சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் க%
கங்குலும்     கங்கை     கங்கையிற்     கச்சொடு     கஞ்சனும்     கஞ்சனைக்     கஞ்சன்     கஞ்சன்தன்னால்     கஞ்சைக்     கடம்     கடலிற்     கடலும்     கடலே     கடல்     கடி     கடி-மலர்க்     கடிது     கடியனாய்க்     கடியன்     கடிவார்     கடு     கடுங்     கடுவினை     கடை     கடைநின்றமரர்     கடைந்த     கட்கு     கட்டப்     கட்டு     கட்டுரைக்கில்     கண     கணம்     கண்     கண்களால்     கண்கள்     கண்ட     கண்டதுவே     கண்டவர்     கண்டவர்-தம்     கண்டாயே     கண்டார்     கண்டு     கண்டுகொண்டு     கண்டுகொண்டேன்     கண்டும்     கண்டே     கண்டேன்     கண்டோம்     கண்ண     கண்ணனை     கண்ணன்     கண்ணமங்கையுள்     கண்ணா     கண்ணாலம்     கண்ணி     கண்ணித்     கண்ணில்     கண்ணும்     கண்ணுள்     கண்ணுள்ளே     கண்ணே     கண்ணைக்     கதவி     கதவு     கதிக்குப்     கதியேல்     கதிரவன்     கதிர்     கதிர்-ஒளித்     கதைப்     கதையின்     கத்தக்     கந்த     கனங்குழையாள்     கனம்     கனி     கனை     கனைத்து     கன்நிறைந்து     கன்னற்     கன்னல்     கன்னவில்தோள்     கன்னி     கன்னி,தன்     கன்னியரோடு     கன்மம்     கன்றப்     கன்றினை     கன்று     கன்று-அதனால்     கன்றுகள்     கமலக்     கம்ப     கயம்     கயலோ     கர     கரண்டம்     கரிய     கரு     கருங்கண்     கருத்தில்     கருத்தே     கருந்     கருப்பு     கருப்பூரம்     கரும     கருமமும்     கருமலர்க்     கரும்பார்     கருளக்     கருளப்     கருள்     கருவிளை     கரை     கரையாய்     கறந்த     கறவா     கறவை     கறவைகள்     கறுத்திட்டு     கறுத்து     கறை     கற்கும்     கற்பகக்     கற்பார்     கற்றா     கற்றார்     கற்றினம்     கற்றிலேன்     கற்றுக்     கற்றுப்பிணை     கலக்க     கலக்கம்     கலக்கிய     கலங்க     கலந்தான்     கலந்து     கலி     கலியுகம்     கலை     கலைகளும்     கலையும்     கல்     கல்லா     கல்லாதவர்     கல்லால்     கல்லின்     கல்லும்     களங்கனி     களி     களிப்பும்     களிறு     களைவாய்     கள்     கள்ள     கள்ளக்     கள்ளச்     கள்ளத்தால்     கள்ளத்தேன்     கள்ளம்     கள்வனேன்     கள்வன்கொல்?     கள்வா     கழறேல்     கழல்     கழி     கழிமின்     கழிய     கவள     கவியினார்     கவ்வை     கவ்வைக்     கா     காக்கும்     காசின்     காசும்     காசை     காடுகள்     காட்கரை     காட்டி     காட்டித்     காட்டில்     காண     காணக்     காணப்புகில்     காணல்     காணிலும்     காணுமாறு     காண்     காண்கின்ற     காண்கின்றனகளும்     காண்கொடுப்பான்     காண்டாவனம்     காண்டும்கொலோ     காண்பது     காண்பார்     காண்மின்கள்     காதம்     காதல்     காதில்     காத்த     கான     கானிடை     கான்     காப்பார்     காப்பு     காமன்     காமன்-தனக்கு     காமர்     காமற்கு     காமுற்ற     காய     காயும்     காயோடு     காய்     காய்த்த     காய்ந்து     காரார்     காரிகையார்     காரிகையார்க்கும்     காரியம்     காரும்     காரொடு     கார்     கார்-இனம்     கார்க்கோடற்     கார்த்     கார்த்திகையானும்     காறை     காற்றிடைப்     காற்றினை     கால     காலநேமி     காலம்     காலம்பெற     காலும்     காலே     காலை     காலைக்     காலையும்     காளியன்     காவலன்     காவலிற்     காவி     காவிப்     காவியும்     காவியை     கிடக்கில்     கிடந்த     கிடந்தானை     கிடந்து     கிண்கிணி     கிறி     கிற்பன்     கிளர்     கிழக்கிற்     கீசு     கீழ்     கீழ்மையினால்     கீழ்வானம்     குங்குமம்     குடங்கள்     குடதிசை     குடி     குடிக்கிடந்து     குடியிற்     குடைத்     குடைந்து     குடையா     குடையும்     குணம்     குண்டலம்     குண்டு     குத்து     குந்தமோடு     குன்றமும்     குன்றம்     குன்றால்     குன்றினால்     குன்றில்     குன்று     குமரி     குமுறும்     கும்பம்     கும்மாயத்தொடு     குயில்     குரக்கினப்     குரக்கு     குரங்குகள்     குரவை     குருந்தம்     குரை     குறள்     குறிக்கொள்     குறிப்பில்     குறிப்பு     குறுக     குறுகா     குறுகாத     குறைகொண்டு     குறையாக     குறைவு     குற்றம்     குலங்களாய     குலத்     குலம்     குலம்-தான்     குலை     குளித்து     குழகனே     குழகி     குழல்     குழாம்     குழையும்     கூக்குரல்     கூசம்     கூடச்     கூடா     கூடாரை     கூடி     கூடிக்     கூடிற்றாகில்     கூடும்     கூட்டில்     கூட்டுண்டு     கூட்டுதி     கூட்டும்     கூத்த     கூத்தன்     கூத்தர்     கூந்தலார்     கூந்தல்     கூன்     கூறு     கூறுதல்     கூறும்     கூற்றமும்     கூற்று     கூவாய்     கூவிக்     கூவுதல்     கூவும்     கெடும்     கெண்டை     கெண்டையும்     கேசவனே     கேசவன்     கேடு     கேட்க     கேட்டு     கேட்டும்     கேட்பார்கள்     கேயத்     கேவலம்     கை     கைகளால்     கைதவம்     கைத்தனன்     கைத்தலத்து     கைந்நாகத்து     கைப்     கைம்     கைய     கையின்     கையில்     கையும்     கையுள்     கொங்கு     கொங்கும்     கொங்கை     கொங்கைச்     கொடி     கொடிய     கொடியார்     கொடு     கொடுங்     கொட்டாய்     கொண்ட     கொண்டது     கொண்டல்     கொண்டல்வண்ணனைக்     கொண்டல்வண்ணா     கொண்டாட்டும்     கொண்டானை     கொண்டான்     கொண்டு     கொண்டை     கொந்து     கொன்னவிலும்     கொன்னா     கொன்று     கொன்றேன்     கொம்பின்     கொம்பு     கொம்பும்     கொம்மை     கொற்றப்     கொலை     கொலைப்     கொலையானைக்     கொல்     கொல்லா     கொல்லை     கொள்     கொள்கின்ற     கொள்கை     கொள்மின்     கொள்ள     கொள்ளக்     கொள்ளும்     கொள்வன்     கொழுங்     கொழுங்கொடி     கொழுந்து     கொழுந்துவிட்டு     கொழுப்பு     கோ     கோக்     கோங்கு     கோட்டுமண்     கோது     கோதை     கோமள     கோயில்     கோல     கோலப்     கோலமே     கோலம்     கோலால்     கோல்     கோளரியின்     கோள்     கோழி     கோழியும்     கோவலனாய்     கோவிந்தன்     கோவை    
Number of search results : 611
Pages:    1    2  3  4  5  6  7  Next
3572.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
      கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
      தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
      இரு நிலம் கை துழா இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
      இவள் திறத்து என் செய்கின்றாயே?
775.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 24   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்-
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே
894.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 23   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

