவோரும் பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப் பிறப்புப்பற் றறச்செச்சைக் ...... கழல்தாராய் பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப் புனக்கொச்சைக் குறத்தத்தைக் ...... கினியோனே புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப் புணர்த்தப்பித் தனைக்கற்பித் ...... தருள்வோனே செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச் சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத் திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
328
காஞ்சீபுரம் கறுக்கப் பற்று
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட் பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங் கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட் டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல் புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற் பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர் பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற் பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக் கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச் சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத் திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள் பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப் பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப் படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
329
காஞ்சீபுரம் அற்றைக்கு இரைதேடி
தத்தத் தனதான தத்தத் ...... தனதான தத்தத் தனதான தத்தத் ...... தனதானா
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
330
காஞ்சீபுரம் முட்டுப் பட்டு
தத்தத் தத்தத் ...... தனதான தத்தத் தத்தத் ...... தனதான முருகா முருகா வேல் முருகா; முருகா முருகா வேல் முருகா
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முற்றச் சுற்றிப் ...... பலநாளும் தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் சற்றுப் பற்றக் ...... கருதாதோ வட்டப் புட்பத் ...... தலமீதே வைக்கத் தக்கத் ...... திருபாதா கட்டத் தற்றத் ...... தருள்வோனே கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GPYMR7JbiNQ
Add (additional) Audio/Video Link
Back to Top
331
காஞ்சீபுரம் அற்றைக் கற்றை
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் ...... பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் ...... பொரும்வேலா சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் ...... களைவோனே கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
332
காஞ்சீபுரம் சுத்தச் சித்த
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச் சுத்தப் பட்டிட் ...... டமுறாதே தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட் சொற்குற் றத்துத் ...... துறைநாடி பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற் றொத்துக் கித்திப் ...... பிணிமாதர் பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப் பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத் தத்திக் கத்துப் ...... பலமீவாய் அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத் தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய் கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக் கைத்தச் சத்திப் ...... படையேவுங் கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
333
காஞ்சீபுரம் கொக்குக்கு ஒக்க
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத் ...... தனதான
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக் கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக் கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும் சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட் டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன் அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட் புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத் தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட் கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச் சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச் சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
334
காஞ்சீபுரம் தத்தித் தத்தி
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச் சத்தப் படுமைக் ...... கடலாலே சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத் தட்டுப் படுமப் ...... பிறையாலே சித்தத் துக்குப் பித்துற் றுச்சச் சித்ரக் கொடியுற் ...... றழியாதே செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச் செச்சைத் தொடையைத் ...... தரவேணும் கொத்துத் திக்குப் பத்துட் புக்குக் குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக் கொச்சைக் குறவிக் ...... கினியோனே சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத் துக்கத் தையொழித் ...... திடும்வீரா சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச் சொக்கப் பதியிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
335
காஞ்சீபுரம் பொக்குப்பை
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் ...... தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய் துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத் துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத் துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச் செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச் செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக் கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக் கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
336
காஞ்சீபுரம் அயில் அப்பு
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத் ...... தனதான
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத் தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித் தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப் புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப் புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக் கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப் பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
337
காஞ்சீபுரம் கச்சு இட்ட அணி
தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன ...... தனதான
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய மச்சக் கொடிமதன் ...... மலராலுங் கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை அச்சப் படவெழு ...... மதனாலும் பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது சொச்சத் தரமல ...... இனிதான பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய செச்சைத் தொடையது ...... தரவேணும் பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய கச்சிப் பதிதனி ...... லுறைவோனே பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட உற்றுப் பொரவல ...... கதிர்வேலா இச்சித் தழகிய கொச்சைக் குறமகள் மெச்சித் தழுவிய ...... திருமார்பா எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
338
காஞ்சீபுரம் கமலரு சோகம்
தனதன தானாந்தன தனதன தானாந்தன தனதன தானாந்தன ...... தனதான
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந் தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம் இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள் இதவிய பாதாம்புய ...... மருள்வாயே அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர அதுலன நீலாம்பர ...... மறியாத அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள் அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
339
காஞ்சீபுரம் கருமமான பிறப்பற
தனன தானன தத்தன தனதன தானா தத்தத் ...... தனதான
கரும மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் ...... தடுமாறுங் கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் ...... கலைநூலின் வரும நேகவி கற்பவி பரிதம னோபா வத்துக் ...... கரிதாய மவுன பூரித சத்திய வடிவினை மாயா மற்குப் ...... புகல்வாயே தரும வீம அருச்சுன நகுலச காதே வர்க்குப் ...... புகலாகிச் சமர பூமியில் விக்ரம வளைகொடு நாளோர் பத்தெட் ...... டினிலாளுங் குரும கீதல முட்பட வுளமது கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக் குலவு தேர்கட வச்சுதன் மருககு மாரா கச்சிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
340
காஞ்சீபுரம் கலகலென
தனதன தத்தத் தாந்த தானன தனதன தத்தத் தாந்த தானன தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான
கலகலெ னப்பொற் சேந்த நூபுர பரிபுர மொத்தித் தாந்த னாமென கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங் கடிதட முற்றுக் காந்த ளாமென இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச் சலசல சச்சச் சேங்கை பூண்வளை பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத் தரளந கைப்பித் தாம்ப லாரிதழ் குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர் சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ திலதமு கப்பொற் காந்தி மாதுமை யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி திரிபுவ னத்தைக் காண்ட நாடகி குமரிசு கத்தைப் பூண்ட காரணி சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே அமரர்ம கட்குப் போந்த மால்கொளும் விபுதகு றத்திக் காண்ட வாதின மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
341
காஞ்சீபுரம் கொத்தார் பற் கால்
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா ...... தனதான
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ் குப்பா யத்திற் ...... செயல்மாறிக் கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே கொட்டா விக்குப் ...... புறவாசித் தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ...... எனவேகேள் செற்றே சுட்டே விட்டே றிப்போ மப்பே துத்துக் ...... கமறாதோ நித்தா வித்தா ரத்தோ கைக்கே நிற்பாய் கச்சிக் ...... குமரேசா நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர் நெட்டோ தத்திற் ...... பொருதோனே முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ முட்டா திட்டத் ...... தணிவோனே முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
342
காஞ்சீபுரம் கோவைச் சுத்த
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங் கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப் பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும் மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
343
காஞ்சீபுரம் சீசி முப்புர
தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான
சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் கோசம் வேரறச் சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி சேர அற்புதக் கோல மாமெனச் சூரி யப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற் பாசம் விட்டுவிட் டோடி போனதுப் போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத் தாப ரித்துநித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே தேசில் துட்டநிட் டூர கோதுடைச் சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி வித்துருப் பாத னோர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர் காள அத்தியப் பால்சி ராமலைத் தேச முற்றுமுப் பூசை மேவிநற் காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
344
காஞ்சீபுரம் நச்சு அரவம் என்று
தத்ததன தந்த தத்ததன தந்த தத்ததன தந்த ...... தனதான
நச்சரவ மென்று நச்சரவ மென்று நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும் நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு நத்திரைவ ழங்கு ...... கடலாலும் இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த இச்சிறுமி நொந்து ...... மெலியாதே எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி இத்தனையி லஞ்ச ...... லெனவேணும் பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை பச்சைமலை யெங்கு ...... முறைவோனே பத்தியுட னின்று பத்திசெயு மன்பர் பத்திரம ணிந்த ...... கழலோனே கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர் கைத்தளைக ளைந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
345
காஞ்சீபுரம் படிறொழுக்கமும்
தனன தத்தன தனன தத்தன தனன தத்தன ...... தனதான
படிறொ ழுக்கமு மடம னத்துள படிப ரித்துட ...... னொடிபேசும் பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் பலகொ டுத்தற ...... உயிர்வாடா மிடியெ னப்பெரு வடவை சுட்டிட விதன முற்றிட ...... மிகவாழும் விரகு கெட்டரு நரகு விட்டிரு வினைய றப்பத ...... மருள்வாயே கொடியி டைக்குற வடிவி யைப்புணர் குமர கச்சியி ...... லமர்வோனே குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை முற்றணி ...... திருமார்பா பொடிப டப்பட நெடிய விற்கொடு புரமெ ரித்தவர் ...... குருநாதா பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை பொருது ழக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
346
காஞ்சீபுரம் மகுடக் கொப்பாட
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன ...... தந்ததான
மகுடக்கொப் பாடக் காதினில் நுதலிற்பொட் டூரக் கோதிய மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட வகைமுத்துச் சோரச் சேர்நகை யிதழிற்சொற் சாதிப் பாரியல் மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர் பகடிச்சொற் கூறிப் போர்மயல் முகவிச்சைப் பேசிச் சீரிடை பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப் பணமெத்தப் பேசித் தூதிடு மிதயச்சுத் தீனச் சோலிகள் பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை தடமிட்டுப் பாவக் கார்கிரி பொடிபட்டுப் போகச் சூரர்கள் தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா திகிரிப்பொற் பாணிப் பாலனை மறைகற்புத் தேளப் பூமனை சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே தினையுற்றுக் காவற் காரியை மணமுற்றுத் தேவப் பூவொடு திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
347
காஞ்சீபுரம் மக்கட்குக் கூற
தத்தத்தத் தானன தானன தத்தத்தத் தானன தானன தத்தத்தத் தானன தானன ...... தனதான
மக்கட்குக் கூற அரிதானது கற்று எட்டத் தான்முடி யாதது மற்றொப்புக் கியாதும் ஒவாதது ...... மனதாலே மட்டிட்டுத் தேடவொணாதது தத்வத்திற் கோவைபடாதது மத்தப்பொற் போது பகீரதி மதிசூடும் முக்கட்பொற்பாளர் உசாவிய அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா முட்டர்க்கெட் டாதது நான்மறை ஏட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே செக்கட் சக்ராயுத மாதுலன் மெச்சப்புற் போதுப டாவிய திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம் சிட்டித்துப் பூதப சாசுகள் கைக்கொட்டிட்டாட ம கோததி செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி கக்கக்கைத் தாமரை வேல்விடு செச்சைக் கர்ப்பூர புயாசல கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன் கற்புத் தப்பாது உலகேழையும் ஒக்கப்பெற்றாள் விளையாடிய கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
348
காஞ்சீபுரம் மயல் ஓதும்
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான
மயலோது மந்த நிலையாலும் வஞ்ச வசைபேசு கின்ற ...... மொழியாலும் மறிபோலு கின்ற விழிசேரு மந்தி மதிநேரு கின்ற ...... நுதலாலும் அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை ...... வளையாலும் அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து அடியேன்ம யங்கி ...... விடலாமோ மயிலேறி யன்று நொடிபோதி லண்டம் வலமாக வந்த ...... குமரேசா மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள் மலைமாது தந்த ...... முருகேசா நயவானு யர்ந்த மணிமாட மும்பர் நடுவேநி றைந்த ...... மதிசூழ நறைவீசு கும்ப குடமேவு கம்பை நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
349
காஞ்சீபுரம் முத்து ரத்ந சூத்ர
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த ...... தனதான
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர் முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர் முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண் முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர் எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண் இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள் செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள் கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
350
காஞ்சீபுரம் வம்பறாச்சில
தந்த தாத்தன தன்ன தனந்தன தத்தத் தத்தத் ...... தனதானா
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம யத்துக் கத்துத் ...... திரையாளர் வன்க லாத்திரள் தன்னை யகன்றும னத்திற் பற்றற் ...... றருளாலே தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார் தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு வைக்கச் சற்றுக் ...... கருதாதோ வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு வெற்புப் பொட்டுப் ...... படமாசூர் வென்ற பார்த்திப பன்னிரு திண்புய வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு கைக்குக் கற்புத் ...... தவறாதே கம்பை யாற்றினி லன்னை தவம்புரி கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
351
காஞ்சீபுரம் வாய்ந்தப்பிடை
தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன ...... தனதானா
வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய நீந்திப்பது மாதியை மீதினி லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை வார்ந்துப்பக ழீயெதி ராகிமை கூர்ந்துப்பரி யாவரி சேரவை சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே சாய்ந்துப்பனை யூணவ ரானபொ லாய்ந்துப்பணி னாரிரு தாளினில் வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ...... தறிவாலே சாந்தப்பிய மாமலை நேர்முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் காந்தப்பத மாறியு லாவுய ராந்தற்குரு நாதனு மாகியெ போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே காந்தக்கலு மூசியு மேயென ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
352
காஞ்சீபுரம் அறிவிலாப் பித்தர்
தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த ...... தனதான
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச் சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான் திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன் இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக் குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
353
திருவானைக்கா அஞ்சன வேல்விழி இட்டு
தந்தன தானன தத்ததத்தன தந்தன தானன தத்ததத்தன தந்தன தானன தத்ததத்தன ...... தனதான
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு மிங்கித மாகந கைத்துருக்கவு மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு மந்தர மாமுலை சற்றசைக்கவு மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள் நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும் வம்புரை கூறிவ ளைத்திணக்கவு மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும் நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே குஞ்சர மாமுக விக்கிநப்ரபு அங்குச பாசக ரப்ரசித்தனொர் கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன் கும்பிடு வார்வினை பற்றறுப்பவன் எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள் குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே துஞ்சலி லாதச டக்ஷரப்பிர பந்தச டானன துஷ்டநிக்ரக தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா துங்கக ஜாரணி யத்திலுத்தம சம்புத டாகம டுத்ததக்ஷிண சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
354
திருவானைக்கா அம்புலி நீரை
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன தந்தன தானத் தானன ...... தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல் வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில் வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில் மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில் மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி குண்டலி யாலப் போசனி ...... யபிராமி கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
355
திருவானைக்கா அனித்தமான ஊன்
தனத்த தான தானான தனத்த தான தானான தனத்த தான தானான ...... தனதான
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய் தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத ...... மருகோனே சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி மகப்ர வாக பானீய ...... மலைமோதும் மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
356
திருவானைக்கா ஆரமணி வாரை
தானதன தானத் தானதன தானத் தானதன தானத் ...... தனதான
ஆரமணி வாரைப் பீறியற மேலிட் டாடவர்கள் வாடத் ...... துறவோரை ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப் பாளித படீரத் ...... தனமானார் காரளக நீழற் காதளவு மோடிக் காதுமபி ராமக் ...... கயல்போலக் காலனுடல் போடத் தேடிவரு நாளிற் காலைமற வாமற் ...... புகல்வேனோ பாரடைய வாழ்வித் தாரபதி பாசச் சாமளக லாபப் ...... பரியேறிப் பாய்மதக போலத் தானொடிக லாமுற் பாடிவரு மேழைச் ...... சிறியோனே சூரர்புர சூறைக் காரசுரர் காவற் காரஇள வேனற் ...... புனமேவுந் தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச் சோதிவளர் காவைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
357
திருவானைக்கா ஆலம் வைத்த
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச னாக மக்கலை கற்றச மர்த்திக ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே ஆர வட்டமு லைக்குவி லைப்பண மாயி ரக்கல மொட்டிய ளப்பினு மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய் மேலி ளைப்புமு சிப்பும வத்தையு மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே மேதி னிக்குள பத்தனெ னப்பல பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய் பீலி மிக்கம யிற்றுர கத்தினி லேறி முட்டவ ளைத்துவ குத்துடல் பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள் வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர் ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
358
திருவானைக்கா உரைக் காரிகை
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தான ...... தந்ததான
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான் குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன் குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய் அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட் டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய் திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர் திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
359
திருவானைக்கா ஓல மறைகள்
தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன ...... தனதான
ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
360
திருவானைக்கா கரு முகில்
தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்திர ளாகக் கூடிய இருளெனமரு ளேறித் தேறிய கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே கனவியவிலை யோலைக் காதிகள் முழுமதிவத னேரப் பாவைகள் களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே பரநெறியுண ராவக் காமுகர் உயிர்பலிகொளு மோகக் காரிகள் பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப் பகடிகள்பொரு ளாசைப் பாடிக ளுருவியதன பாரக் கோடுகள் படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே மரகதவித நேர்முத் தார்நகை குறமகளதி பாரப் பூண்முலை மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே வளைதருபெரு ஞாலத் தாழ்கடல் முறையிடநடு வாகப் போயிரு வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா அரவணைதனி லேறிச் சீருடன் விழிதுயில்திரு மால்சக் ராயுதன் அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும் உடையதொர்மயில் வாசிச் சேவக அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
361
திருவானைக்கா காவிப் பூவை
தானத் தான தான தனதன தானத் தான தான தனதன தானத் தான தான தனதன ...... தனதான
காவிப் பூவை யேவை யிகல்கவன நீலத் தால கால நிகர்வன காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார் காதிற் காதி மோதி யுழல்கண மாயத் தார்கள் தேக பரிசன காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத பாவிக் காயு வாயு வலம்வர லாலிப் பார்கள் போத கருமவு பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன் பாலெக் காக யோக ஜெபதப நேசித் தார வார பரிபுர பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ கூவிக் கோழி வாழி யெனமயி லாலித் தால கால மெனவுயர் கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக் கோரத் தீர சூர னுடைவினை பாறச் சீற லேன பதிதனை கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா ஆவிச் சேல்கள் பூக மடலிள பாளைத் தாறு கூறு படவுய ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே ஆசைத் தோகை மார்க ளிசையுட னாடிப் பாடி நாடி வருதிரு ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
362
திருவானைக்கா குருதி புலால் என்பு
தனதன தானந்த தான தந்தன தனதன தானந்த தான தந்தன தனதன தானந்த தான தந்தன ...... தனதான
குருதிபு லாலென்பு தோன ரம்புகள் கிருமிகள் மாலம்பி சீத மண்டிய குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக் குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே சுருதிபு ராணங்க ளாக மம்பகர் சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள் அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் அரிகரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே கமலனு மாகண்ட லாதி யண்டரு மெமது பிரானென்று தாள்வ ணங்கிய கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
363
திருவானைக்கா நாடித் தேடி
தானத் தானத் ...... தனதான தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால் நானத் தாகத் ...... திரிவேனோ மாடக் கூடற் ...... பதிஞான வாழ்வைச் சேரத் ...... தருவாயே பாடற் காதற் ...... புரிவோனே பாலைத் தேனொத் ...... தருள்வோனே ஆடற் றோகைக் ...... கினியோனே ஆனைக் காவிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
364
திருவானைக்கா நிறைந்த துப்பிதழ்
தனந்த தத்தன தானான தானன தனந்த தத்தன தானான தானன தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென மறந்த ரித்தக ணாலால நேரென நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே நெருங்கு பொற்றன மாமேரு நேரென மருங்கு நிட்கள ஆகாச நேரென நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன் குறைந்தி தப்பட வாய்பாடி யாதர வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள் மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன் மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி லிருந்து லுத்தநி யோராத தேதுசொல் மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி வதஞ்செய் விக்ரம சீராம னானில மறிந்த திச்சர மோகோகெ டாதினி வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி அறந்த ழைத்தநு மானோடு மாகடல் வரம்ப டைத்ததின் மேலேறி ராவண னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான அநங்கன் மைத்துன வேளேக லாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
365
திருவானைக்கா பரிமளம் மிக உள
தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன ...... தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலரடி வேண்டி யேவிய பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா விரகனை யசடனை வீம்பு பேசிய விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே கருதலர் திரிபுர மாண்டு நீறெழ மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடலுடை யுலகினை யீன்ற தாயுமை கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா முரணிய சமரினில் மூண்ட ராவண னிடியென அலறிமு னேங்கி வாய்விட முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
366
திருவானைக்கா வேலைப்போல் விழி
தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள் காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள் வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள் மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள் வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ் சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள் காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள் தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும் தோயப் பாயல ழைக்கும வத்திகள் மோகப் போகமு யக்கிம யக்கிகள் சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ காலைக் கேமுழு கிக்குண திக்கினில் ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள் கானத் தாசிர மத்தினி லுத்தம வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர் காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை பாயச் சாலித ழைத்திர தித்தமு தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
367
திருவருணை குமர குருபர குணதர
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவண பவகிரி குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் குறவர் சிறுமியு மருவிய திரள்புய முருக சரணென வுருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக் கமரில் விழவிடு மழகுடை யரிவையர் களவி னொடுபொரு ளளவள வருளிய கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக் கருணை யடியரொ டருணையி லொருவிசை சுருதி புடைதர வருமிரு பரிபுர கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல் மறுகி யலைபட விடநதி யுமிழ்வன சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச் சகல வுலகமு நிலைபெற நிறுவிய கனக கிரிதிரி தரவெகு கரமலர் தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின் றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில் அகில புவனமு மளவிடு குறியவன் அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
368
திருவருணை அருவ மிடையென
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
அருவ மிடையென வருபவர் துவரிதழ் அமுது பருகியு முருகியு ம்ருகமத அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார அசல முலைபுள கிதமெழ அமளியில் அமளி படஅந வரதமு மவசமொ டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத் தருவை நிகரிடு புலமையு மலமல முருவு மிளமையு மலமலம் விபரித சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ் சலில லிபியன சனனமு மலமல மினியு னடியரொ டொருவழி படஇரு தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே உருவு கரியதொர் கணைகொடு பணிபதி யிருகு தையுமுடி தமனிய தநுவுட னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும் உறுதி படுசுர ரதமிசை யடியிட நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம் உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி தெருவு நகரியு நிசிசரர் முடியொடு சடச டெனவெடி படுவன புகைவன திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ் சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய பெரும அருணையி லெழுநிலை திகழ்வன சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
369
திருவருணை கருணை சிறிதும்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர் பிசித அசனம றவரிவர் முதலிய கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக் கலக லெனநெறி கெடமுறை முறைமுறை கதறி வதறிய குதறிய கலைகொடு கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன் புருகி யுனதருள் பரவுகை வரில்விர கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக உதறி லெனதெனு மலமறி லறிவினி லெளிது பெறலென மறைபறை யறைவதொ ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே தருண சததள பரிமள பரிபுர சரணி தமனிய தநுதரி திரிபுர தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி சடில தரியநு பவையுமை திரிபுரை சகல புவனமு முதவிய பதிவ்ருதை சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே அடவி சரர்குல மரகத வனிதையு மமரர் குமரியு மனவர தமுமரு கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
370
திருவருணை துகிலு ம்ருகமத
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இருதன கிரியசை தரஇடை துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித் தொடர வனமணி மகரமி லகுகுழை யடரு வனவிட மிளிர்வன ரதிபதி சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர வனச பதயுக பரிபுர மொலிபட மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும் வரைவி லரிவையர் தருசுக சலதியி லலையு மெனதுயி ரநுதின நெறிதரு மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே முகிலு மதியமும் ரவியெழு புரவியு நெடிய குலைமிட றிடறமு துககன முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ் தடமு முளரிய அகழியு மதிள்களு முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே அகிலு மருதமு முகுளித வகுளமு மமுத கதலியும் அருணமும் வருடையு மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண் டருவி யிழிதரு மருவரை தனிலொரு சவர வனிதையை முநிதரு புனிதையை அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
371
திருவருணை மகர மெறிகடல்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
மகர மெறிகடல் விழியினு மொழியினு மதுப முரல்குழல் வகையினு நகையினும் வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும் மதுர இதழினு மிடையினு நடையினு மகளிர் முகுளித முலையினு நிலையினும் வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம் பகரு கினுமவர் பணிவிடை திரிகினு முருகி நெறிமுறை தவறினு மவரொடு பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப் பரவை படியினும் வசமழி யினுமுத லருணை நகர்மிசை கருணையொ டருளிய பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே ககன சுரபதி வழிபட எழுகிரி கடக கிரியொடு மிதிபட வடகுல கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங் கதறு சுழிகட லிடைகிழி படமிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே தகன கரதல சிவசுத கணபதி சகச சரவண பரிமள சததள சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின் தரள முகபட நெறிபட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தனகிரி தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
372
திருவருணை முகிலை யிகல்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென முதிய மதியது முகமென நுதலிணை முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி ...... யெனமூவா முளரி தனின்முகு ளிதமலர் முலையென முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை மொழிய வரியதொர் தெரிவையர் வினையென ...... மொழிகூறிப் பகலு மிரவினு மிகமன மருள்கொடு பதியி லவர்வடி வுளதழ கெனவொரு பழுது மறஅவர் பரிவுற இதமது ...... பகராதே பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட விகட முடனடை பயில்மயில் மிசைவரு பவனி தனையநு தினநினை யெனஅருள் ...... பகர்வாயே புகல வரியது பொருளிது எனவொரு புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் ...... புடைசூழப் புரமு மெரியெழ நகையது புரிபவர் புனலும் வளர்மதி புனைசடை யினரவர் புடவி வழிபட புதை பொருள் விரகொடு ...... புகல்வோனே அகில கலைகளு மறநெறி முறைமையு மகில மொழிதரு புலவரு முலகினி லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை ...... யதனாலே அறுவர் முலையுணு மறுமுக னிவனென அரிய நடமிடு மடியவ ரடிதொழ அருணை நகர்தனி லழகுடன் மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
373
திருவருணை முருகு செறிகுழல் சொரு
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் முலைக ளளவிடு முகபட பகடிகள் முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல முழுகு புழுககில் குழைவடி வழகியர் முதிர வளர்கனி யதுகவ ரிதழியர் முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம் மருவி யமளியி னலமிடு கலவியர் மனது திரவிய மளவள வளவியர் வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான் மருளு மறிவின னடிமுடி யறிகிலன் அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே கருதி யிருபது கரமுடி யொருபது கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக் கவச அநுமனொ டெழுபது கவிவிழ அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா தருண மணியவை பலபல செருகிய தலையள் துகிலிடை யழகிய குறமகள் தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
374
திருவருணை விடமும் அமுதமும்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி வனச மலதழல் முழுகிய சரமென விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென மொழியு மமுதல வுயிர்கவர் வலையென விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித் தடமு மடுவல படுகுழி யெனஇடை துடியு மலமத னுருவென வனமுலை சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை தரள மணியல யமன்விடு கயிறென மகளிர் மகளிரு மலபல வினைகொடு சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே அடவி வனிதையர் தனதிரு பரிபுர சரண மலரடி மலர்கொடு வழிபட அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும் அமர ரரிவையு மிருபுடை யினும்வர முகர முகபட கவளத வளகர அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங் கடக புளகித புயகிரி சமுகவி கடக கசரத துரகத நிசிசரர் கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங் கருக வொளிவிடு தனுபர கவுதம புநித முநிதொழ அருணையி லறம்வளர் கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
375
திருவருணை கமரி மலர்குழல்
தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான
கமரி மலர்குழல் சரிய புளகித கனக தனகிரி யசைய பொருவிழி கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர் கரிய மணிபுர ளரிய கதிரொளி பரவ இணைகுழை யசைய நகைகதிர் கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத் திமிரு மதபுழு கொழுக தெருவினி லலைய விலைமுலை தெரிய மயல்கொடு திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல் திரையி லமுதென கழைகள் பலசுளை யெனவு மவர்மயல் தழுவு மசடனை திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய் குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர ...... எனதாளங் குரைசெய் முரசமொ டரிய விருதொலி டமட டமடம டமட டமவென குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட அமரர் முநிவரு மயனு மனைவரு மதுகை மலர்கொடு தொழுது பதமுற அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா அகில புவனமொ டடைய வொளிபெற அழகு சரண்மயில் புறம தருளியொ ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
376
திருவருணை கயல் விழித்தேன்
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் ...... பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக் கதறிடப் பாடையிற் ...... றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் பரிகரித் தாவியைத் ...... தரவேணும் அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற் றருணையிற் கோபுரத் ...... துறைவோனே அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத் தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற் புனமறப் பாவையைப் ...... புணர்வோனே பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப் பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
377
திருவருணை கறுவு மிக்கு ஆவி
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் திலகுகட் சேல்களிப் ...... புடனாடக் கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட் களவினிற் காசினுக் ...... குறவாலுற் றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற் றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர் ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப் புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச் செறிதிருக் கோலமுற் ...... றணைவானும் மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற் றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற் றருணையிற் கோபுரத் ...... துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
378
திருவருணை பரியகைப் பாசம்
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் பயனுயிர்ப் போயகப் ...... படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற் பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன் பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக் கமைவபற் றாசையக் ...... கழலோர்முன் கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற் கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென் றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக் கருணையிற் கோபுரத் ...... துறைவோனே அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற் றயருமச் சேவகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
379
திருவருணை தருண மணி
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று மருவுமென தாவி சற்று ...... மழியாதே மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும் கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த கடியமல ராத ரித்த ...... கழல்வீரா அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
380
திருவருணை முழுகிவட
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும் மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும் எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த சிவனைமுத லோது வித்த ...... குருநாதா திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
381
திருவருணை வடவை அனல் ஊடு
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும் மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன் மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க மவுனமறை யோது வித்த ...... குருநாதா இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
382
திருவருணை ஆலவிழி நீல
தானதன தானத் தானதன தானத் தானதன தானத் ...... தந்ததான
ஆலவிழி நீலத் தாலதர பானத் தாலளக பாரக் ...... கொண்டலாலே ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித் தாரநடை யால்நற் ...... கொங்கையாலே சாலமய லாகிக் காலதிரி சூலத் தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித் தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற் சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ சோலைதரு கானிற் கோலமற மானைத் தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே சோதிமுரு காநித் தாபழய ஞானச் சோணகிரி வீதிக் ...... கந்தவேளே பாலகக லாபக் கோமளம யூரப் பாகவுமை பாகத் ...... தன்குமாரா பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
383
திருவருணை பேதக விரோத
தானதன தானத் தானதன தானத் தானதன தானத் ...... தந்ததான
பேதகவி ரோதத் தோதகவி நோதப் பேதையர்கு லாவைக் ...... கண்டுமாலின் பேதைமையு றாமற் றேதமக லாமற் பேதவுடல் பேணித் ...... தென்படாதே சாதகவி காரச் சாதலவை போகத் தாழ்விலுயி ராகச் ...... சிந்தையாலுன் தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற் சாரல்மற மானைச் ...... சிந்தியேனோ போதகம யூரப் போதகக டாமற் போதருணை வீதிக் ...... கந்தவேளே போதகக லாபக் கோதைமுது வானிற் போனசிறை மீளச் ...... சென்றவேலா பாதகப தாதிச் சூரன்முதல் வீழப் பாருலகு வாழக் ...... கண்டகோவே பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
384
திருவருணை அமுதம் ஊறு சொல்
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான
அமுத மூறுசொ லாகிய தோகையர் பொருளு ளாரையெ னாணையு னாணையெ னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும் அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள் தெருவின் மீதுகு லாவியு லாவிகள் அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய் குமரி காளிவ ராகிம கேசுரி கவுரி மோடிசு ராரிநி ராபரி கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி குறளு ரூபமு ராரிச கோதரி யுலக தாரிஉதாரிப ராபரி குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி சமர நீலிபு ராரித னாயகி மலைகு மாரிக பாலிந னாரணி சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி சவுரி வீரிமு நீர்விட போஜனி திகிரி மேவுகை யாளிசெ யாளொரு சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா திமித மாடுசு ராரிநி சாசரர் முடிக டோறுக டாவியி டேயொரு சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா திருவு லாவுசொ ணேசர ணாமலை முகிலு லாவுவி மானந வோநிலை சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
385
திருவருணை உருகும் மாமெழுகாக
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான
உருகு மாமெழு காகவு மேமயல் பெருகு மாசையு ளாகிய பேர்வரி லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார் உடைகொள் மேகலை யால்முலை மூடியும் நெகிழ நாடிய தோதக மாடியு முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங் கரவ தாமன மாதர்கள் நீள்வலை கலக வாரியில் வீழடி யேநெறி கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத கசட மூடனை யாளவு மேயருள் கருணை வாரிதி யேயிரு நாயகி கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே சுருதி மாமொழி வேதியன் வானவர் பரவு கேசனை யாயுத பாணிநல் துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே தொலைவி லாவசு ரேசர்க ளானவர் துகள தாகவு மேயெதி ராடிடு சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே அருணர் கோடியி னாரொளி வீசிய தருண வாண்முக மேனிய னேயர னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே அணிபொன் மேருயர் கோபுர மாமதி லதிரு மாரண வாரண வீதியு ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
386
திருவருணை கரி உரி அரவம்
தனதன தனன தனந்த தானன தனதன தனன தனந்த தானன தனதன தனன தனந்த தானன ...... தனதான
கரியுரி அரவ மணிந்த மேனியர் கலைமதி சலமு நிறைந்த வேணியர் கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின் கனமுலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை யமர்ந்த காரணர் கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள விரிவென வுனது ளுகந்த வேலென மிகவிரு குழையு டர்ந்து வேளினை யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும் வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற விதமிகு கலவி பொருந்தி மேனியு மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ எரிசொரி விழியு மிரண்டு வாளெயி றிருபிறை சயில மிரண்டு தோள்முகி லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ தெனவிழ முதுகு பிளந்து காளிக ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை அருணையி லறவு முயர்ந்த கோபுர மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும் அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள் அடவியி லரிவை குயங்கள் தோய்புய அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
387
திருவருணை கனை கடல் வயிறு
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தநததான
கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட வடதம னியகிரி கம்ப மாய்நட கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன் கயிறென அமரர நந்த கோடியு முறைமுறை யமுதுக டைந்த நாளொரு கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல வினைமத கரிகளு மெண்டி சாமுக கிரிகளு முறுகிட அண்ட கோளகை வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல விடுகுழை யளவும ளந்து காமுக ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ முனைபெற வளையஅ ணைந்த மோகர நிசிசரர் கடகமு றிந்து தூளெழ முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன முழுகிய திமிரத ரங்க சாகர முறையிட இமையவர் தங்க ளூர்புக முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு அனையன கனவித சண்ட கோபுர அருணையி லுறையும ருந்து ணாமுலை அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண் டடவியில் வடிவுக ரந்து போயொரு குறமகள் பிறகுதி ரிந்த காமுக அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
388
திருவருணை இரவியும் மதியும்
தனதன தனனம் தனதன தனனம் தனதன தனனம் ...... தனதான
இரவியு மதியுந் தெரிவுற எழுமம் புவிதனி லினமொன் ...... றிடுமாதும் எழில்புதல் வருநின் றழுதுள முருகும் மிடர்கொடு நடலம் ...... பலகூறக் கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண் டுயிரினை நமனுங் ...... கருதாமுன் கலைகொடு பலதுன் பமுமக லிடநின் கழலிணை கருதும் ...... படிபாராய் திருமரு வியதிண் புயனயன் விரியெண் டிசைகிடு கிடவந் ...... திடுசூரன் திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ் சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா அருமறை யவரந் தரமுறை பவரன் புடையவ ருயஅன் ...... றறமேவும் அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையி லுறையும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
389
திருவருணை விரகொடு வளை
தனதன தனனம் தனதன தனனம் தனதன தனனம் ...... தனதான
விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு விழிவெங் ...... கனல்போல வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி வழிவந் ...... திடுபோதிற் கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற வினர்கண் ...... புனல்பாயுங் கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் படவர வணைகண் ...... டுயில்மாலம் பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் பயமற விடமுண் ...... டெருதேறி அரவொடு மதியம் பொதிசடை மிசைகங் கையுமுற அனலங் ...... கையில்மேவ அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையில் மருவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
390
திருவருணை இடம் அடு சுறவை
தனதன தனன தனதன தனன தனதன தனதன ...... தந்ததான
இடமடு சுறவை முடுகிய மகர மெறிகட லிடையெழு ...... திங்களாலே இருவினை மகளிர் மருவிய தெருவி லெரியென வருசிறு ...... தென்றலாலே தடநடு வுடைய கடிபடு கொடிய சரம்விடு தறுகண ...... நங்கனாலே சரிவளை கழல மயல்கொளு மரிவை தனிமல ரணையின ...... லங்கலாமோ வடகுல சயில நெடுவுட லசுரர் மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா மறமக ளமுத புளகித களப வளரிள முலையைம ...... ணந்தமார்பா அடலணி விகட மரகத மயிலி லழகுட னருணையி ...... னின்றகோவே அருமறை விததி முறைமுறை பகரு மரியர பிரமர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
391
திருவருணை கெஜ நடை மடவார்
தனதன தனனா தனதன தனனா தனதன தனனா ...... தனதான
கெஜநடை மடவார் வசமதி லுருகா கிலெசம துறுபாழ் ...... வினையாலே கெதிபெற நினையா துதிதனை யறியா கெடுசுக மதிலாழ் ...... மதியாலே தசையது மருவீ வசையுட லுடனே தரணியில் மிகவே ...... யுலைவேனோ சததள மலர்வார் புணைநின கழலார் தருநிழல் புகவே ...... தருவாயே திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய் திருநெடு கருமால் ...... மருகோனே திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார் திரிபுரை யருள்சீர் ...... முருகோனே நிசிசர ருறைமா கிரியிரு பிளவா நிறையயில் முடுகா ...... விடுவோனே நிலமிசை புகழார் தலமெனு மருணா நெடுமதில் வடசார் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
392
திருவருணை அருக்கார் நலத்தை
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் ...... தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக் கடுத்தாசை பற்றித் ...... தளராதே அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட் டறப்பே தகப்பட் ...... டழியாதே கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக் கலிச்சா கரத்திற் ...... பிறவாதே கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக் கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட் டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட் டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச் செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற் றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
393
திருவருணை அருமா மதனை
தனனா தனனத் தனனா தனனத் தனனதா தனனத் ...... தனதான
அருமா மதனைப் பிரியா தசரக் கயலார் நயனக் ...... கொடியார்தம் அழகார் புளகப் புழுகார் சயிலத் தணையா வலிகெட் ...... டுடல்தாழ இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் றிளையா வுளமுக் ...... குயிர்சோர எரிவாய் நரகிற் புகுதா தபடிக் கிருபா தமெனக் ...... கருள்வாயே ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா உறைமா னடவிக் குறமா மகளுக் குருகா றிருபொற் ...... புயவீரா திருமால் கமலப் பிரமா விழியிற் றெரியா வரனுக் ...... கரியோனே செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் றிருவீ தியினிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
394
திருவருணை அழுதும் ஆவா
தனதனா தானனத் தனதனா தானனத் தனதனா தானனத் ...... தனதான
அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக் கவசமா யாதரக் ...... கடலூடுற் றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் கறியொணா மோனமுத் ...... திரைநாடிப் பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப் பெரியஆ தேசபுற் ...... புதமாய பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப் படியுமா றாயினத் ...... தனசாரம் பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப் பரமமா யூரவித் ...... தகவேளே பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற் பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப் புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப் பொருதவே லாயுதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
395
திருவருணை ஆனை வரிக் கோடு
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் ...... தனதானா
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட் டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட் டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத் தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட் சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச் சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத் தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத் தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த் தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
396
திருவருணை இடருக்கு இடர்
தனனத் தனதானன தனனத் தனதானன தனனத் தனதானன ...... தனதான
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே இயலைத் தருகானக முயலைத் தருமேனியி லெரியைத் தருமாமதி ...... நிலவாலே தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை தொலையத் தனிவீசிய ...... கடலாலே துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர் துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை மடியச் சுடஏவிய ...... வடிவேலா மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள் மகிழப் புனமேவிய ...... மயில்வீரா அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய லருணைத் திருவீதியி ...... லுறைவோனே அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
397
திருவருணை இமராஜன் நிலாவது
தனதாதன தானன தத்தம் ...... தனதான தனதாதன தானன தத்தம் ...... தனதான
இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
398
திருவருணை இரத சுரதமுலை
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான
இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி ...... அதிசுகக் கலையாலே புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி ...... விடஅருட் புரிவாயே பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர் பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று ...... கவிதையைப் புனைவோனே அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற் புடையோனே அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
399
திருவருணை இரவுபகற் பலகாலும்
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
400
திருவருணை இருவர் மயலோ
தனன தனனா தனன தனனா தனன தனனா ...... தனதான
இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ ...... அணுகாத இருடி அயன்மா லமர ரடியா ரிசையு மொலிதா ...... னிவைகேளா தொருவ னடியே னலறு மொழிதா னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ உனது பததூள் புவன கிரிதா னுனது கிருபா ...... கரமேதோ பரம குருவா யணுவி லசைவாய் பவன முதலா ...... கியபூதப் படையு முடையாய் சகல வடிவாய் பழைய வடிவா ...... கியவேலா அரியு மயனோ டபய மெனவே அயிலை யிருள்மேல் ...... விடுவோனே அடிமை கொடுநோய் பொடிகள் படவே அருண கிரிவாழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
401
திருவருணை இருவினை அஞ்ச
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க ...... மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ ...... டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த ...... அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ ...... டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் ...... தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=qUvMB8c0AnI
Add (additional) Audio/Video Link
Back to Top
402
திருவருணை இருவினை ஊண்
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த ...... தனதான
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக் குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென் றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும் அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங் கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
403
திருவருணை இருளளகம் அவிழ
தனதனன தனதனன தான தத்த தந்த தனதனன தனதனன தான தத்த தந்த தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான
இருளளக மவிழமதி போத முத்த ரும்ப இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள் இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும் எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும் முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக அருளுமரி திருமருக வார ணத்தை யன்று அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
404
திருவருணை இறுகு மணி முலை
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான
இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி ...... நிலவாலே இரவி யெனதுயிர் கவர வருகுழ லிசையி லுறுகட ...... லலையாலே தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு சரமி லெளியெனு ...... மழியாதே தருண மணிபொழி லருணை நகருறை சயில மிசையினில் ...... வரவேணும் முறுகு திரிபுர மறுகு கனலெழ முறுவ லுடையவர் ...... குருநாதா முடிய கொடுமுடி யசுரர் பொடிபட முடுகு மரகத ...... மயில்வீரா குறவர் மடமக ளமுத கனதன குவடு படுமொரு ...... திருமார்பா கொடிய சுடரிலை தனையு மெழுகடல் குறுக விடவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
405
திருவருணை உலையிலனல்
தனதனன தத்த தனதனன தத்த தனதனன தத்த ...... தனதான
உலையிலன லொத்த வுடலினனல் பற்றி யுடுபதியை முட்டி ...... யமுதூற லுருகிவர விட்ட பரமசுக முற்று வுனதடியை நத்தி ...... நினையாமற் சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு திகழ்முகவர் முத்து ...... நகையாலே சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத் திருடனென வெட்கி ...... யலைவேனோ கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட கனகமயில் விட்ட ...... கதிர்வேலா கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட கதவமண ருற்ற ...... குலகாலா அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
406
திருவருணை கடல்பரவு தரங்க
தனதனன தனந்த தானன ...... தந்ததான தனதனன தனந்த தானன ...... தந்ததான
கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
407
திருவருணை கமலமுகப் பிறை
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற் கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல் கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற் கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங் குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக் குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக் கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக் குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட் டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம் செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட் டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித் துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத் தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற் சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
408
திருவருணை கமல மொட்டை
தனன தத்தத் தத்த தத்தத் தனதன தனன தத்தத் தத்த தத்தத் தனதன தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான
கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற ...... இளநீரைக் கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத ...... னபிஷேகம் அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ ...... டிருதாளம் அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ...... ளுறவாமோ தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட ...... எனவோதிச் சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள் தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ...... கழுகாட அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ...... மயிலோனே அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
409
திருவருணை கரிமுகக் கடகளிறு
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் ...... கடியானை கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் கனிவயிற் றினிலடக் ...... கியவேழம் அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக் கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன் நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற் கரியுரித் தணிபவற் ...... கொருசேயே துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத் துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச் சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற் சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
410
திருவருணை கரு நிறம் சிறந்து
தனன தந்தனம் தனதன தனதன தனன தந்தனம் தனதன தனதன தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன மதன தந்திரங் கடியன கொடியன கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும் கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன் செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம் தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை கலக லன்கலின் கலினென இருசரண் மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய் வலிய சிங்கமுங் கரடியு முழுவையு முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக சதத ளம்பணிந் ததிவித கலவியு ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
411
திருவருணை காணாத தூர நீள்
தானான தான தானான தான தானான தான ...... தந்ததான
காணாத தூர நீணாத வாரி காதார வாரம ...... தன்பினாலே காலாளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல் நாணான தோகை நூலாடை சோர நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே நானாப வாத மேலாக ஆக நாடோறும் வாடிம ...... யங்கலாமோ சோணாச லேச பூணார நீடு தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா தோலாத வீர வேலால டாத சூராளன் மாளவெ ...... குண்டகோவே சேணாடர் லோகம் வாழ்மாதி யானை தீராத காதல்சி ...... றந்தமார்பா தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
412
திருவருணை காராடக் குழல்
தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான
காரா டக்குழ லாலா லக்கணை கண்கள்சு ழன்றிட வேமு கங்களி னாலா பச்சிலை யாலே மெற்புசி மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள காதா டக்கலன் மேலா டக்குடி யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர் காசா சைச்செய லாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் போலே நற்றெரு வூடா டித்துயல் தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட கால்தா விச்சதி யோடே சித்திர மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச் சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை வந்துக லந்துயி ரோட வங்கமொ டூடா டிப்பல நோயோ டுத்தடி கொண்டுகு ரங்கென வேந டந்துசொல் சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச் சேரா மற்பொறி கேளா மற்செவி துன்பமொ டின்பமு மேம றந்துபின் ஊரார் சுற்றமு மாதோர் மக்களு மண்டியு மண்டையு டேகு விந்திது சீசீ சிச்சிசி போகா நற்சனி யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ மாரோன் முப்புர நீறா யுற்றிட அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை கங்கையி ளம்பிறை யார ணிந்தவர் மாடே றிக்கட லாலா லத்தையு முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி யம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா மக்கலை ரூபாள் முக்கணி ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள் மாஞா னக்கும ராதோ கைப்பரி யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச் சூரார் மக்கிட மாமே ருக்கிட அங்கட லெண்கிரி யோடி பங்கொடு தீபே ழற்றிட பாதா ளத்துறை நஞ்சர வின்பண மாயி ரங்கெட சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா சோர்வே தத்தலை மேலா டிச்சுக பங்கய செங்கர மோட கம்பெற வாகா னக்குற மாதோ டற்புத மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல் தூணோ டிச்சுட ராகா சத்தைய ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
413
திருவருணை காரும் மருவும்
தானதன தந்ததன தானதன தந்ததன தானதன தந்ததன ...... தந்த தனதான
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே காலடர வம்பமளி மேலடர வந்துபொரு காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
414
திருவருணை கீத விநோத மெச்சு
தான தனான தத்த ...... தனதான தான தனான தத்த ...... தனதான
கீத விநோத மெச்சு ...... குரலாலே கீறு மையார் முடித்த ...... குழலாலே நீதி யிலாத ழித்து ...... முழலாதே நீமயி லேறி யுற்று ...... வரவேணும் சூதமர் சூர ருட்க ...... பொருசூரா சோண கிரீயி லுற்ற ...... குமரேசா ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
415
திருவருணை குரவ நறும் அளக
தனதனன தனதனன தானத் தாத்தன தனதனன தனதனன தானத் தாத்தன தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான
குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான் பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய புலையனிவ னெனவுலக மேசப் போக்கென பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர் தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில் துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
416
திருவருணை குழவியுமாய் மோகம்
தனதன தானான தானன தனதன தானான தானன தனதன தானான தானன ...... தனதான
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக் குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப் பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப் பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன் இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய் அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர் அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
417
திருவருணை கேதகையபூ முடித்த
தானதன தானதத்த தானதன தானதத்த தானதன தானதத்த ...... தனதான
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று கேவலம தானஅற்ப ...... நினைவாலே கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில் மேதினியெ லாமுழற்று ...... மடியேனை வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த நீலநிற மால்தனக்கு ...... மருகோனே சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள் சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
418
திருவருணை கோடு ஆன மடவார்கள்
தானான தனதான ...... தனதான
கோடான மடவார்கள் ...... முலைமீதே கூர்வேலை யிணையான ...... விழியூடே ஊடாடி யவரோடு ...... முழலாதே ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே நீடாழி சுழல்தேசம் ...... வலமாக நீடோடி மயில்மீது ...... வருவோனே சூடான தொருசோதி ...... மலைமேவு சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
419
திருவருணை கோடு செறி
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த தானதன தத்த தத்த ...... தனதான
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார் கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு நீறெழமி தித்த நித்த ...... மனதாலே நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும் ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
420
திருவருணை சிலைநுதல் வைத்து
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச் செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப் புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர் பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம் புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங் கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர் அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர் தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும் அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
421
திருவருணை சிவமாதுடனே
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே ...... பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா ...... மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே ...... மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா ...... அருள்வாயே தவலோ கமெலா முறையோ வெனவே தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் தலைதூள் படஏழ் கடல்தூள் படமா தவம்வாழ் வுறவே ...... விடுவோனே கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் கடனா மெனவே ...... அணைமார்பா கடையேன் மிடிதூள் படநோய் விடவே கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
422
திருவருணை சினமுடுவல் நரிகழுகு
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான
சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங் கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ் செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந் தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ் சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன் கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங் குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன் கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம் புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங் கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் ...... சிந்தியாதோ தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந் தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண் கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச் சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந் திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன் செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத் திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங் கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந் திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
423
திருவருணை சுக்கிலச் சுரொணித
தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி னத்தி லப்புவென ரத்த முற்றிசுக சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை ...... வந்துகோலத் தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர் கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக் கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு றத்தி கற்பகவ னத்தி சித்தமவை தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
424
திருவருணை செஞ்சொற் பண்
தந்தத் தந்தத் தனதன தானன தந்தத் தந்தத் தனதன தானன தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை கும்பத் தந்திக் குவடென வாலிய தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி சிந்திக் கந்தித் திடுகளை யாமுன தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய வந்தித் திந்தப் படிமட வாரொடு கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன் நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர் நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர நந்திக் கம்பத் தெழுநர கேசரி நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர் பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
425
திருவருணை செயசெய அருணா
தனதன தனனாத் தனதன தனனத் தனதன தனனாத் தனதன தனனத் தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான
செயசெய அருணாத் திரிசிவ யநமச் செயசெய அருணாத் திரிமசி வயநச் செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா செயசெய அருணாத் திரியந மசிவச் செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி செயசெய அருணாத் திரிதனின் விழிவைத் தரகர சரணாத் திரியென உருகிச் செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச் சிவசிவ சரணாத் திரிசெய செயெனச் சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ செயசெய சரணாத் திரியென முநிவர்க் கணமிது வினைகாத் திடுமென மருவச் செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க் கடிதலை தெரியாப் படிநிண அருணச் சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே செயசெய சரணாத் திரியெனு மடியெற் கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற் றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக் குறமகள் முலைமேற் புதுமண மருவிச் சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lelt4adBABs
Add (additional) Audio/Video Link
Back to Top
426
திருவருணை தமரம் குரங்களும்
தனன தனந்தனந் தான தத்த தந்த தனன தனந்தனந் தான தத்த தந்த தனன தனந்தனந் தான தத்த தந்த ...... தனதனத் தனதான
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு ...... முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க ...... மரணபக் குவமாநாள் கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க ...... தமுமடற் சுடர்வேலுங் கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து ...... வரமெனக் கருள்கூர்வாய் இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு ...... மியல்நிமிர்த் திடுவோனே இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த ...... அயிலுடைக் கதிர்வேலா அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த ...... அடியவர்க் கெளியோனே அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த ...... அறுமுகப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
427
திருவருணை தமிழோதிய குயிலோ
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங் கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந் தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந் தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந் திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின் சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக் குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ் சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங் கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர் குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ் சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின் கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் ...... றியல்பேரி திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங் கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின் சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண் தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண் கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண் சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின் கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
428
திருவருணை தலையை மழித்து
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த ...... தனதான
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
429
திருவருணை திருட்டு வாணிப
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார் சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள் சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால் விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள் தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனோ தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந் தடக்கை தாளமு மிட்டியல் மத்தள மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம் அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண ...... அறவேதான் அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும் அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
430
திருவருணை தேதென வாச முற்ற
தானன தான தத்த தானன தான தத்த தானன தான தத்த ...... தனதான
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு தேனளி சூழ மொய்த்த ...... மலராலே சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த பூவையை நீய ணைக்க ...... வரவேணும் மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள் வாரண மான தத்தை ...... மணவாளா மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில் வேலடை யாள மிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
431
திருவருணை தோதகப் பெரும்
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
432
திருவருணை பாண மலரது
தான தனதன தத்தம் ...... தனதான
பாண மலரது தைக்கும் ...... படியாலே பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான் சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
433
திருவருணை பாலாய் நூலாய்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம் பாடா வாடா வேடா வாலே பாடா யீடற் ...... றிடைபீறுந் தோலா லேகா லாலே யூனா லேசூழ் பாசக் ...... குடில்மாசு தோயா மாயா வோயா நோயால் சோர்வாய் மாளக் ...... கடவேனோ ஞாலா மேலா வேதா போதா நாதா சோதிக் ...... கிரியோனே ஞானா சாரா வானாள் கோனே நானா வேதப் ...... பொருளோனே வேலா பாலா சீலா காரா வேளே வேடக் ...... கொடிகோவே வீரா தாரா ஆறா தாரா வீரா வீரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
434
திருவருணை புணர்முலை மடந்தை
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான
புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக பொறியுட லிறந்து போன ...... தளவேதுன் புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும் பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப் பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படைகட லிறந்து போக ...... விடும்வேலா அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
435
திருவருணை புலையனான
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன் புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன் நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி ...... குலபாதன் நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல் நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள் சிதையு மாறு போராடி ...... யொருசீதை சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு திறமி யான மாமாயன் ...... மருகோனே அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி அமர தாடி யேதோகை ...... மயிலேறி அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும் அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
436
திருவருணை போக கற்ப
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் ...... தத்த தனதான
போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப் பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும் போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத் தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத் த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித் தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித் தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும் ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித் தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச் சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச் சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
437
திருவருணை மானை விடத்தை
தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் மீனை நிரப்பிக் குனித்து விட்டணை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை வாளை வனத்துற் பலத்தி னைச்செல மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர் மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு வூறு முபத்தக் கருத்த டத்தினை யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு பாதி யையொப்பித் துனிப்ப வத்தற வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ சான கிகற்புத் தனைச்சு டத்தன சோக வனத்திற் சிறைப்ப டுத்திய தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல் வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி லானை மதத்துக் கிடக்கு மற்புத சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர் சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
438
திருவருணை முகத் துலக்கிகள்
தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான
முகத்து லக்கிக ளாசா ரவினிகள் விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள் முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்றமூடர் செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள் திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள் சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத் திரட்பொ றிச்சிகள் மாபா விகளப கடத்த சட்டைகள் மூதே விகளொடு திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன் தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ எனவொரு துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும் அகத்தி யப்பனு மால்வே தனும்அறம் வளர்த்த கற்பக மாஞா லியுமகி ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ முறித்து ழக்கிய வானோர் குடிபுக அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
439
திருவருணை மேக மொத்தகுழலார்
தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன ...... தனதான
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ வாளி யொத்தவிழி யார்மு கக்கமல மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம் வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர் தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள் சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச் சூத கச்சரச மோடெ யெத்திவரு வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல் தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ சேக ணச்செகண தோதி மித்திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை தேச முட்கவர ஆயி ரச்சிரமு மூளி பட்டுமக மேரு வுக்கவுணர் தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா ஆக மத்திபல கார ணத்தியெனை யீண சத்திஅரி ஆச னத்திசிவ னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
440
திருவருணை மொழிய நிறம்
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த தனதன தந்ததத்த ...... தனதான
மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி முடியவ ளைந்தரற்று ...... கடலாலும் முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள் முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும் மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும் அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி னமுதத னம்படைத்த ...... திருமார்பா அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
441
திருவருணை வலிவாத பித்தமொடு
தனதான தத்ததன தனதான தத்ததன தனதான தத்ததன ...... தனதான
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம் மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை தெளியாவெ னக்குமினி ...... முடியாதே சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ சிவஞான சித்திதனை ...... யருள்வாயே தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு சுகவாரி சித்தனருள் ...... முருகோனே அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும் அருணா சலத்திலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
442
திருவருணை விடு மதவேள்
தனதன தானாதன தனதன தானாதன தனதன தானாதன ...... தனதான
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல விழிகொடு வாபோவென ...... வுரையாடும் விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள் ம்ருகமத கோலாகல ...... முலைதோய அடையவு மாசாபர வசமுறு கோமாளியை அவனியு மாகாசமும் ...... வசைபேசும் அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை அடியவ ரோடாள்வது ...... மொருநாளே வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம் வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம மரகத நாராயணன் மருமக சோணாசல மகிபச தாகாலமு ...... மிளையோனே உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற உலகுய வாரார்கலி ...... வறிதாக உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
443
திருவருணை விதி அதாகவே
தனன தானன தனன தானனா தனன தானனம் ...... தனதான
விதிய தாகவெ பருவ மாதரார் விரகி லேமனந் ...... தடுமாறி விவர மானதொ ரறிவு மாறியே வினையி லேஅலைந் ...... திடுமூடன் முதிய மாதமி ழிசைய தாகவே மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு முறைமை யாகநி னடிகள் மேவவே முனிவு தீரவந் ...... தருள்வாயே சதிய தாகிய அசுரர் மாமுடீ தரணி மீதுகுஞ் ...... சமராடிச் சகல லோகமும் வலம தாகியே தழைய வேவருங் ...... குமரேசா அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரந் ...... தனில்மேவி அருணை மீதிலெ மயிலி லேறியே அழக தாய்வரும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
444
திருவருணை விந்துப் புளகித
தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான
விந்துப் புளகித இன்புற் றுருகிட சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு மெழுக்கி லுருவென வலித்து எழுமதி கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில் விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர் வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு விதித்த முறைபடி படித்து மயல்கொள தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச் சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ டணைத்து மலரிதழ் கடித்து இருகர மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர் சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர் சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல் வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித் தன்கைத் தடிகொடு குந்திக் கவியென உந்திக் கசனம றந்திட் டுளமிக சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி விழிப்பு மறைபட கிடத்தி மனையவள் சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில் சண்டக் கருநம னண்டிக் கொளுகயி றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு ...... முடலாமோ திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம் ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள் சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த தும்பக் கருடன டங்கொட் டிடகொடி மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள் நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட சிமக்கு முரகனு முழக்கி விடபட மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய் தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர் தொடுத்த மதனுரு பொடித்த விழியினர் மிகுத்த புரமதை யெரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட் டவரிட சுகத்தி மழுவுழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள் சுகிப்ப மணவறை களிக்க அணையறு முகத்தொ டுறமயல் செழித்த திருபுய செம்பொற் கரகம லம்பத் திருதல மம்பொற் சசியெழ சந்தப் பலபடை செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள் தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில் தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
445
திருவருணை வீறு புழுகான பனி
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு மேருகிரி யானகொடு ...... தனபார மீதுபுர ளாபரண சோதிவித மானநகை மேகமனு காடுகட ...... லிருள்மேவி நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள நாணமழி வார்களுட ...... னுறவாடி நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின் ஞானசிவ மானபத ...... மருள்வாயே கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய கோலமயி லானபத ...... மருள்வோனே கூடஅர னோடுநட மாடரிய காளியருள் கூருசிவ காமியுமை ...... யருள்பாலா ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன மாரவிளை யாடிமண ...... மருள்வோனே ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
446
திருக்காளத்தி சரக்கு ஏறி இத்த
தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப் பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச் சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற் சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக் குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக் குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக் குறித்தே முத்திக் குமறா வின்பத் தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய் புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக் கழைச்சா பத்தைச் சடலா னுங்கப் புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத் தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப் புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே திருக்கா னத்திற் பரிவோ டந்தக் குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத் திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட் புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற் றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
447
திருக்காளத்தி சிரத்தானத்தி
தனத்தா தத்தத் ...... தனதான தனத்தா தத்தத் ...... தனதான
சிரத்தா னத்திற் ...... பணியாதே செகத்தோர் பற்றைக் ...... குறியாதே வருத்தா மற்றொப் ...... பிலதான மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய் நிருத்தா கர்த்தத் ...... துவநேசா நினைத்தார் சித்தத் ...... துறைவோனே திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
448
திருக்காளத்தி பங்கயனார்
தந்தன தானத் தனந்த தானன தந்தன தானத் தனந்த தானன தந்தன தானத் தனந்த தானன தனதான
பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர அண்டம தாயுற் றிருந்த பார்மிசை பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே பந்தம தாகப் பிணிந்த ஆசையில் இங்கித மாகத் திரிந்து மாதர்கள் பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை வந்துடல் மூடக் கலங்கி டாமதி தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே சங்கரர் வாமத் திருந்த நூபுர சுந்தரி யாதித் தருஞ்சு தாபத தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே திங்களு லாவப் பணிந்த வேணியர் பொங்கர வாடப் புனைந்த மார்பினர் திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார் சிந்துவி லேயுற் றெழுந்த காளவி டங்கள மீதிற் சிறந்த சோதியர் திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா சிங்கம தாகத் திரிந்த மால்கெரு வம்பொடி யாகப் பறந்து சீறிய சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன் செங்கதி ரோனைக் கடிந்த தீவினை துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
449
சிதம்பரம் கனகசபை மேவும்
தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
450
சிதம்பரம் கைத்தருண சோதி
தத்ததன தான தத்ததன தான தத்ததன தான ...... தனதான
கைத்தருண சோதி யத்திமுக வேத கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் சித்ரமுக மாறு முத்துமணி மார்பு திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் துப்புவளி யோடு மப்புலியுர் மேவு சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
451
சிதம்பரம் இருவினையின் மதி
தனதனன தனன தந்தத் ...... தனதானா தனதனன தனன தந்தத் ...... தனதானா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே கனகசபை மருவு கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
452
சிதம்பரம் குகனே குருபரனே
தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் ...... தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா கயிலை மலைதனி லாடிய தந்தைக் குருக மனமுன நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
453
சிதம்பரம் வண்டையொத்து
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்ரீவம் மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள் கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல் கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ் குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன் அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம் அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள் கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர் கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர் கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால் கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
454
சிதம்பரம் கங்குலின் குழல்
தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான
கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம் கந்த ரந்தரித் தாடு கொங்கைக ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல அங்க மைந்திடைப் பாளி தங்கொடு குந்தி யின்குறைக் கால்ம றைந்திட அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும் அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல் அங்கை பொன்பறிக் கார பெண்களொ டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ சங்கு பொன்தவிற் காள முந்துரி யங்கள் துந்துமிக் காட திர்ந்திட சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம் சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச் செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ அந்த கன்புரத் தேற வஞ்சகர் செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே திங்க ளொண்முகக் காமர் கொண்டவன் கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
455
சிதம்பரம் கொந்தளம் புழு
தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர் கொந்த ணங்குழ லின்ப மஞ்சள ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே வந்து பஞ்சணை யின்ப முங்கொடு கொங்கை யும்புய முந்த ழும்புற மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய் வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டு டன்பல சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு செம்பு ளங்கரு டன்ப ருந்துகள் செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா திங்க ளிந்திர னும்ப ரந்தர ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
456
சிதம்பரம் மந்தரமென் குவடார்
தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன ...... தந்ததான
மந்தர மென்குவ டார்த னங்களி லார மழுந்திட வேம ணம்பெறு சந்தன குங்கும சேறு டன்பனி நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல் வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை வாட நடம்புரி வார்ம ருந்திடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் மோக னவஞ்சியர் போல கம்பெற வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர் போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச் சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர் வாரு மெனும்படி யால கங்கொடு பண்சர சங்கொள வேணு மென்றவர் சேம வளந்துறு தேன ருந்திட துன்றுபொ னங்கையின் மீது கண்டவ ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால் துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய புண்குட வன்கடி யோடி ளஞ்சனி சூலை மிகுந்திட வேப றந்துடல் துஞ்சிய மன்பதி யேபு குந்துய ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய் அந்தர துந்துமி யோடு டன்கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய ரிந்திர சந்திரர் சூரி யன்கவி வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி அம்புய னந்திரு மாலொ டிந்திரை வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர் அம்பர ரம்பைய ரோடு டன்திகழ் மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர் அம்புவி மங்கைய ரோட ருந்ததி மாதர் புகழ்ந்திட வேந டம்புரி அம்புய செம்பதர் மாட கஞ்சிவ காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தன னாவெ னும்பறை செந்தவில் சங்குட னேமு ழங்கசு ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில் வாழு மிளங்கொடி யாள்ப தங்களில் வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு தாள ழகங்கையின் வேலு டன்புவி செம்பொனி னம்பல மேல கம்பிர கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
457
சிதம்பரம் வந்து வந்துவித்தூறி
தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான
வந்து வந்துவித் தூறி யென்றனுடல் வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும் எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி சுந்த ரந்திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய் அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத் தோட கெந்தருவ ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன் அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற மங்கை யின்புறத் தோள ணைந்துருக சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே சிந்தி முன்புரக் காடு மங்கநகை கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ் செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
458
சிதம்பரம் கதித்துப் பொங்கலு
தனத்தத்தம் தனத்தத்தத் தனத்தத்தம் தனத்தத்தத் தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான
கதித்துப்பொங் கலுக்கொத்துப் பணைத்துக்கொம் பெனத்தெற்றிக் கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின் கழுத்தைப்பண் புறக்கட்டிச் சிரித்துத்தொங் கலைப்பற்றிக் கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர் பதித்துத்தந் தனத்தொக்கப் பிணித்துப்பண் புறக்கட்டிப் பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப் பறித்துப்பின் துரத்துச்சொற் கபட்டுப்பெண் களுக்கிச்சைப் பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற் கொதித்துச்சங் கரித்துப்பற் கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக் கழித்துப்பண் டமர்க்குச்செப் பதத்தைத்தந் தளித்துக்கைக் கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா சிதைத்திட்டம் புரத்தைச்சொற் கயத்தைச்சென் றுரித்துத்தற் சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ் செவிக்குச்செம் பொருட்கற்கப் புகட்டிச்செம் பரத்திற்செய்த் திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
459
சிதம்பரம் சிரித்துச் சங்கொளி
தனத்தத் தந்தன தானன தானன தனத்தத் தந்தன தானன தானன தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான
சிரித்துச் சங்கொளி யாமின லாமென வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச் சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல் புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே அருக்கிப் பண்புற வேகலை யால்முலை மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி மினுக்கிச் சந்தன வாசனை சேறுட னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ இரைத்துப் பண்டம ராவதி வானவ ரொளித்துக் கந்தசு வாமிப ராபர மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள் இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா சிரித்திட் டம்புர மேமத னாருட லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே திருச்சித் தந்தனி லேகுற மானதை யிருத்திக் கண்களி கூர்திக ழாடக திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
460
சிதம்பரம் தத்தையென்று
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான
தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர் பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள் சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச் சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர் சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர் சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர் முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர் சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால் தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர் கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர் ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில் தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
461
சிதம்பரம் தனத்தில் குங்குமத்தை
தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
தனத்திற்குங் குமத்தைச்சந் தனத்தைக்கொண் டணைத்துச்சங் கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன் தனிற்கொத்துந் தரித்துச்சுந் தரத்திற்பண் பழித்துக்கண் சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித் தரத்தைக்கொண் டசைத்துப்பொன் தகைப்பட்டுந் தரித்துப்பின் சிரித்துக்கொண் டழைத்துக்கொந் தளத்தைத்தண் குலுக்கிச்சங் கலப்புத்தன் கரத்துக்கொண் டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப் புனித்தப்பஞ் சணைக்கட்டிண் படுத்துச்சந் தனப்பொட்டுங் குலைத்துப்பின் புயத்தைக்கொண் டணைத்துப்பின் சுகித்திட்டின் புகட்டிப்பொன் சரக்கொத்துஞ் சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர் புணர்ப்பித்தும் பிடித்துப்பொன் கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன் திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண் சிறுப்பப்புண் பிடித்தப்புண் புடைத்துக்கண் பழுத்துக்கண் டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ சினத்துக்கண் சிவப்பச்சங் கொலிப்பத்திண் கவட்டுச்செங் குவட்டைச்சென் றிடித்துச்செண் டரைத்துக்கம் பிடிக்கப்பண் சிரத்தைப்பந் தடித்துக்கொண் டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச் செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங் களித்துக்கொண் டளிப்புட்பஞ் சிறக்கப்பண் சிரத்திற்கொண் டிறைத்துச்செம் பதத்திற்கண் திளைப்பத்தந் தலைத்தழ்த்தம் புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே பனித்துட்கங் கசற்குக்கண் பரப்பித்தன் சினத்திற்றிண் புரத்தைக்கண் டெரித்துப்பண் கயத்தைப்பண் டுரித்துப்பன் பகைத்தக்கன் தவத்தைச்சென் றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே படைத்துப்பொன் றுடைத்திட்பன் தனைக்குட்டும் படுத்திப்பண் கடிப்புட்பங் கலைச்சுற்றும் பதத்தப்பண் புறச்சிற்றம் பலத்திற்கண் களித்தப்பைம் புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
462
சிதம்பரம் திருடிகள் இணக்கி
தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான
திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள் சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர் செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள் செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக் குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள் குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள் நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள் குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர் இபமொடு வெதித்தச் சிங்க மும்பல இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா அரிகரி யுரித்திட் டங்க சன்புர மெரிதர நகைத்துப் பங்க யன்சிர மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல் குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
463
சிதம்பரம் கொந்தரம் குழல்
தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான
கொந்த ரங்குழ லிந்து வண்புரு வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர் கொந்த ளங்கதி ரின்கு லங்களி னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந் தந்த வந்தர ளஞ்சி றந்தெழு கந்த ரங்கமு கென்ப பைங்கழை தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந் தந்தி யின்குவ டின்த னங்களி ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர் தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர் தங்க டைந்தவ னஞ்சு மங்குலி மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும் வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன் வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன் உந்தி யின்புவ னங்க ளெங்கும டங்க வுண்டகு டங்கை யன்புக ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும் உம்ப லின்கலை மங்கை சங்கரி மைந்த னென்றய னும்பு கழ்ந்திட வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
464
சிதம்பரம் தியங்கும் சஞ்சலம்
தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான
தியங்குஞ்சஞ் சலந்துன்பங் கடந்தொந்தஞ் செறிந்தைந்திந் த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை திதம்பண்பொன் றிலன்பண்டன் தலன்குண்டன் சலன்கண்டன் தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப் புயங்கந்திங் களின்துண்டங் குருந்தின்கொந் தயன்றன்கம் பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி புகழ்ந்துங்கண் டுகந்துங்கும் பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும் புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய் இயம்புஞ்சம் புகந்துன்றுஞ் சுணங்கன்செம் பருந்தங்கங் கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர இடும்பைங்கண் சிரங்கண்டம் பதந்தந்தங் கரஞ்சந்தொன் றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா தயங்கும்பைஞ் சுரும்பெங்குந் தனந்தந்தந் தனந்தந்தந் தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ் சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந் தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
465
சிதம்பரம் பருவம் பணை
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த ...... தனதான
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற் படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும் பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
466
சிதம்பரம் மதவெம் கரி
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த ...... தனதான
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம் வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார் விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள் மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ் சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல் திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
467
சிதம்பரம் முகசந்திர புருவம்
தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில் முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத் துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித் தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும் சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில் மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
468
சிதம்பரம் சந்திர வோலை
தந்தன தானன தான தந்தன தந்தன தானன தான தந்தன தந்தன தானன தான தந்தன ...... தந்ததான
சந்திர வோலைகு லாவ கொங்கைகள் மந்தர மாலந னீர்த தும்பநல் சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத் தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை விண்புரு வாரிதழ் கோவை யின்கனி தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங் கந்தரர் தேமலு மார்ப ரம்பநல் சந்தன சேறுட னார்க வின்பெறு கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக் கண்களி கூரவெ காசை கொண்டவர் பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே இந்திர லோகமு ளாரி தம்பெற சந்திர சூரியர் தேர்ந டந்திட எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா இந்திரை கேள்வர்பி தாம கன்கதி ரிந்துச டாதரன் வாச வன்தொழு தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு பெண்கள்சி காமணி மோக வஞ்சியர் செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது செந்தமிழ் ஞானத டாக மென்சிவ கங்கைய ளாவும காசி தம்பர திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
469
சிதம்பரம் காய மாய வீடு
தான தான தான தானன தான தந்த தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங் காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய் வேயி லாய தோள மாமட வார்கள் பங்க யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே வேத கீத போத மோனமெய் ஞான நந்த முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
470
சிதம்பரம் அவகுண விரகனை
தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன ...... தந்ததான
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத கவடனை விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங் களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ மவுலியி லழகிய பாதாள லோகனு மரகத முழுகிய காகோத ராஜனு மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும் மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந் திருதரு கலவி மணாளா நமோநம திரிபுர மெரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
471
சிதம்பரம் கட்டி முண்டக
தத்த தந்ததன தான தந்ததன தத்த தந்ததன தான தந்ததன தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக் கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற் கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித் துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ எட்டி ரண்டுமறி யாத என்செவியி லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே செட்டி யென்றுசிவ காமி தன்பதியில் கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே செட்டி யென்றுவன மேவி யின்பரச சத்தி யின்செயலி னாளை யன்புருக தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
472
சிதம்பரம் நஞ்சினைப் போலுமன
