சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ப%
பகலும்     பகல்     பகு     பக்கம்     பங்கயக்     பச்சை     பஞ்சவர்     பஞ்சிச்     பஞ்சிய     பட     படங்கள்     படர்     படல்     படி     படை     படைத்த     படைத்திட்டு     படைப்பொடு     பட்ட     பட்டம்     பட்டர்     பட்டி     பட்டு     பணங்கள்     பணி     பணிந்து     பணிந்தேன்     பணிமின்     பணிமொழி     பணியா     பணிவினால்     பணைத்தோள்     பண்     பண்டிப்     பண்டு     பண்டும்     பண்டை     பண்ணினை     பண்ணின்     பண்பு     பதக     பதி     பதினாறாம்     பதிப்     பத்தர்     பத்தினோடு     பத்து     பந்து     பந்தோடு     பனி     பனிக்     பனிப்     பனிப்பு     பன்னாக     பன்னி     பன்னிய     பன்னிரு     பன்றி     பன்றியும்     பப்ப     பயன்     பயின்றது     பயிலும்     பரக்க     பரஞ்சோதி     பரதனும்     பரத்திலும்     பரந்த     பரந்திட்டு     பரனே     பரன்     பரம்     பரவாள்     பரவி     பரிசு     பரிதியொடு     பரிய     பரியன்     பரிவது     பரிவு     பரு     பருங்     பருந்தாள்-களிற்றுக்கு     பருப்பதத்துக்     பருவக்     பருவம்     பறவை     பறையும்     பற்பநாபன்     பற்றா     பற்றார்     பற்று     பற்றுமஞ்சள்     பற்றேல்     பல     பலபல     பலபலவே     பல்     பல்லவம்     பல்லாண்டு     பல்லாயிரவர்     பள்ளத்தில்     பள்ளி     பள்ளியில்     பழகு     பழி     பழித்திட்ட     பழுது     பழுதே     பவளம்போல்     பவ்வ     பா     பாசங்கள்     பாசறவு     பாசி     பாஞ்சசன்னியத்தைப்     பாடு     பாடும்     பாடோமே-எந்தை     பாட்டும்     பாண்     பாண்டவர்     பாதங்கள்மேல்     பாதம்     பாம்பு     பாயும்     பாய்     பாய்ந்தானை     பாரம்     பாரித்து     பாரினை     பாரும்     பாருள்     பாரை     பாரோர்     பார்     பார்-ஆயது     பார்-உருவி     பார்த்த     பார்த்தனுக்கு     பார்த்தற்கு     பார்த்தான்     பார்த்து     பாற்கடலும்     பால     பாலகனாய்     பாலகன்     பாலன்     பாலின்     பாலில்     பாலைக்     பாலொடு     பால்     பால்-ஆலிலையில்     பாவமும்     பாவியாது     பாவியேன்     பிச்சச்     பிடி     பிடித்தேன்     பிடியைத்     பிணக்கி     பிணக்கு     பிணங்கள்     பிணி     பிண்டத்     பிண்டி     பிதிரும்     பின்     பின்நின்று     பின்னால்     பின்னிதனைக்     பின்னுமோர்     பின்னை     பின்னை,தன்     பின்னைகொல்     பிரா     பிரான்     பிரிந்து     பிரியாது     பிறங்கிய     பிறந்த     பிறப்பினோடு     பிறப்பு     பிறப்பொடு     பிறவித்துயர்     பிறிது     பிறிந்தேன்     பிறை     பிறையின்     பிள்ளை     பிள்ளைகள்     பிள்ளைத்     பிழைக்க     பீடு     பீளை     புகர்     புகலிடம்     புகழும்     புகழ்வாய்     புகழ்வோம்     புகு     புகுந்து     புக்க     புக்கு     புட்டியிற்     புணரா     புணர்     புணர்க்கும்     புண்டரிக     புண்ணிய     புண்ணியம்     புதம்     புது     புந்தி     புனமோ?     புனை     புன்     புயல்     புரங்கள்     புரி     புரிந்து     புறம்     புற்றரவு     புலக்     புலன்     புலன்கள்     புலம்     புலம்பின     புலம்பு     புலம்பும்     புலை-அறம்     புல்லி     புளிங்குடிக்     புள்     புள்ளது     புள்ளினை     புள்ளின்     புள்ளும்     புவியும்     புவியுள்     பூ     பூங்     பூசும்     பூணாது     பூணித்     பூண்     பூண்டு     பூதம்     பூந்     பூவை     பூவைகள்     பூவையும்     பெடை     பெண்     பெண்டிரால்     பெண்டிர்     பெண்மை     பெயரும்     பெய்யு     பெய்யும்     பெய்வளைக்     பெரிய     பெரியவர்     பெரியானை     பெரு     பெருகு     பெருங்     பெருப்     பெருமக்கள்     பெருமையனே     பெரும்     பெருவரங்கள்     பெற்ற     பெற்றத்     பெற்றம்     பெற்றாரும்     பெற்றார்     பெற்று     பேச     பேசவும்     பேசினார்     பேசிற்றே     பேசுகின்றது     பேசுமின்     பேசும்     பேசுவார்     பேணாத     பேணிச்     பேண்     பேதம்     பேதையர்     பேயரே     பேயினார்     பேயின்     பேய்     பேய்ச்சி     பேய்த்     பேரானை     பேராமல்     பேரே     பேர்     பேர்கின்றது     பேர்த்தனை     பேர்த்து     பேர்ந்து     பேறு     பை     பைங்     பைங்கிளி     பைம்பொழில்     பையரவின்     பொங்கி     பொங்கிய     பொங்கு     பொத்த     பொன்     பொன்னரும்     பொன்னவிலும்     பொன்னி     பொன்னுடம்பு     பொன்னும்     பொன்னை     பொன்னைக்     பொன்னொடு     பொன்போல்     பொய்     பொய்ந்     பொய்யைச்     பொரு     பொருத்தம்     பொருந்தலன்     பொருந்தா     பொருந்தார்     பொருந்திய     பொருந்து     பொருப்பிடையே     பொருளால்     பொருளும்     பொருள்     பொறுத்தேன்     பொற்பு     பொற்றிகழ்     பொற்றை     பொற்றொடித்     பொலிக     பொலிந்து     பொல்லா     பொல்லாக்     போகின்ற     போகு     போதர்     போதான     போதில்     போது     போதெல்லாம்     போந்தது     போனாய்     போயிருந்து     போய்த்     போய்ப்பாடு     போர     போர்     போர்க்களிறு     போற்றி     போற்று     போழ்து    
Number of search results : 510
Pages:    1    2  3  4  5  6  Next
1592.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

