![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி! திருப்புகழ் மணிமாலை தொகுப்பு
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
முதல் தொகுப்பு
இரண்டாம் தொகுப்பு
- Hide Easy Version
மணிமாலை 2.001 - திருப்புகழ் 5
விடமடைசு வேலை
(விநாயகர்) Thiruppugazh Mani Maalai second List
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம்
விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர்
வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது
கலவி தனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு
கழல் இணைகள் சேர அருள்வாயே
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத
கணபதி எனு நாமம் முறை கூற
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை முகவோனே. Back to Top
மணிமாலை 2.002 - திருப்புகழ் 15
தடக்கைப் பங்கயம்
(திருப்பரங்குன்றம்)
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
தனத்தத் தந்தனந் ......தனதான தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே. தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல் தண்
டமிழ்க்குத் தஞ்சமென்று உலகோரைத்
தவித்துச் சென்றிரந்து உளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரந்தனை ஊசற்
கடத்தை துன்பமண் சடத்தை துஞ்சிடுங்
கலத்தை பஞ்சஇந்த்ரிய வாழ்வை
கணத்திற் சென்று இடம் திருத்தி தண்டையங்
கழற்கு தொண்டுகொண் டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
பணித்து தம்பயந் தணித்து சந்ததம்
பரத்தைக் கொண்டிடும் தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும்
அங்குலத்திற் கங்கைதன் சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.003 - திருப்புகழ் 102
வெங்காளம் பாணம்
(திருச்செந்தூர்)
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே. வெங்கா ளம்பாணஞ்சேல் கண் பால்
மென்பாகு அஞ்சொற் குயில் மாலை
மென் கேசந்தா னென்றே கொண்டார்
மென்றோள் ஒன்றப் பொருள்தேடி
வங்காளஞ் சோனஞ் சீனம்போய்
வன்பே துன்பப் படலாமோ
மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தேனுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் கினியோனே
குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும்
போய் மங்கப் பொருகோபா
கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார்
கன்றே உம்பர்க் கொருநாதா
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.004 - திருப்புகழ் 118
இரு செப்பென
(பழநி)
Back to Top
மணிமாலை 2.005 - திருப்புகழ் 218
செகமாயை உற்று
(சுவாமிமலை)
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித் ...... திடுமாதர்
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற் ...... றணைமீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற் றுழலக் ...... கடவேனோ
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
குரியத் திருமைத் ...... துனவேளே
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
றசுரக் கிளையைப் ...... பொருவோனே
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
பயனுற் றறியப் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே. இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து
இளகிப் புளகித்திடு(ம்) மாதர்
இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு உற்று
இறுகக் குறுகிக் குழல் சோரத்
தரு மெய்ச் சுவை உற்று இதழைப் பருகித்
தழுவிக் கடி சுற்று அணை மீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவம் அற்று உழலக் கடவேனோ
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு
உரியத் திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிர் உற்ற
அசுரக் கிளையைப் பொருவோனே
பரிவு உற்று அரனுக்கு அருள் நல் பொருளைப்
பயன் உற்று அறியப் பகர்வோனே
பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே.
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ...... தனதான செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே. செகமாயை யுற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடல் ஊறி
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர்புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாது எனக்கு உன் அடிகாண வைத்த
தனியேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.006 - திருப்புகழ் 262
குயில் ஒன்று
(திருத்தணிகை)
Back to Top
மணிமாலை 2.008 - திருப்புகழ் 308
ஈனமிகுத்துள பிறவி
(ஆறு திருப்பதி)
தனனந் தனனத் தனனந் தனனத்
தனனந் தனனத் ...... தனதான குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் ...... கணையாலே
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் ...... தனலாலே
புயல்வந் தெறியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் ...... கலராலே
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக் ...... கிடையாதோ
சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் ...... பொரும்வீரா
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித் ...... திருமார்பா
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் ...... பெருமாளே. குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலையக்
கொலை இன்ப மலர்க் கணையாலே
குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக்
கொடி கொங்கையின் முத்து அனலாலே
புயல் வந்து எறி அக்கடல் நின்று அலற
பொரும் மங்கையர் உக்க அலராலே
புயம் ஒன்ற மிகத் தளர்கின்ற தனிப்
புயம் வந்து அணையக் கிடையாதோ
சயிலம் குலையத் தடமும் தகரச்
சமன் நின்று அலைய பொரும் வீரா
தரு மங்கை வனக் குற மங்கையர் மெய்த்
தனம் ஒன்றும் அணித் திரு மார்பா
பயிலும் ககனப் பிறை தண் பொழிலில்
பணியும் தணிகைப் பதி வாழ்வே
பரமன் பணியப் பொருள் அன்று அருளி
பகர் செம் கழநிப் பெருமாளே.
தானதனத் தனதனன ...... தனதான
தானதனத் தனதனன ...... தனதான ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
யானுமுனக் கடிமையென ...... வகையாக
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
நாணமகற் றியகருணை ...... புரிவாயே
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே. ஈனமிகுத்துள பிறவி யணுகாதே
யானுமுனக்கு அடிமையென வகையாக
ஞானஅருள் தனையருளி வினைதீர
நாணம் அகற்றிய கருணை புரிவாயே
தானதவத்தினின்மிகுதி பெறுவோனே
சாரதியுத்தமி துணைவ முருகோனே
ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.009 - திருப்புகழ் 418
கோடு ஆன மடவார்கள்
(திருவருணை)
Back to Top
மணிமாலை 2.010 - திருப்புகழ் 451
இருவினையின் மதி
(சிதம்பரம்)
தானான தனதான ...... தனதான கோடான மடவார்கள் ...... முலைமீதே
கூர்வேலை யிணையான ...... விழியூடே
ஊடாடி யவரோடு ...... முழலாதே
ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக
நீடோடி மயில்மீது ...... வருவோனே
சூடான தொருசோதி ...... மலைமேவு
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே. கோடு ஆன மடவார்கள் முலை மீதே
கூர் வேலை இணையான விழி ஊடே
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராகத் திகழ் பாதம்
அருள்வாயே
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது
வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர்
பெருமாளே.
தனதனன தனன தந்தத் ...... தனதானா
தனதனன தனன தந்தத் ...... தனதானா
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
கனகசபை மருவு கந்தப் ...... பெருமாளே. இருவினையின் மதிம யங்கி திரியாதே
எழுநரகில் உழலும் நெஞ்சுற்று அலையாதே
பரமகுரு அருள்நினைந்திட்டு உணர்வாலே
பரவுதரி சனையை என்று எற்கு அருள்வாயே
தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே
சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணைநெறி புரியும் அன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.011 - திருப்புகழ் 363
நாடித் தேடி
(திருவானைக்கா)
தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ...... பெருமாளே. நாடித் தேடித் தொழுவார்பால்
நான் நத்தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதி ஞான
வாழ்வைச் சேர தருவாயே
பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத்து அருள்வோனே
ஆடற் றோகைக்கு இனியோனே
ஆனைக் காவிற் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.012 - திருப்புகழ் 1285
கொடிய மதவேள்
(பொதுப்பாடல்கள்)
தனதனன தானத் ...... தனதான கொடியமத வேள்கைக் ...... கணையாலே
குரைகணெடு நீலக் ...... கடலாலே
நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே
நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே
கடியரவு பூணர்க் ...... கினியோனே
கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே
அடியவர்கள் நேசத் ...... துறைவேலா
அறுமுகவி நோதப் ...... பெருமாளே. கொடியமத வேள்கைக் கணையாலே
குரைகண் நெடு நீலக் கடலாலே
நெடியபுகழ் சோலைக் குயிலாலே
நிலைமைகெடு மானைத் தழுவாயே
கடியரவு பூணர்க்கு இனியோனே
கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே
அடியவர்கள் நேசத்து உறைவேலா
அறுமுக விநோதப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.013 - திருப்புகழ் 932
இருவினைப் பிறவி
(திருப்பாண்டிக்கொடுமுடி)
தனதனத் தனனத் ...... தனதான இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரியயற் கறிதற் ...... கரியானே
அடியவர்க் கெளியற் ...... புதநேயா
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே. இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட்டு அலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ
அரியயற்கு அறிதற்கு அரியானே
அடியவர்க்கு எளிய அற்புதநேயா
குருவெனச் சிவனுக்கு அருள்போதா
கொடுமுடிக் குமரப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.014 - திருப்புகழ் 654
சிகரம் அருந்த
(மாயாபுரி)
தனன தனந்த தானன ...... தனதான
தனன தனந்த தானன ...... தனதான சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்
சிதறி யலைந்து போவது ...... செயலாசை
மகர நெருங்க வீழ்வது ...... மகமாய
மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே
அகர நெருங்கி னாமய ...... முறவாகி
அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக்
ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை
கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே. சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்
சிதறி யலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்திடா அருள்புரிவாயே
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி
அவசமொடுங் கையாறொடும் முனம் ஏகி
ககனம் இசைந்த சூரியர்
புக கருணை பொழிந்து
மாயை மேவிய பெருமாளே. Back to Top
மணிமாலை 2.015 - திருப்புகழ் 1290
தீது உற்றே எழு
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 2.016 - திருப்புகழ் 1286
கோடான மேருமலை
(பொதுப்பாடல்கள்)
தானத் தானன ...... தந்ததான தீதுற் றேயெழு ...... திங்களாலே
தீயைத் தூவிய ...... தென்றலாலே
போதுற் றாடும ...... நங்கனாலே
போதப் பேதைந ...... லங்கலாமோ
வேதத் தோனைமு ...... னிந்தகோவே
வேடப் பாவைவி ...... ரும்புமார்பா
ஓதச் சூதமெ ...... றிந்தவேலா
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே. தீது உற்றே எழு(ம்) திங்களாலே
தீயைத் தூவிய தென்றலாலே
போது உற்று ஆடும் அனங்கனாலே
போதப் பேதை நலங்கலாமோ
வேதத்தோனை முனிந்த கோவே
வேடப் பாவை விரும்பும் மார்பா
ஓதச் சூதம் எறிந்த வேலா
ஊமைத் தேவர்கள் தம்பிரானே.
Back to Top
மணிமாலை 2.017 - திருப்புகழ் 1302
மனைமக்கள் சுற்றம்
(பொதுப்பாடல்கள்)
தானான தானதனத் ...... தனதான கோடான மேருமலைத் ...... தனமானார்
கோமாள மானவலைக் ...... குழலாதே
நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான்
நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ
ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே
ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே
மாடேறு மீசர்தமக் ...... கினியோனே
மாதானை யாறுமுகப் ...... பெருமாளே. கோடு ஆன மேரு மலைத் தனம் மானார்
கோமாளம் ஆனவலைக்கு உழலாதே
நாள் தோறும் மேன்மை படைத்திடவே தான்
நாயேனை ஆள நினைத்திட ஒணாதோ
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே
ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே
மா தானை ஆறு முகப் பெருமாளே.
