சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் அ%
அஃதே     அகம்     அகற்ற     அகலகில்லேன்     அகலில்     அகில்     அகைப்பு     அக்கரை     அக்காக்காய்     அக்கும்     அங்     அங்கண்     அங்கம்     அங்கற்கு     அங்கு     அங்கும்     அங்குற்றேன்     அங்கை-ஆழி     அங்கைத்     அங்ஙனம்     அசுரர்கள்     அச்சம்     அச்சுதன்     அஞ்சன     அஞ்சுடர்     அஞ்சுவன்     அடக்கு     அடங்கு     அடர்     அடல்     அடி     அடிகள்     அடிக்கீழ்     அடிச்     அடிச்சியோம்     அடித்தலமும்     அடிமையிற்     அடியான்     அடியால்     அடியும்     அடியேன்     அடியை     அடியைத்     அடியோமோடும்     அடுத்த     அடுத்து     அடை     அடைக்     அடைந்த     அடைந்தது     அடைந்திட்டு     அடைவதும்     அட்டுக்     அணங்கு     அணங்குக்கு     அணி     அணியன்     அணைவது     அண்டக்     அண்டத்தின்     அண்டத்து     அண்டமும்     அண்டர்     அண்டர்-கோன்     அண்ணல்     அதிருங்     அதிர்     அது     அதுவே     அதுவோ     அத்தன்     அத்தா     அத்தியூரான்     அந்தகன்     அந்தம்     அந்தரத்து     அந்தரம்     அந்தோ     அனந்தன்பாலும்     அனந்தாழ்வான்     அனுங்க     அன்ன     அன்னதோர்     அன்னமும்     அன்னம்     அன்னவனை     அன்னே     அன்னை     அன்னைமீர்     அன்னையும்     அன்பன்     அன்பு     அன்பே     அன்றி     அன்றிய     அன்று     அன்றே     அப்பனே     அப்பனை     அப்பம்     அமர     அமரராய்த்     அமரர்     அமரர்கள்     அமரர்க்கு     அமர்ந்த     அமலன்     அமுதம்     அமுது     அமைக்கும்     அமைவு     அம்     அம்பரமும்     அம்பரமே     அம்பரம்     அம்பு     அம்மா     அம்மானாய்ப்     அம்மான்     அயர்க்கும்     அயர்ப்பாய்     அயல்     அரக்கர்     அரக்கியர்     அரங்கனே     அரணம்     அரண்     அரன்     அரவ     அரவத்து     அரவம்     அரவிற்     அரவு     அரி     அரிஏறே     அரிய     அரியது     அரியன     அரியாய     அரு     அருகல்     அருகும்     அருளாத     அருளாது     அருளை     அருள்     அருள்பெறுவார்     அருவி     அறிகிலேன்     அறிந்தன     அறிந்து     அறியாக்     அறியாதார்க்கு     அறியார்     அறியும்     அறியேன்     அறியோமே     அறிவது     அறிவினால்     அறிவிலேனுக்கு     அறிவு     அறுக்கும்     அற்புதன்     அற்றது     அற்றவன்     அலமும்     அலம்     அலம்பா     அலம்புரிந்த     அலர்     அலைத்த     அல்லது     அல்லல்     அல்லி     அல்லிக்     அல்லியம்பூ     அல்வழக்கு     அளந்து     அளப்பு     அளவு     அளி     அளிக்கும்     அழகிய     அழகியான்     அழகு     அழகும்     அழிலும்     அழுவன்     அழைக்கின்ற     அழைக்கும்     அழைப்பன்     அவத்தங்கள்     அவனுடை     அவனே     அவனைவிட்டு     அவன்     அவரவர்     அவர்     அவற்கு     அவா     அவையம்     அவ்வவ்    
Number of search results : 278
Pages:    1    2  3  Next
3241.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே
2653.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 69   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

அகம் சிவந்த கண்ணினர் ஆய் வல்வினையர் ஆவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால்
சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து?   
3414.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
      நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை
      வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே
3559.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

அகலகில்லேன் இறையும் என்று
      அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
      உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
      அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
2974.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதிப்பார்க்கு மிக இனியன்

அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே     
1532.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:6

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே
2419.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 38   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு  
459.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

அக்கரை என்னும் அனத்தக் கடலுள்
      அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்
      சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக்கைகளும் கண்களும்
      பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
181.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே
1798.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

அக்கும் புலியின் அதளும் உடையார்-அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்-
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே
222.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல்
      இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
136.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

அங் கமலப் போதகத்தில்
      அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங் கமல முகம் வியர்ப்ப
      தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக
      அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த
      அமரர் கோவே முலை உணாயே
1263.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
      அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய
      கண்ணன் வந்து உறை கோயில்-
கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள்
      காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்-
      வண்புருடோத்தமமே
741.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே
495.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 22   ஆண்டாள்   திருப்பாவை  

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
      பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
  கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
      திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
      எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய்
766.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 15   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?
376.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி
      ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச்
சங்கம் விட்டு அவர் கையை மறித்துப்
      பையவே தலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி
      மாயனை மதுசூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவது ஓர் கருமம்
      சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே
2346.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 65   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி
அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து
1867.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர
      அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி
      புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
      இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின்
      சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
382.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால்
மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
1955.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ-
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே?
1956.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ-
பொங்கு மா கடல் புலம்புகின்றதே?
3693.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே
3408.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்
      காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு
      சிரீவரமங்கலநகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே
676.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