பகலும் இரவும் தானே ஆய் பாரும் விண்ணும் தானே ஆய்
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர்போலும்-
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே
2665.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 81   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவாத்
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார்
செழும் பரவை மேயார் தெரிந்து     
2262.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 81   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு
1493.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்-
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகு வாய் மலர்மேல் அன்னம் உறங்கும்-நறையூரே
93.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
      அருவிகள் பகர்ந்தனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ
      அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினிற் பெய்து அறியா
      மணிக் குழவி உருவின்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ
3389.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
      நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
      ஆவியின் மேலனவே
3156.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

பங்கயக் கண்ணன் என்கோ?
      பவளச் செவ்வாயன் என்கோ?
அம் கதிர் அடியன் என்கோ?
      அஞ்சன வண்ணன் என்கோ?
செங்கதிர் முடியன் என்கோ?
      திரு மறு மார்பன் என்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
      சாதி மாணிக்கத்தையே
873.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 2   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பச்சை மா மலை போல் மேனி
      பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
      ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
      இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
      அரங்க மா நகருளானே
311.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
      அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற
99.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ
      ஆயர் பெருமானே அச்சோ அச்சோ
1104.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா
கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே
1181.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்
      பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட
      நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே
      தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால்
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1302.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்க் காவளம்பாடி

பட அரவு உச்சி-தன்மேல்
      பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை-தன்னை
      மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
      தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே
1097.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப்
      பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித்
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
      தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக்
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க்
      கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
      தீவினையை முதல் அரிய வல்லார் தாமே
270.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்
      படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
      தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
      அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
92.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

படர் பங்கைய மலர்வாய் நெகிழப்
      பனி படு சிறுதுளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
      இற்று இற்று வீழநின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
      உடை மணி கணகணென
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி
      தளர்நடை நடவானோ
1280.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
      பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
      அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
      மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
2166.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 85   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள்
கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ
2827.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே   
1715.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 7

படி புல்கும் அடி-இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம்-அது உடையவர்-
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம்-அடிகள்-தம் இடமே
3239.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
2294.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 13   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு
2163.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 82   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை
2027.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப

படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே-
அடைய அருளாய் எனக்கு உன்-தன் அருளே
779.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 28   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன்-ஊர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
1904.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள்
      பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத்
      தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
      விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
3712.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
      பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே
      புகழ்வு இல்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார்
      கூரிய விச்சையோடு ஒழுக்கம்
நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்
      திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே
3050.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே?
291.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்
      பாடகமும் சிலம்பும்
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு
      என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்
      பூவைப் பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே
2675.5   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலைமதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்றதமிழ் மறைகளாயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.