தந்தனத் தானதன தந்தனத் தானதன தந்தனத் தானதன ...... தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன் நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை நங்களப் பாசரண ...... மென்றுகூறல் உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார் உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய் கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய் அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம் அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
473
சிதம்பரம் செம் கலச
தந்ததன ...... தனதான தந்ததன ...... தனதான
செங்கலச ...... முலையார்பால் சிந்தைபல ...... தடுமாறி அங்கமிக ...... மெலியாதே அன்புருக ...... அருள்வாயே செங்கைபிடி ...... கொடியோனே செஞ்சொல்தெரி ...... புலவோனே மங்கையுமை ...... தருசேயே மன்றுள்வளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
474
சிதம்பரம் கரிய மேகமெனும்
தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன தனன தான தனந்தன தானன ...... தந்ததான
கரிய மேக மெனுங்குழ லார்பிறை சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் கமுக க்ரீவர் புயங்கழை யார்தன மலைக ளாஇ ணையுங்குவ டார்கர கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை வரிய பாளி தமுந்துடை யாரிடை துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல் மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் மயில்கள் போல நடம்புரி வாரியல் குணமி லாத வியன்செய லார்வலை மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் சரியி லாத சயம்பவி யார்முகி லளக பார பொனின்சடை யாள்சிவை சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே சதப ணாம குடம்பொடி யாய்விட அவுணர் சேனை மடிந்திட வேயொரு தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா அரிய மேனி யிலங்கையி ராவணன் முடிகள் வீழ சரந்தொடு மாயவன் அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும் அழகு சோபி தஅங்கொளு மானன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
475
சிதம்பரம் கூந்தலாழ விரிந்து
தாந்த தானன தந்த தனந்தன தாந்த தானன தந்த தனந்தன தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான
கூந்த லாழவி ரிந்து சரிந்திட காந்து மாலைகு லைந்து பளிங்கிட கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங் கூண்க ளாமென பொங்கந லம்பெறு காந்தள் மேனிம ருங்குது வண்டிட கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச் சாந்து வேர்வின ழிந்து மணந்தப வோங்க வாகில்க லந்து முகங்கொடு தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந் தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் சேண்சு லாமகு டம்பொடி தம்பட வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில் சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன் வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
476
சிதம்பரம் அத்தன் அன்னை
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய ...... தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல லற்று நின்னை வல்ல ...... படிபாடி முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி முத்த னென்ன வுள்ள ...... முணராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
477
சிதம்பரம் இருள் காட்டு
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய ...... தனதான
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர் மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல இடுகாட்டி னெல்லை ...... நடவாத வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல் மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல குறவாட்டி புல்லு ...... மணிமார்பா அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
478
சிதம்பரம் முல்லைமலர் போலும்
தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம் மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல் கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல் வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல் தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல் என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல் அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல் தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
479
சிதம்பரம் அடப்பக்கம் பிடித்து
தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனத்தத் தந்தனத்தத் தானன தானன தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழூறல்க ...... ளதுகோதி அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள் படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப் பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள் பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை பரத்துற் றண்பதத்துப் போதக மீதென ...... அருள்தாராய் தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில் சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில் தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல் திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
480
சிதம்பரம் அக்குப் பீளை
தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன ...... தனதான
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர் சுக்கத் தாழ்கட லேசுக மாமென புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள் தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே துக்கத் தேபர வாமல்ச தாசிவ முத்திக் கேசுக மாகப ராபர சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந் தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா திக்கத் தோகண தாவென வேபொரு சொச்சத் தாதையர் தாமென வேதிரு செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச் செப்பொற் பீலியு லாமயில் மாமிசை பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
481
சிதம்பரம் ஆரத்தோடு அணி
தானத் தானன தானன தானன தானத் தானன தானன தானன தானத் தானன தானன தானன ...... தனதான
ஆரத் தோடணி மார்பிணை யானைகள் போருக் காமென மாமுலை யேகொடு ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர் ஆலைக் கோதினி லீரமி லாமன நேசத் தோடுற வானவர் போலுவர் ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே காருக் கேநிக ராகிய வோதிய மாழைத் தோடணி காதொடு மோதிய காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே காதற் சாகர மூழ்கிய காமுகர் மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள் காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே சூரர்க் கேயொரு கோளரி யாமென நீலத் தோகைம யூரம தேறிய தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே சோரிக் கேவெகு ரூபம தாவடு தானத் தானன தானன தானன சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா வீரத் தால்வல ராவண னார்முடி போகத் தானொரு வாளியை யேவிய மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே வேதத் தோன்முத லாகிய தேவர்கள் பூசித் தேதொழ வாழ்புலி யூரினில் மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
482
சிதம்பரம் காதைக் காதி
தானத் தான தத்த தானத் தான தத்த தானத் தான தத்த ...... தனதான
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற காமப் பூச லிட்டு ...... மதியாதே காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி னீழற் கேத ருக்கி ...... விளையாடிச் சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார் தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய் மாதைக் காத லித்து வேடக் கான கத்து வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன் வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ் மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
483
சிதம்பரம் கொள்ளை ஆசை
தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன ...... தனதான
கொள்ளை யாசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள் சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே கொல்லும் லீலைக் காரிகள் யாரையும் வெல்லு மோகக் காரிகள் சூதுசொல் கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே உள்ள நோவைத் தேயுற வாடியர் அல்லை நேரொப் பாமன தோஷிகள் உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன் உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு கையு நீபத் தார்முக மாறுமுன் உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே கள்ள மாயத் தாருகன் மாமுடி துள்ள நீலத் தோகையின் மீதொரு கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே கல்லி லேபொற் றாள்பட வேயது நல்ல ரூபத் தேவர கானிடை கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே தெள்ளி யேமுற் றீரமு னோதிய சொல்வ ழாமற் றானொரு வானுறு செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா தெள்ளு மேனற் சூழ்புன மேவிய வள்ளி வேளைக் காரம னோகர தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
484
சிதம்பரம் தாது மாமலர்
தான தானன தனனா தானன தான தானன தனனா தானன தான தானன தனனா தானன ...... தனதான
தாது மாமலர் முடியா லேபத றாத நூபுர அடியா லேகர தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே சாடை பேசிய வகையா லேமிகு வாடை பூசிய நகையா லேபல தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே மோதி மீறிய முலையா லேமுலை மீதி லேறிய கலையா லேவெகு மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார் மோக வாரிதி தனிலே நாடொறு மூழ்கு வேனுன தடியா ராகிய மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே காத லாயருள் புரிவாய் நான்மறை மூல மேயென வுடனே மாகரி காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே காதல் மாதவர் வலமே சூழ்சபை நாத னார்தம திடமே வாழ்சிவ காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே வேத நூன்முறை வழுவா மேதினம் வேள்வி யாலெழில் புனைமூ வாயிர மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே வீறு சேர்வரை யரசாய் மேவிய மேரு மால்வரை யெனநீள் கோபுர மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
485
சிதம்பரம் எலுப்புத் தோல்
தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் வலித்துத் தோள்மலை ராவண னானவன் எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
486
சிதம்பரம் நீல மாமுகில்
தான தானன தான தானன தான தானன தான தானன தான தானன தான தானன ...... தனதான
நீல மாமுகில் போலும் வார்குழ லார்கள் மாலைகு லாவ வேல்கணை நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட நீடு மார்பணி யாட வோடிய கோடு போலிணை யாட நூலிடை நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக் காலி னூபுர வோசை கோவென ஆடி மால்கொடு நாணி யேவியர் காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர் காத லாயவ ரோடு பாழ்வினை மூழ்கி யேழ்நர காழு மூடனை காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே கோல மாமயி லேறி வார்குழை யாட வேல்கொடு வீர வார் கழல் கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க் கோடு கோவென ஆழி பாடுகள் தீவு தாடசு ரார்கு ழாமொடு கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா நாலு வேதமு டாடு வேதனை யீண கேசவ னார்ச கோதரி நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா ஞான பூமிய தான பேர்புலி யூரில் வாழ்தெய்வ யானை மானொடு நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
487
சிதம்பரம் வாத பித்தமொடு
தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான
வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்பு செவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி நீறு பட்டலற சூர வெற்பவுண ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா ஓந மச்சிவய சாமி சுத்தஅடி யார்க ளுக்குமுப காரி பச்சையுமை ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே ஆதி கற்பகவி நாய கர்க்குபிற கான பொற்சரவ ணாப ரப்பிரம னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே ஆசை பெற்றகுற மாதை நித்தவன மேவி சுத்தமண மாடி நற்புலியு ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
488
சிதம்பரம் சுரும்பு உற்ற
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான தனந்தத்த தனதான ...... தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந் துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும் அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும் அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும் கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி கரந்துற்ற மடமானி ...... னுடனேசார் கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில் களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர இதம்பெற்ற மயிலேறி ...... வருகொவே இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
489
சிதம்பரம் இணங்கித் தட்பொடு
தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள் மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள் இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும் இடும்பைப் பற்றிய தாமென மேயினர் பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர் இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும் பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள் மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள் பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே வணங்கச் சித்தமி லாதஇ ராவணன் சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர் குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள் பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள் சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
490
சிதம்பரம் விடுங்கைக்கு ஒத்த
தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே விரும்பத் தக்கன போகமு மோகமும் விளம்பத் தக்கன ஞானமு மானமும் வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில் இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல் கிடந்திட் டுத்தம ரானவர் கோவென இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும் இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன் நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன் குலங்கட் பட்டநி சாசரர் கோவென இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல் ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும் ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
491
சிதம்பரம் கொந்தள வோலைகள் ஆட
தந்தன தானன தானத்தம் தந்தன தானன தானத்தம் தந்தன தானன தானத்தம் ...... தனதான
கொந்தள வோலைக ளாடப்பண் சங்கொளி போல்நகை வீசித்தண் கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ...... டையென்மேகம் கொங்கெழு தோள்வளை யாடக்கண் செங்கயல் வாளிகள் போலப்பண் கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர் தந்திர மாமென வேகிப்பொன் தொங்கலொ டாரமு மாடச்செந் தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச் சம்பள மீதென வோதிப்பின் பஞ்சணை மேல்மய லாடச்சஞ் சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ...... செயல்தீராய் அந்தக னாருயிர் போகப்பொன் திண்புர மோடெரி பாயப்பண் டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி அண்டர்க ளோடட லார்தக்கன் சந்திர சூரியர் வீழச்சென் றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா சிந்துர மோடரி தேர்வர்க்கம் பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன் சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே செங்குற மாதுமி னாளைக்கண் டிங்கித மாயுற வாடிப்பண் செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
492
சிதம்பரம் நகையா லெத்திகள்
தனனா தத்தன தானத்தம் தனனா தத்தன தானத்தம் தனனா தத்தன தானத்தம் ...... தனதான
நகையா லெத்திகள் வாயிற்றம் பலமோ டெத்திகள் நாணற்றின் நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர் நடையா லெத்திக ளாரக்கொங் கையினா லெத்திகள் மோகத்தின் நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச் சிகையா லெத்திக ளாசைச்சங் கடியா லெத்திகள் பாடிப்பண் திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண் டுழல்வா ருக்குழல் நாயெற்குன் செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய் பகையா ருட்கிட வேலைக்கொண் டுவரா ழிக்கிரி நாகத்தின் படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா பணநா கத்திடை சேர்முத்தின் சிவகா மிககொரு பாகத்தன் பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே சுகஞா னக்கடல் மூழ்கத்தந் தடியே னுக்கருள் பாலிக்குஞ் சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா சுகரே சத்தன பாரச்செங் குறமா தைக்கள வால்நித்தஞ் சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
493
சிதம்பரம் எழுகடல் மணலை
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி ...... அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக ...... முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு ...... மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் ...... தருவாயே விழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு ...... முருகோனே விரிதல மெரிய குலகிரி நெரிய விசைபெறு மயிலில் ...... வருவோனே எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை யிரைகொளும் அயிலை ...... யுடையோனே இமையவர் முநிவர் பரவிய புலியு ரினில்நட மருவு ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=AmiWjIsCGKE
Add (additional) Audio/Video Link
Back to Top
494
சிதம்பரம் தறுகணன் மறலி
தனதன தனன தனதன தனன தனதன தனனாத் ...... தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ் சளமது தவிர அளவிடு சுருதி தலைகொடு பலசாத் ...... திரமோதி அறுவகை சமய முறைமுறை சருவி யலைபடு தலைமூச் ...... சினையாகும் அருவரு வொழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற் ...... கருள்வாயே நறுமல ரிறைவி யரிதிரு மருக நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே நதிமதி யிதழி பணியணி கடவுள் நடமிடு புலியூர்க் ...... குமரேசா கறுவிய நிருதர் எறிதிரை பரவு கடலிடை பொடியாப் ...... பொருதோனே கழலிணை பணியு மவருடன் முனிவு கனவிலு மறியாப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
495
சிதம்பரம் இரசபா கொத்தமொழி
தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர் எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர் எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல் மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர் மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ் வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள் முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர் முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள் முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ் அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
496
சிதம்பரம் இருளும் ஓர்கதிரணு
தனன தானன தனன தானன தனன தானன ...... தனதான
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ ...... னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக ...... வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென ...... தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை ...... யடிதாராய் பரம தேசிகர் குருவி லாதவர் பரவை வான்மதி ...... தவழ்வேணிப் பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் ...... அருள்பாலா மருவி நாயெனை யடிமை யாமென மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே மறைகு லாவிய புலியுர் வாழ்குற மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
497
சிதம்பரம் காவி உடுத்தும்
தான தனத்தம் தான தனத்தம் தான தனத்தம் ...... தனதான
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் ...... தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் ...... திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் ...... பரஞான தீப விளக்கங் காண எனக்குன் சீதள பத்மந் ...... தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரந் ...... தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ் சோலை சிறக்கும் ...... புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்குந் தோகை நடத்தும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
498
சிதம்பரம் கோதிக் கோதி
தானத் தானத் தாந்தன தானன தானத் தானத் தாந்தன தானன தானத் தானத் தாந்தன தானன ...... தனதான
கோதிக் கோதிக் கூந்தலி லேமலர் பாவித் தாகச் சாந்தணி வார்முலை கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக் கூவிக் கூவிக் காண்டிசை போலவெ நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர் கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ...... வருமோவென் றோதித் தோளிற் பூந்துகி லால்முலை மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர் ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி சூளைக் காரச் சாங்கமி லார்சில வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ...... லுறவாமோ வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் ...... விடும்வேலா வேளைச் சீறித் தூங்கலொ டேவய மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே நாதத் தோசைக் காண்டுணை யேசுடர் மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர் நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
499
சிதம்பரம் சகசம்பக் குடைசூழ்
தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன தனதந்தத் தனனா தனதன ...... தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல் மதவின்பத் துடனே பலபணி தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை தவளந்தப் புடனே கிடுகிடு நடைதம்பட் டமிடோல் பலவொலி சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ வெகுகும்பத் துடனே பலபடை கரகஞ்சுற் றிடவே வரஇசை வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும் விருமஞ்சித் திரமா மிதுநொடி மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித் திமிர்தங்கற் குவடோ டெழுகட லொலிகொண்டற் றுருவோ டலறிட திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா அகரம்பச் சுருவோ டொளியுறை படிகம்பொற் செயலா ளரனரி அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை மதிதுண்டப் புகழ்மான் மகளொடும் அருள்செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
500
சிதம்பரம் சகுட முந்தும்
தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் ...... தனதான
சகுடமுந்துங் கடலடைந்துங் குளமகிழ்ந்துந் தோய்சங்கங் கமுகடைந்தண் டமுதகண்டந் தரளகந்தந் தேர்கஞ்சஞ் சரமெனுங்கண் குமிழதுண்டம் புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர் சலசகெந்தம் புழுகுடன்சண் பகமணங்கொண் டேய்ரண்டந் தனகனம்பொன் கிரிவணங்கும் பொறிபடுஞ்செம் பேர்வந்தண் சலனசம்பொன் றிடைபணங்கின் கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை புகலல்கண்டஞ் சரிகரம்பொன் சரணபந்தந் தோதிந்தம் புரமுடன்கிண் கிணிசிலம்பும் பொலியலம்புந் தாள்ரங்கம் புணர்வணைந்தண் டுவரொடுந்தொண் டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன் புகழடைந்துன் கழல்பணிந்தொண் பொடியணிந்தங் காநந்தம் புனல்படிந்துண் டவசமிஞ்சுந் தவசர்சந்தம் போலுந்திண் புவனிகண்டின் றடிவணங்குஞ் செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய் திகுடதிந்திந் தகுடதந்தந் திகுடதிந்திந் தோதிந்தம் டகுடடண்டண் டிகுடடிண்டிண் டகுடடண்டண் டோடிண்டிண் டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி செககணஞ்சஞ் சலிகைபஞ்சம் பறைமுழங்கும் போரண்டஞ் சிலையிடிந்துங் கடல்வடிந்தும் பொடிபறந்துண் டோர்சங்கஞ் சிரமுடைந்தண் டவுணரங்கம் பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா அகிலஅண்டஞ் சுழலஎங்கும் பவுரிகொண்டங் காடுங்கொன் புகழ்விளங்குங் கவுரிபங்கன் குருவெனுஞ்சிங் காரங்கொண் டறுமுகம்பொன் சதிதுலங்குந் திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால் அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண் சரணமுங்கொண் டோதந்தம் புனைகுறம்பெண் சிறுமியங்கம் புணர்செயங்கொண் டேயம்பொன் அமைவிளங்கும் புலிசரம்பொன் திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
501
சிதம்பரம் சாந்துடனே புழுகு
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை மோந்துப யோதரம ...... தணையாகச் சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக காந்தமொ டூசியென ...... மடவார்பால் கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன் கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை பூண்டுற வாடுதின ...... முளதோதான் பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள் நீண்டிடு மாலொடய ...... னறியாது பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன் ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர் பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
502
சிதம்பரம் சுடரனைய திருமேனி
தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான ...... தனதான
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு ...... முகமாறும் சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை அதிசயமெ னருள்பாட ...... வரவேணும் விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன் மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
503
சிதம்பரம் தத்தை மயில்
தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர் சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம் வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர் சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
504
சிதம்பரம் துத்தி பொற்றன
தத்த தத்தன தான தானன தத்த தத்தன தான தானன தத்த தத்தன தான தானன ...... தனதான
துத்தி பொற்றன மேரு வாமென வொத்தி பத்திரள் வாகு வாயவிர் துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே சுக்கை மைக்குழ லாட நூலிடை பட்டு விட்டவிர் காம னாரல்குல் சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர் தத்தை பட்குர லோசை நூபுர மொத்த நட்டமொ டாடி மார்முலை சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே தர்க்க மிட்டுற வாடி யீளைநொய் கக்கல் விக்கல்கொ ளூளை நாயென சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச் சித்ர வித்தைய ராட வானவர் பொற்பு விட்டிடு சேசெ சேயென செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா செத்தி டச்சம னார்க டாபட அற்று தைத்தசு வாமி யாரிட சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே தெற்க ரக்கர்கள் தீவு நீறிட விட்ட அச்சுத ரீன மானொடு சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
505
சிதம்பரம் நாடா பிறப்பு
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி ...... வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன ...... தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி தோலா சனத்தியுமை ...... யருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த தோழா கடப்பமல ...... ரணிவோனே ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு மேராள் குறத்திதிரு ...... மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
506
சிதம்பரம் நாலு சதுரத்த பஞ்ச
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன ...... தந்ததான
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர் நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற் கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங் கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன் ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர் வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர் வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
507
சிதம்பரம் நீலக் குழலார்
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன ...... தனதான
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர் நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள் ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர் சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர் சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
508
சிதம்பரம் பனி போலத் துளி
தனனா தத்தன தனனா தத்தன தனனா தத்தன ...... தனதான
பனிபோ லத்துளி சலவா யுட்கரு பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப் படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த் தனமா தர்க்குழி விழுவார் தத்துவர் சதிகா ரச்சமன் ...... வருநாளிற் றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி தளர்மா யத்துய ...... ரொழியாதோ வினைமா யக்கிரி பொடியா கக்கடல் விகடா ருக்கிட ...... விடும்வேலா விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ மிகவே குட்டிய ...... குருநாதா நினைவோர் சித்தமொ டகலா மற்புகு நிழலாள் பத்தினி ...... மணவாளா நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
509
சிதம்பரம் மகரமொடுறு குழை
தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன ...... தனதான
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு தலைபறி யமணர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
510
சிதம்பரம் மச்ச மெச்சு
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த ...... தனதான
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம் மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும் இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு புத்தி மெத்த காட்டு ...... புனவேடன் பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
511
சிதம்பரம் மதிய மண்குண
தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக நகர முன்கலை கங்கை நால்குண மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண மதன முன்தரி சண்ட மாருத மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரென்றுசேருங் கதிர டங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் ரண்டு கால்மிசை ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங் கருணை யிந்திரி யங்கள் சோதிய அருண சந்திர மண்ட லீகரர் கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன் அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொ டைந்து பேரிகை டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம் அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ டிதவி தம்பெறு சிந்து பாடிட அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு உதிர மண்டல மெங்கு மாயொளி யெழகு மண்டியெ ழுந்து சூரரை உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ உறுசி னங்கொடெ திர்ந்த சேவக மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
512
சிதம்பரம் மருவு கடல்முகில்
தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.
மருவு கடல்முகி லனைய குழல்மதி வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி குமுத மலரித ழமுத மொழிநிரை தரள மெனுநகை மிடறு கமுகென வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர் வகைய விரலொடு கிளிகள் முகநக மெனவு மிகலிய குவடு மிணையென வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம் வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும் வடமு நிரைநிரை தரள பவளமொ டசைய பழுமர இலைவ யிறுமயி ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும் அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி மதன னுருதுடி யிடையு மினலென அரிய கடிதட மமிர்த கழைரச மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை மருவு தொடையிணை கதலி பரடுகொள் கணையு முழவென கமட மெழுதிய வட்டப் புத்தக மொத்துப் பொற்சர ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர் மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள் பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர் திலத மழிபட விழிகள் சுழலிட மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட திரையி லமுதென கழையில் ரசமென பலவில் சுளையென வுருக வுயர்மயல் சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும் வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச் செவியொ டொளிர்விழி மறைய மலசல மொழுக பலவுரை குழற தடிகொடு தெத்திப் பித்தமு முற்றித் தற்செய லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி லுவரி நிறமுடை நமனு முயிர்கொள செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு செனன மிதுவென அழுது முகமிசை அறைய அணைபவ ரெடென சுடலையில் சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ குருவி னுருவென அருள்செய் துறையினில் குதிரை கொளவரு நிறைத வசிதலை கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு முதல்வ ரிளகலை மதிய மடைசடை அருண வுழைமழு மருவு திருபுயர் கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத குமர னெனவிரு தொலியு முரசொடு வளையு மெழுகட லதிர முழவொடு கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக் குருகு கொடிசிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல் குமர குருபர குமர குருபர குமர குருபர எனவொ தமரர்கள் கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட குலவு நரிசிறை கழுகு கொடிபல கருட னடமிட குருதி பருகிட கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன் அரிய விழிகெட இருப தமுமுல கடைய நெடியவர் திருவு மழகியர் தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர செயமு மனவலி சிலைகை கொடுகர மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே திலத மதிமுக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர்பத சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர சிவைகொள் திருசர சுவதி வெகுவித சொருபி முதுவிய கிழவி யியல்கொடு செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு திரையி லமுதென மொழிசெய் கவுரியி னரிய மகனென புகழ்பு லிநகரில் செப்புப் பொற்றன முற்றப் பொற்குற தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
513
சிதம்பரம் மனமே உனக்குறுதி
தனனா தனத்ததன தனனா தனத்ததன தனனா தனத்ததன ...... தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில் வருவா யுரைத்தமொழி ...... தவறாதே மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு மனமாயை யற்றசுக ...... மதிபாலன் நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன் நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
514
சிதம்பரம் முத்த மோகன
தத்த தானன தத்தன தானன தத்த தானன தத்தன தானன தத்த தானன தத்தன தானன ...... தனதான
முத்த மோகன தத்தையி னார்குர லொத்த வாயித சர்க்கரை யார்நகை முத்து வாரணி பொற்குவ டார்முலை ...... விலைமாதர் மொக்கை போகசெ குத்திடு வார்பொருள் பற்றி வேறும ழைத்திடு வார்சிலர் முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச் சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே சித்தெ லாமொரு மித்துன தாறினம் வைத்து நாயென ருட்பெற வேபொருள் செப்பி யாறுமு கப்பரி வோடுணர் ...... வருள்வாயே தத்த னானத னத்தன தானெனு டுக்கை பேரிமு ழக்கிட வேகடல் சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா சத்தி லோகப ரப்பர மேசுர நிர்த்த மாடுக ழற்கரு ணாகர தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா துத்தி மார்முலை முத்தணி மோகன பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள் துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா சுட்டி நீலஇ ரத்தின மாமயி லுற்று மேவிய ருட்புலி யூர்வளர் சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
515
சிதம்பரம் பரமகுரு நாத
தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா
பரமகுரு நாத கருணையுப தேச பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை பகருமதி காரப் ...... பெருமாள்காண் திருவளரு நீதி தினமனொக ராதி செகபதியை யாளப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மருவையவை பூத தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண் ஒருபொருள தாகி அருவிடையை யூரு முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண் உகமுடிவு கால மிறுதிகளி லாத உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண் கருவுதனி லூறு மருவினைகள் மாய கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண் கனகசபை மேவி அனவரத மாடு கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
516
சோலை மேவிய குன்று வஞ்சமே கோடி
தந்தனா தான தானன தந்தனா தான தானன தந்தனா தான தானன ...... தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர் பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில் அன்றுதா னேவி வானவர் ...... சிறைமீள அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள் அண்டர்கோ வேப ராபர ...... முதல்வோனே கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய கொன்றையா னாளு மேமகிழ் ...... புதல்வோனே கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
517
கயிலைமலை திரு நிலம் மருவி
தனதன தனனத் தான தனதன தனனத் தான தனதன தனனத் தான ...... தனதான
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி சிவவழி யுடனுற் றேக ...... பரமீதே சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல திரிபுர மெரியத் தீயி ...... னகைமேவி இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர் பழமறை பணியச் சூல ...... மழுமானும் பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு பரியினை மலர்விட் டாடி ...... அடியார்கள் அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல மருள்செயு முமையிற் பாக ...... ரருள்பாலா அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ டடியவர் கயிலைக் கான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
518
கயிலைமலை தேனுந்து முக்கனிகள்
தானந் தனத்ததன தானந் தனத்ததன தானந் தனத்ததன ...... தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும் பழித்தசிவ ...... மருளூறத் தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ சீவன் சிவச்சொருப ...... மெனதேறி நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி நாதம் பரப்பிரம ...... வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ நாளுங் களிக்கபத ...... மருள்வாயே வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன் மாலும் பிழைக்கஅலை ...... விடமாள வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு மானின் கரத்தனருள் ...... முருகோனே தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது தானுண் கடப்பமல ...... ரணிமார்பா தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
519
கயிலைமலை நகைத்து உருக்கி
தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த ...... தனதான
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி ...... லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து ...... மொழியாலுந் திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை திரட்டி யெடுத்து ...... வரவேசெய் திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப் பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த ...... தனமாதை மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Nb-HJfWoNZM
Add (additional) Audio/Video Link
Back to Top
520
கயிலைமலை பனியின் விந்துளி
தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன ...... தனதான
பனியின் விந்துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப் பருவ முந்தலை கீழதாய் நழுவிநில மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி மனவி தந்தெரி யாமலே மலசலமொ டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய ...... செயல்மேவி வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும் அறம றந்தக மீதுபோய் தினதினமு மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய் தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ...... மவுணோர்கள் சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
521
கயிலைமலை புமி அதனில்
தனதனனத் ...... தனதான தனதனனத் ...... தனதான
புமியதனிற் ......ப்ரபுவான புகலியில்வித் ...... தகர்போல அமிர்தகவித் ...... தொடைபாட அடிமைதனக் ...... கருள்வாயே சமரிலெதிர்த் ...... தசுர்மாளத் தனியயில்விட் ...... டருள்வோனே நமசிவயப் ...... பொருளானே ரசதகிரிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
522
கயிலைமலை முகத்தைப் பிலுக்கி
தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த ...... தனதான
முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால் நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து நயத்துத் தியக்கி நித்த ...... மழிவேனோ செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும் செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன் மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
523
ஸ்ரீ சைலம் திருமலை ஒருபதும் இருபதும்
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத ...... முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியொடு வொளிபெற ...... விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது ...... புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே பரிவுட னழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை ...... பணியாரம் பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி ...... யிளையோனே பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள்தரு ...... குமரேசா பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திருமலை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
524
திருவேங்கடம் கறுத்ததலை வெளிறு
தனத்ததன தனதன தனந்த தனத்ததன தனதன தனந்த தனத்ததன தனதன தனந்த ...... தனதான
கறுத்ததலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க் கழுத்தடியு மடைய வளைந்து கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து ...... தடுநீர்சோர் உறக்கம்வரு மளவி லெலும்பு குலுக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து ...... தடிகாலாய் உரத்தநடை தளரு முடம்பு பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ சிறுத்தசெலு வதனு ளிருந்து பெருத்ததிரை யுததி கரந்து செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே செறித்தவளை கடலில் வரம்பு புதுக்கியிளை யவனோ டறிந்து செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி மறப்புரிசை வளையு மிலங்கை யரக்கனொரு பதுமுடி சிந்த வளைத்தசிலை விஜய முகுந்தன் ...... மருகோனே மலர்க்கமல வடிவுள செங்கை அயிற்குமர குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
525
திருவேங்கடம் சரவண பவநிதி
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://www.kaumaram.com/thiru/nnt0525_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
526
திருவேங்கடம் நெச்சுப் பிச்சி
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதான தனத்த தனத்த தனத்த தனத்தன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சுற் றறன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர் செருகிடு பரிமள நிறையுறை மதுகர ...... நெடிதாடி நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற் றொப்புக் கொப்புக் குயர்வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும் வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட் டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன் மதசிலை யதுவென மகபதி தனுவென மதிதில தமும்வதி ...... நுதன்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொற்பக் கத்திச் சையனாகி மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத மலரல திலைநிலை யெனமொழி தழியமெய் வழிபட லொழிவனை ...... யருள்வாயே நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத் துட்டக் கட்டத் தசிகாண நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில் நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில் நகைமுக திருவுறை ...... மணிமார்பன் நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத் தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த நரகரி யொருதிரு ...... மருகோனே கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப் பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு கனதன பரிமள முழுகுப னிருபுய கனகதி வியமணி ...... யணிமார்பா கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப் பட்சிக் கக்கொட் டசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு கடவட மலையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
527
திருவேங்கடம் கோங்கிள நீரிளக
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும் வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூருங் கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும் மாந்தளிர் போல்வடிவும் ...... மிகநாடிப் பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில் வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும் வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய் பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக பாண்டிய னீறணிய ...... மொழிவோனே வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர் வேங்கட மாமலையி ...... லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
528
திருவேங்கடம் சாந்தமில் மோகவெரி
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில மூண்டவி யாதசம ...... யவிரோத சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர் தாந்துணை யாவரென ...... மடவார்மேல் ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம் யான்தனி போய்விடுவ ...... தியல்போதான் காந்தளி னானகர மான்தரு கானமயில் காந்தவி சாகசர ...... வணவேளே காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி யாண்டகை யேயிபமின் ...... மணவாளா வேந்தகு மாரகுக சேந்தம யூரவட வேங்கட மாமலையி ...... லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
529
திருவேங்கடம் வரிசேர்ந்திடு
தனதாந்தன தானன தானன தனதாந்தன தானன தானன தனதாந்தன தானன தானன ...... தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு முழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையி லேமுக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே இருள்போன்றிடு வார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே எனதாந்தன தானவை போயற மலமாங்கடு மோகவி காரமு மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே கரிவாம்பரி தேர்திரள் சேனையு முடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு பரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன் திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்கும ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச் சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
530
வள்ளிமலை அல்லி விழியாலும்
தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் ...... தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் ...... தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் ...... சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் சொல்லுமுப தேசக் ...... குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
531
வள்ளிமலை ஐயுமுறு நோயும்
தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் ...... தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி னைவருமு பாயப் ...... பலநூலின் அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப் பொய்யுமக லாத மெய்யைவள ராவி உய்யும்வகை யோகத் ...... தணுகாதே புல்லறிவு பேசி யல்லல் படு வேனை நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே மெய்யபொழில் நீடு தையலைமு நாலு செய்யபுய மீதுற் ...... றணைவோனே வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே வையமுழு தாளு மையமயில் வீர வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
532
வள்ளிமலை கை ஒத்து வாழும்
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த ...... தனதான
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக் கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன் உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
533
வள்ளிமலை முல்லைக்கும் மாரன்
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த ...... தனதான
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள் பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள் முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம் எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
534
வள்ளிமலை கள்ளக் குவால் பை
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த ...... தனதான
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை துள்ளிக்க னார்க்க ...... யவுகோப கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல் அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல் கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும் வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல் புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
535
வள்ளிமலை வெல்லிக்கு வீக்கும்
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த ...... தனதான
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால் வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய் யில்லத்து றாக்க ...... வலைமேவு பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின் பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர் கல்விக்க லாத்த ...... லையலாமோ அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல்குக்கு டார்த்த ...... இளையோனே அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல் கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர் வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
536
வள்ளிமலை ககனமும் அநிலமும்
தனதன தனதன தனதன தனதன தய்யத்த தாத்த ...... தனதான
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு கனலெழ மொழிதரு சினமென மதமிகு கள்வைத்த தோற்பை ...... சுமவாதே யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே ம்ருகமத பரிமள விகசித நளினநள் வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா விடதர குடிலச டிலமிசை வெகுமுக வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே வகுளமு முகுளித வழைகளு மலிபுன வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும் வனசரர் மரபினில் வருமொரு மரகத வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
537
வள்ளிமலை அல் அசல் அடைந்த
தய்யதன தந்த தய்யதன தந்த தய்யதன தந்த ...... தனதான
அல்லசல டைந்த வில்லடல நங்கன் அல்லிமல ரம்பு ...... தனையேவ அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லையமது கிண்ட ...... அணையூடே சொல்லுமர விந்த வல்லிதனி நின்று தொல்லைவினை யென்று ...... முனியாதே துய்யவரி வண்டு செய்யமது வுண்டு துள்ளியக டம்பு ...... தரவேணும் கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த கல்விகரை கண்ட ...... புலவோனே கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று கல்லலற வொன்றை ...... யருள்வோனே வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று வள்ளியைம ணந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
538
வள்ளிமலை குடிவாழ்க்கை
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய ...... தனதான
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள் குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன குருவார்த்தை தன்னை ...... யுணராதே இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி மலைகாத்த நல்ல ...... மணவாளா அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
539
வள்ளிமலை சிரம் அங்கம் அம் கை
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம் ...... தனதான
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ் சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம் சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந் தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந் துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன் வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம் வினவென்று அன்புதந் ...... தருள்வாயே அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண் டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன் அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங் கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந் திசையொன்ற மந்திசந் ...... துடனாடும் வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம் வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
540
வள்ளிமலை வரைவில் பொய்
தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன விழியையு கந்துமு கந்து கொண்டடி வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி உருகியு கந்திதழ் தின்று மென்றுகை யடியின கங்கள்வ ரைந்து குங்கும உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ் சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
541
திருக்கழுக்குன்றம் அகத்தினைக் கொண்டு
தனத்த தத்தம் தத்தன தானன தனத்த தத்தம் தத்தன தானன தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின் அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர் நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய் இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன் மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன் மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய் புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி படச்சி ரித்தண் முப்புர நீறுசெய் புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே திகழ்க்க டப்பம் புட்பம தார்புய மறைத்து ருக்கொண் டற்புத மாகிய தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா செகத்தி லுச்சம் பெற்றம ராவதி யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
542
திருக்கழுக்குன்றம் எழுகு நிறை நாபி
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி யிலகுமரன் மூவர் ...... முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு ...... கனிவாயா புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புநிதனென ஏடு ...... தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர ...... குருநாதா மழுவுழைக பால டமரகத்ரி சூல மணிகரவி நோத ...... ரருள்பாலா மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை வளமைபெற வேசெய் ...... முருகோனே கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு கதிருலவு வாசல் ...... நிறைவானோர் கடலொலிய தான மறைதமிழ்க ளோது கதலிவன மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
543
திருக்கழுக்குன்றம் ஓல மிட்ட சுரும்பு
தான தத்த தனந்த தனா தனாதன தான தத்த தனந்த தனா தனாதன தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன் ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர் ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம் ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன் மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய் வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற வேலெ டுத்து நடந்த திவா கராசல வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ் வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
544
திருக்கழுக்குன்றம் வேத வெற்பிலே
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
545
பேறைநகர் நீல மயில் சேரும்
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த காரமிக வேநி றைந்த ...... குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த ...... மதனாலும் ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த கோபவரி நார சிங்கன் ...... மருகோனே பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள் பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
546
மயிலம் கொலை கொண்ட
தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா தனதந்த தானன தானா தானா ...... தனதான
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
547
திருசிராப்பள்ளி அங்கை நீட்டி
தந்த தாத்தன தத்தத் தானன தந்த தாத்தன தத்தத் தானன தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான
அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய கொங்கை காட்டிம றைத்துச் சீரிய அன்பு போற்பொய்ந டித்துக் காசள ...... வுறவாடி அம்பு தோற்றக ணிட்டுத் தோதக இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம் அன்றில் போற்குர லிட்டுக் கூரிய ...... நகரேகை பங்க மாக்கிய லைத்துத் தாடனை கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர் பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ...... லியல்பாகப் பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள் தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும் இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் ...... முடிவேறாய் இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா செங்கை வேற்கொடு துட்டச் சூரனை வென்று தோற்பறை கொட்டக் கூளிகள் தின்று கூத்துந டிக்கத் தோகையில் ...... வரும்வீரா செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
548
திருசிராப்பள்ளி அந்தோ மனமே
தந்தாதன தானன தாத்தன தந்தாதன தானன தாத்தன தந்தாதன தானன தாத்தன ...... தனதான
அந்தோமன மேநம தாக்கையை நம்பாதெயி தாகித சூத்திர மம்போருக னாடிய பூட்டிது ...... இனிமேல்நாம் அஞ்சாதமை யாகிரி யாக்கையை பஞ்சாடிய வேலவ னார்க்கிய லங்காகுவம் வாஇனி தாக்கையை ...... ஒழியாமல் வந்தோமிது வேகதி யாட்சியு மிந்தாமயில் வாகனர் சீட்டிது வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும் வந்தேவெகு வாநமை யாட்கொளு வந்தார்மத மேதினி மேற்கொள மைந்தாகும ராவெனு மார்ப்புய ...... மறவாதே திந்தோதிமி தீதத மாத்துடி தந்தாதன னாதன தாத்தன செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ...... மறையோதச் செங்காடென வேவரு மூர்க்கரை சங்காரசி காமணி வேற்கொடு செண்டாடிம காமயில் மேற்கொளு ...... முருகோனே இந்தோடிதழ் நாகம காக்கடல் கங்காளமி னார்சடை சூட்டிய என்தாதைச தாசிவ கோத்திர ...... னருள்பாலா எண்கூடரு ளால்நெளவி நோக்கியை நன்பூமண மேவிசி ராப்பளி யென்பார்மன மேதினி நோக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
549
திருசிராப்பள்ளி அரிவையர் நெஞ்சுரு
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன ...... தனதான
அரிவையர் நெஞ்சுரு காப்புணர் தருவிர கங்களி னாற்பெரி தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந் தகிலொடு சந்தன சேற்றினில் முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப் பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரியம ருங்குடை போய்ச்சில பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப் பனிமுக முங்குறு வேர்ப்பெழ இதழமு துண்டிர வாய்ப்பகல் பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ சரியையு டன்க்ரியை போற்றிய பரமப தம்பெறு வார்க்கருள் தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே சயிலமெ றிந்தகை வேற்கொடு மயிலினில் வந்தெனை யாட்கொளல் சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா திரிபுவ னந்தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே தெரியஇ ருந்தப ராக்ரம உருவளர் குன்றுடை யார்க்கொரு திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
550
திருசிராப்பள்ளி அழுது அழுது ஆசார
தனதன தானான தானன தனதன தானான தானன தனதன தானான தானன ...... தந்ததான
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும் அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள் அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள் அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும் விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும் விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள் வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய் மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர் மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச் செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும் திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர் சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
551
திருசிராப்பள்ளி இளையவர் நெஞ்ச
தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் ...... தனதான
இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற் றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார் இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித் திதழமு துந்துய்த் ...... தணியாரக் களபசு கந்தப் புளகித இன்பக் கனதன கும்பத் ...... திடைமூழ்குங் கலவியை நிந்தித் திலகிய நின்பொற் கழல்தொழு மன்பைத் ...... தருவாயே தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற் சதுமறை சந்தத் ...... தொடுபாடத் தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித் தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற் சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத் திரிசிர குன்றப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
552
திருசிராப்பள்ளி பகலவன் ஒக்கும்
தனதன தத்தம் தனதன தத்தம் தனதன தத்தம் ...... தனதான
பகலவ னொக்குங் கனவிய ரத்னம் பவளவெண் முத்தந் ...... திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் ...... பணவாசை அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண் டழியும வத்தன் ...... குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பத்மந் தருணப தத்திண் ...... சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
553
திருசிராப்பள்ளி ஒருவரொடு கண்கள்
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதான
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செங்கை ...... யுறவாடி ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடி ரண்டு ...... முரையாரை மருவமிக அன்பு பெருகவுள தென்று மனநினையு மிந்த ...... மருள்தீர வனசமென வண்டு தனதனன வென்று மருவுசர ணங்க ...... ளருளாயோ அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி அடிதொழவி ளங்கு ...... வயலூரா திருவையொரு பங்கர் கமலமலர் வந்த திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார் திகுதகுதி யென்று நடமிட முழங்கு த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
554
திருசிராப்பள்ளி குமுத வாய்க்கனி
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே ...... அழகான குழைகள் தாக்கிய விழிக ளாற்களி கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே உமது தோட்களி லெமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் ...... எனவேநின் றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ சயில நாட்டிறை வயலி நாட்டிறை சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே திமிர ராக்கதர் சமர வேற்கர தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ் தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
555
திருசிராப்பள்ளி குவளை பூசல்
தனன தானன தத்தன தந்தன தனன தானன தத்தன தந்தன தனன தானன தத்தன தந்தன ...... தனதான
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல் கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர் குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை ...... பொருகாடை குயில்பு றாமயில் குக்கில்சு ரும்பினம் வனப தாயுத மொக்குமெ னும்படி குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப் பவள ரேகைப டைத்தத ரங்குறி யுறவி யாளப டத்தைய ணைந்துகை பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின் படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ அவச மாய்வட பத்ரநெ டுஞ்சுழி படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ தவள ரூபச ரச்சுதி யிந்திரை ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை சகல காரணி சத்திப ரம்பரி யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி சிவைம நோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்நஅ லங்க்ருத திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
556
திருசிராப்பள்ளி சத்தி பாணீ
தத்த தானா தனாதன தத்த தானா தனாதன தத்த தானா தனாதன ...... தந்ததான
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும் பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில் பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ் பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய் அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
558
திருசிராப்பள்ளி புவனத் தொரு
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக் கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய் பவனத் தையொடுக் குமனக் கவலைப் ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற் படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர் பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற் பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற் பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா சிவனுத் தமனித் தவுருத் திரன்முக் கணனக் கன்மழுக் கரனுக் ரரணத் த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி செகவித் தனிசப் பொருள்சிற் பரனற் புதனொப் பிலியுற் பவபத் மதடத் த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
559
திருசிராப்பள்ளி பொருளின் மேற்ப்ரிய
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடிய ராக்குபொ லாமூ தேவிகள் புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம் கருதொ ணாப்பல கோடா கோடிகள் விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக் கவிகள் கூப்பிடு மோயா மாரிகள் அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள் கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ குருக டாக்ஷக லாவே தாகம பரம வாக்கிய ஞானா சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான கொடிய வேட்டுவர் கோகோ கோவென மடிய நீட்டிய கூர்வே லாயுத குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும் செருப ராக்ரம கேகே வாகன சரவ ணோற்பவ மாலா லாளித திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே சிகர தீர்க்கம காசீ கோபுர முகச டாக்கர சேணா டாக்ருத திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
560
திருசிராப்பள்ளி பொருள்கவர் சிந்தை
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுககில் சந்து ...... பனிநீர்தோய் புளகித கொங்கை யிளகவ டங்கள் புரளம ருங்கி ...... லுடைசோர இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து இணைதரு பங்க ...... அநுராகத் திரிதலொ ழிந்து மனதுக சிந்து னிணையடி யென்று ...... புகழ்வேனோ மருள்கொடு சென்று பரிவுட னன்று மலையில்வி ளைந்த ...... தினைகாவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த ...... முருகோனே தெருளுறு மன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் ...... முதனாளில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
561
திருசிராப்பள்ளி வாசித்து
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன தானத்தத் தான தானன ...... தந்ததான
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=ErAF8VNmF4A
Add (additional) Audio/Video Link
Back to Top
562
திருசிராப்பள்ளி வெருட்டி ஆட்கொளும்
தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான
வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில் விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால் வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும் மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான் மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு தடத்து மோக்ஷம தருளிய பலமலர் மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற இரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா இலக்ஷு மீச்சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல் இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத் திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும் செருப்ப ராக்ரம நிதிசர வணபவ சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
563
திருக்கற்குடி குடத்தைத் தகர்த்து
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் ...... தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக் குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக் குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக் குருத்தத் துவத்துத் ...... தவர்சோரப் புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப் புறப்பட் டகச்சுத் ...... தனமாதர் புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப் புரித்துப் பதத்தைத் ...... தருவாயே கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக் கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக் கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட் கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத் தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத் தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
564
திருக்கற்குடி நெறித்துப் பொருப்பு
தனத்தத் தனத்தத் தத்த தனத்தத் தனத்தத் தத்த தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான
நெறித்துப் பொருப்புக் கொத்த முலைக்குத் தனத்தைக் கொட்டி நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய் நினைத்துக் கொடத்துக் கத்தை யவத்தைக் கடுக்கைப் பெற்று நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை இறுக்கிப் பிடித்துக் கட்டி யுகைத்துத் துடிக்கப் பற்றி யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர் எனக்குக் கணக்குக் கட்டு விரித்துத் தொகைக்குட் பட்ட இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான் முறுக்கித் திருப்பிச் சுட்டு மலத்திற் புகட்டித் திட்டி முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல் மொழிக்குத் தரத்துக் குற்ற தமிழ்க்குச் சரித்துச் சித்தி முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி உறுக்கிச் சினத்துச் சத்தி யயிற்குத் தரத்தைக் கைக்குள் உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே உனைச்சொற் றுதிக்கத் தக்க கருத்தைக் கொடுப்பைச் சித்தி யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
565
இரத்னகிரி கயலைச் சருவி
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற் கமலத் தியல்மைக் ...... கணினாலே கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே நயபொற் கலசத் தினைவெற் பினைமிக் குளநற் பெருசெப் ...... பிணையாலே நலமற் றறிவற் றுணர்வற் றனனற் கதியெப் படிபெற் ...... றிடுவேனோ புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக் கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும் பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட் டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே செயசித் திரமுத் தமிழுற் பவநற் செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே சிவதைப் பதிரத் தினவெற் பதனிற் றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
566
இரத்னகிரி சுற்ற கபடோடு
தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
சுற்றகப டோடுபல சூதுவினை யானபல கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித் துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில் தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர் சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித் தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல் தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம் திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர் எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை சித்தமலை காமுககு காநமசி வாயனொடு ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
567
இரத்னகிரி பத்தியால் யானுனை
தத்தனா தானனத் ...... தனதான தத்தனா தானனத் ...... தனதான வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே உத்தமா தானசற் ...... குணர்நேயா ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா வித்தகா ஞானசத் ...... திநிபாதா வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=QPxq2Jm5BAs
Add (additional) Audio/Video Link
Back to Top
568
விராலிமலை சீரான கோல கால
தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான
சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
569
விராலிமலை பாதாள மாதி லோக
தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான
பாதாள மாதி லோக நிகிலமு மாதார மான மேரு வெனவளர் பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப் பாலோடு பாகு தேனெ னினியசொ லாலேய நேக மோக மிடுபவர் பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும் வேதாள ஞான கீனன் விதரண நாதானி லாத பாவி யநிஜவன் வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச வ்யாபார மூடன் யானு முனதிரு சீர்பாத தூளி யாகி நரகிடை வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே தூதாள ரோடு காலன் வெருவிட வேதாமு ராரி யோட அடுபடை சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச் சோமாசி மார்சி வாய நமவென மாமாய வீர கோர முடனிகல் சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே கூதாள நீப நாக மலர்மிசை சாதாரி தேசி நாம க்ரியைமுதல் கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை கூராரல் தேரு நாரை மருவிய கானாறு பாயு மேரி வயல்பயில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
570
விராலிமலை இலாபமில்
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன ...... தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன ரியாவரு மிராவுபக ...... லடியேனை இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய சலாபவ மலாகர சசீதர விதாரண சதாசிவ மயேசுரச ...... கலலோக சராசர வியாபக பராபர மநோலய சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன நியாயப ரிபாலஅர ...... நதிசூடி நிசாசர குலாதிப திராவண புயாரிட நிராமய சரோருகர ...... னருள்பாலா விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
571
விராலிமலை நிராமய புராதன
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனத் ...... தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரியச் ...... சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் ...... குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் ...... றடைவேனோ இராகவ இராமன்முன் இராவண இராவண இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென் றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே விராகவ சுராதிப பொராதுத விராதடு விராயண பராயணச் ...... செருவூரா விராவிய குராவகில் பராரைமு திராவளர் விராலிம லைராஜதப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=GdpDAhT95tU
Add (additional) Audio/Video Link
Back to Top
572
விராலிமலை இதமுறு விரைபுனல்
தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண முதவிய புகையினி லளவி வகைவகை கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென அறலென இசையளி யெனந ளிருளென நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும் இலகிய பிறையென எயினர் சிலையென விலகிய திலதநு தலும திமுகமும் உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும் இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு கடுவது மெனநெடி தடுவ கொடியன இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி தளவன முறுவலு மமுத குமுதமும் விளைநற வினியமொ ழியுமி னையதென ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு கிடியொடி படவினை செயும்வின் மதகலை நெடியக வுடியிசை முரலு சுரிமுக நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும் விதரண மனவித னமதை யருள்வன சததள மறைமுகி ழதனை நிகர்வன புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன இமசல ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபைமிகு தருண புளகித சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன விகலித மிருதுள ம்ருதுள நவமணி முகபட விகடின தனமு முயர்வட பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத விபரித முடையிடை யிளைஞர் களைபட அபகட மதுபுரி யரவ சுடிகைய ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய நுணியத ளிரெனவு லவிய பரிபுர அணிநட னபதமு முடைய வடிவினர் பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர் விரகினி லெனதுறு மனம துருகிய பிரமையு மறவுன தருள்கை வரவுயர் பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான் தபலைகு டமுழவு திமிலை படகம தபுதச லிகைதவில் முரசு கரடிகை மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகுவென அலற விருதுகள் திகுதிகு திகுவென அலகை குறளிகள் விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு சதிர்பெற அதிர்தர உததி சுவறிட எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி மதகஜ துரகர தமுமு டையபுவி யதலமு தல்முடிய இடிய நெடியதொர் மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட இரவியு மதியமு நிலைமை பெறஅடி பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல் அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு வயலியி லடிமைய குடிமை யினலற மயலொடு மலமற அரிய பெரியதி ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி மலையுறை குரவந லிறைவ வருகலை பலதெரி விதரண முருக சரவண உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய நிருபவி மலசுக சொருப பரசிவ குருபர வெளிமுக டுருவ வுயர்தரு சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை மருவியெ யருமைய இளமை யுருவொடு சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
573
விராலிமலை உருவேறவே ஜெபித்து
தனதான தான தத்த தனதான தான தத்த தனதான தான தத்த ...... தந்ததான
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும் தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர் தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர் குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
574
விராலிமலை எதிரெதிர் கண்டோடி
தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த ...... தனதான
எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர் இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில் அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில் வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
575
விராலிமலை ஐந்து பூதமும்
தந்த தானன தான தனதன தந்த தானன தான தனதன தந்த தானன தான தனதன ...... தனதான
ஐந்து பூதமு மாறு சமயமு மந்த்ர வேதபு ராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப அண்ட ராதிச ராச ரமுமுயர் புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும் சந்த்ர சூரியர் தாமு மசபையும் விந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம் தங்க ளாணவ மாயை கருமம லங்கள் போயுப தேச குருபர சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ வந்த தானவர் சேனை கெடிபுக இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி வன்கண் வீரிபி டாரி ஹரஹர சங்க ராஎன மேரு கிரிதலை மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா வெந்த நீறணி வேணி யிருடிகள் பந்த பாசவி கார பரவச வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும் விண்டு மேல்மயி லாட இனியக ளுண்டு காரளி பாட இதழிபொன் விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
576
விராலிமலை கரதல முங்குறி
தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
கரதல முங்குறி கொண்ட கண்டமும் விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர் கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக் களபசு கந்தமி குந்த கொங்கைக ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய் கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா இரதம ருந்தியு றுங்க ருங்கயல் பொருதுசி வந்துகு விந்தி டும்படி யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுறமூழ்கி இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய இளமைகி ழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ பரதசி லம்புபு லம்பு மம்பத வரிமுக எண்கினு டன்கு ரங்கணி பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப் பகடியி லங்கைக லங்க அம்பொனின் மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும் மருதமு தைந்தமு குந்த னன்புறு மருககு விந்தும லர்ந்த பங்கய வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி மலையில்வி ளங்கிய கந்த என்றுனை மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
577
விராலிமலை கரிபுராரி காமாரி
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயிலை யாளி காபாலி ...... கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி ...... சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத ...... அருளாயோ சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி துரக கோப மீதோடி ...... வடமேரு சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும் திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள திரளி னோடு பாறோடு ...... கழுகாடச் செருவி னாடு வானீப கருணை மேரு வேபார திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
578
விராலிமலை காம அத்திரமாகி
தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன ...... தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக் கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர் ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால் ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக் கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
579
விராலிமலை கொடாதவனை
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த தனாதனன தான தந்த ...... தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன் சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன் தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல் சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப நபோமணி சமான துங்க ...... வடிவேலா படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான் விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
580
விராலிமலை மாயா சொரூபம்
தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன தானா தனான தனத்த தத்தன ...... தனதான
மாயா சொரூப முழுச்ச மத்திகள் ஓயா வுபாய மனப்ப சப்பிகள் வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும் மாலா கிவாட நகைத்து ருக்கிகள் ஏகா சமீது தனத்தி றப்பிகள் வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம் ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள் ஈயா தபோதி லறப்பி ணக்கிகள் ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம் ஆமா றெணாத திருட்டு மட்டைகள் கோமா ளமான குறிக்க ழுத்திகள் ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள் காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு போர்போ லசோதை பிடித்த டித்திட காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும் வேயா லநேக விதப்ப சுத்திரள் சாயா மல்மீள அழைக்கு மச்சுதன் வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா வீணாள் கொடாத படைச்செ ருக்கினில் சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
581
விராலிமலை மாலாசை கோபம்
தானான தான தானான தான தானான தான ...... தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு மாயா விகார ...... வழியேசெல் மாபாவி காளி தானேனு நாத மாதா பிதாவு ...... மினிநீயே நாலான வேத நூலாக மாதி நானோதி னேனு ...... மிலைவீணே நாள்போய் விடாம லாறாறு மீதில் ஞானோப தேச ...... மருள்வாயே பாலா கலார ஆமோத லேப பாடீர வாக ...... அணிமீதே பாதாள பூமி யாதார மீன பானீய மேலை ...... வயலூரா வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத ...... பதிசேயே வீரா கடோர சூராரி யேசெ வேளே சுரேசர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
582
விராலிமலை மேகம் எனும் குழல்
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான
மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல் வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக் கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில் கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில் மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல் ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர் ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
583
விராலிமலை மோதி இறுகி
தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தந்ததான
மோதி யிறுகிவட மேரு வெனவளரு மோக முலையசைய ...... வந்துகாயம் மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி மூட மெனஅறிவு ...... கொண்டதாலே காதி வருமியம தூதர் கயிறுகொடு காலி லிறுகஎனை ...... வந்திழாதே காவ லெனவிரைய வோடி யுனதடிமை காண வருவதினி ...... யெந்தநாளோ ஆதி மறையவனு மாலு முயர்சுடலை யாடு மரனுமிவ ...... ரொன்றதான ஆயி யமலைதிரி சூலி குமரிமக மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை தோய வளர்கிரியி ...... னுந்திநீடு சோலை செறிவுளவி ராலி நகரில்வளர் தோகை மயிலுலவு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
584
விநாயகமலை சரவண ஜாதா
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன தனதன தானா தனாதன ...... தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம ...... அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம ...... ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம ...... உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய் இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென் றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும் வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர வனசர ராதார மாகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
585
திருச்செங்கோடு அன்பாக வந்து
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய்
அன்பாக வந்து உன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற ...... நினையாமல் அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க ளம்போரு கங்கள் ...... முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு கின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து மன்பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ மன்றாடி தந்த மைந்தா மிகுந்த வம்பார் கடம்பை ...... யணிவோனே வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ டமர்ந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0585_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
586
திருச்செங்கோடு பந்து ஆடி அம் கை
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய்
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த ...... குழல்மீதே பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற பங்கே ருகங்கொள் ...... முகமீதே மந்தார மன்றல் சந்தார மொன்றி வன்பாத கஞ்செய் ...... தனமீதே மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து மங்காம லுன்ற ...... னருள்தாராய் கந்தா அரன்றன் மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் ...... மருகோனே கன்றா விலங்க லொன்றாறு கண்ட கண்டா வரம்பை ...... மணவாளா செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு திண்டோள் நிரம்ப ...... அணிவோனே திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
587
திருச்செங்கோடு வண்டார் மதங்கள்
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய்
வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி வந்தூரு கொண்ட ...... லதனோடும் வண்காம னம்பு தன்கால்ம டங்க வன்போர்ம லைந்த ...... விழிவேலும் கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக் கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து குன்றாம லுன்ற ...... னருள்தாராய் பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்போனு கந்த ...... மருகோனே பண்சார நைந்து நண்போது மன்பர் பங்காகி நின்ற ...... குமரேசா செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில் நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
588
திருச்செங்கோடு கரை அற உருகுதல்
தனதன தனதன தனதன தனதன தந்தான தந்த ...... தனதான
கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் ...... மடமாதர் கலவியில் முழுகிய நெறியினி லறிவுக லங்காம யங்கும் ...... வினையேனும் உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும் உன்பாத கஞ்ச ...... மலர்மீதே உரவொடு புனைதர நினைதரு மடியரொ டொன்றாக என்று ...... பெறுவேனோ வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி வந்தேற இந்த்ர ...... புரிவாழ மதவித கஜரத துரகத பததியின் வன்சேனை மங்க ...... முதுமீன திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் திண்டாட வென்ற ...... கதிர்வேலா ஜெகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
589
திருச்செங்கோடு இடம் பார்த்து
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் ...... தனதான
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற் றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க் கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின் உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத் துளங்காத் திடப்புன் ...... கவிபாடி ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத் துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட் கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய் கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத் துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
590
திருச்செங்கோடு கலக்கும் கோது
தனத்தந் தானன தனத்தந் தானன தனத்தந் தானன ...... தனதான
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையி ...... லழியாதே விலக்கும் போதக மெனக்கென் றேபெற விருப்பஞ் சாலவு ...... முடையேனான் வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை விடற்கஞ் சேலென ...... அருள்வாயே அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை அறுக்குங் கூரிய ...... வடிவேலா அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை யடுக்கும் போதக ...... முடையோராம் சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக திருச்செங் கோபுர ...... வயலூரா திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய திருச்செங் கோடுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
591
திருச்செங்கோடு துஞ்சு கோட்டி
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார் தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக் கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத் துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப் பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத் தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித் தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட் குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற் கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
592
திருச்செங்கோடு நீலமஞ்சான குழல்
தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை நீடலங் காரசர மோடடைந் தார்மருவி நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி னீலவண் டேவியநல் காமனங் காரநிறை நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ் சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை சாதிசந் தானெகின மார்பரந் தோகையென தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத் தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள் தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள் தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய் சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர் தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை தோளகண் டாபரம தேசிகந் தாவமரர் தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர் சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர் வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
593
திருச்செங்கோடு பொன்றலைப் பொய்
தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத் தும்ப றுத்திட் டின்று நிற்கப் புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி யொத்தச் சங்க டத்துப் புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல் துன்று மிச்சைப் பண்ட னுக்குப் பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத் தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக் கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே குன்றெ டுத்துப் பந்த டித்துக் கண்சி வத்துச் சங்க ரித்துக் கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா கொம்பு குத்திச் சம்ப ழுத்தித் திண்ட லத்திற் றண்டு வெற்பைக் கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம் சென்று ரித்துச் சுந்த ரிக்கச் சந்த விர்த்துக் கண்சு கித்துச் சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ் செண்ப கத்துச் சம்பு வுக்குத் தொம்ப தத்துப் பண்பு ரைத்துச் செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
594
திருச்செங்கோடு மந்தக் கடைக்கண்
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச் சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர் சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர் தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
595
திருச்செங்கோடு மெய்ச் சார்வு அற்றே
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே நிச்சார் துற்பப் ...... பவவேலை விட்டே றிப்போ கொட்டா மற்றே மட்டே யத்தத் ...... தையர்மேலே பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார் பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால் பெற்றார் முற்பா லைக்கற் ...... பகமேதான் செச்சா லிச்சா லத்தே றிச்சே லுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ் செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய் நித்தா செக்கர்க் ...... கதிரேனல் முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள் முத்தார் வெட்சிப் ...... புயவேளே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
596
திருச்செங்கோடு வருத்தம் காண
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன தனத்தந் தான தானன ...... தனதான
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு மயக்கம் பூண மோதிய ...... துரமீதே மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள் பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத் திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ் செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
597
திருச்செங்கோடு ஆலகால படப்பை
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலப டப்பைம டப்பியர் ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர் யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர் பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள் ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே மாலை யோதிவி ரித்துமு டிப்பவர் சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள் காம போகவி னைக்குளு னைப்பணி வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ மேலை வானொரு ரைத்தச ரற்கொரு பால னாகியு தித்தொர்மு நிக்கொரு வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின் மாது தோள்தழு விப்பதி புக்கிட வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே ஞால மாதொடு புக்கவ னத்தினில் வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே ஞான தேசிக சற்குரு உத்தம வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
599
திருச்செங்கோடு தாமா தாம ஆலாபா
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
தாமா தாமா லாபா லோகா தாரா தாரத் ...... தரணீசா தானா சாரோ பாவா பாவோ நாசா பாசத் ...... தபராத யாமா யாமா தேசா ரூடா யாரா யாபத் ...... தெனதாவி யாமா காவாய் தீயே னீர்வா யாதே யீமத் ...... துகலாமோ காமா காமா தீனா நீணா காவாய் காளக் ...... கிரியாய்கங் காளா லீலா பாலா நீபா காமா மோதக் ...... கனமானின் தேமார் தேமா காமீ பாகீ தேசா தேசத் ...... தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
600
திருச்செங்கோடு அத் துகிரின் நல்
தத்த தனதனன தத்த தனதனன தத்த தனதனன ...... தனதான
அத்து கிரினலத ரத்து அலனவள கத்து வளர்செய்புள ...... கிதபூத ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி யத்தி யிடனுறையு ...... நெடுமாம ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத லத்து ரகசிகரி ...... பகராதே யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை யத்தி னிடையடிமை ...... விழலாமோ தத்து கவனவரி ணத்து வுபநிடவி தத்து முநியுதவு ...... மொழியாறுத் தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர் தத்தை தழுவியப ...... னிருதோளா தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர் தத்து மலையவுணர் ...... குலநாகந் தத்த மிசைமரக தத்த மனியமயில் தத்த விடுமமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
601
திருச்செங்கோடு அத்த வேட்கை
தத்த தாத்தத் தத்த தாத்தத் தத்த தாத்தத் ...... தனதான
அத்த வேட்கைப் பற்றி நோக்கத் தத்தை மார்க்குத் ...... தமராயன் பற்ற கூட்டத் திற்ப ராக்குற் றச்சு தோட்பற் ...... றியவோடும் சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச் சிக்கை நீக்கித் ...... திணிதாய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப் ...... பெறுவேனோ கொத்து நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்துக் ...... கரசாய குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப் பொற்ப வேற்கைக் ...... குமரேசா தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேற்றுத் ...... திடமேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
602
திருச்செங்கோடு பத்தர் கணப்ரிய
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
603
திருச்செங்கோடு புற்புதம்
தத்ததன தான தத்ததன தான தத்ததன தான ...... தனதான
புற்புதமெ னாம அற்பநிலை யாத பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் புத்திரரும் வீடு மித்திரரு மான புத்திசலி யாத ...... பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை யோத ...... நினைவாயே சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத சக்ரகதை பாணி ...... மருகோனே தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற வைத்தவொரு காழி ...... மறையோனே கற்புவழு வாது வெற்படியின் மேவு கற்றைமற வாணர் ...... கொடிகோவே கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால கற்பதரு நாடர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
604
திருச்செங்கோடு பொன் சித்ர
தத்தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள் புட்பட்டுச் செப்பத் துப்பற் கொத்தப்பொற் றித்தத் திட்பப் பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார் கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித் தத்திற்புக் கிட்டப் பட்டுக் கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல் கற்றுற்றுச் சித்திக் கைக்குச் சித்திப்பப் பக்ஷத் திற்சொற் கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய் குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்கச்சத் துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக் கக்ஷத்திற் பட்சத் தத்தக் கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி சற்சித்துத் தொற்புத் திப்பட் சத்தர்க்கொப் பித்தட் சத்துச் சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற் செற்பற்றைச் செற்றிட் டுச்சச் சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
605
திருச்செங்கோடு கொடிய மறலி
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் படியு நெடியன எழுபுண ரியுமுது திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் சடில தரவிட தரபணி தரதர பரசு தரசசி தரசுசி தரவித தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் தரணி தரதநு தரவெகு முககுல தடினி தரசிவ சுதகுண தரபணி சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் நிலனும் வெருவர வருநிசி சரர்தள நிகில சகலமு மடியவொர் படைதொடு நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
606
கொல்லிமலை கட்ட மன்னும்
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய ...... தனதான
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர் கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர் இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான் முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள ...... வருவோனே முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி ...... மணவாளா பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
607
கொல்லிமலை தொல்லைமுதல்
தய்யதன தானந்த தய்யதன தானந்த தய்யதன தானந்த ...... தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள் சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும் பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப் பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு கல்வருக வேநின்று ...... குழலூதுங் கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
608
ராஜகெம்பீரவளநாட்டு மலை மாகசஞ் சாரமுகில்
தானனந் தானதன தாத்த தனதன தானனந் தானதன தாத்த தனதன தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான
மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு போகபண் டாரபணி தோற்ற அரைகொடு தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்துகாசு தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ...... வந்துதாராய் வேகமுண் டாகியுமை சாற்று மளவினில் மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை வீரனென் பானொருப ராக்ர னெனவர ...... அன்றுசோமன் மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன் ஏகநின் றாகியமர் தோற்று வதறிட வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள் ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென் றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
609
ஞானமலை சூது கொலைகாரர்
தானதன தான தானதன தான தானதன தான ...... தனதான
சூதுகொலை கார ராசைபண மாதர் தூவையர்கள் சோகை ...... முகநீலர் சூலைவலி வாத மோடளைவர் பாவர் தூமையர்கள் கோளர் ...... தெருவூடே சாதனைகள் பேசி வாருமென நாழி தாழிவிலை கூறி ...... தெனவோதி சாயவெகு மாய தூளியுற வாக தாடியிடு வோர்க ...... ளுறவாமோ வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூச ...... லெனஏகி வீறசுரர் பாறி வீழஅலை யேழு வேலையள றாக ...... விடும்வேலா நாதரிட மேவு மாதுசிவ காமி நாரியபி ராமி ...... யருள்பாலா நாரணசு வாமி யீனுமக ளோடு ஞானமலை மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
610
ஞானமலை மனையவள் நகைக்க
தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான ...... தனதான
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும் மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென் றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத் தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
611
ஊதிமலை ஆதிமக மாயி
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு ...... மடியேனை நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த ...... வடிவேலா ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
612
ஊதிமலை கோதி முடித்து
தான தனத்தத் தனத்த தந்தன தான தனத்தத் தனத்த தந்தன தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான
கோதி முடித்துக் கனத்த கொண்டையர் சூது விதத்துக் கிதத்து மங்கையர் கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே கோழை மனத்தைக் கெடுத்து வன்புல ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல் கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே நாத நிலைக்குட் கருத்து கந்தருள் போதக மற்றெச் சகத்தை யுந்தரு நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி ரான துறத்தற் கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ காரண பத்தர்க் கிரக்க முந்தகு ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ...... ரொளியோனே ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன காபர ணத்திற் பொருட் பயன்றரு ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
613
குருடிமலை கருடன் மிசைவரு
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென ...... வுலகோரைக் கதறி யவர்பெயர் செருகி மனமது கருதி முதுமொழி ...... களைநாடித் திருடி யொருபடி நெருடி யறிவிலர் செவியில் நுழைவன ...... கவிபாடித் திரியு மவர்சில புலவர் மொழிவது சிறிது முணர்வகை ...... யறியேனே வருடை யினமது முருடு படுமகில் மரமு மருதமு ...... மடிசாய மதுர மெனுநதி பெருகி யிருகரை வழிய வகைவகை ...... குதிபாயுங் குருடி மலையுறை முருக குலவட குவடு தவிடெழ ...... மயிலேறுங் குமர குருபர திமிர தினகர குறைவி லிமையவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
614
தென்சேரிகிரி எங்கேனும் ஒருவர்
தந்தான தனதனன தந்தான தனதனன தந்தான தனதனன ...... தனதான
எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென் றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ என்றாசை குழையவிழி ...... யிணையாடித் தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள் சந்தேக மறவெபறி ...... கொளுமானார் சங்கீத கலவிநல மென்றோது முததிவிட தண்பாரு முனதருளை ...... யருள்வாயே சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித் தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள் தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ் சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச் செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
615
தென்சேரிகிரி கொண்டாடிக் கொஞ்சும்
தந்தானத் தந்த தனதன தந்தானத் தந்த தனதன தந்தானத் தந்த தனதன ...... தனதான
கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு கண்டாரைச் சிந்து விழிகொடு கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக் குன்றோடொப் பென்ற முலைகொடு நின்றோலக் கஞ்செய் நிலைகொடு கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும் பண்டாடச் சிங்கி யிடுமவர் விண்டாலிக் கின்ற மயிலன பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு பண்டேசொற் றந்த பழமறை கொண்டேதர்க் கங்க ளறவுமை பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே வண்டாடத் தென்றல் தடமிசை தண்டாதப் புண்ட ரிகமலர் மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா வன்காளக் கொண்டல் வடிவொரு சங்க்ராமக் கஞ்சன் விழவுதை மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே திண்டாடச் சிந்து நிசிசரர் தொண்டாடக் கண்ட வமர்பொரு செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே சிங்காரச் செம்பொன் மதிளத லங்காரச் சந்த்ர கலைதவழ் தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
616
கொங்கணகிரி ஐங்கரனை
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன ...... தனதான
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=7X7VGme9_n4
Add (additional) Audio/Video Link
Back to Top
617
தீர்த்தமலை பாட்டில் உருகிலை
தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை கூற்று வருவழி பார்த்து முருகிலை பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம் பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி திரிபுர மூட்டி மறலியி னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய் ஆக்கி மகமதை வீட்டி யொருவனை யாட்டின் முகமதை நாட்டி மறைமக ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற ஓட்டி யழல்பசை காட்டி சமணரை சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா தீர்த்த எனதக மேட்டை யுடனினை ஏத்த அருளுட னோக்கி அருளுதி தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
618
கநகமலை அரிவையர்கள்
தனதனன தனன தந்தத் தனதனன தனன தந்தத் தனதனன தனன தந்தத் ...... தனதான
அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட் டசடனென மனது நொந்திட் ...... டயராமல் அநுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ பரிதிமதி நிறைய நின்றஃ தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும் படர்கள்முழு வதும கன்றுட் பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே செருவிலகு மசுரர் மங்கக் குலகிரிகள் நடுந டுங்கச் சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான செயமுதவு மலர்பொ ருங்கைத் தலமிலகு மயில்கொ ளுஞ்சத் தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே கருணைபொழி கிருபை முந்தப் பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலென வருக டம்பத் ...... திருமார்பா கரிமுகவர் தமைய னென்றுற் றிடுமிளைய குமர பண்பிற் கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
619
புகழிமலை மருவுமலர் வாசம்
தனனதன தான தனனதன தான தனனதன தான ...... தனதான
மருவுமலர் வாச முறுகுழலி னாலும் வரிவிழியி னாலு ...... மதியாலும் மலையினிக ரான இளமுலைக ளாலு மயல்கள்தரு மாதர் ...... வகையாலும் கருதுபொரு ளாலு மனைவிமக வான கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ கமலபத வாழ்வு தரமயிலின் மீது கருணையுட னேமுன் ...... வரவேணும் அருமறைக ளோது பிரமன்முதல் மாலும் அமரர்முநி ராசர் ...... தொழுவோனே அகிலதல மோது நதிமருவு சோலை அழகுபெறு போக ...... வளநாடா பொருதவரு சூரர் கிரியுருவ வாரி புனல்சுவற வேலை ...... யெறிவோனே புகலரிய தான தமிழ்முநிவ ரோது புகழிமலை மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
620
பூம்பறை மாந்தளிர்கள் போல
தாந்ததன தான தாந்ததன தான தாந்ததன தான ...... தனதான
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர் வாந்தவிய மாக ...... முறைபேசி வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி ஏந்துமுலை மீது சாந்துபல பூசி ஏங்குமிடை வாட ...... விளையாடி ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல் ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ ...... எனவோசை பாங்குபெறு தாள மேங்கநட மாடு பாண்டவர்ச காயன் ...... மருகோனே பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு பூங்கதலி கோடி ...... திகழ்சோலை பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு பூம்பறையின் மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
621
கொடுங்குன்றம் அனங்கன் அம்பு
தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக் குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
622
கொடுங்குன்றம் எதிர்பொருது
தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன ...... தந்ததான.
எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது குத்தித்தி றந்துமலை யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி முத்துச்செ றிந்தவட மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி னிற்கொத்து மங்குசநெ ...... ருங்குபாகர் எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப தைக்கக்க டிந்துமிக இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு முட்கத்தி ரண்டிளகி யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு டைத்துச்சி னந்துபொரு ...... கொங்கையானை பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி யொக்கத்து வண்டமளி புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள் செக்கச்சி வந்தமுது பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய முத்தத்து டன்கருணை ...... தந்துமேல்வீழ் புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர் தட்டுப்ப டுந்திமிர புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய சட்டைக்கு ரம்பையழி பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி னிர்த்தச்ச ரண்களைம ...... றந்திடேனே திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம் முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு டுக்கைப்பெ ரும்பதலை முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம கத்திக்க ளும்பரவ முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய மிக்கக்க வந்தநிரை ...... தங்கியாட முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர வுக்ரப்பெ ருங்குருதி முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ டிக்கத்து ணிந்ததிர முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி வெட்டிக்க ளம்பொருத ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
623
குன்றக்குடி அழகு எறிந்த
தனன தந்த தந்த தனன தந்த தந்த தனன தந்த தந்த ...... தனதான
அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ டணிச தங்கை கொஞ்சு ...... நடையாலே சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து தொடுமி ரண்டு கண்க ...... ளதனாலே துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள் துயரை யென்றொ ழிந்து ...... விடுவேனோ எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி யெதிர டைந்தி றைஞ்சல் ...... புரிபோதே இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச மநுவி யம்பி நின்ற ...... குருநாதா வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க மலைவி ளங்க வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
624
குன்றக்குடி ககுபநிலை குலைய
தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும் அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங் கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர் புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர் சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர் வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல் அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள் கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ...... நுதிரேகை வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ் உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல் உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளந் தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில் தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள் சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய் வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல் மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
625
குன்றக்குடி கடினதட கும்ப
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன தனதனன தந்த தானன ...... தனதான
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக் கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ் கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
626
குன்றக்குடி நேசா சாரா
தானா தானா தந்தன தத்தன தானா தானா தந்தன தத்தன தானா தானா தந்தன தத்தன ...... தனதான
நேசா சாரா டம்பர மட்டைகள் பேசா தேயே சுங்கள மட்டைகள் நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே நீயே நானே யென்றொரு சத்தியம் வாய்கூ சாதோ துங்க படத்திகள் நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும் ஆசா பாசா தொந்தரை யிட்டவர் மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம் ஆகா தாவே சந்தரு திப்பொழு தோகோ வாவா வென்று பகட்டிக ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர் வாயா வாவா வென்று குடித்தருள் பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே மாசூ டாடா டும்பகை யைப்பகை சூரா ளோடே வன்செரு வைச்செறு மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு தேனா றேசூழ் துங்க மலைப்பதி மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
627
குன்றக்குடி பிறர் புகழ் இன்சொல்
தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் ...... தனதான
பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப் பருவம தன்கைச் ...... சிலையாலே பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப் பெருவழி சென்றக் ...... குணமேவிச் சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச் செயலும ழிந்தற் ...... பமதான தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச் சிலசில பங்கப் ...... படலாமோ கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக் கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன் கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக் கிழிபட துன்றிப் ...... பொருதோனே குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற் பனமநு வுஞ்சொற் ...... குருநாதா குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக் குடிவளர் கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
628
குன்றக்குடி தவள மதியம்
தனன தனன தனத்தந் ...... தனதான
தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே கருதி மிகவு மயக்கம் ...... படவோநான் பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின் பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந் திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
629
குன்றக்குடி நாமேவு குயிலாலும்
தானான தனதான தானான தனதான தானான தனதான ...... தனதான
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும் நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு நாடாசை தருமோக ...... வலையூடே ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி லேவாரும் விழிமாதர் ...... துயரூடே ஏகாம லழியாத மேலான பதமீதி லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய் தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு தானேறி விளையாடு ...... மொருபோதில் தாயாக வருசோதை காணாது களவாடு தாமோத ரன்முராரி ...... மருகோனே மாமாது வனமாது கார்மேவு சிலைமாது மாலாகி விளையாடு ...... புயவீரா வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ மாயூர கிரிமேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
630
பொதியமலை மைக்கணிக்கன்
தத்த தத்த தான தான தத்த தத்த தான தான தத்த தத்த தான தான ...... தனதான
மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச் சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர் திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
631
பொதியமலை வெடித்த வார்குழல்
தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி விழித்து மேகலை பதித்து வார்தொடு மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர் குடித்து நாயென முடக்கு மேல்பிணி யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர் குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக் குறித்து நீயரு கழைத்து மாதவர் கணத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய் உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென திகுத்த தீதிகு திகுர்த்த தாவென உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில் உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை அடைத்த மாசிறை விடுத்து வானுல களிக்கு மாயிர திருக்க ணானர சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா அளித்த தாதையு மிகுத்த மாமனும் அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ் அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
632
கழுகுமலை குதலை மொழியினார்
தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தானன ...... தனதான
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல் கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே மதலை மறுகிவா லிபத்தி லேவெகு பதகர் கொடியவா ளிடத்தி லேமிக வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல் மடிய அயிலையே விடுத்த வாகரு முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி யிசையை முரலமா வறத்தில் மீறிய கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
633
கழுகுமலை முலையை மறைத்து
தனதன தத்தத் தனத்த தானன தனதன தத்தத் தனத்த தானன தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான
முலையை மறைத்துத் திறப்ப ராடையை நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ் முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ...... ரணைமீதே அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர் மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக ...... ளுறவாமோ தலைமுடி பத்துத் தெறித்து ராவண னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் ...... மருகோனே கலைமதி யப்புத் தரித்த வேணிய ருதவிய வெற்றித் திருக்கை வேலவ கழுகும லைக்குட் சிறக்க மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
634
கழுகுமலை கோங்க முகை
தாந்த தனன தனன தாந்த தனன தனன தாந்த தனன தனனந் ...... தனதான
கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப மேந்து குவடு குழையும் ...... படிகாதல் கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர் வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும் வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும் ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
635
வள்ளியூர் அல்லில் நேரும்
தய்ய தானன ...... தனதான
அல்லில் நேருமி ...... னதுதானும் அல்ல தாகிய ...... உடல்மாயை கல்லி னேரஅ ...... வழிதோறுங் கையு நானுமு ...... லையலாமோ சொல்லி நேர்படு ...... முதுசூரர் தொய்ய வூர்கெட ...... விடும்வேலா வல்லி மாரிரு ...... புறமாக வள்ளி யூருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
636
கதிர்காமம் திருமகள் உலாவும்
தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதான
திருமகளு லாவு மிருபுயமு ராரி திருமருக நாமப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் ...... பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=LOUMlnfxzTc
Add (additional) Audio/Video Link
Back to Top
637
கதிர்காமம் அலகின் மாறு
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர் அருளி லாத தோடோய ...... மருளாகிப் பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு பருவ மேக மேதாரு ...... வெனயாதும் பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத பரிசில் தேடி மாயாத ...... படிபாராய் இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா இமய மாது பாகீர திநதி பால காசார லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத கதிர காம மூதூரி ...... லிளையோனே கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
638
கதிர்காமம் உடுக்கத் துகில்
தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன ...... தனதான
உடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
639
கதிர்காமம் எதிரிலாத பத்தி
தனன தான தத்த ...... தனதான தனன தான தத்த ...... தனதான
எதிரி லாத பத்தி ...... தனைமேவி இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் இதய வாரி திக்கு ...... ளுறவாகி எனது ளேசி றக்க ...... அருள்வாயே கதிர காம வெற்பி ...... லுறைவோனே கனக மேரு வொத்த ...... புயவீரா மதுர வாணி யுற்ற ...... கழலோனே வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
640
கதிர்காமம் கடகட கருவிகள்
தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தந் ...... தனதான
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர் காமத் தரங்கம் ...... மலைவீரா கனகத நககுலி புணரித குணகுக காமத் தனஞ்சம் ...... புயனோட வடசிக ரகிரித விடுபட நடமிடு மாவிற் புகுங்கந் ...... தவழாது வழிவழி தமரென வழிபடு கிலனென வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான் அடவியி ருடியபி நவகும ரியடிமை யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே அயிலவ சமுடன ததிதிரி தருகவி யாளப் புயங்கொண் ...... டருள்வோனே இடமொரு மரகத மயில்மிசை வடிவுள ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே இதமொழி பகரினு மதமொழி பகரினு மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
641
கதிர்காமம் சமர முக வேல்
தனதனன தானத்த தனதனன தானத்த தனதனன தானத்த ...... தனதான தானனா
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர் தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே.
Add (additional) Audio/Video Link
Back to Top
642
கதிர்காமம் சரத்தே யுதித்தாய்
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ...... தனதான
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச் சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச் சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய் செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய் திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார் பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார் பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின் கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக் கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.
Add (additional) Audio/Video Link
Back to Top
643
கதிர்காமம் சரியையாளர்க்கும்
தனதனா தத்தனத் தனதனா தத்தனத் தனதனா தத்தனத் ...... தனதான
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட் டருபரா சத்தியிற் ...... பரமான துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச் சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற் சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற் புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன் புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப் புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக் கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக் கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற் கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
644
கதிர்காமம் பாரவித முத்த
தானதன தத்தத்த தானதன தத்தத்த தானதன தத்தத்த ...... தனதான
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப யோதர நெருக்குற்ற ...... இடையாலே பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர் காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த காதில்முக வட்டத்தி ...... லதிமோக காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான் தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன் சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி கோணசயி லத்துக்ர ...... கதிர்காம வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின் வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை வேல்களில கப்பட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
645
கதிர்காமம் மரு அறா வெற்றி
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை வலிசெயா நிற்கு ...... மதனாலும் மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட மதிசுடா நிற்கு ...... மதனாலும் இருகணால் முத்த முதிரயா மத்தி னிரவினால் நித்த ...... மெலியாதே இடருறா மெத்த மயல்கொளா நிற்கு மிவளைவாழ் விக்க ...... வரவேணும் கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி கலவிகூர் சித்ர ...... மணிமார்பா கனகமா ணிக்க வடிவனே மிக்க கதிரகா மத்தி ...... லுறைவோனே முருகனே பத்த ரருகனே முத்தி முதல்வனே பச்சை ...... மயில்வீரா முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு முறியவேல் தொட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
646
கதிர்காமம் மாதர் வசமாய்
தானதன தானத் ...... தனதான
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் தீதகல வோதிப் ...... பணியாரும் தீநரக மீதிற் ...... றிகழ்வாரே நாதவொளி யேநற் ...... குணசீலா நாரியிரு வோரைப் ...... புணர்வேலா சோதிசிவ ஞானக் ...... குமரேசா தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
647
கதிர்காமம் முதிரு மாரவாரம்
தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த ...... தனதான
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி முனியு மார வார முற்ற ...... கடலாலே முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும் வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும் கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
648
கதிர்காமம் வருபவர்கள் ஓலை
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள் கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான் கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான் பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன் பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற பதமடியர் காண வந்த ...... கதிர்காமா அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
649
கதிர்காமம் தொடுத்த வாள்
தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன ...... தனதான
தொடுத்த வாளென விழித்து மார்முலை யசைத்து மேகலை மறைத்து மூடிகள் துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர் சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ முடித்த வார்குழல் விரித்து மேவிதழ் துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப் படுத்த பாயலி லணைத்து மாமுலை பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ் கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை வெளுத்து வாய்களு மலத்தி னாயென பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை விடுத்து யாகமும் நடத்தி யேயொரு மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே விதித்து ஞாலம தளித்த வேதனை யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல் விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி நடுக்க மாமலை பிளக்க வேகவ டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா அறத்தில் வாழுமை சிறக்க வேயறு முகத்தி னோடணி குறத்தி யானையொ டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
650
திருக்கோணமலை விலைக்கு மேனியில்
தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன ...... தனதான
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர் நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக் கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும் மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
651
காசி தாரணிக் கதி
தான தத்தன தான தானன தான தத்தன தான தானன தான தத்தன தான தானன ...... தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு சூது மெத்திய மூட னாய்மன சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக தாப மிக்குள வீண னாய்பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப் பூர ணச்சிவ ஞான காவிய மோது தற்புணர் வான நேயர்கள் பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப் பூசி மெய்ப்பத மான சேவடி காண வைத்தருள் ஞான மாகிய போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே வார ணத்தினை யேக ராவுமு னேவ ளைத்திடு போதுமேவிய மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே வாழு முப்புர வீற தானது நீறெ ழப்புகை யாக வேசெய்த மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே கார ணக்குறி யான நீதிய ரான வர்க்குமு னாக வேநெறி காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா கான கக்குற மாதை மேவிய ஞான சொற்கும ராப ராபர காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
652
காசி மங்கைக் கணவனும்
தந்தத் தனதன தானன தானன தந்தத் தனதன தானன தானன தந்தத் தனதன தானன தானன ...... தனதான
மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல் பங்கப் படமிசை யேபனி போல்மதம் வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல பந்துப் பனைபழ மோடிள நீர்குட மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே திங்கட் பதுசெல வேதலை கீழுற வந்துப் புவிதனி லேமத லாயென சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச் செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ அங்கைத் தரியென வேயொரு பாலக னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி சங்குத் திகிரிக ரோனரி நாரவ ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே கங்கைச் சடைமுடி யோனிட மேவிய தங்கப் பவளொளி பால்மதி போல்முக கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா கந்துப் பரிமயில் வாகன மீதிரு கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ் கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
653
காசி வேழம் உண்ட
தான தந்தன தானன ...... தனதான தான தந்தன தானன ...... தனதான
வேழ முண்ட விளாகனி ...... யதுபோல மேனி கொண்டு வியாபக ...... மயலூறி நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா காள கண்ட னுமாபதி ...... தருபாலா காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
654
மாயாபுரி சிகரம் அருந்த
தனன தனந்த தானன ...... தனதான தனன தனந்த தானன ...... தனதான
சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம் சிதறி யலைந்து போவது ...... செயலாசை மகர நெருங்க வீழ்வது ...... மகமாய மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே அகர நெருங்கி னாமய ...... முறவாகி அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக் ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
655
வயிரவிவனம் அருவரை எடுத்த
தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான ...... தனதான
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப னிருகர மிகுத்த பார ...... முருகாநின் பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
656
வெள்ளிகரம் அடல் அரி மகவு
தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த ...... தனதானா
அடலரி மகவு விதிவழி யொழுகு மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும் அலைகட லுலகி லலம்வரு கலக வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி இடர்படு மடிமை யுளமுரை யுடலொ டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர எனதற நினது கழல்பெற மவுன வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே வடமணி முலையு மழகிய முகமும் வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும் மரகத வடிவு மடலிடை யெழுதி வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா விடதர திகுணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா விகசித கமல பரிபுர முளரி வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://www.kaumaram.com/thiru/nnt0656_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
657
வெள்ளிகரம் சிகரிகள் இடிய
தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த ...... தனதான
சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல் திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல் அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன் றகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ நிகரிட அரிய சிவசுத பரம நிர்வச னப்ர சங்க ...... குருநாதா நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம வெகுமுக ககன நதிமதி யிதழி வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
658
வெள்ளிகரம் குவலயம் மல்கு
தனதன தய்ய தனதன தய்ய தனதன தய்ய ...... தனதான
குவலய மல்கு தவலிகள் முல்லை குளிர்நகை சொல்லு ...... முதுபாகு குழையிள வள்ளை யிடைசிறு வல்லி குயமுலை கொள்ளை ...... விழைமேவிக் கவலைசெய் வல்ல தவலரு முள்ள கலவியில் தெள்ளு ...... கவிமாலை கடிமல ரைய அணிவன செய்ய கழலிணை பைய ...... அருள்வாயே தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு தனியுழை புள்ளி ...... யுடனாடித் தருபுன வள்ளி மலைமற வள்ளி தருதினை மெள்ள ...... நுகர்வோனே அவநெறி சொல்லு மவரவை கொல்லு மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே அடையலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
659
வெள்ளிகரம் பொருவன கள்ள
தனதன தய்ய தனதன தய்ய தனதன தய்ய ...... தனதான
பொருவன கள்ள இருகயல் வள்ளை புரிகுழை தள்ளி ...... விளையாடும் புளகித வல்லி யிளகித வல்லி புரியிள முல்லை ...... நகைமீதே உருகிட வுள்ள விரகுடை யுள்ள முலகுயி ருள்ள ...... பொழுதேநின் றுமைதரு செல்வ னெனமிகு கல்வி யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ மருவலர் வள்ளி புரமுள வள்ளி மலைமற வள்ளி ...... மணவாளா வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை மரகத நல்ல ...... மயில்வீரா அருவரை விள்ள அயில்விடு மள்ள அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே அடையலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
660
வெள்ளிகரம் கள்ளம் உள்ள
தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய ...... தனதான
கள்ள முள்ள வல்ல வல்லி கையி லள்ளி ...... பொருளீயக் கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் ...... கிளைமாய அள்ளல் துள்ளி ஐவர் செல்லு மல்லல் சொல்ல ...... முடியாதே ஐய ரைய மெய்யர் மெய்ய ஐய செய்ய ...... கழல்தாராய் வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை ...... மொழியாலே மைய லெய்து மைய செய்யில் வையில் வெள்வ ...... ளைகளேற மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின் வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
661
வெள்ளிகரம் தொய்யில் செய்யில்
தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய ...... தனதான
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யு மைய ...... இடையாலுந் துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல் சொல்லு கள்ள ...... விழியாலும் மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல ...... குழலாலும் மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல்வ ...... ரையிலேனல் தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை ...... முருகோனே மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
662
வெள்ளிகரம் இல்லையென நாணி
தய்யதன தான தய்யதன தான தய்யதன தான ...... தனதான
இல்லையென நாணி யுள்ளதின் மறாம லெள்ளினள வேனும் ...... பகிராரை எவ்வமென நாடி யுய்வகையி லேனை யெவ்வகையு நாமங் ...... கவியாகச் சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத் தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது துய்யகழ லாளுந் ...... திறமேதோ வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ மையவரை பாகம் ...... படமோது மையுலவு சோலை செய்யகுளிர் சாரல் வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே வெல்லுமயி லேறு வல்லகும ரேச வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
663
வெள்ளிகரம் பையரவு போலு
தய்யதன தான தய்யதன தான தய்யதன தான ...... தனதான
பையரவு போலு நொய்யஇடை மாதர் பையவரு கோலந் ...... தனைநாடிப் பையலென வோடி மையல்மிகு மோக பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன் உய்யவொரு கால மையவுப தேச முள்ளுருக நாடும் ...... படிபேசி உள்ளதுமி லாது மல்லதவி ரோத உல்லசவி நோதந் ...... தருவாயே வையமுழு தாளு மையகும ரேச வள்ளிபடர் கானம் ...... புடைசூழும் வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள மையுததி யேழுங் ...... கனல்மூள வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
664
வெள்ளிகரம் வதன சரோருக
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த தானாதன தானந் தானன ...... தந்ததான
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும் வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும் இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான் கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக் கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
665
திருவல்லம் நசையொடு தோலு
தனதன தானந் தனதன தானந் தனதன தானந் ...... தனதான
நசையொடு தோலுந் தசைதுறு நீரும் நடுநடு வேயென் ...... புறுகீலும் நலமுறு வேயொன் றிடஇரு கால்நன் றுறநடை யாருங் ...... குடிலூடே விசையுறு காலம் புலனெறி யேவெங் கனலுயிர் வேழந் ...... திரியாதே விழுமடி யார்முன் பழுதற வேள்கந் தனுமென வோதும் ...... விறல்தாராய் இசையுற வேயன் றசைவற வூதும் எழிலரி வேழம் ...... எனையாளென் றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும் இடமிமை யாமுன் ...... வருமாயன் திசைமுக னாருந் திசைபுவி வானுந் திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர் தெரிவையர் தாம்வந் தருநட மாடுந் திருவல மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
666
வேலூர் அதிக ராய்ப்பொரு
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில் ரசனை காட்டிக ளீயார் கூடினும் அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே அசட ராக்கிகள் மார்மே லேபடு முலைகள் காட்டிகள் கூசா தேவிழும் அழகு காட்டிக ளாரோ டாகிலு ...... மன்புபோலே சதிர தாய்த்திரி வோயா வேசிகள் கருணை நோக்கமி லாமா பாவிகள் தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத சரச வார்த்தையி னாலே வாதுசெய் விரக மாக்கிவி டாமூ தேவிகள் தகைமை நீத்துன தாளே சேர்வதும் ...... எந்தநாளோ மதுரை நாட்டினி லேவாழ் வாகிய அருகர் வாக்கினி லேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..... மிர்ந்துகூனும் மருவு மாற்றெதிர் வீறே டேறிட அழகி போற்றிய மாறா லாகிய மகிமை யாற்சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள் பகலி ராத்திரி யோயா ஆலைகள் புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும் புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி லளகை போற்பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
667
வேலூர் சேல் ஆலம்
தானான தந்த தந்த தானான தந்த தந்த தானான தந்த தந்த ...... தனதான
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர் சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித் தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து தீராத துன்ப இன்ப ...... முறுமாதர் கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு கூராமல் மங்கி யங்க ...... மழியாதே கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய் மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின் வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
668
விரிஞ்சிபுரம் ஒருவரைச் சிறுமனை
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத் தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட் டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட் டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார் தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச் சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத் தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச் சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற் சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத் தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக் கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப் பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக் கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற் கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
669
விரிஞ்சிபுரம் குலையமயி ரோதி
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதானா
குலையமயி ரோதி குவியவிழி வீறு குருகினிசை பாடி ...... முகமீதே குறுவியர்வு லாவ அமுதினினி தான குதலையுமொ ராறு ...... படவேதான் பலவிதவி நோத முடனுபய பாத பரிபுரமு மாட ...... அணைமீதே பரிவுதரு மாசை விடமனமொ வாத பதகனையு மாள ...... நினைவாயே சிலைமலைய தான பரமர்தரு பால சிகிபரிய தான ...... குமரேசா திருமதுரை மேவு மமணர்குல மான திருடர்கழு வேற ...... வருவோனே கலின்வடிவ மான அகலிகைபெ ணான கமலபத மாயன் ...... மருகோனே கழனிநெடு வாளை கமுகொடிய மோது கரபுரியில் வீறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
670
விரிஞ்சிபுரம் நிகரில் பஞ்ச
தனன தந்த தானன தனன தந்த தானன தனன தந்த தானன ...... தனதான
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம் நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம் சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதக ...... ரறியாத தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன சரண புண்ட ரீகம ...... தருள்வாயே மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு மடிய இந்தி ராதியர் ...... குடியேறச் சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
671
விரிஞ்சிபுரம் பரவி உனது
தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா
பரவி யுனதுபொற் கரமு முகமுமுத் தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப் பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத் தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப் பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே சருவி யினியநட் புறவு சொலிமுதற் பழகு மவரெனப் பதறி யருகினிற் சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார் தமது ம்ருகமதக் களப புளகிதச் சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத் தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக் கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக் கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா கமல அயனுமச் சுதனும் வருணனக் கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க் கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே இரையு முததியிற் கடுவை மிடறமைத் துழுவை யதளுடுத் தரவு பணிதரித் திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத் தவனி தனிலெழிற் கரும முனிவருக் கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
672
விரிஞ்சிபுரம் மருவும் அஞ்சு
தனன தந்த தான தனன தந்த தான தனன தந்த தான ...... தனதான
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது மலமி தென்று போட ...... அறியாது மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும் வகையில் வந்தி ராத ...... அடியேனும் உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும் உலக மென்று பேச ......அறியாத உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர உபய துங்க பாத ...... மருள்வாயே அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும் அடிப ணிந்து பேசி ...... கடையூடே அருளு கென்ற போது பொருளி தென்று காண அருளு மைந்த ஆதி ...... குருநாதா திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர் செருவ டங்க வேலை ...... விடுவோனே செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
673
திருவாலங்காடு கனவாலங் கூர்விழி
தனதானந் தானன தானன தனதானந் தானன தானன தனதானந் தானன தானன ...... தனதான
கனவாலங் கூர்விழி மாதர்கள் மனசாலஞ் சால்பழி காரிகள் கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே கசிவாருங் கீறுகி ளாலுறு வசைகாணுங் காளிம வீணிகள் களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர் மனவேலங் கீலக லாவிகள் மயமாயங் கீதவி நோதிகள் மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில் மதிமாடம் வானிகழ் வார்மிசை மகிழ்கூரும் பாழ்மன மாமுன மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ தனதானந் தானன தானன எனவேதங் கூறுசொல் மீறளி ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா தகரேறங் காரச மேவிய குகவீரம் பாகும ராமிகு தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே தினமாமன் பாபுன மேவிய தனிமானின் தோளுட னாடிய தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா திகழ்வேடங் காளியொ டாடிய ஜெகதீசங் கேசந டேசுரர் திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
674
திருவாலங்காடு பொன்றா மன்று
தந்தானந் தாத்தம் தனதன தந்தானந் தாத்தம் தனதன தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன் றாக்கும் புதல்வரும் நன்றாமன் றார்க்கின் றுறுதுணை பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே பொங்காவெங் கூற்றம் பொதிதரு சிங்காரஞ் சேர்த்திங் குயரிய புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல நின்றானின் றேத்தும் படிநினை வுந்தானும் போச்சென் றுயர்வற நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன் நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை விஞ்சாதென் பாற்சென் றகலிட நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு கன்றாமுன் காத்துங் குவலய முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே கொந்தார்பைந் தார்த்திண் குயகுற மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல் கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே அன்றாலங் காட்டண் டருமுய நின்றாடுங் கூத்தன் திருவருள் அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே அன்பால்நின் தாட்கும் பிடுபவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
675
திருவாலங்காடு புவிபுனல் காலும்
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில் குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
676
திருவாலங்காடு வடிவது நீலம்
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில் முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
677
திருவோத்தூர் தவர்வாள் தோமர
தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம் ...... தனதான
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந் தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ் சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந் தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந் துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந் தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம் படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம் பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச் சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண் டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந் திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
678
பாக்கம் கார்க்கு ஒத்த மேனி
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல் காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற் கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர் போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற் பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர் பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
679
பாக்கம் பாற்றுக் கணங்கள்
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த ...... தனதான
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும் பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும் வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும் பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
680
திருவேற்காடு ஆலம் போல் எழு
தானந்தா தனதான தானந்தா தனதான தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல மாளம்போர் செயுமாய ...... விழியாலே ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார ஆடம்பார் குவிநேய ...... முலையாலே சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய வேளங்கார் துடிநீப ...... இடையாலே சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு காலந்தா னொழிவேது ...... உரையாயோ பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத மாதம்பா தருசேய ...... வயலூரா பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர பாசந்தா திருமாலின் ...... மருகோனே வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும் வீறங்கே யிருபாலு ...... முறவீறு வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
681
திருவேற்காடு கார்ச் சார் குழலார்
தாத்தாதன தானன தானன தாத்தாதன தானன தானன தாத்தாதன தானன தானன ...... தனதான
கார்ச்சார்குழ லார்விழி யாரயி லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே காழ்க்காதல தாமன மேமிக வார்க்காமுக னாயுறு சாதக மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே பார்ப்பாயலை யோவடி யாரொடு சேர்ப்பாயலை யோவுன தாரருள் கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா பார்ப்பாவல ரோதுசொ லால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே வார்ப்பேரரு ளேபொழி காரண நேர்ப்பாவச காரண மாமத ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப வாக்காசிவ மாமத மேமிக வூக்காதிப யோகம தேயுறு மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே வேற்காடவல் வேடர்கள் மாமக ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு வேற்காடுறை வேதபு ரீசுரர் ...... தருசேயே வேட்டார்மக வான்மக ளானவ ளேட்டார்திரு மாமண வாபொனி னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
682
வடதிருமுல்லைவாயில் அணி செவ்வியார்
தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி தனநிவ்வி யேகரை யேறிட அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர அருள்வல்லை யோநெடு நாளின மிருளில்லி லேயிடு மோவுன தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே குணவில்ல தாமக மேரினை யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத குடிலில்ல மேதரு நாளெது மொழிநல்ல யோகவ ரேபணி குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா பணிகொள்ளி மாகண பூதமொ டமர்கள்ளி கானக நாடக பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே படரல்லி மாமலர் பாணம துடைவில்லி மாமத னாரனை பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா மணமொல்லை யாகி நகாகன தனவல்லி மோகன மோடமர் மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா மருமல்லி மாவன நீடிய பொழில் மெல்லி காவன மாடமை வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
683
வடதிருமுல்லைவாயில் சோதி மாமதி
தான தானன தானன தந்தன தான தானன தானன தந்தன தான தானன தானன தந்தன ...... தனதான
சோதி மாமதி போல்முக முங்கிளர் மேரு லாவிய மாமுலை யுங்கொடு தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே சோலி பேசிமு னாளிலி ணங்கிய மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி மோதி யேகனி வாயத ரந்தரு நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின் மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி மோச மேதரு தோதக வம்பியர் மீதி லேமய லாகிம னந்தளர் மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ ஆதி யேயெனும் வானவர் தம்பகை யான சூரனை மோதிய ரும்பொடி யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர லேறி யேயுறி மீதளை யுங்கள வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே வாதி னால்வரு காளியை வென்றிடு மாதி நாயகர் வீறுத யங்குகை வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர் வாச மாமல ரோனொடு செந்திரு மார்பில் வீறிய மாயவ னும்பணி மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
684
வடதிருமுல்லைவாயில் மின் இடை கலாப
தய்யதன தான தந்தன தய்யதன தான தந்தன தய்யதன தான தந்தன ...... தனதான
மின்னிடைக லாப தொங்கலொ டன்னமயில் நாண விஞ்சிய மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே மெள்ளவுமு லாவி யிங்கித சொல்குயில்கு லாவி நண்பொடு வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக கன்னியர்கள் போலி தம்பெறு மின்னணிக லார கொங்கையர் கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான கண்ணியிலு ளாக சுந்தர பொன்னியல்ப தார முங்கொடு கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய் சென்னியிலு டாடி ளம்பிறை வன்னியும ராவு கொன்றையர் செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா செம்முகஇ ராவ ணன்தலை விண்ணுறவில் வாளி யுந்தொடு தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே துன்னியெதிர் சூரர் மங்கிட சண்முகம தாகி வன்கிரி துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே சொல்லுமுனி வோர்த வம்புரி முல்லைவட வாயில் வந்தருள் துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
685
திருவலிதாயம் மருமல்லி யார்
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர் மருளுள்ளி நாயடிய ...... னலையாமல் இருநல்ல வாகுமுன ...... தடிபேண இனவல்ல மானமன ...... தருளாயோ கருநெல்லி மேனியரி ...... மருகோனே கனவள்ளி யார்கணவ ...... முருகேசா திருவல்லி தாயமதி ...... லுறைவோனே திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
686
திருவொற்றியூர் கரிய முகில் போலும்
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான
கரியமுகில் போலு மிருளளக பார கயல்பொருத வேலின் ...... விழிமாதர் கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர களபமுலை தோய ...... அணையூடே விரகமது வான மதனகலை யோது வெறியனென நாளு ...... முலகோர்கள் விதரணம தான வகைநகைகள் கூறி விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய் அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர் அவர்கள்புக ழோத ...... புவிமீதே அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ அமரர்குல நேச ...... குமரேசா சிரகரக பாலர் அரிவையொரு பாகர் திகழ்கநக மேனி ...... யுடையாளர் திருவளரு மாதி புரியதனில் மேவு ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
687
திருவொற்றியூர் சொருபப் பிரகாச
தனதத்தன தானதன தனதத்தன தானதன தனதத்தன தானதன ...... தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக் கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில் பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
688
திருமயிலை அமரும் அமரர்
தனன தனதனன தனன தனதனன தனன தனதனன ...... தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி யவரும் வெருவவரு ...... மதிகாளம் அதனை யதகரண விதன பரிபுரண மமைய னவர்கரண ...... அகிலேச நிமிர வருள்சரண நிபிட மதெனவுன நிமிர சமிரமய ...... நியமாய நிமிட மதனிலுண வலசி வசுதவர நினது பதவிதர ...... வருவாயே சமர சமரசுர அசுர விதரபர சரத விரதஅயில் ...... விடுவோனே தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி ...... தகுர்தாத எமர நடனவித மயிலின் முதுகில்வரு மிமைய மகள்குமர ...... எமதீச இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு மெமது பரகுரவ ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
689
திருமயிலை அயில் ஒத்து எழும்
தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே அமுதொத் திடுமரு ...... மொழியாலே சயிலத் தெழுதுணை ...... முலையாலே தடையுற் றடியனு ...... மடிவேனோ கயிலைப் பதியரன் ...... முருகோனே கடலக் கரைதிரை ...... யருகேசூழ் மயிலைப் பதிதனி ...... லுறைவோனே மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
690
திருமயிலை அறமிலா அதி
தனன தானன தானன தந்தத் ...... தனதான
அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத் தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
691
திருமயிலை இகல வருதிரை
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
இகல வருதிரை பெருகிய சலநிதி நிலவு முலகினி லிகமுறு பிறவியி னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர இசையு முனதிரு பதமலர் தனைமன மிசைய நினைகிலி யிதமுற வுனதரு ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உமைபாகர் மகிழு மகவென அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர் மயம தடரிட இடருறு மடியனு மினிமை தருமுன தடியவ ருடனுற மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே சிகர தனகிரி குறமக ளினிதுற சிலத நலமுறு சிலபல வசனமு திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத சிரண புரணவி தரணவி சிரவண சரணு சரவண பவகுக சயனொளி திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத அகர உகரதி மகரதி சிகரதி யகர அருளதி தெருளதி வலவல அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே அழகு மிலகிய புலமையு மகிமையும் வளமு முறைதிரு மயிலையி லநுதின மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
692
திருமயிலை இணையது இலதாம்
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப் பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு பருவரதி போல வந்த ...... விலைமானார் பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க கலபமயில் மேலு கந்த ...... குமரேசா கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
693
திருமயிலை களபம் மணி ஆரம்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங் கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும் வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும் துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப துயிலதர னாத ரித்த ...... மருகோனே சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர துரகதக லாப பச்சை ...... மயில்வீரா அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
694
திருமயிலை கடிய வேக
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர் கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர் கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு கனவி கார மேபேசி ...... நெறி பேணாக் கொடிய னேது மோராது விரக சால மேமூடு குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு குவளை வாகும் நேர்காண ...... வருவாயே படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட பணமு மாட வேநீடு ...... வரைசாடிப் பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு பதிய தாக வேலேவு ...... மயில்வீரா வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை வனச வாவி பூவோடை ...... வயலோடே மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
695
திருமயிலை திரைவார் கடல்
தனனா தனனாதன தனனா தனனாதன தனனா தனனாதன ...... தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு திரிவே னுனையோதுதல் ...... திகழாமே தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால் வரைமா துமையாள் தரு மணியே குகனேயென அறையா வடியேனுமு ...... னடியாராய் வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு மகநா ளுளதோசொல ...... அருள்வாயே இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு மிழிவா கிமுனேயிய ...... லிலராகி இருளா மனதேயுற அசுரே சர்களேமிக இடரே செயவேயவ ...... ரிடர்தீர மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ மதமா மிகுசூரனை ...... மடிவாக வதையே செயுமாவலி யுடையா யழகாகிய மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
696
திருமயிலை நிரைதரு மணியணி
தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன ...... தனதான
நிரைதரு மணியணி யார்ந்த பூரித ம்ருகமத களபகில் சாந்து சேரிய இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர மிசைதர இலவிதழ் மோந்து வாயமு தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும் வினையனை யிருவினை யீண்டு மாழ்கட லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே பரையபி நவைசிவை சாம்ப வீயுமை யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி பகவதி யிருசுட ரேந்து காரணி மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே குலநறை மலரளி சூழ்ந்து லாவிய மயிலையி லுறைதரு சேந்த சேவக குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
697
திருமயிலை வரும் மயில் ஒத்தவர்
தனதன தத்தன தானா தானன தனதன தத்தன தானா தானன தனதன தத்தன தானா தானன ...... தனதான
வருமயி லொத்தவ ரீவார் மாமுக மதியென வைத்தவர் தாவா காமிகள் வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர் மயலினி லுற்றவர் மோகா வாரிதி யதனிடை புக்கவ ராளாய் நீணிதி தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி தருபர வுத்தம வேளே சீருறை அறுமுக நற்றவ லீலா கூருடை அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக சரவண வெற்றிவி நோதா மாமணி தருமர வைக்கடி நீதா வாமணி மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ தெனவரி மத்தள மீதார் தேமுழ திடுவென மிக்கியல் வேதா வேதொழு திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம் உரை செயு முத்தம வீரா நாரணி உமையவ ளுத்தர பூர்வா காரணி உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே உயர்வர முற்றிய கோவே யாரண மறைமுடி வித்தக தேவே காரண ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
698
திருவான்மியூர் குசமாகி யாருமலை
தனதான தானதன தனதான தானதன தனதான தானதன ...... தனதான
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை குடிலான ஆல்வயிறு ...... குழையூடே குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர் குழல்கார தானகுண ...... மிலிமாதர் புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப் புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை பொலிவான பாதமல ...... ரருள்வாயே நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு நிகழ்பொத மானபர ...... முருகோனே நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி சிவநாத ராலமயில் ...... அமுதேசர் திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர் திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
699
கோசைநகர் ஆதவித பாரமுலை
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற தாலிலையெ னாமதன ...... கலைலீலை யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி லாசைமிக வாயடிய ...... னலையாமல் நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு னானபத மாமலரை ...... நலமாக நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை நாடியரு ளேயருள ...... வருவாயே சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு சீதசல மாசடில ...... பரமேசர் சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ சீறிவரு மாவசுரர் ...... குலகாலா கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு பாலுமுற வீறிவரு ...... குமரேசா கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
700
பெருங்குடி தலங்களில் வரும்
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன ...... தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர் தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ் சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர் தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந் துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர் தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ் சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர் சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
701
மாடம்பாக்கம் தோடு உறும் குழை
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு றுங்குழை யாலே கோல்வளை சூடு செங்கைக ளாலே யாழ்தரு கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே தூம மென்குழ லாலே யூறிய தேனி லங்கித ழாலே யாலவி லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே பாட கம்புனை தாளா லேமிக வீசு தண்பனி நீரா லேவளர் பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர் பாவ கங்களி னாலே யான்மயல் மூழ்கி நின்றய ராதே நூபுர பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ நாட ருஞ்சுடர் தானா வோதுசி வாக மங்களி னானா பேதவ நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி நால்வி தந்தரு வேதா வேதமு நாடி நின்றதொர் மாயா தீதம னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே வாட யங்கியவேலா லேபொரு சூர்த டிந்தருள் வீரா மாமயி லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன் வாச கம்பிற வாதோர் ஞானசு கோத யம்புகல் வாசா தேசிக மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
702
மாடம்பாக்கம் விலையறுக்கவும்
தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு மணந்துன் றுஞ்செ ழுந்தார் புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும் விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர் விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே வெளியி னிற்கவும் வலிய முட்டரை யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை திரும்பும் பண்ப ரன்றே யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல் கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு நயங்கொண் டங்கி ருந்தே குணுகி யிட்டுள பொருள்ப றித்தற முனிந்தங் கொன்று கண்டே கலக மிட்டவ ரகல டித்தபின் வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே கதைகள் செப்பவும் வலச மர்த்திகள் குணங்கண் டுந்து ளங்கா மனித னிற்சிறு பொழுது முற்றுற நினைந்துங் கண்டு கந்தே கடிம லர்ப்பத மணுகு தற்கறி விலன் பொங் கும்பெ ரும்பா ...... தகனையா ளுவையோ சிலைத னைக்கொடு மிகஅ டித்திட மனந்தந் தந்த ணந்தா மரைம லர்ப்பிர மனைந டுத்தலை யரிந்துங் கொண்டி ரந்தே திரிபு ரத்தெரி புகந கைத்தருள் சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா செருவி டத்தல கைகள்தெ னத்தென தெனந்தெந் தெந்தெ னந்தா எனஇ டக்கைகள் மணிக ணப்பறை டிகுண்டிங் குண்டி குண்டா டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள் மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு மிரண்டஞ் சொன்ப தொன்றேய் பணைபு யத்தையு மொருவ கைப்பட வெகுண்டம் பொன்றெ றிந்தோன் மதலை மைத்துன அசுர ரைக்குடல் திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய் வயல்க ளிற்கய லினமி குத்தெழு வரம்பின் கண்பு ரண்டே பெருக யற்கொடு சொரியு நித்தில நிறைந்தெங் குஞ்சி றந்தே வரிசை பெற்றுயர் தமனி யப்பதி யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளையநா யகனே.