தனனத்த தத்த ...... தனதான மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
வலையைக்க டக்க ...... அறியாதே
வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன்
விழலுக்கி றைத்து ...... விடலாமோ
சுனையைக்க லக்கி ...... விளையாடு
சொருபக்கு றத்தி ...... மணவாளா
தினநற்ச ரித்ர ...... முளதேவர்
சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே. மனைமக்கள் சுற்றம் எனுமாயா
வலையைக் கடக்க அறியாதே
வினையிற்செ ருக்கி யடிநாயேன்
விழலுக்கு இறைத்து விடலாமோ
சுனையைக்கலக்கி விளையாடு
சொருபக்கு றத்தி மணவாளா
தினநற்ச ரித்ர முளதேவர்
சிறைவெட்டி விட்ட பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.018 - திருப்புகழ் 639
எதிரிலாத பத்தி
(கதிர்காமம்)
தனன தான தத்த ...... தனதான
தனன தான தத்த ...... தனதான எதிரி லாத பத்தி ...... தனைமேவி
இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும்
இதய வாரி திக்கு ...... ளுறவாகி
எனது ளேசி றக்க ...... அருள்வாயே
கதிர காம வெற்பி ...... லுறைவோனே
கனக மேரு வொத்த ...... புயவீரா
மதுர வாணி யுற்ற ...... கழலோனே
வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே. எதிரிலாத பத்தி தனைமேவி
இனிய தாள்நினைப்பை இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி
எனதுளே சிறக்க அருள்வாயே
கதிர காம வெற்பில் உறைவோனே
கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.019 - திருப்புகழ் 942
அவசியமுன் வேண்டி
(திருமுருகன்பூண்டி)
தனதனனந் தாந்தத் ...... தனதான அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்
சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் ...... கரியானே
சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே
திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே. அவசியமுன் வேண்டிப் பலகாலும்
அறிவினுணர்ந்து ஆண்டுக்கொரு நாளில்
தவசெபமுந் தீண்டிக் கனிவாகி
சரணமதும் பூண்டற்கு அருள்வாயே
சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய்
சடுசமயங் காண்டற்கு அரியானே
சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே
திருமுருகன் பூண்டிப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.020 - திருப்புகழ் 1293
நாரியர்கள் ஆசை
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 2.021 - திருப்புகழ் 1303
வாரி மீதே
(பொதுப்பாடல்கள்)
தானதன தானனத் ...... தனதான நாரியர்க ளாசையைக் ...... கருதாதே
நானுனிரு பாதபத் ...... மமுநாட
ஆரமுத மானசர்க் ...... கரைதேனே
ஆனஅநு பூதியைத் ...... தருவாயே
காரணம தானவுத் ...... தமசீலா
கானகுற மாதினைப் ...... புணர்வோனே
சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா
தோகைமயில் வாகனப் ...... பெருமாளே. நாரியர்கள் ஆசையைக் கருதாதே
நான் உன் இரு பாத பத்மமும் நாட
ஆர அமுதமான சர்க்கரை தேனே
ஆன அநுபூதியைத் தருவாயே
காரணம் அதான உத்தம சீலா
கான குற மாதினைப் புணர்வோனே
சூரர் கிளை தூள் எழப் பொரும் வேலா
தோகை மயில் வாகனப் பெருமாளே.
தானனா தானன ...... தந்ததான வாரிமீ தேயெழு ...... திங்களாலே
மாரவே ளேவிய ...... அம்பினாலே
பாரெலா மேசிய ...... பண்பினாலே
பாவியே னாவிம ...... யங்கலாமோ
சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா
சோதியே தோகைய ...... மர்ந்தகோவே
மூரிமால் யானைம ...... ணந்தமார்பா
மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே. வாரிமீதேயெழு திங்களாலே
மாரவே ளேவிய அம்பினாலே
பாரெலாம் ஏசிய பண்பினாலே
பாவியேன் ஆவி மயங்கலாமோ
சூரனீள் மார்பு தொளைந்த வேலா
சோதியே தோகையமர்ந்த கோவே
மூரிமால் யானைமணந்தமார்பா
மூவர்தேவாதிகள் தம்பிரானே. Back to Top
மணிமாலை 2.022 - திருப்புகழ் 1295
நித்தம் உற்றுனை
(பொதுப்பாடல்கள்)
தத்தனத் தனனதத்த ...... தனதான நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக
நத்தியு தமதவத்தி ...... னெறியாலே
லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள
விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே
குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே
குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே. நித்தம் உற்றுனைநினைத்து மிகநாடி
நிட்டைபெற்றியல்கருத்தர் துணையாக
நத்தி உ(த்)தம தவத்தின் நெறியாலே
லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே
வெற்றி விக்ரமவரக்கர் கிளைமாள விட்ட
நத்துகரனுக்கு மருகோனே
குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே
குக்குடக் கொடிதரித்த பெருமாளே. Back to Top
மணிமாலை 2.023 - திருப்புகழ் 1294
நாளு மிகுத்த
(பொதுப்பாடல்கள்)
தான தனத்த ...... தனதான நாளு மிகுத்த ...... கசிவாகி
ஞான நிருத்த ...... மதைநாடும்
ஏழை தனக்கு ...... மநுபூதி
ராசி தழைக்க ...... அருள்வாயே
பூளை யெருக்கு ...... மதிநாக
பூண ரளித்த ...... சிறியோனே
வேளை தனக்கு ...... சிதமாக
வேழ மழைத்த ...... பெருமாளே. நாளு மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தம் அதைநாடும்
ஏழை தனக்கும் அநுபூதி
ராசி தழைக்க அருள்வாயே
பூளை யெருக்கு மதிநாக
பூண ரளித்த சிறியோனே
வேளை தனக்கு உசிதமாக
வேழ மழைத்த பெருமாளே. Back to Top
மணிமாலை 2.024 - திருப்புகழ் 1297
பட்டுப் படாத
(பொதுப்பாடல்கள்)
தத்தத் தனான ...... தனதான பட்டுப் படாத ...... மதனாலும்
பக்கத்து மாதர் ...... வசையாலும்
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
தர்க்கித்த சூரர் ...... குலகாலா
மட்டுப் படாத ...... மயிலோனே
மற்றொப்பி லாத ...... பெருமாளே. பட்டுப் படாத மதனாலும்
பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டுச் சுடாத நிலவாலும்
துக்கத்தில் ஆழ்வது இயல்போதான்
தட்டுப் படாத திறல்வீரா
தர்க்கித்த சூரர் குலகாலா
மட்டுப் படாத மயிலோனே
மற்றொப்பி லாத பெருமாளே. Back to Top
மணிமாலை 2.025 - திருப்புகழ் 1298
பரவைக்கு எத்தனை
(பொதுப்பாடல்கள்)
தனனத் தத்தன ...... தனதான பரவைக் கெத்தனை ...... விசைதூது
பகரற் குற்றவ ...... ரெனமாணுன்
மரபுக் குச்சித ...... ப்ரபுவாக
வரமெத் தத்தர ...... வருவாயே
கரடக் கற்பக ...... னிளையோனே
கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா
அரனுக் குற்றது ...... புகல்வோனே
அயனைக் குட்டிய ...... பெருமாளே. பரவைக்கு எத்தனை விசைதூது
பகரற்கு உற்றவர் என மாண்
உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக
வரம் மெத்தத் தர வருவாயே
கரடக் கற்பகன் இளையோனே
கலைவிற் கட்குற மகள்கேள்வா
அரனுக்கு உற்றது புகல்வோனே
அயனைக் குட்டிய பெருமாளே. Back to Top
மணிமாலை 2.026 - திருப்புகழ் 1301
பொன்னை விரும்பிய
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 2.027 - திருப்புகழ் 560
பொருள்கவர் சிந்தை
(திருசிராப்பள்ளி)
தன்ன தனந்தன ...... தனதான பொன்னை விரும்பிய ......பொதுமாதர்
புன்மை விரும்பியெ ...... தடுமாறும்
என்னை விரும்பிநி ...... யொருகால்நின்
எண்ணி விரும்பவு ...... மருள்வாயே
மின்னை விரும்பிய ...... சடையாளர்
மெய்யின் விரும்பிய ...... குருநாதா
அன்னை விரும்பிய ...... குறமானை
அண்மி விரும்பிய ...... பெருமாளே. பொன்னை விரும்பிய பொதுமாதர்
புன்மை விரும்பியெ தடுமாறும்
என்னை விரும்பி நி யொருகால்
நின்(னை) எண்ணி விரும்பவும் அருள்வாயே
மின்னை விரும்பிய சடையாளர்
மெய்யின் விரும்பிய குருநாதா
அன்னை விரும்பிய குறமானை
அண்மி விரும்பிய பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.028 - திருப்புகழ் 627
பிறர் புகழ் இன்சொல்
(குன்றக்குடி)
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து ...... பனிநீர்தோய்
புளகித கொங்கை யிளகவ டங்கள்
புரளம ருங்கி ...... லுடைசோர
இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து
இணைதரு பங்க ...... அநுராகத்
திரிதலொ ழிந்து மனதுக சிந்து
னிணையடி யென்று ...... புகழ்வேனோ
மருள்கொடு சென்று பரிவுட னன்று
மலையில்வி ளைந்த ...... தினைகாவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த ...... முருகோனே
தெருளுறு மன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில் ...... முதனாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் ...... பெருமாளே. பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுகு அகில் சந்து பனி நீர் தோய்
புளகித கொங்கை இளக வடங்கள்
புரள மருங்கில் உடை சோர
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து
இணை தரு பங்க அநுராகத்
திரிதல் ஒழிந்து மனது கசிந்து
உன் இணை அடி என்று புகழ்வேனோ
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று
மலையில் விளைந்த தினை காவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த முருகோனே
தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு
திரி சிர குன்றில் முதல் நாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.029 - திருப்புகழ் 200
வேய் இசைந்து
(பழநி)
தனதன தந்தத் தனதன தந்தத்
தனதன தந்தத் ...... தனதான பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
பருவம தன்கைச் ...... சிலையாலே
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
பெருவழி சென்றக் ...... குணமேவிச்
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
செயலும ழிந்தற் ...... பமதான
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
சிலசில பங்கப் ...... படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன்
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
கிழிபட துன்றிப் ...... பொருதோனே
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
பனமநு வுஞ்சொற் ...... குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
குடிவளர் கந்தப் ...... பெருமாளே. பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தைப்
பருவ மதன் கைச் சிலையாலே
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய்ப்
பெரு வழி சென்று அக் குணம் மேவி
சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிச்
செயலும் அழிந்து அற்பம் அது ஆன
தெரிவையர் தங்கள் கயலை விரும்பிச்
சிலசில பங்கப் படலாமோ
கெறு வித வஞ்சக் கபடமொடு எண்
திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன்
கிளையுடன் மங்கத் தலை முடி சிந்தக்
கிழி பட துன்றிப் பொருதோனே
குறு முநி இன்பப் பொருள் பெற அன்று
உற்பன மநுவும் சொல் குரு நாதா
குலகிரி துங்கக் கிரி உயர் குன்றக்குடி
வளர் கந்தப் பெருமாளே.