கங்கையிற் புனிதம் ஆய
      காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
      பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
      கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
      ஏழையேன் ஏழையேனே
51.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்
நச்சுமுலை உண்டாய் தாலேலோ
      நாராயணா அழேல் தாலேலோ
350.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்
செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே
1603.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

கஞ்சனைக் காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை
செஞ்சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம்-தன்னை-அடியேன் கண்டுகொண்டேனே
197.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
      கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான்
      என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட
      மதிற் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க
      அழகனே காப்பிட வாராய்

1384.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்-
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே
155.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
      கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
      வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
      வாசிகையும் நறுஞ்சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
      அழகனே நீராட வாராய்
532.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

கஞ்சன் வலைவைத்த அன்று
      காரிருள் எல்லிற் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்
      நின்ற இக் கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
      ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட
      மசிமையிலீ கூறை தாராய்
1319.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

கஞ்சன் விட்ட வெம் சினத்த
      களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின்
      உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
131.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட
      கள்ளச் சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல்லடியால்
      பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே
      ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால்
      வலைப்படுத்தாய் முலை உணாயே
629.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

கஞ்சைக் காய்ந்த கருவில்லி
      கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
      நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
      அவன் மார்வு அணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில்
      மார்விற் கொணர்ந்து புரட்டீரே
2515.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 38   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இதுகொல்
குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே?
789.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 38   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்வண்ண தண்துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே
989.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