Add (additional) Audio/Video Link
Back to Top
703
கோடைநகர் ஆதிமுதன் நாளில்
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து ஆகமல மாகி நின்று ...... புவிமீதில் ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று ...... விளையாடிப் பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப் போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன் பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற தீரனரி நார ணன்றன் ...... மருகோனே. தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் ...... முருகோனே கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற கோமளிய நாதி தந்த ...... குமரேசா கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
704
கோடைநகர் சாலநெடு நாள்
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து சாமளவ தாக வந்து ...... புவிமீதே சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப் பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப் பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று பாதமலர் சேர அன்பு ...... தருவாயே ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள் ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை கோவையமு தூற லுண்ட ...... குமரேசா கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
705
கோடைநகர் ஏறு ஆனாலே
தானா தானா தானா தானா தானா தானா ...... தனதானா
ஏறா னாலே நீறாய் மாயா வேளே வாசக் ...... கணையாலே ஏயா வேயா மாயா வேயா லாமே ழோசைத் ...... தொளையாலே மாறா யூறா யீறாய் மாலாய் வாடா மானைக் ...... கழியாதே வாராய் பாராய் சேரா யானால் வாடா நீபத் ...... தொடைதாராய் சீறா வீறா ஈரேழ் பார்சூழ் சீரார் தோகைக் ...... குமரேசா தேவா சாவா மூவா நாதா தீரா கோடைப் ...... பதியோனே வேறாய் மாறா யாறா மாசூர் வேர்போய் வீழப் ...... பொருதோனே வேதா போதா வேலா பாலா வீரா வீரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
706
கோடைநகர் ஞால மெங்கும்
தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர் கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
707
கோடைநகர் தோழமை கொண்டு
தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள் ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத் தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள் ஈவது கண்டுத கைந்த குண்டர்கள் சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல் வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள் நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள் வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும் வாலியு மம்பர மும்ப ரம்பரை ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன் ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே கோழி சிலம்பந லம்ப யின்றக லாப நடஞ்செய மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேல னெனும்பெய ரன்பு டன்புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
708
கோடைநகர் தோள் தப்பாமல்
தானத் தானத் தானத் தானத் தானத் தானத் ...... தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச் சூழ்துற் றார்துற் ...... றழுவாருந் தூரப் போகக் கோரப் பாரச் சூலப் பாசச் ...... சமனாரும் பாடைக் கூடத் தீயிற் றேறிப் பாழ்பட் டேபட் ...... டழியாதே பாசத் தேனைத் தேசுற் றார்பொற் பாதத் தேவைத் ...... தருள்வாயே ஆடற் சூர்கெட் டோடத் தோயத் தாரச் சீறிப் ...... பொரும்வேலா ஆனைச் சேனைக் கானிற் றேனுக் காரத் தாரைத் ...... தரும்வீரா கூடற் பாடிக் கோவைப் பாவைக் கூடப் பாடித் ...... திரிவோனே கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
709
கோடைநகர் வாசித்த நூல்
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த ...... தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
710
திருப்போரூர் அனுத்தே னேர்மொழி
தனத்தா தானன தானா தானன தனத்தா தானன தானா தானன தனத்தா தானன தானா தானன ...... தனதான
அனுத்தே னேர்மொழி யாலே மாமய லுடைத்தார் போலவு மோர்நா ளானதி லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள் அழைத்தே வீடினி லேதா னேகுவர் நகைத்தே மோடிக ளாவார் காதலொ டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின் குனித்தே பாகிலை யீவார் பாதியில் கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள் குறித்தே மாமய லாலே நீள்பொருள் பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே வனத்தே வேடுவர் மாதா மோர்மினை யெடுத்தே தான்வர வேதான் யாவரும் வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா மலர்த்தே னோடையி லோர்மா வானதை பிடித்தே நீள்கர வாதா டாழியை மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே சினத்தே சூரர்கள் போராய் மாளவு மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
711
திருப்போரூர் உருக்கு ஆர் வாளி
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த தனத்தா தான தந்த ...... தனதான
உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள் உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம் உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள் அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
712
திருப்போரூர் சீர் உலாவிய
தான தானன தானன தான தானன தானன தான தானன தானன ...... தனதான
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில் சேய சாயல்க லாமதி ...... முகமானார் தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர் சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய கார ணாகரு ணாகர ...... முருகோனே போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு பூப சேவக மாமயில் ...... மிசையோனே போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
713
திருப்போரூர் திமிர மாமன
தனன தானன தானன தனன தானன தானன தனன தானன தானன ...... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ திமிர மேயரி சூரிய ...... திரிலோக தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி குணக லாநிதி நாரணி ...... தருகோவே குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம் பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக பசுர பாடன பாளித ...... பகளேச பசித பாரண வாரண துவச ஏடக மாவயில் பரவு பாணித பாவல ...... பரயோக சமப ராமத சாதல சமய மாறிரு தேவத சமய நாயக மாமயில் ...... முதுவீர சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
714
உத்தரமேரூர் சுருதி மறைகள்
தனன தனன தனதான தனன தனன தனதான தனன தனன தனதான ...... தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள் துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர் சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள் அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும் அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக மகர சலதி அளறாக ...... முதுசூரும் மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள் நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
715
உத்தரமேரூர் தோல் எலும்பு
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து சோரு மிந்த நோய கன்று ...... துயராற ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
716
உத்தரமேரூர் நீள் புயல் குழல்
தானனத் தனதான தானனத் தனதான தானனத் தனதான ...... தனதான
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய் நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான பார்வைசற் றருளோடு ...... பணியாயோ ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு மாகமப் பொருளோரு ...... மனைவோரும் ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு மாயிரத் திருநூறு ...... மறையோரும் வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக வாகுசித் திரதோகை ...... மயிலேறி மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல மான்மகட் குளனான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
717
உத்தரமேரூர் மாதர் கொங்கையில்
தான தந்தன தத்தா தத்தன தான தந்தன தத்தா தத்தன தான தந்தன தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு மார்பி லங்கியல் முத்தா ரத்தினில் வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில் மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில் வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி ஆத ரங்கொடு கெட்டே யிப்படி ஆசை யின்கட லுக்கே மெத்தவும் ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத ஆயி ரங்கலை கத்தா மத்திப னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே சாத னங்கொடு தத்தா மெத்தென வேந டந்துபொய் பித்தா வுத்தர மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள் நீதி தந்திர நற்சார் புற்றருள் சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும் வேள்வி யும்புவி யிற்றா பித்தருள் வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ் மேரு மங்கையி லத்தா வித்தக வேலொ டும்படை குத்தா வொற்றிய வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
718
மதுராந்தகம் குதிபாய்ந்தி ரத்தம்
தனதாந்த தத்த தனன தத்தத் தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக் கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர் குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக் கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற் கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத உபயாம்பு யப்பு ணையையி னிப்பற் றுங்க ருத்தை யென்று ...... தருவாயே கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக் ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற் பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா மதனாந்த கர்க்கு மகவெ னப்பத் மந்த னிற்பி றந்த ...... குமரேசா மதுராந்த கத்து வடதி ருச்சிற் றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
719
மதுராந்தகம் சயில அங்கனைக்கு
தனதாந்த தத்த தனன தத்தத் தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக் கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி சதிதாண்ட வத்தர் சடையி டத்துக் கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச் செயல்மாண்டு சித்த மவிழ நித்தத் த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ் சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற் றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான் அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக் கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற் றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற் குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா மதுராந்த கத்து வடதி ருச்சிற் றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
720
மதுராந்தகம் மனைமாண்சுத ரான
தனதாந்தன தான தனந்தன தனதாந்தன தான தனந்தன தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு மனம்வேந்திணை யான தனங்களு மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி மயமாம்பல வான கணங்குல மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார இனவாம்பரி தான்ய தனம்பதி விடஏன்றெனை மோன தடம்பர மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா இடவார்ந்தன சானு நயம்பெறு கடகாங்கர சோண வியம்பர இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார் தமதாஞ்சுத தாப ரசங்கம மெனவோம்புறு தாவ னவம்படர் தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே முனவாம்பத மூடி கவந்தன முயல்வான்பிடி மாடி மையைங்கரர் முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு முககாம்பிர மோட மர்சம்பன மதுராந்தக மாந கரந்திகழ் முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
721
சேயூர் முகிலாமெனும் வார்
தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன ...... தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை புருவார்கயல் வேல்விழி யார்சசி முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர் முலைமாலிணை கோபுர மாமென வடமாடிட வேகொடி நூலிடை முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார் அகிசேரல்கு லார்தொடை வாழையின் அழகார்கழ லார்தர வேய்தரு அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி அனமாமென யாரையு மால்கொள விழியால்சுழ லாவிடு பாவையர் அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ ககனார்பதி யோர்முறை கோவென இருள்காரசு ரார்படை தூள்பட கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா கமலாலய நாயகி வானவர் தொழுமீசுர னாரிட மேவிய கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா மகிழ்மாலதி நாவல்ப லாகமு குடனாடநி லாமயில் கோகில மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா மதிமாமுக வாவடி யேனிரு வினைதூள்பட வேயயி லேவிய வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
722
திருவக்கரை கலகலெனச் சில
தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன ...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ தொழிவ துனைச்சிறி ...... துரையாதே கருவழிதத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை ...... யிடைவீழா உலகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி ...... யடிநாயேன் உனதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத ...... மருள்வாயே குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா குணதர வித்தக குமர புனத்திடை குறமக ளைப்புணர் ...... மணிமார்பா அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு மணிதிரு வக்கரை ...... யுறைவோனே அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
723
திருவக்கரை பச்சிலை இட்டு
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள் குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள் பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள் பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள் பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யிதழூறல் எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில் இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர் இச்சையி லிப்படி நித்தம னத்துயர் பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர் நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர் நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை நட்டர வப்பணி சுற்றிம தித்துள நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
724
சிறுவை அண்டர்பதி குடியேற
தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன தனதான ...... தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=B1WB4nKf_M0
Add (additional) Audio/Video Link
Back to Top
725
சிறுவை சீதள வாரிஜ
தானன தானன தானான தானன தானன தானன தானான தானன தானன தானன தானான தானன ...... தனதான
சீதள வாரிஜ பாதாந மோநம நாரத கீதவி நோதாந மோநம சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ் சேகர மானப்ர தாபாந மோநம ஆகம சாரசொ ரூபாந மோநம தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப் பாதக நீவுகு டாராந மோநம மாவசு ரேசக டோராந மோநம பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது பார்வதி யாள்தரு பாலாந மோநம நாவல ஞானம னோலாந மோநம பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய் போதக மாமுக னேரான சோதர நீறணி வேணியர் நேயாப்ர பாகர பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா போதக மாமறை ஞானாத யாகர தேனவிழ் நீபந றாவாரு மார்பக பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா மாதவர் தேவர்க ளோடேமு ராரியு மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ் மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா வானவ ரூரினும் வீறாகி வீறள காபுரி வாழ்வினு மேலாக வேதிரு வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
726
சிறுவை பிறவியான சடம்
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
727
சிறுவை வேல் இரண்டு
தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன ...... தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள் காத லின்பொருள் மேவின பாதகர் வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி வேளை யென்பதி லாவசை பேசியர் வேசி யென்பவ ராமிசை மோகிகள் மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும் மால யன்பர னாரிமை யோர்முனி வோர் புரந்தர னாதிய ரேதொழ மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி யேவி ரும்பி வினாவுட னேதொழ வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே நீல சுந்தரி கோமளி யாமளி நாட கம்பயில் நாரணி பூரணி நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ காம சுந்தரி யேதரு பாலக நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற மாநி லங்களெ லாநிலை யேதரு ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே ஆட கம்பயில் கோபுர மாமதி லால யம்பல வீதியு மேநிறை வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
728
திருவாமாத்தூர் அடல்வடி வேல்கள்
தனதன தான தானன, தனதன தான தானன தனதன தான தானன ...... தனதான
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத் தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத் தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர் துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர் விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில் விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
729
திருவாமாத்தூர் கண்க யற்பிணை
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான
கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது நன்க மைக்கின மாமாமென ...... முகையான கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள் மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர் வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
730
திருவாமாத்தூர் கருமுகில் போல்
தனதன தானத் தானன, தனதன தானத் தானன தனதன தானத் தானன ...... தனதான
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள் கனதன பாரக் காரிகள் ...... செயலோடே பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள் பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள் புரிவது தானெப் போதது ...... புகல்வாயே தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத் தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
731
திருவாமாத்தூர் கால முகில் என
தான தனதன தனதன தனதன தான தனதன தனதன தனதன தான தனதன தனதன தனதன ...... தனதான
கால முகிலென நினைவுகொ டுருவிலி காதி யமர்பொரு கணையென வடுவகிர் காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங் கான மமர்குழ லரிவையர் சிலுகொடு காசி னளவொரு தலையணு மனதினர் காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ் சால மயல்கொடு புளகித கனதன பார முறவண முருகவிழ் மலரணை சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச் சாதி குலமுறு படியினின் முழுகிய தாழ்வ தறஇடை தருவன வெளியுயர் தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே வேலை தனில்விழி துயில்பவ னரவணை வேயி னிசையது நிரைதனி லருள்பவன் வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது வேடை கெடவமு தருளிய பொழுதினில் வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப வாலி யுடனெழு மரமற நிசிசரன் வாகு முடியொரு பதுகர மிருபது மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே வாச முறுமலர் விசிறிய பரிமள மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
732
தச்சூர் அச்சா யிறுக்காணி
தத்தா தனத்தான தாத்தத் தனந்த தத்தா தனத்தான தாத்தத் தனந்த தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன் மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித் தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள் தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
733
திருக்கோவலூர் பாவ நாரிகள்
தான தானன தானன, தான தானன தானன தான தானன தானன ...... தனதான
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ பாவை யாரிள நீரன ...... முலையாலும் பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை பார காரன வார்குழ ...... லதனாலுஞ் சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ் சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு சார மாயதி லேயுற ...... லொழிவேனோ ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி யாதி காணரி தாகிய ...... பரமேச ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி கோடி யாகம மாவொலி ...... மிகவீறும் கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
734
தேவனூர் ஆறும் ஆறும்
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும் ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற ஆரணாக மங்க டந்த ...... கலையான ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய் யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
735
தேவனூர் தாரகாசுரன் சரிந்து
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
736
தேவனூர் காணொணாதது
தான தானன தனனா தனதன தான தானன தனனா தனதன தான தானன தனனா தனதன ...... தந்ததான
காணொ ணாதது உருவோ டருவது பேசொ ணாதது உரையே தருவது காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக் காய பாசம தனிலே யுறைவது மாய மாயுட லறியா வகையது காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப் பேணொ ணாதது வெளியே யொளியது மாய னாரய னறியா வகையது பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப் பேரு மாய்கலை யறிவாய் துரியவ தீத மானது வினையேன் முடிதவ பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே வீணொ ணாதென அமையா தசுரரை நூறி யேயுயிர் நமனீ கொளுவென வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே வேத நான்முக மறையோ னொடும்விளை யாடி யேகுடு மியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ் ஞான யோகிக ளுளமே யுறைதரு தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
737
திருவதிகை பரவுவரிக் கயல்
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப் பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல் பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப் படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர் சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத் துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன் சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற் சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக் கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக் கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச் செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித் திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித் திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
738
திருவதிகை விடமும் வேலன
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான
விடமும் வேலன மலரன விழிகளு மிரத மேதரு மமுதெனு மொழிகளும் விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி மிகவு மாண்மையு மெழினல முடையவர் வினையு மாவியு முடனிரு வலையிடை வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா இடரு றாதுனை நினைபவர் துணைகொள இனிமை போலெழு பிறவியெ னுவரியி னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள் ககன பூபதி யிடர்கெட அருளிய இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே படரு மார்பினி லிருபது புயமதொ டரிய மாமணி முடியொளி ரொருபது படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய் பரவை யூடெரி பகழியை விடுபவர் பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே அடர வேவரு மசுரர்கள் குருதியை அரக ராவென அலகைகள் பலியுண அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா அமர ராதிய ரிடர்பட அடர்தரு கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
739
திருவாமூர் சீத மதியம்
தான தனன தனத்தந் ...... தனதான
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான் மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர் வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
740
வடுகூர் அரியயன் அறியாதவர்
தனதன தனனா தனதன தனனா தனதன தனனா ...... தனதான
அரியய னறியா தவரெரி புரமூ ணதுபுக நகையே ...... வியநாதர் அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ றழலையு மழுநேர் ...... பிடிநாதர் வரைமக ளொருகூ றுடையவர் மதனா கமும்விழ விழியே ...... வியநாதர் மனமகிழ் குமரா எனவுன திருதாள் மலரடி தொழுமா ...... றருள்வாயே அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல் அவனியை வலமாய் ...... வருவோனே அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல் அயில்தனை விசையாய் ...... விடுவோனே வரிசையொ டொருமா தினைதரு வனமே மருவியொர் குறமா ...... தணைவேடா மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
741
திருத்துறையூர் ஆரத்தன பார
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில் யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள் கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங் கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள் பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர் போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
742
திருத்துறையூர் வெகு மாய வித
தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துரு வாகிய திறமேப ழகப்படு சாதக விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி வினையான கருக்குழி யாமெனு மடையாள முளத்தினின் மேவினும் விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல் தகவாம தெனைப்பிடி யாமிடை கயிறாலு மிறுக்கிம காகட சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச் சதிகாரர் விடக்கதி லேதிரள் புழுவாக நெளித்தெரி யேபெறு மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ உககால நெருப்பதி லேபுகை யெழவேகு முறைப்படு பாவனை யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி உலவாந ரகுக்கிரை யாமவர் பலவோர்கள் தலைக்கடை போயெதிர் உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித் தொகலாவ தெனக்கினி தானற வளமாக அருட்பத மாமலர் துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா துதிமாத வர்சித்தர்ம கேசுரர் அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
743
திருநாவலூர் கோல மறை
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட ...... கணையாலே கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற கோகிலமி குத்த ...... குரலாலே ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழலி றைக்கு ...... நிலவாலே ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த மாசைகொட ணைக்க ...... வரவேணும் நாலுமறை கற்ற நான்முகனு தித்த நாரணனு மெச்சு ...... மருகோனே நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து நாகமற விட்ட ...... மயில்வீரா சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தி ...... லணைவோனே சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
744
திருவெண்ணெய்நல்லூர் பலபல தத்துவம்
தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான
பலபல தத்துவ மதனையெ ரித்திருள் பரையர ணப்படர் வடவன லுக்கிரை படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத வொலிமலி யத்திரு நடனமி யற்றிய கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ டனகச கத்துவம் வருதலு மிப்படி கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே புனமலை யிற்குற மகளய லுற்றொரு கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை கிழவிய றச்சுக குமரித கப்பனை மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
745
திருப்பாதிரிப்புலியூர் நிணமொடு குருதி
தனதன தனன தனந்த தானன தனதன தனன தனந்த தானன தனதன தனன தனந்த தானன ...... தனதான
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம் நிலைநிலை யுருவ மலங்க ளாவது நவதொளை யுடைய குரம்பை யாமிதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும் உணர்விலி செபமுத லொன்று தானிலி நிறையிலி முறையிலி யன்பு தானிலி உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன் ஒருதிரு மரகத துங்க மாமிசை யறுமுக மொளிவிட வந்து நான்மறை யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப் புவியிடை யுருள முனிந்து கூர்கணை யுறுசிலை வளைய வலிந்து நாடிய புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே அணிதரு கயிலை நடுங்க வோரெழு குலகிரி யடைய இடிந்து தூளெழ அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே அமலைமு னரிய தவஞ்செய் பாடல வளநகர் மருவி யமர்ந்த தேசிக அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
746
திருமாணிகுழி மதிக்கு நேரெனும்
தனத்த தானன தானான தானன தனத்த தானன தானான தானன தனத்த தானன தானான தானன ...... தந்ததான
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்கைமூழ்கி மதித்த பூதர மாமாம னோலயர் செருக்கி மேல்விழ நாடோறு மேமிக வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன் பதித்த நூபுர சீர்பாத மாமலர் படைக்குள் மேவிய சீராவொ டேகலை பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும் பணக்க லாபமும் வேலொடு சேவலும் வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா களித்த பேய்கண மாகாளி கூளிகள் திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள் கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா குதித்து வானர மேலேறு தாறுகள் குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள் குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங் குளத்தி லூறிய தேனூறல் மாதுகள் குடித்து லாவியெ சேலோடு மாணிகொள் குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
747
திருவேட்களம் சதுரத்தரை நோக்கிய
தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன ......தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு கதிரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி சரணக்கழல் காட்டியெ னாணவ மலமற்றிட வாட்டிய ஆறிரு சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங் கதிர்சுற்றுக நோக்கிய பாதமு மயிலிற்புற நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக் கனகத்தினு நோக்கினி தாயடி யவர்முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே சிதறத்தரை நாற்றிசை பூதர நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி மூத்தவி நாயகி செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா விதுரற்கும ராக்கொடி யானையும் விகடத்துற வாக்கிய மாதவன் விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
748
திருவேட்களம் மாத்திரை யாகிலு
தாத்தன தானன தாத்தன தானன தாத்தன தானன ...... தனதான
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன் வாழ்க்கையை நீடென ...... மதியாமல் மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள் மாப்பரி வேயெய்தி ...... அநுபோக பாத்திர மீதென மூட்டிடு மாசைகள் பாற்படு ஆடக ...... மதுதேடப் பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி பாற்கட லானென ...... வுழல்வேனோ சாத்திர மாறையு நீத்தம னோலய சாத்தியர் மேவிய ...... பதவேளே தாத்தரி தாகிட சேக்கெனு மாநட தாட்பர னார்தரு...... குமரேசா வேத்திர சாலம தேற்றிடு வேடுவர் மீக்கமு தாமயில் ...... மணவாளா வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
749
திருநெல்வாயில் அறிவிலாதவர்
தனன தானன தானனாத் தனந்த தனன தானன தானனாத் தனந்த தனன தானன தானனாத் தனந்த ...... தனதான
அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு பகரு நாவினர் லோபர்தீக் குணங்க ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர் அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே நறிய வார்குழல் வானநாட் டரம்பை மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து மதியு லாவிய மாடமேற் படிந்த வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
750
விருத்தாசலம் குடத் தாமரையாம்
தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன ...... தனதான
குடத்தாமரை யாமென வேயிரு தனத்தார்மதி வாணுத லாரிருள் குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக் குலக்கார்மயி லாமென வேகயல் விழித்தார்கர மேல்கொடு மாமுலை குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை படித்தார்மயி லாமென வேநடை நெளித்தார்பல காமுகர் வார்கலை பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் படிக்கார்மின லாமென வேநகை புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ அடைத்தார்கட லோர்வலி ராவண குலத்தோடரி யோர்சர னார்சின மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே அறுத்தாரய னார்தலை யேபுர மெரித்தாரதி லேபுல னாருயி ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா விடத்தாரசு ரார்பதி வேரற அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர விழித்தாமரை போலழ காகுற மகட்கானவ ணாஎன தாயுறை விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
751
விருத்தாசலம் திருமொழி
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய ...... குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட ...... விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென ...... முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு ...... முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை ...... முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
752
விருத்தாசலம் பசை அற்ற உடல்
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த ...... தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப் படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர் அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய் அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர் வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
753
வேப்பூர் குரைகடல் உலகினில்
தனதன தனதன தனதன தாந்த தாத்தான தந்த ...... தனதான
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக் குகையிட மருவிய கருவிழி மாந்தர் கோட்டாலை யின்றி ...... யவிரோதம் வரஇரு வினையற உணர்வொடு தூங்கு வார்க்கே விளங்கு ...... மநுபூதி வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும் திரள்வரை பகமிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய இந்த்ர ...... புரிவாழ விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு வேற்கார கந்த ...... புவியேழும் மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
754
நிம்பபுரம் அஞ்சுவித பூதமும்
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு மந்திபகல் யாது ...... மறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான அந்தவொரு வீடு ...... பெறுமாறு மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி ...... வனமீது வந்தசர ணார விந்தமது பாட வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே குஞ்சரக லாப வஞ்சியபி ராம குங்குமப டீர ...... வதிரேகக் கும்பதன மீது சென்றணையு மார்ப குன்றுதடு மாற ...... இகல்கோப வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர வென்றிவடி வேலை ...... விடுவோனே விம்பமதில் சூழு நிம்பபுர வாண விண்டலம கீபர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
755
வேப்பஞ்சந்தி நாட்டம் தங்கி
தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய் வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர் கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
756
திருக்கூடலையாற்றூர் வாட்டியெனை
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல் மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத் தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல் தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய் வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள் நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல் கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ் நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
757
கடம்பூர் வாருமிங்கே
தானனம் தானான தானனம் தானான தானனம் தானான ...... தனதான
வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண மால்கடந் தேபோமெ ...... னியலூடே வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார வாசகம் போல்கூறி ...... யணைமீதே சேருமுன் காசாடை வாவியும் போதாமை தீமைகொண் டேபோமெ ...... னடமாதர் சேரிடம் போகாம லாசுவந் தேறாமல் சீதளம் பாதார ...... மருள்வாயே நாரணன் சீராம கேசவன் கூராழி நாயகன் பூவாயன் ...... மருகோனே நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட சூரியன் தேரோட ...... அயிலேவீ தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
758
திருவரத்துறை கறுவி மைக்கணி
தனன தத்தனத் தனன தத்தனத் தனன தத்தனத் ...... தனதான
கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற் கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக் களவு வித்தையட் டுளமு ருக்கிமுற் கருதி வைத்தவைப் ...... பவைசேரத் தறுக ணிற்பறித் திருக ழுத்துறத் தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச் சயன மெத்தையிற் செயல ழிக்குமித் தருணி கட்ககப் ...... படலாமோ பிறவி யைத்தணித் தருளு நிட்களப் பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும் பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப் ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச் சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச் சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன் செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த் திருவ ரத்துறைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
759
யாழ்ப்பாணாயன்பட்டினம் பூத்தார் சூடு
தாத்தா தானம் தத்தன தனதன தாத்தா தானம் தத்தன தனதன தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர் பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும் போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர் மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல் வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர் நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம் மாப்பூ ணாரங் கச்சணி முலையினர் வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய் வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை யாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள் யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
760
ஸ்ரீ முஷ்டம் கழைமுத்து மாலை
தனனத்த தான தனனத்த தான தனனத்த தான ...... தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை கரிமுத்து மாலை ...... மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை ...... யரவீனும் அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி னடைவொத்து லாவ ...... அடியேன்முன் அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே மழையொத்த சோதி குயில்தத்தை போலு மழலைச்சொ லாயி ...... யெமையீனு மதமத்த நீல களநித்த நாதர் மகிழ்சத்தி யீனு ...... முருகோனே செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை திருமுத்தி மாதின் ...... மணவாளா சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான திருமுட்ட மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
761
ஸ்ரீ முஷ்டம் சரம்வெற் றிக்க
தனனத் தத்தன தானன தானன தனனத் தத்தன தானன தானன தனனத் தத்தன தானன தானன ...... தனதான
சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில் தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள் சனுமெத் தப்பரி வாகிய மாமய லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர் தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும் விரகத் துர்க்குண வேசைய ராசையர் பணமெத் தப்பறி காரிகள் மாறிகள் விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள் கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள் விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது புகழ்சத் திச்சிலு காவண மீதுறை சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி புனைவித் துத்தலை நாளமு தார்சுவை சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர் திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த மகளைப் பொற்றன வாசையொ டாடிய திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
762
திருநல்லூர் மூல முண்டகனு பூதி
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
மூல முண்டகனு பூதி மந்திரப ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல் மூது ரம்பலவர் பீட மந்தமுமி லாத பந்தவொளி யாயி ரங்கிரண மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம் ஓல மென்றுபல தாள சந்தமிடு சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம் ஓடு மந்தகலி காலொ டுங்கநடு தூணில் தங்கவரி ஞான வண்கயிறு மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ சூலி யந்தரிக பாலி சங்கரிபு ராரி யம்பரிகு மாரி யெண்குணசு வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே சூர சங்கரகு மார இந்திரச காய அன்பருப கார சுந்தரகு காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர் மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே தேவ ரம்பையமு தீண மங்கைதரு மான ணைந்தபுய தீர சங்கரதி யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
763
திருமயேந்திரம் வண்டு அணியும்
தந்தன தந்தன தாந்த தானன தந்தன தந்தன தாந்த தானன தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல் வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன் கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள் குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள் கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர் கஞ்சுளி யுந்தடி யீந்து போவென நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள் கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ அண்டரு டன்தவ சேந்து மாதவர் புண்டரி கன்திரு பாங்கர் கோவென அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி யென்பணி யன்கன சாம்பல் பூசிய செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே திங்கள்மு கந்தன சாந்து மார்பின ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
764
சீகாழி அலைகடல் சிலை
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும் அரிவையர் வசையுட னங்கி போல்வர அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும் அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய் முலைகனல் சொரிவர முன்பு போல்நினை வழிவச மறஅற நின்று சோர்வுற முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே முருகவிழ் திரள்புய முந்து வேலணி முளரியொ டழகிய தொங்கல் தாரினை முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொ டறைபறை நின்று மோதிட சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே மலைதனி லொருமுநி தந்த மாதுதன் மலரடி வருடியெ நின்று நாடொறு மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில் வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
765
சீகாழி இரதமான தேன்
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
இரத மான தேனூற லதர மான மாமாத ரெதிரி லாத பூணார ...... முலைமீதே இனிது போடு மேகாச உடையி னாலு மாலால விழியி னாலு மாலாகி ...... யநுராக விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும் விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய் அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர் அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர் அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற் புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி புரண பூர ணாகார ...... முருகோனே புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
766
சீகாழி ஊனத்தசை தோல்கள்
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த ...... தனதான
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
767
சீகாழி ஒய்யா ரச்சிலை
தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன ...... தனதான
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை மெய்யா ரப்பணி பூஷண மாலைக ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு கையா ரக்கணை மோதிர மேய்பல வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச் செய்வா ரிப்படி யேபல வாணிப மிய்யா ரிற்பண மேயொரு காசிடை செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச் செய்வா ரிற்படு நானொரு பாதகன் மெய்யா எப்படி யோர்கரை சேர்வது செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே மையா ரக்கிரி யேபொடி யாய்விட பொய்சூ ரப்பதி யேகெட வானவர் வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா வையா ளிப்பரி வாகன மாகொளு துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய் மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ் செய்யா முத்தமி ழாகர னேபுகழ் தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத் திய்யா ரக்கழு வேறிட நீறிடு கையா அற்புத னேபிர மாபுர செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
768
சீகாழி கட்காமக்ரோத
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
கட்கா மக்ரோ தத்தே கட்சீ மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக் கச்சா பிச்சா கத்தா வித்தா ரத்தே யக்கொட் ...... களைநீளக் கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே யிட்டா சைப்பட் ...... டிடவேவை கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே னித்தீ தத்தைக் ...... களைவாயே வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர் விக்கா னத்தைத் ...... தரிமாறன் வெப்பா றப்பா டிக்கா ழிக்கே புக்காய் வெற்பிற் ...... குறமானை முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய் முற்சார் செச்சைப் ...... புயவீரா முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
769
சீகாழி கொங்கு லாவிய
தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன ...... தனதான
கொங்கு லாவிய குழலினு நிழலினு நஞ்ச ளாவிய விழியினு மிரணிய குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர் கொம்பு சேர்வன இடையினு நடையினு மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய சங்கை யாளியை அணுவிடை பிளவள வின்சொல் வாசக மொழிவன இவையில சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந் தண்டை நூபுர மணுகிய இருகழல் கண்டு நாளவ மிகையற விழியருள் தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மாமுடி பொடிபட வடவனல் மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய சண்பை மாநக ருறையுமொ ரறுமுக வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே பங்க வீரியர் பறிதலை விரகினர் மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர் பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர் பண்பி லாதவர் கொலைசெயு மனதின ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
770
சீகாழி சந்தனம் பரிமள
தந்த தந்தன தனதன தனதன தந்த தந்தன தனதன தனதன தந்த தந்தன தனதன தனதன ...... தனதான
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர் சந்த தம்பொலி வழகுள வடிவினர் வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர் தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர் செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித் திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில னென்று சண்டைகள் புரிதரு மயலியர் சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய் மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர் சிந்த அன்றடர் மழைதனி லுதவிய மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல் வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா தந்த னந்தன தனதன தனவென வண்டு விண்டிசை முரல்தரு மணமலர் தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
771
சீகாழி சருவி இகழ்ந்து
தனதன தந்தன தந்தன தந்தன தனதன தந்தன தந்தன தந்தன தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ் சலிகையு நன்றியும் வென்றியு மங்கள பெருமைக ளுங்கன முங்குண மும்பயில் சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும் விருது துலங்க சிகண்டியி லண்டரு முருகி வணங்க வரும்பத மும்பல விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே கருதியி லங்கை யழிந்துவி டும்படி அவுணர டங்கம டிந்துவி ழும்படி கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன் கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்துத வும்புய லிந்திரை கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள் வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர் மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
772
சீகாழி சிந்து உற்று எழு
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள் நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
773
சீகாழி செக்கர்வானப் பிறை
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் ...... தனதான
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத் தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச் சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக் கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக் கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க் கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய் சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித் தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத் தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக் கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக் குத்துரா வுத்தபொற் ...... குமரோனே கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக் கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
774
சீகாழி தினமணி சார்ங்க
தனதன தாந்த தான தனதன தாந்த தான தனதன தாந்த தான ...... தனதான
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ் செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும் இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி ...... யரசாகி இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக் கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
775
சீகாழி பூமாது உரமேயணி
தானாதன தானன தானன தானாதன தானன தானன தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை வாய்நாலுடை யோன்மலி வானவர் கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம் பூராயம தாய்மொழி நூல்களும் ஆராய்வதி லாதட லாசுரர் போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி நீமாறரு ளாயென ஈசனை பாமாலைக ளால்தொழு தேதிரு நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு நீரேர்தரு சானவி மாமதி காகோதர மாதுளை கூவிளை நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே போமாறினி வேறெது வோதென வேயாரரு ளாலவ ரீதரு போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு பூலோகமொ டேயறு லோகமு நேரோர் நொடி யேவரு வோய்சுர சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங் காமாவறு சோம
Add (additional) Audio/Video Link
Back to Top
776
சீகாழி மதனச்சொற் கார
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன ...... தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள் மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள் வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர் குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள் குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க் கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில் சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
777
சீகாழி விடம் என மிகுத்த
தனதனன தத்ததன தனதனன தத்ததன தனதனன தத்ததன ...... தனதான
விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு விரைதருவி தட்கமல ...... கணையாலே அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல் அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில் அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற அவசமொட ணைத்தருள ...... வரவேணும் அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு அனையமயில் முத்தமணி ...... சுரயானை அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி கருணையொட ளித்ததிற ...... முருகோனே கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
778
கரியவனகர் அளிசுழ லளக
தனதன தனனத் தான தாத்தன தனதன தனனத் தான தாத்தன தனதன தனனத் தான தாத்தன ...... தனதான
அளிசுழ லளகக் காடு காட்டவும் விழிகொடு கலவித் தீயை மூட்டவும் அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள் அவர்வச மொழுகிக் காசு கேட்கவும் அழகிய மயிலிற் சாயல் காட்டவும் அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார இளமுலை மிசையிற் றூசு நீக்கவும் முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும் இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக எவரையு மளவிப் போய ணாப்பவும் நினைபவ ரளவிற் காதல் நீக்கியென் இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய் நெளிபடு களமுற் றாறு போற்சுழல் குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா களிமயில் தனில்புக் கேறு தாட்டிக அழகிய கனகத் தாம மார்த்தொளிர் கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா கரியவ னகரிற் றேவ பார்ப்பதி யருள்சுத குறநற் பாவை தாட்பணி கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
779
வைத்தீசுரன் கோயில் உரத்துறை போத
தனத்தன தானத் ...... தனதான
உரத்துறை போதத் ...... தனியான உனைச்சிறி தோதத் ...... தெரியாது மரத்துறை போலுற் ...... றடியேனும் மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே வரத்துறை நீதர்க் ...... கொருசேயே வயித்திய நாதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
780
வைத்தீசுரன் கோயில் எத்தனை கோடி
தத்தன தான தான தத்தன தான தான தத்தன தான தான ...... தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=KTErmmB3O7s
Add (additional) Audio/Video Link
Back to Top
781
வைத்தீசுரன் கோயில் பாட கச்சிலம்போடு
தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன ...... தனதான
பாட கச்சிலம் போடு செச்சைமணி கோவெ னக்கலந் தாடு பொற்சரணர் பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார் பார பொற்றனங் கோபு ரச்சிகர மாமெ னப்படர்ந் தேம லிப்பரித மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர் ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ டாட ளிக்குலம் பாட நற்றெருவி லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம் வாரு முற்பணந் தாரு மிட்டமென ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ சேட னுக்கசண் டாள ரக்கர்குல மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள் சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல் சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி யோர்கள் கட்டியம் பாட எட்டரசர் சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா நாட கப்புனங் காவ லுற்றசுக மோக னத்திமென் தோளி சித்ரவளி நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல் நாய கிக்குநன் பாக ரக்கணியும் நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
782
வைத்தீசுரன் கோயில் மாலினால் எடுத்த
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த தான தான தத்த தந்த ...... தனதான
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல் வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன் வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
783
வைத்தீசுரன் கோயில் மூல ஆதாரமோடு
தானா தானன தாத்த தந்தன தானா தானன தாத்த தந்தன தானா தானன தாத்த தந்தன ...... தனதானா
மூலா தாரமொ டேற்றி யங்கியை ஆறா தாரமொ டோட்டி யந்திர மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே மூதா தாரம ரூப்பி லந்தர நாதா கீதம தார்த்தி டும்பர மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல் மாலா டூனொடு சேர்த்தி தம்பெற நானா வேதம சாத்தி ரஞ்சொலும் வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே மாதா நாதனும் வீற்றி ருந்திடும் வீடே மூணொளி காட்டி சந்திர வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய் சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி மாதா ராபகல் காத்த மைந்தனை சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந் தூயாள் மூவரை நாட்டு மெந்தையர் வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர் தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி யந்தகன் வீடூ டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே வேதா நால்தலை சீக்கொ ளும்படி கோலா காலம தாட்டு மந்திர வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
784
வைத்தீசுரன் கோயில் மேக வார்குழல
தான தானதன தானதன தானதன தான தானதன தானதன தானதன தான தானதன தானதன தானதன ...... தனதான
மேக வார்குழல தாடதன பாரமிசை யார மாடகுழை யாடவிழி யாடபொறி மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி ...... மளமேற மீனு லாடையிடை யாடமயில் போலநடை யோல மோலமென பாதமணி நூபுரமு மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு வோரை வாருமென வேசரச மோடுருகி ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள் நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை வேத கீதவொலி பூரையிது பூரையென நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா தோகை மாதுகுற மாதமுத மாதுவினல் தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர் சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
785
திருக்கடவூர் ஏட்டின் விதிப்படி
தாத்த தனத்தன தானன தானன தாத்த தனத்தன தானன தானன தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர வீட்டி லடைத்திசை வேகசை மூணதி லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ ளாத்து வெனத்திரி யாபரி யாதவ மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப் பூட்டு சரப்பளி யேமத னாமென ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில் பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம் போற்றி நமக்கிரை யாமென வேகொள நாட்டி லொடுக்கென வேவிழு போதினில் பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக னாட்டை விடுத்திட வேபல சூதினில் வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய் வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது பார்த்து முடித்திட வேயொரு பாரத மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே கோட்டை யழித்தசு ரார்பதி கோவென மூட்டி யெரித்தப ராபர சேகர கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா கூற்று மரித்திட வேயுதை பார்வதி யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள் கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
786
திருக்கடவூர் சூலம் என ஓடு
தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த ...... தனதான
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி தூயவொளி காண முத்தி ...... விதமாகச் சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின் மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய் ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள் கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=W_6XS3EGTPI
Add (additional) Audio/Video Link
Back to Top
787
திருப்படிக்கரை அருக்கி மெத்தென சிரித்துமை
தனத்த தத்தனத் தனத்த தத்தனத் தனத்த தத்தனத் ...... தனதான
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட் டழைத்தி தப்தடச் ...... சிலகூறி அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த் தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத் துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க் குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித் துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற் றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச் சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற் றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச் செயித்த வுத்தமத் ...... திருமாமன் திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த் திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
788
மாயூரம் அமுதினை மெத்த
தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின தினியப ழத்தைப் பிழிந்து பானற வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் அழகிய பொற்றட் டினொண்டு வேடையின் வருபசி யர்க்குற் றவன்பி னாலுண வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு மவர்மய லிற்புக் கழிந்த பாவியை குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே மறுவறு கற்பிற் சிறந்த சீதையை விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன் வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே எமதும லத்தைக் களைந்து பாடென அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
789
பாகை ஆடல் மாமத ராஜன்
தான தானன தானம், தான தானன தானம் தான தானன தானம் ...... தனதான
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந் தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென் றாயு வேதனை யேயென் ...... றுலையாதே சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந் த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந் தேவ நாயக நானின் ...... றடைவேனோ பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும் பாவை பாகனு நாளும் ...... தவறாதே பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென் பாகை மாநக ராளுங் ...... குமரேசா கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங் கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங் கோல மாமயி லேறும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
790
பாகை ஈளை சுரங்குளிர்
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
791
பாகை குவளை பொருதிரு
தனன தனதன தனன தனதன தான தானன ...... தனதான
குவளை பொருதிரு குழையை முடுகிய கோல வேல்விழி ...... மடவார்தங் கொடிய ம்ருகமத புளக தனகிரி கூடி நாடொறு ...... மயலாகித் துவள வுருகிய சரச விதமது சோர வாரிதி ...... யலையூடே சுழலு மெனதுயிர் மவுன பரமசு கோம கோததி ...... படியாதோ கவள கரதல கரட விகடக போல பூதர ...... முகமான கடவுள் கணபதி பிறகு வருமொரு கார ணாகதிர் ...... வடிவேலா பவள மரகத கநக வயிரக பாட கோபுர ...... அரிதேரின் பரியு மிடறிய புரிசை தழுவிய பாகை மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
792
திருவிடைக்கழி அனல் அப்பு அரி
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத் தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா அவலக் கவலைச் சவலைக் கலைகற் றதனிற் பொருள்சற் ...... றறியாதே குனகித் தனகிக் கனலொத் துருகிக் குலவிக் கலவிக் ...... கொடியார்தங் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் குலைபட் டலையக் ...... கடவேனோ தினைவித் தினநற் புனமுற் றகுறத் திருவைப் புணர்பொற் ...... புயவீரா தெளியத் தெளியப் பவளச் சடிலச் சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே கனகச் சிகரக் குலவெற் புருவக் கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக் கழியிற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
793
திருவிடைக்கழி இரக்கும் அவர்க்கு
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற் றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென் றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட் டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர் குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப் பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின் குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக் குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக் கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக் கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
794
திருவிடைக்கழி பகரு முத்தமிழ்
தனன தத்தனத் தனன தத்தனத் தனன தத்தனத் ...... தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் பயனு மெப்படிப் ...... பலவாழ்வும் பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் ...... தருவாழ்வும் புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும் புலன கற்றிடப் பலவி தத்தினைப் புகழ்ப லத்தினைத் ...... தரவேணும் தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச் சரவ ணத்தினிற் ...... பயில்வோனே தனிவ னத்தினிற் புனம றத்தியைத் தழுவு பொற்புயத் ...... திருமார்பா சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல யிற்சுடர்க் ...... குமரேசா செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற் றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
795
திருவிடைக்கழி படி புனல் நெருப்பு
தனனதன தத்தனத் தனனதன தத்தனத் தனனதன தத்தனத் ...... தனதான
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும் உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக் குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன் உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக் கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க் குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் தடலனுச வித்தகத் ...... துறையோனே தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத் தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
796
திருவிடைக்கழி பழியுறு சட்டகமான
தனதனனத் தனதான தனதனனத் தனதான தனதனனத் தனதான ...... தனதான
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர் உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன் உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத் திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர் ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
797
திருவிடைக்கழி பெருக்க மாகிய
தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன ...... தனதான
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக நகைத்து வாமென அமளிய ருகுவிரல் பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப் பிதற்றி யேயள விடுபண மதுதம திடத்தி லேவரு மளவுந லுரைகொடு பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய் முருக்கி னேரித ழமுதுப ருகுமென வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின் முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய் நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி புரத்தி லேநகை புரிபர னடியவர் நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை மருக்கு லாவிய மலரணை மிசைபுணர் திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே சிறக்கு மாதவ முனிவரர் மகபதி யிருக்கு வேதனு மிமையவர் பரவிய திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
798
திருவிடைக்கழி மருக்குலாவிய
தனத்த தானன தனதன ...... தனதான
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
799
திருவிடைக்கழி முலை குலுக்கிகள்
தனன தத்தன தனதன தனன தத்தன தனதன தனன தத்தன தனதன ...... தனதான
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள் முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல் மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ் கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம ளியின்மிசை கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம் அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள் திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர் திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
800
தான் தோன்றி சூழ்ந்து ஏன்ற துக்க
தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன ...... தனதான
சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர் தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல் வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய் வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு ...... மடிபேண மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித் தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
801
கந்தன்குடி எந்தன்சடலங்கம்
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும் வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம் சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும் கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
802
திலதைப்பதி இறையத்தனையோ
தனனத் தனனா ...... தனதான
இறையத் தனையோ ...... அதுதானும் இலையிட் டுணலேய் ...... தருகாலம் அறையிற் பெரிதா ...... மலமாயை அலையப் படுமா ...... றினியாமோ மறையத் தனைமா ...... சிறைசாலை வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர் சிறையைத் தவிரா ...... விடும்வேலா திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
803
திலதைப்பதி பனகப் படமிசைந்த
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த ...... தனதான
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற் பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை படுபுட் பவன முன்றி ...... லியலாரும் அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல் அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த ...... தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று தனிமத் தளமு ழங்க ...... வருவோனே செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித் திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
804
திலதைப்பதி மகரக் குழைக்குளுந்து
தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த ...... தனதான
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல் உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த பொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற் பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள் புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந் திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
805
திருவம்பர் சோதி மந்திரம்
தான தந்தனந் தான தந்ததன தான தந்தனந் தான தந்ததன தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான
சோதி மந்திரம் போத கம்பரவு ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல் சூது பந்தயம் பேசி யஞ்சுவகை சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும் வீதி மண்டலம் பூண மர்ந்துகழி கோல மண்டிநின் றாடி யின்பவகை வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில் வேதி யன்புரிந் தேடு கண்டளவி லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ ஆதி மண்டலஞ் சேர வும்பரம சோம மண்டலங் கூட வும்பதும வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை ஆழி மண்டலந் தாவி யண்டமுத லான மண்டலந் தேடி யொன்றதொழு கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச் சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி யாகி விண்பறந் தோட மண்டியொரு சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா சோடை கொண்டுளங் கான மங்கைமய லாடி இந்திரன் தேவர் வந்துதொழ சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
806
திருமாகாளம் காதோடு தோடிகலி
தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன ...... தனதான
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல கோலாக லாரமுலை மார்புதைய பூணகல காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர் சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே பாதாள சேடனுட லாயிரப ணாமகுட மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல் பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன் மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
807
இஞ்சிகுடி குங்கும கற்பூர
தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்குமகற் பூர நாவி யிமசல சந்தனகத் தூரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை துங்கமுடித் தால கால மெனவடல் கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம் அங்குளநிட் டூர மாய விழிகொடு வஞ்சமனத் தாசை கூறி யெவரையு மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி அன்றளவுக் கான காசு பொருள்கவர் மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே சங்கதசக் ரீவ னோடு சொலவள மிண்டுசெயப் போன வாயு சுதனொடு சம்பவசுக் ரீவ னாதி யெழுபது ...... வெளமாகச் சண்டகவிச் சேனை யால்மு னலைகடல் குன்றிலடைத் தேறி மோச நிசிசரர் தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே எங்குநினைப் போர்கள் நேச சரவண சிந்துரகர்ப் பூர ஆறு முககுக எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா இன்புறுபொற் கூட மாட நவமணி மண்டபவித் தார வீதி புடைவளர் இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
808
திருநள்ளாறு பச்சை யொண்கிரி
தத்த தந்தன தானன தானன தத்த தந்தன தானன தானன தத்த தந்தன தானன தானன ...... தனதான
பச்சை யொண்கிரி போலிரு மாதன முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான பத்தி வெண்டர ளாமெனும் வாணகை வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ் பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென் றிச்சை யந்தரி பார்வதி மோகினி தத்தை பொன்கவி னாலிலை போல்வயி றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி எக்கு லங்குடி லோடுல கியாவையு மிற்ப திந்திரு நாழிநெ லாலற மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ கச்சை யுந்திரு வாளுமி ராறுடை பொற்பு யங்களும் வேலுமி ராறுள கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை வண்புய னார்கரு டாசனர் நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி யிச்சை கொண்டொரு வாரண மாதொடு நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
809
வழுவூர் தருவூரிசை
தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன ...... தனதானா
தருவூரிசை யாரமு தார்நிகர் குயிலார்மொழி தோதக மாதர்கள் தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே தழலேபொழி கோரவி லோசன மெறிபாசம காமுனை சூலமுள் சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே கருவூறிய நாளுமு நூறெழு மலதேகமு மாவலு மாசைக படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக் கனிவீறிய போதமெய் ஞானமு மியலார்சிவ நேசமு மேவர கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய் புருகூதன்மி னாளொரு பாலுற சிலைவேடுவர் மானொரு பாலுற புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே புழுகார்பனிர் மூசிய வாசனை யுரகாலணி கோலமென் மாலைய புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா மருவூர்குளிர் வாவிகள் சோலைகள் செழிசாலிகு லாவிய கார்வயல் மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர் மகதேவர்பு ராரிச தாசிவர் சுதராகிய தேவசி காமணி வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
810
வழுவூர் தலை நாளில் பதம்
தனனா தத்தன தாத்த தந்தன தனனா தத்தன தாத்த தந்தன தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலைநா ளிற்பத மேத்தி யன்புற வுபதே சப்பொரு ளூட்டி மந்திர தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன் சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க ளறியா முத்தமி ழூட்டி முண்டக தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும் கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக் கமலா லைப்பதி சேர்த்து முன்பதி வெளியா கப்புக ஏற்றி யன்பொடு கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர் வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே மலைமே வித்தினை காக்கு மொண்கிளி யமுதா கத்தன வாட்டி யிந்துள மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி நடமா டிச்சுரர் போற்று தண்பொழில் வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
811
கன்னபுரம் அன்னம் மிசை
தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத் தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென் றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக் கன்னியசற் றுலாமூச்ச ...... டங்கயோகம் என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட் டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென் றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத் தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக் கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக் கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற் கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப் பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
812
திருவாஞ்சியம் இபமாந்தர் சக்ர
தனதாந்த தத்த தனதன தனதாந்த தத்த தனதன தனதாந்த தத்த தனதன ...... தனதான
இபமாந்தர் சக்ர பதிசெறி படையாண்டு சக்ர வரிசைக ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி இறுமாந்து வட்ட வணைமிசை விரிசார்ந்து வெற்றி மலர்தொடை யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந் தபனாங்க ரத்ந வணிகல னிவைசேர்ந்த விச்சு வடிவது தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு பிடிசாம்பல் பட்ட தறிகிலர் தனவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே உபசாந்த சித்த குருகுல பவபாண்ட வர்க்கு வரதன்மை யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன் உலகீன்ற பச்சை யுமையணன் வடவேங்க டத்தி லுறைபவ னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே த்ரிபுராந்த கற்கு வரசுத ரதிகாந்தன் மைத்து னமுருக திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா திரைபாய்ந்த பத்ம தடவய லியில்வேந்த முத்தி யருள்தரு திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
813
திருச்செங்காட்டங்குடி வங்கார மார்பிலணி
தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன ...... தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர் சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல் சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற் சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள் வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே சிங்கார ரூபமயில் வாகனந மோநமென கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென கங்காள வேணிகுரு வானவந மோநமென திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
814
திருவிற்குடி சித்தி ரத்திலுமி
தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர் சித்த மத்தனையு முற்ற ளப்பகடல் மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ...... ளங்கள்வீசப் பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள் வித்து ருத்தநுவ ளைத்த நெற்றிவனை பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ...... விஞ்சைபேசிப் பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ...... மங்குவேனோ தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள் நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ...... ரங்கமாள வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ் விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
815
விஜயபுரம் குடல்நிண மென்பு
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன தனதன தந்தன தானன ...... தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி லவுடத மும்பல யோகமு ...... முயலாநின் றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர மிடிபட இன்பம கோததி ...... வறிதாக இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர எழில்பட மொன்று மொராயிர ...... முகமான விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர் விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
816
திருவாரூர் கூசாதே பார்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
கூசா தேபா ரேசா தேமால் கூறா நூல்கற் ...... றுளம்வேறு கோடா தேவேல் பாடா தேமால் கூர்கூ தாளத் ...... தொடைதோளில் வீசா தேபேர் பேசா தேசீர் வேதா தீதக் ...... கழல்மீதே வீழா தேபோய் நாயேன் வாணாள் வீணே போகத் ...... தகுமோதான் நேசா வானோ ரீசா வாமா நீபா கானப் ...... புனமானை நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய் நீள்கார் சூழ்கற் ...... பகசாலத் தேசா தீனா தீனா ரீசா சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
817
திருவாரூர் கூர்வாய் நாராய்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடா ரேசற் ...... றலஆவி கோதா னேன்மா தாமா றானாள் கோளே கேள்மற் ...... றிளவாடை ஈர்வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட் ...... டதுதீயின் ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடே றாரிற் ...... கெடலாமோ சூர்வா ழாதே மாறா தேவாழ் சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந் தோலா வேலா வீறா ரூர்வாழ் சோதீ பாகத் ...... துமையூடே சேர்வாய் நீதீ வானோர் வீரா சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
818
திருவாரூர் பாலோ தேனோ பாகோ
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார் சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. Audio/Video Link(s)
http://www.kaumaram.com/thiru/nnt0818_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
819
திருவாரூர் நீதானெத்தனை
தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
820
திருவாரூர் மகரம துகெட
தனதன தனன தனதன தனன தானான தந்த ...... தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி வாரார்ச ரங்க ...... ளெனநீளும் மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர் வாணாள டங்க ...... வருவார்தம் பகர்தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்ப ...... மிசைவாவிப் படிமன துனது பரிபுர சரண பாதார விந்த ...... நினையாதோ நகமுக சமுக நிருதரு மடிய நானாவி லங்கல் ...... பொடியாக நதிபதி கதற வொருகணை தெரியு நாராய ணன்றன் ...... மருகோனே அகனக கனக சிவதல முழுது மாராம பந்தி ...... யவைதோறும் அரியளி விததி முறைமுறை கருது மாரூர மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
821
திருவாரூர் கரமு முளரியின்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
கரமு முளரியின் மலர்முக மதிகுழல் கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே கருதி யனநடை கொடியிடை யியல்மயில் கமழு மகிலுட னிளகிய ம்ருகமத களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும் இரவு பகலற இகலற மலமற இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே யெழுத அரியவள் குறமக ளிருதன கிரியில் முழுகின இளையவ னெனுமுரை யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே சுரபி மகவினை யெழுபொருள் வினவிட மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது துணிவி லிதுபிழை பெரிதென வருமநு உருகி யரகர சிவசிவ பெறுமதொர் சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப் பரவி யதனது துயர்கொடு நடவிய பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப் படியு லறுமுக சிவசுத கணபதி யிளைய குமரநி ருபபதி சரவண பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=3NiL-r3OSg8
Add (additional) Audio/Video Link
Back to Top
822
திருவாரூர் பாலோ தேனோ பலவுறு
தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன ...... தனதான
பாலோ தேனோ பலவுறு சுளையது தானோ வானோர் அமுதுகொல் கழைரச பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப் பாலோ வேறோ மொழியென அடுகொடு வேலோ கோலோ விழியென முகமது பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை நாலாம் ரூபா கமலஷண் முகவொளி யேதோ மாதோம் எனதகம் வளரொளி நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி நாடோ வீடோ நடுமொழி யெனநடு தூணேர் தோளா சுரமுக கனசபை நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே மாலாய் வானோர் மலர்மழை பொழியவ தாரா சூரா எனமுநி வர்கள்புகழ் மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா வாதா டூரோ டவுணரொ டலைகடல் கோகோ கோகோ எனமலை வெடிபட வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓதார் சீராள் கதிர்மதி குலவிய தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா தூயா ராயார் இதுசுக சிவபத வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
823
பெரியமடம் கலகவிழி மாமகளிர்
தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான
கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய் களவுமத னூல்பலப டித்தவா வேட்கை கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார் கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய் கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே தலமடைசு சாளரமு கப்பிலே காத்து நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித் தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை தனையுமரு நாளையும வத்திலே போக்கு தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீக்ஷை ...... தரவேணும் அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர் பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி கரதலக பாலிகுரு வித்தனே போற்றி பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம் பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
824
சோமநாதன்மடம் ஒருவழிபடாது
தனதனன தான தான தனதனன தான தான தனதனன தான தான ...... தனதான
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு முழலுமநு ராக மோக ...... அநுபோகம் உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக் கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர மெனமொழியும் வீசு பாச ...... கனகோப எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன் அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன் அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும் முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ முகரசல ராசி வேக ...... முனிவோனே மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
825
த்ரியம்பகபுரம் உரை ஒழிந்து
தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே விரக வன்புடன் பரிமள மிகவுள முழுகி நன்றியொன் றிடமல ரமளியில் வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே விளைத னங்கவர்ந் திடுபல மனதிய ரயல்த னங்களுந் தனதென நினைபவர் வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித் திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங் கரையி றந்திடுங் கடலென மருவிய வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய கவுரி தந்தகந் தறுமுக எனஇரு கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
826
சிக்கல் கன்ன லொத்த
