சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ஆ%
    ஆஆ     ஆகம்     ஆகும்கொல்     ஆக்கி     ஆங்கு     ஆசை     ஆசைவாய்ச்     ஆடகத்த     ஆடி     ஆட்கொள்ளத்     ஆட்டியும்     ஆணினோடு     ஆண்     ஆண்டுகள்     ஆதி     ஆதும்     ஆநிரை     ஆனது     ஆனாத     ஆனான்     ஆனாயர்     ஆனிரை     ஆனை     ஆன்-ஆயரும்     ஆமே     ஆமை     ஆமையாய்க்     ஆமையின்     ஆம்     ஆயனுக்காகத்     ஆயன்     ஆயர்     ஆயிரம்     ஆயிழையார்     ஆயே     ஆய்ச்சி     ஆய்ச்சிமார்களும்     ஆய்ச்சியர்     ஆய்ந்த     ஆய்ந்து     ஆய்ந்துகொண்டு     ஆரப்     ஆரா     ஆரானும்     ஆராயில்     ஆராயுமேலும்     ஆராய்வார்     ஆரால்     ஆருக்கு     ஆரே     ஆர்     ஆர்க்கும்     ஆர்த்து     ஆர்வனோ     ஆறா     ஆறாத     ஆறினோடு     ஆறிய     ஆறு     ஆறும்     ஆற்ற     ஆற்றில்     ஆல     ஆலத்து     ஆலின்     ஆலும்     ஆலை     ஆளியைக்     ஆளும்     ஆள்     ஆள்கின்றான்     ஆள்வான்     ஆழி     ஆழியான்     ஆழியும்     ஆழிவலவனை     ஆழ்     ஆவர்     ஆவல்     ஆவார்     ஆவி     ஆவியே     ஆவியை    
Number of search results : 128
Pages:    1    2  Next
1407.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே
3553.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

ஆஆ என்னாது உலகத்தை
      அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த
      சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
      விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன்
      பொருந்துமாறு புணராயே
3809.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 33   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது

ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
3661.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ

ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
      முற்றவும் ஈர் அடியே
ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்
      அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு
      மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
      கைதொழக் கூடும்கொலோ?
2828.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே
போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு? புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே   
2391.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும்
பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண
வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து    
2348.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 67   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து
1152.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
      அகல் இடம் அளந்து ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்
      -பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
      குரக்கினம் இரைத்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு
      திருவயிந்திரபுரமே
1376.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
      அகல்-இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு
      வேன் எனக்கு அருள்புரியே-
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு
      உழிதர மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு
      வெள்ளறை நின்றானே
1572.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது
      அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி
      எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை
      வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை தேனை நன் பாலினை
      அன்றி என் மனம் சிந்தை செய்யாதே
1331.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர்!-வாழ்ந்தே போம் நீரே
371.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி
      அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாள் என்று மயங்கி
      மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும்
      கேழல் ஆகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை
      பேசுவான் புகில் நம் பரம் அன்றே
787.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 36   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடகக் கை மாதர் வாய்-அமுதம் உண்டது என்கொலோ?
1930.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடி திரு மா மகள் மண்மகள் நிற்ப-
ஏடி இது என்? இது என்? இது என்னோ?
3042.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே
85.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போதுமே
3628.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்?
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே
777.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 26   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய்
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
3062.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே
2821.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப்
பூண்ட அன்பாளன் இராமாநுசனைப் பொருந்தினமே   
663.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம்
      ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி
      இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்
      காதல் செய்யும் என் நெஞ்சமே
785.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 34   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே?
759.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 8   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே
3791.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 15   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே
1339.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு
      அரக்கர்-தம் சிரங்களை உருட்டி
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்
      கண்ணனார் கருதிய கோயில்-
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி
      பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே
2839.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூங் கமலத்
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்
தான் அதில் மன்னும் இராமாநுசன் இத் தலத்து உதித்தே   
678.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே
2983.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே     
3350.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு

ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான்
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய்
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே    
341.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி
தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே
182.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

ஆனிரை மேய்க்க நீ போதி
      அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
      கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
      பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
      செண்பகப் பூச் சூட்ட வாராய்
791.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 40   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே
1490.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்-
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நானப் புதலில் ஆமை ஒளிக்கும்-நறையூரே
1927.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்

ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்-
ஏனோர்கள் முன் என்? இது என்? இது என்னோ?
2126.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 45   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு
1702.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 6

ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
416.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்
      அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த்
      தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக்
      கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும்
      புனல் அரங்கமே
364.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

ஆமையின் முதுகத்திடைக் குதி
      கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
      யாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
      நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
      வாங்கிப் புல்லைத் திணிமினே
2621.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 37   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே?
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய்
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம்
அது கரமே அன்பால் அமை
3237.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே
3651.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ?
3648.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே
566.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
792.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 41   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே
1691.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்
      வளைகளும் இறை நில்லா
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம்
      பெண் உயிர்க்கு இரங்குமோ?
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை
      இணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்
      அஞ்சேல் என்பார் இலையே
96.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
      அஞ்சனவண்ணன் தன்னைத்
தாயர் மகிழ ஒன்னார் தளரத்
      தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
      விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
      மக்களைப் பெறுவர்களே
2967.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதிப்பார்க்கு மிக இனியன்

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே     
1914.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
      அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புகப்
      பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு
      உன் மகன் இன்று நங்காய்
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
      வளைத்து உண்டு இருந்தான் போலும்
1413.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய
      அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி
      மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
      அறிதுயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே                
358.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே
2832.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே   
3325.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய
கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே
117.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய
வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
3472.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உர

ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
      வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
      இசை யொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே
537.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே
1338.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
      ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து
      பெரு நிலம் அளந்தவன் கோயில்-
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
      எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்-
      திருவெள்ளியங்குடி-அதுவே
217.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
      அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்
2358.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 77   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப் போது நங்கட்கு அரண்
2254.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 73   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்படத் துணிந்த யான்
2460.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 79   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து    
2810.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமாநுசன் என் தன் மா நிதியே   
3057.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே
3418.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
2696.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர்வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று ஆரானும் அல்லனே என்றுஒழிந்தாள்
2609.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 25   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான்   
2675.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்

2699.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன்

2707.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை

2674.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று

2701.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன்

2703.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள்

2685.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   

3875.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 99   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்

ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்
      ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
      கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
      பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப்
      புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ
2454.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 73   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த
பேர் ஆழியான் தன் பெருமையை? கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி    
630.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

ஆரே உலகத்து ஆற்றுவார்?
      ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
      தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன்
      அமுத வாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
      பருக்கி இளைப்பை நீக்கீரே
2308.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 27   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து?
2678.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து

2687.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   

3675.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்

ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும்
      படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு
      உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
      போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்!
      உன்னை நான் எங்கு வந்து உறுகோ?
3844.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 68   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே?
2858.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 8   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே   
3378.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே
1934.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு

ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி
      ஆற்றலை ஆற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம்
      கடந்த நின் கடுந் திறல் தானோ-
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை
      நெடுங் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம்
      இவள் எனக் கருதுகின்றாயே?
621.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
      அம்மனைமீர் துழதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்
      கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்
      காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த
      பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.
903.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 32   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை
      அணி திரு அரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனைய மேனிக்
      கண்ணனே உன்னைக் காணு
மார்க்கம் ஒன்று அறியமாட்டா
      மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்
      மூர்க்கனேன் மூர்க்கனேனே
3656.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்

ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச்
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே?
3824.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 48   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை
சேறு ஆர் வயல் தென் குருகூர்ச் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே
1235.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த
      அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர்
      குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி
      மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1374.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி
      அரக்கன்-தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்-அது வளைத்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்
      தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திரு
      வெள்ளறை நின்றானே
2116.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 35   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து
முடியான் படைத்த முரண்?
3416.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
      உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி
      தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே
2385.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து    
3595.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே
753.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 2   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே
1516.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:4

ஆறும் பிறையும் அரவமும்
      அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்
      இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர்
      வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்-
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய
      நறையூர் நின்ற நம்பியே
3279.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே
213.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்
சேற்றால் எறிந்து வளை துகிற் கைக்கொண்டு
காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
      வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்
2398.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 17   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு    
935.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 9   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி-ஆரமும் முத்துத்
      தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே
177.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
      குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
Pages:    1    2  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list