கடம் சூழ் கரியும் பரிமாவும்
      ஒலி மாத் தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை
      பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்-
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்
      இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
568.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரிற் குடியேறி தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே
3012.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே?     
605.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கு-உறுத்து
உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே?
2849.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே   
466.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

கடல் கடைந்து அமுதம் கொண்டு
      கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து
      மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
      கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ
      சார்ங்க விற் சேவகனே
2495.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 18   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றிச் சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ?
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே
3396.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
      கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
      கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
      கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
      கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?
3185.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
      கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக்கிடந்த
      பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
      அட வரும் படை மங்க ஐவர்கட்கு
      ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல்
      காண்பது என்றுகொல் கண்களே
247.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும்
      போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
      கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன
      சிறுக்குட்டச் செங் கமல-
அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய்
      அசைந்திட்டாய் நீ எம்பிரான்
1107.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர்-தம் முதல்வர் ஆவாரே             
1420.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை
      வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
      பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்
      கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன
அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்-
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
3039.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே
926.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 10   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
      துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
      தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
      ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே            
2274.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 93   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடாமுன்னம் வடி சங்கம்
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று
3846.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 70   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே
3367.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே?
2963.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக்கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே     
267.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்
      கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு
      அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
      கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
1340.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

கடு விடம் உடைய காளியன் தடத்தைக்
      கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
      பல் நடம் பயின்றவன் கோயில்-
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்
      பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே
855.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 104   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொற்கழல்
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே
1545.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:7

கடுங் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்-நமோ நாராயணமே
3909.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம். 
2436.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 55   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அவர்?  
2192.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 11   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

கடைநின்றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் -புடைநின்ற
நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை
யாரோதவல்லாரவர்?
832.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 81   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

கடைந்த பாற்கடற் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
3637.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே
2883.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டிக் களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே?     
3516.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக்
கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே
1524.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:5

கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே
3122.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ
602.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணம் ஆடு அரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே
1672.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன்-என் பொன் வளையே
1037.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே
1038.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே
1308.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே
1736.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை-
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
2978.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே   
1578.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

கண் சோர வெம் குருதி வந்து இழிய
      வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்
      வானவர்-தம் கோவே என்று
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு
      மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்
      காண்மின்-என் தலைமேலாரே
3098.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே
3202.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே
3186.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

கண்கள் காண்டற்கு அரியன்
      ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
      அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
      குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
      பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே             
3748.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

கண்கள் சிவந்து பெரியவாய்
      வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு
      விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
      நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கு கதை வாள் ஆழியான்
      ஒருவன் அடியேன் உள்ளானே.
3474.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே
105.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ
      மார்வில் மறுவனே அச்சோ அச்சோ
1747.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே
3590.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி
      கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக்
      கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
      நீள் விசும்பும் கழியப் பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
      தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே
2845.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே   
1242.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக்
      களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
      அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
      அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே     
3002.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே   
689.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ
கொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனே
2000.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய்
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே
171.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே
3328.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
943.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 7   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே
2459.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 78   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல்
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து?    
3822.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 46   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே
3304.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே
2874.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே
3611.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே?
3863.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 87   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே?
3932.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே  
2248.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 67   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி
3353.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

கண்டோம் கண்டோம் கண்டோம்
      கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
      தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
      மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
      பரந்து திரிகின்றனவே
3345.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே
3162.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

கண்ணனை மாயன் தன்னை
      கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
      அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
      ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
      யாவையும் எவரும் தானே
3790.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 14   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே
1663.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே
627.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

கண்ணன் என்னும் கருந்தெய்வம்
      காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
      புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
      பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
      வாட்டம் தணிய வீசீரே
1326.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

கண்ணன் என்றும் வானவர்கள்
      காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
      ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
3935.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே  
1978.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்?
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே?
1648.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று
      காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை
      வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்
      மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில்
      கற்கலாம் கவியின் பொருள்-தானே
438.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

கண்ணா நான்முகனைப் படைத்தானே
      காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
      ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
      வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
      அன்று எனக்கு அவை பட்டினி நாளே
615.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே
3257.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கண்ணி எனது உயிர் காதல்
      கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
      ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
      நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
      கால சக்கரத்தானுக்கே
937.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 1   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே
3074.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
      கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
      எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
      பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே
195.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கண்ணில் மணல்கொடு தூவிக்
      காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு
      -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய்
      கண்டாரொடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்
      வள்ளலே காப்பிட வாராய்
2290.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 9   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு
1478.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:1

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
2520.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 43   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?
3975.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே  
2999.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே?   
3815.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 39   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாதொழியேன் என்று நான் அழைப்பனே
Pages:    1    2  3  4  5  6  7  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list