தன்ன தத்த தனத்த தானன தன்ன தத்த தனத்த தானன தன்ன தத்த தனத்த தானன ...... தனதான
கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர் வன்ம னத்தை யுருக்கு லீலையர் கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக் கையி லுற்ற பொருட்கள் யாவையும் வையெ னக்கை விரிக்கும் வீணியர் கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப் பின்னி விட்ட சடைக்கு ளேமலர் தன்னை வைத்து முடிப்பை நீயவி ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற் பெய்யு முத்தமி ழிற்ற யாபர என்ன முத்தர் துதிக்க வேமகிழ் பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய் வன்னி யொத்த படைக்க லாதிய துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி மண்ணி லற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே மன்னு பைப்பணி யுற்ற நீள்விட மென்ன விட்டு முடுக்கு சூரனை மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச் சென்னி பற்றி யறுத்த கூரிய மின்னி ழைத்த திறத்த வேலவ செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா செம்ம னத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற வுளத்தி லேமலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
827
சிக்கல் புலவரை ரக்ஷி
தனதன தத்தத் தந்தான தானன தனதன தத்தத் தந்தான தானன தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா பொருவரு நட்புப் பண்பான வாய்மையி லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள் எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே இலகிய வெட்சிச் செந்தாம மார்புய சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல் இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே இளையகொ டிச்சிக் கும்பாக சாதன னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே அழகிய சிக்கற் சிங்கார வேலவ சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும் அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
828
நாகப்பட்டினம் ஓலமிட்டிரைத்து
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த ...... தனதான
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும் ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
829
நாகப்பட்டினம் மார்பு ரம்பினளி
தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர் பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும் வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
830
நாகப்பட்டினம் விழுதாதெனவே
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
விழுதா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே ...... புரிதாக விருதா வினிலே யுலகா யதமே லிடவே மடவார் ...... மயலாலே அழுதா கெடவே அவமா கிடநா ளடைவே கழியா ...... துனையோதி அலர்தா ளடியே னுறவாய் மருவோ ரழியா வரமே ...... தருவாயே தொழுதார் வினைவே ரடியோ டறவே துகள்தீர் பரமே ...... தருதேவா சுரர்பூபதியே கருணா லயனே சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே எழுதா மறைமா முடிவே வடிவே லிறைவா எனையா ...... ளுடையோனே இறைவா எதுதா வதுதா தனையே இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
831
எட்டிகுடி உரமுற் றிரு
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் ...... திடமாயே உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத் தமிதக் கெறுவத் ...... துடன்வீறு தரமொத் துபயக் களபத் தளமிக் கவனத் தருணத் ...... தனமீதே சருவிச் சருவித் தழுவித் தழுவித் தவமற் கவிடுத் ...... துழல்வேனோ அரிபுத் திரசித் தசஅக் கடவுட் கருமைத் திருமைத் ...... துனவேளே அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த் தசுரப் படையைப் ...... பொருவோனே பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித் தகமுத் தமிழைப் ...... பகர்வோனே பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப் பதியிற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
832
எட்டிகுடி ஓங்கும் ஐம்புல
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய் வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
833
எட்டிகுடி கடல் ஒத்த விடம்
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த ...... தனதானா
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த கயலொத்த மலரொத்த ...... விழிமானார் கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச் சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தருசக்ர தரனுக்கு ...... மருகோனே திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
834
எட்டிகுடி மைக்குழல் ஒத்த
தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா தத்தன தத்தன தானா தானா ...... தனதான
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ வத்திர மெய்ச்சசி தானோ நாணா குத்துமு லைக்கிள நீரோ மேரோ வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர் தக்கவு றுப்பினுள் மாலே மேலாய் லச்சைய றப்புணர் வாதே காதே சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே தற்பொறி வைத்தருள் பாராய் தாராய் தற்சமை யத்தக லாவே னாதா தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோளார் மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே முத்தமிழ் வித்வவி நோதா கீதா மற்றவ ரொப்பில ரூபா தீபா முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர் செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர் மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா எச்சுரு திக்குளு நீயே தாயே சுத்தவி றற்றிறல் வீரா தீரா எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
835
எண்கண் சந்தனந்திமிர்ந்து
தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந் தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித் திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
836
திருக்குடவாயில் அயிலார் மைக்கடு
தனனா தத்தன தனனா தத்தன தனனா தத்தன ...... தனதான
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு ...... விலைமாதர் அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக ளவரே வற்செய்து ...... தமியேனும் மயலா கித்திரி வதுதா னற்றிட மலமா யைக்குண ...... மதுமாற மறையால் மிக்கருள் பெறவே யற்புத மதுமா லைப்பத ...... மருள்வாயே கயிலா யப்பதி யுடையா ருக்கொரு பொருளே கட்டளை ...... யிடுவோனே கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே குயிலா லித்திடு பொழிலே சுற்றிய குடவா யிற்பதி ...... யுறைவோனே குறமா தைப்புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
837
திருக்குடவாயில் சுருதியாய்
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான
சுருதி யாயிய லாயியல் நீடிய தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் துறவு மாயற மாய்நெறி யாய்மிகு விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் பருதி யாய்மதி யாய்நிறை தாரகை பலவு மாய்வெளி யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் கருது மாறிரு தோள்மயில் வேலிவை கருதொ ணாவகை யோரர சாய்வரு கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் களப பூண்முலை யூறிய பாலுணு மதலை யாய்மிகு பாடலின் மீறிய கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் குருதி யாறெழ வீதியெ லாமலர் நிறைவ தாய்விட நீறிட வேசெய்து கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் குடிபு கீரென மாமது ராபுரி யியலை யாரண வூரென நேர்செய்து குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
838
வலிவலம் தொடுத்த நாள்முதல்
தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன தனத்த தானன தனதன தனதன ...... தனதான
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர்தம திடமது துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர் துவக்கி லேயடி படநறு மலரயன் விதித்த தோதக வினையுறு தகவது துறக்க நீறிட அரகர வெனவுள ...... மமையாதே அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள் பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய் எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர் விடுத்து ராவணன் மணிமுடி துணிபட எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே எருக்கு மாலிகை குவளையி னறுமலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே வடுத்த மாவென நிலைபெறு நிருதனை அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள் மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
839
வேதாரணியம் சூழும்வினை
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ் சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
840
வேதாரணியம் சேலை உடுத்து
தான தனத்தன தந்த தான தனத்தன தந்த தான தனத்தன தந்த ...... தனதான
சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத் தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார் மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள் மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய் பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள கன்று ...... கணையாலேழ் பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
841
வேதாரணியம் நூலினை ஒத்த
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த தானன தத்த தனந்த ...... தனதான
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம் நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும் நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள் நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும் சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள் தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச் சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன் மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
842
கோடி .. குழகர் கோயில் நீல முகில் ஆன
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன நேயமதி லேதினமு ...... முழலாமல் நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை நீரிலுழல் மீனதென ...... முயலாமற் காலனது நாவரவ வாயிலிடு தேரையென காயமரு வாவிவிழ ...... அணுகாமுன் காதலுட னோதமுடி யார்களுட னாடியொரு கால்முருக வேளெனவு ...... மருள்தாராய் சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி தோகைகுற மாதினுட ...... னுறவாடிச் சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர் கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
843
திருப்பெருந்துறை இரத்த முஞ்சி
தனத்த தந்தன தானன தந்தத் தனத்த தந்தன தானன தந்தத் தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட் டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி இதத்து டன்புகல் சூதுமி குந்திட் டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித் துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப் பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக் குலத்தெ னும்படி கூனிய டங்கிப் பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம் தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூருடல் சிந்தச் சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட் டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச் சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே செகத்தி னின்குரு வாகிய தந்தைக் களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
844
திருப்பெருந்துறை வரித்த குங்குமம்
தனத்தனந் தனதன தனத்தனந் தனதன தனத்தனந் தனதன ...... தனதான
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன் மயக்கவந் ததிலறி ...... வழியாத கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர களிப்புடன் களிதரு ...... மடமாதர் கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி களைத்தருந் திருவுள ...... மினியாமோ பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
845
திருப்பெருந்துறை முகர வண்டெழு
தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
முகர வண்டெழுங் கருமுகி லலையவு முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும் முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு மருவு சங்கநின் றொலிகொடு பதறவு முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச் சிகர கும்பகுங் குமபுள கிததன மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித் திமிர கங்குலின் புதவிடு மவசர நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல் மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன் மடிய வங்குசென் றவனொரு பதுமுடி முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல் மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர் பவள மும்பொரும் பழனமு மழகுற நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
846
திருத்துருத்தி மலைக் கனத்தென
தனத் தனத்தன தானன தானன தனத் தனத்தன தானன தானன தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக் கனத்தென மார்பினி லேயிரு முலைக் கனத்துற வேயிடை நூலென வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத மயிற் குலத்தவ ராமென நீள்கலை நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி விலைக் கெனத்தன மாயிர மாயிர முலைக் களப்பினு மாசைபொ தாதென வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய் வெடுக் கெடுத்தும காபிணி மேலிட முடக் கிவெட்கும தாமத வீணனை மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே அலைக் கடுத்தசு ரார்பதி கோவென விடப் பணச்சிர மாயிர சேடனும் அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா அடைக் கலப்பொரு ளாமென நாயெனை அழைத் துமுத்திய தாமநு பூதியெ னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு வுளத் திலற்பமெ னாநினை தேசிகர் சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா திருக் கடப்பலர் சூடிய வார்குழல் குறத் திகற்புட னேவிளை யாடியொர் திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
847
திருவீழிமிழலை எருவாய் கருவாய்
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான
எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா ...... யழியாதே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லிணைதா ...... ளருள்வோனே முநிவோ ரமரோர் முறையோ வெனவே முதுசூ ருரமேல் ...... விடும்வேலா திருமால் பிரமா வறியா தவர்சீர் சிறுவா திருமால் ...... மருகோனே செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ் திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=vZYvU5SJ8x4
Add (additional) Audio/Video Link
Back to Top
848
திருவாவடுதுறை சொற்பிழை வராமல்
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த தத்ததன தான தனத்தனத் தத்ததத்த தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான
சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து ...... விலைமாதர் துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த ...... நிதிமேவு கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து ...... மிகையாகக் கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க ...... விடலாமோ எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு ...... நிலையோதி எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த ...... திறல்வீரா வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின் மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து ...... வெகுகோடி விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
849
மருத்துவக்குடி கருத் திதப்படு
தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன ...... தனதான
கருத்தி தப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங் கரைத்து ரைத்திடு மோகா மோகிகள் அளிக்கு லப்பதி கார்போ லோதிகள் கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை உரைத்த புத்திகள் கேளா நீசனை யவத்த மெத்திய ஆசா பாசனை யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை யளிக்கு நற்பொரு ளாயே மாதவ வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே செருக்கி வெட்டிய தீயோ ராமெனு மதத்த துட்டர்கள் மாசூ ராதிய சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே சிவத்தை யுற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலா யோதிய செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா வரைத்த வர்க்கரர் சூலா பாணிய ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
850
திருப்பந்தணை நல்லூர் இதசந்தன புழுகு
தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்பொலே இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப் பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய் திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் ...... கொடுசூரர் சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடி யாடப் ...... பொரும்வேலா மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
851
திருப்பந்தணை நல்லூர் இருவினையஞ்ச
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச இருள்பிணி துஞ்ச ...... மலமாய எனதிடர் மங்க வுனதருள் பொங்க இசைகொடு துங்க ...... புகழ்கூறித் திருமுக சந்த்ர முருகக டம்ப சிவசுத கந்த ...... குகவேல சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழந டஞ்செய் ...... கழல்தாராய் மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு மகிழரி விண்டு ...... மருகோனே வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா அருகுறு மங்கை யொடுவிடை யுந்து மமலனு கந்த ...... முருகோனே அருள்செறி பந்த ணையிலிரு மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
852
திருப்பந்தணை நல்லூர் எகினி னம்பழி
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான
எகினி னம்பழி நாடக மாடிகள் மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல் இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம் எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில் அலைய வுந்திரி வாரெவ ராயினும் இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும் அகித வஞ்சக பாவனை யால்மயல் கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல் அமுத மந்திர ஞானொப தேசமும் அருளி யன்புற வேமுரு காவென அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே ககன விஞ்சையர் கோவென வேகுவ டவுணர் சிந்திட வேகடல் தீவுகள் கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே கரிநெ டும்புலி தோலுடை யாரெனை யடிமை கொண்டசு வாமிச தாசிவ கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா செகமு மண்டமு மோருரு வாய்நிறை நெடிய அம்புயல் மேனிய னாரரி திருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி வளர்த னம்புதை மார்பழ காமிகு திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
853
திருப்பந்தணை நல்லூர் கும்பமு நிகர்த்த
தந்தன தனத்த தந்தன தனத்த தந்தன தனத்த ...... தனதான
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார் குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட கொந்தள கம்வைத்த ...... மடவார்பால் வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கிந ரகத்தில் ...... மெலியாமல் வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய்புத்தி ...... தருவாயே பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி பண்டுள தவத்தி ...... லருள்சேயே பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த சங்கரர் தமக்கு ...... மிறையோனே சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற சஞ்சல மறுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
854
திருப்பந்தணை நல்லூர் கெண்டைகள் பொரும்
தந்ததன தந்ததன தனதனத் தந்ததன தந்ததன தனதனத் தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க் கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற் கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ...... கொடுபோய்வண் கெந்தபொடி யும்புனைந் துறவணைத் தின்பவச னந்தருந் தொழிலடுக் கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந் தண்டைகள்க லின்கலின் கலினெனக் கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத் தண்கொலுசு டன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச் சந்ததமும் வந்திரும் பரிமளப் பங்கயப தங்களென் கொடுவினைச் சஞ்சலம லங்கெடும் படியருட் ...... புரிவாயே தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக் கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத் துந்துமிதி மிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக் கந்தகுற வஞ்சிதங் கருவனத் துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும் பண்டர்கள்பு யங்களும் பொடிபடக் கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற் பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும் பந்திவரு மந்திசெண் பகமகிற் சந்துசெறி கொன்றைதுன் றியவனப் பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
855
திருப்பந்தணை நல்லூர் தேனிருந்த இதழார்
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர் தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி னார்பு யங்கழையி னார்த னங்குவடு சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டரீகம் சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை யார்ச ரண்கமல நேரி ளம்பருவ தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்பமூடே சோக முண்டுவிளை யாடி னுங்கமல பாத மும்புயமி ராறு மிந்துளபல் தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக நீலி கண்டிகலி யாணி விந்துவொளி யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள் சேறு டன்குருதி யோட எண்டிசையும் ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில் ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
856
திருப்பந்தணை நல்லூர் மதியஞ் சத்திரு
தனனந் தத்தன தனந்த தானன தனனந் தத்தன தனந்த தானன தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான
மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல மருவும் பொற்குட மெழுந்த மாமுலை வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே நிதமிந் தப்படி யிருந்து வாறவர் பொருள்தங் கப்பணி கலந்து போய்வர நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ...... வுழலாதே நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ...... மருள்தாராய் நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ...... னருள்பாலா நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணி நதிபங் கிற்குல வுகந்து காபுரி நகர்பொங் கித்தழை யவந்து வாழ்வுறு ...... முருகோனே கெதிதங் கத்தகு கணங்கள் வானவர் அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர் கிளைபொங் கக்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள் கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
857
திருப்பனந்தாள் கொந்தார் மைக்குழல்
தந்தா தத்தன தந்தா தத்தன தந்தா தத்தன ...... தனதான
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை யென்றே செப்பிய ...... மொழிமாதர் கொங்கார் முத்துவ டந்தா னிட்டத னந்தா னித்தரை ...... மலைபோலே வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம னந்தா னிப்படி ...... யுழலாமல் மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம் என்றே யிப்படி ...... அருள்வாயே இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட மண்டா நற்றவர் ...... குடியோட எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி யென்றே திக்கென ...... வருசூரைப் பந்தா டித்தலை விண்டோ டக்களம் வந்தோ ரைச்சில ...... ரணகாளிப் பங்கா கத்தரு கந்தா மிக்கப னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
858
திருவிடைமருதூர் அறுகுநுனி பனி
தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா ...... தனதன தனதான
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி ஆவி யாயவோர் தேவி மாருமாய் விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென வீடு வாசலாய் மாட கூடமாய் அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0858_u.html#audio
Add (additional) Audio/Video Link
Back to Top
859
திருவிடைமருதூர் இலகு குழைகிழிய
தனன தனதனன தான தானதன தனன தனதனன தான தானதன தனன தனதனன தான தானதன ...... தந்ததான
இலகு குழைகிழிய வூடு போயுலவி யடர வருமதன னூல ளாவியெதி ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம் இனிமை கரைபுரள வாகு லாவுசரி நெறிவு கலகலென வாசம் வீசுகுழ லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக மலையு மிதழ்பருகி வேடை தீரவுட லிறுக இறுகியநு ராக போகமிக வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை மதுர கவியடைவு பாடி வீடறிவு முதிர அரியதமி ழோசை யாகவொளி வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ கலக அசுரர்கிளை மாள மேருகிரி தவிடு படவுதிர வோல வாரியலை கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக் கலப மயிலின்மிசை யேறி வேதநெறி பரவு மமரர்குடி யேற நாளும்விளை கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே அலகை யுடனடம தாடு தாதைசெவி நிறைய மவுனவுரை யாடு நீபஎழில் அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே அமணர் கழுவில்விளை யாட வாதுபடை கருது குமரகுரு நாத நீதியுள தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
860
திருவிடைமருதூர் படியை அளவிடு
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும் தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும் பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப் பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந் திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும் பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச் சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங் குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன் சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடித் தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன் பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன் தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம் பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங் கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக் கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின் றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங் கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம் பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங் கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங் கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென் றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
861
திருவிடைமருதூர் புழுகொடுபனி
தனதனதன தான தானன தனதனதன தான தானன தனதனதன தான தானன ...... தந்ததான
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன் மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின் விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய் எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச் செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
862
திரிபுவனம் தனுநுதல் வெயர்
தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித் தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல் கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான் கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள் அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
863
கும்பகோணம் இந்துகதிர்
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் ...... தனதான
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட் டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற் றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக் கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக் கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச் செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக் கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
864
கும்பகோணம் தும்பி முகத்தானை
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் ...... தனதான
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற் றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர் தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத் தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச் செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச் செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித் திந்திமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச் சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச் சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத் தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன் கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக் கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க் கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
865
கும்பகோணம் கெண்டை நேரொத்தவிழி
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன தந்தனா தத்ததன ...... தனதான
கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங் கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும் மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி வண்டனா கப்புவியி ...... லுழலாமல் வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக் கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு கொந்தியா டத்தலையை ...... யரிவோனே கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
866
கும்பகோணம் பஞ்சுசேர் நிர்த்த
தந்தனா தத்தத் ...... தனதான
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர் பங்கமார் தொக்கிற் ...... படியாமற் செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன் செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர் பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
867
கும்பகோணம் மாலைதனில் வந்து
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாசமலர் சிந்து ...... குழல்கோதி வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க மால்பெருகி நின்ற ...... மடவாரைச் சாலைவழி வந்து போமவர்க ணின்று தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித் தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி சாலமிக நொந்து ...... தவியாமற் காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி காதலுமை மைந்த ...... எனவோதிக் காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள் காண அரு ளென்று ...... பெறுவேனோ கோலமுட னன்று சூர்படையின் முன்பு கோபமுட னின்ற ...... குமரேசா கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப கோணநகர் வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
868
கும்பகோணம் கறுத்த குஞ்சியும்
தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத் துருத்த வெண்பலு மடைய விழுந்துட் கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற் கலக்க முண்டல மலமுற வெண்டிப் பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக் கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப் பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித் தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப் பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட் டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ புறத்த லம்பொடி படமிக வுங்கட் டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப் புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட் டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப் புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச் சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத் தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச் செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப் பரிச்சு மந்திடு குமர கடம்பத் திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
869
கும்பகோணம் செனித்திடும் சலம்
தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன ...... தனதான
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும் விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே தெளித்தி டும்பல சாதியும் வாதியும் இரைத்தி டுங்குல மேசில கால்படர் சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங் கனைத்தி டுங்கலி காலமி தோவென வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக் கடுக்க னுஞ்சில பூடண மாடைகள் இருக்கி டுங்கலை யேபல வாசைகள் கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி சமர்த்த மொன்றிய தானவர் சேனையை வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே தினைப்பு னந்தனி லேமய லாலொரு மயிற்ப தந்தனி லேசர ணானென திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
870
சோமீச்சுரம் கரியகுழல் சரிய
தனனதன தனனதன தானான தானதன தனனதன தனனதன தானான தானதன தனனதன தனனதன தானான தானதன ...... தனதான
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள் கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல ...... கனிவாயின் கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை கலகலென மொழிபதற மாமோக காதலது ...... கரைகாணா தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு ...... மிமையாதே இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும் இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும் இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை ...... யருள்வாயே உரியதவ நெறியில்நம நாராய ணாயவென ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில் உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல் உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு ...... முயர்வாக வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட ...... மதில்சூழும் மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில் மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
871
கொட்டையூர் பட்டுமணிக் கச்சி
தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத் ...... தனதான
பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப் பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென் பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப் பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச் சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத் துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச் சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத் துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார் சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச் சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன் கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக் குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின் கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற் கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
872
சிவபுரம் மனமெனும் பொருள்
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான
மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே வருசு கந்துய ராசையி லேயுழல் மதியை வென்றுப ராபர ஞானநல் வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி யெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தங்கிளை யானது வேரற சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே கனக னங்கையி னாலறை தூணிடை மனித சிங்கம தாய்வரை பார்திசை கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே கதற வென்றுடல் கீணவ னாருயி ருதிர முஞ்சித றாதமு தாயுணு கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே தினக ரன்சிலை வேளருள் மாதவர் சுரர்க ளிந்திர னாருர காதிபர் திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே திரும டந்தையர் நாலிரு வோர்நிறை அகமொ டம்பொனி னாலய நீடிய சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
873
திருநாகேச்சுரம் ஆசார வீனக்கு
தானான தானத் தனத்த தத்தன தானான தானத் தனத்த தத்தன தானான தானத் தனத்த தத்தன ...... தனதான
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள் ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் நானாவு பாயச் சரித்ர துட்டர்கள் ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள் கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை கூடாத பாவத் தவத்த துட்டர்கள் ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி பேரார வாரச் சமுத்தி ரத்தினில் மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை வேரோடு வீழத் தறித்த டுக்கிய போராடு சாமர்த் தியத்தி ருக்கையில் வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர் மாயாவி காரத் தியக்க றுத்தருள் ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள் நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
874
கூந்தலூர் தரையினில் வெகுவழி
தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன ...... தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை வெறியனை நிறைபொறை வேண்டி டாமத சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி தவநெறி தனைவிடு தாண்டு காலியை யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய் சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை விரைசெறி குழலியர் வீம்பு நாரியர் மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே ஒருபது சிரமிசை போந்த ராவண னிருபது புயமுட னேந்து மேதியு மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே உனதடி யவர்புக ழாய்ந்த நூலின ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர் உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு களமிசை யறமது தீர்ந்த சூரர்கள் குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு மிடறினி லிருவென ஏந்து மீசுரர் குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
875
திருச்சத்திமுத்தம் கடகரிம ருப்பிற்க
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான
கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர் கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி ...... யணியாலே கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ் கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை ...... விலகாது கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு கயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ விக்குழையின் ...... மிசைதாவுங் களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள் கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ ...... தொழியேனோ அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில் அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு ...... மழகோனே அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ...... மதிசூரா விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள் உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு ...... மொருமாயோன் விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
876
திருவலஞ்சுழி மகர குண்டல மீதே
தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன ...... தனதான
மகர குண்டல மீதே மோதுவ வருண பங்கய மோபூ வோடையில் மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ மதன்வி டுங்கணை யோவா ளோசில கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத முகர வண்டின மோவான் மேலெழு நிலவ ருந்துபு ளோமா தேவருண் முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார் முடிவெ னுங்கட லோயா தோவென வுலவு கண்கொடு நேரே சூறைகொள் முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ நிகரில் வஞ்சக மாரீ சாதிகள் தசமு கன்படை கோடா கோடிய நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய் நெடிய னங்கனு மானோ டேயெழு பதுவெ ளங்கவி சேனா சேவித நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே சிகர வும்பர்கள் பாகீ ராதிகள் பிரபை யொன்றுபி ராசா தாதிகள் சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனர் தெளியு மந்த்ரக லாபா யோகிகள் அயல்வி ளங்குசு வாமீ காமரு திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
877
திருப்பழையாறை தோடுற்றுக் காதள
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான
தோடுற்றுக் காதள வோடிய வேலுக்குத் தானிக ராயெழு சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே சோடுற்றத் தாமரை மாமுகை போலக்கற் பூரம ளாவிய தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார் கூடச்சிக் காயவ ரூழிய மேபற்றிக் காதலி னோடிய கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக் கோபித்துத் தாயென நீயொரு போதத்தைப் பேசவ தாலருள் கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும் வேடிக்கைக் காரவு தாரகு ணாபத்மத் தாரணி காரண வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா வேலைக்கட் டாணிம காரத சூரர்க்குச் சூரனை வேல்விடு வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே ஆடத்தக் காருமை பாதியர் வேதப்பொற் கோவண வாடையர் ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே ஆடப்பொற் கோபுர மேவிய ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
878
திருச்சக்கிரப்பள்ளி திட்டெனப் பல
தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான
திட்டெ னப்பல செப்பைய டிப்பன பொற்கு டத்தையு டைப்பன வுத்தர திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே செப்ப வத்திம ருப்பையொ டிப்பன புற்பு தத்தையி மைப்பில ழிப்பன செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன சித்த முற்பொர விட்டுமு றிப்பன புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப் புக்கு டைப்பன முத்திரை யிட்டத னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல் புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே துட்ட நிக்ரக சத்தித ரப்ரப லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச் சொற்க நிற்கசொ லட்சண தட்சண குத்த ரத்தில கத்திய னுக்கருள் சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில் மிக்க ரத்நம திற்புடை சுற்றிய சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
879
திருக்குரங்காடுதுறை அலங்கார முடிக்கிரண
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத் ...... தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும் அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத் தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ் சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத் தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட் டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும் இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத் திருங்கான நடக்குமவற் ...... கினியோனே குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக் கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக் குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
880
திருக்குரங்காடுதுறை குறித்த நெஞ்சாசை
தனத்தனந் தான தனதன தனத்தனந் தான தனதன தனத்தனந் தான தனதன ...... தனதான
குறித்தநெஞ் சாசை விரகிகள் நவிற்றுசங் கீத மிடறிகள் குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங் குறைப்படுங் காதல் குனகிகள் அரைப்பணங் கூறு விலையினர் கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை பொறித்தசிங் கார முலையினர் வடுப்படுங் கோவை யிதழிகள் பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப் புரித்திடும் பாவ சொருபிகள் உருக்குசம் போக சரசிகள் புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ நெறித்திருண் டாறு பதமலர் மணத்தபைங் கோதை வகைவகை நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா நெருக்குமிந்த் ராதி யமரர்கள் வளப்பெருஞ் சேனை யுடையவர் நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே செறித்தமந் தாரை மகிழ்புனை மிகுத்ததண் சோலை வகைவகை தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந் திரைக்கரங் கோலி நவமணி கொழித்திடுஞ் சாரல் வயலணி திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
881
திருக்குரங்காடுதுறை குடங்கள் நிரை
தனந்த தனத்தான தனந்த தனத்தான தனந்த தனத்தான ...... தனதான
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார வடங்கள் அசைத்தார ...... செயநீலங் குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி யுலந்து மிகக்கோலு ...... மகலாதே உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன் விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு விளங்கு முகிற்கான ...... மருகோனே தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை தழங்கு மியற்பாடி ...... யளிசூழத் தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
882
காவளூர் மானை நேர்விழி
தான தானன தத்தன தந்தன தான தானன தத்தன தந்தன தான தானன தத்தன தந்தன ...... தனதான
மானை நேர்விழி யொத்தம டந்தையர் பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர் வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும் மார்பு மீதினு முத்துவ டம்புரள் காம பூரண பொற்கட கம்பொர வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம் ஆன நேரில்வி தத்திர யங்களும் நாண மாறம யக்கியி யம்பவும் ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி ஆர வாரந யத்தகு ணங்களில் வேளி னூல்களை கற்றவி ளம்பவும் ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ சான கீதுய ரத்தில ருஞ்சிறை போன போதுதொ குத்தசி னங்களில் தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத் தாரை மானொரு சுக்கிரி பன்பெற வாலி வாகுத லத்தில்வி ழுந்திட சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே கான வேடர்சி றுக்குடி லம்புன மீதில் வாழித ணத்திலு றைந்திடு காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா காவு லாவிய பொற்கமு கின்திரள் பாளை வீசம லர்த்தட முஞ்செறி காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
883
தஞ்சை அஞ்சன வேல்விழி மடமாதர்
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர் அங்கவர் மாயையி ...... லலைவேனோ விஞ்சுறு மாவுன ...... தடிசேர விம்பம தாயரு ...... ளருளாதோ நஞ்சமு தாவுணு ...... மரனார்தம் நல்கும ராவுமை ...... யருள்பாலா தஞ்சென வாமடி ...... யவர்வாழத் தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
884
தஞ்சை அம்பு ராசியில்
தந்த தானனத் தந்த தானனத் தந்த தானனத் ...... தனதான
அம்பு ராசியிற் கெண்டை சேலொளித் தஞ்ச வேமணிக் ...... குழைவீசும் அங்க ணாரிடத் தின்ப சாகரத் தங்கி மூழ்குமிச் ...... சையினாலே எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித் திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர இங்கு வாவெனப் பண்பி னாலழைத் தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய் கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க் கொண்டல் போல்குழற் ...... கனமேருக் குன்று போல்முலைப் பைங்கி ராதியைக் கொண்ட கோலசற் ...... குணவேலா சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் ...... குருநாதா சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
885
தஞ்சை கந்த வார்குழல்
தந்த தானன தான தான தத்த தந்த தந்த தானன தான தான தத்த தந்த தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள் மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
886
சப்தஸ்தானம் மரு உலாவிடும்
தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன தனன தானன தான தனத்தன ...... தனதான
மருவு லாவிடு மோதி குலைப்பவர் சமர வேலெனு நீடு விழிச்சியர் மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர் மதன னோடுறழ் பூச லிடைச்சியர் இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர் மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே சருவி யாரையும் வாவெ னழைப்பவர் பொருளி லேவெகு ஆசை பரப்பிகள் சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே சலச மேவிய பாத நினைத்துமுன் அருணை நாடதி லோது திருப்புகழ் தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே அரிய கானக மேவு குறத்திதன் இதணி லேசில நாளு மனத்துடன் அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட உழவர் சாகர மோடி யொளித்திட அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே திருவின் மாமர மார்ப ழனப்பதி அயிலு சோறவை யாளு துறைப்பதி திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச் சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
887
திருவையாறு சொரியு மாமுகில்
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல் சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை துவர தோஇல வோதெரி யாஇடை துகளி லாவன மோபிடி யோநடை துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப் பரிவி னாலெனை யாளுக நானொரு பழுதி லானென வாணுத லாரொடு பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப் பரவை மீதழி யாவகை ஞானிகள் பரவு நீள்புக ழேயது வாமிகு பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே கரிய மேனிய னானிரை யாள்பவன் அரிய ராவணை மேல்வளர் மாமுகில் கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக் கபடன் மாமுடி யாறுட னாலுமொர் கணையி னால்நில மீதுற நூறிய கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே திரிபு ராதிகள் தூளெழ வானவர் திகழ வேமுனி யாவருள் கூர்பவர் தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே சிகர பூதர நீறுசெய் வேலவ திமிர மோகர வீரதி வாகர திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
888
திருப்பூந்துருத்தி வீங்கு பச்சிள
தாந்த தத்தன தானா தானன தாந்த தத்தன தானா தானன தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான
வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ...... உண்டுதோயா வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி ஓங்கு மைக்குழல் சாதா வீறென வீந்து புட்குரல் கூவா வேள்கலை யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு ...... யங்குமாகா ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை தீர்ந்து னக்கெளி தாயே மாதவ மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே தாங்கு நிற்சரர் சேனா நீதரு னாங்கு ருத்ரகு மாரா கோஷண தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா சாங்கி பற்சுகர் சீநா தீசுர ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா பூங்கு ளத்திடை தாரா வோடன மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை போன்ற விக்ரக சூரா ரீபகி ...... ரண்டரூபா போந்த பத்தர்பொ லாநோய் போயிட வேண்ட நுக்ரக போதா மேவிய பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
889
திருநெய்த்தானம் முகிலைக் காரை
தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன ...... தனதான
முகிலைக் காரைச் சருவிய குழலது சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ முனையிற் காதிப் பொருகணை யினையிள வடுவைப் பானற் பரிமள நறையிதழ் முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத் துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ் பருகிக் காதற் றுயரற வளநிறை துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச் சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே குழறிக் கூளித் திரளெழ வயிரவர் குவியக் கூடிக் கொடுவர அலகைகள் குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா செகசெச் சேசெச் செகவென முரசொலி திகழச் சூழத் திருநட மிடுபவர் செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே சிகரப் பாரக் கிரியுறை குறமகள் கலசத் தாமத் தனகிரி தழுவிய திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
890
திருப்பழுவூர் விகட சங்கட
தனன தந்தன தாத்த தானன தனன தந்தன தாத்த தானன தனன தந்தன தாத்த தானன ...... தனதான
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கைய ரூத்தை நாறிகள் விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம் விதம்வி தங்களை நோக்கி யாசையி லுபரி தங்களை மூட்டி யேதம இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர் சகல மஞ்சன மாட்டி யேமுலை படவ ளைந்திசை மூட்டி யேவரு சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது மலர வுந்தியை வாட்டி யேயிடை தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான செனம டங்கலு மாற்றி யேயுடல் தகர அங்கவர் கூட்டை யேநரி திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்க ளேத்த வேயரி யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே அமர ரந்தணர் போற்ற வேகிரி கடல திர்ந்திட நோக்கு மாமயில் அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
891
பெரும்புலியூர் சதங்கை மணி
தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் ...... தனதான
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் ...... புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் ...... குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
892
நெடுங்களம் பஞ்ச புலனும் பழைய
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள் பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப் பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக் குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங் கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய் எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல் எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம் அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில் அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
893
குறட்டி கூரிய கடைக்கணால்
தானன தனத்த தான, தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான
கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான கோடத னில்மெத்த வீறு ...... முலையாலுங் கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும் சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய் சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர் சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச் சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
894
குறட்டி நீரிழிவு குட்டம்
தானன தனத்த தான தானன தனத்த தான தானன தனத்த தான ...... தனதான
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
895
அத்திப்பட்டு கருகி அறிவு அகல
தனதனன தனதனன தத்தத் தத்ததன தனதனன தனதனன தத்தத் தத்ததன தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர் கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக் கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல் கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் ...... வழியேபோய் மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில் புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல் புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும் புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள் பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர் அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
896
அத்திக்கரை தொக்கைக் கழுவி
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை சுற்றிக்கல னிட்டுக் கடிதரு சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே சுத்தத்தைய கற்றிப் பெரியவர் சொற்றப்பிய கத்தைப் புரிபுல சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல் முக்குற்றம கற்றிப் பலகலை கற்றுப்பிழை யற்றுத் தனையுணர் முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே முத்தித்தவ சுற்றுக் கதியுறு சத்தைத்தெரி சித்துக் கரையகல் முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே திக்கெட்டும டக்கிக் கடவுள ருக்குப்பணி கற்பித் தருளறு சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர் செச்சைப்புய மற்றுப் புகவொரு சத்திப்படை விட்டுச் சுரர்பதி சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே அக்கைப்புனை கொச்சைக் குறமகள் அச்சத்தையொ ழித்துக் கரிவரும் அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே அப்பைப்பிறை யைக்கட் டியசடை அத்தர்க்கரு மைப்புத் திரவிரி அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
897
கந்தனூர் விந்துபேதித்த
தந்தனா தத்தனா தந்தனா தத்தனா தந்தனா தத்தனா ...... தந்ததான
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர் எந்தைபா கத்துறையு ...... மந்தமாது எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ் எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
898
வாலிகொண்டபுரம் ஈயெறும்பு நரி
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு காக முண்பவுட லேசு மந்துஇது ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே ஏது மென்றனிட கோலெ னும்பரிவு மேவி நம்பியிது போது மென்கசில ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச் சீத தொங்கலழ காவ ணிந்துமணம் வீச மங்கையர்க ளாட வெண்கவரி சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச் சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய் சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச் சோதி யந்தபிர மாபு ரந்தரனு மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர வாது கொண்டவுணர் மாள செங்கையயி லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே வாச கும்பதன மானை வந்துதினை காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
899
திருமாந்துறை ஆங்குடல் வளைந்து
தாந்தன தனந்த தாந்தன தனந்த தாந்தன தனந்த ...... தனதான
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
900
வயலூர் அரி மருகோனே
தனதன தானான தானந் தனதன தானான தானந் தனதன தானான தானந் ...... தனதான பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங் குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங் குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
901
வயலூர் ஆரம் முலை காட்டி
தானதன தாத்த தானதன தாத்த தானதன தாத்த ...... தனதான
ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி யாடையணி காட்டி ...... அநுராக ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி ஆதரவு காட்டி ...... எவரோடும் ஈரநகை காட்டி நேரமிகை காட்டி யேவினைகள் காட்டி ...... யுறவாடி ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி யீடழிதல் காட்ட ...... லமையாதோ வீரவப ராட்டு சூரர்படை காட்டில் வீழனலை யூட்டி ...... மயிலூர்தி வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு வேலைவிளை யாட்டு ...... வயலூரா சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலிகுற வாட்டி ...... மணவாளா தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
902
வயலூர் இகல்கடின முகபடவி
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத மத்தக்க ளிற்றையெதிர் புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை கட்டிப்பி ணித்திறுகி யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில் எற்றிக்க லக்கமுற இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது தொட்டுத்தி ரித்துமிக இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல கொத்துக்கு ழற்குலைய மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர நெக்குக்க ருத்தழிய அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர கட்டுப்பொ றிச்சியர்கள் மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை யுற்றுத்து திக்கும்வகை அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில் ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுட தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை பக்கத்தி னிற்சரிய எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி விட்டத்த மித்ததென வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி சித்ரப்ர சித்தமுறு அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி தத்வத்தி றச்சிகர வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
903
வயலூர் இலகு முலைவிலை
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகு முலைவிலை யசடிகள் கசடிகள் கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள் எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும் இனிய நயமொழி பழகிக ளழகிகள் மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள் யமனு மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால் உலக மிடர்செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள் உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி யிடவல கபடிகள் முகடிகள் உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ...... ளுறவாமோ அலகை புடைபட வருவன பொருவன கலக கணநிரை நகுவன தகுவன அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி அலரி குடதிசை யடைவன குடைவன தரும வநிதையு மகிழ்வன புகழ்வன அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி திலக நுதலுமை பணிவரு செயமகள் கலையி னடமிட வெரிவிரி முடியினர் திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச் சிறிது பொழுதினி லயில்விடு குருபர அறிவு நெறியுள அறுமுக இறையவ த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
904
வயலூர் என்னால் பிறக்கவும்
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான செங்கோட மர்ந்த ...... பெருமாளே மங்காம லுன்ற ...... னருள்தாராய்
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
905
வயலூர் கடல்போற் கணைவிழி
தனனாத் தனதன தனனாத் தனதன தனனாத் தனதன ...... தனதான
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல் கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும் கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை கடிபோற் பணியரை ...... யெனவாகும் உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ ளுடையாற் கெறுவித ...... நடையாலும் ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும் ஒழியாத் துயரது ...... தவிரேனோ குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள் கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள் குடியேற் றியகுக ...... வுயர்தாழை மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
906
வயலூர் கமலத்தே குலாவும்
தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன ...... தனதான
கமலத் தேகு லாவு மரிவையை நிகர்பொற் கோல மாதர் மருள்தரு கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள் கலவிக் காசை கூர வளர்பரி மளகற் பூர தூம கனதன கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும் விமலச் சோதி ரூப இமகர வதனத் தாலு நாத முதலிய விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும் வெயிலெப் போதும் வீசு மணிவளை அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர் விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ சமரிற் பூதம் யாளி பரிபிணி கனகத் தேர்கள் யானை யவுணர்கள் தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர் புகழக் கானி லாடு பரிபுர சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா அமரர்க் கீச னான சசிபதி மகள்மெய்த் தோயு நாத குறமகள் அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா அருளிற் சீர்பொ யாத கணபதி திருவக் கீசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
907
வயலூர் கமை அற்ற சீர்
தனத்தத தானான தனதத்த தானான தனதத்த தானனா ...... தந்ததான
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர் களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக் கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர் கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ் சமயத்த ராசார நியமத்தின் மாயாது சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய் சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய் அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல் அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர் அருணச்சி காநீல ...... கண்டபார மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம் வரசத்தி மேலான பரவத்து வேமேலை வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
908
வயலூர் குருதி கிருமிகள்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை மருவு முருவமு மலமல மழகொடு குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல் குளிரி லறையக மிவைகளு மலமல மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு சுருதி வழிமொழி சிவகலை யலதினி யுலக கலைகளு மலமல மிலகிய தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால் சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு முறவு மலமல மருளலை கடல்கழி துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே விருது முரசுகள் மொகுமொகு மொகுவென முகுற ககபதி முகில்திகழ் முகடதில் விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட விபுத ரரகர சிவசிவ சரணென விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா மருது நெறுநெறு நெறுவென முறிபட வுருளு முரலொடு தவழரி மருகசெ வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி மலையி லுறைகிற அறுமுக குருபர கயலு மயிலையு மகரமு முகள்செநெல் வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
909
வயலூர் குயிலோ மொழி
தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன ...... தந்ததான
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக் குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற் பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள் பகையேயென நினையாதுற ...... நண்புகூரும் பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன் விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன் விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும் அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
910
வயலூர் கோவை வாயிதழ்
தான தான தனத்தந் தான தான தனத்தந் தான தான தனத்தந் ...... தனதான
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங் கோதை மாதர் முலைக்குங் ...... குறியாலும் கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங் கோதி வாரி முடிக்குங் ...... குழலாலும் ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண் டாசை யாயி னுநித்தந் ...... தளராதே ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன் றாடல் தாள்க ளெனக்கின் ...... றருள்வாயே சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந் த்யாக சீல குணத்தன் ...... திருமாலும் தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன் தேயு வான நிறத்தன் ...... புதல்வோனே காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங் காவி சூழ்வ யலிக்கும் ...... ப்ரியமானாய் காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங் கால னாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
911
வயலூர் தாமரையின் மட்டு
தானன தனத்த தானன தனத்த தானன தனத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
தாமரையின் மட்டு வாசமல ரொத்த தாளிணை நினைப்பி ...... லடியேனைத் தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப தாருவென மெத்தி ...... யவிராலி மாமலையி னிற்ப நீகருதி யுற்று வாவென அழைத்தென் ...... மனதாசை மாசினை யறுத்து ஞானமு தளித்த வாரமினி நித்த ...... மறவேனே காமனை யெரித்த தீநயன நெற்றி காதிய சுவர்க்க ...... நதிவேணி கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட காதுடைய அப்பர் ...... குருநாதா சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க சோலைபுடை சுற்று ...... வயலூரா சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து சூர்தலை துணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
912
வயலூர் திரு உரூப நேராக
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ் சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார ...... வினையேனைக் கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங் கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு ...... மறவேனே சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி ...... புதல்வோனே சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரீசெ ...... யிளையோனே மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
913
வயலூர் நெய்த்த சுரி
தத்த தனதன தனனா தனனா தத்த தனதன தனனா தனனா தத்த தனதன தனனா தனனா ...... தனதான
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும் நெக்க அமுதிதழ் கனியோ துவரோ சுத்த மிடறது வளையோ கமுகோ நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந் தெய்த்த இடையது கொடியோ துடியோ மிக்க திருவரை அரவோ ரதமோ இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய் இச்சை விரகுடன் மடவா ருடனே செப்ப மருளுட னவமே திரிவேன் ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே புத்த ரமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீ றிடவே புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன் புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல் கற்ற தவமுனி பிரமா புரம்வாழ் பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே சத்த முடையஷண் முகனே குகனே வெற்பி லெறிசுட ரயிலா மயிலா சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ் சக்ர தரஅரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
914
வயலூர் முலை மறைக்கவும்
தனன தத்தன தானன தானன தனன தத்தன தானன தானன தனன தத்தன தானன தானன ...... தனதான
முலைம றைக்கவும் வாசலி லேதலை மறைய நிற்கவும் ஆசையு ளோரென முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு நகம ழுத்தவும் லீலையி லேயுற முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர் உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே கடிய சத்திய மாமென வேசொலி யவர்கொ டப்பண மாறிட வீறொடு கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ மலையை மத்தென வாசுகி யேகடை கயிறெ னத்திரு மாலொரு பாதியு மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி வலய முட்டவொ ரோசைய தாயொலி திமிதி மித்திமெ னாவெழ வேயலை மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள வயலை யற்புத னேவினை யானவை தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
915
வயலூர் மேகலை நெகிழ்த்து
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன் ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
916
வயலூர் வாளின் முனை
தான தனதன தந்தன தந்தன தான தனதன தந்தன தந்தன தான தனதன தந்தன தந்தன ...... தனதான
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம ராஜ நடையினு மம்பதி னும்பெரு வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ வாயு நகைமுக வெண்பலு நண்புடன் வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந் தூளி படுநவ குங்கும முங்குளி ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந் தோயு மளறெனி தம்பமு முந்தியு மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில் சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ காளி திரிபுரை யந்தரி சுந்தரி நீலி கவுரிப யங்கரி சங்கரி காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி காதல் மனைவிப ரம்பரை யம்பிகை ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது வேளி னிரதிய ருந்ததி யிந்திர தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர் தீர வருள்தரு கந்தநி ரந்தர மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
917
வயலூர் விகட பரிமளம்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமு மளவிய களபமு மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில் உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர் கலவி விதவிய னரிவையர் மருள்வலை யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர் விரவு நவமணி முகபட எதிர்பொரு புரண புளகித இளமுலை யுரமிசை தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர விபுத ரமுதென மதுவென அறுசுவை அபரி மிதமென இலவிதழ் முறைமுறை துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின் வரையு முறைசெய்து முனிவரு மனவலி கரையு மரிசன பரிசன ப்ரியவுடை தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர் விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்திமூழ்கிப் புகடு வெகுவித கரணமு மருவிய வகையின் முகிலென இருளென வனமென ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை குமுத பதிகலை குறைகலை நிறைகலை சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு பொழுதும் விடலரி தெனுமநு பவமவை முழுது மொழிவற மருவிய கலவியி தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப் புணரு மிதுசிறு சுகமென இகபரம் உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம் அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில் மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய் உணர்வு முணர்வுற வழுவற வொருஜக வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை புகலு மநுபவ வடிவினை யளவறு அகில வெளியையு மொளியையு மறிசிவ தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன் திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி திமிலை கரடிகை பதலைச லரிதவில் தமர முரசுகள் குடமுழ வொடுதுடி சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி குசல பசுபதி குருவென விருதுகள் ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென மகர சலநிதி மொகுமொகு மொகுவென எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன் மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென அகில புவனமும் ஹரஹர ஹரவென நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண நிருதர் தலையற வடிவெனு மலைசொரி குருதி யருவியின் முழுகிய கழுகுகள் பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட வயிறு சரிகுடல் நரிதின நிணமவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி ...... யும்பர்வாழ மடிய அவுணர்கள் குரகத கஜரத கடக முடைபட வெடிபட எழுகிரி அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன் வயலி நகருறை சரவண பவகுக இயலு மிசைகளு நடனமும் வகைவகை சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
918
திருத்தவத்துறை கார் அணியும் குழல்
தானன தந்தன தத்த தத்தன தானன தந்தன தத்த தத்தன தானன தந்தன தத்த தத்தன ...... தனதான
காரணி யுங்குழ லைக்கு வித்திடு கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர் காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே காதள வுங்கய லைப்பு ரட்டிம னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப் பூரண கும்பமெ னப்பு டைத்தெழு சீதள குங்கும மொத்த சித்திர பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய் யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே வீரபு யங்கிரி யுக்ர விக்ரம பூதக ணம்பல நிர்த்த மிட்டிட வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட வீசிய பம்பர மொப்பெ னக்களி வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர் வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா சீரணி யுந்திரை தத்து முத்தெறி காவிரி யின்கரை மொத்து மெத்திய சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
919
திருத்தவத்துறை நிரைத்த நித்தில
தனத்த தத்தன தானன தானன தனத்த தத்தன தானன தானன தனத்த தத்தன தானன தானன ...... தனதான
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள் பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார் நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல் நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள் வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக் கதித்த பத்தமை சாலடி யார்சபை மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர் கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ வரைத்த நுக்கரர் மாதவ மேவின ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ ருரைத்து ளத்திரு வாசக மானது மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத் திரைக்க டற்பொரு காவிரி மாநதி பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம் வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
920
பூவாளூர் காலன் வேல் கணை
தான தாத்தன தானா தானன தான தாத்தன தானா தானன தான தாத்தன தானா தானன ...... தனதான
காலன் வேற்கணை யீர்வா ளாலமு நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள் காம சாத்திர வாய்ப்பா டேணிக ...... ளெவரேனுங் காத லார்க்கும்வி னாவாய் கூறிகள் போக பாத்திர மாமூ தேவிகள் காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக மாலை மூட்டிகள் வானூ டேநிமிர் ஆனை போற்பொர நேரே போர்முலை மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா மாப ராக்கிக ளோடே சீரிய போது போக்குத லாமோ நீயினி வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே பால றாத்திரு வாயா லோதிய ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய் பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர் பாரின் மேற்கழு மீதே யேறிட நீறி டாத்தமிழ் நாடீ டேறிட பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும் ஞால மேத்திய தோர்மா தேவியும் ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா ஞான தீக்ஷித சேயே காவிரி யாறு தேக்கிய கால்வாய் மாமழ நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
921
திருப்பராய்த்துறை வாசனை மங்கையர்
தானன தந்தன தாத்த தத்தன தானன தந்தன தாத்த தத்தன தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை நூலிடை நன்கலை தேக்க இக்குவில் மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள் நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர் தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட யோகமி குந்திட நீக்கி யிப்படி நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே தேசம டங்கலு மேத்து மைப்புய லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே தீரனெ னும்படி சாற்று விக்ரம சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல் தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம லாசனன் வந்துல காக்கி வைத்திடு வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
922
தென்கடம்பந்துறை புணரியும்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங் கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும் புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும் பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன் றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம் புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக் குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும் படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங் கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால் குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந் த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங் குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும் புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந் தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந் தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும் பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந் துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய் கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங் குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன் குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங் கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
923
கருவூர் மதியால் வித்தகன்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
924
கருவூர் இளநிர்க் குவட்டு
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன தனனத் தனத்ததன ...... தனதான
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி யிரதக் குடத்தையெணு ...... மரபோடே இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல் முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய் நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக கமலப் புயத்துவளி ...... மணவாளா கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர் கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
925
கருவூர் தசையாகிய
தனனா தனனத் தனனா தனனத் தனனா தனனத் ...... தனதான
தசையா கியகற் றையினால் முடியத் தலைகா லளவொப் ...... பனையாயே தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் றவிரா வுடலத் ...... தினைநாயேன் பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் ...... களமான பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் ...... தருள்வாயே அசலே சுரர்புத் திரனே குணதிக் கருணோ தயமுத் ...... தமிழோனே அகிலா கமவித் தகனே துகளற் றவர்வாழ் வயலித் ...... திருநாடா கசிவா ரிதயத் தமிர்தே மதுபக் கமலா லயன்மைத் ...... துனவேளே கருணா கரசற் குருவே குடகிற் கருவூ ரழகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
926
கருவூர் நித்தப் பிணிகொடு
தத்தத் தனதன தானன தானன தத்தத் தனதன தானன தானன தத்தத் தனதன தானன தானன ...... தனதான
நித்தப் பிணிகொடு மேவிய காயமி தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி நிற்கப் படுமுல காளவு மாகரி டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை எத்தித் திரியுமி தேதுபொ யாதென வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை எத்திற் கொடுநின தாரடி யாரொடு முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய் தத்தத் தனதன தானன தானன தித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச் சத்தத் தொலிதிகை தாவிட வானவர் திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல சத்திக் கிடமருள் தாதகி வேணியர் வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
927
கருவூர் முட்ட மருட்டி
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன தத்தன தத்த தனதனத் ...... தனதான
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர் முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம் கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங் கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ் வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
928
கருவூர் சஞ்சல சரித
தந்தன தனன தனதாத்தன தந்தன தனன தனதாத்தன தந்தன தனன தனதாத்தன ...... தனதான
சஞ்சல சரித பரநாட்டர்கள் மந்திரி குமரர் படையாட்சிகள் சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித் தண்டிகை களிறு பரிமேற்றனி வெண்குடை நிழலி லுலவாக்கன சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க் குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையி லிசையாத்திரள் கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங் கொங்கணி மகளிர் பெருநாட்டிய நன்றென மனது மகிழ்பார்த்திபர் கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர் வென்றிட சகுனி கவறாற்பொருள் பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப் பண்டையில் விதியை நினையாப்பனி ரண்டுடை வருஷ முறையாப்பல பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே வஞ்சனை நழுவி நிரைமீட்சியில் முந்துத முடைய மனைவாழ்க்கையின் வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள் மண்கொள விசையன் விடுதேர்ப்பரி யுந்தினன் மருக வயலூர்க்குக வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
929
கருவூர் முகிலள கஞ்சரி
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன ...... தனதான
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத் துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின் துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில் சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள் சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச் சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
930
நெருவூர் குருவும் அடியவர்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருவு மடியவ ரடியவ ரடிமையு மருண மணியணி கணபண விதகர குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர் குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர் மருவு முலையெனு மலையினி லிடறியும் அளக மெனவள ரடவியில் மறுகியு மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே வயலி நகரியி லருள்பெற மயில்மிசை யுதவு பரிமள மதுகர வெகுவித வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு மருது நெறிபட முறைபட வரைதனில் உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி கவிகை யிடவல மதுகையு நிலைகெட வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு நிருப ரணமுக வரசர்கள் வலிதப விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
931
திருவெஞ்சமாக்கூடல் வண்டுபோற் சார
தந்தனாத் தானத் ...... தனதான
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி மந்திபோற் காலப் ...... பிணிசாடிச் செண்டுபோற் பாசத் ...... துடனாடிச் சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே தொண்டராற் காணப் ...... பெறுவோனே துங்கவேற் கானத் ...... துறைவோனே மிண்டராற் காணக் ...... கிடையானே வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
932
திருப்பாண்டிக்கொடுமுடி இருவினைப் பிறவி
தனதனத் தனனத் ...... தனதான
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ அரியயற் கறிதற் ...... கரியானே அடியவர்க் கெளியற் ...... புதநேயா குருவெனச் சிவனுக் ...... கருள்போதா கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
933
திருப்பாண்டிக்கொடுமுடி காந்தட் கரவளை
தாந்தத் தனதன தாந்தத் தனதன தாந்தத் தனதன ...... தனதான
காந்தட் கரவளை சேந்துற் றிடமத காண்டத் தரிவைய ...... ருடனூசி காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி காண்டற் கநுபவ ...... விதமேவிச் சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில் சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி தாங்கித் தழுவுத ...... லொழியேனோ மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர் வாஞ்சைப் படியருள் ...... வயலூரா வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை மான்சிற் றடிதொழு ...... மதிகாமி பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும் பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு பாண்சொற் பரவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
934
சேலம் பரிவுறு நாரற்று
தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...... தனதான
பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் ...... றதனாலே பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி யோசைத் ...... தரலாலே மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் ...... தளராதே மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் ...... றணைவாயே கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் தொடுகும ராமுத் ...... தமிழோனே கிளரொளி நாதர்க் கொருமக னாகித் திருவளர் சேலத் ...... தமர்வோனே பொருகிரி சூரக் கிளையது மாளத் தனிமயி லேறித் ...... திரிவோனே புகர்முக வேழக் கணபதி யாருக் கிளையவி நோதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
935
ராஜபுரம் சங்குவார் முடி
தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன தந்த தானன தத்தன ...... தனதான
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப் பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான் பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற் கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
936
விஜயமங்கலம் கலக சம்ப்ரம
தனன தந்தனத் தானான தானன தனன தந்தனத் தானான தானன தனன தந்தனத் தானான தானன ...... தனதான
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன மலர்சி வந்திடப் பூணார மானவை கழல வண்டெனச் சாரீரம் வாய்விட ...... அபிராமக் கனத னங்களிற் கோமாள மாகியெ பலந கம்படச் சீரோடு பேதக கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ...... ழமுதூறல் செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர் செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந் தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய் திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே உலக கண்டமிட் டாகாச மேல்விரி சலதி கண்டிடச் சேராய மாமவ ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும் உணர்சி றந்தசக் ராதார நாரணன் மருக மந்திரக் காபாலி யாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம் விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
937
சிங்கை சஞ்சரி உகந்து
தந்ததன தந்த தந்ததன தந்த தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற தண்குவளை யுந்து ...... குழலாலுந் தண்டரள தங்க மங்கமணி கின்ற சண்டவித கும்ப ...... கிரியாலும் நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து நம்பிவிட நங்கை ...... யுடனாசை நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று நன்றுமயில் துன்றி ...... வரவேணும் கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி கந்திகமழ் கின்ற ...... கழலோனே கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள் கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை திண்குயம ணைந்த ...... திருமார்பா செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
938
சிங்கை சந்திதொறும் நாணம்
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான
சந்திதொறு நாண மின்றியகம் வாடி உந்திபொரு ளாக ...... அலைவேனோ சங்கைபெற நாளு மங்கமுள மாதர் தங்கள்வச மாகி ...... அலையாமற் சுந்தரம தாக எந்தன்வினை யேக சிந்தைகளி கூர ...... அருள்வாயே தொங்குசடை மீது திங்களணி நாதர் மங்கைரண காளி ...... தலைசாயத் தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி என்றுநட மாடு ...... மவர்பாலா துங்கமுள வேடர் தங்கள்குல மாதை மங்களம தாக ...... அணைவோனே கந்தமுரு கேச மிண்டசுரர் மாள அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
939
பட்டாலியூர் இரு குழை இடறி
தனதன தனனத் தான தானன தனதன தனனத் தான தானன தனதன தனனத் தான தானன ...... தனதான
இருகுழை யிடறிக் காது மோதுவ பரிமள நளினத் தோடு சீறுவ இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர எமபடர் படைகெட் டோட நாடுவ அமுதுடன் விடமொத் தாளை யீருவ ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும் உருகிட விரகிற் பார்வை மேவுவ பொருளது திருடற் காசை கூறுவ யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல் உயிர்வதை நயனக் காதல் மாதர்கள் மயல்தரு கமரிற் போய்வி ழாவகை உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே முருகவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி மாமயில் முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே முரண்முடி யிரணச் சூலி மாலினி சரணெனு மவர்பற் றான சாதகி முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம் பருகினர் பரமப் போக மோகினி அரகர வெனும்வித் தாரி யாமளி பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும் பறையறை சுடலைக் கோயில் நாயகி இறையொடு மிடமிட் டாடு காரணி பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
940
பட்டாலியூர் கத்தூரி யகரு
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன தத்தான தனன தனதன ...... தனதான
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களப மணிவன ...... மணிசேரக் கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர் கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல் குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ டக்காகி விரக பரிபவ ...... மறவேபார் பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
941
பட்டாலியூர் சங்கைக் கத்தோடு
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன ...... தனதான
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள் சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச் சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர் சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின் மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின் மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம் வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர் கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
942
திருமுருகன்பூண்டி அவசியமுன் வேண்டி
தனதனனந் தாந்தத் ...... தனதான
அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் சடுசமயங் காண்டற் ...... கரியானே சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
944
அவிநாசி பந்தப்பொற் பார
தந்தத்தத் தானன தானன தந்தத்தத் தானன தானன தந்தத்தத் தானன தானன ...... தனதான
பந்தப்பொற் பாரப யோதர முந்திச்சிற் றாடகை மேகலை பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே பண்டெச்சிற் சேரியில் வீதியில் கண்டிச்சிச் சாரொடு மேவியெ பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய் கொந்துச்சிப் பூவணி கோதையர் சந்தச்செந் தாமரை வாயினர் கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங் கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு மண்டிச்செச் சேயென வானவர் கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே அந்தத்தொக் காதியு மாதியும் வந்திக்கத் தானவர் வாழ்வுறும் அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி அங்கத்தைப் பாவைசெய் தாமென சங்கத்துற் றார்தமி ழோதவு வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச் சந்தச்செக் காளநி சாசரர் வெந்துக்கத் தூளிப டாமெழ சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத் தங்கச்செக் கோலசை சேவக கொங்கிற்றொக் காரவி நாசியில் தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
945
அவிநாசி மனத்திரைந்தெழு
தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன தனத்த தந்தன தானன தானன ...... தனதான
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட கறுத்த குஞ்சியு மேநரை யாயிட மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி வருத்த முந்தர தாய்மனை யாள்மக வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட எனைக்க டந்திடு பாசமு மேகொடு சினத்து வந்தெதிர் சூலமு மேகையி லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான் இழுக்க வந்திடு தூதர்க ளானவர் பிடிக்கு முன்புன தாள்மல ராகிய இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும் கனத்த செந்தமி ழால்நினை யேதின நினைக்க வுந்தரு வாயுன தாரருள் கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக் கடற்ச லந்தனி லேயொளி சூரனை யுடற்ப குந்திரு கூறென வேயது கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா அனத்த னுங்கம லாலய மீதுறை திருக்க லந்திடு மாலடி நேடிய அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர் நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
946
திருப்புக்கொளியூர் பக்குவ ஆசார
தத்தன தானான தத்தன தானான தத்தன தானான ...... தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி பட்சண மாமோன ...... சிவயோகர் பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு பற்றுநி ராதார ...... நிலையாக அக்கண மேமாய துர்க்குணம் வேறாக அப்படை யேஞான ...... வுபதேசம் அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு னற்புத சீர்பாத ...... மறவேனே உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல வுற்பல வீராசி ...... மணநாற ஒத்தநி லாவீசு நித்தில நீராவி யுற்பல ராசீவ ...... வயலூரா பொக்கமி லாவீர விக்ரம மாமேனி பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப் பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
947
திருப்புக்கொளியூர் மதப்பட்ட விசால
தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தனத்தத்தன தானன தானன தந்ததான
மதப்பட்டவி சாலக போலமு முகப்பிற்சன வாடையு மோடையு மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி வயிற்றுக்கிடு சீகர பாணியு மிதற்செக்கர்வி லோசன வேகமு மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல விதப்பட்டவெ ளானையி லேறியு நிறைக்கற்பக நீழலி லாறியும் விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம் விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு பிரப்புத்வகு மாரசொ ரூபக வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே இதப்பட்டிட வேகம லாலய வொருத்திக்கிசை வானபொ னாயிர மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள இசைக்கொக்கவி ராசத பாவனை யுளப்பெற்றொடு பாடிட வேடையி லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற் றிதப்பட்டெதி ரேபொதி சோறினை யவிழ்த்திட்டவி நாசியி லேவரு திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன் செறிப்பித்த கராவதின் வாய்மக வழைப்பித்தபு ராணக்ரு பாகர திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
948
திருப்புக்கொளியூர் வனப்புற்றெழு
தனத்தத்தன தான தான தானன தனத்தத்தன தான தான தானன தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான
வனப்புற்றெழு கேத மேவு கோகிலம் அழைக்கப்பொரு மார னேவ தாமலர் மருத்துப்பயில் தேரி லேறி மாமதி ...... தொங்கலாக மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி வகுத்துக்கொடு சேம மாக மாலையில் ...... வந்துகாதிக் கனக்கப்பறை தாய ளாவ நீள்கன கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள் களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள் கலைக்குட்படு பேத மாகி மாயும துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது கடக்கப்படு நாம மான ஞானம ...... தென்றுசேர்வேன் புனத்திற்றினை காவ லான காரிகை தனப்பொற்குவ டேயு மோக சாதக குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நன்குமாரா பொறைக்குப்புவி போலு நீதி மாதவர் சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள் புயத்துற்றணி பாவ சூர னாருயிர் ...... கொண்டவேலா சினத்துக்கடி வீசி மோது மாகட லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் ...... உந்திமீதே செனித்துச்சதுர் வேத மோது நாமனு மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
949
பேரூர் தீராப் பிணிதீர
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
950
பேரூர் மைச் சரோருகம்
தத்த தானன தத்த தானன தானா தானா தானா தானா ...... தனதான
மைச்ச ரோருக நச்சு வாள்விழி மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு வைத்த போதக சித்த யோகியர் வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே நிச்ச மாகவு மிச்சை யானவை நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென் நிட்க ராதிகண் முற்பு காதினி நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே மிச்ச ரோருக வச்ர பாணியன் வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா வெற்பை யூடுரு வப்ப டாவரு வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி பச்சை மாமயில் மெச்ச வேறிய பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா பட்டி யாள்பவர் கொட்டி யாடினர் பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
951
கொடும்பாளூர் கலைஞர் எணும் கற்பு
தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத் ...... தனதான
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக் கடனபயம் பட்டுக் ...... கசடாகுங் கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக் கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும் அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற் றரவியிடந் தப்பிக் ...... குறியாத அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற் றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக் கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக் குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச் சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத் திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந் திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித் திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
952
கீரனூர் ஈர மோடு சிரித்து
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும் நாத கீதந டிப்பிலு ருக்கவும் ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன் ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும் வீதி மீதுத லைக்கடை நிற்கவும் ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி ஆர பாரத னத்தைய சைக்கவு மாலை யோதிகு லைத்துமு டிக்கவும் ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும் ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ பார மேருப ருப்பத மத்தென நேரி தாகஎ டுத்துட னட்டுமை பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப் பாதி வாலிபி டித்திட மற்றொரு பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு கீர வாரிதி யைக்கடை வித்ததி காரி யாயமு தத்தைய ளித்தக்ரு பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே கேடி லாவள கைப்பதி யிற்பல மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
953
குளந்தைநகர் தரங்க வார்குழல்
தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம் தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர் பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப் பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல் வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே குரும்பை மாமுலைக் குறமகள் ...... மணவாளா குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
954
தனிச்சயம் இலைச்சுருட் கொடு
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட் கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம் எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத் தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத் தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான் அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட் டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக் கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங் குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக் குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத் தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ் சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத் தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
955
தனிச்சயம் உரைத்த சம்ப்ரம
தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக் கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத் தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி உரத்த வெண்பலு நழுவிம தங்கெட் டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட் டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண் டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற் றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும் அசுத்த னென்றிட வுணர்வது குன்றித் துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக் கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட் டிடக்கை துந்துமி முரசு முழங்கச் செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள் தரித்து மண்டையி லுதிர மருந்தத் திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத் தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா தடச்சி கண்டியில் வயலியி லன்பைப் படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற் றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
956
மதுரை அலகு இல் அவுணரை
தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான
அலகில வுணரைக் கொன்ற தோளென மலைதொளை யுருவச் சென்ற வேலென அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக அடியென முடியிற் கொண்ட கூதள மெனவன சரியைக் கொண்ட மார்பென அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ கலகல கலெனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள் கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங் கலைகளு மொழியப் பஞ்ச பூதமு மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென் இலகுக டலைகற் கண்டு தேனொடு மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன் இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே எழுதென மொழியப் பண்டு பாரதம் வடகன சிகரச் செம்பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ வலம்வரு மளவிற் சண்ட மாருத விசையினும் விசையுற் றெண்டி சாமுக மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு மரகத கலபச் செம்புள் வாகன மிசைவரு முருகச் சிம்பு ளேயென மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
957
மதுரை ஆனைமுகவற்கு
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த ஆறுமுக வித்த ...... கமரேசா ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும் ஆரணமு ரைத்த ...... குருநாதா தானவர் குலத்தை வாள்கொடு துணித்த சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா தாளிணைக ளுற்று மேவியப தத்தில் வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே வானெழு புவிக்கு மாலுமய னுக்கும் யாவரொரு வர்க்கு ...... மறியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து ...... முருகோனே தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி சேரமரு வுற்ற ...... திரள்தோளா தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல்கொடு தணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
958
மதுரை பரவு நெடுங்கதிர்
தனன தனந்தன தனன தனந்தன தனன தனந்தன ...... தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய பவனி வரும்படி ...... யதனாலே பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது ...... நிலவாலே வரையினி லெங்கணு முலவி நிறைந்தது வரிசை தரும்பத ...... மதுபாடி வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு மகிழ வரங்களு ...... மருள்வாயே அரஹர சுந்தர அறுமுக என்றுனி அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத குறமக ளிங்கித ...... மணவாளா கருதரு திண்புய சரவண குங்கும களபம ணிந்திடு ...... மணிமார்பா கனக மிகும்பதி மதுரை வளம்பதி யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
959
மதுரை பழிப்பர் வாழ்த்துவர்
தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர் பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப் பதனாலே படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர் அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள் பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர் அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு ...... நரகினிற் சுழல்வேனோ அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும் விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து ...... கதிதனைத் தருவாயே தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ...... முருகவித் தகவேளே சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற் றிடுவோனே திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர் கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
960
மதுரை சீத வாசனை மலர்
தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான
சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ் சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச் சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை பாவ மானபிற விக்கடலு ழப்பவனை தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ வாத வூரனைம தித்தொருகு ருக்களென ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ் மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு ராம ரீணமயி லொக்கமது ரைப்பதியின் மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
961
மதுரை புருவச் செஞ்சிலை
தனனத் தந்தன தந்தன தனதன தனனத் தந்தன தந்தன தனதன தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே புகலச் சங்கிசை கண்டம தனிலெழ உருவச் செந்துவர் தந்தத ரமுமருள் புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே பருகித் தின்றிட லஞ்சுக மெனமன துருகிக் குங்கும சந்தன மதிவியர் படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே பலருக் குங்கடை யென்றெனை யிகழவு மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு திரமிற் றங்கிய கும்பக னொருபது தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள் சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே வடவெற் பங்கய லன்றணி குசசர வணையிற் றங்கிய பங்கய முகதமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
962
மதுரை முகமெலா நெய்
தனன தான தானத் தனந்த தனன தான தானத் தனந்த தனன தான தானத் தனந்த ...... தனதான
முகமெ லாநெய் பூசித் தயங்கு நுதலின் மீதி லேபொட் டணிந்து முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர் முதிரு மார பாரத் தனங்கள் மிசையி லாவி யாய்நெக் கழிந்து முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச் செகமெ லாமு லாவிக் கரந்து திருட னாகி யேசற் றுழன்று திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல் தெளியு ஞான மோதிக் கரைந்து சிவபு ராண நூலிற் பயின்று செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும் அகர மாதி யாம க்ஷரங்க ளவனி கால்வி ணாரப் பொடங்கி அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி அமரர் காண வேயத் தமன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே சகல வேத சாமுத் ரியங்கள் சமய மாறு லோகத் ரயங்கள் தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம் தவறி லாம லாளப் பிறந்த தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
963
மதுரை ஏலப் பனி நீர்
தானத்தன தானன தானன தானத்தன தானன தானன தானத்தன தானன தானன ...... தனதான
ஏலப்பனி நீரணி மாதர்கள் கானத்தினு மேயுற வாடிடு மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும் ஏமக்கிரி மீதினி லேகரு நீலக்கய மேறிய னேரென ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச் சோலைக்குயில் போல்மொழி யாலுமெ தூசுற்றிடு நூலிடை யாலுமெ தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும் சோமப்ரபை வீசிய மாமுக சாலத்திலு மாகடு வேல்விழி சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ ஆலப்பணி மீதினில் மாசறு மாழிக்கிடை யேதுயில் மாதவ னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன் ஆதித்திரு நேமியன் வாமன னீலப்புயல் நேர்தரு மேனியன் ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே கோலக்கய மாவுரி போர்வையர் ஆலக்கடு வார்கள நாயகர் கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநக ராகிய கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
964
பவானி கலைமேவு ஞான
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
965
மதுரை நீதத்துவமாகி
தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
966
மதுரை மனநினை சுத்த
தனதன தத்தந் தான தானன தனதன தத்தந் தான தானன தனதன தத்தந் தான தானன ...... தனதான
மனநினை சுத்தஞ் சூது காரிகள் அமளிவி ளைக்குங் கூளி மூளிகள் மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக வளைகுழை முத்தும் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள் வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிக ளிச்சம் பேசி கூசிகள் குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக் கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட அருளமு தத்தின் சேரு மோர்வழி குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய் தனதன தத்தந் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி தவில்முர சத்தந் தாரை பூரிகை வளைதுடி பொற்கொம் பார சூரரை சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா தினைவன நித்தங் காவ லாளியள் நகைமுறை முத்தின் பாவை மான்மகள் திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே திரிபுர நக்கன் பாதி மாதுறை யழகிய சொக்கன் காதி லோர்பொருள் செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
967
மதுரை முத்து நவரத்நமணி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தனதான வித்தகம ருப்புடைய ...... பெருமாளே செப்பெனஎ னக்கருள் கை ...... மறவேனே
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள் பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென ...... தெனனான திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும் அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
968
ஸ்ரீ புருஷமங்கை ஆடல் மதன் அம்பின்
தானதன தந்த தந்தன தானதன தந்த தந்தன தானதன தந்த தந்தன ...... தனதான
ஆடல்மத னம்பின் மங்கைய ராலவிழி யின்பி றங்கொளி யாரமத லமப் கொங்கையின் ...... மயலாகி ஆதிகுரு வின்ப தங்களை நீதியுட னன்பு டன்பணி யாமல்மன நைந்து நொந்துட ...... லழியாதே வேடரென நின்ற ஐம்புல னாலுகர ணங்க ளின்தொழில் வேறுபட நின்று ணர்ந்தருள் ...... பெறுமாறென் வேடைகெட வந்து சிந்தனை மாயையற வென்று துன்றிய வேதமுடி வின்ப ரம்பொரு ...... ளருள்வாயே தாடகையு ரங்க டிந்தொளிர் மாமுனிம கஞ்சி றந்தொரு தாழ்வறந டந்து திண்சிலை ...... முறியாவொண் ஜாநகித னங்க லந்தபின் ஊரில்மகு டங்க டந்தொரு தாயர்வ சனஞ்சி றந்தவன் ...... மருகோனே சேடன்முடி யுங்க லங்கிட வாடைமுழு தும்ப ரந்தெழ தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட ...... நடமாடுஞ் சீர்மயில மஞ்சு துஞ்சிய சோலைவளர் செம்பொ னுந்திய ஸ்ரீபுருட மங்கை தங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
969
ஸ்ரீ புருஷமங்கை கார் குழல் குலைந்து
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தந்த ...... தனதானா
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து காதலுறு சிந்தை யுந்து ...... மடமானார் காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார் பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்க பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை பீடையற வந்து நின்ற ...... னருள்தாராய் ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த ஏகமயி லங்க துங்க ...... வடிவேலா ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர் ஈடெறஇ ருந்த செந்தில் ...... நகர்வாழ்வே தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த சீரலர்கு ளுந்து யர்ந்த ...... பொழிலோடே சேரவெயி லங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த ஸ்ரீபுருட மங்கை தங்கு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
970
ஸ்ரீ புருஷமங்கை வேனின் மதன் ஐந்து
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான
வேனின்மத னைந்து பாணம்விட நொந்து வீதிதொறு நின்ற ...... மடவார்பால் வேளையென வந்து தாளினில்வி ழுந்து வேடைகெட நண்பு ...... பலபேசித் தேனினும ணந்த வாயமுத முண்டு சீதளத னங்க ...... ளினின்மூழ்கித் தேடியத னங்கள் பாழ்படமு யன்று சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ ராலிலையி லன்று ...... துயில்மாயன் ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த ஆரணமு குந்தன் ...... மருகோனே வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த மானொடுவி ளங்கு ...... மணிமார்பா மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை மாநகர மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
971
இலஞ்சி கரம் கமலம் மின்
தனந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன ...... தனதான
கரங்க மலமின தரம்ப வளம்வளை களம்ப கழிவிழி ...... மொழிபாகு கரும்ப முதுமலை குரும்பை குருகுப கரும்பி டியினடை ...... யெயின்மாதோ டரங்க நககன தனங்கு தலையிசை யலங்க நியமுற ...... மயில்மீதே அமர்ந்து பவவினை களைந்து வருகொடி யவந்த கனகல ...... வருவாயே தரங்க முதியம கரம்பொ ருததிரை சலந்தி நதிகும ...... ரெனவான தலம்ப ரவமறை புலம்ப வருசிறு சதங்கை யடிதொழு ...... பவராழி இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப னிரண்டு புயமலை ...... கிழவோனே இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு இலஞ்சி மருவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
972
இலஞ்சி கொந்தள வோலை குலு
தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் ...... தனதான
கொந்தள வோலை குலுங்கிட வாளிச் சங்குட னாழி கழன்றிட மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே சந்திர ஆர மழிந்திட நூலிற் பங்கிடை யாடை துவண்டிட நேசத் தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன் சந்திர மேனி முகங்களு நீலச் சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே சுந்தரர் பாட லுகந்திரு தாளைக் கொண்டுநல் தூது நடந்தவ ராகத் தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச் சங்கரி மோக சவுந்தரி கோலச் சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளையோனே இந்திர வேதர் பயங்கெட சூரைச் சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக் கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே எண்புன மேவி யிருந்தவள் மோகப் பெண்திரு வாளை மணந்திய லார்சொற் கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
973
இலஞ்சி சுரும்பு அணி
தனந்தன தந்த தனந்தன தந்த தனந்தன தந்த ...... தனதானா
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெறி கின்ற ...... விழிவேலால் சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு சுருண்டும யங்கி ...... மடவார்தோள் விரும்பிவ ரம்பு கடந்துந டந்து மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே விளங்குக டம்பு விழைந்தணி தண்டை விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் புரந்தரன் வஞ்சி ...... மணவாளா இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் குரும்பைம ணந்த ...... மணிமார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
974
இலஞ்சி மாலையில் வந்து
தான தனந்த தான தனந்த தனா தனந்த ...... தனதான
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த ...... அனலாலுங் கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி ...... தளராமுன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று ...... வரவேணும் கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த ...... முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு ...... குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே சூரிய னஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
975
திருக்குற்றாலம் ஏடுக்கொத் தாரலர்
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான
ஏடுக்கொத் தாரலர் வார்குழ லாடப்பட் டாடைநி லாவிய ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர் ஏதத்தைப் பேசுப ணாளிகள் வீசத்துக் காசைகொ டாடிகள் ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர் மாடொக்கக் கூடிய காமுகர் மூழ்குற்றுக் காயமொ டேவரு வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய் மாசுற்றுப் பாசம்வி டாசம னூர்புக்குப் பாழ்நர கேவிழு மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே தாடுட்டுட் டூடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி தானொத்தப் பூதப சாசுகள் வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள் சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே கூடற்கச் சாலைசி ராமலை காவைப்பொற் காழிவெ ளூர்திகழ் கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான கோதிற்பத் தாரொடு மாதவ சீலச்சித் தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
976
திருக்குற்றாலம் வேதத்திற் கேள்வி
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது போதத்திற் காண வொணாதது வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் வீதித்துத் தேடரி தானது ஆதித்தற் காய வொணாதது வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் வாதத்துக் கேயவி யாதது காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரம தாகிய வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே காதத்திற் காயம தாகும தீதித்தித் தீதிது தீதென காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட் டேமதி தீதக லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே கோதைப்பித் தாயொரு வேடுவ ரூபைப்பெற் றேவன வேடுவர் கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே கோதிற்பத் தாரொடு மாதவ சீலச்சித் தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
977
திருக்குற்றாலம் முத்தோலை தனை
தத்தான தனத்த தத்தன தத்தான தனத்த தத்தன தத்தான தனத்த தத்தன ...... தனதான
முத்தோலை தனைக்கி ழித்தயி லைப்போரி கலிச்சி வத்துமு கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார் முற்றாதி ளகிப்ப ணைத்தணி கச்சார மறுத்த நித்தில முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே வித்தார கவித்தி றத்தினர் பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ மெய்த்தேவர் துதித்தி டத்தரு பொற்பார்க மலப்ப தத்தினை மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே பத்தான முடித்த லைக்குவ டிற்றாட வரக்க ருக்கிறை பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே பற்பாசன் மிகைச்சி ரத்தைய றுத்தாத வனைச்சி னத்துறு பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே கொத்தார்க தலிப்ப ழக்குலை வித்தார வருக்கை யிற்சுளை கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங் கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி சிற்றாறு தனிற்க ளித்திடு குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
978
ஆய்க்குடி வாட்படச் சேனை
தாத்தனத் தானதன தாத்தனத் தானதன தாத்தனத் தானதன ...... தனதான
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும் மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல் வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக் கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக் கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச் சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும் ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
979
திருப்புத்தூர் கருப்புச் சாப
தனத்தத் தான தனன தனதன தனத்தத் தான தனன தனதன தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச் சாப னனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங் களிற்றுக் கோடு கலச மலிநவ மணிச்செப் போடை வனச நறுமலர் கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற் பொருப்பைச் சாடும் வலியை யுடையன அறச்சற் றான இடையை நலிவன புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும் புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர் ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில் பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன் இருட்டுப் பாரில் மறலி தனதுடல் பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை எலுப்புக் கோவை யணியு மவர்மிக அதிர்த்துக் காளி வெருவ நொடியினில் எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத திருட்டுப் பாணி யிடப முதுகிடை சமுக்கிட் டேறி யதிர வருபவர் செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி செடைக்குட் பூளை மதிய மிதழிவெ ளெருக்குச் சூடி குமர வயலியல் திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
980
திருப்புத்தூர் வேலை தோற்க விழி
தான தாத்த தனத்தத் தானன தான தாத்த தனத்தத் தானன தான தாத்த தனத்தத் தானன ...... தனதான
வேலை தோற்க விழித்துக் காதினில் ஓலை காட்டி நகைத்துப் போதொரு வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி மேனி காட்டி வளைத்துப் போர்முலை யானை காட்டி மறைத்தத் தோதக வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல் கால மேற்க வுழப்பிக் கூறிய காசு கேட்ட துகைப்பற் றாஇடை காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல் காதல் போற்று மலர்ப்பொற் பாயலின் மீத ணாப்பு மசட்டுச் சூளைகள் காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ ஆல கோட்டு மிடற்றுச் சோதிக பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக னோடை பூத்த தளக்கட் சானவி யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி சீல மாப்ப திமத்தப் பாரிட சேனை போற்றி டுமப்பர்க் கோதிய சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே சேல றாக்க யல்தத்தச் சூழ்வய லூர வேற்க ரவிப்ரர்க் காதர தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
981
திருவாடானை ஊனாரும் உட்பிணியும்
தானான தத்ததன தானான தத்ததன தானான தத்ததன ...... தனதான
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ ...... அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி ...... யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் ...... புரிவாயே மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும் வானோரு மட்டகுல ...... கிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு மாலால முற்றவமு ...... தயில்வோன்முன் ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள் ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
982
உத்தரகோசமங்கை கற்பக ஞானக் கடவுள்
தத்தன தானத் தனதன தந்தத் தத்தன தானத் தனதன தந்தத் தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத் திற்புத சேனைக் கதிபதி யின்பக் கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன் கட்டிள நீர்முக் கனிபய றம்பொற் றொப்பையி னேறிட் டருளிய தந்திக் கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப் பொற்சரி நாதப் பரிபுர என்றுப் பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான் பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற் றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற் றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற் குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக் கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித் திக்கய மாடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு வென்கச் செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி உற்பன மாகத் தடிபடு சம்பத் தற்புத மாகத் தமரர்பு ரம்பெற் றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா உட்பொருள் ஞானக் குறமக ளும்பற் சித்திரை நீடப் பரிமயில் முன்பெற் றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
983
இராமேசுரம் வாலவயதாகி
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான
வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம் வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
984
இராமேசுரம் வானோர் வழுத்துனது
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான
வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர் மீதே பணிக்கும்வகை ...... யறியாதே மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி லூடே யணைத்துதவு ...... மதனாலே தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக ளேதோ வெனக்கலவி ...... பலகோடி தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி னூடே கிநிற்குமிரு ...... கழலோனே மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை வீரா குறச்சிறுமி ...... மணவாளா ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை நாணா துரைக்குமொரு ...... பெரியோனே நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
985
இந்தம்பலம் அமல கமல உரு
தனன தனதனன தந்தந் தனத்ததன தனன தனதனன தந்தந் தனத்ததன தனன தனதனன தந்தந் தனத்ததன ...... தனதான
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை அரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெய லளவு மசலமது கண்டங் கொருத்தருள ...... வறியாத தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொ டகில புவனநதி யண்டங் களுக்குமுத லருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் ...... நடுவான கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவு கனக நிறமுடைய பண்பம் படிக்கதவ ககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுத ...... சிவயோகம் கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரி குமர குமரகுரு வென்றென் றுரைப்பமுது கனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனை ...... யருள்வாயே திமிலை பலமுருடு திந்திந் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த ...... திகுதீதோ செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணென அகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகு திமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர் ...... களமீதே அமரர் குழுமிமலர் கொண்டங் கிறைத்தருள அரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருள அரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருள ...... விடும்வேலா அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்கமுக அழகு புயமொடணை யினபங் களித்துமகிழ் அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
986
எழுகரைநாடு விரகற நோக்கியும்
தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன ...... தந்ததான
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும் விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல் மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற விழைவுகு ராப்புனை ...... யுங்குமார முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட முழுதும லாப்பொருள் தந்திடாயோ பரகதி காட்டிய விரகசி லோச்சய பரமப ராக்ரம ...... சம்பராரி படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
987
ஒடுக்கத்துச் செறிவாய் வழக்குச் சொற்பயில்
தனத்தத் தத்தன தாத்த தத்தன தனத்தத் தத்தன தாத்த தத்தன தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள் வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள் சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள் கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள் கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம் அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய் அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியி லாத்த முற்றவன் அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன் உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில் விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல் உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ் மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர் ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
988
காமத்தூர் ஆகத்தே தப்பாமல்
தானத் தானத் தானத் தானத் தானத் தானத் ...... தனதானா
ஆகத் தேதப் பாமற் சேரிக் கார்கைத் தேறற் ...... கணையாலே ஆலப் பாலைப் போலக் கோலத் தாயக் காயப் ...... பிறையாலே போகத் தேசற் றேதற் பாயற் பூவிற் றீயிற் ...... கருகாதே போதக் காதற் போகத் தாளைப் பூரித் தாரப் ...... புணராயே தோகைக் கேயுற் றேறித் தோயச் சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா சோதிக் காலைப் போதக் கூவத் தூவற் சேவற் ...... கொடியோனே பாகொத் தேசொற் பாகத் தாளைப் பாரித் தார்நற் ...... குமரேசா பாரிற் காமத் தூரிற் சீலப் பாலத் தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
989
முள்வாய் மின்னார் பயந்த
தன்னா தனந்த தந்த, தன்னா தனந்த தந்த தன்னா தனந்த தந்த ...... தனதான
மின்னார் பயந்த மைந்தர் தன்னா டினங்கு விந்து வெவ்வே ழன்று ழன்று ...... மொழிகூற விண்மேல் நமன்க ரந்து மண்மே லுடம்பொ ருங்க மென்னா ளறிந்த டைந்து ...... உயிர்போமுன் பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்ப ணிந்து பொய்யார் மனங்கள் தங்கு ...... மதுபோலப் பொல்லே னிறைஞ்சி ரந்த சொன்னீ தெரிந்த ழுங்கு புன்னா யுளுங்க வின்று ...... புகுவாயே பன்னா ளிறைஞ்சு மன்பர் பொன்னா டுறங்கை தந்து பன்னா கணைந்து சங்க ...... முறவாயிற் பன்னூல் முழங்க லென்று விண்ணோர் மயங்க நின்று பண்ணூ துகின்ற கொண்டல் ...... மருகோனே முன்னாய் மதன்க ரும்பு வின்னேர் தடந்தெ ரிந்து முன்னோர் பொருங்கை யென்று ...... முனையாட மொய்வார் நிமிர்ந்த கொங்கை மெய்ம்மா தர்வந்தி றைஞ்சு முள்வாய் விளங்க நின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
990
வாகைமாநகர் ஆலையான மொழிக்கு
தான தான தனத்த, தான தான தனத்த தான தான தனத்த ...... தனதான
ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு மால கால விழிக்கு ...... முறுகாதல் ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு மார பார முலைக்கு ...... மழகான ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காத லளிக்கு ...... முகமாய மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயி லூறல் குடித்து ...... மயல்தீர வாகு தோளி லணைத்து மாக மார்பொ ழிலுற்ற வாகை மாந கர்பற்று ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
991
விசுவை திருகு செறிந்த
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான
திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து முடிமலர் கொண்டொ ...... ரழகாகச் செயவரு துங்க முகமும்வி ளங்க முலைகள்கு லுங்க ...... வருமோக அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து அறிவுமெ லிந்து ...... தளராதே அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு னடியிணை யன்பொ ...... டருள்வாயே வரையைமு னிந்து விழவெக டிந்து வடிவெலெ றிந்த ...... திறலோனே மதுரித செஞ்சொல் குறமட மங்கை நகிலது பொங்க ...... வரும்வேலா விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த விடையரர் தந்த ...... முருகோனே விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு விசுவைவி ளங்கு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
992
பொதுப்பாடல்கள் போத நிர்க்குண
தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும் மாத மிழ்த்ரய சேயே நமோநம வேத னத்ரய வேளே நமோநம வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத வாரி ஜத்தில்வி ழாதே மகோததி யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ கீத நிர்த்தவெ தாளா டவீநட நாத புத்திர பாகீ ரதீகிரு பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா கேக யப்பிர தாபா முலாதிப மாலி கைக்கும ரேசா விசாகக்ரு பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டரீகா வேத வித்தக வேதா விநோதகி ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீராபி ராமவி நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
993
பொதுப்பாடல்கள் ஓது முத்தமிழ்
தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை வேத னைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி யோக மற்றுழல் ஆசாப சாசனை மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி பாத கக்கொலை யேசூழ்க பாடனை நீதி சற்றுமி லாகீத நாடனை பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில் பாடு பட்டலை மாகோப லோபனை வீடு பட்டழி கோமாள வீணனை பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ ஆதி சற்குண சீலா நமோநம ஆட கத்திரி சூலா நமோநம ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை ஆன வர்க்கினி யானே நமோநம ஞான முத்தமிழ் தேனே நமோநம ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும் தோதி தித்திமி தீதா நமோநம வேத சித்திர ரூபா நமோநம சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச தூத னைத்துகை பாதா நமோநம நாத சற்குரு நாதா நமோநம ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
994
பொதுப்பாடல்கள் வேத வித்தகா
தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
வேத வித்தகா சாமீ நமோநம வேல்மி குத்தமா சூரா நமோநம வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம நீல மிக்ககூ தாளா நமோநம மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத போத மொத்தபேர் போதா நமோநம பூத மற்றுமே யானாய் நமோநம பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும் பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம ஆறி ரட்டிநீள் தோளா நமோநம பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டரீக மீதி ருக்குநா மாதோடு சேயிதழ் மீதி ருக்குமே ரார்மாபு லோமசை வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும் வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்கமா வீணா கரேமக மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ ஆதி சத்திசா மாதேவி பார்வதி நீலி துத்தியார் நீணாக பூஷணி ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும் ஆர்யை பெற்றசீ ராளா நமோநம சூரை யட்டுநீள் பேரா நமோநம ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
995
பொதுப்பாடல்கள் ஆவி காப்பது
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப் பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும் பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல் போது போக்கியெ னாக்கையை ...... விடலாமோ தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ தீத தீக்ஷைப ரீக்ஷைக ...... ளறவோதுந் தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
996
பொதுப்பாடல்கள் ஏகமாய் பலவாய்
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
997
பொதுப்பாடல்கள் தோடு மென்குழை
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதானா
தோடு மென்குழை யூடே போரிடு வாணெ டுங்கயல் போலே யாருயிர் சூறை கொண்டிடு வேல்போ லேதொடர் ...... விழிமானார் சூத கந்தனி லேமா லாயவர் ஓது மன்றறி யாதே யூழ்வினை சூழும் வெந்துய ராலே தானுயிர் ...... சுழலாதே ஆடு வெம்பண காகோ தாசன மூறு கண்டிட மேல்வீழ் தோகையி லாரும் வண்கும ரேசா ஆறிரு ...... புயவேளே ஆரு நின்றரு ளாலே தாடொழ ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே ஓடு வெங்கதி ரோடே சோமனு மூழி யண்டமும் லோகா லோகமு மூரு மந்தர நானா தேவரு ...... மடிபேண ஊழி டம்புயன் வேலா வாலய மூடு தங்கிய மாலா ராதர வோத வெண்டிரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம்புலி போலே வேடர்கள் மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய் மேக மென்குழ லாய்நீ கேளினி வேறு தஞ்சமு நீயே யாமென வேளை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
998
பொதுப்பாடல்கள் நாலிரண்டிதழாலே
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான
நாலி ரண்டித ழாலே கோலிய ஞால முண்டக மேலே தானிள ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும் யோக மந்திர மூலா தாரனு நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு நூல றிந்தம ணீமா மாடமு மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி சால மண்டப மீதே யேறிய வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய் ஆல கந்தரி மோடா மோடிகு மாரி பிங்கலை நானா தேசிய மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும் ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி யம்பிகை ஞாதா வானவ ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி கால சங்கரி சீலா சீலித்ரி சூலி மந்த்ரச பாஷா பாஷணி காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூலாய் வாள்சிவ காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
999
பொதுப்பாடல்கள் போதில் இருந்து
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென் ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின் காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1000
பொதுப்பாடல்கள் வேடர் செழுந்தினை
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில் நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன் வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1001
பொதுப்பாடல்கள் இலகி யிருகுழை
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு மிசையி னசைதரு மொழியினு மருவமர் இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக இனிமை தருமொரு இதழினு நகையினு மிளைய ம்ருகமத தனகுவ டழகினு மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே குலவி விரகெனு மளறிடை முழுகிய கொடிய நடலைய னடமிட வருபிணி குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள் குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முதுபிண மெடுமென வொருபறை குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான் மலையில் நிகரில தொருமலை தனையுடல் மறுகி யலமர அறவுர முடுகிய வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய மவுலி யொருபது மிருபது கரமுடன் மடிய வொருசரம் விடுபவபன் மதகரி மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய அதுல னிருபத மதுதனி லெழுபுவி யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே அவுண ருடலம தலமர அலைகட லறவு மறுகிட வடகுவ டனகிரி யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1002
பொதுப்பாடல்கள் கடலை பயறொடு
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற அமுது துதிகையில் மனமது களிபெற கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான குடகு வயிறினி லடைவிடு மதகரி பிறகு வருமொரு முருகசண் முகவென குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் கொடிய நெடியன அதிவினை துயர்கொடு வறுமை சிறுமையி னலைவுட னரிவையர் குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவிமதி பயமுற நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான நிசிசர் கொடுமுடி சடசட சடவென பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான நடன மிடுபரி துரகத மயிலது முடுகி கடுமையி லுலகதை வலம்வரு நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1003
பொதுப்பாடல்கள் கமல குமிளித
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
கமல குமிளித முலைமிசை துகிலிடு விகட கெருவிக ளசடிகள் கபடிகள் கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள் கனலி லிடுமெழு கெனநகை யருளிகள் அநெக விதமொடு தனியென நடவிகள் கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி அமுத மொழிகொடு தவநிலை யருளிய பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத அசட னறிவிலி யிழிகுல னிவனென இனமு மனிதரு ளனைவரு முரைசெய அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே திமித திமிதிமி டமடம டமவென சிகர கரதல டமருக மடிபட தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள் சிவமி லுருகியு மரகர வெனவதி பரத பரிபுர மலரடி தொழஅநு தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே குமர சரவண பவதிற லுதவிய தரும நிகரொடு புலமையு மழகிய குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1004
பொதுப்பாடல்கள் தசையும் உதிரமும்
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
தசையு முதிரமு நிணமொடு செருமிய கரும கிருமிக ளொழுகிய பழகிய சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ் சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக் கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு வசன முறஇரு வினையற மலமற இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி இனிமை தருமொரு தனிமையை மறைகளின் இறுதி யறுதியி டவரிய பெறுதியை இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே அசல குலபதி தருமொரு திருமகள் அமலை விமலைக ளெழுவரும் வழிபட அருளி அருணையி லுறைதரு மிறையவ ...... ளபிராமி அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதலெழு தலமிவை முறைமுறை அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி மவுன மருளிய மகிமையு மிமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும் மயிலு மியலறி புலமையு முபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1005
பொதுப்பாடல்கள் நெடிய வட
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும் நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும் நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப முடியு மபிநவ வனசரர் கொடியிடை தளர வளர்வன ம்ருகமத பரிமள முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவணி முருக னறுமுக னெனவரு வனபெயர் முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே கொடிய படுகொலை நிசிசர ருரமொடு குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக் குமுறு கடல்குடல் கிழிபட வடுமர மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர் குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா இடியு முனைமலி குலிசமு மிலகிடு கவள தவளவி கடதட கனகட இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக் கிறைவ குருபர சரவண வெகுமுக ககன புனிதையும் வனிதைய ரறுவரும் எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1006
பொதுப்பாடல்கள் பகிர நினைவொரு
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
பகிர நினைவொரு தினையள விலுமிலி கருணை யிலியுன தருணையொ டுதணியல் பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப் பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் பழகி யழகிலி குலமிலி நலமிலி பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன் திகிரி வருமொரு செலவினி லெழுபது செலவு வருமன பவுரிகொ டலமரு திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி செயலி லுணர்விலி சிவபத மடைவது ...... மொருநாளே மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுட மொருபது மிருபது திரள்புய வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...... ந்ருபதூதன் மடுவில் மதகரி முதலென வுதவிய வரத னிருதிறல் மருதொடு பொருதவன் மதலை குதலையின் மறைமொழி யிகழிர ...... ணியனாகம் உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி திகிரி தரமர கதகிரி யெரியுமிழ் உரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு முதய தினகர இமகரன் வலம்வரும் உலக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1007
பொதுப்பாடல்கள் முருகு செறிகுழலவிழ் தர
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழ லவிழ்தர முகமதி முடிய வெயர்வர முதுதிரை யமுதன மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக முலையின் மிசையிடு வடமுடி யறஇடை முறியு மெனஇரு பரிபுர மலறிட முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின் றுருகி யுளமுட லுடலொடு செருகிட வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய் துதவு மடமக ளிர்களொடு மமளியி ...... லநுராக உததி யதனிடை விழுகினு மெழுகினும் உழலு கினுமுன தடியிணை எனதுயி ருதவி யெனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி திடமு மிலையென வுலவிட அலகையின் இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ...... லிசைபாட இகலி முதுகள மினமிசை யொடுதனி யிரண பயிரவி பதயுக மிகுநட மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ...... விருகாலும் வரிசை யதனுடன் வளைதர வொருபது மகுட மிருபது புயமுடன் மடிபட வலியி னொருகணை விடுகர முதலரி ...... நெடுமாயன் மருக குருபர சரவண மதில்வரு மகிப சுரபதி பதிபெற அவுணர்கள் மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1008
பொதுப்பாடல்கள் இலகு வேலெனு
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான
இலகு வேலெனு மிருவினை விழிகளும் எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும் இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண் டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ னினிய மாவினை யிருளெனும் வலைகொடு இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம் கலவி மால்கொடு கலைகளு மறிவொடு கருதொ ணாதென முனிவுற மருள்கொடு கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே கருணை வானவர் தொழுதெழு மயிலுறை குமர கானவர் சிறுமியொ டுருகிய கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய் பலகை யோடொரு பதுசிர மறஎறி பகழி யானர வணைமிசை துயில்தரு பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே பழுதி லாமன முடையவர் மலர்கொடு பரவ மால்விடை மிசையுறை பவரொடு பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே அலகை காளிகள் நடமிட அலைகட லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா அரிய பாவல ருரைசெய அருள்புரி முருக ஆறிரு புயஇய லிசையுடன் அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1009
பொதுப்பாடல்கள் முருகு உலாவிய குழல்
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான
முருகு லாவிய குழலினு நிழலினும் அருவ மாகிய இடையினு நடையினு முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர் முனிவி லாநகை வலையினு நிலையினும் இறுக வாரிடு மலையெனு முலையினு முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி நரகி லேவிழு மவலனை யசடனை வழிப டாதவொர் திருடனை மருடனை நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ லதனில் மூழ்கிய மறவனை யிறவனை நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே வரிய ராவினின் முடிமிசை நடமிடு பரத மாயவ னெழுபுவி யளவிடு வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக வகிரு மாலரி திகிரிய னலையெறி தமர வாரிதி முறையிட நிசிசரன் மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங் கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவல னுரையினி லொழுகிய கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன் கருணை நாரண னரபதி சுரபதி மருக கானக மதனிடை யுறைதரு கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1010
பொதுப்பாடல்கள் அரிசன பரிச
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத கலசமு மதனுய ரம்பொன் மாமுடி யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி அடைபடு குடயுக ளங்க ளாமென ம்ருகமத களபம ணிந்த சீதள அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி இரவொடு பகலொழி வின்றி மால்தரு மலைகட லளறுப டிந்து வாயமு தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி இருவரு மருவிய ணைந்து பாழ்படு மருவினை யறவும றந்து னீள்தரு மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர் துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள தொலைவறு மலகையி னங்க ளானவை நடமிட நிணமலை துன்ற வேயதில் துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் பருகுத லரியது கந்த தீதிது உளதென குறளிகள் தின்று மெதகு பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா பகிரதி சிறுவவி லங்க லூடுறு குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1011
பொதுப்பாடல்கள் உரை தரு பர சமய
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
உரைதரு பரசம யங்க ளோதுவ துருவென அருவென வொன்றி லாததொ ரொளியென வெளியென வும்ப ராமென ...... இம்பராநின் றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும ...... ழிந்திடாதே பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன பரிசன தெரிசன கந்த வோசைகள் பலநல விதமுள துன்ப மாகிம ...... யங்கிடாதே பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள் பலபல விதமுள துன்ப சாகர படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன் அரகர சிவசுத கந்த னேநின தபயம பயமென நின்று வானவர் அலறிட வொழிகினி யஞ்சி டாதென ...... அஞ்சல்கூறி அடல்தரு நிருதர நந்த வாகினி யமபுர மடையஅ டர்ந்து போர்புரி அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம் விரிகடல் துகளெழ வென்ற வேலவ மரகத கலபசி கண்டி வாகன விரகுள சரவண முந்தை நான்மறை ...... யந்தமோதும் விரைதரு மலரிலி ருந்த வேதனும் விடவர வமளிது யின்ற மாயனும் விமலைகொள் சடையர னும்ப ராவிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1012
பொதுப்பாடல்கள் இம கிரி மத்தில்
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
இமகிரி மத்திற் புயங்க வெம்பணி கயிறது சுற்றித் தரங்க வொண்கடல் இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ...... நஞ்சுபோலே இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு சமரமி குத்துப் பரந்த செங்கயல் விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர் குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ...... முந்துபோரில் அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல் இருபது கொற்றப் புயங்கள் சிந்திட அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ...... மொன்றுமாளக் கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர் மருமக மட்டுக் ககொன்றை யந்தொடை கறையற வொப்பற் றதும்பை யம்புலி ...... கங்கைசூடுங் கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள் குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள் கடினத னத்திற் கலந்தி லங்கிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1013
பொதுப்பாடல்கள் முகமும் மினுக்கி
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல் முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக முலையைய சைத்துத் திருந்த முன்தரி கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ...... முன்றிலூடே மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின் மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட மலயநி லத்துப் பிறந்த தென்றலு நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ...... லங்கலாமோ பகலவன் மட்கப் புகுந்து கந்தர ககனமு கட்டைப் பிளந்து மந்தர பருவரை யொக்கச் சுழன்று பின்புப ...... றந்துபோகப் பணமணி பட்சத் துரங்க முந்தனி முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக் குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ...... வென்றவேளே குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில் குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1014
பொதுப்பாடல்கள் படிதனில் உறவெனும்
தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப் பணைமர விறகிடை யழலிடை யுடலது பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக் கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ...... டன்றுபோமுன் கதிதரு முருகனு மெனநினை நினைபவர் கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ...... தந்திடாயோ வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ...... லைந்தவீரா அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே அடியுக முடியினும் வடிவுட னெழுமவு னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1015
பொதுப்பாடல்கள் விடம் என அயில்
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள் பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1016
பொதுப்பாடல்கள் குகையில் நவநாதர்
தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த ...... தனதான
குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ பகைகொள்துரி யோத னன்பி றந்து படைபொருத பார தந்தெ ரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே பழுதறவி யாச னன்றி யம்ப எழுதியவி நாய கன்சி வந்த பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே மிகுதமர சாக ரங்க லங்க எழுசிகர பூத ரங்கு லுங்க விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி விபுதர்குல வேழ மங்கை துங்க பரிமளப டீர கும்ப விம்ப ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1017
பொதுப்பாடல்கள் மழையளக பாரம்
தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த ...... தனதான
மழையளக பார முங்கு லைந்து வரிபரவு நீல முஞ்சி வந்து மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே மகுடதன பார முங்கு லுங்க மணிகலைக ளேற வுந்தி ரைந்து வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக் குழையஇத ழூற லுண்ட ழுந்தி குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக் குழியிலிழி யாவி தங்க ளொங்கு மதனகலை யாக மங்கள் விஞ்சி குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச இரணகள மாக அன்று சென்று எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே எழுகடலு மேரு வுங்க லங்க விழிபடர்வு தோகை கொண்ட துங்க இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா பொழுதளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலி னும்ப ணிந்து புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே புதியமட லேற வுந்து ணிந்த அரியபரி தாப முந்த ணிந்து புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1018
பொதுப்பாடல்கள் கற்பார் மெய்
தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய சொற்பாகைக் காட்டிப் புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் கட்சேலைக் காட்டிக் குழலழ கைத்தோளைக் காட்டித் தரகொடு கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே நிற்பாருக் காட்பட் டுயரிய வித்தாரப் பூக்கட் டிலின்மிசை நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் நெட்டாசைப் பாட்டைத் துரிசற விட்டேறிப் போய்ப்பத் தியருடன் நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை மைச்சாவிக் காக்கைக் கடவுளை விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ...... யிருகாலும் விற்போலக் கோட்டிப் பிறகொரு சற்றேபற் காட்டித் தழலெழு வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் பொற்பாபற் றாக்கைப் புதுமலர் பெட்டேயப் பாற்பட் டுயரிய பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் புட்கானத் தோச்சிக் கிரிமிசை பச்சேனற் காத்துத் திரிதரு பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1019
பொதுப்பாடல்கள் சிற்று ஆயக் கூட்ட
தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
சிற்றாயக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச் சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு பித்தேறிக் கூப்பிட் டவர்பரி செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு பற்றாயப் பூட்டுக் கயிறுகொ டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி உக்காரித் தேக்கற் றுயிர்நழு விக்காயத் தீப்பட் டெரியுட லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே வற்றாமுற் றாப்பச் சிளமுலை யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா மத்தோசைப் போக்கிற் றயிருறி நெய்பாலுக் காய்ச்சிக் கிருபதம் வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே கற்றாவிற் காட்டிக் கரைதுறை நற்றாயிற் காட்டிப் புகழ்கலை கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே கைச்சூலக் கூற்றைக் கணைமத னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1020
பொதுப்பாடல்கள் இருட் குழலை
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
இருட்குழலைக் குலைத்துமுடித் தெழிற்கலையைத் திருத்தியுடுத் திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார இழைக்களபப் பொருப்பணிகச் செடுத்துமறைத் தழைத்துவளைத் திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி பொருட்குமிகத் துதித்திளகிப் புலப்படுசித் திரக்கரணப் புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப் புழுத்தொளையிற் றிளைத்ததனைப் பொறுத்தருளிச் சடக்கெனஅப் புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே உருத்திரரைப் பழித்துலகுக் குகக்கடையப் பெனக்ககனத் துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும் உடுத்தபொலப் பொருப்புவெடித் தொலிப்பமருத் திளைப்பநெருப் பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித் திரைக்கடலுட் படச்சுழலச் செகத்ரையமிப் படிக்கலையச் சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி செருக்கழியத் தெழித்துதிரத் திரைக்கடலிற் சுழித்தலையிற் றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1021
பொதுப்பாடல்கள் வினைத் திரளுக்கு
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
வினைத்திரளுக் கிருப்பெனவித் தகப்படவிற் சலப்பிலமிட் டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய விளைப்பகுதிப் பயப்பளவுற் றமைத்ததெனக் கருத்தமைவிற் சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே எனக்கெதிரொப் பிசைப்பவரெத் தலத்துளரெச் சமர்த்தரெனப் புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன் எழிற்கமலத் திணைக்கழலைத் தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த் திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே சினத்தைமிகுத் தனைத்துலகத் திசைக்கருதிக் கடற்பரவித் திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன் சிரத்துடன்மற் புயத்தகலத் தினிற்குருதிக் கடற்பெருகச் சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா கனத்தமருப் பினக்கரிநற் கலைத்திரள்கற் புடைக்கிளியுட் கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி கனிக்குதலைச் சிறுக்குயிலைக் கதித்தமறக் குலப்பதியிற் களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1022
பொதுப்பாடல்கள் முத்து மணிபணி
தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
முத்து மணிபணிக ளாரத் தாலு மொய்த்த மலைமுலைகொ டேவித் தார முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ...... பொருமாதர் முற்று மதிமுகமும் வானிற் காரு மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ...... கிடைமூழ்கிப் புத்தி கரவடமு லாவிச் சால மெத்த மிகஅறிவி லாரைத் தேறி பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே பொய்க்கு ளொழுகியய ராமற் போது மொய்த்த கமலஇரு தாளைப் பூண பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ...... புகல்வாயே பத்து முடியுமத னோடத் தோளிர் பத்து மிறையவொரு வாளிக் கேசெய் பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும் பற்ற வரியநட மாடத் தாளில் பத்தி மிகவினிய ஞானப் பாடல் பற்று மரபுநிலை யாகப் பாடித் ...... திரிவோனே மெத்த அலைகடலும் வாய்விட் டோட வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர் மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ...... கெறிவோனே வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம் வித்து விளைபுனமும் வேய்முத் தீனும் வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1023
பொதுப்பாடல்கள் விட்ட புழுகுபனி
தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி மொய்த்த பரிமளப டீரச் சேறு மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான் மெத்த விரியுமலர் சேர்கற் பூர மெத்தை மிசைகலவி யாசைப் பாடு விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன் விட்ட பகழிதனை யோடிச் சாடி மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை முக்கி யமனையட மீறிச் சீறு மைக்கண் விழிவலையி லேபட் டோடி முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ செட்டி யெனுமொர்திரு நாமக் கார வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ் சித்ர குலகலப வாசிக் கார தத்து மகரசல கோபக் கார செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா துட்ட நிருதர்பதி சூறைக் கார செப்பு மமரர்பதி காவற் கார துப்பு முகபடக போலத் தானக் ...... களிறூரும் சொர்க்க கனதளவி நோதக் கார முத்தி விதரணவு தாரக் கார சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1024
பொதுப்பாடல்கள் ஏடுமலர் உற்ற
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு மேவதுப ழிக்கும் ...... விழியாலே ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி லேமருவி மெத்த ...... மருளாகி நாடுநகர் மிக்க வீடுதன மக்கள் நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும் நாடிநர கத்தில் ...... விழலாமோ ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி யாடுமொரு பச்சை ...... மயில்வீரா ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில் ஆருமுய நிற்கு ...... முருகோனே வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில் மேவியகு றத்தி ...... மணவாளா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1025
பொதுப்பாடல்கள் சீதமலம் வெப்பு
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி ...... யுடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க தீதுவிளை விக்க ...... வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ...... ளழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து ...... வரவேணும் மாதர்மய லுற்று வாடவடி வுற்று மாமயிலில் நித்தம் ...... வருவோனே மாலுமய னொப்பி லாதபடி பற்றி மாலுழலு மற்ற ...... மறையோர்முன் வேதமொழி வித்தை யோதியறி வித்த நாதவிறல் மிக்க ...... இகல்வேலா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1026
பொதுப்பாடல்கள் தோடு பொரு மை
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம் தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு தோகையர்ம யக்கி ...... லுழலாதே பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே பாவவினை யற்று னாமநினை புத்தி பாரிலருள் கைக்கு ...... வரவேணும் ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி ஆண்மையுட னிற்கு ...... முருகோனே ஆதியர னுக்கு வேதமொழி முற்றி யார்வம்விளை வித்த ...... அறிவோனே வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு வேளையென நிற்கும் ...... விறல்வீரா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1027
பொதுப்பாடல்கள் தோதகம் மிகுத்த
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
தோதகமி குத்த பூதமருள் பக்க சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று சோகைபல குட்ட ...... மவைதீரா வாதமொடு பித்த மூலமுடன் மற்று மாயபிணி சற்று ...... மணுகாதே வாடுமெனை முத்தி நீடியப தத்தில் வாழமிக வைத்து ...... அருள்வாயே காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த கானககு றத்தி ...... மணவாளா காசினிய னைத்து மோடியள விட்ட கால்நெடிய பச்சை ...... மயில்வீரா வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் வேதனைத விர்க்கு ...... முருகோனே மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1028
பொதுப்பாடல்கள் காதி மோதி
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1029
பொதுப்பாடல்கள் கூறும் மார வேள்
தான தான தானான தானத் ...... தனதான
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான் ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1030
பொதுப்பாடல்கள் பேரவா அறா
தான தான தானான தானத் ...... தனதான
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன் ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1031
பொதுப்பாடல்கள் காதில் ஓலை
தான தான தனத்தம் தான தான தனத்தம் தான தான தனத்தம் ...... தனதான
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங் கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர் காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங் காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங் கோவை வாய முதுக்குந் ...... தணியாமல் கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங் கூடு மாறொ ருசற்றுங் ...... கருதாயோ பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசி கசக்ரந் ...... தவறாதே போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண் போத ஆத ரவைக்கும் ...... புயவீரா சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ் சூத தாரு வும்வெற்பும் ...... பொருகோவே சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந் தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1032
பொதுப்பாடல்கள் கார் உலாவு குழற்கும்
தான தான தனத்தம் தான தான தனத்தம் தான தான தனத்தம் ...... தனதான
காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங் காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங் காவி சேர்ப வளத்தின் கோவை வாயி தழுக்குங் காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா நேரி தான இடைக்குஞ் சீத வார நகைக்கும் நேரி லாத தொடைக்குஞ் ...... சதிபாடும் நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன் னேய மோடு துதிக்கும் ...... படிபாராய் பார மேரு வளைக்கும் பாணி யார்ச டையிற்செம் பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம் பால காஎ னநித்தம் பாடு நாவ லர்துக்கம் பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய் சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண் சூல காளி நடிக்கும் ...... படிவேலாற் சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண் தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1033
பொதுப்பாடல்கள் தோடு உற்ற காது
தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த ...... தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள் சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம் ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க ஓசைக்கு நேசித்து ...... உழலாதே ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி யோதற்கு நீசற்று ...... முணர்வாயே வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின் மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க வேதத்தி லேநிற்கு ...... மயனாருந் தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1034
பொதுப்பாடல்கள் தோலத்தியால்
தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த ...... தனதான
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு வேதித்த சூலத்த ...... னணுகாமுன் கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய் ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட தோதக்கண் மானுக்கு ...... மணவாளா தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1035
பொதுப்பாடல்கள் ஊனுந் தசையுடல்
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி யூருங் கருவழி ...... யொருகோடி ஓதும் பலகலை கீதஞ் சகலமு மோரும் படியுன ...... தருள்பாடி நானுன் திருவடி பேணும் படியிரு போதுங் கருணையில் ...... மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும் படியருள் ...... புரிவாயே கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு காலங் களுநடை ...... யுடையோனுங் காருங் கடல்வரை நீருந் தருகயி லாயன் கழல்தொழு ...... மிமையோரும் வானிந் திரனெடு மாலும் பிரமனும் வாழும் படிவிடும் ...... வடிவேலா மாயம் பலபுரி சூரன் பொடிபட வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1036
பொதுப்பாடல்கள் தீயும் பவனமும்
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான
தீயும் பவனமு நீருந் தரணியும் வானுஞ் செறிதரு ...... பசுபாசத் தேகந் தனைநிலை யேயொன் றிருவினை தீருந் திறல்வினை ...... யறியாதே ஓயும் படியறு நூறும் பதினுறழ் நூறும் பதினிரு ...... பதுநூறும் ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல யோகம் புரிவது ...... கிடையாதோ வேயுங் கணியும்வி ளாவும் படுபுன மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா மீனம் படுகட லேழுந் தழல்பட வேதங் கதறிய ...... வொருநாலு வாயுங் குலகிரி பாலுந் தளைபட மாகந் தரமதில் ...... மறைசூரன் மார்புந் துணையுறு தோளுந் துணிபட வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1037
பொதுப்பாடல்கள் வாதந் தலைவலி
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான
வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை ...... யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி ...... மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி ...... லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை ...... பெறுவேனோ கீதம் புகழிசை நாதங் கனிவொடு வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் கேடின் பெருவலி மாளும் படியவ ரோடுங் கெழுமுத ...... லுடையோனே வேதந் தொழுதிரு மாலும் பிரமனு மேவும் பதமுடை ...... விறல்வீரா மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1038
பொதுப்பாடல்கள் ஊனே தானாய்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
ஊனே தானா யோயா நோயா லூசா டூசற் ...... குடில்பேணா ஓதா மோதா வாதா காதே லோகா சாரத் ...... துளம்வேறாய் நானே நீயாய் நீயே நானாய் நானா வேதப் ...... பொருளாலும் நாடா வீடா யீடே றாதே நாயேன் மாயக் ...... கடவேனோ வானே காலே தீயே நீரே பாரே பாருக் ...... குரியோனே மாயா மானே கோனே மானார் வாழ்வே கோழிக் ...... கொடியோனே தேனே தேனீள் கானா றாய்வீழ் தேசார் சாரற் ...... கிரியோனே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1039
பொதுப்பாடல்கள் சாவா மூவா வேளே
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
சாவா மூவா வேளே போல்வாய் தாளா வேனுக் ...... கருள்கூருந் தாதா வேஞா தாவே கோவே சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய் ஏவால் மாலே போல்வாய் காரே போல்வா யீதற் ...... கெனையாள்கொண் டேயா பாடா வாழ்வோர் பாலே யான்வீ ணேகத் ...... திடலாமோ பாவா நாவாய் வாணீ சார்வார் பாரா வாரத் ...... துரகேசப் பாய்மீ தேசாய் வார்கா ணாதே பாதா ளாழத் ...... துறுபாதச் சேவா மாவூர் கோமான் வாழ்வே சீமா னேசெச் ...... சையமார்பா சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1040
பொதுப்பாடல்கள் நாராலே தோல்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
நாரா லேதோல் நீரா லேயாம் நானா வாசற் ...... குடிலூடே ஞாதா வாயே வாழ்கா லேகாய் நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன் தாரா ரார்தோ ளீரா றானே சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே தாழா தேநா யேனா வாலே தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய் பாரே ழோர்தா ளாலே யாள்வோர் பாவார்வேதத் ...... தயனாரும் பாழூ டேவா னூடே பாரூ டேயூர் பாதத் ...... தினைநாடாச் சீரார் மாதோ டேவாழ் வார்நீள் சேவூர் வார்பொற் ...... சடையீசர் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1041
பொதுப்பாடல்கள் மாதா வோடே
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
மாதா வோடே மாமா னானோர் மாதோ டேமைத் ...... துனமாரும் மாறா னார்போ னீள்தீ யூடே மாயா மோகக் ...... குடில்போடாப் போதா நீரூ டேபோய் மூழ்கா வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன் போதா காரா பாராய் சீரார் போதார் பாதத் ...... தருள்தாராய் வேதா வோடே மாலா னார்மேல் வானோர் மேனிப் ...... பயமீள வேதா னோர்மே லாகா தேயோர் வேலால் வேதித் ...... திடும்வீரா தீதார் தீயார் தீயு டேமூள் சேரா சேதித் ...... திடுவோர்தஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1042
பொதுப்பாடல்கள் வாராய் பேதாய்
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.