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே. வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே
உலைந்து அவமே திரிந்து உள்ளமே
கவன்று அறிவே கலங்கிட வெகு தூரம்
போய் அலைந்து உழலாகி நொந்து
பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
பூதலம் தனிலே மயங்கிய மதி போக
போது கங்கையின் நீர் சொரிந்து
இருபாத பங்கயமே வணங்கியே
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
தீ இசைந்து எழவே இலங்கையில்
ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
தேசம் எங்கணுமே புரந்திடு
சூர் மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச
ஓர் போதகம் தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.030 - திருப்புகழ் 189
மூல மந்திரம்
(பழநி)
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே. மூல மந்திரம் ஓதல் இங்கிலை
ஈவது இங்கிலை நேயம் இங்கிலை
மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை மடவார்கள்
மோகம் உண்டு அதி தாகம் உண்டு
அபசாரம் உண்டு அப ராதம் உண்டு இடு
மூகன் என்றொரு பேரும் உண்டு அருள் பயிலாத
கோலமும் குண வீன துன்பர்கள்
வார்மையும் பல வாகி வெந்தெழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி
கூடு கொண்(டு) உழல்வேனை அன்பொடு
ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து அவ்
அசோகு வெந்து அமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட
மாறனும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை அந்தரி
ஆதி யந்தமுமான சங்கரி குமரேசா
ஆரணம்பயில் ஞான புங்கவ
சேவலங்கொடியான பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.031 - திருப்புகழ் 400
இருவர் மயலோ
(திருவருணை)
தனன தனனா தனன தனனா
தனன தனனா ...... தனதான இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ ...... அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா ...... னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா ...... கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா ...... கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா ...... கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் ...... விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் ...... பெருமாளே. இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ அணுகாத
இருடி அயன்மால் அமரர் அடியார்
இசையும் ஒலிதான் இவைகேளாது
ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதான்
உனது கிருபாகரம் ஏதோ
பரம குருவாய் அணுவில் அசைவாய்
பவன முதலாகிய பூதப்
படையும் உடையாய் சகல வடிவாய்
பழைய வடிவாகியவேலா
அரியும் அயனோடு அபயம் எனவே
அயிலை யிருள்மேல் விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.032 - திருப்புகழ் 433
பாலாய் நூலாய்
(திருவருணை)
Back to Top
மணிமாலை 2.033 - திருப்புகழ் 112
ஆதாளிகள் புரி
(பழநி)
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
பாடா யீடற் ...... றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக் ...... குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக் ...... கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் ...... கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப் ...... பொருளோனே
வேலா பாலா சீலா காரா
வேளே வேடக் ...... கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப் ...... பெருமாளே. பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்ச் சொல் கொடியார் தாம்
பாடா வாடா வேள் தாவாலே
பாடாய் ஈடு அற்று இடை பீறும்
தோலாலே காலாலே ஊனாலே
சூழ் பாசக் குடில் மாசு
தோயா மாயா ஓயா நோயால்
சோர்வாய் மாளக் கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் கிரியோனே
ஞான ஆசார வான் ஆள் கோனே
நானா வேதப் பொருளோனே
வேலா பாலா சீல ஆகாரா
வேளே வேடக் கொடி கோவே
வீர ஆதாரா ஆறு ஆதாரா
வீரா வீரப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.034 - திருப்புகழ் 37
ஓராது ஒன்றை
(திருச்செந்தூர்)
தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு ...... மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி ...... குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை ...... யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் ...... புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற ...... மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு ...... திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய ...... குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் ...... பெருமாளே. ஆதாளிகள் புரி கோலாகல விழி
யாலே அமுது எனு(ம்) மொழியாலே
ஆழ் சீர் இள நகையாலே துடி இடை
யாலே மண மலி குழலாலே
சூது ஆர் இள முலையாலே அழகிய
தோடு ஆர் இரு குழை அதனாலே
சோரா மயல் தரு மானார் உறவு இடர்
சூழா வகை அருள் புரிவாயே
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில்
பூணாது எதிர் உற மதியாதே
போர் ஆடிய அதி சூரா பொறு பொறு
போகாதே என அடு திறலோனே
வேதா உடன் நெடு மால் ஆனவன் அறி
யாதார் அருளிய குமரேசா
வீரா புரி கோவே பழநியுள்
வேலா இமையவர் பெருமாளே.
தானா தந்தத் தானா தந்தத்
தானா தந்தத் ...... தனதானா ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் ...... டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் ...... டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் ...... குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் ...... கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் ...... தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் ...... கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் ...... பெருமாளே. ஓராது ஒன்றை
பாராது
அந்தத்தோடே வந்திட்டு
உயிர்சோர ஊடா
நன்றற் றார்போல் நின்று
எட்டாமால் தந்திட்டு
உழல்மாதர்
கூரா அன்பிற் சோரா நின்று
அக்கு ஓயா நின்று உட்குலையாதே
கோடு ஆர் செம்பொற் றோளா
நின்சொற் கோடாது
என்கைக்கு அருள்தாராய்
தோரா வென்றிப் போரா
மன்றற் றோளா
குன்றைத் தொளையாடீ
சூதாய் எண் திக்கு ஏயா
வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா
சீரார் கொன்றைத்தார் மார்பொன்ற
சேவேறு எந்தைக்கு இனியோனே
தேனே
அன்பர்க்கேயாம் இன்சொற் சேயே
செந்தில் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.035 - திருப்புகழ் 331
அற்றைக் கற்றை
(காஞ்சீபுரம்)
Back to Top
மணிமாலை 2.037 - திருப்புகழ் 660
கள்ளம் உள்ள
(வெள்ளிகரம்)
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத் ...... தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் ...... பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப் ...... பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் ...... களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து
அத்தத்து அத்தம் தருவோர் தாள் அர்ச்சித்து இச்சித்து
அக்கத்து அக்கம் திக்குத் தொக்குக் குடில் பேணி
செற்றைப் புன் சொல் கற்றுக் கற்று
செத்துச் செத்துப் பிறவாதே
செப்பச் செப்ப பச்சைப் பச்சை
செச்சைச் செச்சைக் கழல் தாராய்
துற்றுப் பின் புக்கு உற்றக் கொக்கை
துட்கத் திட்கப் பொரும் வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்க
சொர்க்கத் தத்தைக்கு இனியோனே
கற்றைப் பொற்றைப் பற்றிக் குத்தி
கத்தக் கத்த களைவோனே
கற்புச் சத்தி பொற்புச் சத்தி
கச்சிச் சொக்கப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.038 - திருப்புகழ் 661
தொய்யில் செய்யில்
(வெள்ளிகரம்)
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ...... தனதான கள்ள முள்ள வல்ல வல்லி
கையி லள்ளி ...... பொருளீயக்
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
கல்வி செல்வர் ...... கிளைமாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
மல்லல் சொல்ல ...... முடியாதே
ஐய ரைய மெய்யர் மெய்ய
ஐய செய்ய ...... கழல்தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
வள்ளி கிள்ளை ...... மொழியாலே
மைய லெய்து மைய செய்யில்
வையில் வெள்வ ...... ளைகளேற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல ...... பெருமாளே. கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே
ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே
மையல் எய்தும் ஐய
செய்யில் வையில் வெள் வளைகள் ஏற
மெள்ள மள்ளர் கொய்யு(ம்) நெல்லின் வெள்ள வெள்ளிநகர்
வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.039 - திருப்புகழ் 194
வரதா மணி நீ
(பழநி)
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய ...... தனதான தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய ...... இடையாலுந்
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
சொல்லு கள்ள ...... விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல ...... குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ ...... ரையிலேனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை ...... முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல ...... பெருமாளே. தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய
இடையாலும்
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள
விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு(ம்) நல்ல குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை
மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு(ம்) செல்வ பிள்ளை
முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர்
வாழ்வே
வெய்ய சையவல்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.
தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான வரதா மணிநீ ...... யெனவோரில்
வருகா தெதுதா ...... னதில்வாரா
திரதா திகளால் ...... நவலோக
மிடவே கரியா ...... மிதிலேது
சரதா மறையோ ...... தயன்மாலும்
சகலா கமநூ ...... லறியாத
பரதே வதையாள் ...... தருசேயே
பழனா புரிவாழ் ...... பெருமாளே. வரதா மணிநீயென ஓரில்
வருகா தெது எதுதான் அதில் வாரா(து)
இரதாதிகளால் நவலோகம்
இடவே கரியாம் இதில் ஏது
சரதா மறையோது அயன்மாலும்
சகலாகமநூல் அறியாத
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.040 - திருப்புகழ் 646
மாதர் வசமாய்
(கதிர்காமம்)
தானதன தானத் ...... தனதான மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும்
மாதவமெ ணாமற் ...... றிரிவாரும்
தீதகல வோதிப் ...... பணியாரும்
தீநரக மீதிற் ...... றிகழ்வாரே
நாதவொளி யேநற் ...... குணசீலா
நாரியிரு வோரைப் ...... புணர்வேலா
சோதிசிவ ஞானக் ...... குமரேசா
தோமில் கதிர்காமப் ...... பெருமாளே. மாதர்வசமாயுற்று உழல்வாரும்
மாதவம் எ(ண்)ணாமல் திரிவாரும்
தீதகல ஓதிப் பணியாரும்
தீநரக மீதில் திகழ்வாரே
நாதவொளியே
நற் குணசீலா
நாரியிருவோரைப் புணர்வேலா
சோதிசிவ ஞானக் குமரேசா
தோமில் கதிர்காமப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.041 - திருப்புகழ் 1281
இத்தரணி மீதில்
(பொதுப்பாடல்கள்)
தத்ததன தானத் ...... தனதான இத்தரணி மீதிற் ...... பிறவாதே
எத்தரொடு கூடிக் ...... கலவாதே
முத்தமிழை யோதித் ...... தளராதே
முத்தியடி யேனுக் ...... கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா
சத்தசொரு பாபுத் ...... தமுதோனே
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே. இத்தரணி மீதிற் பிறவாதே
எத்தரொடு கூடிக் கலவாதே
முத்தமிழை யோதித் தளராதே
முத்தி அடியேனுக்கு அருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா
சத்தசொருபா
புத்தமுதோனே
நித்தியக்ருதா
நற் பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.042 - திருப்புகழ் 1283
கருப்பற்று ஊறி
(பொதுப்பாடல்கள்)
தனத்தத் தானத் ...... தனதான கருப்பற் றூறிப் ...... பிறவாதே
கனக்கப் பாடுற் ...... றுழலாதே
திருப்பொற் பாதத் ...... தநுபூதி
சிறக்கப் பாலித் ...... தருள்வாயே
பரப்பற் றாருக் ...... குரியோனே
பரத்தப் பாலுக் ...... கணியோனே
திருக்கைச் சேவற் ...... கொடியோனே
செகத்திற் சோதிப் ...... பெருமாளே. கருப்பற்று ஊறிப் பிறவாதே
கனக்கப் பாடுற்று உழலாதே
திருப்பொற் பாதத்து அநுபூதி
சிறக்கப் பாலித்து அருள்வாயே
பரப்பற்றாருக்கு உரியோனே
பரத்து அப்பாலுக்கு அணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே
செகத்திற் சோதிப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.043 - திருப்புகழ் 132
கருகி அகன்று
(பழநி)
Back to Top
மணிமாலை 2.044 - திருப்புகழ் 401
இருவினை அஞ்ச
(திருவருணை)
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான கருகிய கன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று ...... துதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு ...... பலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று ...... தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று ...... பெறுவேனோ
முருகக டம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் ...... முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற ...... வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி ...... மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த ...... பெருமாளே. கருகி அகன்று வரி செறி கண்கள்
கயல் நிகர் என்று துதி பேசி
கலை சுருள் ஒன்று(ம்) மிடைபடுகின்ற
கடி விடம் உண்டு பல நாளும்
விரகு உறு சண்ட வினை உடல் கொண்டு
விதி வழி நின்று தளராதே
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க
இத பதம் என்று பெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்க
முறை என அண்டர் முறை பேச
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச
முரண் அசுர் வென்ற வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடு இதம் வென்றி மயில் வீரா
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு
பழநி அமர்ந்த பெருமாளே.
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே. இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க மயிலேறி
இனவருள் அன்பு மொழிய க டம்பு
வின் அதகமும் கொடு அளிபாட
கரிமுகன் எம்பி முருகனென அண்டர்
களிமலர் சிந்த அடியேன்முன்
கருணைபொழிந்து முகமும் மலர்ந்து
கடுகி நடங்கொடு அருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட விடையேறிச்
சிவம் வெளி யங்கண்அருள் குடிகொண்டு
திகழந டஞ்செய்து எமையீண்
அரசியிடங்கொள மழுவுடை யெந்தை
அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.045 - திருப்புகழ் 81
புகரப் புங்க
(திருச்செந்தூர்)
தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்
தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் ...... றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே. புகரப் புங்கப் பகரக் குன்றில்
புயலிற் றங்கிப் பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளை
பண்பிற் புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியில் துஞ்ச
அத்திகிரிச் செங்கைத் திருமாலும்
திரியப்
பொங்கித் திரையற்று உண்டு
உள்தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்
தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி
தடநற் கஞ்சத் துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக்கு
இன்பத்தையளித்து அன்புற்று அருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றை
படியிற் சிந்தத் தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசை
செந்திற்பதியிற் கந்தப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.046 - திருப்புகழ் 274
துப் பார் அப்பு
(திருத்தணிகை)
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
துப் பார் அப்பு ஆடல்தீ
மொய்க்கால் சொல் பா வெளி
முக்குணமோகம்
துற்றாய
பீறல் தோலிட்டே சுற்றா
மதனப் பிணிதோயும்
இப் பாவக் காயத்து
ஆசைப்பாடு எற்றே
உலகிற் பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் தரவேணும்
தப்பாமற் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே
தற்கு ஆழிச்சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய்
தணிகைத் தனிவேலா
அப் பாகைப் பாலைப் போல் சொல்
காவற் பாவை
தனத்தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.047 - திருப்புகழ் 824
ஒருவழிபடாது
(சோமநாதன்மடம்)
தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான ...... தனதான ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக ...... அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச ...... கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக ...... முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே. ஒருவழிபடாது
மாயை யிருவினை விடாது
நாளும் உழலும்
அநுராக மோக அநுபோகம்
உடலுமுயிர் தானுமாய்
உனுணர்விலொரு காலி ராத
உளமுநெகிழ்வாகு மாறு
அடியேனுக்கு இரவுபகல் போன ஞான பரமசிவ யோக
தீரமெனமொழியும்
வீசு பாச கனகோப எமபடரை
மோது மோன வுரையில்
உப தேச வாளை
எனதுபகை தீர நீயும் அருள்வாயே
அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை
அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர்குல காலனாகும்
அரியதவ ராஜராஜன்
அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக
பொரு சூரர் சேனை முறிய
வட மேரு வீழ
முகரசல ராசி வேக முனிவோனே
மொழியுமடியார்கள் கோடி குறைகருதினாலும்
வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.048 - திருப்புகழ் 912
திரு உரூப நேராக
(வயலூர்)
Back to Top
மணிமாலை 2.049 - திருப்புகழ் 210
கதிரவனெ ழுந்து
(சுவாமிமலை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார ...... வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு ...... மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி ...... புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ ...... யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே. திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோக
மானார்கள்
கலை மூடும் சிகரி ஊடு தே மாலை அடவி ஊடு போய் ஆவி
செருகும் மால் அனாசார வினையேனை
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள்
சுவாமீ
நின் மயில் வாழ்வும் கருணை வாரி கூர் ஏக முகமும் வீர(ம்)
மாறாத கழலு(ம்) நீப வேல் வாகு(ம்) மறவேனே
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாக ஆதி
புதல்வோனே
சத மகீ வல் போர் மேவு குலிச பாணி மால் யானை சகசமான
சாரீ செய் இளையோனே
மருவு லோகம் ஈரேழும் அளவிட ஒ(ண்)ணாவான வரையில்
வீசு தாள் மாயன் மருகோனே
மநு நியாய சோ (ழ) நாடு தலைமை யாகவே மேலை வயலி
மீது வாழ் தேவர் பெருமாளே.
தனதனன தந்த தான தனதனன தந்த தான
தனதனன தந்த தான ...... தனதான கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய ...... மருளாலே
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந டந்து தேயும் ...... வகையேபோய்
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே
இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே
வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே
அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே. கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல்
அளவு கண்டு மாய மருளாலே
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின்
அற நடந்து தேயும் வகையே போய்
இதம் இதம் என்று நாளு(ம்) மருக அருகிருந்து கூடும் இடம்
இடம் இது என்று சோர்வு படையாதே
இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல் இரவு
பகல் சென்று வாடி உழல்வேனோ
மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள
நிறைந்த பாளை மலரூடே
வகை வகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட
மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில்
விரும்பி ஏறும் இளையோனே
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை
அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.050 - திருப்புகழ் 780
எத்தனை கோடி
(வைத்தீசுரன் கோயில்)
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான ...... தனதான எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி
எத்தனை கோடி போனது அளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி
இப்படி யாவ தேது இனிமேல்
யோசித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக
நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு
நெட்டிலை சூல பாணி அருள்பாலா
பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல மயில் வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.051 - திருப்புகழ் 589
இடம் பார்த்து
(திருச்செங்கோடு)
Back to Top
மணிமாலை 2.052 - திருப்புகழ் 642
சரத்தே யுதித்தாய்
(கதிர்காமம்)
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் ...... தனதான இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின்
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன் ...... கவிபாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய்
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே. இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று
இணங்காப் பசிப் பொங்கி அனல் மூழ்கி
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு
இரங்கார்க்கு
இயல் தண் தமிழ் நூலின் உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா
தயங்காத் துளங்காத் திடப் புன் கவி பாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்று ஏத்து உறும் பால்
குணக்கு அன்புறலாமோ
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாட்கள்
அணைந்தாட்கு அணித் திண் புயம் ஈவாய்
கரும்போர்க்கு அரும்போரக் குளம் காட்டி கண்டு ஏத்து
செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு
அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு
உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு
இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு
அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே.
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா ...... தனதான சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் ...... முருகோனே. சரத்தே யுதித்தாய்
உரத்தே குதித்தே சமர்த்தாய்
எதிர்த்தே வருசூரை
சரிப்போன மட்டே விடுத்தாய்
அடுத்தாய்
தகர்த்தாய் உடற்றான் இருகூறா
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய்
செகுத்தாய்
பலத்தார் விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய்
வலக்காரம் உற்றாய்
திருத்தாமரைத்தாள் அருள்வாயே
புரத்தார் வரத்தார்
சரச்சேகரத்தார்
பொரத்தான் எதிர்த்தே வருபோது
பொறுத்தார் பரித்தார்
சிரித்தார் எரித்தார்
பொரித்தார் நுதற்பார்வையிலே
பினகரித்தோ லுரித்தார்
விரித்தார் தரித்தார்
கருத்தார்
மருத்தூர் மதனாரை
கரிக்கோல மிட்டார்
கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் முருகோனே. Back to Top
மணிமாலை 2.053 - திருப்புகழ் 72
நிலையாப் பொருளை
(திருச்செந்தூர்)
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன ...... தனதான நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ...... மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய ...... நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ...... மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை ...... விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித ...... வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய ...... பெருமாளே. நிலையாப் பொருளை உடலாக் கருதி
நெடுநாட் பொழுதும் அவமேபோய்
நிறைபோய் செவிடு குருடாய்
பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலநீர் சயன மிசையாப் பெருகி
மடிவேற்கு உரிய நெறியாக
மறைபோற் றரிய ஒளியாய்ப் பரவு
மலர்தாட் கமலம் அருள்வாயே
கொலைகாட்டு அவுணர் கெட சலதி
குளமாய்ச் சுவற முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட மேற் கதுவு
கொதிவேற் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க்கு அதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.054 - திருப்புகழ் 164
தகைமைத் தனியில்
(பழநி)
Back to Top
மணிமாலை 2.055 - திருப்புகழ் 93
மூப்புற்றுச் செவி
(திருச்செந்தூர்)
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் ...... பவனாலே
தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் ...... கடலாலே
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் ...... றரவேணும்
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் ...... திறல்வீரா
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் ...... குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே. தகைமைத் தனியில் பகை கற்று உறு கைத்
தநு முட்ட வளைப்பவனாலே
தரளத் திரளில் புரளக் கரளத்
தமரத் திமிரக் கடலாலே
உ(ற்)கை முத்தம் மிகுத்தது எனப் பகல் புக்கு
ஒளி மட்கு மிகைப் பொழுதாலே
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு
உன நல் பிணையல் தர வேணும்
திகை பத்தும் உகக் கமலத்தனை முன்
சிறை இட்ட பகைத் திறல் வீரா
திகழ் கற்பகம் மிட்ட வனக் கனகத்
திருவுக்கு உருகிக் குழை மார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற்கு ஒரு சொல் பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற்று உயர் மெய்ப்
பழநிக் குமரப் பெருமாளே.