அங்கை-ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
620.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
      அவன்முகத்து அன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
      சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர்
      கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
      யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.
1918.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ-
      நம்பீ ஆயர் மட மக்களை?
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
      பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு
      அரவு ஏர் இடையார் இரப்ப
        மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று
      மரம் ஏறி இருந்தாய் போலும்
3920.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று
      ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து
      கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
      கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ
      உகக்கும் நல்லவரொடும் உழிதராயே  
1919.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 12   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு
      ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு
      உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங் கடம்பு ஏறி விசைகொண்டு
      பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு
      பிணங்கி நீ வந்தாய் போலும்
868.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 117   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனைக் கிடந்த நாதன் வேத கீதனே
3158.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

அச்சுதன் அமலன் என்கோ?
      அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ?
      நலங் கடல் அமுதம் என்கோ?
அச் சுவைக் கட்டி என்கோ?
      அறுசுவை அடிசில் என்கோ?
நெய்ச் சுவைத் தேறல் என்கோ?
      கனி என்கோ? பால் என்கேனோ?
234.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே
249.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்
      அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
      நான் உயிர் வாழ்ந்திருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?
      ஏதும் ஓர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்
      காயாம்பூ வண்ணம் கொண்டாய்
1917.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்
      ஆயிரம் நாழி நெய்யை
பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்று
      பாகம்-தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என்
      கைவலத்து ஆதும் இல்லை
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ
      என் செய்கேன்? என் செய்கேனோ?
1210.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?
846.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 95   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ
விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடற் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே
2916.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலகிற்கு உபதேசம்

அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று
அடங்குக உள்ளே       
2654.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 70   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே
யாது ஆகில் யாதே இனி?     
2826.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே     
3196.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும
்படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
3197.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே
3233.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
2186.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 5   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து?
2286.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 5   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு
3459.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே
3560.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
      வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
      பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
      திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
      பெரிய வானுள் நிலாவுவரே.
2414.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 33   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள
வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு    
3918.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்
      ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்
      பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
      மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
      வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே  
1653.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே
      என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா
      என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்?
      என்கின்றாளால்-
கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
910.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 39   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

அடிமையிற் குடிமை இல்லா
      அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
      மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
      அரங்க மா நகருளானே
3823.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 47   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே
2611.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 27   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று
2273.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 92   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடிமேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது
2098.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 17   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று
3749.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
      அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
      படியன் அல்லன் பரம்பரன்
கடிசேர் நாற்றத்துள் ஆலை
      இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
      உணர்வில் உம்பர் ஒருவனே
2949.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

அடியேன் சிறிய ஞானத்தன்
      அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
      புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
      சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
      இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?   
3556.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

அடியேன் மேவி அமர்கின்ற
      அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
      கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
      திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
      காண நோலாது ஆற்றேனே
3448.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும்
      மண்ணும் விண்ணும்
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
      நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல்வினையேன் உன்னை என்றுகொல் கூடுவதே?
2841.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப்
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே     
2.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
      ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
      மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
      ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
      சன்னியமும் பல்லாண்டே
2161.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 80   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்?
992.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு
      அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி
      விண்ணோர் பெருமான் நண்ணார்முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்
      கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
2823.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே   
2563.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 86   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

அடைக் கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும்
முடைக் கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக்கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே?
2140.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 59   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண்
2309.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 28   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான்
84.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
      கார்முகில் வண்ணனே சப்பாணி
3808.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 32   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது

அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே
264.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
      தயிர்- வாவியும் நெய்- அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த
      பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை
      வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
2957.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே     
3292.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வெறி விலக்கு

அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே
2029.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப

அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!-
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ
3887.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே  
3088.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே
5.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
      அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
      இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
      ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
      லாயிரத்தாண்டு என்மினே
2010.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த்
      திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்
      தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி வண்ணன் தண்
      குடந்தை நகர் பாடி ஆடீர்களே
303.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

அண்டத்து அமரர் பெருமான்
      ஆழியான் இன்று என்மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து
      கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே
      பாதுகாவல் வைக்குங் கொல்லோ?
190.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

அண்டத்து அமரர்கள் சூழ
      அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
      தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
      ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
      கருமுகைப் பூச் சூட்ட வாராய்
1230.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
      அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும்
      முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி
      இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1252.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் குல வரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே
1131.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

அண்டமும் எண் திசையும் நிலனும்
      அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
      -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
      விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1260.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
      அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
      உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
      குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
      -வண்புருடோத்தமமே
1320.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

அண்டர்-கோன் என் ஆனை என்றும்
      ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்
      தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை
      மன்னும் மாயன் என்று என்று ஓதி-
பண்டுபோல் அன்று-என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
1449.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
3145.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெள் நிறை சுனை நீர்த் திருவேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே
31.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
      ஒளிவளையீர் வந்து காணீரே
393.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி
      அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும்
      எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்
      சங்கரன் சடையினிற் தங்கிக்
கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
2369.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 88   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து
3754.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

அதுவே வீடு வீடுபேற்று
      இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
      யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று
      இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு? ஏது இன்பம்? என்று
      எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே
2651.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 67   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில்
அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்   
866.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 115   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர்க்கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே?
1555.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே
2277.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 96   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்
1073.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
      இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
      எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
      பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
3912.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ

அந்தம் இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி தன்னைக்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே  
923.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 7   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
      அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
      எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
3829.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 53   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்
3867.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 91   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

அந்தோ அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணி வண்ணா.
470.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

அனந்தன்பாலும் கருடன்பாலும்
      ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி
      வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
      கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
      நேமி நெடியவனே
2675.4   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுசமுனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராதவுள்ளம் பெற.

Pages:    1    2  3  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list