வாராய் பேதாய் கேளாய் நீதாய் மானார் மோகத் ...... துடனாசை மாசூ டாடா தூடே பாராய் மாறா ஞானச் ...... சுடர்தானின் றாரா யாதே யாராய் பேறாம் ஆனா வேதப் ...... பொருள்காணென் றாள்வாய் நீதா னாதா பார்மீ தார்வே றாள்கைக் ...... குரியார்தாம் தோரா வானோர் சேனா தாரா சூரா சாரற் ...... புனமாது தோள்தோய் தோளீ ராறா மாசூர் தூளாய் வீழச் ...... சிறுதாரைச் சீரா வாலே வாளா லேவே லாலே சேதித் ...... திடும்வீரா சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1043
பொதுப்பாடல்கள் அகல நீளம்
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய அரிய மோன மேகோயி ...... லெனமேவி அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச் சகல வேத னாதீத சகல வாச காதீத சகல மாக்ரி யாதீத ...... சிவரூப சகல சாத காதீத சகல வாச னாதீத தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார ...... சுரர்கால விபுத மாலி காநீல முகப டாக மாயூர விமல வ்யாப காசீல ...... கவிநோத ககன கூட பாடீர தவள சோபி தாளான கவன பூத ராரூட ...... சதகோடி களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1044
பொதுப்பாடல்கள் அடை படாது
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல் அவனி மீதி லோயாது ...... தடுமாறும் உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக உதறி வாச காதீத ...... அடியூடே உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன் உபய பாத ராசீக ...... மருள்வாயே வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது மகர வாரி யோரேழு ...... மமுதாக மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக் கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1045
பொதுப்பாடல்கள் அமல வாயு
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல அமுத பான மேமூல ...... அனல்மூள அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது அரிச தான சோபான ...... மதனாலே எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ மெளிது சால மேலாக ...... வுரையாடும் எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீத ...... மருள்வாயே விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு விபுத மேக மேபோல ...... வுலகேழும் விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல வெகுவி தாமு காகாய ...... பதமோடிக் கமல யோனி வீடான ககன கோள மீதோடு கலப நீல மாயூர ...... இளையோனே கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில் கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1046
பொதுப்பாடல்கள் அயிலின் வாளி
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச ரமுத ளாவு மாவேச ...... மதுபோல அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி னளவு மோடி நீடோதி ...... நிழலாறித் துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான பவதி யாம ளாவாமை ...... அபிராமி பரிபு ரார பாதார சரணி சாம ளாகார பரம யோகி னீமோகி ...... மகமாயி கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி கனத னாச லாபார ...... அமுதூறல் கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1047
பொதுப்பாடல்கள் இரதமான வாய் ஊறல்
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ் சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான சமுக மோத ராபூத ...... முதலான சகள மோச டாதார முகுள மோநி ராதார தரணி யோநி ராகார ...... வடிவேயோ பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மாதேசி ...... மிகுஞான பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத பதும சேக ராவேலை ...... மறவாத கரத லாவி சாகாச கலக லாத ராபோத கமுக மூஷி காரூட ...... மததாரைக் கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1048
பொதுப்பாடல்கள் குருதி தோலினால்
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி குலைய ஏம னாலேவி ...... விடுகாலன் கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன் பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய் மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி மடுவி லானை தான்மூல ...... மெனவோடி வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசன மோம றாகேசன் ...... மருகோனே கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங் கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1049
பொதுப்பாடல்கள் சுருதி ஊடு கேளாது
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது துரிய மீது சாராது ...... எவராலுந் தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத சுகம கோத தீயாகி ...... யொழியாது பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது ...... சலியாது பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடேது ...... புகல்வாயே நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள நிபிட தாரு காபூமி ...... குடியேற நிகர பார நீகார சிகர மீது வேலேவு நிருப வேத ஆசாரி ...... யனுமாலும் கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி ககன சாரி பூசாரி ...... வெகுசாரி கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1050
பொதுப்பாடல்கள் தொட அடாது
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத் துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக துரிய மாகி வேறாகி ...... யறிவாகி நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன் அரியும் வாழ வானாளு ...... மதிரேகா கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர் கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங் கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1051
பொதுப்பாடல்கள் நிலவில் மாரன்
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம் நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு நியதி யாக வாயார ...... வயிறார இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி யிளகி யேறு பாடீர ...... தனபாரம் எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு கினுமு னீப சீர்பாத ...... மறவேனே குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர் குழைய மாலி காநாக ...... மொடுதாவிக் குடில கோம ளாகார சடில மோலி மீதேறு குமர வேட மாதோடு ...... பிரியாது கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர் கடக வாரி தூளாக ...... அமராடுங் கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1052
பொதுப்பாடல்கள் மன கபாட
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
மனக பாட பாடீர தனத ராத ராரூப மதன ராச ராசீப ...... சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே அநக வாம னாகார முநிவ ராக மால்தேட அரிய தாதை தானேவ ...... மதுரேசன் அரிய சார தாபீட மதனி லேறி யீடேற அகில நாலு மாராயு ...... மிளையோனே கனக பாவ னாகார பவள கோம ளாகார கலப சாம ளாகார ...... மயிலேறுங் கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1053
பொதுப்பாடல்கள் அதல சேடனாராட
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1054
பொதுப்பாடல்கள் குருதி மூளை
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற் குமிழி போல நேராகி அழியு மாயை யாதார குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம் பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில் படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப் பரவு நாட காசார கிரியை யாளர் காணாத பரம ஞான வீடேது ...... புகல்வாயே எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமய மாது மாசூலி ...... தருபாலா எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர் இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக மதிர நாக மோரேழு ...... பொடியாக அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1055
பொதுப்பாடல்கள் சரியும் அவல
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன தனன தனன தாத்தன ...... தனதான
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ் சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு சரண கமல மேத்திய ...... வழிபாடுற் றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான் விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும் விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர் விசைய னொருவ னாற்பட ...... வொருதூது திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1056
பொதுப்பாடல்கள் மகளு மனைவி தாய்
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன தனன தனன தாத்தன ...... தனதான
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில் மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன் உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு முளது மிலது மாச்சென ...... வுறைவோரும் உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய் புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம் புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர் புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன் விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1057
பொதுப்பாடல்கள் குடரும் நீர் கொழு
தனன தாத்தன தனன தாத்தன தனன தாத்தன ...... தந்ததான
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு குறைவி லாப்பல ...... என்பினாலுங் கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும் வடிவி லாப்புல மதனை நாட்டிடு மறலி யாட்பொர ...... வந்திடாமுன் மதியு மூத்துன தடிக ளேத்திட மறுவி லாப்பொருள் ...... தந்திடாதோ கடிய காட்டக முறையும் வேட்டுவர் கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக் கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர் களவி னாற்புணர் ...... கந்தவேளே முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ முடிய வேற்கொடு ...... வென்றவீரா முடிய லாத்திரு வடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1058
பொதுப்பாடல்கள் பொதுவதாய்த் தனி
தனன தாத்தன தனன தாத்தன தனன தாத்தன ...... தந்ததான
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல் இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப் பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில் கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக் கரண மாய்த்தெனை மரண மாற்றிய கருணை வார்த்தையி ...... ருந்தவாறென் உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ உலகு போற்றிட ...... வெங்கலாப ஒருப ராக்ரம துரக மோட்டிய வுரவ கோக்கிரி ...... நண்பவானோர் முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே முளரி பாற்கடல் சயில மேற்பயில் முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1059
பொதுப்பாடல்கள் கவடு கோத்தெழும்
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான
கவடு கோத்தெழு முவரி மாத்திறல் காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர் தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே சுவடு பார்த்தட வருக ராத்தலை தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் குவடு கூப்பிட வுவண மேற்கன கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1060
பொதுப்பாடல்கள் பருதியாய்ப் பனி
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர் பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம் பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச் சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல் சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ திருத ராட்டிர னுதவு நூற்றுவர் சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத் திலக பார்த்தனு முலகு காத்தருள் சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே குருதி வேற்கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1061
பொதுப்பாடல்கள் முதலி யாக்கை
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான
முதலி யாக்கையு மிளமை நீத்தற மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம் முறையி டாப்படு பறைக ளார்த்தெழ மூடா வீடூ டேகேள் கோகோ ...... எனநோவ மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய மறலி யூர்ப்புகு மரண யாத்திரை வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும் புதல றாப்புன எயினர் கூக்குரல் போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப் பொருது தாக்கிய வயப ராக்ரம பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங் குதலை வாய்க்குரு பரச டாக்ஷர கோடா ரூபா ரூபா பாரீ ...... சதவேள்விக் குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1062
பொதுப்பாடல்கள் வருக வீட்டு எனும்
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் மனது போற்கரு கினகு வாற்குழல் வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி அவுணர் கூப்பிட வுததி தீப்பட ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1063
பொதுப்பாடல்கள் மறலி போற்சில
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான
மறலி போற்சில நயன வேற்கொடு மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும் வகையு மார்க்கமு மறமு மாய்த்திட வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர விறலு மேற்பொலி அறிவு மாக்கமும் வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே விழுவி னாற்களை யெழும தாற்பெரு வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய் மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும் வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே குறவர் காற்புன அரிவை தோட்கன கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர் குலைய மாக்கட லதனி லோட்டிய கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1064
பொதுப்பாடல்கள் குருதி ஒழுகி
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
குருதி யொழுகி யழுகு மவல குடிலை யினிது ...... புகலாலே குலவு மினிய கலவி மகளிர் கொடிய கடிய ...... விழியாலே கருது மெனது விரக முழுது கலக மறலி ...... அழியாமுன் கனக மயிலி னழகு பொழிய கருணை மருவி ...... வரவேணும் பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் ...... பணிவேலா பணில வுததி யதனி லசுரர் பதியை முடுக ...... வரும்வீரா இரதி பதியை யெரிசெய் தருளு மிறைவர் குமர ...... முருகோனே இலகு கமல முகமு மழகு மெழுத வரிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1065
பொதுப்பாடல்கள் துயரம் அறு நின்
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
துயர மறுநின் வறுமை தொலையு மொழியு மமிர்த ...... சுரபானம் சுரபி குளிகை யெளிது பெறுக துவளு மெமது ...... பசிதீரத் தயிரு மமுது மமையு மிடுக சவடி கடக ...... நெளிகாறை தருக தகடொ டுருக எனுமி விரகு தவிர்வ ...... தொருநாளே உயரு நிகரில் சிகரி மிடறு முடலு மவுணர் ...... நெடுமார்பும் உருவ மகர முகர திமிர வுததி யுதர ...... மதுபீற அயரு மமரர் சரண நிகள முறிய எறியு ...... மயில்வீரா அறிவு முரமு மறமு நிறமு மழகு முடைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1066
பொதுப்பாடல்கள் பணிகள் பணமும்
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
பணிகள் பணமு மணிகொள் துகில்கள் பழைய அடிமை ...... யொடுமாதும் பகரி லொருவர் வருக அரிய பயண மதனி ...... லுயிர்போகக் குணமு மனமு முடைய கிளைஞர் குறுகி விறகி ...... லுடல்போடாக் கொடுமை யிடுமு னடிமை யடிகள் குளிர மொழிவ ...... தருள்வாயே இணையி லருணை பழநி கிழவ இளைய இறைவ ...... முருகோனே எயினர் வயினின் முயலு மயிலை யிருகை தொழுது ...... புணர்மார்பா அணியொ டமரர் பணிய அசுரர் அடைய மடிய ...... விடும்வேலா அறிவு முரமு மறமு நிறமு மழகு முடைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1067
பொதுப்பாடல்கள் மைந்தர் இனிய
தந்த தனன தந்த தனன தந்த தனன ...... தனதான
மைந்த ரினிய தந்தை மனைவி மண்டி யலறி ...... மதிமாய வஞ்ச விழிகள் விஞ்சு மறலி வன்கை யதனி ...... லுறுபாசந் தந்து வளைய புந்தி யறிவு தங்கை குலைய ...... உயிர்போமுன் தம்ப முனது செம்பொ னடிகள் தந்து கருணை ...... புரிவாயே மந்தி குதிகொ ளந்தண் வரையில் மங்கை மருவு ...... மணவாளா மண்டு மசுரர் தண்ட முடைய அண்டர் பரவ ...... மலைவோனே இந்து நுதலு மந்த முகமு மென்று மினிய ...... மடவார்தம் இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1068
பொதுப்பாடல்கள் ஒழு கூனிரத்தம்
தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த ...... தனதான
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி உயர்கால் கரத்தி ...... னுருவாகி ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து உழல்மாய மிக்கு ...... வருகாயம் பழசா யிரைப்பொ டிளையா விருத்த பரிதாப முற்று ...... மடியாமுன் பரிவா லுளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே எழுவா னகத்தி லிருநாலு திக்கில் இமையோர் தமக்கு ...... மரசாகி எதிரேறு மத்த மதவார ணத்தில் இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ் செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து செழுதீ விளைத்து ...... மதிள்கோலித் திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1069
பொதுப்பாடல்கள் கருவாய் வயிற்றில்
தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த ...... தனதான
கருவாய் வயிற்றி லுருவா யுதித்து முருகாய் மனக்க ...... வலையோஆட கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த தலைபோய் வெளுத்து ...... மரியாதே இருபோது மற்றை யொருபோது மிட்ட கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி இறவாத சுத்த மறையோர் துதிக்கு மியல்போத கத்தை ...... மொழிவாயே அருமாத பத்தஅமரா பதிக்கு வழிமூடி விட்ட ...... தனைமீள அயிரா வதத்து விழியா யிரத்த னுடனே பிடித்து ...... முடியாதே திருவான கற்ப தருநா டழித்து விபுதேசர் சுற்ற ...... மவைகோலித் திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1070
பொதுப்பாடல்கள் புரக்க வந்த
தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்த தந்தனம் ...... தனதான
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென் புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப் புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண் புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன் திளைக்கு நின்திறம் ...... புகலாதிந் த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந் தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங் குவட்டி லங்கையுந் ...... துகளாகக் கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங் கொதித்து மண்டுவெம் ...... பகையோடத் துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந் துரத்த னும்பிறந் ...... திறவாத சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1071
பொதுப்பாடல்கள் பெருக்க நெஞ்சு
தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்த தந்தனம் ...... தனதான
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன் ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும் பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன் றமைத்த பெண்தனந் ...... தனையாரத் திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின் திறத்தை யன்புடன் ...... தெளியாதே சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென் திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன் தரித்த குன்றநின் ...... றடியோடுந் தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந் தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ் சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன் துணைச்செய் கின்றநின் ...... பதமேவும் சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1072
பொதுப்பாடல்கள் இருந்த வீடும்
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1073
பொதுப்பாடல்கள் கலந்த மாதும்
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங் கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச் சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1074
பொதுப்பாடல்கள் இசைந்த ஏறும்
தனந்த தானந் தனதன தானன ...... தனதான
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1075
மருதமலை திரிபுரம் அதனை
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான
திரிபுர மதனை யொருநொடி யதனி லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே சினமுடை யசுரர் மனமது வெருவ மயிலது முடுகி ...... விடுவோனே பருவரை யதனை யுருவிட எறியு மறுமுக முடைய ...... வடிவேலா பசலையொ டணையு மிளமுலை மகளை மதன்விடு பகழி ...... தொடலாமோ கரிதிரு முகமு மிடமுடை வயிறு முடையவர் பிறகு ...... வருவோனே கனதன முடைய குறவர்த மகளை கருணையொ டணையு ...... மணிமார்பா அரவணை துயிலு மரிதிரு மருக அவனியு முழுது ...... முடையோனே அடியவர் வினையு மமரர்கள் துயரு மறஅரு ளுதவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1076
பொதுப்பாடல்கள் புழுககில் களபம்
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான
புழுககில் களப மொளிவிடு தரள மணிபல செறிய ...... வடமேருப் பொருமிரு கலச முலையினை யரிவை புனையிடு பொதுவின் ...... மடமாதர் அழகிய குவளை விழியினு மமுத மொழியினு மவச ...... வநுராக அமளியின் மிசையி லவர்வச முருகி அழியுநி னடிமை ...... தனையாள்வாய் குழலிசை யதுகொ டறவெருள் சுரபி குறுநிரை யருளி ...... யலைமோதுங் குரைசெறி யுததி வரைதனில் விறுசு குமுகுமு குமென ...... வுலகோடு முழுமதி சுழல வரைநெறு நெறென முடுகிய முகிலின் ...... மருகோனே மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு முளரியின் முதல்வர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1077
பொதுப்பாடல்கள் முழு மதி அனைய
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தந்ததான
முழுமதி யனைய முகமிரு குழையில் முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா முதலறி வதனை வளைபவர் கலவி முழுகிய வினையை ...... மொண்டுநாயேன் வழிவழி யடிமை யெனுமறி வகல மனமுறு துயர்கள் ...... வெந்துவாட மதிதரு மதிக கதிபெறு மடிகள் மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய் எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் ...... தங்குமார்பா எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய் அழகிய குமர எழுதல மகிழ அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே அமருல கிறைவ உமைதரு புதல்வ அரியர பிரமர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1078
பொதுப்பாடல்கள் கொடியன பிணி
தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் ...... தனதான
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக் கூன்போந் ...... தசடாகுங் குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக் கோண்பூண் ...... டமையாதே பொடிவன பரசம யத்துத் தப்பிப் போந்தேன் ...... தலைமேலே பொருளது பெறஅடி நட்புச் சற்றுப் பூண்டாண் ...... டருள்வாயே துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச் சூழ்ந்தாங் ...... குடனாடத் தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோந்தாந் ...... தரிதாளம் படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப் பாழ்ங்கான் ...... தனிலாடும் பழயவர் குமரகு றத்தத் தைக்குப் பாங்காம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1079
பொதுப்பாடல்கள் சுடரொளி கதிரவன்
தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் ...... தனதான
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச் சூழ்ந்தோங் ...... கிடுபாரிற் றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச் சோர்ந்தோய்ந் ...... திடநாறுங் கடுகென எடுமெனு டற்பற் றற்றுக் கான்போந் ...... துறவோருங் கனலிடை விதியிடு தத்துக் கத்தைக் காய்ந்தாண் ...... டருளாயோ தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத் தாந்தோய்ந் ...... திருபாலும் தமருக வொலிசவு தத்திற் றத்தத் தாழ்ந்தூர்ந் ...... திடநாகம் படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப் பாய்ந்தாய்ந் ...... துயர்கானம் பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப் பாங்காம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1080
பொதுப்பாடல்கள் குடம் என ஒத்த
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த தனதன தத்த தந்த ...... தனதான
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல் குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த மதசல முற்ற தந்தி ...... யிளையோனே இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய் தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1081
பொதுப்பாடல்கள் மடவியர் எச்சில்
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த தனதன தத்த தந்த ...... தனதான
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய் படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1082
பொதுப்பாடல்கள் கரு மயல் ஏறி
தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...... தனதான
கருமய லேறிப் பெருகிய காமக் கடலினில் மூழ்கித் ...... துயராலே கயல்விழி யாரைப் பொருளென நாடிக் கழியும நாளிற் ...... கடைநாளே எருமையி லேறித் தருமனும் வாவுற் றிறுகிய பாசக் ...... கயிறாலே எனைவளை யாமற் றுணைநினை வேனுக் கியலிசை பாடத் ...... தரவேணும் திருமயில் சேர்பொற் புயனென வாழத் தெரியல னோடப் ...... பொரும்வீரா செகதல மீதிற் பகர்தமிழ் பாடற் செழுமறை சேர்பொற் ...... புயநாதா பொருமயி லேறிக் கிரிபொடி யாகப் புவியது சூழத் ...... திரிவோனே புனமக ளாரைக் கனதன மார்பிற் புணரும்வி நோதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1083
பொதுப்பாடல்கள் குடல் இடை தீது
தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...... தனதான
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக் குலவிய தோலத் ...... தியினூடே குருதியி லேசுக் கிலமது கூடிக் குவலயம் வானப் ...... பொருகாலாய் உடலெழு மாயப் பிறவியி லாவித் துறுபிணி நோயுற் ...... றுழலாதே உரையடி யேனுக் கொளிமிகு நீபத் துனதிரு தாளைத் ...... தரவேணும் கடலிடை சூரப் படைபொடி யாகக் கருதல ரோடப் ...... பொரும்வேலா கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக் கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா சடையினர் நாடப் படர்மலை யோடித் தனிவிளை யாடித் ...... திரிவோனே தனிமட மானைப் பரிவுட னாரத் தழுவும்வி நோதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1084
பொதுப்பாடல்கள் கருதியே மெத்த
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த கலகவா ளொத்த ...... விழிமானார் கடினபோ கத்த புளகவா ருற்ற களபமார் செப்பு ...... முலைமீதே உருகியான் மெத்த அவசமே வுற்ற வுரைகளே செப்பி ...... யழியாதுன் உபயபா தத்தி னருளையே செப்பு முதயஞா னத்தை ...... அருள்வாயே பருவரா லுற்று மடுவின்மீ துற்ற பகடுவாய் விட்ட ...... மொழியாலே பரிவினோ டுற்ற திகிரியே விட்ட பழயமா யற்கு ...... மருகோனே முருகுலா வுற்ற குழலிவே டிச்சி முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே முருகனே பத்த ரருகனே வெற்பு முரியவேல் தொட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1085
பொதுப்பாடல்கள் கொலையிலே மெத்த
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளையேர் மைக்கண் ...... விழிமானார் குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள் ...... தனிலேமா முலையிலே யற்ப இடையிலே பத்ம முகநிலா வட்ட ...... மதின்மீதே முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் ...... விடலாமோ கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த ...... இளையோனே கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை ...... மயிலோனே உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு ...... மருகோனே ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர வுருவனே மிக்க ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1086
பொதுப்பாடல்கள் அகிலநறுஞ் சேறு
தனதனனந் தான தனதனனந் தான தனதனனந் தான ...... தனதான
அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு மசலமிரண் டாலு ...... மிடைபோமென் றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர தபயமிடுங் கீத ...... மமையாதே நகமிசைசென் றாடி வனசரர்சந் தான நவையறநின் றேனல் ...... விளைவாள்தன் லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர நமசரணென் றோத ...... அருள்வாயே பகலிரவுண் டான இருவரும்வண் டாடு பரிமளபங் கேரு ...... கனுமாலும் படிகநெடும் பார கடதடகெம் பீர பணைமுகசெம் பால ...... மணிமாலை முகபடசிந் தூர கரியில்வருந் தேவு முடியஅரன் தேவி ...... யுடனாட முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி முடிவினுமஞ் சாத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1087
பொதுப்பாடல்கள் கலக மதன் காதும்
தனதனனந் தானம் தனதனனந் தானம் தனதனனந் தானம் ...... தனதான
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங் களிமதுவண் டூதும் ...... பயிலாலும் கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும் கலைமதியங் காயும் ...... வெயிலாலும் இலகியசங் காளும் இனியவளன் பீனும் எனதருமின் தானின் ...... றிளையாதே இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங் கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே உலகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின் றுனதபயங் காவென் ...... றுனைநாட உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும் உருவியுடன் போதும் ...... ஒளிவேலா அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும் அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன் அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென் றழகுடனன் றோதும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1088
பொதுப்பாடல்கள் குருதி சலம் தோலும்
தனதனனந் தானந் தனதனனந் தானந் தனதனனந் தானந் ...... தனதான
குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங் குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக் கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங் குணவுயிர்கொண் டேகும் ...... படிகாலன் கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங் கதறமறந் தேனென் ...... றகலாமுன் கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன் கருணைமகிழ்ந் தோதுங் ...... கலைதாராய் நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன் நினைவுமழிந் தோடும் ...... படிவேலால் நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின் நிலைதொழநின் றேமுன் ...... பொருவீரா பருதியுடன் சோமன் படியையிடந் தானும் பரவவிடந் தானுண் ...... டெழுபாரும் பயமறநின் றாடும் பரமருளங் கூரும் பழமறையன் றோதும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1089
பொதுப்பாடல்கள் இருவினைகள் ஈட்டும்
தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த ...... தனதான
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில் எரியஎரி மூட்டி ...... யிடுமாறு கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர் கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு பழையகுற வாட்டி ...... மணவாளா பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு பகருநுதல் நாட்ட ...... குமரேசா அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட ...... முருகோனே அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1090
பொதுப்பாடல்கள் உறவின் முறையோர்
தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த ...... தனதான
உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில் உயர்கனலை மூட்டி ...... விடஆவி மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள் மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு வரையில்மற வோர்க்கு ...... மகவாகப் பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த பிடியினடி போற்று ...... மணவாளா அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1091
பொதுப்பாடல்கள் அளகநிரை குலைய
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென அமுதமொழி பதறியெழ ...... அணியாரம் அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம் உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு முறுகபட மதனில்மதி ...... யழியாதே உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு னுபயநறு மலரடியை ...... அருள்வாயே வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு மருதினொடு பொருதருளு ...... மபிராமன் வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன் மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர் தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ சகலகலை முழுதும்வல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1092
பொதுப்பாடல்கள் அனகனென அதிகனென
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான
அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென அதுலனென ...... அநபாயன் அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ...... ளவுமீயா மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென இருசதுர திசையிலுர ...... கமும்வீழ இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1093
பொதுப்பாடல்கள் குடருமல சலமுமிடை
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1094
பொதுப்பாடல்கள் குதறும் முனை அறிவு
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு குமுதமிடு பரசமய ...... மொருகோடி குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது கொடியஇரு வினையெனும ...... ளறுபோக உதறிவித றியகரண மரணமற விரணமற வுருகியுரை பருகியநு ...... தினஞான உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1095
பொதுப்பாடல்கள் வதை பழக மறலி
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென வயிரமர கதமகர ...... மளவாக வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன திருநயன கருணைசிறி ...... தருள்வாயே பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர் கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1096
பொதுப்பாடல்கள் விடமளவி யரிபரவு
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற விதறிவளை கலகலென ...... அநுராகம் விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில் வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி யிதழ்பருகி யுருகியரி ...... வையரோடே அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர வுரகர்பில முடியவொரு ...... பதமோடி உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர வுயரவகி லபுவனம ...... திரவீசிக் கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ் கருதரிய விதமொடழ ...... குடனாடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1097
பொதுப்பாடல்கள் எழுபிறவி நீர்நில
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1098
பொதுப்பாடல்கள் நடை உடையிலே
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான
நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள் நயனமத னால்மருட்டி ...... வருவாரை நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி மதனனுடை யாகமத்தி ...... னடைவாக மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும் வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க இருகையுற வேபிடித்து ...... உரலோடே இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1099
பொதுப்பாடல்கள் மடல் அவிழ் சரோருக
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை மனமகிழ வேயளித்து ...... மறவாதே உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம சரணயுக மாயனுக்கு ...... மருகோனே சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும் அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1100
பொதுப்பாடல்கள் அங்கதன் கண்டகன்
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ் சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந் தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின் தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங் கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங் கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும் பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும் பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1101
பொதுப்பாடல்கள் தந்தமும் துன்ப
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன் தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந் தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ் சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம் நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந் தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன் தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன் பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர் அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந் தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென் றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1102
பொதுப்பாடல்கள் உம்பரார் அமுது
தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தந்தனா தனதனந் ...... தனதான
உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் டுண்டுமே கலைகழன் ...... றயலாக உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன் பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ் சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத் திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ் சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன் கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங் கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக் கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங் கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன் றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந் தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1103
பொதுப்பாடல்கள் வண்டுதான் மிக
தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தந்தனா தனதனந் ...... தனதான
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந் தந்தமா மதனலம் ...... விதமாக விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண் டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம் விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந் துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம் பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந் தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந் தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன் அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண் டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1104
பொதுப்பாடல்கள் காதல் மோகம் தரும்
தானனா தந்தனந் தானனா தந்தனந் தானனா தந்தனந் ...... தனதான
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங் காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண் காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங் காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும் ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந் தோநமோ கந்தஎன் ...... றுரையாதே ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின் றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந் தாரம்வா சந்திசந் ...... தனநீடு சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந் தானமா தெங்கள்பைம் ...... புனமேவும் தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ் சேகரா தண்டையங் ...... கழல்பேணித் தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந் தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1105
பொதுப்பாடல்கள் கோல காலத்தை
தானனா தத்தனத் தானனா தத்தனத் தானனா தத்தனத் ...... தனதான
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக் கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற் கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக் கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான் சீலகா லப்புயற் பாரிசா தத்தருத் த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ் சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக் கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத் தாரவா ரக்கடற் ...... கிடைசாயும் ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட் டாதரூ பத்தினிற் ...... சுடராய காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக் காகவே ளைப்புகக் ...... கழுநீராற் காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக் காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1106
பொதுப்பாடல்கள் ஞாலமோடு ஒப்ப
தானனா தத்தனத் தானனா தத்தனத் தானனா தத்தனத் ...... தனதான
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத் தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட் டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட் டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற் றோதநீ திப்பொருட் ...... டரவேணும் கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத் தானும்வே தக்குலத் ...... தயனாருங் கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப் போதுறா நிற்பஅக் ...... கொடிதான காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக் கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக் காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக் காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1107
பொதுப்பாடல்கள் கரவுசேர் மகளிர்
தனதனா தனதனந் தனதனா தனதனந் தனதனா தனதனந் ...... தனதான
கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங் களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங் கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங் கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும் அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின் பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும் அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ் சரமனோ லயசுகந் ...... தருவாயே பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம் படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல் பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம் பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங் குடிலவே ணியிலணிந் ...... தவராகங் குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் குமரனே யமரர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1108
பொதுப்பாடல்கள் வடிவவேல் தனை
தனதனா தனதனந் தனதனா தனதனந் தனதனா தனதனந் ...... தனதான
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந் தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம் வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந் தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர் துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந் தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந் துனதுதாள் தொழமனந் ...... தருவாயே படியெலா முடியநின் றருளுமா லுதவுபங் கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப் பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண் டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக் கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங் குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் குமரனே யமரர்தம் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1109
பொதுப்பாடல்கள் கட்டம் உறு நோய்
தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தானான ...... தனதான
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய கட்டுவிடு மோர்கால ...... மளவாவே கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன் இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன் எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத இட்டமினி தோடார ...... நினைவாயே துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர் தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத் தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ மத்தமயில் மீதேறி ...... வருநாளை வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1110
பொதுப்பாடல்கள் பக்கம் உற நேரான
தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தானான ...... தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர் பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற் புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன் பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர் எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ மத்தமயில் மீதேறி ...... வருவோனே வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1111
பொதுப்பாடல்கள் நீரு நிலம் அண்டாத
தானதன தந்தான தானதன தந்தான தானதன தந்தான ...... தனதான
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி நீளமக லஞ்சோதி ...... வடிவான நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச் சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத சோதிமரு வும்பூமி ...... யவையூடே தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன் வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1112
பொதுப்பாடல்கள் சுட்டதுபோல் ஆசை
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார துக்கமிலா ஞான ...... சுகமேவிச் சொற்கரணா தீத நிற்குணமூ டாடு சுத்தநிரா தார ...... வெளிகாண மொட்டலர்வா ரீச சக்ரசடா தார முட்டவுமீ தேறி ...... மதிமீதாய் முப்பதுமா றாறு முப்பதும்வே றான முத்திரையா மோன ...... மடைவேனோ எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ னப்பிரமா வோட ...... வரைசாய எற்றியஏ ழாழி வற்றிடமா றாய எத்தனையோ கோடி ...... யசுரேசர் பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு பத்திருதோள் வீர ...... தினைகாவல் பத்தினிதோள் தோயு முத்தமம றாது பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1113
பொதுப்பாடல்கள் மைச்சுனமார் மாமன்
தத்ததனா தான தத்ததனா தான தத்ததனா தான ...... தனதான
மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு மக்களுமா றாத ...... துயர்கூர மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ வைத்தவர்தா மேக ...... மதிமாய நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத னற்றவர்தா நாட ...... விடையேறி நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு நற்றுணைவா ஞால ...... மிகவாழப் பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக பத்தியதா மாறு ...... முகநாளும் பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1114
பொதுப்பாடல்கள் தத்துவத்துச் செயல்
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன ...... தனதான
தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ் சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத் துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும் வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய வெற்றிசத் திக்கரக ...... முருகோனே வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள் கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1115
பொதுப்பாடல்கள் மக்கள் ஒக்கல்
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன ...... தனதான
மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர் மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும் வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும் புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1116
பொதுப்பாடல்கள் உற்பாதம் பூ
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
உற்பா தப்பூ தக்கா யத்தே யொத்தோ டித்தத் ...... தியல்காலை உட்பூ ரித்தே சற்றே சற்றே யுக்கா ரித்தற் ...... புதனேரும் அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ லப்பா வித்துத் ...... திரிவேனுக் கப்பா சத்தா லெட்டா அப்பா லைப்போ தத்தைப் ...... புரிவாயே பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர் பொட்டா கக்குத் ...... தியவேலா முற்பா டப்பா டற்றா ருக்கோர் முட்கா டற்கப் ...... பொருளீவாய் முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1117
பொதுப்பாடல்கள் எற்றா வற்றா
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
எற்றா வற்றா மட்டா கத்தீ யிற்காய் செக்கட் ...... பிறைவாளே யிற்றார் கைப்பா சத்தே கட்டா டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன் உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென் றுற்றோ துற்றே பற்றா நிற்பா ரக்கா லத்துக் ...... குறவார்தான் பற்றார் மற்றா டைக்கே குத்தா பற்றா னப்பிற் ...... களைவோனே பச்சே னற்கா னத்தே நிற்பாள் பொற்பா தத்திற் ...... பணிவோனே முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத் ...... துறைவோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1118
பொதுப்பாடல்கள் செட்டாகத் தேனை
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
செட்டா கத்தே னைப்போ லச்சீ ரைத்தே டித்திட் ...... பமதாகத் திக்கா மற்பா டுற்றா ரிற்சீ ருற்றா ருக்குச் ...... சிலபாடல் பெட்டா கக்கூ றிப்போ தத்தா ரைப்போல் வப்புற் ...... றுழலாதே பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள் சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ எட்டா நெட்டா கத்தோ கைக்கே புக்கோ லத்திட் ...... டிமையோர்வா னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் ...... களைவோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1119
பொதுப்பாடல்கள் பட்டு ஆடைக்கே
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
பட்டா டைக்கே பச்சோ லைக்கா துக்கே பத்தித் ...... தனமாகும் பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே பட்டா சைப்பட் ...... டுறவாடி ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே சுற்றே முற்றத் ...... தடுமாறும் ஒட்டா ரப்பா விக்கே மிக்கா முற்றாள் கிட்டத் ...... தகுமோதான் கட்டா விப்போ துட்டா விப்பூ கக்கா விற்புக் ...... களிபாடுங் கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய் கத்தா சத்தித் ...... தகவோடே முட்டா கக்கூ ரிட்டே னற்றாள் முற்றா மற்கொட் ...... குமரேசா முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1120
பொதுப்பாடல்கள் பத்து ஏழு எட்டு
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால் வைத்தே பத்திப் ...... படவேயும் பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா சற்கா ரத்துக் ...... கிரைதேடி எத்தே சத்தோ டித்தே சத்தோ டொத்தேய் சப்தத் ...... திலுமோடி எய்த்தே நத்தா பற்றா மற்றா திற்றே முக்கக் ...... கடவேனோ சத்தே முற்றா யத்தா னைச்சூர் கற்சா டிக்கற் ...... பணிதேசா சட்சோ திப்பூ திப்பா லத்தா அக்கோ டற்செச் ...... சையமார்பா முத்தா பத்தா ரெட்டா வைப்பா வித்தா முத்தர்க் ...... கிறையோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1121
பொதுப்பாடல்கள் பொற்கோ வைக்கே
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம் பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ கித்தே கைக்குப் ...... பொருள்தேடித் தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ் திக்கோ டிப்பச் ...... சிமமான திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ தற்கோ லிப்பா விப்பார் நற்சீ ரைச்சா ரத்தற் ...... பரமானாய் தப்பா முப்பா லைத்தே டித்தே சத்தோர் நிற்கத் ...... தகையோடே முற்கா னப்பே தைக்கா கப்போய் முற்பால் வெற்பிற் ...... கணியானாய் முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1122
பொதுப்பாடல்கள் பொற் பூவை
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ தப்பே சிப்பொற் ...... கனிவாயின் பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் கற்பா லெக்கா வுட்கோ லிக்கா சுக்கே கைக்குத் ...... திடுமாதர் கட்கே பட்டே நெட்டா சைப்பா டுற்றே கட்டப் ...... படுவேனோ சொற்கோ லத்தே நற்கா லைச்சே விப்பார் சித்தத் ...... துறைவோனே தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர் விக்கா முக்கத் ...... தொடும்வேலா முற்கா லத்தே வெற்பேய் வுற்றார் முத்தாள் முத்தச் ...... சிறியோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1123
பொதுப்பாடல்கள் மெய்க்கூணைத் தேடி
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே வித்தா ரத்திற் ...... பலகாலும் வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே வித்தா சைச்சொற் ...... களையோதிக் கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா ரைப்போ லக்கற் ...... பழியாதுன் கற்பூ டுற்றே நற்றா ளைப்பா டற்கே நற்சொற் ...... றருவாயே பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய் முற்பால் வெற்பிற் ...... புனமானைப் பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே முக்கோ ணத்தா னத்தா ளைப்பால் வைத்தார் முத்தச் ...... சிறியோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1124
பொதுப்பாடல்கள் அகர முதலென
தனதனன தந்தந்த தத்ததன தனதனன தந்தந்த தத்ததன னதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம் நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1125
பொதுப்பாடல்கள் அரிய வஞ்சகர்
தனன தந்தன தனனா தனதன தந்தன தனனா தனதன தனன தந்தன தனனா தனதன ...... தனதான
அரிய வஞ்சக ரறவே கொடியவர் அவலர் வன்கண ரினியா ரவகுணர் அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக அலையில் மண்டிய வழியே யொழுகியர் வினைநி ரம்பிடு பவமே செறிபவர் அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற உரிய சஞ்சல மதியா னதுபெறு மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர் உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே உலக முண்டவர் மதனா ரிமையவர் தருவெ னும்படி மொழியா வவர்தர உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ கரிய கொந்தள மலையா ளிருதன அமுது ணுங்குரு பரனே திரைபடு கடல டும்படி கணையே வியஅரி ...... மருகோனே கருணை கொண்டொரு குறமா மகளிடை கலவி தங்கிய குமரா மயில்மிசை கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து பொதுந டம்புரி யரனா ரிடமுறை சிவைச வுந்தரி யுமையா ளருளிய ...... புதல்வோனே சிகர வெண்கரி அயிரா வதமிசை வருபு ரந்தர னமரா பதியவர் சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1126
பொதுப்பாடல்கள் ஆராத காதலாகி
தானான தான தான தானன தானான தான தான தானன தானான தான தான தானன ...... தந்ததான
ஆராத காத லாகி மாதர்த மாபாத சூட மீதி லேவிழி யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே ஆசாப சாசு மூடி மேலிட ஆசார வீன னாகி யேமிக ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே ஈராறு தோளு மாறு மாமுக மோடாரு நீப வாச மாலையு மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே ஏனோரு மோது மாறு தீதற நானாசு பாடி யாடி நாடொறு மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ வாராகி நீள்க பாலி மாலினி மாமாயி யாயி தேவி யாமளை வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி வாதாடி மோடி காடு காளுமை மாஞால லீலி யால போசனி மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி சூராரி மாபு ராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே தோளாலும் வாளி னாலு மாறிடு தோலாத வான நாடு சூறைகொள் சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1127
பொதுப்பாடல்கள் ஆராதனர் ஆடம்பர
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த ...... தனதான
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1128
பொதுப்பாடல்கள் ஆலாலத்தை
தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன ...... தனதான
ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக் கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள் கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார் கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள் கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற் பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர் பாலா பத்தரி டத்தியல் ...... பயில்வோனே மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1129
பொதுப்பாடல்கள் ஆனாத ஞான
தானான தான தத்த தத்த தத்தன தானான தான தத்த தத்த தத்தன தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும் ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும் ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ...... ரழியாதே ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும் வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும் ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும் யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ் தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும் ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய நானாவி கார புற்பு தப்பி றப்பற ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர் மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ...... லொருமூவர் மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர் தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர் வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும் தேநாய காஎ னத்து தித்த வுத்தம வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல் சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச் சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1130
பொதுப்பாடல்கள் இடமருவுஞ் சீற்ற
தனதனனந் தாத்த தான தத்த தனதனனந் தாத்த தான தத்த தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான
இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும் இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி மடலவிழும் பூக்க ளால்நி றைத்த சுருளளகந் தூற்றி யேமு டித்து மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக வருபொருள்கண் டேற்க வேப றிக்கும் அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி முதுமறையின் பேச்சி நூலி டைச்சி பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி படிகொடறங் காத்த மாப ரைச்சி மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி சமரமுகங் காட்டு மால்வி டைச்சி அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே அரியயனின் றேத்த வேமி குத்த விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1131
பொதுப்பாடல்கள் இடர் மொய்த்து
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் ...... தனதான
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட் டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும் இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற் கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட் டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன் வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப் புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க் கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட் டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக் கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன் கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக் கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1132
பொதுப்பாடல்கள் இரவினிடை வேள்
தனதனன தான தத்த தந்த தனதனன தான தத்த தந்த தனதனன தான தத்த தந்த ...... தனதான
இரவினிடை வேள்தொ டுத்து டன்று முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே எதிர்பொருது மானி னைத்து ரந்து சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து விசிறிவளை மாத ரைக்க லந்து மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து சுழிமிதுன வாவி யிற்பு குந்து முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும் திரையுலவு சாக ரத்தி லங்கை நகரிலுறை ராவ ணற்கி யைந்த தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ் சிதையவொரு வாளி யைத்து ரந்த அரிமருக தீத றக்க டந்து தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து கருதுமொரு மூவ ருக்கி ரங்கி யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து இரவுபக லாக நெக்க விழ்ந்த அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1133
பொதுப்பாடல்கள் இரவொடும் பகலே
தனன தந்தன தானா தானா தனன தந்தன தானா தானா தனன தந்தன தானா தானா ...... தனதான
இரவொ டும்பக லேமா றாதே அநுதி னந்துய ரோயா தேயே யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி இரைகொ ளும்படி யூடே பாடே மிகுதி கொண்டொழி யாதே வாதே யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி நரைக ளும்பெரி தாயே போயே கிழவ னென்றொரு பேரே சார்வே நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி நயன முந்தெரி யாதே போனால் விடிவ தென்றடி யேனே தானே நடன குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ திருந டம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரி திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி சிவனி டந்தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி யாயீ மாயீ சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா அரவ கிங்கிணி வீரா தீரா கிரிபு ரந்தொளிர் நாதா பாதா அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா அரிய ரன்பிர மாவோ டேமூ வகைய ரிந்திர கோமா னீள்வா னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1134
பொதுப்பாடல்கள் இருகுழை மீதோடி
தனதன தானான தானன தனதன தானான தானன தனதன தானான தானன ...... தனதான
இருகுழை மீதோடி மீளவும் கயல்களு மாலால காலமும் ரதிபதி கோலாடு பூசலு ...... மெனவேநின் றிலகிய கூர்வேல்வி லோசன ம்ருகமத பாடீர பூஷித இளமுலை மாமாத ரார்வச ...... முருகாதே முருகவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர்பாத தூளியின் முழுகிவி டாய்போம னோலயம் ...... வரவோது முழுமதி மாயாவி காரமு மொழிவது வாசாம கோசர முகுளித ஞானோப தேசமு ...... மருள்வேணும் அருமறை நூலோதும் வேதியன் இரணிய ரூபாந மோவென அரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன் அவனெவ னாதார மேதென இதனுள னோவோது நீயென அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி ஒருகணை தூணோடு மோதிட விசைகொடு தோள்போறு வாளரி யுகிர்கொடு வாராநி சாசர ...... னுடல்பீறும் உலகொரு தாளான மாமனும் உமையொரு கூறான தாதையும் உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1135
பொதுப்பாடல்கள் இருமுலை மலை
தனதன தனதன தத்தத் தானன தனதன தனதன தத்தத் தானன தனதன தனதன தத்தத் தானன ...... தனதான
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர் இருவிழி யதனில கப்பட் டேமன மிசைபட வசனமு ரைத்திட் டேபல ...... மினிதொடே இடையது துவளகு லுக்கிக் காலணி பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதர இளமுலை குழையஅ ணைத்துக் கேயுர ...... மணியோடே மதகத பவளம ழுத்திப் பூஷண மணிபல சிதறிநெ றித்துத் தானுக மருமலர் புனுகுத ரித்துப் பூவணை ...... மதராஜன் மருவிய கலவித னக்கொப் பாமென மகிழ்வொடு ரசிதுமி குத்துக் கோதையை மருவியு முருகிக ளைத்துப் பூமியி ...... லுழல்வேனோ திரிபுர மெரியந கைத்துக் காலனை யுதைபட மதனைய ழித்துச் சாகர திரைவரு கடுவைமி டற்றிற் றானணி ...... சிவனார்தந் திருவருள் முருகபெ ருத்துப் பாரினில் சியொதனன் மடியமி குத்துப் பாரத செயமுறு மரிதன்ம னத்துக் காகிய ...... மருகோனே நரிகழு வதுகள்க ளிக்கச் சோரிகள் ரணகள முழுதுமி குத்துக் கூளிகள் நடமிட அசுரர்கு லத்துக் காலனை ...... நிகராகி நனிகடல் கதறபொ ருப்புத் தூளெழ நணுகிய இமையவ ருக்குச் சீருற நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1136
பொதுப்பாடல்கள் இலகிய வேலோ
தனதன தானா தானா தனதன தானா தானா தனதன தானா தானா ...... தனதான
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப் பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா அவுணரை வாடா போடா ...... எனலாகி அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே யவருடல் வாணா ளீரா ...... எதிராகி மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1137
பொதுப்பாடல்கள் உமை எனும் மயில்
தனதன தனதத்த தனனா தனனா தனதன தனதத்த தனனா தனனா தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான
உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே உளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி உருகுத லொருசற்று மறியேன் வறியேன் இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன் உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர் அமையென வளர்சித்ர இருதோள் தழுவா அமுதென மதுரித்த கனிவா யணுகா அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... ததிமூழ்கி அநவர தமுமுற்ற மணிமா முலைதோய் கலவியி னலமற்ப சுகமா கினுமா அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே தமனிய குலசக்ர கிரியோ கடலோ விடமென முடிவைத்த முதுபே ரிருளோ தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல் ...... கொடுபார்வை தழலெழ வருமுக்ர எமபா தகனோ யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும் எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1138
பொதுப்பாடல்கள் உரைத்த பற்றுடன்
தனத்த தத்தன தனதன தந்தத் தனத்த தத்தன தனதன தந்தத் தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான
உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட் டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற் றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ...... டணைமேல்வீழ்ந் துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட் டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த் துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ...... டுளம்வேறாய் அருக்கி யத்தனை யெனுமவ சம்பட் டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத் தறப்பி தற்றிட அமளிக லங்கித் ...... தடுமாறி அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட் டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக் கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ...... திடலாமோ தரைக்க டற்புகு நிருதர்த யங்கச் சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித் தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக் கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத் தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித் திருக்கு முத்தம நிருதர்க லங்கப் படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ...... கிரிசாடிப் படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக் குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற் பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1139
பொதுப்பாடல்கள் உலகத்தினில்
தனதத்தன தானன தந்தன தனதத்தன தானன தந்தன தனதத்தன தானன தந்தன ...... தனதான
உலகத்தினில் மாதரு மைந்தரும் உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை உயர்துக்கமு மோடுற வென்றுற ...... வருகாலன் உதிரத்துட னேசல மென்பொடு உறுதிப்பட வேவள ருங்குடில் உதிரக்கனல் மீதுற என்றனை ...... யொழியாமுன் கலகக்கலை நூல்பல கொண்டெதிர் கதறிப்பத றாவுரை வென்றுயர் கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு ...... களிகூருங் கவலைப்புல மோடுற என்துயர் கழிவித்துன தாளிணை யன்பொடு கருதித்தொழும் வாழ்வது தந்திட ...... நினைவாயே இலகப்பதி னாலுல கங்களும் இருளைக்கடி வானெழு மம்புலி யெழில்மிக்கிட வேணியில் வந்துற ...... எருதேறி இருகைத்தல மான்மழு வும்புனை யிறையப்பதி யாகிய இன்சொலன் இசையப்பரி வோடினி தன்றரு ...... ளிளையோனே மலைபட்டிரு கூறெழ வன்கடல் நிலைகெட்டபி தாவென அஞ்சகர் வலியற்றசு ரேசரு மங்கிட ...... வடிவேலால் மலைவித்தக வானவ ரிந்திரர் மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1140
பொதுப்பாடல்கள் உறவின்முறை கதறி
தனதனன தனதனன தானான தானதன தனதனன தனதனன தானான தானதன தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான
உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ...... மந்தநாளில் உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும் உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும் மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ...... வந்துகூட மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ...... வந்திடாயோ பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ...... நின்றநாகம் பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ...... வென்றதீரா குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய் குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1141
பொதுப்பாடல்கள் உறவு சிங்கிகள்
தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன ...... தனதான
உறவு சிங்கிகள் காமா காரிகள் முறைம சங்கிக ளாசா வேசிகள் உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணமெ னும்படி பேய்நீ ராகிய உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத் தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள் வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள் அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர் அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள் கலவி யின்பமெ னாவே சோருதல் அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே பறவை யென்கிற கூடார் மூவரண் முறையி டுந்தமர் வானோர் தேரரி பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொருமூவர் பதநி னைந்துவி டாதே தாள் பெற அருள்பு ரிந்தபி ரானார் மாபதி பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங் குறவர் தங்கள்பி ரானே மாமரம் நெறுநெ றென்றடி வேரோ டேநிலை குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா குயில்க ளன்றில்கள் கூகூ கூவென மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை குறவர் சுந்தரி யோடே கூடிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1142
பொதுப்பாடல்கள் ஊனோடு வாது உயிர்
தானான தானன தனத்த தத்தன தானான தானன தனத்த தத்தன தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி ஓயாத மாமய லுழற்றி னிற்படு ...... வம்பனேனை ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது மாராத காதலை மனத்தில் வைப்பது மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ...... முந்திடாதே தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ...... மென்றுநீபச் சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு சீர்பாத போதக மநுக்ர கிப்பது ...... மெந்தநாளோ மானாக பாயலில் படுக்கை யிட்டவர் மாமேரு வாரியில் திரித்து விட்டவர் மாடோடு போய்வரு மிடைக்குலத்தவ ...... ரன்றுவாவி வாய்நாக மோலிட பிடித்த சக்கிர வாளேவி யேகர வினைத்த றித்தவர் மாமாய னாயுல களித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே கானாரு மாமலை தினைப்பு னத்தினில் கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ...... கந்தவேளே காரேழு மாமலை யிடித்து ருக்கெட காராழி யேழவை கலக்கி விட்டுயர் காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1143
பொதுப்பாடல்கள் எட்டுடன் ஒரு
தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன ...... தனதான
எட்டுட னொருதொளை வாயா யதுபசு மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக முக்குண மதுகெட நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே திட்டென எதிர்வரு மாகா ளியினொடு திக்கிட தரிகிட தீதோ மெனவொரு சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் செப்புக வெனமுன மோதா துணர்வது சிற்சுக பரவெளி யீதே யெனஅவர் தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா மட்டற அமர்பொரு சூரா திபனுடல் பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே வச்சிர கரதல வானோ ரதிபதி பொற்புறு கரிபரி தேரோ டழகுற வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1144
பொதுப்பாடல்கள் எத்தி இரு குழை
தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன ...... தனதான
எத்தி யிருகுழையை மோதி மீனமதின் முட்டி யிடறியம தூதர் போலமுகி லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி எத்தி சையினுமொரு காம ராஜன்மிக வெற்றி யரசுதனை யாள வீசியட லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் வித்தை தனிலுருகி யாசை யாகியவர் கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே வெட்க மிலைநடவு மேகு மேகுமினி மற்ற வரையழையு மாத ரேயெனமுன் விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல் அத்தி நகரமர சான வாள்நிருபன் ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன் வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும் ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி ...... லசுரேசன் பத்து முடிகள்துக ளாக வாகுஇரு பத்து மொருகணையில் வீழ நேரவுணர் பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே பச்சை மயிலில்வரு வீர வேல்முருக துட்ட நிருதர்குல கால வானவர்கள் பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1145
பொதுப்பாடல்கள் ஒக்க வண்டெழு
தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட உற்ப லங்கள்சி வந்துக விந்திட ...... இந்த்ரகோபம் ஒத்த தொண்டைது வண்டமு தந்தர மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர மிக்க சந்திர னொன்றுநி லங்களில் விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் வித்த கந்தரு விந்துத புங்குழி பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் மைக்க ருங்கட லன்றெரி மண்டிட மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா குக்கு டங்கொடி கொண்டப ரம்பர சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ் கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண்புய கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1146
பொதுப்பாடல்கள் ஓது வித்தவர்
தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன ...... தனதான
ஓது வித்தவர் கூலிகொ டாதவர் மாத வர்க்கதி பாதக மானவர் ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள் ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் ஆர்த னக்குமு தாசின தாரிகள் ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் கேது மித்தனை தானமி டாதவர் பூத லத்தினி லோரம தானவர் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் ஏக சித்ததி யானமி லாதவர் மோக முற்றிடு போகித மூறினர் ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது சாச சச்சச சாசச சாசச ...... சசசாச தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு சேயெ னப்பல ராடிட மாகலை ஆயு முத்தமர் கூறிடும் வாசக சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1147
பொதுப்பாடல்கள் ஓலை தரித்த குழை
தானன தத்தன தத்த தத்தன தானன தத்தன தத்த தத்தன தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம் ஓதிமி குத்தத வத்த வர்க்கிட ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள் வாசமு லைக்குள கப்ப டுத்தியில் வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர் மாயம யக்கையொ ழித்து மெத்தென வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில் வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக் காலயி லக்கணை தொட்ட ருட்கன மாலமை திக்கரை யிற்ற ரித்துல காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன் காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்ததி னைப்பு னத்தொரு காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1148
பொதுப்பாடல்கள் கடைசி வந்தகன்று
தனன தந்தனந் தனன தந்தன தனன தந்தனந் தனன தந்தன தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக் கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர் கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும் படைம தன்பெருங் கிளைதி ருந்திய அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப மகர வெங்கருங் கடலொ டுங்கிட நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம் அடியொ டும்பிடுங் கியத டங்கர வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக அவச மும்புனைந் தறமு னைந்தெழு பருவ தஞ்சிறந் தகன தந்தியின் அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1149
பொதுப்பாடல்கள் கதறிய கலைகொடு
தனதன தனதன தத்தாத் தானன தனதன தனதன தத்தாத் தானன தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள் பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங் கருகிய வினைமன துட்டாக் காதது சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே விதமது கரமுரல் மொட்டாற் சாடிய ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன் வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டரீக ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும் பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ் சததள அமளியை விட்டாற் றேறிய சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே தழைதரு குழைதரு பட்டாட் சாலவு மழகிய கலவிதெ விட்டாக் காதலி தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1150
பொதுப்பாடல்கள் கலவியி னலமுரை
தனதன தனதன தானன தானந் தனத் தனந்தன தனன தான தனதன தானான தான தனனந் தானந் தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான
கலவியி னலமுரை யாமட வார்சந் தனத் தனங்களில் வசம தாகி யவரவர் பாதாதி கேச மளவும் பாடுங் கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக் கபடனை வெகுபரி தாபனை நாளும் ப்ரமிக் குநெஞ்சனை உருவ மாறி முறைமுறை ஆசார வீன சமயந் தோறுங் களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம் புலன்வழி யொழுகிய மோகனை மூகந் தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு மாதேச வாழ்வை நிலையென் றேயம் புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப் பொறியிலி தனையதி பாவியை நீடுங் குணத் ரயங்களும் வரும நேக வினைகளு மாயாவி கார முழுதுஞ் சாடும் பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே குலகிரி தருமபி ராம மயூரம் ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு வாராவு லாவி யுணரும் யோகங் குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக் குரிசிலு மொருசுரர் பூசுர னோமென் றதற் கநந்தர மிரணி யாய நமவென நாராய ணாய நமவென் றோதுங் குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப் பலநக நுதியி னிசாசர னாகங் கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல் தோண்மாலை யாக அணியுங் கோவும் பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப் படமுக வடலயி ராபத மேறும் ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட வேலேவி வாவி மகரஞ் சீறும் பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் ...... தாக்கிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1151
பொதுப்பாடல்கள் கறுத்து நீவிடு
தனத்த தானன தானான தந்தன தனத்த தானன தானான தந்தன தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு கயற்க ணார்கனி வாயூற லுண்டணி கழுத்து மாகமு மேகீப வங்கொடு கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே உறுத்து மாரமு மோகாவ டங்களு மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை செருக்கு மோகன வாராத ரங்களை யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன் நிறத்த நூபுர பாதார விந்தமு முடுத்த பீலியும் வாரார்த னங்களும் நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட நெறித்த வோதியு மாயான்ம னம்பர தவிக்க மால்தர லாமோக லந்திட நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய் மறித்த வாரிதி கோகோவெ னும்படி வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில் வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு வளைத்த தாதையு மாறான குன்றமு மனைத்து லோகமும் வேதாக மங்களும் மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1152
பொதுப்பாடல்கள் குறிப்பரிய குழல்
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன ...... தனதான
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங் கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு தினுக்குமிக வுறத்தழுவு ...... குறியாலும் அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல ரடிக்குமிள நகைக்குமுள ...... மயராதே அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர் அளப்பரிய பதக்கமல ...... மருள்வாயே கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு கணத்திலவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற் கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை யளித்திடரை யறுத்தருளு ...... மயில்வீரா செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற் செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது சிமிழ்த்தனமு னுறத்தழுவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1153
பொதுப்பாடல்கள் குனகியொரு மயில்
தனதனன தனதான தானான தானான தனதனன தனதான தானான தானான தனதனன தனதான தானான தானான ...... தனதான
குனகியொரு மயில்போல வாராம னோலீலை விளையவினை நினையாம லேயேகி மீளாத கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக் கொளுவஅதில் மயலாகி வீறொடு போய்நீள மலரமளி தனிலேறி யாமாறு போமாறு குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி மனமுருக மதராஜ கோலாடு மாபூசல் விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக வகைவகையி லதிமோக வாராழி யூடான பொருளளவ தளவாக யாரோடு மாலான வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி லெனவிரகு குலையாத மாதாவு நேரோத இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும் இனிமையொடு வருமாய மாரீச மானாவி குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி அநுமனொடு கவிகூட வாராக நீராழி யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன் அருணமணி திகழ்பார வீராக ராமோலி யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1154
பொதுப்பாடல்கள் கொலைவிழி சுழல
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத் தனதன தனனத் தனனத் ...... தனதான
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத் தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப் பிறநரி தொடரத் தொடரத் ...... திரள்கூகை பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1155
பொதுப்பாடல்கள் கோழையாய் ஆணவம்
தானனா தனன தத்த, தானனா தனன தத்த தானனா தனன தத்த ...... தனதான
கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர் கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர கோவுநா னெனஇ சைப்பர் ...... மிடியூடே ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர் ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு ளாகையா லவைய டக்க ...... வுரையீதே ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில் ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1156
பொதுப்பாடல்கள் சந்தனம் கலந்த
தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த ...... தனதான
சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல் கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங் கஇன்சு கங்கள் கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள் கொங்கைபைங் கரம்பு ணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய் தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டையம் பதம்பு லம்ப ...... வருவோனே சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும் மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர் மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1157
பொதுப்பாடல்கள் சுருதி வெகுமுக
தனன தனதனன தான தானன தனதனன தான தானன தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி வெகுமுகபு ராண கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ மருது நெறுநெறென மோதி வேரோடு கருது மலகைமுலை கோதி வீதியில் மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் வலிய சகடிடறி மாய மாய்மடி படிய நடைபழகி யாயர் பாடியில் வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா விருதர் நிருதர்குல சேனை சாடிய விஜய கடதடக போல வாரண விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத விமலை நகிலருண வாகு பூதர விபுத கடககிரி மேரு பூதர விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1158
பொதுப்பாடல்கள் சுற்றத்தவர்களும்
தத்தத் தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத்
சுற்றத் தவர்களு மக்களு மிதமுள சொற்குற் றரிவையும் விட்டது சலமிது சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச் சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல் சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச் சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல் சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில் செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங் கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள் குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய் கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே குப்புற் றுடனெழு சச்சரி முழவியல் கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர் கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1159
பொதுப்பாடல்கள் செம் கனல் புகை
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான
செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள் தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர் தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1160
பொதுப்பாடல்கள் சேலை அடர்த்து ஆலம்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் ...... தனதான
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித் தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத் தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத் தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல் ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற் றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக் காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத் தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில் ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற் றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட் டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1161
பொதுப்பாடல்கள் சொக்குப் பொட்டு
தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர் முற்றிக்குத் தத்தைக் கொப்பென சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ் தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன் திக்குக்கெட் டொட்டுச் சிட்டென பட்டத்துற் புத்திக் கட்டற செப்பத்துற் பற்றற் கற்புத ...... மருள்வாயே தக்குத்தக் குக்குக் குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை தத்தித்தித் தித்தித் தித்தென தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை சத்திக்கொற் றத்திற் குத்திய ...... முருகோனே துக்கித்திட் டத்தித் துக்கக நெக்குப்பட் டெக்கித் துட்டறு சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ...... ளருள்வேலா துற்றப்பொற் பச்சைக் கட்கல பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1162
பொதுப்பாடல்கள் ஞானா விபூஷணி
தானான தானன தானன தானன தானான தானன தானன தானன தானான தானன தானன தானன ...... தனதான
ஞானாவி பூஷணி காரணி காரணி காமாவி மோகினி வாகினி யாமளை மாமாயி பார்வதி தேவிகு ணாதரி ...... உமையாள்தன் நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக வேதாக மேயருள் தேவர்கள் தேவந லீசாச டாபர மேசர்சர் வேசுரி ...... முருகோனே தேனார்மொ ழீவளி நாயகி நாயக வானாடு ளோர்தொழு மாமயில் வாகன சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா சீர்பாத சேகர னாகவு நாயினன் மோகாவி காரவி டாய்கெட ஓடவெ சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை சூராடி யேகழு மீதினி லேறிட கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே பேராண்மை யாளனி சாசரர் கோனிரு கூறாக வாளிதொ டூரகு நாயகன் பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ சேணாடு ளோரவர் வீடதி டேறிட கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா வாசாம கோசர மாகிய வாசக தேசாதி யோரவர் பாதம தேதொழ பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1163
பொதுப்பாடல்கள் தரணிமிசை
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங் கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந் திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ் சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன் சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந் தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ் சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1164
பொதுப்பாடல்கள் தனஞ் சற்றுக் குலுங்க
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற் சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற் சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால் தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத் தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர் சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச் சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய் தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந் தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத் தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச் சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச் சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச் செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச் செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1165
பொதுப்பாடல்கள் நகரம் இரு பாதமாகி
தனனதன தான தான தனனதன தான தான தனனதன தான தான ...... தனதான
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி நமசிவய மாமை யாகி ...... எழுதான அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி மருவுமவ தான போதம் ...... அருள்வாயே குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி குறையகல வேலை மீது ...... தனியூருங் குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி அரியமண மேசெய் தேக ...... வலைதேடி அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும் அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1166
பொதுப்பாடல்கள் நரையொடு பல்
தனதன தத்த தந்த தானத்த தனதன தத்த தந்த தானத்த தனதன தத்த தந்த தானத்த ...... தனதான
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து நமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன் விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு மொளிபெற நற்ப தங்கள் போதித்து மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே உறுபலி பிச்சை கொண்டு போயுற்று முவரிவி டத்தை யுண்டு சாதித்து முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் அரையொடு கட்டி யந்த மாய்வைத்து மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த அரியய னித்தம் வந்து பூசிக்கும் அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1167
பொதுப்பாடல்கள் நிமிர்ந்த முதுகு
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த ...... தனதான
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன் உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதிமூழ்க அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1168
பொதுப்பாடல்கள் நிருதரார்க்கு ஒரு
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தனதான
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான நெடிய வேற்படை யானே ஜேஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே தருவி னாட்டர சாள்வான் வேணுவி னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் சகல லோக்கிய மேதா னாளுறு மசுர பார்த்திப னோடே சேயவர் தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் றருள ஏற்றம ரோடே போயவ ருறையு மாக்கிரி யோடே தானையு மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி அமரில் வீட்டியும் வானோர் தானுறு சிறையை மீட்டர னார்பால் மேவிய அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1169
பொதுப்பாடல்கள் ஆரவாரமாய்
தான தான தான தந்த தான தான தான தந்த தான தான தான தந்த ...... தனதான
ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து ஆழி வேலை போன்மு ழங்கி ...... யடர்வார்கள் ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து ஆலைமீதி லேக ரும்பு ...... எனவேதான் வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து வீசு வார்கள் கூகு வென்று ...... அழுபோது வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து மேலை வீழ்வ ரீது கண்டு ...... வருவாயே நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த நாதர் பாலி லேயி ருந்த ...... மகமாயி நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து நாளு நாளு மேபு கன்ற ...... வரைமாது நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலை யேபு னைந்த ...... குமரேசா நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட நீத னான தோர்கு ழந்தை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1170
பொதுப்பாடல்கள் நீரும் என்பு
தான தந்த தான தான தான தந்த தான தான தான தந்த தான தான ...... தனதான
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு நீளு மங்க மாகி மாய ...... வுயிரூறி நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந் தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள் பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1171
பொதுப்பாடல்கள் பகல்மட்க
தனதத்தத் தத்தத் தனதன தனதத்தத் தத்தத் தனதன தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான
பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு நவரத்நப் பத்தித் தொடைநக நுதிபட்டிட் டற்றுச் சிதறிட ...... இதழூறல் பருகித்தித் திக்கப் படுமொழி பதறக்கைப் பத்மத் தொளிவளை வதறிச்சத் திக்கப் புளகித ...... தனபாரம் அகலத்திற் றைக்கப் பரிமள அமளிக்குட் கிக்கிச் சிறுகென இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக அவசத்திற் சித்தத் தறிவையு மிகவைத்துப் பொற்றித் தெரிவையர் வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ...... துணர்வேனோ இகல்வெற்றிச் சத்திக் கிரணமு முரணிர்த்தப் பச்சைப் புரவியு மிரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும் இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு கவிமெத்தச் செப்பிப் பழுதற எழுதிக்கற் பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு கலகச்செற் றச்சட் சமயிகள் புகலற்குப் பற்றற் கரியதொ ...... ருபதேசப் பொருளைப்புட் பித்துக் குருபர னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி புனையப்பர்க் கொப்பித் தருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1172
பொதுப்பாடல்கள் பத்தித் தரள
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி பட்டப்புள கச்செப் பிளமுலை பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப் பத்மத்திய ரற்புக் கடுகடு கட்சத்தியர் மெத்தத் திரவிய பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ் சித்தத்தரு ணர்க்குக் கனியத ரப்புத்தமு தத்தைத் தருமவர் சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந் தெட்டிற்படு கட்டக் கனவிய பட்சத்தரு ளற்றுற் றுனதடி சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ மத்தப்பிர மத்தக் கயமுக னைக்குத்திமி தித்துக் கழுதுகள் மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட மற்றைப்பதி னெட்டுக் கணவகை சத்திக்கந டிக்கப் பலபல வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே முத்திப்பர மத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவமுனி முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால் முற்றித்திரி வெற்றிக் குருபர முற்பட்டமு ரட்டுப் புலவனை முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1173
பொதுப்பாடல்கள் பரதவித புண்டரிக
தனதனன தந்ததன தானத் தாத்தன தனதனன தந்ததன தானத் தாத்தன தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான
பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள் அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள் பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் ...... கொடிதாய பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள் பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில் ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின் விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள் முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில் விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும் ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும் உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக் கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர் கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1174
பொதுப்பாடல்கள் பழுது அற ஓதி
தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த ...... தனதான
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து பலபல யோகத் திருந்து ...... மதராசன் பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1175
பொதுப்பாடல்கள் பாணிக்கு உட்படாது
தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன ...... தந்ததான
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள் பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும் ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன் ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம் ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல் வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1176
பொதுப்பாடல்கள் பால்மொழி படித்து
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம் பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால் மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி காரணம் விளைத்துக் காட்டி ...... யொருக்காலங் கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில் வாலிப மிளைத்துக் காட்டி ...... அயர்வாகி மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1177
பொதுப்பாடல்கள் புகரில் சேவல
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான
புகரில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா புனித பூசுர ருஞ்சுர ரும்பணி புயச பூதர என்றிரு கண்புனல் பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி அகில பூதவு டம்புமு டம்பினில் மருவு மாருயி ருங்கர ணங்களு மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே அகில வாதிக ளுஞ்சம யங்களும் அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே மகர கேதன முந்திகழ் செந்தமிழ் மலய மாருத மும்பல வெம்பரி மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும் மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர மதுர கார்முக மும்பொர வந்தெழு மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு முதுப கீரதி யும்புனை யுஞ்சடை முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி முகர நூபுர பங்கய சங்கரி கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள் முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1178
பொதுப்பாடல்கள் புருவத்தை நெறித்து
தனனத்த தனத்த தனத்தன தனனத்த தனத்த தனத்தன தனனத்த தனத்த தனத்தன ...... தனதான
புருவத்தை நெறித்து விழிக்கயல் பயிலிட்டு வெருட்டி மதித்திரு புதுவட்டை மினுக்கி யளிக்குல ...... மிசைபாடும் புயல்சற்று விரித்து நிரைத்தொளி வளையிட்ட கரத்தை யசைத்தகில் புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச் சரசத்தை விளைத்து முலைக்கிரி புளகிக்க அணைத்து நகக்குறி தனைவைத்து முகத்தை முகத்துட ...... னுறமேவித் தணிவித்தி ரதத்த தரத்துமி ழமுதத்தை யளித்து வுருக்கிகள் தருபித்தை யகற்றி யுனைத்தொழ ...... முயல்வேனோ பரதத்தை யடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர் பரவைக்குள் விடத்தை மிடற்றிடு ...... பவர்தேர்கப் பரையுற்ற கரத்தர் மிகப்பகி ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர் பரவத்தர் பொருப்பி லிருப்பவ ...... ருமையாளர் சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர் பணிபத்தர் பவத்தை யறுப்பவர் சுடலைப்பொ டியைப்ப ரிசிப்பவர் ...... விடையேறுந் துணையொத்த பதத்த ரெதிர்த்திடு மதனைக்க டிமுத்தர் கருத்தமர் தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1179
பொதுப்பாடல்கள் புவிக்குன் பாதம்
தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன ...... தனதான
புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன் கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச் செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந் தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச் சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1180
பொதுப்பாடல்கள் பூசல்தரும் கயலும்
தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
பூசல்த ருங்கய லும்பொ ருந்திய வாசந றுங்குழ லுந்து லங்கிய பூரண கும்பமெ னுந்த னங்களு ...... மடமாதர் போகம டங்கலை யும்பு ணர்ந்தநு ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை போயக லும்படி யொன்றை யன்புற ...... நினையாதே ஆசையெ னும்படி யுந்த னங்களு மோகைந டந்திட வுந்தி னங்களும் ஆருட னும்பகை கொண்டு நின்றுற ...... நடமாடி ஆடிய பம்பர முன்சு ழன்றெதி ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற ஆவிய கன்றுவி டும்ப யங்கெட ...... அருள்வாயே வாசவ னன்புவி ளங்க நின்றசு ரேசர்கு லங்கள டங்க லுங்கெட வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் ...... குறைதீர வாரிய திர்ந்துப யந்து நின்றிட மேருஅ டங்கஇ டிந்து சென்றிட வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு ...... ளிளையோனே வீசிய தென்றலொ டந்தி யும்பகை யாகமு யங்கஅ நங்க னும்பொர வேடையெ னும்படி சிந்தை நொந்திட ...... அடைவாக வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன வேலினு ளங்கள்க லங்கி யின்புற வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1181
பொதுப்பாடல்கள் பூசல் வந்திரு
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான
பூசல் வந்திரு தோடார் காதொடு மோதி டுங்கயல் மானார் மானமில் போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் பூர குங்கும தூளா மோதப டீர சண்பக மாலா லாளித பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக ஆசை யென்கிற பாரா வாரமு மேறு கின்றில னானா பேதஅ நேக தந்த்ரக்ரி யாவே தாகம ...... கலையாய ஆழி யுங்கரை காணே னூபுர பாத பங்கய மோதே னேசில னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே வாச வன்பதி பாழா காமல்நி சாச ரன்குலம் வாழா தேயடி மாள வன்கிரி கூறாய் நீறெழ ...... நெடுநேமி மாத வன்தரு வேதா வோடலை மோது தெண்கடல் கோகோ கோவென மாமு றிந்திட நீள்வே லேவிய ...... இளையோனே வீசு தென்றலும் வேள்பூ வாளியு மீறு கின்றமை யாமோ காமவி டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் மீது சென்றுற வாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால்கொடு வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1182