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
தாத்தத் தத்தன ...... தனதான மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி ...... யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் ...... குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர ...... மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர ...... முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே. மூப்புற்றுச் செவி கேட்பற்று
பெரு மூச்சுற்றுச் செயல் தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டி
கக்கிட மூக்குக்கு உள்சளி இளையோடும் கோப்புக் கட்டி
இ(ன்)னாப் பிச்சு எற்றிடு
கூட்டிற் புக்கு உயிர் அலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கி
பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டி
பற்றலர்காப்பைக் கட்டவர் குருநாதா
காட்டுக்குட் குறவாட்டிக்கு
பல காப்புக் குத்திர மொழிவோனே
வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர முருகோனே
வார்த்தைச் சிற்பர
தீர்த்தச் சுற்றலைவாய்க்குள்
பொற்பமர் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.056 - திருப்புகழ் 120
இலகுகனி மிஞ்சு
(பழநி)
Back to Top
மணிமாலை 2.057 - திருப்புகழ் 779
உரத்துறை போத
(வைத்தீசுரன் கோயில்)
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதான இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
மிலகியக ரும்பு ...... மயலாலே
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
நினைவொடுமி றந்து ...... படலாமோ
புலவினைய ளைந்து படுமணிக லந்து
புதுமலர ணிந்த ...... கதிர்வேலா
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
பருமயில டைந்த ...... குகவீரா
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த ...... பெருமாளே. இலகு கனி மிஞ்சு(ம்) மொழி இரவு துஞ்சும் இரு விழி என்
நஞ்சு(ம்)
முகம் மீதே இசை முரல் சுரும்பு(ம்) இளமுலை அரும்பு(ம்)
இலகிய கரும்பும் மயலாலே
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர்
நொந்து
மத வேளால் நிலை அழியு(ம்) நெஞ்சில் அவர் குடி புகுந்த
நினைவொடும் இறந்து படலாமோ
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த
கதிர் வேலா
புழுகு எழ மணந்த குற மகள் குரும்பை பொர முகை உடைந்த
தொடை மார்பா
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த
குக வீரா
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த
பெருமாளே.
தனத்தன தானத் ...... தனதான உரத்துறை போதத் ...... தனியான
உனைச்சிறி தோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற் ...... றடியேனும்
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே
வயித்திய நாதப் ...... பெருமாளே. உரத்துறை போதத் தனியான
உனைச்சிறிதோதத் தெரியாது
மரத்துறை போலுற்று அடியேனும்
மலத்திருள் மூடிக் கெடலாமோ
பரத்துறை சீலத்தவர் வாழ்வே
பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே
வரத்துறை நீதர்க்கு ஒருசேயே
வயித்திய நாதப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.058 - திருப்புகழ் 964
கலைமேவு ஞான
(பவானி)
தனதான தானத் தனதான
தனதான தானத் ...... தனதான கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ...... பெருமாளே. கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி
ஆசைக் கடலேறி
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட
சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.059 - திருப்புகழ் 1299
பிறவியலை
(பொதுப்பாடல்கள்)
தனதனன தாத்தனத் ...... தனதான பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே
உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே
உனதுபத காட்சியைத் ...... தருவாயே
அறுசமய சாத்திரப் ...... பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே
குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே. பிறவியலை யாற்றினிற் புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே
உறுதிகுரு வாக்கியப் பொருளாலே
உனதுபத காட்சியைத் தருவாயே
அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் கடலோனே
குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.060 - திருப்புகழ் 353
அஞ்சன வேல்விழி இட்டு
(திருவானைக்கா)
Back to Top
மணிமாலை 2.061 - திருப்புகழ் 628
தவள மதியம்
(குன்றக்குடி)
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன ...... தனதான அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா
துங்கக ஜாரணி யத்திலுத்தம
சம்புத டாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே. அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும்
இங்கிதமாக நகைத்து உருக்கவும்
அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும்
நகரேகை அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும்
மந்தர மாமுலை சற்று அசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும்
இளைஞோர்கள் நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும்
வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும்
மன்று இடை ஆடி மருள் கொடுக்கவும்
எவரேனும் நிந்தை செ(ய்)யாது பொருள் பறிக்கவும்
இங்கு வ(ல்)லார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்
நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை
இளையோனே
துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட
நிக்ரக
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம
சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து
உறை பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.062 - திருப்புகழ் 653
வேழம் உண்ட
(காசி)
தனன தனன தனத்தந் ...... தனதான தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே
சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே
கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே
கருதி மிகவு மயக்கம் ...... படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந்
திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே. தவள(ம்) மதியம் எறிக்கும் தணலாலே
சரச மதனன் விடுக்கும் கணையாலே
கவன(ம்) மிகவும் உரைக்கும் குயிலாலே
கருதி மிகவு(ம்) மயக்கம் படவோ நான்
பவள(ம்) நிகரும் இதழ்ப் பைங் குறமானின்
பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும்
திவளு(ம்) மணிகள் கிடக்கும் திருமார்பா
திகழு(ம்) மயிலின் மலை கண் பெருமாளே.
தான தந்தன தானன ...... தனதான
தான தந்தன தானன ...... தனதான வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா
காள கண்ட னுமாபதி ...... தருபாலா
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே. வேழ முண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி
நானு நைந்து விடாதருள் புரிவாயே
மாள அன்று அமணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
காசி கங்கையில் மேவிய பெருமாளே. Back to Top
மணிமாலை 2.063 - திருப்புகழ் 698
குசமாகி யாருமலை
(திருவான்மியூர்)
தனதான தானதன தனதான தானதன
தனதான தானதன ...... தனதான குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு ...... குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுண ...... மிலிமாதர்
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமல ...... ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்பொத மானபர ...... முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
சிவநாத ராலமயில் ...... அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே. குசமாகி யாருமலை
மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு
குழையூடே குறிபோகு மீனவிழி
மதிமாமு காருமலர்
குழல்கார் அதானகுணமிலிமாதர்
புசவாசையால்மனது உனைநாடிடாதபடி
புலையேன் உலாவிமிகு புணர்வாகி
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமலரருள்வாயே
நிசநாரணாதி திரு மருகா
உலாசமிகு நிகழ்போதமானபர முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணா
நிசாசரர்கள் குலகாலா
திசைமாமுக ஆழியரி மகவான் முனோர்கள் பணி Back to Top
மணிமாலை 2.064 - திருப்புகழ் 802
இறையத்தனையோ
(திலதைப்பதி)
தனனத் தனனா ...... தனதான இறையத் தனையோ ...... அதுதானும்
இலையிட் டுணலேய் ...... தருகாலம்
அறையிற் பெரிதா ...... மலமாயை
அலையப் படுமா ...... றினியாமோ
மறையத் தனைமா ...... சிறைசாலை
வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர்
சிறையைத் தவிரா ...... விடும்வேலா
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே. இட்டுணல் ஏய்தருகாலம்
இறையத்தனையோ அதுதானும் இலை
அறையிற் பெரிதாம்
மலமாயை அலையப் படுமாறு இனியாமோ
மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து
உயர்வானுறு தேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.065 - திருப்புகழ் 866
பஞ்சுசேர் நிர்த்த
(கும்பகோணம்)
Back to Top
மணிமாலை 2.066 - திருப்புகழ் 931
வண்டுபோற் சார
(திருவெஞ்சமாக்கூடல்)
தந்தனா தத்தத் ...... தனதான பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்
பங்கமார் தொக்கிற் ...... படியாமற்
செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்
செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ
பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா
குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா
கும்பகோ ணத்திற் ...... பெருமாளே. பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர்
பங்கமார் தொக்கிற் படியாமல்
செஞ்சொல்சேர் சித்ரத் தமிழால்
உன்செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ
பஞ்சபாணத்தற் பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக் குமரேசா
குஞ்சரீ வெற்புத் தனநேயா
கும்பகோ ணத்திற் பெருமாளே.
