சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் வ%
வகை     வகையால்     வக்கரன்     வங்க     வங்கக்     வங்கத்தால்     வங்கம்     வசை     வஞ்சனே     வஞ்சனை     வஞ்சனையால்     வஞ்சம்     வஞ்சி     வட     வடிக்     வடிவாய்     வடிவு     வட்கு     வட்ட     வட்டு     வணங்கல்     வணங்கும்     வணம்     வண்     வண்டினம்     வண்டு     வண்டுகளோ     வண்ண     வண்ணக்     வண்ணப்     வண்ணம்     வண்ணம்-திரிவும்     வண்மையினாலும்     வதுவை     வந்த     வந்தருளி     வந்தாய்     வந்திக்கும்     வந்தித்து     வந்திருந்து     வந்து     வன்     வம்பவிழ்     வம்பு     வம்மின்     வயிறு     வயிற்றிற்     வயிற்றில்     வரத்தால்     வரத்தினிற்     வரம்     வரம்பு     வரவு     வரி     வரிசிலை     வருக     வருங்கால்     வருத்தும்     வருந்தாத     வருந்தாது     வரும்     வருவார்     வரை     வரைச்     வற்பு     வற்றா     வலங்     வலஞ்செய்து     வலத்தனன்     வலம்     வலம்புரி     வலி     வலியம்     வலையுள்     வல்     வல்லாளன்     வல்லாள்     வல்லி     வல்லிச்     வல்வினை     வள     வளரும்     வளர்ந்த     வளர்ந்தவனைத்     வளைக்     வளைத்து     வள்ளலே     வள்ளி     வழக்கு     வழக்கொடு     வழி     வழித்     வழிபட்டு     வழு     வவ்வி     வா     வாக்குத்     வாங்கு     வாசகமே     வாசகம்     வாசி     வாட     வாடினேன்     வாட்டம்     வாட்டாற்றான்     வாத     வாதை     வானகமும்     வானத்தில்     வானத்து     வானத்தும்     வானவர்     வானவர்-தங்கள்     வானவர்-தங்கள்-கோனும்     வானவர்-தம்     வானவர்தாம்     வானிடை     வானிடைப்     வானுளார்     வானே     வானை     வானோ     வானோர்     வான்     வாமனன்     வாம்     வாயிற்     வாயும்     வாயுள்     வாய்     வாய்கொண்டு     வாய்க்க     வாய்க்கும்கொல்     வாய்த்     வாய்ப்போ     வாரணம்     வாரா     வாராகம்-அது     வாராது     வாராய்     வாரி     வாரிக்கொண்டு     வார்     வார்த்தை     வாலி     வாலியது     வால்     வாளா     வாளால்     வாளை     வாள்     வாள்கள்     வாழக்     வாழாட்பட்டு     வாழும்     வாழ்தல்     வாழ்த்தி     வாழ்த்திய     வாழ்த்துக     வாழ்த்துவார்     வாழ்ந்தார்கள்     வாழ்வு     வாவித்     விடத்த     விடம்     விடம்-தான்     விடல்     விடுவேனோ     விடை     விடைக்     விட்டு     விண்     விண்ட     விண்டான்     விண்டாரை     விண்ணகரம்     விண்ணவர்-தங்கள்     விண்ணின்மீது     விண்ணுளார்     விண்ணெல்லாம்     விண்மீது     விதியினால்     விதிவகை     வித்தும்     வித்துவக்கோட்டு     வினை     வினையார்     வினையால்     வினையேன்     வியன்     வியப்பு     வியம்     வியலிடம்     விரலோடு     விரும்பி     விரும்பிப்     விரை     விரைந்து     விற்     விலங்கலால்     விலங்கும்     விலைக்கு     வில்     வில்லார்     வில்லால்     விளங்கனியை     விளம்பும்     விளரிக்     விளைத்த     விள்வு     வீசும்     வீடு     வீடுமின்     வீற்றிருந்து     வீற்று     வீவன்     வீவு     வெங்கண்-திண்களிறு     வெஞ்சினத்த     வெண்     வெண்கலப்     வெண்ணிறத்     வெண்ணெய்     வெண்ணெய்-தான்     வெந்     வெந்தார்     வென்ற     வென்றி     வென்றியே     வெம்     வெம்பும்     வெய்ய     வெய்யன்     வெருவாதாள்     வெறி     வெறுப்பொடு     வெற்பால்     வெற்பு     வெற்பை     வெற்றிக்     வெளிய     வெள்ள-நீர்     வெள்ளத்துள்     வெள்ளியான்     வெள்ளியார்     வெள்ளை     வெள்ளைச்     வெள்ளைப்     வெவ்வாயேன்     வேங்கடமும்     வேங்கடமே     வேடர்     வேடு     வேட்டத்தைக்     வேண்டிச்     வேண்டித்     வேத     வேதத்தை     வேதமும்     வேதம்     வேதியாநிற்கும்     வேந்தர்     வேம்     வேம்பின்     வேயர்     வேயின்     வேய்     வேறா     வேறு     வேறுகொண்டு     வேறே     வேலிக்     வேலை     வேல்     வேள்வி     வேவு     வை     வைகலும்     வைகல்     வைகுந்த     வைகுந்தம்     வைகுந்தா     வைது     வைத்த     வைத்தார்     வைத்தேன்     வைப்பன்     வைப்பு     வைம்மின்     வையத்து     வையம்    
Number of search results : 416
Pages:    1    2  3  4  5  Next
2118.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 37   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்
2628.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 44   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும்
மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
மேலைத் தாம் செய்யும் வினை?
2215.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 34   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி
2406.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 25   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே? வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று    
3933.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே  
1432.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே
1879.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும் காணாதிருந்தேன்
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே?
1842.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோட்டியூர்