பொதுப்பாடல்கள் பொங்கும் கொடிய
தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன ...... தனதான
பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர் புண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை மென்குங் குமகு யாத்திரி ...... பிரியாதே எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1183
பொதுப்பாடல்கள் பொருத கயல்விழி
தனன தனதன தனத்தத் தாத்தன தனன தனதன தனத்தத் தாத்தன தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர் புளக தனவட மசைத்துக் காட்டுவர் புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர் புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர் பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர் புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை உருக அணைதனி லணைத்துக் காட்டுவர் உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம் உதர மெரிதர மருத்திட் டாட்டிகள் உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர் உறவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும் வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை விகட தடமுடி பறித்துத் தோட்களை விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1184
பொதுப்பாடல்கள் மங்காதிங் காக்கு
தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான
மங்காதிங் காக்குஞ் சிறுவரு முண்டேயிங் காற்றுந் துணைவியும் வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை வந்தேபொன் தேட்டங் கொடுமன நொந்தேயிங் காட்டம் பெரிதெழ வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன் சங்காரம் போர்ச்சங் கையிலுடல் வெங்கானம் போய்த்தங் குயிர்கொள சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன் சந்தாரஞ் சாத்தும் புயவியல் கந்தாஎன் றேத்தும் படியென சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே கங்காளன் பார்த்தன் கையிலடி யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி கந்தாவஞ் சேர்த்தண் புதுமல ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி அங்காலங் கோத்தெண் டிசைபுவி மங்காதுண் டாற்கொன் றதிபதி அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே அன்பாலந் தாட்கும் பிடுமவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1185
பொதுப்பாடல்கள் மதன தனு நிகர்
தனன தனதன தனத்தா தன தனன தனதன தனத்தா தன தனன தனதன தனத்தா தன ...... தனதான
மதன தனுநிக ரிடைக்கே மன முருக வருபிடி நடைக்கே யிரு வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி மகர மணிவன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும் அதர மதுரித மொழிக்கே குழை யளவு மளவிய விழிக்கே தள வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும் அழகு திகழ்தரு நுதற்கே யந வரத மவயவ மனைத்தூ டினு மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே உததி புதைபட அடைத்தா தவன் நிகரி லிரதமும் விடுக்கா நகர் ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர உபய வொருபது வரைத்தோள் களு நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான திதமி லவுணர்த மிருப்பா கிய புரமு மெரியெழ முதற்பூ தர திலத குலகிரி வளைத்தா னும ...... கிழவானோர் திருவ நகர்குடி புகச்சீ கர மகர சலமுறை யிடச்சூ ரொடு சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1186
பொதுப்பாடல்கள் மதனேவிய கணை
தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன ...... தனதான
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1187
பொதுப்பாடல்கள் மாடமதிட் சுற்று
தானதனத் தத்த தத்த தத்தன தானதனத் தத்த தத்த தத்தன தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான
மாடமதிட் சுற்று மொக்க வைத்திட வீடுகனக் கத்த னத்தி லச்சுறு மாலிபமொத் துப்ர புத்த னத்தினி ...... லடைவாக மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர் சூழவிருக் கத்த ரிக்க இப்படி வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள் ...... கடைநாளிற் பாடையினிற் கட்டி விட்டு நட்டவர் கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட ...... விடலாய பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை ...... யருளாதோ ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென நாகவடத் தைப்பி ணித்து ரத்தம ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை ...... யனலாக ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் ...... குமரேசா வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ...... இளையோனே வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல் வீரமெனத் தத்து வத்து மெச்சிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1188
பொதுப்பாடல்கள் மாண்டார் எலும்பு
தாந்தான தந்தன தந்தன தாந்தான தந்தன தந்தன தாந்தான தந்தன தந்தன ...... தனதான
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான வான்பூத முங்கர ணங்களு நான்போயொ டுங்கஅ டங்கலு மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல் வேண்டாமை யொன்றைய டைந்துள மீண்டாறி நின்சர ணங்களில் வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய் வேந்தாக டம்புபு னைந்தருள் சேந்தாச ரண்சர ணென்பது வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ ஆண்டார்த லங்கள ளந்திட நீண்டார்மு குந்தர்த டந்தனில் ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற் றாங்கோர்சி லம்புபு லம்பிட ஞான்றூது துங்கச லஞ்சலம் ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம் பூண்டாழி கொண்டுவ னங்களி லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே பூம்பாளை யெங்கும ணங்கமழ் தேங்காவில் நின்றதொர் குன்றவர் பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1189
பொதுப்பாடல்கள் மாறுபொரு காலன்
தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த ...... தனதான
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும் வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல் மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும் வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து வேறுபடு மேனி சற்று ...... மழியாதே வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து மேவுமிரு பாத முற்று ...... வரவேணும் ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1190
பொதுப்பாடல்கள் மின்னினில் நடுக்கம்
தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த ...... தனதான
மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர் கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும் அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில் அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப் பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப் பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1191
பொதுப்பாடல்கள் முத்தம் உலாவு
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன ...... தனதான
முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள் முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால் முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத் தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறு மாற கமெத்திக ...... ளளவேநான் தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ் தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி மைத்துன னாகி யவிக்ரமன் ...... மருகோனே வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்தரு ...... ளிளையோனே சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை சிக்கென வேத ழுவிப்புணர் ...... மணவாளா செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1192
பொதுப்பாடல்கள் முருகு லாவிய மைப்பா
தனன தானன தத்தான தானன தனன தானன தத்தான தானன தனன தானன தத்தான தானன ...... தனதான
முருகு லாவிய மைப்பாவு வார்குழல் முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி முடுகு வோர்குலை வித்தான கோடேனு ...... முலையாலே முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல் முடுகு வோரென எய்த்தோடி யாகமு மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண் டுருகு வார்சில சிற்றாம னோலய முயிரு மாகமு மொத்தாசை யோடுள முருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண் புலக வாவொழி வித்தார்ம னோலய முணர்வு நீடிய பொற்பாத சேவடி யுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே குருகு லாவிய நற்றாழி சூழ்நகர் குமர னேமுனை வெற்பார்ப ராபரை குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய குழையு நீள்கர வைத்தோடி யேயவர் குடியி லேமயி லைக்கோடு சோதிய ...... வுரவோனே மருகு மாமது ரைக்கூடல் மால்வரை வளைவு ளாகிய நக்கீர ரோதிய வளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே மதிய மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீநொடி யற்றான போதினில் மயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1193
பொதுப்பாடல்கள் முலைமேலிற் கலிங்க
தனனானத் தனந்த தந்தன தனனானத் தனந்த தந்தன தனனானத் தனந்த தந்தன ...... தனதான
முலைமேலிற் கலிங்க மொன்றிட முதல்வானிற் பிறந்த மின்பிறை நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார முகநேசித் திலங்க வும்பல வினைமூசிப் புரண்ட வண்கடல் முரணோசைக் கமைந்த வன்சர ...... மெனமூவா மலர்போலச் சிவந்த செங்கணில் மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம் வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு மயலாகிப் பரந்து நின்செயல் மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ தொலையாநற் றவங்க ணின்றுனை நிலையாகப் புகழ்ந்து கொண்டுள அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே துடிநேரொத் திலங்கு மென்கொடி யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா மலைமாளப் பிளந்த செங்கையில் வடிவேலைக் கொடந்த வஞ்சக வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன் வலிமாளத் துரந்த வன்திறல் முருகாமற் பொருந்து திண்புய வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1194
பொதுப்பாடல்கள் முனை அழிந்தது
தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான முகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே இனைய இந்திர னேற்றமு மண்டர்கள் தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர் தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே தினைவ னங்கிளி காத்தச வுந்தரி அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர் குமர கந்தப ராக்ரம செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1195
பொதுப்பாடல்கள் மைக்குக்கை
தத்தத்தத் தத்தத் தனதன தத்தத்தத் தத்தத் தனதன தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான
மைக்குக்கைப் புக்கக் கயல்விழி யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன் வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே மட்டிட்டுத் துட்டக் கெருவித மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே புக்குக்கைக் கொக்கப் புகுமொரு அற்பச்சிற் றிற்பத் தெரிவையர் பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப் பொற்பித்துக் கற்பித் துனதடி அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ் சித்தர்க்குச் சுத்தப் பரமநல் முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர் முட்டக்கொட் டற்றுத் திரிபுர மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக உற்பித்துக் கற்பித் தமரரை முற்பட்டக் கட்டச் சிறைவிடு மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1196
பொதுப்பாடல்கள் மோது மறலி
தான தனதனன தான தாத்தன தான தனதனன தான தாத்தன தான தனதனன தான தாத்தன ...... தனதான
மோது மறலியொரு கோடி வேற்படை கூடி முடுகியெம தாவி பாழ்த்திட மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும் மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள் ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர் கூடி நடவுமிடு காடெ னாக்கடி தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி ஏழு புவனமிகு வான நாட்டவர் சூழ முநிவர்கிளை தாமு மேத்திட ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே சூது பொருதரும னாடு தோற்றிரு வாறு வருஷம்வன வாச மேற்றியல் தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற் சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி ராளு முரிமைதரு மாறு கேட்டொரு தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள வாது சமர்திருத ரான ராட்டிர ராஜ குமரர்துரி யோத னாற்பிறர் மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப வாகை விஜயனடல் வாசி பூட்டிய தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1197
பொதுப்பாடல்கள் வடிகட்டிய தேன் என
தனனத்தன தானன தானன தனனத்தன தானன தானன தனனத்தன தானன தானன ...... தனதான
வடிகட்டிய தேனென வாயினி லுறுதுப்பன வூறலை யார்தர வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால் அடிபட்டலை பாவநிர் மூடனை முகடித்தொழி லாமுன நீயுன தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ பொடிபட்டிட ராவணன் மாமுடி சிதறச்சிலை வாளிக ளேகொடு பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே கொடுமைத்தொழி லாகிய கானவர் மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1198
பொதுப்பாடல்கள் வட்ட முலைக்கச்சு
தத்த தனத்தத் தனத்த தத்தன தத்த தனத்தத் தனத்த தத்தன தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய ...... பொதுமாதர் மட்ட மளிக்குட் டிருத்தி முத்தணி மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி ...... யிதழ்கோதிக் கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள ...... முயல்போதுங் கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும் வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு ...... மறவேனே கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை ...... யசுரோரைக் குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும் வெட்டி யழித்துக் கனக்க ளிப்பொடு கொக்க ரியிட்டுத் தெரித்த டுப்பன ...... வொருகோடிப் பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன சச்ச ரிகொட்டிட் டடுக்கெ டுப்பன பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன ...... வெகுபூதம் பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில் பட்ட றவிட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1199
பொதுப்பாடல்கள் வளைகரம் ஆட்டி
தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த ...... தனதான
வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும் மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின் மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப் புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும் பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள் துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல் சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1200
பொதுப்பாடல்கள் வாடையில் மதனை
தானன தனன தனத்தத்த தானன தனன தனத்தத்த தானன தனன தனத்தத்த ...... தனதான
வாடையில் மதனை யழைத்துற்று வாள்வளை கலக லெனக்கற்றை வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும் மால்கொள நெகிழ வுடுத்திட்டு நூபுர மிணைய டியைப்பற்றி வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு ...... வருமாய நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையி லகப்பட்டு ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு நாணமு மரபு மொழுக்கற்று நீதியு மறிவு மறக்கெட்டு நாயடி மையும டிமைப்பட்டு ...... விடலாமோ ஆடிய மயிலி னையொப்புற்று பீலியு மிலையு முடுத்திட்டு ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும் ஆகிய விதண்மி சையுற்றிட்டு மானின மருள விழித்திட்டு ஆயுத கவணொ ருகைச்சுற்றி ...... விளையாடும் வேடுவர் சிறுமி யொருத்திக்கு யான்வழி யடிமை யெனச்செப்பி வீறுள அடியி ணையைப்பற்றி ...... பலகாலும் வேதமு மமர ருமெய்ச்சக்ர வாளமு மறிய விலைப்பட்டு மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1201
பொதுப்பாடல்கள் விரை சொரியும்
தனதனன தனதனன தனன தாத்ததன தனதனன தனதனன தனன தாத்ததன தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான
விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி ...... வகையாரம் விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும் இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய ...... அநுராகத் திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை ...... தரவேணும் அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு ...... மகலாது அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ ...... மிடநாளும் பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு ...... மயில்வீரா படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1202
பொதுப்பாடல்கள் வேல் ஒத்து வென்றி
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த ...... தனதான
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர் கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும் நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும் ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1203
பொதுப்பாடல்கள் அடியார் மனம்
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த தனதான தந்த தந்த ...... தனதான
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற் கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக் களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய் சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புரமூணும் தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1204
பொதுப்பாடல்கள் அடி இல் விடாப் பிணம்
தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன ...... தனதான
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன் எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில் எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி தெனதுயிர் காத்திட ...... வரவேணும் மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு மதகரி கூப்பிட ...... வளையூதி மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய மகிபதி போற்றிடு ...... மருகோனே படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர் பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற் படமுனி யாப்பணி தமனிய நாட்டவர் பதிகுடி யேற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1205
பொதுப்பாடல்கள் அப்படி ஏழும் ஏழும்
தத்தன தான தானன தத்தன தான தானன தத்தன தான தானன ...... தனதான
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும் அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய னைத்துரு வாய காயம ...... தடைவேகொண் டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல கிற்றடு மாறி யேதிரி ...... தருகாலம் எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை கற்புடை மாது தோய்தரு ...... மபிராம கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன கற்பக லோக தாரண ...... கிரிசால விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1206
பொதுப்பாடல்கள் அயில் விலோசனம்
தனன தானனம் தனன தானனம் தனன தானனம் ...... தனதான
அயில்வி லோசனங் குவிய வாசகம் பதற ஆனனங் ...... குறுவேர்வுற் றளக பாரமுங் குலைய மேல்விழுந் ததர பானமுண் ...... டியல்மாதர் சயில பாரகுங் குமப யோதரந் தழுவு மாதரந் ...... தமியேனால் தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந் தருண பாதமுந் ...... தரவேணும் கயிலை யாளியுங் குலிச பாணியுங் கமல யோனியும் ...... புயகேசன் கணப ணாமுகங் கிழிய மோதுவெங் கருட வாகனந் ...... தனிலேறும் புயலி லேகரும் பரவ வானிலும் புணரி மீதுனுங் ...... கிரிமீதும் பொருநி சாசரன் தனது மார்பினும் புதைய வேல்விடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1207
பொதுப்பாடல்கள் அருக்கி மெத்ததோள்
தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா ...... தனதான
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார் பசைத்து வக்குமா ...... லிளைஞோரை அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ தணைத்து மெத்தமா ...... லதுகூர உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா வுலற்றி யுட்குநா ...... ணுடன்மேவி உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா லுறக்கு ணத்ததா ...... ளருள்வாயே சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ் சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர் சுரக்க வித்தைதா ...... னருள்வோனே பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல் பிடித்து குற்றமா ...... ரொருசூரன் பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர் பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1208
பொதுப்பாடல்கள் அரும்பினால் தனி
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் ...... தனதான
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத் தடர்ந்து மேற்றெறித் ...... தமராடும் அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத் தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக் குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித் தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங் குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக் குணங்க ளாக்கிநற் ...... கழல்சேராய் பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக் குரங்கி னாற்படைத் ...... தொருதேரிற் புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக் கிரங்கி யாற்புறத் ...... தலைமேவிப் பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப் பிறங்க வேத்தியக் ...... குறுமாசூர் பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப் பிளந்த வேற்கரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1209
பொதுப்பாடல்கள் அலமலமிப் புலால்
தனதன தத்தனாத் தனதன தத்தனாத் தனதன தத்தனாத் ...... தனதான
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற் கறுமுக நித்தர்போற் ...... றியநாதா அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த் தணிதரு முத்திவீட் ...... டணுகாதே பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க் ...... கிதமாடும் பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப் படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க் கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக் குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற் குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க் கழுநிரை முட்டஏற் ...... றியதாளக் கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக் கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1210
பொதுப்பாடல்கள் அளகபாரமும் குலைந்து
தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த ...... தனதான
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து அணுகி யாக மும்மு யங்கி ...... யமுதூறல் அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து அவச மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப் பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற் பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும் துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1211
பொதுப்பாடல்கள் ஆசார வீனன்
தானான தான தனதன தானான தான தனதன தானான தான தனதன ...... தனதான
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண னாகாத நீச னநுசிதன் ...... விபரீதன் ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி யிவனென ...... நினையாமல் மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி மாஞான போத மருள்செய ...... நினைவாயே வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை கூறாம னீய அவனுகர் ...... தருசேடங் கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1212
பொதுப்பாடல்கள் ஆசைகூர் பத்தன்
தானனா தத்த தானனா தத்த தானனா தத்த ...... தனதான
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து ...... நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ர மாகவே கட்டி ...... யொருஞான வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி ...... யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர வாளபா தத்தி ...... லணிவேனோ மூசுகா னத்து மீதுவாழ் முத்த மூரல்வே டிச்சி ...... தனபார மூழ்குநீ பப்ர தாபமார் பத்த மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு வேகவே தித்து ...... வருமாசூர் வீழமோ திப்ப ராரைநா கத்து வீரவேல் தொட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1213
பொதுப்பாடல்கள் ஆசைக் கொளுத்தி
தானத் தனத்ததன தானத் தனத்ததன தானத் தனத்ததன ...... தனதான
ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப் பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி பேதைப் படுத்திமய ...... லிடுமாதர் பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை பீடைப் படுத்துமய ...... லொழியாதோ தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா தேடித் துதித்தஅடி யார்சித் தமுற்றருளு சீர்பொற் பதத்தஅரி ...... மருகோனே நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு நீசற் கனத்தமுற ...... விடும்வேலா நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1214
பொதுப்பாடல்கள் ஆசை நேச மயக்கி
தான தான தனத்தன தான தான தனத்தன தான தான தனத்தன ...... தனதான
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல் வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள் ஈச ரோடு றவுற்றவள் ...... உமையாயி யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியுத்தமி ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி ஈறி லாத மலைக்கொடி ...... அருள்பாலா ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும் ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1215
பொதுப்பாடல்கள் ஆல மேற்ற விழியினர்
தான தாத்த தனதன தான தாத்த தனதன தான தாத்த தனதன ...... தனதான
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம யான மேற்றி யுறவின ...... ரயலாகக் கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர் காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன் காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1216
பொதுப்பாடல்கள் ஆலும் மயில் போல்
தானதன தானத்த தானதன தானத்த தானதன தானத்த ...... தனதான
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த ஆரவட மேலிட்ட ...... முலைமீதே ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க ஆமவரை யேசற்று ...... முரையாதே வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று வீறுமுன தார்பத்ம ...... முகமாறு மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க மேதகவு நானித்த ...... முரையேனோ நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு நாடவரி யார்பெற்ற ...... வொருபாலா நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த வேழமுக வோனுக்கு ...... மிளையோனே வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1217
பொதுப்பாடல்கள் இடை இத்தனை
தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான
இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம் இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம் உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந் தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும் விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல் விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1218
பொதுப்பாடல்கள் இரு குழை மீது
தனதன தான தானன, தனதன தான தானன தனதன தான தானன ...... தனதான
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென எறிவன காள கூடமு ...... மமுதாகக் கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு முததியில் வீழ வானர ...... முடனேசென் றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர் உணருப தேச தேசிக ...... வரையேனற் பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி பரிபுர பாத சேகர ...... சுரராஜன் பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1219
பொதுப்பாடல்கள் இருநோய் மலத்தை
தனனா தனத்ததன தனனா தனத்ததன தனனா தனத்ததன ...... தனதான
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள உபதேசி கப்பதமு ...... மருள்வாயே கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ் கருணாக டப்பமல ...... ரணிவோனே திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர் சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1220
பொதுப்பாடல்கள் இனமறை விதங்கள்
தனதனன தந்தனம் தனதனன தந்தனம் தனதனன தந்தனம் ...... தந்ததான
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண் கிணியிலகு தண்டையம் ...... புண்டரீகம் எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந் திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங் கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன் கனககிரி சம்பெழுந் ...... தம்புராசி அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென் றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின் றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1221
பொதுப்பாடல்கள் ஊனேறெலும்பு
தானா தனந்த தானா தனந்த தானா தனந்த ...... தனதான
ஊனே றெலும்பு சீசீ மலங்க ளோடே நரம்பு ...... கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசான மண்டு மூனோ டுழன்ற ...... கடைநாயேன் நானா ரொடுங்க நானார் வணங்க நானார் மகிழ்ந்து ...... உனையோத நானா ரிரங்க நானா ருணங்க நானார் நடந்து ...... விழநானார் தானே புணர்ந்து தானே யறிந்து தானே மகிழ்ந்து ...... அருளூறித் தாய்போல் பரிந்த தேனோ டுகந்து தானே தழைந்து ...... சிவமாகித் தானே வளர்ந்து தானே யிருந்த தார்வேணி யெந்தை ...... யருள்பாலா சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1222
பொதுப்பாடல்கள் எதிரொருவர் இலை
தனதனன தனதனன தனதனன தனதனன தத்தத்த தத்தான ...... தந்ததான
எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு திட்டுக்ரி யைக்கேயெ ...... ழுந்துபாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால் விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம் விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர் செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர் மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1223
பொதுப்பாடல்கள் எழுந்திடும்
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் ...... தனதானம்
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத் திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட் டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற் றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட் டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத் துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க் கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச் சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத் தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1224
பொதுப்பாடல்கள் ஏட்டிலே வரை
தாத்த தானன தாத்த தானன தாத்த தானன ...... தந்ததான
ஏட்டி லேவரை பாட்டி லேசில நீட்டி லேயினி ...... தென்றுதேடி ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக லேற்ற மானகு ...... லங்கள்பேசிக் காட்டி லேயியல் நாட்டி லேபயில் வீட்டி லேஉல ...... கங்களேசக் காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ கோட்டு மாயிர நாட்ட னாடுறை கோட்டு வாலிப ...... மங்கைகோவே கோத்த வேலையி லார்த்த சூர்பொரு வேற்சி காவள ...... கொங்கில்வேளே பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர்குற ...... மங்கைபாகா பூத்த மாமலர் சாத்தி யேகழல் போற்று தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1225
பொதுப்பாடல்கள் கச்சுப் பூட்டு
தத்தத் தாத்த தத்தத் தாத்த தத்தத் தாத்த ...... தனதான
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட கத்திற் கோட்டு ...... கிரியாலங் கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க யற்கட் கூற்றில் ...... மயலாகி அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும் அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த பத்மக் கூட்டி ...... லுறைவோரி பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர் பத்தக் கூட்ட ...... ரியல்வானம் மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று வெட்கக் கோத்த ...... கடல்மீதே மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1226
பொதுப்பாடல்கள் கடலினும் பெரிய
தனதனந் தனதனன தனதனந் தனதனன தனதனந் தனதனன ...... தனதான
கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை கவரினுந் துவரதர ...... மிருதோள்பைங் கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல களவுகொண் டொருவர்மிசை ...... கவிபாடி அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய் அருள்பரங் குரனபய ...... னெனஆசித் தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற அருணபங் கயசரண ...... மருள்வாயே வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி மகிதலம் புகவழியு ...... மதுபோல மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக னுலகுமிந் திரனுநிலை ...... பெறவேல்கொண் டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண ருடனுடன் றமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1227
பொதுப்பாடல்கள் கட்டக் கணப்பறை
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்த ...... தனதான
கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர் கட்டிப் புறத்தி ...... லணைமீதே கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர் எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை யெற்பொற் புயத்தி ...... லணைவோனே வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர் வைத்துப் பணைத்த ...... மணிமார்பா வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை வெட்டித் துணித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1228
பொதுப்பாடல்கள் கண்டு போல்மொழி
தந்த தானன தந்த தானன தந்த தானன ...... தனதான
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல் கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள் கண்டு பாவனை கொண்டு தோள்களி லொண்டு காதலி ...... லிருகோடு மண்டி மார்பினில் விண்ட தாமென வந்த கூர்முலை ...... மடவார்தம் வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி கின்ற மாயம ...... தொழியாதோ கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி கொண்டு கோகில ...... மொழிகூறுங் கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு குன்றில் மால்கொடு ...... செலும்வேலா வெண்டி மாமன மண்டு சூர்கடல் வெம்ப மேதினி ...... தனில்மீளா வென்று யாவையு மன்றி வேளையும் வென்று மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1229
பொதுப்பாடல்கள் கப்பரை கைக்கொள
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான நந்தவனத்தில் ஓர் ஆண்டி
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில் கட்பயி லிட்டிள ...... வளவோரைக் கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப் பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர் பற்றென வுற்றவொர் ...... தமியேனைப் பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை பட்டதெ னக்கினி ...... யமையாதோ குப்பர வப்படு பட்சமி குத்துள முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக் குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர் குற்றம றுத்திடு ...... முதல்வோனே விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி சித்ரத னக்கிரி ...... மிசைதோயும் விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1230
பொதுப்பாடல்கள் கலைகோட்டு வல்லி
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய ...... தனதான
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின் கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக் கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள முகையாக்கை நையு ...... முயிர்வாழக் கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய் சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1231
பொதுப்பாடல்கள் களவு கொண்டு
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான தனன தந்த தத்தான ...... தனதான
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர களப துங்க வித்தார ...... முலைமீதே கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான உனையு ணர்ந்து கத்தூரி ...... மணநாறும் உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ அரசு டன்க டற்றூளி ...... யெழவேபோய் அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில் மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1232
பொதுப்பாடல்கள் கள்ள மீனச் சுறவு
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன ...... தனதான
கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய கல்விவீ றக்கரிய ...... மனமாகுங் கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம் வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன் எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள் செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1233
பொதுப்பாடல்கள் கன்னியர் கடு விடம்
தன்னன தனதன தன்னன தனதன தன்னன தனதன ...... தனதான
கன்னியர் கடுவிட மன்னிய கயலன கண்ணிலு மிருகன ...... தனமீதுங் கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி லிந்நிலை பெறவிங ...... னுதியாதே யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை யென்னையும் வழிபட ...... விடவேணும் பொன்னவ மணிபயில் மன்னவ புனமற மின்முலை தழுவிய ...... புயவீரா புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல் எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா தன்னிறை சடையிறை யென்முனி பரவரு இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில் சண்முக மழகிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1234
பொதுப்பாடல்கள் கிஞ்சுகம் என
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த ...... தனதான
கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த கெண்டையள்பு னக்கொ டிச்சி ...... யதிபாரக் கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி கிங்கரனெ னப்ப டைத்த ...... பெயர்பேசா நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர் நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும் நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க நின்பணித மிழ்த்ர யத்தை ...... யருள்வாயே கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த கங்கனும தித்தி கைக்க ...... மதம்வீசுங் கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட கம்பனும திக்க வுக்ர ...... வடிவேல்கொண் டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து அன்பர்புக ழப்பொ ருப்பொ ...... டமராடி அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1235
பொதுப்பாடல்கள் குடிமை மனையாட்டி
தனதனன தாத்தன தனதனன தாத்தன தனதனன தாத்தன ...... தனதான
குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமுமிறு மாப்புமி ...... குதியான கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில் அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம் அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும் உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட உயரமரர் மேற்பட ...... வடியாத உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன் உலகுகுடி யேற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1236
பொதுப்பாடல்கள் குறைவது இன்றி
தனன தந்த தத்த தனன தந்த தத்த தனன தந்த தத்த ...... தனதான
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம் குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து மரண மென்ற துக்க ...... மணுகாமுன் மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு மளிசி றந்த புட்ப ...... மதுசூடி அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1237
பொதுப்பாடல்கள் கோகனகமுகிழ்த்த
தான தனன தத்த தான தனன தத்த தான தனன தத்த ...... தனதான
கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த கோடு தலைகு லைத்த ...... முலையாலே கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த நீடி யகுவ ளைக்கண் ...... மடமானார் ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து மீள விதழ்க டிப்ப ...... தறியாதே ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த சேலில் பரித விப்ப ...... தினியேனோ மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு சாவி யதுவோ ரர்த்த ...... மொழிவோனே வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில் வாழ்வு பெருகு றத்தி ...... மணவாளா வேக வுரக ரத்ந நாக சயன சக்ர மேவி மரக தத்தின் ...... மருகோனே வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி வேலை யுருவ விட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1238
பொதுப்பாடல்கள் சந்தம் புனைந்து
தந்தந் தனந்த தந்தந் தனந்த தந்தந் தனந்த ...... தனதான
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந் தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்க ...... ளிளைஞோரும் எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும் இன்பங் களைந்து துன்பங்கள் மங்க இன்றுன் பதங்கள் ...... தரவேணும் கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள் கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த குன்றம் பிளந்த ...... கதிர்வேலா ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர் அங்கம் பொருந்து ...... மழகோனே அண்டந் தலங்க ளெங்குங் கலங்க அன்றஞ் சலென்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1239
பொதுப்பாடல்கள் சலமலம்
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த ...... தனதான
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம் சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம் கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக் கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள் மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர் பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1240
பொதுப்பாடல்கள் சாங்கரி பாடியிட
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக தாண்டவ மாடியவர் ...... வடிவான சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர் தாங்களு ஞானமுற ...... வடியேனுந் தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர் வான்பொழில் சூழும்வய ...... லயலேறி மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள் மாந்திய வாரணிய ...... மலைமீதிற் பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி பூண்பன பாரியன ...... தனபாரப் பூங்குற மாதினுட வாடியிருள் பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1241
பொதுப்பாடல்கள் சிவஞான புண்டரிக
தனதான தந்ததன தனதான தந்ததன தனதான தந்ததன ...... தனதான
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி சிவபோக மன்பருக ...... அறியாமற் செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட முறைநாய கங்கவுரி ...... சிவகாமி ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு மமுதால யம்பதவி ...... யருள்வோனே அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ் அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1242
பொதுப்பாடல்கள் சீறிட்டு உலாவு
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த ...... தனதான
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம் ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1243
பொதுப்பாடல்கள் சூதினுண வாசை
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென தூசுவழ கானவடி ...... வதனாலே சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு ளாசைதமி லேசுழல ...... வருகாலன் ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென தாவிதனை யேகுறுகி ...... வருபோது ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு மாதிமுரு காநினைவு ...... தருவாயே ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர் ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும் யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே ஞானசுர வானைகண வாமுருக னேயமரர் நாடுபெற வாழவருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1244
பொதுப்பாடல்கள் செழும் தாது
தனந்தான தானான தனந்தான தானான தனந்தான தானான ...... தனதான
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி செயுங்காய நோயாள ...... னரகேழில் விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான விளம்போசை யேபேசி ...... வரவேணும் அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி அழன்றேகி மாசீத ...... நெடுவேலை அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர அலங்கார வேலேவு ...... முருகோனே கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு குணங்கூடி யேவாழு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1245
பொதுப்பாடல்கள் தத் தனமும்
தத்த தனதனன தத்த தனதனன தத்த தனதனன ...... தனதான
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் தக்க மனையினமு ...... மனைவாழ்வுந் தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன் பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் பற்று மருள்நினைவு ...... தருவாயே பத்து முடியுருளு வித்த பகழியினர் பச்சை நிறமுகிலின் ...... மருகோனே அத்தி முகவனழ குற்ற பெழைவயிற னப்ப மவரைபொரி ...... அவல்தேனும் அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட விக்குள் மறமகளை ...... யணைவோனே முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு முற்று மறைமொழியை ...... மொழிவோனே முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் வெட்டி யமர்பொருத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1246
பொதுப்பாடல்கள் தலைவலய போகம்
தனதனன தானனம் தனதனன தானனம் தனதனன தானனம் ...... தனதான
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் டறியுமொரு காரணந் ...... தனைநாடா ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் றபரிமித மாய்விளம் ...... புவதோதான் கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங் களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங் கருதியிது வேளையென் ...... றுகிராத குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங் குலிசகர வாசவன் ...... திருநாடு குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன் குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1247
பொதுப்பாடல்கள் தவநெறி
தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத் தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின் றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற் றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன் கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத் துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1248
பொதுப்பாடல்கள் திதலை உலாத்து
தனதன தாத்தனத் தனதன தாத்தனத் தனதன தாத்தனத் ...... தனதான
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத் த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற் சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப் பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார் வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற் றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற் கெரிகன லேற்றவற் ...... குணராதோர் சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக் கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக் கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக் கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1249
பொதுப்பாடல்கள் திரைவஞ்ச
தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதனன ...... தனதான
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச் சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென திகழண்டர் முநிவர்கண ...... மயன்மாலும் அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ அடியென்க ணளிபரவ ...... மயிலேறி அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி அருமந்த பொருளையினி ...... யருள்வாயே பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி பரிதுஞ்ச வருமதுரை ...... நடராஜன் பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ பவளஞ்சொ லுமைகொழுந ...... னருள்பாலா இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு மெரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ டெணுபஞ்ச ணையின்மருவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1250
பொதுப்பாடல்கள் தீ ஊதை தாத்ரி
தானான தாத்த தானான தாத்த தானான தாத்த ...... தனதான
தீயூதை தாத்ரி பானீய மேற்ற வானீதி யாற்றி ...... கழுமாசைச் சேறூறு தோற்பை யானாக நோக்கு மாமாயை தீர்க்க ...... அறியாதே பேய்பூத மூத்த பாறோரி காக்கை பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப் பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை போமாறு பேர்த்து ...... னடிதாராய் வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி லேய்வாளை வேட்க ...... வுருமாறி மீளாது வேட்கை மீதூர வாய்த்த வேலோடு வேய்த்த ...... இளையோனே மாயூர வேற்றின் மீதே புகாப்பொன் மாமேரு வேர்ப்ப ...... றியமோதி மாறான மாக்கள் நீறாக வோட்டி வானாடு காத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1251
பொதுப்பாடல்கள் துடித்து எதிர்
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன ...... தனதான
துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர் சுழற்கொரு கொடிக்கொடி ...... யெதிர்கூறித் துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல் துணிப்பன கணித்தலை ...... மிசைபார முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட முறைப்படு மறைத்திர ...... ளறியாத முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு மொழிப்பொருள் பழிப்பற ...... அருள்வாயே குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்தகு ருதிக்கட ...... லிடையூடே குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை யிடிப்பன ...... சிலபாடல் படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன பயிற்றிய லகைக்குலம் ...... விளையாடப் பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி படப்பொரு துழக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1252
பொதுப்பாடல்கள் துத்தி நச்சு அரா
தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம் தத்த தத்த தானனத் ...... தனதான
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ் சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம் சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ் சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம் புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண் பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும் புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம் புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம் பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப் பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும் பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக் கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந் துட்க முத்து வாரணச் ...... சதகோடி கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங் கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1253
பொதுப்பாடல்கள் தெரிவை மக்கள்
தனன தத்த தய்ய தனன தத்த தய்ய தனன தத்த தய்ய ...... தனதான
தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை தெரிவ தற்கு உள்ள ...... முணராமுன் சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன் பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு பரம னுக்கு நல்ல ...... மருகோனே பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1254
பொதுப்பாடல்கள் தென்றலும் அன்று
தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த ...... தனதான
தென்றலு மன்றி யின்றலை பொங்கு திண்கட லொன்று ...... மிகமோதச் செந்தழ லென்று வெந்தழல் சிந்து திங்களும் வந்து ...... துணையேய அன்றிலு மன்றி துன்றுச ரங்க ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச அன்பொட லங்கல் ...... தரவேணும் வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா வெண்டர ளங்கள் தண்டைச தங்கை மின்கொடி லங்கு ...... கழலோனே கொன்றைய ணிந்த சங்கர ரன்று கும்பிட வந்த ...... குமரேசா குன்றிட அண்ட ரன்றுய வென்று குன்றமெ றிந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1255
பொதுப்பாடல்கள் தோரண கனக
தானன தனன தானன தனன தானன தனன ...... தனதான
தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ ...... மதகோப வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய ...... அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே பூரண புவன காரண சவரி பூதர புளக ...... தனபார பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி ...... குடியேற ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ ...... மயிலேறு மாரிய பரம ஞானமு மழகு மாண்மையு முடைய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1256
பொதுப்பாடல்கள் நச்சுவாள் விழி
தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த ...... தனதான
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் ...... நலமாக நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே கச்சமே செலுத்தி யச்சமே படுத்து கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான் கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த கட்டனே னினைப்ப ...... தொருநாளே இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு மிட்டமா லவற்கு ...... மருகோனே எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை யெக்கிநேர் மடித்த ...... இளையோனே மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி மிக்கவாள் படைத்த ...... விழியாலே வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1257
பொதுப்பாடல்கள் நற்குணம் உளார்
தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த தத்ததன தான தத்த ...... தனதான
நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து நற்றிருநி றேப ரப்பி ...... விளையாடும் சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர் சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1258
பொதுப்பாடல்கள் நாகாங்க ரோமம்
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த ...... தனதான
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயிரீர்வார் மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும் த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச் சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1259
பொதுப்பாடல்கள் பரிமள மலரடு
தனதன தனதனத் தனதன தனதனத் தனதன தனதனத் ...... தனதான
பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப் பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார் பருமணி வயிரமுத் திலகிய குழையினிற் படைபொரு வனவிழிக் ...... கயலாலே எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக் கினிமையோ டுருகவிட் ...... டவமேயான் இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட் டிடர்படு வதுகெடுத் ...... தருள்வாயே சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத் தொளைபடு கரமலைக் ...... கிளையோனே துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத் துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக் கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி அலகையு முடனடித் திடவடி யயிலெடுத் தமர்செயு மறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1260
பொதுப்பாடல்கள் பற்றநெட்டை
தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத் ...... தனதான
பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப் பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர் பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப் பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங் கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத் திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங் கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத் தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத் திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன் மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத் துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப் பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச் செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1261
பொதுப்பாடல்கள் பாதகமான யாக்கை
தானன தான தாத்த தானன தான தாத்த தானன தான தாத்த ...... தனதான
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த பாணமும் வாளு மேற்ற ...... இருபார்வை பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந் தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச் சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச் சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர தாபம கீப போற்றி ...... யெனநேமி மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட வாசவ னோதி மீட்க ...... மறைநீப மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1262
பொதுப்பாடல்கள் பார நறுங்குழல்
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப டீர தனம்புள ...... கிதமாகப் பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி தாப முடன்பரி ...... மளவாயின் ஆர முதுண்டணை மீதி லிருந்தநு ராகம் விளைந்திட ...... விளையாடி ஆக நகம்பட ஆர முயங்கிய ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ நார தனன்றுச காய மொழிந்திட நாய கிபைம்புன ...... மதுதேடி நாண மழிந்துரு மாறி யவஞ்சக நாடி யெபங்கய ...... பதநோவ மார சரம்பட மோக முடன்குற வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய் மாமு நிவன்புணர் மானு தவுந்தனி மானை மணஞ்செய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1263
பொதுப்பாடல்கள் பிரமனும் விரகொடு
தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தம் ...... தனதான
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு பேணிக் கரங்கொண் ...... டிருகாலும் பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி பேதித் தளந்தம் ...... புவியூடே வரவிட வருமுட லெரியிடை புகுதரு வாதைத் தரங்கம் ...... பிறவாமுன் மரகத மயில்மிசை வருமுரு கனுமென வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே அருவரை தொளைபட அலைகடல் சுவறிட ஆலிப் புடன்சென் ...... றசுரேசர் அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா இருவினை யகலிட எழிலுமை யிடமுடை யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும் ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1264
பொதுப்பாடல்கள் பூத கலாதிகள்
தானன தானன தந்த தானன தானன தந்த தானன தானன தந்த ...... தனதான
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு பூரணி காரணி விந்து ...... வெளியான நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து ஞானசு வாசமு ணர்ந்து ...... வொளிகாண நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச வாலைபு ராரியி டந்த ...... குமையாயி வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1265
பொதுப்பாடல்கள் பெருங்காரியம் போல்
தனந்தா தனந்தா தனந்தா தனந்தா தனந்தா தனந்த ...... தனதான
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால் ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப் பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து ...... பிணமானார் அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் அலங்கார நன்றி ...... தெனமூழ்கி அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால் அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும் இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ கவெங்கே மடந்தை ...... யெனவேகி எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ யிடுங்கா வலன்றன் ...... மருகோனே பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார் புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர் புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1266
பொதுப்பாடல்கள் மக்கள் பிறப்புக்குள்
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த ...... தனதான
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற மட்டுற் றசுற்றத்தர் ...... மனையாளும் மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன் நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல் தித்திப் பையிச்சிக்கு ...... மணவாளா முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1267
பொதுப்பாடல்கள் மக்கள் தாயர்
தத்தனா தத்ததன தத்தனா தத்ததன தத்தனா தத்ததன ...... தனதான
மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம் வைத்துவா டச்சமனு ...... முறமேவித் திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி திக்கஆ விக்களவு ...... தெரியாமுன் சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது சித்ரபா தக்கமல ...... மருள்வாயே இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன் எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய் பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு பத்தர்பா டற்குருகு ...... முருகோனே பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர் பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1268
பொதுப்பாடல்கள் மதன் இக்கு அது
தனனத் தனதன தனனத் தனதன தனனத் தனதன ...... தனதான
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர் மலையப் படவிடு ...... வலியாலே வனமுற் றினவளை யினநித் திலமலை வலையத் துகள்வளை ...... கடலாலே விதனப் படுமதி வதனக் கொடியற வெருவிப் பரிமள ...... அணைமீதே மெலியக் கலைதலை குலையத் தகுமினி விரையக் குரவலர் ...... தரவேணும் புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர் புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு புனமெய்க் குறமகள் ...... மணவாளா முதுநற் சரவண மதனிற் சததள முளரிப் பதிதனி ...... லுறைவோனே முதுமைக் கடலட ரசுரப் படைகெட முடுகிப் பொரவல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1269
பொதுப்பாடல்கள் மதிதனையிலாத
தனதன தனான தான தனதன தனான தான தனதன தனான தான ...... தனதான
மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி வரும்வகை யிதேது காய ...... மெனநாடும் விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும் மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக மிகுமுன துரூப தான ...... மருள்வாயே எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை யியலொடு கடாவு தீர ...... குமரேசா இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும் இளமையது தானு மாக ...... நினைவோனே நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான நடைபெறு கடூர மான ...... மயில்வீரா நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1270
பொதுப்பாடல்கள் மலம் தோல் சலம்
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் ...... தனதான
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட் டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற் றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும் குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத் தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும் குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற் குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய் தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத் தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத் தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத் திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட் டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க் கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1271
பொதுப்பாடல்கள் மன நூறு கோடி
தனதான தான தந்த தனதான தான தந்த தனதான தான தந்த ...... தனதான
மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து மதனூட லேமு யங்கி ...... யதீருப மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி மதிசீரெ லாம ழிந்து ...... கொடிதான வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று விரகான்மெ யேத ளர்ந்து ...... விடுநாளில் விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று சிறுபேதை கால்ப ணிந்த ...... குமரேசா திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற திருமால்மு ராரி தங்கை ...... யருள்பாலா முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த முதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த முனைவேலி னாலெ றிந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1272
பொதுப்பாடல்கள் மாதர் மயல் தனில்
தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த தானதன தனத்ததந்த ...... தனதான
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1273
பொதுப்பாடல்கள் முத்து மணி ஆரம்
தத்ததன தானனத் தத்ததன தானனத் தத்ததன தானனத் ...... தனதான
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் பட்டகரி போலுமத் ...... தனமாதர் முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் துக்கமுற வேமிகச் ...... சுழலாதே சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப் பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற் பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1274
பொதுப்பாடல்கள் முருக மயூர
தனதன தானத் தானன தனதன தானத் தானன தனதன தானத் தானன ...... தனதான
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி முகுளப டீரக் கோமள ...... முலைமீதே முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென் றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற் றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன் வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல் வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட் பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப் பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1275
பொதுப்பாடல்கள் மூலா நிலமதின்
தானா தனதன தானா தனதன தானா தனதன ...... தனதான
மூலா நிலமதின் மேலே மனதுறு மோகா டவிசுடர் ...... தனைநாடி மோனா நிலைதனை நானா வகையிலு மோதா நெறிமுறை ...... முதல்கூறும் லீலா விதமுன தாலே கதிபெற நேமா ரகசிய ...... வுபதேசம் நீடூ ழிதனிலை வாடா மணியொளி நீதா பலமது ...... தருவாயே நாலா ருசியமு தாலே திருமறை நாலா யதுசெப ...... மணிமாலை நாடாய் தவரிடர் கேடா வரிகரி நாரா யணர்திரு ...... மருகோனே சூலா திபர்சிவ ஞானார் யமனுதை காலார் தரவரு ...... குருநாதா தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1276
பொதுப்பாடல்கள் வரிபரந் திரண்டு
தனதனந் தனந்த தனதனந் தனந்த தனதனந் தனந்த ...... தனதான
வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து வசமழிந் திழிந்து ...... மயல்கூர இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ னிலகுநின் பதங்கள் ...... மறவேனே விரிபரந் தியங்கு முததியுங் கலங்க விடமினும் பிறந்த ...... தெனவானோர் வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி விரைபதம் பணிந்து ...... முறையோவென் றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட உயர்தலங் குலுங்க ...... வருதோகை ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி உலகமும் புரந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1277
பொதுப்பாடல்கள் வரிவிழி பூசலாட
தனதன தான தான, தனதன தான தான தனதன தான தான ...... தனதான
வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட வளர்முலை தானு மாட ...... வளையாட மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட மதுரமு தூறி வீழ ...... அநுராகம் இருவரு மேக போக மொருவர்த மாக மாக இதமொடு கூடி மாயை ...... படுபோதும் இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு மிருகழல் தானு நானு ...... மறவேனே திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ் சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா குருபர நாத னாகி யரனொரு காதி லோது குணநிதி யாசை நேச ...... முருகோனே குறமக ளார பார முகிழ்முலை மீது தாது குலவிய மாலை மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1278
பொதுப்பாடல்கள் விழையும் மனிதரை
தனதனன தனதனன தனதனன தனதனன தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான
விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டரீகச் சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும் ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1279
பொதுப்பாடல்கள் வீணை இசை
தானதன தாத்த தானதன தாத்த தானதன தாத்த ...... தனதான
வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு வீரமுனை யீட்டி ...... விழியார்தம் வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில் வீழுமயல் தீட்டி ...... யுழலாதே ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை யாவலுட னீட்டி ...... யழியாதே ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி யானநிலை காட்டி ...... யருள்வாயே கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர் கேள்சுருதி நாட்டி ...... லுறைவோனே கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி சீதவிரு கோட்டி ...... லணைவோனே சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1280
பொதுப்பாடல்கள் வேலை வாளை
தானனா தத்ததன தானனா தத்ததன தானனா தத்ததன ...... தனதான
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன் வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும் வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை யாடிமோ கித்திரியும் ...... வெகுரூப கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி காரமோ டத்தெளிய ...... அரிதான கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி கூடலா கப்பெருமை ...... தருவாயே வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ வாளிபோ டக்கருது ...... மநுராமன் வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும் நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1281
பொதுப்பாடல்கள் இத்தரணி மீதில்
தத்ததன தானத் ...... தனதான
இத்தரணி மீதிற் ...... பிறவாதே எத்தரொடு கூடிக் ...... கலவாதே முத்தமிழை யோதித் ...... தளராதே முத்தியடி யேனுக் ...... கருள்வாயே தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா சத்தசொரு பாபுத் ...... தமுதோனே நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1282
பொதுப்பாடல்கள் என்பந்த வினை
தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான
என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித் தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச் சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1283
பொதுப்பாடல்கள் கருப்பற்று ஊறி
தனத்தத் தானத் ...... தனதான
கருப்பற் றூறிப் ...... பிறவாதே கனக்கப் பாடுற் ...... றுழலாதே திருப்பொற் பாதத் ...... தநுபூதி சிறக்கப் பாலித் ...... தருள்வாயே பரப்பற் றாருக் ...... குரியோனே பரத்தப் பாலுக் ...... கணியோனே திருக்கைச் சேவற் ...... கொடியோனே செகத்திற் சோதிப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1284
பொதுப்பாடல்கள் கருப்பையில்
தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான
கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ...... ளுரையாதே விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ...... ருதுநீயே வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச ...... மரவேளே பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த ...... மயிலோனே செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு ...... மிசையோனே தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1285
பொதுப்பாடல்கள் கொடிய மதவேள்
தனதனன தானத் ...... தனதான
கொடியமத வேள்கைக் ...... கணையாலே குரைகணெடு நீலக் ...... கடலாலே நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே கடியரவு பூணர்க் ...... கினியோனே கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே அடியவர்கள் நேசத் ...... துறைவேலா அறுமுகவி நோதப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1286
பொதுப்பாடல்கள் கோடான மேருமலை
தானான தானதனத் ...... தனதான
கோடான மேருமலைத் ...... தனமானார் கோமாள மானவலைக் ...... குழலாதே நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே மாடேறு மீசர்தமக் ...... கினியோனே மாதானை யாறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1287
பொதுப்பாடல்கள் சமய பத்தி
தனன தத்தன தாத்தன ...... தனதான
சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால் அருளெ னக்கினி மேற்றுணை ...... தருவாயே உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி உரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத் தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1288
பொதுப்பாடல்கள் சருவிய சாத்திர
தனதன தாத்தனத் ...... தனதான
சருவிய சாத்திரத் ...... திரளான சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத அருமறை யாற்பெறற் ...... கரிதாய அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ நிருதரை மூக்கறுத் ...... தெழுபார நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும் புலவரு சாத்துணைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1289
பொதுப்பாடல்கள் சினத்துச் சீறிய
தனத்தத் தானன ...... தனதான
சினத்துச் சீறிய ...... வழிகாணச் சிரித்துப் பேசியு ...... மயல்பூண கனத்துப் போர்செயு ...... முலைதோணக் கலைக்குட் பாதியு ...... மறைவாக மனத்துக் காறுதல் ...... வருமாறு மலைப்பப் பேணியு ...... மிகவாய தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம் சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ தெனத்தத் தாதென ...... எனவேபண் திருத்தத் தோடளி ...... யிசைபாடும் புனத்துக் காவல்கொள் ...... குறமாதின் புணர்ச்சிக் கேயொரு ...... வழிதேடி இனத்துக் காவல ...... ரறியாமல் இணக்கித் தோகையை ...... மகிழ்வோயென் றெனக்குத் தாளிணை ...... யருள்வாய்சூர் இறக்கப் போர்செய்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1290
பொதுப்பாடல்கள் தீது உற்றே எழு
தானத் தானன ...... தந்ததான
தீதுற் றேயெழு ...... திங்களாலே தீயைத் தூவிய ...... தென்றலாலே போதுற் றாடும ...... நங்கனாலே போதப் பேதைந ...... லங்கலாமோ வேதத் தோனைமு ...... னிந்தகோவே வேடப் பாவைவி ...... ரும்புமார்பா ஓதச் சூதமெ ...... றிந்தவேலா ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1291
பொதுப்பாடல்கள் துள்ளு மதவேள்
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே தொல்லைநெடு நீலக் ...... கடலாலே மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே மெய்யுருகு மானைத் ...... தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே செய்யகும ரேசத் ...... திறலோனே வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1292
பொதுப்பாடல்கள் தேன் இயல் சொற்
தானதனத் ...... தனதான
தேனியல்சொற் ...... கணிமாதர் சேவைதனைக் ...... கருதாதே யானெனதற் ...... றிடுபோதம் யானறிதற் ...... கருள்வாயே வானவருக் ...... கரசான வாசவனுக் ...... கினியோனே ஆனைமுகற் ...... கிளையோனே ஆறுமுகப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1293
பொதுப்பாடல்கள் நாரியர்கள் ஆசை
தானதன தானனத் ...... தனதான
நாரியர்க ளாசையைக் ...... கருதாதே நானுனிரு பாதபத் ...... மமுநாட ஆரமுத மானசர்க் ...... கரைதேனே ஆனஅநு பூதியைத் ...... தருவாயே காரணம தானவுத் ...... தமசீலா கானகுற மாதினைப் ...... புணர்வோனே சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா தோகைமயில் வாகனப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1294
பொதுப்பாடல்கள் நாளு மிகுத்த
தான தனத்த ...... தனதான
நாளு மிகுத்த ...... கசிவாகி ஞான நிருத்த ...... மதைநாடும் ஏழை தனக்கு ...... மநுபூதி ராசி தழைக்க ...... அருள்வாயே பூளை யெருக்கு ...... மதிநாக பூண ரளித்த ...... சிறியோனே வேளை தனக்கு ...... சிதமாக வேழ மழைத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1295
பொதுப்பாடல்கள் நித்தம் உற்றுனை
தத்தனத் தனனதத்த ...... தனதான
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக நத்தியு தமதவத்தி ...... னெறியாலே லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1296
பொதுப்பாடல்கள் நீலங்கொள்
தானந்த தானத்தம் ...... தனதான
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1297
பொதுப்பாடல்கள் பட்டுப் படாத
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும் பக்கத்து மாதர் ...... வசையாலும் சுட்டுச் சுடாத ...... நிலவாலும் துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் தட்டுப் படாத ...... திறல்வீரா தர்க்கித்த சூரர் ...... குலகாலா மட்டுப் படாத ...... மயிலோனே மற்றொப்பி லாத ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1298
பொதுப்பாடல்கள் பரவைக்கு எத்தனை
தனனத் தத்தன ...... தனதான
பரவைக் கெத்தனை ...... விசைதூது பகரற் குற்றவ ...... ரெனமாணுன் மரபுக் குச்சித ...... ப்ரபுவாக வரமெத் தத்தர ...... வருவாயே கரடக் கற்பக ...... னிளையோனே கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா அரனுக் குற்றது ...... புகல்வோனே அயனைக் குட்டிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1299
பொதுப்பாடல்கள் பிறவியலை
தனதனன தாத்தனத் ...... தனதான
பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே உனதுபத காட்சியைத் ...... தருவாயே அறுசமய சாத்திரப் ...... பொருளோனே அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1300
பொதுப்பாடல்கள் புத்தகத்து ஏட்டில்
தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான
புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச் சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1301
பொதுப்பாடல்கள் பொன்னை விரும்பிய
தன்ன தனந்தன ...... தனதான
பொன்னை விரும்பிய ......பொதுமாதர் புன்மை விரும்பியெ ...... தடுமாறும் என்னை விரும்பிநி ...... யொருகால்நின் எண்ணி விரும்பவு ...... மருள்வாயே மின்னை விரும்பிய ...... சடையாளர் மெய்யின் விரும்பிய ...... குருநாதா அன்னை விரும்பிய ...... குறமானை அண்மி விரும்பிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1302
பொதுப்பாடல்கள் மனைமக்கள் சுற்றம்
தனனத்த தத்த ...... தனதான
மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா வலையைக்க டக்க ...... அறியாதே வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் விழலுக்கி றைத்து ...... விடலாமோ சுனையைக்க லக்கி ...... விளையாடு சொருபக்கு றத்தி ...... மணவாளா தினநற்ச ரித்ர ...... முளதேவர் சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1303
பொதுப்பாடல்கள் வாரி மீதே
தானனா தானன ...... தந்ததான
வாரிமீ தேயெழு ...... திங்களாலே மாரவே ளேவிய ...... அம்பினாலே பாரெலா மேசிய ...... பண்பினாலே பாவியே னாவிம ...... யங்கலாமோ சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா சோதியே தோகைய ...... மர்ந்தகோவே மூரிமால் யானைம ...... ணந்தமார்பா மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1304
பொதுப்பாடல்கள் வான் அப்பு
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் ...... பிறவாதே ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன் நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே கானக் கொச்சைச் சொற்குற விக்குக் ...... கடவோனே காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1305
பொதுப்பாடல்கள் குருபர சரவண
தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான
குருபர சரவண பவசண் முககுக ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறு நெறென உலவுவி லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே ... அடிபடு முரசு தவில்பட கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவ சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள் பிரளய மிதுவென அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபய மபயமெ னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர் ... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1306
க்ஷேத்திரக் கோவை கும்பகோணம்
தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன ...... தனதான
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1307
பழமுதிர்ச்சோலை அகரமுமாகி
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1308
பழமுதிர்ச்சோலை இலவிதழ் கோதி
தனதன தான தான தனதன தான தான தனதன தான தான ...... தனதான
இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி ...... மிகவாதுற் றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேற ...... மதராஜன் கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரணப்ர தாப லீலை ...... மடமாதர் கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது கருதிய ஞான போத ...... மடைவேனோ கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிசகு டாரி யாயி ...... மகமாயி குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால வூணி ...... யபிராமி பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1309
பழமுதிர்ச்சோலை காரணமதாக
தானதன தான தந்த ...... தனதான
காரணம தாக வந்து ...... புவிமீதே காலனணு காதி சைந்து ...... கதிகாண நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே ஆரமுத மான தந்தி ...... மணவாளா ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1310
பழமுதிர்ச்சோலை சீலமுள தாயர்
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று ...... தெருவூடே வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு ...... புரிவாயே சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1311
பழமுதிர்ச்சோலை வீர மதன் நூல்
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான
வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள் வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல் வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப் பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு பாதகனு மாகி நின்று ...... பதையாமல் பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள் பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த பூவைவடி வானு கந்த ...... மருகோனே சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1312
பழமுதிர்ச்சோலை வாரண முகம்
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தந்த ...... தனதான
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1313
பழமுதிர்ச்சோலை ஆசை நாலுசதுர
தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1314
பழமுதிர்ச்சோலை கருவாகியெதாய்
தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன ...... தனதான
கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே செருவாயெதி ராமசு ரத்திரள் தலைமூளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் திகுதாவுண வாயுதி ரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா அருமாமறை யோர்கள்து தித்திடு புகர்வாரண மாதுத னைத்திகழ் அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே அழகானபொன் மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலைவி யப்புறு அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1315
பழமுதிர்ச்சோலை சீர் சிறக்கும் மேனி
தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன தானதத்த தான தனாதனா தன ...... தனதானா
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் மார்படைத்த கோடு பளீர் பளீ ரென ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி வாடைபற்று வேளை யடா வடா வென நீமயக்க மேது சொலாய் சொலா யென வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர் பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி பூமியுக்க வீசு குகா குகா திகழ் சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள் பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1316
பழமுதிர்ச்சோலை துடிகொள் நோய்
தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த ...... தனதான
துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1317
பழமுதிர்ச்சோலை பாசத்தால் விலை
தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள் நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள் சீவிக் கோதிமு டித்தள கத்திகள் பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத மாசுற் றேறிய பித்தளை யிற்பணி நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள் ...... அதிமோக வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ தேசிக் கானக முற்றதி னைப்புன மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள் சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா தேடிப் பாடிய சொற்புல வர்க்கித மாகத் தூதுசெ லத்தரில் கற்பக தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே ஆசித் தார்மன திற்புகு முத்தம கூடற் கேவைகை யிற்கரை கட்டிட ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ டாரத் தோடகி லுற்றத ருக்குல மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1318
பழமுதிர்ச்சோலை வாதினை அடர்ந்த
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த ...... தனதான
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=HCi-ufjshvU
Add (additional) Audio/Video Link
Back to Top
1319
பழமுதிர்ச்சோலை வார்குழையை
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான வாழ்வோடு சிறக்க அருள்வாயே வளமுடன் வாழ அருள்வாயே
வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி மாயநம னுக்கு ...... முறவாகி மாதவம ழித்து லீலைகள் மிகுத்து மாவடுவை யொத்த ...... விழிமாதர் சீருட னழைத்து வாய்கனிவு வைத்து தேனித ழளித்து ...... அநுபோக சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ வாரினை யறுத்து மேருவை மறித்து மாகனக மொத்த ...... குடமாகி வாரவணை வைத்து மாலளித முற்று மாலைகளு மொய்த்த ...... தனமாது தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகையுமை பெற்ற ...... புதல்வோனே சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து சோலைமலை யுற்ற ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1320
பழமுதிர்ச்சோலை அழகு தவழ்குழல்
தனன தனதன தனத்தத் தாத்த தனன தனதன தனத்தத் தாத்த தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக அவச இதமொழி படித்துக் காட்டி அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம் ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி எழுத வரியிடை வளைத்துக் காட்டி உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி உருகு கடிதட மொளித்துக் காட்டி உபய பரிபுர பதத்தைக் காட்டி உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ முழுகு மருமறை முகத்துப் பாட்டி கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா முடுகு முதலையை வரித்துக் கோட்டி அடியர் தொழமக வழைத்துக் கூட்டி முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர் பழைய கடதட முகத்துக் கோட்டு வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர் பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு குமர குலமலை யுயர்த்திக் காட்டு பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1321
பழமுதிர்ச்சோலை தலைமயிர் கொக்கு
தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித் தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும் திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ...... டுயிர்போமுன் திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய் கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப் புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக் கடுகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன் கனபடை கெட்டுத் தட்டற விட்டுத் திரைகட லுக்குட் புக்கிட எற்றிக் களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக் குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச் சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1322
பழமுதிர்ச்சோலை மலரணை ததும்ப
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ மணபரி மளங்கள் வேர்வை ...... யதனோடே வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின் முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட முகமுகமொ டொன்ற பாய ...... லதனூடே முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே சிலைநுத லிளம்பெண் மோகி சடையழ கியெந்தை பாதி திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக திகழயி லெறிந்த ஞான ......முருகோனே கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1323
புதிய பாடல்கள் கருவெனு மாயை
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
கருவெனு மாயை உருவினில் மூழ்கி வயதள வாக ...... நிலமீதில் கலைதெரி வாணர் கலைபல நூல்கள் வெகுவித மாக ...... கவிபாடித் தெருவழி போகி பொருளெனு மாசை திரவியம் நாடி ...... நெடிதோடிச் சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவித மாக ...... திரிவேனோ அருளநு போக குருபர னேஉன் அடியவர் வாழ ...... அருள்வோனே அரனிரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி ...... அருள்பாலா வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசு ...... வதிபாலா மிடலுட லாளர் அடரசுர் மாள விடுமயில் வேல ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1324
புதிய பாடல்கள் தங்க மிகுந்த
தந்த தனந்த தனத்த தானன தந்த தனந்த தனத்த தானன தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா
தங்க மிகுந்த முலைக்க டாமலை பொங்க விரும்பி யமுத்து மாலைகள் தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர் சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் கொங்கை குலுங்க வளைத்து வாயத ரங்க ளருந்தி ருசிக்க வேமத குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை கொண்ட வரிந்த விதத்தி னாடர சங்கி லிகொண்டு பிணித்து மாமயில் கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ திங்கள் அரும்பு சலத்தி லேவிடம் வந்த துகண்டு பயப்ப டாதவர் சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் சிங்க முகன்த லைவெட்டி மாமுகன் அங்க மறுந்து கிடக்க வேவரு சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா மந்தி ரதந்தி ரமுத்த யோகியர் அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள் வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1325
புனவாயில் உரையுஞ் சென்றது
தனனந் தந்தன தானன தந்தன தனனந் தந்தன தானன தந்தன தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான
உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சுபொ லானது கண்டயல் உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால் ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது உடலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி வரவொன் றும்பலி யாதினி என்றபின் உறவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ...... இயல்தோகை மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் ...... வருவாயே அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள கவியின் சங்கமி ராகவ புங்கவன் அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன் அருளுங் கண்டத ராபதி வன்புறு விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய அகமும் பைந்தொடி சீதைம றைந்திட ...... வழிதோறும் மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள் கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண் முழுதுங் கண்டந ராயணன் அன்புறு மருகன் தென்புன வாயில மர்ந்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1326
திருவெழுகூற்றிருக்கை ஓருரு வாகி
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
ஓருரு வாகிய தாரகப் பிரமத் தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை இருபிறப் பாளரி னொருவ னாயினை ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள் நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய மும்மதன் தனக்கு மூத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக் கிளையோ னாயினை ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை இருவினை மருந்துக் கொருகுரு வாயினை ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட் டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற ஏரகத் திறைவ னென இருந்தனையே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1327
மதுரை சைவ முதல்
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
Back to Top
1329
திருப்பூவணம் அறப்பாவை அத்தற்கு
தனத்தான தத்தத் ...... தனதானா தனத்தான தத்தத் ...... தனதானா
அறப்பாவை அத்தற் ...... கருள்பாலா அளித்தாது வெட்சித் ...... திருமார்பா குறப்பாவை அற்பிற் ...... புணர்வோனே குலத்தேவ வர்க்கப் ...... பரிபாலா மறப்பாத கத்துற் ...... றுழல்வேனோ மலர்த்தாள்வ ழுத்தக் ...... க்ருபையீவாய் சிறப்பான முத்திக் ...... கொருவாழ்வே திருப்பூவ ணத்திற் ...... பெருமாளே. ......... உரை ......... சிறப்பான முத்தியை அளிக்கக் கூடிய பூவணத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே! முருகா! நீ அறப்பாவையான தேவசேனையின் இனத்தைச் சார்ந்த தேவர்களுக்கு அருளுகின்றவன். எப்போதும் வெற்றியை அளிக்கக்கூடிய வெட்சி மாலையை மார்பினில் அணிந்தவன். குறப் பாவையாகிய வள்ளியின் அன்பிற்கு அடிமையானவன். தேவர்களின் குலம் பெருக பரிபாலனம் செய்வோன். இவ்வளவு உயரிய நீ, மிகக் கொடிய பாவங்கள் செய்து மாபாதகத்துள் உழலும் என்னைக் காத்து மலர்போன்ற உனது தாளை வணங்கிட அருள் செய்வாய்.
Add (additional) Audio/Video Link
Back to Top
1330
திருப்பூவணம் வானவராதி யோர்
தானனதான தானனதான தானனதான ...... தனதான தானனதான தானனதான தானனதான ...... தனதான
வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் ...... திடுசூரன் மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை ...... விடுதீரா கானவர்பாவை காதலனான காசணிபார ...... தனமார்பா காலனைமோது காலகபால காளகளேசர் ...... தருபாலா தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான ...... முதல்வோனே தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண ...... அருள்வாயே போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் ...... நனிமேவு பூவணமான மாநகர்வாழு நாதகுகேச ...... பெருமாளே. குறிப்பு: காளகளேசர்=விசத்தைக் கண்டத்திலுடையவர், போனகம்=போஜனம்=அன்னம். ......... உரை ......... வானவர்கள் அனைவரும் பத்மாசுரனால் சிறையில் அடைக்கப்பட்டனர். மிகவும் வலிமை பொருந்திய இந்த அசுரனின் மார்பினை இரண்டு கூறாக ஆக்கிடுமாறு வேலைவிடுத்த தீரனாகிய முருகப் பெருமானே! கானகத்தின் குறமகளான வள்ளியின் காதலுக்கு அடிமையானவனே! எமனை எதிர்த்து காலங்களையெல்லாம் கடந்து ஆலகால விசத்தையுண்ட பரமேசுரனின் மைந்தனே! தேன் உதிரும் நீபமாலையை எப்பொழுதும் அணிந்து சேவக ஞான முதல்வனாய் விளங்குபவனே. தீயகுணங்களைக் கொண்ட பாவியாகிய நான் உனது சேவடிகளைக் காண நீ அருளவேண்டும். வீதிகள் தோறும் அன்னதானம் நடைபெறும் சிறப்புப் பெற்ற திருப்பூவணமான மாநகரில் வாழும் நாதகுகேசப் பெருமானே, நீ எனக்கு அருளவேண்டும்.
Add (additional) Audio/Video Link
Back to Top
1331
திருப்பூவணம் பந்தப்பொற் பார
தந்தத்தத் தானன தானன தந்தத்தத் தானன தானன தந்தத்தத் தானன தானன ...... தனதானா
பந்தற்பொற் பாரப யோதர முந்தச்சிற் றாடைசெய் மேகலை பண்புற்றுத் தாளொடு வீசிய ...... துகிலோடே பண்டைச்சிற் சேறியில் வீதியில் கண்டிச்சித் தாரொடு மேவிடு பங்குக்கைக் காசுகொள் வேசையர் ...... பனிநீர்தோய் கொந்துச்சிப் பூவணி தோகையர் கந்தக்கைத் தாமரை யாலடி கும்பிட்டுப் பாடிசை வீணையர் ...... அநுராகங் கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய சண்டிச்சிக் சீயென வாழ்துயர் குன்றப்பொற் பாதக்ரு பாநிதி ...... அருள்வாயே அந்தத்துக் காதியு மாகியு மந்திக்குட் டானவ னானவ னண்டத்தப் பாலுற மாமணி ...... ஒளிவீசும் அங்கத்தைப் பாவைசெய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி சந்தத்திக் காளுநி சாசரர் வெந்துட்கத் தூளிப டாமெழ சண்டைச்சொற் றார்பட வேவயில் ...... விடுவோனே தங்கச்சக் ராயுதர் வானவர் வந்திக்கப் பேரரு ளேதிகழ் தம்பப்பொற் பூவண மேவிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1332
திருக்கானப்பேர் அனத்தோடொப்பா
தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான
அனத்தோடொப்பா மெனுநடை மடவியர் ...... அநுராகம் அதற்கேசிச்சீ இனமென துயிர்கெடல் ...... அழகாமோ உனைப்பாடிப்பே றுறுமொரு வரமினி ...... உதவாயோ உவப்பாகத்தே வர்கள்சிறை விடவிடும் ...... அயிலோனே முனைப்பாடிக்கே திரிதரும் அரிதிரு ...... மருகோனே முகிற்கே நத்தா விரிதரு கலபநன் ...... மயிலோனே தினைக்காவற்கே உரியவள் மனமகிழ் ...... மணவாளா திருக்கானப்பேர் நகர்தனி லினிதுறை ...... பெருமாளே. குறிப்பு: முனைப்பாடிக்கே=முன் ஆயர் பாடியில் நத்தா=விரும்பி.
Add (additional) Audio/Video Link
Back to Top
1333
திருக்கானப்பேர் கோலக்காதிற்
தானத்தானத் ...... தனதானா தானத்தானத் ...... தனதானா
கோலக்காதிற் ...... குழையாலே கோதிச்சேர்மைக் ...... குழலாலே ஞாலத்தாரைத் ...... துயரேசெய் நாரிக்காசைப் ...... படலாமோ மேலைத்தேவர்க் ...... கரியோனே வீரச்சேவற் ...... கொடியோனே காலப்பாசத் ...... துயர்தீராய் கானப்பேரிற் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1334
திருச்செந்தூர் கன்றிவரு நீல
வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு.-- --தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான
கன்றிவரு நீல குங்குமப டீர கஞ்சமலர் மேவு ...... முலைகாட்டி கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை கண்கள்கடை காட்டி ...... விலைகாட்டி நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி நம்பிவிடு மாத ...... ருடனாட்ட நஞ்சுபுரி தேரை யங்கமது வாக நைந்துவிடு மெற்கொன் ...... றருள்வாயே குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச் சென்றவடி வேலைக் ...... கொடுபோர்செய் மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி ...... புடைசூழ மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும் அந்தசுர காலப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1335
செங்குன்றாபுரம் வம்புங் கோபமும்
தந்தந் தானன தானன தானன தந்தந் தானன தானன தானன தந்தந் தானன தானன தானன ...... தனதான
வம்புங் கோபமு மேவசு ராதிகள் வந்தஞ் சாமலும் வானவர் பாலினில் மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் ...... வடிவேலா தம்பம் போலுறு மூடர்கள் மீதுக ரும்புந் தேனிகர் பாவுரை யாதுன தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் ...... புரிவாயே அம்பென் றேவிழி சேர்குற மாதுதன் இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும் மன்றுன் பால்வர மோகம தாவுற ...... வணைவோனே செம்பொன் மாமதில் வானுற வாவிகள் எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு ...... முருகோனே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1336
சுவாமிமலை வறுமைப் பாழ்பிணி
தனனத் தானன தாத்தத்த தானன தனனத் தானன தாத்தத்த தானன தனனத் தானன தாத்தத்த தானன ...... தனதானா
வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம் உருகிப் போனது தேற்றப்ப டாதினி மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென ...... அழையாயோ வலியப் போய்உடல் கூச்சப்ப டாமையும் இடியப் பேசிய நாசிக்க லாமையும் மறுசொற் காதுகள் கேட்கப்ப டாமையும் ...... வரலாமோ கறுவிப் பாய்புலி வேட்டைக்கு ளேவரு பசுவைப் போல்மிடி யாற்பட்ட பாடெழு கதையைப் பாரினி லார்க்குச்சொல் வேனினம் ...... அறியாயோ கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர் தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி ...... அலையாதே குறைபட் டேஉயிர் காத்துக்கொள் வாயென முறையிட் டோர்கரி கூப்பிட்ட நாளொரு குரலிற் போய்உயிர் மீட்டுக்கொள் வோர்திரு ...... மருகோனே குளிர்முத் தாலணி மூக்குத்தி யோடணி களபப் பூண்முகை பார்த்துப்பெண் மோகினி குவளைப் பார்வையில் மாட்டிக் கொளாதருள் ...... குருநாதா நிறையத் தேன்விழு பூக்கொத்தி லேகனி கிழியத் தான்விழு காய்கொத்தி லேமயில் நடனக் கால்படு தோப்புக்கு ளேகயல் ...... வயலூடே நதியைக் காவிரி யாற்றுக்கு ளேவரு வளமைச் சோழநன் நாட்டுக்கு ளேரக நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1337
பொதுப்பாடல்கள் காதின்மணி ஓலை
தானதன தானதத்த ...... தனதான
காதின்மணி ஓலையிட்டு ...... வருமானார் காமவலை யூடுபுக்கு ...... மதிமாழ்கி நீதிநெறி யேவிடுத்து ...... அலையாதே நீயுன்இரு தாள்அளிக்க ...... வரவேணும் ஆதிமக மாயிபெற்ற ...... குமரேசா ஆறுமுக மேபடைத்த ...... குருநாதா தீதில்அடி யார்மனத்தில் ...... உறைவோனே தேவர்குடி வாழவைத்த ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
1338
பழநி சிவணிதா வியமனது
தனனதா தனதனன தனனதா தனதனன தனனதா தனதனன ...... தனதான
சிவணிதா வியமனதும் அழகுமா ணடைமதன சிலைஉலா வியபுருவம் ...... விழிசேல்கள் திகழுமா மதிமுகமும் இருளுலா வியகுழல்கள் திருவினோ வியகனக ...... தனபாரம் தவளவா ணகையுமினின் இடையுலா வியநடையர் சரசமா மயில்கள்என ...... இளையோர்கள் தமிழின்மோ கினிஎனவே சொலியுமே பணியுமொரு சரசமோ இனியுதற ...... அருள்வாயே புவனிகா டடையதுயில் பரமர்நா டடையசடை புகழெலா மடையநகை ...... ஒளிமீதே பொடிகளால் மருவஇள வெயிலுலா வியகழல்கள் பொலியவே மழுவுழையும் ...... உடனாட பவுரிநா டகமருளும் எனதுதா யிடமருவு பரமரா சியனருளு ...... முருகோனே பழநிமா மலைமருவும் எனதுமோ கினியமளி பழகிநா யெனைமருவு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link
Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400