தந்தனாத் தானத் ...... தனதான வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி
மந்திபோற் காலப் ...... பிணிசாடிச்
செண்டுபோற் பாசத் ...... துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே
தொண்டராற் காணப் ...... பெறுவோனே
துங்கவேற் கானத் ...... துறைவோனே
மிண்டராற் காணக் ...... கிடையானே
வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே. வண்டுபோற் சாரத்து அருள்தேடி
மந்திபோற் காலப் பிணிசாடி
செண்டுபோற் பாசத்துடனாடி
சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே
தொண்டராற் காணப் பெறுவோனே
துங்க வேற் கானத்து உறைவோனே
மிண்டராற் காணக் கிடையானே
வெஞ்சமாக் கூடற் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.067 - திருப்புகழ் 329
அற்றைக்கு இரைதேடி
(காஞ்சீபுரம்)
தத்தத் தனதான தத்தத் ...... தனதான
தத்தத் தனதான தத்தத் ...... தனதானா அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே. அற்றைக்கு இரைதேடி
அத்தத்திலும் ஆசை
பற்றித் தவியாத பற்றை
பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா
வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா
கச்சிப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.068 - திருப்புகழ் 1310
சீலமுள தாயர்
(பழமுதிர்ச்சோலை)
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று ...... தெருவூடே
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு ...... புரிவாயே
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை
சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே. சீலமுளதாயர் தந்தை மாதுமனையான மைந்தர்
சேருபொருள் ஆசை நெஞ்சு தடுமாறி
தீமையுறு மாயை கொண்டு
வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று
தெருவூடே வாலவய தான
கொங்கை மேரு நுதலான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை மெலியாமல்
வாழுமயில் மீது வந்து
தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு புரிவாயே
சேலவள நாடு அ(ன்)னங்கள் ஆர
வயல் சூழும் இஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் மணிமேடை
சேரும் அமரேசர் தங்கள் ஊரிதென வாழ்வு உகந்த
தீரமிகு சூரை வென்ற திறல்வீரா
ஆலவிட மேவு கண்டர்
கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி
ஈசர் தந்தை களிகூர
ஆனமொழியே பகர்ந்து
சோலைமலை மேவு கந்த
ஆதிமுதலாக வந்த பெருமாளே. Back to Top
மணிமாலை 2.069 - திருப்புகழ் 1311
வீர மதன் நூல்
(பழமுதிர்ச்சோலை)
Back to Top
மணிமாலை 2.070 - திருப்புகழ் 577
கரிபுராரி காமாரி
(விராலிமலை)
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப்
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
பாதகனு மாகி நின்று ...... பதையாமல்
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ
பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே
பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த
பூவைவடி வானு கந்த ...... மருகோனே
சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே. வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல்
விழியினால் மயங்கி
புவி மீதே வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம்
சொல் வேலை செய்து
மால் மிகுந்து விரகாகிப் பார வசமான அங்கண் நீடு
பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல்
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர்
நாடி என்று பணிவேனோ
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள்
பூவை அருளால் வளர்ந்த முருகோனே
பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை
வடிவான் உகந்த மருகோனே
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட
நீறு கண்ட வடிவேலா
சோலை தனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலை
மலை மேல் அமர்ந்த பெருமாளே.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி ...... கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி ...... சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத ...... அருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி ...... வடமேரு
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே. கரிபுராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி
கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி சிவயோகி
பரம யோகி மாயோகி பரி அரா ஜடாசூடி
பகரொணாத மாஞானி பசுவேறி
பரதம் ஆடி கானாடி பர வயோதிக அதீத
பரம ஞான வூர் பூத அருளாயோ
சுருதி யாடி தாதா வி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி வடமேரு
சுழல வேலை தீமூள அழுது அளாவி வாய்பாறி
சுரதினோடு சூர் மாள உலகேழும்
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள
திரளினோடு பாறோடு கழுகாட
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார
திருவி ராலியூர்மேவு பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.071 - திருப்புகழ் 215
கோமள வெற்பினை
(சுவாமிமலை)
Back to Top
மணிமாலை 2.072 - திருப்புகழ் 581
மாலாசை கோபம்
(விராலிமலை)
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்
கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை
கோகில நற்புற வத்தொடு குக்குட
ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்
கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே
தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்
யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்
சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா
தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
காசுப றிக்கம றித்துமு யக்கிகள்
தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ
மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய
சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி
வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி
மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர
மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில்
ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்
ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... பெருமாளே. கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர்
சித்தம் உருக்கிகள் கோவை இதழ்க் கனி நித்தமும் விற்பவர்
மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப்
புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு
மருட்டிகள்
விரகாலே தூம மலர்ப் ப(ள்)ளி மெத்தை படுப்பவர்
யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர் சோலை வனக்
கிளி ஒத்த மொழிச்சியர்
நெறி கூடா தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு
பறிக்க மறித்த முயக்கிகள் தோதக வித்தை படித்து நடிப்பவர்
உறவாமோ
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி
நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில்
குக
கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில்
தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும்
அலைவாயில்
ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில்
உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்து
அருள் இளையோனே
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி
மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே.
தானான தான தானான தான
தானான தான ...... தனதான மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார ...... வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு ...... மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு ...... மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச ...... மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக ...... அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை ...... வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத ...... பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் ...... பெருமாளே. மாலாசை கோபம்
ஓயாதெ நாளும்
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு
நாத மாதா பிதாவு மினிநீயே
நாலான வேத நூல்
ஆக மாதி
நானோதி னேனு மிலை
வீணே நாள்போய் விடாமல்
ஆறாறு மீதில்
ஞானோபதேசம் அருள்வாயே
பாலா கலார ஆமோத
அணிமீதே லேப பாடீர வாக
பாதாள பூமி யாதார
மீன பானீய
மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே
சமூக வேதாள பூத பதி
சேயே
வீரா கடோர சூராரியே
செவேளே சுரேசர் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.073 - திருப்புகழ் 1230
கலைகோட்டு வல்லி
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 2.074 - திருப்புகழ் 525
சரவண பவநிதி
(திருவேங்கடம்)
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின்
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக்
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள
முகையாக்கை நையு ...... முயிர்வாழக்
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய்
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள
சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு
மெய்யில் அவ நூலின் கலை காட்டு
பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி
வெய்ய அதி பாரக் கொலை கோட்டு கள் இடு
அறிவோர்க்கும்
உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ
கொடி கோட்டு மல்லி குரவார்க் கொள் தொல்லை மறை
வாழ்த்து செய்ய கழல் தாராய்
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை
வேட்ட பிள்ளை முருகோனே
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட
தில்ல(ம்) மயில் வீரா
அலை கோட்டு வெள்ள(ம்) மலை மாக்கள் விள்ள மலை
வீழ்த்த வல்ல அயில் மோகா
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல
பெருமாளே.
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன ...... தனதான சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே. சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர எனவோதித்
தமிழினி லுருகிய அடியவரிடமுறு
சனனமரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி து(ள்)ள வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே
கருணைய விழிபொழி ஒருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதை யமுதமொழி தருபவர் உயிர்பெற அருள்நேயா
கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள்
கலகம் இனையதுள கழியவும் நிலைபெற
கதியும் உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே
திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர சமரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா
தினமும் உனது துதி பரவிய அடியவர்
மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலமொழிய தினகரன் எனவரு பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெனவெ வரும் அதிசயமுடையவ
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே
அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயிலினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினுடன்அமரும் அரகர சிவசிவ பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.075 - திருப்புகழ் 786
சூலம் என ஓடு
(திருக்கடவூர்)
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூ யவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து
சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே. சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி
தூய ஒளி காண முத்தி விதமாக
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து
சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி
மேலை வெளி ஆயிரத்து நால் இரு பராபரத்தின்
மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி
வேலு மயில் வாகன ப்ரகாசம் அதிலே தரித்து
வீடும் அதுவே சிறக்க அருள் தாராய்
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும்
ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து
உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து
காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள்
கான மயில் மேல் தரித்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.076 - திருப்புகழ் 1189
மாறுபொரு காலன்
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 2.077 - திருப்புகழ் 766
ஊனத்தசை தோல்கள்
(சீகாழி)
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல்
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே
வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
வேறுபடு மேனி சற்று ...... மழியாதே
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று ...... வரவேணும்
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா
சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த
தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே. மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும்
வாரி துயிலா அதற்கும் வசையே சொல் மாய மடவார் தமக்கும்
ஆயர் குழல் ஊது இசைக்கும்
வாயும் இள வாடையிற்கும் அதனாலே வேறுபடி
பாயலுக்குமே
எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே
வேடர் குல மாதினுக்கும் வேடை கெடவே நடித்து மேவும்
இரு பாதம் உற்று வரவேணும்
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறு
முகனே குறத்தி மணவாளா
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும்
மயில் ஏறி நிற்கும் இளையோனே
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம்
மொய்த்த திரள் தோளா
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர்
சிறை மீள விட்ட பெருமாளே.
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
தானத்தன தான தனந்த ...... தனதான ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த
ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்
ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்
கோலம் எழுந்து ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி
கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச் சடம் ஈதை உகந்து புவி மீதே
கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று
கோலக் கழலே பெற இன்று அருள்வாயே
சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற
தீரத் திரு நீறு புரிந்து மீனக் கொடியோன் உடல் துன்று
தீமைப் பிணி தீர உவந்த குருநாதா
கானச் சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து
காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காணக் கணியாக வளர்ந்து ஞானக் குற மானை மணந்து
காழிப் பதி மேவி உகந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.078 - திருப்புகழ் 873
ஆசார வீனக்கு
(திருநாகேச்சுரம்)
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன
தானான தானத் தனத்த தத்தன ...... தனதான ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை
வேரோடு வீழத் தறித்த டுக்கிய
போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
மாயாவி காரத் தியக்க றுத்தருள்
ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே. ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபிதாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள்
பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானா வுபாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்