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன்
      விண்ணவர்-கோன் மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்-
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி
      மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர்
திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே
1748.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணங்குடி

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய
      வாள் அரவின் அணை மேவி
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி
      சாம மா மேனி என் தலைவன்-
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்
      அருங் கலை பயின்று எரி மூன்றும்
செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே
503.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 30   ஆண்டாள்   திருப்பாவை  

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
      திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப்
      பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
      இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்             
2060.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே
1429.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே
1236.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு
      மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்
      ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப
      சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1446.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக
      மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார்
      அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி
      எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே
1271.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
      மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க
      அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானை-
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
1369.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
      அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய
      மாருதம் வீதியின்வாய
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு
      வெள்ளறை நின்றானே
3049.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே
1070.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
      வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
      நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
      வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
53.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே
1246.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த
      தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை
      கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
      வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
717.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி
      வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க
நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ
      சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்
      கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்
      தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
1595.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற ஊர்போலும்-
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே
399.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

வட திசை மதுரை சாளக்கிராமம்
      வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
1664.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே?
709.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்
      மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்
      பொலியும் நீர்-முகிற் குழவியே போல
அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்
      அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ
      கேசவா கெடுவேன் கெடுவேனே
2263.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 82   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ?
கோலத்தால் இல்லை குறை
1723.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை-
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும்
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே
2303.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 22   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு
3574.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்

வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும்
      வானமே நோக்கும் மையாக்கும்
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட
      ஒருவனே என்னும் உள் உருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்
      காகுத்தா கண்ணனே என்னும்
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்
      இவள்திறத்து என் செய்திட்டாயே?
521.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

வட்ட வாய்ச் சிறுதூதையோடு
      சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
      சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
      சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
      அறிதியே கடல்வண்ணனே
108.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க-
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
      கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்
1822.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய
      மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்-தன் கவந்தம் நின்று ஆட
      அமர்செய்த அடிகள்-தம் கோயில்-
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப
      பிரசம் வந்து இழிதர பெருந் தேன்
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே
2573.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 96   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவைதோறு
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே
142.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
      வார்காது தாழப் பெருக்கிக்
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
      கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
      இனிய பலாப்பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்
      சோத்தம் பிரான் இங்கே வாராய்
1022.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

வண் கையான் அவுணர்க்கு நாயகன்
      வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
      ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
      இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
885.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 14   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வண்டினம் முரலும் சோலை
      மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
      குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
      அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
      விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
1688.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய்-கோல் தும்பீ
1675.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே
1657.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
      என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன்
      என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே
      பயில்கின்றாளால்-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1827.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
      மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
      சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே
35.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 13   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
      காரிகையீர் வந்து காணீரே
1437.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத்
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே
1738.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம்
உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே
1557.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே
1227.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
      மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
      கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
      கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
      விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே
1448.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
822.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 71   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே
212.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே
977.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக்
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே
2532.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 55   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே?
362.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