637.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

பட்டி மேய்ந்து ஓர் காரேறு
      பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
      இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
      இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே
1185.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்
      பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்
      மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ
      நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
2062.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
      பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்
      எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
      மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
      மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!-
      கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?
963.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பிரிதி

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப்
      பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர
      இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற
      நிமிர்ந்து அவை முகில் பற்றிப்
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே
3930.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே  
2296.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 15   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து
2246.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 65   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

பணிந்தேன் திருமேனி பைங் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது
3235.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ
3917.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
      பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ
      பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ
மணி மிகு மார்பினில் முல்லைப்போது என்
      வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை அந்தோ!
      அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்  
3698.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
892.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 21   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பணிவினால் மனமது ஒன்றிப்
      பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
      தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
      அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
      மனத்தினால் நினைக்கல் ஆமே?
25.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
      காரிகையீர் வந்து காணீரே
1811.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம்-அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
842.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 91   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண் இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
2854.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

பண் தரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்டம் ஏந்தி குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே   
1223.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
      பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
      உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி
      கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
2127.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 46   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம்
போகத்தால் பூமி ஆள்வார்
2195.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 14   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து
1209.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ?
1170.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு
திண் திறல் பாட வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1380.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர
கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்-
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே
2342.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 61   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர்
1583.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த
      பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்
      துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை
      எம் பெருமான் அடியார்-தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும்
      கண் இணையும் களிக்கும் ஆறே
972.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றி தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே             
1347.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
      பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
      திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே
773.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 22   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே
வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரும் மார்ப பூமிநாதனே
2526.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 49   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இப் பாய் இருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள வண்ண
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே
1408.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
      பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
      பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்
      ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே
3792.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 16   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருள

பண்டை நாளாலே நின் திரு அருளும்
      பங்கயத்தாள் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால்
      குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன்
      தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
      திருப்புளிங்குடிக் கிடந்தானே
1647.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை
      பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
      வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை
      மாலை மா மதியை மறையோர்-தங்கள்
      கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1574.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற
      பாலை ஆகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்
      கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை
      வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல்
      வண்ணமே அன்றி வாய் உரையாதே
3833.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 57   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்
3510.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே
126.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
2208.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 27   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்
415.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
      துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
      மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
      பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
      புனல் அரங்கமே
575.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே
2455.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 74   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா      
1855.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பதினென் திருப்பதிகள்

பத்தர் ஆவியை பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே
830.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 79   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே?
2921.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியவர்க்கு எளியவன்

பத்து உடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
ஏங்கிய எளியவே   
20.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
1859.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப்
      பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான்
      செய்வது ஒன்று அறியா அடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்
      ஒருவர்-தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
1625.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி
      பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ
      அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்-
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
      திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
1061.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1610.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி
      பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
      மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா
      சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்-
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1515.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:4

பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி
      கூந்தல் முடிக்க பாரதத்து
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
      கலங்க சங்கம் வாய் வைத்தான்-
செந்தாமரைமேல் அயனோடு
      சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண் கை மறையோர் வாழ்
      நறையூர் நின்ற நம்பியே
1066.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1396.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
      பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன்? வாரானோ?
      என்று என்றே வளையும் சோரும்-
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
      தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே
1553.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய
கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
471.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

பனிக் கடலில் பள்ளி- கோளைப்
      பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல
      மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
      தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
      உனக்கு உரித்து ஆக்கினையே
2005.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம்
      நெடுங் கடலே ஆன காலம்
இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம்
      ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே
      கழல் தொழுமா கல்லீர்களே
2482.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக் காலம் இவ் ஊர்ப்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்
பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்
பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே
2741.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,
தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன்
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது

2748.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு

1756.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணங்குடி

பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய
      பாரத மா பெரும் போரில்
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்
      மைத்துனற்கு உய்த்த மா மாயன்-
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்
      சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே
241.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின்
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே
1628.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிறுபுலியூர்ச் சலசயனம்

பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப்
      படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்
      அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
      கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்
      கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்
      ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர்-தாமே
250.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
      பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த
      கள்ள அசுரர் தம்மைச்
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
      விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
      அங்ஙனம் ஆவர்களே
974.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே
946.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 10   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே
3112.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலை அடைவது அது கருமமே
2227.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 46   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்
3187.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே
527.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
      பலர் குடைந்து ஆடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்
      அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்
      இலங்கை அழித்த பிரானே
குரக்கு-அரசு ஆவது அறிந்தோம்
      குருந்திடைக் கூறை பணியாய்
3123.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே
1074.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

பரதனும் தம்பி சத்துருக்கனனும்
      இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
      இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
      குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
780.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 29   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?
2908.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்ம உபதேசம்

பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே     
3332.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (தி

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
      உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
      கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
      திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
      மற்று இல்லை பேசுமினே
Pages:    1    2  3  4  5  6  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list