சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ஈ%
ஈசன்     ஈசி     ஈச்வரமுனிகள்அருளிச்செய்தது     ஈடும்     ஈதே     ஈனச்     ஈனமாய     ஈய்ந்தனன்     ஈர்வன     ஈவு    
Number of search results : 10
3146.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்
பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே
975.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

ஈசி போமின் ஈங்கு இரேல்மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கல் உறில்
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே
2675.2   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஈச்வரமுனிகள்அருளிச்செய்தது
திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினியவண்பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய்நெஞ்சே! தெளிந்து.
2956.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே     
1916.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

ஈடும் வலியும் உடைய இந் நம்பி
      பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி
      யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்வன் கிடந்து
      திருவடியால் மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
      உரப்புவது அஞ்சுவனே
3100.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
புருஷார்த்த நிர்ணயம்

ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மை தோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யேலே
2576.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 99   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

ஈனச் சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும
்ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
865.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 114   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே
2867.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

ஈய்ந்தனன் ஈயாத இன்னருள் எண் இல் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே?     
2491.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 14   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

ஈர்வன வேலும் அம் சேலும் உயிர்மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணைப் பேர் ஒளியே
சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர்
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இச் செழுங் கயலே?
3299.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்று என்று
கூவிக் கூவி நெஞ்சு உருகி கண்பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list