வண்ண நல் மணியும் மரகதமும்
      அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
      மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
      போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
      கவளம் உந்துகின்றார்களே
3087.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே
13.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே
440.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

வண்ண மால் வரையே குடையாக
      மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே
      காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரைக் களைவானே
      ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
      நன்மையே அருள்செய் எம்பிரானே
1996.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ-
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே
237.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே
140.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
      மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
      நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
      எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
      கனகக் கடிப்பும் இவையாம்
2540.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 63   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே
3868.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 92   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே
3552.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

வண்ணம் மருள் கொள் அணி மேக
      வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
      அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
      அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
      அடியேற்கு ஆஆ என்னாயே
623.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
      மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையும் உள்மெலிவும்
      ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
      சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
      பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்
2863.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 13   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே   
3441.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை
      வாய் பிளந்ததும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன்
      செய்கை நைவிக்கும்
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே?
1570.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
      மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச்
      சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
      கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை
      எம்பிரானை-எத்தால் மறக்கேனே?
30.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
      ஒளியிழையீர் வந்து காணீரே
3413.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்
      கொழுந்தே உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்
      சிரீவரமங்கலநகர்
அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே
1732.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?-
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே
1046.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்-
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே
3136.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே?
3558.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

வந்தாய் போலே வாராதாய்
      வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
      நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
      பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
      அகலகில்லேன் இறையுமே
1582.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின்
      வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை
      முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்-
சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை
      எம் பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி
      எப்பொழுதும் தித்திக்குமே
2207.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 26   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி
3537.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே
3989.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே

வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே             
2297.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 16   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று
1188.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
      புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
      தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே
742.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
      வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
      வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
      அணிமணி-ஆசனத்து இருந்த அம்மான் தானே
3621.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திருமார்பனையே
3721.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு

வந்து தோன்றாய் அன்றேல் உன்
      வையம் தாய மலர் அடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
      முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
      சிவந்த வாய் ஓர் கரு நாயிறு
அந்தம் இல்லாக் கதிர் பரப்பி
      அலர்ந்தது ஒக்கும் அம்மானே
2519.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 42   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்பால் எம் பிரான தடங் கண்களே
3480.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே
730.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

வன் தாளின் இணை வணங்கி வளநகரம்
      தொழுது ஏத்த மன்னன் ஆவான்
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை
      நெடுங் கானம் படரப் போகு
என்றாள் எம் இராமாவோ உனைப் பயந்த
      கைகேசி தன் சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
      நன்மகனே உன்னை நானே
656.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
      மண் உய்ய மண்-உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
      சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
      அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு யானும்
      இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே
272.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்
      வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்
      தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
      முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
3133.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
924.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 8   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
      ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
      தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
1761.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
      கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
      நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
      தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
      அச்சோ ஒருவர் அழகியவா
3168.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை

வம்பு அவிழ் கோதைபொருட்டா
      மால் விடை ஏழும் அடர்த்த
செம்பவளத் திரள் வாயன்
      சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
      கோகு உகட்டுண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
      சாது சனங்களிடையே?
1382.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்-
உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல
்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே
1001.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
      பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
      எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
      தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
3214.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
இம் மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேருமே
2174.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 93   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால்
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடிமேல் ஈடு அழிய செற்று?
445.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

வயிற்றிற் தொழுவைப் பிரித்து
      வன்புலச் சேவை அதக்கிக்
கயிற்றும் அக்கு ஆணி கழித்துக்
      காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை
      இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
3745.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா

வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே
2171.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 90   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்?
776.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 25   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ-இது என்ன பொய்?-இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே
2265.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 84   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது
847.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 96   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வரம்பு இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு இல் ஊழி ஏத்திலும் வரம்பு இலாத கீர்த்தியாய்
வரம்பு இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின்கழல்
பொந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே
2640.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 56   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே!
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி
3315.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ

வரி வளையால் குறைவு இல்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list