46.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 3
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
தாலப் பருவம்
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ
|
55.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அம்புலிப் பருவம்
என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான் தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
|
104.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
அச்சோப் பருவம்
என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ அச்சோ வேங்கடவாணனே அச்சோ அச்சோ
|
146.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
காது குத்தல்
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே? வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
|
243.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 10
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்
என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக் கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே
|
307.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
உந்தி பறத்தல்
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என் நாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற
|
308.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 2
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
உந்தி பறத்தல்
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற
|
548.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 4
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
குயிற் பத்து
என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது நீயும் அறிதி குயிலே பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப் புண்ணியனை வரக் கூவாய்
|
705.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
என்னை வருக எனக் குறித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர்-நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப் பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
|
1213.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவாலி:3
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ?
|
1576.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருநறையூர்:10
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த் தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே
|
1596.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவழுந்தூர்: 1
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்- மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே
|
2083.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 2
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது- அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
|
2115.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 34
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி
என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப் பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண் ஆய்த் தாய் முலை தந்த ஆறு?
|
2236.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 55
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி அடல் ஆழி கொண்ட அறிவனே! இன்பக் கடல் ஆழி நீ அருளிக் காண்
|
2276.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 95
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய் ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும் ஆழியான் அத்தியூரான்
|
2439.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 58
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம் மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு
|
2473.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 92
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
இயற்பா
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கரு இருந்த நாள் முதலாக் காப்பு
|
2518.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 41
நம்மாழ்வார்
திருவிருத்தம்
திருவிருத்தம்
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள் மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே
|
2588.0
பெரிய திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 4
திருமழிசை ஆழ்வார்
பெரிய திருவந்தாதி
திருவாசிரியம்
என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று
|
2658.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 74
இயற்பா
நம்மாழ்வார்
பெரியதிருவந்தாதி
என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி
|
2716.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத் தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
|
2719.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன் மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், பெரிய திருமடல் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து
|
2744.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள், மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ, மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்
|
2745.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன், மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும், அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்
|
2749.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும் மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும், பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்
|
2757.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும், மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி
|
2770.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை, கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை, மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல் பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை
|
2794.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 10
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
|
2860.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 10
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால் பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே?
|
2933.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 4
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய் என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே? முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே
|
2935.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ? நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ?
|
2938.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைமகள் தூதுவிடல்
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே?
|
2972.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராதிப்பார்க்கு மிக இனியன்
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை முன்னை அமரர் முழுமுதல் தானே
|
3055.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்
என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே
|
3212.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்
என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்? மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே
|
3251.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர
என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே
|
3260.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்
என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே?
|
3281.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?
|
3344.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 8
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு
என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும் வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
|
3364.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை? என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே
|
3386.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே
|
3420.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத
என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்? உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே
|
3430.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த
என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள் நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?
|
3481.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல
என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய் பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே
|
3533.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே
|
3562.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய் கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே
|
3570.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ
|
3573.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா? என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்? என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா தகுவதோ? என்னும் முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்கொலோ முடிகின்றது இவட்கே?
|
3580.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
|
3617.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
என்றுகொல் சேர்வது அந்தோ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப்பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்று இவை தாம் முதலா முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ!
|
3620.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
|
3622.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 11
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ?
|
3631.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்? அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே
|
3645.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா? இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே
|
3646.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா? துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும் உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே
|
3649.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?
|
3650.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே?
|
3691.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
|
3700.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர
என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்? குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே
|
3706.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 7
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே
|
3841.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 65
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே
|
3949.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளை
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
|
3959.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர் தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே?
|
3960.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே?
|