தமியோர்சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள்
குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப்பி றப்பினில் உழல்வாரே
வீசாவிசாலப் பொருப்பெடுத்து எறி
பேர் ஆரவாரச் சமுத்திரத்தினில்
மீளாமல் ஓடித் துரத்தி யுட்குறும் ஒருமாவை
வேரோடு வீழத் தறித்து அடுக்கிய
போராடு சாமர்த்தியத் திருக்கையில் வேலாயுதா
மெய்த் திருப்பு கழ்ப்பெறு வயலூரா
நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர்
மாயாவிகாரத்து இயக்கு அ றுத்தருள்
ஞானோபதேசப் ப்ரசித்த சற்குரு வடிவான
நாதாவெனா முன் துதித்திட
புவி ஆதார மாய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே. Back to Top
மணிமாலை 2.079 - திருப்புகழ் 602
பத்தர் கணப்ரிய
(திருச்செங்கோடு)
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தனதான
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே. பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திடு
பட்சி நடத்திய குக பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்குள
பத்தர்கள் அற்புதம் எனவோதும்
சித்ர கவித்துவ சத்தமிகுத்த
திருப்புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத்து உலகிற்பரவ தெரி
சித்த அநுக்ரகம் மறவேனே
கத்திய தத்தை களைத்துவிழ திரி
கற்கவணிட்டெறி தினைகாவல்
கற்ற குறத்தி நிறத்த கழுத்தடி
கட்டியணைத்த பனிருதோளா
சத்தியை யொக்க இடத்தினில் வைத்த
தகப்பனு மெச்சிட மறைநூலின்
தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய
சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.080 - திருப்புகழ் 1229
கப்பரை கைக்கொள
(பொதுப்பாடல்கள்)
Back to Top
மணிமாலை 2.081 - திருப்புகழ் 741
ஆரத்தன பார
(திருத்துறையூர்)
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தனதான
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
கட்பயி லிட்டிள ...... வளவோரைக்
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப்
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
பற்றென வுற்றவொர் ...... தமியேனைப்
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
பட்டதெ னக்கினி ...... யமையாதோ
குப்பர வப்படு பட்சமி குத்துள
முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக்
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
குற்றம றுத்திடு ...... முதல்வோனே
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
சித்ரத னக்கிரி ...... மிசைதோயும்
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே. கப்பரை கைக் கொள வைப்பவர்
மைப் பயில் கண் பயிலிட்டு இள வளவோரைக் கைக்குள்
வசப் பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாயப்
பப்பர மட்டைகள்
பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது
எனக்கு இனி அமையாதோ
குப் பரவப் படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு
ஆகி
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம்
அறுத்திடு முதல்வோனே
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தனக் கிரி
மிசை தோயும் விக்ரம
மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய
பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.082 - திருப்புகழ் 507
நீலக் குழலார்
(சிதம்பரம்)
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே. ஆர் அத் தன பாரத் துகில் மூடிப் பலர் காணக் கையில் யாழ்
வைத்து இசை கூர
குழல் உடை சோர ஆகம் பனி நீர் அப் புழுகு ஓடக் குழை
ஆடப் பிரையாசைப் படுவார்
பொட்டு அணி சசி நேர் வாள் கூரக் கணை வேல் கண் கயல்
போலச் சுழல்வார்
சர்க்கரை கோவைக் கனி வாய் பல் கதிர் ஒளி சேரும் கோலக்
குயிலார்
பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோபச் செயலார்
பித்தர்கள் உறவு ஆமோ
பூரித் தன பாரச் சடை வேதக் குழலாள் பத்தர்கள் பூசைக்கு
இயல்வாள் பத்தினி சிவகாமி
பூமிக் கடல் மூவர்க்கும் மு(ன்)னாள் பத்திர காளிப் புணர்
போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா
சூரக் குவடு ஆழித் தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு
இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
தோகைச் செயலாள் பொன் பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித் துறையூர் நத்திய பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.083 - திருப்புகழ் 435
புலையனான
(திருவருணை)
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர்
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர்
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே. நீலக் குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார்
தைப்பிறை நீளச் சசியார் பொட்டு அணி நுதல் மாதர்
நீலக் கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார்
நற் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார்
தோள் ஆலைக் கழையார் துத்தி கொள் ஆரக் குவடார்
கட்டளையாகத் தமியேன் நித்தமும் உழல்வேனோ
ஆசைப்பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாகக்
கொளவே முத்தியை அருள்வாயே
மாலைக் குழலாள் அற்புத வேதச் சொருபாள்
அக்கினி மார்பில் பிரகாசக் கிரி தனபார வாசக் குயிலாள்
நல் சிவகாமச் செயலாள் பத்தினி மாணிக்க மி(ன்)னாள்
நிஷ்கள உமை பாகர்
சூலக் கையினார் அக்கினி மேனிப் பரனாருக்கு
ஒரு சோதிப் பொருள் கேள்விக்கு இடு முருகோனே
சோதிப் பிரகாசச் செயலாள் முத்தமிழ் மானைப் புணர்
சோதிப் புலியூர் நத்திய பெருமாளே.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி ...... குலபாதன்
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி ...... யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் ...... மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை ...... மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு ...... பெருமாளே. புலையனான மாவீனன்
வினையிலேகு மாபாதன்
பொறையிலாத கோபீகன்
முழுமூடன் புகழி லாத தாமீகன்
அறிவிலாத காபோதி
பொறிகளோடி போய்வீழும் அதிசூதன்
நிலையிலாத கோமாளி
கொடையி லாத ஊதாரி
நெறியிலாத ஏமாளி
குலபாதன்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
நினையுமாறு நீமேவி யருள்வாயே
சிலையில் வாளி தானேவி
எதிரி ராவணார்தோள்கள் சிதையு மாறு போராடி
ஒருசீதை சிறையிலாமலேகூடி
புவனி மீதிலேவீறு திறமியான
மாமாயன் மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக
வேலேவி அமரது ஆடியே தோகைமயிலேறி
அதிக தேவரேசூழ உலக மீதிலேகூறும்
அருணை மீதிலேமேவு பெருமாளே. Back to Top
மணிமாலை 2.084 - திருப்புகழ் 694
கடிய வேக
(திருமயிலை)
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண ...... வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு ...... மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை ...... வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே. கடிய வேக மாறாத விரத சூதர் ஆபாதர்
கலக மேசெய் பாழ்மூடர்
வினைவேடர்
கபட வீனர்
ஆகாத இயல்பு நாடியே
நீடு கன விகாரமே பேசி
நெறி பேணாக் கொடியன்
ஏதும் ஓராது
விரக சாலமேமூடு குடிலின்
மேவியே நாளு மடியாதே
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும்
ஈராறு குவளை வாகும்
நேர்காண வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசியே
சேடபணமும் ஆடவே நீடுவரைசாடி
பரவை யாழி நீர்மோத
நிருதர் மாள வானாடு பதியதாக
வேலேவு மயில்வீரா
வடிவுலாவி யாகாச மிளிர்
பலாவின் நீள்சோலை
வனச வாவி பூவோடை வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகரமோடு
வாகான மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.085 - திருப்புகழ் 734
ஆறும் ஆறும்
(தேவனூர்)
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த ...... கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும்
ஆறுமாய சஞ்சலஞ்கள் வேறதா விளங்குகின்ற
ஆரணாகமங் கடந்த கலையான
ஈறு கூறரும் பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி
ஏது வேறு இயம்பலின்றி ஒருதானாய்
யாவுமாய் மனங்கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி
யான் அவா அடங்க என்று பெறுவேனோ
மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க
வங்க வாரி மேல்வெகுண்ட சண்ட விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து
வால சோமன் நஞ்சு பொங்கு பகுவாய
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே
தேவர் யாவரும் தி ரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு
தேவ னூர்விளங்க வந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.086 - திருப்புகழ் 735
தாரகாசுரன் சரிந்து
(தேவனூர்)
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. தாரகாசுரன்சரிந்து வீழ வேருடன்பறிந்து
சாதி பூதரம் குலுங்க முதுமீனச்
சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்கடம்ப மததாரை
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து
மானை யாளு நின்ற குன்ற மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு
பானல் கூவிளம் கரந்தை அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த
சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு
தேவனூர்விளங்க வந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.087 - திருப்புகழ் 36
ஏவினை நேர்விழி
(திருச்செந்தூர்)
தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை ...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ...... பெருமாளே. ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா
ஈனனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மை இலாதனை இகழாதே
மாமணி நூபுர சேதள தாள் தனி
வாழ்வுற ஈவதும் ஒருநாளே
நாவலர் பாடிய நூலிசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே
சேணுயர் சோலையின் நீழலி லேதிகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.088 - திருப்புகழ் 256
கலை மடவார்தம்
(திருத்தணிகை)
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் ...... சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் ...... றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் ...... திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் ...... பெருமாளே. கலைமடவார்தம் சிலையதனாலும்
கனவளையாலும் கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும் சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணையாலும்
கொடியிடையாள் நின்றழியாதே
குரவணி நீடும் புயம் அணி நீபங்
குளிர்தொடை நீதந்து அருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.089 - திருப்புகழ் 70
நாலும் ஐந்து வாசல்
(திருச்செந்தூர்)
தான தந்த தான தான - தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக ...... வளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே. நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால்கை யாகி
நாரி யென்பில் ஆகும் ஆகம் அதனூடே
நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்க ளான ஆடி
நாடறிந்திடாமல் ஏக வளராமுன்
நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து பாருளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி விளைதீமை
நோய்கலந்த வாழ்வுறாமல் நீகலந்து
உள் ஆகு ஞான நூல் அ டங்க ஓத வாழ்வு தருவாயே
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து ஓலம் ஓலம் எனும் ஆதி
காமன் ஐந்து பாணமோடு வேமின் என்றுகாணு மோனர்
காள கண்ட ரோடு வேத மொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே
ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதி
யான செந்தில் வாழ்வதான பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.090 - திருப்புகழ் 1170
நீரும் என்பு
(பொதுப்பாடல்கள்)
தான தந்த தான தான தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
நீளு மங்க மாகி மாய ...... வுயிரூறி
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி
நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது
தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு
தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை
பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே. நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு
நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி
நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது
மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி
ஊழி இயைந்த கால(ம்) மேதியோனும் வந்து பாசம் வீச
ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ
சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்
விடாது
தோகை யின்கண் மேவி வேலை விடும்வீரா
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சூடி ஆடு
தோகை பங்க ரோடு சூது மொழிவோனே
பாரை உண்ட மாயன் வேயை ஊதி
பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின்
மருகோனே
பாதகங்கள் வேறி நூறி
நீதியின் சொல் வேத வாய்மை பாடும்
அன்பர் வாழ்வதான பெருமாளே. Back to Top
மணிமாலை 2.091 - திருப்புகழ் 1316
துடிகொள் நோய்
(பழமுதிர்ச்சோலை)
தனன தான தான தத்த
தனன தான தான தத்த
தனன தான தான தத்த ...... தனதான துடிகொ ணோய்க ளோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
நிதமு மூணி னாலு யர்த்தி
யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
வெளியி லாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ
கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே. துடிகொள் நோய்களோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
துறைகளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே
உடல்செய் கோர பாழ்வயிற்றை
நிதமும் ஊணினால் உயர்த்தி
உயிரி னீடு யோக சித்தி பெறலாமே
உருவிலாத பாழில் வெட்ட
வெளியிலாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
கடிது உலாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க்
களமுற ஆனை தேர்நுறுக்கி
தலைகள் ஆறு நாலு பெற்ற
அவனை வாளியால் அடு அத்தன்மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவதாக ஆடு நிர்த்த மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.092 - திருப்புகழ் 647
முதிரு மாரவாரம்
(கதிர்காமம்)
Back to Top
மணிமாலை 2.093 - திருப்புகழ் 568
சீரான கோல கால
(விராலிமலை)
தனன தான தான தத்த தனன தான தான தத்த
தனன தான தான தத்த ...... தனதான முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற ...... கடலாலே
முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே. முதிரு(ம்) மாரவாரம் நட்பொடு இலகும் ஆர் அவ் ஆரம்
எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே
முடிவு இ(ல்)லாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு
இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கு(ம்) நிலவாலே
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும்
வினை விடாத தாயருக்கும் அழியாதே
விளையு(ம்) மோக போக(ம்) முற்றி அளவிலாத காதல்
பெற்ற விகட மாதை நீ அணைக்க வர வேணும்
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே
கலாப சித்ர மயில் வீரா
கயல் உலாம் விலோசனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம்
மேவுவாள் ஒருத்தி மணவாளா
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய
ஞான வாசகத்தை அருள்வோனே
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர்
லோகம் வாழ வைத்த பெருமாளே.
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே. சீரான கோலகால நவ மணி
மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்
ஆராத காதல் வேடர் மட மகள்
ஜீமூதம் ஊர் வலாரி மட மகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும்
ஏர் ஆரும் மாட கூட மதுரையில்
மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வரதர குருநாதா
கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மாறு பாநு மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே
கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.094 - திருப்புகழ் 569
பாதாள மாதி லோக
(விராலிமலை)
Back to Top
மணிமாலை 2.095 - திருப்புகழ் 221
தெருவினில் நடவா
(சுவாமிமலை)
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான பாதாள மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே. பாதாளம் ஆதி லோக நிகிலமும்
ஆதாரமான மேரு என வளர்
பாடீர பாரமான முலையினை விலை கூறி
பாலோடு பாகு தேன் என இனிய சொ(ல்)
லாலே அநேக மோகம் இடுபவர்
பாத(ம்) ஆதி கேசமாக வகை வகை கவி பாடும்
வேதாளன் ஞான கீனன் விதரண
நா தான் இலாத பாவி அநிஜவன்
வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச
வ்யாபார மூடன் யானும் உனது இரு
சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே
தூதாளர் ஓடு காலன் வெருவிட
வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி
சோமாசிமார் சிவாய நம என
மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
கூதாள நீப நாக மலர் மிசை
சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை
கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய
கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.
தனதன தனனா தனனா
தனந்த தத்தம் ...... தனதான தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் ...... வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் ...... மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் ...... கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் ...... விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் ...... வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் ...... முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் ...... புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் ...... பெருமாளே. தெருவினில் நடவா மடவார்
திரண்டு ஒறுக்கும் வசையாலே
தினகரனென வேலையிலே
சிவந்து உதிக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொடுக்குங் கணையாலே
புளகித முலையாள் அலையா
மனஞ்சலித்தும் விடலாமோ
ஒருமலை யிருகூறெழவே
உரம் புகுத்தும் வடிவேலா
ஒளிவளர் திருவேரகமே
உகந்து நிற்கும் முருகோனே
அருமறை தமிழ்நூல் அடைவே
தெரிந்துரைக்கும் புலவோனே
அரியரி பிரமாதியர் கால்
விலங்க அவிழ்க்கும் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.096 - திருப்புகழ் 110
அவனிதனிலே
(பழநி)
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே. அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள் மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாய்உழன்று
திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
மனமகிழவே அணைந்து ஒருபுறமதாகவந்த
மலைமகள் குமார துங்க வடிவேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த கழல்வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.097 - திருப்புகழ் 134
கருவின் உருவாகி
(பழநி)
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. கருவினுரு வாகி வந்து வயதளவிலே வளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே
கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து மிகவாடி
அரஹரசி வாய வென்று தினமும்நினை யாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாணம் இன்றி அழிவேனோ
உரகபட மேல் வளர்ந்த பெரியபெரு மாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரில் அன்று வருவோனே
பரவை மனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழனிமலை மீதில் நின்ற பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.098 - திருப்புகழ் 473
செம் கலச
(சிதம்பரம்)
Back to Top
மணிமாலை 2.099 - திருப்புகழ் 521
புமி அதனில்
(கயிலைமலை)
தந்ததன ...... தனதான
தந்ததன ...... தனதான செங்கலச ...... முலையார்பால்
சிந்தைபல ...... தடுமாறி
அங்கமிக ...... மெலியாதே
அன்புருக ...... அருள்வாயே
செங்கைபிடி ...... கொடியோனே
செஞ்சொல்தெரி ...... புலவோனே
மங்கையுமை ...... தருசேயே
மன்றுள்வளர் ...... பெருமாளே. செம் கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி
அங்கம் மிக மெலியாதே அன்பு உருக அருள்வாயே
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே.
தனதனனத் ...... தனதான
தனதனனத் ...... தனதான புமியதனிற் ......ப்ரபுவான
புகலியில்வித் ...... தகர்போல
அமிர்தகவித் ...... தொடைபாட
அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே. புமியதனிற் ப்ரபுவான
புகலியில் வித்தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக்கு அருள்வாயே
சமரிலெதிர்த்த சுர் மாள
தனியயில்விட்டு அருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே. Back to Top
மணிமாலை 2.100 - திருப்புகழ் 598
காலனிடத்து
(திருச்செங்கோடு)
தான தனத் ...... தனதான காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே. காலனிடத்து அணுகாதே
காசினியிற் பிறவாதே
சீலஅகத்திய ஞான
தேனமுதைத் தருவாயே
மாலயனுக்கு அரியானே
மாதவரைப் பிரியானே
நாலுமறைப் பொருளானே
நாககிரிப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.101 - திருப்புகழ் 399
இரவுபகற் பலகாலும்
(திருவருணை)
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே. இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத்துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.102 - திருப்புகழ் 97
வந்து வந்து முன்
(திருச்செந்தூர்)
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்சு
செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்த
கந்த ரங்க லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே. வந்து வந்து முன்தவழ்ந்து
வெஞ்சுகந் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்றழுங் குழந்தையோடு
மண்டலங் குலுங்க அண்டர்
விண்தலம் பிளந்தெழுந்த
செம்பொன் மண்டபங்களும் பயின்றவீடு
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து
குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி
தஞ்ச மென்று மங்குகாலம்
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு
பைங்கடம்பு தண்டை கொஞ்சு
செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள்தாராய்
சந்து அடர்ந்தெழுந்த ரும்பு
மந்தரம் செழுங்கரும்பு
மந்தரம்கந்தரம்பை செண்பதங்கொள் செந்தில் வாழ்வே
தண்கடம் கடந்து சென்று
பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்
திண்புனம்புகுந்து கண்டு இறைஞ்சுகோவே
அந்தகன்கலங்க வந்த
கந்தரம் கலந்த சிந்துரம்
சிறந்து வந்து அலம் புரிந்தமார்பா
அம்புனம்புகுந்த நண்பர்
சம்பு நன் புரந்தரன்
தரம்பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே.
Back to Top
மணிமாலை 2.103 - திருப்புகழ் 782
மாலினால் எடுத்த
(வைத்தீசுரன் கோயில்)
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த ...... தனதான மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே. மாலினாலெடுத்த கந்தல் சோறினால் வளர்த்த பொந்தி
மாறி யாடெடுத்தசிந்தை அநியாய
மாயையாலெடுத்து மங்கினேன் ஐயாஎ னக்கிரங்கி
வாரையா இனிப்பி றந்து இறவாமல்
வேலினால் வினைக்கணங்கள் தூளதா எரித்து உன்றன்
வீடு தா பரித்த அன்பர் கணமூடே
மேவி யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து கந்த
வேளெ யாமெனப்ப ரிந்து அருள்வாயே
காலினாலெனப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை முருகோனே
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா
சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து
சீரை யோது பத்தரன்பிலுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளுருக்கு உகந்த
சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.104 - திருப்புகழ் 1306
கும்பகோணம்
(க்ஷேத்திரக் கோவை)
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன ...... தனதான கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறு சிவகாசி
கொந்து உலாவிய ராமேசுரம் தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே
செம்பு கேசுரம் ஆடானை இன்புறு
செந்தில் ஏடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாத
செஞ்சொல் ஏரக மாவாவினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சை நல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
சிராமலை வாழ்தேவ தந்திர வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சிவாயமு மேயாய் அகம்படு
கண்டி யூர்வரு சாமீ க டம்பணி மணிமார்பா
எம்பிரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று உறு துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்மணந்து
உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.105 - திருப்புகழ் 896
தொக்கைக் கழுவி
(அத்திக்கரை)
Back to Top
மணிமாலை 2.106 - திருப்புகழ் 584
சரவண ஜாதா
(விநாயகமலை)
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
சொற்றப்பிய கத்தைப் புரிபுல
சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே
முத்தித்தவ சுற்றுக் கதியுறு
சத்தைத்தெரி சித்துக் கரையகல்
முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே
திக்கெட்டும டக்கிக் கடவுள
ருக்குப்பணி கற்பித் தருளறு
சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர்
செச்சைப்புய மற்றுப் புகவொரு
சத்திப்படை விட்டுச் சுரர்பதி
சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே
அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே
அப்பைப்பிறை யைக்கட் டியசடை
அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே. தொக்கைக் கழுவிப் பொன் தகும் உடை
சுற்றி கலன் இட்டுக் கடி தரு
சொக்குப் புலி அப்பிப் புகழ் உறு களியாலே
சுத்தத்தை அகற்றிப் பெரியவர்
சொல் தப்பி அகத்தைப் புரி புல(ன்)
சுற்றத்துடன் உற்றுப் புவி இடை அலையாமல்
முக் குற்றம் அகற்றிப் பல கலை
கற்றுப் பிழை அற்று தன்னை உணர்
முத்தர்க்கு அடிமைப் பட்டு இலகிய அறிவாலே
முத்தித் தவ(ம்) சுற்றுக் கதி உறு
சத்தைத் தெரிசித்து கரை அகல்
முத்திப் புணரிக்குள் புக வரம் அருள்வாயே
திக்கு எட்டும் அடக்கிக் கடவுளருக்குப்
பணி கற்பித்து அருள் அறு
சித்தத்தோடு அடுத்துப் படை கொடு பொரு சூரர்
செச்சைப் புயம் அற்றுப் புக ஒரு
சத்திப் படை விட்டு சுரர் பதி
சித்த(ம்) துயர் கெட்டுப் பதி பெற அருள்வோனே
அக்கைப் புனை கொச்சைக் குற மகள்
அச்சத்தை ஒழித்து கரி வரும்
அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் அணைவோனே
அப்பைப் பிறையைக் கட்டிய சடை
அத்தர்க்கு அருமைப் புத்திர விரி
அத்திக்கரை இச்சித்து உறை தரு பெருமாளே.
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன ...... தனதான சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம ...... அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம ...... ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம ...... உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய ...... பெருமாளே. சரவண ஜாதா நமோநம கருணை அதீதா நமோநம
சததள பாதா நமோநம அபிராம
தருணக தீரா நமோநம நிருப அமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற வானவர்
எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோவென்று
இடர்பட் மாமேரு பூதர மிடிபடவேதான் நிசாசரர்
இகல்கெட மாவேக நீ(டு) அயில் விடுவோனே
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசரர் ஆதாரமாகிய பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.107 - திருப்புகழ் 179
போதகம் தரு
(பழநி)
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன ...... தனதான போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Back to Top
மணிமாலை 2.108 - திருப்புகழ் 923
மதியால் வித்தகன்
(கருவூர்)
தனதானத் தனதான தனதானத் ...... தனதான மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே. மதியால் வித்தகனாகி
மனதால் உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான
பரயோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே யென்
நினைவே நற் பொருளாயோய்
கதியே சொற் பரவேளே
கருவூரிற் பெருமாளே.
Back to Top
மணிமாலை - திருப்புகழ்
()